"தமிழ் ரோஜாக்களின் குல்கந்து"

"தமிழ் ரோஜாக்களின் குல்கந்து"

Tuesday, June 27, 2017

படத்தைப் பார்த்தால் உங்களின் மனதில் என்ன தோன்றுகிறது? எழுதுங்கள், பகிர்ந்துகொள்ளுங்கள், பரிசுகளை வெல்லுங்கள்..

படத்தைப் பார்த்தால் உங்களின் மனதில் என்ன தோன்றுகிறது? எழுதுங்கள், பகிர்ந்துகொள்ளுங்கள், பரிசுகளை வெல்லுங்கள்.... 

நீங்கள் எழுதிய கதை / கட்டுரை அடுத்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" http://gulkanthu.blogspot.in/ வலைப்பதிவர் இதழில் வெளியாகும். நீங்கள் எழுதிய பதிவுகளை "vaishalireaderscircle@gmail.com" என்கிற மினஞ்சல் முகவரிக்கு 10-07-2017 முன்பாக அனுப்பிவைக்கவேண்டும். கதை / கட்டுரைகளை எழுதி அனுப்பிய அனைவருக்கும் வருகிற  16-07-2017, 3-வது ஞாயிறு அன்றய 41வது வைஷாலி வாசகர்வட்ட சந்திப்பில் பரிசுகள் வழங்கப்படும். 

வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :-
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து,
தொடர்ந்து  எங்க வீட்டு "நூலகம் "
படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும்
மனம்விரும்புதே பகுதியில்:-(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம் / செல்லப் பிராணிகள் வளர்ப்போம் )
தொடர்ந்து .. சுட்டீஸ் ரோஜாக்களின் "குல்கந்து" வலைப்பதிவு இதழ் குறித்த உரையாடல்.... http://gulkanthu.blogspot.in/
"இந்த மாத தலைப்பைச் சார்ந்த" போட்டிகளும் பரிசுகளும் .
#சிறப்பு போட்டிப் பரிசு, புத்தக விமர்சகர் பணமுடிப்பு, மேலும் பல ....

அனுமதி இலவசம், அனைவரும் வாருங்கள்.... நேரில் சந்திப்போமா?.... உதவி மற்றும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள (+91-9717236514).

நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்டம்....   புது தில்லி. 
Vaishali Readers Circle - NCR-New Delhi   

Sunday, June 18, 2017

வைஷாலி வாசகர் வட்ட "சுட்டீஸ்-குல்கந்து" இதழ்=15 ஆனி மாதம்-தேதி 18-06-2017.

வைஷாலி வாசகர் வட்ட "சுட்டீஸ்-குல்கந்து"  இதழ்=15 ஆனி மாதம்-தேதி 18-06-2017.


வருகை தாருங்கள், தமிழில் சிறுவர்கள் தொகுத்து வழங்கும் வலைப்பதிவர்களின் மாத இதழ், ஒவ்வொரு மாதமும் ஆங்கில மாதத்தின் 3-வது ஞாயிறுதோறும் (தமிழ் மாதத்தின் முதல் ஞாயிறு அன்று) இரவு 9 மணியளவில் வெளியாகும் சுட்டீஸ் ரோஜாக்களின் "குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழ்.   http://gulkanthu.blogspot.in/


 

கற்க கசடற….!!                                       !வாய்மையே வெல்லும்!!

 “வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம்
160/Sector-4, Vaishali, Ghaziabad, NCR-New Delhi.-201012
e-mail:  vaishalireaderscircle@gmail.com
___________________________________________________________________
சுட்டீஸ் இதழ்=15 ஆனி மாதம்-தேதி 18-06-2017வணக்கம், தாங்களின் வருகைக்கு நன்றி, இந்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழில்" -சித்திரை மாத வலைப்பதிவு:- இந்த இதழின் ஆசிரியராக, தொகுத்து வழங்குபவர்:- (Editor of the Page)  வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ் குழுவினர்கள் -வைஷாலி -NCR-புது தில்லி.

வைஷாலி வாசகர்வட்ட 40வது சந்திப்பு, ஆனி மாதம் முழுவதும்:- இயற்கைத் தாவர தோட்டம் அமைப்பது, வீட்டு வளர்ப்புப் பிராணிகள் / செல்லப் பிராணிகள் பராமரிப்பு  மற்றும் மாசு கட்டுப்பாடு  பற்றிய விழிப்புணர்வு பயிற்சி. மாதக் கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும். 


அடுத்து வரும் ஜூலை மாதம்-2017, 16-07-2017 ஆடி -மாத வலைப்பதிவு இதழின் ஆசிரியராக, (Editor of the page) இந்த வலைப்பக்கத்தை தொகுத்து வழங்க ஆவலுடன் காத்திருப்பவர் யார்? விருப்பம் உள்ளவர்  உங்கள் விருப்பத்தை உடனே தெரியப்படுத்துங்கள். மின் அஞ்சல் "vaishalireaderscircle@gmail.com"

சுட்டீஸ் ரோஜாக்களின் "குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழ் -15 ஆனி மாதம், 18-06-2017, ஆங்கிலமாதத்தின் 3வது ஞாயிறு அன்றய வைஷாலி வாசகர் வட்டத்தின் 40வது வாசகர் வட்ட சந்திப்பு மற்றும் விழிப்புணர்வு பயிற்சி மாதக் கொண்டாட்டங்களும். நிகழ்ச்சிகளும்.....

18-06-2017 அன்றய நமது 40-வது வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில்:- ,  


வைஷாலி வாசகர் வட்டத்தின் 40வது வாசகர் வட்ட சந்திப்பு 18-06-2017 தேதி,   3-வது    ஞயிறு    அன்றய    ஆணி    மாத   கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும் .... ( உறுப்பினர்கள்  பலர்  விடுமுறைக்கால பயணமாக தமிழகம் சென்றுள்ளதால் இந்த மாத வலைப்பதிவு இதழில் அதிகமான விவரங்கள் இடம்பெறவில்லை. )


வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :- 
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து, 
தொடர்ந்து  எங்க வீட்டு "நூலகம் " 
படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும் 
(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம் / செல்லப் பிராணிகள் வளர்ப்போம் )
தொடர்ந்து ......

"இந்த மாத தலைப்பைச் சார்ந்த" இயற்கைத் தாவர தோட்டம் அமைப்பது, வீட்டு வளர்ப்புப் பிராணிகள் / செல்லப் பிராணிகள் பராமரிப்பு  மற்றும் மாசு கட்டுப்பாடு  பற்றிய விழிப்புணர்வு பயிற்சி மாதக் கொண்டாட்டங்களும்நிகழ்ச்சிகளும். போட்டிகளும் பரிசுகளும்.. என நடந்தேறிய அன்றய நிகழ்ச்சியில் உதவிய அனைவரையும் பாராட்டி, நிகழ்ச்சி இனிதாக நிறைவுபெற்றது.

"ஒவ்வொரு மதமும் ஒரு விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை வகுப்புகள். என இந்த வருடம் முழுவதும் கற்றுக்கொள்வோம், தெரிந்துகொள்வோம் பயிற்சிப் பட்டறை மாதங்களின் வருடமாக, நமது வைஷாலி வாசகர் வட்டத்தின், ஒவ்வொரு மாதமும், ஆங்கில மதத்தின் 3வது ஞாயிறு அன்றைய வாசகர் வட்ட சந்திப்பில், ஒவ்வொரு மதமும் ஒரு விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை வகுப்புகள்...இந்த மாதம்:-கணினியில் தமிழ், கை தொலைப்பேசியில் தமிழ் என நவீன வழியில் தமிழ் மொழியை எடுத்தாளும் பயிற்சி மாதக்  கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும். கதைகள் மற்றும் கட்டுரைகள், பயிற்சிப்பட்டறை சார்ந்த போட்டிகளும் பரிசுகளும்  என இந்தமாத இதழில் பல விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.   

மேலும் இந்த மாத சுட்டீஸ்களின் ஏராளமான செய்திகளை மிகவும் பயனுள்ள வகையில் நமது வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ் "குல்கந்து" குழுவினர்கள் தொகுத்து தந்திருக்கிறார்கள்....

அவர்கள் தொகுத்துத் தந்த பல செய்திகளை ஒன்று சேர்த்து, அனைத்தையும் அழகாக கோர்த்து, ஒரு கதம்ப மாலையாக தொடுத்து தந்திருக்கிறார்கள். இந்த மாத வலைப்பதிவு இதழின் அனைத்து விவரங்களும்  உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம்.... இப்படிக்கு வாசகர் வட்ட சுட்டீஸ் "குல்கந்து" ரோஜாக்கள். 



I. முதலில் சுட்டீஸ் குல்கந்து தகவல்கள்:- 

@ வீட்டில் செல்ல பிராணிகளை வளர்ப்பது குறித்து நமது வைஷாலி வாசகர்வட்டத்தின் சுட்டீஸ் குழுவில் உறுப்பினர்களான வைத்தியநாதன் ரமேஷ் மற்றும் ராமகிருஷ்ணன் ரமேஷ் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் திரு மற்றும் திருமதி ரேணுகா ரமேஷ் அவர்கள் கூறுவதைக்கேட்கலாம்.:-

குழந்தைகளுக்கு நகர வாழ்க்கை என்பது, விளையாட்டு மற்றும் உற்சாகம் குறைந்த ஒன்றாக இருக்கிறது. மேலும், பெற்றோர்கள் இருவருமே வேலைக்கு சென்றால், நிலைமை இன்னும் மோசம்.

இதுபோன்ற ஒரு சூழலில், வீட்டில் செல்ல பிராணி வளர்ப்பது, குழந்தைகளுக்கான பெரிய பொழுதுபோக்கு அம்சமாகவும், மனதிற்கு மகிழ்வைத் தரும் விஷயமாகவும் இருக்கிறது. இதன்மூலம், அவர்களின் மன அழுத்தமும் குறைகிறது. வாருங்கள் எங்கள் வீட்டின் செல்ல பிராணியாக "குட்டி" என்ற பெயர் கொண்ட வளர்ப்பு நாய் பற்றி உங்களுக்கு சொல்லுகிறேன்.

வளர்ப்பு நாய் "குட்டி" ரொம்ப சுட்டி, அதோட நிறைய விஷமத்தனம் செய்வான். தினமும் காலையில் அலாரம் அடித்தாற்போல வாக்கிங் வெளியில் சுற்றுவதற்காக சரியாக விடியற்காலை 4 மணியிலிருந்தே கத்த ஆரபித்துவிடுவான். 

* செல்ல பிராணிகளான மிருகங்களின் உலகம் மிகவும் சிறியது. அதுவும், வீட்டில் வளர்க்கப்படும் நாய் போன்ற செல்லப் பிராணிகள், மனிதர்களை அதிகம் எதிர்பார்ப்பவை. அவை மனிதர்களிடமிருந்து, கவனிப்பையும் அன்பையும் எதிர்பார்க்கின்றன. அதேசமயம், அவை தன்னை வளர்த்து உணவளிப்பவர்களுக்கு காட்டும் பதில் மரியாதையும், அன்பும் தனி ரகம். அதிலும், நாய்கள் அதில் மிகவும் முக்கியமானவை.

* செல்ல குட்டி நாய்கள், நம் செல்ல குழந்தைகளுக்கு காட்டும் அன்பானது, நம் குழந்தைகளை அளப்பரிய மகிழ்ச்சிக்கு இட்டு செல்கிறது. குழந்தைகளின் சிறந்த நண்பனாக வீட்டு வளர்ப்பு நாய்கள் திகழ்கின்றன. குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும்தான்.

* செல்ல விலங்குகள், குழந்தைகளுக்கு பொறுப்புணர்வைக் கற்றுத் தருகின்றன. இதன்மூலம், பொறுப்பின்மையால் ஏற்படும் பின்விளைவுகள் குழந்தைகளுக்கு தெரியவருகிறது. உதாரணமாக, உங்கள் குழந்தை, செல்லப் பிராணிக்கு உணவளிக்க மறந்துவிட்டால், அதனால், அந்த செல்லப்பிராணி படும் துன்பத்தை நேரடியாக உணர்ந்து, உங்கள் குழந்தை பொறுப்புணர்வைக் கற்றுக்கொள்கிறார்கள்.

* வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணியை கவனித்துக் கொள்ளுதல், அதற்கு உணவளித்தல் மற்றும் அதற்கு தேவையான அனைத்தையும் செய்தல் உள்ளிட்ட செயல்களால், வீட்டில் நமது குழந்தைகளுக்கும் தன்னம்பிக்கையை அளிப்பதாக உள்ளன.

* இன்றைய யுகம் எலக்ட்ரானிக் யுகம். நகர்ப்புற குழந்தைகள் பலரும், வீடியோ கேம் உள்ளிட்ட எலக்ட்ரானிக் விளையாட்டுகளில் மூழ்கி கிடக்கிறார்கள். அவர்கள், உயிருள்ள அம்சங்களைவிட, உயிரற்ற அம்சங்களுடன்தான் அதிகநேரம் செலவிடுகிறார்கள். செல்போன் விளையாட்டுகள், லேப்டாப் விளையாட்டுகள் போன்றவை வெகு பிரபலம். இதனால், அவர்களின் மூளை தேவையான வளர்ச்சியின்றி ஒரு தேக்க நிலையை அடைகிறது. மன பாதிப்புகள் மட்டுமின்றி, உடல்ரீதியான பல பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

எனவே, உங்களது வீட்டிலும் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள், உங்கள் குழந்தைகளை, அத்தகைய எலக்ட்ரானிக் உபகரணங்களை விட்டு அகலுமாறு செய்து, அவர்களை ஓடியாடி விளையாட வைக்கிறது. நன்றாக சிரிக்க வைக்கிறது மற்றும் அவர்களுக்கு ஒரு உயிர்ப்புள்ள அனுபவத்தை தருகிறது. இதன்மூலம், மனோரீதியாகவும், உடல்ரீதியாகவும் உங்களின் குழந்தை பெரியளவு நன்மையடைகிறது.

* பிற உயிர்களின் மீது அன்பு செலுத்த வேண்டுமென்பது ஒரு மானுட தத்துவம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளால், உங்களின் குழந்தை, நடைமுறை ரீதியில் அந்த உயரிய மானுட பாடத்தைக் கற்றுக்கொள்கிறது.

செல்ல பிராணிகளின் பராமரிப்பில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியவை:-
வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்ப்பதில் பல சுகாதார அம்சங்களும் அடங்கியுள்ளன என்பதை மறக்கலாகாது. தற்போதைய காலங்களில், பல குழந்தைகள், ஆஸ்துமா பிரச்சினைகளுடன் பிறக்கின்றன. அதுபோன்ற நிலையில், வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளின் உரோம மயிர்களால், அந்தப் பிரச்சினை மேலும் தீவிரமாகும். எங்க வீட்டு நாய் குட்டிக்கு அப்படிப்பட்ட பிரச்சனைகள் ஏதுமில்லை. தினமும் நாயை குளிப்பாட்டி சுத்தமாக வைத்துக்கொள்வதோடு உரிய பாதுகாப்பு மருத்துவ சிகிச்சையும் செய்துவருவதால் சுகாதாரமாக நாய் குட்டியை வளர்க்கமுடிகிறது.   

செல்லப் பிராணிகளுக்கு ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளை உடனடியாக கவனிப்பது மிகவும் முக்கியம். நாய் உள்ளிட்டவைகளுக்கு ஏதேனும் சில காரணங்களால் வெறி பிடிக்க வாய்ப்பிருக்கிறது.

செல்லப் பிராணிகளுக்கு உடல்நல கோளாறுகள் ஏற்படுகையில், அலட்சியமாக இருக்காமல், அவற்றை உடனடியாக, அருகிலுள்ள தனியார் அல்லது அரசு கால்நடை மருத்துவமனைகளுக்கு கொண்டுசென்று, முறையாக சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லையேல், நமது செல்லப் பிராணியை இழக்க நேரிடும்.

மேலும், உங்களின் குழந்தை, செல்ல நாய் அல்லது பூனையுடன் விளையாடுகையில், எதிர்பாராத விதமாக, அவற்றின் பற்கள் பட்டு, குழந்தைக்கு ரத்தக் காயம் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, அதுபோன்ற சூழல்களில், உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில், நிலைமை விபரீதமாகிவிடும்.

எந்த விஷயத்திலும், எப்போதும் கவனமாக இருந்தால்தான் நம் வாழ்வையும், நம் குழந்தைகளின் வாழ்வையும் சிறப்பாக அமையும். 

என்ன சுட்டீஸ்???? நீங்களும் உங்கள் வீட்டில் ஒரு செல்ல பிராணியை வளர்க்க முயற்சி செய்வீர்களா?.


====================================================
@ ஹாய் சுட்டீஸ், நல்லா இருக்கீங்களா? இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. 

முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா? 

’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ அப்படீன்னு சொல்லிக்கிட்டு மட்டுமே இருக்காமல் சொன்னபடியே வாழ்ந்து காட்டியவர். அவர்தான் நம் தாமஸ் ஆல்வா எடிசன். நாமெல்லாம் இன்னைக்கு பல விதமான வசதிகளுடன் சுகமாக வாழ்ந்திட்டிருக்கோம்னா அதற்கு அடிப்படையான கண்டுபிடிப்புகளை நமக்கு அளித்தவர். இதுவரை உலகிலேயே மிக அதிகமான 1907 கண்டுபிடிப்புகளின் சொந்தக்காரர் இவர். இத்தனைக்கும் படித்துப் பட்டம் பெறாத மேதை இவர்.
எடிசன் 1847 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதி, அமெரிக்காவில், ஒஹையோவில் உள்ள மிலான் என்னும் ஊரில், பெற்றோருக்கு ஏழாவது குழந்தையாக பிறந்தார். எடிசனுக்கு சின்ன வயதிலேயே காது செவிடாகப் போய்விட்டது. அது மட்டுமல்ல, பிறவியிலேயே அவருடைய தலை, பின்புறம் நீட்டிய நிலையில் சற்று கோணலாகவே இருந்தது. அவர் வளர்ந்த பிறகும் அதே தோற்றம்தான் இருந்தது. அவரோட அம்மா ஒரு பள்ளி ஆசிரியை. பள்ளி செல்லும் வயதில் அவரை பள்ளிக்கு அனுப்பினார்கள். இரண்டு நாளில் சக மாணவர்கள் அவரை ‘கோண மண்டையன்’ என்று கேலி பேசியதால் பள்ளிக்கு போகமாட்டேன் என்று வந்துவிட்டார். மீண்டும் அவருடைய தாய் சமாதானம் செய்து பள்ளிக்கு அனுப்பியும் இரண்டு மாதம்தான் தாக்குப்பிடித்தார். தன்னை ‘மூளைக்கோளாறு உள்ளவன்’ என்று ஆசிரியர் திட்டுவதாகக் கூறி அழுதுகொண்டு வந்துவிட்டார். மீண்டும் அவர் அம்மா சமாதானம் செய்து பள்ளிக்கு அனுப்பியும் அவர் ஒழுங்காக பள்ளிக்குச் செல்லாமல் நின்றுவிட்டார். வீட்டிலேயே அவர் தாய் பாடம் கற்றுக்கொடுத்து படிக்க வைத்தார். ஆனால், பிற்காலத்தில் ‘மெண்டோ பார்க்கின் மந்திரவாதி’ என்று பாராட்டப்பட்டவரும் இவர்தான். ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா. ஆம், நம் வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகளாகிப்போன பல்வேறு கண்டுபிடிப்புகளின் நாயகன் இவர்தான்! 
தன்னோட 84வது வயதில் இவர் இறந்தபோது, அமெரிக்க சரித்திரத்திலேயே இல்லாத வகையில் இவருக்காக சுதந்திர தேவியின் கை விளக்கின் ஒளியிலிருந்து, ஊரின் அனைத்து விளக்குகளையும் நிறுத்தி வைத்திருந்தார்களாம். இவர் இறந்த பின்பு இவருடைய மூளையை ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். ஆனால் எல்லோருக்கும் உள்ள அதே அளவு மூளைதான் அவருக்கும் இருந்ததாம். ஆனால் கோணலாக நீட்டிக்கொண்டிருந்த அந்த பின் மண்டையில்தான் ஏதோ அதிசயம் இருக்கவேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிட்டார்களாம். இதிலிருந்து என்ன தெரிகிறது ஆளைப்பார்த்து எடை போடக்கூடாது இல்லையா.. யாரிடம் என்ன திறமை ஒளிந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாது. தோல்விகளைக்கண்டு ஒருபோதும் மனம் தளரக்கூடாது.
அடுத்து இன்னொரு விதமான நம்பிக்கை சம்பவம் பாருங்கள். கனவுகளுக்கு பலன் இருக்கு, இல்லை என்று பலவிதமான நம்பிக்கைகள் இருக்கு. நம் அப்துல்கலாம் ஐயா கூட ‘நிறைய கனவு காணுங்கள்’ அப்படீன்னு சொல்லியிருக்கார் இல்லையா. நாம் இன்னைக்கு அழகழகா உடை போட்டிருக்கோமே. அதை தயாரிக்கிற நவீன தையல் இயந்திரம் பற்றி தெரியுமில்லையா. அதை கண்டு பிடித்தவரையும், அவர் அதைக் கண்டுபிடிப்பதற்கு ஒரு கனவுதான் காரணமாக இருந்தது தெரியுமா. 1846 ஆம் ஆண்டு இலியாஸ் ஹோ (Elias howe) என்பவர் தையல் இயந்திரத்தைக் கண்டு பிடிப்பதற்கு மிகவும் பாடுபட்டுக்கிட்டிருந்தார். அவர் உருவாக்கிய அந்த இயந்திரம் முழுமை அடையாமல் இருந்ததால் அவர் கவலைபட்டுக்கிட்டிருந்தார். அதாவது இயந்திரத்தை கண்டுபிடித்த எலியாஸ் ஹோவே அதில் ஊசியை எங்கே வைப்பது என்பதை கண்டு பிடிக்கமுடியாமல் தவித்தார் , அந்த நேரத்துலதான் ஒரு நாள் அவர் ஒரு கனவு கண்டார். என்ன கனவு தெரியுமா அது?
நர மாமிசம் சாப்பிடுகிற ஒரு அரசன் இருக்கிறான். சில காட்டுமிராண்டிகள் வந்து அந்த விஞ்ஞானியை அரசனிடம் கொண்டு செல்கிறார்கள். அந்த அரசன், ‘இன்னும் 24 மணி நேரத்திற்குள் ஒரு தையல் இயந்திரத்தை இவன் உருவாக்கவில்லையானால், இவனை ஈட்டிகளால் கொன்று விடுங்கள்’ என்று ஒரு உத்தரவு போடுகிறான். ஆனால் 24 மணி நேரத்திற்குள் அவரால் தையல் இயந்திரத்தை உருவாக்க முடியவில்லை. அதனால் அரசனுடைய ஆணைப்படி அவரை கொலைக்களத்திற்கு கொண்டு செல்கிறார்கள். அங்கே அவரை கீழே தள்ளி அந்த காட்டு மிராண்டிகள் ஈட்டிகளைத் தூக்கி குத்த வருகிறார்கள். படுத்த நிலையிலிருந்து தன்னை நோக்கி பாய்ந்து வரும் ஈட்டிகளையும், அந்த ஈட்டிகளின் முனையில் கண் போன்ற ஓட்டை அமைந்திருப்பதையும் பார்த்த அந்த விஞ்ஞானிக்குத் தெளிவு பிறந்து விடுகிறது. அவ்வளவுதான் தெளிவு பிறந்தது, கனவும் தூக்கமும் கலைந்த நொடியில் தன் சோதனைச் சாலையை நோக்கி ஓடுகிறார். கனவில் வந்தது போல ஈட்டியின் முனையில் உள்ள கண் போன்ற ஓட்டையின் வடிவத்தில், தையல் இயந்திரத்தின் ஊசியில் ஒரு கண் போன்ற ஓட்டை வடிவமைக்கப்பட்டால், அதில் நூல் கோர்த்தவுடன் அது துணியை நோக்கி மேலிருந்து கீழாக இறங்கி வரும்போது, அந்த ஊசி தையல் வேலையை அழகாகச் செய்யும் என்றும் கண்டுபிடித்துவிட்டார் அவர்.
இன்றும் நாம் அந்த முறையில்தான் ஆடை வடிவமைத்து அணிகிறோம். 
எந்த செயலாக இருந்தாலும், அதை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதியான எண்ணம் இருந்தால்மட்டும் போதும், அந்த உள்ளுணர்வின் சக்தியே அதனை ஏதேனும் ஒரு வகையில் நடத்திவிடும். ஆக, நமக்கு வேண்டியதெல்லாம் ஆக்கப்பூர்வமான உறுதியான நல்ல சிந்தைகள் என்பது புரிகிறதல்லவா மீண்டும் சந்திப்போமா.
நன்றி:- நித்திலம் http://www.coralsri.com/kuzainthaikalukkaaka/27104
===========================================================
சித்திரமும் கைப்பழக்கம் பகுதியில்:-

@சுட்டீஸ் தக்ஷின் சிவா LKG- வைஷாலி 


@ சுட்டீஸ் ஜெய் சக்தி UKG

================================================
@. புதிய எட்டு வித்தியாச புதிர் போட்டி :- சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்"..... "ஆனி-மாத-படத்தில் உள்ள (8) எட்டு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் -வலைப்பதிவு இதழ் போட்டி என்-15.

சரியான விடை அடுத்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" http://gulkanthu.blogspot.in/வலைப்பதிவர் இதழில் வெளியாகும். 

போட்டியில் பங்குகொள்ள விருப்பமுடையவர்கள் விடைகளை "vaishalireaderscircle@gmail.com" என்கிற மினஞ்சல் முகவரிக்கு 10-07-2017 முன்பாக அனுப்பிவைக்கவேண்டும். சரியான விடை எழுதிய அனைவருக்கும் அடுத்தமாத வாசகர் வட்ட சந்திப்பில் பரிசுகள் வழங்கப்படும்.
==========================================

சென்ற மாத "சுட்டீஸ் குல்கந்து" வலைப்பதிவர் இதழ்-14   ஜூன்-2017 வைகாசி-மாதம்  வலைப்பதிவு இதழ், எட்டு வித்தியாசப் போட்டி என்-14. போட்டிக்கான  சரியான  விடை,


1)சிறுவன் படம் இடம் வலமாக மாறியிருக்கிறது, 2) டீ காப்புக்கு கீழே 5 சங்குகள், 3) பச்சை கொத்தமல்லி இலை  4 உள்ளது 4) சிறுவன் பனியன் பொத்தான்கள், 5) படத்தில் மீன்கள், 6)  பூமி உருண்டையில் இந்தியா,  7) படத்தில் பச்சை புல், 8)வழக்கமான ஓவியம் வரைந்தவரை கௌரவிக்கும் வகையில் அவரது பெயர் கையொப்பத்தில் வட்டம் அல்லது பெயரின் கீழ் கோடிட்டு காட்டுதல்.  

சென்ற மாத ஆறு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடையை 45 நபர்கள் மட்டுமே குறிப்பிட்டிருந்தனர், தமிழில் விடை எழுதியவர்கள்=37, ஆங்கிலத்தமிழில் எழுதியவர்கள்=05, ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=03, ஹிந்தி மொழியில்=0 நபர்களும், பிற மொழியில்=0 நபரும், மேலும் சிலர் ஆறுக்கும் அதிகமான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.
===============================================



===============================================
@ அருகம்புல்லின் பலன்கள்

நம்மில் பலர் அருகம்புல்லை பூஜை அறையில் வைத்துப் பயன்படுத்துவதுண்டு. ஆனால், அருகம்புல்லின் மருத்துவப் பெருமைகளை அறிந்தவர்கள் நம்மில் எத்தனை பேர் உள்ளனர்?

நமது உடலில் ஊட்டச்சத்து பெருக வேண்டும் என்பதற்காக ஹோர்லிக்ஸ், ஓவல்டின், போன்ற பானங்களைஸ் சாப்பிடுகிறோம். ஆனால் அருகம்புல்லே அற்புதமான ஊட்டச்சத்து முலிகை என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்காது.

நல்ல தளிர் அருகம்புல்லை சேகரித்து நீரில் கழுவி நைய அரைத்து பசும் பாலுடன் சேர்த்து சுண்டக் காய்ச்சி நாள்தோறும்இரவில் படுக்கச் செல்லுமுன் சாப்பிட்டு வந்தால் பலவினமடைந்த உடல் தேறி நல்ல பலம் பெற்றுவிடும். வளர்ந்து வரும் குழந்தைகள் எளிதாக ஊட்டச்சத்து பெற இதே முறையைக் கையாளலாம்.


அருகம்புல்லை நீரிலிட்டு நன்கு காய்ச்சி அந்த நீரை பதமான சூட்டில் குடித்து வந்தால் இதய நோய்க்கு இதமளிக்கும்.
திடிரென ஏற்படும் வெட்டு, காயம் போன்ற ரண காயங்களுக்கு அரிவாள் மூக்கு என்று சொல்லப்படும் பச்சிலையையும், அருகம்புல்லையும் சம அளவாக எடுத்து அரைத்துக்

கட்டினால் உதிரப் போக்கு உடனடியாக நின்றுவிடும். காயமும் வெகு விரைவில் ஆறிவிடும்.

அருகம்புல் ஜூஸ்
தேவையான பொருட்கள்.....
அருகம்புல் -1 கட்டு
தேன் - 2 டேஸ்பூன்
ஏலக்காய் - 1 சிட்டிகை

செய்முறை.....
*அருகம்புல்லை நன்கு கழுவி சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
• பின் அதனுடன் தேன், ஏலக்காய்ப் பொடி சேர்த்து பருக வேண்டும்.
• அருகம்புல் அடிக்கடி சேர்ப்பது இரத்தத்தை சுத்தப்படுத்த உதவும். உடல் உறுப்புகள் ஒழுங்காக வேலை செய்ய உதவும்

=========================================
சண்டை இல்லாத அன்பானவர்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் தங்கும்.

பெரும் பணக்காரரான ஒரு வியாபாரியின் வீட்டில். செல்வத்திற்கு பஞ்சமில்லை. எல்லா செல்வமும் அவர் வீட்டில் கொட்டி கிடந்தது. ஒருநாள் அந்த வியாபாரியின் கனவில் தோன்றிய மகாலட்சுமி, ‘பக்தனே! நீயும் உன் முன்னோர்களும் செய்துள்ள புண்ணியங்களின் காரணமாகவே இது வரை நான் உன் வீட்டிலேயே தங்கியிருந்தேன். நீ செய்த புண்ணியம் அனைத்தும் தற்போது தீர்ந்து விட்டது.எனவே இன்னும் ஓரிரு நாளில் உன் வீட்டை விட்டு வெளியேற உள்ளேன். அதற்கு முன் உனக்கு ஏதாவது வரம் வேண்டும் என்றால் கேட்டுப் பெற்றுக்கொள். ஆனால் என்னை இங்கேயே தங்கியிருக்கக் கேட்கக் கூடாது’ என்றாள்.

மறுநாள் பொழுது விடிந்தது. வியாபாரி வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து கனவில் நடந்தவற்றைக் கூறினார். மகாலட்சுமியிடம் என்ன வரம் கேட்கலாம் என்று அவர் தம் குடும்பத்தினரிடம் ஆலோசனை கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஆலோசனை கூறினர்.

ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே கருத்தையே வெளிப்படுத்தினர். ‘நவ ரத்தினங்களை வரமாக கேளுங்கள்; ஏராளமான பொற்குவியல்களை கேளுங்கள்; நிறைய உணவு பொருட்களை கேளுங்கள்; மாட மாளிகைகள் பலவற்றை கேளுங்கள்’ என்று அடுக்கிக் கொண்டே போனார்கள்.

அப்போது அந்த வீட்டின் கடைசி பெண் தன் தந்தையிடம், ‘அப்பா நமக்கு தேவையான பொன், வைரம், வைடூரியம், மாணிக்கம், வீடு என எவற்றை வரமாக கேட்டு வாங்கினாலும், அது நம் வீட்டில் நிலைக்கப் போவதில்லை. ஏனெனில் எப்போது நம் வீட்டில் இருந்து மகாலட்சுமி தேவி வெளியேறப் போகிறேன் என்று எப்போது கூறி விட்டாளோ, அவள் வெளியேறியவுடன் அவளது ஐஸ்வரியம் பொருந்திய இந்த பொருட்களும் வெளியேறி விடும், அல்லது நிலைக்காமல் போய்விடும்.

எனவே எப்போதும் எங்கள் வீட்டில் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்கும்படி வரம் அருளுங்கள் என்று மகாலட்சுமி தேவியை கேளுங்கள்’ என்று கூறினாள்.

இளைய மகள் கூறியதே சரி என்று வியாபாரிக்கு தோன்றியது. அதையே இறுதி முடிவாகக் கொண்டு, இரவு தூங்கச் சென்றார் வியாபாரி.

அன்றைய தினம் இரவில், அவர் கனவில் மகாலட்சுமி தோன்றினாள். அவளிடம், ‘அன்னையே! எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் எப்போதும் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்க வேண்டும். இதுவே நான் உன்னிடம் கேட்கும் வரம். இந்த வரத்தை மட்டும் தாங்கள் அருளினால் போதுமானது’ என்று வியாபாரி கேட்டார்.

லட்சுமிதேவி சிரித்தபடி ‘மகனே! இப்படி ஒரு வரத்தைக் கேட்டு மீண்டும் உன் வீட்டிலேயே என்னை கட்டிப்போட்டு விட்டாய். எந்த குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி வாழ்கிறார்களோ, எந்த குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இல்லையோ, அந்த வீட்டில் நிச்சயமாக நான் இருந்தே தீருவது என்று முடிவு எடுத்துள்ளேன். எனவே நீ கேட்ட இந்த வரத்தால் மீண்டும் நான் உன் வீட்டிலேயே தங்கி இருந்து விடுகிறேன்’ என்று கூறி அங்கேயே தங்கிவிட்டாள்.

*‘எந்த வீட்டில் குடும்பத்து பெரியவர்களை, மதித்து வழிபடுகிறார்களோ, எங்கு நாகரீகமான முறையில் மற்றவர்களுடன் மரியாதையோடு பழகுகிறார்களோ, பிறருடைய செய்கையால் மனதில் கோபம் ஏற்பட்டாலும் எவர் தங்கள் வாயால் சண்டை செய்யாமல் இருக்கிறார்களோ அந்த இடங்களில் எல்லாம் நான் வசிக்கிறேன்’ என்று இந்திரனிடம் ஒருமுறை லட்சுமி கூறியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது. ஆகையால் லட்சுமி கடாட்சம் பெற விரும்புபவர்கள் சண்டை போடுவதைத் தவிருங்கள்.*

============================================
கொய்யா பழம் நன்மைகள் – Guava Benefits
கொய்யாவில் இருக்கிறது கொள்ளை சத்து  
=====================================================
சில வித்தியாசமான கணக்குகள்....

கூட்டல்:
மனிதன்+தன்னம்பிக்கை = வெற்றி
மனிதன்+கவலை = கண்ணீர்
மனிதன்+ஆனந்தம் = புன்னகை
மனிதன்+இயலாமை = கோபம்
மனிதன்+அன்பு = காதல்
மனிதன்+ஆசை=காமம்

கழித்தல்:

மனிதன் - தன்னம்பிக்கை= தோல்வி
மனிதன் - கவலை = உற்சாகம்
மனிதன் - ஆனந்தம் = சோம்பல்
மனிதன் - இயலாமை = முயற்சி
மனிதன் - அன்பு = குரோதம்
மனிதன் - ஆசை = அமைதி

பெருக்கல்:

மனிதன் × தன்னம்பிக்கை = சாதனை
மனிதன் × கவலை = தற்கொலை
மனிதன் × ஆனந்தம் = ஆயுள் விருத்தி
மனிதன் × இயலாமை = அவதி
மனிதன் × அன்பு = மனிதாபிமானம்
மனிதன் × ஆசை = வக்கிரம்
================================================

@12 காய்கறிகளை* கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியும்:-
Kidney Failure : *கத்திரிக்காய்*
Paralysis : *கொத்தவரங்காய்*
Insomnia : *புடலங்காய்*

Hernia : *அரசாணிக்காய்*

Cholesterol : *கோவைக்காய்*

Asthma : *முருங்கைக்காய்* 

Diabetes : *பீர்கங்காய்*
Arthritis : *தேங்காய்*
Thyroid : *எலுமிச்சை*
High BP : *வெண்டைக்காய்*
Heart Failure : *வாழைக்காய்*
Cancer : *வெண்பூசணிக்காய்*



@உணவு பழக்கம்" பழமொழி வடிவில்🎀*


*💎காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.*

*💎போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே*💚

*💎பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா*💚
*💎சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.*💚
*💎 எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல*💚
*💎 தன் காயம் காக்க வெங்காயம் போதும்*💚
*💎வாழை வாழ வைக்கும்*💚
*💎அவசர சோறு ஆபத்து*💚
*💎ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்*💚
*💎இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு*💚
*💎ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை*💚
*💎இருமலை போக்கும் வெந்தயக் கீரை*💚
*💎உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி*💚
*💎கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்*💚
*💎குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை*💚
*💎கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை*💚
*💎சித்தம் தெளிய வில்வம்*💚
*💎 சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி*💚
*💎சூட்டை தணிக்க கருணை கிழங்கு*💚
*💎ஜீரண சக்திக்கு சுண்டக்காய்*💚
*💎தலை வலி நீங்க முள்ளங்கி சாறு*💚
*💎தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை*💚
*💎பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி*💚
*💎மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு*💚
*💎வாந்திக்கு மருந்து மணத்தக்காளி*💚
*💎வாத நோய் தடுக்க அரைக் கீரை*💚
*💎வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்*💚
*💎பருமன் குறைய முட்டைக்கோஸ்*💚
*💎பித்தம் தணிக்க நெல்லிக்காய்*💚

*உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்”*💚

*🎀நலம் உடன் வாழ்வோம்...

🌾🌾🌾

=========================================

@ சர்க்கரை நோய் பூரண குணம் !!!

ஒருவர் , தனது அம்மாவிற்கு கடுமையான காய்ச்சல் என்று ஹாஸ்பிடல் போய் டெஸ்ட் எடுத்து பார்த்தால் டெங்கு காய்ச்சல். பக்கத்தில் மளிகை கடை வைத்திருக்கும் திருநெல்வேலி அண்ணாச்சி நிலவேம்பை கஷாயம் வைத்து ரெண்டு வேலை குடிங்க காய்ச்சல் சரியாகிவிடும் என்று சொன்னார். அவரும் நிலவேம்பு பொடியை கஷாயம் வைத்து 3 நாள் கொடுத்தார் காய்ச்சல் குணமாகி விட்டது கூடவே தன் அம்மாவிற்கு சர்க்கரை நோயால் காலில் பயங்கர எரிச்சல் எப்பொழுதுமே இருக்கும் அது சுத்தமாக இல்லை. உடனே நெட்டில் தேடிபார்த்த பொழுது நிறைய இணைய தளங்களில் Andrographis paniculata (நிலவேம்பின் தாவர பெயர் ) தினமும் எடுத்துகொள்ளும் பொழுது ரத்தத்தில் குளுகோஸ் அளவு குறைகிறது என்று நிறைய ஆராய்ச்சி கட்டுரைகள் கிடைத்தது .

3 டம்ளர் தண்ணீரில் ஒரு பெரிய டீஸ்பூன் நிலவேம்பு பொடி போட்டு 1 டம்ளர் வற்றும் வரை கொதிக்க விட்டு தினமும் காலை 1 வேளை இரவு வேளை என ஒன்றரை மாதம் தன் அம்மாவுக்கு கொடுத்ததில் 290 அளவு இருந்த சர்க்கரை அளவு நேற்று வெறும் 80 !!!

இதில் முக்கியமாக நல்ல தரமான 100% ஆர்கானிக் நிலவேம்பு பொடியாக இருந்தால் பலன் நிச்சயம் .நிறைய ஆன்லைன் ஸ்டோர் மற்றும் நாட்டு மருந்து கடை அல்லது ஹோமியோ மருந்து கடையிலும் கிடைக்கிறது .

காய்ச்சலுக்கு கஷாயம் குடிக்க போய் சர்க்கரை நோய் குணமாகி விட்டது.

💎💎💎💎💎💎💎
ப்ளீஸ் ஷேர் பண்ணுங்க எல்லோருக்கும் பயன்படட்டும் from Watsup
==============================================
@ இல்லப்பராமரிப்பில் (வீட்டுப்பிராமரிப்பு) குழந்தைகளுக்கும், நமது குடும்பத்திற்கும் எந்த மாதிரியான நேர்மறையான விளைவுகளை அளிக்கின்றன என்பதை இங்கு பார்க்கலாம்.

சிரிக்கும் புத்தரை இந்த திசையில் வைத்தால் செல்வம் செழிக்கும் தெரியுமா?

அதிர்ஷ்டத்தை கொண்டு வரவும், துரதிர்ஷ்டத்தை தவிர்க்கவும், வீட்டின் ஒட்டுமொத்த சூழல் மற்றும் சந்தோஷத்தை அதிகரிக்கவும் நமது வீட்டில் சிரிக்கும் புத்தரின் சிலைகள் அல்லது பொம்மைகளை வைப்பது ஒரு வழக்கம். சிரிக்கும் புத்தரின் மகிழ்வளிக்கும் தோற்றம் நம்மை அதிகமாக மகிழ்வித்து, வாழ்க்கையிலுள்ள அழுத்தங்கள் மற்றும் துன்பங்களை போக்கும்.

கிழக்கு திசை:
வீட்டின் கிழக்கு திசை தான் குடும்பத்தின் அதிர்ஷ்ட புள்ளியாக கருதப்படுகிறது. அதனால் உங்கள் குடும்பத்தில் ஒற்றுமையும் சந்தோஷமும் நிலவ வேண்டும் என்றால் சிரிக்கும் புத்தரின் சிலையை வீட்டின் கிழக்கு திசையில் வைத்திடவும்.

பொதுவாக குடும்பத்திற்குள் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே சச்சரவு, வாக்குவாதம் மற்றும் சண்டைகள் அடிக்கடி ஏற்பட நேரிடலாம். வீட்டில் இருப்பதற்கே உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். அப்படிப்பட்ட நேரங்களில், இவரை கிழக்கு திசையில் வைப்பதால், உங்களுக்கு போதிய நிவாரணத்தை அது அளிக்கும்.

ஷெங் சி திசை:
ஃபெங் ஷுய் மரபில், ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் ஒரு குறிப்பிட்ட திசை, அவருக்கான தனிப்பட்ட ஷெங் சி திசையாக வழங்கப்படும். சிரிக்கும் புத்தரை வீட்டில் இந்த திசையில் வைத்தால் செல்வம் பெருகுவதிலும், ஒட்டு மொத்த நலனிலும், வாழ்க்கையில் வெற்றி கிட்டுவதிலும் உதவிடும். அதேப்போல் தனி நபரின் இலக்கை நோக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், நேர்மறையான விளைவுகளை கொண்டு வரவும் கூட இது ஆதரவாக இருக்கும்.

தென் கிழக்கு திசை:
சிரிக்கும் புத்தரை அறை, கூடம், படுக்கையறை அல்லது உணவருந்தும் அறையின் தென் கிழக்கு திசையில் நீங்கள் வைத்தால், மிகுதியான அளவில் எதிர்ப்பாராத அதிர்ஷ்டத்தையும், வீட்டின் வருமானத்தை உயர்த்திடவும் அவர் உதவிடுவார்.

சிரிக்கும் புத்தரை தென் கிழக்கு பகுதியில் வைத்தால், உயர்ந்த பதவிகளில் வசிப்பவர்களும், அரசியலில் ஈடுபட்டுள்ளவர்களும் தங்கள் எதிரிகளின் நடவடிக்கைகளைத் தடுக்கும் ஆற்றலை பெறுவார்கள். இந்த திசையில் வைப்பது மன அழுத்த நிவாரணியாக செயல்பட்டு, மனநிலையை மேம்படுத்தும்.

அலுவலக மேஜை:
சிரிக்கும் புத்தரை அலுவலக மேஜையின் மீதோ வீட்டிலுள்ள வேலை மேஜையின் மீதோ வைத்தால், உங்களுக்கு தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் கிட்டும். மாணவர்கள் இச்சிலையை தங்களின் படிப்பு மேஜையின் மீது வைத்துக் கொண்டால், தங்களது கல்வி செயல்திறனில் அதிக செறிவு ஏற்படும்.

கவனச் சிதறல் இல்லாமல் அவர்களால் மனதை ஒருநிலைப்படுத்தி படிக்க முடியும். அதேப்போல் இதனை உங்களது அலுவலக மேஜையின் மீது வைக்கும் போது உடன் பணிபுரிபவர்கள், கீழ்மட்ட ஊழியர்கள் மற்றும் மேல்மட்ட ஊழியர்களிடம் சண்டை சச்சரவுகள் தடுக்கப்படும்.
எந்த திசையில் வைக்க கூடாது?

சிரிக்கும் புத்தரின் மீது மதிப்பை வைத்திருக்கும் ஃபெங் ஷுய்யும் புத்த மதமும், அவரை மிக மரியாதையாக கருதுகிறார்கள். சிரிக்கும் புத்தர் என்பவர் வழிபட்டு, மதிப்பளிக்க வேண்டிய சிலை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த சிலைக்கு அவமரியாதையை ஏற்படுத்தினால் துரதிஷ்டம் வந்து சேரும். அதனால் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில் நீங்கள் அதீத அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இச்சிலையை குளியலறை, சமையலறை அல்லது தரையில் வைக்கக்கூடாது. மேலும் நகரும் பாகங்கள் அல்லது தொடர்ச்சியான சத்தத்தை எழுப்பும் மின்கம்பிகள் மற்றும் மின் சாதனங்களுக்கு அருகிலும் அவற்றை வைக்க கூடாது. இதனால் இச்சிலை நமக்கு வழங்கும் ஆற்றை திறனை இது குறைக்கும்.

சிரிக்கும் புத்தரின் தோரணை:-
இச்சிலையின் உயரம் நம் கண்களின் மட்டம் வரையாவது இருக்க வேண்டும். எப்போதுமே ஒரு சிலையை நாம் மேல்நோக்கி பார்ப்பது தான் நாம் அதற்கு அளிக்கும் மரியாதையாகுமே தவிர, கீழ்நோக்கி பார்ப்பது அல்ல. சமயஞ்சார்ந்த அல்லது ஆன்மிகம் சார்ந்த முக்கியத்துவத்தைப் பெற்றுள்ள அனைத்து படங்கள் அல்லது சிலைகளுக்கும் இது பொருந்தும். அதிர்ஷ்டத்தை கொண்டு வர இதனை வீட்டின் தலை வாசல் கதவை நோக்கி வைக்க வேண்டும்.

================================================
சுட்டீஸ், நாங்கள் தொகுத்து வழங்கிய பதிவுகளில் உள்ள குறை நிறைகளை வாசகர்கள், அன்பான முறையில் எங்களுக்கு எடுத்துக்கூறி, எங்களது பதிவுகள் மேலும் சிறப்படைய வாழ்த்தி உற்சாகப்படுத்துமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு   
வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ் தமிழ் ரோஜாக்கள்.