"தமிழ் ரோஜாக்களின் குல்கந்து"

"தமிழ் ரோஜாக்களின் குல்கந்து"

Thursday, May 2, 2024

சுட்டீஸ் குல்கந்து செய்திகள்

📚சுட்டீஸ் குல்கந்து📚



*1930 பிப்ரவரி 18 ல் அமெரிக்க வானியியலாளர் Clyde Tombaugh கண்டுபிடித்த புதிய கிரகத்திற்கு பெயர் வைப்பதற்கான போட்டியில் இங்கிலாந்தைச் சேர்ந்த 11 வயது பள்ளிச்சிறுமி Venetia Burney கொடுத்த பெயரான '"PLUTO" தேர்வாகி, புதிய கோளுக்கு Pluto என்ற பெயர் அறிவிக்கப்பட்ட தினம்...( 01 மே 1930*)

https://gulkanthu.blogspot.com

தென்னிந்திய மொழி கற்றுக்கொள்ளலாம் வாங்க...

 📚🎧📚🎧📚🎧📚🎧📚🎧📚🎧

*💐💐5G-LEARN SOUTH INDIAN LANGUAGE💐💐**


Hindi/English to Tamil

Hindi/English to Telugu

Hindi/English to Kannada

Hindi/English to Malayalam


*💐📚5G-TAMIL📚💐*

*(5G-ஐந்தாம் தலைமுறையினர் தாய்மொழி பற்று)*


*💐📚தென்னிந்திய மொழி கற்றுக்கொள்ளலாம் வாங்க...(தேன் மதுரத்தமிழ், சுந்தரத்தெலுங்கு, கர்நாடக கன்னடம், கேரள மலையாளம் )📚*


*முதலில் புலம்பெயர் தமிழர்களுக்கான (காலம் சென்ற டாக்டர் நன்னன் அவர்களின் முறையில்) எளிய வழியில் (வெறும் 9-நாள்- வகுப்புகளில்)  தமிழ் மொழி பேச, எழுத, படிக்க, கற்றுக்கொள்ளும் இலவச வகுப்புகள்.* 


சேகரித்து வழங்குபவர் கோகி- ரேடியோ மார்கோனி, புது தில்லி

*(குறிப்பு:- இதுவரை வேற்று மொழி பேசும் 500க்கும் மேற்ப்பட்ட புலம்பெயர் தமிழ் தாய்மொழியாக கொண்ட 5ம் தலைமுறையினருக்கு தமிழில் எழுத படிக்க பயிற்சி தந்ததோடு இதுநாள்வரை 57க்கும் அதிகமான மாணவர்கள் தமிழக அரசின் தமிழ் தேர்வு எழுதி சான்றிதழ் பெற்றிருக்கிறார்கள்.)*

https://gulkanthu.blogspot.com

📚🎧📚🎧📚🎧📚🎧📚🎧📚🎧


*📚LEARN TAMIL-CLASS-1*


*📚"தமிழ்" முதல் நாள் பயிற்சி வகுப்பு*👇👇👇


*வெறும் 9-நாள் இலவச பயிற்சி வகுப்புகளில், (காலம் சென்ற டாக்டர் நன்னன் அவர்களின் முறையில்) தமிழ் எழுத படிக்க கற்றுக்கொள்ளுங்கள்..*



https://youtu.be/z02xSVHhxYE?si=jFOv_WE2x77xMmy2


Wednesday, December 2, 2020

சுட்டீஸ் இதழ்=32 கார்த்திகை மாதம் வைஷாலி வாசகர் வட்டம் 22-11-2020.

சுட்டீஸ் இதழ்=32 கார்த்திகை மாதம் வைஷாலி வாசகர் வட்டம்  22-11-2020.


புதிய எட்டு வித்தியாச புதிர் போட்டி :- சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்"..... மாசி-மாத-படத்தில் உள்ள (8) எட்டு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் -வலைப்பதிவு இதழ் போட்டி என்-32.


சரியான விடை அடுத்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" http://gulkanthu.blogspot.in/வலைப்பதிவர் இதழில் வெளியாகும். போட்டியில் பங்குகொள்ள விருப்பமுடையவர்கள் விடைகளை "vaishalireaderscircle@gmail.com" என்கிற மினஞ்சல் முகவரிக்கு 15-12-2020 முன்பாக அனுப்பிவைக்கவேண்டும். சரியான விடை எழுதிய அனைவருக்கும் அடுத்தமாத வாசகர் வட்ட சந்திப்பில் பரிசுகள் வழங்கப்படும்.


$ சென்ற மாத "சுட்டீஸ் குல்கந்து" வலைப்பதிவர் இதழ்31 அக்டொபர்-2016-ஐப்பசி-மாத வலைப்பதிவு இதழ் போட்டி என்-. ஆறு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடை,


1. படம் இடம் வலமாக திரும்பியுள்ளது 2. அம்மன் கையிலிருக்கும் சங்கு 3.அம்மன் முகம் உருவம் 4.தூபத்தட்டில் வெள்ளை சங்கு 5. அம்மன் பின்னால் இருக்கும் உலோக வளைவில் பாம்பு 6.குத்து விளக்கு அருகில் சிவப்பு பூ 7. குதித்துவிளக்கின் மேல் முனை 8..தூண் அருகிலிருக்கும் வெள்ளி சொம்பு 
இதழ்-31 போட்டிக்கான சரியான விடையை 122 நபர்கள்/போட்டியாளர்கள் எழுதி போட்டியில் கலந்துகொண்டனர். வாட்ஸ் ஆப், முகநூல், மற்றும் குறுஞ்செய்தி, தொலைப்பேசி மேலும் மின்னஞ்சல் மூலம் நிறைய போட்டிக்கான விடைகள் அனுப்பிவைத்தார்கள் வாசகர் வட்டத்தை சேர்ந்தவர்களும் அவர்களின் நண்பர்கள் மற்றும் வலைப்பதிவை படிப்பவர்களும் மற்றவர்களும் என சரியான விடையை 92 நபர்கள் மட்டுமே குறிப்பிட்டிருந்தனர், தமிழில் விடை எழுதியவர்கள்=55, ஆங்கிலத் தமிழில் எழுதியவர்கள்=15, ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=22, ஹிந்தி மொழியில்=0 நபர்களும், பிற மொழியில்(Kerala)=00, (Telugu)=0, நபரும், 32-மேற்பட்ட மேலும் சிலர் எட்டுக்கும் அதிகமான தவறான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.

@சுட்டீஸ்களின்  கைவண்ணமும், கால்வண்ணமும்:-

@சுட்டீஸ் குழுவினர்கள் கைவண்ணம்:- (ஓவியம்)
(நான் வரைந்த ஓவியம் / எனக்குப் பிடித்த ஓவியம்)
சுட்டீஸ்களின் கைவண்ணத்தில் உருவான இந்த மாத ஓவியங்கள் :-
Name : D. Yashiv Aadithya
Age : 5yrs
Place : puducherry
Thanks & Regards,
Anandavalli
(Mother)

2.வைஷ்ணவி

3. 
சுட்டீஸ் கிருத்திகா


xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

Dear editor 

Well and best wishes for your excellent opening of " vaishali".
I am sending here with some  lyrics (kavithai for children )
Kindly consider for your publish
Thanking you
Yours sincerely
S.Navsneethagiri
Devakottai
Cell
9994740166
********************************
"கொய்யா மரத்தில்
            ஒரு குரங்கு"
       **********************
சுப.நவநீதகிரி
தேவகோட்டை
******************************


. கொய்யா மரத்தில் ஒரு குரங்கு
கும்மாளம் தான் போடுது
பையா நீயும் ஓடிவந்து
பார்த்துவிட்டுச் செல்லடா
கையால் கிளையில் தாவுது
காலால் கருணம் போடுது
ஒய்யாரமாய் ஆடுது உடனே வந்து பாரடா


அச்சமின்றி ஆடியே அனைவரையும் கவர்ந்தது
பச்சைப்புல்லில் ஆடியே பசியைக் கூட மறந்தது
இச்சையோடு ஆடும்போது இரக்கமற்ற பிறவியாய்
பிச்சை எடுக்கும் மனிதனே
பிடித்து இழுத்துச் சென்றிட்டான்

மிருகங்களின் சுதந்திரம்
மீண்டும் வந்து சேருமோ
பருக நீரை கொடுக்கவும்
பாசத்தோடு அணைக்கவும்
உருகுமுள்ளம் கொண்டு நீ
உலகில் வாழ வேண்டுமே
தருக தருக சுதந்திரம்
தரணியிலே யாருக்கும்..
S.Navsneethagiri
Devakottai
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
✅🤩📚🤩📚🤩📚🤩📚🤩📚
*📀சுட்டீஸ்-சரித்திரம் முக்கியம் பகுதியில்📀*

*🤫✈️நவுறு..🤩நவுரு✈️🤫*

*"நவுரு"-ஆஸ்திரேலியாவுக்கு அருகே உள்ள குட்டி தீவு நாடு. ஜனத்தொகை 10,000 மட்டுமே. தீவின் நீளம் ஐந்து கிமி, அகலம் மூன்று கிமி. 30 நிமிடத்தில் சுற்றிவரக்கூடிய நாடு..*

மீன்பிடித்தல், விவசாயம் என மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த நாட்டுக்கு லாட்டரி அடித்தது..

ஆம்...தீவில் லட்சகணக்கான ஆண்டுகளாக பறவைகள் எச்சமிட்டு அவை முழுக்க பாஸ்பேட் எனும் தாதுவாக மாறியிருந்தன. பாஸ்பேட் சர்வதேச சந்தையில் ஏராளமான விலைக்கு போகும் பொருள். தீவில் கணக்கு,வழக்கற்ற எண்ணிக்கையில் பாஸ்பேட் இருந்தது.

அதன்பின் பன்னாட்டு கம்பனிகள் வந்து இறங்கின. பாஸ்பேட்டை வெட்டி எடுத்தன. அரசுக்கு ஏராளமான வருமானம் வந்தது.

ஒரு கட்டத்தில் 10,000 பேர் மட்டுமே உள்ள நாட்டின் அரசிடம் 170 கோடி டாலர்கள் இருந்தன. கணக்குபோட்டால் நபர் ஒருவருக்கு ஒன்றரை லட்சம் டாலர். அதாவது நால்வர் அடங்கிய குடும்பத்துக்கு தலா 1 கோடி ரூபாய்களை அரசால் கொடுத்திருக்கமுடியும்.

அந்த பணத்தை என்ன செய்தார்கள்?

எல்லாருக்கும் இலவசமாக உணவு, டிவி, எலெக்ட்ரானிக்ஸ் என வாங்கிகொடுத்தார்கள். அரசின் சார்பில் விமான கம்பனிகளை துவக்கினார்கள். ஹவாயி, நியூயார்க், சிங்கபூருக்கு எல்லாம் அரசின் சார்பில் இலவச விமானங்கள் பறந்தன. ஒரு நபருக்காக விமானம் சிங்கபூர் போன கதை எல்லாம் உண்டு. போர் அடித்தால் மக்கள் டோக்கியோ போய் காபி குடித்துவிட்டு வருவார்கள்.

ஆளே இல்லாத ஓட்டலில் ஐந்து மில்லியன் டாலர் செலவு செய்து எல்லாம் கலைநிகழ்ச்சிகள் நடத்தினார்கள்.

சுமார் பதினைந்து வருடம் உலகின் ஆடம்பரங்கள் அனைத்திலும் திளைத்து வாழ்ந்தார்கள் மக்கள்.

அதன்பின் திடீர் என ஒருநாள் பாஸ்பேட் தீர்ந்துவிட்டது. கம்பனிகள் விடைபெற்றார்கள்.

அரசின் வருமானம் நின்றது...விமானங்கள் நின்ற நாடுகளில் எல்லாம் கட்டணபாக்கி, சம்பளபாக்கி என விமானங்களை பறிமுதல் செய்தார்கள்.

மக்கள் உழைக்க முடியாதவண்ணம் மிக குண்டாக இருந்தார்கள்...இளையதலைமுறைக்கு விவசாயம், மீன்பிடி என்றால் என்னவென்றே தெரியவில்லை.

பாஸ்பேட் சுரண்டபட்டு மண்ணும் விவசாயத்துக்கு தகுதியற்றதாக மாறிவிட்டிருந்தது

அதன்பின் வாழ்க்கைதரத்தை தக்கவைத்துக்கொள்ள அரசு தன் நாட்டு குடியுரிமையை காசுக்கு விற்றது. கள்ளகடதல்காரர்கள், அல்கொய்தா, மாபியா கும்பல்கள் எல்லாம் நவுரு வங்கியில் பணத்தை போட்டு கருப்பை வெள்ளை ஆக்கினார்கள். கடைசியாக உலகநாடுகள் நவ்ரு மேல் பொருளாதார தடை விதிக்க மக்கள் மறுபடியும் ஏழ்மை நிலைக்கு போனார்கள்.

இன்று உலகின் மிக ஏழ்மை நிரம்பிய, உலகின் மிக குண்டானவர்கள், ஆரோக்கியகுறைவானவ்ர்கள் இருக்கும் நாடாக நவ்ரு ஆகிவிட்டிருக்கிறது

ஆஸ்திரேலிய அரசு கொடுக்கும் நிதியுதவியால் தான் மக்கள் ஒருவேளை சோற்றை உண்கிறார்கள்.

பைனான்சியல் டிசிப்ளின் இல்லையெனில் வீட்டுக்கும் இதே நிலைதான், நாட்டுக்கும் இதே நிலைதான்.

*வந்தபணத்தை கட்டிகாக்க தெரிவது சம்பாதிக்க தெரிவதை விட முக்கியம்...*👍🤩
🤩📚🤩📚🤩📚🤩📚🤩📚🤩📚

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
ஆன்மிக சிந்தனை

பசுவுன் உடலில் எத்தனை தேவர்கள், ரிஷிகள் உள்ளனர் ?

பசுவை ‘கோ மாதா’ என்று சிறப்பித்து அழைக்கின்றன வேதங்களும், புராணங்களும். பசுவை தெய்வமாக வழிபடும் முறை நம்மிடையே இருக்கிறது. பசுவிற்கு உணவளிப்பதே பலவற்றுக்கும் பரிகாரமாக சொல்லப்படுகிறது. பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும், அஷ்ட வசுக்களும், நவக்கிரகங்களும் வீற்றிருந்து ஆட்சி செய்கின்றனர்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

சுட்டீஸ் கிச்சன் லூட்டி
#தீபாவளி_லேகியம் 
#செய்வதெப்படி?
தேவையான பொருள்கள் 
1. சுக்கு               - 50 கிராம் 
2. சித்தரத்தை  - 50 கிராம் 
3. கண்டதிப்பலி  - 25 கிராம் 
4. அரிசி திப்பிலி  - 5 கிராம் 
5. ஓமம்                 - 100 கிராம் 
6. கொத்துமல்லி விதை  - 50 கிராம் 
7. மிளகு                              - 50 கிராம்
8. கிராம்பு                      - 20 கிராம் 
9. ஜாதி பத்திரி             - 10 கிராம் 
10. விரளி மஞ்சள்         * 10 கிராம்
11. வெல்லம்                 - 250 கிராம்
12. நெய்                          - 200 கிராம்
13. தேன்                         - 100 கிராம்
#செய்முறை
ஒரு வாணலியில் மிதமான சூட்டில் சுக்கு, சித்தரத்தை, கண்ட திப்பிலி, அரிசி திப்பிலி, ஓமம், பரங்கி சக்கை, மிளகு, கிராம்பு, விரளி மஞ்சள் முதலியவற்றை தனி தனியே வறுத்து கொள்ளவும்....
வறுத்த பொருட்களை சூட்டினை ஆற வைத்துவிட்டு,  வெல்லத்தை உடைத்து தண்ணீரில் போட்டவும்... ஊறிய வெல்லத்தை கரைத்துவிட்டு மண், குப்பைப் போக சலித்து எடுத்துக் கொள்ளவும்.
முன்னர் வறுத்து எடுத்த எல்லாப் பொருட்களையும்
மிக்சியில் பொடித்துக் கொள்ளவும். 
சற்று அழுத்தமான வாணலியை அடுப்பில் ஏற்றவும்.
கரைத்த வெல்லத்தை அதில் கொட்டிக் கிளறிக்கொண்டு சற்றே இறுகிய நிலையில் பொடி செய்த மருந்து பொருட்களை அதில் பொறுமையாகக் கொட்டி (கட்டித் தட்டிவிடாமல்) ஒன்று சேர்க்கவும். கொஞ்சம் பேரிச்சம் பழத் துண்டுகளையும் சேர்க்கவும். வெல்லமும் பொடியும் ஒன்று சேர்ந்த நிலையில் சிறிது சிறிதாக நல்லெண்ணெய் (இதயம், விவிஎஸ், செக்கு எதுவானாலும்) சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்கும்.
சற்று கடினம் தான் கிளறுவது..
கிளறக் கிளற மருந்து உருண்டு திரண்டு வரும். சட்டுவத்தால் எடுத்து விட்டுப் பார்த்தால் சட்டியிலும் சட்டுவத்திலும் ஒட்டாமல் வந்தவுடன் அடுப்பை நிறுத்திவிட்டு, ஒரு கரண்டி நெய்யை அதன் தலையில் கொட்டி லேசாக மேலும் கீழுமாக பிரட்டவும். ஆறவிடவும். நன்கு ஆறியவுடன் ஒரு சம்படத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இந்த ப்ராசஸ் குறைந்தது ஒருமணி நேரமாகும். மருந்து சாமான்களில் எதையேனும் தீய விட்டுவிட்டாலோ, வறுக்காமல் விட்டுவிட்டாலோ மருந்து மருந்தாக இராது. 😊😊
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

திருமதி நாமகிரி சந்திரசேகர் எழுதிய சிறுவர் கதைப்பகுதியில்:-

@ கதை கதையாம் காரணமாம்-32:- கதையைக் கேட்டு, கதையின் இறுதியில் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் சொல்லி பரிசுகளை வெல்லுங்கள்.

....விமானத்திலிருந்த பயணிகளும், விமானமும் என்னவானது? மீதிக் கதையைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்?????. 

....."எனக்கு நீச்சல் தெரியாது" என்று உரக்க கத்திக்கொண்டிருந்தேன்....... என்னை சுற்றி என்ன நடக்கிறது என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை, என்னுடைய அலறல் சத்தம் கேட்டு....யாரோ என்னை இறுக்கி கட்டிப் பிடித்துக்கொண்டிருப்பதை என்னால் உணரமுடிந்தது.... 

...பள்ளிக்கூடத்தில் முதன் முதலாக ஆகாய விமானத்தில், வானூர்தி வழியாக சுற்றுலா சென்று திரும்பிக்கொண்டிருந்தோம்...ஆகாய விமானத்தில் பயணிப்பது அதுதான் முதல் முறை, முதல் அனுபவம் என்பதால் விமானத்தின் சன்னல் வழியாக வேடிக்கை பார்த்துகொண்டிருந்தேன்...

இன்னும் சற்று நேரத்தில் நாம் சென்று சேரவேண்டிய விமான தளத்தில் தரை இறங்கப் போகிறோம் என்கிற அறிவிப்பு வந்தது. எனக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்த எனது நண்பனும் நானும் சன்னல் வழியே விமானம் கீழ் இறங்கும் காட்சியை பார்க்க மிக ஆவலோடு காத்துக்கொண்டிருந்தோம். எங்கோ வெகு தூரத்தில் கடுகு போன்று காட்சியளித்த கட்டிடங்கள் சிறிது சிறிதாக பெரியதாகிக் கொண்டிருந்தது, விமானம் ஓடு தளத்தை நெருங்கும்போது விமானத்தின் சக்கரங்களில் எதோ பழுது ஏற்ப்பட்டதால்,  விமானத்தை...விமான தளத்தில் தரை இறங்க முடியாமல், அருகில் இருக்கும் கடல் தண்ணீரில் விமானத்தை கீழிறக்கப் போவதாக அவசர அறிவிப்பு வந்தபோது... எனக்கு நீச்சல் தெரியாது என்பது சட்டென்று ஞாபகம் வந்தது... உடனே நான் அலற ஆரம்பித்துவிட்டேன்... எனக்கு  நீச்சல் தெரியாது... எனக்கு நீச்சல் தெரியாது!!!!  

....விமானத்திலிருந்த பயணிகளும், விமானமும் என்னவானது? மீதிக் கதையைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள். 

மிகச் சரியான, பொருத்தமான- மீதிக்கதையை, ஐந்து (5) வரிகளுக்கு மிகாமல் 15-01-2021 தேதிக்கு முன்னதாக எங்களுக்கு வந்து சேருமாறு "vaishalireaderscircle@gmail.com"  மின்னஞ்சலில் அனுப்பவேண்டும். 

சரியான விடையையும், சரியான விடை எழுதியவர்களுக்கான பரிசுகளும் 
அடுத்தமாத மார்கழி மாத சுட்டீஸ் வலைப்பதிவர் இதழில் 

போட்டிக்கான சரியான விடையை (பொருத்தமான கதையை) பலரும் குறிப்பிட்டிருந்தால், பரிசு பெறுபவர்-குலுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார். 
(கதைக் கருத்தாக்கம்-ரேடியோ மார்கோனி கோபாலகிருஷ்ணன்)

சென்ற மாத கதைக்கு பதில் எழுதி அனுப்பியவர்கள்  மொத்தம் =1126 நபர்கள் 
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
@கதை / கட்டுரைப்போட்டி-32:- புகைப்படத்தில் உள்ள படத்தைப் பார்த்து 15-வரிகளுக்கு மிகாமல் பொருத்தமான கதை/கட்டுரை எழுதி அனுப்புங்கள்  சரியான படக்கதை விடை:- அடுத்த மாத இதழில் 


சுட்டீஸ், நாங்கள் தொகுத்து வழங்கிய பதிவுகளில் உள்ள குறை நிறைகளை வாசகர்கள், அன்பான முறையில் எங்களுக்கு எடுத்துக்கூறி, எங்களது பதிவுகள் மேலும் சிறப்படைய வாழ்த்தி உற்சாகப்படுத்துமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இந்தப்பதிவில் கீழுள்ள கருத்துக்கூறும் பகுதியில் பதிவு செய்யவும்.

Friday, October 26, 2018

"சுட்டீஸ்-குல்கந்து" இதழ்=31 ஐப்பசி மாதம், தேதி21-10-2018. "வைஷாலி வாசகர் வட்ட 56வது சந்திப்பு,

"சுட்டீஸ்-குல்கந்து" இதழ்=31 ஐப்பசி  மாதம், தேதி21-10-2018. "வைஷாலி வாசகர் வட்ட 56வது சந்திப்பு,
வைஷாலி வாசகர் வட்ட 56வது மாத சந்திப்பு, 21-10-2018 (Oct-Nov)- ஐப்பசி  மாதம். வீடு அது நம்ம வீடு... நமது வீட்டை சிறப்பாக பராமரிப்பது நமது கடமை... இந்த வருடத்தின் ஒவ்வொரு மாத வாசகர் வட்ட சந்திப்பின்போதும் நமது வீட்டிற்கு உபயோகமான பொருட்களை எப்படி சிறப்பாக நிர்வகித்து பயன்படுத்துவது மற்றும் அந்த பொருட்களின் பராமரிப்பு, மேலும் அவற்றின் சிறு சிறு பழுது நீக்குதல் குறித்த பயிற்சியும் விளக்கங்களும், சிறப்பு விருந்தினர்களின் சிறப்புரை மற்றும் வழிகாட்டுதலும்  :-



வருகை தாருங்கள், தமிழில் சிறுவர்கள் தொகுத்து வழங்கும் வலைப்பதிவர்களின் மாத இதழ், ஒவ்வொரு மாதமும் ஆங்கில மாதத்தின் 3/4-வது ஞாயிறுதோறும் (தமிழ் மாதத்தின் முதல் ஞாயிறு அன்று) இரவு 9 மணியளவில் வெளியாகும் சுட்டீஸ் ரோஜாக்களின் "குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழ்.   http://gulkanthu.blogspot.in/


 

கற்க கசடற….!!                                       !வாய்மையே வெல்லும்!!


 “வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம்
160/Sector-4, Vaishali, Ghaziabad, NCR-New Delhi.-201012
e-mail:  vaishalireaderscircle@gmail.com
___________________________________________________________________
"சுட்டீஸ்-குல்கந்து" இதழ்=31 ஐப்பசி மாதம், தேதி21-10-2018. "வைஷாலி வாசகர் வட்ட 56வது சந்திப்பு,  ஐப்பசி மாதம்வீட்டு உபயோக மின்சாதனப் பொருட்கள் ஆகியவற்றை இயக்குதல், அவற்றின் பராமரிப்பு, மற்றும் சிறு சிறு பழுது நீக்குதல்:--சிறப்பு பயிற்சி கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும். 

வணக்கம், தாங்களின் வருகைக்கு நன்றி, இந்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழில்" -புரட்டாசி மாத வலைப்பதிவு:- இந்த இதழின் ஆசிரியராக, தொகுத்து வழங்குபவர்:- (Editor of the Page) வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ் குழுவினர்கள் இடம் செக்டர்-4, மையப்பூங்கா(Central Park), வைைஷாலி மெட்ரோ இரயில் நிலையம்  அருகில், NCR-New Delhi.


வாசகர் வட்ட சந்திப்பில் நாம் கற்றுக்கொண்ட வீட்டு உபயோக மின்சாதனப் பொருட்கள் பராமரிப்பு, மற்றும் சிறு சிறு பழுது நீக்குதல் குறித்து தெரிந்துகொள்ளும் வரிசையில் வீட்டு உபயோக மின்சாதனப் பொருட்கள் குறித்து, அவைகளை இயக்குதல், அவற்றின் பராமரிப்பு, மற்றும் சிறு சிறு பழுது நீக்குதல் குறித்து தெரிந்துகொள்ளும்  பயிற்சி சந்திப்பு மற்றும் வாசகர் வட்ட நிகழ்ச்சிகளும் கொண்டாட்டங்களும்.

வைஷாலி வாசகர் வட்ட 56வது சந்திப்பு, 
ஹலோ சுட்டீஸ் ஒவ்வொரு மாத வாசகர்வட்ட நிகழ்ச்சியிலும் இந்த வருடம் (2018-19)முழுவதும் நாம் பெறப்போகும் பயிற்சிகள்... வீட்டு உபயோக மின்சாதனப் பொருட்கள் ஆகியவற்றை இயக்குதல், அவற்றின் பராமரிப்பு, மற்றும் சிறு சிறு பழுது நீக்குதல் குறித்து அறிந்துகொள்ளலாம். 

அந்த வகையில் 21-10-2018, ஆங்கில மாதத்தின் 3வது ஞாயிறு அன்றய 56வது (தமிழ்-ஐப்பசி மாத) வாசகர் வட்ட சந்திப்பில் சிறப்பு விருந்தினர்களாக புது தில்லி சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞ்சர் திரு ஜே.பி ரவி அவர்கள் கலந்துகொண்டு புலவர் வைரமுத்து கவிதைகளை பாடிக்காட்டி நிகழ்ச்சியை சிறப்பு செய்தார்.  

நமது வைஷாலி சுடீஸ் வாசகர் வட்டத்தின் உறுப்பினர் இந்திராபுரம் திரு ரமேஷ் பாபு அவர்கள் குழந்தைகளுக்கு பல நீதிக்கதைகளையும் மேலும் பல அறிவியல் விவரங்களையும் எடுத்துக்கூறி சட்டீஸ்களுக்கு பரிசுப்பொருட்களை வழங்கி  நிகழ்ச்சிக்கும் மேலும் சிறப்பு சேர்த்தது.

ஞாயிறு அன்றய 56வது (தமிழ்-ஐப்பசி மாத) வாசகர் வட்ட சந்திப்பில் நாம் கற்றுக்கொண்ட வீட்டு உபயோக மின்சாதனப் பொருட்கள் பராமரிப்பு, மற்றும் சிறு சிறு பழுது நீக்குதல் குறித்து தெரிந்துகொள்ளும் வரிசையில் வீட்டு உபயோக மின்சாதனப் பொருட்கள் குறித்து, அவைகளை இயக்குதல், அவற்றின் பராமரிப்பு, மற்றும் சிறு சிறு பழுது நீக்குதல் குறித்து தெரிந்துகொள்ளும்  பயிற்சி சந்திப்பு மற்றும் வாசகர் வட்ட நிகழ்ச்சிகளும் கொண்டாட்டங்களும் வெகு சிறப்பாக நடந்தேறியது .

இந்த மாதம் நாம் தெரிந்துகொண்டது, மின்சாரமும், மின்சார இணைப்புகள் மற்றும் அவற்றை சரியாக பராமரிப்பது போன்ற பல்வேறு விவரங்கள் தெரிந்துகொள்ளலாம்.   


உங்கள் கனவு இல்லத்துக்கு விளக்கேற்ற மின் இணைப்பு அவசியம் இல்லையா? அது மட்டுமில்லை. இன்றைக்குப் பலவிதமான நம் அன்றாடப் பணிகளும் மின்சாதனப் பொருள்களைச் சார்ந்தே இருக்கின்றன.



மின் சக்தி இன்றி இந்த நவீன உலகம் சாத்தியமில்லை. சரி, இந்த மின் இணைப்பை எப்படிப் பெற வேண்டும் என்பதற்குச் சில வழிமுறைகள் இருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் மின்சாரம், மின்னோட்டம்,  மின்சார இணைப்புகள் போன்ற பலவிவரங்களை தெரிந்துகொள்ளும்  வாசகர் வட்ட கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும்.  மாலை 4.00pm மணியிலிருந்து, வழக்கமான இடம்:- வைஷாலி செக்டர்-4, மையப்பூங்கா, வைஷாலி மெட்ரோ ரயில்நிலையம் அருகில், NCR-New Delhi. சிறப்பாக நடந்தேறியது.

வழக்கம்போல இந்த மாதமும் பல சிறப்பு கதை கட்டுரை கவிதை உடற்பயிற்சி மற்றும் பொது அறிவுப் புத்தகங்கள் வாசக வாட்டத்தினார்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டார்கள்.  

சுட்டீஸ் குழந்தைகளுடன் அவர்களுக்கு தெரிந்த நீதி கதைகளையும், திருக்குறள், மற்றும் ஆத்திச்சூடி போன்றவற்றை கூறி, அவர்கள் செய்த கைவேலைப்பாடு பொருட்களை காட்சிப்படுத்தி நிகழ்ச்சியை மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள்.




மேலும் தமிழில் சிறுவர்கள் தொகுத்து வழங்கும் வலைப்பதிவர்களின் மாத இதழ்,  சுட்டீஸ் ரோஜாக்களின் "குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழ்.  http://gulkanthu.blogspot.in/
வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :- 
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து, 
தொடர்ந்து  எங்கள் வீட்டு "நூலகம் " 
படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும் 
(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம் / செல்லப் பிராணிகள் வளர்ப்போம் )

@இந்த மாதம் நமது வாசகர்வட்டத்தின் தமிழ் வகுப்புக்கு புதியவர்கள்:-
@10-பத்துபேர்கள் கொண்ட முதல் குழு தமிழை முழுமையாக எழுத படிக்க தெரிந்துகொண்டதோடு தமிழக அரசின் அடிப்படை தமிழ் தேர்வினை எழுத தயாராக இருக்கிறார்கள் 

@மேலும் 9-ஒன்பது புதியவர்கள் தமிழ் எழுத படிக்க கற்றுவருகிறார்கள்.


@இந்த மாதம் மேலும் மூன்று மாணவர்கள் புதியதாக தமிழி கற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்கள் விரைவில் அவர்களும் தமிழி வகுப்பில் சேர இருக்கிறார்கள்.
======================================

@ சுட்டீஸ் கதைகள்:-

இந்தமாதம் இரண்டு சுட்டீஸ்கள் வாசகர் வட்ட நிகழ்ச்சியில் தங்களது கதை சொல்லும் திறமையை வெளிப்படுத்தினார்கள்.

மேலும் இந்த மாத சுட்டீஸ் வலைப்பதிவிற்கான கதைப்பகுதி சரியான நேரத்தில் வந்து சேராததால், அடுத்தமாத இதழில் இடம்பெறும்.

வழக்கம்போல இந்த மாதமும் பல சிறப்பு கதை கட்டுரை கவிதை உடற்பயிற்சி மற்றும் பொது அறிவுப் புத்தகங்கள் வாசக வாட்டத்தினார்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டார்கள்.  



==========================================

@விளம்பரம்:- "இந்தப்பகுதியை உங்களுக்கு வழங்குபவர்கள்":-  

@விளம்பரம்:- "இந்தப்பகுதியை உங்களுக்கு வழங்குபவர்கள்":-  

====================================


"மனோன்மணீயம்" நமக்களித்த "தமிழ் தாய் வாழ்த்து":-
"நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்,
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்,
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற,

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் 

தமிழணங்கே!  தமிழணங்கே! .....

உன் சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து 

வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!"



இந்த வாழ்த்துப்பாடலை இயற்றியவர் திரு.பெ. சுந்தரம் பிள்ளை (அவர் வாழ்ந்த காலம் "ஏப்ரல் 4, 1855 - ஏப்ரல் 26, 1897") 



அவர் எழுதிய "மனோன்மணீயம்" என்ற புகழ்பெற்ற நாடக நூலில் இடம்பெற்றிருக்கும் தமிழ் தாய் வாழ்த்துப்பாடல் இது. 

இந்த மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த என்று ஆரம்பமாகும் பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது.

தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலின் கருத்து:- 
அலை கடலே ஆடையான இந்த அழகான பூமிப் பெண்ணிற்கு, பாரத நாடே முகமாம், தென்திசை அதன் நெற்றியாம், அதில் திலகமென திகழ்வது திராவிட திருநாடாம், அந்தத் திலகத்தின் வாசனைப் போல்அனைத்து உலகமும் இன்பம் காண எல்லா திசையிலும் புகழ் மணக்க இருக்கும் தெய்வமகள் ஆகிய தமிழே, என்றென்றும் இளமையாக இருக்கிற உன்னுடைய இந்த அழகைக் கண்டு வியந்து, செய்யும் செயலையும் மறந்து, வாழ்த்துகிறோம்! வாழ்த்துகிறோம்! வாழ்த்துகிறோம்!.....
நன்றிகளுடன் "வைஷாலி வாசகர் வட்டம்". 


==========================
வாழ்வின் அர்த்தம்!!!! (சுட்டீஸ் கருத்துக்கதை- ஆணியே பிடுங்க வேண்டாம்):-

 ஒரு பெரிய மைதானம்.

அங்கே மூன்று சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள் !

அந்த வழியாகச் சென்ற ஒரு சாமியார் அவர்களைக் கவனித்தார். குழந்தைகள் உற்சாகமாகச் சிரித்து விளையாடுவதைச் சிறிது நேரம் ரசித்தார். அதன்பிறகு அவர் மெல்லமாகக் கைதட்டி அவர்களை அழைத்தார்.

பையன்கள் சாமியாரை மேலும் கீழும் பார்த்தார்கள். 

அவருடைய விநோதமான உடை அலங்காரமும் ஜடாமுடியும் அவர்களுக்குச் சிரிப்பு மூட்டியது.

சாமியார் அவர்களைக் கேட்டார். "கண்ணுங்களா, நீங்க எப்பவும் இந்த மைதானத்திலதான் விளையாடுவீங்களா?"

"ஆமா சாமி!"

"எதுக்காக தினமும் விளையாடறீங்க? அதனால உங்களுக்கு என்ன பலன்?"

முதல் பையன் சொன்னான். "நல்லா விளையாடினா உடம்பு பலமாகும். அதுக்கப்புறம் நாம யாரையும் பார்த்துப் பயப்பட வேண்டியதில்லை. எதிர்த்து வர்றவங்களையெல்லாம் ஊதித் தள்ளிடலாம்!"

இந்த பதிலைக் கேட்டுச் சாமியாருக்கு மிகவும் மகிழ்ச்சி. "நீ பெரிய பயில்வானா வருவே"என்று அவனை ஆசிர்வதித்தார். 

அதன்பிறகு இரண்டாவது பையனின் பக்கம் திரும்பினார். "நீ ஏம்பா தினமும் விளையாடறே?"

"ஜாலியா விளையாடினாத்தான் மனசுக்கு ரிலாக்ஸா இருக்கும். அதுக்கப்புறம் முகத்தைக் கழுவிக்கிட்டு உட்கார்ந்து படிச்சா எல்லாம் சட்டுன்னு புத்தியில ஏறும்!"

"பிரமாதம் !  நீ பெரிய படிப்பாளியா வருவே" என்று இரண்டாவது பையனை ஆசிர்வதித்தார் ! 

பிறகு மூன்றாவது பையனையும் அதே கேள்வியைக் கேட்டார். ‘நீ ஏன்ப்பா தினமும் விளையாடறே?’

அவன் சுருக்கமாகப் பதில் சொன்னான். "எனக்கு விளையாடப் பிடிக்கும். அதான் விளையாடறேன்!"

சாமியார் அவனை வணங்கினார். "இனிமே நீதான் என்னோட குரு!"

ஒவ்வொன்றுக்கும் காரணம், பின்விளைவுகள், லாப நஷ்டங்கள் எல்லாம் யோசித்துக் குழம்பிக் கொண்டிருக்காமல் அந்தக் கணத்தைச் சொட்டு மிச்சம் வைக்காமல் அனுபவியுங்கள் ! அதுவே வாழ்வின் அர்த்தம் !!
===========================

@. புதிய எட்டு வித்தியாச புதிர் போட்டி :- சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்"..... ஐப்பசி-மாத-படத்தில் உள்ள (8) எட்டு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் -வலைப்பதிவு இதழ் போட்டி என்-31.

சரியான விடை அடுத்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" http://gulkanthu.blogspot.in/வலைப்பதிவர் இதழில் வெளியாகும். 

போட்டியில் பங்குகொள்ள விருப்பமுடையவர்கள் விடைகளை "vaishalireaderscircle@gmail.com" என்கிற மினஞ்சல் முகவரிக்கு 15-11-2018 முன்பாக அனுப்பிவைக்கவேண்டும். சரியான விடை எழுதிய அனைவருக்கும் அடுத்தமாத வாசகர் வட்ட சந்திப்பில் பரிசுகள் வழங்கப்படும்.

சென்ற மாத "சுட்டீஸ் குல்கந்து" வலைப்பதிவர் இதழ்-30 புரட்டாசி மாத-படத்தில் உள்ள (8) எட்டு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் -வலைப்பதிவு இதழ் போட்டி என்-30.போட்டிக்கான  சரியான  விடை,

போட்டி என்-30 .விடை:-1).இடம்வலமாக படம் திரும்பியுள்ளது, 2) வீட்டின் மெது உட்க்கார்ந்திருக்கும் பறவை, 3) பறக்கும் பறவை, 4)குளிரூட்டு பேட்டி, 5)மரத்தின் அடிப்பகுதி, 6) அறிவிப்பு பலகை, 7) மரத்தின் விழுதுகள் 8) மரத்தின் கீழை இருக்கும் பொருட்கள் மாறுபட்டுள்ளது.

சென்ற மாத எட்டு-வித்தியாசங்கள் வலைப்பதிவர் இதழ்-30 போட்டிக்கான சரியான விடையை 102 நபர்கள்/போட்டியாளர்கள் எழுதி போட்டியில் கலந்துகொண்டனர். வாட்ஸ் ஆப், முகநூல், மற்றும் குறுஞ்செய்தி, தொலைப்பேசி மேலும் மின்னஞ்சல் மூலம் நிறைய போட்டிக்கான விடைகள் அனுப்பிவைத்தார்கள் வாசகர் வட்டத்தை சேர்ந்தவர்களும் அவர்களின் நண்பர்கள் மற்றும் வலைப்பதிவை படிப்பவர்களும் மற்றவர்களும் என சரியான விடையை 72 நபர்கள் மட்டுமே குறிப்பிட்டிருந்தனர், தமிழில் விடை எழுதியவர்கள்=35, ஆங்கிலத் தமிழில் எழுதியவர்கள்=15, ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=22, ஹிந்தி மொழியில்=0 நபர்களும், பிற மொழியில்(Kerala)=00, (Telugu)=0, நபரும், 30-மேற்பட்ட மேலும் சிலர் எட்டுக்கும் அதிகமான தவறான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.
=============================================

@விளம்பரம்:- "இந்தப்பகுதியை உங்களுக்கு வழங்குபவர்கள்":-  




==============================================

சித்திரமும் கைப்பழக்கம் பகுதியில்:-

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்  நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்கொடையும் பிறவிக் குணம். – வெண்பா 7


விளக்கம்:
பழகப்பழக பழக்கம் வந்துவிடும். ஆனால் பிறவிக்குணத்தை மாற்ற முடியாது. வரைய வரையச் சித்திரமும் கைப்பழக்கம் ஆகிவிடும். பேசப் பேசச் செந்தமிழும் பழக்கமாகிவிடும். திரும்பத் திரும்ப நினைத்தால் கற்றது மனத்தில் பதிந்துவிடும். நல்லொழுக்கத்தைத் திரும்பத் திரும்பக் கடைப்பிடித்தால் அதுவும் பழக்கமாகிவிடும். ஆனால், நல்லவர் நட்பு, இரக்கக் குணம், கொடைப் பண்பு ஆகியவை பிறவியிலேயே பதிந்திருந்தால்தான் வரும்.
  
@சுட்டீஸ் குழுவினர்கள் கைவண்ணம்:- (ஓவியம்)
(நான் வரைந்த ஓவியம் / எனக்குப் பிடித்த ஓவியம்)
சுட்டீஸ்களின் கைவண்ணத்தில் உருவான இந்த மாத ஓவியங்கள் :-





















======================================
முருங்கை நோய்களை விரட்டும் என்பது கிராமத்துப் பழமொழி. நவீன மருத்துவமும் அதையே சொல்கிறது.

அளவில் சிறிய குட்டிக்குட்டி முருங்கைக்கீரையில் மனித உடலுக்கு அவசியமான அத்தனை சத்துகளும் அடங்கியிருப்பதாக அனுபவ பூர்வமாக நிரூபித்துள்ளார்கள். கீரைகளில் மரத்தில் முளைக்கும் ஒரே கீரை. முருங்கைக் கீரைதான்.

மற்ற கீரைகள் எல்லாம் தரையில் வளரக்கூடியவை. அவை வளரும் சூழல் எப்படி இருக்குமோ என்கிற எண்ணத்தில் அந்தக் கீரைகளை பலமுறை சுத்தப்படுத்திய பிறகே சமைக்க வேண்டும்.

ஆனால், முருங்கைக்கீரை மரத்தில் வளர்வதால், அந்தப் பிரச்னை இல்லை. ஒரு மழை பெய்த உடனேயே எடுத்து ஒருமுறை அலசி, அப்படியே சமையல் செய்ய வேண்டியது தான்.

வருடத்தின் எல்லா நாட்களிலும் நமது கைக்கு எட்டிய தூரத்தில் கிடைக்கக்கூடிய முருங்கைக்கீரையை🥗 வாரத்தில் மூன்றே நாட்கள் நாட்கள் சமைத்து சாப்பிட்டுப் பாருங்கள்..வாழ்க்கை முழுக்க ஆஸ்பத்திரிக்கு போக வேண்டிய அவசியமே வராது.

முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை.

முருங்கைக்கீரையின் சாறு ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத் தணிக்கவும் வல்லதாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை. சோயாவில்தான் அதிகபட்ச புரதம் கிடைக்கும் எனச் சொல்லி வந்த உணவு ஆய்வாளர்கள் இப்போது முருங்கையை புரதச்சத்துக் குறைபாடுகளுக்குப் பரிந்துரைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

மனிதர்களுக்குத்‍‍‍🏻 தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக்கீரையில் உள்ளது.

மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும். அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை.

ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்துப் போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும்.

குழந்தையின்மைப் பிரச்னைக்கு முருங்கைக்கீரை மட்டுமின்றி, முருங்கைப்பூவும் மருந்தாகப் பரிந்துரைக்கப்படுத்த வேண்டும். நரம்புகளுக்கு அதிக வலு கொடுக்கும்.

முருங்கைக்கீரையில் தயிரில் இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் ‘சி’ கிடைக்கிறது.

வாழைப்பழத்தில் உள்ளதைவிட 3 மடங்கு அதிக பொட்டாசியமும், கேரட்டில் உள்ளதைப் போல 4 மடங்கு அதிக வைட்டமின் ஏவும், பாலில் உள்ளதைவிட 4 மடங்கு அதிக கால்சியமும் உள்ளனவாம்.

மற்ற கீரைகளைப் போல அல்லாமல் காய்ந்த முருங்கை இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருப்பதுதான் இதன் இன்னொரு மகத்துவம்.


======================================
இந்தப் படத்தைப் பாருங்கள். இது என்னுடைய  மொட்டைமாடித்  தோட்டத்தின்  ஒரு  சிறு  அங்கம். 

கொட்டாங்கச்சியில் வெந்தயக்கீரை. 

எப்படிச் செய்தேன் என்று சுருக்கமாகக் கூறுகின்றேன். 

முதலில்,  ஒரு   டீஸ்பூன் வெந்தயத்தை, சிறிய  கோப்பையில்  தண்ணீர் விட்டு, அதில் இருபத்துநான்கு  மணி நேரம்  ஊறவிட்டேன்.  

தேங்காயை உடைத்து, குடுமிப்பக்கம்  உள்ள  கொட்டாங்கச்சியில், குடுமியைப் பிய்த்து  எடுத்தபின், (தேங்காயையும் துருவி  எடுத்தபின் தான்  ) அதில்  சுலபமாக ஓட்டை போட அல்லது ஓட்டையுடன் இருப்பதை நீங்க பார்க்கலாம்.                                                        

இந்தக் கொட்டாங்கச்சியில், முக்கால் பகுதிக்கு, சிறிதளவு கோகோ பீட் நிரப்பினேன். 

அது என்ன கோகோ பீட்? (நன்றி : இளங்கோவன் ரங்கராஜன்)  

 தென்னை மரத்திலிருந்து உருவாக்கப்பட்ட  பொருள். செங்கல் வடிவில் கிடைக்கிறது. அதில் கொஞ்சம் வெட்டி, தண்ணீரில் ஊறப்போட்டால்,  சில மணி நேரங்களில் (ஊறப்போடும்  அளவைப்  பொருத்தது. நான்  முழு  செங்கல்லையும்  ஒரு  பாக்கெட்டில்  ஊறப்போட்டதால், ஒன்றரை  நாட்கள் ஆயிற்று!)  பொலபொல வென நார் வடிவில், ஒரு பொருள் கிடைக்கும். (ஒரு கொட்டாங்கச்சுக்கு, பத்து  கிராம் அல்லது  இருபது  கிராம்  கோகோ   பீட் போதும் என்று நினைக்கின்றேன்.)

 கொட்டாங்கச்சுவில், முக்கால் பகுதி  ஊறிய  கோகோ பீட்  போட்டேன்  அல்லவா? 

அதன்  மீது  போட, ஒரு கைப்பிடி அளவு வெர்மிகம்போஸ்ட்  எடுத்துக்கொண்டு, அதனோடு (இருபத்துநான்கு மணிநேரம் ) ஊறிய அரை ஸ்பூன்  வெந்தயத்தைக் கலந்துகொண்டு, கோகோ பீட்  லேயர் மீது  தூவினேன். 

அப்புறம், காலை & மாலை  இருவேளைகளிலும்  லேசாக  தண்ணீர் தெளித்து வந்தேன். 

பத்து நாட்களுக்குள், படத்தில்  காணும்  வெந்தயக்கீரை தயார்!  

 சந்தேகங்கள் எதுவும் இருந்தால், கேளுங்க. பதிலுகிறேன். 
======================================.















































சுட்டீஸ், நாங்கள் தொகுத்து வழங்கிய பதிவுகளில் உள்ள குறை நிறைகளை வாசகர்கள், அன்பான முறையில் எங்களுக்கு எடுத்துக்கூறி, எங்களது பதிவுகள் மேலும் சிறப்படைய வாழ்த்தி உற்சாகப்படுத்துமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இந்தப்பதிவில் கீழுள்ள கருத்துக்கூறும் பகுதியில் பதிவு செய்யவும்.