"தமிழ் ரோஜாக்களின் குல்கந்து"

"தமிழ் ரோஜாக்களின் குல்கந்து"

Sunday, October 15, 2017

வைஷாலி வாசகர் வட்ட 44வது சந்திப்பு, "சுட்டீஸ்-குல்கந்து" இதழ்=19

வைஷாலி வாசகர் வட்ட 44வது சந்திப்பு, "சுட்டீஸ்-குல்கந்து" இதழ்=19 ஐப்பசி மாதம், தேதி-15-10-2017. மூன்றாவது ஞாயிறு அன்று:- துப்பறியும் நிபுணர்களுக்கான நுண்ணறிவு சிறப்பு பயிற்சி பட்டறை.


வருகை தாருங்கள், தமிழில் சிறுவர்கள் தொகுத்து வழங்கும் வலைப்பதிவர்களின் மாத இதழ், ஒவ்வொரு மாதமும் ஆங்கில மாதத்தின் 3-வது ஞாயிறுதோறும் (தமிழ் மாதத்தின் முதல் ஞாயிறு அன்று) இரவு 9 மணியளவில் வெளியாகும் சுட்டீஸ் ரோஜாக்களின் "குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழ்.   http://gulkanthu.blogspot.in/


 

கற்க கசடற….!!                                       !வாய்மையே வெல்லும்!!

 “வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம்
160/Sector-4, Vaishali, Ghaziabad, NCR-New Delhi.-201012
e-mail:  vaishalireaderscircle@gmail.com
___________________________________________________________________
சுட்டீஸ் இதழ்=19 ஐப்பசி மாதம்-தேதி 15-10-2017வணக்கம், தாங்களின் வருகைக்கு நன்றி, இந்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழில்" -ஐப்பசி மாத வலைப்பதிவு:- இந்த இதழின் ஆசிரியராக, தொகுத்து வழங்குபவர்:- (Editor of the Page) வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ் குழுுவினர்கள்் -இடம் செக்டர்-4, மையப்பூங்கா, வைைஷாலி மெட்ரோ இநிலையகில்லி.


44-வது வாசகர் வட்ட சந்திப்பு, "சுட்டீஸ் குல்கந்து" இதழ்=19 ஐப்பசி மாதம், தேதி-15-10-2017. மூன்றாவது ஞாயிறு அன்று...இந்த ஐப்பசி மாதம் முழுவதும் :- வழக்கமாக இந்தமாதமும் விழிப்புணர்வு பயிற்சிமாதமாக "துப்பறியும் நிபுணர்களுக்கான நுண்ணறிவு சிறப்பு பயிற்சி பட்டறை" சிறப்பு விருந்தினராக காவல்துறை அதிகாரி மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவரும் பங்குகொள்ளவிருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். வைஷாலி வாசகர் வட்டத்தினர்களும் சுட்டீஸ் குழுவினர்களும் சேர்ந்து அவர்களுக்கு தெரிந்த துப்பறியும் விவரங்களை ஒன்று திரட்டி "சுட்டீஸ் குகலந்து" -19-வது இதழை உருவாக்கிவருகிறார்கள். துப்பறியும் கதை என்று சொன்னாலே துப்பறிதல் என்பது உலகத்தில் இல்லாத சாகசம் போல துப்பாக்கிக் குழலின் முனையில் வரும் புகையை ஊதிக் கொண்டு'பூச்சி’ காட்டும் நடிப்பு நம் கண்முன் வருவது இன்றய எல்லா சுட்டீஸ்களுக்கும் தெரிந்ததே? "துப்பறியும் நிபுணர்களுக்கான சிறப்பு பயிற்சி பட்டறை" பயிற்சி வகுப்புகள்... சிறப்பாக நடந்தேறியது பயிற்சி பற்றிய விவரங்கள் அடுத்த பதிவில் காணலாம் . 

இன்று நடந்த பயிற்சியில், பல பரிசுப்பொருட்களை மறைத்து வைத்துவிட்டு சில குறிப்புகளைக்கொண்டு கண்டுபிடிக்கும் மகிழ்ச்சியான விளையாட்டைப்போல பயிற்சி அமைந்திருந்தது. 

அடுத்து வரும் நவம்பர்-2017, 19-11-2017 கார்த்திகை -மாத வலைப்பதிவு இதழின் ஆசிரியராக, (Editor of the page) இந்த வலைப்பக்கத்தை தொகுத்து வழங்க ஆவலுடன் காத்திருப்பவர் யார்? விருப்பம் உள்ளவர்  உங்கள் விருப்பத்தை உடனே தெரியப்படுத்துங்கள். மின் அஞ்சல் "vaishalireaderscircle@gmail.com"


சுட்டீஸ் ரோஜாக்களின் "குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழ் -19 ஐப்பசி  மாதம், 15-10-2017, ஆங்கிலமாதத்தின் 3வது ஞாயிறு அன்றய வைஷாலி வாசகர் வட்டத்தின் 44வது வாசகர் வட்ட சந்திப்பு மற்றும் விழிப்புணர்வு பயிற்சி மாதக் கொண்டாட்டங்களும். நிகழ்ச்சிகளும்.....


வைஷாலி வாசகர் வட்டத்தின் 44வது வாசகர் வட்ட சந்திப்பு 15-10-2017  

                        "துப்பறியும் நிபுணர்களுக்கான சிறப்பு பயிற்சி பட்டறை"...


வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :- 

முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து, 

தொடர்ந்து எங்க வீட்டு "நூலகம் " 

படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும் 

(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம் / செல்லப் பிராணிகள் வளர்ப்போம் )

===========

குட்டிக் கவிதை:- (AK.சபரிஷ்) 

உங்களின் 

பல தலைமுறையினருக்கும் 

நான் உதவியாய் இருப்பேன்...

ஒரு தலைமுறைக்கு 

ஒரு மரமாவது  

நடக்கூடாதா??

உதவியாக இல்லாவிட்டாலும்

ஊறுவிளைவிக்காதீர்கள்....

(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம்) 

.. (AK.சபரிஷ்) 

==============

தொடர்ந்து ......


"இந்த மாத தலைப்பைச் சார்ந்த" "துப்பறியும் நிபுணர்களுக்கான சிறப்பு பயிற்சி பட்டறை"என்ற பயிற்சி மாதக் கொண்டாட்டங்களும். நிகழ்ச்சிகளும்.போட்டிகளும் பரிசுகளும்.. என நடந்தேறிய அன்றய நிகழ்ச்சியில் உதவிய அனைவரையும் பாராட்டி, நிகழ்ச்சி இனிதாக நிறைவுபெற்றது.

===========================================================

சித்திரமும் கைப்பழக்கம் பகுதியில்:-

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்  நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்கொடையும் பிறவிக் குணம். – வெண்பா 7


விளக்கம்:
பழகப்பழக பழக்கம் வந்துவிடும். ஆனால் பிறவிக்குணத்தை மாற்ற முடியாது. வரைய வரையச் சித்திரமும் கைப்பழக்கம் ஆகிவிடும். பேசப் பேசச் செந்தமிழும் பழக்கமாகிவிடும். திரும்பத் திரும்ப நினைத்தால் கற்றது மனத்தில் பதிந்துவிடும். நல்லொழுக்கத்தைத் திரும்பத் திரும்பக் கடைப்பிடித்தால் அதுவும் பழக்கமாகிவிடும். ஆனால், நல்லவர் நட்பு, இரக்கக் குணம், கொடைப் பண்பு ஆகியவை பிறவியிலேயே பதிந்திருந்தால்தான் வரும்.

@சுட்டீஸ் தக்ஷின் சிவா LKG- வைஷாலி 
d) S.இரண்யா & S.ஷியாம் சுந்தர்:

@சுட்டீஸ்  M.Tejaswini Class-2,CRPF School.



@சுட்டீஸ் சாய் நந்தினி & சாய் ஷிவானி


@சுட்டீஸ் கிருத்திகா ராஜேந்திரன்

@சுட்டீஸ் கிருத்திகா ராஜேந்திரன் 

@சுட்டீஸ்  D. துர்கா 

@சுட்டீஸ் கிருத்திகா ராஜேந்திரன் ஆங்கில மொழியில் எழுதிய கதை







ciui

@. விடுகதைகள் :- (A.K.சபரிஷ்)

கருப்பன் தண்ணீரில் குளித்து வெள்ளையனாவான், வெள்ளையன் பிறகு விருந்தாவான் – அவன் யார்? (உளுத்தம் பருப்பு)

அகத்தின் நோய்கள் நகத்தில் தெரியும் அது என்ன? (அழுக்கு)..
வெய்யிலோ, மழையோ... 
பொழிந்தபோது...
இரண்டு கால்...
மற்றநேரங்களில்...
மூன்றாவது கால்....
தாத்தா கைத்தடிக் +குடை 
(A.K.பவித்ரா)
குட்டிக் கவிதை:-
வெப்ப நகரம் 
கண்ணாடி மாளிகையின் 
கண்ணீரால் 
குளிர்ந்தது..... 
எதோ ஒரு சில 
மரங்களின் 
புண்ணியத்தால்... ( AK.பவித்ரா)
==========================================

@விளம்பரம்:- "இந்தப்பகுதியை உங்களுக்கு வழங்குபவர்கள்":-  

@விளம்பரம்:- "இந்தப்பகுதியை உங்களுக்கு வழங்குபவர்கள்":-  

====================================
"மனோன்மணீயம்" நமக்களித்த "தமிழ் தாய் வாழ்த்து":-
"நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்,

சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்,

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற,

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் 
தமிழணங்கே!  தமிழணங்கே! .....

உன் சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து 
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!"

இந்த வாழ்த்துப்பாடலை இயற்றியவர் திரு.பெ. சுந்தரம் பிள்ளை (அவர் வாழ்ந்த காலம் "ஏப்ரல் 4, 1855 - ஏப்ரல் 26, 1897") 

அவர் எழுதிய "மனோன்மணீயம்" என்ற புகழ்பெற்ற நாடக நூலில் இடம்பெற்றிருக்கும் தமிழ் தாய் வாழ்த்துப்பாடல் இது. 

இந்த மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த என்று ஆரம்பமாகும் பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது.

தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலின் கருத்து:- 
அலை கடலே ஆடையான இந்த அழகான பூமிப் பெண்ணிற்கு, பாரத நாடே முகமாம், தென்திசை அதன் நெற்றியாம், அதில் திலகமென திகழ்வது திராவிட திருநாடாம், அந்தத் திலகத்தின் வாசனைப் போல்அனைத்து உலகமும் இன்பம் காண எல்லா திசையிலும் புகழ் மணக்க இருக்கும் தெய்வமகள் ஆகிய தமிழே, என்றென்றும் இளமையாக இருக்கிற உன்னுடைய இந்த அழகைக் கண்டு வியந்து, செய்யும் செயலையும் மறந்து, வாழ்த்துகிறோம்! வாழ்த்துகிறோம்! வாழ்த்துகிறோம்!.....
நன்றிகளுடன் "வைஷாலி வாசகர் வட்டம்". 
==========================
15-10-2017 அன்றய நமது 44-வது வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில்:- ,
"ஒவ்வொரு மதமும் ஒரு விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை வகுப்புகள். என இந்த வருடம் முழுவதும் கற்றுக்கொள்வோம், தெரிந்துகொள்வோம் பயிற்சிப் பட்டறை மாதங்களின் வருடமாக, நமது வைஷாலி வாசகர் வட்டத்தின், ஒவ்வொரு மாதமும், ஆங்கில மதத்தின் 3வது ஞாயிறு அன்றைய வாசகர் வட்ட சந்திப்பில், ஒவ்வொரு மதமும் ஒரு விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை வகுப்புகள்... பயிற்சி மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும், மற்றும் கதைகள், கட்டுரைகள், பயிற்சிப்பட்டறை சார்ந்த போட்டிகளும் பரிசுகளும்  என இந்தமாத இதழில் பல விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.   

“துப்பறியலாம் வாங்க” ஆச்சரிய தகவல்களை நமக்கு வாரி வழங்கும் குட்டி பயிற்சிப்பட்டறை. மேலும் இந்த மாத சுட்டீஸ்களின் ஏராளமான செய்திகளை மிகவும் பயனுள்ள வகையில் நமது வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ் "குல்கந்து" குழுவினர்கள் தொகுத்து தந்திருக்கிறார்கள்....

அவர்கள் தொகுத்துத் தந்த பல செய்திகளை ஒன்று சேர்த்து, அனைத்தையும் அழகாக கோர்த்து, ஒரு கதம்ப மாலையாக தொடுத்து தந்திருக்கிறார்கள். இந்த மாத வலைப்பதிவு இதழின் அனைத்து விவரங்களும்  உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம்.... இப்படிக்கு வாசகர் வட்ட சுட்டீஸ் "குல்கந்து" ரோஜாக்கள். 



==================================
@. புதிய எட்டு வித்தியாச புதிர் போட்டி :- சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்"..... ஐப்பசி-மாத-படத்தில் உள்ள (8) எட்டு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் -வலைப்பதிவு இதழ் போட்டி என்-19.

சரியான விடை அடுத்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" http://gulkanthu.blogspot.in/வலைப்பதிவர் இதழில் வெளியாகும். 

போட்டியில் பங்குகொள்ள விருப்பமுடையவர்கள் விடைகளை "vaishalireaderscircle@gmail.com" என்கிற மினஞ்சல் முகவரிக்கு 10-11-2017 முன்பாக அனுப்பிவைக்கவேண்டும். சரியான விடை எழுதிய அனைவருக்கும் அடுத்தமாத வாசகர் வட்ட சந்திப்பில் பரிசுகள் வழங்கப்படும்.

சென்ற மாத "சுட்டீஸ் குல்கந்து" வலைப்பதிவர் இதழ்-18  புரட்டாசி-மாதம் வலைப்பதிவு இதழ், எட்டு வித்தியாசப் போட்டி என்-18. போட்டிக்கான  சரியான  விடை,

விடை:- 1.இடம்வலமாக படம் திரும்பியுள்ளது, 2) வள்ளலார் தலையில் ஒளிக்கதிர்கள், 3) யானையின்மீது போர்த்தப்பட்ட அலங்கார உடை, 4)மஞ்சள்நிற சந்திரன், 5)இரண்டு முயல்கள்,  6) குளத்தில் முதலை குட்டி, 7) குட்டையில் 3-வாத்துக்கள், 8) வானத்தில் பறவைகள் பறக்கும் காட்சி. 

சென்ற மாத எட்டு-வித்தியாசங்கள் வலைப்பதிவர் இதழ்-18 போட்டிக்கான சரியான விடையை 92 நபர்கள்/போட்டியாளர்கள் எழுதி போட்டியில் கலந்துகொண்டனர். வாட்ஸ் ஆப், முகநூல், மற்றும் குறுஞ்செய்தி, தொலைப்பேசி மேலும் மின்னஞ்சல் மூலம் நிறைய போட்டிக்கான விடைகள் அனுப்பிவைத்தார்கள். சரியான விடையை 40 நபர்கள் மட்டுமே குறிப்பிட்டிருந்தனர், தமிழில் விடை எழுதியவர்கள்=11, ஆங்கிலத்தமிழில் எழுதியவர்கள்=19, ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=10, ஹிந்தி மொழியில்=0 நபர்களும், பிற மொழியில்=0 நபரும், மேலும் சிலர் எட்டுக்கும் அதிகமான தவறான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.
@விளம்பரம்:- "இந்தப்பகுதியை உங்களுக்கு வழங்குபவர்கள்":-  

==============================================

I.முதலில் சுட்டீஸ் குல்கந்து தகவல்கள் :- 
“துப்பறியலாம் வாங்க” ஆச்சரிய தகவல்களை நமக்கு வாரி வழங்கும் குட்டி பயிற்சிப்பட்டறை. 

@ தமிழில் வலைப்பதிவு இதழை தரவேண்டும் என்கிற ஆவலோடு வந்த சுட்டீஸ்களோடு  இந்த பதிவை எழுதுவதற்கு தேவையான விவரங்களை இணைய தளங்களில் தேடியபோது சில வித்தியாசமான விஷயங்கள் கிடைத்தது.

துப்பறிவதைப்பற்றி சுட்டீஸ்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்போம்.
@ துப்பறியும் கதை என்று சொன்னாலே எனக்கு சினிமாவில் ஜேம்ஸ் பாண்ட் செய்யக்கூடிய சாகசங்கள்தான் ஞாபகம் வரும்.  

@ துப்பறியும் சாம்பு, ராஜேஷ்குமார், எழுத்தாளர் சுஜாதா போன்றவர்கள் எழுதிய துப்பறியும் கதைகள் படித்திருக்கிறேன்.

@ என்னாகுமோ ஏதாகுமோன்னுதான். கொலை கேசு துப்பறிதல்..

நான் தொலைக்காட்சியில் பல திகில் துப்பறியும் திரைப்படங்களை பார்த்திருக்கிறேன்.  டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மெடிக்கல் டிடக்டிவ்ஸ்” தொடர், மிகவும் பயனுள்ள, ஆர்வத்தை தூண்டக்கூடிய நிகழ்ச்சி.

@ தொலைகாட்சி/டிவி தொடர் ஒன்றில் ஒரு குற்றம் (கொலை, கொள்ளை, நோய்) பற்றி முதல் 10 நிமிடங்களுக்கு, ஒரு நாடக பாணியில் நடிகர்கள் நடிப்பதின் மூலம் காண்பிப்பார்கள். அடுத்த 10 நிமிடங்களுக்கு, அந்த குற்றத்தை போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் எப்படி துப்பறிந்து, குற்றவாளியைக் கண்டுபிடித்தார்கள் என்பதை பற்றி விவரிப்பார்கள். கடைசி 5 நிமிடங்கள், அந்த குற்றத்தினால் பாதிக்கப்பட்டவரின் உண்மையான தோற்றத்தை போட்டோவில் காண்பிப்பார்கள்.

இத்தொடர், மிகவும் பயங்கரமான, சிக்கலான குற்றங்களை நிகழ்த்தியவர்கள் எப்படிப்பட்ட தடயங்களை விட்டுச் சென்றார்கள் ?, அதை மருத்துவ பூர்வமாக எப்படி கண்டுபிடித்து, கோர்ட்டில் நிரூபித்து, தண்டனை வாங்கிக் கொடுத்தார்கள் என்பதை மிகவும் அருமையாக விளக்கியிருப்பார்கள். 

துப்பறியும் சாம்பு அவரின் முதல் காமிக்ஸ் வடிவிலான துப்பறியும் கதை: 




"வீட்டு வாசலில், வெட்டப்பட்ட ஒரு ஆட்டின் தலை மாட்டியிருந்தது. கூடவே “அடுத்தது நீ தான்”... என்ற எச்சரிக்கை கடிதம்..... இப்படிப்பட்ட திகில் பயங்கர காட்சிகளை வைத்து கதையை ஆரம்பிப்பார்கள் அது மிகவும் பயமாக தொடர்ந்து கதையை படிக்கவேண்டும் என்கிற ஆர்வத்தை தூண்டும். முழுக்கதையையும் படிக்கும்வரை தூக்கம் வராது புத்தகயித்தையும் முழுவதும் படிக்கும்வரை கவனம் முழுதும் புத்தகத்தில் இருக்கும்.

எப்போதும் நமக்கு சஸ்பென்ஸ் "ரகசியம்" என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்ற சஸ்பென்ஸ் தான் நம்மை நம் மனம்  எதிர்க்காலத்தைப்பற்றி தெரிந்துகொள்ள ஜோதிடம் பக்கம் இழுத்துச் செல்கிறது.

கொஞ்சம் அறிவை பயன்படுத்தி நிறைய யோசிப்பதுகூட துப்பறிதலின் தன்மை என்றும் கூறலாம்.   துப்பறிதல் என்பது பெரிய புதிர் கட்டத்தைப் போன்றது. சின்ன சின்ன க்ளூக்களை சேகரித்து, அதனதன் இடத்தில் சரியாக பொருத்தினால் புதிரை விடுவிக்கலாம். அந்த மாதிரி சின்ன சின்ன தடயங்களை அதனதன் இடத்தில் பொருத்தி குற்றவாளியைக் கண்டுபிடிப்பதைத்தான் துப்பறியும்,   மற்றும் தடயவியல் நிபுணர்களின் வேலை என்கிறார்கள்.

@ துப்பறிவதற்கு உதவியாக கொலை நடந்த இடத்தில் ரத்தத்தை ஆராயும் மருத்துவ நிபுணர்கள் மற்றும் குற்றம் நடந்த இடத்தை ஆராய்ச்சி செய்யும் தடயவியல் நிபுணர்கள் போன்றவர்கள் பெரும் பங்குவகிக்கின்றனர். 

@ துப்பறிதல்  பற்றி திருக்குறளில் நமது திருவள்ளுவர் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம். திருக்குறளில் ஒற்றாடல் என்கிற தனி அதிகாரத்தையே தந்திருக்கிறார். 

"வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு அனைவரையும் ஆராய்வது ஒற்று" (குறள்: 584) என்ற பாடலில் சொல்லப்பட்ட மூவகையினரும் ஒரு நாட்டின் அதிகார வட்டத்தில் இருப்பவர்கள் அல்லது இருந்தவர்கள் ஆவர். அரசு செலுத்துவதில் நேரடியாகத் தொடர்புடையவர்கள் ஆதலால் இவர்கள் செயல்பாடுகளைத் தொடர்ந்து நாடாள்வோன் கண்காணித்து வரவேண்டும் என்கிறார் வள்ளுவர். தமது அரசியல் செல்வாக்கைத் தவறாகப் பயன்படுத்தி அரசுக்குத் தீங்கு இழைக்க வாய்ப்பு மிகையாக உள்ளவர்கள் இவர்கள். எனவே ஆட்சியாளர்க்கு மிக நெருக்கத்தில் இருந்தாலும் அவர்களையும் ஒற்று வளையத்தில் கொண்டுவர வேண்டும் எனச் சொல்லப்பட்டது. இன்றைய சூழ்நிலைகளுக்கும் இப்பாடல் எத்துணை பொருத்தமாகிறது என்பதைக் காணலாம்...

சிலநேரம் சந்தர்ப்ப சாட்சியங்கள்கூட ஒரு நிரபராதிக்கு எதிராக அமைந்துவிடுகிறது. அப்படிப்பட்ட நேரத்தில் ஒரு நிரபராதி தண்டிக்கப்படாமல் காப்பாற்றப்பட்டான் என்பதற்கு தடயவியல் பயிற்சி பெற்ற மன நல மருத்துவர்கள் மிகவும் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். ஆகவே துப்பறிவதில் மனநல மருத்துவரின் பங்கு மகத்தானது.

@ நான் சிறுவயது முதல் ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் மற்றும் சுபா எழுதிய துப்பறியும் நாவல்களை, 80 பக்க கதையை, சஸ்பென்ஸை அவிழ்க்கும் கடைசி ஒரு பக்கத்திற்காக ஆர்வமுடன் படிப்பேன். தற்போது அகதா கிறிஸ்டி படித்துக் கொண்டிருக்கிறேன். எனது ஒவ்வொரு “துப்பறியலாம் வாங்க” பதிவையும், ஆயிரக்கணக்கான மக்கள் படிப்பது, வலையுலகினர் அனைவரும் அறிந்ததே !!.

@துப்பறியும் கதைகளின் ராணியாகத் திகழ்ந்தவர் அகதா கிறிஸ்டி. ஆங்கிலத்தில் அவர் எழுதிய நாவல்கள் உலகெங்கும் கோடிக்கணக்கில் விற்பனையாகி இருக்கின்றன. ஆங்கிலம் அறியாத ஆனால், துப்பறியும் கதைகள் படிக்கும் ஆர்வம் மிக்கத் தமிழ் ரசிகர்களுக்கு இந்த நூல்கள் மிகத் திருப்தியை அளிக்கும். தெளிவான மொழிபெயர்ப்பு.

@ ஆங்கில திரைப்பட உலகின் முக்கிய படமாக இன்று வரை கருதப்படும் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் புகழ்பெற்றவை. உளவு, துப்பறிதல் ஆகிய காட்சியமைப்புகள் இப்படங்களில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில், இத்திரைப்பட வரிசைகளில் 7 முறை கதாநாயகனாக நடித்த ரோஜர் மூர் (89) இந்த வருடம் 2017 மே -மாதம் 23ம் தேதியன்று கேன்சர் நோய் பாதிப்பினால் ஸ்விச்சர்லாந்தில் காலமானார்.

@ சர்வதேச துப்பறிதல் நாவல்களில் மிகப்பிரபலமான  "த-டா-வின்சி-கோட்" 2003ஆம் ஆண்டு அமெரிக்க எழுத்தாளர் திரு டான் பிரவுனால் எழுதப்பட்ட மர்மத்-துப்பறிவுப் புனைவு நாவலாகும். இந்த புத்தகம் உலகமெங்கும் 80 மில்லியன் புத்தகங்கள் விற்பனையான சிறப்பு விற்பனைப்புத்தகமாகவும், 44 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதுவும் ஆகும். துப்பறிதல், திகில் மற்றும் முரண்பாட்டு புதின வகைகளை ஒன்றிணைத்து,  ராபர்ட் லாங்டன் என்ற கதாப்பாத்திரத்துடன் வெளியிடப்பட்ட கதாசிரியர்  பிரவுனின் இரண்டாவது நாவலாகும்.

@ 1957-இல்  அப்போது “திருவாளர் தேவன்” அவர்கள் ஆனந்த  விகடனின் பொறுப்பாசிரியராய் இருந்தார். அவர் "முத்து” என்ற பெயரில் பல அருமையான சிறுவர் கதைகளை எழுதியவர். அப்போது விகடன் உதவி ஆசிரியர்களில் ஒருவரான, “கோபு” கோபாலகிருஷ்ணன்.“ அவர்தான் "தேவன்” அவர்களின் மறைவிற்குப்பிறகு “தேவனின் “துப்பறியும் சாம்பு” படக்கதை வடிவில் 1958 ஏப்ரல் முதல் ஆனந்த விகடனில் பவனி வந்தது. கோபுலுவின் கைவண்ணத்தில் படக்கதை மின்னியது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. உண்மையைச் சொல்லப் போனால், இன்றைய தலைமுறையில் பலருக்கு “ராஜு” என்ற ஓவியர் தான் முதலில் “சாம்பு” வுக்கு உயிரூட்டியவர் என்றே தெரியாது! அதாவது, ”சாம்பு” அவர்களின் பதிவுகளையும், ராஜுவின் படங்களையும் பார்க்காதவர்கள்!: “சாம்பு” கதைகள் என்றவுடனே அவர்களுக்குக் “கோபுலு”வின் படங்கள் தான் நினைவுக்கு வரும்!  “சாம்பு”அவர்களின் முதல் துப்பறியும் காமிஸ் கதைப்பாடத்தை பாருங்கள்....

ஆர்வத்தைத் தூண்டும் துப்பறிதல் துறை படிப்புகள்!:-
@ குற்றவியல் துறை கல்விமுறை சார்ந்து இந்தியாவின் பல கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில், இளநிலை-முதுநிலை கலை மற்றும் அறிவியல் படிப்பு, பட்டயப் படிப்பு, மற்றும் பட்டய மேற்படிப்பு, ஆய்வு முனைவர் படிப்பு எனவும், குற்றவியல் மற்றும் குற்றநீதி அறிவியல், குற்றவியல் மற்றும் காவல் அறிவியல், குற்றவியல் மற்றும் தடய அறிவியல், குற்றவியல் மற்றும் சைபர் சட்டங்கள் எனவும் பயிற்றுவிக்கப் பட்டு வருகின்றன.

@ துப்பறிதல், குற்றவியல் மற்றும் தடய அறிவியல் போன்ற  இத்துறையில் பயின்று கல்வியை நிறைவு செய்யும் மாணவ மாணவியர்களுக்கு அரசு துறையிலும், தனியார் துறைகளிலும் மேலும் தனியார் பாதுகாப்பு மற்றும் துப்பறிதல் துறை போன்றவற்றில் சுய வேலைவாய்ப்பைப் பெருக்கிக் கொள்ளவும் வழிவகை உள்ளது.

உதாரணமாக, அரசுத் துறையில் TNPSC GROUP I  மற்றும் Group II தேர்வுகளில் Dy.Superintendent of Police (DSP), ஜெயிலர், தடய அறிவியல் (Forensic Science) பணி போன்ற பதவிகளில் குற்றவியல் துறை மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. காவல் துறையில் உதவி ஆய்வாளர் (Sub-Inspector) பணியிலும், நீதிதுறையில் அலுவலக பணிகளிலும் குற்றவியல் துறை மாணவர்கள் கவனத்தில் கொள்ளப்படுகின்றனர். அரசு சாரா நிறுவனங்களில் மேல்நிலை பதவிகளிலும், அந்நிறுவனங்களை தாங்களே நிறுவுதலிலும் முக்கியத்துவம் பெறுகின்றனர். இன்றைய முக்கிய தேவையான தனியார் பாதுகாப்பு மற்றும் துப்பறிதல் துறையிலும் (Private Security and Detective), ஊடகத்துறையின் குற்றப் பின்னணி தொடர்களிலும் (Crime Investigation Serials), வழிகாட்டுதல் மையங்களில் ஆலோசனை வழங்குதலிலும் (Counselling and Guidance) பல முக்கிய பொறுப்புகளை இத்துறையில் பயின்ற மாணவர்கள் வகித்து வருகின்றனர்.

@ குற்றங்கள் பெருகிவரும் இச்சூழ்நிலையில் இக்குற்றவியல் துறையின் பயன்பாடு மிகவும் அவசியமான ஒன்றாகிவிட்டது. இத்துறையில் சேர்ந்து பயில்வதற்கு அடிப்படைத் தகுதி, ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருத்தல் ஆகும். அறிவியல் பாடங்களை அடிப்படையாகக் கொண்டவர்கள் தடய அறிவியல் துறையில் தங்களை சிறப்புற்றவராக ஆக்க இது போன்ற பயிற்சிகள் ஏதுவாக இருக்கும்''

@ துப்பறியும் சாம்பு அவர்களின் கதை-22 - 'மடையன் செய்கிற காரியம்' என்கிற துப்பறியும் கதை.https://youtu.be/_AnVR2kvh0s
@ உணர்ச்சி வேகத்தில் செய்யப்படும் குற்றங்களை போலீசார் கண்டுபிடிப்பது சுலபம். ஆனால் திட்டமிட்டு செய்யப்படும் குற்றங்கள், குற்றவாளி, போலீசாருக்கு மறைமுகமாக விடுக்கும் சவால். எவ்வளவு நுணுக்கமாக திட்டமிட்டாலும், சிறிய தவறுகள் இருக்கும். அதனை கண்டுபிடிக்க பல துறையை சேர்ந்த வல்லுனர்களின் உதவி தேவைப்படும்

@ நான் வசிக்கும் பகுதியில் கடந்த மூன்று வருடங்களில் நிறைய கொலைகள் நடந்து விட்டது. இதனால் போலீசார் வழக்குகளை ஒழுங்கான முறையில் நடத்த வேண்டும் என்று ஒருவர் கோர்ட்டில் கேஸ் போட, இப்பொழுது, எங்கள் தெரு மற்றும் சாலையில் எப்பொழுதும் ஒரு போலீஸ் ஜீப் நிற்கிறது. இன்று என் அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்களின் விபரங்களை (போன் நம்பர், வேலை விபரம், வாட்ச்மேன், வேலைக்காரர்களின் பெயர், கார்/பைக் எண்) போலீசார் சேகரித்துச் சென்றனர். இந்த விபரங்களைத் தர தயக்கமாக இருந்தாலும் வேறு வழியில்லாமல் கொடுக்க வேண்டியதாயிற்று. போலீசார், விபரங்களை பத்திரமாக வைத்திருப்பார்கள் என்று நம்புவோமாக.

எங்களை உற்சாகப்படுத்த நாங்கள் தொகுத்துத்தந்த விவரப்  பதிவுகளைப் படித்து, தங்களின் மேலான கருத்துக்களை, பின்னூட்டமாக அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.  
======================================

@ துப்பறியும் கதை-1




சிறிது நேரத்திற்கு முன் பெய்த மழை வீட்டைச் சுற்றிலும் இருந்த மண்ணைச் சேறாக்கியிருந்தது. வீட்டின் உள் அறையில் டேவிட் உறங்கிக்கொண்டிருக்கும் போது, டேவிட்டின் மகன் ஜான், ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான். அருகிலிருந்த சோபாவில் ஜானின் தம்பி மேத்யூஸ் தூங்கிக்கொண்டிருந்தான்.



பின்னிரவு நேரத்தில், இடி இடிக்கும் ஓசைக்கு நடுவில் கேட்ட துப்பாக்கி சத்தத்தில் ஜான் அதிர்ந்து போனான். அப்பா உறங்கும் அறையிலிருந்து அந்த சத்தம் வந்தது. என்ன செய்வது ?. அறையின் உள்ளே சென்று பார்க்கலாமா ? ஒருவேளை, திருடன்/கொலைகாரன் அங்கே இருந்தால் என்ன செய்வது ?. அறைக்கதவைத் திறக்கப் பார்த்தபோது, உள்ளே தாழ்பாள் போட்டிருப்பது தெரிந்தது. வேறு வழியில்லை போலீசுக்கு போன் செய்யவேண்டியதுதான். அதற்கு முன், மேத்யூஸை பக்கத்து வீட்டிற்கு பாதுகாப்பாக அனுப்ப வேண்டும். அனுப்பினான். அதற்குப் பின் போலீசுக்கு போன் செய்தான்.



“ஹலோ ! என் பெயர் ஜான். என் அப்பா தூங்கிக் கொண்டிருக்கும் அறையில், துப்பாக்கி சத்தம் கேட்டது”



“பதப்படாதீர்கள் !. உங்களையும், உங்கள் அப்பாவையும் தவிர வேறு யார் உங்கள் வீட்டில் இருக்கிறார்கள் ?”



“என் தம்பி இருக்கிறான். அவனைத் துப்பாக்கி சத்தம் கேட்டதும், பக்கத்து வீட்டிற்கு அனுப்பிவிட்டேன்”


“வீட்டினுள் நுழைந்தவன், இப்பொழுது அந்த அறையினுள் இருக்கிறானா ? “

“ அது தெரியவில்லை. சீக்கிரம் போலீசை அனுப்புங்கள்.”

போலீஸ் வந்த போது எல்லாம் முடிந்திருந்தது. எதிர்பார்த்தது போல டேவிட், தலையில் சுடப்பட்டு, கட்டிலில் சரிந்திருந்தார். வீட்டை முழுவதுமாக ஆராய்ந்ததில், கொலைகாரன், டேவிட் படுத்திருந்த அறையின் ஜன்னல் கண்ணாடியை, பெரிய கல் ஒன்றினால் அடித்து உடைத்து உள்ளே நுழைந்திருப்பது தெரிந்தது. கல் அறையின் உள்ளே கிடந்தது. விசாரணைக்காக, ஜானின் உடைகள் சேகரிக்கப்பட்டது.
டேவிட்டின் எதிரி யாராவது இருக்கிறார்களா ?. அவர் வக்கீலாக பணிபுரிந்தவர். மிக ’நல்லவர்களுக்கு ?!’ மட்டுமே ஆஜராகக் கூடியவராக இருந்ததால், யார் வேண்டுமானாலும் இந்தக் கொலையை செய்திருக்கலாம். 
அடுத்தது, ஜன்னலை உடைக்க உதவிய கல். முதல் மாடியில் இருந்த ஜன்னலை உடைக்க, தரையிலிருந்து அதை எறிந்திருக்க வேண்டும் என முடிவு செய்தார்கள். கல்லின் எடையைப் பரிசோதித்ததில், அவ்வளவு உயரத்திற்கு எறிவதற்கு ஒருவனால் முடியாது என்பதை உணர்ந்தார்கள்.

வீட்டின் வெளிப்புறத்திலிருந்து, மாடிக்கு ஏறியதற்கான தடையம் எதுவும் இல்லை. அன்று மழை பெய்ந்திருந்தது ஆனால் சேறு வீட்டின் எந்தப் பகுதியிலும் தென்படவில்லை. வெளியிலிருந்து ஒருவன் வந்து இந்தச் செயலை செய்திருப்பதற்கு சாத்தியங்கள் இல்லை.

உடைந்திருந்த கண்ணாடியின் சில்லுகள் அறையின் வெளிப்புறத்திலும் கிடந்தது. தடயவியல் வல்லுனர்கள் கண்ணாடி, அறையின் உள்ளிருந்து உடைக்கப்பட்டிருக்கிறது என்பதனை உறுதி செய்தார்கள். 

இப்பொழுது சந்தேகம் அந்த நேரம் வீட்டில் இருந்த ஜானின் மேல் திரும்பியது. பக்கத்து வீட்டில் விசாரித்ததில், இரவு 11 மணியளவில் அவன் தம்பியை கொண்டு வந்துவிட்டது உண்மை என்றார்கள். போலீசுக்கு போன் செய்த நேரம் 11.20. ஆக, சத்தம் கேட்டப் பிறகு, பாதுகாப்புக்காக தம்பியை பக்கத்து வீட்டிற்கு அனுப்பியது பொய்.

உடையைப் பரிசோதித்ததில், துப்பாக்கி சுடும் போது வெளியான, மிக நுண்ணிய வெடிமருந்து ஒட்டியிருந்தது. துப்பாக்கி சுடும் போது, அவன் மிக அருகில் இருந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

விசாரணையில் ஜான், டேவிட்டைக் கொலைசெய்ததை ஒப்புக்கொண்டான். என்ன நடந்தது ?. டேவிட் தூங்கியதும், இடிச்சத்தத்தை வீட்டினுள் கேட்ட சத்தம் என தம்பியை நம்ப வைத்து, அவனை பக்கத்து வீட்டிற்கு கொண்டு விட்டுவிட்டு வந்தான். அறையினுள் புகுந்து, துப்பாக்கியால் கொன்று விட்டு, கல்லால் ஜன்னலை உடைத்திருக்கிறான். அறையின் உள்தாழ்ப்பாள் போட்டுவிட்டு, ஜன்னல் வழியே வெளியே சென்றுவிட்டான். பிறகு போலீசுக்கு போன் செய்திருக்கிறான்.

காரணம் என்ன ? நெடுநாட்களாக தான் கேட்டுக்கொண்டிருந்த ஸ்போர்ட்ஸ் மாடல் காரை வாங்க அப்பா பணம் தராததால், அவருடன் சண்டை. சம்பவம் நடந்த இரவு, சண்டை தொடர்ந்திருக்கிறது. அதனால் ஏற்பட்ட கோபம் இச்செயலைச் செய்யக் காரணமாக இருந்திருக்கிறது. வளர்த்த கடா மார்பில் … இல்லை இல்லை, தலையில் பாய்ந்தது.

========================================
@ துப்பறியும் கதை-2



1981 வருடம், ப்ளோரிடா மாகாணம். ஜான், வேலை முடிந்து வீட்டுக்கு வரும் வழியில், சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை வாங்கி விட்டு, தன் காரை நெருங்கும் போது,



”சார்.. நான் ரயில்வே ஸ்டேஷன் வரை போகணும், லிப்ட் தருவீங்களா?” என்ற குரல் கேட்டுத் திரும்பினார். 25 வயது மதிக்கத்தக்க கருப்பு இளைஞன் நின்று கொண்டிருந்தான்.



”நான் அவ்வளவு தூரம் போக மாட்டேன். ஆனால் வழியிலே உங்களை இறக்கி விடுகிறேன்” என்றார் ஜான்.

“சரி சார். தேங்க்ஸ்”என்றான் அவன்.



3 கிலோ மீட்டர் வந்தவுடன், ஜான், அவனை அங்கே இறங்கச் சொன்னார். தன் வீடு வரை வெளியாள் ஒருவனை அழைத்துச் செல்ல வேண்டாம் என்ற பாதுகாப்புணர்ச்சியினால், மெயின் ரோட்டிலேயே வண்டியை நிறுத்தினார்.



அது வரை அமைதியாக வந்தவன் ஜானுடன் சண்டை போட ஆரம்பித்தான். சண்டை வலுக்கவே, வண்டியிலிருந்த ஸ்க்ரூ டிரைவரை எடுத்து ஜானை தாக்க ஆரம்பித்தான்.அவனிடமிருந்து தப்பிக்க வண்டியை விட்டு கீழே இறங்கிய ஜான்,  ஓட எத்தனிக்கும் பொழுது, அவன் எட்டிப் பிடித்தான். இனி தப்பிக்க முடியாது என்ற நிலையில், ஜான், அவனை வண்டியில் ஏற சொன்னார். அவன் ஏறுவதற்கு முன், வண்டியை ஸ்டார்ட் செய்து, மிக வேகமாக ஓட்டினார். அவன் பார்வையிலிருந்து மறைந்த பிறகும் பயம் குறையவில்லை. அந்த இடத்திலிருந்து 1 கி.மீ தூரத்திலிருக்கும் தன் வீட்டுக்கு உடனே சென்றால், அவன் வீட்டைக் கண்டுபிடித்து விடுவானோ என்ற பயத்தில், 20 நிமிடம் வண்டியை வெவ்வேறு திசையில் செலுத்திவிட்டு பிறகு வீட்டை நோக்கி வந்தார்.



வீட்டுக்கு சற்று தொலைவில் வரும் பொழுது, வீட்டு ஜன்னலருகில் ஒருவன் நின்று கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவன் வேறு யாருமில்லை, சற்று முன் ஜானைத் தாக்கியவன். எப்படி அவன் வீட்டைக் கண்டுபிடித்தான் என்று ஜானுக்கு புரியவில்லை. உடனே போலீசுக்கு போன் செய்தார்.

போலீஸ் வந்து பார்க்கும் போது, வீட்டின் அருகில் யாருமில்லை. வீட்டுக்கு உள்ளே சென்று பார்க்கும் போது, ஜானின் 70 வயதான அம்மா,மேரி, ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பது தெரிந்தது.

போஸ்ட்மார்ட அறிக்கையில், மேரி, 28 முறை ஸ்குரூ டிரைவர் போன்ற கூர்மையான ஒரு பொருளினால் தாக்கப்பட்டதால் மரணமடைந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

விசாரணையில், ஜான் சொன்னதை போலீசார் நம்ப மறுத்துவிட்டனர். 1 கி.மீக்கு முன் இறக்கிவிடப்பட்டவன், எப்படி மிகச்சரியாக ஜான் வீட்டைக் கண்டுபிடித்திருக்க முடியும் ?. ஜான் உண்மையறியும் சோதனைக்கு (lie detector test) ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் விசாரணையில், ஜானுக்கு பண நெருக்கடி இருப்பதையும், மேரி இறப்பதற்கு முன், அவர் பேரில் இன்ஸீரன்ஸ் எடுக்கப்பட்டிருப்பதையும் கண்டுபிடித்தனர். இது ஜானின் மேல் சந்தேகத்தை அதிகரித்தது.

கொலை செய்தவன், மேரியின் வயதைக் கூட பொருட்படுத்தாமல், மிக அதிகமான வன்முறையைக் கையாண்டிருக்கிறான். இதன் மூலம், இது முன் விரோதத்தினால் நடந்த கொலையாக இருக்கலாம் என சந்தேகித்தனர். போலீசாருக்கு கிடைத்த இரண்டு தடயங்களில் ஒன்று, மாடிப் படிக்கட்டின் கைப்பிடியில் இருந்த, கொலையாளியின் ரத்தம் படிந்த, உள்ளங்கை பதிவு. இன்னொன்று, ஸ்விட்ச் போர்டில் இருந்த கொலையாளியின் ரத்தக் கறை.

ஜானின் கைரேகை ஒத்துப் போகவில்லை.ஸ்விட்ச் போர்டில் இருந்தது, ஜானின் ரத்தமில்லை. ஜான், ஆள் வைத்துக் கொலை செய்திருப்பானோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் அதை நிரூபிக்க முடியவில்லை. ஒரு வேளை ஜான் சொன்ன கதை உண்மையா ?. ஜான் சொன்ன அடையாளங்களை வைத்து கொலையாளியின் உருவம் வரையப்பட்டது. சில குற்றவாளிகளின் புகைப்படங்களை காட்டிய போது, ஜான் ஒருவனை அடையாளம் காட்டினான்.சூப்பர் மார்க்கெட்டில் அந்த நேரத்திலிருந்தவர்களிடம் விசாரித்த போது, அன்று ஒருவன் லிப்ட் கேட்டது உண்மைதான் என்றும் மேலும், அவர்கள் ஜான் அடையாளம் காட்டிய ஒருவனின் புகைப்படத்தைதான் அவர்களும் காட்டினார்கள். அவனை விசாரணை செய்த போது, கொலை நடந்த நேரத்தில் அவன் அந்த ஊரிலேயே இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. 
  
கொலை செய்தவன் யார் ?. அவன் எப்படி ஜானின் வீட்டைக் கண்டுபிடித்தான் ?. 
  
10 வருடங்களுக்குப் பிறகு …. 
  
1981 வருடம் டி.என்.ஏ டெஸ்டிங் வசதியில்லை. 1984-1987ஆம் வருடங்களில் டி.என்.ஏ பரிசோதனையில் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாக, குற்றவாளிகளை கண்டறிவதற்கு இந்த பரிசோதனையை போலீசார் பயன்படுத்த தொடங்கினர். 1990ஆம் வருடம், அமெரிக்க அரசாங்கம் CODIS (COmbined DNA Index System) எனப்படுகிற, குற்றவாளிகளின் டி.என்.ஏ விபரங்களை சேமித்துவைக்கும் திட்டத்தை தொடங்கினர்.

மேரியின் கொலை வழக்கில், ஸ்விட்ச் போர்டில் எடுக்கப்பட்ட குற்றவாளியின் ரத்தத்திலிருந்து டி.என்.ஏவை எடுத்து, அதை CODIS உதவியுடன், ஏதாவது குற்றவாளியின் டி.என்.ஏவுடன் பொருந்துகிறதா எனப் பார்த்தார்கள். 2 நாட்களுக்கு பிறகு, பீட்டர் என்ற ஒருவனின் டி.என்.ஏவுடன் பொருந்தியது. விசாரணையில், 10 வருடங்களுக்கு முன் பீட்டர், ஜான் வசித்த அதே ஊரில் இருந்ததையும் மேரியைக் கொன்றதையும் ஒத்துக்கொண்டான்.

நடந்தது என்ன ?
பீட்டருக்கு போதை பழக்கம் இருந்தது. அன்று ஜானிடம் லிப்ட் கேட்டு, பாதி வழியில் ஜானை தாக்கி, பிறகு ஜான், அவனை விட்டு சென்றவுடன், போதை மயக்கத்தில், அன்று இரவு எதாவது பூட்டியிருக்கும் வீட்டினுள் நுழைந்து ஓய்வு எடுப்பதற்காக வீடு எதாவது இருக்கிறதா என்று தேடியிருக்கிறான். சில வீடுகளில் விளக்கு வெளிச்சம் இருந்ததால், வெளிச்சம் இல்லாமல் இருட்டாக இருந்த மேரியின் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறான். யாரும் இல்லை என நினைத்தவன், சத்தம் கேட்டு எழுந்த மேரியை பார்த்து பயந்து போய், ஜானின் வண்டியிலிருந்து எடுத்த ஸ்க்ரூ டிரைவரால் மேரியை தாக்கி கொன்று விட்டு தப்பியிருக்கிறான். ஜான், பீட்டரை பார்த்த உடன் பயந்து போய் போலீசைக் கூப்பிடாமல், வீட்டிற்கு சென்றிருந்தால், மேரியைக் காப்பாற்றியிருக்கலாம். மேலும் விசாரணையில், ஜானுக்கும், பீட்டருக்கு எந்த சம்பந்தமும் இல்லை என முடிவானது.

யாரும் நம்ப முடியாத அளவுக்கு தற்செயலாக நடந்த இந்த சம்பவத்தை, CODIS என்கிற மென்பொருளின் உதவியினால் போலீசார் குற்றவாளியைக் கண்டுபிடித்தனர்.

======================================


@ துப்பறியும் கதை நாவல் எழுத எப்படிப்பட்ட விவரங்களை அறிந்து வைத்திருக்கவேண்டும்:-

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஜார்ஜ் போல்டி (Georges Polti) என்றொரு ஃப்ரெஞ்ச் எழுத்தாளர் வாழ்ந்தார். அவர் பிறந்தது 1867. பல காலங்களாக மேடையேற்றப்பட்ட நாடகங்கள், புனைவுகள், புத்தகங்கள் என்றால் போல்டிக்கு மிகவும் இஷ்டம். அவற்றைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தார். அப்படிக் கவனிக்கும்போது அந்த நாடகங்களுக்கு இடையே இருக்கும் பல ஒற்றுமைகள் அவருக்குப் புலப்பட ஆரம்பித்தன. இவற்றையெல்லாம் குறித்துவைத்துக்கொண்ட அவர் 1895-ல் ஒரு புத்தகத்தையும் எழுதி வெளியிட்டார். 

எழுத்தாளர் போல்டி அவர் சொல்லியது என்னவென்றால், எந்தக் கதையாக இருந்தாலும் (நாடகங்கள் மற்றும் கவிதைகளில் வரும் கதையையும் சேர்த்துதான் கதை என்று சொல்கிறேன்), அவைகளை மொத்தம் முப்பத்தாறு சிச்சுவேஷன்களில் அடக்கிவிடலாம் என்று சொல்லியிருந்தார். ஒரு குறிப்பிட்ட நாவலிலோ அல்லது நாடகத்திலோ இந்த சிச்சுவேஷன்கள் (அதாவது சூழ்நிலைகள்) பலவும் இடம்பெறலாம். மொத்தம் ஒரே ஒரு சிச்சுவேஷன்தான் இடம்பெறவேண்டும் என்பது அவசியமில்லை. அப்படி இடம்பெறும் சிச்சுவேஷன்களை ஆராய்ந்துதான் அவரது புத்தகத்தையே போல்டி எழுதியிருந்தார். அப்படிப்பட்ட அந்த சிச்சுவேஷன் என்பவை எவை? 

திரைப்படக் கலை தோன்றிய பின்னரும் போல்டியின் கணிப்பு தப்பவில்லை. திரைப்படங்களின் ஒருவரிக்கதைகள் இவரது முப்பத்தாறு சிச்சுவேஷன்களில் கச்சிதமாக வந்து பொருந்தின. ஆக போல்டியை அவதானிப்பின் கடவுள் என்று வருணித்தாலும் தவறில்லை. 

Situation 11: The Enigma – புதிர்
இந்த சிச்சுவேஷனுக்குத் தேவையான விஷயங்கள் மூன்று.

கதாபாத்திரம் 1: புதிரை உருவாக்குபவர்
கதாபாத்திரம் 2: புதிரைத் தீர்த்து வைப்பவர்
புதிர்.

எத்தனை நாவல்களில் ஏதோ ஒரு மர்மத்தைத் தீர்ப்பதற்காக போராடும் கதாபாத்திரங்களை சந்தித்திருக்கிறோம்? ஒரு கொலை – அதனைத் தொடர்ந்து துப்பறிதல், அல்லது ஆள் கடத்தல் – அதனைத் தொடர்ந்து கடத்தியவர்களைக் கண்டுபிடித்தல் போன்றவை இந்த சிச்சுவேஷனில் அடக்கம். ஏதேனும் ஒரு புதிரை கதையின் பிரதான கதாபாத்திரங்கள் தேடிச்சென்று அதன் முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்ப்பதே இந்த சிச்சுவேஷன்.

இந்த சிச்சுவேஷன் மூன்று வகைப்படுகிறது.

1. மரணத்தை எதிர்நோக்கியுள்ள ஒரு நபரையோ அல்லது சில நபர்களையோ கண்டுபிடித்து விடுவித்தல் (இந்த சூழ்நிலையில் சில சமயம் நபர்கள் அல்லாமல் ஏதேனும் ஒரு பொருளைக் கூட தேடும் நிலை வரலாம். அந்த சூழ்நிலையில் மரணம் என்பது இருக்காது. கதாநாயகனோ அல்லது கதாநாயகியோ ஏதேனும் ஒரு பொருளைத் தேடும் சிச்சுவேஷனே இது).

2.
A. மரணத்தில் முடியக்கூடிய ஒரு புதிரை கண்டுபிடித்தல். புதிரை அவிழ்த்தால் மரணம் தவிர்க்கப்படும் (புதிரைக் கண்டுபிடிக்கும் நாயகனின் மரணமாகக் கூட அது இருக்கலாம்).
B. மரணத்தில் முடியக்கூடிய ஒரு புதிரைக் கண்டுபிடித்தல். ஆனால் இந்த சிச்சுவேஷனில், புதிரை சொல்வதே அந்தக் கதையின் கதாநாயகிதான். கதாநாயகன் அந்தப் புதிரை அவிழ்க்காவிடில் அவனது மரணம் நிகழும் (ராஜா ராணி கதைகளில், யாராவது ஒரு இளவரசி எதாவது ஒரு புதிரை சொல்வாள். அதனைக் கண்டுபிடிக்க வருபவர்கள் தவறாக விடை சொல்லி சிரச்சேதம் செய்யப்படுவார்கள். இறுதியில் கதாநாயகன் வந்து சரியாகக் கண்டுபிடித்து இளவரசியை மணந்துகொள்வான்).

இதில் இன்னொரு மாறுபாட்டை, வில்லனை அறிமுகப்படுத்துவதன்மூலம் நுழைக்கலாம். புதிரை அவிழ்க்கும் பாதையில் வில்லனின் இடையூறுகள். பழைய தமிழ்ப்படங்களான ‘குலேபகாவலி’ போன்றவை இந்த ரீதியைச் சேர்ந்தவையே.

சில சமயங்களில், கதாநாயகியின் புதிரை ஏற்கும் கதாநாயகன், பதிலுக்கு தன்னுடைய பெயரை அவள் கண்டுபிடிக்கவேண்டும் என்று சொல்வதுண்டு. இதெல்லாம் பழங்கால ஐரோப்பிய நாடகங்கள் மற்றும் கதைகள் என்பதை மறக்கவேண்டாம். போல்டி கொடுக்கும் உதாரணங்கள் பலவும் சோஃபோக்ளிஸ் எழுதிய நாடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இதுவே மூன்றாவது பிரிவு.

3.
A. கதாநாயகியிடம் புதிரைக் கேட்கும் ஹீரோவின் பெயரைக் கண்டுபிடிக்கச் சொல்லுதல்
B. பாலினத்தைக் கண்டுபிடிக்கச் சொல்லி வரும் புதிர்கள்
C. மனநிலையை அறிய நடத்தப்படும் பரிசோதனைகள் (சைக்யாட்ரிஸ்ட்கள் கிரிமினல்களை ஆராய்தல்)

Situation 12: Obtaining – விரும்பியதை அடைய நினைத்தல்

பல சமயங்களில், நமக்கு எதாவது ஒரு பொருளோ வேலையோ பிறரிடமிருந்து தேவைப்படும். அப்போது அவர்களை நாம் அணுகுவதுண்டு. ஆனால், அவர்கள் நமது கோரிக்கைக்கோ மிரட்டலுக்கோ சம்மதிக்காவிட்டால்? நமக்குத் தேவையான பொருளை அவர்கள் நமக்குத் தர மறுத்தால்? பிரச்னைதான். நம்மால் முடிந்தால் அவர்களிடமிருந்து வலுக்கட்டாயமாக பிடுங்கலாம். அல்லது அவர்கள் நம்மை விட பெரிய இடத்தில் இருந்தால், மூன்றாவது நபர் அல்லது ஒரு குழுவிடம் சொல்லி, அவர்கள் மூலம் அந்தப் பொருளை அடைய நினைக்கலாம். இந்த மூன்றாவது நபரோ குழுவினரோ மத்தியஸ்தம் செய்பவர்களாக இருப்பார்கள்.

இப்படி இரண்டு தரப்புகளுக்கிடையே ஒரு பொருளை முன்வைத்து நடக்கும் போராட்டமே இந்த பனிரண்டாவது சிச்சுவேஷன்.

இந்த சிச்சுவேஷனுக்குத் தேவையான விஷயங்கள் இரண்டு வகைப்படும்.

ஒன்று – பொருளை அடைய நினைப்பவர் & பொருளைத் தர மறுப்பவர்
இரண்டு – மத்தியஸ்தம் செய்பவர் மற்றும் ஒருவருக்கொருவர் சண்டையிடும் இரண்டு தரப்புகள்

இந்த சிச்சுவேஷன் மூன்று வகைப்படுகிறது.

1. சூழ்ச்சியாலோ அல்லது வலுக்கட்டாயமாகவோ ஒரு பொருளை அடைய நினைத்தல்
2. பேச்சுத்திறமை அல்லது வாதத்திறமையினால் மட்டுமே ஒரு பொருளை இறுதியில் அடைதல்
3. மத்தியஸ்தம் செய்பவர் ஒருவரை வைத்துக்கொண்டு வாதிட்டு ஒரு பொருளை அடைதல்

இந்த பனிரண்டாவது சிச்சுவேஷனில் இன்னொரு சிறிய மாறுபாடும் இருக்கிறது என்கிறார் போல்டி. அதாவது, ஒரு பொருளை இன்னொருவரிடமிருந்து அடைய முயற்சிக்கும்போதே அவரது மனதையும் கவர்ந்து வசப்படுத்திக் கொள்ளுதல். இந்த சிச்சுவேஷனில் இயல்பாகவே ஒருவர் ஆண் – இன்னொருவர் பெண் என்ற கதாபாத்திர உருவாக்கம் கதைக்கு வலு சேர்க்கிறது அல்லவா?

Situation 13: Enmity of Kinsmen – உறவினர்களின் பகை

உறவினர்களிடையே பகை என்பது எப்போதும் பல கதைகளிலும் திரைப்படங்களிலும் இடம்பெறும் கரு. ஒரு குறிப்பிட்ட உறவினர் இன்னொருவரையோ அல்லது பல உறவினர்களையோ வெறுப்பார். அவர்களிடையே சண்டை நடைபெறும். உதாரணத்துக்கு நமது மகாபாரதம். இதில் ஒரு உறவினருக்கோ அல்லது பல உறவினர்களுக்கோ எதிராகப் பல உறவினர்கள் ஒன்றுசேர்வதும் ஒரு பகுதி.

இந்த சிச்சுவேஷனைப் பற்றி போல்டி சொல்கையில் மூன்று விதிகளை எப்போதும் முன்னுணர வேண்டியிருக்கும் என்கிறார். அவையாவன:

ஒன்று: உறவினர்கள், பகையின் கீழ் ஒன்றாகத் திரளும்போது, எத்தனைக்கெத்தனை ஒன்றுபடுகிறார்களோ அத்தனைக்கத்தனை அவர்களது வெறுப்பின் வெளிப்பாடு ஆபத்தாகவும் கொடூரமானதாகவும் இருக்கும்.

இரண்டு: வெறுப்பு என்பது இரண்டுபுறமும் இருந்தால், இந்த சிச்சுவேஷன் பலம் பெறும். இல்லையேல் ஒருபக்கம் வில்லன்களாகவும் மற்றொருபக்கம் அவர்களிடம் கஷ்டப்படுபவர்களாகவும் ஆகிவிடும். இந்த நிலைக்கு உதாரணமாக 5,7,8 மற்றும் 30வது சிச்சுவேஷன்களை உதாரணமாகக் கொடுக்கிறார் போல்டி (5.Pursuit, 7. Falling prey to cruelty or misfortune, 8. Revolt & 30. Ambition).

மூன்று: ஒற்றுமையாக இருக்கும் உறவினர்களிடையே வெறுப்பை உண்டுசெய்து அவர்களின் உறவுப்பிணைப்பை அறுத்து எறிந்து அவர்களை பரம்பரை எதிரிகள் ஆக்குவதற்கான காரணம் ஒன்றை உருவாக்குதல். இந்தக் காரணம் சக்திவாய்ந்ததாக இருக்கவேண்டும். அப்படி ஒரு காரணத்தை உருவாக்குவதும் அவ்வளவு எளிதல்ல.

இப்போது, இந்த சிச்சுவேஷனின் பல வகைகளைப் பார்ப்போம்.

1. சகோதரர்களிடையே நிலவும் வெறுப்பு

A. ஒரு சகோதரனை பல சகோதரர்கள் வெறுத்தல்
B. சகோதரர்கள் ஒவ்வொருவரும் பிறரை வெறுத்தல் (இந்த வகையில், இருபுறமும் ஒருவரையொருவர் வெறுப்பதைக் கண்டு அல்லலுறும் தாயையும் புதிய கதாபாத்திரமாக சேர்க்கலாம்)
C. உறவினர்களிடையே நிலவும் பகை. இந்தப் பகைக்கு, சுயநலமே காரணம்.

2. தந்தைக்கும் மகனுக்கும் இடையே நிலவும் பகை

A. மகன் தந்தையை வெறுத்தல்
B. தந்தையும் மகனும் ஒருவரையொருவர் இருபுறமும் வெறுத்தல்
C. மகள் தந்தையை வெறுத்தல்

3. தாத்தா, பேரனை வெறுத்தல் (இதிலேயே தாய்மாமா, மருமகனை வெறுப்பதும் வந்துவிடுகிறது)
4. மாமனார் மருமகனை வெறுப்பது
5. மாமியாருக்கு மருமகளின் மீது உள்ள வெறுப்பு
6. குழந்தைகளைக் கொல்லுதல்

உறவுநிலைகள் பலவகைப்படுவதால், இந்த ‘உறவினர்களின் பகை’ என்ற சிச்சுவேஷனும் உள்ளுக்குள் பல வகைப்படுகிறது. சகோதரர்களின் பகை என்பதை சகோதரிகளின் பகை என்றும் எடுத்துக்கொள்ளலாம். தாய் மகளை வெறுப்பது, சகோதரன் சகோதரியை வெறுப்பது போன்ற பல உதாரணங்கள் இதில் அடங்கும். போலவே, சகோதர சகோதரிகளின் பகையினால் மனம் உடைந்து கஷ்டப்படும் பெற்றோர் என்ற புதிய கோணத்தையும் இங்கே கொண்டுவரலாம்.

Situation 14: Rivalry of Kinsmen – உறவினர்களிடையே நிலவும் போட்டி & பொறாமை

டக்கென்று கவனித்தால் இந்த சிச்சுவேஷன் இதற்கு முந்தைய சிச்சுவேஷன் போலவேதான் இருக்கும். ஆனால், இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், இந்த சிச்சுவேஷனில் இரண்டு உறவினர்களுக்கு இடையே நிலவும் போட்டியும் பொறாமையும் இருவருக்கும் பொதுவான ஒரு பொருளைச் சார்ந்து இருக்கும். உதாரணம் – ஒரு பெண்ணை சார்ந்து இருக்கும். அதாவது, ஒரு பெண்ணுக்காக இருவரும் அடித்துக்கொள்ளுதல். கூடவே, இதில் அந்தப் பெண், ஒரு உறவினரையே விரும்புவாள். இன்னொரு உறவினரை வெறுப்பாள். பெண்ணுக்குப் பதில் சில நேரங்களில் ஆணும் இருக்கலாம். அல்லது சில நேரங்களில் அந்தப் பொதுவான பொருள், ஒரு அஃறிணையாகவும் இருக்கலாம்.

இந்த சிச்சுவேஷன் நான்கு வகைப்படுகிறது.

1.
A. ஒரு சகோதரன் இன்னொரு சகோதரனின்மீது வன்மம் கொண்டு அவனை விரோதித்தல் (இதில் ஒரு சகோதரன் நல்லவன். இரண்டு சகோதரர்களுக்கிடையே ஒரு பொதுவான பொருள் இருக்கும். உதாரணம் – இருவரின் தாய். இதில் தாய் ஒருவன் மீதே அன்பு வைத்திருப்பாள். அல்லது இரண்டு சகோதரர்களில் ஒருவனுக்கு மட்டும் பெரும் பணம் கிடைக்கும். இங்கே பொதுவான பொருள் என்பது சொத்து)
B. இரண்டு சகோதரர்கள் ஒருவருக்கொருவர் பொறாமை கொண்டு விரோதித்துக் கொள்ளுதல்
C. இரண்டு சகொதரர்களின் வெறுப்பு, ஒரு சகோதரன் இன்னொருவனின் மனைவியை விரும்புதலால் நேர்வது
D. சகோதரிகளின் வெறுப்பு

2.
A. தந்தையும் மகனும், திருமணமாகாத ஒரு பெண்ணின் காரணமாக விரோதித்துக்கொள்ளுதல் (இதிலேயே தந்தை மற்றும் இரண்டு மகன்கள் என்றும் எடுத்துக்கொள்ளலாம். இதிலுள்ள பல காம்பினேஷன்களிலும் புகுந்து விளையாடலாம்).
B. திருமணமான ஒரு பெண்ணின் காரணமாக தந்தையும் மகனும் விரோதித்துக்கொள்ளுதல்
C. ஒரு பெண்ணின் காரணமாக தந்தைக்கும் மகனுக்கும் இடையே நேரும் விரோதம். ஆனால் இதில் அந்தப் பெண் ஏற்கெனவே தந்தையை மணந்துகொண்டிருப்பாள்
D. தாயும் மகளும் விரோதித்துக்கொள்ளுதல்

3. Cousinகளுக்கிடையே நேரும் விரோதம்
4. நண்பர்களுக்கிடையே நேரும் விரோதம்

இந்த சிச்சுவேஷனுக்கும் முந்தைய சிச்சுவேஷனுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை மறந்துவிடாதீர்கள்.

Situation 15: Murderous Adultry – கள்ளத்தொடர்பும் கொலையும்

இந்த சிச்சுவேஷனை விளக்கவே தேவையில்லை. அன்றாடம் செய்தித்தாள்களில் நாம் காணும் விஷயம் இது. கள்ளத் தொடர்பு, அதனால் பாதிக்கப்பட்ட கணவன் அல்லது மனைவி, இதன்விளைவாக நிகழும் கொலை என்பதே இந்த சிச்சுவேஷன்.

இது இரண்டு வகை.

1.
A. கள்ளக்காதலனுக்காகவோ அல்லது கள்ளக்காதலனாலோ கணவன் கொல்லப்படுதல்
B. கள்ளக்காதலனோ அல்லது காதலியோ கொல்லப்பட்டுவிடுதல்

2. காதலிக்காக மனைவியைக் கொல்லுதல்

இந்த சிச்சுவேஷனை சுவாரஸ்யப்படுத்த சில வழிகளை சொல்கிறார் போல்டி. துரோகமிழைக்கப்பட்ட மனைவியோ கணவனோ ஒன்று – பலம் பொருந்தியவர்களாக இருக்கலாம் அல்லது, இரண்டு – பலமில்லாதவர்களாக, செல்வாக்கில்லாதவர்களாக இருக்கலாம். அதேபோல் இறக்கப்போகும் நபருக்கு எதுவுமே தெரியாமல் இருக்கலாம் அல்லது லேசுபாசாக சந்தேகம் இருக்கலாம்.

அதேபோல், கொலையானவருக்கும் கொலை செய்பவருக்கும் எப்போதோ பரிச்சயம் இருந்து, நட்பு, அன்பு, நன்றி போன்ற உணர்ச்சிகள் இருந்திருக்கலாம். அவர்கள் உறவினர்களாக இருக்கலாம். ஒரே இடத்தில் வேலை செய்பவர்களாகவும் இருக்கலாம். இரண்டு காதலர்களில் ஒருவர், இந்தக் கொலையைச் செய்தபின் இன்னொருவரால் விலக்கப்படலாம். அந்த நபரை இன்னொருவர் காதலித்த நோக்கமே இந்தக் கொலையைச் செய்யவைக்கக்கூட இருக்கலாம். அல்லது இருவருமே கொலையைச் செய்யாமல் மூன்றாவதாக ஒரு நபர் அதை செய்திருக்கலாம். அவர் இந்த இரண்டு காதலர்களில் ஒருவருக்கு நண்பராக இருக்கலாம். அல்லது ஒரு கும்பலே இதில் தொடர்பு கொண்டிருக்கலாம். இந்தக் கொலை நிகழும்போது பலர் அதனால் பாதிக்கப்படலாம். இப்படி எத்தனையோ புதிய விஷயங்களை உருவாக்கலாம்.
======================================


சுட்டீஸ், நாங்கள் தொகுத்து வழங்கிய பதிவுகளில் உள்ள குறை நிறைகளை வாசகர்கள், அன்பான முறையில் எங்களுக்கு எடுத்துக்கூறி, எங்களது பதிவுகள் மேலும் சிறப்படைய வாழ்த்தி உற்சாகப்படுத்துமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு 



வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ் தமிழ் ரோஜாக்கள்.