வருகை தாருங்கள், தமிழில் சிறுவர்கள் தொகுத்து வழங்கும் வலைப்பதிவர்களின் மாத இதழ், ஒவ்வொரு மாதமும் ஆங்கில மாதத்தின் 3/4-வது ஞாயிறுதோறும் (தமிழ் மாதத்தின் முதல் ஞாயிறு அன்று) இரவு 9 மணியளவில் வெளியாகும் சுட்டீஸ் ரோஜாக்களின் "குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழ். http://gulkanthu.blogspot.in/
கற்க கசடற….!! !! வாய்மையே வெல்லும்!!
“வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம்”
160/Sector-4, Vaishali, Ghaziabad, NCR-New Delhi.-201012
e-mail: vaishalireaderscircle@gmail.com
___________________________________________________________________
"சுட்டீஸ்-குல்கந்து" இதழ்=24 பங்குனி மாதம், தேதி-18-03-2018. SAFETY-பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வு பயிற்சி கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும் வணக்கம், தாங்களின் வருகைக்கு நன்றி, இந்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழில்" -பங்குனி மாத வலைப்பதிவு:- இந்த இதழின் ஆசிரியராக, தொகுத்து வழங்குபவர்:- (Editor of the Page) வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ் குழுவினர்கள் இடம் செக்டர்-4, மையப்பூங்கா(Central Park), வைைஷாலி மெட்ரோ இரயில் நிலையம் அருகில், NCR-New Delhi.

“வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம்”
160/Sector-4, Vaishali, Ghaziabad, NCR-New Delhi.-201012
e-mail: vaishalireaderscircle@gmail.com
___________________________________________________________________
"சுட்டீஸ்-குல்கந்து" இதழ்=24 பங்குனி மாதம், தேதி-18-03-2018. SAFETY-பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வு பயிற்சி கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும் வணக்கம், தாங்களின் வருகைக்கு நன்றி, இந்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழில்" -பங்குனி மாத வலைப்பதிவு:- இந்த இதழின் ஆசிரியராக, தொகுத்து வழங்குபவர்:- (Editor of the Page) வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ் குழுவினர்கள் இடம் செக்டர்-4, மையப்பூங்கா(Central Park), வைைஷாலி மெட்ரோ இரயில் நிலையம் அருகில், NCR-New Delhi.
வைஷாலி வாசகர் வட்ட 49வது சந்திப்பு, 18-03-2018 (Mar to Apr)-பங்குனி மாதம்.SAFETY-பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வு பயிற்சி.
வைஷாலி வாசகர் வட்ட 49வது சந்திப்பு, பாதுகாப்பு (SAFETY) சார்ந்த விழிப்புணர்வு பயிற்சி. "சுட்டீஸ்-குல்கந்து" இதழ்=24 பங்குனி மாதம், தேதி-18-03-2018. SAFETY-பாதுகாப்பு என்பது பொதுவாக முன் எச்சரிக்கை நடவடிக்கை ஆகும். நமது வாழ்கையின் அனைத்து செயல்பாடுகளுக்கும் பாதுகாப்பு என்பது பெரிதும் அவசியமாக கருதப்படுகிறது. நாம் நமது செயற்பாட்டிலோ அல்லது வேறு செயல்பாட்டிலோ பாதுகாப்பு செயல்முறைகளை பின்பற்றாவிடின் பின் விழைவுகளை தரக்கூடும். அவை உயிர்ச் சேதம், அங்கவீன இழப்பு, இயற்கை அழிவு, பொருளாதாரச் சேதம், போன்ற பல அழிவுகளை உருவாக்கலாம். இது போன்ற அழிவுகள் பாதுகாப்பு முன் எச்சரிக்கை குறைபாடு காரணமாகவே பொதுவாகக் காணக்கூடியதாக உள்ளது. இது போன்ற பல இழப்புகளில் இருந்து முன் எச்சரிக்கையாக அல்லது கவனமாக இருப்பதற்கு பாதுகாப்பு என்ற முன் எச்சரிக்கை செயல்ப்பாட்டை நாம் பின்பற்ற வேண்டும்.
SAFETY-பாதுகாப்பு செயற்பாடானது ஒவ்வொரு செயல்முறைகளுக்கு ஏற்றவாறு மாறுபடும். அதேவேளை பாதுகாப்பு செயல்முறையானது ஒவ்வொரு நாட்டுச் சட்டத்தின் அடிப்படையிலும், அதேவேளை வேறு பல பாதுகாப்பு செயல்முறைகளும் நமக்கு பயனுள்ளனவாக இருக்கும். அத்தோடு இந்த பாதுகாப்பு செயல்முறையானது அனைத்து சந்தர்ப்பங்களிலும் நமக்கு உதவும் என்று நம்ப முடியாமலும் உள்ளன, ஆனாலும் பாதுகாப்புச் செயல்முறைகளை பின்பற்றுவதன் மூலம் பாரிய அழிவுகளில் இருந்து நம்மை குறிப்பிட்ட அளவில் காப்பாற்றலாம் என்பது திடம். ஒரு சில பாதுகாப்பு நடைமுறைகள் பின்வருமாறு.
உலகப் பாதுகாப்பு, நாட்டுப் பாதுகாப்பு, மக்கள் பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு, தொழில் நுட்பப் பாதுகாப்பு, தொழிலக பாதுகாப்பு, இயந்திரங்கள் பாதுகாப்பு, கருவிகள் பாதுகாப்பு, மாசுக்கட்டுப்பாடுகளும் இயற்கை வளப் பாதுகாப்பும், பொருளாதாரப் பாதுகாப்பு, சுய பாதுகாப்பு, தற்காப்பு மற்றும் தற்காப்பு உரிமைகள், மொழிப் பாதுகாப்பு, இரகசியப் பாதுகாப்பு, சட்டவியல் பாதுகாப்பு. இது போன்ற மேலும் பல பாதுகாப்பு நடைமுறைகளை பற்றி விரிவாக தெரிந்துகொள்ள தேவையான விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டது.
"சுட்டீஸ்-குல்கந்து" இதழ்=24 பங்குனி மாதம், தேதி-18-03-2018. SAFETY-பாதுகாப்பு. அடுத்து வரும் ஏப்பிரல் மாதம்-2018 தேதி 15-04-2018 சித்திரை மாத வலைப்பதிவு இதழின் ஆசிரியராக, (Editor of the page) இந்த வலைப்பக்கத்தை தொகுத்து வழங்க ஆவலுடன் காத்திருப்பவர் யார்? விருப்பம் உள்ளவர் உங்கள் விருப்பத்தை உடனே தெரியப்படுத்துங்கள். மின்அஞ்சல் முகவரி "vaishalireaderscircle@gmail.com"
18-03-2018 அன்றய நமது 49-வது வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில்:- ,
"ஒவ்வொரு மதமும் ஒரு விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை வகுப்புகள். என இந்த வருடம் முழுவதும் கற்றுக்கொள்வோம், தெரிந்துகொள்வோம் பயிற்சிப் பட்டறை மாதங்களின் வருடமாக, நமது வைஷாலி வாசகர் வட்டத்தின், ஒவ்வொரு மாதமும், ஆங்கில மதத்தின் 3/4வது ஞாயிறு அன்றைய வாசகர் வட்ட சந்திப்பில், ஒவ்வொரு மதமும் ஒரு விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை வகுப்புகள்... பயிற்சி மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும், மற்றும் கதைகள், கட்டுரைகள், பயிற்சிப்பட்டறை சார்ந்த போட்டிகளும் பரிசுகளும் என இந்தமாத இதழில் பல விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
"ஒவ்வொரு மதமும் ஒரு விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை வகுப்புகள். என இந்த வருடம் முழுவதும் கற்றுக்கொள்வோம், தெரிந்துகொள்வோம் பயிற்சிப் பட்டறை மாதங்களின் வருடமாக, நமது வைஷாலி வாசகர் வட்டத்தின், ஒவ்வொரு மாதமும், ஆங்கில மதத்தின் 3/4வது ஞாயிறு அன்றைய வாசகர் வட்ட சந்திப்பில், ஒவ்வொரு மதமும் ஒரு விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை வகுப்புகள்... பயிற்சி மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும், மற்றும் கதைகள், கட்டுரைகள், பயிற்சிப்பட்டறை சார்ந்த போட்டிகளும் பரிசுகளும் என இந்தமாத இதழில் பல விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
மேலும் இந்த மாத சுட்டீஸ்களின் ஏராளமான செய்திகளை மிகவும் பயனுள்ள வகையில் நமது வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ் "குல்கந்து" குழுவினர்கள் தொகுத்து தந்திருக்கிறார்கள்....
==============================
@சுட்டீஸ்களின் கைவண்ணமும், கால்வண்ணமும்:-

==============================
வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :-
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து,
தொடர்ந்து எங்க வீட்டு "நூலகம் "
படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும்
(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம் / செல்லப் பிராணிகள் வளர்ப்போம் )
==============
இன்றய வாசகர் வட்ட 49வது சந்திப்பு சுட்டீஸ் நிகழ்ச்சியை நமது குழுவின் நாடக தளபதி திரு சுந்தர் அவர்களின் வழிகாட்டுதலில் சுட்டீஸ் ஆதித்த்யா வாசு நிகழ்ச்சியை சிறப்பாக தலைமை ஏற்று நடத்தினார்கள். "இந்த மாத தலைப்பைச் சார்ந்த" SAFETY-பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வு சிறப்பு பயிற்சி பட்டறை" என்ற பயிற்சி மாதக் கொண்டாட்டங்களும். நிகழ்ச்சிகளும். சிறப்பாக நடந்தன.
மேலும் இன்றய சிறப்பு விருந்தினராக தோஷிபா ஜப்பான் நிறுவனத்தில் பணிபுரியும் திரு கார்த்திக் (Vice President), அவர்கள் (Dishoster Management) பேரிடர் மேலாண்மை தலைமை பொறுப்பிலிருப்பவர் பலவித பாதுகாப்பு முன்னெச்சரிக்கை விவரங்களை சுட்டீஸ் சிறுவர்கள் அனைவருக்கும் எளிமையாக புரியுமாறு விளக்கமாக எடுத்துக்கூறியது அனைவருக்கும் மிகவும் பயனுள்ள பயிற்சியாக நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினார். மேலும் சுட்டீஸ் குழுவினர்களின் போட்டிகளும் பரிசுகளும்.. என நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது இன்றய 18-03-2018 நிகழ்ச்சியில் உதவிய அனைவரையும் பாராட்டி, நிகழ்ச்சி இனிதாக நிறைவுபெற்றது.
@இந்தமாத பயிற்சி சார்ந்த சுட்டீஸ் குட்டி கல்கண்டு தகவல்கள்:-
சித்திரமும் கைப்பழக்கம் பகுதியில்:-
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம் நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்கொடையும் பிறவிக் குணம். – வெண்பா 7
விளக்கம்:
பழகப்பழக பழக்கம் வந்துவிடும். ஆனால் பிறவிக்குணத்தை மாற்ற முடியாது. வரைய வரையச் சித்திரமும் கைப்பழக்கம் ஆகிவிடும். பேசப் பேசச் செந்தமிழும் பழக்கமாகிவிடும். திரும்பத் திரும்ப நினைத்தால் கற்றது மனத்தில் பதிந்துவிடும். நல்லொழுக்கத்தைத் திரும்பத் திரும்பக் கடைப்பிடித்தால் அதுவும் பழக்கமாகிவிடும். ஆனால், நல்லவர் நட்பு, இரக்கக் குணம், கொடைப் பண்பு ஆகியவை பிறவியிலேயே பதிந்திருந்தால்தான் வரும்.
@சுட்டீஸ் குழுவினர்கள் கைவண்ணம்:- (ஓவியம்)
(நான் வரைந்த ஓவியம் / எனக்குப் பிடித்த ஓவியம்)
பலவித போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பெரும் சுட்டீஸ்கள்:-
@சுட்டீஸ் துர்கா சக்திராஜ்:-
@சுட்டீஸ் S.ஆதித்யா வாசு:-
@சுட்டீஸ் மிருதுளாசாயி கிருஷ்ணன்:-
@சுட்டீஸ் அரவிந்த் மகாலிங்கம் .
@சுட்டீஸ் பிரியா
@ சுட்டீஸ் ஜான்வி குமாரி:-
@சுட்டீஸ் :- ஆதயா ஷங்கர்
@சுட்டீஸ் குழுவினர்கள் கைவண்ணம்:- (Handicraft)
@சுட்டீஸ் மிருதுளாசாயி கிருஷ்ணன்- வைஷாலி
@சுட்டீஸ் அரவிந்த் மகாலிங்கம் வைஷாலி
@இந்த மாதம் நமது வாசகர்வட்டத்தின் தமிழ் வகுப்புக்கு புதியவர்கள்:-
@இந்த மாதம் மேலும் மூன்று மாணவர்கள் புதியதாக தமிழி கற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்கள் விரைவில் அவர்களும் தமிழி வகுப்பில் சேர இருக்கிறார்கள்.
@10-பத்துபேர்கள் கொண்ட முதல் குழு தமிழை முழுமையாக எழுத படிக்க தெரிந்துகொண்டதோடு தமிழக அரசின் அடிப்படை தமிழ் தேர்வினை எழுத தயாராக இருக்கிறார்கள்
@மேலும் 9-ஒன்பது புதியவர்கள் தமிழ் எழுத படிக்க கற்றுவருகிறார்கள்.
@இந்த மாதம் மேலும் மூன்று மாணவர்கள் புதியதாக தமிழி கற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்கள் விரைவில் அவர்களும் தமிழி வகுப்பில் சேர இருக்கிறார்கள்.
======================================
@ சுட்டீஸ் கதைகள்:-
திருமதி நாமகிரி சந்திரசேகர் எழுதிய சிறுவர் கதைப்பகுதியில்:-
"SAFETY-பாதுகாப்பு" என்கிற தலைப்பில் ஒரு கதையை:- "
ஹலோ சுட்டீஸ் இந்தமாத "SAFETY-பாதுகாப்பு" என்கிற தலைப்பில் ஒரு கதையை கேட்ப்போமா???
ஓய்வுக்காக காட்டுக்குச் சென்றபோது தனது செல்ல நாயையும் அழைத்துப் போனார் ஒரு அரசர். அவர் வேட்டையில் மும்முரமாக இருக்க, அங்குமிங்குமாக பாய்ந்துபாய்ந்து காட்டின் வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திக் கொண்டிருந்தது நாய். பல நிமிடங்களுக்குப் பிறகுதான் தான் வழியைத் தவறவிட்டுவிட்டதை உணர்ந்தது.
அப்போது சற்று தூரத்தில் புலி ஒன்று வருவதைக் கண்டது நாய். அது தன்னை வேட்டையாடத்தான் வருகிறது என்பதையும் உணர்ந்தது. தப்பிப்பது எப்படி என்று எண்ணியபோது எதிரில் சில எலும்புத் துண்டுகளைக் கண்டது. சட்டென ஒரு காரியம் செய்தது அந்த நாய் . புலிக்கு முதுகு காட்டியவண்ணம் எலும்புத் துண்டுகளின் முன் அமர்ந்தது.
புலி அருகில் வந்தவுடன் "ஆஹா...புலியின் மாமிசம் எவ்வளவு சுவை! இன்னும் ஒரு புலி கிடைத்தால் நன்றாக இருக்குமே" என்றது நாக்கைச் சுழற்றியபடியே
அதனைக் கேட்ட புலிக்குக் கிலி பிடித்து, 'நல்ல வேளை இந்த மிருகத்திடமிருந்து தப்பினோம்' என்றெண்ணி மெதுவாகப் பதுங்கிப் பின்வாங்கியது.
இந்த சம்பவத்தை மரத்தின் மேலமர்ந்து கவனித்துக் கொண்டிருந்த குரங்கு ஒன்று, நாயைக் காட்டிக் கொடுப்பதன் மூலம் புலியிடமிருந்து தனக்குப் பாதுகாப்பு தேடிக் கொள்ளலாம் என்றெண்ணி, புலி சென்ற திசையை நோக்கி விரைந்தது. அதனைப் பார்த்த நாய் ஏதோ விவகாரம் எனப் புரிந்து கொண்டதோடு இனி புலியிடமிருந்து ஓடித் தப்பமுடியாது என்பதையும் உணர்ந்து கொண்டது.
குரங்கு புலியிடம் நாயின் தந்திரத்தைக் கூறியதும் கோபம் கொண்ட புலி, "என்னுடன் வந்து அந்த நாய் என்ன பாடு படுகிறது என்பதைப் பார்" என்று உறுமிவிட்டு குரங்கினைத் தன் முதுகில் ஏற்றிக் கொண்டு நாய் இருந்த இடம் நோக்கி விரைந்தது.
குரங்கும் புலியும் சேர்ந்து வருவதைக் கண்ட நாய், பழைய இடத்தில் அமர்ந்த படியே அவற்றைப் பார்க்காதது போல பாசாங்கு செய்து "இன்னொரு புலியைக் கொண்டு வருவதாகச் சொன்ன குரங்கை இன்னும் காணோமே!" என்றது சத்தமாக...
பின் என்ன நடந்திருக்கும் என்று சொல்லத் தேவை இல்லையே...
நமது சுய பாதுகாப்பிற்கு - வேகமான சிந்தனை எவ்வளவு முக்கியம் என்பதனை விளக்கும் ' குயிக் திங்கிங் ஆன் யுவர் ஃபீட்'- Quick Thinking on Your Feet என்ற புத்தகத்திலிருந்து.
ஆகவே அவசர அவசரமான, தவறான, சிந்தனையும் செயலும் என்றுமே நமக்கு நன்மைகளை தராது.
ஓய்வுக்காக காட்டுக்குச் சென்றபோது தனது செல்ல நாயையும் அழைத்துப் போனார் ஒரு அரசர். அவர் வேட்டையில் மும்முரமாக இருக்க, அங்குமிங்குமாக பாய்ந்துபாய்ந்து காட்டின் வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திக் கொண்டிருந்தது நாய். பல நிமிடங்களுக்குப் பிறகுதான் தான் வழியைத் தவறவிட்டுவிட்டதை உணர்ந்தது.
அப்போது சற்று தூரத்தில் புலி ஒன்று வருவதைக் கண்டது நாய். அது தன்னை வேட்டையாடத்தான் வருகிறது என்பதையும் உணர்ந்தது. தப்பிப்பது எப்படி என்று எண்ணியபோது எதிரில் சில எலும்புத் துண்டுகளைக் கண்டது. சட்டென ஒரு காரியம் செய்தது அந்த நாய் . புலிக்கு முதுகு காட்டியவண்ணம் எலும்புத் துண்டுகளின் முன் அமர்ந்தது.
புலி அருகில் வந்தவுடன் "ஆஹா...புலியின் மாமிசம் எவ்வளவு சுவை! இன்னும் ஒரு புலி கிடைத்தால் நன்றாக இருக்குமே" என்றது நாக்கைச் சுழற்றியபடியே
அதனைக் கேட்ட புலிக்குக் கிலி பிடித்து, 'நல்ல வேளை இந்த மிருகத்திடமிருந்து தப்பினோம்' என்றெண்ணி மெதுவாகப் பதுங்கிப் பின்வாங்கியது.
இந்த சம்பவத்தை மரத்தின் மேலமர்ந்து கவனித்துக் கொண்டிருந்த குரங்கு ஒன்று, நாயைக் காட்டிக் கொடுப்பதன் மூலம் புலியிடமிருந்து தனக்குப் பாதுகாப்பு தேடிக் கொள்ளலாம் என்றெண்ணி, புலி சென்ற திசையை நோக்கி விரைந்தது. அதனைப் பார்த்த நாய் ஏதோ விவகாரம் எனப் புரிந்து கொண்டதோடு இனி புலியிடமிருந்து ஓடித் தப்பமுடியாது என்பதையும் உணர்ந்து கொண்டது.
குரங்கு புலியிடம் நாயின் தந்திரத்தைக் கூறியதும் கோபம் கொண்ட புலி, "என்னுடன் வந்து அந்த நாய் என்ன பாடு படுகிறது என்பதைப் பார்" என்று உறுமிவிட்டு குரங்கினைத் தன் முதுகில் ஏற்றிக் கொண்டு நாய் இருந்த இடம் நோக்கி விரைந்தது.
குரங்கும் புலியும் சேர்ந்து வருவதைக் கண்ட நாய், பழைய இடத்தில் அமர்ந்த படியே அவற்றைப் பார்க்காதது போல பாசாங்கு செய்து "இன்னொரு புலியைக் கொண்டு வருவதாகச் சொன்ன குரங்கை இன்னும் காணோமே!" என்றது சத்தமாக...
பின் என்ன நடந்திருக்கும் என்று சொல்லத் தேவை இல்லையே...
நமது சுய பாதுகாப்பிற்கு - வேகமான சிந்தனை எவ்வளவு முக்கியம் என்பதனை விளக்கும் ' குயிக் திங்கிங் ஆன் யுவர் ஃபீட்'- Quick Thinking on Your Feet என்ற புத்தகத்திலிருந்து.
ஆகவே அவசர அவசரமான, தவறான, சிந்தனையும் செயலும் என்றுமே நமக்கு நன்மைகளை தராது.
மீண்டும் அடுத்த மாத கதைப்பகுதியில் சந்திக்கலாம்
நன்றிகளுடன் திருமதி நாமகிரி சந்திரசேகரன்- வைஷாலி.
==========================================
@விளம்பரம்:- "இந்தப்பகுதியை உங்களுக்கு வழங்குபவர்கள்":-
====================================
"நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்,
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்,
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற,
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும்
தமிழணங்கே! தமிழணங்கே! .....
உன் சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!"
இந்த வாழ்த்துப்பாடலை இயற்றியவர் திரு.பெ. சுந்தரம் பிள்ளை (அவர் வாழ்ந்த காலம் "ஏப்ரல் 4, 1855 - ஏப்ரல் 26, 1897")
அவர் எழுதிய "மனோன்மணீயம்" என்ற புகழ்பெற்ற நாடக நூலில் இடம்பெற்றிருக்கும் தமிழ் தாய் வாழ்த்துப்பாடல் இது.
இந்த மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த என்று ஆரம்பமாகும் பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது.
தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலின் கருத்து:-
அலை கடலே ஆடையான இந்த அழகான பூமிப் பெண்ணிற்கு, பாரத நாடே முகமாம், தென்திசை அதன் நெற்றியாம், அதில் திலகமென திகழ்வது திராவிட திருநாடாம், அந்தத் திலகத்தின் வாசனைப் போல்அனைத்து உலகமும் இன்பம் காண எல்லா திசையிலும் புகழ் மணக்க இருக்கும் தெய்வமகள் ஆகிய தமிழே, என்றென்றும் இளமையாக இருக்கிற உன்னுடைய இந்த அழகைக் கண்டு வியந்து, செய்யும் செயலையும் மறந்து, வாழ்த்துகிறோம்! வாழ்த்துகிறோம்! வாழ்த்துகிறோம்!.....
==========================
@சரித்திரம் முக்கியம் பகுதியில் :-திரு கணேசன் அவர்கள் தொகுத்து தந்த சரித்திரத்தில் *ஜல்காரிபாய்* ஜான்சி ராணி சரித்திரத்தில் முக்கிய பங்காற்றியகர்:-
படத்தில் இருப்பது ஜான்சிராணி சிலை அல்ல வீர ஜல்காரியாபாயின் சிலை புதுதில்லி ஹரியானா எல்லையில் இருக்கும் பீவாடி என்கிற ஊரில் இருக்கும் பூங்கா ஒன்றில் நிறுவப்பட்டுள்ளது இந்த சிலை.
ராணி லட்சுமிபாயின் பெண்கள் படையில் ஒரு சாதாரண படை வீராங்கனையாக இணைந்தாலும் பின்னர், மிக முக்கியமான முடிவுகளை எடுப்பதில் ராணி லட்சுமிபாயுடன் பங்குபற்றவும் அவருக்கு அறிவுரை கூறவும் கூடிய நிலைக்கு உயர்ந்தார். இந்தியக் கிளர்ச்சியின் போது ஜான்சிப் போரின் உச்சகட்டத்திலே, ஜல்காரிபாய் ஆங்கிலேய அரசை ஏமாற்றும் நோக்கத்தில் ராணி லட்சுமிபாயைப் போல் உடை அணிந்து கொண்டு படைக்குத் தலைமை தாங்கி, ராணி லட்சுமிபாய் கோட்டையை விட்டுப் பாதுகாப்பாக வெளியே செல்வதற்கு உதவி செய்தார்.
ஜல்காரிபாயின் வீர வரலாறு பல நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் கூடப் புந்தேல்கண்டில் நினைவுகூரப்பட்டு வருகின்றது. புந்தேல்கண்ட் பகுதியைச் சேர்ந்தவர்கள் பாடும் நாட்டுப்புறப் பாடல்கள் எல்லாம் ஜல்காரிபாயின் வாழ்க்கை வரலாற்றையும் பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் படையை எதிர்த்துப் போரிட்ட வீரத்தையும் சொல்கின்றன.
வாழ்க்கை :-
விவசாயிகளான சடோபா சிங்-ஜமுனா தேவி தம்பதியினருக்குப் பிறந்தவர் ஜல்காரிபாய். இவர் 1830 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி ஜான்சிக்கு அருகிலுள்ள போஜ்லா எனும் கிராமத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே இவரின் தாயான ஜமுனா தேவி இறந்து போனார். அதன் பின்னர், சடோபா சிங் இவரை ஓர் ஆணைப் போல் வளர்த்தார்.
ஜல்காரிபாய் குதிரையேற்றத்தையும் ஆயுதங்களைக் கையாளும் விதத்தையும் அறிந்து கொண்டார். அக்கால சமூக நிலைமையின்படி, ஜல்காரிபாய் முறையான கல்வியைப் பெறவில்லை. ஆயினும் விரைவிலேயே நன்றாகப் பயிற்றப்பட்ட வீராங்கனையாக வந்தார். காட்டிலே ஒரு புலியால் தாக்கப்பட்டப் போது, தனது கோடரியைப் பயன்படுத்திப் புலியைக் கொன்றதிலிருந்து புந்தேல்கண்டில் ஜல்காரிபாயின் புகழ் பரவத் தொடங்கியது. இன்னெர்ரு சந்தர்ப்பத்தில் செல்வர் ஒருவரின் வீட்டில் கொள்ளையிட வந்த ஆயததாரிகளிடம் சவால் விட்டு, அவர்களைப் பின்வாங்கச் செய்தார்.
ஜல்காரிபாய், தோற்றத்தில் ராணி லட்சுமிபாய் போலவே இருந்தார். இச்சந்தர்ப்பத்திலே, ராணி லட்சுமிபாயின் பீரங்கிப் படையைச் சேர்ந்த பூரண் சிங்கை ஜல்காரிபாய் திருமணம் செய்து கொண்டார். பூரண் சிங், ஜல்காரிபாயை ராணி லட்சுமிபாயிடம் அறிமுகம் செய்து வைத்தார். இதன் பின்னர், ஜல்காரிபாய் ராணி லட்சுமிபாயின் பெண்கள் படையில் இணைந்து கொண்டார். ஜான்சியின் படையில் இணைந்ததிலிருந்து போர் முறைகளின் அனைத்துப் பிரிவுகளிலும் மேலும் நிபுணத்துவத்தைப் பெற்றுக் கொண்டார் ஜல்காரிபாய். துப்பாக்கி சுடுவதிலும் பீரங்கிகளை இயக்குவதிலும் தனது திறமையை வளர்த்துக் கொண்டார். பார்ப்பதற்குத் தன்னைப் போல் இருப்பதால் ராணி லட்சுமிபாய்க்கு ஜல்காரிபாயின் மேல் ஒரு கரிசனம் உண்டாகியது. ராணி லட்சுமிபாய்க்கு மிகவும் பிடித்த போர் வீராங்கனையாக விளங்கினார் ஜல்காரிபாய்.
1857-58 ஆம் வருடங்களில் ஜான்சிக் கோட்டையின் மீது ஆங்கிலேய அரசு பல முறை படை எடுத்தது. ஒவ்வொரு முறையும் ராணி லட்சுமிபாய் அந்தப் படையெடுப்புக்களைச் சாமர்த்தியமாக எதிர்கொண்டு முறியடித்தார். 1857 இந்தியக் கிளர்ச்சியின் போது, 1858 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி ஹீ ரோஸ் பாரிய படையுடன் வந்து ஜான்சியை முற்றுகையிட்டார். ராணி லட்சுமிபாய் பாரிய படையை எதிர்த்துப் போர் புரியக்கூடிய நிலையில் இருக்கவில்லை. அவர் கல்பியிலுள்ள ஏனைய புரட்சிப் படைகளுடன் இணைவதாகவே திட்டம் போட்டிருந்தார். இதனையடுத்து, ஜல்காரிபாய் தான் ஜான்சி ராணி போல் முன்னின்று போர் புரிவதாகவும் அச்சந்தர்ப்பத்தில் ராணி லட்சுமிபாய் கோட்டையை விட்டுத் தப்பிச் செல்ல முடியும் என்று ஒரு வேண்டுகோளை ராணி லட்சுமிபாயிடம் முன்வைத்தார். ஜல்காரி பாயும் பெண் படையைச் சேர்ந்த சிலரும் ராணி லட்சுமிபாயை மிகுந்த பிரயாசைக்குப் பிறகு தப்பிச் செல்ல வைத்தார்கள். ஏப்ரல் 4 ஆம் தேதி இரவில் ராணி லட்சுமிபாய் கோட்டையிலிருந்து தப்பித்துக் கல்பிக்கு விரைந்து சென்றார். அதே சமயத்தில், ஜல்காரிபாய் ராணி லட்சுமிபாயைப் போல் உடை அணிந்து கொண்டு, படைக்குத் தலைமை தாங்கியபடி ஹீ ரோசின் முகாமுக்குச் சென்றார். ஜல்காரிபாய் மிகுந்த பராக்கிரமத்துடன் ஆங்கிலேயப் படையுடன் சண்டையிட்டார். ஆனால், கடைசியில் அவர்களிடம் பிடிபட்டார். ஆங்கிலேய அதிகாரிகள், தாம் ராணி லட்சுமிபாயை உயிருடன் பிடித்ததாக எண்ணி ஜல்காரிபாயிடம் அவரை என்ன செய்ய வேண்டும் என்று கேட்டனர். ஜல்காரிபாய் துணிச்சலுடன் தூக்கிலிடுங்கள்! என்று கூறினார்.
*ஆனாலும் ஆங்கிலேயர்கள் உண்மையைச் சிறிது தாமதமாக அறிந்து கொண்டனர். ஆனால், அதற்குள் ராணி லட்சுமிபாய் நீண்ட தூரம் சென்றிருந்தார். ஆங்கிலேய அதிகாரிக்கு ஜல்காரிபாயின் வீரமும் எசமான விச்வாசமும் மிகவும் பிடித்துப் போயிற்று. ஆகவே, அவர் ஜல்காரிபாயை மிகுந்த மரியாதையாக நடத்தி விடுதலையும் செய்தார்.*
*ஜல்காரிபாயின் பிற்கால வாழ்க்கை பற்றிய மூலாதாரங்கள் சிலவே கிடைத்துள்ளன. ஜான்சிப் போரில் ஜல்காரிபாய் இறந்ததாகச் சில ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. ஆனாலும் சில ஆதாரங்கள் ஜல்காரிபாய் ரோசால் விடுதலை செய்யப்பட்டு 1890 வரை வாழ்ந்ததாகக் குறிப்பிடுகின்றன.
தொகுத்து வழங்கிய சுட்டீஸ்களின் கதை தாத்தா திரு கணேசன் அவர்களுக்கு நன்றிகளுடன் வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ் "குல்கந்து" ரோஜாக்கள்.
@. புதிய எட்டு வித்தியாச புதிர் போட்டி :- சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்".....பங்குனி-மாத-படத்தில் உள்ள (8) எட்டு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் -வலைப்பதிவு இதழ் போட்டி என்-24.
போட்டியில் பங்குகொள்ள விருப்பமுடையவர்கள் விடைகளை "vaishalireaderscircle@gmail.com" என்கிற மினஞ்சல் முகவரிக்கு 15-04-2018 முன்பாக அனுப்பிவைக்கவேண்டும். சரியான விடை எழுதிய அனைவருக்கும் அடுத்தமாத வாசகர் வட்ட சந்திப்பில் பரிசுகள் வழங்கப்படும்.
சென்ற மாத "சுட்டீஸ் குல்கந்து" வலைப்பதிவர் இதழ்-23 மாசி-மாத-படத்தில் உள்ள (8) எட்டு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் -வலைப்பதிவு இதழ் போட்டி என்-23.போட்டிக்கான சரியான விடை,
போட்டி என்-23.விடை:-1).இடம்வலமாக படம் திரும்பியுள்ளது, 2) முதலுதவி செய்யும் மாணவியின் கண்கள், 3)முதலுதவி செய்யும் மாணவியின் சட்டை கை, 4).மாணவனின் சட்டையில் இருக்கும் முத்திரை 5) மாணவனின் சட்டையில் திறப்பான் ஜிப் 6) மாணவனின் கைக்கட்டில் இருக்கும் இரத்தக்கறை, 7)மாணவனின் நெத்தியில் சந்தனப்பொட்டு, 8)மாணவியின் பின்பகுதியிலிருக்கும் தோட்டத்து புற்கள்.
சென்ற மாத எட்டு-வித்தியாசங்கள் வலைப்பதிவர் இதழ்-23 போட்டிக்கான சரியான விடையை 137 நபர்கள்/போட்டியாளர்கள் எழுதி போட்டியில் கலந்துகொண்டனர். வாட்ஸ் ஆப், முகநூல், மற்றும் குறுஞ்செய்தி, தொலைப்பேசி மேலும் மின்னஞ்சல் மூலம் நிறைய போட்டிக்கான விடைகள் அனுப்பிவைத்தார்கள் வாசகர் வட்டத்தை சேர்ந்தவர்களும் அவர்களின் நண்பர்கள் மற்றும் வலைப்பதிவை படிப்பவர்களும் மற்றவர்களும் என சரியான விடையை 97 நபர்கள் மட்டுமே குறிப்பிட்டிருந்தனர், (குறிப்பு- வித்தியாசம் 8)மாணவியின் பின்பகுதியிலிருக்கும் தோட்டத்து புற்கள். என்பதை பலரும் குறிப்பிடாமல் தவறான பதில் எழுதியிருந்தனர்) தமிழில் விடை எழுதியவர்கள்=60, ஆங்கிலத் தமிழில் எழுதியவர்கள்=30, ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=10, ஹிந்தி மொழியில்=05 நபர்களும், பிற மொழியில்(Kerala)=02 நபரும், 40-மேற்பட்ட மேலும் சிலர் எட்டுக்கும் அதிகமான தவறான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.
=============================================
==============================================
செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும். என்கிற திருக்குறளின் வழியில் ஒவ்வொரு மாதமும் திருமதி விஜயா ராகவன் அவர்கள் எழுதும் மூலிகை சமையல் பற்றிய தொடர்:-
ஹலோ சுட்டீஸ் போன மாதம் "கண்டத்திப்பிலி" ரசம் செய்ய"தெரிந்துகொண்டோம் அல்லவா":-
@சிலர் உடல் மெலிந்து காணப்படுவார்கள். எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறாமல் இருப்பார்கள். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வதக்கி, துவையலாக செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும். உடல் நன்கு தேறும்.
@வாயுத் தொல்லை மட்டுப்படும். மேலும் சுவையின்மையைப் போக்கி பசியைத் தூண்டும்.
@பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து காலை மாலை என இருவேளையும், 1 தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் மாறி, மூல நோயால் ஏற்பட்ட புண்கள் குணமாகும்.
@வாயு சம்பந்தப்பட்டநோய்கள் இருந்தால் வயிறு செரிமான சக்தியை இழக்கும். பிரண்டைத் துவையல் நன்கு செரிமான சக்தியைத் தூண்டும். அஜீரணக் கோளாறை நீக்கும்.
@எலும்பு முறிவு ஏற்பட்டால், பிரண்டையை அரைத்து அடிபட்ட இடத்தின் மீது கட்டியும், பிரண்டையை துவையலாகச் செய்து சாப்பிட்டும் வந்தால் எலும்பு முறிவால் ஏற்படும் வலி, வீக்கம் குணமாகும். உடைந்த எலும்புகள் விரைவில் இணைந்து எலும்புகள் பலம்பெறும்.
@இரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படிந்து இரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைக்கும். இதனால் இருதயத்திற்குத் தேவையான இரத்தம் செல்வது தடைபடும . இத்தகைய நோய்க்கு பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலப்படும்.
@பெண்களுக்கு சூதக வலியின்போது ஏற்படும் முதுகு வலி, இடுப்புவலி போன்றவைக்கும் பிரண்டை சிறந்த மருந்தாகும்.
@பிரண்டை உடலில் உள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.
புற்று நோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகளில் பிரண்டையும் இடம் பெற்றிருக்கும்.
பிரண்டை துவையல் தேவையான பொருள்கள்:-
பிரண்டை – ஒரு பிடி
வெங்காயம் – பாதி
காய்ந்த மிளகாய் – 2 அ 3
தனியா – 1/2 தேக்கரண்டி
பூண்டு – 3 அ 4 பல்
புளி – நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – வதக்க
கடுகு – 1/4 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1/4 தேக்கரண்டி
தேங்காய் பத்தை 2
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – தாளிக்க
செய்முறை:-
* பிரண்டையை கழுவி,சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
*கடாயில் எண்ணெய் ஊற்றி,வெங்காயம்,பூண்டு,காய்ந்த மிளகாய்,தனியா,பிரண்டை துண்டுகள்,புளி சேர்த்து நன்கு வதக்கவும்.
*பிரண்டை நன்கு வதங்க வேண்டும்.இல்லையெனில்,சாப்பிடும் போது நாக்கு அரிக்கும்.
*வதங்கியதும்,ஆற வைத்து,சிறிது தேங்காய், தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
*ஒரு கடாயில்,கடுகு,உளுத்தம் பருப்பு,கறிவேப்பிலை தாளித்து அரைத்த துவையலில் சேர்க்கவும்.
*பிரண்டை துவையல் தயார்.இந்த துவையல் வெறும் சாதத்துடன் சாப்பிடலாம்.
*சாம்பார் சாதம்,ரசம் சாதம்,தயிர் சாதத்துடன் தொட்டும் சாப்பிடலாம்.சுவையாக இருக்கும்.
ஆங்கிலத்தில் In English:-
In tamil call "PRINDAI" has amazing health benefits. It is good for bone health. Preventing osteroprosis etc if taken twice a week in default. Even now also in villages, for fracture pirandai & urad dal powder are used to tie as bandages. It will help to join bones faster.
Pirandai thugayal:
Items required for it:
Pirandai : 1 cup
Curry leaves: 1 cup
Urad dal : 1/2 cup
Tamarind 1 piece
Hot red chilli 4 or according to the taste
Hing, salt,
Black pepper 1 spoon
Coconut powder 2 spoons (optional)
Take Pirandai & peel off mildly the skin in sides. Then cut into small pieces & saute it in til oil for some time. Colour will slightly change. Then keep it aside. Then add the other items in kadai & saute it
Grind it in mixer, with necessary salt. If u want to make for one day add coconut in it. For long time storage (maxm 1 week) coconut is not necessary.
Next issue Receipe: Murungai leaves soup.
பிரண்டையின் குணநலன்கள்:-
வைரம் #பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று #போகர் கூறினார்.
உலகிலேயே கடினமான ப ொருள் வைரம், அதில் உள்ள கார்பன் பிணைப்பை உடைக்கும் தன்மை இதன் சாற்றுக்கு உண்டு!
#முழங்கால் வலிக்கு ஏதாவது பண்ணுங்க என்றார்கள்......
கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவாரமாக வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லாமல் இருக்கிறது என்றார்கள்....
எங்கம்மா ஏர் உழுவும் காலங்களில் கால் வலியை போக்க பிரண்டை, மல்லிதலை, தூதுவளை, கறிவேப்பிலை சேர்த்து துவையல் செய்து தந்த ஞாபகம் அதையே இங்கு செய்தோம் ......
பிரண்டையில் உள்ள மிகையான #சுண்ணாம்பு சத்து(#கால்சியம்) தான் எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க கால்சியம் தேவை அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடபட்டுள்ளது குறிப்பாக சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும் இதை எனது அனுபவத்தில் உணர்ந்தேன் ......
பிரண்டை உப்பை சுமார் 300mg தேனில் அல்லது நெய்யில் தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றபட்டு உடல் குறைப்பு ஏற்படுகிறது சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு முழுவதும் வெளியேறுவதை உடனடியாக உணரலாம்......
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல்(அ)உப்பை பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது அரு மருந்து.....
நிறைய குறைபாடுகள் பிரண்டையால் குணமாகும்போது எதற்கு கால்சியம் மாத்திரை சாப்பிட்டு சிறுநீரகத்தை பாழ் பண்ணனும் யோசிங்க.....
இதற்கு மற்றொரு பெயர் "வஜ்ஜிரவல்லி" தேகத்தை வஜ்சிரமாக்கும் என்பதனால் தானோ என்னவோ....
என்ன சுட்டீஸ்??? நீங்களும் இதுபோன்ற மூலிகை சமையல் பற்றிய விவரங்களை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் கண்டிப்பாக மற்றவரும் அறிந்து கொள்ளட்டும் செய்வீர்கள் அல்லவா?? மீண்டும் அடுத்தமாதம் வேறொரு மூலிகை சமையல் பற்றி பார்ப்போம்.
@அடுத்த மாதம் நமது சுட்டீஸ் மூலிகை சமையல் பகுதியில் "முருங்கை கீரை ரசம்/சூப் " செய்ய பழகலாம் வாங்க.
நன்றி வணக்கம்
திருமதி விஜயா ராகவன் - வைஷாலி.
திருமதி விஜயா ராகவன் - வைஷாலி.
======================================
@ கதை கதையாம் காரணமாம்-போட்டி எண் 4:- கதையைக் கேட்டு, கதையின் இறுதியில் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் சொல்லி பரிசுகளை வெல்லுங்கள்.
இந்த மாத "கதை கதையாம் காரணமாம்" சிறுகதைகள் போட்டி பகுதியில் :- சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி மாதம் போட்டிகளும், பரிசுகளும், கொண்டாட்டங்களும்.
முதலாவது போட்டி :- வைஷாலி வாசகர் வட்டத்தின்... சரியான விடைகளைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்... போட்டி என்-24 மாசி மாதம், சுட்டீஸ் குல்கந்து இதழ்-24 தேதி 18-03-2018.
அன்புள்ள வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ் குழுவினர்களே, கதையை கவனமாக கேளுங்கள் கதையின் முடிவில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான விடைகளைக்கூறி சிறப்பு பரிசுகளை வெல்லுங்கள்.
அது ஒரு விளையாட்டு வாகனம் (கார்) மகிழூந்து. இப்போது நீங்கள் அந்த விளையாட்டு வாகனத்தை விளையாடும் மைதானத்தில் இயக்குகிறீர்கள் அல்லது ஒட்டுகிறீர்கள் என்றால் முதலில் நீங்கள் சாலை பாதுகாப்பு மற்றும் சாலை விதிமுறைகள் பற்றி நன்கு தெரிந்துவைத்திருக்கவேண்டும் அல்லவா. சிறுவர்களாக இருக்கும்போதே பல விவரங்களை தெரிந்துகொண்டால் நீங்கள் பெரியவர்களானதும் எளிமையாக வாகன உரிமம் பெற்று வாகனத்தை சாலையில் செலுத்தமுடியுமல்லவா???
சாலை பாதுகாப்பு என்பது வாழ்க்கைப் பயணத்தின் ஒரு முக்கியமான அங்கமாகும். நமது அரசு தெரிவிக்கும் ஒரு புள்ளி விவரத்தின்படி ஆண்டு ஒன்றுக்கு 1.50 இலட்சம் மக்கள் சாலை விபத்தினால் உயிர் இழக்கின்றனர் என்பது அதிர்ச்சி தரும் செய்தியாகும்.
இந்தியா உலகிலேயே அதிக சாலை போக்குவரத்து வசதிகளைக் கொண்ட இரண்டாவது பெரிய நாடாகும். இந்தியாவில் மூன்று மில்லியன் கிலோ மீட்டர் நீளமுள்ள சாலையில் 60% தார்ச்சாலைகளாக உள்ளன. இந்திய பொருளாதார வளர்ச்சிக்குச் சாலைகளின் பங்கு மிக மிக முக்கியப்பங்கு வகிக்கிறது.
ஆனால் சாலையைப் பயன்படுத்துவோர்களுக்கு சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் பெரும்பாலான விபத்துக்கள் நிகழ்கின்றன. இந்தியாவில் சாலைப் போக்குவரத்துச் சட்டம் ஜுலை 1, 1989ல் ஏற்படுத்தப்பட்டது. இந்த சட்டம் வாகன ஓட்டுநர்களுக்கு ஓர் வழிகாட்டியாக உள்ளது. வாகன ஓட்டுநர் வாகனத்தை முந்திச் செல்லுதல், வேக அளவு, தன்னோடு எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்கள் பற்றி சாலை விதிகளில் கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொருவரும் சாலை பாதுகாப்பு பற்றியும் சாலை பாதுகாப்பு சட்டங்கள் பற்றியும் அறிந்திருக்க வேண்டும். சாலைப் போக்குவரத்து உதவிக்குத் தொலைபேசியின் மூலம் 103ஐ தொடர்பு கொள்ளலாம்.
இப்போது நாம் நமது கதைக்கு வருவோம். ஓட்டுனரான உங்களுக்கு பக்கத்தில் இருக்கும் இருக்கையில் (10) பத்து கிலோ எடை கொண்ட உங்களது சகோதரனை உட்காரவைத்து.
வாகனத்தின் பின்புறம் இருக்கும் இரண்டு இருக்கைகளில் (25) இருபத்தைந்து கிலோ மற்றும் (30) முப்பது கிலோ எடை கொண்ட உங்களது இரண்டு சகோதரிகளை உட்காரவைத்து வாகனத்தை செலுத்துகிறீர்கள் என்றால் முதலில் நமக்கு வாகன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி தெரிந்திருப்பது அவசியமல்லவா?
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:- @ஒவ்வொரு முறையும் வாகனத்தை செலுத்துவதற்கு முன்பாக சில பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரிபார்த்தபிறகு வாகனத்தை இயக்கவேண்டும். வாகனத்தை இயக்கவும் நிறுத்தவும் தேவைப்படும் கருவிகள் சரிவர வேலை செய்கிறதா என்று சரிபார்க்கவேண்டும். வாகனத்தின் காற்றடைத்த டயர், மற்றும் தேவையான எரிபொருள், பின்புறம் மற்றும் முன்புற விளக்குகள் சரியாக உள்ளதா? இயங்குகிறதா? முதலுதவிப்பெட்டி மற்றும் தேவையான உபகரணங்கள் சரியாக உள்ளதா என்று சோதித்து பார்த்து உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். வாகனத்தில் இயந்திரக்கோளாறு இருந்தாலோ, வாகனத்தை இயக்கும் போது அதிக சத்தம் வரும் என்று தெரிந்தாலோ வாகனம் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
இப்போது நீங்கள் உங்களது வாகனத்தை மெதுவாக விளையாட்டு மைதான சாலையில் செலுத்துகிறீர்கள் அப்போது உங்களுக்கு சாலைப் பாதுகாப்பில் சில முக்கிய விதிகள் தெரிந்திருந்தால் மட்டுமே விபத்தில்லாமல் வண்டியை ஓட்டமுடியும்.
.
சாலைப் பாதுகாப்பில் முக்கிய விதிகள் என்ன என்ன என்று இப்போது பார்க்கலாம்.
@ஒவ்வொரு சாலையும் வலதுபுறம், இடதுபுறம் என இரண்டு பகுதிகளாக சாலையின் நடுவில் வெள்ளை கோடு பிரிக்கிறது. ஆகவே எப்போதும் வாகன ஓட்டுநர்கள் சாலையின் இடது புறத்திலேயே வாகனங்களைச் செலுத்துதல் வேண்டும்.
@முன் செல்லும் வண்டியினை வாகன ஓட்டுநர்கள் முந்திச் செல்வதைக் கூடுமானவரை தவிர்க்க வேண்டும்.
@வாகன ஓட்டுநர் குறுக்குச் சாலை அல்லது பாதாசாரிகள் கடக்கும் இடங்களில் வண்டியின் வேகத்தைக் குறைத்துச் செல்லல் வேண்டும்.
@தீயணைப்பு வாகனம், அவசர ஊர்தி, மற்றும் நோயாளர் வண்டி போன்றவைகளுக்கு வாகன ஓட்டுநர்கள் தடையின்றி வழிவிடுதல் அவசியமாகும்.
@வாகன ஓட்டுநர்கள் ‘U’ திருப்பம் செய்யும் முன்பும் அல்லது வலது புறமாகவோ, அல்லது இடது புறமாகவோ வாகனத்தை திருப்பும் முன் ஒளிவிளக்கு அல்லது கை காட்டும் சைகை வழிகளை பின்பற்றவேண்டும். அதே போல் தனது வாகனத்தை நிறுத்தும் முன் அதற்குரிய சைகையை காட்ட வேண்டும்.
@வாகன ஓட்டுநர் ஒரு வழிப்பாதை என்று அறிவிக்கப்பட்ட இடத்தில் அவர் செல்வதற்கோ அல்லது வருவதற்கோ மட்டுமே பயன்படுத்த வேண்டும். செல்வழியன்று என்று அறிவிக்கப்பட்ட ஓரிடத்தினுள் உள்ளே வருதலோ, போதலோ, நுழைதலோ கூடாது.
@நெடுஞ்சாலைகளில் வண்டிகளுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள பாதையில்தான் வண்டியைச் செலுத்த வேண்டும். சாலையில் சில வகை வண்ணக்கோடுகள் போடப்பட்டிருக்கும். அந்த வண்ணக்கோடுகளின் விதிகளை மதித்து வாகனத்தை செலுத்தவேண்டும்.
@சாலை முழுவதும் வெண்மைநிற வரிக்கோடுகள் இருந்தால் அங்கு பாதசாரிகள் சாலையை கடக்குமிடம் என்பதை கருத்தில் கொண்டு வாகனத்தை நிறுத்தி சாலையின் இருபுறமும் கவனமாக பார்த்த பின்பு வாகனத்தை மெதுவாக செலுத்தவேண்டும்.
@எக்காரணம் கொண்டும் மஞ்சள் கோட்டினைத் தாண்டிச் செல்லக்கூடாது. சாலை ஓரத்தில் மஞ்சள் நிற கோடுகள் இருக்கும் பகுதியை வாகனம் கடக்காமல் அந்த கோட்டின் உட்பகுதியில் வாகனத்தை செலுத்தவேண்டும். மஞ்சள் நிற கோட்டை தாண்டுவது ஆபத்து என்பதை கருத்தில் கொண்டு வாகனத்தை சரியாக செலுத்தவேண்டும்.
@சாலையில் சிகப்பு நிற பெருக்கல் கோடுகள் இருந்தால் வாகனத்தை அந்த சாலையில் செலுத்தக்கூடாது சாலை பழுது அடைந்துள்ளது, ஆபத்து!!!! என்பதை கருத்தில் கொண்டு வாகனத்தை அந்த சாலையில் மேலும் செலுத்தாமல் நிறுத்திவிடவேண்டும்.
@அமைதி இடம் என்று அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் ஒலிப்பானை ஒலிக்கக் கூடாது. வாகன ஓட்டுநர் தேவையில்லாமல் தொடர்ந்து வாகனத்திலுள்ள ஒலிப்பானை பயன்படுத்தல்கூடாது.
வாகன ஓட்டுநர் தனக்குமுன் செல்லும் வாகனத்திற்கும் தனது வாகனத்திற்கும் குறிப்பிட்ட அளவு இடைவெளி இருக்குமாறு கவனமாக வாகனத்தை ஒட்டிச் சென்றால், வண்டிகள் ஒன்றை ஒன்று மோதிக் கொள்ளும் விபத்தினைத் தவிர்க்கலாம்.
சாலை சைகைகள், மற்றும் சமிக்கைகள்:-
@சாலை போக்குவரத்து விளக்குகள் சமிக்கைகளில்... "நில், கவனி, புறப்பட்டு". என்பது சாலையில் சிகப்பு நிற விளக்கு எரியும்போது வாகனத்தை முழுமையாக நிறுத்திவைக்கவேண்டும், மஞ்சள் விளக்கு எரியும்போது சாலையின் நான்குபகுதியிலும் வாகனத்தை செலுத்த சரியான பாதை கிடைத்துள்ளதா என்பதை கவனித்து உறுதிப்படுத்திக்கொண்டு வாகனத்தை செலுத்த தாயாராகவேண்டும், பச்சை நிற விளக்கு எரியும்போது நமது வாகனத்தை செலுத்தவேண்டும் என்பதை குறிக்கும் சாலை போக்குவரத்து விளக்கு சமிக்கைகள்.
@சாலைகளில் உள்ள சைகைகள் போக்குவரத்தை சீர் செய்யவும், பாதாசாரிகளை பாதுகாக்கவும், பயன்படுகிறது. சாலைகளிலுள்ள சைகைகளை அறிவிப்புக்களாகக் கருதப்பட வேண்டும்.
சாலை சைகைகளை
1.உத்தரவு சைகைகள்
2.எச்சரிக்கைச் சைகைகள்
3.தகவல் சின்னங்கள் என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
@ குறுக்குச் சாலையிலுள்ள போக்குவரத்து ஒளி விளக்கு மற்றும் நிறுத்தலர் விளக்குகள் எப்பொழுது பாதசாரிகள் சாலையைக் கடக்கலாம் என்பதைத் தெரிவிக்கிறது. சாலையில் செல்லும் வண்டிகளைக் கட்டுப்படுத்துகிறது.
@போக்குவரத்து காவல்துறையினர் தங்களது கைகளைப் பயன்படுத்தி போக்குவரத்தினை முறைப்படுத்துதல், சீர் செய்தல் போன்றவற்றை மேற்கொள்கின்றனர்.
வாகன ஓட்டுநர் வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள்:-
வாகன ஓட்டுநர்கள் எப்பொழுதும் தன்னுடைய ஓட்டுநர் உரிமம், வண்டியின் பதிவுச் சான்றிதழ், வாகன வரி கட்டியதற்கான ரசீது, வாகனத்திற்கான காப்பீட்டுச் சான்றிதழ், மேலும் அனுமதி மற்றும் தகுதிச் சான்றிதழ்களையும் தன்னோடு வைத்துக் கொள்ள வேண்டும். அரசின் மோட்டார் வாகனத்துறை அலுவலர்கள் கேட்கும் போது இவற்றினை வாகன ஓட்டுநர்கள் காண்பிக்க வேண்டும்.
சாலை பாதுகாப்பில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்:-
@வாகனம் ஓட்டும்போது கைபேசியைப் பயன்படுத்துதல் கூடாது.
@நான்கு சக்கர வாகனத்தில் பயணம் செய்யும் போது, ஓட்டுநர் மற்றும் பயணிப்போர் வார்பட்டை(Seat Belt) அணிய வேண்டும்.
@வேகக்கட்டுப்பாட்டைப் பின்பற்ற வேண்டும்.மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்கக்கூடாது.
@பாதசாரிகள் கவனமுடன் நடைபாதையில் மட்டுமே நடந்து செல்ல வேண்டும்.
@இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அவசியம் அணிய வேண்டும்.
@பாதசாரிகள் மஞ்சள் கோடுகள் போடப்பட்டுள்ள இடத்தில் மட்டுமே சாலையைக் கடக்க வேண்டும்.
@வாகன ஓட்டுநர்கள் போக்குவரத்து சைகைகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
@அவசர ஊர்திகளுக்கு வாகன ஓட்டுநர்கள் அவ்வாகனங்களை முந்திச் செல்ல வழிவிடல் வேண்டும்.
@வாகனங்களை அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும்.
@சாலையிலும் சாலை நடைபாதையிலும் நமக்கு தேவையில்லாத குப்பைகளை போடுவதை தவிர்க்கவேண்டும்.
18 வயதிற்கு உட்பட்டவர்கள் சிறுவர்கள் இரண்டு சக்கர வாகனத்தையோ, நான்கு சக்கர வாகனத்தையோ ஓட்டுதல் கூடாது. மேலே கூறிய விதிமுறைகளை முறைப்படிக் கடைப்பிடிப்பதன் மூலம் சாலை விபத்துக்களை நாம் தவிர்க்க முடியும்.
ஆண்டுதோறும் சனவரி முதல் வாரம் சாலைப் பாதுகாப்பு வாரமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது பள்ளி கல்லூரி மாணவர்கள், வாகன ஓட்டுநர்கள், பாதசாரிகள் ஆகியவர்களுக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்படுகிறது.
எச்சரிக்கையாக வாகனம் ஓட்டுங்கள்
இலக்கை உயிருடன் அடையுங்கள்
– என்ற பொன்மொழி அரசால் வலியுறுத்தப்படுகிறது. மேலும் அரசு வாகன ஓட்டுநர்களுக்கு விபத்துக்களை தவிர்க்கும் முறைகள் பற்றி கருத்துப் பட்டறையும், கருத்தரங்குகளும் அரசால் நடத்தப்பட்டு வருகிறது. இது பெருமளவில் விபத்துக்களைக் குறைக்க பயனுள்ளதாக அமைந்துள்ளது.
மக்கள் சாலைப் பாதுகபாப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து, சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும். இதன்மூலம் விலை மதிப்பு மிக்க ஆயிரக்கணக்கான உயிர்களைப் பாதுகாக்க முடியும்.
சுட்டீஸ் சிறுவர்களாகிய நாங்கள் சாலை விதிகளைக் கடைபிடிப்பேன் என்ற இப்போதே உறுதி மொழியை ஏற்கிறோம் என்றால், நீங்கள் உங்களது பெற்றோர்கள் அல்லது குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்கள், வாகன மற்றும் சாலை விதிகளை பின்பற்றாமல் வாகனத்தை செலுத்தினால்.... உடனே உங்களுக்கு தெரிந்த மற்றும் நீங்கள் விழிப்புணர்வு பயிற்சியில் தெரிந்துகொண்ட விதிகளை அன்போடு நிதானமாக எடுத்துக்கூறி அனைவரையும் சாலை விதிகளை பின்பற்றும்படி நிர்பந்திக்கவேண்டும். சுட்டீஸ் நீங்கள் சொன்னால் உடனே அனைவரும் உங்களது அன்புக்கு கட்டுப்பட்டு வாகனத்தை சரியாக செலுத்துவார்கள் அதனால் நாம் விபத்துக்கள் இல்லாத உலகத்தை உருவாக்கமுடியும்.
என்ன சுட்டீஸ் இந்தமாத "பாதுகாப்பு" சிறப்பு பயிற்சியை சிறப்பாக கற்றுக்கொண்டு செயல்படுத்துவீர்கள் அல்லவா!!
1. சாலை பாதுகாப்பு மற்றும் சாலை விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரிந்த விவரங்களை கூறுங்கள்?
2. கதையில் கூறப்பட்ட விளையாட்டு வாகனத்தில் இருக்கும் மொத்த இருக்கைகள் எத்தனை? வாகன ஓட்டுனரின் எடை என்ன?
3. வாகன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி உங்களுக்கு தெரிந்த விவரங்களை கூறுங்கள்?
4. "நில், கவனி, புறப்பட்டு" என்ற வாக்கியத்திற்கான சாலை போக்குவரத்து விளக்கு சமிக்கைகள் பற்றி கூறுங்கள்?
4. கதையின் விளையாட்டு வாகனத்தில் இருக்கும் உங்களின் இளைய மற்றும் மூத்த சகோதர சகோதரிகள் எத்தனை பேர்? வாகனத்தில் அமர்ந்திருக்கும் அனைவரின் மொத்த எடை என்ன? வாகனத்தில் பெண்கள் அதிகமா? ஆண்கள் அதிகமா?
5. சாலை பாதுகாப்பில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரிந்த விவரங்களை கூறுங்கள்?
6. சுட்டீஸ்கள் நாங்கள் சாலை விதிகளைக் கடைபிடிப்பேன் என்ற இப்போதே உறுதி மொழியை ஏற்கிறேன் என்றால், என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள்.
சரியான விடைகளைக்கூறி சிறப்பு பரிசுகளை வெல்லுங்கள். சரியான விடைகளை 15-03-2018 தேதிக்கு முன்னதாக "vaishalireaderscircle@gmail.com" மின்னஞ்சலில், அல்லது குறுஞ்செய்தி, அல்லது "சுட்டீஸ் குல்கந்து"வாட்சப் குழுவிலும், வைஷாலி வாசகர் வட்ட:-முகநூல் மற்றும் நமது டுவிட்டர் பக்கங்களின் வழியாகவும் அனுப்பலாம்.
சரியான விடையையும், சரியான விடை எழுதியவர்களுக்கான பரிசுகளும் 18-03-2018 (3-வது ஞாயிறு) அன்றைய, 49-வது வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில் வழங்கப்படும்.
போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் பரிசுகள் உண்டு. (கதைக் கருத்தாக்கம்-கோபாலகிருஷ்ணன் ரேடியோ-மார்கோனி).
மொத்தம் 09-நபர்கள் போட்டியில் கலந்துகொண்டு விடைகளை தெரிவித்தார்கள். போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பரிசுகள் உண்டு .
======================================
@ கட்டுரைப்போட்டி:- புகைப்படத்தில் உள்ள படத்தைப் பார்த்து 15-வரிகளுக்கு மிகாமல் பொருத்தமான கதை/கட்டுரை எழுத வேண்டும். சரியான படக்கதை விடை கூறி பரிசுகளை வெல்லுங்கள் :-
போட்டி எண்-5, தேதி 18-03-2018. பாதுகாப்புக்கான படத்தை கவனமாக பாருங்கள். படத்திற்கு தகுந்த விவரங்களை குறிப்பிட்டு பரிசுகளை வெல்லுங்கள்
சரியான பொருத்தமான கட்டுரையை 15-04-2018 தேதிக்கு முன்னதாக "vaishalireaderscircle@gmail.com" மின்னஞ்சலில், அல்லது குறுஞ்செய்தி, அல்லது "சுட்டீஸ் குல்கந்து"வாட்சப் குழுவிலும், வைஷாலி வாசகர் வட்ட:-முகநூல் மற்றும் நமது டுவிட்டர் பக்கங்களின் வழியாகவும் அனுப்பலாம்.
சரியான விடையையும், சரியான விடை எழுதியவர்களுக்கான பரிசுகளும் 15-04-2018 (3-வது ஞாயிறு) அன்றைய, 50-வது வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில் வழங்கப்படும்.
போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் பரிசுகள் உண்டு. (படக் கதைக் கருத்தாக்கம்-கோபாலகிருஷ்ணன் ரேடியோ-மார்கோனி).
======================================
திருமதி விசாலம் (WHO-இந்தியா) அவர்களின் உலக சுகாதார பாதுகாப்பு பற்றிய தொடர்:-
உலக சுகாதார பாதுகாப்பு:-
உலக சுகாதார நிறுவனத்தின் ஆரம்ப நாளான ஏப்ரல் 7-ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் உலக சுகாதார தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொது சுகாதாரக் கவலையைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு கருத்துருக்கள் தேர்வு செய்யப்படுகின்றன.
1948 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலக சுகாதார அமைப்பின் கூட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 7-ஆம் தேதி (1950 இல் இருந்து) உலக சுகாதார தினமாகக் கொண்டாடுவதாகத் தீர்மானிக்கப்பட்டது.
நீரிழிவு நோயிலிருந்து பாதுகாப்பு, நீரிழிவிலிருந்து தப்புதல் மற்றும் உறுதிப்பாடு ஆகியன சென்ற ஆண்டுக்கு முந்தய வருட சுகாதார தினத்தின் முக்கிய கருப்பொருளாக அமைந்திருந்தது.
உலகம் முழுவதிலும் 422 மில்லியன் பேர் நீரிழிவு தாக்கத்திற்கு உட்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புகழ்பெற்ற மருத்துவ ஆராய்ச்சியாளர் மற்றும் சுகாதார கொள்கை நிபுணருமான டாக்டர்.சௌமியா சுவாமிநாதன், உலக சுகாதார அமைப்பின் (WHO) துணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
“காசநோய் மற்றும் எச்.ஐ.வி நோயின் உலகளாவிய அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சியாளர் சௌமியா, மருத்துவத் துறையில் 30 வருட அனுபவத்தை கொண்டவர்.
எச்.ஐ.வி மற்றும் காசநோய் பிரிவின் முன்னணி ஆய்வாளர் சௌமியா, இவர் தற்பொழுது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் இயக்குனராக பணிபுரிகிறார். மேலும் சுகாதார அமைச்சகத்தின் சுகாதார ஆராய்ச்சி பிரிவில் செயலாளராய் உள்ளார். இவர் தனது மருத்துவ படிப்பை புனேவில் உள்ள Armed Force மருத்துவ கல்லூரியில் முடித்தார். அதனை தொடர்ந்து தனது மேல் படிப்பை AIIMS கல்லூரியில் படித்து மருத்துவரானவர் திருமதி செளமியா சுவாமிநாதன்.
குழந்தை நல மருத்துவாரான இவர் 250 மேற்பட்ட வல்லுனர்கள் மதிப்பாய்வு புத்தகங்களை வெளியிட்டுள்ளார். டாக்டர் சௌமிய UNICEF, UNDP மற்றும் உலக வங்கியில் ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்துள்ளார். அதுமட்டுமின்றி இதுவரை மருத்துவ துறையில் அவரது பங்களிப்புக்காக 9 விருதுகள் பெற்றுள்ளார்.
இந்திய பசுமை புரட்சியின் தந்தை என கருதப்படும் எம்.எஸ் சுவாமிநாதனின் மகள் இவர். தற்பொழுது அவருக்கு நியமிக்கப்பட்டு இருக்கும் பதவி உலக சுகாதார அமைப்பின் இரண்டாவது மிக உயர்ந்த நிலையாகும். இந்த உயர்ந்த நிலையை பிடிக்கும் முதல் இந்தியர் என்ற பெருமை இவரைச் சேரும்.
கடந்த ஆண்டு உலக சுகாதார தினத்தின் கருப்பொருள் “உணவுய் பாதுகாப்பு”. இது ஆரோக்கியத்தின் முதல்படி. அதனால் நாம் அனைவரும் உணவு பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
மேலும் தொடரும்.
வாழ்த்துகள். நன்றி.
====================================
போட்டிகள் மற்றும் பரிசுகள் (Pottigal Matrum Parisugal)
சுட்டீஸ், நாங்கள் தொகுத்து வழங்கிய பதிவுகளில் உள்ள குறை நிறைகளை வாசகர்கள், அன்பான முறையில் எங்களுக்கு எடுத்துக்கூறி, எங்களது பதிவுகள் மேலும் சிறப்படைய வாழ்த்தி உற்சாகப்படுத்துமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.
மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இந்தப்பதிவில் கீழுள்ள கருத்துக்கூறும் பகுதியில் பதிவு செய்யவும்.