"தமிழ் ரோஜாக்களின் குல்கந்து"

"தமிழ் ரோஜாக்களின் குல்கந்து"

Sunday, July 17, 2016

"சுட்டீஸ்-குல்கந்து" ஆடி மாத வலைப்பதிவர் பூவிதழ்-4" நாள்-தேதி:- ஆங்கில மாதத்தின் 3வது ஞாயிறு 17-07-2016.

"சுட்டீஸ்-குல்கந்து" ஆடி மாத வலைப்பதிவர் பூவிதழ்-4" நாள்/தேதி:- ஆங்கில மாதத்தின் 3-வது ஞாயிறு 17-07-2016.

கற்க கசடற….!!                               !வாய்மையே வெல்லும்!!

 “வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம்
Vaishali, Ghaziabad, NCR-New Delhi.
e-mail:  vaishalireaderscircle@gmail.com
___________________________________________________________________
சுட்டீஸ் இதழ்= 04 ஆடி மாதம்-தேதி 17-07-2016. வணக்கம், தாங்களின் வருகைக்கு நன்றி, எங்களின் இந்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழில்" - ஆடி மாத வலைப்பதிவு:- இந்த இதழின் ஆசிரியராக, தொகுத்து வழங்குபவர்:-(Editor of the Page) செல்வி இரண்யா மற்றும் செல்வன் உத்பவன்,  Master. UDBHAV AND Miss HIRANYA, S&D/o Mr. N. Shyamsundar. செக்டர்-4, வைஷாலி, காசியாபாத், NCR-NEW DELHI.
நமது வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில் இந்த மாதக் கொண்டாட்டமாக :-ஆடி மாதம் 17-07-2016 ஆங்கில மாதத்தின் 3-வது ஞாயிறு, 29-வது சந்திப்பு :- ஆடி மாதம்:- ஆன்மீக மாதக் கொண்டாட்டங்கள்.
அடுத்து வரும் ஆகஸ்ட்-2016, 21-08-2016 ஆவணி மாத வலைப்பதிவு இதழின் ஆசிரியராக, (Editor of the page) இந்த வலைப்பக்கத்தை தொகுத்து வழங்க ஆவலுடன் காத்திருப்பவர் யார்? விருப்பம் உள்ளவர்  உங்கள் விருப்பத்தை உடனே தெரியப்படுத்துங்கள். மின் அஞ்சல் "vaishalireaderscircle@gmail.com"

17-07-2016 இன்று நமது 29-வது வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில்:- கடும் மழையின் காரணத்தினால் வைஷாலி மைய பூங்காவில்  வாசகர் வட்ட சந்திப்பு கூட்டம் நடைபெறாமல்,  நிகழ்ச்சியானது அடுத்தமாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஆடி மாத வாசகர் வட்டத்தின் :- ஆன்மீக மாதக் கொண்டாட்டங்கள். என ஏராளமான ஆன்மீக செய்திகளை மிகவும் பயனுள்ள வகையில் நமது வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ் "குல்கந்து" குழுவினர்கள் தொகுத்து தந்திருக்கிறார்கள்.... அவர்கள் தொகுத்துத் தந்த  பல ஆன்மீக செய்திகளை ஒன்று சேர்த்து, அனைத்தையும் அழகாக கோர்த்து, ஒரு கதம்ப மாலையாக தொடுத்து தந்திருக்கிறார்கள். இந்த மாத வலைப்பதிவு இதழின் அனைத்து விவரங்களும்  உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம்.... இப்படிக்கு வாசகர் வட்ட  சுட்டீஸ் "குல்கந்து" ரோஜாக்கள். 
குட்டி கல்கண்டு தகவல்கள்:- விவரங்களை தொகுத்திருப்பவர் AK.பவித்ரா :-
$ நாம் வசிக்கும் பகுதியில் இருக்கும் ஒரு கோவிலின் புராணத்தை ஏதோ ஓர் சந்தர்ப்பத்தில் புத்தகத்தில் படித்து தெரிந்துகொண்டதும், நம் மனம் உடனே அந்த கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய  நினைக்கும்.   அப்போது  இரவு நேரம் ஆகிவிட்டால் மறுநாள் காலை கோவிலுக்கு சென்று வரலாம், என்று முடிவு செய்கிறோம்..... 

$ஆன்மீகப் புத்தகம்:- அரியும்,அரனும் அருளும் அற்புதத் தலம்:-வைகுண்டத்திலிருந்து திருமாலை பிரிய நேரிட்ட திருமகள் இனி எப்போதுமே எம்பெருமானை விட்டு அகலக்கூடாது என்று புவியில் பல்வேறு தலங்களில் தவமியற்றினாள். ஹரிக்கு எப்போதுமே நெல்லிக்கனி உகந்தது. அதனால், மகாலட்சுமி அரி நெல்லிக் கனியை மட்டும் உண்டு இத்தலத்தின் சத்திய கங்கை தீர்த்தத்தில் ஈசனை நோக்கி அருந்தவம் புரிந்தாள். அந்த தவத்தை மெச்சுவதுபோல சௌகந்திகா எனும் ஆயிரம் இதழ் கொண்ட மலர் மலர்ந்தது. இது திருமாலுக்கு திருமகளின் இருப்பிடத்தை வழிகாட்டியதால், இந்த தாமரை காட்டிய பாதையே ஸ்ரீமார்கம் ஆயிற்று. ஸ்ரீ - திருமகள், மார்க்கம் - பாதை அதாவது திருமகள் இருக்கும் இடத்தைக் காட்டிய தலம் - ஸ்ரீமார்கநல்லூர். இன்று சிறுமாக்க நல்லூர், செருமாக்க நல்லூர் என்றானது. இவ்வூர் அரிமங்கைக்கு அருகேயே உள்ளது. சிறுமாக்க நல்லூர் வழியாக பாதயாத்திரையாக அரிமங்கைக்கு சென்று வந்தால் எளிதில் திருமகளின் அருள் கிட்டும் என்பர்.

$ காலையில் எழுந்ததும் காலைக்கடன்களை முடித்து, நமது உடலையும் மனதையையும் குளித்து உடல்/மன அழுக்கு போக சுத்தமாகவேண்டும்.   

$ ஆறு, குளம், கடற்கரையில் குளிக்கும்போது நீங்கள் அணிந்திருக்கும் உடை,  நீரோடையில் அல்லது படித்துறையில் அல்லது கரையில் அல்லது தண்ணீரில் நீங்கள் உடுத்தியிருந்த உடைகள் மூழ்கி காணாமல் போனால் அதற்காக வருத்தப்படாதீர்கள். அப்படி காணாமல் போவது என்பது, உங்களின் கேட்ட தோஷம் உங்களை விட்டு அகன்றுவிட்டதாக கருதவேண்டும். அதோடு வஸ்திர( துனி) தானம் தந்ததாக கருதினால், தானம் செய்த பலனும் நமக்கு கிடைக்கும். (நல்லதை மட்டுமே நினைப்போம், நல்லதாகவே அனைத்தும் அமையும் என நம்பிக்கை வைப்போம் )    

$ எப்போதும் நமது இல்லத்தில் இருக்கும் பூஜையறை கடவுளின், பூஜை தரிசனம்தான் முதலில் நாம் செய்யவேண்டிய மிக முக்கியமான பணி. அதன்பிறகுதான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யவேண்டும்.

$ கார்த்திகை தீபத்திற்கு உபயோகித்த  அகல் விளக்குகள் நான்கைந்தை சாமி அலமாரியில் தனியாக எடுத்து வைத்துவிட்டால் சமயத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி வைக்க, தசாங்கம், சாம்பிராணிக் கூம்பு ஏற்ற, கையை சுட்டுக்கொள்ளாமல் கற்பூர ஆரத்தி காண்பிக்க என விதவிதமாய் பயன்படுத்தலாம்.  

$ கற்பூரத்தோடு மிளகு சேர்த்து வைத்தால் கற்பூரம் காற்றில் கரையாமல் இருக்கும். 

$மழை நாட்களில், பூஜையறை தீபமேற்றும் தீப்பெட்டி நமுத்துப் போகாமல் இருக்க அதனுள் நான்கு அரிசி மணிகளைப் போட்டு வைக்கவேண்டும்.

$ ஊதுவத்தியை தண்ணீரில் நனைத்து பின் ஏற்றிவைக்க, ஊதுவத்தி நிறைய நேரம் எரிந்து மணம் பரப்பும்.

$உங்களிடம் இரண்டு அஞ்சறைப் பெட்டி இருந்தால் ஒன்றை சமயலறையில் பயன்படுத்திக்கொண்டு மற்றொன்றை பூஜையறையில் வைத்து அதனுள் மஞ்சள்தூள், குங்குமம், அட்சதை, கற்பூரம், சாம்பிராணி, வாசனைப்பொடி, தீப்பெட்டி போன்றவற்றை போட்டு வைத்தால் அனைத்தும் ஒரே இடத்தில் இருப்பதால் பூஜையின்போது எதையும் தேடி நேரம் வீணாக்காமல் தவிர்க்கலாம். 

$வெளியூருக்குச் பயணம் செல்லும்போது பூஜையறையில் ஒரு கிண்ணத்தில் சர்க்கரை அல்லது கல்கண்டு எடுத்து வைத்து, மற்றொரு கிண்ணத்தில்  சிறிது    அரிசி-துவரம் பருப்பு எடுத்துவைத்து, அதன் அருகில் மற்றுமொரு  கிண்ணத்தில் நல்ல தண்ணீரையும் எடுத்து அதை பூஜையறை அலமாரியில் வைத்து விட்டுச் செல்ல வேண்டும். நாம் வெளியூர் பயணத்தில் இருக்கும்போது நமது வீட்டுத் தெய்வங்களை பட்டினி போடக்கூடாது என்பது ஐதீகம்.

$நாம் வெளியூர் பயணத்தில் இருக்கும்போது வீட்டு பூஜையறையில் விளக்கேற்ற முடியாது ஆகவே ஒரு பூஜ்யம் வாட் மின்சார விளக்கு ஒன்றை நமது பூஜையறையில் எரியவிட்டால் அதிக மின்சாரமும் செலவில்லாமல் பூஜையறையில் எப்போதும் விளக்கு எரிந்துகொண்டே இருக்கும். இந்த பூஜ்யம் வாட் விளக்கினால் எந்த வித ஆபத்தும் ஏற்படுவதில்லை. 

$வீட்டு பூஜையறை மற்றும் கோவிலில் இருக்கும் சாமி விக்கிரகங்களுக்கு பூமாலையை சாற்றுவதற்கு தேவையான பூக்கள் கிடைக்காமல் போனால், உடனே மாலை போன்ற வடிவத்தில் பருத்தி பஞ்சினை எடுத்து நடு நடுவே விரலால் திரித்து, மணி மாலை போன்று பஞ்சினால் மாலை செய்து கடவுள் விக்கிரகங்களுக்கு அணிவித்தால் பூ மாலை மற்றும் வஸ்திரம் தரித்த புண்ணியப்பலனை பெறலாம்.  

$நமது வீட்டில் உள்ள பூஜையறையில்தான் முதலில் நாம் பூஜை நமஸ்காரங்கள் செய்யவேண்டும் அதன் பிறகுதான் கோவிலுக்கு செல்லவேண்டும்.  

$கோவிலுக்கு சென்றால், கடவுளுக்கு அர்ச்சனை செய்யும் போது "சாமி பெயருக்கு" அர்ச்சனை செய்யுங்கள் என்று கூறுவது தவறு.  கஷ்ட நஷ்டங்கள் மற்றும் புண்ணிய பாவங்கள் எல்லாம் நமது  வினையின் பயனாக மானிடர்களாகிய நமக்குத்தான் ஏற்படும்.  ஆகவே நமது குடும்ப பாரம்பரியம் செழிக்க நமது குடும்ப கோத்திரம் மற்றும் நாம் நல்ல நிலையில் வாழவேண்டும் என நமது  பெயர், இராசி, நட்சத்திரத்திற்குத்தான் கடவுளிடம் அருள்வேண்டி அர்ச்சனை செய்ய வேண்டுமேயன்றி கடவுளுக்கோ அல்லது கடவுள் பெயருக்கோ அர்ச்சனை செய்யக்கூடாது.

$கோவிலிலோ அல்லது நம் வீட்டு பூஜையறையிலோ  கற்பூரம் தண்ணீரில் விழுந்து நனைந்துவிட்டால் உடனே நனைந்த கற்பூரத்தை விபூதி -திருநீற்றில் போட்டு எடுத்து பயன்படுத்தினால் கர்ப்பூரம் நன்கு எரியும், நமது பிரார்த்தனை மற்றும் தீப ஆராதனையும் சிறப்பாக நிறைவேறும். 

$கோவில் தீப ஆராதனையின் பயன்கள்:- பண்டைய காலங்களில் கோவில் கருவறையில் வீற்றிருக்கும் தெய்வ விக்கிரகங்கள் கோவிலின் உள்ளே ஏற்றிவைக்கப்பட்ட தீப ஒளியில் முழுமையான தரிசனம் பெறமுடியாமல் மங்கலான வெளிச்சம்  இருக்கும், அதனால்தான் தீபாராதனை என்னும் சூடம் ஏற்றி அந்த தீபாராதனை ஒளியில் தெய்வத்தை மனங்குளிர தரிசித்துவந்தார்கள்.   

$திரு முத்து கிருஷ்ணன் அவர்கள் வேத சாஸ்த்திர விதிப்படி தீபம் காட்டுவதன் விளக்கத்தைக் கூறி தெளிவுபடுத்தினார். இவ்வுலகின் ஆதாரம் பஞ்ச பூத சக்திகள் --- நீர், நிலம், நெருப்பு, ஆகாயம், காற்று.. அவற்றை நமக்கு அள்ளிக்கொடுத்து அடக்கி ஆள்பவன் அந்த சர்வேஸ்வரன். அதன் தாத்பர்யமாக அங்கிங்கெனாதபடி ஆகாயம்போல் எங்கும் நீக்கமற நிறைந்துள்ள இறைவன் லிங்கவடிவில் அங்கு வீற்றிருக்கிறான்.(ஆகாயம்). அவனுக்கு தூய நீரால் அபிஷேகம் செய்கிறோம்.(நீர்). நிலத்திலிருந்து விளையும் தானியங்களால் செய்யப்பட்ட பதார்த்தங்களை அவனுக்குப் படைக்கிறோம்/நைவேத்யம் செய்கிறோம்.(நிலம்). பல்வேறு தீபங்கள் காட்டி அவனை ஆராதிக்கிறோம்.(நெருப்பு). அவன் கர்ப்பக் க்ருஹத்தில் காற்றுப் புகமுடியாத இடத்தில் அமர்ந்து நமக்கு அருளுகிறான். அவனை (வெண்கல) விசிறிகொண்டு வீசி ஆராதிக்கிறோம்.(காற்று). இப்படியாக நாம் அந்த இறைவன் நமக்களித்த பஞ்சபூத ஆதாரங்களையும் அவன் முன்னேயே நாம் ஆராதிக்கிறோம். விளக்கின் வெளிச்சத்தில் அவனைக் காணமுடியாது. தூய உள்ளத்தின் வெளிச்சத்தினால்தான் அவனைக் காண இயலும். ...

$கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்ததும், சாமி பிரசாதம் பெற்றுக்கொண்ட பிறகு கோவிலின் உள் பிரகாரத்தில் சிறிது நேரம் ஆற அமர்ந்துவிட்டுதான்  வீட்டிற்கு செல்லவேண்டும்.  

$கோவிலுக்கு வெளியே விடப்பட்ட உங்களின் காலனி/செருப்பு காணாமல் போனால் வருத்தப்படாமல், எவருக்கோ தானம் செய்துவிட்டதாக கருதினால், தானம் செய்த பலன் நமக்கு கிடைக்கும்.

நன்றி!  இப்படிக்கு  AK.பவித்த்ர வைஷாலி வாசகர் வட்டம்..
=================================================
$"ஆடிச் செவ்வாய் தேடிக்குளி" என்று பழமொழி கூறும் கருத்து என்ன? 

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகக் கருதப்படுகிறது. ஆடி மாதத்தில், சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கிறான். கடகம் இராசி சந்திரனின் ஆட்சி வீடாகும். சிவ அம்சமான சூரியன் சக்தி அம்சமான சந்திரனின் ஆட்சி வீட்டினுள் சஞ்சரிப்பதால் (ஒன்று சேருவதால்), சந்திரன் ஆழுமைப் பலம் அடைகிறது. அதாவது சக்தியின் பலம் அதிகரிக்கின்றது. ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார்.

தமிழ் ஆண்டின் 4வது மாதமான ஆடி, தட்ஷிணாயனப் புண்ணிய காலத்தின் தொடக்கமாகவும் உள்ளது. அதாவது ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயன புண்ணிய காலம் எனவும், தை முதல் ஆனி முடிய உத்திராணயன புண்ணிய காலமாகவும் கருதப்படுகிறது. 

தட்சிணாயன புண்ணிய காலம் என்பது தேவர்களின் இரவு நேரம் என்று இந்துமத புராண நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளது. இக்கால கட்டத்தில் பகல் பொழுது குறைவாக இருக்கும். பலத்த காற்றும்,வெயில் குறைந்தும், மழைச்சாரலும் இருக்கும்.

ஆடி மாத செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பெண்கள் விரதம் இருந்து அம்மனை வழிபட்டு வருவது காலம் காலமாக இருந்து வருகிறது. சிவனை அடையும் நோக்கில் அன்னை பராசக்தி இம்மாதத்தில் விரதம் இருந்து இறைவனின் இடப்பாகத்தை பெற்று அர்த்தநாரீஸ்வரியாகும் வரம் பெற்றார். ஆடிச்செவ்வாய் விரதம் துர்க்கை, முருகனுக்குரிய விரதமாகும். 

செவ்வாய் தோஷத்தாலும், நாகதோஷத்தாலும் திருமணம் தடைப்பட்டவர்கள், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் செவ்வாய்க் கிழமைகளில் இராகுகாலப் பூசைகளில் பங்குபற்றி வழிபடுவதால் தோஷம் நிவர்த்தியாகி திருமணமப் பாக்கியமும், பிள்ளைப் பாக்கியமும் கிடைப்பதாக இந்துக்கள் நம்புகின்றனர். ஆடிச்செவ்வாயில் மட்டுமன்றிப் பொதுவாகச் செவ்வாய்க் கிழமைகளில் அம்பிகையை மட்டுமல்ல முருகப் பெருமானையும் வேண்டி விரதம் கடைப்பிடிப்பது பலன் தரக்கூடியது.

விவாகமான பெண்கள் தம் கணவனின் (பிரச்சனை உள்ளவர்கள்) குறையாத அன்பைப் பெறவும், (என்றும் அர்த்தநாரீஸ்வரியாக இருக்கவும்), மாங்கல்யம் நிலைக்கவும், மணமாகாத மகளீர் நல்ல கணவன் கிடைக்கவும், விவாகத் தடைகள் நீங்கவும், செவ்வாய் தோஷம், நாகதோஷம் நிவர்த்திக்காகவும் இவ் விரத்தை அனுஷ்டிக்கின்றனர்.

இவ் விரதத்தை வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் மற்றைய (வெள்ளிக்கழமை) விரதங்களைப் போன்று எண்ணெய் வைக்காது தோய்ந்து விரதம் பிடிப்பது வழக்கமாக உள்ளது. ஆனால்; இந்தியாவில் ஆடிச் செவ்வாய் விரதத்தை புரட்டாத்திச் சனி விரதம்போல் என்ணெய் வைத்து, சந்தனம் பூசி தோய்ந்து விரதம் அனுஷ்டிப்பது வழக்கமாக உள்ளது.

"ஆடிச் செவ்வாய் தேடிக்குளி" என்ற பழமொழி ஒன்றே இவ் விரதத்தின் சிறப்பை உணர்த்துவதாக உள்ளது. காரணம்; செவ்வாய் கிரகம் சனிக் கிரகம்போல் ஒரு ஜாதகருக்குப் பெரும் தோஷத்தை (கஷ்டத்தை) ஏற்படுத்தக் கூடியது. செவ்வாய், சனி போன்ற பாவக் கிரகங்கள் கோசாரமாக சஞ்சாரம் செய்யும் போது அதன் கதிர் வீச்சுக்கள் எம்மைத் தீவிரமாக தாக்குகின்றன. அதனால் அந்த ஜாதகர் உடல்,  உள்ளம் ரீதியாக பெரும் பாதிப்பை பெறுகின்றார். தீய கிரகங்களில் இருந்து வரும் கதிர்களை நல்லெண்ணையில் (எள் எண்ணை) சுவறிய எமது உடம்பு, தாக்க விடாது தடை செய்கின்றது. தீய கதிர்கள் எம் உடலில் தாக்கத்தினை ஏற்படுத்தாது தடுக்கவே இந்த எண்ணைமுழுக்கு என யூகிக்க முடிகின்றது.


ஆடி செவ்வாய்க் கிழமைகளில் பெண்கள் எண்ணெய் வைத்து, மஞ்சள் பூசிக் தோய்ந்து விரதம் அனுஷ்டித்து அம்மனை வழிபட்டு வந்தால் மாங்கல்ய பலம் கூடும், தோஷங்கள் நிவர்த்தியாகும், மாங்கல்யத் தடை நீங்கும், பிள்ளைப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

============================================
பகுதி I-கைவண்ணம்:-

1) சித்திரமும் கைப்பழக்கம் பகுதியில் :-
(நான் வரைந்த ஓவியம் / எனக்குப் பிடித்த ஓவியம்)
a) R.சஞ்சீவ் ராகவன்:-

b) R. ரோஹித் ராகவன்:-

c) S.உத்பவ் ஷியாம் சுந்தர்:-
d) S.இரண்யா ஷியாம் சுந்தர்:

e) D. துர்கா 2ம் வகுப்பு. (தேங்காய் கொட்டாங்கச்சியில் பொம்மை)
f) குழந்தைகள் H. சாய் நந்தினி மற்றும் H.சாய் ஷிவானி சகோதரிகள்:- 
(நான் வரைந்த ஓவியம் / எனக்குப் பிடித்த ஓவியம்)





2. நகைச்சுவை-சிரி சிந்தி செயல்படு- பகுதியில் :-
1. (புகைப்படமும் விளக்கமும்):-
3. (புகைப்படமும் விளக்கமும்):-
"கோவில் பஜனை  பாடல்கள் பாடும்போது, பாடும் அனைவரோடு சேர்ந்து பாடு, அப்படி பாட்டைக்கேட்டு வாங்கி பாடமுடியாவிட்டால், தலையாவது ஆட்டு"....அன்புடன் என் பாட்டி எனக்கு சொன்னதை நான் உங்களுக்கு சொல்கிறேன் இப்படிக்கு AK.சபரி  ...
_________________________________________________
3. (புகைப்படமும் விளக்கமும்):-

_________________________________________________
4. (புகைப்படமும் விளக்கமும்):-
முதலில் தமிழ்  வாசிக்க கற்றுக்கொள்ளுங்கள்....வாருங்கள் நமது வைஷாலி வாசகர்வட்டத்தின் தமிழ் கற்கும் வகுப்புகளில் கலந்துகொண்டு, தரணி போற்றும் மொழி தமிழ் மொழியே!! என  பறைசாற்றுவோம்.....

_________________________________________________
5. (புகைப்படமும் விளக்கமும்):-

5. (புகைப்படமும் விளக்கமும்):-__
பொம்ம பொம்மதா தைய தையனக்கு, தின்னாக்கு னக்குதின் பஜன்கரே... உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா...பெங்களூரு ரமணி அம்மாளின், புகழ்மிக்க நர்த்தன விநாயகர் பாடல்.  
________________________________________________________

3. சிறுகதைகள் பகுதியில் :- சரியான விடைகளைக்கூறி சிறப்பு பரிசுகளை வெல்லுங்கள்.தொகுத்து வழங்கியவர்:-  (கோகி )
முதலாவது போட்டி :- வைஷாலி வாசகர் வட்டத்தின்... சரியான விடைகளைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்... போட்டி என்-4 ஆடி மாதம், இதழ்-4 தேதி 17-07-2016.

அது ஒரு விளையாட்டு வாகனம் (கார்) மகிழூந்து.  இப்போது நீங்கள் அந்த விளையாட்டு வாகனத்தை இயக்குகிறீர்கள் அல்லது ஒட்டுகிறீர்கள் என்றால்.

ஓட்டுனரான உங்களுக்கு பக்கத்தில் இருக்கும் இருக்கையில் (10) பத்து கிலோ எடை கொண்ட உங்களது சகோதரனை உட்காரவைத்து. வாகனத்தின் பின்புறம் இருக்கும் இரண்டு இருக்கைகளில் (25) இருபத்தைந்து கிலோ மற்றும் (30) முப்பது கிலோ எடை கொண்ட உங்களது இரண்டு சகோதரிகளை உட்காரவைத்து வாகனத்தை செலுத்துகிறீர்கள் என்றால் ..... கீழ் வரும் கேள்விகளுக்கான சரியான விடையைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள். 

1. வாகனத்தில் இருக்கும் மொத்த இருக்கைகள் எத்தனை?

2. வாகன ஓட்டுனரின் எடை என்ன?

3. வாகனத்தில் அமர்ந்திருக்கும் அனைவரின் மொத்த எடை என்ன?

4. வாகனத்தில் இருக்கும் உங்களின் இளைய மற்றும் மூத்த சகோதர சகோதரிகள் எத்தனை பேர்? 

5. வாகனத்தில் பெண்கள் அதிகமா? ஆண்கள் அதிகமா?

சரியான  விடைகளைக்கூறி சிறப்பு பரிசுகளை வெல்லுங்கள். சரியான விடைகளை 10-08-2016 தேதிக்கு முன்னதாக "vaishalireaderscircle@gmail.com" மின்னஞ்சலில் அனுப்பவேண்டும். 

சரியான விடையையும், சரியான விடை எழுதியவர்களுக்கான பரிசுகளும்  21-08-2016 (3-வது ஞாயிறு) அன்றைய, 30-வது வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில் வழங்கப்படும்.

போட்டிக்கான சரியான விடையை பலரும் குறிப்பிட்டிருந்தால், பரிசு பெறுபவர்-குலுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்.(கதைக் கருத்தாக்கம்-ரேடியோ கோபாலகிருஷ்ணன்).

1. விடை:- சென்ற மாத பரிசுப் போட்டிக் கதைக்கான முதலாவது கதையின் சரியான விடைகள்:-போட்டி என்-3 ஆணி மாத இதழ்-3 தேதி 19-06-2016. பொருத்தமான- மீதிக்கதை:-
விவரங்களை சென்ற ஆனி-மாத இதழை பாருங்கள்:-  மீதிக்கதை:-"சட்டென்று கண்விழித்துப் பார்த்தபோது, ஏண்டா இப்படி அலறுகிறாய்... தூக்கத்தில் அப்படி என்ன சொப்பனம்/ கனவு கண்டாய்...என்று, அம்மா என்னை கட்டிப்பிடித்து சமாதானம் கூறிக்கொண்டிருந்தார்கள்.......

பிறகுதான் புரிந்தது நான் கண்டது கனவு என்று, என் கனவில் நடந்தவைகளைக் அம்மாவிடம் கூறினேன். அன்றிலிருந்து பள்ளிக்கூடத்தின் நீச்சல் பயிற்சியில் தவறாது கலந்துகொண்டேன்..... (கதைக் கருத்தாக்கம்-ரேடியோ கோபாலகிருஷ்ணன்)

சரியான பொருத்தமான கதையை யாரும் தெரிவிக்கவில்லை என்பதால், போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது. 

==============================================
3. சிறுகதைகள் பகுதியில் :-இரண்டாவது போட்டி:- வைஷாலி வாசகர் வட்டத்தின் சரியான புகைப்படக் கதையைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் போட்டி என்-4 ஆடி மாத, இதழ்-4 தேதி 17-07-2016.

 
புகைப்படத்தில் உள்ள படத்தைப் பார்த்து 15-வரிகளுக்கு மிகாமல் பொருத்தமான கதை சொல்லவேண்டும். சரியான படக்கதை அடுத்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" வலைப்பதிவு இதழில் வெளியாகும். போட்டியில் பங்குகொள்ள விருப்பமுடையவர்கள் விடைகளை "vaishalireaderscircle@gmail.com" என்கிற மினஞ்சல் முகவரிக்கு 10-08-2016 முன்பாக அனுப்பிவைக்கவேண்டும். சரியான விடைஎழுதிய அனைவருக்கும் அடுத்தமாத வாசகர் வட்ட சந்திப்பில் பரிசுகள் வழங்கப்படும்.

சென்றமாதப் பரிசுப் போட்டிக்கான விடைகள்:-போட்டி என்-3 ஆணி மாத இதழ்-3, தேதி 19-06-2016. சரியான விடை கூறி பரிசை வெல்லுங்கள் பகுதி:-
விவரங்களை சென்ற ஆனி-மாத இதழை பாருங்கள்:-
0. கேள்வி:-உங்களின் அம்மாவுக்கு நீங்கள் ஆன் பிள்ளையா அல்லது பெண் பிள்ளையா? உங்களின் பெயர், மற்றும் வயது என்ன?

விடை:- போட்டியில் கலந்துகொள்ளும் உங்களது விவரங்களை நீங்கள் தெரிவிப்பதே, இந்தக் கேள்வியின் சரியான விடையாகும். மேலும் நீங்கள் தெரிவிக்கும் பதில் பின்வரும் கேள்விகளுக்கு தொடர்புடையவை :-

1. கேள்வி:- நீங்கள் மொத்தம் எத்தனை அழுக்குத் துணிகளை துவைத்தீர்கள்?

விடை:- (6) ஆறு துணிகள்...போட்டி விதியின்படி, அழுக்கு துணிகளை மட்டுமே துவைக்கவேண்டும் என்பதால் அப்பாவின் (2) இரண்டு முழுக்கை அழுக்கு சட்டையையும், உங்களுடைய (4) நான்கு  அழுக்கு துணிகள் மட்டுமே..... ஆகமொத்தம் (6) ஆறு துணிகள். 

2.கேள்வி:- நீங்கள் துவைத்து உலர்த்திய துணிகளில், ஒரு(1) துணி உலர்வதற்கு/ காய்வதற்கு (1) ஒரு மணி நேரம் தேவை என்றால், நீங்கள் துவைத்த மொத்த துணிகளும் உலர்வதற்கு /காய்வதற்கு எத்தனை மணி நேரம் தேவை?

விடை:- ஒரு (1) மணி நேரமே ஆகும். (நீங்கள் துவைத்து உலரவைத்த அனைத்து துணிகளும் ஒரே மணி நேரத்தில் காய்ந்துவிடும்)

3.கேள்வி:- துவைத்த துணிகளில் ஆண்கள் அணியும் துணிகள் மொத்த எண்ணிக்கை எத்தனை, பெண்கள் அணியும் துணிகள் மொத்த எண்ணிக்கை எத்தனை? 

விடை:- போட்டியில் கலந்துகொண்ட நீங்கள் ஆணாக இருந்தால்... (6) ஆறு ஆண்கள் அணியும் துணியும், (0)பூஜ்யம், பெண்கள் அணியும் துணிகள் ஏதும் இல்லை.ஆகா மொத்தம் (6) ஆறு துணிகள் உங்களால் துவைக்கப்பட்டது. 

(அல்லது)- போட்டியில் கலந்துகொண்ட நீங்கள் பெண்ணாக இருந்தால் (2) இரண்டு ஆண்கள் அணியும் துணியும், (4) நான்கு பெண்கள் அணியும் துணியும் ஆகா மொத்தம் (6) ஆறு துணிகள் உங்களால் துவைக்கப்பட்டது.

4. கேள்வி:- நீங்கள் துவைத்த துணியில், குறைவான எண்ணிக்கை கொண்ட துணி யாருடையது? 

விடை:- அப்பாவின் துணிகள் (2) இரண்டு மட்டுமே.

5.கேள்வி:- நீங்கள் துவைத்த துணியில், அதிக எண்ணிக்கை கொண்ட துணி யாருடையது?

விடை:- போட்டியில் கலந்துகொண்ட உங்களது துணிகளின் எண்ணிக்கைதான் (4) நான்கு, அதிக எண்ணிக்கை கொண்ட துவைத்த துணிகள். 

சரியான 6-விடைகளை எவரும் தெரிவிக்கவில்லை, இருவர் மட்டும் 4-விடைகளை சரியாக தெரிவித்தனர் என்பதால், போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது. 

ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ...ஒரு சிறு விளம்பர இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடர்ந்து வாசிக்கலாமா? 
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
விளம்பரம் :-இப்பகுதியை உங்களுக்கு வழங்குபவர்:-
==============================================================
3. சிறு கதைகள்:- கதை கதையாம் காரணமாம் பகுதி:- இந்தமாதம் ஆன்மீக மாத சிறு கதைகள்:-

மண்ணெண்ணையில் லட்டு பிரசாதமா?  இந்த உண்மைச் சம்பவம் எங்கு ? எப்போது நடந்தது? 

ஒரு சமயம் சித்தேஸ்வரி பீடத்தில் நவராத்திரி விழா எப்போதும் போல் விமரிசையாக நடக்க இருந்தது. எல்லா அனபர்களுக்கும் தொண்டர்களுக்கும் பிரசாதம் வினியோகிக்க என்ன செய்யலாம் என்று பலர் யோசிக்க கடைசியில் பிரசாதம் லட்டு என்று தீர்மானிக்கப்பட்டது. அதற்கு முன் கூட்டியே தேவையான நெய்க்கு சில வியாபாரிகளிடம் தொண்டர்கள் சொல்லி வைத்திருந்தனர்.                   

"என்னப்பா நெய் வந்துவிட்டதா ?நேரம் போகிறதே.  இன்னும்  லட்டு வேறு பிடிக்க வேண்டுமே"  
                                                                                         
"ஆமாம் எனக்கும் அந்தக்கவலைதான் என்ன ஆச்சோ? ஒரு வியாபாரிக்குமா ஞாபகமில்லாமல் போய்விடும்".... 

"என்ன செய்வது! பக்தர்கள் கூட்டம் வர ஆரம்பித்து விட்டதே"  இப்ப லட்டு பிடிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்கள் கவலையால் முகம் களையிழ்ந்து நிற்கு அங்கு திடீரென்று பிரவேசம் செய்தார் ஒரு சித்தர். 

எல்லோரும் ஆச்சரியமாக அவரைப்பார்த்து வாயடைத்து நிற்க அவர் "என்ன இன்னும் நெய் வரலையா? அதான் கவலையா?' என்றார்  அவரே மௌனானந்த சுவாமிகள் என்ற சித்த புருஷர். வந்தவர் அமைதியாக ஒரு கரி அடுப்பை மூட்டி ஒரு பெரிய இரும்பு சட்டியைக்கொண்டு வரச்சொன்னார்.

" மகனே ஆச்ரமத்தில்  மண்ணெண்ணை இருக்கா ?"                                           

"இருக்கு சுவாமி "                                                                                                               

"சரி இரண்டு டின் கொண்டுவா"                                                                                     

இரண்டு டின் மண்ணெண்ணை வந்ததும் லட்டு செய்யும் வேலை ஆரம்பமாகியது இரும்பு சட்டியில் மண்ணெண்ணை ஊற்றி, ஏதோ ஒரு பச்சிலை மூலிகையின் சாரை பிழிந்து காய்ச்சினார். அது கமகமக்கும் நெய்யானது. அதன் வாசனை ஊரைத்தூக்கியது அதை வைத்து ஐயாயிரம் லட்டுக்கள் தயாரானது. 

சீரடி பாபா ஜி, தன் வாயிலிருந்து உமிழ்ந்த நீரால் விளக்கை ஏற்றியது போல் இந்த சித்தர்  மண்ணெண்ணையிலிருந்து நெய் உண்டு செய்திருக்கிறார். இவர்மூ லிகைக்கொண்டு பல அற்புதங்களைச் செய்தவர். மூலிகைகளின் மஹத்துவத்தை அறிந்து பலருக்கு வைத்தியம் செய்தவர். தேள் கடி, பாம்பு கடி போன்றவைகளை மூலிகைச்சாரால் குணப்படுத்திவிடுவார். மாதர்கள் குழந்தை பேறுவின் போது இவரிடமிருந்து ஒரு வேர் வாங்கிச்சென்று   தங்கள்   தலைகாணி அடியில் வைத்துக்கொள்ள சுகப்பிரசவம் ஏற்படும். சில மூலிகைக்கொண்டு சில உலோகங்களைத் தங்கமாக ஆக்கும் திறனும் இவரிடம் இருந்தது. இந்த மௌனானந்தர் சுவாமிகள் 1943ல் சித்தி அடைந்தார்.  இவரது சமாதி சித்தேஸ்வரி பீடத்தில்  இருக்கிறத. 

நன்றி  http://meerambikai.blogspot.in/
-----------------------------------------------------------------------------
4. கட்டுரை:- இந்தமாதம் ஆன்மீக மாத கட்டுரைகள்:- உங்கள் கவனத்திற்கு வழங்கியவர்:- திரு முத்துக் கிருஷ்ணன் அவர்கள் .  
அ ) இன்று ஒரு தகவல் பகுதியில்:-

நமது வைஷாலி திரு முத்துக்கிருஷ்ணன் அவர்களின் முகநூல் பதிவிலிருந்து:- பஞ்சாங்க குறிப்புகள் என்றும் பொய்ப்பதில்லை. இந்தத் தேதியில், இந்த்தனை மணிக்குச் சந்திர அல்லது சூரிய கிரஹணம் என்று குறிப்பிட்டிருந்தால் அன்று, அந்த நேரத்தில் நிகழ்ந்தே தீரும். அதுபோல் நிகழும் துர்முகி வருஷத்திய பலன் வெண்பா கூறுகிறது: மிக்கான துர்முகியில் வேளாண்மை யேறுமே, தொக்க மழை பின்னே சொரியுமே - மிக்கான, குச்சர தேசதில் குறை தீரவே விளையும், அச்சமில்ல வேள்ளையரிதாம். மேலும் இவ்வருஷத்தில் மழையின் விபரம்: வைகாசி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் நல்ல மழை பொழியும், ஆடி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி மாதங்களில் மிதமான மழையும், மற்றும் சித்திரை, ஆனி, மார்கழி, பங்குனி மாதங்களில் ஓரிரு இடங்களில் குறைவான மழையும் பெய்யும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மக்கள் அனுமானம் பொய்க்கலாம், மகேசன் போட்ட திட்டங்கள் பொய்க்குமோ?
உன் கவலைதான் என்ன? என்னிடம் கூறிவிடு நானே உனது சத்குரு; என்னையே நினை; என் நாமத்தையே ஸமரணம் செய்து என்னை வணங்கி என் பாதங்களில் சரணடை அது போதும் உனக்கு. நீ எதற்கும் பயப்படாதே. நீ ஏன் கவலை படுகிறாய்? என்னை நீ தஞ்சமடைந்து விட்டாயல்லவா. நான் பார்த்து கொள்கிறேன். இனி எதற்கும் நீ பயப்பட தேவைஇல்லை. உனது மனம், புத்தி, அகங்காரம் எனும் மூன்றையும் என்னிடம் சமர்ப்பித்துவிடு. இவ்வுலக வாழ்க்கையில் உன் கையில் ஏதுமில்லை. எல்லாவற்றையும் நானே இயக்குகிறேன் என்ற மனோபாவத்தை ஏற்படுத்திகொள் . எதிலும் அவசரபடாதே பொறுமையாய் இரு. என் மீது உன் பாரத்தை இறக்கு, நான் சுமக்கிறேன. என் மீது முழு நம்பிக்கை வைத்து நீ செய்யும் அனைத்து செயல்களுக்கும் என்னை பொறுப்பாளியாக்கு உன் செயலை உன் விருப்பபடி நான் செய்து முடிக்கிறேன்...நம்பிக்கை எனும் அச்சாணியாக என்னை உன் மனதில் நிறுத்து. பொறுமையாய் வாழ்ந்து வா....உன்னை சேர்ப்பிக்க வேண்டிய இடத்தில் நான் சேர்க்கிறேன். என்னை சரணடைந்து உன்னை என்னிடம் ஒப்படைத்துவிட்டு என் மீது முழு நம்பிக்கை வை உன் பாரம் மட்டும் அல்ல உன் பாவத்தையும் நான் சுமக்க தயாராக இருக்கிறேன். என் வார்த்தைகளின் மீது நம்பிக்கை வை.." ஓம் ஸ்ரீ சாய் ராம்". நன்றி இப்படிக்கு முத்துகிருஷ்ணன். 

====================================
4. கட்டுரை:2- இந்தமாதம் ஆன்மீக மாத கட்டுரைகள்:-

மனிதர்கள், தேவர்கள், ப்ரம்மா, மற்றும் விஷ்ணுவின் ஆயுட்காலம் பற்றிய கணக்கை தெளிவாக விளக்குகிறார் தெய்வத்திரு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள். மேற்கண்ட காணொளி இணைப்பில் காண்க. நன்றி வைஷாலி வாசகர் வட்டம்.

====================================
4. கட்டுரை-3 :- இந்தமாதம் ஆன்மீக மாத கட்டுரைகள்:-
ஆழ்வார் திருநகரி கோவில் நம்மாழ்வார் வாசம் செய்த புளியமரம் சொற்பொழிவுடன் வரலாறு நிறைந்த அற்புதமான வீடியோ... 
====================================
4). கட்டுரை-4:- இந்தமாதம் ஆன்மீக மாத கட்டுரைகள்:- அனைவருக்கும் ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி வாழ்த்துகள்.....(25-Aug-2016)
இப்போது உங்களுக்கு சொல்லப்போகும் இடம் உலகிலேயே மிகச்சிறந்த புண்ணிய பூமி என்று அழைக்கப்படும் இடம்,  அந்த இடம் வட இந்தியாவின், ஹரியானா மாநிலத்தில் இருக்கும்   "குருக்ஷேத்ரா" என்கிற இடம். இங்குதான் கீதையின் ஸ்ரீ கண்ணன் விஸ்வரூபமாகக் காட்சியளித்த இடம்.... இந்த விசுவரூபத்தைக் கண்டவர்கள் அர்சுனன், கர்ணன், பீஷமர். புண்ணிய ஆன்மீகப் நூலான கீதைப்பிறந்த இடமும் இதுதான் எல்லா வைஷ்ணவகோயிலில் தினமும் ஒலிக்கப்படும் விஷ்ணு சஹஸ்ரநாமம் பிறந்த இடமும் இதுதான்.

பீஷ்மர் அம்பால் வீழ்த்தப்பட்டு.... அம்பால ஆனப்படுக்கையில் படுத்துக்கிடக்கிறார் அவருக்குத்தன் உயிரை தன் இஷடப்படி விடும் சக்தி இருந்தது. அதனால் உத்த்ராயணம் வரைக்காத்திருந்தார். அவர் படுத்தபடுக்கை அருகே பிரும்மனால் உண்டாக்கப்பட்ட ஏரியும் இருந்தது. இதனால் அந்த இடத்தில் உயிர் இழப்பு/ இறப்பு என்பதே  நிகழாது . இந்த நேரத்தில் கன்ணன் பீஷ்மர் முன் தோன்றினான. வெறும் கண்ணனாக அல்ல...... சங்கு, சக்கராயுத வடிவமான அந்த மகாவிஷ்ணுவாகவே தோன்றினான். உடனே பீஷ்மர் மெய்மறந்தார். அவர் வாயிலிருந்து சஹஸ்ர நாமங்கள்.... விஷ்ணுவைக்குறித்து பொலபொலவென்று கொட்டின.  ரதசப்தமி வரை உயிருடன் இருந்து பின் அஷ்டமி அன்று தன் உயிரை விட்டார்.  இதுவே பீஷ்மாஷ்டமி  எனவும் அன்றயதினம் சஹஸ்ரநாமம் சொல்ல மிகவும் உயர்ந்த நிலையையடையலாம் என்பது ஆன்றோர்வாக்கு.
கண்ணன் இதுபோல் காலடி வைத்த இடம் பல வடநாட்டில் உள்ளன எழுத எழுத திகட்டாது தேன் போல் இனிக்கும்  கீதை. 

அனைவருக்கும் ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி வாழ்த்துகள்...... (25-Aug-2016) அன்புடன் "சுட்டீஸ்" வைஷாலி வாசகர் வட்டம்.........
====================================
4). கட்டுரை-5:- இந்தமாதம் ஆன்மீக மாத கட்டுரைகள்:-
உலகிலேயே மிக நீண்ட நூலான மஹாபாரதத்தை இயற்றிய, உலகிலேயே மிகப் பழைய நூலான வேதங்களை நமக்குப் பாதுகாத்து அளித்த, உலகிலேயே அதிகமான சமயக் கதைகளைக் கொண்ட 18 புராணங்களை நமக்கு தொகுத்துத் தந்த, வியாச மாமுனிவருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசையும் இலக்கியத்துக்கான நோபல் பரிசையும் தரலாம்.
 அவர் செய்த மகத்தான இலக்கியப் பணிகளாக அவர் வாழ்ந்த கி.மு.3100-ல் வேதங்கள் அழிந்துவிடும் அபாயம் ஏற்பட்டது. காரணம் அதை எழுதக் கூடாது, வாய் மொழியாகத்தான் கற்க வேண்டும் என்ற விதி இருந்தது. யாரும் அத்தனை வேதங்களையும் மனப்பாடம் செய்ய முடியாது. மேலும் வேதங்கள் எண்ணிக்கையில் கடல் போலப் பெருகிவிட்டன. உடனே அவர், அழிந்துபோனதைத் தவிர மிச்சமுள்ள வேதங்களைத் தொகுத்து நாலு மிகப் பெரிய அறிவாளிகளை அழைத்து அவர்கள் மூலம் பரவச் செய்தார். இன்று வரை வாய் மொழியாக வேதம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. உலகில் இப்படிப்பட்ட அதிசயத்தை வேறு எங்குமே காணமுடியாது.


===============================================
4) கட்டுரை-6:- இந்தமாதம் ஆன்மீக மாத கட்டுரைகள்:-
புனிதமும், மருத்துவமும் நிறைந்த துளசி செடி, ஒவ்வொருவர் இல்லத்திலும் அவசியம் இருக்கவேண்டிய தாவரம்.  எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடிதான். 

அன்பை அளவிட........... ஒரு முறை கிருஷ்ணரின் மேல் சத்தியபாமாவுக்கு அளவு கடந்த அன்பு என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் அதில் சிறிதளவு கர்வமும் கலந்திருந்தது. தனது அன்பர்களுக்கு ஏற்படும் கர்வத்தையே சுட்டிக்காட்டி திருத்தும் பரந்தாமன், அன்புக்குரியவளுக்கும் அதை புரியவைக்க சித்தம் கொண்டார். 

ருக்மணியை விட தாமே, கண்ணனின் மேல் அதிக காதல் (அன்பு) கொண்டுள்ளதாக எண்ணியிருந்தாள் சத்தியபாமா. அந்த கர்வம் என்ற கனவை கலைக்கத்தான், கண்ணன் விரும்பினார். அதன்படி, 'உங்கள் இருவரில் என் மேல் யார் அதிக அன்பு வைத்திருக்கிறீர்கள் என்பதை அறிய ஒரு போட்டி வைக்கலாம் என்று எண்ணியுள்ளேன்' என்றார் கிருஷ்ண பரமாத்மா. 
.
துலாபாரம் வைத்து அன்பை எடைபோடுவது என்று முடிவானது. துளசியின் பெருமை துலாபாரத்தின் ஒரு புறம் கிருஷ்ணர் அமர்ந்து கொண்டார். மறுபுறத்தில் பொன்,வைரம், வைடூரியம், மாணிக்கம் என விலை உயர்ந்த பொருட்களை சத்தியபாமா அடுக்கிக்கொண்டே இருந்தார். ஆனால் அவருக்கு ஆச்சரியம்தான் மிஞ்சியது. கிருஷ்ணர் இருந்த கரையின் துலாபாரம் சிறிது கூட மேல் எழும்பவில்லை. 
.
அடுத்ததாக ருக்மணியின் முறை வந்தது. இப்போது ருக்மணி பொன், பொருள்களை துலாபாரத்தில் வைக்கவில்லை. அதற்கு மாறாக, கொஞ்சம் துளசி இலையை மட்டும் வைக்க துலாபாரம் சமநிலையை அடைந்து, பிரமிக்கவைத்தது. இதில் இருந்தே துளசியின் தூய்மையையும் பெருமையையும், சக்தியையும் அறியலாம். 
.
எந்த ஒரு பொருளை தானம் செய்யும்போது, தானம் கொடுக்கும் பொருளுடன், ஒன்றிரண்டு துளசி இலைகளையும் சேர்த்து வழங்கும்போது, நாம் வழங்கும் தானமானது உயர்வை அடையும் என்று தர்ம சாஸ்திரம் கூறுகிறது. 'எவன் ஒருவன் துளசி பத்ரம் கொண்டு வருகிறானோ, அவனுடன் நானும் வருகிறேன்'- என்று கூறுகிறார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர். 
.
துளசி அனைத்து பக்தி தொண்டுகளின் சாரம். துளசி இலை பூ, வேர்கள், கிளைகள், நிழல் எல்லாம் ஆன்மீகமானவை. பக்தியுடன் துளசியின் இலையை கிருஷ்ணருக்கு அளிப்பவர் அவர் அருகிலேயே வாழ்வர்.
.
துளசியின் மண்ணை எடுத்து உடலில் பூசிக்கொண்டு ஸ்ரீ கிருஷ்ணரை வணங்குபவர், ஒவ்வொரு நாளும் நூறு நாள் பூஜை செய்த பயனை அடைவர்.

துளசி மஞ்சரியை கிருஷ்ணருக்கு அளிப்பவர் மற்ற எல்லா புஷ்பங்களையும் அளித்த பலனை பெறுவர். ஒருவர் துளசியை பார்த்தாலோ, அல்லது அது இருக்கும் வீட்டிற்கோ, தோட்டத்திற்கோ சென்றால் அவர் ஒரு பிராமணனை கொன்ற பாவத்தில் இருந்தும் கூட, விடுதலை பெறுகிறான்.

துளசி உள்ள காடுகள் வீடுகள் ஆகிய இடங்களில் கிருஷ்ணர் ஆனந்தமாக வசிக்கிறார். துளசி உள்ள வீடுகள் எந்த கேடான காலத்திலும் வீழ்ச்சி அடையாது. அதுவும் அல்லாமல் எல்லா புனித ஸ்தலங்களிலும் புனிதமானது.

துளசியின் வாசனை முகர்ந்து பார்க்கும் அனைவரையும் தூய்மையாக்கும். துளசி உள்ள இடங்களில் கிருஷ்ணரும், மற்ற எல்லா தெய்வங்களும் வசிப்பார்கள். துளசி இல்லாமல் கிருஷ்ணர் பூவோ, உணவோ அல்லது சந்தனத் தைலமோ ஏற்பதில்லை.

துளசியைக் கொண்டு கிருஷ்ணரை தினமும் வணங்கும் பக்தர்கள், எல்லா ஸ்தலங்களையும், தானங்களையும், மற்றும் தியாகங்களையும் செய்தவர் ஆகிறார். சொல்லப் போனால் அவருக்கு செய்ய வேண்டிய வேறு கடமைகள் இல்லை. அத்தோடு, அவர் எல்லா இலக்கியம் மற்றும் புராணங்களையும் படித்தவர் ஆகிறார்.

கிருஷ்ணருக்கு படைக்கப்பட்ட துளசியை தலையிலோ, வாயிலோ போட்டுக் கொண்டவர் கிருஷ்ணரின் திருநாட்டிற்குள் நுழைவர். கலியுகத்தில் ஒருவர் துளசியை நினைத்தாலோ, வளர்த்தாலோ, வணங்கினாலோ அவர் எல்லா பாவங்களிலிருந்தும் விடுபட்டு இறுதியில் கிருஷ்ணரை அடைகிறார்கள்.

துளசியை கொண்டு கிருஷ்ணரை பூஜிப்பவர் தன் முன்னோர் அனைவரையும் (பிறவித் தளையிலிருந்து) விடுவிக்கிறாh. துளசியின் மகிமையை பிறருக்குச் சொன்னால் ஆன்மீக உலகில் நிலையான ஓரிடம் காத்திருக்கும் என்பது திண்ணம்.

மும்மூர்த்திகளும்........ துளசியின் நுனியில் பிரம்மதேவரும், அடியில் சிவபெருமானும், மத்தியில் திருமாலும் வாசம் செய்கின்றனர். தவிர பன்னிரண்டு ஆதித்யர்கள், பதினோரு ருத்திரர்கள், எட்டு வசுக்கள், அக்னி தேவர்கள் இருவர் மற்றும் புஷ்கரம் முதலிய தீர்த்தங்கள், கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகள், வாசுதேவர் போன்ற தேவர்கள் துளசி தளத்தில் வசிக்கின்றனர். 

துளசி இலை பட்ட நீரானது, கங்கை நீருக்கு சமமாக கருதப்படும். இதனால் தான் துளசி நீரால், இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. சிறு இலைக்கு என்ன மகத்துவம் இருந்து விடப் போகிறது என்று பலரும் எண்ணம் கொண்டிருக்கலாம். 

எப்போதும் புதிய நிலையில் துளசியை 3 நாட்களுக்கு சேமித்து வைக்கலாம். வாடினாலும் அது பரிசுத்தமானதாகவே கருதப்படும். தெய்வ வழிபாட்டிற்கும் பயன்படுத்தலாம். பூக்களை பூஜைக்கு பயன்படுத்தும் போது, அன்றைய தினம் பூத்த மலர்களையே கீழே உதிர்வதற்கு முன்பிருக்கும் நிலையில் பறித்து பயன்படுத்த வேண்டும் என்பது வழிபாட்டு நியதி. இதனால் பூக்களில் பரிசுத்தமானது, பரிசுத்தமற்றது என்ற வேறுபாடு உண்டு. ஆனால் துளசியில் அந்த வேறுபாடு கிடையாது. அது எப்போதுமே பரிசுத்தமானது. பூஜைக்கு பயன்படுத்துவதில் துளசியை பொருத்தவரை புதியது, பழையது என்ற நிலை கிடையாது. அது எப்போதும் புதிய நிலையைக் கொண்டது.  

தரையிலோ, நீரிலோ விழுந்தாலும், கோவிலில் இறை வழிபாட்டுக்கு பின்னர் ஒதுக்கி வைக்கப்பட்டதாக இருந்தா லும், துளசிக்கு புனித தன்மை உண்டு. அதை வீட்டிற்கு கொண்டு வந்து பூஜைக்கு பயன்படுத்தலாம். துஷ்ட சக்திகள் அண்டாது சமஸ்கிருதத்தில் துளசிக்கு, 'ப்ருந்தா' என்று பெயர். துளசி காட்டிற்கு பிருந்தாவனம் என்று பெயர். இதனால் தான் துளசி காடான பிருந்தாவனம், அந்த பரந்தாமனின் மனம் கவர்ந்த இடமானது. 

எந்த இடத்தில் துளசி வளர்ந்திருக்கிறதோ அங்கு மும்மூர்த்திகளுடன், அனைத்து தேவர்களும் வசிக்கிறார்கள் என்று அர்த்தம். வீடுகளில் துளசிச் செடி வைத்து வளர்ப்பதும், அதனை பால், அபிஷேக நீர், கங்கை நீர் கொண்டு வளர்ப்பதும், தினமும் பூஜை செய்து வழிபடுவதும் சிறப்பான பல நல்ல பலன்களை தரும். துளசிச் செடி உள்ள வீட்டில் எந்த துஷ்ட சக்திகளும் நுழையாது. 

விஷப்பூச்சிகள் வராது. உள்வரும் அசுத்த காற்றும், துளசியின் மருத்துவ குணத்தால் நம்மை அண்டாது. எனவே குழந்தைகள் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும். மாங்கல்ய பலத்துக்கு பெண்களின் மாங்கல்ய பலத்துக்கு துளசி பூஜை என்பது முக்கியமானது. 

தங்களின் வீடுகளில் துளசி மாடம் அமைத்து அதற்கு விளக்கேற்றி காலை, மாலை என இரு வேளைகளில் பூஜை செய்து மாடத்தினை வலம் வந்து வழிபட்டால் பலன் கிடைக்கும். துளசி மாடத்தை பூஜிக்க, வேறு துளசி செடியில் இருந்துதான் இலைகளை பறித்து பயன்படுத்த வேண்டும். துளசி வனம் இருக்கும் வீட்டில் துர்மரணங்கள் நிகழாது. நாராயணருக்கு, தினமும் துளசியால் அர்ச்சனை செய்து வழிபடுபவர்களுக்கு மறு பிறவி கிடையாது என்றும் பத்மபுராணம் கூறுகிறது.......... நன்றிகளுடன் வைஷாலி வாசகர் வட்டம்.

====================================
4) கட்டுரை-7:- இந்தமாதம் ஆன்மீக மாத கட்டுரைகள்:-இஸ்லாமிய முல்லா கதைகள்:-

அலட்சியத்துக்குக் கிடைத்த பரிசு:- 

ஒருநாள் முல்லா அயல் ஊர் ஒன்றுக்குச் சென்றிருந்தார். அந்த ஊரில் பொதுமக்கள் குளிப்பதற்காக ஒரு பொது குளியல் அறை இருந்தது.  முல்லா அங்கே குளிப்பதற்காகச் சென்றார்.

அப்போது முல்லா மிகவும் அழுக்கான உடையை அணிந்திருந்தார். அதனால் அங்கிருந்த வேலைக்காரர்கள் முல்லாவை சரியாகக் கவனிக்க வில்லை. அலட்சியமாக அவரை நடத்தினர். சீக்கிரம் குளித்து விட்டுச் செல்லுமாறு அவரை அவசரப் படுத்தினர்.

குளித்து முடித்து விட்டு வெளியே வந்த முல்லா வேலைக்காரர் ஒவ்வொருவருக்கும் ஆளுக்கு ஒரு தங்கக் காசை அன்பளிப்பாகக் கொடுத்தார்.

அதைக் கண்டு வேலைக்காரர்கள் பிரமித்துப் போய்விட்டனர். இவர் பெரிய செல்வந்தர் என்பதை முன்னதாகத் தெரிந்த கொள்ளமால் போய் விட்டோமே. இவரை நன்கு கவனித்து உபசாரம் செய்திருந்தால். இன்னும் நிறைய தங்கக் காசுகள் கொடுத்திருப்பாரே என்று நினைத்தனர்.

இரண்டு நாட்கள் கழித்து முல்லா மறுபடியும் அந்தக் குளியல் அறைக்குக் குளிக்கச் சென்றார். வேலைக்காரர்கள் முல்லாவை அடையாளம் கண்ட கொண்டனர். உடனே அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு முல்லாவுக்கு ராஜ உபசாரம் செய்தனர். உடலில் தேய்த்துக் கொள்ள நறுமணப் பொடிகள் தந்தனர். வாசனைப் பன்னீர் கொடுத்தனர். அவர்கள் முல்லாவை சூழ்ந்து கொண்டு அவர் உடம்பை அழுக்குப் போகத் தேய்த்து நிராடச் செய்தனர். உயர்தரமான துவாலையை உடல் துவட்டக் கொடுத்தனர். பிறகு அவர் உடலில் வாசனை திரவியங்களைப் பூசினர்.

அன்று முல்லா தங்களுக்கு ஆளுக்கு ஐந்தைந்து பொற்காசுகளாவது அன்பளிப்பாக் கொடுப்பார் என்று எதிர்பார்த்தனர்.

முல்லா ஆளுக்கு ஒரு செப்புக் காசுதான் கொடுத்தார்.

வேலைக்காரர்கள் மிகவும் ஏமாற்றமடைந்து இவ்வளவு சிரமப்பட்டு உங்களுக்கு உபசாரம் செய்ததற்கு இந்தச் செப்புக்காசுதானா பரிசு ? என்று கேட்டனர்.


முல்லா உடனே அன்றைய தினம் நான் உங்களுக்கு அளித்த பொற்காசு இன்று நீங்கள் செய்த உபசாரத்திற்கான பரிசு. இன்று கொடுப்பதோ அன்று நீங்கள் என்னை அலட்சியப்படுத்தியமைக்காகக் கொடுத்த பரிசு என்று கூறியவாறே குளியலறையை விட்டு வெளியே நடந்தார். நன்றி- ஈகரை இணையம் http://eegaraimulla.blogspot.in

============================================

4) கட்டுரை-8:- இந்தமாதம் ஆன்மீக மாத கட்டுரைகள்:-இயேசு பைபிள் நீதிக்கதைகள்  :- 

நல்ல வசதி படைத்த விவசாயி ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள், முத்தவர் மிகவும் நல்லவர், தந்தை சொல் கேட்டு நடப்பவர், இறைவனிடம் பயம் கொண்டவர். இளையவரோ தீயவர்களின் நட்பு கொண்டு, மிகவும் கெட்டவராக இருந்தார். தந்தையில் சொல் கேட்காமல் தான் தோன்றித்தனமாக திரிந்தார்.

வீட்டில் விருந்து படைத்தால் இது என்ன விருந்தா இது, இதை பன்றி கூட திங்குமா என்று ஏளனம் செய்வார். ஒரு நாள் இளையவர் தந்தையிடம், அப்பா, சொத்தில் எனக்குரிய பங்கை பிரித்து தாரும் என்றார்.. தந்தை எவ்வளவு சொல்லியும் கேளாமல், சொத்தை பிரித்து வாங்கிக் கொண்டார். அதிலும் நல்ல செல்வசெழிப்பானவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டார். நிலங்களையும், தங்கம் முதலியானவற்றை விற்று காசாக்கி நண்பர்களோடு வேறு ஒரு நாட்டிற்கு சென்றான். அங்கே கெட்ட நண்பர்களோடு பணத்தை இஷ்டம் போல் செலவு செய்தான்.

கொஞ்சம் கொஞ்சமாக கையில் இருந்த பணம் குறைய குறைய நண்பர்களும் விட்டு விலகினர், இறுதியில் ஒரு வேளை சாப்பாட்டிற்கே கஷ்ட்ப்படும் நிலைக்கு போக, ஒருவரும் அவனிடம் இல்லை, அவனது உடைகளைக் கூட திருடிக் கொண்டு, அவனது நண்பர்கள் ஓடி விட்டார்கள். பசி, கடும் பசி, சாப்பிட ஒன்றும் இல்லை, கையில் பணமும் இல்லை.

அங்கே இங்கே என்று அழைந்து இறுதியில் ஒருவரிடம் வேலை கேட்டு, அவரிடம் வேலைக்கு சேர்ந்தான். அந்த இளைய மகனின் வேலை என்ன தெரியுமா? தினமும் பன்றிகளை மேய்ப்பது, இரவில் மட்டுமே அவனுக்கு உணவு கிடைக்கும், அதுவும் மிகவும் குறைவான, பழைய சாப்பாடே கிடைக்கும்.

ஒரு சில நாட்களில் அவனுக்கு காலையிலும், மத்தியானமும் பசி கடுமையாக எடுத்தது, அதனால் அவன் செய்த காரியம் என்ன தெரியுமா? பன்றிகளுக்காக வைக்கப்பட்ட கெட்டு போன உணவுகளை சாப்பிடத் தொடங்கினான். ஒவ்வொரு முறையும் தந்தையார் கொடுத்த அருஞ்சுவையான உணவை எட்டி உதைத்ததையும், உதாசினப்படுத்தியதையும் நினைத்து கண்ணீர் விட்டான்.

ஒருநாள் அவன் பன்றிக்காக வைத்திருந்த உணவை சாப்பிடுவதை கண்ட முதலாளி, அவனை கடுமையாக அடித்து, உதைத்தார். மீண்டும் அவன் வேலை இல்லாதவனாகி விட்டான். கடைசியில் கஷ்டப்பட்டு ஒருவழியாக தன் தந்தையார் இருக்கும் இடத்திற்கு வந்தான்.

அப்போதுதான் அவனது அறிவு தெளிவடைந்தது. என் தந்தையிடம் மீண்டும் சென்று, அப்பா, உங்களுக்கு எதிராக பாவம் செய்து விட்டேன். உங்கள் மகன் என்று கூற எனக்கு எந்த தகுதியும் இல்லை. உங்கள் வேலையாட்களில் ஒருவனாக பணியாற்ற அனுமதியுங்கள் என்று கேட்டு கொள்வதாக மனதிற்குள் கூறிவிட்டு தந்தையின் வீட்டிற்கு புறப்பட்டான்.

தொலை தூரத்தில் இளைய மகன் வந்து கொண்டிருப்பதை பார்த்தவுடன் தந்தை ஓடிச் சென்று அவனை கட்டி தழுவி முத்தமிட்டார். தந்தையின் செயல்களால் வெட்கமடைந்த இளைய மகன் அவரிடம், அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன். இனிமேல் உம்முடைய மகன் என்று கூற நான் தகுதியற்றவன் என்றார்.

ஆனால் தந்தை தனது வேலையாட்களை அழைத்து, முதல் தரமான ஆடையை கொண்டு வந்து இவனுக்கு உடுத்துங்கள். கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள். நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம். ஏனெனில் என் மகன் இறந்து போயிருந்தான். மீண்டும் உயிர் பெற்று வந்துள்ளான். காணாமல் போயிருந்தான். மீண்டும் கிடைத்துள்ளான் என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாட தொடங்கினர்.

அப்போது வயலில் வேலை செய்து கொண்டிருந்த மூத்த மகன் வீட்டிற்கு திரும்பி வந்த போது, ஆடல் பாடல்களை கேட்டு என்ன நடக்கிறது என்று வேலையாட்களிடம் கேட்டான். அதற்கு அவர்கள், உங்க தம்பி வந்திருக்கிறார். அவர் நலமாக திரும்பி வந்ததால் உங்க தந்தை விருந்திற்கு ஏற்பாடு செய்துள்ளார் என்றனர். இதனால் கோபமடைந்த மூத்தவன், வீட்டிற்குள் செல்லாமல் வெளியே நின்று கொண்டிருந்தான். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து மூத்தவனை வீட்டிற்குள் வருமாறு அழைத்தார். அதற்கு மூத்தவன், தந்தையிடம் உங்க கட்டளைகளை ஒருபோதும் நான் மீறியதில்லை. இருப்பினும் எனது மகிழ்ச்சிக்காக நீங்கள் எதுவும் செய்யவில்லை. ஆனால் உங்க சொத்துக்களையெல்லாம் அழித்து விட்ட இந்த மகனுக்கு விருந்து வைப்பது தேவையா? என்றார்.

அதற்கு தந்தை, மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய். என்னுடையதெல்லாம் உன்னுடையதே. இப்போது நாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில், உன் தம்பி இறந்து போயிருந்தான். மீண்டும் உயிர் பெற்றுள்ளான் என்றார்.


கதையை சொல்லி முடித்த இயேசு, தன் சீடர்களை நோக்கி “தவறு செய்து மனம் திருந்தினால், நமக்கும் இத்தகைய வரவேற்புதான் இறைவனிடமிருந்து கிடைக்கும்” என்று சொன்னார். நன்றி- திரு பரஞ்சோதி அவர்களின் "சிறுவர் பூங்கா" வலைப்பதிவு http://siruvarpoonga.blogspot.in

=================================================

4. கட்டுரை:- இந்தமாதம் ஆன்மீக மாத கட்டுரைகள்:-
ஆ) பொது அறிவுத் தகவல்கள் பகுதியில்:-(விஞானமும் மெய்ஞானமும்):
1. சூரியனை கண்டதும் கூத்தாடும் எலுமிச்சம்பழம்!!!,

நன்கு பழுத்த ஒரு எலுமிச்சம்பழம் எடுத்துக்கொண்டு அதன் காம்பு இருக்கும் தலைப்பகுதியை விடுத்து எலுமிச்சம்பழத்தை நடுப்பகுதியில் ஒரு கூரான ஆணி போன்ற ஆயுதத்தால் ஒரு அங்குல துளையிட்டு அந்தத்துளையில் பாதரசத்தை (ஒரு மேசைக்கரண்டி அளவு 1மில்லி கிராம்) ஊற்றவேண்டும் பிறகு அந்த துளையை அரக்கு மெழுகு கொண்டு மூடி அந்த எலுமிச்சை பழத்தை வெய்யில் படும்படி போட்டால் ... எலுமிச்சம்பழம் கூத்தாடும்.  

எடையில் கனமான பாதரசம், சிட்ரிக் அமிலத்தன்மை கொண்ட எலுமிச்சையும், சூரிய வெப்பத்தினால் மிக வேகமாக வினைபுரிந்து பாதரசம் வெப்பத்தினால் அதன் அடர்த்தி விரிந்து வேகமாக எலுமிச்சம் பழத்தைவிட்டு வெளியேற முயற்சி செய்யும்... பாதரசம் மிகவும் கனமானது என்பதால் வெப்ப வினையினால் எலுமிச்சம்பழத்தை குதித்து கூத்தாடவைக்கும்.  இதைத்தான் பிசாசு /சாத்தான் வந்துவிட்டது என்று கூறி ஏமாற்று வித்தை செய்பவர்கள் மக்களை ஏமாற்றிவருகிறார்கள். 

2. திருடர்களின் முகத்தை காட்டிக்கொடுக்கும் படிகாரம். 

படத்தில் உள்ளதை போன்ற ஒரு கையளவிலான படிகாரக் கட்டியை எடுத்துக்கொண்டு அந்த படிகாரத்தை சிறிது நீரில் நனைத்து எடுத்துக்கொண்டு சிறிது காற்றில் காய்ந்ததும் பிசுபிசு தன்மை நிலையில் திருடன் வந்து சென்ற அவனது கை மற்றும் கால்கள் பட்ட இடத்தில் (4,5-இடங்களில்) படிகாரத்தை வைத்து ஒத்தடம் தருவதைப்போல ஒத்தி எடுக்கவேண்டும். அப்படி ஒத்தி எடுத்த அந்தப் படிகாரத்தை நன்கு எரிந்துகொண்டிருக்கும் நெருப்புத்தணலில் போட்டுவிடவேணும். சிறிது நேரம் சென்றதும் நெருப்பிலிட்ட படிகாரம் வெள்ளை மண்ணால் செய்த பொம்மையைப்போல திருடனின் முக சாயலை காட்டிக்கொடுக்கும். பொம்மை வடிவமானது இரண்டு மூன்று தலை உருவங்களில் இருந்தால் வந்தவர்கள் ஒருவரல்ல பலர் கூட்டாக திருடவந்துள்ளனர் என்பது தெரியும். மேலும் படிகாரம் எரிந்து பொம்மை வடிவமாக அதன் தலைப்பகுதி கொண்டை போன்று தெரிந்தால், திருடவந்தது ஒரு பெண் என்பதாக தெரியும்.    

3.ஸ்படிக கல் மற்றும் சுருமாக்கல் இவை இரண்டையும் வைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை TV-போல இந்த கல்லில் காணலாம்.
திருமகள் லட்சுமி வாசம் செய்யும் ஸ்படிகம் என்கிற வெள்ளை நிறங்கள் போன்ற பொருளானது எப்படி உருவாகிறது தெரியுமா? பணி மலைப்பகுதியில் நீரானது பனிக்கட்டியாகி காலப்போக்கில் அந்தப் பனிக்கட்டி இறுகி ஸ்படிக கல்லாக மாறுகிறது என்பது அறிவியல் கூற்று. அப்படிப்பட்ட ஸ்படிகக் கல்லை நமது கையால் தொட்டுப் பார்த்தோமேயானால் ஜில்லென்ற ஐஸ் கட்டியை தொட்டதுபோன்ற குளுமையைத் தரும். ஆகவேதான் கோபமான வெப்ப உடல்வாகு கொண்ட முனிவர்கள், உடல் சூட்டை குறைத்து உடலையும் மனதையும் குளிர்ச்சியாகவும் சாந்தமாகவும் வைத்துக்கொள்ள, ஸ்படிக மணி மாலைகளை அணிந்துவந்தார்கள்.

அப்படிப்பட்ட ஒரு பெரிய அளவிலான ஸ்படிகக் கல்லை எடுத்துக்கொண்டு அந்த ஸ்படிகக் கல்லின் ஒரு பகுதியில் வெள்ளி நைட்ரைட் திரவத்தை (Silver nitrate gel-chemical formula AgNO 3) பூசவேண்டும். அதன்மீது பாதரசம் மற்றும் துத்தநாக அமிலத்தை தடவினால் அவை அனைத்தும் வினைபுரிந்து ஸ்படிகக்கல்லின் மீது வெண்மைநிற வர்ணம் பூசியதுபோன்ற பளபளப்புத் தன்மை ஏற்படும்.

வர்ணம் பூசப்பட்ட ஸ்படிகக்கல்லின் பின்பகுதியில் இரும்புத்துகள்கள் போன்ற கரும் புள்ளியில் டிஷ் ஆன்டனாவின் இரண்டு இணைப்பு ஒயரில் ஒரு இணைப்பை கரும்புள்ளியில் தொடும்போது  ஒரு 40 வாட்ஸ் கொண்ட மின்சார விளக்கை பொருத்தி அந்த மின்விளக்கை முன்னும் பின்னும் நகரும் வண்ணம் அமைத்துக்கொண்டு இப்போது வர்ணம் பூசப்பட்ட ஸ்படிகக்கல்லின் பின்பகுதியில் இரும்புத்துகள்கள் போன்ற கரும் புள்ளியில் டிஷ் ஆன்டனாவின் இரண்டு இணைப்பு ஒயரில் ஒரு இணைப்பை கரும்புள்ளியில் தொடும்போது ஸ்படிக கால் திரையில் தொலைக்காட்சியின் ஒளி தெரிய ஆரம்பிக்கும். மின்சார விளைக்கை முன்னும் பின்னும் நகர்த்தி தெளிவான ஒளியை திரையில் காணும் அளவில் பொருத்திக்கொள்ளவேண்டும். சிக்கினால் வரும் தொலைக்காட்சி ஆன்டனாவின் மறுமுனையானது சுருமாக்கல் என்னும் மஞ்சள் நிற கல்லின் கரும்புள்ளியில் இணைக்கவேண்டும். 
இப்போது மஞ்சள் நிற சுருமாக்கல் என்னும் உப்பு கல்லுக்கு நாம் கேட்கக்கூடிய ஒலியை கடத்தும் தன்மைகொண்ட சுருமாக்கல் என்னும் உப்புக்கல்லின் ஒரு இரும்புத்துகள் கரும்புள்ளியில் ஒரு ஒயரை இணைக்கவேண்டும் அதன் மறுபகுதியானது சிறிய அளவிலான 2/5-ஓல்ட் பேட்டரி செல்லின் (-) பகுதியிலும். பேட்டரி செல்லின் மற்றொருபகுதியான (+) பகுதியிலிருந்து ஒரு இணைப்பு ஸ்பீக்கர் என்னும் கேட்கக்கூடிய சாதனத்தை இணைக்கவேண்டும். இஸ்பீக்கரின் மறுபக்க இணைப்பானது ஒளி திரையின் ஸ்படிகக் கல்லின் கருப்பு புள்ளியில் வெவேறு இடங்களின் நகர்த்தி சரியான சப்தம் கேட்கும் புள்ளியில் இணைப்பை பொறுத்திவிடவேண்டும். இனி நீங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்க்கமுடியும். இதில் நீங்கள் ஒரேயொரு சானல் நிகச்சியை மட்டுமே காணமுடியும். தொலைக்காட்சியை தெளிவாகக் காண மின்சார விளக்கை முன்னும் பின்னும் நகர்த்தி தொலைக்காட்சி ஒளி அலைகளை சரியான புள்ளியில் நிலை நிறுத்தினால் தெளிவான தொலைக்காட்சி படத்தைக் காணமுடியும். விவரங்களுக்கு கீழ்கண்ட இணைய முகவரியை சொடுக்கி ஆங்கில மொழியில் உள்ள விவரங்களை படித்து தெரிந்துகொள்ளலாம்.  

4.எலுமிச்சம் பழத்தை வெட்டினால் இரத்தம் வடியும் :-
பொதுவாக அனைத்துவிதமான பூசைகளுக்கும், நிகழ்சிகள், வசியம், திருஷ்டி கழித்தல், மாந்த்ரீகம் போன்றவைகளுக்கு மிகவும் ஏற்ற கனியாக கருதப் படுவது எலுமிச்சம் பழமாகும். 

மரியாதைக்குரிய முக்கிய நபர்கள், பெரியோர்கள் மகான்கள், வசதி படைத்தோர்களை சந்திக்கும் போது அவர்களுக்கு மரியாதை செலுத்தும்விதமாக எலுமிச்சம் பழம் அளித்து அவர்களின் அன்பு, ஆசீர்வாதம், நட்பு போன்றவற்றை பெறுவது வெகுகாலமாக நம் நாட்டில் வழக்கம். இதன் காரணமோ என்னவோ நம் சித்தர் பெருமக்கள் "இராசகனி" என்று பரிபாஷையில் கூறுவார்.

எலுமிச்சம் பழத்தில் இருந்து இரத்தம் வரும் சித்தை ஒன்றினை போக முனிவர் பாடலாக பாடி உள்ளார்.

பாரப்பா இன்னுமொரு கருமானம் கேளு
பாரினிலே எல்லோரும் பயந்து ஓடவே
ஆரப்பா ஆச்சரியமான வித்தை
அப்பனே அறியுள்ளான் அறிவான் பாரு
சீரப்பா பிரதி தினம் முழுகி . . .
சிறப்புடனே கத்தியொன்று செய்வாய் தானும்
நேரப்பா செம்பருதம் சர்பாத்துப் பூ
நெடிதானே செம்பாளைப் பழத்தை வாங்கே

அதாவது இந்த வித்தையை கண்ட அனைவரும் பயந்து ஓடுவார். வெகு ஆச்சரியத்தையும் பயத்தையும் அளிக்கும் இந்த வித்தை முறைதனை அறியுள்ளோர் மட்டுமே அறிந்து கொள்வார். சிறு கத்தி ஒன்று செய்து செம்பருத்தி பூ, சப்பாத்திக் கள்ளிப் பூ, செம்பாளைப் பழம் ஆகிவற்றை எடுத்து கொள்ளவும்....

வாங்கியே சார் பிழிந்து மன்னா கேளு
மகத்தான இரும்பினிடக் கத்தி மேலே
தூக்கியே திரியாதே புத்திவானே
துடிப்புடனே சாரு அதனைப் பூசிப்பூசி
பாங்கு பெற ரவிதனிலே காயவைத்து
பான்மையுடன் அதனையே பதனம் பண்ணு
சாங்கமுடன் சபை கூட்டி மைந்தா கேளு
சட்டமுடன் ஜாலம் விளையாடுவாயே

முன்பு சொன்ன செம்பருத்தி பூ, சப்பாத்திக் கள்ளிப் பூ, செம்பாளைப் பழம் அனைத்தையும் சாறு ஒன்றாக கலந்து அந்த இரும்பு கத்தியை சுத்தம் செய்து அதன் மீது இந்த சாறு கலவையை பூசி வெயிலில் காய விடவும். கத்தி நன்றாக காய்ந்ததும் சித்து ஒன்றை செய்து காட்டுவதாக மக்கள் பலர் கூடிய சபையில் இந்த ஜால வித்தையை செய்து காட்ட சொல்கிறார் போக முனிவர்.

ஆடுவாய் சபையோர் முன் செப்பக்கேளு
அப்பனே ஓர் சிறுவன் புத்திவனாய்
தேடியே கொண்டுவந்து கூட்டதுள்ளே
தெளிவுடனே அவன் கழுத்தில் நிம்பம் தன்னை
சாடியே கழுத்திலே நிம்பம் பழத்தைச்
சட்டமுடன் தானரித்து கயறுபூண்டு
வாடியே திரியாமல் மயங்கிடமால்
மன்னவனே கத்திக் கொண்டு அரிகுவாயே

ஊர் மக்கள் பலர் கூடிய சபையில் இருந்து புத்திசாலியான சிறுவன் ஒரு எலுமிச்சம் பழத்தினை கயிற்றில் கோர்த்து அவனது கழுத்தில் கட்டவும், பின் மனதினை சிதறவிடாது வெகு கவனமாக சாறு பூசிய காய்ந்த கத்தியினைக் கொண்டு எலுமிச்சம் பழத்தினை அறுக்கவும்.
அரிகையிலே எலுமிச்சம் பழரசம்தான்

அப்பனே ரத்தமது போலே சாயும்
கிரியையிது மெய்க்கிரியை சாலவித்தை
கீர்த்தியுள்ள வித்தை இது என்பார் பாரு
சரியான செகஜாலம் இதுவே என்பார் 
தரணியில் செய்வார்கள் இதைப் போலுண்டோ 
சூரியான ரத்தமது ஜால வித்தைக்
கொற்றவனே கழுத்து அறியும் வித்தைதானே.

பாடலில் கூறியவாறு சிறுவனின் கழுத்தில் கட்டப்பட்ட எலுமிச்சம் பழத்தினை கத்தியால் அறுக்கும் போது எலுமிச்சம் பழத்தின் சாறு கத்தியில் பட்டு சிவந்த நிறமாக இரத்தம் போன்று நிறம் மாறி கொப்பளித்துக்கொண்டு வரும். இதை காணும் சபையோர்கள் சிறுவனின் கழுத்து அறுபட்டு இரத்தம் வருவதாக எண்ணுவர். உண்மையான கீர்த்தியுடைய ஜால வித்தை இது ஆகும். காண்போர்கள் இவ்வித்தையினை அருமை என்று போற்றி புகழ்வர். இந்த ஜால வித்தையை செய்யக் கூடியோர் இப் பூ உலகில் எவரும் இல்லை என்று மெச்சுவர்.

குறிப்பு : இந்த வித்தை செய்யும் முன் பயன்படுத்தும் கத்தியை சுத்தமாக வைத்துக்கொள்ளவும்.

5.வேப்ப மரத்தின் பால்- விஞ்ஞானமும் மெய்ஞானமும்:-
வேப்ப மரத்திலிருந்து வெளிவரும் வேப்பம்பாலை சாப்பிடலாமா? 
ஒரு வேப்ப மரத்தின் குறைபாடே வேப்பம் பாலாக வெளிவருகிறது என்று விஞ்ஞானம் கூறுகிறது. பொதுவாக ஒரு சில முதிர்ந்த வயதான வேப்ப மரங்களில்தான் இப்படி பால் வடிவதாக விஞ்ஞான ஆராய்சிகள் கூறுகிறது.

வேப்ப மரத்தில் இப்படி பால் வடிவதற்கு எந்தவிதமான தெய்வீகக் காரணமும் அல்ல என்று 1980 கலீல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தாவர இயல் பேராசிரியர் திரு நாராயணசாமி அவர்கள் அறிவியல் ரீதியாக இதன் குட்டை போட்டு உடைத்துவிட்டார்.

இந்த மரத்தில் உள்ள மாவுச் சத்தை (ஸ்டார்ச்சை) வேப்பமர இலைகள் சர்க்கரையாக மாற்றுகின்றன. வேப்பமரப் பட்டையின் அடிப்பகுதியில் புளோயம் (Phloem) என்ற திசு இருக்கிறது. இந்தத் திசு வழியாக சர்க்கரையாக மாற்றப்பட்ட மாவுச் சத்து வரும்போது, அது பாலாக இனிக்கிறது. எல்லா வேப்ப மரத்திலும் இப்படி பால் வடிவதில்லை. இந்த மரத்தில் இந்தத் திசு பாதிக்கப்பட்ட காரணத்தால், இப்படிப் பாலாகக் கொட்டுகிறது. தேவையைவிட மரத்தில் உள்ள தண்ணீரின் அளவு அதிகமாகும்போது பட்டையின் அடிப்பகுதியில் உள்ள திசு பாதிக்கப்பட்டு, அதன் வழியாகப் பாலாகக் கொட்டுகிறது. மரத்தில் தண்ணீரின் அளவு குறையும்போது திசு அடைபட்டு, இனிப்புப் பால் வடிவதும் நின்று போகும். 
அதெல்லாம் சரிங்க... நாங்க கேட்ட கேள்விக்கு பதிலைச் சொல்லுங்க .....வேப்ப மரத்திலிருந்து வெளிவரும் வேப்பம்பாலை சாப்பிடலாமா? 
வேப்ப மரத்திலிருந்து வடியும் பால் என்பது வேப்ப மரத்திற்கு தேவையான சக்தியைத் தருவதற்காக உருவாகும் சத்து நீர்மப் பொருள் அந்தப் பால் வேப்ப மரத்தில் இருக்கும் வரை அந்த மரத்திற்கு நன்மை தரும், அந்த சத்து நீர்ம பால் மரத்தை விட்டு வெளியில் வந்ததும் எவருக்கும் பயனின்றி கெட்டுப்போகும். ஆகவே வேப்பமரத்துப் பாலை மனிதர்கள் அருந்துவதால் எவ்வித நன்மையையும் கிடைக்காது. 
இப்படிக்கு..... அன்புடன் கோகி-ரேடியோ மார்கோனி. 
=================================
இ) சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம் கேள்வி பதில் பகுதியில்:-
1. எட்டுக்கால் பூச்சியான சிலந்திக்கு கோவில் எங்குள்ளது? அதற்கான சிறப்புக் காரணம் என்ன? 

ஒரு சிலந்தி இறைவனை தினமும் மனதால் நினைத்து மானசீக பூஜையும் செய்து வந்தது. அதற்கு மக்கள் இறைவனுக்கு எதாவது விதத்தில் பூஜை செய்வது போல் தானும் பூஜிக்க ஆசைப்பட்டு யோசித்தது. பின்னர்  அது ஈசனுக்கு தன் வாய் நூலால் ஒரு பந்தல் அமைத்து வந்தது. சில சமயம் மக்கள் அதைக் கலைத்து போட்டாலும் அல்லது காற்றினால் அது  கிழிந்தாலும் அது கவலைப்படாமல் திரும்பவும் வேறொரு வலையைப் பொறுமையாக செய்யும். 
இதைப்பார்த்த ஈசன் அதன் பக்தியைப் பரிசோதிக்க அக்னி மூலம் அந்த வலையை எரித்துவிட்டார். பந்தல் கருகிப்போனது கண்டு சிலந்திக்கு ரொம்ப கோபம் வந்தது.. கோபத்தில் "நான் ஈசனுக்காகக்கட்டிய  பந்தலை எரித்துவிட்டாயே .உன்னை என்ன செய்கிறேன் பார்" என்றபடி அக்னி மேல் பாய்ந்தது. நெருப்பு தன்னையும் சுட்டுப்பொசுக்கி விடும் என்று அறியாமல் ஈசனின் பந்தலை அழித்த கோபம் மட்டும் மனதில் மிஞ்ச நெருப்பின் மேல் பாய அதில் கருகி உயிரை விட்டது. 
பரமேஸ்வரன் சிலந்தியின் பக்தியை மெச்சி அதை அப்படியே தழுவிக்கொண்டார். சிலந்திக்கு மோட்சம் அளித்து தன் பாதத்தில் வைத்துக்கொண்டார். இந்த அற்புதங்கள் நிகழ்ந்த தலம் தான் ஸ்ரீகாளஹஸ்தி. இங்கு லிங்கமாக காட்சியளிக்கும் சிவனின் திருமேனியை கூர்ந்து கவனித்தால், கீழ் பாகத்தில் யானை தந்தங்கள், நடுவில் பாம்பு, பின்புறம் சிலந்தி ஆகியவற்றை காணலாம். இங்கு எழுந்தருளியுள்ள சிவன், காளஹஸ்தீஸ்வரர் என்றும், அம்மன் ஞானபிரசுனாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர். ஸ்ரீ காளஹஸ்தியில்  இந்த சிலந்திக்கு ஸ்ரீ என்ற பெயருடன் அனைவரும் ஈசனை வணங்கும் போது இந்த எட்டுக்கால் பூச்சியான சிலந்தியையும் வணங்குமாறு அருள் பெற்று விளங்குகிறது. இதைப்போலவே தமிழகத்தின் திருவானைக்காவல் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் கோவில் புராணத்திலும் கூறப்பட்டுள்ளது.  

ஸ்தலபுராண  பெயர்க்காரணம்: சீகாளத்தில் என்ற சொல்லில், சீ என்பது சிலந்தியை குறிக்கிறது. காளத்தி என்பது காளம், அத்தி என இரு பெயர் பெறுகிறது. இதில் காளம் என்பது பாம்பினையும், அத்தி என்பது யானையையும் குறிக்கிறது. சிலந்தி, பாம்பு, யானை ஆகிய உயிர்கள் சிவலிங்கத்தை பூஜித்து முக்தி பெற்றதால் அவற்றின் பெயரால் இவ்வூர் சீகாளத்தி எனப் பெயர் பெற்றது என்கிறார்கள் சிலர்.


நீங்களும் ஸ்ரீ காளஹஸ்தி கோவிலுக்கு சென்றால் அவசியம் ஈசனின் அருள்பெற்ற சிலந்தியையும் தரிசித்தால் வாழ்வில் சிக்கல்கள் தீரும் என்பது ஐதீகம்........  

நன்றிகளுடன்... வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ் குழுவினர்கள்.......வலைப்பக்கத்தில் வலைபோட்டு தேடிப்பிடித்து விவரங்களை பதிவு செய்திருக்கிறோம்......

========================================
ஈ ) நல வாழ்வு பகுதியில்:-
1."முதுகில் சூடுபோடும் அதிர்ச்சி வைத்தியமுறை" முற்றிய மஞ்சள் காமாலை நோயினால் பாதித்தவர்களுக்கு முதுகில் பழுக்க காச்சிய கம்பியினால் சூடு போடும் பண்டையகால அதிச்சியூட்டும் வைத்தியமுறை:-

முற்றிய மஞ்சள் காமாலை நோயினால் பாதித்தவர்களுக்கு முதுகில் பழுக்க காச்சிய கம்பியினால் சூடு போடும் பண்டையகால அதிச்சியூட்டும் வைத்தியமுறை:- பொதுவான பித்த நாளத்தில் காணப்படும் பித்தக்கற்கள் மற்றும் கணையத்தின் தலைப்பகுதியில் உருவாகும் கணையப் புற்று நோய். மேலும், "கல்லீரல் அட்டைப் புழுக்கள்” எனப்படும் ஒட்டுன்னிகள் குழு, பித்த நாளத்தில் தங்கி தடைபடும் மஞ்சள் காமாலையை ஏற்படுத்தலாம். நுரையீரல் மற்றும் கணயமும் கல்லீரலும் வீக்கமடையும்போது இரத்தக் குழாய்கள் அடைபட்டு  சரியான இரத்தஓட்டம் இல்லாமல் இவ்விடங்களில் வலி ஏற்படும் அப்போது நோயினால் பதித்தவர் அந்த இடங்களின் வலியை எப்போதும் நினைத்திருப்பதால் அந்த வீக்கமானது இன்னமும் அதிகமாகி நோய் மேலும் முற்றும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். ஆகவே பண்டைய மருத்துவர்கள் உள்ளே இருக்கும் வலியின் தன்மையை நோயாளி மறந்தால் தான் அவருக்கு தரும் மருந்துகள் வேலை செய்து வீக்கத்தை குறைக்கும் எனவே நோயாளியின் வெளிப்புறம் முதுகில் ஒரு சூடு போடுவார்கள் பிறகு உள் வலியை விட நோயாளிக்கு வெளியில் இருக்கும் சூடு போட்ட வலி அதிகமாக அவரின் நினைப்பில் வர  பிறகு உள் உறுப்புகளின் வீக்கங்கள்  மருந்துகளினால் குறையாக குறைய, இரத்த ஓட்டம் சீராகும்போது நோயாளி மஞ்சள் காமாலையிலிருந்து விரைவில் குணமடைவார்.  பின்பு வெளியில் போட்ட சூட்டிற்கும் களிம்பு தடவி குணப்படுத்துவார். 

ஆகவே முதுகில் சூடுபோடுவதென்பது நோயாளியின் கவனத்தை திசை திருப்பி வீக்கமான உடலின் உறுப்புக்களை வீக்கம் வடியவைத்து இரத்த ஓட்டத்தை சீர்படுத்தினாலே பாதிக்கப்பட்ட இடங்களுக்கு இரத்த ஓட்டம் சென்றாலே அங்கு இருக்கும் நோயானது சரி செய்யப்படும் என்கிற சித்தர்களின் ஆராய்ச்சி சிந்தனை தெளிவாகப் புரிகிறது. நன்றி- "சித்தர்களின் சிந்தனையிலிருந்து"  ... கோகி-ரேடியோ மார்க்கோனி.  
=========================================== 2) பகுதி-4, HEPATITIS A,B,C -Virus and  HEPATITIS inflammation-ஹெபடைடிஸ் ABCவைரல் என்று ஆங்கிலத்தில் அழைக்கும், கல்லீரலைத் தொற்றித் தாக்கும் நுண் கிருமியால் கல்லீரல் அழற்சி அல்லது கல்லீரல் வீக்கம் என்கிற நோயின் அறிகுறிகள் என்ன என்ன? அந்த நோய் ஏன் ஏற்ப்படுகிறது? 
ஹெபடிடிஸ் வைரஸ் தாக்கும் அறிகுறிகள் :-  குறுகிய நிலையில் - இந்த நோய்க் கிருமி தொற்றானது சில நேரங்களில் முதல் வாரங்களில் ஹெபடைடிஸ்-எ அல்லது பி அல்லது சி வகை தாக்கிய அறிகுறிகள் தென்படத் தொடங்கிவிடுகிறது, அதனால் பொதுவாக சோர்வு, குமட்டல், பசியின்மை, வயிற்றுப்போக்கு, ஒரு லேசான காய்ச்சல், மஞ்சள் தோல் நிறம் அல்லது கண்கள் (மஞ்சள் காமாலை) போன்ற நோய்கள் ஏற்ப்படும். ஹெபடைடிஸ் பி மற்றும் சி வைரஸ் கிருமி தொற்றானது பல நாள்பட்ட வியாதி உள்ளுக்குள் இருந்தும் வெளிப்படையாக எந்தவித நோய் அறிகுறிகளையும் தெரியப்படுத்தாமல் இருக்கும் அபாயக் கிருமி வகைகளும் உண்டு. ஆகவே இந்த வகை வைரஸ் தொற்றுக் கிருமிகளின் விளைவுகளை, பாதிக்கப்பட்ட கல்லீரலின் சேத அளவை கணக்கிடும் இரத்த பரிசோதனை முடிவில் மட்டுமே தெரிந்துகொள்ள முடியும். 
$.Hepatitis Symptoms :- Sometimes there are no symptoms of hepatitis in the first weeks after infection -- the acute phase. But when they happen, the symptoms of types A, B, and C may include fatigue, nausea, poor appetite, belly pain, a mild fever, or yellow skin or eyes (jaundice). When hepatitis B and C become chronic, they may cause no symptoms for years. By the time there are any warning signs, the liver may already be damaged.  (பகுதி-4 தொடரும்)

============================================
உ ) சமையல் குறிப்புக்கள் / விருந்துக்கு வாங்க பகுதியில்:-
1. உங்களுக்கு தெரியுமா???? 
2. உங்களுக்கு தெரியுமா???? 
ஆடியிலே வாடைக்காற்று, சுக்குமல்லி காபி குடிக்க வாங்க மற்றும் செய்முறை.:- 
ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயன புண்ணிய காலம் ஆரம்பமாகிறது. ஆடி மாதத்திலிருந்து நமது சுற்றுப்புற கால நிலையானது மாறும், சளி இருமல் மற்றும் வயிற்று உபாதைகள் தோன்றும் காலம் இது, எனவே அந்தக் காலநிலையினை எதிர்கொள்ள நமது உடலுக்கு பலம் சேர்க்க, சுக்கு மல்லி காப்பி குடிப்பது, முன்னோர்களால் உருவாக்கப்பட்ட வழக்கம். 


இப்போது சுக்குமல்லி காபி எப்படி தயாரிப்பது என்பதைப்பற்றி பார்ப்போம்.    மாளிகைக்கு கடையில் "தனியா" என்று அழைக்கப்படும் கொத்தமல்லி யை வாங்கிவந்து லேசாக வறுத்து எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிதளவு சுக்கு அல்லது சுக்குப் பொடி சேர்த்து மிஸ்சியில் பொடியாக்கிக்கொள்ளவும்... இந்தப் பொடியுடன் சிறிது பனை வெல்லம் மற்றும் ஏலக்காய் பொடி  சேர்த்து ..தன்னீரில் கொதிக்க வைத்து அதை காலை மாலை அருந்தலாம்... 
இப்படிக்கு வைஷாலி வாசக வட்ட மாமீஸ் குழுவினர் ??????
=============================================

ஊ ) பாட்டி சொல்லைத் தட்டாதே பகுதியில்:-

ஆன்மீகத்தில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. விரதம் இருப்பது என்பதில் ஆடி மாதம் கோவிலிலும், ஆவணி மாதம் வீட்டினிலும் என்பார்கள். ஆவணி மாதம் வந்தாலே விரதங்களும் கூட வந்துவிடும் இதில் பெண்களின் சௌபாக்கியத்திற்கும்
சுமங்கலிகளுக்கென்று ஒரு விரதமும் மிகவும் சிறப்பாக பெண்களால் செய்யப்டுகின்றன. 
ஸ்ரீவரலட்சுமி விரதம் ஜன்மாஷ்டமி விரதம் மங்களாகௌரிவிரதம் நாகபஞ்சமி விரதம் கருடபஞ்சமி விரதம், வினாயகசதுர்த்தி விரதம் என்று ஆவணியை பல விரதங்கள் அணைக்கின்றன 
விரதம் இருப்பதால் நம் மன உறுதி மேலும் பலப்படுகிறது மனவலிமையால் செய்யமுடியாத காரியங்கள் தான் உண்டோ? 
இந்த விரதத்தை சம்ஸ்கிருதத்தில் உபவாசம் என்கின்றனர் வாசம் என்றால் இருத்தல் உபவாசம் என்றால் பக்கத்தில் இருத்தல் என்று பொருள் கொள்ளலாம் யார் பக்கத்தில் ? நிச்சியமாக இறைவன் அருகில் தான் .....இது எப்படி சாத்தியமாகிறது ? ஆம் எப்போது மனம் ஒருமுகமாக ஒரே சிந்தனையுடன் ஒரே காரியத்தில் ஈடுபடும்போது அது இறைவன் சமீபம் போகும் சக்தி பெறுகிறது  மனம் சிதற உணவும் ஒரு காரணமாக அமைகிறது உணவிலும் சத்வ உணவு ரஜசு தமசு என்ற உணவுகள் இருக்கின்றன .கபம் பித்தம் வாதம் என்ற பிரிவிகள் நம்முடலில் எத்தனைத்தேவையோ அந்த அளவு தான் இருக்க வேண்டும் இவை குறைவோ கூடியோ இருக்க நோய் வருகிறது ஆயுர்வேதம் இதைக்கொண்டு தான் செயல்படுகிறது. 
உபவாசம் வரும் தினங்களில் துளசி தீர்த்தம் மட்டும் எடுப்பது மிக உன்னத முறையாகும் சிலருக்குச் சர்க்கரை நோய் இருக்குமானால் ஒரு வேளை மட்டும் கஞ்சியோ சேர்த்துக்கொள்ளக்கூடிய பழங்களோ வயதானவர்கள் எடுத்துக்கொள்ளலாம்.  

இந்த விரதங்கள் கடைப்பிடிக்க ஒரு கட்டுப்பாடு நம்மால் மிக எளிதாக உருவாக்க முடிகிறது. வயிற்றுப்பசி விரதத்தன்று வராமல் இருக்க மனதை ஒரேநிலையாக வைத்து மனப்பசியை வளர்க்க வேண்டும் மனதில் கூட பசிக்குமா? மனப்பசி என்பது இறைவனின் சான்னித்யம் பெறுவதே. அதுவே ஒரே இலக்காக இருந்தால் வயிறு பசிக்காது வடநாட்டில் வசந்த நவராத்திரியின் போது வெறும் தண்ணீர் மட்டும் குடித்து இரவில் ஒரு வாழைப்பழம் மட்டும் எடுத்து அமாவாசையிலிருந்து நவமி வரை விரதம் இருப்பவர்கள் பலர் சிலர் பள்ளி ஆசிரியர்கள் நான் இதைப்பற்றிக் கேட்டபோது எங்களுக்குப் பசி தெரிவதில்லை என்று சொன்னார்கள்.
விரதத்தின் போது சூரியோதயம் முன் எழுந்து பல்துலக்கி பின் குளித்தல் வேண்டும் இதுவே புண்ணிய நதிகளோ ஆறுகளோஇருந்து அதில் குளிக்க ஒரு புத்துணர்ச்சி ஏற்படும் மனம் நாமஜபத்தில் இருக்க , பூஜை செய்ய சங்கல்பம் செய்துக்கொள்ள வேண்டும்.

விரத்த்தன்று பகலில் தூங்கவோ வேறு ரசாபாசங்களிலோ ஈடுபடக்கூடாது மனதைத்தத்தளிக்கச்செயுயும் விஷயங்களிலிருந்து தூர விலகுவது நல்லது ஆன்மீகப்புத்தகங்கள் படிக்கலாம் அல்லது ஈச்வர நாமாக்களை எழுதலாம் .இதனால் புறத்தூய்மை அகத்தூயமை கிடைக்கவும் எல்லா நிலைகளிலும் சமபாகமாக எண்ணும் சக்தியும் கிடைக்கிறது. 

விரதம் அனுசரிப்பதால் தானாகவே தியான நிலை வருகிறது எப்படி என்றால், பிரசாதம் செய்கிறோம். மனம் முழுவதும் இந்த மோதகம் பிள்ளையாருக்கே என்ற எண்ணமும் அது நன்றாக அமையவேண்டும் என்ற சிரத்தையும் அந்தச்சிரத்தையால் வரும் கவனமும் தான். இதெல்லாம் ஒரு யோகம் தான், தியானம் தான். கோயிலின் பிரசாதம் சுவைக்க இதுவும் ஒரு காரணம் என்று தொன்றுகிறது . விரதத்தினால் ஈகோ அழிந்து மனித நேயம் வளர்கிறது பணிவும் தொடர்கிறது.
நம் உடல் ஒரு இயந்திரம் தான். அது தொடர்ந்து வேலை செய்துக்கொண்டிருக்கிறது அந்த மெஷினுக்கு  ஒரு மாதத்தில் ஒரு நாளாவது ஓய்வு வேண்டாமா? ஆகையால் விரதம் என்பது நம் உடலுக்கும் உள்ளத்திற்கும் மிகவும் இன்றியமையாத ஒன்று . உலகின் அனைத்து  இனம், மாதத்தில் கூட விரதம் இருப்பது ஆன்மீக வழிபாட்டிற்கு சிறந்த வழியாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.


==============================================

5. கைத்தொழில் பகுதியில் இந்தமாதம், வழங்கியவர்:- புது தில்லி திருமதி விசாலம் மாமி அவர்கள்.
"கைத்தொழில்-கற்றுக்கொள்ள வாருங்கள்"- பயிற்சி வகுப்பில் இந்தமாதம்-நவராத்திரி கொலு பிசினஸ் செய்யலாம் வாங்க:- 
அந்தக்கால கொலுவில் அதிக சிரத்தை, பக்தி இருந்தது. இந்தக்காலத்தில் பக்தியை விட புகழுக்கு ஆசை, தற்பெருமை போன்றவை முக்கியத்துவம் பெருகிறது இதற்கு விதிவிலக்கு இருக்கலாம். அந்தக்காலத்தில் கல்லுரல், அம்மி, குழவி தவிர பிரசாதம் செய்ய வேறு உதவியில்லை. ... இக்காலத்திலேயோ பலவிதமான் மிக்ஸி, அல்லது ரெடிமேட் மாவு, விற்கப்பட்டு வேலைபளுவை மிகவும் குறைக்கிறது, அந்தக்காலத்தில் கொலு மூலம் பல உறவினர்கள் கூடும் வாய்ப்பும், தினமும் மஞ்சள் குங்குமம் கொடுக்கும் பாக்கியமும், வீட்டுத்தலைவிக்கு கிடைத்தது. உறவினர்களின் இணைப்பால் குடும்பம் மேலும் வலிமை பெற்றது , இதனால் வளரும் சிறுமிகளுக்கும் நம் கலாச்சாரம் தெரிய வந்து, அதில் அவர்கள் ஈடுபட்டு கலாசாரமும் வளர்ந்தது. இப்போதோ பத்து நாட்களில் தமக்கு சௌகரியமான நாளை தேர்ந்தெடுத்து அன்று மட்டும் மஞ்சள் குங்குமம் கொடுக்க அநதப்பெண்மணியின் பங்கு அன்றோடு முடிந்து விடுகிறது......... சரி சாப்ஜக்டுக்கு வருவோம்..... 
மூன்று தலைமுறை கொண்ட ஒரு குடும்பம்.....பாட்டி ராஜம்மா ,மருமகள் ராஜி , பேத்தி லலிதா .கொலு சமீபிக்கும் நேரம், பாட்டிரொம்ப ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கிறார். பின் தன் பேத்தியை அழைக்கிறார்.

“ஏண்டி லல்லி கொலு வரதே. இந்த வருஷம் என்ன புதுசா வைக்கப்போறே? தலைவிரிக்கோலமாய் லல்லி வருகிறாள் ஒரு திராட்சைக்குலை காதில் தொங்கியபடி தோளை இடிக்கிறது .

“பாட்டி நான் இந்தக்கொலுவுக்கு ஒரு பிசினஸ் ஆரம்பிச்சிருக்கேன் .கொலு கான்ட்ரேக்ட் பிசினஸ்.”

“அதென்னடி கொலு கான்ட்ரேக்ட் ?’

அதுவா .வந்து ….அது சஸ்பென்ஸ் பாட்டி கொலுக்கு முதல் நாள் நான் உனக்கு சொல்றேன். இப்ப வெளிலே எனக்கு நிறைய வேலை இருக்கு. பை பாட்டி, பை அம்மா.............. 

பாட்டி தன் மருமகளை அழைக்கிறார்.” ஏண்டி ராஜி என்ன சும்மாவே இருக்கே ! இன்னும் பொம்மை எடுக்கலை. இன்னும் படி கட்டலை . இந்த வருஷம் என்ன பண்றதா உத்தேசம். லல்லி என்னவோ பிசினஸ் ன்னு சொல்லிட்டு போறா. என்னமோம்மா......இந்தக்கால பொண்களை என்ன சொல்றது?’ 
“அம்மா நான் என்ன செய்யட்டும்? உங்க பேத்தி ஏதோ கொலு பிசினஸ் செய்யறாளாம் அதோட பேரு முத்தேவி என்டர்பிரைஸ். என்னை கவலப்படாம இருக்க சொல்றா.”

காட்சி இரண்டு:-
கொலுவுக்கு முதல் நாள். வாசலில் பெல் அடிக்க .கதைவைத் திறந்தாள் பாட்டி. இரண்டு பேர்கள் டை கட்டியபடி ஜோராக நின்று வணக்கம் செலுத்தினர் ..... “பெரியம்மா இதுதானே முப்பதாம் நம்பர் வீடு?” 

“ஆமாம் .நீங்கள்ளாம் யாரு ?”

“நாங்க முத்தேவி கம்பெனிலேந்து வந்திருக்கோம்.’

“அதுக்கு இங்க ஏன் வந்திருக்கேள்?

“உங்க வீட்ல கொலு வைக்கணும் ஆர்டர் வந்திருக்கு பெரியம்மா, எங்க கொலு வைக்கணும் ?எத்தனை படிகள் வைக்கணும்?

பாட்டி வழக்கமாய் வைக்கும் இடத்தைக்காட்ட அவர்களும் அந்த இடத்தை மேற்பார்வையிட்டார்கள்..... 

“பெரியம்மா இந்த இடத்தில் ஐந்து படிகள் கட்டினால் கதவு திறக்க இடஞ்சலாக இருக்கும். அந்தக்கார்னர்லேந்து வச்சாக்க இடமும் இருக்கும். போக வர வழியும் இருக்கும். ஒரு ஐந்து நிமிஷத்ல நாங்க வறோம்” என்றபடி வெளியே சென்று பின் அழகான ஹின்டேலியம் படிகளுடன் வந்தனர். மளமளவென்று படிகளைப் பொருத்தினர் .மேலே அழகான நம் கொடி போன்று மூன்று கலர் கொண்ட ஒரு துணியை விரித்தனர். பின் பாட்டியைப்பார்த்தனர்.
“பெரியம்மா ,கொலுவில் எந்த மாதிரி பொம்மை வேணும், சொல்லுங்க, சிவன் பார்வதியா. அனந்த சயனமா, தேச தலைவர்களா .,காந்தியா நேருவா……..அப்பறம் விவேகானந்தர் . ராகவேந்திரர் ன்னு நிறைய இருக்கு”...... 

“எல்லாம் கலந்து இருக்கட்டும் .தம்பி" 

“சரிங்க”.........என்று சொன்னபடி அவர்கள் கொலு வைக்க ஆரம்பித்தார்கள். அழகாக முதல் படியில் கலசம் பின் ஆண், பெண் மரப்பாச்சிக்களுடன் ஆரம்பித்து கன கச்சிதமாக வைத்து முடித்தனர்.....பின் அழகான ரங்கோலி போடப்பட்டது. அருகில் அண்ணா ஹஸாரே உண்ணா விரதம் இருப்பதும்......மியூசிக் அகாடமியில் பாட்டுக்கச்செரி சீனும் மிக அழகாக.... ஒரு கால் மணி நேரத்தில் செய்து முடித்துவிட்டனர். 
“பெரியம்மா நாங்க கொலு வச்சுக்கொடுத்துட்டோம் தினமும் சுண்டல் , வடை, பாயசம் செஞ்சு கொடுக்கறோம். பத்து நாளுக்கும் சேர்த்து ஆர்டர்  சொன்னால் 20% தள்ளுபடி ” 
“அப்படியா ? சரி எத்தனை சார்ஜ் வாங்கறே?”

“வெத்தலை. பாக்கு. மஞ்சள், குங்குமம் பையோட ரூ,10000. ஆனா இது உங்க வீட்டு சின்னம்மாவோட கம்பெனி.  அதனாலே ரூபாயை அவங்க கிட்டே கொடுத்துடுங்கோ”

“வேறு என்ன ஸ்பெஷல் செஞ்சு தரே?”

“கொலுக்கு முதல் நாளிலிருந்து. கடைசி நாள் வரை புடவை .சட்டை மாட்சிங்காக எடுத்து பிரஸ் செய்து தறோம் .அதுக்கு தனியாக ரூபாய் வாங்கறோம் .ஒரு நாளைக்கு நூறு ரூபாய் .தவிர வாசல்ல மாக்கோலம் காவியுடன் போட்டுக்கொடுக்கறோம்."
இந்த நேரத்தில் லல்லி நுழைகிறாள் . “என்ன பாட்டி .என்ன அம்மா கொலு வச்சாச்சா? ரொம்ப கவலைப்பட்டாயே பயந்தாயே!........ 

“நன்னா இருக்குடி இந்த பிசினஸ் ! எத்தன வீட்டை ஆர்டர் பிடிச்சிருக்கே?” 

இது வரை 200 வீடுகளுக்கு ஆர்டர் கிடைத்திருக்கு. இதுக்குன்னு தனியா இரண்டு பேரை ரெக்ரூட்டும் செஞ்சிருக்கேன். அவாளுக்கு நல்ல ஸேலரியும் தரேன் . நமக்கும் நல்ல லாபம் கிடைக்கும்.

“கிடைக்காம என்ன செய்யும் ? இந்தக்காலத்தில் உடம்பு நலுங்காம கொண்டாடத்தானே உங்கள மாதிரி பெண்ணுக்கு பிடிக்கிறது. சரி வேறு என்ன ஸ்பெஷல் வச்சிருக்கே?" 
“அதுவா பாட்டி. இன்னும் நிறைய பிளான் இருக்கு. முகத்துக்கு ஏத்தாற்போல் தலைக்கொண்டை போட்டு விடுகிறோம். தினமும் செய்ய வேண்டிய சுண்டல் பற்றியும் விளக்குகிறோம். ஆர்டர் கொடுத்தால் பிரசாதம் செய்தும் தருகிறோம் .என்ன அம்மா உனக்கு பிடிசிருக்கா எங்க பிசினஸ்? 

“லல்லி ..... நீ சொல்றதெல்லாம கேக்க நன்னாத்தான் இருக்கு. ஆனா சில மாடர்ன் பேமிலி ரொம்ப பெரிய ஹோதாவா, பந்தாவா கொலு வைப்பாளே, அவாளுக்கு எதாவது ஸ்பெஷல் உண்டா?” 
“ஒ உண்டே அவாளுக்கு பீஸா .பாஸ்தா ,நூடுல்ஸ்,சௌமீன், ஸ்பிரிங் ரோல் தவிர ஐஸ் க்ரீமும் கொண்டு தருகிறோம் .பிரண்டோட சேர்ந்து சாப்பிட அவாளுக்கு ரொம்ப பிடிக்கும்..... தவிர ஃப்யூசன் ம்யூசிக்கில் “லலிதா சஹஸ்ரநாமம்" சப்ளை செய்கிறோம். கர்பா டேன்ஸ் இப்போ பேஷன் ஆயிடுத்து.  அதுக்கு தகுந்த பாட்டும் டிவிடி/சீடி ல கிடைக்கும் .”
“ஆஹா கேக்கவே ரொம்ப இன்டெரெஸ்டிங்கா இருக்கே .ம்ம் அப்பறம்” …”

“அப்பறம் நாங்க கொலு காம்படிஷனுக்கும் அப்பிளிகேஷன் பார்ம் தந்து அத பில் அப் செஞ்சு அனுப்பறோம் சரி இன்னும் நாலு வீடு முடிக்கணும், போய்ட்டு வரோம் பெரியம்மா” 
“ஏதாவது சாப்பிட்டு போங்கோ . ஏ ராஜி இவாளுக்கு காபியும் கொஞ்சம் பக்ஷணமும் கொண்டு கொடு” 

இதோ வரேம்மா ” என்றபடி ராஜி வர “எள்ளுங்கறத்துக்குள் எண்ணெயா நிப்பா என் மாட்டுப்பெண் ” என்றாள் மாமியார் பெருமையுடன் ... 

நன்றிகளுடன், விவரங்களை வழங்கியவர் புது தில்லி திருமதி. விசாலம் அவர்களின், அன்னையின் அருள் http://meerambikai.blogspot.in வலைப்பதிவிலிருந்து. .........
==============================================

6. சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்"..... "குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா?" படத்தில் உள்ள 6 வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்- ஜூலை-2016- ஆடி மாத,  ஆன்மீக மாத, வலைப்பதிவு இதழ் போட்டி என்-04.

சரியான விடை அடுத்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" வலைப்பதிவர் இதழில் வெளியாகும். போட்டியில் பங்குகொள்ள விருப்பமுடையவர்கள் விடைகளை "vaishalireaderscircle@gmail.com" என்கிற மினஞ்சல் முகவரிக்கு 10-08-2016 முன்பாக அனுப்பிவைக்கவேண்டும். சரியான விடைஎழுதிய அனைவருக்கும் அடுத்தமாத வாசகர் வட்ட சந்திப்பில் பரிசுகள் வழங்கப்படும்.

சென்ற வலைப்பதிவர் இதழ்-3 ஆனி-மாத இதழின் (வாழைப்பழ வாத்து) 6-ஆறு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடை, 1)வாழைப்பழ வாத்தின் அலகு (மூக்கு) 2)வாத்தின் கால் சவ்வு 3)வாத்தின் ஒரு கால் 4)வாழைப்பழ காம்பு 5)வாழைப்பழ வாத்தின் கழுத்து 6)வாத்தின் கண் இமைகள்.  

சரியான விடையை 63 நபர்கள் குறிப்பிட்டிருந்தனர், தமிழில் விடை எழுதியவர்கள்=16, ஆங்கிலத்தமிழில் எழுதியவர்கள்=28, ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=19 நபர்கள், மேலும் சிலர் ஆறுக்கும் அதிகமான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.
==========================================
7. அறுவை ஆயிரம்:-  ((A.K.சபரிஷ்)
டீ- கப்புல டீ இருக்கும், ஆனா வேல்டு-கப்புல(உலக கோப்பையில்) வேல்டு இருக்காது.
பொங்கலுக்கு லீவு கொடுப்பாங்க.. ஆனா இட்லி வடைக்கு லீவு கொடுப்பாங்களா?? 
================================

8. சொர்கமே என்றாலும்  நம்ம ஊரைப் போலவருமா?:- பயனுள்ள தமிழ் வலைப்பதிவர் பக்கங்களில் இந்தமாதம் பகுதி:

$ கரந்தை, தஞ்சாவூரைச் சேர்ந்த பேராசியர் அவர்களின்  பல குட்டிக்கதைகளை கூறும் ஹரிணி பக்கங்கள் http://thanjavur-harani.blogspot.in/2016/06/5.html என்னும் வலைப்பதிவு.

மற்றும் ....

$ வலைப்பதிவில் புதிர் :: கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செ __ த் தெரியுமா? என்பன போன்ற திரு கௌதமன் அவர்களின்  எங்கள் பிளாக்  (வலைப்பதிவு) http://engalblog.blogspot.com/2016/06/blog-post_29.html

மற்றும் ....

$ பேசும் புகைப்படங்களைக் க்ளிக் செய்து அதைக்கொண்டே தனது "முத்துச்சரம்" http://tamilamudam.blogspot.in என்னும் முத்தான வலைப்பதிவை அலங்கரிக்கும் திருமதி இராமலட்சுமி அவர்களின் பேசும் பதிவுகள்... 

போன்ற தமிழ் வலைப்பதிவுகளை நமது வைஷாலி வாசகர் வட்ட குழுவினர்களுக்கு பரிந்துரை செய்வதில் மகிழ்ச்சியடைகிறோம். 


==============================
9. கருத்து சொல்லப்போறேன்:- (A.K.சபரிஷ்)
"ஆடிச் செவ்வாய் தேடிக்குளி" என்று பழமொழி கூறும் கருத்து என்ன?
$ "நோக்கம் ஓராண்டாயிருந்தால் பூக்களை வளர்ப்போம்,
நோக்கம் பத்தாண்டாயிருந்தால் மரங்களை வளர்ப்போம்,
நோக்கம் முடிவில்லாமலிருந்தால் மனித குலத்தை வளர்ப்போம்."
$ "கையளவு காசிருந்தால் கவலையில்லை, கழுத்தளவு காசிருந்தால் கவலைக்கு பஞ்சமில்லை"
10. புது மொழி:- (A.K.சபரிஷ்)
தான் ஓடாவிட்டாலும் தம் கடிகாரம் ஓடும்..
அகத்தின் நோய்கள் நகத்தில் தெரியும்..
11. கவிதை:- 
நட்சத்திர விடுதிக்கு 
போகும் வழியெங்கும் 
நட்சத்திரம்.... 
மின்னிக்கொண்டிருந்தது...(S.ஸ்ரீ சக்ரி)
================================

வெப்ப நகரம் 
கண்ணாடி மாளிகையின் 
கண்ணீரால் 
குளிர்ந்தது..... 
எதோ ஒரு சில 
மரங்களின் 
புண்ணியத்தால்... ( AK.பவித்ரா)
=================================
மற்றவரது எழுத்துக்களை
கொள்ளையடிக்காதீர்கள் ... 
உங்களின் எழுத்துக்களால் 
மற்றவர் மனங்களைக் 
கொள்ளை கொள்ளுங்கள்...
(A.K.பவித்ரா)

Don't Copy Writers. 
Become a Copywriter.
(AK.Pavithra)
=================================
."இப்படிக்கு நான்-மரம்" 
உங்களின் 
பல தலைமுறையினருக்கும் 
நான் உதவியாய் இருப்பேன்...
ஒரு தலைமுறைக்கு 
ஒரு மரமாவது  
நடக்கூடாதா??
உதவியாக இல்லாவிட்டாலும்
ஊறுவிளைவிக்காதீர்கள்....
.. (AK.சபரிஷ்) 
================================
12. நமது வாசகர் வட்டத்தின் இந்த மாத சரித்திரம் முக்கியம் பகுதியில், 
"புஷ்பவிமானம்... சித்தன்ன வாசல் குகை ஓவியங்கள் மற்றும் அஜந்தா குகை ஓவியங்களில் இருக்கும், தேவலோக புஷ்பா விமானம் பற்றிய ஓவியமும் அதன் ரகசியங்களும் என்கிற தலைப்பில் பல சுவையான விவரங்களை வழங்கினார் :-திரு. கோபால் கிருஷ்ணன். 

புஷ்பவிமானம்... 1980களில் ஆனந்த விகடன் இதழின்  நடுப்பக்கத்தில், பெரிய அளவிலான (இரண்டு பக்கத்தையும் சேர்த்து) வண்ண படம் இடம்பெறும், அப்படி இடம்பெற்ற படங்களில் ஒரு படம்  சித்தன்ன வாசல் குகை ஓவியங்கள் மற்றும் அஜந்தா குகை ஓவியங்கள். அந்த ஓவியங்களில், தேவலோக புஷ்பா விமானம் பற்றிய ஓவியமும் இருந்தது.
அந்த ஓவியத்தில் இருந்த புஷ்பவிமானத்தின் மேற்க்கூரை நடுவில் ஒருவித ஒளிவீசும் புஷ்பராகக் கால் இருந்ததாகவும் அந்தக் கல்லின் கூர் முனை செயல்பாட்டுத் தத்துவத்தின் வழியில் புஷ்பவிமானத்தில் இருப்பவர் மனதில் எங்கு செல்ல நினைக்கிறார்களோ அந்த இடத்திற்கு நொடியில் விமானத்தை கொண்டு சேர்க்கும் சக்தி அந்த புஷ்பராகக் கல்லின் கூர்முனை செயல்பாட்டிற்கு இருந்ததாக ஒரு கூற்று இருந்தது. நமது இன்றய அறிவியலின் இயற்பியல் பாடத்திலும் இந்த கூர்முனை (+) (-) செயல்பாட்டைப் பற்றி பல உண்மைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.    

சரி இப்போது புஷ்பவிமானம் பற்றிய ஒரு கதையை கூறுகிறேன் சிறு வயதில் கண்ணன் செய்த குறும்புக்கு அளவே இல்லை.
அந்தக்குறும்பிலும் பலர் நன்மை அடைந்திருக்கின்றனர் அதில் ஒரு பானையும் உண்டு. மண்பானை எப்படி வைகுந்தத்திற்கு போயிற்று? அந்தக்கதையைப்பார்க்கலாம். ததிபாண்டன் என்பவன் கண்ணனுக்கு உற்ற நண்பன்.ஆனால் ரொம்ப சாது.சூது கபடம் இல்லாதவன் .கண்ணன் செய்யும் குறும்புகளில் கண்ணன் தப்பிக்க இவன் மாட்டிக்கொண்டு தண்டனை அனுபவிப்பான்.ஒரு நாள் ததிபாண்டனின் தாய் அவனுக்கு கன்றுகுட்டிகளைக்கட்டி பாதுகாக்கும் வேலையைக்கொடுத்தாள் அவைகளை அவிழ்த்து விட்டால் தாயிடம் சென்று பாலைக்குடித்துவிடும் ஆகையால் அவைகளைக்கட்டி வைக்கச்சொன்னாள். ததிபாண்டனும் தாய் சொன்னதைத்தட்டாமல் காத்து நின்றான் .அங்கு மயில் பீலி ஆட கிருஷ்ணன் வந்தான், 
                                                          
"என்ன ததிபாண்டா? என்ன கன்றின் அருகில் நிற்கிறாய்?     

"அதுவா  கன்றுகள் தாயிடம்  சென்று பால் குடிக்காமல் பார்த்துக்கொள்ளும்படி என் தாய் கட்டளை இட்டிருக்கிறார்.அதனால் தான் இங்கு நிற்கிறேன் ." 

"அப்போ உனக்காக கொண்டு வந்த இனிப்பு வேண்டாமா? 

இதைக்கேட்டவுடன் நாக்கு ஊற  "எங்கே வைத்திருக்கிறாய் .காட்டு பார்க்கலாம் " 

"அவைகளை வைக்கோல் போர் பின் வைத்திருக்கிறேன் .அங்குப்போய் பார் " ததிபாண்டன் இப்போது கன்றுகளை மறந்தான், கண்கள் முன் இனிப்பே தெரிந்தது வைக்கோல் போர் அருகில் சென்றான். அதற்குள் கண்ணன் கன்றுகுட்டிகளை அவிழ்த்து விட்டான். கன்றுகளும் துள்ளிக்குதித்தோடி தாய்பசுவிடம் பாலைப்பருகின. இந்த நேரத்தில் ததிபாண்டவனின் தாய் அங்கு வந்து பார்த்து  கோபம் கொண்டாள். "எங்கேடா போனாய்? நான் கன்றுக்குட்டிகளைப் பாத்துக்கொள்ளச் சொன்னால் நீ எங்கேயோ போய்விட்டாய்" என்று கூறியபடியே வர கண்ணன் அங்கு வந்தான்.  "நீங்கள் உங்க மகனைத் தேடுகிறீர்களா?அவன் வைக்கோல்போர் பின்னால் இனிப்பை ருசி  பார்த்துக்கொண்டிருக்கிறான் ." என்று கூற  "ஏண்டா ததிபாண்டா உனக்கு இவ்வளவு திமிரா?' என்று கூறியபடியே  அவனை ஒரு குச்சியால் விளாசினாள் அவனும் அழுதபடி கண்ணனிடம் வந்தான் 'கண்ணா என்னை மாட்டிவிட்டாயல்லவா? எனக்கும் ஒரு காலம் வரும் அப்போது பார் " என்று கூறியபடியே அங்கிருந்து நகர்ந்தான்....

அந்த நாளும் வந்தது. திருட்டுத்தனமாக இதோ கண்ணன் எதோ ஒரு வீட்டில் நுழைகிறான்.இதை ததிபாண்டன் பார்த்துவிடுகிறான்                                                       
 "என்ன கண்ணா எங்க ஓடி ஒளிகிறாய் நீ ?"

"நான் ஒரு கோபியர் வீட்டில் நுழைந்து வெண்ணெய் சட்டியை உடைத்துவிட்டேன் .இதை யாரோபோய் என் அம்மாவிடம் சொல்ல என் அம்மா என்னைத்தேடி வருகிறாள்."

"நான் உன்னைக்காட்டிக்கொடுக்கப் போறேன் நீ அன்று என்னைக் காட்டிக்கொடுத்து அடி வாங்க வைத்தாய் அல்லவா?" 

"வேண்டாம் வேண்டாம் நீ என் நண்பனல்லவா? நீ என்னை இப்போது காப்பாற்ற நான் உனக்கு யாவரும் கிட்டாத ஒன்றை உனக்கு அளிப்பேன்" ததி பாண்டவனும் மனசு மாறி அவனிடம்  "இங்கே பெரிய பானை இருக்கு அதற்குள் ஒளிந்துக்கொள்" என்று கூற "கண்ணனும் ஒரு பானைக்குள் ஒளிந்துக்கொண்டான். ததிபாண்டன் அந்த பானையை ஒரு மூடியால் மூடி,  அதன் மூடியின் மேல் அமர்ந்துகொண்டான். 

கோபியும்  யசோதயும் அங்கு வந்து 'இங்கு கண்ணன் வந்தானா? நீ பார்த்தாயா?" என்று வினவ அதற்கு அவன் "எனக்குத்தெரியாதே நான் ஒருவரையும் இங்கு பார்க்கவில்லை" என்று பதிலளித்தான். அவர்களும் போய்விட்டார்கள். 

கண்ணன் பானையிலிருந்து குரல் கொடுத்தான். நண்பா நான் வெளியே வரவேண்டும் ..பானை மூடி மீதிருந்து கீழே இறங்கு" என்றான். ததிபாண்டவன் கீழே இறங்காமல் குரல் கொடுத்தான் "கண்ணா பானையிலிருந்து வெளியே வரவேண்டுமென்றால் எனக்கு நீ மோட்சம் கொடுக்கவேண்டும்" என்றான்....

"நண்பா ததி பாண்டன்  எனக்கு உள்ளே மூச்சு முட்டுகிறது சரி தருகிறேன், நீ கீழே இறங்கு"....     

அப்போதும் அவன் கீழே இறங்கவில்லை  "இன்னும் ஏன் தாமதம் செய்கிறாய்? நான் தான் மோட்சம் கொடுப்பேன் என்றேனே " 

"நீ எனக்கு மட்டும் கொடுத்தால் போதாது .உன்னைக்காப்பாற்றிய இந்த மண்பானைக்கும் மோட்சம் அளிக்க வேண்டும்."  

"சரி அப்படியே செய்கிறேன் ரொம்ப மூச்சு முட்டுகிறது நண்பா"   

ததி பாண்டன் பானை மூடியிலிருந்து கீழே குதிக்கிறான். வாசலில் புஷ்பவிமானம் ஒன்று வந்து நிற்கிறது "நண்பா நீ கேட்டபடியே இதில் ஏறி பானையுடன் வைகுந்தம்  போ."

"மிக்க நன்றி கண்ணா. நீ சொன்னபடி செய்துவிட்டாய் " என்றபடி மண்பானையுடன் வைகுந்தம் சென்றுவிட்டான் .வைகுந்தத்தில் இந்தப்பானை இருப்பதாக ஐதீகம்  .....

=============================================
13.விளம்பரதாரர் நிகழ்ச்சி பகுதியில்:- உங்களுக்கு வழங்குபவர் மற்றும் விளம்பர இடைவேளை (தேநீர் இடைவேளை) மற்றும் விளம்பரதாரர்களின் கண்காட்சி, பயிற்சிப்பட்டறை மற்றும் பல...
வழங்கியவர் திரு. ஹரிஹரன் (டாபர் ஹரி )
=================================
14.பயனுள்ள முகநூல் பக்கங்களில் இந்தமாதம் பகுதி:- 
1. https://www.facebook.com/A9RADIO/app/402411266453495/?__mref=message_bubble
முகநூளில் தமிழ் வானொலியில் பாடலைக் கேட்டுக்கொண்டு முகநூளில் உலவலாம். ..விருப்பமுடையவர்கள் இந்த முகநூல் பக்கத்தில் இணைந்து பயன்பெறலாம்.) நன்றிகளுடன் AK.பவித்ரா.
==============================================

பகுதி II -கால்வண்ணம் :- (நடனம், நாடகம், விளையாட்டு போட்டிகள்) :-
17-07-2016 அன்று  நமது 29-வது வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் பற்றிய குறிப்புகளும் புகைப்படங்களும் 

15. வாசகர் வட்ட நிகழ்ச்சியின் சிறப்பு புகைப்படங்கள் :-

அன்புள்ள வாசகர்களுக்கு:- நாங்கள் தொகுத்து வழங்கிய பதிவுகளில் உள்ள குறை நிறைகளை வாசகர்கள், அன்பான முறையில் எங்களுக்கு எடுத்துக்கூறி, எங்களது பதிவுகள் மேலும் சிறப்படைய வாழ்த்தி உற்சாகப்படுத்துமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு   
வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ் தமிழ் ரோஜாக்கள்.
நன்றி... மீண்டும் அடுத்தமாத இதழில் சந்திப்போம்... வணக்கம்.