"தமிழ் ரோஜாக்களின் குல்கந்து"

"தமிழ் ரோஜாக்களின் குல்கந்து"

Wednesday, June 27, 2018

"சுட்டீஸ்-குல்கந்து" இதழ்=27 ஆனி மாதம், தேதி17-06-2018.

வைஷாலி வாசகர் வட்ட 52வது சந்திப்பு, 17-06-2018 (June-July)-ஆனி மாதம்.

வருகை தாருங்கள், தமிழில் சிறுவர்கள் தொகுத்து வழங்கும் வலைப்பதிவர்களின் மாத இதழ், ஒவ்வொரு மாதமும் ஆங்கில மாதத்தின் 3/4-வது ஞாயிறுதோறும் (தமிழ் மாதத்தின் முதல் ஞாயிறு அன்று) இரவு 9 மணியளவில் வெளியாகும் சுட்டீஸ் ரோஜாக்களின் "குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழ்.   http://gulkanthu.blogspot.in/


 

கற்க கசடற….!!                                       !வாய்மையே வெல்லும்!!


 “வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம்
160/Sector-4, Vaishali, Ghaziabad, NCR-New Delhi.-201012
e-mail:  vaishalireaderscircle@gmail.com
___________________________________________________________________
"சுட்டீஸ்-குல்கந்து" இதழ்=27 ஆனி மாதம், தேதி17-06-2018. "வைஷாலி வாசகர் வட்ட 52வது சந்திப்பு, ஆனிமாதம். வீட்டு உபயோக மின்சாதனப் பொருட்கள் ஆகியவற்றை இயக்குதல், அவற்றின் பராமரிப்பு, மற்றும் சிறு சிறு பழுது நீக்குதல்:--சிறப்பு பயிற்சி கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும். 

வணக்கம், தாங்களின் வருகைக்கு நன்றி, இந்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழில்" -சித்திரை மாத வலைப்பதிவு:- இந்த இதழின் ஆசிரியராக, தொகுத்து வழங்குபவர்:- (Editor of the Page) வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ் குழுவினர்கள் இடம் செக்டர்-4, மையப்பூங்கா(Central Park), வைைஷாலி மெட்ரோ இரயில் நிலையம்  அருகில், NCR-New Delhi.


வைஷாலி வாசகர் வட்ட 52வது சந்திப்பு, 17-06-2018 (June-July)-ஆனிமாதம். வீட்டு உபயோக மின்சாதனப் பொருட்கள் ஆகியவற்றை இயக்குதல், அவற்றின் பராமரிப்பு, மற்றும் சிறு சிறு பழுது நீக்குதல்:-

வைஷாலி வாசகர் வட்ட 52வது சந்திப்பு, 
ஹலோ சுட்டீஸ் ஒவ்வொரு மாத வாசகர்வட்ட நிகழ்ச்சியிலும் இந்த வருடம் (2018-19)முழுவதும் நாம் பெறப்போகும் பயிற்சிகள்... வீட்டு உபயோக மின்சாதனப் பொருட்கள் ஆகியவற்றை இயக்குதல், அவற்றின் பராமரிப்பு, மற்றும் சிறு சிறு பழுது நீக்குதல் குறித்து அறிந்துகொள்ளலாம். 

அந்த வகையில் வரும் 17-06-2018, ஆங்கில மாதத்தின் 3வது ஞாயிறு அன்றய 52வது (தமிழ்-ஆனிமாத) வாசகர் வட்ட சந்திப்பில் நாம் கற்றுக்கொள்ள இருக்கும் வீட்டு உபயோக மின்சாதனப் பொருட்கள் வரிசையில் கணினி சார் அறிவு (மேசைக்கணினி மற்றும் மடிக்கணினி, டேப் என்று கூறும் தொடுதிரை மின்னணு தொலைப்பேசி கணினி) அடிப்படை ‘கம்ப்யூட்டர் ஹார்டுவேர்’, ‘நெட்வொர்க்கிங்’ குறித்து, அவைகளை இயக்குதல், அவற்றின் பராமரிப்பு, மற்றும் சிறு சிறு பழுது நீக்குதல் குறித்து தெரிந்துகொள்ளும்  பயிற்சி சந்திப்பு மற்றும் வாசகர் வட்ட நிகழ்ச்சிகளும் கொண்டாட்டங்களும்.


ஞாயிற்றுக்குகிழமை மாலை 4.00pm மணியளவில் வழக்கமான இடத்தில் வருகை தாருங்கள், மேலும் தமிழில் சிறுவர்கள் தொகுத்து வழங்கும் வலைப்பதிவர்களின் மாத இதழ்,  சுட்டீஸ் ரோஜாக்களின் "குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழ்.  http://gulkanthu.blogspot.in/

வைஷாலி வாசகர் வட்ட 52வது சந்திப்பு, சுட்டீஸ்களின் கதை தாத்தா என்று அழைக்கப்பட்ட திரு அம்பி கணேசன் அவர்களின் மரண துயர செய்தியால் மேலும் சில தவிர்க்கமுடியாத காரணத்தால் அன்றய வாசகர் வட்ட சந்திப்பு ரத்தாகியது. இதே நிகழ்ச்சி அடுத்தமாதம் ஆடி மாதம் 15-07-2018 ஆங்கிலமாத 3வது ஞாயிறு அன்று நடைபெறும்.

மேலும் அடுத்தமாத இதழுக்காக உங்களது ஓவியம், கதை, கவிதை, கட்டுரை போன்றவற்றை  "சுட்டீஸ்-குல்கந்து" வலைப்பதிவு இதழுக்காக அனுப்பிவிட்டீர்களா? அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி "vaishalireaderscircle@gmail.com"

வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :- 
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து, 
தொடர்ந்து  எங்கள் வீட்டு "நூலகம் " 
படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும் 
(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம் / செல்லப் பிராணிகள் வளர்ப்போம் )

@இந்த மாதம் நமது வாசகர்வட்டத்தின் தமிழ் வகுப்புக்கு புதியவர்கள்:-
@10-பத்துபேர்கள் கொண்ட முதல் குழு தமிழை முழுமையாக எழுத படிக்க தெரிந்துகொண்டதோடு தமிழக அரசின் அடிப்படை தமிழ் தேர்வினை எழுத தயாராக இருக்கிறார்கள் 


@மேலும் 9-ஒன்பது புதியவர்கள் தமிழ் எழுத படிக்க கற்றுவருகிறார்கள்.


@இந்த மாதம் மேலும் மூன்று மாணவர்கள் புதியதாக தமிழி கற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்கள் விரைவில் அவர்களும் தமிழி வகுப்பில் சேர இருக்கிறார்கள்.

======================================

@ சுட்டீஸ் கதைகள்:-

==========================================

@விளம்பரம்:- "இந்தப்பகுதியை உங்களுக்கு வழங்குபவர்கள்":-  

@விளம்பரம்:- "இந்தப்பகுதியை உங்களுக்கு வழங்குபவர்கள்":-  

====================================


"மனோன்மணீயம்" நமக்களித்த "தமிழ் தாய் வாழ்த்து":-
"நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்,

சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்,

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற,

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் 
தமிழணங்கே!  தமிழணங்கே! .....

உன் சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து 
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!"

இந்த வாழ்த்துப்பாடலை இயற்றியவர் திரு.பெ. சுந்தரம் பிள்ளை (அவர் வாழ்ந்த காலம் "ஏப்ரல் 4, 1855 - ஏப்ரல் 26, 1897") 

அவர் எழுதிய "மனோன்மணீயம்" என்ற புகழ்பெற்ற நாடக நூலில் இடம்பெற்றிருக்கும் தமிழ் தாய் வாழ்த்துப்பாடல் இது. 

இந்த மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த என்று ஆரம்பமாகும் பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது.

தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலின் கருத்து:- 
அலை கடலே ஆடையான இந்த அழகான பூமிப் பெண்ணிற்கு, பாரத நாடே முகமாம், தென்திசை அதன் நெற்றியாம், அதில் திலகமென திகழ்வது திராவிட திருநாடாம், அந்தத் திலகத்தின் வாசனைப் போல்அனைத்து உலகமும் இன்பம் காண எல்லா திசையிலும் புகழ் மணக்க இருக்கும் தெய்வமகள் ஆகிய தமிழே, என்றென்றும் இளமையாக இருக்கிற உன்னுடைய இந்த அழகைக் கண்டு வியந்து, செய்யும் செயலையும் மறந்து, வாழ்த்துகிறோம்! வாழ்த்துகிறோம்! வாழ்த்துகிறோம்!.....
நன்றிகளுடன் "வைஷாலி வாசகர் வட்டம்". 


==========================

==================================

@. புதிய எட்டு வித்தியாச புதிர் போட்டி :- சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்".....வைகாசி-மாத-படத்தில் உள்ள (8) எட்டு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் -வலைப்பதிவு இதழ் போட்டி என்-26.


சரியான விடை அடுத்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" http://gulkanthu.blogspot.in/வலைப்பதிவர் இதழில் வெளியாகும். 

போட்டியில் பங்குகொள்ள விருப்பமுடையவர்கள் விடைகளை "vaishalireaderscircle@gmail.com" என்கிற மினஞ்சல் முகவரிக்கு 15-06-2018 முன்பாக அனுப்பிவைக்கவேண்டும். சரியான விடை எழுதிய அனைவருக்கும் அடுத்தமாத வாசகர் வட்ட சந்திப்பில் பரிசுகள் வழங்கப்படும்.

சென்ற மாத "சுட்டீஸ் குல்கந்து" வலைப்பதிவர் இதழ்-25சித்திரை -மாத-படத்தில் உள்ள (8) எட்டு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் -வலைப்பதிவு இதழ் போட்டி என்-25.போட்டிக்கான  சரியான  விடை,

போட்டி என்-25.விடை:-1).இடம்வலமாக படம் திரும்பியுள்ளது, 2)பேனா கோப்பை கைப்பிடி 3)யானை படத்தில்  தலை பொட்டு4).கோப்பையில் வெள்ளை நிற அட்டை, 5)ஒரு படத்தில் மட்டும் பென்சில் 6) பென்சில் சீவும் கருவி, 7)பென்சில் சீவிய துகள்கள், 8)யானை பொம்மையின் கண்கள்.

சென்ற மாத எட்டு-வித்தியாசங்கள் வலைப்பதிவர் இதழ்-25 போட்டிக்கான சரியான விடையை 177 நபர்கள்/போட்டியாளர்கள் எழுதி போட்டியில் கலந்துகொண்டனர். வாட்ஸ் ஆப், முகநூல், மற்றும் குறுஞ்செய்தி, தொலைப்பேசி மேலும் மின்னஞ்சல் மூலம் நிறைய போட்டிக்கான விடைகள் அனுப்பிவைத்தார்கள் வாசகர் வட்டத்தை சேர்ந்தவர்களும் அவர்களின் நண்பர்கள் மற்றும் வலைப்பதிவை படிப்பவர்களும் மற்றவர்களும் என சரியான விடையை 177 நபர்கள் மட்டுமே குறிப்பிட்டிருந்தனர், (குறிப்பு- வித்தியாசம் 7 மற்றும் 8 ஆகிய வித்தியாசங்களை சரியாக குறிப்பிடாமல் தவறாக எழுதியிருந்தார்கள்தமிழில் விடை எழுதியவர்கள்=60, ஆங்கிலத் தமிழில் எழுதியவர்கள்=67, ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=30, ஹிந்தி மொழியில்=0 நபர்களும், பிற மொழியில்(Kerala)=01, (Telugu)=02, நபரும், 33-மேற்பட்ட மேலும் சிலர் எட்டுக்கும் அதிகமான தவறான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.
=============================================

@விளம்பரம்:- "இந்தப்பகுதியை உங்களுக்கு வழங்குபவர்கள்":-  

==============================================
சித்திரமும் கைப்பழக்கம் பகுதியில்:-

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்  நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்கொடையும் பிறவிக் குணம். – வெண்பா 7


விளக்கம்:
பழகப்பழக பழக்கம் வந்துவிடும். ஆனால் பிறவிக்குணத்தை மாற்ற முடியாது. வரைய வரையச் சித்திரமும் கைப்பழக்கம் ஆகிவிடும். பேசப் பேசச் செந்தமிழும் பழக்கமாகிவிடும். திரும்பத் திரும்ப நினைத்தால் கற்றது மனத்தில் பதிந்துவிடும். நல்லொழுக்கத்தைத் திரும்பத் திரும்பக் கடைப்பிடித்தால் அதுவும் பழக்கமாகிவிடும். ஆனால், நல்லவர் நட்பு, இரக்கக் குணம், கொடைப் பண்பு ஆகியவை பிறவியிலேயே பதிந்திருந்தால்தான் வரும்.
  
@சுட்டீஸ் குழுவினர்கள் கைவண்ணம்:- (ஓவியம்)
(நான் வரைந்த ஓவியம் / எனக்குப் பிடித்த ஓவியம்)
சுட்டீஸ்களின் கைவண்ணத்தில் உருவான இந்த மாத ஓவியங்கள் :-








================================





சுட்டீஸ், நாங்கள் தொகுத்து வழங்கிய பதிவுகளில் உள்ள குறை நிறைகளை வாசகர்கள், அன்பான முறையில் எங்களுக்கு எடுத்துக்கூறி, எங்களது பதிவுகள் மேலும் சிறப்படைய வாழ்த்தி உற்சாகப்படுத்துமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இந்தப்பதிவில் கீழுள்ள கருத்துக்கூறும் பகுதியில் பதிவு செய்யவும்.

No comments:

Post a Comment