"தமிழ் ரோஜாக்களின் குல்கந்து"

"தமிழ் ரோஜாக்களின் குல்கந்து"

Sunday, December 18, 2016

வருகை தாருங்கள், சுட்டீஸ் வலைப்பதிவர் மார்கழி மாத பூவிதழ்-09, தேதி 18-12-2016.

"சுட்டீஸ்-குல்கந்து" மார்கழி மாத வலைப்பதிவர் பூவிதழ்-9" நாள்/தேதி:- ஆங்கில மாதத்தின் 3-வது ஞாயிறு 18-12-2016.


கற்க கசடற….!!                               !வாய்மையே வெல்லும்!!

 “வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம்
Vaishali, Ghaziabad, NCR-New Delhi.
e-mail:  vaishalireaderscircle@gmail.com
___________________________________________________________________
சுட்டீஸ் இதழ்=09 மார்கழி மாதம்-தேதி 18-12-2016. வணக்கம், தாங்களின் வருகைக்கு நன்றி, இந்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழில்" - மார்கழி மாத வலைப்பதிவு:- இந்த இதழின் ஆசிரியராக, தொகுத்து வழங்குபவர்:-(Editor of the Page) செல்வி துர்கா, வைஷாலி , NCR-NEW DELHI.

வைஷாலி வாசகர் வட்ட 34வது சந்திப்பு...18-12-2016 மார்கழி மாதம்-மார்கழி மாதம்:- சேவை/தான/தர்ம/உதவும் மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும்.


ஆதரவற்றோருக்கு செய்யும் உதவி, ஆண்டவனுக்கு செய்யும் சேவை. தனக்கே இல்லாத நிலை வரும்வரை, தருவது மட்டுமே தானம்! இது தர்க்காலா கூற்று.. வாரி வாரி தந்த கொடை வள்ளல் என்றால் மஹாபாரத கர்ணனின் ஞாபகம் வரும்.  கொடுப்பதற்கு ஏதுமில்லை என்றாலும் தன்னையே கொடுப்பான் கர்ணன். 

மஹாபாரதத்தில் ஸ்ரீ கண்ணன் அர்ஜுனனிடம் "கொடை வள்ளல் என்றால் கர்ணனை மிஞ்சமுடியாது" என்கிறார். அதற்க்கு அர்ஜுனன் "என்னாலும் அப்படி தர்மம் செய்ய முடியும்" என்கிறார்.. வேண்டுமானால் ஒரு போட்டி வைத்து இதை என்னால் நிரூபிக்கமுடியும் என்று கூறியதால். மாயக்கண்ணன் சிரித்தபடி மிகப்பெரிய தங்கத்தாலான மலையையும், மிகப்பெரிய வெள்ளியால் ஆனா ஒரு மலையையும் உருவாக்கி எங்கே இந்த இரண்டு மலைகளையும் தானம் செய் பார்க்கலாம் என்கிறார். 

அர்ஜுனன் அந்த தங்க, வெள்ளி மலைகளை வெட்டி பலருக்கு தானம் செய்தும் அந்த மலையானது குறையாமல் தொடர்ந்து வளர்ந்துகொண்டே சென்றது ஆகவே அர்ஜுனன் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு எங்கே கர்ணனை தானம் செய்யச் சொல்லுங்கள் பார்க்கலாம் என்கிறார். 

கர்ணனிடம் இரண்டு மலைகளையும் காட்டி அவற்றை தானம் செய்யச் சொன்னபோது கர்ணன் இரண்டு நபர்களை அழைத்து ஆளுக்கு ஒரு மலையை தானமாக தந்தேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். தானம் தருவதில் கூட சற்றும் யோசிக்காமல் செய்பவர்தான் கர்ணன் "கோடை வள்ளல் என்றால் கர்ணனை மிஞ்சமுடியாது"  என்று கண்ணன் கூறியதாக மஹாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

வள்ளல்கள் என்றவுடன் நம் நினைவுக்கு வருபவர்கள் கர்ணர், தர்மர், அவர்களுக்கு அடுத்து தமிழர்களாகிய நமது நினைவுக்கு வருபவர்கள் கடையேழு வள்ளல்களாகவர்.

யார் அந்தக் கடையெழு வள்ளல்கள்??? அவர்கள்தான் பேகன், பாரி, காரி, ஆய், அதிகன், நள்ளி, ஓரி ஆகிய ஏழு வள்ளல்கள் செய்த கொடையை இந்நாளில் நல்லியக் கோடன் ஒருவனே செய்கிறான் என்று சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுகிறது.
1.பருவமழை தவறாது பொழிவதால் காட்டு மயில் அகவியதைக் கேட்டு அது குளிரால் நடுங்கியது என எண்ணி இரக்கமுற்று தம் போர்வையைக் கொடுத்தான் பேகன்.
2.முல்லைக் கொடி படர தம் பெரிய தேரினை ஈந்தான் பறம்பு மலைக்கு அரசனான பாரி.
3.துன்பத்துடன் வாடிவரும் கலைஞர்களுக்கும், கவி இரவலர்க்கும் வலிமைமிக்க குதிரையும் நல்ல சொற்களும் வழங்கியதால் வள்ளல் எனப்பட்டவன் காரி..
4.ஒளிமிக்க நீலமணியையும், நாகம் தந்த கலிங்கத்தையும் இரவலர்க்குக் கொடுத்தவன் ஆய்.
5.அமிழ்தம் போன்ற நெல்லிக் கனியையும் தாம் உண்ணாமல் ஒளவைக்கு ஈந்தவன் அதியன்.
6.இரவலர்க்கு வேண்டிய பொருள்களை அதிகமாக வழங்கி ஆவர்கள் மனநிறைவு கண்டு மகிழ்ந்தவன் நள்ளி.
7.கூத்தாடும் கலைஞர்களின் கலைத்திறனை மதித்து வளமான பல நாடுகளை வழங்கி மகிழ்ந்தவன் ஓரி.

பொன் பொருள் மட்டுமே தானம் என இல்லாமல், போர்வை, தேர் கனி, நாடு, என ஈந்த இந்த வள்ளல்களை போற்றினால் மட்டும் போதாது அவர்களைப்போல நாமும் நடந்துகொள்ள முயற்சிசெய்யவேண்டும்.
அடுத்து வரும் ஜனவரி-2017, 15-01-2017 தை-மாத வலைப்பதிவு இதழின் ஆசிரியராக, (Editor of the page) இந்த வலைப்பக்கத்தை தொகுத்து வழங்க ஆவலுடன் காத்திருப்பவர் யார்? விருப்பம் உள்ளவர்  உங்கள் விருப்பத்தை உடனே தெரியப்படுத்துங்கள். மின் அஞ்சல் "vaishalireaderscircle@gmail.com"

18-12-2016 இன்று நமது 34-வது வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில்:- ,  
மார்கழி மாத வாசகர் வட்டத்தின் :-34வது சந்திப்பில் (18-12-2016) மார்கழி மாதம்:- சேவை/தான/தர்ம/உதவும் மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும்...  காலை 5.00 மணியிலிருந்து  தொடங்கிய நமது வைஷாலி ஐயப்ப சேவா சங்கத்தின் 17வது ஸ்ரீ ஐயப்ப சாஸ்தா ப்ரீத்தி பூஜை மற்றும் அன்னதான நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பாக சேவை செய்ததோடு ஸ்ரீ ஐயப்ப ஸ்வாமியின் அருளை பெற்றார்கள். 

  
தொடர்ந்து அன்றய நிகழ்ச்சியில் உதவிய அனைவரையும் பாராட்டி, நிகழ்ச்சி இனிதாக நிறைவுபெற்றது.
      

மேலும் இந்த மாத சுட்டீஸ்களின் ஏராளமான செய்திகளை மிகவும் பயனுள்ள வகையில் நமது வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ் "குல்கந்து" குழுவினர்கள் தொகுத்து தந்திருக்கிறார்கள்....



அவர்கள் தொகுத்துத் தந்த பல செய்திகளை ஒன்று சேர்த்து, அனைத்தையும் அழகாக கோர்த்து, ஒரு கதம்ப மாலையாக தொடுத்து தந்திருக்கிறார்கள். இந்த மாத வலைப்பதிவு இதழின் அனைத்து விவரங்களும்  உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம்.... இப்படிக்கு வாசகர் வட்ட  சுட்டீஸ் "குல்கந்து" ரோஜாக்கள். 

$நமது வைஷாலி வாசகர் வட்டத்தின் அனைவரையும் வாழ்த்தி வழிநடத்திச்செல்லும் தலைமை உறுப்பினர்  திரு முத்து கிருஷ்ணன் அவர்களின் ஆன்மீகத் தொடர்-05

அன்பான சுட்டீஸ்!... எப்படி இருக்கீங்க? 

கார்த்திகை தீபமெல்லாம் ஏற்றி கொண்டாடி மகிழ்ந்து, அப்பம், பொறி உருண்டையெல்லாம் போனமாசம் சாப்பிட்டீங்களா?

இப்ப மார்கழிமாதம் பிறந்துவிட்டது. இது தக்ஷிணாயனத்தின் கடைசி மாதம். இந்தமாதத்தோடு தேவர்களின் இரவு முடிந்து விடியல் தொடங்குகிறது. இதை பிரதிபலிக்கும் விதத்தில் நாம் சுடச்சுட பொங்கல் சாப்பிட்டு மகிழ்வது வழக்கம்.
  
மார்கழிமாதச் சிறப்புகளைப் பார்ப்போமா?
மனிதர்களுக்குள் அநேக ஜாதி, மத வேறுபாடுகளிருந்தாலும் நம் முன்னோர்கள் நாம் என்றும் ஒற்றுமையோடு வாழவேண்டும் என்றுதான் எண்ணியிருந்தார்கள் என்பது அவர்கள் நமக்காக ஒவ்வொரு மாதமும் வகுத்தளித்த கொண்டாட்டங்கள், விழாக்களிலிருந்தே நாம் அறிய முடிகிறது.

வைணவர்கள் இந்தமாதம் பூராவும் கண்ணனைக் கொண்டாடி, அந்தக் கண்ணனை மணமுடிக்க பாவைநோன்பு நூர்த்த ஆண்டாளையும் வெகு விமரிசையாகக் கொண்டாடுவார்கள். மாதம் பூராவும் ஆண்டாளருய திருவெம்பாவை பாசுரங்களையும் தினமும் ஓதி, பஜனைகளும் செய்து பொங்கல் பிரசாதம் செய்து வழங்குவார்கள். அதுமட்டுமல்லாது, அவர்களின் பிரதான தெய்வமாகிய மஹாவிஷ்ணுவுக்கு வைகுண்ட ஏகாதசியும் இந்த மார்கழி மாதத்தில்தான் வரும்.

சிவனடியார்கள் தினமும் திருவெம்பாவை பாடி சிவனை பூசிப்பார்கள். மற்றும் மாணிக்க வாசகர் உற்சவமும் இந்தமாதம் 21 நாட்கள் நடக்கும். அவர்தான் திருவெம்பாவை இயற்றிய சிவனடியார். மேலும், ஆருத்ரா தரிசனம் எனும் திருவாதிரை உற்சவமும் இம்மாதம் சிவநேசச் செல்வர்களால் கொண்டாடப்பட்டு, பிரசாதமாக திருவாதிரைக் களி செய்து சிவனுக்குப் படைப்பார்கள்.

பூகோள ரீதியாக 27 நட்சத்திரங்கள் வானில் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டு மாதத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நட்சத்திரத்தின் தாக்கம் பூமியில் படுவதாக சோதிட வல்லுநர்கள் சொல்லியிருக்கிறார்கள். அந்த 27 நட்சத்திரங்களில் இரண்டுக்குமட்டும் "திரு" என்ற அடைமொழியுண்டு. ஒன்று "திரு"ஆதிரை(திருவாதிரை). இது சிவனுக்கு உகந்த நட்சத்திரம். மற்றொன்று "திரு" ஓணம்(திருவோணம்). இது திருமாலுக்கு உகந்த நட்சத்திரம். அதாவது சிவனையும், விஷ்ணுவையும் சமச்சீராகப் பார்த்தவர்கள் நம் முன்னோர்கள்.

இன்னொரு அதிசயம் என்னவென்றால் ஆண்டாள் அருளிய திருப்பாவையில் தன் முதல் பாடலில் சிவனடியாராகிய மாணிக்க வாசகருக்கு மரியாதை செலுத்தும்வண்ணம் மாணிக்க வாசகரின் முதல் எழுத்தாகிய "மா" என்பதைப் போட்டு முதல் பாசுரத்தை "மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளாய்" என்று தொடங்கினார். அதுபோலவே சிவனடியாராகிய மாணிக்க வாசகர், திருமாலைத் தொழும் ஆண்டாளின்மீது மதிப்புகொண்டு தான் படைத்த திருவெம்பாவையில் முதல்பாடலை ஆண்டாள் பெயரின் முதல் எழுத்தாகிய "ஆ"வை வைத்து "ஆதியும் அந்தமுமில்லா அரும்பெரும் சோதியை" என்று தொடங்கி வைத்தார்.

இப்ப மீண்டும் ஜாதி ஒற்றுமைக்கு வருவோமா? மேற்கூறிய வண்ணம் சிவ, வைணவ ஒற்றுமை நிறைந்த மார்கழிமட்டுமல்ல, இஸ்லாமியர்களும் "மிலாடிநபி" என்ற பண்டிகையை இம்மாதம்தான் அனுசரிப்பார்கள். அதுவன்றி, கிறித்துவர்களும் தாங்கள் வணங்கும் ஏசுநாதர் பிறந்த தினமாகிய "கிறிஸ்துமஸ்" பண்டிகையையும் இந்த மார்கழியில்தான் கொண்டாடுவார்கள். இதுபோல் எல்லாமதங்களையும் ஒன்று சேர்த்து இணைக்கும் பெருமை இந்த மார்கழி மாதத்திற்குத்தானுண்டு.

அன்னதானத்தின் சிறப்பு.:-  கார்த்திகை ஒன்றாம் தேதி தொடங்கி மார்கழி 10-15 தேதிவரை ஐயப்ப சுவாமியை வணங்கி மண்டல விரதமிருப்பது வழக்கம். அந்த மண்டல விரதம் முடியும் நாளும் இந்த மார்கழியில்தான் வரும். பெரும்பாலும் சபரிமலையில் டிசம்பர் 26 தேதிக்குமேல் சபரி மலையில் ஐயப்பன் நடை சாத்தப்பட்டு, பின் ஜனவரி 1ஆம் தேதிதான் மகரவிளக்குக்கென்று பூஜை தொடங்குவார்கள். ஐயப்பன் நடை அடைக்கப்பட்டபோது சுவாமிக்கு நெய் அபிஷேகம் செய்வது கிடையாது. இப்படி மண்டல விரதமிருந்து சபரிமலையிலிருக்கும் ஐயப்பனை தரிசிக்கச்செல்லும் பக்தன்மார் அன்னதானம் செய்வது வழக்கம். ஐயப்பனைக்கூட அன்னதானப் பிரபுவே என்று அழைப்பது வழக்கம். 

ஒரு மனிதனுக்கு மனநிறைவு, திருப்தி என்பது எதைக் கொடுத்தாலும், பெற்றாலும் ஏற்படுவதேகிடையாது. ரூ100 கொடுத்தால், "ஏன் அதை ரூ 500 ஆகக் கொடுக்க முடியாதோ? கஞ்சப்பய" என்று ஏசிவிட்டுத்தான் போவார்கள். ஒரு பெண்ணுக்கு தங்க நெக்லஸ் கொடுத்தால் "அதை வைர நெக்லஸாக வாங்கித்தரக்கூடாதா?" என்று அதிருப்தி அடைவாள். மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை எதிலும் மனிதன் அவ்வளவு எளிதில் திருப்தி அடைவது இல்லை. ஆனால், ஒருவரைக்கூப்பிட்டு அவருக்கு அன்னமிடுங்கள்; வயிறாற சாப்பிட்டு "போதும் ஸார்" "மனசுக்கு ரொம்ப திருப்தியா வயிறாற சுவையான உணவு பறிமாறினீர்கள்" என்று ஒவ்வொருவரும் சொல்வார்கள். எனவே, நம் வாழ்வில் எத்தனையோ பாவங்களைச் செய்கிறோம். அந்தப் பாவங்களையெல்லாம் மற்றவரோடு பங்குபோட முடியாது. ஆனால் அதை பலருக்கு அன்னமளித்து நம் பாவங்களைப் போக்கிக் கொள்ளலாம். ஒரு கதை சொல்லவா?

ராமாயணத்தை எழுதினாரே வால்மீகி முனிவர், அவர் இளமையில் வழிபறிக் கொள்ளைக்காரராக இருந்தார். அவர் ஓர் இடத்தில் ஒளிந்திருப்பார். அந்தவழியே யாராவது போனால் அவரை வழிமறித்து கொள்ளையடிப்பார். ஒரு நாள் அவ்வழியே ஒரு முனிவர் வந்தார். முனிவரிடம் என்ன பணம்,காசு இருக்கப்போகிறது? அவரையும் வழிமறித்து, "உன்னிடமிருப்பதைத் தந்துவிடு, இல்லையேல் உன்னைக் கொன்றுவிடுவேன்" என்று மிரட்டினார் வால்மீகி.  
ஆனால், அந்த முனிவரோ பொறுமையுடன் அவனிடம் கேட்டார் "நீ ஏன் இப்படி வழிபறிக் கொள்ளையடிக்கிறாய்? ஏதும் வேலை செய்து பிழைக்கக் கூடாதா?" என்று ஆதங்கத்தோடு கேட்டார் முனிவர். உடனே வால்மீகி "என் வீட்டில் வயதான தாய் தந்தையர், திருமணமாகாத சகோதரிகள், என் மனைவி எல்லோரும் இருக்கிறார்கள். நான் தினம் வேலை செய்தால் அவர்களையெல்லாம் காப்பாற்றுமளவுக்குத் தினக்கூலி கிடைப்பதில்லை. அதனால் இதைச் செய்கிறேன்" என்று பதிலளித்தார். உடனே முனிவர் திருட்டு, கொள்ளையெல்லாம் பஞ்சமா பாதகங்களில் ஒன்று. அதனால் உனக்குப் பெரும் பாவம் சேரும் ஆனால் அந்தப் பாவத்தை நீதான் அனுபவிக்கவேண்டும், மற்றபடி உன் குடும்பத்தில் யாரும் அந்தப் பாவத்தில் பங்கேற்கமாட்டார்கள்" என்றவுடன் வால்மீகி "ஏன் பங்கேற்க மாட்டார்கள். நான் இதை அவர்களுக்காகத்தானே செய்கிறேன்" என்றவுடன், முனிவர், "சரி. நீ உன் வீட்டுக்குப் போய் உன் அப்பா, அம்மா, மனைவி, தங்கைகளிடம் என் பாவத்தில் நீ பங்கேற்பாயா? என்று கேட்டுவிட்டு வா. அதுவரை நான் இங்கேயே அமர்ந்திருக்கிறேன். எங்கும் ஓடிவிடமாட்டேன். அவர்கள் என்ன பதில் சொல்கிறார்கள் என்பதையும் எனக்குச் சொல்" என்றுகூறி வால்மீகியை வீட்டுக்குச் சென்றுவரப் பணித்தார். 

அவரும் அவ்வண்ணமே வீட்டுக்குச் சென்று, "அப்பா, அம்மா, மனைவி, தங்கைகள் எல்லோரிடமும் என் பாவத்தில் நீங்கள் பங்குகொள்வீர்களா?" என்று கேட்டதற்கு எல்லோரும், "நீ எங்களுக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்கிறாய். அது பாவச் செயலாயிருந்தால் நாங்கள் ஏன் அதில் பங்கேற்க வேண்டும்?" என்று திருப்பிக் கேட்கவே வால்மீகி மனம் நொந்துபோய் முனிவரிடம் திரும்பிவந்து நடந்ததைச் சொன்னார். 

முனிவரும் "நீ இந்தத் தொழிலைச் செய்ய உன்னை ஆண்டவன் படைக்கவில்லை. நீ ராமாயணம் என்னும் மகா காவியத்தைப் படைக்கப் பிறந்தவன். அந்த மகாவிஷ்ணுவின் காலில் விழுந்து தஞ்சமடை. உன் பாவங்களைப் போக்கி உனக்கு நல்லறிவு புகட்டுவார்" என்றவுடன் முனிவரின் காலில் வால்மீகி விழுந்து வணங்கி மகாவிஷ்ணுவைத் தேடிச்சென்று தஞ்சமடைந்தார். அவர்தான் நமக்கு என்றும் அழியாத, எல்லாமதத்தவரும் படிக்கவல்ல ராமாயண காவியத்தை நமக்குப் படைத்தருளினார்.

ஆகையால், நாம் செய்யும் பாவத்திற்கு பொன்,பொருள் கொடுத்து அவற்றை சரிக்கட்ட முடியாது. அன்னதானத்தில்தான் அன்னதானம் செய்பவரும் திருப்தி அடைவர், அந்த அன்னதானத்தில் அன்னம் அருந்துபவரும் திருப்தி அடைவர். அதனால்தால்தான், தானத்தில் சிறந்தது இரண்டு --- ஒன்று அன்னதானம், மற்றொன்று நிதானம்.

சரி சுட்டீஸ் இந்தமுறை ரொம்ப நீள் பதிவாகிவிட்டது. நிதானமாகப் படித்துப் பயன்பெருங்கள். மீண்டும் அடுத்த இதழில் சந்திப்போம்!​

நன்றி. வணக்கம்!
...............முத்து ஐயர்..........
வைஷாலி வாசகர் வட்டம்..
=================================================
I. முதலில் குட்டி கல்கண்டு தகவல்கள்:-  மார்கழி மாதம்:- சேவை/தான/தர்ம/உதவும் மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும்  என்கிற தலைப்பில் தகவல்களை ஒன்றுதிரட்டி..

கருட புராணத்தில் கூறப்பட்டுள்ள 30- வகையான  தானமும் அதன் பலன்களும்:- 
1    அன்னதானம் செய்தல்    விரும்பிய உலகத்தில் ஒரு வருடம் வீதம் சுகித்திருப்பார்.
2    கோ தானம் செய்தல்    கோலோகத்தில் வாழ்வர்
3    பசு கன்றீனும் சமயம் தானம் கொடுத்தவருக்கு    கட்டாயம் வைகுண்ட வாசம் உண்டு
4    குடை தானம் செய்தவர்    1000 ஆண்டுகள் வருணலோகத்தில் சுகம் அனுபவிப்பார்
5    தாமிரம,; நெய், கட்டில,; மெத்தை, ஜமுக்காளம், பாய,; தலையனை இதில் எதை தானம் செய்தாலும்    சந்திலலோகத்து சுகங்களை அனுபவிப்பார்
6    வஸ்திர தானம் கொடுத்தவருக்கு    10000 ஆண்டுகள் வாயுலோகத்தில் வாழ்வார்
7    இரத்தம,; கண,; உடல் தானம் கொடுத்தவருக்கு    அக்கினிலோகத்தில் ஆனந்தமாயிருப்பார்
8   ஆலயத்துக்கு யானை தானம் கொடுத்தவருக்கு    இந்திரனுக்கு சமமான ஆசனத்;தில் அமர்ந்திருப்பார்
9    குதிரையும், பல்லக்கும் தானம் கொடுத்தவருக்கு    14 இந்திரன் காலம் வரை வருணலோகத்தில் வாழ்வார்
10    நந்தவனங்களை ஆலயத்துக்கு அளிப்பவர்    ஒரு மன் வந்தரகாலம் வாயுலோகத்தில் வாழ்வார்
11    தானியங்களையும், நவரத்தினங்களையும் தானம் கொடுத்தவருக்கு    மறு ஜென்மத்தில் அறிவாளியாகவும் தீர்க்காயுள் கொண்டவராயும் வாழ்வர்
12    பயன் கருதாது தானம் செய்பவரின் மரணம்    உன்னதமாயிப்பதோடு மீண்டும் பிறவி வாய்ப்பதில்லை
13    நற்செயலை விரும்பி செய்கிறவர்கள்    சூரியலோகத்திற்கு செல்கிறார்கள்
14    தீர்த்த யாத்திரை புரிகின்றனர்    சத்தியலோக வாசம் கிட்டுகிறது
15 ஒரு கன்னிகையை ஒழூக்கமாக வளர்த்து விவாகம் செய்து கொடுப்பவருக்கு    14 இந்திர ஆயுட்காலம் வரை அமராவதியில் சுகித்திருப்பர்
16   பொன் வெள்ளி ஆபரணங்களைத் தானம் கொடுத்தவருக்கு    குபேர லோகத்தில் ஒரு மன் வந்தரம் வாழ்வார்
17 பண உதவி செய்பவர்கள்    ஸ்வேத தீபத்தில் நெடுங்காலம் வாழ்வார்கள்
18 நீர் நிலைகளை சீர்திருத்துபவரும,; உண்டாக்குபவரும்    ஜனலோகத்தில் நீண்டகாலம் ; வாழ்வார்கள்
19 பயனுள்ள மரங்களை நட்டுப் பாதுகாப்பவர்    தபோ லோகத்தை அடைகிறார்
20 புராண நிகழ்ச்சிகளைக் குறிக்கும் சிற்பங்களையுடைய கோபுரம் கட்டும் செலவினை ஏற்றால்    64 ஆண்டுகள் பரமபத்திலிருப்பான்
21 தெய்வம் பவனி வரும் வீதிகளை செம்மைப்படுத்துபவர்    10000 வருடங்கள் இந்திரலோகத்தில் சுகித்திருப்பார்.
22 பௌர்ணமியில் டோலோற்சவம் செய்பவர்    இம்மையிலும் மறுமையிலும் இன்பமடைவார்
23 தாமிரப்பாத்திரத்தில் எள்ளைத் தானம் கொடுத்தவருக்கு    நற்குலத்தில் உதித்து திடகாத்திரமாக கீர்த்தியோடு பிரகாசிப்பார்
24 சுவையான பழங்களைத் தானம் கொடுத்தவருக்கு    ஒரு கனிக்கு ஒரு ஆண்டு வீதம் கந்தர்வ லோகத்தில் சுகித்திருப்பார்
25 ஒரு சொம்பு நல்ல தண்ணீரை நல்லவர்களுக்குத் தானம் கொடுத்தவருக்கு    கைலாய வாசம் கிட்டும்
26 அருணோதயத்தில் கங்கையில் நீராடுபவர் 60000 ஆண்டுகள் பரமபத்திலிருப்பர்
27 விரதம் நோன்புகளை பக்தியுடன் கடைபிடிப்பவர்  14 இந்திர ஆயுட்காலம் வரை சொர்க்கபுரியில் வாசம் செய்வர்
28 சுதர்சன ஹோமமும,; தன்வந்திரி ஹோமமும் செய்பவர்    ஆரோக்கியவானாக சத்ருக்களில்லாதவராக தீர்க்காயுளுடன் வாழ்வர்
29  ஷோடச மகாலெட்சுமி பூiஐயை முறையோடு செய்பவர்    குலம் பதினாறு பேறுகளையும் பெற்று பெருமையுடன் விளங்குவர்.
30 கருட புராணம்:- இதைப் படிப்பவரும, கேட்பவரும,; புண்ணிய காலங்களில் தானம் கொடுப்பவரும்    தனது அந்திம காலத்தில் நல்ல உலகத்தை அடைந்து இன்புறுவார்கள்.  அவர்களின் பெற்றோரும், பிதுர்களும் முக்தி பெறுகின்றனர்.

எந்த எந்த சுகத்தை யார் யார் விரும்புகின்றார்களோ அவரவர் அதற்குரிய பொருட்களை உயரிய ஓழுக்கமுள்ளவர்களுக்குத் தானம் செய்தால் அந்தந்த சுகத்தை அடைவார்கள்.

தானத்தின் பலன்கள்:- 
நாம் தானம் தரும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கும் ..

அன்னதானம்- வறுமையும் கடன்களும் நீங்குகின்றன.

பூமிதானம்- பிரம்ம லோகத்தையும் ஈஸ்வர தரிசனத்தையும் அளிக்கும்.

கோதானம்- ரிஷிக்கடன், தேவகடன், பித்ருக்கடன் ஆகியவற்றைப் போக்குவிக்கும்.

வஸ்திரதானம்- ஆயுளை விருத்தி செய்யும்.

தீப தானம்- கண்பார்வையை தீர்க்கமாக்கும். பித்ருக்களை இருட்டிலிருந்து வெளிச்சத்துக்குக் கொண்டு வரும்.

தேன் தானம்- புத்திர பாக்கியம் உண்டாக்கும்.

அரிசி தானம்- பாவங்களைப் போக்கும்.

தயிர் தானம்- இந்திரிய விருத்தி உண்டாக்கும்.

நெய் தானம்- நோய்களை நிவர்த்தி செய்யும்.

நெல்லிக்கனி தானம்- ஞானம் உண்டாக்கும்.

பால் தானம்- துக்கம் நீக்கும்.

தேங்காய் தானம்- பூரணநலன் உண்டாக்கும். நினைத்த காரியத்தில் வெற்றியளிக்கும்.

தங்க தானம்- குடும்ப தோஷம் நிவர்த்தி செய்யும்.

வெள்ளி தானம்- மனக்கவலை நீக்கும்.


பழங்கள் தானம்- புத்தியும் சித்தியும் தரும்.

முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?

1902-ம் வருடம் முதன் முதலாக 'அலெக்ஸில்' கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முதலாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணைத்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.

1905-ம் வருடம் டிசம்பர் மாதம், டாக்டர் எட்வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறுவை சிகிச்சை செய்தார்.


1918-ம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது.

==================================================
பகுதி I-கைவண்ணம்:-

1) சித்திரமும் கைப்பழக்கம் பகுதியில் :-
(நான் வரைந்த ஓவியம் / எனக்குப் பிடித்த ஓவியம்)
A) D. துர்கா 2ம் வகுப்பு. 




f) குழந்தைகள் H. சாய் நந்தினி மற்றும் H.சாய் ஷிவானி சகோதரிகள்:- 
(நான் வரைந்த ஓவியம் / எனக்குப் பிடித்த ஓவியம்)







G) செல்வி மேஹோக் பேகம் (Mehok Begam):- 
(நான் வரைந்த ஓவியம் / எனக்குப் பிடித்த ஓவியம்)


G)  D. துர்கா  :- 
(நான் வரைந்த ஓவியம் / எனக்குப் பிடித்த ஓவியம்)



G)  குழந்தைகள்  சக்தி உமா மற்றும் ஜெய் சக்தி  ) :- 
(நான் வரைந்த ஓவியம் / எனக்குப் பிடித்த ஓவியம்)

=================================================
2. நகைச்சுவை-சிரி சிந்தி செயல்படு- பகுதியில் :-
1. (புகைப்படமும் விளக்கமும்):-

2. (படமும் விளக்கமும்):-
சவுக்கைமரக்காயிலிருந்து பொம்மைகள் செய்வது எப்படி?

3. (படமும் விளக்கமும்):-

4. (படமும் விளக்கமும்):-

5. (படமும் விளக்கமும்):-
சவுக்கைமரக்காயிலிருந்து பொம்மைகள் செய்வது எப்படி?


6. (புகைப்படமும் விளக்கமும்):-

7. (புகைப்படமும் விளக்கமும்):-
முதலில் தமிழ்  வாசிக்க கற்றுக்கொள்ளுங்கள்....வாருங்கள் நமது வைஷாலி வாசகர்வட்டத்தின் தமிழ் கற்கும் வகுப்புகளில் கலந்துகொண்டு, தரணி போற்றும் மொழி தமிழ் மொழியே!! என  பறைசாற்றுவோம்.....


_________________________________________________
===========================================
3. (அ).சிறுகதைகள் பகுதியில் :- முதலாவது போட்டி :- வைஷாலி வாசகர் வட்டத்தின்... சரியான விடைகளைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்... போட்டி என்-9  மார்கழி மாதம், இதழ்-9 தேதி 18-12-2016. தொகுத்து வழங்கியவர்:- திருமதி நாமகிரி சந்திரசேகரன் - வைஷாலி, காசியாபாத்.

ஆதரவற்றோருக்கு செய்யும் உதவி, ஆண்டவனுக்கு செய்யும் சேவை.:-

ராமகிருஷ்ண பரமஹம்சர் யாத்திரைக்குப் போகும் வழியில் அநேக குழந்தைகள் உடைகள் இன்றி இருந்ததைப் பார்த்து யாத்திரையையே நிறுத்தினார். சீடர்களிடம் அவர்களுக்கு உடைகள் வாங்க உடனடியாக ஏற்பாடு செய்யக் கேட்டார். ‘நம்மிடம் இருக்கும் பணத்தில் உடைகள் வாங்கிவிட்டால், யாத்திரை போக முடியாது. பகவானைத் தரிசிக்க முடியாது’ என்று சீடர்கள் சொல்ல, ‘பகவானை இந்தக் குழந்தைகளிடமிருந்து இல்லாமல் கோயில்களிலா தரிசிக்க முடியும்?’ என்று கேட்டார். அந்த பக்குவம்தான் சேவை.

காந்திக்கு ஏற்பட்ட சோதனை – பீதிகர்வா என்ற கிராமத்திற்கு சென்று இருந்தபோது, அங்கு இருந்த சில பெண்கள் மிகவும் அழுக்காயிருந்த ஆடைகளை உடுத்தியிருந்ததைக் கண்டார். அப்பெண்கள் தங்கள் ஆடைகளை ஏன் துவைத்துக் கட்டுவதில்லை என்று கேட்கும்படி மனைவியிடம் கூறினார். கஸ்துரிபா அவர்களும் சென்று அவர்களோடு பேசினார்கள். அதில் ஒரு பெண், தன் குடிசைக்குள் அழைத்துச் சென்று பின்வருமாறு கூறினாள். “வேறு ஆடைகள் வைத்திருக்கும் பெட்டியோ, அலமாரியோ இங்கே இருக்கிறதா பாருங்கள். எனக்கு இருப்பது நான் கட்டியிருக்கும் ஒரு புடவைதான்; இதை எப்படி துவைப்பது? மகாத்மாவிடம் சொல்லி எனக்கு இன்னொரு புடவை வாங்கிக் கொடுக்கச் சொல்லுங்கள். அப்பொழுது தினமும் நான் குளித்துத் துணிகளைச் சுத்தமாக வைத்திருப்பதாக வாக்குறுதியளிக்க முடியும்”.

அருமை சுட்டீஸ்களே மேற்கண்ட கதையை கேட்டீர்களா? இது போன்ற நிலைமைகள், அறையாடை மனிதர் மகாத்மா காந்தி சுதந்திரம் வாங்கித் தருவதற்கு முன்பு மட்டுமல்ல. இன்றும் நமது கிரமாப்புறங்களில் பல்வேறு குழந்தைகள் இந்த நிலைமையிலேயே பள்ளிக்குச் செல்கிறார்கள்.

நாம் மேலே பார்த்த இரண்டு விவரங்களில்,  காந்தியோ, இராமகிருஷ்ண பரமஹம்சரோ பணத்தை வைத்துக் கொண்டு சேவைக்குச் செல்லவில்லை. தூய மனத்தினால் சேவை செய்தார்கள்.  

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. நீங்களெல்லாம் உங்களின் பழைய குளிர்காலத்தில் உபயோகப்படுத்தும், உங்களுக்கு உபயோகமற்ற, தேவைக்கு அதிகமான சட்டை துணிகள் மற்றும் பழைய கம்பளி போர்வை போன்றவற்றை தூக்கி எரியாமல் அவற்றை, மிக ஏழ்மை நிலையில் வாழும் ஏழைகளுக்கு தானமாகத் தந்து உதவினால் அது நமக்கு மகிழ்ச்சியைத் தருவதோடு, கடும் குளிரில் அவதியுறும் ஏழை எளியவர்களுக்கு மிகுந்த நன்மை தருவதோடு உங்களுக்கும் தான தர்மம் செய்ததன் பலனும் கிடைக்கும்.  


என்ன சுட்டீஸ் தானம், தர்மம், உதவி, சேவை, போன்றவற்றை செய்வீர்கள் அல்லவா???  மீண்டும் அடுத்த மாத பதிவில் சிந்திப்போம். நன்றி, வணக்கம்.   

கேள்வி 1. இந்தக்கதையிலிருந்து நாம் தெரிந்துகொள்ளும் கருத்து என்ன? 

சரியான  விடைகளைக்கூறி சிறப்பு பரிசுகளை வெல்லுங்கள். சரியான விடைகளை 15-01-2017 தேதிக்கு முன்னதாக "vaishalireaderscircle@gmail.com" மின்னஞ்சலில் அனுப்பவேண்டும். 

சரியான விடையையும், சரியான விடை எழுதியவர்களுக்கான பரிசுகளும்  18-12-2016 (3-வது ஞாயிறு) அன்றைய, 34-வது வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில் வழங்கப்படும்.

போட்டிக்கான சரியான விடையை பலரும் குறிப்பிட்டிருந்தால், பரிசு பெறுபவர்-குலுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்.

முகநூல் பக்கங்களிலிருந்து இந்த, சிறந்த கதையை தேர்ந்தெடுத்து வழங்கியவர் (திருமதி நாமகிரி சந்திரசேகரன் - வைஷாலி, காசியாபாத்) 

=========================================
3.(ஆ) சிறுகதைகள் பகுதியில் :-இரண்டாவது போட்டி:- வைஷாலி வாசகர் வட்டத்தின் சரியான புகைப்படக் கதையைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் போட்டி என்-9  மார்கழி மாதம், இதழ்-9 தேதி 18-12-2016.

தலைப்பு:- வஸ்திர தானம் என்னும் உடைகள் மற்றும் கம்பள தானம் :-
சரியான படக்கதைக்கான  விடைகளைக்கூறி சிறப்பு பரிசுகளை வெல்லுங்கள். சரியான விடைகளை 10-01-2017 தேதிக்கு முன்னதாக "vaishalireaderscircle@gmail.com" மின்னஞ்சலில் அனுப்பவேண்டும். 

சரியான விடையையும், சரியான விடை எழுதியவர்களுக்கான பரிசுகளும்  15-01-2017 (3-வது ஞாயிறு) அன்றைய, 35-வது வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில் வழங்கப்படும்.

போட்டிக்கான சரியான விடையை பலரும் குறிப்பிட்டிருந்தால், பரிசு பெறுபவர்-குலுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்.

சென்ற மாதத்திற்கான சரியான படக்கதையை கூறி போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. 
=====================================================
3. அ) குட்டிக் கதைகள் பகுதியில் இந்தமாதம் தலைப்பைச் சார்ந்த  கதை :-
"வித்தியாசமான உதவி?
ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.

சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.

தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.

பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.

பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.

பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.

பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்
விடாமல் முயலுங்கள், 
விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....
மீண்டும் சந்திப்போம் ! 
நன்றிகளுடன் கோகி.
================================================
3. ஆ) குட்டிக் கதைகள் பகுதியில் இந்தமாதம் தலைப்பைச் சார்ந்த  கதை :-

 இயன்றதை செய்வோம், இயலாதோர்க்கே...

ஒரு 52 வயதுக்காரர் அவலமான உடையில் சென்னை பெரம்பூர் ஐயப்பன் கோவில் முன் உக்கார்ந்து சாக்லேட் விற்கிறார். ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை, அதற்க்கு பக்கத்து தெருவில் மூன்று ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்தவர்..


இது குடிசையில் இருந்து கோபுரத்திற்கு செல்லும் கதையாக இருக்கலாம் ஆனால் வாழ்க்கையை சிறப்பாக செய்ய விரும்பிய பள்ளி மாணவர்களின் கதை..

நாகர் என்னும் இவருக்கு வாழ்க்கை கிடைத்தது கழிகி ரங்கநாதன் மாண்ட்போர்ட் மேல்நிலைப்பள்ளி 11 ஆம் வகுப்பு மாணவர்களால். எல்லோரும் பிச்சை மட்டுமே போட்ட பொழுது, அந்த 13 பேர் மட்டும் வாழ்க்கை கொடுக்க நினைத்தனர். நாகர் போன்று பிச்சை எடுப்பவர்கள் 30 பேருக்கு இது போன்று வேலை வாய்ப்பு ஏற்ப்படுத்தியுள்ளனர். தங்கள் பள்ளியின் முன்பு ஒரு சிறுவனும் சிறுமியும் பிச்சை எடுக்கும் பொழுது ஏற்ப்பட்ட தாக்கத்தினால் ஏற்ப்பட்ட விளைவு தான் இது. எத்தனை பேரால் இது போன்று வாழ்க்கை கொடுக்க முடியும் பிறர்க்கு, பணம் மட்டும் இருந்தால் போதாது நல்ல மனமும் வேண்டும், இவர்களுக்கு நம் முகநூல் நண்பர்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்...

================================================
3. ஈ ) குட்டிக் கதைகள் பகுதியில் இந்தமாதம் தலைப்பைச் சார்ந்த  கதை :-
"வியாபாரத்துல தர்மம் பார்க்ககூடாது,தர்மத்துல வியாபாரம் பார்க்ககூடாதுப்பா"

செட்டி நாட்டு வீதியொன்றில் கீரை விற்றுகொண்டு செல்கிறாள் ஒரு பெண். வீட்டு வாசலில் மகனோடு அமர்ந்திருந்த தாய், கீரை வாங்க அவளை கூப்பிடுகிறாள்." ஒரு கட்டு கீரை என்ன விலை....?"" ஓரணாம்மா""ஓரணாவா....? அரையணாதான் தருவேன். அரையணான்னு சொல்லி நாலு கட்டு கொடுத்திட்டு போ""இல்லம்மா வராதும்மா"."அதெல்லாம் முடியாது. அரையணாதான்". பேரம் பேசுகிறாள் அந்த தாய்.பேரத்திற்கு ஒத்துக்கொள்ளாத அந்த பெண் கூடையை எடுத்துக்கொண்டுசிறிது தூரம் சென்றுவிட்டு"மேல காலணா போட்டு கொடுங்கம்மா" என்கிறாள்"முடியவே முடியாது. கட்டுக்கு அரையணாதான் தருவேன்"... என்று பிடிவாதம் பிடித்தாள். கீரைக்காரி சிறிது யோசனைக்கு பிறகு "சரிம்மா உன் விருப்பம்" என்று கூறிவிட்டு நாலு கட்டு கீரையை கொடுத்துவிட்டு ரெண்டணா காசை வாங்கி கொண்டு கூடையை தூக்கி தலையில் வைக்க போகும் போது கீழே சரிந்தாள்.

"என்னடியம்மா காலை ஏதும் சாப்பிடல...?" என்று அந்த தாய் கேட்க"இல்லம்மா போய்தான் கஞ்சி காய்ச்சிணும்""சரி. இரு இதோ வர்றேன்." என்று கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றவள், திரும்பும்போது ஒரு தட்டில் ஆறு இட்லியும், சட்னியோடு வந்தாள். 

"இந்தா சாப்ட்டு போ" என்று கீரைக்காரியிடம்கொடுத்தாள். எல்லாவற்றையும் பார்த்துகொண்டிருந்த அந்த தாயினுடைய மகன்" ஏம்மா அரையணாவுக்கு பேரம் பேசுனிங்க.. ஒரு இட்லி அரையணான்னு வச்சுகிட்டாக்கூட ஆறு இட்லிக்கு ரெண்டரையணா வருதும்மா.....?என்று கேட்கஅதற்கு அந்த தாய், "வியாபாரத்துல தர்மம் பார்க்ககூடாது,தர்மத்துல வியாபாரம் பார்க்ககூடாதுப்பா" என்று கூறினாள்......... இது தான் உண்மையில் மனித நேயம் ...
======================================
ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ...ஒரு சிறு விளம்பர இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடர்ந்து வாசிக்கலாமா? 
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
விளம்பரம் :-இப்பகுதியை உங்களுக்கு வழங்குபவர்:-
விளம்பரம் :-இப்பகுதியை உங்களுக்கு வழங்குபவர்:-

==============================================================

4. கட்டுரை=1:- இந்தமாதம் தலைப்பைச் சார்ந்த  கதை /கட்டுரைகள்:- 
அ ) இன்று ஒரு தகவல் பகுதியில்:- உதிரக்கொடை (இரத்த தானம்):-

இரத்த தானம் செய்வதால் நமது உடல் பாதிப்படையும், நாம் சோர்வாகி விடுவோம் என்று தான்  நம்மில் பெரும்பாலானவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு. அதனால் நமக்கு உள, உடல் ரீதியான நன்மைகளே ஏற்படுகின்றன என்பதை நாம் அறியாமலிருக்கிறோம். 

1) ஆத்ம திருப்தியும், மகிழ்வும்.
நாம் தானமாகக் கொடுக்கும் சிறிதளவான இரத்தத்தின் மூலமாக பிறந்த குழi;தைகள் முதல் முதியோர் வரை பலவிதமான நோய்களாலும் அவஸ்தைப்படுகின்ற உயிர்களைக் காப்பாற்றுவதில் பங்கு கொண்டோம் என்பதை அறிந்து கொண்டால் எம்மை அறியாமலேயே ஒரு வகையான ஆத்ம திருப்தியும், மகிழ்ச்சியும் ஏற்படும் என்பதை அனுபவரீதியாகவே அறிந்து கொள்ளலாம்.

2) இலவச மருத்துவப் பரிசோதனை.
ஆரோக்கியமானவர்களிடமிருந்து மட்டுமே இரத்தம் பெற்றுக்கொள்ளப்படும். இரத்தம் பெறப்படுவதற்கு முன்னர் பலவிதமான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். பெறப்பட்ட இரத்தம் கூட பலவிதமான பரிசோதனைகளுக்குட்படுத்தப்படும். இதன் காரணமாக ஏதாவது ஆரோக்கியமற்ற நிலமைகள் காணப்பட்டால், அவை பற்றி ஆரம்பத்திலேயே அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு இருப்பதால், அவற்றிலிருந்து நிவாரணம் பெறக்கூடிய சந்தர்ப்பமும் கிடைத்து விடும். இந்தப் பரிசோதனைகள் யாவும் முழுக்கவும் இலவசமாகவே கிடைக்கும். பூரண சுகதேகி 3 அல்லது 4 மாதங்களுக்கொரு தடவை இரத்த தானம் செய்யலாம்.

3) இதய நோய்களிலிருந்து பாதுகாப்பு.
சீரான கால இடைவெளியில் இரத்த தானம் செய்யப்படும் போது மிதமிஞ்சிய இரும்புச்சத்து வெளியாக்கப்படுகின்றது. ஏனெனில், மிதமிஞ்சிய இரும்புச்சத்து இளமையில் முதுமை, சடுதியான மாரடைப்பு மற்றும் மூளைச்செயலிழப்பு போன்றவற்றுக்குக் காரணமாகின்றது.

4) உடற்பருமனைக் குறைத்தல்.
ஒரு முறை இரத்த தானம் செய்யும் போது சுமார் 650 கிலோகலோரி மிதமிஞ்சிய சக்தி குறைவடைகின்றது. எனவே, கிரமமாக இரத்த தானம் செய்வதன் மூலம் மிதமிஞ்சிய உடற்பருமனைக் குறைக்கலாம்.

5) புற்றுநோய்த் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு.
உடலில் மிகவும் கூடுதலாக இரும்புச்சத்து காணப்பட்டால், அது புற்றுநோய் ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தை அதிகமாக்கும்.

6) இரத்த சுத்திகரிப்பு.
கிரமமாக இரத்த தானம் வழங்குவதன் மூலம் இரத்த சுத்திகரிப்பு சுயமாகவே இடம்பெறுகின்றது. இரத்தம் வழங்கி சுமார் 48 மணித்தியாலங்களுக்குள் இரத்தத்தின் அளவு வழமை நிலையை அடைந்து விடுகிறது.  

' இரத்தத்தை தானமாக்கி வெற்றி வீரனாவோம் ' நன்றி, தொகுப்பு:  Dr. N. Ariff

================================================

4. கட்டுரை=2:- இந்தமாதம் தலைப்பைச் சார்ந்த  கதை /கட்டுரைகள்:- 

அ) பூமி தானம் மற்றும் கிராம தானம் இயக்கத்தை தோற்றுவித்து நிலங்களற்ற ஏழை விவசாயிகளுக்கு நில உடைமையாளர்களிடமிருந்து நிலங்களைப் பெற்றுத் தந்தவர் திரு விநாயக் நகரி பாவே என்ற வினோபா பாவே அவர்கள் மகாராஷ்டிர மாநிலம் கொலபா அருகே ககோடா என்ற கிராமத்தில் (1895) பிறந்தார். காந்திஜியின் போதனைகளால் ஈர்க்கப்பட்டார். 1916-ல் அவரை நேரில் சந்தித்தார். காந்திய வழியைப் பின்பற்ற உறுதிபூண்டார். காந்தியின் ஆசிரமத்தில் தங்கி கற்றல், கற்பித்தல், ராட்டை சுற்றுதல் போன்ற பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். வார்தா ஆசிரமத்துக்கு 1921-ல் பொறுப்பேற்றார்.
மகாராஷ்டிர தர்மா’ என்ற மாத இதழை 1923-ல் தொடங்கினார். அதில் உபநிடதங்கள் பற்றி பல கட்டுரைகளை எழுதினார். கதர்ஆடை, கிராமத் தொழில்கள், கிராம மக்களின் கல்வி, சுகாதார மேம்பாட்டுக்காகவும், தீண்டாமை ஒழிப்புக்காகவும் பாடுபட்டார்.

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு பலமுறை சிறை சென்றார். இவர் மேலும் படிக்கவும், புத்தகங்கள் எழுதவும் சிறைச்சாலை சிறந்த களமாக அமைந்தது. பகவத்கீதையை மராத்தியில் மொழிபெயர்த்தார்.

கீதை குறித்து சிறையில் இவர் ஆற்றிய உரைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்பட்டது. ஞானேஸ்வர், ஏக்நாத், நாம்தேவ் உள்ளிட்ட துறவிகள் எழுதிய அபங்க, பஜனைப் பாடல்களைத் தொகுத்தார்.

ஆந்திர கிராமங்களில் 1951-ல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தற்போது தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளிக்கும் சென்றார். அங்கிருந்த ஏழைகள் இவரிடம், தாங்கள் விவசாயம் செய்ய அரசிடம் நிலம் பெற்றுத் தருமாறு கோரினர். அதே ஊரை சேர்ந்த ராமச்சந்திர ரெட்டி என்பவர், 100 ஏக்கர் நிலத்தை வழங்க முன்வந்தார்.

தேவையுள்ளவர்கள் அதிகம் இருக்கும் இங்கு, கொடுக்கும் மனம் உள்ளவர்களும் நிறைய பேர் இருப்பதை புரிந்துகொண்ட வினோபா, இரு தரப்பினருக்கும் பாலமாக இருக்க முடிவு செய்தார். ‘பூதான்’ எனப்படும் பூமிதான இயக்கத்தை தொடங்கினார்.

நாடு முழுவதும் பாதயாத்திரை சென்று, பூமிதானத்தின் முக்கியத்துவம் பற்றி உரையாற்றினார். மக்களிடம் நன்கு பழகுவதற்காக தென்னிந்திய மொழிகளையும் கற்றார். இந்த புனிதப் பயணத்தில் ஏராளமான இளைஞர்கள், தலைவர்கள், வெளிநாட்டு ஆர்வலர்கள் பங்கேற்றனர். பணக்கார விவசாயிகளிடம் நிலங்களை தானமாகப் பெற்று ஏழை விவசாயிகளுக்கு வழங்கினார். 

கிராமத்தையே தானமாக வழங்கிய நிகழ்வுகளும் நடந்தன. தமிழகத்தில் உத்திரமேருர் அருகே களியாம்பூண்டி கிராமம் தானமாக வழங்கப்பட்டது. 13 ஆண்டுகளில் நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மைல்கள் நடைபயணம் மேற்கொண்டார். சுமார் 40 லட்சம் ஏக்கர் நிலத்தை தானமாகப் பெற்றார். 1979-ல் உண்ணாவிரதம் இருந்து, பசுவதை தடைச் சட்டத்தை கொண்டுவரச் செய்தார்.
என்னைவிட காந்தியத்தை சிறப்பாக உள்வாங்கிக்கொண்டவர்’ என்று காந்திஜியால் புகழாரம் சூட்டப்பட்டவர். மக்களாலும் தலைவர்களாலும் ‘ஆச்சார்யா’ என்று போற்றப்பட்ட வினோபா பாவே 87-ம் வயதில் (1982) மறைந்தார்.

விவரங்களுக்கு நன்றி - திருமதி கங்காதரன்.

==============================================================
ஆ) பொது அறிவுக் கதை. கட்டுரை, தகவல்கள் பகுதியில்:- உடல் உறுப்பு தானம்:-

நம் உடலில் தானம் செய்யக்கூடிய பகுதிகள் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்விகளுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் அருணா ராமகிருஷ்ணன்.


"பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டு வித தானங்கள் தான் அதிக அளவில் இருந்து வருகின்றன. வேறு எந்தமாதிரியான உடல் தானங்கள் கொடுக்கப்படுகின்றன என்பதை சொல்லலாமே?"

'உடல் உறுப்பு தானம்' என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலில் நின்று கொண்டு பரிதவிக்கும் ஒருவருக்கு, தாமாக முன்வந்து தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதாகும்.  உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முதலாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இரண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது.

மூளைச்சாவு ஏற்பட்டவரின் உடலிலிருந்து உறுப்புகளை எடுத்து மற்றவர்களுக்குப் பயன் படுத்துவதுதான் உறுப்பு தானத்தின் முக்கிய அம்சம். தமிழகத்தின் உறுப்பு தானத் திட்டத்தில் இணைந்த மருத்துவமனைகளில் யாருக்கேனும் மூளைச்சாவு நிகழ்ந்தால், உடனே உறுப்புதான ஒருங்கிணைப்புக் குழுவுக்குத் தெரிவிப்பார்கள். இக்குழுவில் உள்ளவர்கள் அந்த மருத்துவமனைக்குச் சென்று, மூளைச்சாவு ஏற்பட்டவரின் உறவினரிடம் பேசி உறுப்புகளைத் தானம் கொடுப்பதன் அவசியத்தைப் புரியவைப்பார்கள். அவர்களின் சம்மதம் கிடைத்ததும், அதற்கான உறுதிமொழிக் கடிதத்துடன் உறுப்புகளைப் பெற்றுக்கொள்வார்கள்.


உடல் உறுப்புகள் தேவைப்படும் நோயாளிகள், மருத்துவமனை மூலமாக ஏற்கெனவே இந்தக் குழுவினரிடம் பதிவுசெய்திருப்பார்கள். அப்படிப் பதிவுசெய்தவர்களுக்கு முன்பதிவு அடிப்படையில் உடல் உறுப்புகள் வழங்கப்படும். பொதுவாக, இதயம். சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் ஆகிய உறுப்புகளை உடனடியாகப் பொருத்திவிட வேண்டும். கண், தோல் மற்றும் எலும்பைப் பாதுகாத்துப் பின்னாளில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம்?
சிறு நீரகம் - 72 மணி நேரம் வரை
கல்லீரல் - 18 மணி நேரம் வரை
இதயம் - 5 மணி நேரம் வரை
இதயம் / நுரையீரல் - 5 மணி நேரம் வரை
கணையம் - 20 மணி நேரம் வரை
கண் விழித்திரை (கார்னியா) - 10 நாட்கள் வரை
எலும்பு மஜ்ஜை - கால அளவு மாறும்
தோல் - 5 வருடம், அதற்கு மேலும்
எலும்பு - 5 வருடம், அதற்கு மேலும்
இதயத்தின் வால்வுகள் - 5 வருடம், அதற்கு மேலும் பொ,துவாக, பாதுகாத்து வைத்து உபயோகப்படுத்தலாம்.


========================================

ஆ) பொது அறிவுக் கதை. கட்டுரை, தகவல்கள் பகுதியில்:- எலும்பு  தானம் (எலும்பு வாங்கி):- 
மருத்துவத் துறையில் சமீப காலமாகப் பரவலாக உச்சரிக்கப்படும் வார்த்தைகளில் ஒன்று எலும்பு வங்கி. சமீப காலமாகப் பேசப்பட ஆரம்பித்தாலும், கால் நூற்றாண்டுக்கு முன்னரே (1988) இந்தியாவின் முதல் எலும்பு வங்கி மும்பை டாடா நினைவு மருத்துவமனையில் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. தொடர்ந்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆரம்பிக்கப்பட்டது. தமிழகத்தில் கோவை கங்கா மருத்துவமனையில் முதல் எலும்பு வங்கி தொடங்கப்பட்டது. தற்போது சென்னை மருத்துவகல்லூரி மருத்துவமனையிலும் உள்ளது என்பதை அறிவோம்.

நாட்டின் முன்னோடி எலும்பு வங்கிகளில் ஒன்று இது. எலும்பு மாற்று அறுவைச் சிகிச்சை வளர்ந்துகொண்டிருக்கும் முக்கியமான சிகிச்சை முறைகளில் ஒன்று. ஆனால், இது பற்றிப் போதிய அளவு விழிப்புணர்வு இன்னும் நம்மவர்களிடம் உருவாகவில்லை.

விபத்து, கிருமித்தொற்று அல்லது புற்றுநோய் காரணமாக எலும்புகள் கடுமையாகப் பாதிக்கப்படும்போது, பாதிக்கப்பட்ட எலும்பை எடுத்துவிட்டு, அங்கு உண்மையான எலும்பைப் பொருத்துவது, எலும்பு மாற்றுச் சிகிச்சை. இறந்தவர்கள், மூளைச்சாவு ஏற்பட்டவர்கள் ஏன்… உயிரோடு இருப்பவர்களிடமிருந்தும்கூட எலும்பைப் பெற்று, முறைப்படிப் பாதுகாத்து, எலும்பு மாற்றுச் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்குக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டதே எலும்பு வங்கி. ரத்த வங்கி, கண் வங்கிபோல இதுவும் உறுப்பு தானத்தை எதிர்பார்த்துச் செயல்படும் ஓர் அமைப்பு. இதயம், கண், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உடல் உறுப்புகளைத் தானமாகத் தருவதுபோல் எலும்பையும் தானமாகத் தரலாம்; பெறலாம்.

எலும்பைப் பாதுகாப்பதற்கு அதிநுண்ணிய தொழில்நுட்பம் எதுவும் தேவையில்லை. மிகவும் எளிதான வழியில், குறைந்த செலவில் எலும்புகளைச் சேமிக்க முடியும். மூளைச்சாவு ஏற்பட்டவரிடமிருந்து பெறப்பட்ட எலும்பை ஆல்கஹாலில் கழுவிச் சுத்தப்படுத்தி, அதில் எய்ட்ஸ் மற்றும் மஞ்சள் காமாலைக் கிருமிகள் இல்லை என்பது உறுதியானதும், மைனஸ் 80 டிகிரி செல்சியஸில், குளிர்சாதனப் பெட்டியில் பல வருடங்களுக்குப் பாதுகாக்கலாம். எலும்புகளை காமா கதிர்கள் கொண்டு தொற்றுநீக்கம் செய்து பாதுகாப்பதும் உண்டு.

இயல்பாக இறந்தவரின் உடலிலிருந்து 12 மணி நேரத்துக்குள் எலும்பைப் பெற்றுக்கொண்டால், அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். உயிரோடு இருப்பவரிடமிருந்தும் எலும்பைப் பெறலாம். உதாரணத்துக்கு, இடுப்பு மாற்றுச் சிகிச்சை மேற்கொள்ளப்படும்போது, அங்குள்ள பந்துக்கிண்ண மூட்டு எலும்பைச் சேமித்து, அடுத்தவர்களுக்குத் தானமாகத் தரலாம். மார்புக்கு அருகிலுள்ள முதுகெலும்புச் சிகிச்சையின்போது விலா எலும்புகளைவெட்டி எடுப்பது நடைமுறை. இந்த எலும்புகளையும் பாதுகாத்துப் பின்னாளில் மற்றவர்களுக்குப் பயன்படுத்த முடியும். விபத்தின்போது கை, கால்கள் துண்டாகி தசைகள் நசுங்கிவிட்டால், அவற்றின் எலும்புகளை மட்டும் இம்மாதிரி சேமித்துப் பயன்படுத்த முடியும்.

ஒருவரிடமிருந்து தானமாகக் கிடைத்த எலும்புகளைக் குறைந்தது 20 பேருக்குப் பயன்படுத்தலாம். பெரிய எலும்புகளை அப்படியே பயன்படுத்தலாம். சிறிய எலும்புகளைப் பொடி செய்து பயன்படுத்த முடியும். எலும்பைச் சார்ந்த கார்ட்டிலேஜ் மற்றும் தசைநாண்களும் பயன்படும்.

எலும்புச் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் பிளேட் மற்றும் ஸ்குரூக்களுக்குப் பல லட்ச ரூபாய் செலவாகும். ஆனால், தானமாகப் பெறப்பட்ட எலும்புகளைப் பயன்படுத்த சிலஆயிரங்களே ஆகும். உறுப்பு மாற்றுச் சிகிச்சையின்போது சிலருக்குப் புதிய உறுப்பு ஒப்புக்கொள்ளாமல் போவதும் உண்டு. இதைத் தடுப்பதற்காக இவர்கள் வருடக் கணக்கில் தன் தடுப்பாற்றல் எதிர்முறிவு மருந்துகளைச் சாப்பிட வேண்டியது கட்டாயம். இதற்கு மாதந்தோறும் பல ஆயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டிவரும். ஆனால், இந்தப் பிரச்சினைகள் எலும்பு மாற்றுச் சிகிச்சையில் ஏற்படுவதில்லை என்பது கூடுதல் நன்மை.

இத்தனை நன்மைகள் இருந்தும் எலும்பு தானம் மக்களிடம் பிரபலமாகாமல் இருப்பது ஏன்? இதயம், கண், சிறுநீரகம் போன்றவற்றைத் தானமாகத் தர முன்வருபவர்கள்கூட எலும்பைத் தானமாகத் தருவதற்குத் தயங்குகிறார்கள் என்றால், அதற்கு சென்டிமென்ட் சிக்கல் முக்கியமான காரணம். எலும்புகளைத் தானமாகத் தந்துவிட்டால், இறந்தவரின் உடலமைப்பு மாறிவிடும். உண்மையான உடல்போல் தெரியாது என்று நினைக்கிறார்கள். அப்படியல்ல! எலும்புகளை அகற்றிய இடத்தில் மரக்கட்டைகள் மற்றும் பஞ்சு வைத்துத் தையல் போட்டு மூடிவிடுவதால், இறந்தவரின் உடலமைப்பு மாறாது என்பதை உறவினர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு முக்கியமான விஷயம், ஆண்டுதோறும் எலும்புச் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் பிளேட்டுகள் மற்றும் ஸ்குரூக்கள் மட்டும் ரூ.4,000 கோடிக்கு மேல் விற்பனையாகின்றன. இதில் அதிக லாபம் பார்த்துப் பழகிய உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் எலும்பு வங்கி வளர்ச்சியை மறைமுகமாகத் தடுக்கின்றன.

நாட்டில் சாலை விபத்துகளில் எலும்பு சேதம் அடைபவர்கள்தான் அதிகம். இவர்களில் 80% பேருக்கு எலும்பு மாற்றுச் சிகிச்சை தேவைப்படுகிறது. கோவையில் ஒரு மருத்துவமனையில் மட்டும் ஆண்டுக்கு 6,000 பேருக்கு இச்சிகிச்சை தேவைப்படுவதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. இந்த அளவுக்குத் தேவைப்படுகிற எலும்பு வங்கி முழுப் பயன்பாட்டுக்கு வர வேண்டுமானால், மக்களிடம் எலும்பு தானம் குறித்த விழிப்புணர்வு மேம்பட வேண்டும். அதற்கு அரசின் பங்கேற்பும் முக்கியம்.

உறுப்பு தானம் தொடர்பான கருத்துகளைப் பள்ளி, கல்லூரிகளில் தொடங்கி சமூகத்தின் எல்லா மூலைகளுக்கும் அரசு எடுத்துச் செல்ல வேண்டும். மேலும், இப்படி உறுப்பு தானம் செய்பவர்களை உற்சாகப்படுத்த சமூகத்துக்கு அவர்களுடைய மகத்தான பங்களிப்பை அங்கீகரிக்கும் செயல் திட்டங்களை ஆக்கபூர்வமாகச் சிந்திக்க வேண்டும். எங்கோ அவர்களுக்கு அளிக்கப்படும் ஒரு முன்னுரிமை, எதிலோ அவர்களுக்குக் காட்டப்படும் ஒரு சலுகை அவர்களைத் தனித்துக் காட்டும். மேலும் பலரை ஈர்க்கும். பல உயிர்களைக் காக்கும்! ஆதாரம் : கு.கணேசன், பொதுநல மருத்துவர்


====================================================

இ) சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம் கேள்வி பதில் பகுதியில்:-
இரத்ததானம் செய்யும் போது கவனிக்கவேண்டிய சில குறிப்புகள்:-


  • இரத்ததானம் கொடுப்பதற்கு குறைந்தது 3 மணி நேரத்திற்கு முன்னர் நன்றாக சாப்பிடுதல் வேண்டும்.
  • இரத்ததானம் அளித்தப்பின் வழங்கப்படும் சிற்றுணவுகளை சாப்பிடுதல் மிகவும் முக்கியமானது. அதன் பிறகு நன்றாக உணவருந்துதல் வேண்டும்.
  • இரத்ததானமளிக்கும் நாளில் புகைப்பிடித்தலை தவிர்க்கவும். தானமளித்த 3 மணி நேரத்திற்குபிறகு புகைப்பிடிக்கலாம்.
  • இரத்ததானம் அளிப்பதற்கு 48 மணிநேரத்திற்கு முன்பு நீங்கள் மது அருந்தியிருந்தால் இரத்ததானம் செய்வதற்கு அனுமத்திக்கப்பட மாட்டீர்கள்.    
  • இரத்ததானம் பற்றிய தவறான நம்பிக்கைகள்

“நான் இரத்ததானம் அளித்தப்பின் சோர்வாகவும், அசதியாகவும் உணர்கிறேன்” – இரத்ததானம் செய்தபின்பு நீங்கள் நீராகாரங்கள் அருந்துவதாலும் மற்றும் நன்றாக உணவருந்துதலும் நீங்கள் சோர்வாகவும், அசதியாகவும் உணரமாட்டீரகள்.

“நான் சாதாரண வேலைகளை தொடரமுடியாது ” – இரத்ததானம் அளித்த பிறகு வேலைகளை செய்யவேண்டாம் என்று கூறினாலும் உங்களால் எல்லா வேலைகளையும் தொடரமுடியும்.

“எனக்கு இரத்தம் குறைவாக இருக்கும்” – நீங்கள் மருத்துவரால் தானமளிக்கத் தகுதியானவராக சான்றளிக்கப்பட்டால் தானமளித்தப்பின்பும் உங்கள் உடலில் போதுமான இரத்தம் இருக்கும்.

“ஏன் நான் மது அருந்த முடியாது!!” - நீங்கள் இரத்ததானமளித்த மறுநாள் மது அருந்தலாம். ஆதாரம்:BharatBloodBank.

இரத்த தானம் செய்வோர்களின் பயனுள்ள இணையங்கள்:-
http://www.friendstosupport.org/
http://www.indianblooddonors.com/
http://www.hyderabadblooddonors.org/hyderabadblooddonors/bloodbanks.aspx
http://www.bloodgivers.com/
http://www.jeevan.org/blood-bank/
http://www.blooddonations.org/
http://www.aabb.org/Pages/default.aspx
http://www.redcross.org/
http://www.bloodonline.in/
http://www.bharatbloodbank.com/
http://sankalpindia.net/drupal/?q=blood
http://www.bloodworksnw.org/home/
http://www.who.int/bloodsafety/en/
http://www.transfusionguidelines.org/
http://www.bloodservices.ca/

-நன்றி முகநூல் பக்கங்கள்.

====================================================

ஈ ) சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம் கேள்வி பதில் பகுதியில்:-
"ஸ்டெம் செல்' தானம் குறித்து விவரிக்கிறார், ரத்தவியல் நிபுணர் ரேவதி ராஜ்.
ரத்த புற்றுநோய், ரத்த சிவப்பணுக்கள் குறைபாட்டால் உருவாகும், "தாலசீமியா' எனும் பிறவிநோய், ரத்த வெள்ளணுக்கள், சிவப்பணுக்கள், தட்டணுக்கள் ஆகியவற்றின் குறைபாட்டால் வரும், "ஏபிளாஸ்டி அனீமியா' போன்ற நோய்களுக்கு ஆளாவோர் மற்றும் பிறவிலேயே நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளோருக்கு, வழக்கமான சிகிச்சை முறைகளுக்கு மாற்றாக, தற்போது, "ஸ்டெம் செல்' சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த சிகிச்சை முறையில், ரத்த அணுக்கள் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு, கொடையாளர்களிடம் இருந்து பெறப்படும் பொருத்தமான, "ஸ்டெம் செல்'லை கொண்டு, "ஸ்டெம் செல்' மாற்று சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் மூலம், புதிய ரத்த அணுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு, நோய்கள் குணப்படுத்தப்படுகின்றன.

பொதுவாக, மனிதர்களின் எலும்பு மஜ்ஜை, தொப்புள் கொடி ஆகியவற்றில் இருந்து பெறப்படும் ஸ்டெம் செல்கள், இவற்றுக்கான பிரத்யேக வங்கியில் சேமிக்கப்பட்டு, தேவைப்படும்போது, நோயாளிகளுக்கு செலுத்தப்படுகின்றன. ரத்த வகைகளைப் போன்று, "ஸ்டெம் செல்'களிலும் வகைகள் உள்ளதால், கொடையாளியின், எலும்பு மஜ்ஜை, தொப்புள் கொடி ஆகிய இடங்களில் இருந்து பெறப்படும், "ஸ்டெம் செல்'கள், நோயாளிக்கு பொருந்தாத போது, புற எல்லை சார்ந்த ரத்த ஸ்டெம் செல் தானம் (Peripheral blood stem cell donation) மூலம் பெறப்படும் செல்கள், நோயாளிகளுக்கு செலுத்தப்படுகிறது.

"சலைவா' எனும் பரிசோதனை மூலம், கொடையாளிகளின், "ஸ்டெம் செல்' வகை அறியப்படுகிறது. இதில், கொடையாளிகளின் கன்னத்தின் உள் பகுதியில் இருந்து, சேகரிக்கப்படும் சில துளி உமிழ்நீரில் இருந்து, ஸ்டெம் செல்லின் வகை அறியப்படுகிறது.

மேலை நாடுகளில் பிரபலமாகி வரும், "ஸ்டெம் செல்' தானம் குறித்த விழிப்புணர்வு, நம் நாட்டில் குறைவாகவே உள்ளது. ரத்த அணுக்கள் தொடர்பான நோய்களால் பாதிக்கப்படுவோரின் மறுவாழ்வுக்கு பயன்படும், "ஸ்டெம் செல்' தானத்தை, ரத்த தானத்தை போன்று அளிக்க, பொதுமக்கள் முன்வர வேண்டும். 

18 - 50 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள், தங்கள், "ஸ்டெம் செல்'லை தானமாக தரலாம். இதனால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
டாக்டர் ரேவதி ராஜ்,
ரத்தவியல் நிபுணர்,
அப்பல்லோ மருத்துவமனை, சென்னை.
===================================
ஈ )நல வாழ்வு பகுதியில்:- தேனும் லவங்கப் பட்டையும் :-
உலகத்தில் கெட்டு போகாத ஒரே உணவு தேன் தான்! அதிகபட்ச மாற்றம் எதுவென்றால், தேன் உறைந்து கிறிஸ்டல்களாக மாறும். அப்போது சூடான தண்ணீரில் தேன் பாட்டிலை வைத்தால் இளகி மீண்டும் பழைய நிலைக்கு மாறிவிடும்.


தேனை சூடு படுத்தக்கூடாது

தேனை மைக்ரோவேவிலோ அல்லது அடுப்பிலோ வைத்து சூடு செய்தால் அதில் உள்ள சத்துக்கள் அழிந்து விடும்.
உலகில் எல்லா பகுதிகளிலும் கிடைக்கும் உணவு தேன்.
தேன் எனும் அற்புத உணவு. தேனின் மருத்துவ குணங்கள் சொல்லி தீராதது. நாம் இதனை அறிந்து, நமது அன்றாட வாழ்வில் தேனை உபயோகிக்க வேண்டும். ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

தேனும் லவங்கப் பட்டையும் குணப்படுத்தும் நோய்கள்:-
இதய நோய்:-
இன்று எல்லா வயதினரையும் தாக்கும் நோய் இதய நோய். இந்த நோய் ஏற்பட மன உளைச்சல், பரம்பரை, கொழுப்பு சத்து கூடுதல் என்று பல காரணங்கள் சொல்லப் படுகின்றன.

இதயத்தின் ரத்தக் குழாய்களில், நாளங்களில் அடைப்பு ஏற்படுவதால், போதிய ரத்தம் கிடைக்காமல் இருதயம் செயல் இழக்கிறது.

அற்புத மருந்து இதோ!
தினமும் காலையில் லவங்கப்பட்டை பொடியை தேனுடன் சேர்த்து குழைத்து சிற்றுண்டியுடன் சேர்த்து சாப்பிடுங்கள்.
2 கரண்டி தேன், 1 கரண்டி பொடி என்ற கணக்கில் ரொட்டியுடன் அல்லது நீங்கள் சாப்பிடும் சிற்றுண்டியுடன் சாப்பிட்டு வாருங்கள். இதய நோய் உங்களை மீண்டும் அணுகாது. ஏற்கெனவே உங்களுக்கு மாரடைப்பு
வந்திருந்தால், மீண்டும் நிச்சயம் வராது. இதய நோய் உள்ளவர்களுக்கு சுவாசம் மற்றும் இதய துடிப்பு பலவீனமாக இருக்கும். அவர்களுக்கு இந்த தேனும் லவங்கப்பட்டை பொடியும் ஒரு வரப்பிரசாதம். ஒரே மாதத்தில் அவர்களுக்கு வித்தியாசம் தெரியும்.

அமெரிக்கா, கனடா நாடுகளில் மருத்துவ மனைகளில் இந்த உணவைக் கொடுத்து வருகிறார்கள். அதிசயக்கத் தக்க மாற்றங்களை பதிவு செய்துள்ளார்கள். அடைப்பை நீக்கி, இரத்த ஓட்டத்தைஅதிகரித்து, மூச்சு வாங்குவதை குறைத்து, இதய துடிப்பை பலப்படுத்தி, இதய நோயை விரட்டி அடிக்கும் அற்புத சக்தி கொண்டது தேனும் லவங்கமும்.

செலவு குறைச்சல் தானே!
முயற்சி செய்யுங்களேன்!

ஆர்த்ரிரைட்டீஸ் என்கின்ற முடக்குவாதம். மூட்டு வலி உள்ளவர்கள், நடக்க முடியாமல் கஷ்டப்படுகிறவர்களுக்கு தித்திக்கும் தேன் போன்ற செய்தி.

தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் 1 கப் வெந்நீரில் 2 தேக்கரண்டி தேன், 1 சின்ன தேக்கரண்டி லவங்க பொடியைக் கலந்து குடித்து வாருங்கள். ஒரே வாரத்தில் உங்கள் வலி குறைவது தெரியும்.

‘எத்தகைய கடுமையான மூட்டுவலியாக இருந்தாலும் 1 மாதத்தில் குணம் நிச்சயம்’ என்று அடித்துச் சொல்கிறார்கள் கோபன்ஹேகன் பல்கலைக் கழக ஆய்வு மையத்தினர். 200 மூட்டுவலிகாரர்களை கொண்டு ஒரு சோதனை நடத்தினர். தினமும் காலை 1 தேக்கரண்டி தேனும், 1/2 தேக்கரண்டி லவங்கப் பொடியும் கலந்து கொடுத்து வந்தனர்.

ஒரே வாரத்தில் 73நோயாளிகள் வலி நிவாரணம் கண்டனர். ஒரு மாதத்தில் அனைவரும் நடக்கத் தொடங்கினர். இந்த காலத்தில் மூட்டு வலி இல்லாதவர் யார்? அதனால் இந்த கண்கண்ட மருந்தை இன்றே தொடங்கி வாழ்க்கை பயணத்தின் வலியைக் குறைத்துக் கொள்வோம்!

சிறுநீர்க் குழாய் கிருமிகள்:-
2 தேக்கரண்டி லவங்கபொடி, 1 தேக்கரண்டி தேன் ஆகியவற்றை இளஞ்சூட்டு தண்ணீரில் கலந்து குடித்து வர, சிறுநீர் குழாய்களில் உள்ள கிருமிகள் அழிந்து விடும். கோடைக் காலத்தில் இது அரு மருந்து.

கொலஸ்ரால் என்னும் கொழுப்பு சத்து 2 மணி நேரங்களில் உடம்பில் உள்ள கொழுப்புச் சத்தை 10% குறைக்கும் தன்மை கொண்டது தேன்.

2 தேக்கரண்டி தேன், 3 தேக்கரண்டி லவங்கப் பட்டை பொடியையும் 16 அவுன்ஸ் தண்ணீருடன் கலந்து குடியுங்கள். இரண்டு மணி நேரத்தில் உங்கள் கொழுப்பு சத்து அளவு குறையும். ஒரு நாளில் மூன்று முறை இரண்டு கரண்டி தேன், ஒரு கரண்டி லவங்க பொடியை மிதமான வெந்நீரில் கலந்து குடித்து வர நிச்சயம் கொலஸ்டிரால் கரைந்து விடும்.

சாதாரணமாகவே உங்கள் உணவில் தேனை சேர்த்து கொண்டு வாருங்கள். கொழுப்பு சத்து நோய் வரவே வராது.

ஜலதோஷம்:-
சூடான தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தேனை வைத்து இளஞ்சூடாக்கி அதனுடன் 1/4 தேக்கரண்டி லவங்கப் பொடியை குழைத்து மூன்று நாளைக்கு எடுத்துக் கொள்ளுங்கள். சைனஸ், சளி, இருமல் என எல்லாமே ஓடிப் போகும்.

வயிற்று அல்சர் இரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி லவங்கப்
பவுடர் கலந்து உண்டு வர வயிற்றுவலி, வயிற்றில் அல்சர் போன்றவை அடியோடு மறையும்.

வாயு தொல்லை:-
இந்தியாவிலும் ஜப்பானிலும் நடந்த ஆய்வின் முடிவில் தேனுடன் லவங்க பொடியை சேர்த்து சாப்பிட்டால் வாயுத் தொல்லை தீருமாம்!

எதிர்ப்பு சக்தி வளரும்:-
தேனில் அதிக அளவு இரும்பு சத்தும் வைட்டமின்களும் உள்ளது. இதை நாம் தொடர்ந்து லவங்கப் பொடியுடன் கலந்து உண்டு வந்தால் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது. இதனால் அடிக்கடி வைரஸ் ஜுரம், ஃபுளு என்று படுக்க வேண்டாம்.

ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானி ஒருவர் தேனில் உள்ள இயற்கை ரசாயனங்கள் ஃப்ளூ ஜூரத்தை உண்டு பண்ணும் கிருமிகளை அழிக்கிறது என்று நிருபித்துள்ளார்.

அஜீரணம்:-
சிலருக்கு சாப்பிட்ட உடன் வயிறு பெருத்து, வயிறு அடைத்து சிரமப்படுவார்கள். இவர்கள் உணவு உண்பதற்கு முன் இரண்டு தேக்கரண்டி தேனில் சிறிது லவங்க பொடியை தூவி சாப்பிட வேண்டும். பிறகு இவர்கள் சாப்பிட்டால் இவர்களுக்கு உணவு சுலபமாக வலியில்லாமல் ஜீரணமாகும்.

நீண்ட ஆயுள்:-
நீண்ட ஆயுளுக்கு 3 கப் மிதமான சூடில் உள்ள நீரில் 4 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி லவங்க பட்டை பொடியை கலந்து வைத்துக் கொண்டு ஒரு நாளில் 3 அல்லது 2 முறையாக பருக இளமை ததும்பும். வயதான தோற்றம் மறைந்தே போகும். 100 வயதில் 20 வயதிற்கான சுறுசுறுப்பைக் காணலாம். சருமம் மிருதுவாக இருக்கும். ஆயுள் நீடிக்கும்.

தொண்டையில் கிச் கிச்!
1 தேக்கரண்டி தேனை எடுத்து மெதுவாக உண்ணுங்கள். 
3 மணிக்கு ஒரு தரம் இப்படி செய்து வாருங்கள். 
தொண்டையில் கிச்கிச் முதல் அல்லது 2 தேக்கரண்டியில் போய்விடும்.

முகப்பருக்கள் அடியோடு மறைய!:-
3 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி லவங்கப் பொடியை எடுத்து இரவு படுக்கும் போது இதை குழைத்து பருக்களின் மேல் தடவுங்கள். காலையில் வெதுவெதுப்பான நீரில் முகத்தை அலம்புங்கள். தொடர்ந்து இரு வாரம் இதை செய்து வர பருக்களை வேரோடு இது அழித்துவிடும்.

சரும நோய் தீர:-
சொறி, படை போன்ற பல சரும நோய்களை குணப்படுத்தும். தேன், லவங்க பொடி இரண்டையும் சம அளவில் எடுத்துக் கொண்டு குழைத்து இந்த சரும நோய்களின் மேல் தடவி வர இந்த சரும் நோய்கள் குணமாகும்.

எடை குறைய வேண்டுமா?
தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி முன்னர் மிதமான சூட்டில் உள்ள நீரில் தேனையும், லவங்கப் பொடியையும் கலந்து குடிக்கவும்.

அதே போல இரவில் படுக்கப் போகும் முன்னர் தேனையும், லவங்கப்பொடியையும் மிதமான வெந்நீரில் கலந்து குடிக்கவும். தொடர்ந்து இப்படி செய்து வந்தால் எத்தனை குண்டாக இருந்தாலும் உடல் எடை குறைவது உறுதி.

அதிசயம்.ஆனால் உண்மை.
இதை நீங்கள் குடித்து வரும் போது உடலில் கொழுப்பை சேர விடாமல் தடுத்து விடும். அதாவது நீங்கள் சாதாரண உணவை சாப்பிட்டு வந்தாலும் கூட எடை கூடாமல் தடை செய்யும்.

புற்று நோய்க்கு அருமருந்து
ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், ‘வயிறு மற்றும் எலும்பில் வரும் புற்று நோய்களை குணப்படுத்தலாம்’ என்று தெரிய வந்துள்ளது.

ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி லவங்க பொடி என்ற கணக்கில் குழைத்து, தினமும் 3 வேளை உண்ண ஒரே மாதத்தில் இந்த புற்று நோய் குறைந்து விடுமாம்.

அயர்ச்சி:-
‘உடம்பில் சக்தியை அதிகரிக்க தேனை விடச் சிறந்தது இல்லை’ என்கிறார் ஆராய்ச்சியாளர் டாக்டர் மில்டன். இதில் உள்ள சர்க்கரை அபாயகரமானது இல்லை. உடலுக்கு உதவக் கூடியது. வயதானவர்கள், நோயிலிருந்து மீண்டவர்கள், சக்தி குறைவதால் தினமும் காலை ஒரு கப் நீரில், ஒரு தேக்கரண்டி தேனில் லவங்கப் பொடியை நன்று தூவிக் குடிக்க வேண்டும். அதே போல மதியம் 3மணிக்கும் குடித்து வர, இழந்த சக்தியைப் பெறுவார்கள்.

வாய் துர்நாற்றத்தை போக்க!
தெற்கு அமெரிக்கா மக்கள் தினமும் காலையில் தேனையும் லவங்கப் பொடியையும் கலந்து சுடுநீரில் வாய் கொப்பளிப்பார்கள். இதனால் வாய் துர்நாற்றம் போய் விடும். நாள் முழுவதும் வாய் மணக்கும்.


===========================================


உ ) சமையல் குறிப்புக்கள் / விருந்துக்கு வாங்க பகுதியில்:-
இஞ்சிப் பால்..! இதைச் சாப்பிட்டால்…..
கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க.

ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?

ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும்.

அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும்.

அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்?

1. நுரையீரல் சுத்தமாகும்.
2. சளியை ஒழுச்சு கட்டிடும்.

3. வாயுத் தொல்லை என்பதே வராது.

4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.

5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.

6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.
7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.
8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.
9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.
10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே.

அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா?

3 வயசுக்கு மேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம்.

ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் தவிர்க்கனும்.

மீதிப்பேர் சாப்பிடலாம்.

என்ன நாளையில இருந்து உங்க வீட்டில காப்பிக்கு பதில் இஞ்சிப்பால்தானே?
பகிர்ந்துகொள்ளுங்கள் கண்டிப்பாக மற்றவரும் அறிந்துகொள்ளட்டும்..
==============================================
"கைத்தொழில்-கற்றுக்கொள்ள வாருங்கள்"-கைத்தொழில் பகுதியில் இந்தமாதம்:-
'கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை இல்லை ஒத்துக்கொள்' என்ற கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை அவர்களின் பாடலுக்கேற்ப பலவிதமான சிறுதொழில் வாய்ப்புகள் தரும் கைவினை வேலைப்பாடுகள்: கற்றுத்தருகிறார் திருமதி ஜெயஸ்ரீ நாராயணன் அவர்கள். 


சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை ஒயர்கூடை பின்னுதல், எம்பிராய்டரி, குரோஷா, பொம்மைகள் செய்தல் போன்ற கைவினை வேலைப்பாடுகள் பெண்களின் உபரி வருமானத்துக்கு வாய்ப்பளித்தன. இன்று பெண்களின் பெரும்பாலான நேரத்தை டிவி பிடித்துக் கொள்கிறது. பொருளாதார காரணங்களுக்காக வீட்டின் ஆணை சார்ந்திருக்கும் பெண்கள், அவர்களின் திடீர் இழப்புகளின்போது செய்வதறியாமல் தவிக்கின்றனர். கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்; கவலைகள் உனக்கில்லை ஒத்துக்கொள் என்கிற அர்த்தமுள்ள வரிகளை மெய்ப்பிக்கவே பல்வேறு கைவினை வேலைப்பாடுகளை கற்றுத்தரும் இந்தத் தொடரை ஆரம்பித்திருக்கிறோம்.

தமிழகம் முழுக்க கல்லூரி, பள்ளிகள், பெண்கள் குழுக்களுக்கு கைவினைப் பொருட்கள் செய்யக் கற்றுத் தந்துக்கொண்டிருக்கும் ஜெயஸ்ரீ நாராயணன், இனி வாரம் ஒரு கைவினைப் பொருள் செய்யக் கற்றுத்தர இருக்கிறார்.சென்னையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ, திருமணத்துக்குப் பிறகு ஓவியப் பயிற்சி, நகைகள் செய்தல் உள்ளிட்ட பயிற்சிகள் எடுத்துக் கொண்டவர். 32 ஆண்டு கால ஆர்வமும் உழைப்பும் இவரை தேர்ந்த கைவினை கலைஞராக மாற்றியிருக்கிறது. ஆர்வமுள்ளவர்களுக்கு இவர் கற்றுத்தருவதோடு, கற்றுக்கொண்ட பிறகு தொழில் தொடங்கவும் குழுக்களாக சேர்ந்து கண்காட்சிகள் நடத்தவும் வழிகாட்டுகிறார்.

பல்வேறு ஓவிய வகைகள், பேப்பர் நகைகள், டெரகோட்ட நகைகள், செராமிக் நகைகள், அலங்கார சணல் பைகள் போன்றவற்றை கற்றுத்தருகிறார். தமிழ் பத்திரிகைகளிலும் இவர் பத்திகள் எழுதிவருகிறார். 

நன்றி - நான்கு பெண்கள் இனைய வலைப்பதிவு  https://fourladiesforum.com/
==============================================
6. சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்"..... "மார்கழி-மாத-படத்தில் உள்ள (6) ஆறு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்- டிசம்பர்-2016 மார்கழி-மாதம் சேவை /தான /தர்ம /உதவும் மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும்-வலைப்பதிவு இதழ் போட்டி என்-09.

சரியான விடை அடுத்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" http://gulkanthu.blogspot.in/வலைப்பதிவர் இதழில் வெளியாகும். போட்டியில் பங்குகொள்ள விருப்பமுடையவர்கள் விடைகளை "vaishalireaderscircle@gmail.com" என்கிற மினஞ்சல் முகவரிக்கு 10-01-2017 முன்பாக அனுப்பிவைக்கவேண்டும். சரியான விடை எழுதிய அனைவருக்கும் அடுத்தமாத வாசகர் வட்ட சந்திப்பில் பரிசுகள் வழங்கப்படும்.

=======================================

$ சென்ற மாத "சுட்டீஸ் குல்கந்து" வலைப்பதிவர் இதழ்-8 அக்டொபர்-2016-கார்த்திகை-மாதம் தீபத்திருநாள் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும்-வலைப்பதிவு இதழ் போட்டி என்-08. ஆறு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடை,
1. அகல் விளக்கு 2. மூக்குக்கண்ணாடி 3. ரவிக்கை கையில் தையல் 4. காதில் வைரத்தோடு  5. தலையில் சாமந்திப்பூ, 6.படத்தை வரைந்தவரின் கையொப்பத்தின் அடியில் கோடு.

சென்ற மாத ஆறு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடையை 78 நபர்கள்மட்டுமே குறிப்பிட்டிருந்தனர், (முதல்முறையாக மிக அதிகமானவர்கள் தவறான பதிலை கூறியிருந்தார்கள்.) தமிழில் விடை எழுதியவர்கள்=33, ஆங்கிலத்தமிழில் எழுதியவர்கள்=24, ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=21, ஹிந்தி மொழியில்=0 நபர்களும், தெலுங்கு மொழியில்=0 நபரும், மேலும் சிலர் ஆறுக்கும் அதிகமான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.
==============================================
7. அறுவை ஆயிரம், பொன் மொழிகள், பழ மொழிகள், உலக மொழிகள், விடுகதைகள், பஞ்ச். :-தொகுத்து வழங்கியவர்... எ.கே. சபரீஷ்....

ஆறுதரம் பூமியை வலம் வருதலும், ஆயிரம் முறை காசியில் குளித்தலும், நூறு தடவை சேது ஸ்நானம் செய்தலும், என இவற்றால் கிடைக்கும் புண்ணியம், தாயை பக்தியுடன் ஒருதரம் வணங்கினாலே கிடைக்கும்."

தொகுத்து  வழங்கியவர் எ.கே. சபரீஷ்....
==============================================

8.பயனுள்ள தமிழ் வலைப்பதிவர் பக்கங்களில் இந்தமாதம் :-

1. மதிப்பிற்குரிய திரு பொள்ளாச்சி நசன் - (தமிழம்.வலை-தமிழம். பண்பலை)  அவர்களின் "திருக்குறள் படித்தல் - (எளியமுறையில் ஒரே நாளில் 300 திருக்குறளை அறிதல்)" http://win.tamilnool.net/tkl300/index.html என்கிற இனைய வலைப்பக்கத்தை, புது தில்லியின் வைசாலி (தமிழ்) வாசகர் வட்ட உறுப்பினர்களுக்கு அறிமுகம்  செய்வதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.  

2. திரு சுரேஷ் அவர்கள் "தளிர்" http://thalirssb.blogspot.com/ (thalir.ssb@gmail.com) என்கிற வலைப் "பூ" பக்கத்தில் சிறுவர் பகுதியை மிகவும் அருமையான வகையில் பல படக்  கதைகளை பதிவு செய்து வருகிறார். சிறு கதைகளில் விருப்பமுடைய அனைவருக்கும் மிகவும் பயனுள்ள வலைப்பதிவுப் பக்கமாக திரு சுரேஷ் அவர்களின் வலைப்பதிவு திகழ்கிறது. அவருக்கு நமது நன்றிகளை தெரிவித்துக்கொண்டு, நமது (NCR-புது தில்லி) வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ்களுக்கு பயனுள்ள வலைப்பதிவு பக்கமாக மேற்கண்ட அவரது வலைப்பதிவுகளை  முன்மொழிவதில் மகிழிச்சியடைகிறோம்.
==============================================

9. கருத்து சொல்லப்போறேன்:- (A.K.சபரிஷ்)

$"ஆலய மணி தலை கவிழ்ந்து உள்ளது. ஆனால் அதன் நாதம் தொலைதூரம் வரை கேட்கிறது. அதுபோல அடக்கமாக செய்யும் தொண்டு நெடுங்காலம் பயன் தரும்." 


$கெட்டத, கேட்ட உடனே மறக்கணும், நல்லத நாலு பேர்கிட்டயாவது சொல்லணும்!
==============================================
10. விடுகதைகள் :- (A.K.சபரிஷ்)
முன்னும் பின்னும் போவான், ஒற்றைக்காலிலே நிற்பான் – யார் அவன்?– [விடுகதைக்கான விடை:- கதவு]

அடித்தாலும், உதைத்தாலும் அவன் அழ மாட்டான் – அவன் யார்?[விடுகதைக்கான விடை:- பந்து ]


==============================================
11. கவிதை:- 
முதலில் அணிந்த சட்டை
முதலாவதாக போட்ட ஊசி
முதன் முதல் வெட்டிய நகங்கள்
முதலில் விளையாடிய கிலுகிலுப்பை
என்று உனது
எல்லா ‘முதல்’களையும்
சேமித்து  வைத்திருக்கிறேன்
முதன் முதலாக
‘அம்மா’ என்று என்னை
நீ மழலையாக அழைத்ததை
எப்படி சேமிப்பேன்  என அறியாமல்!
மூச்சுக் காற்று மட்டும் 
உரிமை கோரும் 
ஏகாந்தமான இரவொன்றில் 
உன் நினைவு சேமிப்பை 
கொஞ்சம் செலவு செய்து கொள்கிறேன்  
என் செல்லத் தோழியே!   (திருமதி. பிரியா கங்காதரன்)
====================================================
11. கவிதை:- 
நட்சத்திர விடுதிக்கு 
போகும் வழியெங்கும் 
நட்சத்திரம்.... 
மின்னிக்கொண்டிருந்தது...(S.ஸ்ரீ சக்ரி)
================================
11. கவிதை:- 

வெப்ப நகரம் 
கண்ணாடி மாளிகையின் 
கண்ணீரால் 
குளிர்ந்தது..... 
எதோ ஒரு சில 
மரங்களின் 
புண்ணியத்தால்... ( AK.பவித்ரா)
=================================
12. நமது வாசகர் வட்டத்தின் இந்த மாத சரித்திரம் முக்கியம் பகுதியில், 


மத்திய தொல்பொருள் துறையினர் மேற்கொண்டுள்ள ஆராய்ச்சிகளின் பலனாக, மதுரை மண்ணுக்குள் புதைந்து போயிருந்த ரகசியங்கள் வெளிக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. 2200 முதல் 2300 வருடங்களுக்குள் வாழ்ந்த நம் மூதாதையர்களின் கிராமத்தைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஓர் அரிய வாய்ப்பு தொல்பொருள் துறையினரால் சாத்தியமாயிற்று...."மதுரை 
கீழடி - மண்ணுக்குள் மறைந்திருந்த நம் மூதாதையர் கிராமம் - வனிலா பாலாஜியின் மூன்றாம் கண் (13)" ----11 படங்களுடன் ஒரு பகிர்வு.

மற்றுமொரு சிறப்பு என்னவென்றால், தமிழ்நாட்டை பொருத்தவரை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பழங்காலத்து நாணயங்கள், அணிகலன்கள், முதுமக்கள் தாளி, நடுகற்கள் போன்ற மக்கள் உபயோகப்படுத்திய பொருட்களை மட்டுமே கண்டுபிடித்து வந்துள்ளார்கள். மக்கள் வாழ்ந்த வீடுகள், வீட்டின் சுவர்கள் ஆகியவற்றை கண்டுபிடித்திருப்பது இதுவே முதன்முறை. மேலும்,  அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள உறை கிணறுகள், நம்மில் சில வருடங்களுக்கு முன்பு வரை உபயோகத்தில் இருந்த உறை கிணறுகளை ஒத்திருக்கின்றன.
நன்றி http://www.atheetham.com/2015/09/13_2.html

===============================================

13.விளம்பரதாரர் நிகழ்ச்சி பகுதியில்:- 

==================================================


14.பயனுள்ள முகநூல் பக்கங்களில் இந்தமாதம் பகுதி:- 
இந்தமாத சிறந்த முகநூல் பக்கங்களாக:- 
1. கீரை மற்றும் கிழக்கு வகைகளை சமையலுக்கு நறுக்கும்போது, சமயலுக்குத் தேவையற்ற காம்பு, தண்டு, கிழங்கு வேர் போன்ற பகுதிகளை தூக்கியெறியாமல் அவைகளை நமது வீட்டுத் தோட்டத்தில் அல்லது அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனி பகுதியில் மண்தொட்டிகளில் நட்டுவைத்து நீரூற்றி பராமரித்துவந்தால் சிறு தோட்டம் அமைவதோடு வீட்டிற்குத் தேவையான கொத்தமல்லி, மிளகாய், கீரை, காய்கள் போன்றவை இலவசமாக நமது வீட்டுத்தோட்டத்த்திலேயே கிடைத்துவிடும். மேலும் அருமையான பல விவரங்களுக்கு இந்த முகநூல் பக்கத்தில் இணைந்து காணொளியில் பல விவரங்களை பெற்று பயன்பெறலாம்.
https://www.facebook.com/officialgoodful/videos/1300037320066731/
https://www.facebook.com/officialgoodful/

2. தமிழ் கடல். https://www.facebook.com/groups/264740130252643/ என்ற முகவரியில் சொடுக்கி (click செய்து) தமிழ் கடல் குழுமத்தின் உள்ளே நுழைந்து, குழுமத்தில் இணைந்து பயன்பெறுங்கள்.

3. முகநூலில் சிறுகதைகள் என்னும் முகநூல் பக்கத்தையும் 
http://www.facebook.com/siru.kathaigal நமது வாசகர் வட்ட குழுவினர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம். 
==================================================

15. வாசகர் வட்ட நிகழ்ச்சியின் சிறப்பு புகைப்படங்கள் :-
பகுதி II -கால்வண்ணம் :- (நடனம், நாடகம், விளையாட்டு போட்டிகள்) :-











அன்புள்ள வாசகர்களுக்கு:- நாங்கள் தொகுத்து வழங்கிய பதிவுகளில் உள்ள குறை நிறைகளை வாசகர்கள், அன்பான முறையில் எங்களுக்கு எடுத்துக்கூறி, எங்களது பதிவுகள் மேலும் சிறப்படைய வாழ்த்தி உற்சாகப்படுத்துமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு   
வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ் தமிழ் ரோஜாக்கள்.
நன்றி... மீண்டும் அடுத்தமாத இதழில் சந்திப்போம்... வணக்கம்.