வைஷாலி வாசகர் வட்ட 42வது சந்திப்பு, "சுட்டீஸ்-குல்கந்து" இதழ்=17 ஆவணி மாதம்-தேதி 20-08-2017. "கைத்தொழில் பழகலாம் வாருங்கள்...."
வருகை தாருங்கள், தமிழில் சிறுவர்கள் தொகுத்து வழங்கும் வலைப்பதிவர்களின் மாத இதழ், ஒவ்வொரு மாதமும் ஆங்கில மாதத்தின் 3-வது ஞாயிறுதோறும் (தமிழ் மாதத்தின் முதல் ஞாயிறு அன்று) இரவு 9 மணியளவில் வெளியாகும் சுட்டீஸ் ரோஜாக்களின் "குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழ். http://gulkanthu.blogspot.in/
கற்க கசடற….!! !! வாய்மையே வெல்லும்!!
“வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம்”
160/Sector-4, Vaishali, Ghaziabad, NCR-New Delhi.-201012
e-mail: vaishalireaderscircle@gmail.com
___________________________________________________________________
சுட்டீஸ் இதழ்=17 ஆவணி மாதம்-தேதி 20-08-2017. வணக்கம், தாங்களின் வருகைக்கு நன்றி, இந்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழில்" -ஆடி மாத வலைப்பதிவு:- இந்த இதழின் ஆசிரியராக, தொகுத்து வழங்குபவர்:- (Editor of the Page) வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ் குழுவினர்கள் -இடம் செக்டர்-4, மையப்பூங்கா, வைஷாலி மெட்ரோ இரயில்நிலையம் அருகில் -NCR-புது தில்லி.
அடுத்து வரும் செப்டம்பர் -2017, 17-09-2017 புரட்டாசி-மாத வலைப்பதிவு இதழின் ஆசிரியராக, (Editor of the page) இந்த வலைப்பக்கத்தை தொகுத்து வழங்க ஆவலுடன் காத்திருப்பவர் யார்? விருப்பம் உள்ளவர் உங்கள் விருப்பத்தை உடனே தெரியப்படுத்துங்கள். மின் அஞ்சல் "vaishalireaderscircle@gmail.com"
20-08-2017 அன்றய நமது 42-வது வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில்:- ,
வைஷாலி வாசகர் வட்டத்தின் 42வது வாசகர் வட்ட சந்திப்பு 20-08-2017 தேதி, 3-வது ஞயிறு அன்றய ஆவணி மாத கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும் .... "கைத்தொழில் பழகலாம் வாருங்கள்."
வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :-
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து,
தொடர்ந்து எங்க வீட்டு "நூலகம் "
படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும்
(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம் / செல்லப் பிராணிகள் வளர்ப்போம் )
தொடர்ந்து ......
"இந்த மாத தலைப்பைச் சார்ந்த" கைத்தொழில் பழகலாம் வாருங்கள் என்ற பயிற்சி மாதக் கொண்டாட்டங்களும். நிகழ்ச்சிகளும். போட்டிகளும் பரிசுகளும்.. என நடந்தேறிய அன்றய நிகழ்ச்சியில் உதவிய அனைவரையும் பாராட்டி, நிகழ்ச்சி இனிதாக நிறைவுபெற்றது.
====================================
"நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்,
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்,
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற,
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும்
தமிழணங்கே! தமிழணங்கே! .....
உன் சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!"
இந்த வாழ்த்துப்பாடலை இயற்றியவர் திரு.பெ. சுந்தரம் பிள்ளை (அவர் வாழ்ந்த காலம் "ஏப்ரல் 4, 1855 - ஏப்ரல் 26, 1897")
அவர் எழுதிய "மனோன்மணீயம்" என்ற புகழ்பெற்ற நாடக நூலில் இடம்பெற்றிருக்கும் தமிழ் தாய் வாழ்த்துப்பாடல் இது.
இந்த மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த என்று ஆரம்பமாகும் பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது.
தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலின் கருத்து:-
அலை கடலே ஆடையான இந்த அழகான பூமிப் பெண்ணிற்கு, பாரத நாடே முகமாம், தென்திசை அதன் நெற்றியாம், அதில் திலகமென திகழ்வது திராவிட திருநாடாம், அந்தத் திலகத்தின் வாசனைப் போல்அனைத்து உலகமும் இன்பம் காண எல்லா திசையிலும் புகழ் மணக்க இருக்கும் தெய்வமகள் ஆகிய தமிழே, என்றென்றும் இளமையாக இருக்கிற உன்னுடைய இந்த அழகைக் கண்டு வியந்து, செய்யும் செயலையும் மறந்து, வாழ்த்துகிறோம்! வாழ்த்துகிறோம்! வாழ்த்துகிறோம்!.....
நன்றிகளுடன் "வைஷாலி வாசகர் வட்டம்".
==========================
கைத்தொழில் பழகலாம் வாருங்கள்....
கைத்தொழில் பழகலாம் வாருங்கள்....
"ஒவ்வொரு மதமும் ஒரு விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை வகுப்புகள். என இந்த வருடம் முழுவதும் கற்றுக்கொள்வோம், தெரிந்துகொள்வோம் பயிற்சிப் பட்டறை மாதங்களின் வருடமாக, நமது வைஷாலி வாசகர் வட்டத்தின், ஒவ்வொரு மாதமும், ஆங்கில மதத்தின் 3வது ஞாயிறு அன்றைய வாசகர் வட்ட சந்திப்பில், ஒவ்வொரு மதமும் ஒரு விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை வகுப்புகள்... பயிற்சி மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும், மற்றும் கதைகள், கட்டுரைகள், பயிற்சிப்பட்டறை சார்ந்த போட்டிகளும் பரிசுகளும் என இந்தமாத இதழில் பல விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
மேலும் இந்த மாத சுட்டீஸ்களின் ஏராளமான செய்திகளை மிகவும் பயனுள்ள வகையில் நமது வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ் "குல்கந்து" குழுவினர்கள் தொகுத்து தந்திருக்கிறார்கள்....
அவர்கள் தொகுத்துத் தந்த பல செய்திகளை ஒன்று சேர்த்து, அனைத்தையும் அழகாக கோர்த்து, ஒரு கதம்ப மாலையாக தொடுத்து தந்திருக்கிறார்கள். இந்த மாத வலைப்பதிவு இதழின் அனைத்து விவரங்களும் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம்.... இப்படிக்கு வாசகர் வட்ட சுட்டீஸ் "குல்கந்து" ரோஜாக்கள்.
@. புதிய எட்டு வித்தியாச புதிர் போட்டி :- சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்"..... ஆவணி-மாத-படத்தில் உள்ள (8) எட்டு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் -வலைப்பதிவு இதழ் போட்டி என்-17.
போட்டியில் பங்குகொள்ள விருப்பமுடையவர்கள் விடைகளை "vaishalireaderscircle@gmail.com" என்கிற மினஞ்சல் முகவரிக்கு 10-09-2017 முன்பாக அனுப்பிவைக்கவேண்டும். சரியான விடை எழுதிய அனைவருக்கும் அடுத்தமாத வாசகர் வட்ட சந்திப்பில் பரிசுகள் வழங்கப்படும்.
$ சென்ற மாத "சுட்டீஸ் குல்கந்து" வலைப்பதிவர் இதழ்-16 ஆடி -மாதம் வலைப்பதிவு இதழ், எட்டு வித்தியாசப் போட்டி என்-16. போட்டிக்கான சரியான விடை,
விடை:- 1. இரண்டில் ஒருபடம் இடம் வலமாக திரும்பியுள்ளது, 2) அம்பாள் கையிலிருக்கும் சங்கு, 3) அம்பாளின் வெள்ளித்தலை விக்கிரகம், 4) குத்துவிளக்கருகில் இருபுறமும் சங்கு, 5) குத்துவிளக்கின் தலைப்பகுதி, 6) உடுக்கையில் பாம்பு, 7) குத்துவிளக்கு தூணின் அருகே இருக்கும் வெள்ளி சொம்பு, 8) தட்டு நிறைய ரோஜாப்பூ.
சென்ற மாத எட்டு-வித்தியாசங்கள் வலைப்பதிவர் இதழ்-16 போட்டிக்கான சரியான விடையை 82 நபர்கள் மட்டுமே குறிப்பிட்டிருந்தனர், தமிழில் விடை எழுதியவர்கள்=42, ஆங்கிலத்தமிழில் எழுதியவர்கள்=25, ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=15, ஹிந்தி மொழியில்=0 நபர்களும், பிற மொழியில்=0 நபரும், மேலும் சிலர் எட்டுக்கும் அதிகமான தவறான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.
==============================================
I.முதலில் சுட்டீஸ் குல்கந்து தகவல்கள் :- கிட்டத்தட்ட 35 கைவினைப்பொருட்கள் செய்வது பற்றி கூறியிருக்கிறார்கள்:-
@ நாட்டின் வளர்ச்சிக்கு கைத்தொழில் ஒரு இன்றியமைதாத ஒன்று. கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை இல்லை உனக்கு ஒப்புக்கொள்.. என்ற வரிகளை மறக்கமுடியுமா அல்லது மறுக்க முடியுமா ?
கற்றதையும் மறக்க கூடாது , கற்றவரையும் ஒதுக்கப்பட கூடாதே.
"கைத்தொழில் பழகலாம் வாருங்கள்."
@ துர்கா, மூன்றாம் வகுப்பு:-
@தேங்காய் கோட்டங்கட்சியில் அழகான கிண்ணங்கள் செய்யலாம்.
சாய் நந்தினி மற்றும் சாய் ஷிவானி.
@ நீங்களும் செய்யலாம். தெர்மாக்கூல் தக்கைகளைக்கொண்டும் அழகு பொருட்கள் செய்யலாம்.
@காகித அட்டைகளைக்கொண்டு செய்த கைவேலை அழகு ரதம்.
நீங்களும் செய்யலாம். காகித பைகள் :-
=================================================
@வண்ண வண்ண சணல் நூல்களைக்கொண்டு குளிர்காலத்திற்கான சொட்டர் பின்னலாம்.@ஐஸ் குச்சிகளைக்கொண்டு சிறு சிறு பொம்மைகள் செய்யலாம்.
@ களிமண்ணால் செய்யும் பொருட்கள்:- சாதாரண களிமண்ணால் சிறு சிறு சட்டிகள் செய்து அவற்றை வண்ணங்கள் பூசி அழகுபடுத்தலாம்
@ களிமண்ணால் சொப்புகள் செய்து விளையாடலாம்:-
@ பனை மற்றும் தென்னை ஓலைப்பொருட்கள் செய்வது:-
@தென்னை ஓலையில் காத்தாடி, மற்றும் பச்சை நிற ரோஜாப்பூ போன்ற அழகு பொருட்கள் செய்யலாம்....
@ தென்னை ஓலையை பின்னுவதற்கு கற்றுக்கொண்டால், வீட்டின் கூரை மற்றும் தடுப்பு சுவர் போன்ற தடுப்புகள் செய்து பயன்பெறலாம்.
@ மாவிலைத் தோரணம், இதை பச்சை வண்ண காகிதம் மற்றதும் பிளாஸ்டிக் காகிதத்தில் செய்யலாம்.
@ஆடி ஆவணி மாதங்கள் காற்று வீசும் காத்தாடிகாலம். காத்தாடி செய்யலாம் வாருங்கள்.... ரோஹித் ராகவன்.
@முக்கியமாக சாதாரண தையல் நூலில் மட்டுமே காத்தாடியை பறக்கவிடுங்கள் மற்ற வகை மாஞ்சா நூல்கள் கையை அறுத்துவிடுவதோடு மற்றவர்களுக்கும் தீங்குவிளைவிக்கும். கனமான மற்றும் மாஞ்சா நூல்களை பயன்படுத்தாதீர்கள்.
@அரிசி பருப்பு போன்ற வீட்டிற்குத் தேவையான மளிகை சாமான்கள் வாங்கும்போது கிடைக்கும் பெரிய சணல் மூட்டை கோணிப்பைகளை வெட்டி சிறு சிறு படத்தில் உள்ளதைப்போல கைப்பைகள் தெய்க்கலாம். அல்லது சணல் நூல்களை வாங்கி சணல் பொருட்களை செய்யலாம்.
@மிகப்பழமையான பொருட்களை சேகரித்து அவற்றை கொண்டு கண்காட்சிகள் அமைப்பது. பழமையான பொருட்களின் சரித்திர பெருமைகளை தெரிந்துகொண்டு அவற்றை அறிவியல் முறையில் எப்படி அடையாளம் காணலாம் என்பன போன்ற பல விவரங்களை தெரிந்துகொள்ளுதல்
@ நமது வீட்டில் கிடைக்கும் காலியான முகப்பவுடர் தகர டப்பா மற்றும் டின் போன்ற தகரப்பொருட்களைக்கொண்டு வீட்டுக்குத் தேவையான முறம், தட்டு, அலமாரி போன்ற பொருட்களை செய்யலாம்
@மரச்சாமான்கள்கோ செய்வது :-கோலாட்ட குச்சிகள், மரப்பொம்மைகள், சிறிய பொம்மைகள் செய்யலாம். விளையாட்டு மர சொப்புகள் செய்யலாம்:-
@ வீட்டை அலங்கரிக்கும் "ரங்கோலி" கோலங்களை போடுவதற்கும் பழகலாம். செல்வி ஆ.கி. பவித்ரா
@ பூக்களால் அலங்காரம் செய்யும் ரங்கோலி கோலம்:-
@ஓவியம் வரைவது:- காகித ஓவியம், சுவர் ஓவியம், வண்ண ஓவியம், வீட்டை அலங்கரிக்க சுவர் ஓவியங்களும் வரையலாம். செல்வன் சபரீஷ்
@ஜப்பானியர்களின் ikebana ஈக்கிபாணா என்று சொல்லும் குட்டி செடி/கோடி/மரங்களை வளர்க்கலாம். அல்லது வீட்டை அலங்கரிக்கும் பூங்கோத்துக்களை சிறு சிறு கண்ணாடி மற்றும் பீங்கான் குடுவையில் வைத்து மேஜை, வரவேற்பறை மற்றும் அலமாரிகளை அழகுபடுத்தலாம்.
@ பனைஓலை விசிறி மற்றும் கூடை செய்யலாம்....
@ சிறு சிறு சிற்பங்கள், கற்சிற்பங்கள் வடிப்பது/செய்வது
@சோழிகள் மற்றும் கடல் கிளிஞ்சல்களைக்கொண்டு பொம்மைகள் செய்வது.
@ காகிதம் மற்றும் துணி ரிப்பான் நாடா கைவண்ண பொருட்கள்:-
@ சமையல் சாப்பாடு செய்வது, தின்பண்டங்கள் பலகாரங்கள் செய்வது... சமைப்பதுகூட ஒரு கைத்தொழில்தான்
@வெல்வெட் பட்டு துணி மற்றும் பஞ்சு பொம்மைகள் செய்யலாம்:- அவற்றிற்கு குட்டி குட்டி ஆடைகள் தேய்க்கலாம்:-
@ வீட்டில் வைக்கும் கொலு பொம்மைகள் படிகள் அமைப்பது கொலுவில் சிறு புல்வெளிகள், தோட்டங்கள், என பலவிதமான காட்சிகளை அமைப்பது:-
@எத்தனையோ கைவேலைகளை பழகிய நமக்கு பூ தொடுக்க தெரியாமல் இருக்கலாமா?,வாழை நாரில் பூ மாலை தொடுப்பது அல்லது பூமாலை கட்டுவது எப்படி என்று கற்றுக்கொள்ளும் பயிற்சி.
@ பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் 1866 களில் பள்ளிக் கல்வி கற்கிறார். அவர் முக்காலணா கொடுத்து கந்த சஷ்டி கவசம் புத்தகத்தை வாங்குகிறார்.
அதை நாளொன்றுக்கு 36 தடவை பாராயணம் செய்கிறார். அடுத்து முருகனைப் பற்றி 100 பாடல்கள் எழுதுகிறார். இப்படியே அவர் ஆன்மிக படி ஏறி சுவாமிகளாகிப் போகிறார்.
அவர் வாழ்ந்த காலத்திலிருந்து கிட்டத்தட்ட 80 வருடங்கள் முன் வாழ்ந்த சிறுவனாகிய மைக்கேல் ஃபாரடே புத்தகங்களை பைண்டு செய்யும் வேலையைச் செய்கிறார்.
அவருக்கு வாடிக்கையாளர் ஒருவர் மூன்று டிக்கட்களைக் கொடுக்கிறார்.
அது விஞ்ஞானி ”ஹம்பரி டேவி” சொற்பொழிவுகளுக்கான அனுமதி டிக்கட்டாகும்.
இளம் ஃபாரடே அந்தச் சொற்பொழிவைக் கேட்டு ஊக்கம் பெற்று பிற்காலத்தில் மின்சாரம் கண்டுபிடித்த விஞ்ஞானியாகிறார்.
சில சொற்களும் சூழலும் எப்படியெல்லாம் வாழ்க்கையை மாற்றியமைக்கிறது ஆகவே உங்கள் வீட்டில் சில மந்திர சொற்கள் மற்றும் வாழ்க்கைக்கு உந்துகோலாகத்திகழும் படங்களின் போஸ்டர்களை உருவாக்கலாம்.
@ பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் 1866 களில் பள்ளிக் கல்வி கற்கிறார். அவர் முக்காலணா கொடுத்து கந்த சஷ்டி கவசம் புத்தகத்தை வாங்குகிறார்.
அதை நாளொன்றுக்கு 36 தடவை பாராயணம் செய்கிறார். அடுத்து முருகனைப் பற்றி 100 பாடல்கள் எழுதுகிறார். இப்படியே அவர் ஆன்மிக படி ஏறி சுவாமிகளாகிப் போகிறார்.
அவர் வாழ்ந்த காலத்திலிருந்து கிட்டத்தட்ட 80 வருடங்கள் முன் வாழ்ந்த சிறுவனாகிய மைக்கேல் ஃபாரடே புத்தகங்களை பைண்டு செய்யும் வேலையைச் செய்கிறார்.
அவருக்கு வாடிக்கையாளர் ஒருவர் மூன்று டிக்கட்களைக் கொடுக்கிறார்.
அது விஞ்ஞானி ”ஹம்பரி டேவி” சொற்பொழிவுகளுக்கான அனுமதி டிக்கட்டாகும்.
இளம் ஃபாரடே அந்தச் சொற்பொழிவைக் கேட்டு ஊக்கம் பெற்று பிற்காலத்தில் மின்சாரம் கண்டுபிடித்த விஞ்ஞானியாகிறார்.
சில சொற்களும் சூழலும் எப்படியெல்லாம் வாழ்க்கையை மாற்றியமைக்கிறது ஆகவே உங்கள் வீட்டில் சில மந்திர சொற்கள் மற்றும் வாழ்க்கைக்கு உந்துகோலாகத்திகழும் படங்களின் போஸ்டர்களை உருவாக்கலாம்.
==================================
@கைத்தொழில்த பழகுவோம் என்கிற தலைப்பில் தையல் கலை பயிற்சி:- வழங்கியவர் திருமதி ஆர்த்தி கிருஷ்ணன்
வைஷாலி வாசகர் வட்டத்தின் சுட்டீஸ் குழுவினர்களுக்கு ஆடைகள் தைக்கும் தையல் கலை பயிற்சியை திருமதி ஆர்த்தி கிருஷ்ணன்,(உறுப்பினர்-வைஷாலி வாசகர் வட்டம்) அவர்கள் வழங்கினார். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் விடுமுறை நாட்களிலும் இந்த தையற்கலையை முழுமையாக பயிற்சிபெற்று தேறலாம் என்றும் மிக எளிய முறையில் அனைவருக்கும் புரியும்வகையில் ஒவ்வொருவரும் தமது கைகளினால் தாமே துணிகளை தைப்பதற்கு பயிற்சியளித்தார்.
வீணாக தூக்கியெறியும் சிறு சிறு துணிகளை ஒன்று சேர்த்து, கைக்குட்டை, தலையணை உறைகள், சன்னல் திரைகள் மற்றும் சிறு கைக்குழந்தைகளின் சட்டையில் அவர்களது பெயரின் முதல் எழுத்து அல்லது பெயர் எழுத்துக்களை தைப்பது போன்ற எளிய பயிற்சகளையும் சொல்லித்தந்தார்.
மேலும் பயிற்சியில், துணிகளை வெட்டும் பயிற்சி, துணி தைக்கும் நுனுக்கம், தையல் மிஷின் ஒட்டும் பயிற்சி (மின் மோட்டர் மிஷின் மற்றும் காலால் ஓட்டும் மிஷின்), நவநாகரீக உடைகள் தாயாரிக்கும் மற்றும் தைக்கும் கலை, எம்பிராய்டிங், ஸ்டிக்கர் ஒட்டும் பயிற்சி போன்ற தையல் நுனுக்கங்களையும் தைக்கும் விபரங்களையும் விளக்கி பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியின் நோக்கமாக, தங்களது சிறு சிறு தையல் பணிகளை அனைவரும் அவரது இல்லத்திலேயே செய்துகொள்ளவும், இந்த பயிற்சியை நன்கு கற்று தேர்ச்சிபெற்று சுயதொழிலாகவும் செய்யலாம் என்றும் தெரிவித்தார்.
தையல் டிப்ஸ்கள்:-
1. சுடிதார் தைக்கும் போது பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளுக்கும் சரி பெரியவர்களுக்கும் சரி லைனிங் கொடுத்து தேய்க்கவேண்டும்.
2. மெல்லியா ஆடையாக இருந்தால் பெண்களுக்கு ஏற்படும் அச்சஉணர்வை போக்குவதற்கும் அந்த உடையின் உள்பக்கம் (பின்பக்கமாக)காடா துணியை சேர்த்து தைத்தால் மனதளவில் நாணிக்கோணி நெளிந்து கூன் போட்டு நடக்க வேண்டி இருக்காது.
3. பெண்குழந்தைகளுக்கு வயது வந்த பெண்களுக்கும் எப்போதும் இறுக்கமான ஆடைகளை அணிவிக்காதீர்கள்.
4.சட்டைகளை நான்கு விரல் லூசாகா இருக்கும் அளவிற்கு தையுங்கள்.முக்கியமா கழுத்து சிறிய கழுத்தாக அளவோடு தேய்க்கவேண்டும். நீங்கள் வாங்கிய துணியை தைப்பதற்கு டெய்லரிடம் கொடுக்கும் போது விவரமாக சொல்லி தைக்கச்சொல்லுங்கள்.
5.கழுத்து -நெக் பெருசா வைத்தால் தான் நல்ல தைக்கவரும் என்று டெய்லர்கள் அவர்கள் இஷ்டத்திற்கு வைப்பார்கள். அது முப்புறமோ அல்லது பின்புறமோ நமது உடலோடு பொருந்தாமல் தாழைந்துவந்து காட்சிதரும். ஆகவே சரியான அளவிலேயே தைக்கச்சொல்லுங்கள்.
6. விலை உயர்ந்த துணியை தைக்க கொடுக்கும் போது உள்ளே (பெரிதாக்கக் கூடியதாக ) பிரித்து பயன் படுத்தக் கூடியதாக துணி விட்டு தைக்கச்சொல்லுங்கள், பின்னாளில் வளரும் குழங்கைகள் சற்று உயரமாகவோ குண்டாகவோ ஆகும்போது நமக்கு பொருந்துமாறு பழைய தையலை சற்று பிரித்துவிட்டுக்கொள்ளலாம்.
7. காட்டன் சுடிதார் தைக்க கொடுக்கும் போது ஒரு நாள் முழுதும் தண்ணீரில் நனைத்து பிறகு காய்ந்ததும் அய்ர்ன் செய்து கொடுங்கள். அப்படி தைக்கும்போதுதான் சரியான அளவில் உடைகள் நமது உடலுக்கு ஏற்றவாறு பொருத்தமாக இருக்கும்.
8.புது கைத்தறி துணியை தண்ணீரில் நனைக்காமல் அப்படியே தைக்க கொடுத்தால் ஒரு முறை போட்டு துவைத்து மறு முறை போடும் போது கை கூட நுழைக்க முடியாது. காசு கரியானது தான் மிச்சம்.அதே போல காட்டன் லைனிங்க் கொடுத்து தைத்த சுடிதாரை அலசி காய வைக்கும் போது லனிங்க் பகுதியை திருப்பி நன்றாக உதரி காயப் போட வேண்டும். துவைத்ததும் துணியை உதறாமல் காய வைத்தால் உள்ளே உள்ள காட்டன் துணி சுருங்கி நிற்கும் அயர்ன் செய்ய மிகவும் கடினமாக ரொம்ப டைம் எடுக்கும்.
9.இப்போது யாரும் பட்டு சேலைகளை அவ்வளவாக உடுத்தி கொள்வதில்லை, நகர வாழ்க்கையில் வேலைக்கு செல்வதால் மைசூர் சில்க் போன்ற புடவைகளைத்தான் உடுத்துகிறார்கள். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிக்கு வாங்கிய, பீரோவில் தூங்கிக்கொண்டிருக்கும் பழைய பட்டு சேலையை கூட சல்வார் கம்மீஸாக தைத்து கொள்ளலாம்.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள்:-
1. துணிகளை வெட்டும் போது கவனமாக உடனே அதை ஒரு துண்டு விடாமல் எடுத்து சுருட்டி ஒரு பையில்வையுங்கள். அங்கு இங்கு சிதர விட்டால்...நாம் வெட்டி வைத்த கை, பட்டி, கழுத்து துணி எல்லாம் காணாமல் போய் விடும் ஆகவே உஷார்.... உடனே வெட்டிய துணியை பத்திரப்படுத்தவும்.
2. யாருடனும் சண்டை போட்டு விட்டு,கோபமாக பிள்ளைகளை திட்டி விட்டு துணிகளை வெட்டினால் கோபமாக இருப்பவர்கள் துணியை வெட்டவேண்டிய இடத்தில் வெட்டாமல் கண்டமட்டுக்கும் எங்காவது வெட்டி விடுவார்கள். கோபத்தில் நீங்கள் தைக்கும் துணி தாறுமாறாகப்போகும் பிறகு அழகான உடைக்குப்பதில் அகோரமான உடைதான் தைக்கமுடியும்.
3. அடுத்து முன்று வயதுக்குற்பட்ட சிறு குழந்தைகளை பக்கத்தில் வைத்து கொண்டு தைக்காதீர்கள். நீங்கள் தைக்கும் போது ரொம்ப ஸ்வாரஸியமாக இருக்கும் அந்த நேரம் குழந்தை என்ன ஜோராக ஓடுகிறதே என்று கையை வைப்பார்கள். தையல் இயந்திரத்தின் ஊசி உங்களின் குழந்தைகளின் கையை தைக்க வாய்பப்புகள் இருக்கு, அதோடு நீங்களும் தைக்கும் போது திரும்பி பார்க்காதீர்கள், பேசி கொண்டே தைக்காதீர்கள். உங்கள் கையே தையல் இயந்திரத்தில் மாட்டிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.
4. துணிகளை தைக்கும் சாக்கில் ஊசிகளை தரையில் விழுமாறு போட்டால் அந்த ஊசி உங்களையோ அல்லது உங்கள் வீட்டிலிருப்பவர்களின் காலில் குத்தி காயப்படுத்திவிடும் ஆவவே ஊசிகளை வைப்பதற்கு தனியாக ஒரு சிறு டப்பியை பயன்படுத்துங்கள்.
5. ஒவ்வொருரிமுறையும் தையல் வேலை முடிந்ததும் தையல் இயந்திரத்தையும், அதன் உபகரணங்களையும், வெட்டும் கத்தரிக்கோல் போன்ற கூரான பொருட்களையும் பத்திரமாக எடுத்து வைக்க அதற்கான ஒரு தனியிடத்தில் உபகரணங்களை உயரமான இடத்தில் சிறு குழந்தைகளின் கையில் கிடைக்காதவண்ணம் பாதுகாப்பாக உடனே எடுத்து வைக்கவேண்டும்.
நீங்கள் கற்றுக்கொண்ட தையல் கலையை உங்களுக்கும் பயன்படுத்திக்கொண்டு பிறரும் பயன்பெறுமாறு மற்றவர்களுக்கும் சொல்லித்தாருங்கள்.
நன்றிகளுடன் ... ஆர்த்தி கிருஷ்ணன்.
பேப்பர் கவரில் சூப்பர் லாபம்:-
@ சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு காரணமாக பாலிதீன், பிளாஸ்டிக் கவர்களுக்கு பதிலாக, பேப்பர் கவர் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் பேப்பர் கவர் தயாரிக்கும் தொழிலுக்கு நல்ல கிராக்கி உள்ளது. இத்தொழிலை மேற்கொண்டால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று சொல்கிறார்கள்.
பேப்பர் கவர் தயாரிப்பு நிறுவனங்கள் பிற மாவட்டங்களில் குறைவாக உள்ளது. புதிய தொழில் முனைவோர் பேப்பர் கவர் உற்பத்தியை துவக்கி, தங்கள் பகுதியில் அறிமுகப்படுத்தினால் சுற்றுச்சூழலும் மேம்படும். படிப்படியாக இத்தொழிலை மேம்படுத்தி நல்ல லாபம் சம்பாதிக்க முடியும். பெண்களும் இத்தொழிலில் ஈடுபடலாம்.
========================================
@ கைத்தொழில்த பழகுவோம் என்கிற தலைப்பில் தச்சு (மர-சாமான்கள் செய்வது) வேலையில் ஈடுபடுவதற்கான ஆர்வமும் மனதும் இருந்தால் நமது தேவைகேற்ற மேஜை நாற்காலி போன்றவற்றை நாமே உருவாக்கி கொள்ளலாம்.
எல்லாம் சரி, தச்சு வேலையை எங்கே போய் கற்றுக்கொள்வது என்று கேட்டால் கவலையே வேண்டாம் அதற்காக என்றே எளிமையான இணையதளம் இருக்கிறது.
பர்னிச்சர் டிசைன் பேங்க் என்பது தான் அந்த தலத்தின் முகவரி.
விதவிதமான மேஜை நாற்காலிகளை செய்ய கற்றுத்தரும் இணையதளம் என்று ஒற்றை வரியில் இந்த தளத்தை அறிமுகம் செய்துவிடலாம் தான்.ஆனால் அந்த ஒற்றை வரி இந்த தளம் தரக்கூடிய அனுபவத்திற்கு நியாயம் செய்வதாகாது.புதியதாக முயன்று பார்க்க தயாராக இருப்பவர்களை இந்த தளம் ஆனந்தத்தில் ஆழ்த்திவிடக்கூடியது.
முக்காலிகள்,நாற்காலிகள்,மேஜைகள்,பெஞ்சுகள் என மரத்தால் செய்யக்கூடிய பொருட்களின் செயல் முறையை எளிமையான வரைபடத்தோடு அழகாக விளக்குகிறது இந்த தளம்.
அதோடு விதவிதமான ஸ்டூல்கள் ,புத்தக அலமாரிகளும் இடம் பெற்றுள்ளன.ஸ்டூல்களில் மட்டும் எத்தனை வகை இருக்கின்றன தெரியுமா?அதே போல நாற்காலிகளில் பல ரகங்கள்.முதலில் இவற்றை நோட்டம் விட்டு விட்டு பின்னர் நமக்கு தேவையான பொருளை கிளிக் செய்தால் அதற்கான தனிப்பக்கம் வந்து நிற்கிறது.
தச்சு வேலை செய்பவர் தனக்கு தானே போட்டு கொள்ளகூடிய வரை பட குறிப்புகளோடு அவற்றிக்கான செய்குரை குறிப்புகள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.எல்லா குறிப்புகளுமே மிக விளக்கமாக விரிவாக அமைந்துள்ளன.அவற்றை பார்க்கும் போதே முக்காலிகளையும் நாற்காலிகளையும் செய்து பார்க்க தோன்றும்.
இந்த தளத்தை உருவாக்கியவர் வடிவமைப்பில் கில்லாடி போலும் .அவர் உர்வாக்கிய எண்ணற்ற வடிவமைப்பு மாதிரிகள் எல்லாவற்றையும் அவராலேயே உருவாக்கிட முடியாது என்பதால் மற்றவர்களின் உபயோயக்கத்திற்கு பகிர்ந்து கொள்வதற்காக இந்த தளத்தை நடத்தி வருகிறார்.தச்சுத்தொழிலின் பாரம்பரியதன்மை மற்றும் தற்காலத்தின் நவீனத்தன்மை இரண்டும் கலந்தவை இந்த வடிவமைப்புகள் என்கிறார் இதன் நிறுவனர்.
அவரது கூற்றுப்படி சில வடிவமைப்புகள் எளிதானவை.சில சிக்கலானவை.ஆர்வம் உள்ளவர்கள் முயன்று பார்க்கலாம்.
இணையதள முகவரி;http://www.dickreynoldsdesign.com
===============================
@ வீட்டில் சிறிய திறந்தவெளிப் பகுதி இருந்தாலும் நிறைய செடிகளை, ஆரோக்கியமாக வளர்க்க முடியும். வீட்டில் சிறிய அளவு மண் தரைதான் இருக்கிறது. அதில் பூச்செடி வளர்ப்பதில் ஆர்வம் உங்களுக்கு இருந்தாலும், வீட்டுக்குப் பயன் தரும் எளிய காய்கறிச் செடிகளையும் வளர்க்கலாம். எந்தச் செடியென்றாலும் ஆரோக்கியமாக வளர்க்க வீட்டுக் கழிவுகளைக் கொண்டு நாமே உரம் தயாரிக்கலாம்.
கீழே உள்ள முறைக்கு வளையத் தோட்டம் என்று பெயர்.
இதை எப்படித் தயாரிப்பது?
$ முதலில் நிலத்தை வட்டமாகத் தோண்டவும். இதன் சுற்றளவு 3 அடிவரை இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். நடுவில் மட்டும் ஒன்றரை அடி ஆழத்துக்குத் தோண்டிக் கொள்ள வேண்டும்.
$ தோண்டப்பட்ட குழி, பார்ப்பதற்கு வாணலிச் சட்டியைப் போல இருக்க வேண்டும். இதில் தோட்டம், சமையலறைக் கழிவுகள் என மக்கக்கூடிய எந்தக் கழிவாக இருந்தாலும் இடவும். மாட்டுச் சாணம் கிடைத்தாலும் சேர்க்கவும்.
$ இதன் மேல் தண்ணீர் தெளித்துவிட வேண்டும். இந்தக் குழிக்குள் அன்றாடம் கழிவுகளைக் கொட்டிவாருங்கள். அடியில் உள்ள கழிவு மக்க ஆரம்பிப்பதால், குழி சீக்கிரத்தில் நிறையாது.
$ பதினைந்து நாட்களுக்குப் பிறகு இதைச் சுற்றிலும் குவிந்திருக்கும் மண்ணில் வெண்டை, கத்தரி, தக்காளி, மிளகாய் போன்ற எளிய காய்கறிச் செடிகளை நட்டு வளர்க்கலாம். இயற்கை உரம் தரும் ஊட்டத்தில் அமோகமாக வளரும்.
நன்றி: பினாங்கு பயனீட்டாளர் சங்க இயற்கை வேளாண்மை வழிகாட்டி
===================================
|
================================================
வீட்டிலேயே இயற்கைமுறையில் கொசுவிரட்டி செய்யலாம் வாருங்கள்:-
‘தற்போதைய வாழ்க்கை முறையில் ரசாயனங்களின் பங்கு மகத்தானது என்றாலும், இயற்கை பொருட்களுக்கு இருக்கும் மவுசு தனிதான். கொசுக்களை விரட்ட, நாங்கள் தயாரிக்கும் மூலிகை லிக்யுட், நுகர்வோரிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கொசு விரட்டி தயாரிக்கும் தொழிலை கற்றுக்கொண்டால், நல்ல லாபம் சம்பாதிக்கலாம்’ என்கிறார் கோவை குனியமுத்தூரில் பெஸ்ட் நேச்சுரல் அண்ட் கம்பெனி நடத்திவரும் ஜெயந்தி. அவர் கூறியதாவது:-
உங்கள் வீட்டின் பூஜை அறையில் தினமும் விளக்கு ஏற்றி வைத்தாலே கொசுக்கள் வீட்டிற்கு வருவது குறையும்.
விளக்கு எரிக்க கேரளாவில் வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பெண்ணெய், நல்லெண்ணெய், நெய் போன்றவற்றை இன்றும் பயன்படுத்துகின்றனர். இதன் வாசனை கொசு, பூச்சிகளை அண்ட விடாது.
சாம்பிராணி, காய்ந்த வேப்பிலை புகை மூட்டம் போன்றவையும் கொசுகளை விரட்டும். இதை அடிப்படையாக வைத்து, கடந்த 5 ஆண்டாக கொசு விரட்டி மூலிகை லிக்விட் தயாரித்து விற்கிறோம்.
இது பாரம்பரியமும், நவீனமும் கலந்தது. மின்சார விளக்கில் பொருத்தி பயன்படுத்தலாம். ஆஸ்துமா உள்ளிட்ட நோயாளிகளை கொசுவிரட்டி பாதிக்கக் கூடாது. இயற்கை முறையில் தயாரிப்பதால், இவை நோயாளிகளை பாதிப்பதில்லை. வரும் காலத்தில் கொசு விரட்டி மூலிகை லிக்யுட் பயன்பாடு அதிகரிக்கும். கோவை வேளாண் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் நடத்திய கண்காட்சிகளில் கொசு விரட்டி மூலிகை லிக்யுட் இடம்பெற்றுள்ளது. பலர் எங்கள் தயாரிப்பை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள். இவ்வாறு ஜெயந்தி கூறினார்.
விற்பனை வாய்ப்பு:-
மளிகை கடைகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், சர்வோதய சங்கம், காதி கிராப்ட் விற்பனையகங்கள், நாட்டு மருந்து கடைகள், மருந்து கடைகள் ஆகியவற்றில் மூலிகை கொசுவிரட்டி லிக்யுட் விற்கப்படுகிறது. அங்கு நேரடியாக சப்ளை செய்யலாம். தினசரி கடைக்கு 5 பாட்டில் வீதம் 20 கடைகளுக்கு ஒரு நாள் உற்பத்தியான 4 லிட்டர் லிக்யுட்டை (100 பாட்டில்) எளிதில் விற்கலாம். இவ்வாறு சுழற்சி முறையில் வெவ்வேறு கடைகளில் சப்ளை செய்யலாம். தெரிந்தவர்களுக்கும், அக்கம்பக்கத்து வீட்டுக் காரர்களுக்கும் நேரடியாகவும் விற்கலாம். தரம் மிகவும் முக்கியம். நல்ல தரத்தோடு விலையும் ஏற்றதாக இருந்தால் வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள். விற்பனையும் அதிகரிக்கும்.
கட்டமைப்பு : மூலிகை லிக்யுட் காய்ச்ச வீட்டு சமையலறை, மூலிகைகளை காய வைக்க திறந்தவெளி. தளவாட சாமான்கள்: வர்த்தக கேஸ் சிலிண்டர் அடுப்பு, 15 லிட்டர் குக்கர், 30 அடி நீள பைப், அகன்ற பாத்திரம், 10 லிட்டர் பாத்திரம், 40 மி.லி காலி பெட் கன்டெய்னர்கள், லேபிள், பேப்பர் பேக்கிங் பாக்ஸ். இவற்றுக்கு செலவு ரூ.15 ஆயிரம்.
தேவைப்படும் பொருட்கள்: வேப்பிலை, துளசி, நொச்சி இலை, மஞ்சள், சாம்பிராணி, குங்குலியம், தும்பை, ஆடாதொடா, சிறியாநங்கை, சோற்று கற்றாழை. நாட்டு மருந்து கடைகளில் மற்ற மூலிகை பொருட்கள் கிடைக்கின்றன. சோற்று கற்றாழையை வீட்டில் வளர்க்கலாம். பெட் கன்டெய்னர் பாட்டில்கள் கோவை, மும்பை உள்ளிட்ட இடங்களில் கிடைக்கின்றன.
உற்பத்தி செலவு(மாதத்துக்கு): வேப்பிலை 500 கிராம் ரூ.10, துளசி 500 கிராம் ரூ.25, நொச்சி இலை 700 கிராம் ரூ.70, மஞ்சள் 100 கிராம் ரூ.10, சாம்பிராணி 150 கிராம் ரூ.40, குங்குலியம் 150 கிராம் ரூ.30, தும்பை 50 கிராம் ரூ.10, ஆடாதொடா, சிறியாநங்கை, சோற்று கற்றாழை 1 கிலோ ரூ.20, 4 லிட்டர் மூலிகை கொசுவிரட்டி மூலிகை லிக்யுட் தயாரிக்க தேவையான மூலிகை பொருட்கள் செலவு ரூ.250, பேக்கிங் மெட்டீரியல் செலவு ரூ.50, உழைப்பு கூலி 2 நபருக்கு ரூ.300 வீதம் ரூ.600, இதர செலவுகள் ரூ.100 என தினசரி 1000 ரூபாய் செலவாகும். ஒரு மாதத்தில் 25 நாள் உற்பத்திக்கு ரூ.25 ஆயிரம் தேவை.
வருவாய்: உற்பத்தி செய்யப்படும் லிக்யுட் 40 மி.லி அளவுகளில் பாட்டில்களில் அடைத்து விற்கப்படுகிறது. ஒரு பாட்டில் ரூ.25க்கு கடைகளுக்கு விற்கப்படுகிறது. அவர்கள் ரூ.40 வரை விலை வைத்து விற்கிறார்கள். இவ்வாறு தினசரி உற்பத்தியாகும் 4 லிட்டர் லிக்யுட்டை 100 பாட்டில்களில் அடைத்து விற்பதன் மூலம் ரூ.2,500 கிடைக்கும். செலவு போக தினசரி லாபமாக ரூ.1,500 கிடைக்கும். இதுவே மாதத்தில் 25 நாட்களில் லாபம் ரூ.37,500.
தயாரிப்பது எப்படி?
வேப்பிலை, துளசி தலா 500 கிராம், நொச்சி 700 கிராம், மஞ்சள் 100 கிராம், சாம்பிராணி, குங்குலியம் தலா 150 கிராம், தும்பை, ஆடாதொடா, சிறியாநங்கை தலா 50 கிராம் ஆகியவற்றை காயவைத்து மிக்சியில் போட்டு பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். சோற்று கற்றாழை ஒரு கிலோ எடுத்து கசப்பு நீங்கும்வரை கழுவ வேண்டும். மூலிகை பொடிகளையும், சோற்று கற்றாழை ஜெல்லையும் 10 லிட்டர் தண்ணீரில் போட்டு, குறைந்தது 6 நாள் முதல் 10 நாள் வரை ஊற வைக்க வேண்டும். பின்னர் அவற்றை குக்கரில் போட்டு மூடி மிதமான தீயில் வைக்க வேண்டும் (வெப்பநிலை 30 முதல் 40 டிகிரி வரை). குக்கரில் ஆவியை வெளியேற்ற விசில் போடும் இடத்தில், விசிலுக்கு பதிலாக 30 அடி நீள பைப்பை செருக வேண்டும். குக்கரில் இருந்து வெளியேறும் ஆவி, பைப் வழியாக வரும். அந்த பைப்பை தண்ணீர் நிரப்பப்பட்ட அகன்ற பாத்திரத்தில் மூழ்கியவாறு வைக்க வேண்டும்.
பைப் வழியாக வரும் ஆவி குளிர்ந்து தண்ணீரும், எண்ணெயும் கலந்தவாறு சொட்டு சொட்டாக வெளியேறும். பாத்திரத்தின் கீழ் பகுதியில் 4 லிட்டர் தண்ணீரும், மேல் பகுதியில் 3 லிட்டர் எண்ணெயும் மிதக்கும். மேலே மிதக்கும் எண்ணெய் தான் கொசு விரட்டி மூலிகை லிக்யுட். இதற்கு மூன்றரை மணி நேரம் ஆகும். அதற்குள் குக்கரில் உள்ள தண்ணீர் வற்றி விடும். பிறகு தீயை அணைத்து விட வேண்டும். தண்ணீரும், எண்ணெயும் கலந்த பாத்திரத்தில் உள்ள எண்ணெயை மேலோட்டமாக வடித்து எடுத்து கொள்ளலாம் அல்லது ஏர் பில்லர் மூலம் உறிஞ்சி எடுக்கலாம்.
எண்ணெய் வடித்தது போக பாத்திரத்தில் மிஞ்சிய 4 லிட்டர் தண்ணீரை மீண்டும் குக்கரில் ஊற்ற வேண்டும். ஏற்கனவே குக்கரில் மூலிகை பொருட்கள் மசாலா போல் தங்கியிருக்கும். இதில் தண்ணீர் கலந்தவுடன் மீண்டும் மிதமான தீயில் வேக வைத்து, ஆவி வெளியேறி, அதன் மூலம் மேலும் ஒரு லிட்டர் லிக்யுட் கிடைக்கும். இவ்வாறு ஒரு நாளில் ஒரு முறை 4 லிட்டர் கொசுவிரட்டி மூலிகை லிக்யுட் கிடைக்கும். சேகரித்த தைலத்தை பெட் கன்டெய்னர் பாட்டிலில் ஊற்றி பேக்கிங் செய்தால் கொசு விரட்டி மூலிகை லிக்யுட் விற்பனைக்கு தயாராகி விடும். தினசரி 4 லிட்டர் தயாரிக்க, 10 நாளுக்கு முன்பே மூலிகை பொருட்களை தண்ணீரில் ஊறப் போட வேண்டும்.
நன்றி:- இன்றய வணிகம் தினசரி http://indraiyavanigam.blogspot.in
======================================