"சுட்டீஸ்-குல்கந்து" ஆவணி மாத வலைப்பதிவர் பூவிதழ்-5" நாள்/தேதி:- ஆங்கில மாதத்தின் 3-வது ஞாயிறு 21-08-2016.
கற்க கசடற….!! !! வாய்மையே வெல்லும்!!
“வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம்”
Vaishali, Ghaziabad, NCR-New Delhi.
e-mail: vaishalireaderscircle@gmail.com
___________________________________________________________________
ஆவணி மாத வாசகர் வட்டத்தின் :-30வது சந்திப்பில் (21-08-2013) முதலில் ஈரோடு புத்தகத்த திருவிழா பற்றி ஒரு அலசல் .....(கண்காட்சி/எழுத்தாளர்கள் / பதிப்பாளர்கள் / வாசகர்கள்)..... தொடர்ந்து எங்கவீட்டு நூலகம் மற்றும் இந்த மாத தலைப்பையொட்டிய சகோதர சகோதரிகள் மாதக் கொண்டாட்டங்கள், போட்டிகள், பரிசுகள் என நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக நடந்தது..........
வைஷாலி திரு வி. சுப்பிரமணியன் அவர்களின் சிறப்புரையும், வரும் 04-09-2016 அன்று புதுதில்லி நொய்டா-ஓக்லா-பறவைகள் சரணாலயம் செல்வது குறித்த முடிவு செய்யப்பட்டது.
மேலும் இந்த மாத சுட்டீஸ்களின் ஏராளமான செய்திகளை மிகவும் பயனுள்ள வகையில் நமது வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ் "குல்கந்து" குழுவினர்கள் தொகுத்து தந்திருக்கிறார்கள்....
அவர்கள் தொகுத்துத் தந்த பல சகோதர சகோதரிகள் பற்றிய செய்திகளை ஒன்று சேர்த்து, அனைத்தையும் அழகாக கோர்த்து, ஒரு கதம்ப மாலையாக தொடுத்து தந்திருக்கிறார்கள். இந்த மாத வலைப்பதிவு இதழின் அனைத்து விவரங்களும் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம்.... இப்படிக்கு வாசகர் வட்ட சுட்டீஸ் "குல்கந்து" ரோஜாக்கள்.
வைஷாலி திரு வி. சுப்பிரமணியன் அவர்களின் சிறப்புரையும், வரும் 04-09-2016 அன்று புதுதில்லி நொய்டா-ஓக்லா-பறவைகள் சரணாலயம் செல்வது குறித்த முடிவு செய்யப்பட்டது.
$ உலகில் தோன்றிய அத்தனை மொழி நூல்களிலும், உடன்பிறந்த சகோதரர்களின் உன்னதமான பாசத்தை உரத்துப் பேசும் நூல் நம் பாரத தேசத்தைச் சேர்ந்த ராமாயணம்தான்.
$ 1898-ல் முதன் முதலில் புதிய கல்வி முறை, மற்றும் பெண் கல்வியை இந்தியாவில் மலரச்செய்தவர். தேசிய சகோதரி நிவேதிதா என்று பாசத்தோடு அழைக்கப்பட்ட ஆங்கில-ஐரியப்(English Irish) பெண்ணான ஆசிரியை மார்கரெட் எலிசபெத் நோபிள்.

$ கண்ணன் ஆட்சி புரிந்த துவாரகை கடலில் மூழ்கியதே? அப்போது கண்ணன் வழிபட்ட ராம லட்சுமண பரத சத்துருக்கனர் சிலைகள் தனித்தனியே பிரியாமல் ஒன்றாகவே கடல் நீரில் மூழ்காது மிதந்தனவாம். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு கேரளத்தில் திருச்சூர் அருகே திருப்பையார் என்ற இடத்தில் அமைந்த திருக்கோவிலில் நிறுவப்பட்டதைக் தல புராண வரலாறுகளில் காணலாம். (திருச்சூரிலிருந்து 24 கிலோ மீட்டர்.) கடந்த காலத்தில் திருப்புறை ஆறு இந்நகரைத் தழுவிக் கொண்டு ஓடியதாம். அதனால்தான் ஆறு என இவ்வூரின் பெயர் முடிகிறது.
$ சகோதர பாச உறவுகளில் நீங்கள் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இரத்த பந்தம். ஒரே குடும்பத்தில் பிறந்த சகோதரர்கள் தங்களுடைய சிறப்பான அன்பு என்கிற பாச உறவு முறைகளால், ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான குடும்பத்தை பராமரித்து வருகிறார்கள். இந்த அன்பு பாசம் என்கிற இரத்த பந்தம், குடும்ப கலாச்சாரம் மற்றும் குடும்ப வரலாறு ஆகியவற்றை பாதுகாத்தும், பராமரித்தும் வருவதற்கு சகோதர, சகோதரிகளிடம் நல்ல அன்பு என்கிற பாச உறவு முறை இருந்து வர வேண்டும். நன்றி :-Friends Tamil.
$ 'உங்கள் அன்பு சகோதரி பேசுகிறேன்.!' - வாட்ஸ் அப்பில் தமிழக மக்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் உரை புதன் கிழமை 16-டிசம்பர்-2015 அன்று வெளியிடப்பட்டது. பிரபலமான வாட்சப் சகோதரி செய்தியாக இந்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.
$ காளைமாடுகளை பராமரிப்பதில் லாவகமாக கையாளும் பெண்களை... வீர சகோதரிகள் என்று அழைக்கிறார்கள்.
$சகோதரி என்றாலே பச்சை நிறம் ஏன்? அதற்கான சிறப்புக் காரணம் என்ன? நிறங்களில் நடுநிலை வகிக்கும் நிறம், "பச்சை நிறம்" எனவே இதை பெண்களின் / சகோதரிகளின் நிறமாக போற்றப்படுகிறது என்பது முன்னோர்களின் கூற்று அதை தற்போதைய ஆராச்சியாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். நமது நாட்டு தேசியக்கொடியின் பச்சைநிறம்:- நம்பிக்கை, தயை, கருணை வளத்தைக் குறிப்பதாக உள்ளது.
$சகோதரி நடிகைகளில் திருவாங்கூர் சகோதரிகள் என்றழைக்கப்பட்டவர்கள், லலிதா, பத்மினி, ராகினி இவர்களைப் போல் கல்பனா, ஊர்வசி, கலாரஞ்சினி, கே.ஆர். சாவித்திரி, கே.ஆர். விஜயா, கே.ஆர். வத்சலா போன்ற சகோதரி நடிகைகள் கேரளாவைச் சேர்ந்தவர்களாயிருந்தனர்.
$ சகோதரி நடிகைகள் :- பண்டரிபாய் - மைனாவதி, சவுகார்ஜானகி - கிருஷ்ணகுமாரி, ஸ்ரீகாமு - ஸ்ரீலேகா, பி.சரோஜாதேவி - பிரேமலதா, ஸ்ரீப்ரியா - வைஜயந்தி, அம்பிகா- ராதா, சரிதா - விஜி, பானுப்ரியா - நிஷாந்தி, ராஜ் கோகிலா - ராஜ் மல்லிகா, கே.எஸ்.ஜெயலட்சுமி - மோகனப்ரியா, எம். சரோஜா - லட்சுமிப்ரபா, ஜோதி லட்சுமி- ஜெயமாலினி, இந்திரா - ராசி, ஷாலினி - ஷாமிலி, டிஸ்கோசாந்தி - லலிதகுமாரி போன்ற சகோதரி நடிகைகள் தென்னகத் திரைவானில் ஏராளம் உண்டு.
$ இரட்டையர்கள் / இரட்டை சகோதரர்கள்:-
$தமிழ் இலக்கியத்தின் இரட்டைக் கவிஞர்கள், மகாகவி பாரதியார் - பரலி சு. நெல்லையப்பர்.
$உலகப் புகழ்பெற்ற ஆற்காடு இரட்டையர், டாக்டர் இராமசாமி முதலியார் - இலட்சுமணசாமி முதலியார்.
$கிலாபத் இயக்கத்தைத் தொடங்கிய இரட்டையர், முகமது அலி - மௌலானா சவுக்கத் அலி.
$ அக்பரது அவையை அலங்கரித்த இரட்டையர் அபுல்பாசல் - அபுல் பெய்சி.
$ ரோமானிய அரசை நிறுவிய இரட்டையர், ரோமுலஸ் - ரிமஸ்.
$ உலகில் இரட்டைக் காப்பியங்கள், இலியத் - ஓடிசி. $ உலகின் முதல் கிரிக்கெட் இரட்டையர், மார்க் வாக் - ஸ்டீவ் வாக்.
$ இரட்டை அதிசயம்:- சந்திரனில் 14 நாள் பகல், 14 நாள் இரவாக இருக்கும்.
$ உலகின் இரட்டை இனப்பறவைகள், கேரி பஸ்டர்ட் - கிரேட் பஸ்டர்ட்.
$ இங்கிலாந்து மட்டைப்பந்து அணிக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் ஜெமி ஓவர்டன், கிரேக் ஓவர்டன் ஆகியோர் இரட்டைச் சகோதரர்கள்.
$இரட்டைச் சொற்களில் அமைந்த (இரட்டைக்கிளவி) இடங்கள்:-
$ டம் டம் (மே வங்கம்) - ஒரு சர்வதேச விமான நிலையம்.
$ டம் டம் (மே.வங்கம்) - ஒரு மக்களவை தொகுதி.
$ ஜீன் ஜீன் (ராஜஸ்தான்) - ஒரு மக்களவை தொகுதி. $ சிங் சிங் (அமெரிக்கா) - நியூயார்க் நகரில் உள்ள ஒரு சிறைச்சாலை.
$ தரன் தரன் (பஞ்சாப்) ஒரு மக்களவைத் தொகுதி.
$ சிங் சிங் - சீனத் தலைவர் மாசேதுங்கின் மனைவி பெயர்.
$ டிடி காகா பெரு - பொலிவியா எல்லையில் உள்ள ஒரு முக்கிய ஏரி (83000 ச.கி.மீ).
$ மருது சகோதரர்களை :- மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள்.
பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள். இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார்கோயில் ஆகும்.

$ பக்திப் பாடல்களுக்குப் புகழ்பெற்ற சகோதரிகள்.:-
இசைத்துறையில் சூலமங்கலம் சகோதரிகள் (Soolamangalam Sisters) என அழைக்கப்படும் ஜெயலட்சுமி, ராஜலட்சுமி ஆகிய இருவரும் பக்திப் பாடல்களுக்குப் புகழ்பெற்ற சகோதரிகள். கர்நாடக இசையிலும் பக்திப்பாடல்களிலும் புகழ்பெற்று விளங்கிய பல இரட்டையருக்கு (ராதா-ஜெயலட்சுமி, பாம்பே சகோதரிகள், ரஞ்சனி-காயத்ரி, பிரியா சகோதரிகள்) இவர்கள் முன்னோடியாக விளங்கினர்.
இவர்கள் பாடிய தேசப்பக்திப் பாடல்களும் பக்திப் பாடல்களும் மிகவும் புகழ் பெற்றவை. இவர்கள் பாடியுள்ள, கந்த சஷ்டி கவசம் (முருகக் கடவுளின் மீது இயற்றப்பட்டது) அனைத்து பக்தர்களாலும் விரும்பப்பட்ட ஒன்றாகும்.
$ கொல்கத்தா: அன்னை தெரசா அவர்களின் மறைவிற்குப் பிறகு அவரைப்போலவே சிறப்பாக அறக்கட்டளையை நிர்வகித்து வந்தவர் சகோதரி நிர்மலா ஜோஷி....
$ சர்வதேச அளவில் "சகோதரா" என்கிற வார்த்தையை இஸ்லாமியர்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள் என ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
$ ஒருவரது ஜாதகத்தில் ஒன்பதாவது பாவத்தை சகோதர சகோதரி அமைப்பாக கணிக்கிறார்கள்??
$ ஆடி, ஆவணி மாதம் என்றாலே விரதங்கள் மாதம் என்று போற்றப்படுகிறது, இஸ்லாமியர்களுக்கு நோம்பு மாதத் திருநாளாகவும், கிறிஸ்துவர்களுக்கு மாதா கோவில் கொடியேற்று விரத திருவிழா எனவும், இந்துக்களுக்கு ஆடி, ஆவணி மாதம் அம்மன் கோவில் கேடியேற்றம், காப்பு கட்டுதல், ஆடிக் கிருத்திகை விரதம் என ஆரம்பித்து மேலும் ஸ்ரீவரலட்சுமி விரதம் ஜன்மாஷ்டமி விரதம், மங்களாகௌரிவிரதம், நாகபஞ்சமி விரதம் கருடபஞ்சமி விரதம் ,வினாயகசதுர்த்தி விரதம் என்று ஆவணியை பல விரதங்கள் என இவ்விரு மாதங்களும் விரதம் ஏற்கும் மாதமாக அமைகிறது.
$ "தாத்தா பாட்டிகள் உள்ள வீடு" ஆயிரக்கணக்கான புத்தகங்களை கொண்ட நூலகத்திற்கு சமம் !
$ யானை துரத்தினால் வளைந்து வளைந்து ஓடவேண்டும்; பாம்பு துரத்தினால் நேராக ஓட வேண்டும்'
=================================================
$நமது வைஷாலி வாசகர் வட்டத்தின் அனைவரையும் வாழ்த்தி வழிநடத்திச்செல்லும் தலைமை உறுப்பினர் திரு முத்து கிருஷ்ணன் அவர்களின் ஆன்மீகத் தொடர்-02.
$நமது வைஷாலி வாசகர் வட்டத்தின் அனைவரையும் வாழ்த்தி வழிநடத்திச்செல்லும் தலைமை உறுப்பினர் திரு முத்து கிருஷ்ணன் அவர்களின் ஆன்மீகத் தொடர்-02.
அன்பான சுட்டீஸ்!... எப்படி இருக்கீங்க?
இப்ப நான் உங்களுக்கு ஒரு கதை சொல்லப் போறேன். நமக்கு முன்னாடி இருந்த தாத்தாப் பாட்டியெல்லாம் சொல்லுவாங்க ஆகாயத்துக்கு மேல தேவலோகம்னு ஒண்ணு இருக்காம். இப்ப நம்ம இருக்கிற பூமியை பூலோகம்னு சொல்லுவாங்க. இந்த பூமிக்கு அடியிலும் ஒரு உலகமிருக்குத் தெரியுமா? அதுதான் பாதாள உலகம். நம்ம கிருஷ்ணர் பண்ணின லீலைகளையெல்லாம் படிக்கும்போது காளிங்கன் என்று ஒரு நச்சுப் பாம்பு அந்த கிராமவாசிகளை ரொம்ப தொந்தரவு பண்ணிக்கிட்டு இருந்ததாகவும், அதை அடக்க கிருஷ்ணர் நீருக்குள் மூழ்கிப் போனபோது நாகவுலகம் இருந்ததாகவும், அதை நாக ராஜா ஆண்டுவந்தார்னும் படிச்சிருக்கோமில்லையா. அந்த தண்ணி நிரம்பிய உலகம்தான் நம்ம பூமிக்கு அடியிலிருக்காம். அதில் நீர் குதிரைமாதிரி பல நீர்வாழ் ஜந்துக்கள் அங்கு இருக்காம். அது சரி "ஏதோ கதை சொல்றேன்னு சொன்னீங்களே" அப்படின்னு கேட்கிறீங்களா. வாங்க கதையைப் பார்ப்போம்.
மேலே தேவலோகமிருக்குன்னு சொன்னேனே, அங்கே கண்ணுக்கு ரம்யமான பல நந்த வனங்களிருக்கும். அந்த நந்தவனத்தில் இந்த பூமியில இருக்கிறமாதிரி பல பூக்களும், இன்னும் பல தேவலோகத்தில் மட்டும் காணப்படும் பாரிஜாதம் போன்ற பல பூக்களும் பூத்துக் குலுங்கும். சும்மா ஜிலு, ஜிலுன்னு தென்றல் காற்று வீசும். அங்குதான் குழைந்தையாயிருக்கும், விநாயகர், முருகன், ஐயப்பன்,வீரபாகு எல்லாரும் விளையாடிவிட்டுப் பேசி மகிழ்வார்கள். அப்ப விநாயகர் முருகனைப் பார்த்துச் சொன்னார் "டேய் முருகா பூலோகத்திலே ஆடிமாசம் பிறந்து தக்ஷிணாயனம் ஆரம்பிச்சிடிச்சுடா. இன்னுமே அங்கே உள்ள மக்கள் நமக்கெல்லாம் விழாவோ விழா கொண்டாடுவாங்க. இப்ப முதல்ல் வருவது என்னோட விழா விநாயகச் சதுர்த்திதான். அதுக்கு விதவிதமா கொழுக்கட்டையெல்லாம் பண்ணி எனக்குப் படைப்பாங்க. நான் மஜாவா அதையெல்லாம் தின்னுவேன்" என்றார். உடனே முருகன், "தெரியுமே! எனக்கும்தான் புரட்டாசிமாசம் நவராத்திரி கொண்டாடும்போது, பத்தாம் நாள் விஜய தசமின்னு எனக்கு அம்மா அந்த சூரனை அழிப்பதற்காக சக்தி வேல் கொடுத்ததா தமிழ்நாட்டில் பல கோயில்களில் விழா கொண்டாடுவாங்க" இப்படி முருகன் சொல்லும்போதே வீரபாகு, "முருகா அந்த சூரனை அழிக்க நானும் உனக்கு ஒத்தாசையா வந்தேனில்லையா?" என்றார். முருகன் "ஆமாம், ஆமாம்" என்று தலையாட்டி "இதை ஐப்பசியில தீபாவளி அமாவாசை முடிந்த மறுநாள் பிரதமை முதல் ஆறு நாட்கள் கந்த சஷ்டின்னு கொண்டாடறாங்களே; அதை நாம இங்கேயிருந்தே பார்த்து ரசித்திருக்கிறோமே" என்று ஆமோதித்தார்.
உடனே ஐயப்பன், "எனக்கும் ஐப்பசி மாதத்துக்கப்பறம் கார்த்திகை பிறக்கும்போது ஒண்ணாம் தேதி முதல் மாலை போட்டுக்கொண்டு விரதமிருந்து ஒரு மண்டலம் முடித்து சபரி மலையில் நான் தவக்கோலத்தில் அமர்ந்திருப்பதை லட்சக்கணக்கான மக்கள் வந்து தரிசிப்பார்கள்" என்றார். "ஆமாம்" என்பதுபோல் எல்லோரும் தலையசைத்து "இனி நமக்கு குஷியாயிருக்கும்டா" அப்படியென்று சொல்லி மகிழ்ச்சியாக இருந்தபோது அங்கு அவர்களது மாமா மகா விஷ்ணுவின் அவதாரம் கிருஷ்ண பரமாத்மா வந்து "என்ன பசங்களா. இங்கே என்ன சுட்டீஸ் மகாநாடு நடக்கிறது?" என்று வினவினார்.
இல்லை மாமா இப்ப பூலோகத்தில் ஆடிமாதம் பிறந்துவிட்டதல்லவா? அங்கு நடக்கும் விசேஷங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அப்ப உங்க ஹாப்பி பெர்த் டே "கோகுலாஷ்டமி" யைப்பற்றிச் சொல்ல மறந்துட்டோம். உடனே கிருஷ்ணனும் குழந்தை வடிவாய்த் தோன்றி "அதுமட்டுமில்லை மருமகப் பிள்ளைங்களா. மார்கழி மாசம் பூராவும் என் நாம பஜனைதான். பனிக் கொட்டும். அந்தக் குளிரிலும் எல்லோரும் என்னை முழுமனதாய் நினைக்கும்போது எனக்கு மனம் குளிர்ச்சியாயிடும். அந்த மார்கழியில்தானே உங்கள் மாமி ஆண்டாளை நான் மணந்தேன்" என்று சொல்லவே எல்லோருகும் "கொல்" லென்று சிரித்தார்கள். உடனே பார்வதி தேவியார் அவர்களை இரவு டின்னர் உணவுக்கு அழைக்கவே எல்லோரும் சென்று விட்டனர். பிறகு சாப்பிட்டுவிட்டு எல்லோரும் தூங்கப் போய்விட்டனர்."
என்ன சுட்டிகளா! கதை எப்படியிருந்தது? சுவாரஸ்யமா இருந்திச்சா. இனி அடுத்தடுத்து வரும் பண்டிகைகளை ஞாபகம் வைத்துக் கொண்டீர்களா? இனி மஜாதான். சரி அடுத்த மாதம் சந்திப்போம். நன்றி. வணக்கம்!
...............முத்து ஐயர்..........

வைஷாலி வாசகர் வட்டம்..
=================================================
பகுதி I-கைவண்ணம்:-
பகுதி I-கைவண்ணம்:-
1) சித்திரமும் கைப்பழக்கம் பகுதியில் :-
G) குழந்தைகள் பிண்ட்டூ , ஷானு & ரியாஸ் சகோதர சகோதரிகள்:-
(நான் வரைந்த ஓவியம் / எனக்குப் பிடித்த ஓவியம்)
G) தீப்சிகா ரவி :-
(நான் வரைந்த ஓவியம் / எனக்குப் பிடித்த ஓவியம்)
3. (புகைப்படமும் விளக்கமும்):-
_________________________________________________
பொம்ம பொம்மதா தைய தையனக்கு, தின்னாக்கு னக்குதின் பஜன்கரே... உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா...பெங்களூரு ரமணி அம்மாளின், புகழ்மிக்க நர்த்தன விநாயகர் பாடல்.
________________________________________________________
3. (அ).சிறுகதைகள் பகுதியில் :- முதலாவது போட்டி :- வைஷாலி வாசகர் வட்டத்தின்... சரியான விடைகளைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்... போட்டி என்-4 ஆடி மாதம், இதழ்-5 தேதி 21-08-2016. தொகுத்து வழங்கியவர்:- (கோகி )
சுத்தம் சோறுபோடும்- மூன்று சகோதரர்களின் கதை:-
அந்த மூன்று சகோதரர்களின் முதல் மகன் பணத்தை செலவழிப்பதற்காகவும், அறையை நிரப்பும் எண்ணத்திலும் தனக்கு தேவையில்லாத பொருட்களை வாங்கி நிரப்பினானாம்.
இரண்டாவது மகன் குறைந்த விலையில் நிறைய வைக்கோலையும் வரட்டிகளையும் வாங்கி அடுக்கினானாம்.
மூன்றாவது மகனும் அவனது அறையை நிரப்ப.....
வழக்கம்போல அந்த மூன்று சகோதரர்களின் தாய் சமைத்த உணவுடன் அவர்களின் புதிய வீட்டிற்கு எடுத்துவர. முதல் இரண்டு சகோதர்களின் அறைகளைப் பார்த்தவர் முகம் சுழித்து மூக்கைப் பொத்திக் கொண்டார். மூன்றாவது அறையை கடைசி மகன் திறந்து காட்ட அந்த அறையானது மிகவும் சுத்தமாகவும், அறைமுழுதும் நறுமணம் வீசுவதை பார்த்து அந்த அறையிலேயே அனைவருக்கும் வயிறு நிரம்ப உணவை பரிமாறினார்.
அந்த மூன்று சகோதரர்களில் கடைசி மகன் தனக்கு கிடைத்த பணத்தை வீண் சிலவுகள் செய்யாமல் சேமித்து வைத்ததோடு தனது அறையை சுத்தமாக வைத்திருந்ததால், மற்ற இரு சகோதரர்களுக்கு தனி அறைகள் இருந்தும் அவர்களது சொந்த இடத்தில் நிம்மதியாக இருக்கமுடியாமல் தனது இளைய சகோதரனின் வீட்டு அறையில் அமர்ந்து உணவு உண்ணவேண்டியிருந்ததை நினைத்து வேதனைப்பட்டார்.
நாம் நமது உடலையும் மனதையும் சுத்தமாக வைத்துக்கொண்டால் நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெறமுடியும். அப்படி இல்லாமல் நாம் வாழும் பகுதியை அசுத்தமாக வைத்திருந்தாள் நோய்வாய்ப்பட்டு அதனால் சரியாக உழைத்து சம்பாதிக்க முடியாமல் உன்ன உணவும் இல்லாமல் இறந்துபோக நேரிடும். ஆகவே "சுத்தம் சோறு போடும்" என்ற சொல்.... நமது ஆரோக்கியமான வாழ்விற்கு சுத்தம் எந்த அளவிற்கு முக்கியம்வாய்ந்தது என்பதை விளக்குகிறது.

நாம் நம் மனசைக் கூட இப்படித்தான் எதை எதையோ அடைத்து வைத்து மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறோம். உள்ளம் சுத்தமாயிருப்பதும், ஊர் சுத்தமாயிருப்பதும் நம் கையில்தான் இருக்கிறது. சுத்தம் தான் சோறு போடும். ஆகவே நாம் வசிக்கும் நமது வசிப்பிடத்தையும், நமது ஊரையும் சுத்தமாக வைத்திருக்கப் பழகுவோமா??? இப்போது கீழ் வரும் கேள்விகளுக்கான சரியான விடையைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்.
1. ஒவ்வொருமுறையும் நாம் உணவு உண்பதற்கு முன்பாக என்ன செய்யவேண்டும்?
அ) குளிக்கவேண்டும், ஆ) கை, கால் கழுவவேண்டும், இ)உட்காரவேண்டும், (ஈ ) இறைவனுக்கு நன்றிகூறவேண்டும்.
2. மேற்கண்ட கதையில் வரும் மூன்று சகோதரர்களில் எந்த சகோதரர் உங்களுக்கு பிடித்த சகோதரர்??
3. சுத்தம் .............. போடும் ?
4. சுத்தமாக இருப்பதால் என்ன பலன் கிடைக்கும்?
5. நீங்கள் வசிக்கும் உரை சுத்தமாக வைப்பதற்கு நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?
சரியான விடைகளைக்கூறி சிறப்பு பரிசுகளை வெல்லுங்கள். சரியான விடைகளை 10-09-2016 தேதிக்கு முன்னதாக "vaishalireaderscircle@gmail.com" மின்னஞ்சலில் அனுப்பவேண்டும்.
சரியான விடையையும், சரியான விடை எழுதியவர்களுக்கான பரிசுகளும் 18-09-2016 (3-வது ஞாயிறு) அன்றைய, 31-வது வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில் வழங்கப்படும்.
போட்டிக்கான சரியான விடையை பலரும் குறிப்பிட்டிருந்தால், பரிசு பெறுபவர்-குலுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்.(கதைக் கருத்தாக்கம்-ரேடியோ கோபாலகிருஷ்ணன்).
3.(அ) விடை:- சென்ற மாத பரிசுப் போட்டிக் கதைக்கான முதலாவது கதையின் சரியான விடைகள்:-போட்டி என்-4 ஆடி மாத இதழ்-4 தேதி 17-07-2016. விவரங்களை சென்ற ஆடி -மாத இதழை பாருங்கள்:-
சரியான பொருத்தமான விடையை 16 நபர்கள் குறிப்பிட்டிருந்தார்கள் அவர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது.
==============================================
3.(ஆ) சிறுகதைகள் பகுதியில் :-இரண்டாவது போட்டி:- வைஷாலி வாசகர் வட்டத்தின் சரியான புகைப்படக் கதையைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் போட்டி என்-5 ஆவணி மாத, இதழ்-5 தேதி 21-08-2016.
தலைப்பு:-தசாவதாரம்:-
மேற்கண்ட ஓவிய படத்தைப் பார்த்து 15-வரிகளுக்கு மிகாமல் பொருத்தமான கதை சொல்லவேண்டும். சரியான படக்கதை அடுத்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" வலைப்பதிவு இதழில் வெளியாகும். போட்டியில் பங்குகொள்ள விருப்பமுடையவர்கள் விடைகளை "vaishalireaderscircle@gmail.com" என்கிற மினஞ்சல் முகவரிக்கு 10-09-2016 முன்பாக அனுப்பிவைக்கவேண்டும். சரியான விடைஎழுதிய அனைவருக்கும் அடுத்தமாத வாசகர் வட்ட சந்திப்பில் பரிசுகள் வழங்கப்படும்.
$ சென்றமாதப் புகைப்படக் கதையைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் போட்டிக்கான விடைகள்:- போட்டி என்-4 ஆடி மாத இதழ்-4, தேதி 17-07-2016. சரியான விடை கூறி பரிசை வெல்லுங்கள் பகுதி:

புகைப்படத்தில் உள்ள படத்தைப் பார்த்து 15-வரிகளுக்கு மிகாமல் பொருத்தமான கதை சொல்லவேண்டும். சரியான படக்கதை விடை:-
கைலையில் நடந்த சிவபெருமான் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர, அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார். இதனால் தெற்கே மேருமலை நோக்கிப் பயணித்தார் அகத்தியர். மேருமலைக்கு செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென் திசை சென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று அதனிடம் கூறிச் சென்ற அகத்தியர், மீண்டும் வடதிசை செல்லாதிருந்தார். ஆதலால் விந்திய மலையும் அதன் பின் உயரவில்லை எனக்கூறப்படுகிறது.
தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி அகத்தியம் என்னும் நூலை இயற்றினார். இராமபிரானுக்கு சிவகீதையை போதித்தவர் அகத்தியர் சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை விநாயகர் காகமாக உருக் கொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது. இதைப் போல் அகத்தியரைக் குறித்து புராணங்களில் உள்ள கதைகள் பற்பல.
சென்ற மாதத்திற்கான சரியான படக்கதையை கூறி போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்படும்.
ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ...ஒரு சிறு விளம்பர இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடர்ந்து வாசிக்கலாமா?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
விளம்பரம் :-இப்பகுதியை உங்களுக்கு வழங்குபவர்:-
விளம்பரம் :-இப்பகுதியை உங்களுக்கு வழங்குபவர்:-
==============================================================
3. சிறு கதைகள்:- கதை கதையாம் காரணமாம் பகுதி:-"நாரியல் பூர்ணிமா"
நாரியல் பூர்ணிமா என்பது தான் மராட்டிய மொழியில் நாராலி பூர்ணிமா ஆனது ஹிந்தியில் நாரியல் என்றால் தேங்காய்... கேரளாவின் ஓணம் பண்டிகையைப்போல தமிழர்களின் யக்ஞோபவீததாரணம் அதாவது ஆவணியாவட்டம், அத்துடன் வடநாட்டின் சகோதர சகோதரிகளுக்கான ராக்கித்திருநாள் பின் மராட்டிய கடற்கரையோரம் வசிக்கும் மீனவர்களுக்கு இந்த நாரியல் பூர்ணிமா எல்லாம் அநேகமாக ஒரே நாளில் வரும் அதாவது ஆவணி மாத பௌர்ணமியில் ,,,,
மும்பய் தாதர் கடற்கரைப்பக்கமோ அல்லது சௌப்பாதி கடற்கரைபக்கமோ போனால் பல வண்ணங்களில் படகைப்பார்க்கலாம் நாம் மாட்டுப்பொங்கலுக்கு கொம்புகளில் வர்ணம் அடிப்பது போல், மீனவர்கள் படகுகளுக்கு வர்ணம் அடித்து அதற்கு மாலைகளால் அலங்காரமும் செய்திருப்பார்கள். எல்லா படகுகளும் புது மாப்பிள்ளைப்போல் மிளிரும், நாட்டின் வடக்கு மேற்கு திசையில் இருக்கும் எல்லா மீனவர்களும் இதைக்கொண்டடுகின்றனர் தமிழ் நாட்டு மீனவர்கள் இதைக்கொண்டாடுகிறார்களா எனத்தெரியவில்லை....
மீனவர்களுக்கு கடலே கோயில் கடலரசனே தெய்வம் அவர்கள் வயிற்றை நிரப்புவது அந்தக்கடல்தான், கடலுக்குள் சென்று மீன் பிடித்தால்தான் ஜீவனம் அதுவும் மே மாதத்திலிருந்து சுமார் செப்டம்பர் வரை கடும் மழை நீடித்திருக்கும். தென் மேற்குப்பருவமழையின் காரணமாக மீனவர்கள் இந்த மாதங்களில் நித்ய கண்டம் பூரண ஆயுசு என்பதுபோல் மன உறுதியுடன் மீன் பிடிக்கப்போயாக வேண்டும். ஒவ்வொரு நாள் இயற்கையின் சீற்றத்தினால் போகாமலும் இருக்கும் சந்தர்ப்பங்களும் வரும், ஆகையால் இந்த ஆவணி மாதம் முதல் கடும் மழை குறைந்து இனி தன் வியாபாரம் நன்றாக அமைய மீனவர்கள் கடல் தெய்வத்தை வேண்டிக்கொண்டு தினமும் கடல் தங்கள் வாழ்க்கைக்குப்படி அளப்பதால் அதற்கும் நன்றியை பூஜை செய்து தெரிவிப்பார்கள் அத்துடன் வருண பகவானுக்கும் பூஜை செய்வார்கள், அந்த பூஜையின் பிரசாதம் நாரியல் அதாவது தேங்காய் சமபந்தப்பட்டே இருக்கும் தேங்காய் சாதம், தேங்காய் பர்பி என்று செய்து எல்லோருக்கும் வினியோகிப்பார்கள் தவிர பூஜை முடிந்தவுடன் மட்டைத்தேங்காயை கடலுக்கு சமர்ப்பிப்பார்கள் ஆஹா அதைக் காண்பதற்கு அருமையான காட்சியாக இருக்கும், அப்படியே அலைகளில் இரண்டு தடவைகள் மேலும் கீழுமாக வந்து பின் அலை அதை இழுத்துக்கொண்டுப்போய்விடும் ,ஒரு தேங்காயா இரண்டுத்தேங்காயா ! ஆயிரக்கணக்கில் தேங்காய் எல்லாம் எங்கே போகும்?
இதேபோல் பிள்ளையார் சதுர்த்தி முடிந்த பததாம் நாள் எல்லா மண் பிள்லையார்களும் கடலில் விடப்படுவார்கள் இதே போல் கொல்கத்தாவின் பெங்காலிகள் துர்கைச்சிலைகளை நவராத்திரி முடிந்தவுடன் கடலில் வீசிவிடுவார்கள் .இந்தச்சிலைகள் மண்ணால் செய்ததால் கரைந்து போய்விடலாம். ஆனால் இத்தனை மட்டைத்தேங்காய் என்ன ஆகும் என்ற கேள்வி என்னுள் எழும். கடற்பிராணிகள் தேங்காயை முழுங்கி விடலாம். இந்தத்திருநாளன்று மாலையில் பார்ட்டிதான் ,எல்லோரும் புதிய உடைகளுடன் மின்னுவார்கள். ஆண்கள் கட்டம் போட்ட லுங்கிகளை உடுப்பார்கள் முன் பக்கம் முக்கோணம் போல் இருக்கும் மீனவப்பெண்மணிகளின் புடவைக்கட்டு மிகப்பிரமாதமாக இருக்கும். அத்துடன் அவர்கள் தலைக்கொண்டையும் கொண்டையில் வேணி என்ற பூ அலங்காரமும் மிகவும் அழகாக இருக்கும் அந்த வேணியின் அருகில் மருதாணிபூக்கள் பெரியக்காம்புகளுடன் சொருகப்பட்டிருக்கும்.
ஒரு படத்தில் மாதுரி தீட்சித் மீனவப்பெண்மணியாக வருவார்.நெற்றியில் கால் சந்திரன் போல் பச்சையில் பொட்டு வைத்திருப்பார். அவரைப்பார்த்தால் எனக்கு இந்தத்திருநாள் ஞாபகம் வரும் அவர்கள் நடனமும் மிக வேகமாக இருக்கும் . உடலில் நிறைய சக்தி இருந்தால் தான் இந்த நடனத்தை ஆடமுடியும் கடல் நீருக்கு என்றுமே நெகடிவ் என்ற வேண்டாத சக்தியை எடுக்கும் சக்தி உண்டு உப்பு கலந்த நீராயிற்றே! ஆடி அமாவாசை தை அமாவாசைப்போன்ற தினங்களில் சமுத்திர ஸ்னானம் செய்கிறார்கள் அத்துடன் கிரகணம் விட்டப்பின்னும் ஸ்னானம் செய்கிறார்கள் இந்த நெகடிவ் விஷயமும் சம்பந்தப்ப்ட்டத்தாக இருக்கலாமோ என்று எனக்குத் தோன்றுகிறது திருஷ்டி சுற்றிப்போடுவதிலும் இந்தக்கல்லுப்பு முக்கியப்பங்கு வகிக்கிறது.
சரி இப்போது தேங்காய்க்கு வருவோம் மீனவர்கள் தேங்காயை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும், தேங்காயை அனுபவிக்க முதலில் அதன் மட்டைகளைப்ப்பிய்க்க வேண்டும். பின் அதன் அழுத்தமான ஓட்டை உடைக்க வேண்டும் ,பின் தான் உள்ளே இருக்கும் கனியைப்பெறமுடியும். அதையும் அப்படியே தின்ன முடியாது .கீறல் போட்டோ அல்லது துருவியோ எடுக்க வேண்டும் மீனவர்கள் வாழ்க்கையும் காலையில் கடுமையான உழைப்பு இருக்க மாலையில் தான் அதன் பலன் கிடடக்கிறது இதை வெளிப்படுத்துகிறதோ இந்தத் தேங்காய் திருவிழா. தேங்காய் உள்ளே இருக்கும் இனிப்பான கடவுளைக் காண முதலில் ஆன்மீகப்பாதையில் கடுமையான உழைப்பும் பல போராட்டங்களும் சந்திக்க வேண்டும். மனம் தளராமால் அந்த ஓட்டை உடைத்து எறிய வேண்டும் பின் தெரிவார் அந்த முக்கண்ணன் ( தேங்காயிலேயே மூன்று கண்கள் இருக்கின்றனவே !) நமக்கு அருள் தருவதைப்போல.... நன்றி திருமதி விசாலம் மாமி ...

-----------------------------------------------------------------------------
4. கட்டுரை=1:- இந்தமாதம் சகோதர சகோதரிகள் மாத கட்டுரைகள்:-
ரக்ஷா பந்தன் என்பது மிகவும் பிரபலாமான இந்து பண்டிகையாகும். சகோதரனுக்கும் சகோதரிக்கும் இடையேயான பந்தத்தை கொண்டாடும் பண்டிகையே இது. இந்தியாவில் உள்ள பழமையான பண்டிகைகளில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது. அதனால் இதனுடன் பல புராணங்களும் வரலாறுகளும் இணைந்துள்ளது. ரத்த சம்பந்தம் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அனைத்து சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கும், ரக்ஷாபந்தன் என்பது மிகவும் விசேஷமான நிகழ்வாக உள்ளது. இந்து மாதமான ஆடி மாதத்தில் பௌர்ணமி தினத்தன்று இந்த ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளை ராக்கி பூர்ணிமா என்றும் அழைக்கின்றனர். மரபு படி, சகோதரர்களின் கை மணிக்கட்டில் ராக்கி என்ற நூலை சகோதரிகள் கட்டுவார்கள். தீயவைகளில் இருந்து அவர்களை காக்கும் அடையாளத்தை அது குறிக்கும். அதற்கு கைமாறாக, அனைத்து விதமான துன்பங்களில் இருந்து தன் சகோதரியை காத்து அவர்களின் வாழ்நாள் முதுவதும் அவர்களை பார்த்து கொள்வதாக சகோதரர்கள் சத்தியம் செய்வார்கள். அதனால் தான் ரக்ஷா பந்தன் என்பது சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு இடையேயான பந்தத்தை குறிக்கும் பண்டிகை என கூறினோம். அந்த வார்த்தையே பாதுகாப்பதற்கான பந்தம் என பொருள் தரும். பாதுகாப்பது என்பது சகோதரன் மற்றும் சகோதரி என இரண்டு பேர்களுக்கும் பொருந்தும். இது ஒரு சமுதாய பிணைப்பாகவும் திகழ்கிறது. இது சகோதர சகோதரிகளுக்கான புகழ்பெற்ற பண்டிகை என்றாலும் கூட, பாதுகாப்பின் அடையாளமாக ராக்கியை மனைவி தன் கணவனுக்கு கட்டலாம் அல்லது தாய் மகனுக்கு கட்டலாம். பெண்கள் பெரிய மனிதர்களுக்கு ராக்கி கட்டிய பிணைப்பின் அடையாளமாக எப்படி பல பேரழிவுகள் தடுக்கப்பட்டது என்பதற்கு இந்திய வரலாறுகள் முழுவதும் பல உதாரணங்கள் நிறைந்துள்ளது. சரி, இது எங்கே தொடங்கியது என உங்களுக்கு தெரியுமா? ஏன் ரக்ஷா பந்தன் இவ்வளவு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
ரக்ஷா பந்தன் பண்டிகையைச் சுற்றி பல விதமான இதிகாசங்களும் புராணங்களும் சூழ்ந்துள்ளது. அதில் ஒன்று இப்படி கூறுகிறது - இந்திரனை ஒரு அசுரன் தாக்கி, இந்திரனின் இருப்பிடமான அமராவதியை கைப்பற்றினான். அப்போது இந்திரனின் மனைவியான சச்சி விஷ்ணு பகவானிடம் சென்று உதவி கோரினார். சச்சியை துன்பம் வரும் வேளையில் அவர் காத்திட, புனிதமான ஒரு பருத்தி நூலை சச்சியின் கையில் கொடுத்த விஷ்ணு பகவான், அதனை அவர் கை மணிக்கட்டில் கட்ட சொன்னார். அதனை விஷ்ணு பகவானின் கையில் கட்டினார் சச்சி. அதனால் அந்த அசுரனை விஷ்ணு பகவானால் வீழ்த்த முடிந்தது. அதில் இருந்து வந்தது தான் ராக்கி எனப்படும் பாதுகாப்பு நூல்.
ராக்கி பற்றிய வரலாற்று குறிப்பீடுகள்:- ஒரு கதையின் படி,
மாவீரர் அலெக்சாண்டர் இந்தியாவை தாக்கிய போது, போரஸ் மன்னரால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். போரும் நடந்தது. இந்த நேரத்தில், அலெக்சாண்டரின் மனைவியான ரோக்சானா புனித கயிறு (ராக்கி) ஒன்றினை போரசிற்கு அனுப்பி வைத்தார். அதனுடன் சேர்த்து போரில் தன் கணவனை கொள்ள கூடாது என்ற கோரிக்கை கடிதம் ஒன்றினையும் அனுப்பி வைத்திருந்தார். அதனால், போரின் போது, தன் கையில் இருந்து ராக்கி கயிறுக்காக, அலெக்சாண்டரின் உயிரை எடுக்காமல் விட்டார் போரஸ்.
$ராணி கர்ணாவதி ஹுமாயுனுக்கு ராக்கி அனுப்பி வைத்தார்:- ராணி கர்ணாவதியும்.. ஹுமாயுனும்..
ரக்ஷா பந்தன் பற்றிய மற்றொரு புகழ்பெற்ற வரலாற்றைப் பார்க்கலாமா? அது தான் ராணி கர்ணாவதி மற்றும் ஹுமாயுன் சம்பந்தப்பட்டது. கர்ணாவதி ராணி என்பவர் தன் கணவனான ரானா சங்கா அரசரின் மறைவிற்கு பிறகு, மேவாரின் ராணி பிரதிநிதியாக செயல்பட்டார். தன் மூத்த மகனான விக்ரம்ஜீத் பெயரில் அவர் அரசாட்சி புரிந்து வந்தார். இருப்பினும், குஜராத்தை சேர்ந்த பகதூர் ஷா மேவாரின் மீது இரண்டாம் முறை படையெடுத்த போது, ஹுமாயுன் பேரரசரின் உதவியை நாடி அந்நாட்டின் ராணி சென்றார். அதற்கு காரணம் பகதூர் ஷா ஏற்கனவே இள வயது விக்ரம்ஜீத்தை வீழ்த்தியுள்ளான்.
மேவாரை காப்பாற்ற ஹுமாயுனுக்கும் பேரரசருக்கும் ராணி கர்ணாவதி ஒரு கடிதம் எழுதினர். அதனால் அவரிடம் பாதுகாப்பு கோர அவருக்கு ஒரு ராக்கியையும் அனுப்பி வைத்தார். இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், ஹுமாயுனின் தந்தையான பாபர் தான் ரானா சங்கா அரசரை வீழ்த்தியவர். இதனால் 1527-ஆம் ஆண்டில் அவருக்கு எதிராக இருந்த ராஜ்புட் ராணுவத்தத்துடன் நேசக்கரம் நீட்டப்பட்டது. பாதுகாப்பு கோரி தன்னிடம் ராணி வந்துள்ளதால், தன் ராணுவ முகாமை விட்டு மேவாரை நோக்கி பேரரசர் சென்றார். இருப்பினும், அவரால் சரியான நேரத்தில் அங்கே செல்ல முடியவில்லை. அதனால் சித்தூரில் ராஜ்புட் வீரர்கள் வீழ்த்தப்பட்டனர். ராணி கர்ணாவதி தற்கொலை செய்து கொண்டார். ஆனால் பகதூர் ஷா படைகளை நிறுத்திய ஹுமாயுன், விக்ரம்ஜீத்திடம் அரசாங்கத்தை மீட்டுக் கொடுத்தார்.
$ எமனும் யமுனாவும்
யமுனை நதி, மரணத்தின் கடவுளான எம தர்மனுக்கு ராக்கி கட்டியது என புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கூறுகிறது. அவளின் செய்கையால் சந்தோஷப்பட்ட அவர், அவளுக்கு சாகா வரத்தை அளித்தார். கூடுதலாக, தங்கையிடம் இருந்து ராக்கி பெற்று அவளுக்கு பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்யும் சகோதரனுக்கு சாகா வரம் கிடைக்கும் என எமன் அறிவித்தார்.
$ ரக்ஷா பந்தனும்.. சந்தோஷி மாதாவின் பிறப்பும்..
அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றும் கடவுள் தான் சந்தோஷி மாதா. இவர் விநாயகரின் மகள் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. தெய்வத் தாயின் தனித்துவமான அவதாரம் இவர். ரக்ஷா பந்தன் தினத்தன்று, விநாயகரின் தங்கையான ஜோதி, அவரை காண அங்கே வந்த போது பிறந்தவர் தான் சந்தோஷி மாதா. தனக்கு ராக்கி கட்ட ஜோதி வந்த போது அழகிய விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் விநாயகர். இந்த விழாவின் மீது ஆர்வத்துடன் இருந்த விநாயகரின் புதல்வர்களான லாபா மற்றும் க்ஷேமா அதில் பங்கு கொள்ள விரும்பினார்கள். அவர்களின் தாய்மார்கள் ரித்தியும் சித்தியும் ரக்ஷா பந்தனை பற்றி அவர்களுக்கு விளக்கினார்கள். விநாயகருக்கு ஜோதி ராக்கி கட்டுவதை கண்ட அவர்கள், தங்களின் தந்தை தன் சகோதரியை நல்ல எதிர்காலம், சந்தோஷம் மற்றும் இன்பம் பெற வாழ்த்தியதை கவனித்தார்கள்.
இந்த முழு சடங்கின் மீது ஈர்க்கப்பட்ட லாபா மற்றும் க்ஷேமா தங்களுக்கும் ஒரு தங்கை வேண்டும் என விரும்பினார்கள். அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றக் கூடிய விநாயகரால், தன் புதல்வர்களுக்கு மறுப்பு தெரிவிக்க முடியவில்லை. அவர்களின் ஆசையை நிறைவேற்ற, விநாயகர் மற்றும் ரித்தி-சித்தியிடம் இருந்து ஒரு தெய்வீக ஒளி தோன்றியது. அது ஒரு சிறிய குழந்தை வடிவத்தை பெற்றது. இப்படி பிறந்தவர் தான் சந்தோஷி மாதா. தேவர்களும் முனிவர்களும் இந்த குழந்தையின் மீது அருளை பொழிந்தனர். அவள் தன் சகோதரர்களுக்கு ராக்கியை கட்டினாள். சகோதரர்களிடம் வெல்லமும் பருப்புகளும் மட்டுமே இருந்ததால், அதையே அவளுக்கு வழங்கினார்கள். வெறும் வெல்லம் மற்றும் பருப்புகளை மட்டுமே கொண்டு சந்தோஷமாக இருந்த இந்த சிறிய பெண்ணை கண்ட நாரத முனி அவளுக்கு சந்தோஷி என பெயரிட்டார். நன்றி :- http://tamil.boldsky.com/
==============================================
4). கட்டுரை-2 :- இந்தமாதம் சகோதர சகோதரிகள் மாத கட்டுரைகள்:-
உலகிற்கே வழிகாட்டும் உன்னத சகோதரர்கள்!'
"உலகம் இன்று சகோதரத்துவத்தைப் பற்றிப் பேசுகிறது. உலக மக்கள் அனைவரும் எந்த மதம், எந்த ஜாதியாக இருந்தாலும் உடன்பிறந்த சகோதரர்களைப் போல் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்கிறது. ஆனால் உண்மையில் உலகத்தின் எல்லா இடங்களிலும் ஒரே தாய்க்குப் பிறந்த புதல்வர்கள் அனைவரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்களா? சொத்துச் சண்டையில் சொந்த சகோதரன் மேல் வழக்குத் தொடுத்து நீதிமன்றம் செல்பவர்கள் எத்தனை பேர்?
'சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காதவர்கள்' எத்தனை பேர்?
உலகில் தோன்றிய அத்தனை மொழி நூல்களிலும், உடன்பிறந்த சகோதரர்களின் உன்னதமான பாசத்தை உரத்துப் பேசும் நூல் நம் பாரத தேசத்தைச் சேர்ந்த ராமாயணம்தான்.
மாபெரும் இதிகாசமான ராமாயணம், தாய் மகன் பாசம், தந்தை மகன் நேசம், நட்பு, குரு சீடன் உறவு, கணவன் மனைவி காதல், தலைவன் தொண்டன் பக்தி என்று இப்படி எத்தனையோ அறங்களைப் பேசினாலும், ராமாயணம் வலியுறுத்தும் தலையாய அறம் சகோதர பாசம்தான்.
ராம லட்சுமண பரத சத்துருக்கனர்களுக்கு இணையான சகோதரர்கள் உலகில் எங்குமில்லை. அண்ணன் ராமனிடம் பாசம் செலுத்தும் அந்த மூன்று தம்பியரும் பாசம் செலுத்துவதில் ஒருவரையொருவர் மிஞ்சுகிறார்கள். லட்சுமணன் அதிர்ஷ்டசாலி. அவன்தான் மூவரிலும் ராமனுடன் அதிக நாட்கள் இருந்தவன். பிறந்தது முதல் ராமனின் நிழலாகவே வாழ்ந்தவன். கானகத்திற்கும் அண்ணனுக்குச் சேவை செய்யவென்றே உடன் சென்றவன். தூக்கத்தைத் தொலைத்து இரவிலும் பகலிலும் அண்ணனையும் அண்ணியையும் காவல் காத்து நின்றவன்.
அண்ணி சீதை கூடத் திருமணம் வரை ராமனுடன் வாழவில்லை. திருமணமான பின் கானகம் வந்தாலும் அங்கே அசோகவனத்தில் ராமனைப் பிரிந்து வாழ்கிறாள். உத்தர காண்டத்தில் அவள் நாடு கடத்தப்பட்டுக் காடு சென்றபோதும் கணவனைப் பிரிய வேண்டிய துர்ப்பாக்கியம். ஆனால் லட்சுமணன், தன் இறுதி மூச்சு வரை ராமனைப் பிரியவே இல்லை. அவன் பெற்ற பேறே பெரும்பேறு.
பரதன், ராமன்மேல் மட்டற்ற பாசம் செலுத்தினாலும் அவன் துரதிருஷ்டசாலி. ராமன் மேலான அவனது பாசத்தை, பெற்ற தாய் கைகேயி புரிந்துகொள்ளவில்லை. புரிந்துகொண்டிருந்தால் பரதன் நாடாளவும் ராமன் கானகம் செல்லவும் வரம் கேட்டிருப்பாளா?
தந்தை தசரதரும் பரதனைப் புரிந்து கொள்ளவில்லை. அவன் தனக்கு ஈமக்கடன் செய்யக் கூடாது என்று சொல்லிவிட்டல்லவா அவர் இறந்தார். லட்சுமணனும் பரதனைப் புரிந்துகொள்ளவே இல்லை. என்ன கோபம் அவனுக்கு பரதன் மேல்? கோசலை, வசிஷ்டர் ஆகியோர் கூட பரதனை சந்தேகக் கண்ணோடுதான் பார்த்தார்கள். குகனும் தொடக்கத்தில் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் பரதன், ராமனின் பாதுகையை அரியாசனத்தில் வைத்து, அதன் கீழ் அமர்ந்து நாடாளும் அளவு ராமனிடம் பாசம் கொண்டிருந்தான்.
சத்துருக்கனன் அதிகம் பேசாதவன். ஆனால் பரதன், ராமன்மேல் கொண்ட பக்தியை வழிமொழிந்து வாழ்ந்தவன் அவன். ராம பட்டாபிஷேகத்திற்கு முந்திய இறுதிக்கட்டத்தில், பரதன் பதினான்கு ஆண்டாகியும் ராமன் அயோத்தி வராததால் நெருப்பில் விழத் துணிகிறானே? அப்போது கானாள நிலமகளைக் கைவிட்டுப் போன ராமனை எண்ணி சத்துருக்கனன் உருகுகிறான். தன்னை அரசாளுமாறு பரதன் சொன்னபோது விரக்தியுடன் நகைக்கிறான். அதிகம் பேசாமலே, தான் கொண்ட ராம பக்தியை உறுதிப்படுத்துகிறான் சத்துருக்கனன் என்ற அந்த லட்சியத் தம்பி.
இந்த அற்புதமான சகோதரர்கள் நால்வரையும் கோயில் கட்டிக் கொண்டாட வேண்டாமா? கேரளத்தில் உண்மையிலேயே இவர்களுக்குத் தனித்தனி ஆலயங்கள் எழுப்பிக் கொண்டாடுகிறார்கள்.
*ராமனுக்கு அடுத்த அவதாரமல்லவா கண்ணன்? திரேதாயுகத்தில் பிறந்தவன் ராமன். அடுத்து வந்த துவாபர யுகத்தைச் சார்ந்தவன் கண்ணன். தான் சொன்னபடி வாழ்ந்தவன் ராமன். தான் சொன்னபடி வாழச் சொன்னவன் கண்ணன். பின்வந்த அவதாரமான கண்ணன், முந்தைய அவதாரமான ராமனையும் அவனது மூன்று சகோதரர்களையும் சிலையெழுப்பி வழிபட்டிருக்கிறான்.
கண்ணன் ஆட்சி புரிந்த துவாரகை கடலில் மூழ்கியதே? அப்போது கண்ணன் வழிபட்ட ராம லட்சுமண பரத சத்துருக்கனர் சிலைகள் தனித்தனியே பிரியாமல் ஒன்றாகவே கடல் நீரில் மூழ்காது மிதந்தனவாம். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு கேரளத்தில் இச் சிலைகள் மிதந்துவந்தபோது கண்டெடுத்தவர்கள் சில மீனவர்கள். வலையில் சிக்கிய சிலைகளை அவர்கள் வியப்போடு தொழுதார்கள். அந்தப் பகுதியின் தலைவராக விளங்கியவரிடம் பக்தியோடு சிலைகளை ஒப்படைத்தார்கள். ஜோதிடர்களை வரவழைத்து இந்த அற்புதச் சிலைகளின் வரலாற்றைக் கண்டறிந்தார் அந்தத் தலைவர். அப்போது வானில் ஓர் அசரீரி எழுந்தது. ராமர் சிலையை அரவணைத்தவாறு நடக்கவேண்டும் என்றும், எந்த இடத்தில் ஒரு மயில் வட்டமிடுகிறதோ அங்கே அந்தச் சிலைக்குக் கோயில் எழுப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டது அசரீரிக் குரல்.
சிலையோடு நெடுந்தூரம் நடந்தும் மயிலைக் காண இயலவில்லை. மக்கள் மனம் தளர்ந்தபோது ஒரு பக்தர் தொலை தூரத்திலிருந்து ஏராளமான மயில் இறகுகளோடு அங்கு நடந்து வந்தார். அவரோடு ஒரு மயிலும் நடந்து வந்தது. மக்களும் தலைவரும் மனம் மகிழ்ந்து மயிலைக் கண்ட அந்த இடத்திலேயே ராமனுக்கு ஆலயம் நிறுவினார்கள்.
ராமர் ஆலயம் திருச்சூர் அருகே திருப்பையார் என்ற இடத்தில் அமைந்துள்ளது. (திருச்சூரிலிருந்து 24 கிலோ மீட்டர்.) கடந்த காலத்தில் திருப்புறை ஆறு இந்நகரைத் தழுவிக் கொண்டு ஓடியதாம். அதனால்தான் ஆறு என இவ்வூரின் பெயர் முடிகிறது. மரவேலைப்பாடுகளும் சிற்பங்களுமாக இந்தக் கோயில் தனி அழகோடு திகழ்கிறது. ஆகஸ்ட் - செப்டம்பரில், ஓணத்தையொட்டி படகுப் போட்டி இங்கு நடைபெறுவதுண்டு. ராமன் இருக்கும் இடத்தில் படகுப் போட்டி நடத்தும்போது நமக்கு குகன் ஞாபகம் வரக் கூடும். அதிகத் தொலைவில் இல்லாமல் சகோதரர்கள் நால்வருக்கும் தனித்தனியே நான்கு ஆலயங்கள் எழுப்பியுள்ளார்கள். இந்த நான்கு ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்தால் பெரும் புண்ணியம் என்று பக்தர்கள் கருதுகிறார்கள். ஒவ்வோர் ஆலயத்தில் உள்ள சகோதரனும் மற்ற மூன்று ஆலயங்களுக்கும் பக்தன் சென்று வந்தான் என அறிகிறபோது அளவற்ற மகிழ்ச்சி அடைந்து, கூடுதலாக அருள்பாலிப்பான் என்பது அடியவர்களின் நம்பிக்கை. ஒரே நாளில் இந்த நான்கு அம்பலங்களையும் தரிசிப்பது நாலம்பல தரிசனம் என்று சொல்லப்படுகிறது.
நன்றி ஆனந்தவிகடன் ...

அனைவருக்கும் ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி வாழ்த்துகள்...... (25-Aug-2016) அன்புடன் "சுட்டீஸ்" வைஷாலி வாசகர் வட்டம்.........
====================================
4). கட்டுரை-3:- இந்தமாதம் சகோதர சகோதரிகள் மாத கட்டுரைகள்:-
இஸ்லாம் மதத்தையும் இந்துமதத்தையும் இணைத்த சகோதரி என ராஜ ராஜ சோழனின் சகோதரி குந்தவை நாச்சியார் போற்றப்படுகிறார்.
ராஜராஜன் ஆட்சிக்கு வரும்வரை அவனைப் பேணிப்பாதுகாத்து மட்டுமின்றி அவன் அறிவில் சிறந்த அரசனாக திகழ்வதற்கும், சோழர்களின் பொற்காலம் அவனது ஆட்சிகாலம் என்று வரலாறு குறிப்பதற்கும், வீரத்தின் விலை நிலமாய் அவனை போற்றுவதற்கும் காரணமானவர், அவனது சகோதரி குந்தவை நாச்சியார் தான்!
குந்தவை நாச்சியார் கி.பி.1006 -ஆம் ஆண்டிலேயே இந்துமதத்தை விட்டு நீங்கி, இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொண்டுள்ளார் என்பது அறியவருகிறது! இராஜராஜனும் அவரது தமக்கை குந்தவை நாச்சியாருக்கும் இஸ்லாம் மார்க்கம் குறித்த தொடர்புகள் அவரது தந்தையான சுந்தரச்சோழன் ஆட்சிக்காலத்தில் இருந்தே தொடர்ந்து வந்துள்ளது. இஸ்லாம் மதத்தை பரப்புவதற்காக சோழர் ஆட்சிப்பகுதிக்கு வந்த நத்தஹருடன் சிறுவயதில் இருந்து பழகும் வாய்ப்புகள் குந்தவை நாச்சியாருக்கு ஏற்பட்டிருந்தது. இதனால் வைதீக மதத்தைவிட்டு குந்தவை நாச்சியார் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். இஸ்லாம் மதத்திற்கு மாறிய பின்பு சோழப்பேரரசில் மிகப்பெரிய புரட்சியும், மாறுதலும் பல்வேறு குழப்பங்களும் நீடித்தது.
இவற்றிற்கு ஆதாரமாக ஸ்ரீரங்கம் கோயில் ஒழுகு உள்ள பலக்குறிப்புகளும், சமயபுரம் கோயில் வரலாறும், திருவாதவ+ரில் உள்ள திருமறைநாதர் கோயில் இருக்கும் புருஷா மிருகம் உருவமும், குந்தவை நாச்சியார் தாதாபுரத்தில் கட்டிய ரவிகுல மாணிக்க ஈஸ்வரம் விமானப்பகுதியில் சித்தகரிக்கப்பட்டுள்ள சுதைச்சிற்பங்களும், ஸ்ரீரங்கம் கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் ஈசானிய மூலையில் இடம்பெற்றுள்ள துலுக்க நாச்சியார் சன்னதியும் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்ட செயலை விளக்குவதாக அமைந்துள்ளன.
குந்தவை நாச்சியார், இஸ்லாம் மதத்துக்கு மாறிய இடம்," சமயபுரம்" எனத் தெரிகிறது, ஸ்ரீ ரங்கத்து கோயில் ஒழுகு நூலிலும் அதுபற்றிய குறிப்புகள் காணப் படுகிறது! சமயபுரம் "கோயில் தல வரலாறும்" அதனை உறுதிபடுத்துவதாகவே உள்ளது! சமய பு(ர)றம் என்ற பெயர், காரணப் பெயராக இருப்பதையும் காணலாம்! குந்தவை இதுநாள் வரை தான் சார்ந்து இருந்த.. மதத்தை புறம் தள்ளி, புதிய மதத்தை தழுவிக் கொண்டதால் சமயபுற(ர)ம் என்று பின்னாளில் வழங்கப்பட்டு வருகிறது எனத் சரித்திர குறிப்புகள் தெரிவிக்கிறது.
குந்தவை இஸ்லாம் மார்க்கத்தை, தழுவி, இஸ்லாமிய பெண்ணாகவே இறந்து, இஸ்லாமிய முறைப்படியே அடக்கம் செய்யப்பட்டு உள்ளார்! அவர் அடக்கம் செய்யப்பட்ட தர்காவில், "இந்துமத வழிபாட்டு முறைகளில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள விளக்கில் நெய்யூற்றி, தீபம் ஏற்றி, வழிபடுவது போன்ற " வழக்கம் இன்றும் தொடர்ந்து நடந்துவருகிறது!
இவைகள் எல்லாம் தமிழகத்தில், இஸ்லாம், இந்துமதம் என்ற சமயங்களின் நல்லிணக்கத்துக்கு, சகோதர ஒற்றுமை உணர்வுக்கு உதாரணமாக திகழ்கிறது என்பதைக் காட்டுகிறது!... நன்றி http://puthu.thinnai.com/ மேலும் http://ajmal-mahdee.blogspot.in/
===============================================
4) கட்டுரை-4:- இந்தமாதம் சகோதர சகோதரிகள் மாத கட்டுரைகள்:-
மகாகவி பாரதியார் அவர்கள், சமூக சேவகியும் எழுத்தாளர், ஆசிரியை மற்றும் சுவாமி விவேகானந்தரின் முதன்மைச் சீடருமான சகோதரி நிவேதிதாவை தமது குருவாகக் குறிப்பிடுவார். ஒரு முறை, பாரதியார் சகோதரி நிவேதிதையைச் சந்தித்தபோது, மனைவியை அழைத்து வரவில்லையா என பாரதியாரிடம் கேட்டுள்ளார். அதற்கு பாரதியார், தான் அவரை வெளியில் எங்கும் அழைத்துச் செல்வதில்லை என குறிப்பிட்டார். இதை அறிந்த சகோதரி நிவேதிதை பாரதியாரிடம், ‘உங்கள் மனைவிக்கே நீங்கள் சம உரிமையும், விடுதலையும் கொடுப்பதில்லை. இந்நிலையில், நீங்கள் நாட்டுக்கு எவ்வாறு விடுதலை பெற்றுத்தர போகிறீர்கள்?’ என்று கேட்டார். இந்த உரையாடல் தான் பாரதியாரின் பெண்கள் பற்றிய சிந்தனையையே மாற்றி, பெண்ணுரிமைக்காகப் போராட தூண்டுகோலாக இருந்ததாம்.
====================================
4) கட்டுரை-5:- இந்தமாதம் சகோதர சகோதரிகள் மாத கட்டுரைகள்:-
தேசிய சகோதரி நிவேதிதா என்று பாசத்தோடு அழைக்கப்பட்ட ஆங்கில-ஐரியப்(English Irish) பெண்ணான ஆசிரியை மார்கரெட் எலிசபெத் நோபிள் அவர்கள், முதன் முதலில் புதிய கல்வி முறை, மற்றும் பெண் கல்வியை இந்தியாவில் மலரச்செய்தவர். 13 நவம்பர், 1898, காளி பூஜை என்ற நல்ல நாளில், பெண்களுக்கான முதல் பள்ளியை புனித அன்னையின் ஸ்ரீ சாரதா தேவி அவர்களின் முன்னிலையில் திறந்தார். அப்போது இவர் ஆரம்பித்த பள்ளிதான் பல தடைகளையும் தாண்டி, மேலும் பல பள்ளிகளாக பெருகி தற்போது சுவாமி ராமகிருஷ்ணா சாரதா மிஷன் பள்ளிகள் என்று அழைக்கப்படுகிறது. சகோதரி நிவேதிதா (அக்டோபர் 28, 1867 - அக்டோபர் 13, 1911),(இயற்பெயர்:மார்கரெட் எலிசபெத் நோபல்), சமூக சேவகியும் எழுத்தாளரும் ஆசிரியையான இவர், சுவாமி விவேகானந்தரின் முதன்மை சீடரும் ஆவார். மார்ச் 28, 1898 ஆம் ஆண்டு பிரம்மச்சரிய தீட்சைக் கொடுக்கும்போது விவேகானந்தர் தெய்வத்திற்கு அர்ப்பணிப்பு எனும் பொருள்படும் நிவேதிதா என்ற பெயரை அளித்தார். (இந்து சமயத்தில் தீட்சை வழங்கப்பட்ட முதல் மேற்கத்திய பெண் இவர்).கடினமான உழைப்பு மற்றும் தவ வாழ்வால் உடல் நலன் பாதிக்கப்பட்டு அக்டோபர் 13, 1911 அன்று இந்திய மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங்கில் மறைந்தார்.
ஒவ்வொரு குடும்பங்களின் உயர்வு, இந்த நாட்டின் உயர்வு... குடும்பத்தை நிர்வகிப்பதில் பெண்களுக்கு மிக முக்கியப்பங்கு உள்ளது, நாட்டின் தேசியத்தை உணர பெண்களுக்கு முறையான கல்வி இல்லாமல் இது சாத்தியமாகாது ஆகவே இந்தியாவில் பெண்கல்விக்கான முக்கியத்துவத்தை உணர்ந்த சுவாமி விவேகானந்தர் அதற்குத் தேவையான வழிவகைகளை ஆராய்ந்துவந்தார். அப்படிப்பட்ட சூழலில்தான் சுவாமியின் உணர்வை புரிந்துகொண்ட சகோதரி நிவேதிதா (மிஸ் மார்கரெட் ஈ நோபல்) சுவாமியின் சீடராகும் தமது விருப்பத்திற்கு ஒரு வாய்ப்பாக இந்திய பெண்கல்விக்கான ஒரு திட்டத்தை உருவாக்கினார். தனது திட்டங்களை முன்னெடுக்க, சுவாமி விவேகானந்தர் அவர்களும் உதவ முன்வந்தால், சகோதரி நிவேதிதா மீண்டும் இந்தியா திரும்பி வந்தார்.
இந்தியாவிற்கு நிவேதிதை வந்ததன் முக்கிய காரணம் கற்பிப்பது. அதில் சுவாமி விவேகானந்தர் படிப்படியாக தொண்டு செய்யவே வந்துள்ளதையும் மற்றவர்களை விடப் பெரிய அறிவாளிகள் என்றோ அவர்களைக் கைதூக்கி விடும் உயர்ந்தோராகவோ நினைத்துக் கொள்ளாதிருப்பதன் அவசியத்தைப் புகட்டினார். மேலும் தொண்டு செய்ய வேண்டியிருக்கும் மக்களினத்தை அறிந்திருப்பதன் அவசியத்தையும் மேனாட்டுக் கருத்துக்களை திணிக்காதிருப்பதன் அவசியத்தையும் அறிவுறுத்தினார்.
இந்திய சகோதரி நிவேதிதா என்கிற ஆசிரியை மார்கரெட் எலிசபெத் நோபிள், தமது பதினேழாம் வயதில் கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் 1884 ஆம் வருடம் இங்கிலாந்தின் கெஸ்விக் நகரிலுள்ள பள்ளியில் பணியாற்றினார். சுவிட்சர்லாந்தின் பெஸ்டலாஜி எனும் ஆசிரியர் கண்டுபிடித்திருந்த புதிய கல்விமுறையில் ஈடுபாடு கொண்டு அதனை வரவேற்றார். அக்கல்விமுறையை நடைமுறைக்குக் கொண்டு வர மிசஸ்.டி.லியூ. என்பவர் விடுத்த அழைப்பை ஏற்று 1890ஆம் ஆண்டு லண்டனில் உள்ள விம்பிள்டன் சென்றார். பின்னர் தம் கருத்துக்களை தடையின்றி நிறைவேற்றும் வண்ணம் 1892 ஆம் ஆண்டில் தானே ’ரஸ்கின் பள்ளி’ என்ற பெயரில் ஓர் பள்ளியை ஆரம்பித்தார். தம் இளம் பிராயத்திலேயே, 1884 ஆம் ஆண்டிலிருந்து 1894 ஆம் ஆண்டு வரை ஓர் ஆசிரியையாகப் பணியாற்றியிருந்தார் மார்கரெட் எலிசபெத் நோபிள். லண்டனில் இருந்த அறிஞர்களிடையே செல்வாக்கு பெற்றிருந்தார். பிரபல கல்வியாளராவார் மார்கரெட் எலிசபெத் நோபிள் என்று அவ்வறிஞர்கள் உணர்ந்திருந்தனர்.
சுவாமி விவேகானந்தர், 1898 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கல்கத்தா மக்களை தாக்கிய ’பிளேக்’ எனும் கொள்ளை நோயின் நிவாரணப் பணி செய்ய அமைத்த குழுவிற்கு நிவேதிதையை தலைவியாக்கினார். நிவேதிதை நோயாளிகளைப் பராமரிக்கவும் நகரைத் தூய்மைப் படுத்தவும் இளைஞர் குழு ஒன்றையும் அமைத்து தொண்டாற்றினார். மாவட்ட மருத்துவ அலுவலர் தமது குறிப்பேட்டில் "இந்தப் பேரிழப்புக் காலத்தில் அன்பின் வடிவாகத் திகழ்ந்த நிவேதிதையை பாக்பஜாரில் உள்ள எல்லாக் குடிசைப் பகுதிகளிலும் காண முடிந்தது. தன்னைப் பற்றிய சிந்தனையின்றி, துன்பத்தால் நலிந்தோர்க்குப் பணத்தாலும் உழைப்பாலும் உதவி புரிந்தாள் அவள்." என்று குறிப்பிட்டுள்ளார்.
=================================================
4. கட்டுரை-6:- இந்தமாதம் சகோதர சகோதரிகள் மாத கட்டுரைகள்:
ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம் உருவாக ஐந்து சகோதரர்கள் காரணமா?
சஹஸ்ர என்றால் ஆயிரம் என்று அர்த்தம். ஆகவேதான் ஆயிரம் நாமங்களைக் கொண்ட இதன் பெயர் சஹஸ்ரநாமம் என்றாயிற்று.
இந்த உலகில் லலிதா சஹஸ்ரநாமம், கணேச சகஸ்ரநாமம், லஷ்மி சகஸ்ரநாமம், நரசிம்ஹ சகஸ்ரநாமம் மற்றும் சுதர்சன சகஸ்ரநாமம் போன்ற சக்தி வாய்ந்த மந்திர நாம தோத்ராவளிகள் பலவும் இருந்தால் கூட சஹஸ்ரநாமம் என்றாலே எவருக்கும் விஷ்ணு சஹஸ்ரநாமமே மனதில் எழும் கூறுவார்கள்.
இந்த நாமாவளியே அத்தனை சக்தி வாய்ந்தது என்பதான நம்பிக்கை இன்றல்ல, பல ஆயிரம் வருடங்களாகவே இருந்துள்ளது என்பதின் காரணம் விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்கும் மகாபாரதத்துக்கும் நெருங்கிய சம்மந்தம் உள்ளது.
சரியாகக் கூறினால் இந்த சஹாஸ்ரனாமத்தை சனக குமாரர்களில் ஒருவரே பிதா மகனான பீஷ்மருக்கு உபதேசித்ததாகவும், பீஷ்மர் மூலமே இது மகாபாரத யுத்த முடிவில் அனைவருக்கும் தெரியக் காரணமாக இருந்தது என்பதுமே சரியானதாகும். ஆனால் இந்த சஹாஸ்ரனாமத்தை எழுத்து வடிவில் முதலில் படைத்தது வேத வியாசர் ஆகும். வேத வியாசரே மகாபாரதத்தை எழுதியவர்.
ஆமாம் விஷ்ணு சஹஸ்ரநாமம் தோன்றியது எப்படி என்கிறீர்களா? அதன் கதை இது. மகாபாரத யுத்தம் முடிந்தது. தர்மத்தை அழித்து வெற்றி அடைய நினைத்த துரியோதனின் சகோதரர்கள் மரணம் அடைந்து விட்டார்கள். கங்கா தேவி பெற்றெடுத்த மாபெரும் புனிதரான பீஷ்மர் அர்ஜுனனின் அம்புக்கு இரையாகி மரணப் படுக்கையில் கிடக்கிறார்.
அவர் உத்ராயண காலத்தில் மட்டுமே தான் மரணம் அடைய வேண்டும் என்று விரும்பியதினால் அர்ஜுனன் அவருக்கு அம்பினால் ஒரு படுக்கையை அமைத்துக் கொடுக்க அவர் அதில் படுத்துக் கிடக்கிறார். ஆனால் அதே நேரத்தில் ராஜ்ய பதவியில் அமர்ந்து கொண்டிருந்த யுதிஷ்டருக்கு மனதில் அமைதி இல்லை. நடந்து முடிந்திருந்த யுத்தத்தில் தமது உற்றார் உறவினர்களை, நண்பர்களை, நாட்டு மக்களை என அனைவரையும் இழந்து விட்டு பதவியில் அமர்ந்திருக்கிறோமே என்ற மன உறுத்தலால் அவர் அமைதி இல்லாமல் இருந்தார்.
இரண்டாவது நாளில் உடனடியாக கிருஷ்ணரை தேடிச் சென்று அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழுகிறார். 'பரமாத்மா, என்னால் அமைதியாக இருக்க முடியவில்லையே. எனக்கு மன அமைதி கிடைக்க நீதான் ஒரு வழியைக் கூற வேண்டும். உன்னை விட்டால் எனக்கு வேறு நாதியே இல்லையே கண்ணா....எனக்கு மன அமைதியைத் தர ஒரு வழியைக் கூறு' என்று துக்கம் தாங்காமல் அழுதார்.
அதைக் கேட்ட கிருஷ்ண பரமாத்மா யுதிஷ்டரிடம் கூறினார் ' யுதிஷ்டிரா, நீ படும் அவஸ்தையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இதற்கு என்னால் விடை தர முடியாது. ஆகவே நினைத்த நேரத்தில் தன் உடலைத் துறந்து விட்டு மேலுலகம் செல்லக் கூடிய சக்தி பெற்றவரான பீஷ்மரிடம் சென்று அவரிடம் ஏதாவது உபாயம் உள்ளதா என்று கேட்போம்.
அவரே இதற்கான விடையைக் கொடுக்க முடியும் என்பதின் காரணம் அனைத்து தர்ம சூத்திரங்களையும் அறிந்துள்ள அவர் இதற்கான வழி முறையையும் அறிந்துள்ளார். ஆகவே மரணப் படுக்கையில் உத்திராயண காலத்தை எதிர்பார்த்து தனது ஆத்மாவை வெளியில் எடுத்துச் செல்லக் காத்திருக்கும் அவர் அதை செய்யும் முன்னர் அவரிடம் செல்லலாம் வா...' என யுதிஷ்டரை அழைத்தார்.
அதை ஏற்றுக் கொண்ட யுதிஷ்டரும் கண்ணனுடன் மரணப் படுக்கையில் படுத்திருந்த பீஷ்மரிடம் சென்றார். கிருஷ்ணருடன் கிளம்பியவர்களில் வியாச முனிவரும் இருந்தார். அவர்கள் அனைவரும் ஒரு சேர தன்னிடம் வந்ததும், அவர்கள் வந்தக் காரணத்தை கேட்ட பீஷ்மர் விரக்தியால் சிரித்தார். 'சரி யுதிஷ்டிரா என்ன சந்தேகம், கேள்' என்று யுதிஷ்டரிடம் பீஷ்மர் கேட்க யுதிஷ்டரும் ' பிதா மகனே, நடந்தது நடந்து முடிந்து விட்டது.
ஆனாலும் நான் மன அமைதி இன்றி தவிக்கிறேன். நான் எனக்கு மன அமைதி கிடைக்க வழி தேடி வந்துள்ளேன். ஆகவே எனக்குள்ள சில சந்தேகங்களை நீங்கள் விளக்க வேண்டும். தெய்வங்களிலேயே உயர்வான தெய்வம் எது? எந்த தெய்வத்தை வேண்டுவதின் மூலம் வாழ்வில் மன அமைதி கிடைத்து மனிதர் மகிழ்ச்சியோடு இருக்க முடியும்? பிறப்பு எனும் இந்த பிறவிக் கடலை விட்டு விலக நான் யாரை வணங்கித் துதிக்க வேண்டும்? ஒவ்வொருவருடைய பிரார்த்தனையும் சென்றடையும் முடிவான இடம்தான் எது என்பது தெரிந்தால் நானும் அதை செய்ய விரும்புகிறேன். இவையே என் சந்தேகங்கள். தயவு செய்து இவற்றை நீங்கள் விளக்க முடியுமா? ' என்று கேட்டார்.
பீஷ்மரோ கண்ணனைப் பார்த்துக் கூறினார் ' என்ன கண்ணா, இன்னமும் உன் திருவிளையாடல் ஓயவில்லையா? உன்னை சாரதியாக்கிக் கொண்டு மகாபாரத யுத்தத்தை நடத்தி முடித்து விட்டாய். எவை எல்லாம் நடக்க வேண்டுமோ அவை அனைத்தையும் சப்தம் இன்றி திறமையாக செய்து காட்டி விட்டாய். நீயே தெய்வம் என்பதை நிரூபித்தப் பின்னரும் அதை அறிந்து கொள்ளாத பாண்டவ சகோதரர்களை இந்த சாமான்யனிடம் ஏன் அழைத்து வந்தாய்? உன்னால் முடியாத காரியமும் உள்ளதா? ஆனாலும் நீ எதோ ஒரு காரணத்துக்காக என்னிடம் இவர்களை அழைத்து வந்துள்ளாய். அப்படி ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி நீயும் எனக்கு மோட்ஷத்துக்கு வழிகாட்ட வந்துள்ளதற்கு நான் உனக்கு நன்றி கூறியே ஆக வேண்டும்' என்று கூறிய பின் யுதிஷ்டரைப் பார்த்துக் கூறலானார்.
'யுதிஷ்டிரா இந்த பிரபஞ்சத்தில் பராசக்தியினால் படைக்கப்பட்ட மகா விஷ்ணுவே கடவுட்களுக்கு எல்லாம் கடவுளாக விளங்குகிறார். அவருக்கு ஆயிரம் நாமகரணங்கள் உண்டு . அந்த நாமத்தை எவன் உச்சரித்து அவரை வணங்குவானோ அவனுக்கே மன நிம்மதியும், மகிழ்ச்சியும் கிடைக்கும். ஆத்மாவில் ஏற்படும் துக்கங்கள் அனைத்தும் விலகி ஓடும். இந்த உலகத்தை முற்றிலும் அறிந்தவர் முதலும் முடிவுமாக உள்ள அவரே. அவரே அனைத்து துக்கங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர்.
அவருடைய நாமத்தை எவன் ஒருவன் தொடர்ந்து நிலையான மனதுடன் பூஜிப்பானோ அவன் அனைத்து விசனங்களில் இருந்தும் விடுபடுவான். இந்த உலகுக்கு ஒளி கொடுக்கும் சூரியனைப் போல அவரை பூஜிப்பவர்களின் மனதிற்கும் இதயத்திற்கும் அமைதி எனும் ஒளியைக் கொடுப்பார். புனிதம் என்றாலே விஷ்ணு என்று அர்த்தம் தரும் வகையில் உள்ள புனிதமானக் கடவுள் அவர். ஆகவே முதன்மைக் கடவுளான விஷ்ணுவை ஆயிரம் நாமங்களைக் கொண்டு பூஜிப்பதின் மூலமே மன பயத்தில் இருந்தும் இதய பயத்தில் இருந்தும் விடுதலைக் கிடைக்கும்'
இப்படிக் கூறியபின் பீஷ்மர் விஷ்ணு சஹாஸ்ரனாமாவளியில் வரும் ஆயிரம் நாமாக்களையும் மற்றும் அவற்றின் அர்த்தங்களையும், அவற்றின் பலன்களையும் யுதிஷ்டருக்குக் போதித்தார். அப்படி பீஷ்மர் வாய் வழியே உபதேசித்த விஷ்ணு சஹாஸ்ரனாமத்தையே மகாபாரதத்தை வெகு காலத்துக்குப் பின்னர் படைத்த வேத வியாசர் எழுத்து வடிவில் தந்தார் என்பது நம்பிக்கை.
இந்த உலகைக் காக்க விஷ்ணுவின் பத்து அவதாரங்களை எடுக்க வைத்த பராசக்தி விஷ்ணு அவதாரத்தின் மகிமையை அவருடைய ஒரு அவதாரத்தின் மூலமே வெளிப்படுத்த வேண்டும் என விரும்பி அதை மகாபாரத யுத்த முடிவில் விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணர் மூலம் உலகிற்கு வெளிக் கொண்டு வந்தாள் என்பதினால்தான் விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் பெருமை இன்னும் கூடுகிறது. இதன் மூலம் ஹரியும் சிவனும் ஒருவரே என்ற தத்துவம் மேலும் வலுப்பெறுகிறது.
வேத வியாசரும் ஆதி சங்கரரும்
இந்த சஹஸ்ரநாமத்தின் பெருமை பகவத் பாதாள் ஸ்ரீ ஆதிசங்கரர் மூலம் உலகிற்குப் மேலும் பரவியது என்பதும் உண்மை ஆகும். ஏன் என்றால் அந்த பராசக்தியான அம்பிகைதான் அவருக்கும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் முக்கியத்துவத்தை அறிய வைத்தாள். பகவத் பாதாள் ஸ்ரீ ஆதிசங்கரருக்கும் இந்த விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? இந்த கதையை படியுங்கள்.
ஒருமுறை பகவத் பாதாள் ஸ்ரீ ஆதிசங்கரர் காஷ்மீரத்தில் தங்கி இருந்தபோது (காஷ்மீரத்தில் பகவத் பாதாள் ஸ்ரீ ஆதி சங்கரரின் ஆலயம் கூட உள்ளது) அவர் லலிதாம்பிகையின் சஹஸ்ரனாமாவளிக்கு ஒரு பாஷ்யம் எழுத வேண்டும் என விரும்பினார். லலிதா சஹஸ்ரநாமம் என்பது ஹயக்ரீவர், மகாவிஷ்ணு மற்றும் அகஸ்திய முனிவர்களுக்கு இடையே ஏற்பட்ட சம்பாஷணை மூலம் படைக்கப்பட்டது என்று பிருமாண்ட புராணம் மூலம் அறியப்படுகிறது.
பண்டாசுரனை அழிப்பதற்காக அவதரித்த லலிதாம்பிகை அவனை வதம் செய்தப் பின் ஆனந்தமாக ஸ்ரீபுரம் எனும் தனது இருப்பிடத்தில் அமர்ந்திருந்தபோது அங்கு அவளால் படைக்கப்பட்டு இருந்த வசினி என்னும் தேவதையின் தலைமையில் இருந்த வாக்தேவிகள் ஸ்ரீ சக்கிரத்தில் அமர்ந்திருந்த லலிதாம்பிகையின் புகழை மந்திரங்களின் வாயிலாகப் பாடுகின்றனர். லலிதாம்பிகையின் வாயில் இருந்து வெளிவந்த வாசினிகள் என்ற தேவதைகள் துதித்த நாமாவளியே லலிதா சஹஸ்ரநாமம் ஆயிற்று எனக் கூறுகிறார்கள்.
அந்த நாமாவளியை வாக்தேவதைகள் லலிதாம்பிகையின் பெருமையை ஆயிரம் பெயர்களைக் கூறி அவளை ஆராதிக்கும் விதத்தில் அமைத்து இருந்ததினால் அதை ரகஸ்ய நாமாவளி என்றும் அதை உச்சரித்து தேவியை வழிபடுவது பல பலன்களை தரும் என்பார்கள். உண்மையில் பார்வதியே அந்த இடத்தில் சாந்தநாயகியான லலிதாம்பிகை என்ற ரூபத்தில் இருந்தாள். அந்த இடத்தில் அகஸ்திய முனிவரும் வந்து லலிதா நவரத்னமாலா எனும் பாடலை தானே இயற்றிப் பாடினாராம்.
ஆகவேதான் அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த அந்த நாமாவளிக்கு அர்த்தம் தரும் ஒரு பாஷ்யம் எழுத வேண்டும் என காஷ்மீரத்தில் அப்போது தற்காலிகமாகத் தங்கி இருந்த ஸ்ரீ ஆதிசங்கரர் விரும்பினார். அவர் தமது சீடரை அழைத்து அங்கிருந்த புத்தகசாலையில் ( லைப்ரரி) சென்று தேவி நாமாவளியை எடுத்து வருமாறுக் கூறினார்.
சீடர் அங்கு சென்று ஒரு புத்தகத்தை எடுத்து வந்தார். சீடர் எடுத்து வந்த புத்தகம் விஷ்ணுவின் ஆயிரம் நாமாவளியைக் கொண்ட புத்தகமாக இருந்தது. ஆகவே தவறாக எடுத்து வந்துவிட்ட அந்த புத்தகத்தை வைத்து விட்டு லலிதா சஹஸ்ரநாமத்தை எடுத்து வருமாறு ஸ்வாமிகள் தமது சிஷ்யரிடம் கூற அவர் சிஷ்யரும் மூன்று முறை உள்ளே சென்று புத்தகத்தைக் கொண்டு வந்தாலும் மூன்று முறையும் அவர் கொண்டு வந்த புத்தகம் விஷ்ணு சஹஸ்ரநாமமாகவே இருந்ததாம். மீண்டும் மீண்டும் தான் கேட்டதைத் தவிர வேறு புத்தகத்தையே ஏன் எடுத்து வருகிறாய் என சிஷ்யரிடம் ஸ்ரீ பாகவத் பாதாள் கேட்டதும் அந்த சிஷ்யர் கூறினாராம் ' ஸ்வாமி என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
ஒவ்வொரு முறையும் நான் சென்று நீங்கள் கூறிய புத்தகத்தை எடுக்க முயன்றபோது அங்கிருந்த ஒரு சிறுமி, இதுதான் நீ தேடும் அந்த புத்தகம் என ஒரு புத்தகத்தைத் தந்தாள். நானும் அவள் கூறியதை நம்பி அவள் கொடுத்த புத்தகத்தை எடுத்து வர வேண்டியதாயிற்று' என்றதும் ஸ்ரீ பாகவத் பாதாளுக்கு புரிந்தது இதை செய்வது அந்த அம்பிகைதான்.
அவளால் இந்த பிரபஞ்சத்தின் நம்மைக்காக அவளால் படைக்கப்பட்ட விஷ்ணுவின் நாமத்திற்கு முதலில் பாஷ்யம் எழுத வேண்டும் என்பதினால்தான் இப்படி செய்கிறாள். அந்த உண்மையை உணர்ந்து கொண்டவர் முதலில் விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் எழுதிய பின்னரே லலிதா சஹஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் எழுதினர். இதில் இருந்தே விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் பெருமையை அறிந்து கொள்ளலாம்.

5. கட்டுரை:- இந்தமாதம் சகோதர சகோதரிகள் மாத கட்டுரைகள்:-
ஆ) பொது அறிவுத் தகவல்கள் பகுதியில்:-
விமானம் உருவான கதை - ரைட் சகோதரர்கள் (வரலாற்று நாயகர்கள்):-
கிறிஸ்துவுக்குப் பின் நாம் இருபது நூற்றாண்டுகளை கடந்துவிட்டோம் அவற்றில் இருபதாம் நூற்றாண்டில்தான் அதிகமான அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. அதனால்தான் இருபதாம் நூற்றாண்டை 'அறிவியல் நூற்றாண்டு' என்று பதிந்து வைத்திருக்கிறது வரலாறு. மனித வாழ்க்கையை மேம்படுத்திய ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளை கடந்த நூற்றாண்டில் உலகம் சந்தித்தது. அவற்றுள் இரண்டு கண்டுபிடிப்புகள் இந்த உலகையே ஒரு குக்கிராமமாக சுருக்க உதவின. ஒன்று அலெக்ஸாண்டர் கிரகம்பெல் கண்டுபிடித்த தொலைபேசி, மற்றொன்று:
“பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்” ஆம் உண்மையிலேயே பறவைகள் பறக்கும் அழகைக் கண்டு வியந்து நாமும் அவற்றைப்போல் பறந்தால் நன்றாக இருக்குமே!! ஏன் மனிதனும் பறக்க முடியாது? என்று கேள்வி கேட்டு பல ஆண்டு காலம் உறுதியோடு உழைத்து தங்கள் உயிரையும் பணயம் வைத்து கடைசியில் தங்கள் கனவை நனவாக்கிய இரண்டு வரலாற்று நாயகர்களின் கதையைத் தெரிந்துகொள்வோம்...
மனுகுலத்திற்கு பறக்கும் சக்தியைக் கொடுத்த அந்த அபூர்வ சகோதரர்கள் ஆர்வில் ரைட் மற்றும் வில்பர் ரைட்.இவர்களை சுருக்கமாக ரைட் சகோதரர்கள் என்று அழைக்கிறது வரலாறு. அமெரிக்காவில் இண்டியானா மாநிலத்தில் மெல்வில் எனும் ஊரில் 1867 ஆம் ஆண்டு ஏப்ரல் 16ந்தேதி பிறந்தார் வில்பர் ரைட், நான்கு ஆண்டுகள் கழித்து 1871 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 9ந்தேதி பிறந்தார் இளையவர் ஆர்வில் ரைட் இவர்களது தந்தை மில்டன் ரைட் ஒரு பாதிரியார். குடும்பம் ஏழ்மையான குடும்பம்தான் அதனால் உயர்நிலைப் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்க முடியவில்லை ரைட் சகோதரர்களால் ஆனால் இருவருக்குமே அறிவுத்திறனும், ஆற்றலும் நிறையவே இருந்தது. ஒருமுறை இருவருக்கும் பறக்கும் விளையாட்டுப் பொம்மை ஒன்றை பரிசாகத் தந்தார் தந்தை. மூங்கில் தக்கை, காகித அட்டை ஆகியவற்றால் செய்யப்பட்ட அந்த பொம்மை வீட்டின் கூரைவரை ஒரு ஹெலிகாப்டரைப்போல் பறந்து செல்லக்கூடியதாக இருந்தது. அப்போதே ரைட் சகோதர்கள் இருவருக்கும் அந்தப் பொம்மையை பெரிய அளவில் செய்தால் அதனை வெளியில் இன்னும் அதிக உயரத்தில் பறக்க விடலாமே என்ற எண்ணம் உதித்தது. முயன்று பார்த்தனர் தோல்வியைத் தழுவினர்.
ரைட் சகோதரர்கள் இருவருக்குமே பறவைகள் பறக்கும் அழகைப் பார்த்து வியப்பதில் அலாதி பிரியம். அதே நேரத்தில் பலவிதமான பட்டங்களை செய்து பறக்க விட்டு மகிழ்வார்கள். அந்தப் பட்டங்களைப்போல், பறவைகளைப்போல் என்றாவது ஒருநாள் நாமும் வானத்தில் பறப்போம் என்ற நம்பிக்கையைச் சுமந்துகொண்டு பிழைப்புக்கு வழி தேடினர் இருவரும். ஒரு அச்சு நிறுவனத்தை தொடங்கி செய்தித்தாள்கள் அச்சிட்டனர் ஆனால் அது நொடித்துப்போனது. பின்னர் அப்போது சைக்கிள்கள் பிரபலமாக தொடங்கியிருந்ததால் அவர்கள் சைக்கிள் வியாபாரத்தில் ஈடுபட்டனர். அந்தச் சமயத்தில்தான் Otto Lilienthal என்ற ஜெர்மானியரைப் பற்றி கேள்விப்பட்டனர் இருவரும். தங்களுக்கு முன்பே பறப்பதைப்பற்றி சிலர் சிந்தித்திருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு அப்போதுதான் புரிந்தது. Otto தான் தயாரித்த கிளைடர் என்ற கருவியின் மூலம் இயந்திரம் எதுவுமின்றி காற்றின் சக்தியினால் ஆகாயத்தில் பறந்ததைப்பற்றி ரைட் சகோதரர்கள் கேள்விப்பட்டனர்.
பறக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை மேலும் வளர்ந்தது. அதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள முற்பட்டபோது Otto Lilienthal ஒரு பறக்கும் சோதனை முயற்சியில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். ரைட் சகோதரர்கள் அதிர்ந்து போனாலும் அவர்களது நம்பிக்கை உதிர்ந்து போகவில்லை. Smithsonian Institution என்ற அமைப்பின் தலைவருக்கு அவர்கள் கடிதம் எழுதினர். ரைட் சகோதரர்களின் ஆர்வத்தை உணர்ந்த கழகத்தின் தலைவர் Samuel P. Langley ஆகாயத்தில் பறக்க அதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைப் பற்றியும், வெற்றி தோல்விகளைப் பற்றியும், முன்னேற்றம் பற்றியும் இப்படி எல்லாத் தகவல்களையும் அனுப்பி வைத்தார்.ரைட் சகோதரர்கள் தங்களுக்கு முன் பலர் மேற்கொண்ட அரிய முயற்சிகளைக் கண்டு அவர்கள் மலைத்தனர். அந்த முயற்சிகளால் பெறப்பட்ட அறிவைக்கொண்டு வெவ்வேறு கோணங்களில் சிந்தித்தனர்.
ரைட் சகோதரர்கள் தங்கள் முதல் கிளைடரை 1900 ஆம் ஆண்டில் உருவாக்கினர் அதனை எங்கு சோதித்துப் பார்க்கலாம் என்று சிந்தித்தபோது பருவநிலை ஆராய்ட்சி நிலையத்திற்கு கடிதம் எழுதினர். வட கேரனொய்வில் உள்ள கிட்டிகாக் என்ற இடம் உகந்தது என்று பதில் வந்தது. அங்கு சென்று முயன்று பார்த்தனர் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அப்போதும் அவர்கள் மனம் தளரவில்லை அடுத்த நான்கு ஆண்டுகள் தங்கள் வடிவமைப்பில் வெவ்வேறு மாற்றங்களை செய்வதும் சோதிப்பதுமாக இருந்தனர் ரைட் சகோதரர்கள். வேறு முன்மாதிரிகள் இல்லாததால் சிந்தித்து சிந்தித்து மாற்றங்கள் செய்தனர். ஒவ்வொரு முறையும் அவர்களால் முன்னேற்றத்தை உணர முடிந்தது. 1903 ஆம் ஆண்டு தாங்கள் தயாரித்த ஒரு கிளைடரில் தாங்களே உருவாக்கிய ஒரு மோட்டார் இயந்திரத்தைப் பொருத்தினர். அதில் விமானி குப்புற படுத்துக்கொண்டே தன் கை, கால்களால் இயக்கி அதனை பறக்கச் செய்ய வேண்டும்.
1903 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ந்தேதி முதல் வெள்ளோட்டத்திற்கு தயாராக நின்றது ஃப்ளையர் என்று அவர்கள் பெயரிட்டிருந்த அந்த விமானம். யார் அதனை ஓட்டுவது என்று நாணயத்தை சுண்டிப் பார்த்ததில் வில்பருக்கு வெற்றிக் கிடைத்தது. இருவரின் மனமும் எதிர்பார்ப்பில் படபடக்க விமானத்தில் ஏறி குப்புற படுத்துக்கொண்டே விமானத்தைக் கிளப்ப முயன்றார் வில்பர், ஆனால் ஏதோ இயந்திரக் கோளாறு காரணமாக விமானம் நகரவே இல்லை. அப்போதுகூட அந்த சகோதரர்கள் மனம் தளர்ந்து போயிருந்தால் நமக்கு விமானம் கிடைக்காமல் போயிருக்கும். அடுத்த மூன்று நாட்கள் சிந்தித்து மேலும் சில மாற்றங்களை செய்தனர்.
டிசம்பர் 17ந்தேதி மீண்டும் முயன்றனர். இம்முறை நாணயத்தை சுண்டிப்பார்த்ததில் ஆர்விலுக்கு அடித்தது யோகம்.விமானத்தில் வயிறுக் குப்புற படுத்துக்கொண்டு அமெரிக்க நேரப்படி காலை 10:35 க்கு விசையை இழுத்தார் ஆர்வில்.அந்த இயந்திர விமானம் ஆடி குலுங்கி, கனைத்து புகையைக் கக்கியபடியே மெதுவாக மேலே எழத்தொடங்கியது. அந்தரத்தில் அப்படியும் இப்படியுமாக ஆடி சரியாக 12 வினாடிகள் பறந்து 37 மீட்டருக்கு அப்பால் போய் பத்திரமாக தரையிறங்கியது.அந்த 12 வினாடிகள்தான் ஆகாய போக்குவரவுக்கு அடிகோலிய மந்திர வினாடிகள். வெற்றிக் களிப்பில் மிதந்தனர் ரைட் சகோதரர்கள். அவர்கள் பல நாட்கள் சிந்திய வியர்வைக்கு கடைசியில் பலன் கிட்டியது. அதேதினம் மேலும் மூன்று முறை ரைட் சகோதரர்கள் மாறி மாறி பறந்து சோதனைகள் செய்தனர். நான்காவது முறை வில்பர் 57 வினாடிகள் அந்தரத்தில் பறந்தார். அதற்கு அடுத்த ஆண்டே ரைட் சகோதரர்கள் நூறு அடி உயரம்வரை சென்று பன்னிரெண்டு மைல்கள் பறந்து சாதனை படைத்தனர். தொடர்ந்து பல முன்னேற்றங்களை செய்து 1908 ஆம் ஆண்டு 57 நிமிடங்கள் ஆகாயத்தில் பறந்து சாதனை படைத்தார் ஆர்வில்.
அடுத்த சோதனையின்போது தன்னுடன் ஒரு பயணியை அழைத்துச் சென்றார் ஆனால் எதிர்பாராத விதமாக விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறால் அது பூமியில் விழுந்து நொறுங்கியது. பயணி மாண்டார் ஆர்வில் தெய்வாதீனமாக உயிர் தப்பினார். ஆகாயப் போக்குவரவை சாத்தியமாக்கிய வில்பர் ரைட் 1912 ஆம் ஆண்டு மே மாதம் 30 ந்தேதியும் ஆர்வில் ரைட் 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30ந்தேதியும் இயற்கை எய்தினர். அந்த சகோதரர்கள் கிட்டிக்காக்கில் வடிவமைத்து உருவாக்கி முதன் முதலில் பயணம் செய்த அந்த விமானம் வாஷிங்டெனில் உள்ள தேசிய வான்வெளி அருங்காட்சியகத்தில் இன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ரைட் சகோதரர்களின் அடிப்படையைக் கொண்டு பற்பல மாற்றங்களைக் கண்டு நவீன விமானம் உதயமானது.
இன்று உலகின் எந்த மூலை முடுக்குக்கும் நினைத்தவுடனே சென்று வர முடிவதற்கு காரணம் ரைட் சகோதரர்கள் அன்று கண்ட கனவும், சிந்திய வியர்வையும் அந்தக் கனவை நனவாக்க அவர்கள் மேற்கொண்ட விடாமுயற்சியும்தான். ஆனால் ஆரம்பத்தில் அவர்களின் கனவைக் கேட்டு உலகம் என்ன சொன்னது தெரியுமா? 'முட்டாள்கள் இவர்கள் வானத்தில் பறக்கப் போகிறார்களாம்' என்று எள்ளி நகையாடியது. அதேபோல இன்று நீங்கள் கானும் கனவை எள்ளி நகையாட ஆயிரம்பேர் அணிவகுத்து நிற்பார்கள். ஒருவர்கூட உங்களை தட்டிக் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை வள்ளுவன் கூறியதுபோல, ரைட் சகோதரர்கள் நிகழ்த்திக் காட்டியதுபோல் நிச்சயம் “முயற்சி தன் மெய்வருத்த கூலிதரும்” உங்கள் செயல்களில் தொடர்ந்து முயன்றுகொண்டே இருங்கள் தொய்வின்றி முயல்பவர்களுக்கு எந்த வானமும் வசப்பட்டே ஆக வேண்டும் என்பது வரலாறு சொல்லும் உண்மை.
“பயிற்சியும் முயற்சியும் இருந்தால்
ஒவ்வொரு மனிதனும் சாதனையாளனே”
(தகவலில் உதவி - நன்றி ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)
நன்றி மாணவன் வலைப்பதிவு பக்கம்...
5. கதை :- இந்தமாதம் சகோதர சகோதரிகள் மாத கதை /கட்டுரைகள்:-
நல்ல தங்காள் கதை தெரியுமா? மிகவும் பழைய காலத்து உண்மைச்சம்பவமான ஒரு சகோதரனின் சகோதரியைப்பற்றிய கதை இது. நல்லதங்காள் கோவில் தமிழ்நாடு மாநிலம் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு என்ற பகுதியில் உள்ளது.
வத்திராயிருப்பு என்ற பகுதியில் நல்ல தங்காள் என்ற ஒரு பெண் இருந்தாள். அவளுக்கு நல்ல தம்பி என்ற அண்ணன் இருந்தான். இவர்கள் குடும்பம் மிகவும் பாரம்பரியமான விவசாய குடும்பம். நல்ல தங்காளுக்கு காசி ராஜன் என்ற ஒருவரை திருமணம் முடித்தனர். காசி ராஜன் மதுரையை சேர்ந்தவர். காசி ராஜனுக்கும், நல்ல தங்காளுக்கும் ஏழு குழந்தைகள் பிறந்தன. அப்போது மதுரையில் பஞ்சம் ஏற்பட்டது. பிறகு நல்லதங்காள் தனது அண்ணனை நாடி தனது ஏழு பிள்ளைகளை அழைத்து கொண்டு வந்தாள் .
அவள் அங்கு வந்த நேரம் அவள் அண்ணன் அங்கு இல்லை. அவளின் அண்ணியும் அவளை கானது கண்டது போல் இருந்தால். பிறகு ஒரு எதற்கும் பயன்படாத மண் பானை , பச்சை விறகை கொடுத்து சமைத்து உண்ணும் படி கூறினால்.
தெய்வத்தன்மை படைத்த நல்லதங்காள் விறகை பற்ற வைக்கும் பொது பச்சை விறகு பற்றி எரிந்தது. பிறகு அதில் உணவு சமைத்து தனக்கும் தனது குழந்தைகளுக்கும் ஊட்டி மகிழ்ந்தாள்.
சில நாட்கள் ஓடின. அண்ணன் வருவான் தனது பசியை போக்குவான் என்று எண்ணினாள் . பிறகு அண்ணன் தனது நிலைமையை அறிந்து மிகுந்த வேதனை அடைவான் என்று நினைத்து தனது குழந்தையும் தானும் உயிர் துறக்க முடிவெடுத்து தனது குழந்தைகளை கிணற்றில் இட்டு தானும் அதில் குதித்தாள் .
இதனை அறிந்த அண்ணன் தனது மனைவி செய்த குற்றத்திற்காக மனைவியை கொன்று விட்டு தானும் அந்த குளத்தில் விழுந்து உயிர் போக்கினான் . தெய்வ அம்சம் பொருந்திய நல்ல தங்காள் அண்ணனையும் அண்ணன் மனைவியையும் உயிர்பித்தாள். அப்போது அண்ணன் நீ இங்கு இருந்து தெய்வமாக காட்சி அளிக்க வேண்டும் என்று கூறினான். அதேபோல் நல்ல தங்காளும் தெய்வமானால்.
பிறகு நல்ல தம்பி மற்றும் நல்ல தங்காள் வாழ்ந்த இடம் கோவிலாக மாறியது. குழந்தை பேரு வேண்டி நல்ல தங்காளுக்கு அமைந்த ஒரே திருக்கோவில் இதுவாகும். மேலும் இந்த கோவில் ஆயிரம் முதல் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த கோவில் ஆகும்.
=================================
இ) சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம் கேள்வி பதில் பகுதியில்:-
நிறங்களில் நடுநிலை வகிக்கும் நிறம், "பச்சை நிறம்" எனவே இதை பெண்களின் / சகோதரிகளின் நிறமாக போற்றப்படுகிறது என்பது முன்னோர்களின் கூற்று அதை தற்போதைய ஆராச்சியாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
நமது நாட்டு தேசியக்கொடியின் பச்சைநிறம்:- நம்பிக்கை, தயை, கருணை வளத்தைக் குறிப்பதாக உள்ளது.
பச்சை நிற வண்ணக் கண்ணாடி வளையல்கள் அணிவதால் என்ன பயன்? பச்சை நிறம் என்பது சக்தி தேவியின் மகத்தான தத்துவ நிறமாக விளங்குகிறது. பலர் முதல் பெண் குழந்தையை அந்த வீட்டின் சக்தி தேவதை எனவும் அந்தப் பெண் குழந்தையால் வீட்டின் லட்சுமி கடாச்சமாகவும் வரப்பெற்றதாகவும் போற்றுகிறார்கள். பெண்களுக்கு பச்சை நிறம் சக்தியைத் தருவதாகவும், அவர்களின் கையில் அணிந்திருக்கும் பச்சை நிற வளையல்கள் அவர்களின் கை மாணிக்கட்டிலும், விரல்களுக்கிலும் பாதுகாப்பு சக்தியை உருவாக்கி பெண்களை காக்கின்றன என்கிறார்கள். மேலும் வளையல்கள் ஓசையால் பெண்கள் அதிக விழிப்புணர்வு தன்மை பெறுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் பச்சை நிறம் ஒரு பெண்ணின் சிறந்த கர்ப்புத்திறத்தை குறிப்பதாகவும் கருதப்படுகிறது.
பச்சை நிறம் இஸ்லாமியர்களின் புனிதமாகவும், சிறப்பான ஒரு வண்ணமாகவும் கருதப்படுகிறது. தெய்வத்தின் நிறம், கடவுளின் அம்சம்.
பச்சை ஐரிஷ் மக்களால் அதிர்ஷ்ட நிறமாக அங்கீகரிக்கப்பட்டது. இஸ்லாமியர்களின் புனித நிறம். ஐரிஷ் மக்களின் சமூக முத்திரையைப் பெற்ற நிறம். நட்புக்கு வழி வகுக்கும் என நம்புபவர்கள் அவர்கள். அதனால் மிகவும் பயன்படுத்தி வந்தார்கள். நம்பிக்கையின் சின்னமாக புனிதத்தைக் குறிக்கும் உயர்ந்த நோக்குடனும் வணங்கி வந்தார்கள். மதிக்கத்தகுந்த போற்றக்கூடிய நிறம் பச்சை என ஐரிஷ் மக்களால் கருதப்பட்டது.
கிறிஸ்துவர்களின் ஓவியங்களில் நம்பிக்கை, அதனால் ஏற்படும் முன்னேற்றங்கள், வெற்றிகள் இவற்றைக்குறிக்கும் வகையில் மரகதப் பச்சையை உபயோகப்படுத்தினார்கள்.
நமது நாட்டு தேசியக்கொடியின் பச்சைநிறம்:- நம்பிக்கை, தயை, கருணை வளத்தைக் குறிப்பதாக உள்ளது.
சகோதரிகளுக்கு பச்சை நிற உடை மற்றும் பச்சை நிற வளையல் போன்ற அணிகலன்களை தருவது ஏன்?
பச்சை நிற வண்ணக் கண்ணாடி வளையல்கள் அணிவதால் என்ன பயன்? பச்சை நிறம் என்பது சக்தி தேவியின் மகத்தான தத்துவ நிறமாக விளங்குகிறது. பலர் முதல் பெண் குழந்தையை அந்த வீட்டின் சக்தி தேவதை எனவும் அந்தப் பெண் குழந்தையால் வீட்டின் லட்சுமி கடாச்சமாகவும் வரப்பெற்றதாகவும் போற்றுகிறார்கள். பெண்களுக்கு பச்சை நிறம் சக்தியைத் தருவதாகவும், அவர்களின் கையில் அணிந்திருக்கும் பச்சை நிற வளையல்கள் அவர்களின் கை மாணிக்கட்டிலும், விரல்களுக்கிலும் பாதுகாப்பு சக்தியை உருவாக்கி பெண்களை காக்கின்றன என்கிறார்கள். மேலும் வளையல்கள் ஓசையால் பெண்கள் அதிக விழிப்புணர்வு தன்மை பெறுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் பச்சை நிறம் ஒரு பெண்ணின் சிறந்த கர்ப்புத்திறத்தை குறிப்பதாகவும் கருதப்படுகிறது.
பச்சை நிறம் இஸ்லாமியர்களின் புனிதமாகவும், சிறப்பான ஒரு வண்ணமாகவும் கருதப்படுகிறது. தெய்வத்தின் நிறம், கடவுளின் அம்சம்.
பச்சை ஐரிஷ் மக்களால் அதிர்ஷ்ட நிறமாக அங்கீகரிக்கப்பட்டது. இஸ்லாமியர்களின் புனித நிறம். ஐரிஷ் மக்களின் சமூக முத்திரையைப் பெற்ற நிறம். நட்புக்கு வழி வகுக்கும் என நம்புபவர்கள் அவர்கள். அதனால் மிகவும் பயன்படுத்தி வந்தார்கள். நம்பிக்கையின் சின்னமாக புனிதத்தைக் குறிக்கும் உயர்ந்த நோக்குடனும் வணங்கி வந்தார்கள். மதிக்கத்தகுந்த போற்றக்கூடிய நிறம் பச்சை என ஐரிஷ் மக்களால் கருதப்பட்டது.
கிறிஸ்துவர்களின் ஓவியங்களில் நம்பிக்கை, அதனால் ஏற்படும் முன்னேற்றங்கள், வெற்றிகள் இவற்றைக்குறிக்கும் வகையில் மரகதப் பச்சையை உபயோகப்படுத்தினார்கள்.
========================================
ஈ ) நல வாழ்வு பகுதியில்:-
1.வண்ணங்களும் எண்ணங்களும்:- சகோதர பச்சை நிறத்தின் நன்மை – தீமை பற்றி விளக்குகிறார் .. திருமதி.S.D.சாந்தா சிவம்.அவர்களின் வின் அஞ்சல் பதிவு.
பச்சை நிறத்தின் நன்மை
இந்த உடையணிந்தால் இருதய, நுரையீரல் சார்ந்த நோய்கள் குணமாகும். தலைவலி சம்பந்தமான கண் உபாதைகள் நீங்கும். கண்களுக்குப் பச்சை வர்ணம் குளிர்ச்சியைத் தந்து பல கண்நோய்களைக் குணப்படுத்தவல்லது. இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும். இரத்த அழுத்தக்காரர்கள் இதை உபயோகிப்பது நிறந்தது.
மேலும் உணவுகளால் ஏற்படும் ஒவ்வாமை (அலர்ஜி) போன்றவைகளைப் பச்சை நிறம் குறைக்கிறது. உணர்வு சம்பந்தமான வினைகளில், மோனோசோடியம் குளோமேட்டை குறைக்கிறது. யாரெல்லாம் உடலாலும், மனத்தாலும் களைப்படைந்துள்ளனரோ அவர்களுக்கெல்லாம் ஓய்வளிக்கும் மருந்துப் பொருளாக பச்சை நிறம் உள்ளது.
உங்கள் உடல் பிரயாணக் களைப்போ அல்லது வேலைக் களைப்போ இதில் எந்த பாதிப்பு அடைந்திருந்தாலும், நீங்கள் குளித்த பிறகு பச்சை வண்ண உடையணிந்தீர்களானால் உடலுக்குப் புத்துணர்வு கிடைக்கும். மனச்சோர்வாய் இருக்கிறது என்றால், வீட்டில் அன்று சுறுசுறுப்பாய் உற்சாகத்தோடு உங்கள் வேலைகளில் ஈடுபடலாம். முகம் புத்துணர்வுடன், களையாக தன்னம்பிக்கையுடன் ஒளிரும். தேஜஸ் தரும். தனி கவர்ச்சி கொடுக்கும்.
பல் முளைக்கும் பருவ வயதுள்ள குழந்தைகளுக்கு அமைதியைத் தருவதற்குப் பச்சை நிறம் பயன்படுகிறது. பொதுவாக பச்சை நிறமணிந்த நர்ஸ் – டாக்டர்களைப் பார்த்தாலே உடல் சமாதானமாகி மனம் சாந்தப்படும்.
மஞ்சள் கலந்த பச்சை நிறம் மனரீதியாக இரக்க சுபாவத்தையும், உடல்ரீதியாக கழிவுப் பொருட்களை வெளியேற்றவும் பயன்படுகிறது.
மேலும் ஆபரேஷன் தியேட்டர்களில் உடலை அறுத்து செய்யும் ஆபரேஷன், பின் தையலிடுவது போன்ற வேலைகளின் போதும், இரத்தம் கொட்டும் போதும் ஏற்படும் வலிகளின் உணர்ச்சிகளை குறைத்து இயல்பாக இயற்கையாக தணிக்கும் திறனை பச்சை நிறம் ஏற்படுத்துகிறது.
பச்சை நிறம் நீண்ட நேரம் பணிபுரியும்படி நம்முடைய செயல்திறனை அதிகரிக்கும். நாம் அதிக நேரம் வேலை செய்யும் ஆஃபீஸ் அல்லது அந்த அறையை பச்சை நிற சுவராக இருந்தால் நலம் அதிகம். நர்சுகள் இந்த உடையணிவதால் அவர்கள் நோயாளிகளிடம் கோப உணர்ச்சிகளையோ, பொறுமையில்லாத் தன்மையோ ஏற்படுத்தாமல் சகிப்புத்தன்மையை வளர்க்கும்.
பச்சை நிறத்தின் தீமை
பச்சை நிற விரும்பிகளுக்கு ஆஸ்துமா, மனக்களைப்பு, மூல வியாதி, உயர் இரத்த அழுத்தம், தூக்கமின்மை போன்ற வியாதிகள் வரலாம். நரம்பு சம்பந்தமான நோய்களும் ஏற்பட வாய்ப்புண்டு.

===========================================
2) பகுதி-4, HEPATITIS A,B,C -Virus and HEPATITIS inflammation-ஹெபடைடிஸ் ABCவைரல் என்று ஆங்கிலத்தில் அழைக்கும், கல்லீரலைத் தொற்றித் தாக்கும் நுண் கிருமியால் கல்லீரல் அழற்சி அல்லது கல்லீரல் வீக்கம் என்கிற நோயின் அறிகுறிகள் என்ன என்ன? அந்த நோய் ஏன் ஏற்ப்படுகிறது?

ஹெபடிடிஸ் வைரஸ் தாக்கும் அறிகுறிகள் :- குறுகிய நிலையில் - இந்த நோய்க் கிருமி தொற்றானது சில நேரங்களில் முதல் வாரங்களில் ஹெபடைடிஸ்-எ அல்லது பி அல்லது சி வகை தாக்கிய அறிகுறிகள் தென்படத் தொடங்கிவிடுகிறது, அதனால் பொதுவாக சோர்வு, குமட்டல், பசியின்மை, வயிற்றுப்போக்கு, ஒரு லேசான காய்ச்சல், மஞ்சள் தோல் நிறம் அல்லது கண்கள் (மஞ்சள் காமாலை) போன்ற நோய்கள் ஏற்ப்படும். ஹெபடைடிஸ் பி மற்றும் சி வைரஸ் கிருமி தொற்றானது பல நாள்பட்ட வியாதி உள்ளுக்குள் இருந்தும் வெளிப்படையாக எந்தவித நோய் அறிகுறிகளையும் தெரியப்படுத்தாமல் இருக்கும் அபாயக் கிருமி வகைகளும் உண்டு. ஆகவே இந்த வகை வைரஸ் தொற்றுக் கிருமிகளின் விளைவுகளை, பாதிக்கப்பட்ட கல்லீரலின் சேத அளவை கணக்கிடும் இரத்த பரிசோதனை முடிவில் மட்டுமே தெரிந்துகொள்ள முடியும்.
$.Hepatitis Symptoms :- Sometimes there are no symptoms of hepatitis in the first weeks after infection -- the acute phase. But when they happen, the symptoms of types A, B, and C may include fatigue, nausea, poor appetite, belly pain, a mild fever, or yellow skin or eyes (jaundice). When hepatitis B and C become chronic, they may cause no symptoms for years. By the time there are any warning signs, the liver may already be damaged. (பகுதி-4 தொடரும்)
============================================
உ ) சமையல் குறிப்புக்கள் / விருந்துக்கு வாங்க பகுதியில்:-

1. உங்களுக்கு தெரியுமா????
* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.
* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.
* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.
* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.
* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.
* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.
* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.
* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.
* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.
* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.
* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.
* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.
=============================================
ஊ ) பாட்டி சொல்லைத் தட்டாதே பகுதியில்:-
வழங்கியவர் திருமதி. ராகவன், வைஷாலி, காஜியாபாத்.
"உள்ஜுரம் ஜுரத்தா லெழும்பி
உதித் தெழும் பித்த தோஷம்"
என்று அகத்தியர் பெருமான் அகத்திய வர்ம காண்டத்தில் கூறியுள்ளார்.
இந்த பித்தமானது நஞ்சுபோல் உடலில் எங்கும் வியாபிக்கக்கூடிய தன்மையுள்ளது.
அதோடு மட்டுமல்லாமல், நவீன உலகத்தில் உணவுப் பழக்கங்களாலும், மிதமிஞ்சிய உணவுகளாலும், பாமாயில் கலக்கப்பட்ட எண்ணெய்களாலும் ஒருதடவை சமைத்த உணவை குளிர்சாதன பெட்டியில் வைத்து தேவைப்படும்போது மாறி மாறி சூடுபண்ணி பல நாட்கள் சாப்பிடுவதாலும், உண்ட உணவானது உடலில் புளிப்புத் தன்மையை உண்டாக்கி செரியாமை ஏற்பட்டு குடலின் பித்தமானது சளியோடு கலந்து ரத்தத்தில் சேர்ந்துவிடுகிறது. இப்படிப்பட்ட உணவுப் பழக்கங்களால், மஞ்சள்காமாலை நோய்த்தொற்று ஏற்படுகிறது.
மேலும், தலையில் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை மறந்ததாலும் நரம்புகள் சூடாகி பித்தம் அதிகரித்து மஞ்சள் காமாலை நோய் உண்டாகிறது.
பித்தமானது அலர்ஜியாகும்போது காமாலை நோய்க் கிருமி தோன்றி, முதலில் கல்லீரலைப் பாதித்து, கண்களில் மஞ்சள் நிறம் தோற்று விக்கிறது. சிறுநீர் மஞ்சளாக வெளியேறுகிறது.
பொதுவாக மஞ்சள்காமாலைக்கு பித்தம் அதிகரிப்புதான் முக்கிய காரணமாகிறது.
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிறுநீர், மலம் கழித்த இடத்தை மற்றவர்கள் பயன்படுத்தினால் அவர்களையும் நோய்த் தொற்ற வாய்ப்புண்டு. ஆகையால், பாடசாலை முதல், கல்லூரி வரை ஏதேனும் ஒரு மாணவருக்கு மஞ்சள்காமாலை நோய் இருந்தால் அது மற்றவர்களுக்கு எளிதில் பரவி விடுகிறது.
பொதுவாக இப்படிப்பட்ட பித்த அலர்ஜியால் உண்டாகும் மஞ்சள் காமாலைக்கு நாட்டு மருத்துவத்தில் கீழாநெல்லி என்ற மூலிகையை அதிகம் பயன்படுத்துவார்கள்.
கீழாநெல்லி - ஒரு கைப்பிடி
சீரகம் - 1 ஸ்பூன்
இரண்டையும் நீர்விட்டு அரைத்து கஷாயம் செய்து காலை, மாலை இருவேளையும் கொடுத்து வந்தால் பித்தம் தணிந்து, காமாலை நோய்த்தொற்று கிருமிகள் அழியும்.
கீழாநெல்லி, சுக்கு, மிளகு, சீரகம், சோம்பு, மஞ்சள் இவற்றை சம அளவு எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து, சர்க்கரை கலந்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை அருந்தி வந்தால் மெல்ல மெல்ல முழுமையாக குணமடையலாம்.
கீழாநெல்லி, சீரகம், பூவரச பழுத்த இலை, கரிசலாங்கண்ணி (வயல் வெளியில் வெள்ளைப்பூக்கள் நிறைந்து காதில் அணியும் கம்மல் போன்று இருக்கும்) இவை அனைத்தும் 3 கிராம் அளவிற்கு எடுத்துக் கசாயம் செய்து காலை, மாலை வேளைகளில் சாப்பிடும் முன் அருந்தினால் காமாலை நோய் குணமாகும்.

$ இப்படிக்கு வைஷாலி வாசக வட்ட மாமீஸ் குழுவினர் ??????

5. கைத்தொழில் பகுதியில் இந்தமாதம், வழங்கியவர்:- புது தில்லி திருமதி விசாலம் மாமி அவர்கள்.
"கைத்தொழில்-கற்றுக்கொள்ள வாருங்கள்"- பயிற்சி வகுப்பில் இந்தமாதம்-நவராத்திரி கொலு பிசினஸ் செய்யலாம் வாங்க:-
6. சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்"..... "ரக்ஷா பந்தன் - சகோதர சகோதரி வாழ்த்துக்கள்" படத்தில் உள்ள 6 வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்- ஆகஸ்ட்-2016- ஆவணி -சகோதர, சகோதரிகள் மாத, வலைப்பதிவு இதழ் போட்டி என்-05.
சரியான விடை அடுத்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" வலைப்பதிவர் இதழில் வெளியாகும். போட்டியில் பங்குகொள்ள விருப்பமுடையவர்கள் விடைகளை "vaishalireaderscircle@gmail.com" என்கிற மினஞ்சல் முகவரிக்கு 10-09-2016 முன்பாக அனுப்பிவைக்கவேண்டும். சரியான விடைஎழுதிய அனைவருக்கும் அடுத்தமாத வாசகர் வட்ட சந்திப்பில் பரிசுகள் வழங்கப்படும்.
6/ஆறு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடை:- சரியான விடையை 71 நபர்கள் குறிப்பிட்டிருந்தனர். சென்ற மாத "சுட்டீஸ் குல்கந்து" வலைப்பதிவர் இதழ்-4 ஆடி -மாத இதழின் (குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேட்குதா?) 6-ஆறு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடை, 1)தலையில் இரண்டு மயிலிறகு 2)புல்லாங்குழல் பாட்டுக்கயிறு 3) பூ மாலை 4) பசுங்கன்று கழுத்தில் மணி 5)பசுங்கன்றின் தலை நெற்றிப்பொட்டு 6)பசுங்கன்றின் வால்.
சரியான விடையை 71 நபர்கள் குறிப்பிட்டிருந்தனர், தமிழில் விடை எழுதியவர்கள்=31, ஆங்கிலத்தமிழில் எழுதியவர்கள்=17, ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=20, ஹிந்தி மொழியில்=02 நபர்களும், தெலுங்கு மொழியில்=01 நபரும், மேலும் சிலர் ஆறுக்கும் அதிகமான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.
==========================================
# கண்ணா, நாலு பேருக்கு உன்னை பிடிச்சுப் போனா, நீ பிரபலம்... பிடிக்காம போனா நீதான் பிராப்ளம்....
# கண்ணா... பணம், புகழ் எல்லோருக்கும் வரும். படுத்தவுடன் உறக்கம் வருமா? இது எப்படி இருக்கு?
# கண்ணா... பணம், புகழ் எல்லோருக்கும் வரும். படுத்தவுடன் உறக்கம் வருமா? இது எப்படி இருக்கு?
================================
8. சொர்கமே என்றாலும் நம்ம ஊரைப் போலவருமா?:- பயனுள்ள தமிழ் வலைப்பதிவர் பக்கங்களில் இந்தமாதம் பகுதி:
$ திரு சுரேஷ் அவர்கள் "தளிர்" http://thalirssb.blogspot.com/ (thalir.ssb@gmail.com) என்கிற வலைப் "பூ" பக்கத்தில் சிறுவர் பகுதியை மிகவும் அருமையான வகையில் பல படக் கதைகளை பதிவு செய்து வருகிறார். சிறு கதைகளில் விருப்பமுடைய அனைவருக்கும் மிகவும் பயனுள்ள வலைப்பதிவுப் பக்கமாக திரு சுரேஷ் அவர்களின் வலைப்பதிவு திகழ்கிறது. அவருக்கு நமது நன்றிகளை தெரிவித்துக்கொண்டு, நமது (NCR-புது தில்லி) வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ்களுக்கு பயனுள்ள வலைப்பதிவு பக்கமாக மேற்கண்ட அவரது வலைப்பதிவுகளை முன்மொழிவதில் மகிழிச்சியடைகிறோம்.
==============================
9. கருத்து சொல்லப்போறேன்:- (A.K.சபரிஷ்)
$ பணத்தை இழந்தால் சொற்ப நஷ்டம் ஆனால் நேரத்தை இழந்தால் எல்லாமே நஷ்டம்.
$ அறிவு மனம் இவ்விரண்டில் எதை பின்பற்றுவது என்கிற போராட்டம் எழும்போது உங்கள் உள்ளம் சொல்வதைக் கேளுங்கள்
10. விடுகதைகள் :- (A.K.சபரிஷ்)
# கருப்பன் தண்ணீரில் குளித்து வெள்ளையனாவான், வெள்ளையன் பிறகு விருந்தாவான் – அவன் யார்? (உளுத்தம் பருப்பு)
# அகத்தின் நோய்கள் நகத்தில் தெரியும் அது என்ன? (அழுக்கு)..
11. கவிதை:-
நட்சத்திர விடுதிக்கு
போகும் வழியெங்கும்
நட்சத்திரம்....
மின்னிக்கொண்டிருந்தது...(S.ஸ்ரீ சக்ரி)
================================
வெப்ப நகரம்
கண்ணாடி மாளிகையின்
கண்ணீரால்
குளிர்ந்தது.....
எதோ ஒரு சில
மரங்களின்
புண்ணியத்தால்... ( AK.பவித்ரா)
=================================
12. நமது வாசகர் வட்டத்தின் இந்த மாத சரித்திரம் முக்கியம் பகுதியில்,
இந்த ஆண்டு ரக்ஷா பந்தன் தினம் அன்று அனைவரும் தங்கள் சகோதரிகளுக்கு கொடுக்கும் சிறந்த ராக்கி பரிசு, இப்போது அறிவிக்கப்பட்டுள்ள பிரதமரின் ஆயுள் காப்பீடு மற்றும் விபத்து காப்பீட்டு திட்டங்களில் அவர்களை சேர்ப்பதுதான் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ராக்கி சகோதரிகள் பட்டியலில் வீடுகளில், வயல்களில் வேலைபார்க்கும் பெண்களையும் சேர்த்துக்கொள்ள கூறியிருக்கிறார். நாட்டில் உள்ள அனைத்து சகோதரிகளும் இந்த திட்டத்தின் பயனை பெறும்வகையில் இதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றவேண்டும் என்றும் கேட்டு இருக்கிறார். ஒரு சகோதரி அதாவது, மம்தா பானர்ஜி முதல்–மந்திரியாக இருக்கும் மேற்குவங்காளத்தில்தான், பிரதமர் மோடி சில மாதங்களுக்கு முன்பு ஆண்டுக்கு 12 ரூபாய் மட்டும் பிரிமியம் கட்டி ரூ.2 லட்சம் பெறும் விபத்து காப்பீடு, ஆண்டு பிரிமியம் ரூ.330 ரூபாயில் ஆயுள் காப்பீடு ஆகிய திட்டங்களை அறிமுகப்படுத்தினார். இந்த ரக்ஷா பந்தன் அன்று சகோதரிகளுக்கு ராக்கி பரிசாக இந்த திட்டங்களில் அவர்களைச் சேர்த்துவிடுங்கள் என்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும். வேறு இனிப்புகளோ, மலர்களோ கொடுத்தால் அந்த ஒரு நாள்தான் பலனளிக்கும். அதற்கு பதிலாக, இந்த திட்டங்களில் சேர்த்துவிடுவது ஒரு சமூக பாதுகாப்பை அளிக்கும். வடஇந்தியாவில் மட்டுமல்லாமல், சகோதர பாசத்தை மென்மேலும் வளர்க்கும் இந்த ராக்கி கயிறு கட்டும் நாள், இப்போது தென்இந்தியாவிலும் உள்ளே நுழைந்துவிட்டது. சகோதரிகள் தங்கள் சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டினாலும், கட்டாவிட்டாலும் சகோதரர்கள் அளிக்கும் அன்பு பரிசாக பிரதமர் கூறியபடி, இந்த திட்டங்களையே சகோதரிகளுக்கு அளிக்கலாமே! .. நன்றி தினத்தந்தி.
=============================================
வழங்கியவர் திரு. ஹரிஹரன் (டாபர் ஹரி )
=================================
14.பயனுள்ள முகநூல் பக்கங்களில் இந்தமாதம் பகுதி:-
14.பயனுள்ள முகநூல் பக்கங்களில் இந்தமாதம் பகுதி:-
1. https://www.facebook.com/ A9RADIO/app/402411266453495/?_ _mref=message_bubble
முகநூளில் தமிழ் வானொலியில் பாடலைக் கேட்டுக்கொண்டு முகநூளில் உலவலாம். ..விருப் பமுடையவர்கள் இந்த முகநூல் பக்கத்தில் இணைந்து பயன்பெறலாம்.) நன்றிகளுடன் AK.பவித்ரா.
முகநூளில் தமிழ் வானொலியில் பாடலைக் கேட்டுக்கொண்டு முகநூளில் உலவலாம். ..விருப்
==============================================
பகுதி II -கால்வண்ணம் :- (நடனம், நாடகம், விளையாட்டு போட்டிகள்) :-
21-08-2016 அன்று நமது 30-வது வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் பற்றிய குறிப்புகளும் புகைப்படங்களும்
15. வாசகர் வட்ட நிகழ்ச்சியின் சிறப்பு புகைப்படங்கள் :-
வாசகர் வட்ட நிகழ்ச்சியின் போட்டியில் பங்குபெற்றவர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
வாசகர் வட்ட நிகழ்ச்சியின் போட்டியில் பங்குபெற்றவர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களுக்கு:- நாங்கள் தொகுத்து வழங்கிய பதிவுகளில் உள்ள குறை நிறைகளை வாசகர்கள், அன்பான முறையில் எங்களுக்கு எடுத்துக்கூறி, எங்களது பதிவுகள் மேலும் சிறப்படைய வாழ்த்தி உற்சாகப்படுத்துமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ் தமிழ் ரோஜாக்கள்.
நன்றி... மீண்டும் அடுத்தமாத இதழில் சந்திப்போம்... வணக்கம்.