சுட்டீஸ் இதழ்=32 கார்த்திகை மாதம் வைஷாலி வாசகர் வட்டம் 22-11-2020.
புதிய எட்டு வித்தியாச புதிர் போட்டி :- சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்"..... மாசி-மாத-படத்தில் உள்ள (8) எட்டு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் -வலைப்பதிவு இதழ் போட்டி என்-32.
சரியான விடை அடுத்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" http://gulkanthu.blogspot.in/வலைப்பதிவர் இதழில் வெளியாகும். போட்டியில் பங்குகொள்ள விருப்பமுடையவர்கள் விடைகளை "vaishalireaderscircle@gmail.com" என்கிற மினஞ்சல் முகவரிக்கு 15-12-2020 முன்பாக அனுப்பிவைக்கவேண்டும். சரியான விடை எழுதிய அனைவருக்கும் அடுத்தமாத வாசகர் வட்ட சந்திப்பில் பரிசுகள் வழங்கப்படும்.
$ சென்ற மாத "சுட்டீஸ் குல்கந்து" வலைப்பதிவர் இதழ்31 அக்டொபர்-2016-ஐப்பசி-மாத வலைப்பதிவு இதழ் போட்டி என்-. ஆறு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடை,
இதழ்-31 போட்டிக்கான சரியான விடையை 122 நபர்கள்/போட்டியாளர்கள் எழுதி போட்டியில் கலந்துகொண்டனர். வாட்ஸ் ஆப், முகநூல், மற்றும் குறுஞ்செய்தி, தொலைப்பேசி மேலும் மின்னஞ்சல் மூலம் நிறைய போட்டிக்கான விடைகள் அனுப்பிவைத்தார்கள் வாசகர் வட்டத்தை சேர்ந்தவர்களும் அவர்களின் நண்பர்கள் மற்றும் வலைப்பதிவை படிப்பவர்களும் மற்றவர்களும் என சரியான விடையை 92 நபர்கள் மட்டுமே குறிப்பிட்டிருந்தனர், தமிழில் விடை எழுதியவர்கள்=55, ஆங்கிலத் தமிழில் எழுதியவர்கள்=15, ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=22, ஹிந்தி மொழியில்=0 நபர்களும், பிற மொழியில்(Kerala)=00, (Telugu)=0, நபரும், 32-மேற்பட்ட மேலும் சிலர் எட்டுக்கும் அதிகமான தவறான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.@சுட்டீஸ்களின் கைவண்ணமும், கால்வண்ணமும்:-
@சுட்டீஸ் குழுவினர்கள் கைவண்ணம்:- (ஓவியம்)
(நான் வரைந்த ஓவியம் / எனக்குப் பிடித்த ஓவியம்)
சுட்டீஸ்களின் கைவண்ணத்தில் உருவான இந்த மாத ஓவியங்கள் :-
Name : D. Yashiv Aadithya
Age : 5yrs
Place : puducherry
Thanks & Regards,
Anandavalli
(Mother)
2.வைஷ்ணவி
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
Dear editor
Well and best wishes for your excellent opening of " vaishali".
I am sending here with some lyrics (kavithai for children )
Kindly consider for your publish
Thanking you
Yours sincerely
S.Navsneethagiri
Devakottai
Cell
9994740166
****************************** **
"கொய்யா மரத்தில்
ஒரு குரங்கு"
**********************
சுப.நவநீதகிரி
தேவகோட்டை
******************************
. கொய்யா மரத்தில் ஒரு குரங்கு
கும்மாளம் தான் போடுது
பையா நீயும் ஓடிவந்து
பார்த்துவிட்டுச் செல்லடா
கையால் கிளையில் தாவுது
காலால் கருணம் போடுது
ஒய்யாரமாய் ஆடுது உடனே வந்து பாரடா
அச்சமின்றி ஆடியே அனைவரையும் கவர்ந்தது
பச்சைப்புல்லில் ஆடியே பசியைக் கூட மறந்தது
இச்சையோடு ஆடும்போது இரக்கமற்ற பிறவியாய்
பிச்சை எடுக்கும் மனிதனே
பிடித்து இழுத்துச் சென்றிட்டான்
மிருகங்களின் சுதந்திரம்
மீண்டும் வந்து சேருமோ
பருக நீரை கொடுக்கவும்
பாசத்தோடு அணைக்கவும்
உருகுமுள்ளம் கொண்டு நீ
உலகில் வாழ வேண்டுமே
தருக தருக சுதந்திரம்
தரணியிலே யாருக்கும்..
S.Navsneethagiri
Devakottai
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
✅🤩🤩🤩🤩🤩✅
*சுட்டீஸ்-சரித்திரம் முக்கியம் பகுதியில்*
*🤫️நவுறு..🤩நவுரு️🤫*
*"நவுரு"-ஆஸ்திரேலியாவுக்கு அருகே உள்ள குட்டி தீவு நாடு. ஜனத்தொகை 10,000 மட்டுமே. தீவின் நீளம் ஐந்து கிமி, அகலம் மூன்று கிமி. 30 நிமிடத்தில் சுற்றிவரக்கூடிய நாடு..*
மீன்பிடித்தல், விவசாயம் என மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த நாட்டுக்கு லாட்டரி அடித்தது..
ஆம்...தீவில் லட்சகணக்கான ஆண்டுகளாக பறவைகள் எச்சமிட்டு அவை முழுக்க பாஸ்பேட் எனும் தாதுவாக மாறியிருந்தன. பாஸ்பேட் சர்வதேச சந்தையில் ஏராளமான விலைக்கு போகும் பொருள். தீவில் கணக்கு,வழக்கற்ற எண்ணிக்கையில் பாஸ்பேட் இருந்தது.
அதன்பின் பன்னாட்டு கம்பனிகள் வந்து இறங்கின. பாஸ்பேட்டை வெட்டி எடுத்தன. அரசுக்கு ஏராளமான வருமானம் வந்தது.
ஒரு கட்டத்தில் 10,000 பேர் மட்டுமே உள்ள நாட்டின் அரசிடம் 170 கோடி டாலர்கள் இருந்தன. கணக்குபோட்டால் நபர் ஒருவருக்கு ஒன்றரை லட்சம் டாலர். அதாவது நால்வர் அடங்கிய குடும்பத்துக்கு தலா 1 கோடி ரூபாய்களை அரசால் கொடுத்திருக்கமுடியும்.
அந்த பணத்தை என்ன செய்தார்கள்?
எல்லாருக்கும் இலவசமாக உணவு, டிவி, எலெக்ட்ரானிக்ஸ் என வாங்கிகொடுத்தார்கள். அரசின் சார்பில் விமான கம்பனிகளை துவக்கினார்கள். ஹவாயி, நியூயார்க், சிங்கபூருக்கு எல்லாம் அரசின் சார்பில் இலவச விமானங்கள் பறந்தன. ஒரு நபருக்காக விமானம் சிங்கபூர் போன கதை எல்லாம் உண்டு. போர் அடித்தால் மக்கள் டோக்கியோ போய் காபி குடித்துவிட்டு வருவார்கள்.
ஆளே இல்லாத ஓட்டலில் ஐந்து மில்லியன் டாலர் செலவு செய்து எல்லாம் கலைநிகழ்ச்சிகள் நடத்தினார்கள்.
சுமார் பதினைந்து வருடம் உலகின் ஆடம்பரங்கள் அனைத்திலும் திளைத்து வாழ்ந்தார்கள் மக்கள்.
அதன்பின் திடீர் என ஒருநாள் பாஸ்பேட் தீர்ந்துவிட்டது. கம்பனிகள் விடைபெற்றார்கள்.
அரசின் வருமானம் நின்றது...விமானங்கள் நின்ற நாடுகளில் எல்லாம் கட்டணபாக்கி, சம்பளபாக்கி என விமானங்களை பறிமுதல் செய்தார்கள்.
மக்கள் உழைக்க முடியாதவண்ணம் மிக குண்டாக இருந்தார்கள்...இளையதலைமுறைக்கு விவசாயம், மீன்பிடி என்றால் என்னவென்றே தெரியவில்லை.
பாஸ்பேட் சுரண்டபட்டு மண்ணும் விவசாயத்துக்கு தகுதியற்றதாக மாறிவிட்டிருந்தது
அதன்பின் வாழ்க்கைதரத்தை தக்கவைத்துக்கொள்ள அரசு தன் நாட்டு குடியுரிமையை காசுக்கு விற்றது. கள்ளகடதல்காரர்கள், அல்கொய்தா, மாபியா கும்பல்கள் எல்லாம் நவுரு வங்கியில் பணத்தை போட்டு கருப்பை வெள்ளை ஆக்கினார்கள். கடைசியாக உலகநாடுகள் நவ்ரு மேல் பொருளாதார தடை விதிக்க மக்கள் மறுபடியும் ஏழ்மை நிலைக்கு போனார்கள்.
இன்று உலகின் மிக ஏழ்மை நிரம்பிய, உலகின் மிக குண்டானவர்கள், ஆரோக்கியகுறைவானவ்ர்கள் இருக்கும் நாடாக நவ்ரு ஆகிவிட்டிருக்கிறது
ஆஸ்திரேலிய அரசு கொடுக்கும் நிதியுதவியால் தான் மக்கள் ஒருவேளை சோற்றை உண்கிறார்கள்.
பைனான்சியல் டிசிப்ளின் இல்லையெனில் வீட்டுக்கும் இதே நிலைதான், நாட்டுக்கும் இதே நிலைதான்.
*வந்தபணத்தை கட்டிகாக்க தெரிவது சம்பாதிக்க தெரிவதை விட முக்கியம்...*🤩
🤩🤩🤩🤩🤩🤩
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
ஆன்மிக சிந்தனை
பசுவுன் உடலில் எத்தனை தேவர்கள், ரிஷிகள் உள்ளனர் ?
பசுவை ‘கோ மாதா’ என்று சிறப்பித்து அழைக்கின்றன வேதங்களும், புராணங்களும். பசுவை தெய்வமாக வழிபடும் முறை நம்மிடையே இருக்கிறது. பசுவிற்கு உணவளிப்பதே பலவற்றுக்கும் பரிகாரமாக சொல்லப்படுகிறது. பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும், அஷ்ட வசுக்களும், நவக்கிரகங்களும் வீற்றிருந்து ஆட்சி செய்கின்றனர்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
சுட்டீஸ் கிச்சன் லூட்டி
#தீபாவளி_லேகியம்
#செய்வதெப்படி?
தேவையான பொருள்கள்
1. சுக்கு - 50 கிராம்
2. சித்தரத்தை - 50 கிராம்
3. கண்டதிப்பலி - 25 கிராம்
4. அரிசி திப்பிலி - 5 கிராம்
5. ஓமம் - 100 கிராம்
6. கொத்துமல்லி விதை - 50 கிராம்
7. மிளகு - 50 கிராம்
8. கிராம்பு - 20 கிராம்
9. ஜாதி பத்திரி - 10 கிராம்
10. விரளி மஞ்சள் * 10 கிராம்
11. வெல்லம் - 250 கிராம்
12. நெய் - 200 கிராம்
13. தேன் - 100 கிராம்
#செய்முறை
ஒரு வாணலியில் மிதமான சூட்டில் சுக்கு, சித்தரத்தை, கண்ட திப்பிலி, அரிசி திப்பிலி, ஓமம், பரங்கி சக்கை, மிளகு, கிராம்பு, விரளி மஞ்சள் முதலியவற்றை தனி தனியே வறுத்து கொள்ளவும்....
வறுத்த பொருட்களை சூட்டினை ஆற வைத்துவிட்டு, வெல்லத்தை உடைத்து தண்ணீரில் போட்டவும்... ஊறிய வெல்லத்தை கரைத்துவிட்டு மண், குப்பைப் போக சலித்து எடுத்துக் கொள்ளவும்.
முன்னர் வறுத்து எடுத்த எல்லாப் பொருட்களையும்
மிக்சியில் பொடித்துக் கொள்ளவும்.
சற்று அழுத்தமான வாணலியை அடுப்பில் ஏற்றவும்.
கரைத்த வெல்லத்தை அதில் கொட்டிக் கிளறிக்கொண்டு சற்றே இறுகிய நிலையில் பொடி செய்த மருந்து பொருட்களை அதில் பொறுமையாகக் கொட்டி (கட்டித் தட்டிவிடாமல்) ஒன்று சேர்க்கவும். கொஞ்சம் பேரிச்சம் பழத் துண்டுகளையும் சேர்க்கவும். வெல்லமும் பொடியும் ஒன்று சேர்ந்த நிலையில் சிறிது சிறிதாக நல்லெண்ணெய் (இதயம், விவிஎஸ், செக்கு எதுவானாலும்) சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்கும்.
சற்று கடினம் தான் கிளறுவது..
கிளறக் கிளற மருந்து உருண்டு திரண்டு வரும். சட்டுவத்தால் எடுத்து விட்டுப் பார்த்தால் சட்டியிலும் சட்டுவத்திலும் ஒட்டாமல் வந்தவுடன் அடுப்பை நிறுத்திவிட்டு, ஒரு கரண்டி நெய்யை அதன் தலையில் கொட்டி லேசாக மேலும் கீழுமாக பிரட்டவும். ஆறவிடவும். நன்கு ஆறியவுடன் ஒரு சம்படத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இந்த ப்ராசஸ் குறைந்தது ஒருமணி நேரமாகும். மருந்து சாமான்களில் எதையேனும் தீய விட்டுவிட்டாலோ, வறுக்காமல் விட்டுவிட்டாலோ மருந்து மருந்தாக இராது.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
திருமதி நாமகிரி சந்திரசேகர் எழுதிய சிறுவர் கதைப்பகுதியில்:-
@ கதை கதையாம் காரணமாம்-32:- கதையைக் கேட்டு, கதையின் இறுதியில் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் சொல்லி பரிசுகளை வெல்லுங்கள்.
....விமானத்திலிருந்த பயணிகளும், விமானமும் என்னவானது? மீதிக் கதையைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்?????.
....."எனக்கு நீச்சல் தெரியாது" என்று உரக்க கத்திக்கொண்டிருந்தேன்....... என்னை சுற்றி என்ன நடக்கிறது என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை, என்னுடைய அலறல் சத்தம் கேட்டு....யாரோ என்னை இறுக்கி கட்டிப் பிடித்துக்கொண்டிருப்பதை என்னால் உணரமுடிந்தது....
...பள்ளிக்கூடத்தில் முதன் முதலாக ஆகாய விமானத்தில், வானூர்தி வழியாக சுற்றுலா சென்று திரும்பிக்கொண்டிருந்தோம்...ஆகாய விமானத்தில் பயணிப்பது அதுதான் முதல் முறை, முதல் அனுபவம் என்பதால் விமானத்தின் சன்னல் வழியாக வேடிக்கை பார்த்துகொண்டிருந்தேன்...
இன்னும் சற்று நேரத்தில் நாம் சென்று சேரவேண்டிய விமான தளத்தில் தரை இறங்கப் போகிறோம் என்கிற அறிவிப்பு வந்தது. எனக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்த எனது நண்பனும் நானும் சன்னல் வழியே விமானம் கீழ் இறங்கும் காட்சியை பார்க்க மிக ஆவலோடு காத்துக்கொண்டிருந்தோம். எங்கோ வெகு தூரத்தில் கடுகு போன்று காட்சியளித்த கட்டிடங்கள் சிறிது சிறிதாக பெரியதாகிக் கொண்டிருந்தது, விமானம் ஓடு தளத்தை நெருங்கும்போது விமானத்தின் சக்கரங்களில் எதோ பழுது ஏற்ப்பட்டதால், விமானத்தை...விமான தளத்தில் தரை இறங்க முடியாமல், அருகில் இருக்கும் கடல் தண்ணீரில் விமானத்தை கீழிறக்கப் போவதாக அவசர அறிவிப்பு வந்தபோது... எனக்கு நீச்சல் தெரியாது என்பது சட்டென்று ஞாபகம் வந்தது... உடனே நான் அலற ஆரம்பித்துவிட்டேன்... எனக்கு நீச்சல் தெரியாது... எனக்கு நீச்சல் தெரியாது!!!!
....விமானத்திலிருந்த பயணிகளும், விமானமும் என்னவானது? மீதிக் கதையைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்.
மிகச் சரியான, பொருத்தமான- மீதிக்கதையை, ஐந்து (5) வரிகளுக்கு மிகாமல் 15-01-2021 தேதிக்கு முன்னதாக எங்களுக்கு வந்து சேருமாறு "vaishalireaderscircle@gmail.com" மின்னஞ்சலில் அனுப்பவேண்டும்.
சரியான விடையையும், சரியான விடை எழுதியவர்களுக்கான பரிசுகளும்
அடுத்தமாத மார்கழி மாத சுட்டீஸ் வலைப்பதிவர் இதழில்
போட்டிக்கான சரியான விடையை (பொருத்தமான கதையை) பலரும் குறிப்பிட்டிருந்தால், பரிசு பெறுபவர்-குலுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்.
(கதைக் கருத்தாக்கம்-ரேடியோ மார்கோனி கோபாலகிருஷ்ணன்)
சென்ற மாத கதைக்கு பதில் எழுதி அனுப்பியவர்கள் மொத்தம் =1126 நபர்கள்
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
@கதை / கட்டுரைப்போட்டி-32:- புகைப்படத்தில் உள்ள படத்தைப் பார்த்து 15-வரிகளுக்கு மிகாமல் பொருத்தமான கதை/கட்டுரை எழுதி அனுப்புங்கள் சரியான படக்கதை விடை:- அடுத்த மாத இதழில்
சுட்டீஸ், நாங்கள் தொகுத்து வழங்கிய பதிவுகளில் உள்ள குறை நிறைகளை வாசகர்கள், அன்பான முறையில் எங்களுக்கு எடுத்துக்கூறி, எங்களது பதிவுகள் மேலும் சிறப்படைய வாழ்த்தி உற்சாகப்படுத்துமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.
மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இந்தப்பதிவில் கீழுள்ள கருத்துக்கூறும் பகுதியில் பதிவு செய்யவும்.
No comments:
Post a Comment