வைஷாலி வாசகர் வட்ட 53வது சந்திப்பு, 15-07-2018 (July-Aug)-ஆடி மாதம். வீட்டு உபயோக மின்சாதனப் பொருட்கள் ஆகியவற்றை இயக்குதல், அவற்றின் பராமரிப்பு, மற்றும் சிறு சிறு பழுது நீக்குதல்:-.
அந்த வகையில் 15-06-2018, ஆங்கில மாதத்தின் 3வது ஞாயிறு அன்றய 53வது (தமிழ்-ஆடிமாத) வாசகர் வட்ட சந்திப்பில் நாம் கற்றுக்கொண்ட வீட்டு உபயோக மின்சாதனப் பொருட்கள் பராமரிப்பு, மற்றும் சிறு சிறு பழுது நீக்குதல் குறித்து தெரிந்துகொள்ளும் வரிசையில் கணினி சார் அறிவு (மேசைக்கணினி மற்றும் மடிக்கணினி, டேப் என்று கூறும் தொடுதிரை மின்னணு தொலைப்பேசி கணினி) அடிப்படை ‘கம்ப்யூட்டர் ஹார்டுவேர்’, ‘நெட்வொர்க்கிங்’ குறித்து, அவைகளை இயக்குதல், அவற்றின் பராமரிப்பு, மற்றும் சிறு சிறு பழுது நீக்குதல் குறித்து தெரிந்துகொள்ளும் பயிற்சி சந்திப்பு மற்றும் வாசகர் வட்ட நிகழ்ச்சிகளும் கொண்டாட்டங்களும் வெகு சிறப்பாக நடந்தேறியது .
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம் சொல்லியுள்ளபடி, நாட்டில் லட்சக்கணக்கான வேலைகளைத் தரும் வாய்ப்பு கொண்டது கம்ப்யூட்டர் ஹார்டுவேர் துறை. அடிப்படைப் பழுது நீக்கல் தொடங்கி, நிறுவனங்களின் சிஸ்டம் அட்மின்வரை பல்வேறு நிலைகளில் வேலைவாய்ப்பு உண்டு.
எந்தப் பிரிவுப் பாடமென்றாலும் கணினிப் பயன்பாடு தவிர்க்க முடியாதது என்பதால் அறிவியல், பொறியியல் மட்டுமன்றி அனைத்துத் துறையினரும் கணினி ஹார்டுவேரில் அடிப்படைப் பயிற்சி பெறலாம். படிப்பு மற்றும் பணி சார்ந்து பயன்படாவிட்டாலும், சிறு பழுதுகளை நாமே சரிபார்க்கவும் இப்பயிற்சி உதவும்.
அறிவியல், பொறியியல் படிப்பை மேற்கொள்ள இருப்பவர்கள் தாராளமாக இந்த விடுமுறையில் கணினி ஹார்ட்வேர் பயிற்சி பெறலாம். இது கல்லூரி மேற்படிப்பின்போது நிச்சயம் கைகொடுக்கும். புத்திசாலித்தனமாக இதையே பகுதி நேரப் பணியாகப் பொருளீட்டுவதற்குப் பயன்படுத்தும் கல்லூரி மாணவர்கள் தற்போது அதிகரித்திருக்கிறார்கள்.
இந்த வாய்ப்புகள் சம்பாத்தியம் மட்டுமன்றி, வளரும் துறையின் புதிய சவால்களை எதிர்கொள்ளவும் உதவுகிறது. இத்தகைய ஹார்ட்வேர் படிப்புகள் எவையெவை, அவற்றை எப்படிப் படிக்கலாம் என்று ஆலோசனை வழங்குகிறார், துறை சார்ந்த வல்லுநர் வந்தவாசி ஜெ.சதீஷ்குமார்.
அடிப்படை ஹார்ட்வேர் பயிற்சிகள்
பிளஸ் 2 என்றில்லை பத்தாம் வகுப்பு முடித்ததுமே கணினி ஹார்ட்வேர் பயிற்சி பெறலாம். எலெக்ட்ரானிக்ஸ் துறையில் ஆர்வமுள்ளவர்களுக்குக் குறுகிய காலப் பயிற்சி போதும். சான்றிதழ், டிப்ளமோ படிப்புகளாகவும் இவை கிடைக்கின்றன. சாப்ட்வேர் பயிற்சி மையங்கள் பலவும் அடிப்படை ஹார்டுவேர் பயிற்சியை வழங்கிவருகின்றன. ஆனால் ஹார்ட்வேர் துறையைப் பொறுத்தவரை, பயிற்சி நிறுவனங்கள் அளிக்கும் சான்றிதழுக்கு மதிப்பில்லை.
ஒருவர் நிரூபித்துக் காட்டும் திறன் மற்றும் நடைமுறை அறிவையே வேலைவாய்ப்பின்போது நிறுவனங்கள் பரிசோதித்து அறிகின்றன. அதனால், குறுகியகாலப் பயிற்சியைத் தொடர்ந்து நடைமுறையில் கணிசமான அனுபவம் பெற்ற பிறகு ஆன்லைன் சான்றிதழ்களை வழங்கும் தேர்வுகளை எதிர்கொள்ளலாம். ஹார்ட்வேர் துறையில் A+, நெட்வொர்க்கிங்கில் N+ எனச் சான்றிதழ்களைப் பின்னர் பெற்றுக்கொள்ளலாம்.
நடைமுறை அனுபவம் அவசியம்
கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் பயிற்சிகளில் card level, chip level என 2 நிலைகள் உண்டு. இந்த விடுமுறை இடைவெளியில் கார்ட் லெவலில் காலெடுத்து வைக்கலாம். தொடர்ந்து ஆர்வத்தின் அடிப்படையில் கல்லூரி தொடங்கியதும், வார இறுதி விடுமுறையில் சி லெவலில் பயிற்சி பெறுவது பற்றி, பின்னர் தீர்மானித்துக்கொள்ளலாம். பயிற்சி மையங்களில் வழங்கப்படும் பாடத்தைவிட நடைமுறைப் பயிற்சியே அவசியம்.
இந்தப் பயிற்சிகளை முடித்த மாணவர்கள், பயிற்சி பெற்ற நிறுவனங்கள் அல்லது மற்ற இடங்களில் ஊதியம் இன்றி உழைப்பை வழங்க முன்வருவது அனுபவ அறிவை விருத்தி செய்யும். போதிய அனுபவ அறிவைப் பெற்ற பின்னர், நண்பர்களுடன் இணைந்து தொழில் ரீதியாகவோ அல்லது தமக்கான வட்டத்தை உருவாக்கிக்கொண்டு அழைப்பின் பெயரிலோ ஹார்ட்வேர் பழுது நீக்கல் பணியை மேற்கொள்ள முடியும். இதில் பெரிய முதலீடு எதுவுமின்றி மாதந்தோறும் கணிசமான தொகையைக் கல்லூரி மாணவர்கள் பலர் சம்பாதிப்பதைக் கண்கூடாகப் பார்க்கலாம்.
நெட்வொர்க்கிங் பயிற்சிகள்
இன்றைய இணையப் பயன்பாட்டு உலகில் நெட்வொர்க்கிங்கில் பயிற்சி பெறுவதும் கூடுதல் திறனை வளர்த்தெடுக்க உதவும். சிறு அலுவலகமானாலும், உலகளாவிய கார்ப்பரேட் நிறுவனமானாலும் கணினிகளைப் பிணைத்த அலுவலகப் பயன்பாட்டில் இந்தத் துறைக்கு வல்லுநர்கள் தேவை இன்னமும் அதிகரிக்கும். பேசிக் மற்றும் அட்வான்ஸ்டு பயிற்சிகளைப் பெற்றவர்கள் cisco சான்றிதழ்களைப் பெற முயல்வதன் மூலம், தங்கள் திறனைத் தீர்மானித்துக் கொள்ளலாம்.
இதன் அடுத்த கட்டமாக Administration level பயிற்சியைப் பெறலாம். மைக்ரோசாப்ட், ஐ.பி.எம். சான்றிதழ்கள் இந்தத் துறையில் நாம் பெற்ற பயிற்சிக்குக் கட்டியம் கூறும். பெரிய நிறுவனங்களில் பணியில் சேர விழைகையில் இந்தச் சான்றிதழ்கள் உங்கள் மதிப்பைக் கூட்டும்.
இந்த ஹார்ட்வேர் மற்றும் நெட்வொர்க்கிங் பயிற்சிகள் 3 மாதத்தில் தொடங்கி 1 வருடப் பயிற்சியாகக் கிடைக்கின்றன. கோடைகாலப் பயிற்சியாக வழங்குபவர்கள் துரிதப் பயிற்சியாக இந்த விடுமுறையில் பாடத்தை வழங்கிவிட்டு, நடைமுறை பயிற்சியைச் சாவகாசமாக அளிப்பதும் உண்டு. ரூ. 2 ஆயிரத்தில் தொடங்கி ரூ. 16 ஆயிரம்வரை, நிலைகள் மற்றும் பயிற்சி மையங்களைப் பொறுத்துக் கட்டணங்கள் வேறுபடும்.
ஆன்லைனில் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் தற்போது அதிகரித்துள்ளன. ஆனால், அடிப்படைப் பயிற்சியை நேரில் பெறுவதே சிறந்தது. மேலதிகப் பயிற்சிகளைக் கல்லூரி படிப்பின் போக்கில் பகுதி நேரமாக ஆன்லைனில் பயிலலாம்.
இதர ஹார்ட்வேர் பயிற்சிகள்
சில வருடங்களுக்கு முன்புவரை கோடை விடுமுறைப் பயிற்சியாக இருந்து வந்த ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், டிவி மெக்கானிசம் பயிற்சிகள், ஐ.டி.ஐ. படித்தவர்கள் மற்றும் தொழில்முறை அனுபவஸ்தர்கள் ஆகியோரது ஆக்கிரமிப்பாலும், மாணவர்களின் கம்ப்யூட்டர் ஹார்டுவேர் படிப்பு மோகத்தாலும் வரவேற்பு இழந்திருக்கிறது. மேற்படிப்பு சார்ந்து ஆர்வமுள்ளவர்கள் இந்தப் பயிற்சிகளில் சேரலாம்.
மற்றபடி சீஸனில் மட்டுமே வேலைவாய்ப்பு உள்ளதும், நன்கு பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே தொழில் செய்யக்கூடிய ரிஸ்க் உடையதுமான இப்பயிற்சிகளைத் தவிர்க்கலாம். மாறாக சி.சி.டி.வி., இன்வெர்ட்டர்கள், சோலார் பேனல்களை நிறுவுதல் போன்ற வேலைவாய்ப்புகளும் தற்போது அதிகரித்துவருகின்றன என்பதால், எலெக்ட்ரானிக்ஸ் துறையில் ஆர்வமுள்ளவர்கள் இந்தப் பயிற்சிகளைப் பெறலாம்.
‘ஸ்மார்ட்’ வேலைவாய்ப்பு
எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கணினி ஹார்ட்வேர் துறை ஆர்வமுள்ளவர்கள் வளர்ந்துவரும் ஸ்மார்ட் போன் துறையில் பயிற்சி பெறலாம். அடிப்படை, இடைநிலை மற்றும் மேம்பட்ட நிலைக்கான பயிற்சிகள் இதில் வழங்கப்படுகின்றன. தன்னளவில் விரிவடைந்துவரும் இத்துறையில் திறன் மிகுந்த நபர்களின் தேவை நாளும் அதிகரித்துவருகிறது. பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தற்போது இந்தப் பயிற்சியில் அதிகம் சேர்கிறார்கள்.
3 மாதம் தொடங்கி 1 வருடம்வரை விரியும் இந்தப் பயிற்சிக்கான கட்டணம் ரூ. 10 ஆயிரத்தில் தொடங்கி லட்சம்வரை செல்கிறது. அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிக்கான மாணவர்களுக்கு இந்தப் பயிற்சி சுவாரசியமாகவும் பயனுள்ள விடுமுறைப் பயிற்சியாகவும் இருக்கும்.
புஷ்பவிமானம்... 1970களில் ஆனந்த விகடனின் நடுப்பக்கத்தில்:-
புஷ்பவிமானம் என்றால் என்ன? அது எப்படி இருக்கும்? என்பன போன்ற பல யோசனைகள் நமது மனதில் தோன்றும் அல்லவா? ஒரு முறை 1970களில் ஆனந்த விகடனின் நடுப்பக்கத்தில் ஓவியம் மற்றும் அழகான புகைப்படங்களை போடுவது வழக்கம் அதில் ஒருமுறை குகை ஓவியங்கள் படங்கள் பதிப்பாகியிருந்தது அதில் புஷ்பவிமானங்களின் ஓவியமும் வரையப் பட்டிருந்தது...
சிறு வயதில் கண்ணன் செய்த குறும்புக்கு அளவே இல்லை ;அந்தக்குறும்பிலும் பலர் நன்மை அடைந்திருக்கின்றனர் அதில் ஒரு பானையும் உண்டு. மண்பானை புஷ்பவிமானத்தில் எப்படி வைகுந்தத்திற்கு போயிற்று?
அந்தக்கதையைப்பார்க்கலாம்....
ததிபாண்டன் என்பவன் கண்ணனுக்கு உற்ற நண்பன்.ஆனால் ரொம்ப சாது.சூது கபடம் இல்லாதவன் .கண்ணன் செய்யும் குறும்புகளில் கண்ணன் தப்பிக்க இவன் மாட்டிக்கொண்டு தண்டனை அனுபவிப்பான்.ஒரு நாள் ததிபாண்டனின் தாய் அவனுக்கு கன்றுகுட்டிகளைக்கட்டி பாதுகாக்கும் வேலையைக்கொடுத்தாள் அவைகளை அவிழ்த்து விட்டால் தாயிடம் சென்று பாலைக்குடித்துவிடும் ஆகையால் அவைகளைக்கட்டி வைக்கச்சொன்னாள். ததிபாண்டனும் தாய் சொன்னதைத்தட்டாமல் காத்து நின்றான் .அங்கு மயில் பீலி ஆட கிருஷ்ணன் வந்தான் ,
"என்ன ததிபாண்டா?என்ன கன்றின் அருகில் நிற்கிறாய்? "அதுவா கன்றுகள் தாயிடம் சென்று பால் குடிக்காமல் பார்த்துக்கொள்ளும்படி என் தாய் கட்டளை இட்டிருக்கிறார்.அதனால் தான் இங்கு நிற்கிறேன் ."
"அப்போ உனக்காக கொண்டு வந்த இனிப்பு வேண்டாமா? இதைக்கேட்டவுடன் நாக்கு ஊற "எங்கே வைத்திருக்கிறாய் .காட்டு பார்க்கலாம் "
"அவைகளை வைக்கோல் போர் பின் வைத்திருக்கிறேன் .அங்குப்போய் பார் "
ததிபாண்டன் இப்போது கன்றுகளை மறந்தான் ,கண்கள் முன் இனிப்பே தெரிந்தது வைக்கோல் போர் அருகில் சென்றான்.அதற்குள் கண்ணன் கன்றுகுட்டிகளை அவிழ்த்து விட்டான்.கன்றுகளும் துள்ளிக்குதித்தோடி தாய்பசுவிடம் பாலைப்பருகின.இந்த நேரத்தில் ததிபாண்டவனின் தாய் அங்கு வந்து பார்த்து கோபம் கொண்டாள். "எங்கேடா போனாய்?நான் கன்றுக்குட்டிகளைப் பாத்துக்கொள்ளச்சொன்னால் நீ எங்கேயோ போய்விட்டாய் " என்று கூறியபடியே வர கண்ணன் அங்கு வந்தான் . "நீங்கள் உங்க மகனைத் தேடுகிறீர்களா?அவன் வைக்கோல்போர் பின்னால் இனிப்பை ருசி பார்த்துக்கொண்டிருக்கிறான் ."
"ஏண்டா ததிபாண்டா உனக்கு இவ்வளவு திமிரா?' என்று கூறியபடியே அவனை ஒரு குச்சியால் விளாசினாள் அவனும் அழுதபடி கண்ணனிடம் வந்தான் 'கண்ணா என்னை மாட்டிவிட்டாயல்லவா?எனக்கும் ஒரு காலம் வரும் அப்போது பார் " என்று கூறியபடியே அங்கிருந்து நகர்ந்தான் .
அந்த நாளும் வந்தது. திருட்டுத்தனமாக இதோ கண்ணன் எதோ ஒரு வீட்டில் நுழைகிறான்.இதை ததிபாண்டன் பார்த்துவிடுகிறான்
"என்ன கண்ணா எங்க ஓடி ஒளிகிறாய் நீ ?"
"நான் ஒரு கோபியர் வீட்டில் நுழைந்து வெண்ணெய் சட்டியை உடைத்துவிட்டேன் .இதை யாரோபோய் என் அம்மாவிடம் சொல்ல என் அம்மா என்னைத்தேடி வருகிறாள்."
"நான் உன்னைக்காட்டிக்கொடுக்கப்போறேன் நீ அன்று என்னைக்காட்டிக்கொடுத்து அடி வாங்க வைத்தாய் அல்லவா?'
"வேண்டாம் வேண்டாம் நீ என் நண்பனல்லவா? நீ என்னை இப்போது காப்பாற்ற நான் உனக்கு யாவரும் கிட்டாத ஒன்றை உனக்கு அளிப்பேன்' ததி பாண்டவனும் மனசு மாறி அவனிடம் "இங்கேபெரிய பானை இருக்கு அதற்குள் ஒளிந்துக்கொள்"
"கண்ணனும் ஒரு பானைக்குள் ஒளிந்துக்கொண்டான் ததிபாண்டன் அதன் மூடியின் மேல் அமர்ந்துகொண்டான்.
கோபியும் யசோதயும் அங்கு வந்து 'இங்கு கண்ணன் வந்தானா ?நீ பார்த்தாயா?"என்று வினவ அதற்கு அவன் "எனக்குத்தெரியாதே நான் ஒருவரையும் இங்கு பார்க்கவில்லை "என்று பதிலளித்தான் .அவர்களும் போய்விட்டார்கள் .கண்ணன் பானையிலிருந்து குரல் கொடுத்தான் .நண்பா நான் வெளியே வரவேண்டும் ..பானையிலிருந்து கீழே இறங்கு"
ததிபாண்டவன் கீழே இறங்காமல் குரல் கொடுத்தான் "கண்ணா பானையிலிருந்து வெளியே வரவேண்டுமென்றால் எனக்கு நீ மோட்சம் கொடு'
"ததி பாண்டன் எனக்கு உள்ளே மூச்சு முட்டுகிறது சரி தருகிறேன் . நீ கீழே இறங்கு" அப்போதும் அவன் கீழே இறங்கவில்லை "இன்னும் ஏன் தாமதம் செய்கிறாய்? நான் தான் மோட்சம் கொடுப்பேன் என்றேனே "
"நீ எனக்கு மட்டும் கொடுத்தால் போதாது .உன்னைக்காப்பாற்றிய இந்த மண்பானைக்கும் மோட்சம் அளிக்க வேண்டும் " . "சரி அப்படியே செய்கிறேன் ரொம்ப மூச்சு முட்டுகிறது நண்பா" ததி பாண்டன் பானை மூடியிலிருந்து கீழே குதிக்கிறான். வாசலில் புஷ்பவிமானம் ஒன்று வந்து நிற்கிறது "நண்பா நீ கேட்டபடியே இதில் ஏறி பானையுடன் வைகுந்தம் போ."
"மிக்க நன்றி கண்ணா. நீ சொன்னபடி செய்துவிட்டாய் " என்றபடி மண்பானையுடன் வைகுந்தம் சென்றுவிட்டான் .வைகுந்தத்தில் இந்தப்பானை இருப்பதாக ஐதீகம்
அதற்கு உங்களுக்குத் தேவையான பொருட்களும் வழிமுறைகளும் இதோ!
தேவையான பொருட்கள்
1 கப் - ரவா மாவு
1/2 தேக்ககரண்டி - கடுகு
1/2 தேக்ககரண்டி - சீரகம்
தேவையான அளவு - பெருங்காயம்
1 தேக்ககரண்டி - பருப்பு
1 தேக்ககரண்டி - உளுந்து
1- 2 - கருவேப்பிலை
1 - பட்டை மிளகாய்
6-7 முந்திரிப் பருப்பு
1/3 கப் - தயிர்
1/2 கப் துருவிய கேரட்
2 - பச்சை மிளகாய்
1 - அரைத்த இஞ்சி
1 கப் - நீர்
தேவையான அளவு - நெய்
தேவையான அளவு - உப்பு
தேவையான அளவு - எண்ணை
செய்யும் முறை
1) சட்டியில் நெய் விட்டு சற்று காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்கவும். பின் பெருங்காயம், உளுந்து, பருப்பு, கருவேப்பிலை, பட்டை மிளகாய் போட்டு தாளிக்கவும். 2) இந்தக் கலவையில் ரவா மாவை போட்டு சற்று கிண்டவும். பின் பொன்னிறமாக மாறியதும் இறக்கி வைக்கவும்..
3) அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் தயிர், அரைத்த இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு கலக்கவும். .
4) பின் துருவிய கேரட்டை இந்தக் கலவையில் சேர்ந்து நன்கு கிளறவும்..
5) பின் இட்டிலி வேகவைக்கும் பாத்திரத்தில் எண்ணைய தடவி இந்தக் கலவையை ஊற்றவும்..
6) இந்தக் கலவையை 15 நிமிடத்திற்கு வேக வைக்கவும். சுவையான இட்டிலி பரிமாறத் தயார்.
வாங்க சாப்பிடுவோம்......
======================================.
வருகை தாருங்கள், தமிழில் சிறுவர்கள் தொகுத்து வழங்கும் வலைப்பதிவர்களின் மாத இதழ், ஒவ்வொரு மாதமும் ஆங்கில மாதத்தின் 3/4-வது ஞாயிறுதோறும் (தமிழ் மாதத்தின் முதல் ஞாயிறு அன்று) இரவு 9 மணியளவில் வெளியாகும் சுட்டீஸ் ரோஜாக்களின் "குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழ். http://gulkanthu.blogspot.in/
கற்க கசடற….!! !! வாய்மையே வெல்லும்!!
“வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம்”
160/Sector-4, Vaishali, Ghaziabad, NCR-New Delhi.-201012
e-mail: vaishalireaderscircle@gmail.com
___________________________________________________________________
"சுட்டீஸ்-குல்கந்து" இதழ்=28 ஆடி மாதம், தேதி15-07-2018. "வைஷாலி வாசகர் வட்ட 53வது சந்திப்பு, ஆடிமாதம். வீட்டு உபயோக மின்சாதனப் பொருட்கள் ஆகியவற்றை இயக்குதல், அவற்றின் பராமரிப்பு, மற்றும் சிறு சிறு பழுது நீக்குதல்:--சிறப்பு பயிற்சி கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும்.
வணக்கம், தாங்களின் வருகைக்கு நன்றி, இந்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழில்" -சித்திரை மாத வலைப்பதிவு:- இந்த இதழின் ஆசிரியராக, தொகுத்து வழங்குபவர்:- (Editor of the Page) வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ் குழுவினர்கள் இடம் செக்டர்-4, மையப்பூங்கா(Central Park), வைைஷாலி மெட்ரோ இரயில் நிலையம் அருகில், NCR-New Delhi.

வைஷாலி வாசகர் வட்ட 53வது சந்திப்பு, 17-06-2018 (July-Aug)-ஆடிமாதம். வீட்டு உபயோக மின்சாதனப் பொருட்கள் ஆகியவற்றை இயக்குதல், அவற்றின் பராமரிப்பு, மற்றும் சிறு சிறு பழுது நீக்குதல்:-
வைஷாலி வாசகர் வட்ட 53வது சந்திப்பு,
ஹலோ சுட்டீஸ் ஒவ்வொரு மாத வாசகர்வட்ட நிகழ்ச்சியிலும் இந்த வருடம் (2018-19)முழுவதும் நாம் பெறப்போகும் பயிற்சிகள்... வீட்டு உபயோக மின்சாதனப் பொருட்கள் ஆகியவற்றை இயக்குதல், அவற்றின் பராமரிப்பு, மற்றும் சிறு சிறு பழுது நீக்குதல் குறித்து அறிந்துகொள்ளலாம்.
அந்த வகையில் 15-06-2018, ஆங்கில மாதத்தின் 3வது ஞாயிறு அன்றய 53வது (தமிழ்-ஆடிமாத) வாசகர் வட்ட சந்திப்பில் நாம் கற்றுக்கொண்ட வீட்டு உபயோக மின்சாதனப் பொருட்கள் பராமரிப்பு, மற்றும் சிறு சிறு பழுது நீக்குதல் குறித்து தெரிந்துகொள்ளும் வரிசையில் கணினி சார் அறிவு (மேசைக்கணினி மற்றும் மடிக்கணினி, டேப் என்று கூறும் தொடுதிரை மின்னணு தொலைப்பேசி கணினி) அடிப்படை ‘கம்ப்யூட்டர் ஹார்டுவேர்’, ‘நெட்வொர்க்கிங்’ குறித்து, அவைகளை இயக்குதல், அவற்றின் பராமரிப்பு, மற்றும் சிறு சிறு பழுது நீக்குதல் குறித்து தெரிந்துகொள்ளும் பயிற்சி சந்திப்பு மற்றும் வாசகர் வட்ட நிகழ்ச்சிகளும் கொண்டாட்டங்களும் வெகு சிறப்பாக நடந்தேறியது .
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம் சொல்லியுள்ளபடி, நாட்டில் லட்சக்கணக்கான வேலைகளைத் தரும் வாய்ப்பு கொண்டது கம்ப்யூட்டர் ஹார்டுவேர் துறை. அடிப்படைப் பழுது நீக்கல் தொடங்கி, நிறுவனங்களின் சிஸ்டம் அட்மின்வரை பல்வேறு நிலைகளில் வேலைவாய்ப்பு உண்டு.
எந்தப் பிரிவுப் பாடமென்றாலும் கணினிப் பயன்பாடு தவிர்க்க முடியாதது என்பதால் அறிவியல், பொறியியல் மட்டுமன்றி அனைத்துத் துறையினரும் கணினி ஹார்டுவேரில் அடிப்படைப் பயிற்சி பெறலாம். படிப்பு மற்றும் பணி சார்ந்து பயன்படாவிட்டாலும், சிறு பழுதுகளை நாமே சரிபார்க்கவும் இப்பயிற்சி உதவும்.
அறிவியல், பொறியியல் படிப்பை மேற்கொள்ள இருப்பவர்கள் தாராளமாக இந்த விடுமுறையில் கணினி ஹார்ட்வேர் பயிற்சி பெறலாம். இது கல்லூரி மேற்படிப்பின்போது நிச்சயம் கைகொடுக்கும். புத்திசாலித்தனமாக இதையே பகுதி நேரப் பணியாகப் பொருளீட்டுவதற்குப் பயன்படுத்தும் கல்லூரி மாணவர்கள் தற்போது அதிகரித்திருக்கிறார்கள்.
இந்த வாய்ப்புகள் சம்பாத்தியம் மட்டுமன்றி, வளரும் துறையின் புதிய சவால்களை எதிர்கொள்ளவும் உதவுகிறது. இத்தகைய ஹார்ட்வேர் படிப்புகள் எவையெவை, அவற்றை எப்படிப் படிக்கலாம் என்று ஆலோசனை வழங்குகிறார், துறை சார்ந்த வல்லுநர் வந்தவாசி ஜெ.சதீஷ்குமார்.
அடிப்படை ஹார்ட்வேர் பயிற்சிகள்
பிளஸ் 2 என்றில்லை பத்தாம் வகுப்பு முடித்ததுமே கணினி ஹார்ட்வேர் பயிற்சி பெறலாம். எலெக்ட்ரானிக்ஸ் துறையில் ஆர்வமுள்ளவர்களுக்குக் குறுகிய காலப் பயிற்சி போதும். சான்றிதழ், டிப்ளமோ படிப்புகளாகவும் இவை கிடைக்கின்றன. சாப்ட்வேர் பயிற்சி மையங்கள் பலவும் அடிப்படை ஹார்டுவேர் பயிற்சியை வழங்கிவருகின்றன. ஆனால் ஹார்ட்வேர் துறையைப் பொறுத்தவரை, பயிற்சி நிறுவனங்கள் அளிக்கும் சான்றிதழுக்கு மதிப்பில்லை.
ஒருவர் நிரூபித்துக் காட்டும் திறன் மற்றும் நடைமுறை அறிவையே வேலைவாய்ப்பின்போது நிறுவனங்கள் பரிசோதித்து அறிகின்றன. அதனால், குறுகியகாலப் பயிற்சியைத் தொடர்ந்து நடைமுறையில் கணிசமான அனுபவம் பெற்ற பிறகு ஆன்லைன் சான்றிதழ்களை வழங்கும் தேர்வுகளை எதிர்கொள்ளலாம். ஹார்ட்வேர் துறையில் A+, நெட்வொர்க்கிங்கில் N+ எனச் சான்றிதழ்களைப் பின்னர் பெற்றுக்கொள்ளலாம்.
நடைமுறை அனுபவம் அவசியம்
கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் பயிற்சிகளில் card level, chip level என 2 நிலைகள் உண்டு. இந்த விடுமுறை இடைவெளியில் கார்ட் லெவலில் காலெடுத்து வைக்கலாம். தொடர்ந்து ஆர்வத்தின் அடிப்படையில் கல்லூரி தொடங்கியதும், வார இறுதி விடுமுறையில் சி லெவலில் பயிற்சி பெறுவது பற்றி, பின்னர் தீர்மானித்துக்கொள்ளலாம். பயிற்சி மையங்களில் வழங்கப்படும் பாடத்தைவிட நடைமுறைப் பயிற்சியே அவசியம்.
இந்தப் பயிற்சிகளை முடித்த மாணவர்கள், பயிற்சி பெற்ற நிறுவனங்கள் அல்லது மற்ற இடங்களில் ஊதியம் இன்றி உழைப்பை வழங்க முன்வருவது அனுபவ அறிவை விருத்தி செய்யும். போதிய அனுபவ அறிவைப் பெற்ற பின்னர், நண்பர்களுடன் இணைந்து தொழில் ரீதியாகவோ அல்லது தமக்கான வட்டத்தை உருவாக்கிக்கொண்டு அழைப்பின் பெயரிலோ ஹார்ட்வேர் பழுது நீக்கல் பணியை மேற்கொள்ள முடியும். இதில் பெரிய முதலீடு எதுவுமின்றி மாதந்தோறும் கணிசமான தொகையைக் கல்லூரி மாணவர்கள் பலர் சம்பாதிப்பதைக் கண்கூடாகப் பார்க்கலாம்.
நெட்வொர்க்கிங் பயிற்சிகள்
இன்றைய இணையப் பயன்பாட்டு உலகில் நெட்வொர்க்கிங்கில் பயிற்சி பெறுவதும் கூடுதல் திறனை வளர்த்தெடுக்க உதவும். சிறு அலுவலகமானாலும், உலகளாவிய கார்ப்பரேட் நிறுவனமானாலும் கணினிகளைப் பிணைத்த அலுவலகப் பயன்பாட்டில் இந்தத் துறைக்கு வல்லுநர்கள் தேவை இன்னமும் அதிகரிக்கும். பேசிக் மற்றும் அட்வான்ஸ்டு பயிற்சிகளைப் பெற்றவர்கள் cisco சான்றிதழ்களைப் பெற முயல்வதன் மூலம், தங்கள் திறனைத் தீர்மானித்துக் கொள்ளலாம்.
இதன் அடுத்த கட்டமாக Administration level பயிற்சியைப் பெறலாம். மைக்ரோசாப்ட், ஐ.பி.எம். சான்றிதழ்கள் இந்தத் துறையில் நாம் பெற்ற பயிற்சிக்குக் கட்டியம் கூறும். பெரிய நிறுவனங்களில் பணியில் சேர விழைகையில் இந்தச் சான்றிதழ்கள் உங்கள் மதிப்பைக் கூட்டும்.
இந்த ஹார்ட்வேர் மற்றும் நெட்வொர்க்கிங் பயிற்சிகள் 3 மாதத்தில் தொடங்கி 1 வருடப் பயிற்சியாகக் கிடைக்கின்றன. கோடைகாலப் பயிற்சியாக வழங்குபவர்கள் துரிதப் பயிற்சியாக இந்த விடுமுறையில் பாடத்தை வழங்கிவிட்டு, நடைமுறை பயிற்சியைச் சாவகாசமாக அளிப்பதும் உண்டு. ரூ. 2 ஆயிரத்தில் தொடங்கி ரூ. 16 ஆயிரம்வரை, நிலைகள் மற்றும் பயிற்சி மையங்களைப் பொறுத்துக் கட்டணங்கள் வேறுபடும்.
ஆன்லைனில் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் தற்போது அதிகரித்துள்ளன. ஆனால், அடிப்படைப் பயிற்சியை நேரில் பெறுவதே சிறந்தது. மேலதிகப் பயிற்சிகளைக் கல்லூரி படிப்பின் போக்கில் பகுதி நேரமாக ஆன்லைனில் பயிலலாம்.
இதர ஹார்ட்வேர் பயிற்சிகள்
சில வருடங்களுக்கு முன்புவரை கோடை விடுமுறைப் பயிற்சியாக இருந்து வந்த ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், டிவி மெக்கானிசம் பயிற்சிகள், ஐ.டி.ஐ. படித்தவர்கள் மற்றும் தொழில்முறை அனுபவஸ்தர்கள் ஆகியோரது ஆக்கிரமிப்பாலும், மாணவர்களின் கம்ப்யூட்டர் ஹார்டுவேர் படிப்பு மோகத்தாலும் வரவேற்பு இழந்திருக்கிறது. மேற்படிப்பு சார்ந்து ஆர்வமுள்ளவர்கள் இந்தப் பயிற்சிகளில் சேரலாம்.
மற்றபடி சீஸனில் மட்டுமே வேலைவாய்ப்பு உள்ளதும், நன்கு பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே தொழில் செய்யக்கூடிய ரிஸ்க் உடையதுமான இப்பயிற்சிகளைத் தவிர்க்கலாம். மாறாக சி.சி.டி.வி., இன்வெர்ட்டர்கள், சோலார் பேனல்களை நிறுவுதல் போன்ற வேலைவாய்ப்புகளும் தற்போது அதிகரித்துவருகின்றன என்பதால், எலெக்ட்ரானிக்ஸ் துறையில் ஆர்வமுள்ளவர்கள் இந்தப் பயிற்சிகளைப் பெறலாம்.
‘ஸ்மார்ட்’ வேலைவாய்ப்பு
எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கணினி ஹார்ட்வேர் துறை ஆர்வமுள்ளவர்கள் வளர்ந்துவரும் ஸ்மார்ட் போன் துறையில் பயிற்சி பெறலாம். அடிப்படை, இடைநிலை மற்றும் மேம்பட்ட நிலைக்கான பயிற்சிகள் இதில் வழங்கப்படுகின்றன. தன்னளவில் விரிவடைந்துவரும் இத்துறையில் திறன் மிகுந்த நபர்களின் தேவை நாளும் அதிகரித்துவருகிறது. பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தற்போது இந்தப் பயிற்சியில் அதிகம் சேர்கிறார்கள்.
3 மாதம் தொடங்கி 1 வருடம்வரை விரியும் இந்தப் பயிற்சிக்கான கட்டணம் ரூ. 10 ஆயிரத்தில் தொடங்கி லட்சம்வரை செல்கிறது. அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிக்கான மாணவர்களுக்கு இந்தப் பயிற்சி சுவாரசியமாகவும் பயனுள்ள விடுமுறைப் பயிற்சியாகவும் இருக்கும்.
ஞாயிற்றுக்குகிழமை மாலை 4.00pm மணியளவில் வழக்கமான இடத்தில் வருகை தாருங்கள், மேலும் தமிழில் சிறுவர்கள் தொகுத்து வழங்கும் வலைப்பதிவர்களின் மாத இதழ், சுட்டீஸ் ரோஜாக்களின் "குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழ். http://gulkanthu.blogspot.in/
வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :-
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து,
தொடர்ந்து எங்கள் வீட்டு "நூலகம் "
படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும்
(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம் / செல்லப் பிராணிகள் வளர்ப்போம் )
@இந்த மாதம் நமது வாசகர்வட்டத்தின் தமிழ் வகுப்புக்கு புதியவர்கள்:-
@10-பத்துபேர்கள் கொண்ட முதல் குழு தமிழை முழுமையாக எழுத படிக்க தெரிந்துகொண்டதோடு தமிழக அரசின் அடிப்படை தமிழ் தேர்வினை எழுத தயாராக இருக்கிறார்கள்
@மேலும் 9-ஒன்பது புதியவர்கள் தமிழ் எழுத படிக்க கற்றுவருகிறார்கள்.
@இந்த மாதம் மேலும் மூன்று மாணவர்கள் புதியதாக தமிழி கற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்கள் விரைவில் அவர்களும் தமிழி வகுப்பில் சேர இருக்கிறார்கள்.
======================================
@ சுட்டீஸ் கதைகள்:-
====================================
"நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்,
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்,
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற,
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும்
தமிழணங்கே! தமிழணங்கே! .....
உன் சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!"
இந்த வாழ்த்துப்பாடலை இயற்றியவர் திரு.பெ. சுந்தரம் பிள்ளை (அவர் வாழ்ந்த காலம் "ஏப்ரல் 4, 1855 - ஏப்ரல் 26, 1897")
அவர் எழுதிய "மனோன்மணீயம்" என்ற புகழ்பெற்ற நாடக நூலில் இடம்பெற்றிருக்கும் தமிழ் தாய் வாழ்த்துப்பாடல் இது.
இந்த மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த என்று ஆரம்பமாகும் பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது.
தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலின் கருத்து:-
அலை கடலே ஆடையான இந்த அழகான பூமிப் பெண்ணிற்கு, பாரத நாடே முகமாம், தென்திசை அதன் நெற்றியாம், அதில் திலகமென திகழ்வது திராவிட திருநாடாம், அந்தத் திலகத்தின் வாசனைப் போல்அனைத்து உலகமும் இன்பம் காண எல்லா திசையிலும் புகழ் மணக்க இருக்கும் தெய்வமகள் ஆகிய தமிழே, என்றென்றும் இளமையாக இருக்கிற உன்னுடைய இந்த அழகைக் கண்டு வியந்து, செய்யும் செயலையும் மறந்து, வாழ்த்துகிறோம்! வாழ்த்துகிறோம்! வாழ்த்துகிறோம்!.....
==========================
வாழ்வின் அர்த்தம்!!!! (சுட்டீஸ் கருத்துக்கதை- ஆணியே பிடுங்க வேண்டாம்):-
ஒரு பெரிய மைதானம்.
அங்கே மூன்று சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள் !
அந்த வழியாகச் சென்ற ஒரு சாமியார் அவர்களைக் கவனித்தார். குழந்தைகள் உற்சாகமாகச் சிரித்து விளையாடுவதைச் சிறிது நேரம் ரசித்தார். அதன்பிறகு அவர் மெல்லமாகக் கைதட்டி அவர்களை அழைத்தார்.
பையன்கள் சாமியாரை மேலும் கீழும் பார்த்தார்கள்.
அவருடைய விநோதமான உடை அலங்காரமும் ஜடாமுடியும் அவர்களுக்குச் சிரிப்பு மூட்டியது.
சாமியார் அவர்களைக் கேட்டார். "கண்ணுங்களா, நீங்க எப்பவும் இந்த மைதானத்திலதான் விளையாடுவீங்களா?"
"ஆமா சாமி!"
"எதுக்காக தினமும் விளையாடறீங்க? அதனால உங்களுக்கு என்ன பலன்?"
முதல் பையன் சொன்னான். "நல்லா விளையாடினா உடம்பு பலமாகும். அதுக்கப்புறம் நாம யாரையும் பார்த்துப் பயப்பட வேண்டியதில்லை. எதிர்த்து வர்றவங்களையெல்லாம் ஊதித் தள்ளிடலாம்!"
இந்த பதிலைக் கேட்டுச் சாமியாருக்கு மிகவும் மகிழ்ச்சி. "நீ பெரிய பயில்வானா வருவே"என்று அவனை ஆசிர்வதித்தார்.
அதன்பிறகு இரண்டாவது பையனின் பக்கம் திரும்பினார். "நீ ஏம்பா தினமும் விளையாடறே?"
"ஜாலியா விளையாடினாத்தான் மனசுக்கு ரிலாக்ஸா இருக்கும். அதுக்கப்புறம் முகத்தைக் கழுவிக்கிட்டு உட்கார்ந்து படிச்சா எல்லாம் சட்டுன்னு புத்தியில ஏறும்!"
"பிரமாதம் ! நீ பெரிய படிப்பாளியா வருவே" என்று இரண்டாவது பையனை ஆசிர்வதித்தார் !
பிறகு மூன்றாவது பையனையும் அதே கேள்வியைக் கேட்டார். ‘நீ ஏன்ப்பா தினமும் விளையாடறே?’
அவன் சுருக்கமாகப் பதில் சொன்னான். "எனக்கு விளையாடப் பிடிக்கும். அதான் விளையாடறேன்!"
சாமியார் அவனை வணங்கினார். "இனிமே நீதான் என்னோட குரு!"
ஒவ்வொன்றுக்கும் காரணம், பின்விளைவுகள், லாப நஷ்டங்கள் எல்லாம் யோசித்துக் குழம்பிக் கொண்டிருக்காமல் அந்தக் கணத்தைச் சொட்டு மிச்சம் வைக்காமல் அனுபவியுங்கள் ! அதுவே வாழ்வின் அர்த்தம் !!
===========================
@. புதிய எட்டு வித்தியாச புதிர் போட்டி :- சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்".....ஆடி-மாத-படத்தில் உள்ள (8) எட்டு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் -வலைப்பதிவு இதழ் போட்டி என்-28.
சரியான விடை அடுத்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" http://gulkanthu.blogspot.in/வலைப்பதிவர் இதழில் வெளியாகும்.
போட்டியில் பங்குகொள்ள விருப்பமுடையவர்கள் விடைகளை "vaishalireaderscircle@gmail.com" என்கிற மினஞ்சல் முகவரிக்கு 15-06-2018 முன்பாக அனுப்பிவைக்கவேண்டும். சரியான விடை எழுதிய அனைவருக்கும் அடுத்தமாத வாசகர் வட்ட சந்திப்பில் பரிசுகள் வழங்கப்படும்.
சென்ற மாத "சுட்டீஸ் குல்கந்து" வலைப்பதிவர் இதழ்-26 ஆனி -மாத-படத்தில் உள்ள (8) எட்டு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் -வலைப்பதிவு இதழ் போட்டி என்-26.போட்டிக்கான சரியான விடை,
போட்டி என்-26.விடை:-1).இடம்வலமாக படம் திரும்பியுள்ளது, 2)கண்கள் 3)சுத்தியல் கைப்பிடி, 4).சுத்தியல் தலைப்பகுதியில் வட்டம், 5)திருப்புளி (ஸ்குரு டிரைவரின்) முனைப்பகுதி 6) திருப்புளி (ஸ்குரு டிரைவரின்) கைப்பிடி கோடுகள், 7) ஸ்பேனர் கிடுக்கியின் கைப்பிடி முனை, வட்டம் மற்றும் சதுர துளை, 8)திருப்புளி (ஸ்குரு டிரைவரின்) பிடித்திருப்பவரின் கால்கள்.
சென்ற மாத எட்டு-வித்தியாசங்கள் வலைப்பதிவர் இதழ்-26 போட்டிக்கான சரியான விடையை 122 நபர்கள்/போட்டியாளர்கள் எழுதி போட்டியில் கலந்துகொண்டனர். வாட்ஸ் ஆப், முகநூல், மற்றும் குறுஞ்செய்தி, தொலைப்பேசி மேலும் மின்னஞ்சல் மூலம் நிறைய போட்டிக்கான விடைகள் அனுப்பிவைத்தார்கள் வாசகர் வட்டத்தை சேர்ந்தவர்களும் அவர்களின் நண்பர்கள் மற்றும் வலைப்பதிவை படிப்பவர்களும் மற்றவர்களும் என சரியான விடையை 122 நபர்கள் மட்டுமே குறிப்பிட்டிருந்தனர், தமிழில் விடை எழுதியவர்கள்=30, ஆங்கிலத் தமிழில் எழுதியவர்கள்=65, ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=26, ஹிந்தி மொழியில்=0 நபர்களும், பிற மொழியில்(Kerala)=00, (Telugu)=01, நபரும், 67-மேற்பட்ட மேலும் சிலர் எட்டுக்கும் அதிகமான தவறான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.
=============================================
==============================================
“ஆன்லைன்” வர்த்தகத்தில் போர் விமானம் வாங்கிய 7 வயது சிறுவன்!!
லண்டன், பிப்.5-இங்கிலாந்தில் உள்ள ஜெட் விமான போக்குவரத்து நிறுவனம் ஒரு போர் விமானத்தை “இபே” ஆன் லைன் வர்த்தக நிறுவனம் மூலம் ஏல விற்பனைக்கு வைத்திருந்தது. இந்த விமானத்தை 7 வயது குறும்புக்கார சிறுவன் ரூ.50 லட்சத்துக்கு விலைக்கு வாங்கினான். இதை அறிந்த அவனது தந்தை அதிர்ச்சி அடைந்தார். ஏனெனில் அந்த விமானத்தை வாங்கும் அளவு அவரிடம் பணம் இல்லை. எனவே “இபே” ஆன் லைன் வர்த்தக நிறுவனத்தை அவர் அணுகினார்.
எனது மகன் விளையாட்டாக அதை விலைக்கு வாங்கிவிட்டான். ஆனால் இதை வாங்கும் அளவு அவனிடம் “பாக்கெட் மணி” (பணம்) இல்லை. மேலும் என்னிடமும் பணம் இல்லை. எனவே அவனை மன்னித்து விடுங்கள் என்று தெரிவித்தார். அவரது நிலைமையை புரிந்து கொண்ட அந்த வர்த்தக நிறுவனம் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிட்டது. இதைத் தொடர்ந்து அந்த போர் விமானத்தின் ஏல விற்பனை தொடர்ந்து நடைபெறுகிறது.

சித்திரமும் கைப்பழக்கம் பகுதியில்:-

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம் நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்கொடையும் பிறவிக் குணம். – வெண்பா 7
விளக்கம்:
பழகப்பழக பழக்கம் வந்துவிடும். ஆனால் பிறவிக்குணத்தை மாற்ற முடியாது. வரைய வரையச் சித்திரமும் கைப்பழக்கம் ஆகிவிடும். பேசப் பேசச் செந்தமிழும் பழக்கமாகிவிடும். திரும்பத் திரும்ப நினைத்தால் கற்றது மனத்தில் பதிந்துவிடும். நல்லொழுக்கத்தைத் திரும்பத் திரும்பக் கடைப்பிடித்தால் அதுவும் பழக்கமாகிவிடும். ஆனால், நல்லவர் நட்பு, இரக்கக் குணம், கொடைப் பண்பு ஆகியவை பிறவியிலேயே பதிந்திருந்தால்தான் வரும்.
@சுட்டீஸ் குழுவினர்கள் கைவண்ணம்:- (ஓவியம்)
(நான் வரைந்த ஓவியம் / எனக்குப் பிடித்த ஓவியம்)
சுட்டீஸ்களின் கைவண்ணத்தில் உருவான இந்த மாத ஓவியங்கள் :-
================================
======================================
புஷ்பவிமானம் என்றால் என்ன? அது எப்படி இருக்கும்? என்பன போன்ற பல யோசனைகள் நமது மனதில் தோன்றும் அல்லவா? ஒரு முறை 1970களில் ஆனந்த விகடனின் நடுப்பக்கத்தில் ஓவியம் மற்றும் அழகான புகைப்படங்களை போடுவது வழக்கம் அதில் ஒருமுறை குகை ஓவியங்கள் படங்கள் பதிப்பாகியிருந்தது அதில் புஷ்பவிமானங்களின் ஓவியமும் வரையப் பட்டிருந்தது...
சிறு வயதில் கண்ணன் செய்த குறும்புக்கு அளவே இல்லை ;அந்தக்குறும்பிலும் பலர் நன்மை அடைந்திருக்கின்றனர் அதில் ஒரு பானையும் உண்டு. மண்பானை புஷ்பவிமானத்தில் எப்படி வைகுந்தத்திற்கு போயிற்று?
அந்தக்கதையைப்பார்க்கலாம்....
ததிபாண்டன் என்பவன் கண்ணனுக்கு உற்ற நண்பன்.ஆனால் ரொம்ப சாது.சூது கபடம் இல்லாதவன் .கண்ணன் செய்யும் குறும்புகளில் கண்ணன் தப்பிக்க இவன் மாட்டிக்கொண்டு தண்டனை அனுபவிப்பான்.ஒரு நாள் ததிபாண்டனின் தாய் அவனுக்கு கன்றுகுட்டிகளைக்கட்டி பாதுகாக்கும் வேலையைக்கொடுத்தாள் அவைகளை அவிழ்த்து விட்டால் தாயிடம் சென்று பாலைக்குடித்துவிடும் ஆகையால் அவைகளைக்கட்டி வைக்கச்சொன்னாள். ததிபாண்டனும் தாய் சொன்னதைத்தட்டாமல் காத்து நின்றான் .அங்கு மயில் பீலி ஆட கிருஷ்ணன் வந்தான் ,
"என்ன ததிபாண்டா?என்ன கன்றின் அருகில் நிற்கிறாய்? "அதுவா கன்றுகள் தாயிடம் சென்று பால் குடிக்காமல் பார்த்துக்கொள்ளும்படி என் தாய் கட்டளை இட்டிருக்கிறார்.அதனால் தான் இங்கு நிற்கிறேன் ."
"அப்போ உனக்காக கொண்டு வந்த இனிப்பு வேண்டாமா? இதைக்கேட்டவுடன் நாக்கு ஊற "எங்கே வைத்திருக்கிறாய் .காட்டு பார்க்கலாம் "
"அவைகளை வைக்கோல் போர் பின் வைத்திருக்கிறேன் .அங்குப்போய் பார் "
ததிபாண்டன் இப்போது கன்றுகளை மறந்தான் ,கண்கள் முன் இனிப்பே தெரிந்தது வைக்கோல் போர் அருகில் சென்றான்.அதற்குள் கண்ணன் கன்றுகுட்டிகளை அவிழ்த்து விட்டான்.கன்றுகளும் துள்ளிக்குதித்தோடி தாய்பசுவிடம் பாலைப்பருகின.இந்த நேரத்தில் ததிபாண்டவனின் தாய் அங்கு வந்து பார்த்து கோபம் கொண்டாள். "எங்கேடா போனாய்?நான் கன்றுக்குட்டிகளைப் பாத்துக்கொள்ளச்சொன்னால் நீ எங்கேயோ போய்விட்டாய் " என்று கூறியபடியே வர கண்ணன் அங்கு வந்தான் . "நீங்கள் உங்க மகனைத் தேடுகிறீர்களா?அவன் வைக்கோல்போர் பின்னால் இனிப்பை ருசி பார்த்துக்கொண்டிருக்கிறான் ."
"ஏண்டா ததிபாண்டா உனக்கு இவ்வளவு திமிரா?' என்று கூறியபடியே அவனை ஒரு குச்சியால் விளாசினாள் அவனும் அழுதபடி கண்ணனிடம் வந்தான் 'கண்ணா என்னை மாட்டிவிட்டாயல்லவா?எனக்கும் ஒரு காலம் வரும் அப்போது பார் " என்று கூறியபடியே அங்கிருந்து நகர்ந்தான் .
அந்த நாளும் வந்தது. திருட்டுத்தனமாக இதோ கண்ணன் எதோ ஒரு வீட்டில் நுழைகிறான்.இதை ததிபாண்டன் பார்த்துவிடுகிறான்
"என்ன கண்ணா எங்க ஓடி ஒளிகிறாய் நீ ?"
"நான் ஒரு கோபியர் வீட்டில் நுழைந்து வெண்ணெய் சட்டியை உடைத்துவிட்டேன் .இதை யாரோபோய் என் அம்மாவிடம் சொல்ல என் அம்மா என்னைத்தேடி வருகிறாள்."
"நான் உன்னைக்காட்டிக்கொடுக்கப்போறேன் நீ அன்று என்னைக்காட்டிக்கொடுத்து அடி வாங்க வைத்தாய் அல்லவா?'
"வேண்டாம் வேண்டாம் நீ என் நண்பனல்லவா? நீ என்னை இப்போது காப்பாற்ற நான் உனக்கு யாவரும் கிட்டாத ஒன்றை உனக்கு அளிப்பேன்' ததி பாண்டவனும் மனசு மாறி அவனிடம் "இங்கேபெரிய பானை இருக்கு அதற்குள் ஒளிந்துக்கொள்"
"கண்ணனும் ஒரு பானைக்குள் ஒளிந்துக்கொண்டான் ததிபாண்டன் அதன் மூடியின் மேல் அமர்ந்துகொண்டான்.
கோபியும் யசோதயும் அங்கு வந்து 'இங்கு கண்ணன் வந்தானா ?நீ பார்த்தாயா?"என்று வினவ அதற்கு அவன் "எனக்குத்தெரியாதே நான் ஒருவரையும் இங்கு பார்க்கவில்லை "என்று பதிலளித்தான் .அவர்களும் போய்விட்டார்கள் .கண்ணன் பானையிலிருந்து குரல் கொடுத்தான் .நண்பா நான் வெளியே வரவேண்டும் ..பானையிலிருந்து கீழே இறங்கு"
ததிபாண்டவன் கீழே இறங்காமல் குரல் கொடுத்தான் "கண்ணா பானையிலிருந்து வெளியே வரவேண்டுமென்றால் எனக்கு நீ மோட்சம் கொடு'
"ததி பாண்டன் எனக்கு உள்ளே மூச்சு முட்டுகிறது சரி தருகிறேன் . நீ கீழே இறங்கு" அப்போதும் அவன் கீழே இறங்கவில்லை "இன்னும் ஏன் தாமதம் செய்கிறாய்? நான் தான் மோட்சம் கொடுப்பேன் என்றேனே "
"நீ எனக்கு மட்டும் கொடுத்தால் போதாது .உன்னைக்காப்பாற்றிய இந்த மண்பானைக்கும் மோட்சம் அளிக்க வேண்டும் " . "சரி அப்படியே செய்கிறேன் ரொம்ப மூச்சு முட்டுகிறது நண்பா" ததி பாண்டன் பானை மூடியிலிருந்து கீழே குதிக்கிறான். வாசலில் புஷ்பவிமானம் ஒன்று வந்து நிற்கிறது "நண்பா நீ கேட்டபடியே இதில் ஏறி பானையுடன் வைகுந்தம் போ."
"மிக்க நன்றி கண்ணா. நீ சொன்னபடி செய்துவிட்டாய் " என்றபடி மண்பானையுடன் வைகுந்தம் சென்றுவிட்டான் .வைகுந்தத்தில் இந்தப்பானை இருப்பதாக ஐதீகம்
======================================
இட்டிலி தோசை என்பது தமிழர்களின் பாரம்பரிய மற்றும் ஆரோக்கியமான உணவாகும். இந்த இட்டிலியை நீங்கள் பல வகையாக தயார் செய்யலாம். இன்று 5 நிமிடத்தில் இட்டிலிக்கான பொருட்களைத் தயார் செய்து 15 நிமிடத்தில் சுவையான இட்டிலியை எப்படி செய்வது என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டுமா?அதற்கு உங்களுக்குத் தேவையான பொருட்களும் வழிமுறைகளும் இதோ!
தேவையான பொருட்கள்
1 கப் - ரவா மாவு
1/2 தேக்ககரண்டி - கடுகு
1/2 தேக்ககரண்டி - சீரகம்
தேவையான அளவு - பெருங்காயம்
1 தேக்ககரண்டி - பருப்பு
1 தேக்ககரண்டி - உளுந்து
1- 2 - கருவேப்பிலை
1 - பட்டை மிளகாய்
6-7 முந்திரிப் பருப்பு
1/3 கப் - தயிர்
1/2 கப் துருவிய கேரட்
2 - பச்சை மிளகாய்
1 - அரைத்த இஞ்சி
1 கப் - நீர்
தேவையான அளவு - நெய்
தேவையான அளவு - உப்பு
தேவையான அளவு - எண்ணை
செய்யும் முறை
1) சட்டியில் நெய் விட்டு சற்று காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்கவும். பின் பெருங்காயம், உளுந்து, பருப்பு, கருவேப்பிலை, பட்டை மிளகாய் போட்டு தாளிக்கவும். 2) இந்தக் கலவையில் ரவா மாவை போட்டு சற்று கிண்டவும். பின் பொன்னிறமாக மாறியதும் இறக்கி வைக்கவும்..
3) அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் தயிர், அரைத்த இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு கலக்கவும். .
4) பின் துருவிய கேரட்டை இந்தக் கலவையில் சேர்ந்து நன்கு கிளறவும்..
5) பின் இட்டிலி வேகவைக்கும் பாத்திரத்தில் எண்ணைய தடவி இந்தக் கலவையை ஊற்றவும்..
6) இந்தக் கலவையை 15 நிமிடத்திற்கு வேக வைக்கவும். சுவையான இட்டிலி பரிமாறத் தயார்.
வாங்க சாப்பிடுவோம்......
======================================.
சுட்டீஸ், நாங்கள் தொகுத்து வழங்கிய பதிவுகளில் உள்ள குறை நிறைகளை வாசகர்கள், அன்பான முறையில் எங்களுக்கு எடுத்துக்கூறி, எங்களது பதிவுகள் மேலும் சிறப்படைய வாழ்த்தி உற்சாகப்படுத்துமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.
மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இந்தப்பதிவில் கீழுள்ள கருத்துக்கூறும் பகுதியில் பதிவு செய்யவும்.