"தமிழ் ரோஜாக்களின் குல்கந்து"

"தமிழ் ரோஜாக்களின் குல்கந்து"

Sunday, September 17, 2017

வைஷாலி வாசகர் வட்ட 43வது சந்திப்பு, "சுட்டீஸ்-குல்கந்து" இதழ்=18 புரட்டாசி மாதம்-தேதி 17-09-2017.

வைஷாலி வாசகர் வட்ட 43வது சந்திப்பு, "சுட்டீஸ்-குல்கந்து" இதழ்=18 புரட்டாசி மாதம், தேதி-17-09-2017. மூன்றாவது ஞாயிறு அன்று புரட்டாசி மாதம் முழுவதும் :- ஆழ்நிலை தியான பயிற்சியும், ஆல்பா மைண்ட் பவர் என்னும் ஆல்பா தியான பயிற்சி, மேலும் மூச்சுப்பயிற்சி, உடற்பயிற்சி என பலநிலைகளைப் பற்றிய பயிச்சி வகுப்புகள்...


வருகை தாருங்கள், தமிழில் சிறுவர்கள் தொகுத்து வழங்கும் வலைப்பதிவர்களின் மாத இதழ், ஒவ்வொரு மாதமும் ஆங்கில மாதத்தின் 3-வது ஞாயிறுதோறும் (தமிழ் மாதத்தின் முதல் ஞாயிறு அன்று) இரவு 9 மணியளவில் வெளியாகும் சுட்டீஸ் ரோஜாக்களின் "குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழ்.   http://gulkanthu.blogspot.in/


 

கற்க கசடற….!!                                       !வாய்மையே வெல்லும்!!

 “வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம்
160/Sector-4, Vaishali, Ghaziabad, NCR-New Delhi.-201012
e-mail:  vaishalireaderscircle@gmail.com
___________________________________________________________________
சுட்டீஸ் இதழ்=18 புரட்டாசி மாதம்-தேதி 17-09-2017வணக்கம், தாங்களின் வருகைக்கு நன்றி, இந்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழில்" -ஆடி  மாத வலைப்பதிவு:- இந்த இதழின் ஆசிரியராக, தொகுத்து வழங்குபவர்:- (Editor of the Page)  வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ் குழுவினர்கள் -இடம் செக்டர்-4, மையப்பூங்கா, வைஷாலி மெட்ரோ இரயில்நிலையம் அருகில் -NCR-புது தில்லி.

வைஷாலி வாசகர்வட்ட 43வது சந்திப்பு,  -வைஷாலி வாசகர் வட்ட 43வது சந்திப்பு, "சுட்டீஸ்-குல்கந்து" இதழ்=18 புரட்டாசி மாதம், தேதி-17-09-2017. மூன்றாவது ஞாயிறு அன்று புரட்டாசி மாதம் முழுவதும் :- ஆழ்நிலை தியான பயிற்சியும், ஆல்பா மைண்ட் பவர் என்னும் ஆல்பா தியான பயிற்சி, மேலும் மூச்சுப்பயிற்சி, உடற்பயிற்சி என பலநிலைகளைப்பற்றிய பயிச்சி வகுப்புகள்... உடைந்த கண்ணாடியை சாப்பிடமுடியுமா? பல அடி தூரத்தில் நிர்ப்பவரை சுண்டுவிரலால் தள்ளிவிடமுடியுமா? கசப்பான கனக்குப் பாடத்தில் 100% மதிப்பெண் பெறமுடியுமா? ஆற்றுத் தண்ணீரின்மேல் நடக்கமுடியுமா? தமிழ்நாடு விரைவு இரயிலை தரைமீது ஓட்டிக்காட்டமுடியுமா? முடியும் .. அனைத்தையும் செய்துகாட்டமுடியும் என்று கூறும் சிறப்பு பயிற்சி வகுப்புகள்... மறந்துவிடாதீர்கள் சாதனையை செய்யா சிறந்த பயிற்சிவகுப்புகள் அத்தனையும் இலவசம்... வ்ருகைத்தாருங்கள் வைஷாலி வாசகர் வட்ட 43வது சந்திப்பு. வைஷாலி வாசகர் வட்டத்தினர்களும் சுட்டீஸ் குழுவினர்களும் சேர்ந்து அவர்களுக்கு தெரிந்த மற்றும் கற்றுக்கொண்ட ஆழ்நிலை தியானம் பழகிய அனுபவங்களையும் அவர்களுக்கு தெரிந்த விவரங்களையும் தொகுத்து இந்த மாத இதழை சிறப்பித்திருக்கிறார்கள். 

அடுத்து வரும் ஆக்டொபர்-2017, 15-10-2017 ஐப்பசி-மாத வலைப்பதிவு இதழின் ஆசிரியராக, (Editor of the page) இந்த வலைப்பக்கத்தை தொகுத்து வழங்க ஆவலுடன் காத்திருப்பவர் யார்? விருப்பம் உள்ளவர்  உங்கள் விருப்பத்தை உடனே தெரியப்படுத்துங்கள். மின் அஞ்சல் "vaishalireaderscircle@gmail.com"

சுட்டீஸ் ரோஜாக்களின் "குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழ் -18 புரட்டாசி  மாதம், 17-09-2017, ஆங்கிலமாதத்தின் 3வது ஞாயிறு அன்றய வைஷாலி வாசகர் வட்டத்தின் 43வது வாசகர் வட்ட சந்திப்பு மற்றும் விழிப்புணர்வு பயிற்சி மாதக் கொண்டாட்டங்களும். நிகழ்ச்சிகளும்.....


வைஷாலி வாசகர் வட்டத்தின் 43வது வாசகர் வட்ட சந்திப்பு 17-09-2017 தேதி,   3-வது    ஞயிறு    அன்றய புரட்டாசி மாத கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும் ....                          "ஆழ்நிலை தியானம் பழகலாம் வாருங்கள் ...."


வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :- 
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து, 
தொடர்ந்து  எங்க வீட்டு "நூலகம் " 
படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும் 
(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம் / செல்லப் பிராணிகள் வளர்ப்போம் )
தொடர்ந்து ......

"இந்த மாத தலைப்பைச் சார்ந்த" ஆழ்நிலை தியான பயிற்சியும், ஆல்பா மைண்ட் பவர் என்னும் ஆல்பா தியான பயிற்சி, மேலும் மூச்சுப்பயிற்சி,  உடற்பயிற்சி என பலநிலைகளைப்பற்றிய பயிச்சி வகுப்புகள்    என்ற பயிற்சி மாதக் கொண்டாட்டங்களும். நிகழ்ச்சிகளும்.போட்டிகளும் பரிசுகளும்.. என நடந்தேறிய அன்றய நிகழ்ச்சியில் உதவிய அனைவரையும்  பாராட்டி, நிகழ்ச்சி இனிதாக நிறைவுபெற்றது.
===========================================================
சித்திரமும் கைப்பழக்கம் பகுதியில்:-


@சுட்டீஸ் தக்ஷின் சிவா LKG- வைஷாலி 

@சுட்டீஸ் சாய் நந்தினி & சாய் ஷிவானி


@சுட்டீஸ் கிருத்திகா ராஜேந்திரன்

@சுட்டீஸ் கிருத்திகா ராஜேந்திரன்

@சுட்டீஸ்  D. துர்கா 

@சுட்டீஸ் கிருத்திகா ராஜேந்திரன் ஆங்கில மொழியில் எழுதிய கதை

@விளம்பரம்:- "இந்தப்பகுதியை உங்களுக்கு வழங்குபவர்கள்":-  

@நமது வைஷாலி வாசகர் வட்டம் துர்கா சக்திராஜ் சென்றவாரம் அவரது பள்ளியில் நடந்த நாடகத்தில் ஜான்சிரானி வேடம் ஏற்று சிறப்பாக நடித்து பரிசைப் பெற்றுள்ளார். நாம் நாமது பாராட்டையும் தெரிவித்துகொள்கிறோம்.
படத்தில் சுட்டீஸ் ராதாகிருஷ்ணன் இஸ்கான் பஜனை கச்சேரயில் மிருதங்கம் வாசிக்கிறான். (வைஷாலி ஆர்தி மாமியின் அண்ணன் மகன்). 


@விளம்பரம்:- "இந்தப்பகுதியை உங்களுக்கு வழங்குபவர்கள்":-  

====================================
"மனோன்மணீயம்" நமக்களித்த "தமிழ் தாய் வாழ்த்து":-
"நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்,

சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்,

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற,

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் 
தமிழணங்கே!  தமிழணங்கே! .....

உன் சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து 
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!"

இந்த வாழ்த்துப்பாடலை இயற்றியவர் திரு.பெ. சுந்தரம் பிள்ளை (அவர் வாழ்ந்த காலம் "ஏப்ரல் 4, 1855 - ஏப்ரல் 26, 1897") 

அவர் எழுதிய "மனோன்மணீயம்" என்ற புகழ்பெற்ற நாடக நூலில் இடம்பெற்றிருக்கும் தமிழ் தாய் வாழ்த்துப்பாடல் இது. 

இந்த மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த என்று ஆரம்பமாகும் பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது.

தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலின் கருத்து:- 
அலை கடலே ஆடையான இந்த அழகான பூமிப் பெண்ணிற்கு, பாரத நாடே முகமாம், தென்திசை அதன் நெற்றியாம், அதில் திலகமென திகழ்வது திராவிட திருநாடாம், அந்தத் திலகத்தின் வாசனைப் போல்அனைத்து உலகமும் இன்பம் காண எல்லா திசையிலும் புகழ் மணக்க இருக்கும் தெய்வமகள் ஆகிய தமிழே, என்றென்றும் இளமையாக இருக்கிற உன்னுடைய இந்த அழகைக் கண்டு வியந்து, செய்யும் செயலையும் மறந்து, வாழ்த்துகிறோம்! வாழ்த்துகிறோம்! வாழ்த்துகிறோம்!.....

Gift a childhood to Raghavi!Four-year-old Raghavi wanted to live a normal childhood but life had other plans for her. Born deaf and dumb, her only option is a cochlear implant. SAMVAAD is helping her mother raise funds & have already raised INR 3.9L. They need your help to raise just another INR 60,000. Do fund this campaign and let’s get Raghavi to hear again. 

நன்றிகளுடன் "வைஷாலி வாசகர் வட்டம்". 
==========================
17-09-2017 அன்றய நமது 4-வது வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில்:- ,
"ஒவ்வொரு மதமும் ஒரு விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை வகுப்புகள். என இந்த வருடம் முழுவதும் கற்றுக்கொள்வோம், தெரிந்துகொள்வோம் பயிற்சிப் பட்டறை மாதங்களின் வருடமாக, நமது வைஷாலி வாசகர் வட்டத்தின், ஒவ்வொரு மாதமும், ஆங்கில மதத்தின் 3வது ஞாயிறு அன்றைய வாசகர் வட்ட சந்திப்பில், ஒவ்வொரு மதமும் ஒரு விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை வகுப்புகள்... பயிற்சி மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும், மற்றும் கதைகள், கட்டுரைகள், பயிற்சிப்பட்டறை சார்ந்த போட்டிகளும் பரிசுகளும்  என இந்தமாத இதழில் பல விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.   

மேலும் இந்த மாத சுட்டீஸ்களின் ஏராளமான செய்திகளை மிகவும் பயனுள்ள வகையில் நமது வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ் "குல்கந்து" குழுவினர்கள் தொகுத்து தந்திருக்கிறார்கள்....

அவர்கள் தொகுத்துத் தந்த பல செய்திகளை ஒன்று சேர்த்து, அனைத்தையும் அழகாக கோர்த்து, ஒரு கதம்ப மாலையாக தொடுத்து தந்திருக்கிறார்கள். இந்த மாத வலைப்பதிவு இதழின் அனைத்து விவரங்களும்  உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம்.... இப்படிக்கு வாசகர் வட்ட சுட்டீஸ் "குல்கந்து" ரோஜாக்கள். 



==================================
@. புதிய எட்டு வித்தியாச புதிர் போட்டி :- சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்"..... ஆவணி-மாத-படத்தில் உள்ள (8) எட்டு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் -வலைப்பதிவு இதழ் போட்டி என்-18.

சரியான விடை அடுத்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" http://gulkanthu.blogspot.in/வலைப்பதிவர் இதழில் வெளியாகும். 

போட்டியில் பங்குகொள்ள விருப்பமுடையவர்கள் விடைகளை "vaishalireaderscircle@gmail.com" என்கிற மினஞ்சல் முகவரிக்கு 10-10-2017 முன்பாக அனுப்பிவைக்கவேண்டும். சரியான விடை எழுதிய அனைவருக்கும் அடுத்தமாத வாசகர் வட்ட சந்திப்பில் பரிசுகள் வழங்கப்படும்.

சென்ற மாத "சுட்டீஸ் குல்கந்து" வலைப்பதிவர் இதழ்-17  ஆவணி -மாதம் வலைப்பதிவு இதழ், எட்டு வித்தியாசப் போட்டி என்-17. போட்டிக்கான  சரியான  விடை,

விடை:- 1. கைஓவியத்தில் மூக்கு, 2) கைஓவியத்தில் 5-வண்ணக் குப்பிகள் ,  3) வரைப்பலகை ஓவியத்தில் வண்ண குப்பிகள் எண்ணிக்கை, 4) கத்தரிக்கோல் உள்ள ஜாக்கெட் கழுத்து பட்டை, 5) குட்டி கவுன் கழுத்துப்பட்டை, 6) தையல் இயந்திரத்தின் கைப்பிடி, 7) தையல் இயந்திரத்தினருகே விடுபட்ட வரைகோடு, 8) "வைஷாலி வாசக" என்ற "ர்" விடுபட்ட வாக்கியம்.

சென்ற மாத எட்டு-வித்தியாசங்கள் வலைப்பதிவர் இதழ்-16 போட்டிக்கான சரியான விடையை 122 நபர்கள், முதன் முறையாக மிக அதிக போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். வாட்ஸ் ஆப், முகநூல், மற்றும் குறுஞ்செய்தி,தொலைப்பேசி மேலும் மின்னஞ்சல் மூலம் நிறைய போட்டிக்கான விடைகள் அனுப்பிவைத்தார்கள். சரியான விடையை 102 நபர்கள் மட்டுமே குறிப்பிட்டிருந்தனர், தமிழில் விடை எழுதியவர்கள்=52, ஆங்கிலத்தமிழில் எழுதியவர்கள்=35, ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=15, ஹிந்தி மொழியில்=0 நபர்களும், பிற மொழியில்=0 நபரும், மேலும் சிலர் எட்டுக்கும் அதிகமான தவறான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.
@விளம்பரம்:- "இந்தப்பகுதியை உங்களுக்கு வழங்குபவர்கள்":-  

==============================================

I.முதலில் சுட்டீஸ் குல்கந்து தகவல்கள் :- 
@ ஆல்பா தியானம் மாணவ-மாணவிகளுக்கு மிகவும் பயனளிக்கக் கூடியது. இதன் காரணமாக, படிப்பில் நன்றாக கவனம் செலுத்த முடியும். நினைவாற்றல் அதிகரிக்கும். பாடங்களை ஆழ்ந்து படிக்கலாம். தேர்வின்போது, படித்த பாடங்களை நன்கு நினைவுபடுத்தி எழுதி நல்ல மதிப்பெண்கள் பெறலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, மாணவர்களின் நடத்தை மிக நன்றாக இருக்கும். நண்பர்களுக்கு இடையே மனஸ்தாபங்கள் குறையும்.

@ பக்காவான தீர்வு தரும் பத்து நிமிஷ தியானம் ! ''கவலைகள் ஒன்றும் கைக்குழந்தைகள் அல்ல... காலமெல்லாம் சுமந்துகொண்டே இருப்பதற்கு. உங்களுக்குள் இருக்கும் சக்தியைப் பயன்படுத்தியே... உங்கள் பிரச்னைகளுக்கு தீர்வுகாண முடியும். அதற்குக் கைகொடுப்பது... ஆழ்மன தியானம் எனப்படும் ஆஃல்பா நிலை தியானம்!''

@ மாணவர்களின் ஆல்பா மைண்ட் பவர் தியானம் :- ''மனித மூளையோட செயல்பாட்டை டெல்டா, தீட்டா, பீட்டா, ஆல்ஃபானு நாலு நிலைகளா விஞ்ஞானிகள் தெளிவா ஆராய்ந்து சொல்லியிருக்காங்க. 'ஆல்ஃபா நிலை’ங்கறது, தூக்கத்துக்கும் விழிப்புக்கும் இடைப்பட்ட நிலை. இடது பக்க மூளையுடன் வலது பக்க மூளையும் ஊக்குவிக்கப்பட்டு, சக்தி வாய்ந்த, ஆக்கப்பூர்வ உள்ளுணர்வு கொண்ட சிந்தனையுடன் மூளை செயல்படுறது இந்த நிலையிலதான். 10 - 15 நிமிட ஆல்ஃபா தியானத்துலயே நம்மகிட்ட மறைந்துள்ள மகத்தான சக்தி வெளிப்பட்டு, நம்ம பிரச்னைகளுக்கான தீர்வை விஷுவலாக மனக் கண் மூலமா காட்டும். அதை நடைமுறையில அப்ளை செய்யலாம். தற்கொலை செய்துக்கற அளவுக்கு விரக்தியில இருக்கறவங்ககூட, இந்த தியானத்துக்குப் பிறகு தன்னம்பிக்கையோடு வாழ்ந்துக் கிட்டிருக்காங்க!''
# தியான பயிற்சியில் சுட்டீஸ் மாணவர்கள் தனியாகவும், பெரியவர்கள் தனியாகவும் அமர்ந்து தியானம் செய்தார்கள். 

# தியான வகுப்பில் கலந்துகொண்ட அனைவரும் தாயக்கட்டை உருட்டி அவர்கள் நினைத்த எண்கள் விழுமாறு உருட்டினார்கள்.  தாயக்கட்டையை உருட்டும்போது நமக்கு வேண்டிய,  நாம் நினைக்கும் எண் விழவேண்டும் என்று நினைத்து அதில் வெற்றிபெறும் சக்தியை தருவது ஆழ்நிலைத்தியானம். அதாவது டெலிபதி என்கிற முறையில் நாம் நினைத்த அதே எண்களை விழச்செய்து வெற்றி பெறுவது.  

# தியானவகுப்பில் அனைவருக்கும் ஒரு மந்திர சொல் தரப்பட்டது. அதோடு மணியோசை ஒலிக்கும்போது அதன் ஒலி அதிர்வுகளுக்கு ஏற்றவாறு மந்திர சொல்லை பயன்படுத்தி மனதை ஒருநிலைப்படுத்தவேண்டும் என்று பயிச்சியளித்தார்கள். 

# வாசகர் வட்டாத்தின் தலைமை உறுப்பினர் கோபால கிருஷ்ணன் அவர்கள், நினைத்ததை எல்லாம் சாதிக்கக்கூடிய ஆற்றல் ஆழ்நிலை தியானத்தால் கிடைக்கும் என்றும், கண்கட்டு வித்தைகளைப்போன்ற பல அதிசய வித்தைகளையும் செய்துகாட்டும் வல்லமை ஆழ்நிலைத்தியானம் பயின்றவர்களுக்கு உண்டு என்றும் கூறினார் அதோடு அவரின் அரவிந்தர் ஆசிரம தியான பயிற்சியில்பெற்ற  அனுபவங்களையும், சிங்கப்பூர் மலேசியா எல்லை பகுதியிலிருக்கும் "ஜோகூர் குருஜி" ஆசிரம தியான பயிற்சியில்பெற்ற  அனுபவங்களையும்,  பதஞ்சலி யோக பீட தியான பயிற்சி மற்றும் ஜக்கி வாசுதேவ் ஈஷா மையத்தில்பெற்ற ஆழ்நிலை தியான அனுபவங்களையும்  விவரமாக விளக்கி கூறினார். 

# மேலும் வாசகர்வட்ட சுட்டீஸ், அவர்களது தியான அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டனர். 

குட்டீஸ் சுட்டீஸ் பதில்கள் :- # காலையில் எழுந்ததும் எப்படி "பிரஷ்ஷா-புத்துணர்வுடன்"  இருப்பதுபோன்ற உணர்வு ஏற்படுகிறதோ, அதைப்போலவே 10 நிமிட ஆழ்நிலை தியானம் செய்து முடிக்கும்போது ஏற்படுகிறது. 

# சிரிப்பு சிரிப்பாய் வருகிறது, என்னால் கண்ணை மூடி அமைதியாக உட்கார முடியவில்லை. 

# தியானத்தின்போது செய்யும் கை முத்திரை என்பது எனக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செய்து காட்டும் முத்திரை "பாபா" இஸ்டைல் தான் ஞாபகம் வருகிறது.

# எனக்கு எனது முதுகுக்கு பின்னால் யாரோ என்னை தள்ளிவிடுவதைப்போன்று இருந்தது. ஆகவே கண்ணை மூடி உட்காருவது எனக்கு பயமாகவே இருந்தது.

# மூச்சுப்பயிற்சி இதை பள்ளிக்கூடத்தில் உடற்கல்வி ஆசிரியர் சொல்லிக்கொடுத்திருக்கிறார். 

# யோகாசனம் செய்வது என்றால் அது ஒரு உடற்பயிற்சி என்றுதான் எனக்குத்தெரியும். 

# யோகாசனம், தியானம் போன்றவற்றை (டிவியில்) தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். 

# தியான மந்திரத்தை மறக்காமல் சொல்லவேண்டுமா? 

# சுட்டீஸ் அனைவரும் மேலும் பல தியானம் குறித்த சந்தேகங்களையும், விவரங்களையும் கேட்டு தெரிந்துகொண்டார்கள்.  

தியானம் செய்யும் போது வரக்கூடிய  10 முக்கிய தடைகள்:-  ...

1. சிலருக்கு ஆரம்பகாலத்தில்  தியானம் செய்தபோது இருந்த ஆர்வம் போகப்போக குறைந்துவிடும். இதற்குக் காரணம் தியானத்தில் உடனடி பலன்களை எதிர்பார்ப்பதால்தான் . தியானத்தில் உயர்ந்த நிலை அடைய குறைந்தது 6 ஆண்டுகளாவது ஆகும் . "தியானம் செய்வதினால் என்ன பயன் ?" என்னும் அலட்சியம் கூடவே கூடாது . பொறுமையும் நம்பிக்கையும் அவசியம் . தியானத்தில் வெற்றிபெற்ற யோகிகளான விவேகானந்தர் , ரமணர் , போன்ற யோகிகளை முன்மாதிரியாக வைத்துக்கொள்ளுங்கள் .

2. ஓசைகள் , குப்பைக்கூளங்கள் , தீயவர்கள் உடனிருக்கும் சூழல்களில் தியானம் செய்ய மனம் வராதுதான் . முடிந்தவரை சூழலை மாற்றிக்கொள்ளுங்கள் . இல்லையெனில் , தியானம் மனதில்தானே நடக்கின்றது என்பதைத் தெளிவாக புரிந்துக்கொண்டு  எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் தியானம் செய்யுங்கள் . 

3. நோய்கள் வந்தால் தியானத்தை நிறுத்துவது கூடாது . எப்படி ஒருவேளை உணவை நாம் எப்போதும் தவிர்க்க நினைப்பதில்லையோ , எந்த ஒரு நிமிடமும் நாம் சுவாசிப்பதை எப்படி நிறுத்துவதில்லையோ அதுபோல தியானமும் நம்  அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக மாற வேண்டும் . ஆசனம், தியானம் , பிராணாயாமம் ஆகியவற்றை தொடர்ந்து செய்யுங்கள் நோய்களைத் தவிருங்கள் .

4. எல்லோரிடமும் சம்பந்தம் இல்லாமல் தியானப்பயிற்சியை பற்றி பேசாதீர்கள் . ஒவ்வொரு குருவும் அவர்களின் சிஷ்யர்களுக்கு சொல்லித்தரும் தியானத்தில் ஒரு சில வேறுபாடுகள் இருக்கும் . அதைப் பற்றி யோசித்துக்கொண்டு நம்முடையது சரியில்லையோ என்று நினைப்பதால் தியானம் செய்ய மனம் வராது .

5. தியானத்தை விட்டு விட்டு செய்யாதீர்கள் . கண்ட நேரத்திலும் , கண்ட இடங்களிலும் அதை செய்யாதீர்கள் . காலை 4 மணிக்கோ  அல்லது 6 மணிக்கோ , மாலை 6 மணிக்கோ அல்லது இரவு  8 மணிக்கோ தொடர்ந்து ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் செய்வதை பழக்கமாக்கிக்கொள்ளுங்கள் .

6. நாவை அடக்கவேண்டும் . அதிகம் பேசுவதால் மனம் அலைபாயும். நாவை காக்காவிட்டால் துக்கம் வரும் .அடுத்தவரை குறை கூறுவது, ஒருவர் இல்லாதபோது அவர்களைப் பற்றி தவறாக பேசுவது கூடாது. அடுத்தவருக்கு உபதேசிக்காமல் உங்கள் வேலையை சிறப்பாக நீங்கள் பாருங்கள் .இரண்டாவதாக கண்ட நேரத்தில் கண்ட உணவை உண்ணக்கூடாது.  நாவை அடக்கிவிட்டால் மீதியுள்ள நான்கு புலன்களையும் எளிதாக அடக்கிவிடலாம்.

7. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் . அதுபோல சத்துக்கள் நிரம்பிய , ஆரோக்கியமான , எளிதில் ஜீரணமாகக்கூடிய  உணவுகளை அளவோடு மற்றும் நேரத்தோடு எடுத்துக்கொள்ளுங்கள் . உடற்பயிற்சியும் அவசியம் தேவை . உடல்பலம் இல்லாமல் ஆத்ம பலம் கிடைக்காது .

8. தியானத்தில் நிறைவு அடைந்துவிட்டது போலவும் , ஞானம் அடைந்துவிட்டது போலவும் , உயர் நிலை அடைந்துவிட்டதாகவும் உங்களுக்குள்ளேயே நீங்களே கற்பனை செய்துகொண்டு பிறரிடம் உங்கள் புகழைப் பாடாதீர்கள் . இப்படி  சாதனை நிலையைத் தீர்மானித்துக் கொள்வதால் அவர்களுடைய சாதனை கெடும் .

9. தியானப்பாதையில் செல்லும்போது  அவர்களை வழிநடத்தவும் , கஷ்டம் வரும்போது உபதேசித்து தைரியம் கூறுவதற்கும் நிச்சயம் ஒரு குரு தேவை . தியானப் பாதையில் வெற்றி பெற்ற குருவாக அவர் இருக்கவேண்டும் .

10. மறதி , சோம்பல் , அதீத தூக்கம் ஆகிய மூன்று குறைகளும் தியானத்தின் முக்கிய தடைகளாகும் .பதஞ்சலி மகரிஷி  நோய் , உலகப்பற்று , சந்தேகம் , மனச்சலிப்பு , சோம்பல் , அலட்சியம் ,எழுச்சிகள் , தவறாக புரிந்துக்கொள்ளுதல் , அடைந்த நிலையில் வழுவிவிடல் ஆகியவை தியானத்திற்கான தடைகள் என்கிறார் .

தியானத்தில்ஒவ்வொரு நிலையை அடையும்போதும் இப்படிப் பல தொல்லைகள் வருவது சகஜம் . அதை சரியாகப் புரிந்துக்கொண்டு , சமயோசிதத்தால் அவற்றை உணர்ந்து  குருவின் உதவியால் அவற்றைத் தாண்டினால் பேராற்றல் கிடைப்பது நிச்சயம் .  (நன்றி-ஆனந்தவிகடன்).

1924 ஆம் ஆண்டு ஜெர்மானிய மனோதத்துவ அறிஞர் ஹேன்ஸ் பெர்கர் அதீத மனோசக்திகளை ஆராய்ச்சி செய்யும் போது, குறிப்பாக டெலிபதி என்னும் ஒரு மனதிலிருந்து இன்னொரு மனதிற்கு செய்தி அனுப்பவோ, பெறவோ முடிந்த சக்தியை ஆராய்ச்சி செய்த போது அந்த நேரங்களில் அந்த மனிதர்கள் ஆல்ஃபா அலைவரிசையில் இருப்பதைப் பதிவு செய்தார். முதல் முதலில் அந்த அலைகளுக்கு ஆல்ஃபா அலைகள் என்று பெயரிட்டவரும் அவர் தான் என்று சிலர் சொல்கிறார்கள். அந்த சக்தி கிட்டத்தட்ட 100 மைக்ரோவால்ட்ஸ் ஆக இருக்கிறது என்றும் அவர் அளவிட்டார். அவர் காலத்தில் இந்த அலைவரிசைகள் பெரும் அளவில் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படா விட்டாலும் பிற்காலத்தில் பெருமளவில் ஆராயப்பட்டது.

ஆல்பா மைண்ட் நிலைக்கும், சுய முன்னேற்றத்திற்கும் எவ்வகையான தொடர்பு உள்ளது? மனிதனுக்கு பயம், தயக்கம் ஏற்படும் போதும், தொடர் தோல்விகளை சந்திக்கும் போதும் தன்னம்பிக்கையும், ஊக்கமும் குறை யும். ஆனால் தினமும் 15 முதல் 20 நிமி டம் வரை, இந்த ஆல்பா தியானத்தை தவறாமல் செய்யும் போது, மனதில் சந்தோ ஷமும், தன்னம்பிக்கையும், புத்துணர்ச்சி யும் தானாகவே ஏற்படும்.

ஒரு மனிதனின் பலம், பலவீனம் இவற்றில் நீங்கள் கூறுகின்ற ஆல்ஃபா பவர் எதை மேம்படுத்தும்? இரண்டையுமே மேம்படுத்தும். மனம் சோர்வடைந்தால் உடலும் சோர்வாகி விடும். ஆல்பா தியானத்தை பழகப் பழக, உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் பெருகு வதைக் காணலாம். இதனால் இருமல், ஜுரம், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை குணமடைவதாக இப் பயிற்சியை மேற்கொண்டவர்கள் கூறியுள் ளனர். அதாவது இந்த தியான முறையை பின்பற்றுவதால், உடல்ரீதியாக எந்த குறை வும் ஏற்படுவதில்லை என்று ஊறுதியாக கூறமுடியும். மேலும் மன பலம் அதிக ரித்து, சிந்திக்கும் திறன், முடிவெடுக் கும் திறன் ஆகியவை சிறப்பாக அமை வதை பழகப் பழக உணரலாம். உதாரணமாக மேடைப் பேச்சு என்றாலே ஒருவித தயக்கம் கொண்டவர்கள், இந்தப் பயிற்சியை செய்தால், சரள மாகவும், சாதூரியமாக வும் பேசுவதைக் காணலாம். * ஒருவருக்கு எந்த நிலையில் இந்த ஆல்ஃபா தியானம் அவசிய மாகிறது?

ஹிப்னாடிசம், மெஸ்மரிசம் ஆகியவற்றிலிருந்து ஆல்பா நிலை எவ்வாறு மாறுபடுகிறது? ஆல்பா நிலை தியானம் இவை இரண்டிலுமிருந்து முற்றிலும் மாறுபட்டது. மெஸ்மரிசம் என்பது பிறர் மனதை தன்வசப்படுத்தி, தான் நினைப்பதை அவர் மூலம் செய்யவைப்பது. இது பெரும்பாலும் நல்லெண்ண அடிப்படையில் செயல்படுத்து வதில்லை. மேலும் இது ஒரு தவறான முறையும் கூட. ஹிப்னாடிசம் என்பது ஒரு மனோதத்துவ சிகிச்சை முறை. மனநல மருத்துவர் தனது நோயாளியின் மனதை அறிந்து, அதற்கேற்ற சிகிச்சை ஹிப்னாடிசம் முறையை அளிப்பதற்கானது. சிலர் ஆல்பா நிலையை செல்ப்ஹிப்னாடிசம் சுயஹிப்னாடிசம் என்கின் றனர். இது தவறு. ஏனெனில் அறிவியல் பூர்வமாக பார்த்தால், ஆல்பாவின் நிலை 7முதல் 14 சைக்கிள், ஹிப்னாடிசத்தின் நிலை என்பது 0 முதல் 7 சைக்கிள், அதாவது தீட்டாவின் நிலை.

ஆழ்நிலை தியானத்தின் நன்மைகள் பற்றிப் பேசுகின்ற போது “ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மனத்தின் செயல்பாட்டைத் தற்காலிகமாக நிறுத்த கற்றுக் கொள்வது என்பது உடல் நலம் பேண உதவுகின்ற ஒரு நல்ல முறையாகும். நாள் தோறும் நமது நரம்பு மண்டலத்தில் ஏற்படுகின்ற தேய்மானங்களை நீக்கி நரம்புகளை நெறிப்படுத்தி உள்ளத்திற்குப் புத்துணர்ச்சியும், புது உணர்வும் தருவதுடன் நமது தடுப்பாற்றல் சக்தியை உயர்த்தவும் மனநிலை தொடர்புடைய நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது” என்று தமது ‘மெடிடேசன் பார் எவிரி படி’ (பெண்குயின்) என்னும் நூலில் குறிப்பிடுகிறார் புகழ் மிக்க உளவியலாரான லூயி புரோடோ.

தங்களது உடலில் இது போன்ற சக்தி இருக்கிறது என்பதை உணர, தினசரி 15 முதல் 20 நிமிடம் வரை இந்த பயிற்சியை பழகினாலேயே நமக்குள் ஏற்படும் மாற்றத்தை உணரலாம். இதன் மூலம் நாம் எந்த சூழ்நிலையையும் சந்திக்கும் மனோபலம் பெறுவதையும், நமது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டு தன்னம்பிக்கை அதிகரிப்பதை யும், நமக்குள் ஏதோ சக்தி இருப்ப தையும், இது உணர்த்துவதால் ஒவ்வொ ருவ ருக்கும் இது அவசியமாகிறது.

தியான முறையில், பயிற்சி பெறுபவர்க்கு ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை சொல்ல வேண்டும் இந்த மந்திரத்தை தினம் காலையிலும் மாலையிலும் 1/2 மணி நேரம், மனதுக்குள்ளேயே ஜபிக்க வேண்டும். இதற்காக பத்மாசனத்தில் தான் உட்கார்ந்து ஜபிக்க வேண்டும் என்பதில்லை. நாற்காலியில் உட்கார்ந்து கூட ஜபிக்கலாம். ஜபிக்கும் போது மனது அலைபாய்ந்து எண்ணங்கள் சிதறினாலும், விடாமல் மந்திரத்தை சொல்லிக் கொண்டே (மனதுக்குள்) இருக்க வேண்டும். ஆழ்நிலை தியானத்தை பயின்றவர்கள் மனதை ஒரு முகப்படுத்துவது இந்த முறையால் சுலபமாகிறது. 

‘ஆழ்நிலை தியானம்’ அல்லது ‘முராகபா’ எனும் பயிற்சியே, அனைத்து ஆன்மீக நிலைகளும் பூரணத்துவமடைய வழிவகுக்குகிறது என்பது பல நூற்றாண்டு கால அனுபவங்கள் மூலம் தெரிய வருவதாகும். அதன் காரணமாகத்தான், நமது ஞானத்தொடரின் ஆசான்கள் திக்ரையும் (இறைவனை நினைவுகூர்ந்து அழைத்தல்), ஸலவாத்தையும் (நபிகளார் மீது அருள்புரிய வேண்டுதல்) இன்னபிற உச்சாடன உத்திகளைச் செய்தபோதும், அவர்களின் அகமியப் பயிற்சியின் முக்கிய அம்சமாக முராகபாவே திகழ்கிறது.

மதம் மனிதனுக்கு சில சடங்கு, சம்பிரதா யங் களை மட்டுமே கற்பித்திருக்கின்றது. ஆனால் இப்படி தான் சிந்திக்கவேண்டும் என்று வலியு றுத்தவில்லை. பயிற்சி வகுப்புகள் எல்லாமே ஒரே நாள் தான். அது தான் எல்லோருக்கும் சவுகரியமாக இருக்கிறது. ஒரே நாளில் பல வகுப்புகள் எடுத்து, அவர்களையே இதற்கான செயல் முறையை, நடைமுறைப் படுத்த பயிற்சி அளித்து விடுகிறோம். ஒவ்வொரு துறைக்கும் அத்துறை சார்ந்த திறமைகள் வேண்டும். ஆன் மிகம் அப்படி அல்ல. இந்தத் துறையில் ஈடுபடுவது என்பது நான் எடுத்த முடிவு அல்ல. எனக்குள் இருக்கும் சக்தி எடுத்த முடிவு. நான் பல விட யங்களையும், அனுபவங் களையும், தியானத்தால் கற்றுக் கொண்டேன்.

@ உண்மையில் பல துறைகளில், பல கலைகளில் அதாவது விளையாட்டு , கல்வி,  அரசியல் , போர்க்களம் , நீதித்துறை, கணினி , அறிவியல் ,மருத்துவம் போன்ற துறைகளில் வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையை நாம் புரட்டிப்பர்ர்தோமானால் நமக்கு மிகப்பெரிய உண்மை தெரிய வரும். அதாவது அவர்களின் இந்த வளர்ச்சிக்கு தியானம் எவ்வளவு தூரம் உதவியாக இருந்திருக்கிறது என்று தெரியவரும் . 

@ தியானம் என்ற சொல்லுக்கு ஏதாவது ஒன்றை எண்ணித்தியானிப்பது என்பது பொருள். அதாவது மனதில் சங்கல்பங்களை (முனைந்து உருவாக்கும் எண்ணத் தீர்மானங்கள் ) உருவாக்குவதும் ஒன்றையே தொடர்ந்து இடைவிடாமல் எண்ணிக் கொண்டிருப்பதும் தியானம். ஆல்பா நிலையில் நினைவு மனத்தின் துணைகொண்டு எந்தப் பொருள் குறித்து, புதிய செய்திகள், உத்திகள் தேவையோ எந்தப் புதிய கண்டுபிடிப்புகளுக்கு விடை தேவையோ, சிக்கல்களுக்கு தீர்வு வேண்டுமோ அது குறித்து சிந்தித்தால் அந்த எண்ணங்கள் ஆழ்மனத்தில் (வலது பக்க மூளையில்) பதிந்து உடனேயோ அல்லது மற்ற சமயங்களிலோ நம்முடைய மனதில் புதிய எண்ணங்களும், கற்பனைகளும் விடைகளும், உத்திகளும் ஊற்றெடுக்கும். இந்த ஆல்பா நிலை தியானத்தின்போது நாம் எது குறித்து சிந்திக்கின்றோமோ அது தொடர்பான மனப்படங்களை, காட்சிகளாக காண வேண்டும்.

@ ஆழ்நிலை தியான பலன்களுக்கு உதாரணமாக செஸ் விளையாட்டில் உலகின் நம்பர் 1 ஆகா இருந்துவரும் திரு விஸ்வநாத் ஆனந்த் , கிரிக்கெட் மாஸ்டர் திரு டெண்டுல்கர், பல துறை புகழ் பெற்றவர், பண்பாளர் திரு அப்துல் கலாம், இசைஞானி இளையராஜா , ஏ .ஆர்.ரகுமான், மகாத்மா, சுவாமி விவேகானந்தர் போன்றவர்கள் வாழ்கையில் இந்த தியானம் செய்வதற்கு  சிறிது நேரம் ஒதுக்கி தினமும் தவறாமல்  கடைபிடித்ததனால் தான்  பெரும் பலனை அடைந்தனர் என்பதை அவர்களே நன்கு அறிவர்.

@ உடல் நலத்திற்காக  தினமும் சிறிது நேரமாவது ஆசனங்கள், யோகா , தியானம், மூச்சு பயிற்சி, நடை பயிற்சி, உடற்பயிற்சி , விளையாட்டு போன்றவற்றில் அதிக கவனம் செலுத்திவருகின்றனர்.''தியானம் " நமக்கு சரிவராது, சுத்தபட்டுவராது, கை கூடவே கூடாது என்ற எண்ண முடையவர்களெல்லாம் தியானத்தில் ஈடுபட்டு பல அரிய  பெரிய சாதனைகள் படைத்ததோடு அவர்களும் ஆர்வமாக மற்றவைகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.இதுநாள் வரை தியானம் செய்வதற்கு  எளிதாய் இருந்தாலும் அதை தினமும்  பயிற்சி செய்வது என்பது மிகவும் கடினம் என்று நினைத்தவர்கள் இப்போது எளிமையான பயிற்சி முறையினை பின்பற்றி அதன் பலனை அடைந்து வருகின்றனர்.

@ இன்றைய காலகட்டத்தில் தியானத்தை பற்றி கேலி  பேசியவர்களெல்லாம் தியானத்தை பற்றிய விழிப்புணர்வு வந்துவிட்டது என்றே சொல்லல்லாம்.ஏனென்றால் அவர்கள் மட்டும்  தியானத்தை செய்வதோடு மட்டுமில்லாமல் குடும்ப உறுப்பினர்களையும் அதில் ஈடுபடுத்தும் அளவிற்கு தியானத்தின் வலிமையை இப்போது உணர்ந்திதிருக்கின்றனர். ஏனென்றால் அவர்களுக்கு தங்களின் உடல் மற்றும் மனநலம் பற்றிய அக்கறை அதிகமாகியுள்ளது. அதற்கு முழு முதற்காரணம் சிறு வயதிலேயே சிலருக்கு இரத்த கொதிப்பு, சர்க்கரை வியாதி, அல்சர் எனும் வயிற்று  வலி, மன உளைச்சல், மன பாரம் போன்ற பாதிப்புகள் எதனால் வருகின்றது என்றும அதை எவ்வாறு தவிர்ப்பது என்றும் நன்றாகவே தெரியத் துவங்கியிருக்கின்றது. அதனனல் தான் இலவசமாய் தியானம் கற்று கொடுத்தும்  வராத கூட்டம் இப்போது பணம் கொடுத்து கற்றுகொள்ளும்  ஆர்வம் பிறந்திருக்கின்றது. 

@ அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் சன்மார்க்க ஞானயோகசாலை, ஆழ்நிலை தியான பயிற்சியில் பலர் பயனடைந்திருக்கிறார்கள்.

@ பாண்டிச்சேரி அன்னை அரவிந்தர் ஆசிரம, ஆழ்நிலை தியான பயிற்சியில் பலர் பயனடைந்திருக்கிறார்கள்.

@ திருமதி. டாக்டர் விஜயலட்சுமி பந்தையன். இவர், சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் 'ஆல்ஃபா மைண்ட் பவர் இன்ஸ்டிடியூட்'டின் நிர்வாக இயக்குனர்! இவரிடமும் ஆழ்நிலை தியான பயிற்சி பெட்ரா பலர் பயனடைந்திருக்கிறார்கள்.

@தவத்திரு மகரிஷி மகேஷ் யோகி அவர்கள் உருவாக்கிய ஆழிநிலை தனியான பயிற்சிவகுப்புக்களின் வழியே பல தியான பயிச்சி நிலையங்கள் உருவாகின.

@ ஈசா த்யானம். இது ஸ்ரீ ஜக்கிவாசுதேவ்ஜி என்பவரால் நடத்தப்படுகிறது. 

@ குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் அவர்கள் பயிற்சியில் ஸோஹம் என்ற சொல்லை ஜபித்து நம்மை ஆழ்நிலை தியானத்திற்கு தயார் ஆக்குகிறார். 

அடுத்தது பிரமிட் தியானம்:- நம் மூக்கை பிரமிட் போல பாவித்து கைகளைக்கோர்த்து கால்களை ஒன்றன் மேல் வைத்து நம் மூச்சில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் உள்மூச்சு வெளிமூச்சு விடுவதை கவனமாக அனுபவித்து நம்மால் முடியும் வரை செய்யலாம் இதை ந்டத்துபவர் டாக்டர் பத்ரிஜி.  

@ திரு.மஹெஷ் யோகி நடத்தும் தியானமும் சிறப்பாக உள்ளது.

@ எல்லாவற்றிலும் சுலபமான தியானம் என்னவென்றால் நாமஸ்மரணம் கடவுளுக்காகவே பாடும் இசை. மும்மூர்திகளான தியாகராஜர், தீக்ஷதர், ச்யாமா சாஸ்திரிகள் தங்கள் பாட்டுக்களினாலேயே கடவுளை கண்டனர். சங்கீதத்தையே தியானம் ஆக்கினார்கள். மீராபாய் க்ருஷ்ண்ரிடமே கலந்து விட்டாள். வள்ளலார் ஜோதியிலேயே சக்தியைக் கண்டார். முழு சமர்ப்பணத்துடன் செய்யும் தொழில், எல்லாவேலைகளிலும் கடவுளைக் காண்பது என்பது எல்லாமே த்யானம்தான்.

@ கவிஞர் பாரதி சொல்கிறார் 
"எண்ண்மிட்டாலே போதும்…………..
யாதுமாம் ஈசவெள்ளம் என்னுள் நிரம்பியதென்
றோதுவதே போதுமதைவுள்ளுவதே போதுமடா
காவித்துணி வேண்டா, கற்றை சடை வேண்டா
பாவித்தல் போதும் பரமனை எய்வதற்கு,
சிவமென்றேயுள்ளதெனச் சிந்தை செய்தால்
போதுமடா" 
நித்தசிவ வெள்ளமென்னுள் வீழ்ந்து நிரம்புதென்றுன்
சித்தமிசைக் கொள்ளுஞ் சிரத்தை ஒன்றே
போறுமடா.”

@ பகவான் பாபா சொல்கிறார் " எப்போது நீ அதிக அன்பு செலுத்த ஆரம்பித்து விட்டாயோ, அதிக பேச்சைக் குறைத்துக்கொண்டாயோ, அதிக சேவையில் மனம் ஈடுபட்டதோ அப்போது உனக்கு த்யானம் நன்றாக வந்து விட்டது என்று பொருள் கொள்"

@ கிட்டத்தட்ட அரைத்தூக்க நிலை, அல்லது லேசான கனவு நிலை போன்றது இந்த ஆல்ஃபா அலைவரிசையில் உள்ள நிலை என்பதை நாம் கண்டோம். அப்படியானால் அதிக நேரங்களில் இந்த அலைவரிசையில் உள்ளவர்கள் எல்லாம் பெரிய மேதைகளா, ஞானிகளா, படைப்பாளிகளா என்று கேட்டால் அல்ல என்பது தான் உண்மையான பதில். பல மந்த புத்திக்காரர்களும், மகா சோம்பேறிகளும், போதை மருந்துகளை உட்கொண்டவர்களும் கூட அதிக நேரம் இந்த அலைவரிசைகளில் இருக்கிறார்கள் என்பதை டாக்டர் பார்பரா ப்ரவுன் போன்ற ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் இது போன்ற ஆட்கள் ஆல்ஃபா அலைவரிசைகளில் அதிகம் இருந்தாலும் உள்ள சக்திகளையும் இழந்து அழிந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதில் இன்னொரு கருத்து இருக்க முடியாது.

அப்படியானால் முன்பு சொன்னதற்கும், இப்போது சொன்னதற்கும் இடையே முரண்பாடு உள்ளதே என்று பலரும் நினைக்கலாம். கூர்ந்து யோசித்தால் முரண்பாடு இல்லை. ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளும், பெரிய மேதைகளும் ஆல்ஃபா அலைவரிசைக்கு விழிப்புணர்வோடு முயற்சி செய்து செல்பவர்களாக இருந்திருக்கிறார்கள். மந்த புத்திக்காரர்களும், மகா சோம்பேறிகளும் கிட்டத்தட்ட ஜடநிலையில் அந்த அலைவரிசையில் இருக்க, குடி மற்றும் போதையால் அந்த அலைவரிசையில் இருப்பவர்கள் செயற்கையாக அங்கு இழுத்து செல்லப்பட்டவர்களாக இருக்கிறார்கள். எனவே முன்னவர்கள் அந்த அலைவரிசையில் செயல்பட முடியும் போது, பின்னவர்கள் அந்த அலைவரிசையில் முடங்கியே போகிறார்கள். இதை நாம் என்றும் மறந்து விடக்கூடாது.

@ ஆழ்நிலை தியான பயிற்சி எப்படி செய்யவேண்டும்:-

1.தியான வகுப்பில் பயிற்சியளிக்கும்போது அனைவரையும் சௌகரியமாக அமரவேண்டும்.
2.உடலை இறுக்கமாக இல்லாமல் லேசாக எளியநிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
3.முதலில் கண்களை நன்றாக மூடிக்கொண்டு மூச்சை மெதுவாக இழுத்து 4.பிறகு மெதுவாக மூச்சை வெளியே விடவேண்டும்.
5.இப்படியே மூன்று முறை செய்ய வேண்டும்.
6.பிறகு ஒரு சக்தி மந்திரத்தை மெதுவாக சொல்ல வேண்டும்.அந்த மந்திரம் அவரவர்களுக்கு பிடித்தமானதாக இருக்கலாம். அந்த மந்திரத்தின் உச்சரிப்பு வாயை திறந்து மூடுமாறு இருக்கவேண்டும். அப்போது தான் சுத்தமான  காற்று  உள்ளேசென்று உடலை சாந்தநிலையில் வைக்க உதவும் . ( ஓம் அல்லது அல்லாஹோ அல்லாஹ் அல்லது ஏசு கிற்ஸ்துவே எங்களை இரட்சியுங்கள்...போன்றவை)   
7.அதையே 15 அல்லது 20 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.
8. பிறகு மெல்ல கண்களை திறந்து மீண்டும் மூச்சு மெதுவாக இழுத்து  
9. மெதுவாகவிட்ட பிறகு தியானத்தை முடித்துக்கொள்ள  வேண்டும்.

@ உண்மையில் தியானம் செய்யும் போது  நமது மனநிலை எப்படி இருக்கும்?:

@ சிறு ஒளியுள்ள இருட்டறையிலோ அல்லது நல்ல காற்றோட்டமுள்ள அறையிலோ கண்களை மூடி உட்காரும்போது நமது தலையை சுற்றி , கண்களை சுற்றி பலப்பல படங்கள் ஓடும். கற்பனை செய்யாத பல எண்ணங்கள் தெரியும். சற்று நேரத்திற்கு முன் நடந்த நிகழ்ச்சிகள் , மறக்க முடியாத எண்ணங்கள் , சொந்த கதை, சோக  கதை, வேலை, குடும்பம், சொந்தம், அன்னியம், தெரிந்த முகம், தெரியாத முகம் என்று பலவித உணர்வுகளை நாம் உணருவோம். இப்படி இருக்கும்போது எப்படி நாம் நமது மனதை ஒருநிலை படுத்தி கண்களை மூடிக்கொண்டு  ஒரே மந்திரத்தை ஒரே இடத்தில் உட்கார்து கொண்டு பயிற்சி செய்வது. அப்படியே உட்கார்ந்தாலும் இரண்டு நிமிடங்களுக்கு மேல் நம்மால் செய்ய இயலாது. அப்படித்தானே. அதற்கு கீழ் காணும் பயிற்சி மிகவும் உதவி செய்கிறது. 

@ தியானம் செய்ய நம்மை தயார் படுத்திகொள்ளுதல் :-

தியானம் செய்வதற்கு முன், நமது எண்ணத்தை , செயலை ஒருமுகப்படுத்த வேண்டும். அதற்கு  சுத்தமான ஒரு வெள்ளை பேப்பரில் முதலில் சற்று பெரிதான ஒரு புள்ளியை வைத்து அந்த புள்ளியில் மட்டும் மனதை ஒருமுகமாக செலுத்தி பர்ர்த்துக்கொண்டேயிருக்க வேண்டும். அப்படியே தினமும் 10 முதல் 20 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும். தேவைபட்டால் கண்களை சிமிட்டலாம்.
2. பிறகு புள்ளியை சற்று சிறியதாக்கி பயிற்ச்சியை தொடரவேண்டும்.
3. அதன் பிறகு அவ்வப்போது கண்களை மூடிக்கொண்டும் திறந்து கொண்டும் பயிற்சி செய்ய வேண்டும்.
4. கடைசியாக முழுவதும் கண்களை மூடுகொண்டு பயிற்சி செய்ய வேண்டும்.இப்படியே ஒருமாத காலம் பயிற்சி செய்ய வேண்டும்.
5. இப்போது நீங்கள் தியானம் செய்வதற்கு முழுமையாக தயாராகிவிட்டீர்கள். இனி மேற்கூரியபடி தியான பயிற்சி செய்யும் முறையினை பின் பற்ற வேண்டும்.    
6. இதை  தினமும் தவறாது செய்வீர், வாழ்க்கையினை வெற்றி கொள்வீர்.

@ ஆழ்நிலை தியான பயிற்சியின் பலன்கள்:-
@ கர்மா வினை கழியும் 
@ விரும்பிய நல்ல விளைவுகளை ஏற்படுத்திக்கொள்ளலாம்.
@ மூளையின் செயல்திறன் / அறிவுத்திறனை அதிகப்படுத்தலாம்.
@ நமது ஆத்தும பலத்தை அதிகப்படுத்தலாம்.
@ எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை.
@ உடல் பலம் அதிகரிக்கும்.
@ சக்திகள் நல்ல முறையில் சேமிக்கப்படும்.
@ நம்ம சுற்றி ஒரு காந்தவிசைப்புலத்தை ஏற்படுத்தி அதன் எல்லையில் இருப்பவர்களுக்கு சாந்த குணமும் மனம் நிம்மதியையும் தரமுடியும்.
@ நாம் செய்யும் செயலில், முழு ஆற்றலுடன் செயல்படமுடியும்.
@ நமது உடல் மனம் ஆகியவற்றை அனைவரும் விரும்பும்வண்ணம் வசீகரப்படுத்தமுடியும்.
@ நம்மால் எதையும் புரிந்துகொள்ளும் தன்மையை விரைவாகப் பெறமுடியும்.
@  ஆக்கப்பூர்வமான அறிவு மேலோங்கும்.
@ ஞாபகசக்தி அதிகரிக்கும்.
@ மனக்குழப்பங்கள் விலகி உடனடி தீர்வை எடுக்கமுடியும்.
@ பயம், குழப்பம், கவலை போன்றவை நம்மைவிட்டு அகலும்.
@ ஆளுமைத்திறன் அதிகமாகும்.
@ கேட்ட பழக்க வழக்கங்கள் நம்மைவிட்டு அகலும்.
@ நினைத்ததை சாதிக்கும் சக்தி கிடைக்கும்.
@ இரவில் தூக்கமின்மை விலகிவிடும்.
@ நமது மூளைக்கும் உடலுக்கும் ஆழ்ந்த ஓய்வுநிலை கிடைக்கிறது.
@ நோய் எதிப்பு சக்தி அதிகமாக கிடைக்கும்.
@ பதட்டம் படபடப்பு குறைந்து உடலின் இரத்தஓட்டம் சீராகிறது.
@ ஆஸ்த்துமா, தலைவலி போன்றவை குணமாகிறது.
@ மாரடைப்பு, இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.
@ களைப்பு நீங்கி சுறுசுறுப்பு கிடைக்கிறது.
@ புத்துணர்ச்சியுடன் எந்த வேலையையும் விரைந்து செய்யலாம்.
@ வயிற்றுக்கூலாறு, உடல்வலி  போன்ற உபாதைகளிலிருந்து விடுவிக்கிறது.
@ ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்கிறது.
@ சர்க்கரை சக்தியாக மாற்றி அதன் அளவை சீராக வைத்துக்கொள்ளும்.
@ நமது வேலை, தொழில், சமூக வாழ்விலும் நல்ல முன்னேற்றமும், தனி மரியாதையும் கிடைக்கிறது.
@ கோபம் , பொறாமை நீக்கி பொறுமை கொடுக்கும் இன்னும் பல..
@ ஆழ்நிலை தியான பயிற்சிபெற்று அதனால் ஏற்படும் அனுபவ பலனோடு ஒப்பிடும்போது மேலே கூறப்பட்ட அனைத்தும் மிக மிக சொற்பமானதே.


@ சகல ஐஸ்வர்யங்களும் தரும் குபேர முத்திரை! இந்த முத்திரை ஆல்பா தியான நிலைக்கு நம்மை எடுத்துச் செல்கிறது.

   
@ படத்தில் இருப்பவர் நமக்கு மிகவும் தெரிந்த மருத்துவர் திரு வளவன் அவர்கள் ஆழ்நிலை தியானத்தில்:- 

@சாதாரணமாக மனிதர்களின் மன இயக்கத்தை 
ஆல்பா (∂) பீட்டா(β) தீட்டா (σ) டெல்டா(δ) என்று நான்கு நிலைகளில் இயக்குவதாக சித்தர்களும், ஞானிகளும் அறிவியலார்களும் அறிந்து கூறுகிறார்கள்.
ஆல்பா நிலையில் மன இயக்கம 8 முதல் 12 சுற்றுகளுக்குள்ளும் (Cycles/Sec) 
பீட்டா நிலையில் 13 சுற்றுகளுக்கு மேலும்
தீட்டா நிலையில் 4 முதல் 7 சுற்றுகளுக்குள்ளும்
டெல்டா நிலையில் 3 சுற்றுகளுக்கும் கீழாகவும் 1/2 சுற்று வரையிலும் மனம் இயங்குவதாக குறிப்பிடுகிறார்கள்.
பீட்டா நிலை என்பது விழிப்பு நிலை. உணர்ச்சிவயப்பட்ட மனம் வேகமாக இயங்கும் நிலை (Active and Agitated State)
ஆல்பா நிலை என்பது விழிப்பும் உறக்கமும் அற்ற தூங்காமல் தூங்கும் தியான, மோன நிலை (A Hypnotic State)
டெல்டா என்பது சமாதி நிலை.
நாம் விழித்துக் கொண்டிருக்கும் போது ஐம்புலன்களுக்கும் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருப்பதால் தொடர்ந்து தகவல்களை ஆய்ந்தும், தொகுத்தும், பகுத்தும் கொண்டிருப்பதால் நினைவு மனம் அதிக இயக்கத்திலும் அதாவது விழிப்பு நிலையிலும் ஆழ்மனம் (Sub Conscious Mind) உறக்க நிலையிலும் இருக்கிறது.

@விளம்பரம்:- "இந்தப்பகுதியை உங்களுக்கு வழங்குபவர்கள்":-  
தமிழ் கற்பித்தல் என்பது 8 பக்கத்தில் தொடங்கி, பிறகு 42 அட்டைகள், பிறகு 32 அட்டைகள் எனத் தொடர்ந்து இப்பொழுது 64 பக்கக் கையேடாக உருவாக்கப் பட்டுள்ளது. 25 ஆண்டுகளாக படிப் படியாக மாற்றம் செய்யப்பட்டு இறுதிவடிவத்தில் உலக மக்களுக்குத் தமிழ் கற்பிக்கக் கையேடு அணியமாக உள்ளது. ஈடுபாடு உள்ளவர்கள் கையேட்டினைப் பெற்று இயங்க அன்போடு வேண்டுகிறேன்...
அன்புடன் 
M.Natesan., M.A., M.Sc., M.Ed., M.Phil., DDE, 
E_mail :- "pollachinasan@gmail.com" 
Phone :- 97 88 55 2061,

Bank Details:-
M.Natesan., a/c : 611201508406 ICICI Bank, Pollachi, IFC Code: ICIC0006112

மேலுள்ள எனது வங்கிக் கணக்குக்கு ரூ 650 - net bank வழியாக அனுப்பினால் தமிழ் கற்றல் கையேடு 40 கையேடுகளை உங்கள் முகவரிக்கு புரபசனல் தூதஞ்சல் வழியாக அனுப்பி வைக்கிறேன். குறுஞ்செய்தி வழியாகவோ அல்லது மின் அஞ்சலிலோ உங்களின் முழு அஞ்சல் முகவரியைத் தொலைபேசி எண்ணுடன் அனுப்பவும். 

=================================
@ பலன் தரும் பத்து முத்திரைகள்

1. அறிவு முத்திரை:
ஆள்காட்டி விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். கட்டை விரல் நுனிகள் பிட்யூட்டரி மற்றும் எண்டாக்ரின் சுரப்பிகளுக்கு ஆதாரம். ஆள்காட்டி விரல் நுனியால் அழுத்தம் கொடுக்கும்போது மேற்கண்ட சுரப்பிகளின் இயக்கம் சுறுசுறுப்படையும். இந்த முத்திரையை நின்ற நிலை, உட்கார்ந்த நிலை, படுத்த நிலையிலும் செய்யலாம். அறிவை கூர்மையாக்கி நினைவாற்றலை அதிகரிக்கும். தூக்கமின்மையை போக்கும். கோபம் குறையும்.

2. பூமி முத்திரை:
மோதிர விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். சோர்வை இது குறைக்கும். இந்த முத்திரையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். சோர்வான எடை குறைந்தவர்களுக்கு உடல் எடை கூடும். மேனி அழகை கூட்டி பளபளப்பாக்கும். உடலை சுறுசுறுப்பாக்கி ஆரோக்கியத்தை நிலைப்படுத்தும்.

நடு விரலை சுக்கிர மேட்டின் மேல் வைத்து கட்டை விரலால் அழுத்தவும் -மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். உடல் சோர்வின்மையை இது நிவர்த்தி செய்யும். தினமும் இப்படி 40 முதல் 60 நிமிடங்கள் செய்து வந்தால் நோய் குணமாகும். காது வலியை 4 அல்லது 5 நிமிடத்தில் குணமாக்கும். காது கேளாதோர் மற்றும் மூளை பாதிக்கப்பட்டோர்க்கு இந்த முத்திரை உதவும். பிறவி நோயாக இருந்தால் பயன் தராது.

3. நீர் முத்திரை:
சின்ன விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். இது உடலில் உள்ள நீரை கட்டுப்பாட்டில் வைத்து நீர் குறைவால் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்யும். இதனை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். ஜீரண கோளாறு மற்றும் சதை பிடிப்புகள் வராது.

4. வாயு முத்திரை:
ஆள்காட்டி விரலை கட்டை விரல் அடியில் வைத்து கட்டை விரலால் அழுத்தவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். 45 நிமிடங்கள் தொடர்ச்சியாக செய்தால் வாயுவால் ஏற்படும் தொந்தரவை 24 மணி நேரத்தில் நிவர்த்தி செய்யும். தொடர்ந்து 2 மாதங்கள் செய்து வந்தால் வாயுப்பிடிப்பு, கீழ் வாதம், பாரிச வாயு போன்ற வியாதிகளை கட்டுப்படுத்தும். வயிறு சம்பந்தப்பட்ட வாயு உபாதைகளும் நீங்கும்.

5. சூன்ய முத்திரை:
நடு விரலை சுக்கிர மேட்டின் மேல் வைத்து கட்டை விரலால் அழுத்தவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். உடல் சோர்வை இது நிவர்த்தி செய்யும். தினமும் 40 முதல் 60 நிமிடங்கள் செய்ய வேண்டும். காது தொடர்புடைய நோய்களை இந்த முத்திரை கட்டுப்படுத்தும்.

6. சூரிய முத்திரை:
மோதிர விரலை மடக்கி கட்டை விரலால் அழுத்தவும். தைராய்டு சுரப்பியை தூண்டும் சக்தி இந்த முத்திரைக்கு உண்டு. தினமும் இரு முறை 5 முதல் 15 நிமிடங்கள் பயிற்சி தரலாம். கொலஸ்ட்ராலை குறைக்க உதவும். நிம்மதியின்மை, ஜீரணமின்மை போன்ற குறைபாட்டை களைய வகை செய்யும்.

7. வாழ்வு முத்திரை:
சின்ன விரல் மற்றும் மோதிர விரலை மடக்கி கட்டை விரலால் அழுத்தவும். மற்ற இரு விரல்களும் நேராக இருக்க வேண்டும். பெயருக்கு ஏற்றார்போல் வாழ்வின் சிறப்பிற்கு வகை செய்யும். இந்த முத்திரையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வைட்டமின் குறைபாடு நீங்கும். சோர்வு நீங்கும். கண்பார்வை சிறப்பாகும்.

8. ஜீரண முத்திரை:
நடு விரல் மற்றும் மோதிர விரல் நுனியின் மூலம் கட்டை விரல் நுனியை தொட வேண்டும். மற்ற இரு விரல்களும் நேராக இருக்க வேண்டும். தினமும் குறைந்தது 45 நிமிடங்கள் பயிற்சி தரவும். சர்க்கரை வியாதி, மலச்சிக்கல் போன்றவற்றை சீராக்கும்.

9. இதய முத்திரை:
நடு விரல் மற்றும் மோதிர விரல் நுனிகள் கட்டை விரல் நுனியை தொட வேண்டும். ஆள் காட்டி விரல் நுனி கட்டைவிரலின் அடியை தொட வேண்டும். சின்ன விரல் மட்டும் நேராக இருக்க வேண்டும். இது இதய நலத்துக்கு சிறந்தது. இதய நோய் உள்ளவர்கள் தினமும் இருமுறை தலா 15 நிமிடம் செய்தால் பலன் தெரியும்.

10. லிங்க சக்தி முத்திரை:
இரு கைகளையும் சேர்த்து விரல்கள் ஒன்றுக்கொன்று பின்னி இருப்பது போல் சேர்த்து கொள்ளவும். இப்படி செய்யும்போது இடது கை கட்டை விரல் நேராகவும் வலது கை கட்டை விரல் மற்றும் ஆள் காட்டி விரல் நடுவில் இருக்குமாறும் வைத்துக் கொள்ளவும். இது உடலில் உஷ்ணத்தை தரும். எனவே இதை பயிற்சி செய்யும்போது நெய், அதிக நீர் மற்றும் பழ ரசம் பருகவும். இதை அதிக நேரம் செய்யக் கூடாது. ஏனெனில் இந்த முத்திரை குளிர் காலத்தில் செய்தால் கூட வியர்வை வரும். கபம் மற்றும் சளி போன்ற சுவாச சம்பந்தப்பட்ட வியாதிகளை குணப்படுத்த வல்லது.
இந்த முத்திரைகளை செய்து உங்களில் மாற்றம் ஏற்படுகிறதா என்று பாருங்களேன்!
தொகுத்தவர்: முனைவர் ஆர்.ராஜன், சென்னை.
==================================
அனுபவியுங்கள் ! அதுவே வாழ்வின் அர்த்தம் !!
ஒரு பெரிய மைதானம்.

அங்கே மூன்று சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள் !

அந்த வழியாகச் சென்ற ஒரு சாமியார் அவர்களைக் கவனித்தார். குழந்தைகள் உற்சாகமாகச் சிரித்து விளையாடுவதைச் சிறிது நேரம் ரசித்தார். அதன்பிறகு அவர் மெல்லமாகக் கைதட்டி அவர்களை அழைத்தார்.

பையன்கள் சாமியாரை மேலும் கீழும் பார்த்தார்கள். 

அவருடைய விநோதமான உடை அலங்காரமும் ஜடாமுடியும் அவர்களுக்குச் சிரிப்பு மூட்டியது.

சாமியார் அவர்களைக் கேட்டார். "கண்ணுங்களா, நீங்க எப்பவும் இந்த மைதானத்திலதான் விளையாடுவீங்களா?"

"ஆமா சாமி!"

"எதுக்காக தினமும் விளையாடறீங்க? அதனால உங்களுக்கு என்ன பலன்?"

முதல் பையன் சொன்னான். "நல்லா விளையாடினா உடம்பு பலமாகும். அதுக்கப்புறம் நாம யாரையும் பார்த்துப் பயப்பட வேண்டியதில்லை. எதிர்த்து வர்றவங்களையெல்லாம் ஊதித் தள்ளிடலாம்!"

இந்த பதிலைக் கேட்டுச் சாமியாருக்கு மிகவும் மகிழ்ச்சி. "நீ பெரிய பயில்வானா வருவே"என்று அவனை ஆசிர்வதித்தார். 

அதன்பிறகு இரண்டாவது பையனின் பக்கம் திரும்பினார். "நீ ஏம்பா தினமும் விளையாடறே?"

"ஜாலியா விளையாடினாத்தான் மனசுக்கு ரிலாக்ஸா இருக்கும். அதுக்கப்புறம் முகத்தைக் கழுவிக்கிட்டு உட்கார்ந்து படிச்சா எல்லாம் சட்டுன்னு புத்தியில ஏறும்!"

"பிரமாதம் !  நீ பெரிய படிப்பாளியா வருவே" என்று இரண்டாவது பையனை ஆசிர்வதித்தார் ! 

பிறகு மூன்றாவது பையனையும் அதே கேள்வியைக் கேட்டார். ‘நீ ஏன்ப்பா தினமும் விளையாடறே?’

அவன் சுருக்கமாகப் பதில் சொன்னான். "எனக்கு விளையாடப் பிடிக்கும். அதான் விளையாடறேன்!"

சாமியார் அவனை வணங்கினார். "இனிமே நீதான் என்னோட குரு!"

ஒவ்வொன்றுக்கும் காரணம், பின்விளைவுகள், லாப நஷ்டங்கள் எல்லாம் யோசித்துக் குழம்பிக் கொண்டிருக்காமல் அந்தக் கணத்தைச் சொட்டு மிச்சம் வைக்காமல் அனுபவியுங்கள் ! அதுவே வாழ்வின் அர்த்தம் !!
===============================
@ மனிதனின் கை மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டு இருக்கின்றன.
தெய்வீகம் – இயறக்கை – தாந்திரீகம் அல்லது சக்தி – ஸ்தூலம்-சம்பத் என மூன்றாக வகுக்கப்பட்டு இருக்கின்றன. விரல்களுக்கும் இந்த பகுதியில் தொடர்புண்டு.


தத்துவ சாத்திரங்களில் ஆத்மா – மணம் -சரீரம் என்ற இம் மூன்றும் ஒன்றுக்கொன்று எப்படித் தொடர்பு ஏற்பட்டு இருக்கிறதோ, அப்படியே அதனோடு சம்பந்தம் ஏற்பட்டு இருக்கிறது.

ஐந்து விரல்களும் ஐந்து கிரகங்களை குறிக்கின்றன. உள்ளங்கைக்கு மேலே, விரல்களும் அடியிலே உள்ள மேடுகள் கிரகங்களின் பலா பலத்தைத் அறியத் தருகின்றன.

ஆள்காட்டும் முதல் விரல் – குரு,

நடுவில் உள்ள இரண்டாவது விரல்- சனி,

மூன்றாவது பவித்திர விரல் – சூரியன்,

நான்காவது சுண்டு விரல் – புதன்.

பெருவிரல் – சுக்கிரன்

புதனுக்கு அடுத்த கீழ்ப்பாகம் – செவ்வாய்,

கட்டை விரலுக்குக் கீழே உள்ள மேடு – சுக்கிரன்,

உள்ளங் கையில் செவ்வாய்க்கு கீழ்மேடு – சந்திரன்.

நான்கு விரல்களுக்கு அடியில் நீண்ட ரேகைக்கு இருதய ரேகை என்று பெயர். இந்தரேகை தெய்வீகமானது.

செவ்வாய் மேட்டில் இருந்து உற்பத்தியாகி குறுக்கே போகின்ற ரேகைக்கு புத்தி ரேகை என்று பெயர்

கட்டை விரலுக்கு அடியில் சுக்கிர மேட்டை வளைத்து போயிருக்கும் ரேகைக்கு ஆயுள் ரேகை என்று பெயர்.

சந்திர மண்டலத்திற்கும் ஆயுள் ரேகைக்கும் மத்தியில் உள்ள ரேகைக்கு விதிரேகை என்று பெயர்.

ஒவ்வொரு விரலும் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டு இருக்கின்றன. அப்படி பிரிக்கப்பட்ட பாகத்துக்கு “அங்குலாஸ்தி” என்று பெயர். ஒவ்வொரு விரலின் நகமுள்ள முதல் அங்குலாஸ்தி ஆத்ம சக்தியைக் குறிக்கிறது. இரண்டாவது அங்குலாஸ்தி ஸ்தூலத்தைக் குறிக்கிறது.
மூன்றாவது அங்குலா ஸ்தி சம்பத்தைக் குறிக்கிறது.

கட்டை விரல் – ஆத்ம சக்தி
ஆள்காட்டி விரல் – சக்தி
நடுவிரல் – விதிப்பயன்
மோதிரவிரல் – பிரகாசம்
சுண்டுவிரல் – சாத்திரம்

குரு, சுக்கிரன், சூரியன், புதன் இவர்கள் இணைந்து நின்றவன் அதிக திரவியங்கள் பெற்று சுக போகங்களை அனுபவிப்பான்

குரு விரலாகிய ஆள்காட்டி விரல்

சுக்கிரன் விரலாகிய கட்டை விரல்

சூரியன் விரலாகிய மோதிர விரல்

புதன் விரலாகிய சுண்டு விரல் ஆகியவற்றை இணைத்து முத்திரை தியானம் செய்து வந்தால் மேற்சொன்ன பலனை பெறலாம் குபேர   முத்திரை

ஜோதிட சாஸ்திர ரீதியாக பெருவிரல் சக்கிரனையும், ஆள்காட்டி விரல் குருவையும், நடுவிரல் சனியையும் குறிக்கும். இந்த மூன்று விரல்களையும் சேர்த்துப் பிடிப்பதால் சனி, குரு, சுக்கிரன் சேர்க்கை ஏற்படுகிறது. இந்த கிரக சேர்க்கை, பொருளாதார வசதிகைளைப் பெருக்கும்

சுக்கிரன் விரலாகிய கட்டை விரல்

குரு விரலாகிய ஆள்காட்டி விரல்

சனி விரலாகிய நடு விரல் இவற்றின் நுனியை இணைப்பது குபேர முத்திரை

விரல்களை அதிகமாய் அழுத்தம் தராது.விரல்களை சற்று தளர்வாக பிடித்தல் வேண்டும். பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை இந்த முத்திரையை செய்யலாம்.

இந்த முத்திரையானதுநெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூத சக்திகளை ஒருங்கிணைத்து நினைத்த காரியத்தை சித்தியாக்கும் சக்தியாக மாற்றமடையும். இதன் மூலம் வாழ்வு வளமாகும் என்பதால் இதனை குபேர முத்திரை என்று அழைக்கிறார்.
அனைத்து செல்வங்களுக்கும் அதிபதியாகக் கருதபடுபவர் குபேரன். குபேர முத்திரையை செய்வதன் மூலம் விரும்பிய வளங்களைப் பெறலாம். எனவேதான் இந்த முத்திரையை குபேர முத்திரை என்று அழைக்கிறார்கள்.

செய்முறை:
பெருவிரல்,சுட்டுவிரல்,நடுவிரல் ஆகிய மூன்று விரல்களின் நுனிகளும் ஒன்றாகத் தொடும்படி இணையுங்கள். பிற இரண்டு விரல்களும் மடித்து உள்ளங்கையைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.இரண்டு கைகளிலும் ஒரே நேரத்தில் செய்யவும்.இந்த முத்திரையைச் செய்யும்முன் நீங்கள் எதைபெற விரும்புகிறீர்களோ அதைக் குறித்து தீவிரமாக மனதில் சிந்தனை செய்யுங்கள்.சில நிமிடங்களுக்குப் பின் இந்த முத்திரையைச் செய்தபடியே அந்தச் சிந்தனையைத் பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் செய்வது மிகச் சிறந்த பலங்களைத் தரும். முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்தபடியே கூட இந்த முத்திரையை செய்யலாம்.அமரும் முறையை விட இந்த முத்திரையைப் பொறுத்தவரை நாம் விரும்புவது எதுவோ அது குறித்த ஒரு முகமான தீவிரமான சிந்தனையே மிக முக்கியமாகும்.
எவ்வளவு நேரம்?

*குறைந்தபட்சம் பத்து நிமிடங்கள் என ஒரு நாளில் மூன்று முதல் நான்கு தடவைகள் வரை செய்யலாம்.

*ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 45 நிமிடங்கள் வரை செய்யலாம்,அதற்கு மேல் வேண்டாம்.

*ஆல்பா மைண்ட் கண்ட்ரோல் முறையில் சிறு சிறு விஷயங்களை அடைய (உதாரணமாக ஒரு துணி வாங்கச் செல்கையில் விரும்பிய நிறத்தில் துணி அமைய, டிரெயின் டிக்கெட் ரிசர்வ் செய்யச் செல்லும் போது டிக்கெட் கிடைக்க என சிறு சிறு அன்றாடத் தேவைகளுக்கும்)இந்த முத்திரையைப் பயன் படுத்தலாம் இவற்றுக்காச் குபேர முத்திரையை ஒரு சில நிமிடங்கள் செய்தாலே போதுமானது.
எப்படி வேலை செய்கிறது?

பெருவிரல், சுட்டு விரல், நடுவிரல் ஆகிய மூன்று விரல்களையும் இணைக்கும் போது கீழ்காணும் நிகழ்வுகள் நடை பெறுகிறது.
*நெறுப்பு, காற்று, ஆகாயம் ஆகிய மூன்று பஞ்சபூதங்கள் தூண்டப்படுகின்றன.

*மனிபூரகச் சக்கரம், அனாஹதம், விஷுதி, ஆகிய சக்கரங்கள் தூண்டப்படுகிண்றன.

*சுக்கிரன் ,குரு(வியாழன்), சனி, ஆகிய கிரகங்களின் சக்திகள் அதிக அளவில் உடலினுள் கிரகிக்கப்படுகின்றன.
*இந்த மூன்று விரல்களோடு இணைக்கப் பட்டுள்ள சக்தி ஓட்டப் பாதைகள் தூன்டப்படுகின்றன.
இத்தனையும் நிகழும் போது, நமது ஆழ்மனம்(Sub consious mind) விழித்தெழுகிறது.

நாம் எதை வேண்டுமென தீவிரமாகச் சிந்திக்கிறோமோ அந்த எண்ணம் நம் ஆழ் மனதில் ஆழமாகப் பதிகிறது.
உதாரணமாக நீங்கள் ஒரு புதிய தொழிலைத் துவங்கும் போது இந்தத் தொழில் வெற்றி பெற வேண்டும் என்று ஒரு முகமாக தீவிரமாகச் சிந்தித்தபடி குபேர முத்திரையைச் செய்யும்போது அந்தச் சிந்தனை உங்கள் ஆழ்மனதில் பதிந்துவிடுகிறது.

ஆழ்மனதில் ஒரு சிந்தனையை விதைத்து விட்டால் அதைச் செயலாக்கும் வழிமுறைகளை உங்களது உள்ளுணர்வு உங்களுக்குக் காட்டிக் கொண்டேயிருக்கும். நாம் உறங்கும் போதும் கூட ஆழ்மனது உறங்குவதுயில்லை. அதில் விதைக்கப்பட்ட சிந்தனையைச் செயலாக்குவது  எப்படி என திட்டங்களைத் தீட்டிக் கொண்டேயிருக்கும்.
ஹிப்னாடிசம்,மெஸ்மரிசம், போன்ற கலைகளும் இதையே செய்கின்றன, நமது புற மனதை (Consious Mind) ஹிப்னாடிசம் மூலம் தூங்க வைத்து ஆழ்மனதில் எண்ணங்களை விதைப்பதே ஹிப்னாடிசத்தின் அடிப்படை.
குபேர முத்திரையில் எந்தவிதமான மந்திரமும் கிடையாது.
நமது எண்ணங்களை ,விருப்பங்களை நமது ஆழ்மனதில் பதிய வைக்கும் ஒரு தந்திர வழியே (Tantra)இந்தக் குபேர முத்திரை! பலன்கள்.
*நினைத்த காரியங்களில் வெற்றி பெறலாம்.
*வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளலாம்
======================================


சுட்டீஸ், நாங்கள் தொகுத்து வழங்கிய பதிவுகளில் உள்ள குறை நிறைகளை வாசகர்கள், அன்பான முறையில் எங்களுக்கு எடுத்துக்கூறி, எங்களது பதிவுகள் மேலும் சிறப்படைய வாழ்த்தி உற்சாகப்படுத்துமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு 



வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ் தமிழ் ரோஜாக்கள்.