வணக்கம், தாங்களின் வருகைக்கு நன்றி, எங்களின் இந்த மாத வலைப் பூ-பக்கம்" - சித்திரை மாத வலைப்பதிவு இதழின் ஆசிரியராக, தொகுத்து வழங்குபவர்:- (Editor of the Page)செல்வன் R. வைத்தியநாதன் மற்றும் R. ராம கிருஷ்ணன் சகோதரர்கள். செக்டர்-4, வைஷாலி, NCR-NEW DELHI.
அடுத்து வரும் May-2016, வைகாசி மாத வலைப்பதிவு இதழின் ஆசிரியராக, (Editor of the page) இந்த வலைப்பக்கத்தை தொகுத்து வழங்க ஆவலுடன் காத்திருப்பவர் யார்? உங்கள் விருப்பத்தை உடனே தெரியப்படுத்துங்கள்....
மின் அஞ்சல் "vaishalireaderscircle@gmail.com"
24-04-2016 அவ்வை தமிழ் சங்கம் & வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம் இணைந்து வழங்கிய " கோடை கொண்டாட்டம்" புகைப்படங்கள்:-
_______________________________________________________
நமது வாசகர் வட்டத்தின் இந்த மாத சரித்திரம் முக்கியம் பகுதியில், பிள்ளையார் சுழி ஏன் போடணும்? (வழங்குபவர் R. வைத்தியநாதன் மற்றும் R. ராம கிருஷ்ணன் சகோதரர்கள்)
பிள்ளையார் சுழி:- "உ" என்கிற எழுத்துதான் பிள்ளையார் சுழியாக முதலில் எழுதுகிறார்கள் அதற்க்கான பல காரணத்தை கூகுள் விக்கி பீடியாவில் குறிப்பிட்டிருக்கிறார்கள், இருந்தும் இதற்க்கு முக்கியக் காரணம். தாய் தந்தையர்கள் தான் உலகின் முதல் கடவுள் என்பதை உணர்த்தவே பிள்ளையாரின் தாய் தந்தையர்கலாகிய "உமாபதி" உமையவளும் அவரின் பதி-பரமேஸ்வரனையும் வணங்கி பிறகு எந்த வேலையையும் தொடங்கிட "உ" பிள்ளையார் சுழி இட்டு எழுத துடங்கினார் என ஒரு வரலாறு உள்ளது ... "உமாபதியே உலகம் என்றாய் ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய் கனநாதனே மாங்கனியை உண்டாய் கதிர் வேலவனின் கருத்தில் நின்றாய் ..."
மேலும் உலகில் முதன் முதல் எழுத ஆரம்பித்தவரே நம்ம பிள்ளையார் தான். என்ன ஆச்சரியமா இருக்கா? ஆமாம், வியாசரின் மகாபாரதத்தை அவர் சொல்லச் சொல்லத் தன் தந்தத்தை உடைத்து எழுத்தாணியாக்கி எழுதி வந்தவர் பிள்ளையார் தான். அதுவும் எப்படி? வியாசர் சற்றும் நிறுத்தாமல் சொல்லிக் கொண்டே போவார். இவர் எதிர்க்கேள்வி கேட்காமல் எழுதிக் கொண்டே போக வேண்டும். ஒரு கட்டத்தில் வியாசருக்குப் பயமே வந்துடுச்சாம், என்னடா இது! இந்தப் பிள்ளையார் எழுதற வேகத்துக்கு நம்மால் சொல்ல முடியாது போலிருக்கேன்னு. உடனே என்ன செஞ்சாராம் தெரியுமா? நான் சொல்ற ஸ்லோகங்களோட அர்த்தத்தைப் புரிந்து கொண்டு எழுத வேண்டும் என்று பிள்ளையாரிடம் சொல்லி விட்டார். வேதமுழு முதல்வனான பிள்ளையாரைச் சோதனை போட்டால் சரியா வருமா? அவரும் அப்படியே சரின்னு அர்த்தம் புரிந்து கொண்டு எழுத ஆரம்பித்தாராம். இதுக்காகவே ரொம்ப யோசித்து, யோசித்துச் சிக்கலான பதங்களையும், அரத்தங்களையும் கொண்ட ஸ்லோகங்களை வியாசர் சொல்ல விநாயகர் மெளனமாய் அதன் பொருளை உணர்ந்து எழுதி வந்தார். பத்ரிநாத்தில் வியாசர் மகாபாரதம் எழுதிய குகையும், பிள்ளையார் எழுதியவாறு அமர்ந்த கோலத்தில் இருப்பதையும் தரிசிக்கும் வண்ணம் ஒரு கோயில், பத்ரிநாத்தில் இருந்து சீன எல்லைக்குப் போகும் வழியில் உள்ள "மானா" என்னும் கிராமத்தில் உள்ளது. இப்போதும் அந்தக் கோவிலையும், வியாசர் இருந்த குகையையும் தரிசிக்கலாம்.
_________________________________________________________________________________
1) சித்திரமும் கைப்பழக்கம்:-
(நான் வரைந்த ஓவியம் / எனக்குப் பிடித்த ஓவியம்)
a) D. துர்கா 2ம் வகுப்பு.
b) குழந்தைகள் H. சாய் நந்தினி மற்றும் H.சாய் ஷிவானி சகோதரிகள்:-
(நான் வரைந்த ஓவியம் / எனக்குப் பிடித்த ஓவியம்)
c) மாஸ்டர் S. ஸ்ரீ சக்ரி:-
(நான் வரைந்த ஓவியம் / எனக்குப் பிடித்த ஓவியம்)
(நான் வரைந்த ஓவியம் / எனக்குப் பிடித்த ஓவியம்)
d) Mis. K.PRAHANSHA- VIII class
(நான் வரைந்த ஓவியம் / எனக்குப் பிடித்த ஓவியம்)
e) Mr. K. KSHITIJ - X1th.
(நான் வரைந்த ஓவியம் / எனக்குப் பிடித்த ஓவியம்)
_________________________________________________________________________________
2.(நகைச்சுவை) சிரிப்பு வருது சிரிப்பு வருது:- (புகைப்படமும் விளக்கமும்)
எலி :- வயறு காலியாக இருக்கும்போது எத்தனை இட்டிலி தின்னுவே?
நாய் :- 5 அல்லது 6 இட்டிலி தின்பேன்.....
எலி :- காலியான வயிற்றில் ஓர் இட்டிலிதான் தின்ன முடியும் , அடுத்த இட்டிலி திங்கரப்ப காலியான வயறு இருக்காதே !!!!!!!!!!! (A.K. பவித்ரா)
______________________________________________________________________________
மெல்ல மெல்ல ..அப்படித்தான்.. 2 நாளா உடம்புவலி இப்பிடி யாராவது உதவி செஞ்சாதான் சரியாகும் ... அப்படியே ஒரு பாட்டு பாடுப்பா... "போற்றிப்ப பாடடி கண்ணே......" (A.K.சபரிஷ்)
_________________________________________________________________________
3. சிறுகதைகள் :- தொகுத்து வழங்கியவர்:- மாஸ்டர் B. அபிஷேக்,
பிள்ளையாருக்கு எதிரே நின்று தோப்புக்கரணம் போடுகிறோமே, அதை நமக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தவர் மஹாவிஷ்ணு தான் என்று ஒரு கதை இருக்கிறது.
மஹாவிஷ்ணு ஒரு சமயம் ஸஹோதரியைப் பார்ப்பதற்காகவும், தமக்கு ரொம்ப ஆப்தமான பரமேச்வரனோடு ஸல்லாபிப்பதற்காகவும், மருமான் கணேசரைக் கொஞ்சி விளையாடுவதற்காகவும் கைலாஸத்திற்கு வந்திருந்தார்.
அப்போது தம்முடைய சக்ரத்தைச் சுற்றிக் குழந்தைக்கு வேடிக்கை காட்டினார். உடனே குழந்தை தும்பிக்கையை நீட்டிச் சக்ரத்தைப் பிடுங்கிக் கொண்டு லபக்கென்று வாய்க்குள் போட்டு நன்றாக அடக்கிக் கொண்டது.
மஹாவிஷ்ணு நயமாகவும், பயமாகவும் எத்தனை பண்ணியும் அது சக்ரத்தை வெளியே போட மாட்டேனென்று அடம் பண்ணி விளையாடிற்று. அப்போது தான் மஹாவிஷ்ணு யுக்தி பண்ணி, இப்படிக் காதைப் பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போட்டார்.
அதைப் பார்த்ததும், எப்போதுமே சிரித்த முகமாயிருக்கும் ‘ப்ரஸன்னவதன’க் குழந்தை விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தது. சிரிக்கிற போது வாயில் அடக்கிக் கொண்ட சக்ரமும் குபுக்கென்று வெளியிலே வந்து விழுந்தது.
சடக்கென்று அதை மஹாவிஷ்ணு எடுத்து வைத்துக் கொண்டார்.
“தோர்பி : கர்ணம்” என்பதே தோப்புக்கரணம் என்று மாறியது. “தோர்பி” என்றால் “கைகளினால்” என்று அர்த்தம். “கர்ணம்” என்றால் “காது”. “தோர்பி கர்ணம்” என்றால் கைகளால் காதைப் பிடித்துக் கொள்வது என்று அர்த்தம்.
_______________________________________________________________________________
4. கட்டுரை:- உங்கள் கவனத்திற்கு வழங்கியவர்:-AK பவித்ரா
ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (GBBC-2017) பிப்ரவரி 12-15-ம் தேதிகளில் உலகெங்கும் நடக்கிறது. இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்க ஆர்வம் உள்ளவர்கள் தங்களைச் சுற்றியுள்ள பறவைகளைக் குறைந்தபட்சம் 15 நிமிடங்களுக்குப் பார்த்து, அடையாளம் கண்டு, அவற்றின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்து eBird (www.ebird.org/india) எனும் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.
வீடு, பள்ளி, கல்லூரி வளாகத்திலோ பூங்கா, ஏரி, குளம் போன்ற பொது இடங்களிலோ பறவைகளைக் கவனித்து eBird-ல் பட்டியலிடலாம். கல்வி நிறுவனங்கள், மற்ற நிறுவன வளாகங்களில் உள்ள பறவைகளை மொத்தமாகவும் கணக்கெடுக்கலாம். இந்தப் பறவைகள் கணக்கெடுப்பை இந்தியப் பறவைகள் கணக்கெடுப்புக் கூட்டமைப்பு (The Bird Count India Partnership) ஒருங்கிணைக்கிறது.
கடந்த ஆண்டு ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பில் நாடெங்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று, 7000 பட்டியல்களைப் பதிவேற்றினர். இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 735 பறவையினங்கள்தான், உலகிலேயே இரண்டாவது அதிகப் பறவையினங்கள். அதில் காக்கை, மைனா, குயில், கரிச்சான் ஆகிய பறவைகள் பரவலாக இருப்பதாகத் தெரியவந்தது.
மேலும் விவரங்களுக்கு: http://www.birdcount.in
தொடர்புக்கு: birdcountindia@gmail.com
_________________________________________________________________________________
அறுவை ஆயிரம்:- ((A.K.சபரிஷ்)
# ஓட்ட பந்தயத்துல கால் எவ்வளவு வேகமா ஓடினாலும் கைக்குதான் "ப்ரைஸ்" கிடைக்கும்.
# என்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும்
மெஸேஜ் Forwardதான் பண்ண முடியும்,
Rewindலாம் பண்ண முடியாது.
# Tea கப்புல "Tea" இருக்கும், World கப்புல World இருக்குமா !!!!!!
# பாக்கு மரத்துல பாக்கு இருக்கும் , தேக்கு மரத்துல தேக்கு இருக்கும் , ஆனா பண மரத்துல பணம் இருக்காது ..!
#பொங்கலுக்கு லீவு கொடுப்பாங்க.. ஆனா இட்லி வடைக்கு லீவு கொடுப்பாங்களா??
புது மொழி:- (A.K.சபரிஷ்)
# எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும்.
# கார் ஓட டயரும் தேயும்.
# பந்தை காத்து கோல்கீப்பரிடம் கொடுத்தாற்போல
# சைக்களுக்குத் தெரியுமா பெட்ரோல் வாசனை..
# ஹெல்மெட் இல்லாதவன் பின்னே எமன் வருவான் முன்னே.
கருத்து சொல்லப்போறேன்:- (A.K.சபரிஷ்)
#விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்.
தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.
மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்.
#வெற்றி என்பது நிரந்தரமல்ல;
தோல்வி என்பது இறுதியானதுமல்ல!
கவிதை:-
1. "பழுத்த பழத்திற்கு ஊட்டிவிடும் பிஞ்சுக் கைகள்"
மசித்து பிசைந்த "மம்மு" சாதம்
எடுத்து ஊட்ட ஒரு தேக்கரண்டி போதும்
கட்டில் அருகே வந்து,
கண்டிப்பும் கட்டளையும் ஊட்டிவிட,
கண்களில் கண்ணீர் வரக்கண்டு...
காரம்தான் உரைத்ததோ என்று
ஒரு குவளை தண்ணீர் பருகத்தந்து
"சொன்ன பேச்சை கேட்கவேண்டும்
சமுத்தாக சாப்பிடவேண்டும்...என்ன? "
என அதிகார பரிமாறல்களோடு
பழுத்த பழத்திற்கு ஊட்டிவிடும் பிஞ்சுக் கைகள்
பாட்டியும் பேத்தியும்....... (கோகி)
2. தென்றலே...தெரியுமா?
என் வீட்டு தோட்டத்தில் காய்த்த
ஒரே ஒரு வெண்டைக்காயாக
இருந்தாலும்....
அதில் செய்யும் சாம்பாரின்
மனமும் சுவையும்
வேறு எந்த சாம்பாரிலும்
கிடைப்பதில்லை..... (AK.பவித்ரா )
பகுதி II -கால்வண்ணம் :- (நடனம், நாடகம், விளையாட்டு போட்டிகள்) :-
கோடை கொண்டாட்டம் ....அவ்வை தமிழ் சங்கம் மற்றும் வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம் இணைந்து வழங்கிய " கோடை கொண்டாட்டம்" - பொன் மாலைப் பொழுதில் பொழுது போக்கு விளையாட்டுகள்..24.04.2016 நிகழ்சிகளின் புகைப்பட தொகுப்புக்கள்....
மேலும் பல புகைப்படங்கள் அடுத்த பதிவில் ....
நன்றிகளுடன்
வைஷாலி வாசகர் வட்டம் ...தமிழ் ரோஜாக்களின் குல்கந்து ...
# ஓட்ட பந்தயத்துல கால் எவ்வளவு வேகமா ஓடினாலும் கைக்குதான் "ப்ரைஸ்" கிடைக்கும்.
# என்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும்
மெஸேஜ் Forwardதான் பண்ண முடியும்,
Rewindலாம் பண்ண முடியாது.
# Tea கப்புல "Tea" இருக்கும், World கப்புல World இருக்குமா !!!!!!
# பாக்கு மரத்துல பாக்கு இருக்கும் , தேக்கு மரத்துல தேக்கு இருக்கும் , ஆனா பண மரத்துல பணம் இருக்காது ..!
#பொங்கலுக்கு லீவு கொடுப்பாங்க.. ஆனா இட்லி வடைக்கு லீவு கொடுப்பாங்களா??
புது மொழி:- (A.K.சபரிஷ்)
# எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும்.
# கார் ஓட டயரும் தேயும்.
# பந்தை காத்து கோல்கீப்பரிடம் கொடுத்தாற்போல
# சைக்களுக்குத் தெரியுமா பெட்ரோல் வாசனை..
# ஹெல்மெட் இல்லாதவன் பின்னே எமன் வருவான் முன்னே.
கருத்து சொல்லப்போறேன்:- (A.K.சபரிஷ்)
#விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்.
தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.
மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்.
#வெற்றி என்பது நிரந்தரமல்ல;
தோல்வி என்பது இறுதியானதுமல்ல!
கவிதை:-
1. "பழுத்த பழத்திற்கு ஊட்டிவிடும் பிஞ்சுக் கைகள்"
மசித்து பிசைந்த "மம்மு" சாதம்
எடுத்து ஊட்ட ஒரு தேக்கரண்டி போதும்
கட்டில் அருகே வந்து,
கண்டிப்பும் கட்டளையும் ஊட்டிவிட,
கண்களில் கண்ணீர் வரக்கண்டு...
காரம்தான் உரைத்ததோ என்று
ஒரு குவளை தண்ணீர் பருகத்தந்து
"சொன்ன பேச்சை கேட்கவேண்டும்
சமுத்தாக சாப்பிடவேண்டும்...என்ன? "
என அதிகார பரிமாறல்களோடு
பழுத்த பழத்திற்கு ஊட்டிவிடும் பிஞ்சுக் கைகள்
பாட்டியும் பேத்தியும்....... (கோகி)
2. தென்றலே...தெரியுமா?
என் வீட்டு தோட்டத்தில் காய்த்த
ஒரே ஒரு வெண்டைக்காயாக
இருந்தாலும்....
அதில் செய்யும் சாம்பாரின்
மனமும் சுவையும்
வேறு எந்த சாம்பாரிலும்
கிடைப்பதில்லை..... (AK.பவித்ரா )
பகுதி II -கால்வண்ணம் :- (நடனம், நாடகம், விளையாட்டு போட்டிகள்) :-
கோடை கொண்டாட்டம் ....அவ்வை தமிழ் சங்கம் மற்றும் வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம் இணைந்து வழங்கிய " கோடை கொண்டாட்டம்" - பொன் மாலைப் பொழுதில் பொழுது போக்கு விளையாட்டுகள்..24.04.2016 நிகழ்சிகளின் புகைப்பட தொகுப்புக்கள்....
மேலும் பல புகைப்படங்கள் அடுத்த பதிவில் ....
நன்றிகளுடன்
வைஷாலி வாசகர் வட்டம் ...தமிழ் ரோஜாக்களின் குல்கந்து ...