"தமிழ் ரோஜாக்களின் குல்கந்து"

"தமிழ் ரோஜாக்களின் குல்கந்து"

Sunday, January 15, 2017

வைஷாலி வாசகர் வட்ட "சுட்டீஸ்-குல்கந்து" இதழ்=10 தை மாதம்-தேதி 15-01-2017.

"எழுத்துக்களிடம் எனக்குப்  பிடித்ததே, அவை நம் கண்ணைப் பார்த்து மட்டும் தான் பேசும்" என்கிறார்கள்  "சுட்டீஸ்-குல்கந்து" தை மாத வலைப்பதிவர் பூவிதழ்-10" நாள்/தேதி:- ஆங்கில மாதத்தின் 3-வது ஞாயிறு 15-01-2017.


கற்க கசடற….!!                               !வாய்மையே வெல்லும்!!

 “வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம்
160/Sector-4, Vaishali, Ghaziabad, NCR-New Delhi.-201012
e-mail:  vaishalireaderscircle@gmail.com
___________________________________________________________________
சுட்டீஸ் இதழ்=10 தை மாதம்-தேதி 15-01-2017. வணக்கம், தாங்களின் வருகைக்கு நன்றி, இந்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழில்" - தை மாத வலைப்பதிவு:- இந்த இதழின் ஆசிரியராக, தொகுத்து வழங்குபவர்:-(Editor of the Page) செல்வி  R. லாவண்யா,  வைஷாலி , NCR-NEW DELHI.

வைஷாலி வாசகர் வட்ட 35வது சந்திப்பு...15-01-2017 தை மாதம்:- நன்றி கூறும் மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும்.

வைஷாலி வாசகர் வட்டத்தின் 35வது வாசகர் வட்ட சந்திப்பிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி கூறி வைஷாலி வாசகர் வட்டத்தின் நிகழ்ச்சி 15-01-2017 தேதி, 3-வது ஞயிறு அன்று, நன்றி கூறும் திருவிழாவாக தைப்பொங்கல்  அமைந்ததால், அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு, நன்றி கூறும் தை மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும், சிறப்பாக நடந்தேறியது.
வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :- 
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து, 
தொடர்ந்து  எங்க வீட்டு "நூலகம் " 
படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும் 
(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம்)
தொடர்ந்து ......

"இந்த மாத தலைப்பைச் சார்ந்த" நன்றி கூறும் தை மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும், போட்டிகளும் பரிசுகளும்.. என நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறியது. முழு விவரங்கள் வைஷாலி வாசகர் வட்ட வலைப்பதிவில் காண்க "http://vaishalireaderscircle.blogspot.in"

மாலை  6.00 மணிக்கு கிழக்கு புது தில்லியின் -வைஷாலி-மெட்ரோ இரயில் நிலையத்தின் எதிரில் அமைந்த ஸ்ரீ ராதா கிருஷ்ணன் கோவிலில் நடைபெறும்   நமது வைஷாலி ஐயப்ப சேவா சங்கத்தின் 17வது ஸ்ரீ ஐயப்ப மகரஜோதி பூஜை மற்றும் அன்னதான நிகழ்ச்சியில் தாங்களும், தங்களின் உற்றார் உறவினர்கள் மற்றும் நபர்களுடன் திரளாக கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி பகவான் ஸ்ரீ ஐயப்ப சுவாமி அருளை பெறுமாறு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.... 
இடம்:- NCR-New Delhi "வைஷாலி மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகில், வைஷாலி செக்டர்-4,  ஸ்ரீ கிருஷ்ணா பவனில் அமைந்துள்ள  "ஸ்ரீ ராதா கிருஷ்ணன் கோவிலில்" 


நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்ட உறுப்பினர்கள்....

அடுத்து வரும் பிப்ரவரி-2017, 19-02-2017 மாசி-மாத வலைப்பதிவு இதழின் ஆசிரியராக, (Editor of the page) இந்த வலைப்பக்கத்தை தொகுத்து வழங்க ஆவலுடன் காத்திருப்பவர் யார்? விருப்பம் உள்ளவர்  உங்கள் விருப்பத்தை உடனே தெரியப்படுத்துங்கள். மின் அஞ்சல் "vaishalireaderscircle@gmail.com"

15-10-2017 இன்று நமது 35-வது வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில்:- ,  
தொடர்ந்து அன்றய நிகழ்ச்சியில் உதவிய அனைவரையும் பாராட்டி, நிகழ்ச்சி இனிதாக நிறைவுபெற்றது.
      

மேலும் இந்த மாத சுட்டீஸ்களின் ஏராளமான செய்திகளை மிகவும் பயனுள்ள வகையில் நமது வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ் "குல்கந்து" குழுவினர்கள் தொகுத்து தந்திருக்கிறார்கள்....



அவர்கள் தொகுத்துத் தந்த பல செய்திகளை ஒன்று சேர்த்து, அனைத்தையும் அழகாக கோர்த்து, ஒரு கதம்ப மாலையாக தொடுத்து தந்திருக்கிறார்கள். இந்த மாத வலைப்பதிவு இதழின் அனைத்து விவரங்களும்  உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம்.... இப்படிக்கு வாசகர் வட்ட  சுட்டீஸ் "குல்கந்து" ரோஜாக்கள். 

$நமது வைஷாலி வாசகர் வட்டத்தின் அனைவரையும் வாழ்த்தி வழிநடத்திச்செல்லும் தலைமை உறுப்பினர்  திரு முத்து கிருஷ்ணன் அவர்களின் ஆன்மீகத் தொடர்-06

அன்பான சுட்டீஸ்!... எப்படி இருக்கீங்க? 
​"நன்றி மறவாதிருத்தல் வேண்டும்"-- முத்து ஐயர்

"என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை 
செய்நன்றி கொன்ற மகற்கு"  

என்று திருவள்ளுவர் சொல்கிறார். அப்படின்னா நீங்கள் யாருக்காவது உதவி செய்தால் அதை மறந்து விடலாம். ஆனால், ஒருவர் நமக்கு ஏதேனும் ஒரு சிறு உதவி செய்திருந்தாலும் அவரை என்றும் நாம் மறக்கவே கூடாது என்கிறார் குறுமுனி, தெய்வப் புலவர் திருவள்ளுவர்.  

கடமை என்பது வேறு, உதவி என்பது வேறு. ஆனால், இரண்டுமே நன்றி செலுத்த உகந்தவை.  நம்ம அம்மா, அப்பா நம்மை வளர்க்க எவ்வளவு பாடு படறாங்க. அல்லும், பகலும் உழைத்து, தனக்கென்று எதுவும் தனியாக வைத்துக் கொள்ளாமல் எல்லாவற்றையும், நம் எதிர்காலம் நன்றாயிருக்கவேண்டும் என்ற தியாக உணர்வோடு நம்மை நன்றாக படிக்க வைக்கிறார்கள், நல்ல வேலையில் சேரும் வகையில் உரிய, சிறந்த கல்விகற்க உதவுகிறார்கள். ஆனால், இதெல்லாம் அவர்களது கடமைதான். இருந்தாலும், இந்தச் சிறந்த தியாக உணர்வுக்கு அவர்களது முதுமையடைந்த காலத்தில் அவர்களை நம்முடனேயே வீட்டில் வைத்துக்கொண்டு கண்கலங்காமல் அவர்களைப் பராமரிக்க வேண்டியது நம் கடமை மட்டுமல்ல, நமது நன்றிக்கடனுமாகும்.  

அதுபோல், ஒரு நண்பன் நாம் துன்பப்படும்போது அவனாலான உதவிகளைச் செய்து நம்மை அத் துன்பத்திலிருந்து மீட்கிறானே அவனுக்கும் நாம் வாழ்நாள் பூராவும் நன்றிக்கடன் பட்டிருக்க வேண்டும்.  

ஆனால், இவ்விரண்டில் எதுவானாலும், நம் பெற்றோர்களும் சரி, நண்பனும் சரி, அவர்கள் நம்மிடம் எதையும் எதிர்பார்த்துச் செய்வதில்லை. அப்படி இருப்பினும் நாம் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்ற உணர்வு எப்போதும் நம் மனதில் இருக்கவேண்டும், அதுதவிர அவர்களுக்கு வேண்டிய நேரத்தில் நாம் பிரதிஉபகாரமாக நம் நன்றிக்கடனைச் செலுத்திவிட வேண்டும். இதுதான் நல்ல பண்பாட்டுக்கு அடையாளம். இவர்கள் எதையும் எதிர்பார்த்து நமக்கு உதவுவதில்லை என்று சொன்னேனே, அதற்கேற்ப ஔவைப்பாட்டி நமக்குத் தந்த ஒரு பாடலை இங்கு நினைவு கூறுவோம்: 

"நன்றி ஒருவருக்குச் செய்தக்கால் அன்நன்றி என்று தருங்கொல் எனவேண்டா - தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தான் தருதலால்," 

அதாவது நாம் ஒருவருக்கு எப்போதாவது ஒரு உதவி செய்திருந்தால், அதற்கு நமக்கு எப்போது பிரதிபலனாக ஏதாவது கிடைக்காதா என்று நாம் என்றும் நினைக்கக் கூடாது. இதற்கு உதாரணம், தென்னை மரம் (தெங்கு). ஒரு தென்னங்கன்றை நட்டு, அதற்கு வேரில் (தாளுண்ட நீரை) தண்ணீர் விட்டு வளர்ப்போம். அந்தத் தென்னை மரம் பெரியதாய் நீண்டு வளர்ந்தபின் (தலையாலே) அதன் உச்சியில் குலை,குலையாய் தேங்காயை சுவையுடன் கூடிய இளநீருடன் நமக்கு ஒரு காலத்தில் தரும். அதை நாமோ அல்லது நம் பிள்ளைகளோ அதை அனுபவித்துச் சுவைப்பார்கள். என்வே, பலனை எதிர் பார்த்து ஒன்றைச் செய்யாதே என்று பகவத் கீதையில் கண்ணனும் சொல்லியிருக்கிறார். 

அந்தக் காலத்தில் தெய்வ நம்பிக்கை மக்களிடையே மிகுந்திருந்தது. ஆகையால், எந்த ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டுமென்றாலும அல்லது நல்லக் கருத்தைச் சொன்னாலும் அதை தெய்வத்தோடு இணைத்துக் கூறினால் மக்கள் பயபக்தியுடன் செய்வார்கள் என்ற நம்பிக்கையில் இதை ஆதாரமாகக் கொண்டு பல பண்டிகைகள், திருவிழாக்களை நம் முன்னோர்கள் நமக்கு வகுத்தளித்துள்ளனர். அதையும் தகுந்த காலத்தில் முறைப்படிச் செய்ய வேண்டும் என்று சிறந்த நாளில் அந்தப் பண்டிகைகளை நமக்கு உருவாக்கித்தந்துவிட்டுப் போயினர். அவற்றில் ஒன்றுதான் இந்தப் பொங்கல் பண்டிகையும். 

பொங்கல் பண்டிகை எப்போது வருகிறது. தமிழ் மாதமாகிய தைத் திங்கள் முதல் நாள் வருகிறது. அது ஏன் தைமாதம் முதல்மாதம் என்று கணக்கெடுத்தனர் நம் முன்னோர்கள்?  ஆடிப் பட்டம் தேடி விதை என்று ஒரு பழமொழியுண்டு. ஆடி மாதம் முதல் நாளும் சூரிய வழிபாடு உண்டு. காரணம் ஆடியில் குறுவை சாகுபடி செய்வார்கள் அப்போது மேட்டூர் அணை நீர் திறப்பும் இருக்கும். அது கூடவே சம்பா நாற்றையும் விதைத்து விடுவார்கள். புரட்டாசி இறுதியில் குறுவை அறுப்பு நடந்து ஐப்பசி மாதவாக்கில் சம்பா சாகுபடியாகும். இப்படி விளைவித்த புத் நெல்லின் அரிசி மார்கழி இறுதியில் கிடைக்கப்பெற்று அந்த புது அரிசியில் பொங்கல் வைத்து இறைவனுக்குப் படைத்துப் பின் அந்த அரிசியை நாம் உபையோகிப்போம்.  

தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகை. ஆனால். அதற்கு முதல் நாள் பழையனவற்றையெல்லாம் களைந்துவிட்டு, வீட்டுச்சுவர்களுக்கு வெள்ளையடித்து போகிப் பண்டிகை கொண்டாடுவோம். பொங்கலுக்கு அடுத்த நாள் நிறைவு நாள். அன்று காளை விளையாட்டு அல்லது மஞ்சு விரட்டு போன்ற வீர விளையாட்டுகள் நடைபெறும். கன்னியர்களும், கும்மி, கோலாட்டம் ஆடுவர். 

பொங்கல் பண்டிகையில் திறந்த வெளியில் அடுப்புவைத்து, சூரிய பகவானை பூஜித்து பொங்கல் வைப்பது வழக்கம். சூரியன் இல்லையென்றால் இப்புவியில் எதுவுமே உயிர்வாழ இயலாது. கிரஹணத்தின்போது சூரியனை மற்றொரு கிரகம் மறைக்கும்போது சிலமணி நேரங்கள் பூமியில் சூரிய ஒளி இல்லாமல் போய்விடும். அப்போது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். அதாவது அந்த வேளையில் யாரும் எதையும் சாப்பிடக்கூடாது, கர்ப்பிணிப் பெண்கள் வீட்டுக்கு வெளியே செல்லக்கூடாது என்று பல உண்டு. இதற்குக் காரணம், சூரிய ஒளி பூமியில் படும்போது கிருமிகள் அதன் வெப்பம் தாங்க இயலாமல் இறந்துவிடும். இதில் விஷக் கிருமிகளுமுண்டு. ஆனால், கிரஹண வேளையில் இந்த விஷக் கிருமிகள் நாம் சாப்பிடும் உணவில் கலந்தால் தீராத வியாதிகளை ஏற்படுத்தும். நாம்கூட சித்திரைமாத வெய்யிலில் வெகுதூரம் நடந்தால் களைத்து விடுகிறோம். காரணம் நம் உடலினுள்ளிருக்கும் பல நல்ல கிருமிகளும் அந்த வெப்பத்தால் பாதிக்கப் படுவதால் நாம் களைத்து விடுகிறோம்.  

ஆக இந்த சூரிய வெப்பம் விஷக் கிருமிகளைக் கொன்று நமக்கு நன்மை பயக்கிறது, கடல் நீரை ஆவியாக்கி உரிய காலத்தில் பருவமழை தருகிறது. இப்படி மனிதர்களாகிய நமக்கு பல நன்மை செய்யும் அந்தச் சூரியனுக்கு நாம் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். அந்த நன்றியைத் தெரிவிக்கும் விதத்தில், சூரியனையும், உழவுக்கு ஊன்றுகோலாயிருக்கும் ஏர்கலப்பையையும் வணங்குகிறோம். வயலில் உழுவதற்கு காளைமாடுகள் உதவுகின்றன. அதற்கு நன்றிகூறும் வகையில் மாட்டுப் பொங்கலையும், வயலில் வேலை செய்யும் உழவர்களுக்கு உச்சி வேளையில் எடுக்கும் பசி தீர்க்க கஞ்சிக் கலையம் (கஞ்சிதான் உணவு) சுமந்துவரும் கன்னியர்களுக்கு நன்றி சொல்லும் விதத்தில் கன்னிப் பெண்களை உற்சாகப்படுத்தும் கன்னிப் பொங்கல். எனவே நன்றி நவிலும் பண்டிகைதான் பொங்கல் பண்டிகை என்று இப்போது விளங்குகிறதா? 

இந்தப் பண்டிகைமட்டுமல்ல நாம் என்றென்றும் நம்மை இப்பூமியில் ஆறறிவு படைத்த மனிதர்களாய் உருவாக்கி, அதுமட்டுமல்லாமல் எவ்வளவோ இயற்கை வளங்களையும் நமக்குதவும் வகையில் நமக்களித்த அந்த இறைவனை ஒவ்வொரு நாளும் கோவிலில் சென்று வழிபடுவதும் நாம் செலுத்தும் நன்றிக் கடனே. இதனால்தால் ஆன்றோர்கள் நமக்காக ஒரு பழமொழியை உருவாக்கினார்கள். அது, "கோயில்லா ஊர் குடி பாழ்" அதாவது, எந்த ஊரில் ஒரு கோயில்கூட இல்லையோ அந்த ஊரில் குடியிருப்பவர்கள் ஏதாவது ஒரு துன்பத்தில் உழல்வார்கள் என்பது திண்ணம்.  

நன்றி நவிலும் பண்டிகையில் பொங்கல் மட்டுமின்றி, புரட்டாசி மாதத்தில் நவராத்திரியின் கடைசி நாளில் "ஆயுத பூஜை" அல்லது "வித்யாரம்பம்" என்றொரு பண்டிகையுமுண்டு. அதில் நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படும் ஆயுதங்கள், அவரவர் தொழில் சார்ந்த ஆயுதங்கள், அந்தணர்கள் வேதம் பயில்வதால் வேத நூல்கள் (இப்போது பள்ளிப் புத்தகங்களைத்தான்) வைப்பார்கள். இவற்றையெல்லாம் நம்மைவாழவைக்கும் பொருளாகையால் அவற்றிற்கெல்லாம் நன்றிசொல்லும் விதத்தில் அமைந்தது இந்த "ஆயுத பூஜை". இது தவிர வடமாநிலங்கள் சிலவற்றில் "விஷ்வகர்மா பூஜை" என்று தங்கள் தொழில் சார்ந்த ஆயுதங்களை வைத்து வழிபடும் வழக்கமுமுண்டு. மற்றும், பங்குனி,சித்திரையில் நமக்கு எல்லா விதத்திலும் பயன்படும் நீர் மையப்படுத்தப்பட்டு தென்னாட்டில் "மஞ்சள் நீர் விளையாட்டு​" என்றும் வடமாகாணங்களில் "ஹோலிப் பண்டிகை" என்றும் நீருக்கு நன்றிகூறும் பண்டிகையாக அமைந்துள்ளது. கார்த்திகை மாதத்தில் "சொக்கப்பானை" என்று பனை ஓலைகளை அடுக்கிவைத்துக் எறிப்பார்கள். இது அக்னி வழிபாடு அல்லது பஞ்சபூதங்களில் மற்றுமொன்றான நெருப்புக்கு நன்றிகூறும் விழா. இதேபோல் "காம தகனம்" என்று தென்னாட்டிலும் "மகர சங்கராந்தி" என்று பழைய மரசாமான்களைப் போட்டு எறிப்பது வழக்கம். இதுவும் அக்னிக்கு நன்றிகூறும் பண்டிகை. அரச மரம், வேப்ப மரங்களை இன்னும் பல மரங்களை ஒவ்வொரு கோயிலிலும் "ஸ்தல விருக்ஷம்" என்று கூறி இறைவன் நமக்களித்த இயற்கைக்கு நன்றிகூறும் வகையில் இவை அமைந்துள்ளது."

சரி சுட்டீஸ் இந்தமுறை ரொம்ப நீள் பதிவாகிவிட்டது. நிதானமாகப் படித்துப் பயன்பெருங்கள். மீண்டும் அடுத்த இதழில் சந்திப்போம்!​

நன்றி! சுட்டீஸ், மீண்டும் சந்திப்போம்.
...............முத்து ஐயர்..........
வைஷாலி வாசகர் வட்டம்..
=================================================
I. முதலில் குட்டி கல்கண்டு தகவல்கள்:-  தை மாதம்:- நன்றி கூறும் மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும். என்கிற தலைப்பில் தகவல்களை  ஒன்றுதிரட்டி..

"தை பிறந்தால் வழி பிறக்கும்" அதாவது ...நீண்ட இரவுநேரமுடைய (6 மாத) தக்ஷிணாயன காலம் முடிந்து அதிக பகல் பொழுதுடன் கூடிய (6மாத) உத்தராயன காலம் துவங்குகிற தை மாதப் பிறப்பான "பொங்கல் பண்டிகை" அன்றைய தினத்தை, உத்தராயன புண்ய காலம் துவங்கியது என்பார்கள். அதாவது ஊழியத்தையும் உற்பத்தியையும் பெருக்க அதிக பகல் நேரம் கிடைக்கும் இந்த 6 மாத உத்தராயன காலம், சிறப்பான காலங்கள் அதை பயன்படுத்திக்கொள்ள "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்றார்கள். தை மாத பிறப்பன்று சூரியன், தனுர் ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்வதால், அந்த நாளை 'மகர சங்கராந்தி’ என்றும் போற்றுவார்கள். இந்தப் பூவுலகம் சிறப்புற இயங்கத் தேவையான ஒளியையும், அதன் மூலம் சக்தியையும் அளிக்கும் ஸ்ரீசூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடுவதே தைத் திருநாளின் நோக்கம்! இந்த நாளை, பொங்கல் படையலிட்டு சூரிய பூஜை செய்வது மிகவும் விசேஷம்.


நாம் உதவி பெற்றதற்கு நன்றி செலுத்துவது ஒரு சிறந்த கடமை. (முகநூளில் ரசித்த பகுதிக்கு ஒரு "LIKE-லைக்" போட்டு விருப்பம் தெரிவிப்பது போல)..... ஒரு சிறு புல்லைக் கூட சிருஷ்டிக்கத் திறனற்ற மனிதனுக்கு, இத்தனை உணவும், உடையும் மற்ற உபகரணங்களும் வழங்கும் ஆண்டவனுக்கு நன்றி காட்டுவது நமது கடமை. இவ்வாறு நன்றி கூறும் அடையாளமாகவே, நாம் உண்பதற்குமுன் இப்படிப்பட்ட வாய்ப்பை நமக்களித்த இறைவனுக்கு முன் காட்டி நிவேதனம் செய்துவிட்டு, நன்றி கூறி  பிறகு நாம் தான் உண்ணப் போகிறோம். அதைப்போலத்தான்  நாம் தைப்பொங்கல் நாளன்று இயற்க்கை நமக்களித்த விளைபொருட்களுக்கு நன்றி கூறும் திருவிழாவாக அன்றய நிகழ்ச்சிகளும் கொண்டாட்டங்களும் அமைந்துள்ளது. 

போகிக் பண்டிகை, தைப்பொங்கல், மாட்டு பொங்கல், (கணுப்பொங்கல் என்னும் கன்னி பெண் பொங்கல்), அதைத் தொடர்ந்து காணும் பொங்கல் என்று ஒன்று அனைவரோடு சேர்ந்து நலம் விசாரித்து ஒன்றுகூடி மகிழும் திருவிழா மற்றும்  ஜல்லிக்கட்டு என்ற பல வித அம்சங்களை உள்ளடக்கிய திருநாள்தான் தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டை உணர்த்தி நிற்கும் பெருநாளாக தைப்பொங்கல் தினம் விளங்குகின்றது.

தைப்பொங்கல் தினத்திற்கு முந்திய நாள் போகி பண்டிகை அன்று பழையவைகளை புறம்தள்ளி, எரித்து விடும் பழக்கம் தமிழர்களுக்கு உண்டு. ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ தமிழர்களின் முதுமொழிகளில் ஒன்று. காலத்தே உதவாத, பயன்படாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதையில் நடைபோடாத எதையும் தவிர்த்து, காலத்தே மேம்படுத்திக் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் பழையதோடு புதியவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் இம்முதுமொழியை நினைவில் கொள்ளும் நேரமிது.

பொங்கல் பண்டிகையின் முதல் நாளான போகி பண்டிகை நாள் அன்று நாம் அதைத்தான் செய்ய முற்படுகிறோம். துரதிருஷ்டவசமாக அது ‘வெறும் பொருட்களை எரிப்பதோடு’ மட்டும் நின்றுவிடுகிறது. எண்ணத்தில், செயலில், நடத்தையில், வாழ்வில் அதைச் செய்ய வேண்டும் என்பதும் அம்முதுமொழி உணர்த்தும் செய்தி என்பதை பெரும்பாலும் நாம் சவுகரியமாக மறந்துவிடுகிறோம்.  
தைப்பொங்கலுக்கு அடுத்தநாள், மாட்டுப்பொங்கல் பொங்கல் என்று உழவர்கள் கொண்டாடுகின்றனர். தமது உழவு தொழிலுக்கு உதவிய மாடுகளுக்கு நன்றி கூறிடும், அவைகளுக்கு பொங்கலிடும் நாளாக மாட்டுப் பொங்கல் விளங்குகின்றது.

அதற்கு அடுத்து வரும் மூன்று தினங்கள் கணுப்பொங்கல் என்கிற கன்னிப் பெண்களின் பொங்கல் என்று கொண்டாடப்படுகிறது. கணுப்பொங்கலன்று தமிழ் நாட்டில் திருமணம் ஆகாத கன்னி பெண்கள் ஒன்றுகூடி ஒரு ஆற்றங்கரையை அடைந்து, பெண்கள் மாத்திரமே தனித்திருந்து பொங்கி படைத்து மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் அப் பொங்கலை கொடுத்து தாங்களும் உண்டு மகிழ்வர். ஐந்தாம் நாள் ஜெல்லி கட்டு வீர விளையாட்டு நிகழ்வும் இடம்பெறும். இதன் மூலம் தாங்கள் விரும்பிய கணவரை அடைய முடியும் என்ற நம்பிக்கை தமிழ்ப் பெண்களிடம் இன்றளவும் நிலவிவரும் ஒரு சிறந்த நம்பிக்கையாக தைமாதத் திருவிழா திகழ்கிறது. 

இத்திருநாளில் இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு பொங்கி கொடுக்க வேண்டும். அப்போது தான் அது மனநிறைவான பொங்கலாக அமையும். 

நன்றிகளுடன் வைஷாலி வாசகர் வட்ட உறுப்பினர்கள்   

==================================================
பகுதி I-கைவண்ணம்:-

1) சித்திரமும் கைப்பழக்கம் பகுதியில் :-
(நான் வரைந்த ஓவியம் / எனக்குப் பிடித்த ஓவியம்)
A) D. துர்கா 2ம் வகுப்பு. 




f) குழந்தைகள் H. சாய் நந்தினி மற்றும் H.சாய் ஷிவானி சகோதரிகள்:- 
(நான் வரைந்த ஓவியம் / எனக்குப் பிடித்த ஓவியம்)







G) செல்வி மேஹோக் பேகம் (Mehok Begam):- 
(நான் வரைந்த ஓவியம் / எனக்குப் பிடித்த ஓவியம்)


G)  D. துர்கா  :- 
(நான் வரைந்த ஓவியம் / எனக்குப் பிடித்த ஓவியம்)



G)  குழந்தைகள்  சக்தி உமா மற்றும் ஜெய் சக்தி  ) :- 
(நான் வரைந்த ஓவியம் / எனக்குப் பிடித்த ஓவியம்)

=================================================
2. நகைச்சுவை-சிரி சிந்தி செயல்படு- பகுதியில் :-
1. (புகைப்படமும் விளக்கமும்):-

2. (படமும் விளக்கமும்):-
சவுக்கைமரக்காயிலிருந்து பொம்மைகள் செய்வது எப்படி?

3. (படமும் விளக்கமும்):-

4. (படமும் விளக்கமும்):-

5. (படமும் விளக்கமும்):-
சவுக்கைமரக்காயிலிருந்து பொம்மைகள் செய்வது எப்படி?


6. (புகைப்படமும் விளக்கமும்):-

7. (புகைப்படமும் விளக்கமும்):-
முதலில் தமிழ்  வாசிக்க கற்றுக்கொள்ளுங்கள்....வாருங்கள் நமது வைஷாலி வாசகர்வட்டத்தின் தமிழ் கற்கும் வகுப்புகளில் கலந்துகொண்டு, தரணி போற்றும் மொழி தமிழ் மொழியே!! என  பறைசாற்றுவோம்.....


_________________________________________________
===========================================
3. (அ).சிறுகதைகள் பகுதியில் :- முதலாவது போட்டி :- வைஷாலி வாசகர் வட்டத்தின்... சரியான விடைகளைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்... போட்டி என்-10  தை  மாதம், இதழ்-10 தேதி 15-01-2017. தொகுத்து வழங்கியவர்:- திருமதி நாமகிரி சந்திரசேகரன் - வைஷாலி, காசியாபாத்.

நன்றி மறந்த சிங்கம் :- 

ஒரு விறகு வெட்டி ஒருவர் காட்டுக்கு விறகு வெட்ட சென்றுகொண்டிருந்தார் அப்போது ஒரு சிங்கம் கர்ஜிக்கும் சப்தம் கேட்டதால், அங்கிருந்து ஓடி ஒளிந்துகொள்ள முற்பட்டபோது.  அருகில் ஓர் இடத்தில் காட்டு விலங்குகளை பிடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த கூண்டுக்குள் சிங்கம் ஒன்று மாட்டிக்கொண்டு... மனிதனே தயவுசெய்து எனக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டது.

விறகுவெட்டிக்கு ஆச்சரியமும், பயமும் ஏற்பட, "உன்னை காப்பாற்றினால் நீ என்னை கொன்றுவிடுவாய் ஆகவே என்னால் உன்னை காப்பாற்றமுடியாது" என்கிறார்.

நீங்கள் என்னை இந்தக்கூண்டுக்குள்ளிருந்து விடுவித்து காப்பாற்றினால் நான் உங்களுக்கு பல உதவிகள் செய்வேன் என்று பொய் சொன்னதை நம்பிய விறகுவெட்டி கூண்டைத் திறந்து சிங்கத்தைக் காப்பாற்றினான். 

இதுதான் நல்ல சமயம் என்று சிங்கம் அந்த விறகு வேட்டியின் மீது பாய்ந்து கடிக்க வந்தபோது,.... "நில்..!!! உனக்கு உதவி செய்த என்னை கடித்துக் கொள்வது ஞாயமில்லை" என்றார். 

அந்தநேரத்தில் அங்கு நரி ஒன்று வந்ததால் விறகுவெட்டி நரியிடம் உதவி கேட்டு இதற்க்கு ஒரு ஞாயம் வழங்குமாறு வேண்டி கேட்டுக்கொண்டார்.  சிங்கத்திற்கு அங்கு வந்த நரியையும் தின்பதற்கு ஆசை வந்ததை அறிந்துகொண்ட நரி "ஆஹா இரண்டு லட்டு திங்க ஆசையா- உனக்கு சரியான பாடம் கற்றுத்தருகிறேன் பார்" என்று நரி ஒரு தந்திரம் செய்தது.  

நரி சிங்கத்தைப் பார்த்து நடந்ததை விவரமாக சொல் என்றது... சிங்கமும் அனைத்தையும் விவரமாக கூறியதைக் கேட்ட நாரி,....

சரியாகப்புரியவில்லை எங்கே அப்படியே நடந்ததைக் திரும்ப செய்து காட்டு என்றது. அதைக்கேட்ட சிங்கமும் அங்கிருந்த கூண்டுக்குள் சென்று இங்குதான் நான்  மாட்டிக்கொண்டேன் என்று கூறும்போது நரி சட்டென்று கூண்டின் கதைவை மூடி சிங்கத்தை திரும்பவும் கூண்டுக்குள் அடைத்தது. 

இதைக்கண்ட சிங்கம் அதிர்ச்சியடைந்து!!  "ஏன் என்னை திரும்பவும் கூண்டுக்குள் போட்டு மூடிவிட்டாய்" என்று கோபமாக கத்தியது. 

அதற்க்கு நாரி சொன்னது. " ஆபத்திலிருந்து உனக்கு உதவியதற்கு நன்றி சொல்லாமல் அவருக்கு தீங்கு செய்ய நினைத்த உனக்கு இதுதான் சரியான தண்டனை என்றது. 

என்ன சுட்டீஸ்.... ஒருவர் நமக்கு செய்த உதவியை மறக்காமல் நன்றி பாராட்டுவது  நமது கடமையல்லவா? ... ஆகவே நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதோடு, பிறரிடமிருந்து நாம் பெரும் அனைத்து உதவிகளுக்கும் நன்றி சொல்வது நமது கடமை... செய்வீர்கள் அல்லவா???  மீண்டும் அடுத்த மாத பதிவில் சிந்திப்போம். நன்றி-தமிழ் சிறுகதைகள் வலைப்பதிவிலிருந்து  

கேள்வி 1. இந்தக்கதையிலிருந்து நாம் தெரிந்துகொள்ளும் கருத்து என்ன? 

சரியான  விடைகளைக்கூறி சிறப்பு பரிசுகளை வெல்லுங்கள். சரியான விடைகளை 10-02-2017 தேதிக்கு முன்னதாக "vaishalireaderscircle@gmail.com" மின்னஞ்சலில் அனுப்பவேண்டும். 

சரியான விடையையும், சரியான விடை எழுதியவர்களுக்கான பரிசுகளும்  18-02-2017 (3-வது ஞாயிறு) அன்றைய, 36-வது வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில் வழங்கப்படும்.

போட்டிக்கான சரியான விடையை பலரும் குறிப்பிட்டிருந்தால், பரிசு பெறுபவர்-குலுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்.

தமிழ் சிறுகதைகள் வலைப்பதிவிலிருந்து இந்த, சிறந்த கதையை தேர்ந்தெடுத்து வழங்கியவர் (திருமதி நாமகிரி சந்திரசேகரன் - வைஷாலி, காசியாபாத்) 

=========================================
3.(ஆ) சிறுகதைகள் பகுதியில் :-இரண்டாவது போட்டி:- வைஷாலி வாசகர் வட்டத்தின் சரியான புகைப்படக் காட்சி அல்லது கதையைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் போட்டி என்-10  தை மாதம், இதழ்-10 தேதி 15-01-2017.

தலைப்பு:- "பொங்கலோ பொங்கல்":-
சரியான படக் காட்சி அல்லது கதைக்கான  விடைகளைக்கூறி சிறப்பு பரிசுகளை வெல்லுங்கள். சரியான விடைகளை 10-02-2017 தேதிக்கு முன்னதாக "vaishalireaderscircle@gmail.com" மின்னஞ்சலில் அனுப்பவேண்டும். 

சரியான விடையையும், சரியான விடை எழுதியவர்களுக்கான பரிசுகளும்  19-02-2017 (3-வது ஞாயிறு) அன்றைய, 36-வது வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில் வழங்கப்படும்.

போட்டிக்கான சரியான விடையை பலரும் குறிப்பிட்டிருந்தால், பரிசு பெறுபவர்-குலுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்.

சென்ற மாதத்திற்கான சரியான படக்கதையை கூறி போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. 
=====================================================
3. அ) இந்தமாதம் தலைப்பைச் சார்ந்த "குறள் கற்போம்! குறள் வழி நடப்போம்!"  :-

"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று" (திருக்குறள் – 108)

என்பது திருக்குறள். இந்த 'நன்றி' என்ற சொல் இன்று உலக வழக்கில் சாதாரண வழக்கிற்கே கையாளப்பெறுகிறது. அதாவது, ஒருவர் செய்த உதவியை மறத்தல் கூடாது. உதவியைப் பெற்றவுடன் நன்றி கூறுதல் வேண்டும் என்ற வழக்கு மேலோங்கி நிற்கிறது. 

இன்று எந்த நிகழ்ச்சியானாலும் "நன்றி கூறல்" என்பது ஒரு சடங்காக இடம் பெற்றுவிட்டது. இது தவறன்று. ஆயினும், திருக்குறளின் பொருள் வழி நன்றி என்ற சொல் ஆழமான பொருள் தருவது. நன்று என்ற சொல்லிலிருந்து நன்றி என்ற சொல் பிறக்கிறது. அதாவது 'நல்லது' என்ற சொல்தான் நன்றி என்ற சொல்லாக வழங்கப் பெறுகிறது. 

ஒருவர் ஒருவருக்குச் செய்த நல்லதை மறத்தல் கூடாது என்பது கருத்து. அந்த நல்லதைத் தொடர்ந்து சிந்தையிலும் செயலிலும் காப்பாற்றி வரவேண்டும் என்பதே கருத்து. அப்படி காப்பாற்றிக் கொண்டு வாழ்வதே நல்லது செய்தவருக்குப் பெருமையும் மகிழ்ச்சியும் தருவதாகும். 

ஒருவர், ஒருவருக்கு நல்லது செய்தல் என்பது விரிந்த அளவுடையது. சிந்தையால், சொல்லால், செயலால் நன்மை செய்யலாம். ஆனால், இன்று நன்மை என்பதைப் பொருள் அளவினதாகச் சுருக்கி விட்டார்கள். 

பொருளைவிட, நல்லறிவு கொள்ளுதல், நன்னடை நல்குதல் முதலியனவும் நல்லனவேயாம். இத்தகு நல்லனவற்றைப் பாராட்டி ஏற்று ஒழுகுதலே நன்றி. ஒரோ வழி நன்றல்லாதவற்றை மறந்தால் தான் நெஞ்சிறுக்கம் கொஞ்சம் குறையும். ஆதலால், அன்றே மறப்பது நன்று என்றார். 


புறநானூறு, திருக்குறளை அறநூல் என்று பாராட்டுகிறது ஏன்? அறங்களில் சிறந்தது நன்றி மறவாமை. இந்த நன்றி மறவாமை என்ற சிறந்த பண்பின் வாயிலாக பல்வேறு நற்பண்புகள் தோன்றி வளர வாய்ப்புள்ளது. 

விடாமல் முயலுங்கள், 
விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....
மீண்டும் சந்திப்போம் ! 
நன்றிகளுடன் கோகி.
================================================
3. ஆ) குட்டிக் கதைகள் பகுதியில் இந்தமாதம் தலைப்பைச் சார்ந்த  கதை :-

"நன்றி சொன்னால் பேரழகு!... நன்றி செய்தால் பாரழகு !"..

வீடு வீடாகப் பொருட்களை வினியோகிக்கும் அந்தச் சிறுவனுக்கு ரொம்பப் பசித்தது. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் அவனிடம் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிடக் கேட்கலாம் என நினைத்தான். கதவைத் தட்டினான். ஒரு பெண் கதவைத் திறந்தாள். அவனுக்கோ சாப்பாடு கேட்க ரொம்பக் கூச்சம்.

‘கொ… கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?’ தயக்கத்துடன் கேட்டான்.

அவள் சிறுவனின் கண்களில் இருந்த பசியைக் கவனித்தாள்.

உள்ளே போய் ஒரு கப் பால் கொண்டு வந்து கொடுத்தாள்.

பாலைக் குடித்துப் பசியாற்றிய சிறுவன் கேட்டான், `நான் எவ்வளவு கடன்பட்டிருக்கேன்?’

`கடனா? அப்படியொன்றுமில்லை. அன்பான செயலுக்கு விலை இல்லை என அம்மா சொல்லியிருக்கிறார்…’, அவள் சிரித்துக் கொண்டே சொன்னாள்.

‘ரொம்ப ரொம்ப நன்றி…’ சிறுவன் புன்னகையுடன் கடந்து சென்றான்.

ஆண்டுகள் கழிந்தன. அந்த சிறுவன் நகரிலேயே பெரிய டாக்டர் ஆனான். அந்த பெண்ணுக்கோ ஒரு கொடிய நோய் வந்தது. அவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அவளும் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அந்த டாக்டரிடமே அவளுடைய பரிசோதனை வந்தது. மெடிக்கல் ரிப்போர்ட்டில் அந்தப் பெண்ணின் ஊரைப் படித்ததும் அவருக்குள் சின்ன மின்னல். விரைவாக அறைக்குப் போய் அந்தப் பெண்ணைப் பார்த்தார். அவளேதான். தனது பசியாற்றிய நல்ல உள்ளம் படைத்தவள்.

அன்று முதல் தனது அத்தனை உழைப்பையும் செலுத்தி அவளுக்கு சிறப்பான சிகிச்சை அளித்தார். நீண்ட சிகிச்சைக்குப் பின் அவள் குணமானாள். பல லட்சங்கள் செலவானது. மருத்துவமனை அந்தப் பெண்ணுக்கு ஒரு நீண்ட பில்லை அனுப்பியது. இதை எப்படிக் கட்டப் போகிறேனோ எனும் பதற்றத்துடன் அதைப் பிரித்த அவள் திகைத்துப் போனாள்.

அந்த பில்லின் கடைசியில் எழுதப்பட்டிருந்தது, `ஒரு கப் பாலில் உங்கள் கடன் எல்லாம் தீர்க்கப்பட்டுவிட்டது. இது நன்றி சொல்லும் நேரம்.’ அவளுடைய கண்கள் கசிந்தன.

மனிதனுக்கு இருக்க வேண்டிய மகத்தான குணாதிசயங்களில் ஒன்று நன்றி சொல்லுதல்.

அமெரிக்காவில் நீங்கள் காரில் போகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். ஒருவர் உங்களை முந்திச் செல்ல நீங்கள் அவருக்கு வழிவிட்டால் அவர் உங்களுக்கு ‘நன்றி’ சொல்லி விட்டுத்தான் போவார். சாலையில் ஒருவர் கடக்க நீங்கள் வண்டியை நிறுத்தினால் அவர் ‘நன்றி’ சொல்வார். கடையில் ஒரு பொருள் வாங்கும் போது கூட கடைக்காரருக்கு `நன்றி’ சொல்வார்கள்.

நன்றி சொல்லும் வழக்கம் அவர்களிடம் ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. நல்லவற்றை எங்கிருந்து வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம், தப்பில்லை. ஆனால் நாம் வாழும் தமிழகத்தில்.. 

நன்றி என்பது ஒரு சின்ன வார்த்தைதான். ஆனால் அது மனதளவில் தரும் உற்சாகமும், மகிழ்ச்சியும் அளவிட முடியாதது. அது ஒரு வார்த்தையாய் நின்று விடாமல் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஊற்றெடுக்க வேண்டும் என்பது மட்டுமே கவனிக்க வேண்டிய விஷயம்.

சின்னச் சின்ன விஷயங்களில் நன்றி சொல்லத் தெரியாதவர்களால் பெரிய விஷயங்களிலும் நன்றி சொல்ல முடியாது என்கிறது எஸ்தோனிய பழமொழி ஒன்று.

Thanks-நன்றியைச் சொல்ல இந்த நவீன யுகத்தில் ஏகப்பட்ட வழிகள் உண்டு. ஓர் எஸ்.எம்.எஸ்-SMS, ஒரு சின்ன மின்னஞ்சல் (E-Mail) வரி கூட உங்கள் நன்றியை எடுத்துச் செல்லலாம்.

எதிர்பாராத நேரத்தில் ஒருவரை ஒரு `நன்றி’ மூலம் மகிழச் செய்வது அற்புதமான விஷயம். அந்த நபர் செய்த நல்ல பத்து விஷயங்களைப் பட்டியலிட்டு, அதற்காக உங்களுடைய மனமார்ந்த நன்றியையோ, பரிசையோ அளித்துப் பாருங்கள். அது அந்த நபருடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான தருணமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

நாம் செய்யும் மிகப்பெரிய தப்பு என்ன தெரியுமா? கூட இருப்பவர்களுக்கு நன்றி சொல்லாமல் விடுவதுதான். கூடவே இருப்பதால் அவர்களுக்கெல்லாம் நன்றி சொல்லக் கூடாது என நினைத்து விடுகிறோம். நன்றி என்பது அலுவல் சமாச்சாரங்களுக்கு மட்டுமானது என தப்புக் கணக்கு போட்டு விடுகிறோம். கணவன், மனைவி, அப்பா, அம்மா, அக்கா, தங்கச்சி, தம்பி என எல்லோருக்கும் நன்றி சொல்வதே நல்ல பழக்கம்.

‘தினமும் எனக்கு நீங்க தானே காபி போட்டு தர்றீங்க, இன்னிக்கு அதுக்கு ஒரு சின்ன நன்றியா, நானே காபி போட்டு உங்களை எழுப்பறேம்மா’ என அம்மாவை ஒரு நாள் நெகிழச் செய்யுங்கள்.

அப்பாவுடைய ஆடைகளை எல்லாம் இஸ்திரி போட்டு வைத்து அப்பாவுக்கு ஒரு நாள் நன்றி சொல்லுங்கள். அதிகாலையில் எழுந்து வீட்டைப் பெருக்கி மனைவிக்கு ஒரு நாள் நன்றி சொல்லுங்கள். இப்படி சின்னச் சின்ன அன்பின் செயல்களால் நன்றி சொல்வது வார்த்தைகளால் நன்றி சொல்வதை விட ரொம்ப வலிமையானது.

இன்னும் ஒரு படி மேலே போய் சிந்தியுங்கள். உங்களோடு படிக்கும் மாணவர்களிடமோ, அல்லது  உங்களோடு வேலைசெய்யும் பணியாளர்களிடமோ. உங்கள் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரப் பெண்ணுக்கோ, தோட்டக்காரருக்கோ, காவல்காரருக்கோ என்றைக்காவது மனசார நன்றி சொல்லியிருக்கிறீர்களா?

ஒரு பாராட்டு, ஒரு பரிசு, ஒரு மனமார்ந்த நன்றி என அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு மகிழ்ச்சிப் பக்கத்தை எழுதியிருக்கிறீர்களா? எல்லா மனிதரும் கடவுளின் பிம்பங்கள் என்கிறோம், அதில் பலவீனர்களை எப்போதுமே ஒதுக்கியே வைக்கிறோமே, தப்பில்லையா ?

சொல்லப்படாத நன்றி எப்படிப்பட்டது தெரியுமா?

‘ஒருவருக்கு அழகான ஒரு பரிசுப் பொருளை வாங்கி, அதை அருமையாக கிப்ட் கவரில் போட்டு அப்படியே வீட்டில் வைத்திருப்பது போன்றது’ என்கிறார் வில்லியம் ஆர்தர் வேர்ட்.

யாராவது நமக்கு ஒரு கெடுதல் செய்தால் நாள் கிழமை குறித்து மனசுக்குள் கல்வெட்டாய் வைப்பதும், அவர் நமக்குச் செய்த நன்மைகளை காற்றில் எழுதி காணாமல் செய்வதும் நமது பழக்கம். அதை அப்படியே உல்டாவாகப் பண்ணிப் பழக வேண்டும். தீயது செய்தால் காற்றில் எழுது, நல்லதெனில் மனதில் எழுது.

வீட்டிலிருக்கும் குழந்தைகளுக்கும் ‘நன்றி’ சொல்லும் பழக்கத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். குழந்தைகள் நமது செயல்களைப் பார்த்து வளரும். எனவே நாம் நன்றியுடையவர்களாய் இருக்க வேண்டியது அடிப்படைத் தேவையாகி விடுகிறது.


நன்றி சொல்ல வேண்டும் எனும் மனம் இருந்தால் உங்களுக்கு அதற்கான வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கும். நல்லவற்றுக்கு மட்டுமல்லாமல் சோதனைகள், பலவீனங்கள், தோல்விகள் இவற்றுக்குக் கூட நீங்கள் நன்றி செலுத்தலாம்.

ஓர் அழகான ஆங்கிலப் பாடல் உண்டு. அந்தப் பாடலின் சில வரிகளை இப்படித் தமிழில் மொழிபெயர்க்கலாம்.

என்னிடம் இல்லாதவற்றுக்காய் நன்றி, அவைதான் அவற்றை நோக்கி என்னை பயணிக்க ஊக்குவிக்கின்றன.

என்னிடம் இருக்கும் குறைவான அறிவுக்காய் நன்றி, அதுதான் என்னை கற்றுக்கொள்ள வைக்கிறது.

எனது கடினமான நேரங்களுக்காய் நன்றி, அவைதான் என்னை வலிமையானவனாய் மாற்றுகின்றன.

எனது குறைகளுக்காய் நன்றி, அவைதான் எனக்கு நிறைவைத் தேடும் தாகத்தைத் தருகின்றன.

எனது பிழைகளுக்காய் நன்றி, அவைதான் எனக்கு அனுபவப் பாடத்தை அள்ளித் தருகின்றன.

எனது சோர்வுக்காய் நன்றி, அதுதான் எனது உழைப்பின் மேன்மையை எனக்கு உணர்த்துகிறது.

எனது சோதனைகளுக்காய் நன்றி, அவைதான் சோதனைகளைச் சாதனையாய் மாற்றும் மனநிலையைத் தருகின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஒரு ஹம்பேக் திமிங்கலம் வலையில் சிக்கிக் கொண்டது. உடல் முழுதும் கயிறுகள் சிக்கிக் கொள்ள திமிங்கலத்தால் நீந்த முடியவில்லை. அந்த 50 அடி நீள திமிங்கலத்தின் கட்டுகளை அறுக்க பாதுகாப்பாளர்கள் திட்டமிட்டார் கள்.

திமிங்கலம் மெல்ல வாலை அசைத்தாலே ஆள் காலியாகிவிடலாம். கட்டறுத்தபின் கோபத்தில் அது குதித்தாலும் காலி எனும் திகில் நிமிடங்களுடன் ஆட்கள் போராடினார்கள். கயிறுகளை அறுத்தார்கள். திமிங்கலம் கண்களை உருட்டி எல்லோரையும் உற்று உற்றுப் பார்த்தது. கட்டுகள் அவிழ்த்து முடித்ததும் ஆனந்தத்தில் கடலுக்குள் நீச்சலடித்தது.

பின் எல்லோரும் ஆச்சரியப்படும் ஒரு விஷயம் நடந்தது. அந்த பிரம்மண்டமான திமிங்கலம் திரும்ப வந்தது. வந்து, கட்டுகளை அவிழ்த்த ஒவ்வொரு நபர் முன்னாலும் சென்று தன் முகத்தினால் அவர்களை மெல்ல முட்டித் தள்ளி தன் நன்றியைச் சொன்னது. எல்லோரும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

காலத்தால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது எனும் வள்ளுவர் வரிகள் திமிங்கலத்தின் செயலில் வெளிப்பட்டன. நன்றி அறிவித்தல் திமிங்கலத்திடம் கூட இருக்கிறது என்பதை அமெரிக்கப் பத்திரிகைகள் அப்போது வியப்புடன் வெளியிட்டன.

பிடிவாதப் பார்ட்டிகளுக்காக, நன்றி சொல்வதில் உள்ள மருத்துவத் தகவல்களையும் கையோடு சொல்லி விடுகிறேன்.

2007-ல் நடத்தப்பட்ட டாக்டர் எம்மோஸ் ஆய்வு ஒன்று, ‘நன்றியுடையவர்களாய் இருப்பவர்கள் மன அழுத்தமற்றவர்களாகவும், நிம்மதியான தூக்கம் உடையவர்களாகவும் இருப்பார்கள்’ என்றது. இதனால் அவர்களுடைய உடலும் உள்ளமும் புத்துணர்ச்சியடைகிறது.

‘நன்றி தெரிவிக்கும் தம்பதியரின் குடும்ப வாழ்க்கை நிலையாகவும், வலிமையாகவும் இருக்கும்’ என 2010-ல் நடத்தப்பட்ட இன்னொரு ஆய்வு தெரிவித்தது.

அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று, ‘நன்றி தெரிவித்து வாழ்பவர்கள் ரொம்பவே ஆனந்தமாய் இருப்பார்கள்’ என தனது கண்டுபிடிப்பை வெளியிட்டது.

வாழ்க்கை ரொம்பவே அழகானது. நமது ஐம்புலன்களும் நம்மை வினாடி தோறும் வியக்க வைத்துக் கொண்டே இருக்கின்றன. எவ்வளவோ அழகான விஷயங்களை, மனிதர்களைக் காண்கிறோம். பேச்சுகளை, இசையைக் கேட்கிறோம். பலவற்றை உணர்கிறோம். சுவைகளை ரசிக்கிறோம். நமது புலன்களின் பரிசளிப்புக்கு நன்றி சொன்னதுண்டா? இல்லாத விஷயம் கிடைக்கும்போதுதான் நன்றி சொல்ல வேண்டுமென்பதில்லை. இருக்கின்ற விஷயத்துக்காகவே நன்றி சொல்லலாம்.

விடைபெறுதல் என்பது முடிவுரையல்ல. இன்னோர் இடத்தில் சந்திப்போம் என்பதன் உத்தரவாதம்.

நன்றி சொன்னால் பேரழகு!
நன்றி செய்தால் பாரழகு !
நன்றி-http://zubairsiraji.com/

======================================
ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ...ஒரு சிறு விளம்பர இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடர்ந்து வாசிக்கலாமா? 
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
விளம்பரம் :-இப்பகுதியை உங்களுக்கு வழங்குபவர்:-
விளம்பரம் :-இப்பகுதியை உங்களுக்கு வழங்குபவர்:-

==============================================================

4. கட்டுரை=1:- இந்தமாதம் தலைப்பைச் சார்ந்த  கதை /கட்டுரைகள்:- 
அ ) இன்று ஒரு தகவல் பகுதியில்:- 
#தெரியுமா_உங்களுக்கு?
60-தமிழ் வருடங்களின் ..தமிழ்ப் பெயர்கள்!
1 நற்றோன்றல் - பிரபவ
2 உயர்தோன்றல் - விபவ
3 வெள்ளொளி - சுக்கில
4 பேருவகை - பிரமோதூத
5 மக்கட்செல்வம் - பிரசோற்பத்தி
6 அயல்முனி - ஆங்கிரச
7 திருமுகம் - ஸ்ரீமுக
8 தோற்றம் - பவ
9 இளமை - யுவ
10 மாழை - தாது
11 ஈச்சுரம் - ஈஸ்வர
12 கூலவளம் - வெகுதான்ய
13 முன்மை - பிரமோதி
14 நேர்நிரல் - விக்ரம
15 விளைபயன் - விஜ_
16 ஓவியக்கதிர் - சித்ரபானு
17 நற்கதிர் - சுபானு
18 தாங்கெழில் - தாரண
19 நிலவரையன் - பார்த்திப
20 விரிமாண்பு - விய
21 முற்றறிவு - சர்வசித்
22 முழுநிறைவு - சர்வதாரி
23 தீர்பகை - விரோதி
24 வளமாற்றம் - விக்ருதி
25 செய்நேர்த்தி - கர
26 நற்குழவி - நந்தன
27 உயர்வாகை - விசய
28 வாகை - சய
29 காதன்மை - மன்மத
30 வெம்முகம் - துர்முகி
31 பொற்றடை - ஏவிளம்பி
32 அட்டி - விளம்பி
33 எழில்மாறல் - விகாரி
34 வீறியெழல் - சார்வரி
35 கீழறை - பிலவ
36 நற்செய்கை - சுபகிருது
37 மங்கலம் - சோபகிருது
38 பகைக்கேடு - குரோதி
39 உலகநிறைவு - விசிவாவசு
40 அருட்டோற்றம் - பராபவ
41 நச்சுப்புழை - பிலவங்க
42 பிணைவிரகு - கீலக
43 அழகு - சௌமிய
44 பொதுநிலை - சாதாரண
45 இகல்வீறு - விரோதிகிருது
46 கழிவிரக்கம் - பரிதாபி
47 நற்றலைமை - பிரமாதீச
48 பெருமகிழ்ச்சி - ஆனந்த
49 பெருமறம் - இராட்சச
50 தாமரை - நள
51 பொன்மை - பிங்கள
52 கருமைவீச்சு - காளயுத்தி
53 முன்னியமுடிதல் - சித்தார்த்தி
54 அழலி - ரௌத்ரி
55 கொடுமதி - துன்மதி
56 பேரிகை - துந்துபி
57 ஒடுங்கி - ருத்ரோத்காரி
58 செம்மை - ரக்தாட்சி
59 எதிரேற்றம் - குரோதன

60 வளங்கலன் - அட்சய

================================================

4. கட்டுரை=2:- இந்தமாதம் தலைப்பைச் சார்ந்த :- 

கதைப் படம் பார்க்கலாம் வாங்க:-
நன்றி மறவாதிருத்தல் - தாத்தா கதைகள் |:-

====================================================

4)கட்டுரை=3 சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம் கேள்வி பதில் பகுதியில்:-

இரத்ததானம் செய்யும் போது கவனிக்கவேண்டிய சில குறிப்புகள்:-


  • இரத்ததானம் கொடுப்பதற்கு குறைந்தது 3 மணி நேரத்திற்கு முன்னர் நன்றாக சாப்பிடுதல் வேண்டும்.
  • இரத்ததானம் அளித்தப்பின் வழங்கப்படும் சிற்றுணவுகளை சாப்பிடுதல் மிகவும் முக்கியமானது. அதன் பிறகு நன்றாக உணவருந்துதல் வேண்டும்.
  • இரத்ததானமளிக்கும் நாளில் புகைப்பிடித்தலை தவிர்க்கவும். தானமளித்த 3 மணி நேரத்திற்குபிறகு புகைப்பிடிக்கலாம்.
  • இரத்ததானம் அளிப்பதற்கு 48 மணிநேரத்திற்கு முன்பு நீங்கள் மது அருந்தியிருந்தால் இரத்ததானம் செய்வதற்கு அனுமத்திக்கப்பட மாட்டீர்கள்.    
  • இரத்ததானம் பற்றிய தவறான நம்பிக்கைகள்

“நான் இரத்ததானம் அளித்தப்பின் சோர்வாகவும், அசதியாகவும் உணர்கிறேன்” – இரத்ததானம் செய்தபின்பு நீங்கள் நீராகாரங்கள் அருந்துவதாலும் மற்றும் நன்றாக உணவருந்துதலும் நீங்கள் சோர்வாகவும், அசதியாகவும் உணரமாட்டீரகள்.

“நான் சாதாரண வேலைகளை தொடரமுடியாது ” – இரத்ததானம் அளித்த பிறகு வேலைகளை செய்யவேண்டாம் என்று கூறினாலும் உங்களால் எல்லா வேலைகளையும் தொடரமுடியும்.

“எனக்கு இரத்தம் குறைவாக இருக்கும்” – நீங்கள் மருத்துவரால் தானமளிக்கத் தகுதியானவராக சான்றளிக்கப்பட்டால் தானமளித்தப்பின்பும் உங்கள் உடலில் போதுமான இரத்தம் இருக்கும்.

“ஏன் நான் மது அருந்த முடியாது!!” - நீங்கள் இரத்ததானமளித்த மறுநாள் மது அருந்தலாம். ஆதாரம்:BharatBloodBank.

இரத்த தானம் செய்வோர்களின் பயனுள்ள இணையங்கள்:-
http://www.friendstosupport.org/
http://www.indianblooddonors.com/
http://www.hyderabadblooddonors.org/hyderabadblooddonors/bloodbanks.aspx
http://www.bloodgivers.com/
http://www.jeevan.org/blood-bank/
http://www.blooddonations.org/
http://www.aabb.org/Pages/default.aspx
http://www.redcross.org/
http://www.bloodonline.in/
http://www.bharatbloodbank.com/
http://sankalpindia.net/drupal/?q=blood
http://www.bloodworksnw.org/home/
http://www.who.int/bloodsafety/en/
http://www.transfusionguidelines.org/
http://www.bloodservices.ca/

-நன்றி முகநூல் பக்கங்கள்.

=======================================================
4 ) கட்டுரை=4, சமையல் குறிப்புக்கள் / விருந்துக்கு வாங்க பகுதியில்:-
இஞ்சிப் பால்..! இதைச் சாப்பிட்டால்…..
கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க.

ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?

ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும்.

அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும்.

அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்?

1. நுரையீரல் சுத்தமாகும்.
2. சளியை ஒழுச்சு கட்டிடும்.

3. வாயுத் தொல்லை என்பதே வராது.

4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.

5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.

6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.

7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.

8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.

9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.
10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே.

அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா?

3 வயசுக்கு மேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம்.

ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் தவிர்க்கனும்.

மீதிப்பேர் சாப்பிடலாம்.

என்ன நாளையில இருந்து உங்க வீட்டில காப்பிக்கு பதில் இஞ்சிப்பால்தானே?
பகிர்ந்துகொள்ளுங்கள் கண்டிப்பாக மற்றவரும் அறிந்துகொள்ளட்டும்..
==============================================
"கைத்தொழில்-கற்றுக்கொள்ள வாருங்கள்"-கைத்தொழில் பகுதியில் இந்தமாதம்:-
'கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை இல்லை ஒத்துக்கொள்' என்ற கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை அவர்களின் பாடலுக்கேற்ப பலவிதமான சிறுதொழில் வாய்ப்புகள் தரும் கைவினை வேலைப்பாடுகள்: கற்றுத்தருகிறார் திருமதி ஜெயஸ்ரீ நாராயணன் அவர்கள். 


சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை ஒயர்கூடை பின்னுதல், எம்பிராய்டரி, குரோஷா, பொம்மைகள் செய்தல் போன்ற கைவினை வேலைப்பாடுகள் பெண்களின் உபரி வருமானத்துக்கு வாய்ப்பளித்தன. இன்று பெண்களின் பெரும்பாலான நேரத்தை டிவி பிடித்துக் கொள்கிறது. பொருளாதார காரணங்களுக்காக வீட்டின் ஆணை சார்ந்திருக்கும் பெண்கள், அவர்களின் திடீர் இழப்புகளின்போது செய்வதறியாமல் தவிக்கின்றனர். கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்; கவலைகள் உனக்கில்லை ஒத்துக்கொள் என்கிற அர்த்தமுள்ள வரிகளை மெய்ப்பிக்கவே பல்வேறு கைவினை வேலைப்பாடுகளை கற்றுத்தரும் இந்தத் தொடரை ஆரம்பித்திருக்கிறோம்.

தமிழகம் முழுக்க கல்லூரி, பள்ளிகள், பெண்கள் குழுக்களுக்கு கைவினைப் பொருட்கள் செய்யக் கற்றுத் தந்துக்கொண்டிருக்கும் ஜெயஸ்ரீ நாராயணன், இனி வாரம் ஒரு கைவினைப் பொருள் செய்யக் கற்றுத்தர இருக்கிறார்.சென்னையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ, திருமணத்துக்குப் பிறகு ஓவியப் பயிற்சி, நகைகள் செய்தல் உள்ளிட்ட பயிற்சிகள் எடுத்துக் கொண்டவர். 32 ஆண்டு கால ஆர்வமும் உழைப்பும் இவரை தேர்ந்த கைவினை கலைஞராக மாற்றியிருக்கிறது. ஆர்வமுள்ளவர்களுக்கு இவர் கற்றுத்தருவதோடு, கற்றுக்கொண்ட பிறகு தொழில் தொடங்கவும் குழுக்களாக சேர்ந்து கண்காட்சிகள் நடத்தவும் வழிகாட்டுகிறார்.

பல்வேறு ஓவிய வகைகள், பேப்பர் நகைகள், டெரகோட்ட நகைகள், செராமிக் நகைகள், அலங்கார சணல் பைகள் போன்றவற்றை கற்றுத்தருகிறார். தமிழ் பத்திரிகைகளிலும் இவர் பத்திகள் எழுதிவருகிறார். 

நன்றி - நான்கு பெண்கள் இனைய வலைப்பதிவு  https://fourladiesforum.com/
==============================================
6. சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்"..... "தை-மாத-படத்தில் உள்ள (6) ஆறு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்- சனவரி-2017 தை-மாதம் "பொங்கலோ பொங்கல்"  நன்றி கூறும் மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும்-வலைப்பதிவு இதழ் போட்டி என்-10.

சரியான விடை அடுத்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" http://gulkanthu.blogspot.in/வலைப்பதிவர் இதழில் வெளியாகும். போட்டியில் பங்குகொள்ள விருப்பமுடையவர்கள் விடைகளை "vaishalireaderscircle@gmail.com" என்கிற மினஞ்சல் முகவரிக்கு 10-02-2017 முன்பாக அனுப்பிவைக்கவேண்டும். சரியான விடை எழுதிய அனைவருக்கும் அடுத்தமாத வாசகர் வட்ட சந்திப்பில் பரிசுகள் வழங்கப்படும்.

=======================================

$ சென்ற மாத "சுட்டீஸ் குல்கந்து" வலைப்பதிவர் இதழ்-9  டிசம்பர்-2016 மார்கழி-மாதம் சேவை /தான /தர்ம /உதவும் மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும்-வலைப்பதிவு இதழ் போட்டி என்-09 ஆறு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடை,

1) கை விரல் 2) கண்களின் கருவிழி 3) நாக்கு 4) கண் இமை 5) காலனியின் காலடி கருப்பு நிறம் 6) மாற்றித்தெரியும் கண்ணாடி பிம்ப எழுத்துக்கள் 

சென்ற மாத ஆறு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடையை 54 நபர்கள்மட்டுமே குறிப்பிட்டிருந்தனர், தமிழில் விடை எழுதியவர்கள்=23, ஆங்கிலத்தமிழில் எழுதியவர்கள்=11, ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=20, ஹிந்தி மொழியில்=0 நபர்களும், தெலுங்கு மொழியில்=0 நபரும், மேலும் சிலர் ஆறுக்கும் அதிகமான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.
==============================================
7. அறுவை ஆயிரம், பொன் மொழிகள், பழ மொழிகள், உலக மொழிகள், விடுகதைகள், பஞ்ச். :-தொகுத்து வழங்கியவர்... எ.கே. சபரீஷ்....

அவசரத்துக்கு ஒரு கொத்தனார தேடுனா ஊர்ல ஒரு பய இல்ல,
தெருவுக்கு நாலு "சிவில்" இஞ்சினியர் மட்டும் இருக்கானுங்க !!."

தொகுத்து  வழங்கியவர் எ.கே. சபரீஷ்....
==============================================

8.பயனுள்ள தமிழ் வலைப்பதிவர் பக்கங்களில் இந்தமாதம் :-

1. மதிப்பிற்குரிய திரு பொள்ளாச்சி நசன் - (தமிழம்.வலை-தமிழம். பண்பலை)  அவர்களின் "திருக்குறள் படித்தல் - (எளியமுறையில் ஒரே நாளில் 300 திருக்குறளை அறிதல்)" http://win.tamilnool.net/tkl300/index.html என்கிற இனைய வலைப்பக்கத்தை, புது தில்லியின் வைசாலி (தமிழ்) வாசகர் வட்ட உறுப்பினர்களுக்கு அறிமுகம்  செய்வதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.  

2. திரு சுரேஷ் அவர்கள் "தளிர்" http://thalirssb.blogspot.com/ (thalir.ssb@gmail.com) என்கிற வலைப் "பூ" பக்கத்தில் சிறுவர் பகுதியை மிகவும் அருமையான வகையில் பல படக்  கதைகளை பதிவு செய்து வருகிறார். சிறு கதைகளில் விருப்பமுடைய அனைவருக்கும் மிகவும் பயனுள்ள வலைப்பதிவுப் பக்கமாக திரு சுரேஷ் அவர்களின் வலைப்பதிவு திகழ்கிறது. அவருக்கு நமது நன்றிகளை தெரிவித்துக்கொண்டு, நமது (NCR-புது தில்லி) வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ்களுக்கு பயனுள்ள வலைப்பதிவு பக்கமாக மேற்கண்ட அவரது வலைப்பதிவுகளை  முன்மொழிவதில் மகிழிச்சியடைகிறோம்.
==============================================

9. கருத்து சொல்லப்போறேன்:- (A.K.சபரிஷ்)

$"தெருவில் குப்பை போடுகிறவனை மரியாதையாகவும் அதை பொறுக்கி சுத்தம் செய்பவனை கேவலமாக பார்க்கும் சமுதாயம் உள்ளவரை நம்  நாடு சுத்தம் ஆகாது!!!." 


$கெட்டத, கேட்ட உடனே மறக்கணும், நல்லத நாலு பேர்கிட்டயாவது சொல்லணும்!

==============================================
10. விடுகதைகள் :- (A.K.சபரிஷ்)
முன்னும் பின்னும் போவான், ஒற்றைக்காலிலே நிற்பான் – யார் அவன்?– [விடுகதைக்கான விடை:- கதவு]

அடித்தாலும், உதைத்தாலும் அவன் அழ மாட்டான் – அவன் யார்?[விடுகதைக்கான விடை:- பந்து ]


==============================================
11. கவிதை:- 
முதலில் அணிந்த சட்டை
முதலாவதாக போட்ட ஊசி
முதன் முதல் வெட்டிய நகங்கள்
முதலில் விளையாடிய கிலுகிலுப்பை
என்று உனது
எல்லா ‘முதல்’களையும்
சேமித்து  வைத்திருக்கிறேன்
முதன் முதலாக
‘அம்மா’ என்று என்னை
நீ மழலையாக அழைத்ததை
எப்படி சேமிப்பேன்  என அறியாமல்!
மூச்சுக் காற்று மட்டும் 
உரிமை கோரும் 
ஏகாந்தமான இரவொன்றில் 
உன் நினைவு சேமிப்பை 
கொஞ்சம் செலவு செய்து கொள்கிறேன்  
என் செல்லத் தோழியே!   (திருமதி. பிரியா கங்காதரன்)
====================================================
11. கவிதை:- 
நட்சத்திர விடுதிக்கு 
போகும் வழியெங்கும் 
நட்சத்திரம்.... 
மின்னிக்கொண்டிருந்தது...(S.ஸ்ரீ சக்ரி)
================================
11. கவிதை:- 

வெப்ப நகரம் 
கண்ணாடி மாளிகையின் 
கண்ணீரால் 
குளிர்ந்தது..... 
எதோ ஒரு சில 
மரங்களின் 
புண்ணியத்தால்... ( AK.பவித்ரா)
=================================
12. நமது வாசகர் வட்டத்தின் இந்த மாத சரித்திரம் முக்கியம் பகுதியில், 

நமது பண்டயத் தமிழர்களின் வரலாறு நமக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும்................

"தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா" ! "தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு "

பதாகைக்கு வரலாறு தேடவேண்டிய நிலைமை பிறர்க்கு,
வரலாற்றுக்கு புத்தகமே போடும் நிலைமை தமிழர்களுக்கு......!

#கல்லணை :-
உலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும், நொடிக்கு இரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரைபுரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை , இன்றைய ஆங்கில அறிவியலாளர்களால் கண்டறிய இயலவில்லை. கரிகாலன் என்ன ஆங்கில அறிவை பெற்றா கல்லணையை கட்டினான் ?

#மாமல்லபுரம் :-
கடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 1400 ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன் பின் உள்நோக்கி குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள். மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி. கோபுரத்தை தாங்கும் வகையில் முதலில் தூண்கள் செதுக்கப்பட்டன. மாமல்லபுரத்தை உலக வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. நரசிம்ம பல்லவன் என்ன ஆங்கிலம் பயின்றனா ?

#அங்கோர்வாட்_கோயில் :-
உலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் இக்கோயிலை கட்டியுள்ளான். இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது. திரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள். இந்த கோயிலின் நான்கு பக்க சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை. 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட 300 ஆண்டுகள் ஆகும். இக்கோயிலின் முழு உருவத்தை காண வானத்தில் 1000 அடிக்கு மேல் சென்று அங்கிருந்து பார்த்தால் மட்டுமே இதை முழுமையாக காண முடியும். இதை முழுமையாக ஒளிப்படம் எடுக்க முடியும் .இதன் முழு கட்டிடமும் அப்போது தான் பதிவாகும்.

#திருநள்ளாறு_காரி_ஈசன்_கோயில் :-
எந்த ஒரு செயற்கைகோளும் தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி திருநள்ளாறு கரி ஈசன் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் போது 3வினாடிகள் செயலிழந்து விடுகிறது. அதே நேரத்தில் செயற்கை கோள்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதை பற்றி நாசா அறிவியலாளர்கள் ஆராய்ந்தனர். முடிவு வியப்பை தந்தது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்து கொண்டே இருக்கிறது. இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் போது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது செயலிழந்துவிடுகிறது. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.

இன்றைய ஆங்கில அறிவியல் தொழில் நுட்ப செயற்கை கோள்களால் கண்டறியயப்படும் காரியின் கதிர்வீச்சை , கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டுபிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் மிகுதியாக விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனி பெயர்ச்சி என்று அறிவிக்கும் தமிழர்களின் அறிவியல் திறமையை,என்ன வென்று சொல்வது. தமிழ் வழி கல்வி பயின்ற தமிழர்கள் செய்த செயலை ஆங்கில அறிவியல் தொழில் நுட்பத்தால் இன்றளவும் செய்யவும் முடியவில்லை கண்டறியவும் இயலவில்லை.

#கடல்_நடுவே_ராமேசுவரம் :-
கடலுக்கு நடுவே உள்ள ராமேசுவரம் தீவில் மலைகளோ பாறைகளோ கிடையாது. ராமேசுவரம் கோயில் 1500 ஆண்டு பழமையானது . 1212 மிகப் பெரிய தூண்கள், 590 அடி நீளம் 435 அடி அகலம் கொண்ட உலகின் மிகப் பெரிய நடை மண்டபம், மற்றும் கற்கோயிலை எவ்வாறு உருவாகியிருக்க முடியும். பெரும் பாறைகளை பாம்பனிலிருந்து கடற் கடந்து எவ்வாறு ராமேசுவரம் கொண்டு சென்றிருக்க முடியும் என்பதை ஆங்கிலம் பயின்ற அறிவாளிகள் கண்டறிந்து சொல்லட்டும்.

#தஞ்சாவூர்_பெருவுடையார்_கற்கோயில்:-
கற்களே கிடைக்காத காவேரி சமவெளி பகுதியில் 66 மீட்டர் உயரம், 15 தளங்கள் கொண்ட தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயிலை இராஜ இராஜ சோழன் எவ்வாறு கட்டினான் என்பது புரியாத புதிர். கோயிலின் கடை கால் வெறும் 5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புவி ஈர்ப்பு மையத்தை கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது. சுமார் 80 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒற்றை கல்லை எவ்வாறு கோயிலின் உச்சியில் நிறுவியிருக்க முடியும். பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகளை ஆயிரம் ஆண்டுக்கும் முன்பே தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே ஒற்றை கல்லை உச்சியில் நிறுவி சிற்பிகள் கோயிலை உருவாகிள்ளனர். கோயில் முழுவதும் ஒரே தன்மையான செந்நிறக் கற்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதை இந்திய வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. ஆங்கில வழியில் பயின்றவர்களாலும், அவர்களது அறிவியல் தொழில் நுட்பத்தாலும் இன்றளவும் கண்டறிய இயலவில்லை. இராஜ இராஜ சோழன் என்ன ஆங்கிலம் கற்றவனா?

#தொல்காப்பியமும் #திருக்குறளும் :-
5000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொல்காப்பியமே, உலகில் உள்ள மொழிகளின் இலக்கண நூல்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது. தமிழ் நாட்டின் எல்லைகளை வரையறைத்து கூறியுள்ளது. ஓருயிர் முதல் ஆறறிவு உயிர் வரை பகுத்து கூறியுள்ளது. பன்னெடுங்காலத்திற்கு முன் இயற்றப்பட்ட இலக்கண நூல் அகத்தியம் என்று குறிப்பிடுவதன் மூலமாக தமிழில் தொன்மைக்கு சான்றாக இருக்கிறது.

2000 ஆண்டுக்கு முன் இயற்றப்பட்ட உலக பொது மறையான திருக்குறள் உலகின் 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர். தமிழ் மொழியின் சிறப்பை அறிந்த ஆங்கில மொழி அறிவு பெற்றவர்கள் தமிழ் மொழியை போற்றி கை கூப்பி வணங்குகின்றனர். இது போன்ற சொற்செழுமை வாய்ந்த நூல்களை ஆங்கிலத்தில் இயற்ற முடியமா ?எல்லா உறவு முறைகளுக்கும் ஆண்டி அங்கிள் என்றும் விளிக்கும் ஆங்கிலத்தில் இது சாத்தியமா? தமிழர்கள் சிந்திக்க வேண்டும் ?

#அணு :-
அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை ...அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே"
-ஆசான் திருமூலர்
சித்தர்களின் அறிவியலின்படி எண்ணிலாடங்கா கோடி அண்டங்கள், பேரண்டங்கள், தோன்றுவதற்கு மூல காரணமாக விளங்கி எல்லாப் படைப்புக்கும் அடிப்படையாக இருப்பது ஒரு அணு ஆற்றல். ஒரணுவை ஆயிரங்கூறாக்கினால் கிடைக்கும் அளவற்ற ஆற்றலையே சித்தர்களும் ஞானிகளும் பரமாணு என்று சொல்கிறார்கள். பரமாணு என்பது பிரிக்க முடியாத அணு என்பது பொருள். அந்தப் பரமணுவே பரந்து விரிந்து கிடக்கின்ற அண்ட பேரண்டங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை பல்லாயிரம் ஆண்டுகளு க்கு முன்பே கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அணுவை சுற்றி மின் காந்தம் அமைத்திருப்பதை கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அவ்வை பாட்டியும் அணுவைத் துளைத்து................... என்று பாடி உள்ளார்.

#சித்தர்கள் :-
சித்தர்கள் என்பவர்கள் மருத்துவர்கள், அறிவியலாளர்கள் ,மக்களை நல்வழிப்படுத்தும் சான்றோர்கள். நூறு ஆண்டுகள் கடந்து வாழும் சூத்திரத்தை கண்டறிந்தவர்கள். அவர்கள் கண்டறிந்த சித்த மருத்துவ முறையை நாம் மதிக்கக் தவறி விட்டோம். தீராத நோய்களுக்கெல்லாம் சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டு. கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த மருந்து சித்த மருத்துவ முறையே என தமிழக அரசு அறிவித்த பொழுதே தமிழர்கள் அதன் பயனை சிறப்பை முழுமையாக உணர்ந்தனர். இத்தகைய சித்த மருத்துவ முறையை சித்தர்கள் ஓலை சுவடிகளில் தங்களது தாய் மொழியான தமிழிலேயே எழுதி வைத்துள்ளனர்.

#வானியல்_அறிஞர்கள் :-
பூமி உருண்டை என்றும், சூரியனை சுற்றியே ஒன்பது கோள்கள் வலம் வருகின்றன என்றும், அதைத் தொடர்ந்து நிகழும் கும்மிருட்டு, முழுநிலவு மற்றும் பருவ மாற்றங்கள் என அனைத்தையும் அன்றே கணித்த வானியல் வல்லுனர்கள் தமிழர்களே! சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே ஒன்பது கிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளின் நிறம் கோள்களின் நிறத்தை அடிப்படையாக கொண்டே இருக்கும். தமிழர்கள் என்றோ கண்டுபிடித்ததை ஆங்கில அறிவு பெற்றவர்கள் இன்று கண்டறிந்து கூறுவதை நாம் உயர்வாக மதிக்கிறோம்.

#பூம்புகார் .......உலகின் தொன்மையான நகரம் :-
9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடற்கோளில் மூழ்கிய நகரம் பூம்புகார் ஆகும். கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கோளில் மூழ்கின. பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். பூம்புகார் நகர் கடலில் மூழ்கியுள்ளதை ஆங்கிலேயே அறிஞர் கிரகாம் குக் என்பவர் காணொளி, ஒளிபடச் சான்றுகளுடன் உலக நாடுகளுக்கு நிரூபித்தார். அதில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன.

#உலகை_கட்டி_ஆண்ட_தமிழன்:-
கடற் வழியே படை எடுத்து சென்று உலகை கட்டி ஆண்ட அருள்மொழித்தேவன் அறிமுகப்படுதியதே உலகம் முழுவதும் சனநாயகம் என்று போற்றி புகழும், மக்கள் வாக்களித்து தலைவனை தேர்ந்தெடுக்கும் குட வோலை முறையை அறிமுகப்படுத்தியவன் பேரரசன் அருள் மொழித் தேவனே.. வெற்றி பெற்ற நாடுகளில் எல்லாம் அம்மக்களை அடிமைபடுத்தாது சிறப்பான ஆட்சி புரிந்து, அம்மக்களை விடுதலையோடு வாழ வைத்தவன் தமிழனே.


அத்தகைய உயரிய பண்பாடு ஒழுக்க நெறிகளோடு வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பது நிரூபனமாகிறது. இவ்வளவும் நமது பாட்டன் முப்பாட்டனின் பெருமைகள் நாம் இவற்றை பாதுகாப்பு அழியாமல் காப்பாற்றினாலே போதும் இவையணைத்தும் நான் படித்து ரசித்தவையே உங்களது மேலான பார்வைக்கும் பதிந்திருக்கிறேன் நிறைய பகிருங்கள் பண்டயத் தமிழர்களின் வரலாற்றை நமக்கு அடுத்துவரும் தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் நமது முன்னோர்கள் எவ்வளவு சிறப்பான வாழ்க்கையினை வாழ்ந்துள்ளார்கள் என்பதை அறிய இது உதவும் நன்றி வணக்கம்.
===============================================

13.விளம்பரதாரர் நிகழ்ச்சி பகுதியில்:- 

==================================================


14.பயனுள்ள முகநூல் பக்கங்களில் இந்தமாதம் பகுதி:- 
இந்தமாத சிறந்த முகநூல் பக்கங்களாக:- 
1. கீரை மற்றும் கிழக்கு வகைகளை சமையலுக்கு நறுக்கும்போது, சமயலுக்குத் தேவையற்ற காம்பு, தண்டு, கிழங்கு வேர் போன்ற பகுதிகளை தூக்கியெறியாமல் அவைகளை நமது வீட்டுத் தோட்டத்தில் அல்லது அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனி பகுதியில் மண்தொட்டிகளில் நட்டுவைத்து நீரூற்றி பராமரித்துவந்தால் சிறு தோட்டம் அமைவதோடு வீட்டிற்குத் தேவையான கொத்தமல்லி, மிளகாய், கீரை, காய்கள் போன்றவை இலவசமாக நமது வீட்டுத்தோட்டத்த்திலேயே கிடைத்துவிடும். மேலும் அருமையான பல விவரங்களுக்கு இந்த முகநூல் பக்கத்தில் இணைந்து காணொளியில் பல விவரங்களை பெற்று பயன்பெறலாம்.
https://www.facebook.com/officialgoodful/videos/1300037320066731/
https://www.facebook.com/officialgoodful/

2. தமிழ் கடல். https://www.facebook.com/groups/264740130252643/ என்ற முகவரியில் சொடுக்கி (click செய்து) தமிழ் கடல் குழுமத்தின் உள்ளே நுழைந்து, குழுமத்தில் இணைந்து பயன்பெறுங்கள்.

3. முகநூலில் சிறுகதைகள் என்னும் முகநூல் பக்கத்தையும் 
http://www.facebook.com/siru.kathaigal நமது வாசகர் வட்ட குழுவினர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம். 
==================================================

15. வாசகர் வட்ட நிகழ்ச்சியின் சிறப்பு புகைப்படங்கள் :-
பகுதி II -கால்வண்ணம் :- (நடனம், நாடகம், விளையாட்டு போட்டிகள்) :-











அன்புள்ள வாசகர்களுக்கு:- நாங்கள் தொகுத்து வழங்கிய பதிவுகளில் உள்ள குறை நிறைகளை வாசகர்கள், அன்பான முறையில் எங்களுக்கு எடுத்துக்கூறி, எங்களது பதிவுகள் மேலும் சிறப்படைய வாழ்த்தி உற்சாகப்படுத்துமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு   
வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ் தமிழ் ரோஜாக்கள்.
நன்றி... மீண்டும் அடுத்தமாத இதழில் சந்திப்போம்... வணக்கம்.