! கற்க கசடற….!! !! வாய்மையே வெல்லும்!!
“வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம்”
Vaishali, Ghaziabad, NCR-New Delhi.
e-mail: vaishalireaderscircle@gmail.com
___________________________________________________________________
அடுத்து வரும் ஜூன்-2016, ஆணி மாத வலைப்பதிவு இதழின் ஆசிரியராக, (Editor of the page) இந்த வலைப்பக்கத்தை தொகுத்து வழங்க ஆவலுடன் காத்திருப்பவர் யார்? உங்கள் விருப்பத்தை உடனே தெரியப்படுத்துங்கள்....
மின் அஞ்சல் "vaishalireaderscircle@gmail.com"
15-05-2016 அன்றைய 27-வது வாசகர் வட்ட சந்திப்பில்:- உயர்வகுப்பு மாணவர்களின் தேர்வுநேரம் என்பதால் குறைவான உறுப்பினர்களே பங்குகொண்டனர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் போட்டி பரிசு என வாசகர் வட்ட சந்திப்பு வெகு சிறப்பாக நடந்தது.
1) சித்திரமும் கைப்பழக்கம் பகுதியில் :-
பகுதி I-கைவண்ணம்:-
1) சித்திரமும் கைப்பழக்கம் பகுதியில் :-
(நான் வரைந்த ஓவியம் / எனக்குப் பிடித்த ஓவியம்)
a) D. துர்கா 2ம் வகுப்பு.
a) D. துர்கா 2ம் வகுப்பு.
a) D. துர்கா 2ம் வகுப்பு.
2. நகைச்சுவை-சிரி சிந்தி செயல்படு- பகுதியில் :-
b) குழந்தைகள் H. சாய் நந்தினி மற்றும் H.சாய் ஷிவானி சகோதரிகள்:-
(நான் வரைந்த ஓவியம் / எனக்குப் பிடித்த ஓவியம்)
(புகைப்படமும் விளக்கமும்):-
நான் அப்பவே சொன்னேன் நாயை கூட வைத்துக்கொண்டு தொலைப்பேசியில் பேஸ்புக், வாட்ஸ்அப் செய்யாதேன்னு ... இப்ப பாரு நாயும் "பேஸ்புக், வாட்ஸ்அப்" பார்க்க ஆரம்பிடுச்சுச்சு...(B.அபிஷேக் )
_________________________________________________
(புகைப்படமும் விளக்கமும்):-
பாட்டியம்மா.. இங்கு வீடு வாங்கினா, அவர்களின் குழந்தைகள் விளையாட, இலவசமா பலூன் சறுக்கு விளையாட்டுக் கூடம் உண்டாம்....
அடேய் .. அடிக்கிற வெய்யிலில் இதெல்லாம் ஒரு வருடம் கூட உருப்படியா இருக்காதே... இதுக்கு 10 மரக்கன்று நட்டிருந்தால் நிழலில் குழந்தைகள் விளையாடவும், வருடம் தவறாம மழை பெய்யவும் உபயோகமா இருந்திருக்குமே????? (B.அபிநயா)
_________________________________________________________________________
அடேய் அது டயர் பஞ்சர் போடா வைத்திருந்த தண்ணிடா...????
அட போய்யா... அடிக்கிற வெய்யிலில் குளிக்கவே தண்ணியில்ல, இதுல டயராவது பஞ்சராவது.....(S.ஸ்ரீ சக்ரி)
1) ஓய்வு நேரத்தை எப்படிப் பயன்படுத்தலாம் என்று ஓர் இளைஞர் நண்பர்களிடம் கேட்டார். சிலர் சினிமாவுக்குப் போகச் சொன்னார்கள். சிலர் நண்பர்களுடன் செலவிடச் சொன்னார்கள். ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொரு யோசனை வந்தது. பிறகு, நேர-நிர்வாகவியல் நிபுணரை அழைத்து ஆலோசனை கேட்டார்.
புத்தகம் படி, நல்ல காரியங்கள் செய்... என்றெல்லாம்தான் சொல்லப்போகிறார் என்பது இளைஞரின் எதிர்பார்ப்பு.... நேர-நிர்வாகவியல் நிபுணர் மிக நிதானமாகச் சொன்னார்……
“உன் ஓய்வு நேரத்தை, மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள். அதுவே பயனுள்ள நேரங்களைத் தொடங்கி வைக்கும்”.
==============================================
2) சின்ன விஷயங்களுக்குக்கூடப் பெரிதாய் அலட்டிக் கொள்ளும் பிரச்சினையிலிருந்து மீள மனவியல் நிபுணரை சந்திக்கச் சென்றார் ஒரு மனிதர். சிறிது நேரம் கண்களை மூடச் செய்துவிட்டு பெரிய கண்ணாடித் தடுப்புக்கு மறுபுறம் இருந்த பழத்தைக் காண்பித்து “இது என்ன பழம்” என்றார். “சாத்துக்குடி” என்று பதில் வந்தது. கண்ணாடிச் சட்டத்தை அகற்றிவிட்டு “இப்போது சொல்லுங்கள்” என்றதும் “எலுமிச்சை” என்றார். “இடையில் வைக்கப்பட்டிருக்கும் லென்ஸ்தான் உங்கள் மனம். எல்லாவற்றையும் பெரிதாக்கிக் காட்டுகிறது. பிரச்சினைகளை அவற்றின் சரியான அளவிலேயே சந்தியுங்கள்” என்று அறிவுரை சொன்னார் மருத்துவர்.
புத்தகம் படி, நல்ல காரியங்கள் செய்... என்றெல்லாம்தான் சொல்லப்போகிறார் என்பது இளைஞரின் எதிர்பார்ப்பு.... நேர-நிர்வாகவியல் நிபுணர் மிக நிதானமாகச் சொன்னார்……
“உன் ஓய்வு நேரத்தை, மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள். அதுவே பயனுள்ள நேரங்களைத் தொடங்கி வைக்கும்”.
==============================================
2) சின்ன விஷயங்களுக்குக்கூடப் பெரிதாய் அலட்டிக் கொள்ளும் பிரச்சினையிலிருந்து மீள மனவியல் நிபுணரை சந்திக்கச் சென்றார் ஒரு மனிதர். சிறிது நேரம் கண்களை மூடச் செய்துவிட்டு பெரிய கண்ணாடித் தடுப்புக்கு மறுபுறம் இருந்த பழத்தைக் காண்பித்து “இது என்ன பழம்” என்றார். “சாத்துக்குடி” என்று பதில் வந்தது. கண்ணாடிச் சட்டத்தை அகற்றிவிட்டு “இப்போது சொல்லுங்கள்” என்றதும் “எலுமிச்சை” என்றார். “இடையில் வைக்கப்பட்டிருக்கும் லென்ஸ்தான் உங்கள் மனம். எல்லாவற்றையும் பெரிதாக்கிக் காட்டுகிறது. பிரச்சினைகளை அவற்றின் சரியான அளவிலேயே சந்தியுங்கள்” என்று அறிவுரை சொன்னார் மருத்துவர்.
விளம்பரம் :-இப்பகுதியை உங்களுக்கு வழங்குபவர்:-
4. கட்டுரை:- உங்கள் கவனத்திற்கு வழங்கியவர்:- A.K.சபரிஷ்
அ ) இன்று ஒரு தகவல் பகுதியில்:-1. கடல் குதிரை:- "உலகத்திலேயே கடல் குதிரை தான் ஆண் வர்க்கத்தில் கர்ப்பம் தரித்து குழந்தை பெற்று கொள்ள கூடிய ஒரே உயிரினம்."
கண்களை எந்தப் பக்கமும் திருப்புதல், குதித்து குதித்து ஓடும் ஒருவகை மீன் இனம், குதிரை போன்ற முக அமைப்பு, குரங்கு போன்ற வால், ஆண் இனங்கள் இனப்பெருக்கம் செய்தல் இப்படியாக பல்வேறு சிறப்புகளையுடைய அரியவகை கடல்வாழ் உயிரினமான கடல் குதிரைகள் பல்வேறு காரணங்களால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருவதை அரசு தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது. உலகில் மொத்தம் 35 வகையான கடல் குதிரைகள் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் ஆழம் குறைந்த கடல் பகுதிகளான கடற்புற்கள் பவளப்பாறைகள் நிரம்பிய இடங்களில் வாழ்கின்றன இவற்றின் முக்கிய உணவு இறால்களாகும்.
இந்த அறிய வகை கடல் வாழ் உயிரினத்தை வீடுகளில் வளர்க்கமுடியாது அதற்க்கான சூழ்நிலைகளும் இந்த உயிரினங்களுக்குப் பொருந்தாது அதோடு இதில் பிரச்சனை என்னவென்றால் கடல்குதிரையின் இனப்பெருக்க வேகம் மிகவும் குறைவு. மனிதர்களுக்கு வேகத்தைத் தரும் கடல் குதிரைகளுக்குத் தான் வேகம் வருவதில்லை. இப்படியே போனால் எதிர்காலத்தில் கடல் குதிரைகள் என்கிற இனம் என்ன ஆகுமென்று யாருக்கும் தெரியாது.
========================================
2. சிங்கப்பூர்:- இந்தியத் தலைநகரான புது தில்லியை இரண்டு பகுதியாகப் பிரித்தால் அதன் ஒரு பகுதி அளவுதான் சிங்கப்பூர் நாடு.
அதாவது இந்தியாவின் தலைநகரமாகிய புது தில்லியின் மொத்த பரப்பளவு 1483 km2கிமீ2 (573 சதுர மைல்). புது தில்லியின் மக்கள் தொகை 2011 கணக்கெடுப்பின்படி =1,67,87,941. அதுபோல தற்போதைய சிங்கப்பூரின் மொத்த பரப்பளவு 704 km2கிமீ2 (270 சதுர மைல்).சிங்கப்பூரின் மக்கள் தொகை 2011 கணக்கெடுப்பின்படி =51,83,700.
சர்வ தேச நிதியத்தின் நாணய நிதிநிலை மதிப்பீட்டில் ஆசியாவில் சிங்கப்பூர் மட்டுமே உயர் மதிப்பீடு (AAA) குறியீடு பெற்ற நாடாகும். அதற்க்கு முக்கியக்காரணமாக அதிக உள்நாட்டு தனிநபர் வருமானமும், ஆசியாவிலேயே மிக அதிகமான தங்க மதிப்பிலான பொருளாதாரத்தை கையிருப்பாகக் கொண்டுள்ள நாடாக திகழ்கிறது. சிங்கப்பூரின் நாணயம்:- சிங்கப்பூர் வெள்ளி (SGD) என்று அழைக்கப்படுகிறது. இன்றைய இந்திய ரூபாயின்(INR) மதிப்பில் ஒரு சிங்கப்பூர் வெள்ளி என்பது கிட்டத்தட்ட ருபாய் 50/- ..... (1 SGD Dollar = INR.Rs48.50 )
சிங்கை என்னும் சிங்கப்பூரின் பொருளாதாரத்தில், சுற்றுலாதுறையும் பெரும்பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 15-மில்லியன் சுற்றுலா பயணிகளைக் கவர்ந்திழுக்கும் வகையில் சிங்கை அரசு சுற்றுலா பயணிகளுக்கு பல சிறப்பு வசதிகளையும், நம்பிக்கையூட்டும் வகையில் தனது உள்நாட்டுப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் சிறப்பாக நிர்வகித்துவருகிறது. . (கோகி)
====================================
3.ரேபீஸ் வைரஸ் என்னும் நாய் லொள்ளு, பல்லு, ஜொள்ளு!!! :-ரேபீஸ் (Rabies) என்பது ரேபீஸ் எனும் வைரஸ் கிருமிகளால் ஏற்படுகின்ற நோய். நாய் கடித்தால் மட்டுமே இந்த நோய் ஏற்படும் என்று பலரும் நினைக்கிறார்கள். அப்படியில்லை. இந்தக் கிருமிகள் நாய், ஆடு, மாடு, குதிரை, குரங்கு, பூனை, நரி, கீரி, ஓநாய், வௌவால் போன்ற பாலூட்டிகள் பலவற்றில் வசிக்கும். இவற்றில் ரேபீஸ் கிருமி உள்ள எந்தவொரு பாலூட்டி மனிதரைக் கடித்தாலும் ரேபீஸ் வரும். இந்தியாவில், முறையாகத் தடுப்பூசி போடப்படாத தெருநாய் கடிப்பதால்தான் 95 சதவிகிதம் இந்த நோய் ஏற்படுகிறது. அதனால்தான் இதனை ‘வெறிநாய்க்கடி நோய்’ என்கிறோம். ரேபீஸ் நோயுள்ள நாயின் உமிழ்நீரில் ரேபீஸ் வைரஸ்கள் வாழும். இந்நாய் மனிதரைக் கடிக்கும் போது ஏற்படும் காயத்தின் வழியாக இந்தக் கிருமிகள் உடலுக்குள் புகுந்து கொள்ளும். அங்குள்ள தசை இழைகளில் பன்மடங்கு பெருகும். பிறகு, நரம்புகள் வழியாகவும், முதுகுத் தண்டுவடத்தின் வழியாகவும் மூளையை அடைந்து, மூளைத் திசுக்களை அழித்து, ரேபீஸ் நோயை உண்டாக்கும்.
பொதுவாக நாய் கடித்துவிட்டால் வயிற்ரை சுற்றி 14 ஊசி என்கிற பழைய முறை மாறி புதிய மருத்துவ முறையில் இப்போது நவீன தடுப்பூசிகள் வந்துவிட்டன. ஐந்தே ஊசிகளில் ரேபீஸ் நோயை 100 சதவிகிதம் வர விடாமல் தடுத்துவிடலாம்.
அமான்டடின் எனும் வைரஸ் எதிர்ப்பு மருந்தை ஒரு வாரத்துக்குக் கொடுத்து வந்தால், ரேபீஸ் கிருமிகளை அழிக்கும் ஆற்றலை உடல் பெற்றுவிடுகிறது. இதன் பலனால், நோய் குணமாகிவிடுகிறது. இது எல்லோருக்கும் பலன் தரும் எனக் கூற முடியாது. உடலுக்குள் புகுந்த ரேபீஸ் கிருமிகள் வீரியம் குறைந்ததாக இருந்தால் அல்லது இவை மூளையைத் தாக்குவதற்கு முன்னால் இந்தச் சிகிச்சையை ஆரம்பித்துவிட்டால் ரேபீஸ் நோயாளி உயிர் பிழைக்க வாய்ப்புண்டு. உயிர் காக்கும் இந்தச் சிகிச்சைக்கு மில்வாக்கீ புரோட்டக்கால் (Milwaukee protocol) என்று பெயர். தமிழகத்தில் வேலூரிலுள்ள சி.எம்.சி. மருத்துவமனையில் இந்தச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. நன்றி விகாச்பீடியா டாட் இன்.
========================================
பொது அறிவுத் தகவல்கள் பகுதியில்:-
1. பெருகிவரும் நவீன விமான நிலையங்களுக்கு வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ் குழந்தைகள் கூறும் இயற்க்கை வளங்களை காப்பாற்ற அறிவுரைகள்?????:-பறவை ஆராய்ச்சியாளர்களின் பார்வையில், பிரமாண்டமான விமானங்களை வீழ்த்தும் பறவைகள்!:-
உருவில் பெரிய யானை ஆனாலும் மிகச்சிறிய எறும்பு ஒன்று அந்த யானையை ஓட ஓட விரட்டியடிக்கும் தன்மைகொண்டது. அதுபோல பிரமாண்டமான விமானங்களை வீழ்த்தும் சிறு பறவைகளும் உண்டு. கிராமங்களும் நகரமாகிக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் அதிகமான தனியார் விமான தளங்கள் நிறுவப்பட்டு ஆங்காங்கே இந்தப் பறவைகளை அகற்றுவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளில் பலவும் இயற்கைக்கு முரனானவைகலாக அமைந்துவிடுகிறது. விமான நிலையத்துக்கு அருகிலுள்ள மரம் செடிகளை அப்புறப்படுத்துகிறார்கள். இதன் மூலம் பறவைகளுக்குத் தேவையான உணவு குறைகிறது. அவை கூடு கட்டுவதற்கான இடங்களும் அழிக்கப்படுகின்றன. அப்பகுதிகளில் பூச்சி மருந்துகளை ஏராளமாக அடிக்கிறார்கள். இதன் மூலமாகவும் பறவைகளின் உணவு (பூச்சிகள்) அழிக்கப்படுகின்றன.
பறவைகளுடைய எதிரிகளின் குரல்களைப் பதிவு செய்து அவ்வப்போது ஒலிக்கவிடுவதன் மூலம் பறவைகளை மிரண்டு ஓடச் செய்கிறார்கள். வெடி வெடித்தும் பறவைகளை மிரண்டு ஓடச் செய்கிறார்கள்.
இயற்க்கை வளங்களை காப்பாற்ற நாட்டின் அனைத்துத் துறைகளும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். பறவைகள் தங்கள் தினசரி இரை தேடலைக் குறிப்பிட்ட நேரத்தில்தான் வைத்துக்கொள்ளும். அந்த நேரங்களில் விமானம் புறப்படவோ வந்து சேரவோ இல்லாதபடி அவற்றின் நேரத்தை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். அன்புடன் S.ஆதித்யா-வைஷாலி வாசகர் வட்டம்.
=================================
2. எங்க ஊரில் ஏரியை காணவில்லை என்று ஆராய்ச்சியாலருக்குத் தெரியுமா????? :-
பூமியில் உள்ள ஏரிகளின் எண்ணிக்கை 11.7 கோடி எனத் தெரிய வந்துள்ளது. அனைத்து ஏரிகளின் மொத்த பரப்பளவு 50 இலட்சம் சதுர கிலோ மீட்டராகும். இவை பூமியில் 3.7 சதவீத இடத்தைப் பிடித்துள்ளன. ஒன்பது கோடி ஏரிகள் அரை ஏக்கர் முதல் இரண்டரை ஏக்கர் வரை பரப்புள்ளவை என சுவீடனின் உமேயா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழலியல் விஞ்ஞானி திரு. டேவிட் ஸீகெல் என்பவர் உலகிலுள்ள ஏரிகளின் எண்ணிக்கை குறித்து வேறு சில ஆராய்ச்சியாளர்களுடன் நடத்திய ஆய்வு முடிவுகள் ஜியோஃபிஸிகல் ரிஸர்ச் லெட்டர்ஸ் (Geophysical Research Letters ) எனும் புவியியல் ஆய்வேட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சியின் எண்ணிக்கையில் சில ஏரிகளின் எண்ணிக்கையை குறைக்கவேண்டும்..... காரணம் நீரின்றி விவசாயம் வீழ்ச்சியடைந்ததால், நம்மூரில் பல ஏரிகள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு கட்டிடம் கட்டப்பட்டு காணாமல் போனது...இந்த ஆராய்ச்சியாளருக்கு தெரியுமா? இப்படிக்கு..... அன்பு டன் வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ் குழுவினர்.
==================================
3. உலகிலேயே வேறெங்கும் இல்லாத பல இயற்க்கை அதிசயங்கள் இந்தியாவில்!!!!!!:-
உலகிலேயே வேறெங்கும் இல்லாத பல இயற்க்கை அதிசயங்கள் இந்தயாவில் உள்ளது. அவற்றில் சில..... மிக அதிக வெப்பநிலையைக் கொண்ட ராஜஸ்தான் மாநிலப் பாலைவனமும், உலகிலேயே அதிக அளவு மழை பெறும் (24மணிநேரமும் மழைபெய்யும்) "சிரபுஞ்சி" (சோரா (Sohra) முன்பு சிரபுஞ்சி என அழைக்கப்பட்டது) என்ற ஊர் இந்திய மாநிலமான மேகாலயாவில் உள்ளது."சிரபுஞ்சி"- மேகங்களின் சிறைச்சாலை என்றும் அழைக்கப்படுகிறது அதற்க்கு முக்கியக் காரணங்களாக சுற்றிலும் இருக்கும் உயர்ந்த பசுமை மலை அடுக்குகள் மேகங்களை வேறெங்கும் நகர்த்து செல்லாமல் சிறைபிடித்து வைத்திருப்பதால் மேகங்கள் தப்பிக்கமுடியாமல் கண்ணீர் மழை பொழிகிறதோ?.. மேலும் மிக அதிகமான -50 டிகிரிக்கு கீழ் குளிர் பிரதேசமான ஜம்மு காஷ்மீரையும் கொண்ட நாடு இந்திய நாடு. கோடைகாலத்திற்கு குலு குலு குன்னூர், குல்லு, மனாலி மற்றும் சிலு சிலு சிம்லாவும் குட்டி இரயில் ஓடும் சுற்றுலாத்தலங்கள் மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடியவைகள்... அன்புடன் வைஷாலி வாசகர் வட்டம்.
==================================================================
4. பூ உலகின் இருண்டு கிடக்கும் தென் துருவத்தில் (South Pole) இரண்டு பவுர்ணமி நிலவுகளைப் பார்க்கலாம்!!!!!!!:-
நடு இரவில் சூரியன் உதிக்கும் நாடு "நார்வே" என்று போற்றப்படுகிறது. இங்கு 5-மாதகாலம் 24மணிநேர பகலாகவும் மற்ற காலங்கள் முழுதும் இரவாகவும் இருக்கும். வருடத்தின் பெரும் பகுதிக்காலம் இருண்டு கிடக்கும் தென்துருவம் (South Pole) என்பது, புவியின் தென் அரைக்கோளத்தின் தென் கோடியில் அமைந்துள்ள புள்ளியாகும். இது வட துருவத்துக்கு நேர் எதிரே, அண்டார்ட்டிக்கா கண்டத்தில் அமைந்துள்ளது. இங்கு குளிர்காலத்தில் (மார்ச் – செப்டம்பர்) தென் முனையத்தில் சூரிய ஒளியே படுவதில்லை. இடைப்பட்ட மே, ஜுலை மாதங்களில் மிகவும் இருண்டதாக (நிலவொளியைத் தவிர்த்து) காணப்படும். மார்ச், ஏப்ரலிலும் ஆகஸ்ட், செப்டம்பரிலும் நீண்ட அந்திக்காலங்களைக் காணலாம்.
கோடைக்காலத்தில் (செப்டம்பர் – மார்ச்), சூரியன் தொடர்ந்து தொடுவானத்தில் காணப்படும். அப்போது நமக்கு சூரியன் எதிர்கடிகாரச் சுற்றில் நகர்வதாகத் தெரியும். இங்கு எப்போதுமே கீழ்வானில் தெரியும் சூரியன் டிசம்பரில் உயர்ந்த நிலையாக 23.5 பாகை வரை எட்டும். புவிப்பரப்பில் படும் சூரிய ஒளி வெண்ணிற பனிப்பரப்பால் எதிரொலிப்பதை வேறு ஒரு கிரகத்திலிருந்து பார்த்தால் இரண்டு பவுர்ணமி நிலாக்களைப் போல் தெரியும்... அன்புடன் வைஷாலி வாசகர் வட்டம்.
========================================
இ) சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம் கேள்வி பதில் பகுதியில்:-
1. எந்தக் கோயில்களில் அதிகமாக மாவிளக்கு ஏற்றுவர்?.
(அம்மன், முருகன் கோவில்களில்)
2. ராகுகாலத்தில் துர்க்கைக்கு ஏற்றும் தீபம்?.......
(துன்பம் போக்கும் எலுமிச்சை தீபம்)
3. "கங்கா ஆரத்தி' என்ற பெயரில் மாலையில் ஆற்று நீர்நிலைகளில் ஏற்றும் தீபத்தின் பெயர்?........
(ஜலதீபம்)
4. தீப விளக்கில் குடியிருப்பவளாககருதப்படும் தேவதை?......
(தீபலட்சுமி)
5. சூரியனை திருமாலுக்கு விளக்காக ஏற்றி வைத்தவர்?............
(பேயாழ்வார்)
6. தீப பிரகாசர் எனப்படும் பெருமாள் எங்கிருக்கிறார்?
[காஞ்சிபுரம் -விளக்கொளிப்பெருமாள்]
7. யோக சாஸ்திரப்படி நம் உடலில் இருக்கும் நெருப்பு ?.........
(ஜடராக்னி)
8.மகாபலி எலியாய் இருந்து விளக்கைத் தூண்டிய தலம் எங்கிருக்கிறது?...... (வேதாரண்யம்)
9. துளசி மாடத்தில் எந்த நேரத்தில் விளக்கேற்றுவது நல்லது?
(சுக்கிர ஹோரையில்)
10. கோயிலில் ஆயிரக்கணக்கில் தீபமேற்றுவதை........ என்பர்
(லட்சதீபம்)
11. இறைவனை ஜோதி வடிவில் வணங்கிய அருளாளர்?.......
(வள்ளலார்)
12. ஆமையின் மீது அமர்ந்த நிலையில் குருபகவானை எங்கு காணலாம்? (திருச்செந்தூர்) :- குரு பகவானுக்குரிய தலங்களில் பிரதான இடம் பெறுவது திருச்செந்தூர். அசுரர்களுடன் போரிட முருகப்பெருமான் இங்கு வந்தார். அப்போது, தேவர்களின் குருவான பிரகஸ்பதி அசுரர்களைப் பற்றியும், அவர்களது குணம் பற்றியும் முருகனுக்கு எடுத்துச் சொன்னார். இதனால், இத்தலம் குரு தலமாகக் கருதப்படுகிறது. இங்குள்ள மேதா தட்சிணாமூர்த்தி, கூர்மம் (ஆமை), அஷ்டநாகம், அஷ்ட யானைகளுடன் கூடிய பீடத்தின் மீது காட்சி தருகிறார். கல்லால மரத்தில் நான்கு வேதங்களும் கிளி வடிவில் உள்ளன.
========================================
ஈ ) நல வாழ்வு பகுதியில்:-
1) கண்டதை தின்றால் குண்டாகிவிடுவாய், என்பது சரியான கூற்று அல்ல. சரியாக சாப்பிடாமலும் ஒருவர் குண்டாகிவிடும் வாய்ப்புள்ளது. அதற்க்கு முக்கியக் காரணம் நமது உடலில் உள்ள முக்கிய சுரப்பிகளில் தைராய்டு சுரப்பிக் குறைவு (Hypothyroidism), மற்றும் அதி தைராய்டியம் (Hyperthyroidism) போன்ற சுரப்பிக் குறைபாட்டினால் உண்டாகிறது.
இதை இரத்த பரிசோதனை மூலம் தெரிந்துகொண்டு சரியான சிகிச்சைகள் (Treatments) எடுத்துக்கொண்டு, அதற்குத் தகுந்த உணவுக் கட்டுப்பாடும் ஊட்டச்சத்தும் (Diet and Nutrition) உள்ள உணவினை உட்கொள்வதோடு, உடல் சுரப்பிகள் தொடர்புடைய உடல்நலக் குறைபாடுகள் (Associated Illnesses) பற்றிய விழிப்புணர்வு இருந்தாலே போதும் சீரான உடல் நலம் அமையும். உங்களுக்காக தைராய்டு நோய் குறித்த செய்திகள், புத்தகங்கள், பிற இணையதள இணைப்புகள் போன்ற தலைப்புகளிலும் தகவல்கள் இங்கு தரப்பட்டிருக்கின்றன. அன்புடன் வைஷாலி வாசகர் வட்டம். விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் http://isha.sadhguru.org/blog/ ta/thyroid-prachanaigalum- theervum/
2)HEPATITIS A,B,C -Virus and HEPATITIS inflammation-ஹெபடைடிஸ் ABCவைரல் என்று ஆங்கிலத்தில் அழைக்கும், கல்லீரலைத் தொற்றித் தாக்கும் நுண் கிருமியால் கல்லீரல் அழற்சி அல்லது கல்லீரல் வீக்கம் என்கிற நோய் ஏன் ஏற்ப்படுகிறது? அது நமக்கு உள்ளதா? அதன் பாதிப்பை எப்படி தெரிந்துகொள்வது? இது எதனால் ஏற்ப்படுகிறது? HEPATITIS"A,B,C"-ஹெபடைடிஸ் "A,B,C" என்கிற மூன்று வகையான வைரஸ்/கல்லீரல் தொற்றுக் கிருமி என்கிறார்களே அப்படி என்றால் என்ன? இந்த தொற்றுக் கிருமி பாதிப்பு வராமல் நம்மை நாம் எப்படி தற்க்காத்துக்கொள்வது.? இதற்க்கான தடுப்பு மருந்துகள் எவை எவை? அது எங்கே எப்படி கிடைக்கிறது? அரசாங்கம் இலவசமாகத் தரும் இந்த தடுப்பு ஊசியை போட்டுக்கொள்ள, எங்கே? எந்த மையங்களுக்கு செல்லவேண்டும்? மேலும் பலவித விவரங்களை இந்த தமிழ் மற்றும் ஆங்கிலப் பதிவு, மிக எளிய வகையில் உங்களுக்கு உதவும் வகையில் பல விவரங்களை எடுத்துறைக்கும் என உறுதியாக நம்புகிறோம்.
1. ஹெபடைடிஸ் A,B,Cவைரல் என்றால் என்ன?
பொதுவாக கல்லீரல் அழற்சி, கல்லீரல் வீக்கம் என கூறப்படும் இந்த நோய் சில வகை சுகாதாரமில்லாத மருந்துகளாலும், புகைப்பிடித்தல், மது அருந்துதல் மற்றும் சில மருத்துவ நிலைகள் (இரத்தம்-ஊசி) காரணமாக ஏற்ப்படலாம். ஆனால் பெரும்பாலான நேரங்களில் அது ஒரு வைரஸ் ஹெபடைடிஸ்-A,B,C என்கிற தொற்றுக் கிருமிதான் காரணம் என அறியப்படுகிறது, மேலும் இந்த தொற்றுக் கிருமி பொதுவான வடிவங்களில் ஹெபடைடிஸ் ஏ, பி, சி என மூன்று பிரிவுகளில் பிரித்து அறியப்படுகிறது. (தொடரும்)
1.What Is Hepatitis?
Hepatitis is an inflammation of the liver. It may be caused by drugs, cigarette, alcohol use, or certain medical conditions. But in most cases, it's caused by a virus. This is known as viral hepatitis, and the most common forms are hepatitis A, B, and C.
1. ஹெபடைடிஸ் A,B,Cவைரல் என்றால் என்ன?
பொதுவாக கல்லீரல் அழற்சி, கல்லீரல் வீக்கம் என கூறப்படும் இந்த நோய் சில வகை சுகாதாரமில்லாத மருந்துகளாலும், புகைப்பிடித்தல், மது அருந்துதல் மற்றும் சில மருத்துவ நிலைகள் (இரத்தம்-ஊசி) காரணமாக ஏற்ப்படலாம். ஆனால் பெரும்பாலான நேரங்களில் அது ஒரு வைரஸ் ஹெபடைடிஸ்-A,B,C என்கிற தொற்றுக் கிருமிதான் காரணம் என அறியப்படுகிறது, மேலும் இந்த தொற்றுக் கிருமி பொதுவான வடிவங்களில் ஹெபடைடிஸ் ஏ, பி, சி என மூன்று பிரிவுகளில் பிரித்து அறியப்படுகிறது. (தொடரும்)
1.What Is Hepatitis?
Hepatitis is an inflammation of the liver. It may be caused by drugs, cigarette, alcohol use, or certain medical conditions. But in most cases, it's caused by a virus. This is known as viral hepatitis, and the most common forms are hepatitis A, B, and C.
உ ) சமையல் குறிப்புக்கள் / விருந்துக்கு வாங்க பகுதியில்:-
உங்களுக்கு தெரியுமா???? ஒரு கிண்ணம் தயிரோடு சர்க்கரை சேர்த்து உண்டால் அது நமது உடலுக்கு சூடு தரும், மாற்றாக தயிரில் உப்பைச் சேர்த்து உண்டால் அது நம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.....(B.அபிஷேக்)
ஊ ) பாட்டி சொல்லைத் தட்டாதே பகுதியில்:-
ஊ ) பாட்டி சொல்லைத் தட்டாதே பகுதியில்:-
பாட்டி சொல்லைத் தட்டாதே... கருப்பு மிளகைக் கடித்து சாப்பிட்டால், எந்தவித நோய்க்கிரிமியும் ஏதும் செய்யாது என்று பாட்டியம்மா சொல்வாங்க. ஆனாலும் வெண்பொங்கல் சாப்பிடும்போது அதில் இருக்கும் இஞ்சி, மிளகை மட்டும் தனியாக பொருக்கி எடுத்துவிட்டு சாப்பிடும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. தற்போது கிடைக்கும் பல உணவுப்பொருட்கள் குளிர் பொட்டியில் பலநாட்கள் வைத்திருந்து அதில் செய்யும் சமையலையும் உண்ணும் பொது வயிறு சம்மந்தமான பல உடல் கோளாறு ஏற்ப்படுகிறது. அப்படி வயிற்றுக்கோளாறு ஏற்ப்பட்டால் சரியாக தூங்கமுடியாமல் இரவில் சக்கரம் சுத்துவது போல நம்மை அறியாமல் தூக்கத்தில் புரண்டு திரிந்து சரியான தொக்கம் இல்லாமல் தவித்துக்கொண்டிருப்போம். ஆகவே இதற்கு சரியான தீர்வாக பாட்டி சொல்வதைப்போல நாம் அன்றாடம் உணவில் கருப்பு மிளகாய் சேர்த்துக்கொண்டால் இப்படிப்பட்ட வயிறு கோளாறுகளிலிருந்து நம்மை நாம் காத்துக்கொண்டு சிறப்பான வாழ்வை வாழலாம். ஆகவே பாட்டி சொல்லைத் தட்டாதீங்க .. நன்றி B.அபிஷேக்.
5. அ) கைத்தொழில் பகுதியில் இந்தமாதம், வழங்கியவர்:-"கைத்தொழில்-கற்றுக்கொள்ள வாருங்கள்"- பயிற்சி வகுப்பில் இந்தமாதம்- பயனுள்ள கோடை விடுமுறை பயிற்சிகள்.
(குட்டி இரயில் சுற்றுலாதலம் பற்றிய பல சுவையான விவரங்களை வழங்கினார் :-திரு. கோபால் கிருஷ்ணன் அவர்கள்)
==============================================
புகைப்படத்தில் உள்ள 6 வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்- May-2016-வைகாசி மாத இதழ் போட்டி என்-02.
ஆ) சரித்திரம் முக்கியம்" பகுதி..."கோடை வாசஸ்தலம் உருவான வரலாறு - குலு குலு குன்னூர் மற்றும் சில்லென்ற சிம்லா "
(குட்டி இரயில் சுற்றுலாதலம் பற்றிய பல சுவையான விவரங்களை வழங்கினார் :-திரு. கோபால் கிருஷ்ணன் அவர்கள்)
6. சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்"-
==========================================
8. சொர்கமே என்றாலும் நம்ம ஊரைப் போலவருமா? பகுதி:-
நாம் வசிக்கும் நமது (NCR- New Delhi) புது தில்லி மற்றும் அதன் சுற்றுவட்ட எல்லைப்பகுதியில் வாழும் தமிழ் வலைப்பதிவர்களின் இந்தமாத பிரபலமான பதிவுகள் பற்றிய தொகுப்புப் பகுதி (My Readers Circle NCR- New Delhi Web Page/Blogs for this month) :-
இவரின் பதிவுகள் தமிழில் மின் புத்தகங்களாக PDF-வடிவில் இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து மகிழலாம்:-
1. மத்தியப் பிரதேசம் அழைக்கிறது – வெங்கட் நாகராஜ்
1. மத்தியப் பிரதேசம் அழைக்கிறது – வெங்கட் நாகராஜ்
http://freetamilebooks.com/eb…/mathya-pradesam-azaikkirathu/
வெங்கட் நாகராஜ்...
வெங்கட் நாகராஜ்...
2. ஏரிகள் நகரம் (நைனிதால்) - வெங்கட் நாகராஜ்
http://www.pratilipi.com/venkat-nagaraj-…/lake-city-nainital
http://www.pratilipi.com/venkat-nagaraj-…/lake-city-nainital
=====================================
8. அறுவை ஆயிரம்:- ((A.K.சபரிஷ்)
# T Nagar போனா டீ வாங்கலாம். ஆனால் விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?
# பொங்கலுக்கு லீவு கொடுப்பாங்க.. ஆனா இட்லி வடைக்கு லீவு கொடுப்பாங்களா??
9. கருத்து சொல்லப்போறேன்:- (A.K.சபரிஷ்)
"நோக்கம் ஓராண்டாயிருந்தால் பூக்களை வளர்ப்போம்,நோக்கம் பத்தாண்டாயிருந்தால் மரங்களை வளர்ப்போம்,
நோக்கம் முடிவில்லாமலிருந்தால் மனித குலத்தை வளர்ப்போம்."
10. புது மொழி:- (A.K.சபரிஷ்)
# தான் ஓடாவிட்டாலும் தம் கடிகாரம் ஓடும்..
# தீக்குச்சி தன் தலைக்கனத்தால் கெடும்.
11. கவிதை:-
நட்சத்திர விடுதிக்கு
போகும் வழியெங்கும்
நட்சத்திரம்....
மின்னிக்கொண்டிருந்தது...(S.ஸ்ரீ சக்ரி)
================================
வெப்ப நகரம்
கண்ணாடி மாளிகையின்
கண்ணீரால்
குளிர்ந்தது.....
எதோ ஒரு சில
மரங்களின்
புண்ணியத்தால்... ( AK.பவித்ரா)
=================================
....கள்ளுண்டு முத்தமிட்டாள்...
மூக்கும் மூக்கும் முட்டிக்குமா?
இதுக்கு சரியான பதில்
சொல்லாமல் போனால்
நீயும் கல்லாகிப்போவாய்
இப்படிக்கு நாய் கள்..... (B அபிஷேக்)
=============================
வாருங்கள்
உங்களது பணத்தை
பத்திரமாக
எனது சட்டைப்பையில்
வைத்துவிடுங்கள்... (AK.சபரிஷ்)
=================================
=============================================
வழங்கியவர் திரு. ஹரிஹரன் (டாபர் ஹரி )
=================================
14.பயனுள்ள முகநூல் பக்கங்களில் இந்தமாதம் பகுதி:-
14.பயனுள்ள முகநூல் பக்கங்களில் இந்தமாதம் பகுதி:-
(அவ்வை தமிழ் சங்கத்தின் முகநூல் பக்கம்:- உத்திரப் பிரதேசத்தில் வாழும் தமிழர்களின் நலனுக்காக, எல்லோரையும் இணைக்கும் பாலமாக செயல்பட விரும்பும் ஒரு அமைப்புதான் அவ்வை தமிழ் சங்கம். பல வேறுபட்ட நிகழ்ச்சிகளின் மூலம் எல்லோரையும் ஓரிடத்தில் ஒருங்கிணைத்து ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ளவும், நம்மிடம் இருக்கும் திறமைகளை மற்றவர்க்கு வெளிக்காட்டும் ஒரு மேடையாகவும் அவ்வை தமிழ் சங்கம் செவை செய்து வருகிறது) நமது வாசகர் வட்டத்தின் அனைவரும் இந்த முகநூல் பக்கத்தில் இணைந்து பயன்பெறலாம். நன்றிகளுடன் AK.பவித்ரா
2. https://www.facebook.com/mohanraj.kr?fref=nf
Mr. Mohanraj Karuppana Achari, திரு மோகன்ராஜ் கறுப்பண்ணா ஆச்சி என்று தனது பெயரை முகநூளில் குறிப்பிட்டிருக்கும் இவர் "தொலைந்து போய்விட்ட பழமையை தேடும் இயற்கை ஆர்வலன்" என்று தனது விருப்பத்தைக் குறிப்பிட்டிருக்கும் இவரின் முகநூல் பக்கத்தின் சுவறுகளில் பண்டைக்கால சான்றுகள் பல புகைப்படங்களாக வலம்வருகிறது. இவரின் முகநூல் பக்கம் தமிழர்களின் பண்டையகால பொருட் களஞ்சியம் என்று நினைக்கத் தோன்றுமாறு அவரின் முகநூல் சுவற்றை அலங்கரித்திருக்கிறார். இவரின் முகநூளில் திருக்குறள் சேவை போற்றத்தகுந்த ஒன்று, இவர் நமது வைஷாலி வாசகர் வட்ட முகநூல் பக்கத்தையும் அவரின் திருக்குறள் சேவையால் அலங்கரிக்க முன்வந்திருப்பது வெளி மாநிலம் வெளி நாட்டில் வசிக்கும் நம்மைப்போன்ற இளம் தமிழ் மாணவர்களுக்கு திருக்குறள் கற்பதற்கு ஒரு அறிய வாய்ப்பாக அமைந்துள்ளது. அவரது சேவையைப் போற்றி வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ் சார்பில் அவருக்கு எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .. நன்றிகளுடன் AK.பவித்ரா
(தமிழ் திரையில் இயல் இசை நாடகம்:- திரைப்படத் துரையின் நூற்றாண்டை கொண்டாடும் வேளையில் தமிழ் திரையில் இயல் இசை நாடகம் பற்றிய பல விவரங்களைக் இவரின் முகநூல் பக்கங்களில் காணலாம்... திருமதி.கோதை தனபாலன் அவர்கள் இந்த முகநூல் பக்கத்தை நிறுவி, உபயோகமான பல விவரங்களால் சிறப்பாக இந்த முகநூளின் சுவற்றை அலங்கரித்து வருகிறார்மேலும் அவரது கவிதைகளால் இந்த http://natchiark.blogspot.in/ வலைப்பக்கத்தையும் அலங்கரித்திருக்கிறார்...விருப் பமுடையவர்கள் இந்த முகநூல் பக்கத்தில் இணைந்து பயன்பெறலாம்.) நன்றிகளுடன் AK.பவித்ரா.
==============================================
பகுதி II -கால்வண்ணம் :- (நடனம், நாடகம், விளையாட்டு போட்டிகள்) :-
15. இந்த மாத வாசகர் வட்ட நிகழ்ச்சியின் சிறப்பு புகைப்படங்கள் :-
நாங்கள் தொகுத்து வழங்கிய பதிவுகளில் உள்ள குறை நிறைகளை வாசகர்கள், அன்பான முறையில் எங்களுக்கு எடுத்துக்கூறி, எங்களது பதிவுகள் மேலும் சிறப்படைய வாழ்த்தி உற்சாகப்படுத்துமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ் தமிழ் ரோஜாக்கள்.