வருகை தாருங்கள், தமிழில் சிறுவர்கள் தொகுத்து வழங்கும் வலைப்பதிவர்களின் மாத இதழ், ஒவ்வொரு மாதமும் ஆங்கில மாதத்தின் 3-வது ஞாயிறுதோறும் (தமிழ் மாதத்தின் முதல் ஞாயிறு அன்று) இரவு 9 மணியளவில் வெளியாகும் சுட்டீஸ் ரோஜாக்களின் "குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழ். http://gulkanthu.blogspot.in/
கற்க கசடற….!! !! வாய்மையே வெல்லும்!!
“வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம்”
160/Sector-4, Vaishali, Ghaziabad, NCR-New Delhi.-201012
e-mail: vaishalireaderscircle@gmail.com
___________________________________________________________________
சுட்டீஸ் இதழ்=13 சித்திரை மாதம்-தேதி 16-04-2017. வணக்கம், தாங்களின் வருகைக்கு நன்றி, இந்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழில்" -சித்திரை மாத வலைப்பதிவு:- இந்த இதழின் ஆசிரியராக, தொகுத்து வழங்குபவர்:- (Editor of the Page) வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ் குழுவினர்கள் -வைஷாலி -NCR-புது தில்லி.
அடுத்து வரும் மே மாதம் -2017, 21-05-2017 வைகாசி -மாத வலைப்பதிவு இதழின் ஆசிரியராக, (Editor of the page) இந்த வலைப்பக்கத்தை தொகுத்து வழங்க ஆவலுடன் காத்திருப்பவர் யார்? விருப்பம் உள்ளவர் உங்கள் விருப்பத்தை உடனே தெரியப்படுத்துங்கள். மின் அஞ்சல் "vaishalireaderscircle@gmail.com"
@கணினியில் தமிழ், கை தொலைப்பேசியில் தமிழ், விழிப்புணர்வு பயிச்சிகள் பற்றிய விவரங்கள்:-
@குட்டி கல்கண்டு தகவல்கள்... நவீன கைத்தொலைப்பேசி A2Z - தகவல்கள்:-
@தமிழில் வாட்ஸ் அப், முகநூல் -பேஸ்புக், குறுஞ்செய்தி,மின்னஞ்சல், செல்பி....பயிற்சிகள்???
@தொலைப்பேசியை தவறாக பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு?:
@நீண்டநேரம் கைத்தொலைப்பேசி பயன்படுத்துபவர்கள் மனநோயாளிகளா?
@ ஸ்மார்ட் போன் வைத்திருப்பது கௌரவப்பிரச்னை என கடனாளியாக ஆக்குகிறதா?
@கைத்தொலைபேசிப் பாவனை குறித்த நன்மைகளும் தீமைகளும்?
@ சிரிக்கவும் சிந்திக்கவும் பகுதி :-
@ வாட்ஸ் அப், பேஸ்புக்! தமிழ் வார்த்தைகள்:-
@ WIFI வசதி இல்லை என்று இனி கவலை படவேண்டாம்!வீட்டில் உள்ள பல்ப் மூலம் இண்டர்நெட் பயன்படுத்தலாம்...
@உலகில் நவீன கைத்தொலைபேசிகளை பயன்படுத்துபவர்களின் புள்ளி விவரம் :-
@ கைத்தொலைப்பேசியில் எளிதாக தமிழில் எழுத:-
@ உங்களுக்குத் தெரியுமா?
@. புதிய எட்டு வித்தியாச புதிர் போட்டி :- சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்:-
@ சென்றமாத புதிர் போட்டியில் வெற்றிபெற்றவர்கள் விவரம்:-
@Hardware மற்றும் Network பற்றி.
@ உங்கள் ஆண்ட்ராய்டு போனில் எளிதாக லான்ச் ஆப் செய்ய:-
@கணினியிலும் கைத்தொலைப்பேசியாலும் கண்பார்வை பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:-
@ சுய வருமானம் தரும் கணினி ஹார்டுவேர் தொழில் பயிற்சி:-
@ ‘ஸ்மார்ட்’ வேலைவாய்ப்பு:-
@ உங்களது தொலைப்பேசியை மறதியாக எங்கோ வைத்துவிட்டீர்களா? கைதட்டி உங்களின் தொலைப்பேசி இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க...:-
@ புகைப்படங்களை திருத்தியமைக்கும் ஆந்திராய்டு செயலி எப்படி செயல்படுகிறது?
@ 3ஜி போன்களில் ஜியோ 4ஜி சிம் பயன்படுத்துவது எப்படி?
@ ஜியோ இன்டர்நெட் வேகத்தை எப்படி அதிகரிப்பது ?
@ இந்திய பிரதமரின் ஆதார் அடிப்படையிலான ‘பீம்’ ஆப் என்றால் என்ன?
@ பீம் BHIM-செயலி மூலம் பணப்பரிவர்த்தனை:-,
@ தமிழில் நிரல் எழுது புத்தகம்:-
@ தமிழிலுள்ள இலவச மின்புத்தகங்கள் எப்படிப் பெறலாம்?:-
@ என்று தணியும் இந்தவலைப்பின்னல் -Wi-Fi பாதுகாப்பு தாகம்?
மேலும் பல நிகழ்ச்சிகளின் தொகுப்புகள், புகைப்படங்கள், போட்டிகள், பரிசுகள்.....
வருகை தாருங்கள் 16-04-2017 இரவு 9 மணியளவில் வெளியாகும் சுட்டீஸ் ரோஜாக்களின் "குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழ் -13
======================================
வைஷாலி வாசகர் வட்டத்தின் 38வது வாசகர் வட்ட சந்திப்பு 16-04-2017 தேதி, 3-வது ஞயிறு அன்றய சித்திரை மாத கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும்....
வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :-
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து,
தொடர்ந்து எங்க வீட்டு "நூலகம் "
படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும்
(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம்)
"இந்த மாத தலைப்பைச் சார்ந்த" கணினியில் தமிழ், கை தொலைப்பேசியில் தமிழ், என நவீன வழியில் தமிழ் மொழியை எடுத்தாளும் விழிப்புணர்வு பயிற்சி மாதக் கொண்டாட்டங்களும். நிகழ்ச்சிகளும். போட்டிகளும் பரிசுகளும்.. என நடந்தேறிய அன்றய நிகழ்ச்சியில் உதவிய அனைவரையும் பாராட்டி, நிகழ்ச்சி இனிதாக நிறைவுபெற்றது.
"ஒவ்வொரு மதமும் ஒரு விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை வகுப்புகள். என இந்த வருடம் முழுவதும் கற்றுக்கொள்வோம், தெரிந்துகொள்வோம் பயிற்சிப் பட்டறை மாதங்களின் வருடமாக, நமது வைஷாலி வாசகர் வட்டத்தின், ஒவ்வொரு மாதமும், ஆங்கில மதத்தின் 3வது ஞாயிறு அன்றைய வாசகர் வட்ட சந்திப்பில், ஒவ்வொரு மதமும் ஒரு விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை வகுப்புகள்...இந்த மாதம்:-கணினியில் தமிழ், கை தொலைப்பேசியில் தமிழ் என நவீன வழியில் தமிழ் மொழியை எடுத்தாளும் பயிற்சி மாதக் கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும். கதைகள் மற்றும் கட்டுரைகள், பயிற்சிப்பட்டறை சார்ந்த போட்டிகளும் பரிசுகளும் என இந்தமாத இதழில் பல விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
மேலும் இந்த மாத சுட்டீஸ்களின் ஏராளமான செய்திகளை மிகவும் பயனுள்ள வகையில் நமது வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ் "குல்கந்து" குழுவினர்கள் தொகுத்து தந்திருக்கிறார்கள்....
16-04-2017 அன்றய வைஷாலி வாசகர்வட்ட 38வது சந்திப்பில் வந்திருந்த அனைவரையும் கைத்தொலைப்பேசியை எப்படி பயன்படுத்தவேண்டும் என்றும் தமிழ் மொழியில் எப்படி பயன்படுத்துவது? என்ற கேள்விக்கு அனைவரும் தந்த பதில்களை கீழே தரப்பட்டுள்ளது.
அ) தொலைப்பேசியில் அதிகநேரம் பேசக்கூடாது காரணம் சில விபத்து மற்றும் மருத்துவமனை நோயாளி போன்ற அவசர செய்தியை சொல்ல மற்றவர்கள் முயற்சிக்கும்போது உங்களது தொலைபேசி இணைப்பு கிடைக்காமல் போகலாம். ஆகவே தொலைப்பேசியில் சுருக்கமாக பேசப் பழகவேண்டும்.
இ ) காதுகளில் ஒலிப்பான் ஹெட் போன் வைத்துக்கொண்டு பாடல்களை கேட்டபடி சாலைகளில் செல்லக்கூடாது. அதனால் நமக்கு பின்னால் வரும் வாகனங்களின் ஒலிப்பான்களின் சப்தம் கேட்க்காமல் விபத்து நடக்க வாய்ப்புகள் ஏற்படும்.
ஈ ) மருத்துவமனை மற்றும் நோயாளிகளின் அறையில் மிக அதிக சப்தத்தை எழுப்பும் கைத்தொலைப்பேசி அழைப்பு ஒலிகளை பயன்படுத்தக்கூடாது. அதனால் நோயாளிகளுக்கு சிரமங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
உ) இரவில் தொலைப்பேசியை மின்னிணைப்பில் பொறுத்திவைத்துவிட்டு நாம் தூங்கப்போனால் தொலைப்பேசி வெப்பமடைந்து வெடித்து தீ பிடிக்கும் அபாயங்கள் ஏற்படலாம்.
ஊ) தொலைப்பேசியை இலாயக்கிக்கொண்டே அல்லது பேசிக்கொண்டே தொலைப்பேசி மின்னிணைப்பு செய்து மின்கலம் மின்னூட்டல் பணியை செய்யக்கூடாது ஒரே நேரத்தில் தொலைப்பேசியில் பேசவும் இயக்கவும் செய்வதால் தொலைப்பேசி மின்கலன் வெப்பமடைந்து வெயிடித்து விபத்துக்கள் நேர வாய்ப்புள்ளது.
ஏ) வெப்பமான பகுதிகள், மின்காந்தப்பகுதிகள் மற்றும் நீர்நிலைகள் உள்ள இடங்களில் கைத்தொலைப்பேசியை பயன்படுத்தாமல் தவிர்க்கவேண்டும்.
ஏ ) ஆபத்தான இடங்களில் செலஃபீ என்கிற சுய புகைப்படங்களை எடுக்கும் செயலை செய்யக்கூடாது.
ஐ ) அவசர உதவிக்கான போலீஸ், தீயணைப்பு, முதலுதவி, முக்கிய அரசு அதிகாரிகளின் தொலைப்பேசியங்களை எப்போதும் நினைவில் இருக்குமாறு கைத்தொலைப்பேசியில் எண்களை பதிவுசெய்துவைத்திருக்கவேண்டும்.
ஐ ) அவசர உதவிக்கான போலீஸ், தீயணைப்பு, முதலுதவி, முக்கிய அரசு அதிகாரிகளின் தொலைப்பேசியங்களை எப்போதும் நினைவில் இருக்குமாறு கைத்தொலைப்பேசியில் எண்களை பதிவுசெய்துவைத்திருக்கவேண்டும்.
ஒ) கைத்தொலைப்பேசியை வேறு எவரும் பயன்படுத்தமுடியாத அளவில் ரகசிய எங்களை பயன்படுத்தி பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும்.
என மேலும் பல விவரங்களை தெரிவித்தனர்.
@ மனஅழுத்தநோயாளி:- கைத்தொலைபேசிக்கு அடிமையானவர்கள், ஒருவித மனநோய்க்கு உள்ளானவர்களென மனநல வைத்தியர்கள் கூறுகின்றனர்.
@தற்கொலை எண்ணங்கள்:- நீண்டகாலம் கைத்தொலைப்பேசி பயன்படுத்தியவர்கள், கைத்தொலைப்பேசி இல்லாமல் வாழமுடியாது என்கிற மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் ஆகவே கைத்தொலைப்பேசி மோகத்தினால் தனது உயிரையே மாய்த்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
@வீண் சிலவுகள் செய்து கடனாளியாகிறார்கள்:- ஸ்மார்ட் போன் வைத்திருப்பது கவ்ரவப்பிரச்னை என்கிற நிலையில் பலவகையான கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் மிக உயர்ந்த விலை கொண்ட கைத்தொலைப்பேசிகளை கடன் வாங்கியாவது வாங்குவதால் பின்னாளில் கடனைத்திருப்பி செலுத்தமுடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
@கைத்தொலைபேசிப் பாவனை குறித்து நன்மைகளையும் தீமைகளையும் புரிய வைப்பதில் செய்தி ஊடகங்கள் நிறையவே பங்காற்ற வேண்டியிருக்கின்றது. அதேசமயம் சமூக ஆர்வலர்களும் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கைத்தொலைபேசியின் நன்மை தீமைகளை பள்ளிக்கூட பாடசாலை மட்டத்திலிருந்து எடுத்துரைப்பது சிறந்ததென அறிவுஜீவிகள் கூறுகின்றார்கள்.
WhatsApp - புலனம்
Facebook - முகநூல்
Youtube - வலையொளி
Instagram - படவரி
WeChat - அளாவி
Messanger - பற்றியம்
Twitter - கீச்சகம்
Telegram - தொலைவரி
Skype - காயலை
Bluetooth - ஊடலை
WiFi - அருகலை
Hotspot - பகிரலை
Broadband - ஆலலை
Online - இயங்கலை
Offline - முடக்கலை
Thumbdrive - விரலி
Hard disk - வன்தட்டு
Battery - மின்கலம்
GPS - தடங்காட்டி
CCTV - மறைகாணி
OCR - எழுத்துணரி
LED - ஒளிர்விமுனை
3D - முத்திரட்சி
2D - இருதிரட்சி
Projector - ஒளிவீச்சி
Printer - அச்சுப்பொறி
Scanner - வருடி
Smartphone - திறன்பேசி
Sim Card - செறிவட்டை
Charger - மின்னூக்கி
Digital - எண்மின்
Cyber - மின்வெளி
Router - திசைவி
Selfie - தம்படம்
Thumbnail - சிறுபடம்
Meme - போன்மி
Print Screen - திரைப்பிடிப்பு
Inkjet - மைவீச்சு
Laser - சீரொளி
=======================================
@ WIFI வசதி இல்லை என்று இனி கவலை படவேண்டாம்!வீட்டில் உள்ள பல்ப் மூலம் இண்டர்நெட் பயன்படுத்தலாம்...
இனி இன்டர்நெட் பயன்படுத்த ‘வைபை’ வசதி இல்லையே என்று கவலைப்பட வேண்டாம். ஒரு பல்பை போட்டால் ‘வைபை’ வசதி கிடைத்து விடும்.
@ WIFI வசதி இல்லை என்று இனி கவலை படவேண்டாம்!வீட்டில் உள்ள பல்ப் மூலம் இண்டர்நெட் பயன்படுத்தலாம்...
இனி இன்டர்நெட் பயன்படுத்த ‘வைபை’ வசதி இல்லையே என்று கவலைப்பட வேண்டாம். ஒரு பல்பை போட்டால் ‘வைபை’ வசதி கிடைத்து விடும்.
இனி இன்டர்நெட் பயன்படுத்த ‘வைபை’ வசதி இல்லையே என்று கவலைப்பட வேண்டாம். ஒரு பல்பை போட்டால் ‘வைபை’ வசதி கிடைத்து விடும்.
அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பல காலமாக குழந்தைகளுக்கு டிஜிட்டல் பொம்மை முதல் வீடியோ கேம் வரை, பல்பு முதல் பட்டாசு வரை எல்லாவற்றையும் மலிவு விலையில் அள்ளிக்குவிக்கும் சீனா தான் இப்போது இந்த ‘பல்ப்’ மூலம் இன்டர்நெட் வசதியையும் கண்டுபிடித்துள்ளது.
ஒரு வாட் பல்பை வாங்கி எரிய விட்டால் போதும், அடுத்த நொடி இன்டர்நெட்டுக்கு உயிர் வந்துவிடும். லைட்டை ஆப் செய்து விட்டால் இன்டர்நெட்டுக்கான ‘லைபை’ போய் விடும். ஒரு பல்பு எரியவிட்டால் நான்கு கம்ப்யூட்டர் வரைக்கும் இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும்.
விநாடிக்கு 150 மெகாபைட் வேகம் கொண்டதான இந்த ”லைபை” குறித்து இன்னும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. வர்த்தக ரீதியாக பயன்படுத்த முழு அளவில் தயாரிக்கப்படும் என்று இதை கண்டுபிடித்த ஷாங்காய் பல்கலைக்கழக பேராசிரியர் சிநான் கூறினார்.
லெட் வகை பல்பில் மைக்ரோசிப் பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் அலைக்கற்றைகள் எழுப்பப்பட்டு, இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்படுகிறது. சீனாவில் ஷாங்காயில் நவம்பர் 5 ம் தேதி ஆரம்பிக்கப்பட உள்ள சர்வதேச கண்காட்சியில் இந்த ‘லைபை’ அறிமுகம் செய்யப்படுகிறது.
வழக்கமான ‘வைபை’ வசதி, ரேடியோ அலைகளை கொண்டு ஏற்படுத்தப்படுகிறது. அதன் மூலம் இன்டர்நெட் உயிர்பெறுகிறது. ஆனால், இந்த ஒரு வாட் பல்பை வைத்து சீனா, இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும் என்று கண்டுபிடித்துள்ளது.
மலிவு விலை பொருட்களை கண்டுபிடி த்து உலக நாடுகளில் சந்தையில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ள சீனா வின் ‘லைபை’ கண்டுபிடிப் பால் தொழில்நுட்ப புரட்சி ஏற்படும் என்று தெரிகிறது.
சீனாவில் மட்டும் 60 கோடி பேர் இன்டர்நெட் வசதி வைத்துள்ளனர். அவர்கள் எல்லாம் ‘வைபை’யில் இருந்து தங்கள் சொந்த நாட்டு கண்டுபிடிப்பான ‘லைபை’க்கு மாறி விடுவர். மேலும், உலக நாடுகளில் பலவும் இந்த வசதிக்கு மாறினால், ‘வைபை’க்கு டாட்டா காட்டும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று கணக்கு போடுகிறது சீனா.
===================================
@ கைத்தொலைப்பேசியில் தமிழ்:- இசை இயல் நாடகத் தமிழாக வாழ்ந்த தமிழ் இப்போது மின் தமிழாக உருவெடுத்து வந்துள்ளது. அதை முறையாக தமிழர்கள் பயன்படுத்தினால் தமிழை அழியா மொழியாக நாம் தக்கவைக்கலாம். இந்தியாவில் இந்தி மொழிக்கு மட்டுமே இந்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து வளர்த்து வரும் நிலையில், இப்போது தமிழ் மின்னணு மொழியாக பயன்பாட்டில் வந்துள்ளது என்பது தமிழை வளர்க நமக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாகும். இதை பயன்படுத்தி தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வோம் .
@ உலகில் கைத்தொலைபேசிகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 800 கோடியை எட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் தொலைத்தொடர்பு முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் தொலைத்தொடர்பு முகவர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு இறுதி கணக்கின்படி, உலகில் கைத்தொலைபேசிகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 800 கோடியை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சராசரியாக 100 பேரில் 86 பேர் நவீன கைத்தொலைபேசியை பயன்படுத்துகின்றனர் என்பதை குறிப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
@ கைத்தொலைபேசி புத்தகம் பற்றி தெரியுமா? இதோ இந்த இனைய முகவரியை சொடுக்கி முழு விவரங்களையும் தெரிந்துகொள்ளுங்கள் http://halwacity.blogspot.in/2005/05/blog-post_21.html
@ கைத்தொலைபேசியில் தமிழில் எழுதுவது என்பதை பலரும் முயற்சிப்பதில்லை ஒருவர் அனுப்பிய தமிழ் செய்தியை மற்ற அனைவரும் முன்னனுப்புவதில்தான் பகிர்ந்துகொள்வதில்தான் அதிகமானவர்கள் விரும்புகின்றனர்.
@ உங்களுக்குத் தெரியுமா? ஆங்கிலத்தில் selfish என்றால் சுயநலம் ஆகவே தன்னை ஒரு புகைப்படம் எடுக்கக் கூட உணவினர்களோ, நட்போ இல்லாத தனிமை சூழ்ந்த அந்த கையறு நிலையையே ஆங்கிலேயர்கள் Selfie செலஃபீ என்று அழைத்தனர்.
@ உங்களுக்குத் தெரியுமா? ஆங்கிலத்தில் selfish என்றால் சுயநலம் ஆகவே தன்னை ஒரு புகைப்படம் எடுக்கக் கூட உணவினர்களோ, நட்போ இல்லாத தனிமை சூழ்ந்த அந்த கையறு நிலையையே ஆங்கிலேயர்கள் Selfie செலஃபீ என்று அழைத்தனர்.
=====================================
@. புதிய எட்டு வித்தியாச புதிர் போட்டி :- சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்"..... "சித்திரை-மாத-படத்தில் உள்ள (8) எட்டு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் -வலைப்பதிவு இதழ் போட்டி என்-13.
சரியான விடை அடுத்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" http://gulkanthu.blogspot.in/வலைப்பதிவர் இதழில் வெளியாகும்.
போட்டியில் பங்குகொள்ள விருப்பமுடையவர்கள் விடைகளை "vaishalireaderscircle@gmail.com" என்கிற மினஞ்சல் முகவரிக்கு 10-05-2017 முன்பாக அனுப்பிவைக்கவேண்டும். சரியான விடை எழுதிய அனைவருக்கும் அடுத்தமாத வாசகர் வட்ட சந்திப்பில் பரிசுகள் வழங்கப்படும்.
$ சென்ற மாத "சுட்டீஸ் குல்கந்து" வலைப்பதிவர் இதழ்-12 மார்ச் -2017 பங்குனி -மாதம் வலைப்பதிவு இதழ் 6 வித்தியாசப் போட்டி என்-12. போட்டிக்கான சரியான விடை,
1)முதல் வரிசையில் இரண்டு பச்சைக்கிளிகள் 2)முதல் வரிசையில் சிகப்புநிற இரட்டைக்கிளி 3) மூன்றாவது வரிசையில் பச்சைநிற இரட்டைக்கிளி 4) நான்காவது வரிசையில் இரண்டு சிட்டுக்குருவிகள் 5) நான்காவது வரிசையில் இடது ஓரத்தில் இரண்டு இரட்டை சிட்டுக்குருவிகளுக்குப் பின்னால் ஒரு சிட்டுக்குருவி மறைவில் ஒளிந்துள்ளது 6) வழக்கமான ஓவியம் வரைந்தவரை கௌரவிக்கும் வகையில் அவரது பெயர் கையொப்பத்தில் வட்டம் அல்லது பெயரின் கீழ் கோடிட்டு காட்டுதல்.
சென்ற மாத ஆறு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடையை 35 நபர்கள் மட்டுமே குறிப்பிட்டிருந்தனர், தமிழில் விடை எழுதியவர்கள்=29, ஆங்கிலத்தமிழில் எழுதியவர்கள்=05, ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=01, ஹிந்தி மொழியில்=0 நபர்களும், பிற மொழியில்=0 நபரும், மேலும் சிலர் ஆறுக்கும் அதிகமான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.
==============================================
@Hardware மற்றும் Network பற்றி, இணையத்தின் மூலம் தமிழில் கற்றுக்கொள், ஒரு பயனுள்ள இணையதளத்தினை பற்றி இன்று நாம் பார்க்கப்போகிறோம்.
இவர்களுடைய பாடங்கள் ஒவ்வொன்றும் வீடியோ மூலம் கற்பிக்கப்படுவதால் நாம் அந்த பாடங்களை கற்றுக்கொள்வது மிக இலகுவாக இருக்கும்.
இங்கு 2003 server , C Programming , Hardware ,Windows 7, Windows XP போன்றவற்றை தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளத்திலும் கற்றுக்கொள்ள முடியும்.
இங்குள்ள வீடியோவினை முழுமையாக டவுன்லோட் செய்துதான் பார்க்க வேண்டும் என்று இல்லை, குறிப்பிட்ட பாடம் தொடர்பான Demo வீடியோ இருக்கிறது.அதை பாருங்கள் பிடித்து இருந்தால் Download செய்து கொள்ளுங்கள்.
http://bitnetz.com
http://kurumanveli.blogspot.in/2013/04/hardware-network-hardware-network.html
=====================================
@ எளிதாக லான்ச் ஆப் செய்யலாம்: உங்கள் ஆண்ட்ராய்டு போன் லாக்கில் உள்ள நிலையில் நீங்கள் வைத்திருக்கும் ஆப்ஸ்கள் ஹோம் ஸ்க்ரீனில் தெரியும் வகையில் இருப்பதற்கு பெயர்தான் லான்ச் ஆப்.
ஆண்ட்ராய்டு நெளகட் மாடலில் மேல் நோக்கி ஒரே ஒரு ஸ்வைப் செய்தால் போதும் உங்கள் ஆப்ஸ்கள் தெரியும். ஆனால் இந்த ஆண்ட்ராய்டு ஓ வெர்ஷனில் நீங்கள் ஹோம் ஸ்க்ரீனில் எந்த இடத்தில் ஸ்வைப் செய்தாலும் லான்ச் ஆப் செயல்படும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.
எனவே இதுவொரு எளிதான முறை ஆகும். ஒருவேளை உங்களது போனில் இந்த ஆப்சன் செயல்படவில்லை என்றால் கூகுள் ப்ளே ஸ்டோர் சென்று App Swap drawer என்ற செயலியை டவுன்லோடு செய்து வைத்து கொண்டீர்கள் என்றால் மிக எளிதாக இருக்கும்.
================================
@கணினியிலும் கைத்தொலைப்பேசியாலும் கண்பார்வை பாதிக்கப் படலாம் எனவே முன்னெச்சரிக்கை நடவைக்கையாக:-
@ சுய வருமானம் தரும் கணினி ஹார்டுவேர் தொழில் பயிற்சி:-
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம் சொல்லியுள்ளபடி, நாட்டில் லட்சக்கணக்கான வேலைகளைத் தரும் வாய்ப்பு கொண்டது கம்ப்யூட்டர் ஹார்டுவேர் துறை. அடிப்படைப் பழுது நீக்கல் தொடங்கி, நிறுவனங்களின் சிஸ்டம் அட்மின்வரை பல்வேறு நிலைகளில் வேலைவாய்ப்பு உண்டு.
சுய வருமானம் தரும் கணினி ஹார்டுவேர் தொழில் பயிற்சி:-எந்தப் பிரிவுப் பாடமென்றாலும் கணினிப் பயன்பாடு தவிர்க்க முடியாதது என்பதால் அறிவியல், பொறியியல் மட்டுமன்றி அனைத்துத் துறையினரும் கணினி ஹார்டுவேரில் அடிப்படைப் பயிற்சி பெறலாம். படிப்பு மற்றும் பணி சார்ந்து பயன்படாவிட்டாலும், சிறு பழுதுகளை நாமே சரிபார்க்கவும் இப்பயிற்சி உதவும்.
அறிவியல், பொறியியல் படிப்பை மேற்கொள்ள இருப்பவர்கள் தாராளமாக இந்த விடுமுறையில் கணினி ஹார்ட்வேர் பயிற்சி பெறலாம். இது கல்லூரி மேற்படிப்பின்போது நிச்சயம் கைகொடுக்கும். புத்திசாலித்தனமாக இதையே பகுதி நேரப் பணியாகப் பொருளீட்டுவதற்குப் பயன்படுத்தும் கல்லூரி மாணவர்கள் தற்போது அதிகரித்திருக்கிறார்கள்.
இந்த வாய்ப்புகள் சம்பாத்தியம் மட்டுமன்றி, வளரும் துறையின் புதிய சவால்களை எதிர்கொள்ளவும் உதவுகிறது. இத்தகைய ஹார்ட்வேர் படிப்புகள் எவையெவை, அவற்றை எப்படிப் படிக்கலாம் என்று ஆலோசனை வழங்குகிறார், துறை சார்ந்த வல்லுநர் வந்தவாசி ஜெ.சதீஷ்குமார்.
அடிப்படை ஹார்ட்வேர் பயிற்சிகள்
பிளஸ் 2 என்றில்லை பத்தாம் வகுப்பு முடித்ததுமே கணினி ஹார்ட்வேர் பயிற்சி பெறலாம். எலெக்ட்ரானிக்ஸ் துறையில் ஆர்வமுள்ளவர்களுக்குக் குறுகிய காலப் பயிற்சி போதும். சான்றிதழ், டிப்ளமோ படிப்புகளாகவும் இவை கிடைக்கின்றன. சாப்ட்வேர் பயிற்சி மையங்கள் பலவும் அடிப்படை ஹார்டுவேர் பயிற்சியை வழங்கிவருகின்றன. ஆனால் ஹார்ட்வேர் துறையைப் பொறுத்தவரை, பயிற்சி நிறுவனங்கள் அளிக்கும் சான்றிதழுக்கு மதிப்பில்லை.
ஒருவர் நிரூபித்துக் காட்டும் திறன் மற்றும் நடைமுறை அறிவையே வேலைவாய்ப்பின்போது நிறுவனங்கள் பரிசோதித்து அறிகின்றன. அதனால், குறுகியகாலப் பயிற்சியைத் தொடர்ந்து நடைமுறையில் கணிசமான அனுபவம் பெற்ற பிறகு ஆன்லைன் சான்றிதழ்களை வழங்கும் தேர்வுகளை எதிர்கொள்ளலாம். ஹார்ட்வேர் துறையில் A+, நெட்வொர்க்கிங்கில் N+ எனச் சான்றிதழ்களைப் பின்னர் பெற்றுக்கொள்ளலாம்.
நடைமுறை அனுபவம் அவசியம்;-
கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் பயிற்சிகளில் card level, chip level என 2 நிலைகள் உண்டு. இந்த விடுமுறை இடைவெளியில் கார்ட் லெவலில் காலெடுத்து வைக்கலாம். தொடர்ந்து ஆர்வத்தின் அடிப்படையில் கல்லூரி தொடங்கியதும், வார இறுதி விடுமுறையில் சி லெவலில் பயிற்சி பெறுவது பற்றி, பின்னர் தீர்மானித்துக்கொள்ளலாம். பயிற்சி மையங்களில் வழங்கப்படும் பாடத்தைவிட நடைமுறைப் பயிற்சியே அவசியம்.
இந்தப் பயிற்சிகளை முடித்த மாணவர்கள், பயிற்சி பெற்ற நிறுவனங்கள் அல்லது மற்ற இடங்களில் ஊதியம் இன்றி உழைப்பை வழங்க முன்வருவது அனுபவ அறிவை விருத்தி செய்யும். போதிய அனுபவ அறிவைப் பெற்ற பின்னர், நண்பர்களுடன் இணைந்து தொழில் ரீதியாகவோ அல்லது தமக்கான வட்டத்தை உருவாக்கிக்கொண்டு அழைப்பின் பெயரிலோ ஹார்ட்வேர் பழுது நீக்கல் பணியை மேற்கொள்ள முடியும். இதில் பெரிய முதலீடு எதுவுமின்றி மாதந்தோறும் கணிசமான தொகையைக் கல்லூரி மாணவர்கள் பலர் சம்பாதிப்பதைக் கண்கூடாகப் பார்க்கலாம்.
நெட்வொர்க்கிங் பயிற்சிகள்
இன்றைய இணையப் பயன்பாட்டு உலகில் நெட்வொர்க்கிங்கில் பயிற்சி பெறுவதும் கூடுதல் திறனை வளர்த்தெடுக்க உதவும். சிறு அலுவலகமானாலும், உலகளாவிய கார்ப்பரேட் நிறுவனமானாலும் கணினிகளைப் பிணைத்த அலுவலகப் பயன்பாட்டில் இந்தத் துறைக்கு வல்லுநர்கள் தேவை இன்னமும் அதிகரிக்கும். பேசிக் மற்றும் அட்வான்ஸ்டு பயிற்சிகளைப் பெற்றவர்கள் cisco சான்றிதழ்களைப் பெற முயல்வதன் மூலம், தங்கள் திறனைத் தீர்மானித்துக் கொள்ளலாம்.
இதன் அடுத்த கட்டமாக Administration level பயிற்சியைப் பெறலாம். மைக்ரோசாப்ட், ஐ.பி.எம். சான்றிதழ்கள் இந்தத் துறையில் நாம் பெற்ற பயிற்சிக்குக் கட்டியம் கூறும். பெரிய நிறுவனங்களில் பணியில் சேர விழைகையில் இந்தச் சான்றிதழ்கள் உங்கள் மதிப்பைக் கூட்டும்.
இந்த ஹார்ட்வேர் மற்றும் நெட்வொர்க்கிங் பயிற்சிகள் 3 மாதத்தில் தொடங்கி 1 வருடப் பயிற்சியாகக் கிடைக்கின்றன. கோடைகாலப் பயிற்சியாக வழங்குபவர்கள் துரிதப் பயிற்சியாக இந்த விடுமுறையில் பாடத்தை வழங்கிவிட்டு, நடைமுறை பயிற்சியைச் சாவகாசமாக அளிப்பதும் உண்டு. ரூ. 2 ஆயிரத்தில் தொடங்கி ரூ. 16 ஆயிரம்வரை, நிலைகள் மற்றும் பயிற்சி மையங்களைப் பொறுத்துக் கட்டணங்கள் வேறுபடும்.
ஆன்லைனில் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் தற்போது அதிகரித்துள்ளன. ஆனால், அடிப்படைப் பயிற்சியை நேரில் பெறுவதே சிறந்தது. மேலதிகப் பயிற்சிகளைக் கல்லூரி படிப்பின் போக்கில் பகுதி நேரமாக ஆன்லைனில் பயிலலாம்.
இதர ஹார்ட்வேர் பயிற்சிகள்:-
சில வருடங்களுக்கு முன்புவரை கோடை விடுமுறைப் பயிற்சியாக இருந்து வந்த ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், டிவி மெக்கானிசம் பயிற்சிகள், ஐ.டி.ஐ. படித்தவர்கள் மற்றும் தொழில்முறை அனுபவஸ்தர்கள் ஆகியோரது ஆக்கிரமிப்பாலும், மாணவர்களின் கம்ப்யூட்டர் ஹார்டுவேர் படிப்பு மோகத்தாலும் வரவேற்பு இழந்திருக்கிறது. மேற்படிப்பு சார்ந்து ஆர்வமுள்ளவர்கள் இந்தப் பயிற்சிகளில் சேரலாம்.
மற்றபடி சீஸனில் மட்டுமே வேலைவாய்ப்பு உள்ளதும், நன்கு பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே தொழில் செய்யக்கூடிய ரிஸ்க் உடையதுமான இப்பயிற்சிகளைத் தவிர்க்கலாம். மாறாக சி.சி.டி.வி., இன்வெர்ட்டர்கள், சோலார் பேனல்களை நிறுவுதல் போன்ற வேலைவாய்ப்புகளும் தற்போது அதிகரித்துவருகின்றன என்பதால், எலெக்ட்ரானிக்ஸ் துறையில் ஆர்வமுள்ளவர்கள் இந்தப் பயிற்சிகளைப் பெறலாம்.
@ ‘ஸ்மார்ட்’ வேலைவாய்ப்பு:-
எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கணினி ஹார்ட்வேர் துறை ஆர்வமுள்ளவர்கள் வளர்ந்துவரும் ஸ்மார்ட் போன் துறையில் பயிற்சி பெறலாம். அடிப்படை, இடைநிலை மற்றும் மேம்பட்ட நிலைக்கான பயிற்சிகள் இதில் வழங்கப்படுகின்றன. தன்னளவில் விரிவடைந்துவரும் இத்துறையில் திறன் மிகுந்த நபர்களின் தேவை நாளும் அதிகரித்துவருகிறது. பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தற்போது இந்தப் பயிற்சியில் அதிகம் சேர்கிறார்கள்.
3 மாதம் தொடங்கி 1 வருடம்வரை விரியும் இந்தப் பயிற்சிக்கான கட்டணம் ரூ. 10 ஆயிரத்தில் தொடங்கி லட்சம்வரை செல்கிறது. அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிக்கான மாணவர்களுக்கு இந்தப் பயிற்சி சுவாரசியமாகவும் பயனுள்ள விடுமுறைப் பயிற்சியாகவும் இருக்கும்.
@ கைதட்டி உங்களின் தொலைப்பேசி இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கலாம்:
ஒரு சில நேரங்களில் நம்முடைய மொபைலை நம் அருகிலேயே வைத்து விட்டு தேடிக்கொண்டிருப்போம் .
இதை தவிர்க்க ஒரு சுலபமான வழி Clap to Find App பயன்படுத்தினால் தேடும் வேலையை இன்னும் சுலபமாக்க முடியும்.இந்த app ஆனது ஒரு குறிப்பிட்ட தூரத்தில் மட்டுமே . https://youtu.be/6nMP60zNB6U
https://youtu.be/hbY4ZND7xOM
ஒரு சில நேரங்களில் நம்முடைய மொபைலை நம் அருகிலேயே வைத்து விட்டு தேடிக்கொண்டிருப்போம் .
======================================
@ புகைப்படங்களை திருத்தியமைக்கும் ஆந்திராய்டு செயலி
TOP 6 PHOTO EDITING APLLICATIONS IN ANDROID mobile-(TAMIL)
@ 3ஜி போன்களில் ஜியோ 4ஜி சிம் பயன்படுத்துவது எப்படி?
============================
@ இந்த கானொளியில் ஜியோ வேகத்தை எப்படி அதிகரிப்பது என்று பார்க்கலாம் வாங்க .
====================================
@ ஆதார் அடிப்படையிலான ‘பீம்’ ஆப் மூலம் பரிமாற்றத்தை ஊக்குவிக்க இந்திய பிரதமர் திரு மோடி அவர்களின் 2 புதிய பரிசு திட்டங்களை அறிவித்தார்:-மத்திய அரசு ரொக்கமில்லா பரிமாற்றத்தை ஊக்குவித்து வருகிறது. இதற்கு ‘டிஜிதன்’ திட்டம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. மின்னணு பண பரிமாற்றத்துக்கான ‘பீம்’ (‘பாரத் இன்டர்பேஸ் பார் மணி’) என்ற புதிய செயலியை கடந்த டிசம்பர் மாதம் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். செல்போன் மூலம் பணம் செலுத்த உதவும் இந்த செயலிக்கு, அரசியல் சட்டத்தை உருவாக்கிய பீமராவ் அம்பேத்கரின் நினைவாக ‘பீம்’ என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த முறையில் பொருட்கள் வாங்குவதற்கு இணையதள வசதியுடன் கூடிய தொலைபேசி இணைப்பு தேவை இல்லை.
ஆனால் வியாபாரிகள் ரொக்கமில்லா ஆதார் வணிக செயலியை தங்கள் ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்து, அந்த ஸ்மார்ட் போனை கைவிரல் ரேகை பதிவு கருவியுடன் இணைக்கவேண்டும். வாடிக்கையாளர் தனது ஆதார் அடையாள அட்டை எண்ணை இந்த செயலியுடன் இணைப்பதோடு, எந்த வங்கியில் உள்ள கணக்கின் மூலம் பணம் செலுத்தப்படுகிறது என்பதை தெரிவிக்க வேண்டும். இந்த முறையில் பொருட்கள் வாங்கி வங்கி கணக்கின் மூலம் பணம் செலுத்துவதற்கு வாடிக்கையாளரின் கை பெருவிரல் ரேகைதான் கடவுச் சொல்லாக (‘பாஸ்வேர்டு’) ஆக பயன்படும். மாஸ்டர் கார்டு, விசா கார்டு போன்ற பண அட்டைகளை பயன்படுத்தி ‘பீம் செயலி’ உதவியுடன் பொருட்களை வாங்குவோர் அதற்கான சேவை கட்டணம் எதுவும் செலுத்தவேண்டியது இல்லை.
மின்னணு பண பரிமாற்ற பரிசு திட்டத்தில் வெற்றி பெற்றோருக்கு பரிசும் வழங்கப்பட்டு வருகிறது.
இப்போது இத்திட்டத்தை ஊக்குவிக்க பரிசு வழங்கும் 2 புதிய திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்தார். மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. பிரதமர் மோடி, ‘பீம்’ ஆப் மூலம் பணம் செலுத்தும் முறைக்கு புதிதாக ஒருவரை அறிமுகப்படுத்தினால், அறிமுகப்படுத்துபவருக்கு ரூ.10 ரொக்க பரிசு வழங்கப்படும். இத்தொகை அவரது வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இதுபோல், ‘பீம்’ ஆப் மூலம் பரிமாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் வியாபாரிகளுக்கு ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும் ‘கேஷ்பேக்’ சலுகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடி பேசுகையில்,இந்த புதிய திட்டங்களின் மூலம், ஒரு நாளைக்கு 20 பேரை ‘பீம்’ ஆப்புக்கு அறிமுகப்படுத்தினால், ரூ.200 சம்பாதிக்கலாம். இளைஞர்கள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஸ்மார்ட்போனை பயன்படுத்தி, நிதி பரிமாற்றம் செய்யும் காலத்துக்கு நாம் வந்திருக்கிறோம். ஸ்மார்ட்போன், இன்டர்நெட், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு இல்லாத குடிமக்கள் கூட, ‘ஆதார்’ அடிப்படையிலான இந்த ‘பீம்’ ஆப் மூலம் ரொக்கமில்லா பரிமாற்றத்தில் ஈடுபட முடியும்.
கைரேகை வைப்பவர்களை படிக்காதவர்கள் என்று சொன்ன காலம் போய், அதே கைரேகை இப்போது பரிமாற்றத்துக்கு பயன்பட்டு, நமது வலிமைக்கு அடையாளமாக ஆகியுள்ளது என்றார்.
‘டிஜிதன்’ என்ற ரொக்கமில்லா பரிமாற்ற திட்டம் என்பது, ஊழலை ஒழிப்பதற்கான தூய்மையான முயற்சி ஆகும். இந்த திட்டத்தை ஊக்குவிக்க பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் ரூ.250 கோடி பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்த பரிசு பெற்றவர்கள், ரொக்கமில்லா பரிமாற்ற இயக்கத்துக்கான தூதர்களாக மாற வேண்டும் என்றும் பிரதமர் மோடி பேசினார். ரொக்கமில்லா பரிமாற்றத்தில் ஈடுபட்டு, குலுக்கல் மூலம் ரூ.1 கோடி பரிசு பெற்ற மராட்டிய மாநிலம் லட்டூரை சேர்ந்த ஸ்ரத்தா என்ற சிறுமியை பிரதமர் மோடி கவுரவித்தார். இதுபோல், குலுக்கல் மூலம் பரிசு பெற்ற வேறு சிலரையும் பாராட்டினார்.
@ ஆதார் எங்களையும் கைப்பெருவிரல் ரேகையைக்கொண்டும் பீம் BHIM-செயலி மூலம் பணப்பரிவர்த்தனை எப்படி செய்யலாம் என்பதை விளக்கும் கீழ்கண்ட காணொளியை கண்டு தெரிந்துகொள்ளுங்கள் .
==========================================
@ தமிழில் நிரல் எழுது புத்தகம்:-
இன்று தமிழில் "எழில்" மொழியை பேக்கஜ் செய்யும் பணியில் ஆகிய முன்னேற்றம் பற்றி ஒரு மேம்பாடு செய்யப்பட்ட திரை-சேமித்த-படம்; இதில் ‘பெர்னோல்லி எண்கள்’ (Bernoulli Numbers) என்பதை எளிதாக இயக்கி பயன்படுத்தலாம் என்று காட்டும்.
அமெரிக்காவில் முதல் தலைமுறை தமிழர் (எழுதவோ, நல்லா பேசவோ சாகஜமாக வராதவர்) – “ஏன் நீங்கள் தமிழில் மென்பொருள் ரீதியில் செயல்படுகிறீர்கள்” என்று கேட்டார்; என்னமோ செவ்வாயில் குடிபுகுவது போல நான் செய்யும் வேலைகள் எனது நண்பர்களிடமும், முகம் அறியா இணைய நபர்களிடமும் தெரியும். தமிழில் செயல்படுவது எனது சுய உறிமை, சில நேரம் பெருமை, தன்னிரக்கம், அகராதி என்றும் பலர் கூறலாம்; ஆனால், அதில் சமூக பொறுப்பு, அறிவியலாளரின் சமூக பார்வை, அறிவியல் மொழி வளர்ச்சி, தேடல், தொழில்நுட்ப கண்டெடுப்பு, தியானம் போன்ற நுட்ப்பமான விஷயங்களை மறந்து விடுவார்கள். சில நேரங்களில் எழில் எங்கே போகிறது என்று எண்ணுவேன்; ஆனால் முதலில் அந்த எட்டு வயது குழந்தைகள் நிரலாக்கத்தை தமிழ் வழி கற்பிக்கும் பொது தமிழ் கணிமை உலகம் நாம் அனைவரும் கூடி கண்ட வெற்றி என்பதில் ஐயமில்லை.
எழில் மொழி என்பது பல ஆண்டுகளாக நான் செய்து வருவது; இதனை முழுமையாக 2013 ஆண்டில் பொது வெளியீடு செய்து இந்நாள் வரை பத்து பங்களிப்பாளர்கள் தங்கள் நேரத்திற்கும், அறிவிற்கும் லாபம் பொருட்படாமல் பங்காளித்துள்ளனர். தமிழ் நெஞ்சங்கள் எங்கும் ஆதரவு அளித்துள்ளனர். அனால் இவர்களின் வேலைகளும் எழில் மொழியில் இலக்கான சிறுவர் கணிமை கற்றலுக்கு கொண்டு சேர்க்க முடியவில்லையே என்று எனக்கு பல நாட்கள் தூக்கம் தொலைந்து போனது.
சமீபத்தில் சில மாறுதல்கள்; எழில் கிட்ஹப்-இல் இருந்தாலும் இதனை ஒரு முழுமை அடைந்த மென்பொருளாக கொள்ள முடியாது. மென்பொருள் என்றால் அதற்க்கு பயனாளர்களின் தேவைகளையும், அவசியமான பயன்பாட்டுகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். சும்மா மூல நிரலை மூஞ்சியில் விட்டு எறிஞ்சால் யாருக்கும் பயன்படாது. என்னமோ கோவத்தில் எழுதி விட்டதாக நீங்கள் தப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாம். சுய விமர்சனமாக எனக்கு கொள்ளுங்கள்.
எழில் மொழியை கடைசி end-user பயனாளர்கிடத்து சேர்த்தால் என்பது என்னுடைய பொறுப்பு என்று ஒரு மூன்று ஆண்டுகளாக உணர்ந்து வருகிறேன். இதனை சிறப்பாக செய்ய எனக்கு ஒரு போர் படை தேவை. பத்து பேர் இருக்கிறார்கள் மீதி வாருங்கள்.
எழில் மொழியில் உள்ள “installer” திரட்டியில் இவை இடம் பெறவேண்டும் என்று எனக்கு தற்சமய நிபந்தனை:
- Platform Support: இயங்கு தளங்களில் வேலை செய்ய வேண்டும்:
- Windows 64, 32 bit
- Linux 64
- திரட்டியில் வேண்டியவை : Installer package
- எழில் மொழி திருத்தி ; இதனை ‘ezhuthi’ (எழுதி) என்று pygtk-இல் இங்கு இங்கு வடிவமைத்து வருகிறேன்.
- எழில் மொழி ezhil module python library
- தமிழில் நிரல் எழுது புத்தகம்
- தமிழில் நிரல் எழுது புத்தகம் பயிற்சி நிரல்கள்
- மேல் நிலை எழில் எ.கா. உதாரணங்கள்
- பாடம், ஆசிரியர்களுக்கு உண்டான காணொளி, கேள்வி தாள், வினா-விடை பாட திட்டம்.
- பரிசோதனைகள்
- மொத்தமாக நிறுவுதல் பரிசோதனை (அணைத்து தளங்களிலும்)
- நிரல் எழுதுவது
- கோப்புகளை திறப்பது, இயக்குவது, சேமிப்பது
- தனியன்க்கி பரிசோதனைகள் (automatic tests)
- பயனர் நடப்பு பரிசோதனை (interactive tests)
- வெளியீடு
- md5 checksum, zip/exe/tgz package generation and upload to networks
- release notes, credits, contribution notes, credits to open-source software
ஒரு தவம், வரம் மறக்கப்படாது – முயற்சி திருவினையாக்கும். கை கூடுவோம், வாருங்கள்.
=======================================
@ தமிழிலுள்ள மின்புத்தகங்கள்:
மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர்.
ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்:
ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம்.
தமிழிலுள்ள மின்புத்தகங்கள்:
தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள்.
சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை.
எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது.
சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி?
சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன.
நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம்.
அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம்.
எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும்.
தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா?
கூடாது. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும்.
அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும்.
அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது.
வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும்.
பொதுவாக புதுப்புது பதிவுகளை உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள் நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு நமக்கு
அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும்
வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம்.
FreeTamilEbooks.com
இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும்.
PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT
இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம்.
அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம்.
இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை
எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும்.
அவ்வளவுதான்!
மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு:
- ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல்
- தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல்
- சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல்
விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்?
யாருமில்லை.
இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும்.
மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும்.
இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்?
ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும் எழுதித்தரப்போவதில்லை.
ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம்.
அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது.
தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.
நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா?
உள்ளது.
பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன.
4. kaniyam.com
எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது?
இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும்.
<துவக்கம்>
உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்].
தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது.
இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும்.
இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை
பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள்
உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும்.
எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம்.
இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம்.
நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம்.
e-mail : freetamilebooksteam@gmail.com
நன்றி.
</முடிவு>
மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள்.
முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள்.
கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது?
அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும்.
ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது.
அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.
மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்?
ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.
நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.
தவிர்க்க வேண்டியவைகள் யாவை?
இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.
எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி?
நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
- email : freetamilebooksteam@gmail.com
- Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks
- Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948
இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்?
Supported by
- Free Software Foundation TamilNadu, www.fsftn.org
- Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/
=================================================
@ என்று தணியும் இந்தவலைப்பின்னல் பாதுகாப்பு தாகம்?
"ஒயர்லெஸ் ஃபிடெலிடி" என்ற தொழில் நுட்பம்தான் Wi-Fi தொழில் நுட்பம் என்றுஅழைக்கப்படுகிறது. லோக்கல் ஏரியா நெட்வொர்க் (LAN)) என்று அழைக்கப்படும்நெட்வொர்க்குகளின் ஒரு சில வகைகள் Wi-Fi தொழில் நுட்பம் என்றுஅழைக்கப்படுகிறது. அதாவது நெட்வொர்க்குகளுக்கும், கணினி, இணையதள இணைப்புகளுக்குமான கம்பிவட தொழில் நுட்பத்திற்கு அடுத்தகட்டமாக இந்தகம்பியற்ற இணைப்புத் தொழில்நுட்பம் தற்போது வெகு வேகமாகபரவலாகிவருகிறது.
முறையான பாதுகாப்பு, தடுப்பு ஏற்பாடுகள் இல்லையெனில், Wi-Fi நெட்வொர்க்கை யார் வேண்டுமானாலும் அனுமதியின்றி பயன்படுத்தி எந்தவிதமான நாசவேளைகளிலும் ஈடுபடலாம் என்பதே தற்போது எழுந்துள்ள அச்சம்.
இந்தியா தற்போது தகவல் தொடர்பியலில் புரட்சியை எதிகொண்டு வருகிறது. மிகப்பெரிய செல்பேசி சந்தையாக இந்தியா வளர்ந்து வரும் நிலையில் இந்ததொழில் நுட்பமும் இந்தியாவில் அதிக வளர்ச்சியை பெறும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய வர்த்தகத் துறைகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், இதனால் மக்கள்வாழ்முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றால் கணினிகள், லேப்டாப்கள், அடுத்த தலைமுறை அதி தொழில் நுட்ப ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும்பிற கைவழி பயன்பாட்டு மின்னணுக் கருவிகளின் தேவை கணிசமாக பெருகிவருகிறது. இதனுடன் சேர்ந்து 24 மணி நேர இணைப்புச் சேவை, பரவலானவிரிவலை (பேண்ட்வித்) ஆகியவற்றிற்குமான தேவைகளும் கூடி வருகிறது.
இந்த மாற்றங்களுக்கு ஈடுகொடுக்ககூடிய ஒரு தொழில் நுட்பமான Wi-Fi தொழில்நுட்பம் தற்போது இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வீடுகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில்விரும்பத்தகுந்த ஒரு இணைப்புத் தொழில்நுட்பமாக அசுர வளர்ச்சி கண்டுள்ளது.
இந்த தொழில் நுட்பத்தை உருவாக்கிய Wi-Fi அலையன்ஸ் நிறுவனத்தின்கணிப்பின்படி தற்போது Wi-Fi தொழில் நுட்பத்திற்கான இந்திய சந்தை 270 மில்லியன் டாலர்கள். 2011-12ஆம் ஆண்டுவாக்கில் இது 900 மில்லியன் டாலர்கள்சந்தையாக வளர்ச்சியடையும்.
ஆனால்... இந்த தொழில் நுட்பம் பல பாதுகாப்பு கவலைகளையும், அச்சுறுத்தல்களையும் அளிக்க துவங்கியுள்ளது. சமீபத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு குறித்து விசாரணை மேற்கொள்கையில், பாதுகாப்பு நிறுவனங்கள், இதற்கு காரணமான ஒரு மின்னஞ்சலை கண்டுபிடித்துள்ளது. அதனை பின்பற்றிச்செல்கையில் கென் ஹேவுட் என்ற அமெரிக்க குடிமகனின் கணினிக்குஇட்டுச் சென்றுள்ளது.
அதாவது அந்த அமெரிக்கக் குடிமகனின் கணினி ஹேக் செய்யப்பட்டு அதன்வழியாக இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், இந்த தொழில் நுட்பம்நம்மிடையே சில கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
அதாவது சரியாக கண்காணிக்கவில்லையெனில், Wi-Fi நெட்வொர்க்கில் உள்ளகுறைபாடுகளினால் ஹேக்கர்கள் எந்த ஒரு கணினி நெட்வொர்க்கிலும் புகுந்துநாச வேலைகளில் ஈடுபடமுடியும். இதனால் இதன் பயனாளர்களுக்குவிழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டிய கட்டாயம் பிறந்துள்ளது .
இதற்காக, வெள்ளை அறிக்கை ஒன்றையும் மஹிந்திரா ஸ்பெசல் சர்வீசஸ்குழுமம் (MSSG) வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்: "சிறப்பான பாதுகாப்பு செயல்முறைகள் - Wi-Fi -யின் அபாயங்கள் என்று அந்தவெள்ளை அறிக்கை தலைப்பிடப்பட்டுள்ளது.
Wi-Fi தொழில் நுட்பத்தினால் இணையதளம் உள்ளிட்ட இணைப்புகளில்நடந்துள்ள புரட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்கள் முதல் வீடுகள் வரை அதன் மீது ஈர்ப்பை அதிகரித்துள்ளது. அதன் பயனும், திறனும் மற்ற கம்பிவட இணைப்பு நெட்வொர்க்குகளை விட அதிகமானது. ஆனால் இது எவ்வளவு பயனுள்ளதோ அந்த அளவிற்கு பாதுகாப்பு அபாயங்கள் நிறைந்தது. எனவே இந்த குறிப்புகள் சிறந்த தடுப்பு உத்திகளை மேற்கொள்ள பயனுள்ளதாக அமையும்.
கம்பியற்ற இணைப்பு உங்கள் நெட்வொர்க்கை அடைய ஒரு பின்வாசல் வழி!
ஒயர்லெஸ் ஆக்சஸ் கார்டுகளின் மூலம் இயங்கும் லேப் டாப்கள், தானியங்கி இணைப்பு அமைப்புகள் ஆகியவை தற்போது பெருகி வருகிறது. அதாவது ஒயர்லெஸ் இணைப்பு பெற்றுள்ளவர்கள் தகவல்களை வான்வழியாக அனுப்புவதால், அதனை ஹேக் செய்வது சுலபம், அதாவது யார்வேன்டுமானாலும் அதனை பார்க்க முடியும். இதானல் ஹேக்கர்கள் எங்கிருந்தபடி வேண்டுமானாலும் நிறுவனங்களின் நெட்வொர்க்குகள் மட்டுமல்லாது ஒரு நாட்டின் பாதுகாப்பை தீர்மானிக்கும் ராணுவ சம்பந்தமான விஷயங்களையும் தகவல்களையும் வெளியிலிருந்தே அணுக முடியும்.
என்ன தவறு ஏற்பட முடியும்?
எதேச்சையாக அணுகுதல், அதாவது இதில் ஒரு பயனாளர் அடுத்ததாக உள்ளஒரு நிறுவனத்தின் ஊடுருவும் ஒயர்லெஸ் நெட்வொர்க் மூலம் ஒயர்லெஸ்அணுகல் புள்ளியைக் கைப்பற்றி அங்கிருந்து தகவல்களை திருடி என்னவேண்டுமானாலும் செய்யலாம்.
கெட்ட நோக்கத்துடன் அணுகுதல், இதில், ஹேக்கர்கள் ஒரு பொய்யானஅணுகல் இடங்களிலிருந்து தாங்கள் உருவாக்கிய ஒயர்லெஸ் கருவிகள் மூலம்எந்த ஒரு நெட்வொர்க்கையும் ஆட்கொண்டு, அதன் வழி செல்லும் தகவல்களைதிருடுவது.
தற்காலிக நெட்வொர்க்குகள், இதில் ஒயர்லெஸ் கணினிகளுக்கிடையே இணைப்பை ஏற்படுத்துவது, அதாவது ஒயர்லெஸ் அணுகல் இடம் என்ற ஒன்றுஇல்லாமலேயே.
உங்கள் ஒயர்லெஸ் அணுகல் புள்ளி ஒரு குறிப்பிட்ட பகுதியை பரவலாகக்கொண்டு இயங்குவதால் நீங்கள் ஒயர் மூலம் அனுப்பும் செய்திகள் மற்றும்கார்ப்பரேட் தரவுகளை (datas) தொலைதூரத்திலிருந்தே அணுக முடிவது.
இதனைத் தடுக்க உடனடியாக செய்ய வேண்டியது என்ன?
ஒயர்லெஸ் கருவி அட்மினிஸ்ட்ரேட்டர் தான்தோன்றி கடவுச்சொல்லைஉடனடியாக மாற்றவும். உதாரணமாக ரீ செட் 123 அல்லது அது போன்ற பிறபொதுவான கடவுச்சொல் தானாகவே உங்கள் கணினியில் இருந்தால் அதனைஉடனடியாக மாற்றி வேறு கடவுச்சொல்லை வைக்கவும்.
உங்கள் ஒயர்லெஸ் கருவி பயன்படுத்தக்கூடிய WPA/WEP பாதுகாப்புகுறியேற்றங்களை எப்போதும் இயக்கத்தில் வைத்திருக்கவும்.
பயனில் இல்லாத போது Wi-Fi மீடியாவின் இயக்கத்தை நிறுத்தி வைப்பது நல்லது. அல்லது பிளக்கை பிடிங்கி வைப்பதும் சிறந்தது.
MAC முகவரி வடிக்கட்டி அமைப்பை ஏற்படுத்தி அதிகாரபூர்வ கருவிகளுக்குமட்டுமே இணைப்பை அனுமதிக்கவும்.
தானாகவே உள்ள சர்வீஸ் செட் ஐடென்டிஃபையர் (எஸ்.எஸ்.ஐ.டி.)ஐ உடனடியாகமாற்றவும்.
தேவையில்லை என்றால் எஸ்.எஸ்.ஐ.டி. ஒலிபரப்புகளை நிறுத்தி விடுங்கள்.
திறந்த Wi-Fi நெட்வொர்க்குகளை தானாகவே இணைக்கும் அமைப்பின்இயக்கத்தை நிறுத்தி வைக்கவேண்டும்.
உங்கள் ஒயர்லெஸ் பாதைகள் அனைத்திலும் ஃப்யர்வால்களை (Firewalls) உருவாக்கவும்.
உங்கள் வளாகத்தின் மையப்பகுதியில் உங்கள் ஒயர்லெஸ் அணுகள் இடத்தைவையுங்கள். சுவற்றிலோ மூலைகளிலோ வைத்தால் கசிவுகள் ஏற்படும்.
இந்த குறிப்புகள், தனிப்பட்ட பயனர்களுக்கு ஓரளவிற்கு பொருந்தகூடியது. நிறுவனஙளும், அமைப்புகளும் இதனை பரந்துபட்ட அளவில்மேற்கொள்ளவேண்டியிருக்கும். ஒரே படித்தான பாதுகாப்பு முறைகளை இவைகடைபிடிக்க வேண்டும்.
என்ன தொழில் நுட்பத்தை கண்டுபிடித்தாலும், அதனை உடைத்து உள் நுழையும் தொழில் நுட்பத்தை இந்த மாற்று தொழில் நுட்பங்களிலிருந்தே கண்டுபிடித்துவிடமுடிகிறது என்பதே இதன் மையப் பிரச்சனை. என்று தணியும் இந்தவலைப்பின்னல் பாதுகாப்பு தாகம்?
===============================================
நாங்கள் தொகுத்து வழங்கிய பதிவுகளில் உள்ள குறை நிறைகளை வாசகர்கள், அன்பான முறையில் எங்களுக்கு எடுத்துக்கூறி, எங்களது பதிவுகள் மேலும் சிறப்படைய வாழ்த்தி உற்சாகப்படுத்துமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ் தமிழ் ரோஜாக்கள்.