"தமிழ் ரோஜாக்களின் குல்கந்து"

"தமிழ் ரோஜாக்களின் குல்கந்து"

Tuesday, November 21, 2017

வைஷாலி வாசகர் வட்ட 45வது சந்திப்பு, "சுட்டீஸ்-குல்கந்து" இதழ்=20 கார்த்திகை மாதம், தேதி-19-11-2017.

வைஷாலி வாசகர் வட்ட 45வது சந்திப்பு, "சுட்டீஸ்-குல்கந்து" இதழ்=20 கார்த்திகை மாதம், தேதி-19-11-2017. மூன்றாவது ஞாயிறு அன்று:-"மனையியல்" நுண்ணறிவு சிறப்பு பயிற்சி பட்டறை.


வருகை தாருங்கள், தமிழில் சிறுவர்கள் தொகுத்து வழங்கும் வலைப்பதிவர்களின் மாத இதழ், ஒவ்வொரு மாதமும் ஆங்கில மாதத்தின் 3-வது ஞாயிறுதோறும் (தமிழ் மாதத்தின் முதல் ஞாயிறு அன்று) இரவு 9 மணியளவில் வெளியாகும் சுட்டீஸ் ரோஜாக்களின் "குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழ்.   http://gulkanthu.blogspot.in/


 

கற்க கசடற….!!                                       !வாய்மையே வெல்லும்!!

 “வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம்
160/Sector-4, Vaishali, Ghaziabad, NCR-New Delhi.-201012
e-mail:  vaishalireaderscircle@gmail.com
___________________________________________________________________
சுட்டீஸ் இதழ்=20 கார்த்திகை மாதம்-தேதி 19-11-2017வணக்கம், தாங்களின் வருகைக்கு நன்றி, இந்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழில்" -கார்த்திகை மாத வலைப்பதிவு:- இந்த இதழின் ஆசிரியராக, தொகுத்து வழங்குபவர்:- (Editor of the Page) வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ் குழுவினர்கள் -இடம் செக்டர்-4, மையப்பூங்கா, வைைஷாலி மெட்ரோ இநிலையகில்லி.

45-வது வாசகர் வட்ட சந்திப்பு, "சுட்டீஸ் குல்கந்து" இதழ்=20 கார்த்திகை மாதம், தேதி-19-11-2017. மூன்றாவது ஞாயிறு அன்று...இந்த கார்த்திகை மாதம் முழுவதும் :- வழக்கமாக இந்தமாதமும் விழிப்புணர்வு பயிற்சிமாதமாக "மனையியல்" நுண்ணறிவு சிறப்பு பயிற்சி பட்டறை". வைஷாலி வாசகர் வட்டத்தினர்களும் சுட்டீஸ் குழுவினர்களும் சேர்ந்து அவர்களுக்கு தெரிந்த விவரங்களை ஒன்று திரட்டி "சுட்டீஸ் குகலந்து" -20-வது இதழை உருவாக்கியிருக்கிறார்கள். வடையில் 30 வகைகளா? அதுவும் தவளை வடையா???  எனக்கு சமைக்கத்தெரியும்... நான் சுவையான தேநீர் மற்றும் காப்பி தயாரிப்பேன்... எனக்கு ஊறுகாய் போடத்தெரியும் ... என்வீட்டை அழகுபடுத்துவதில் எனக்கு மிகவும் பிடிக்கும்... என்று சுட்டீஸ் சிறுவர்களின் மகிழ்ச்சி கொண்டாட்டங்களோடு பயிற்சி வகுப்புகள்... சிறப்பாக நடந்தேறியது பயிற்சி பற்றிய விவரங்கள் அடுத்த பதிவில் காணலாம்.

அடுத்து வரும் திசம்பர்-2017, 19-11-2017 கார்த்திகை -மாத வலைப்பதிவு இதழின் ஆசிரியராக, (Editor of the page) இந்த வலைப்பக்கத்தை தொகுத்து வழங்க ஆவலுடன் காத்திருப்பவர் யார்? விருப்பம் உள்ளவர்  உங்கள் விருப்பத்தை உடனே தெரியப்படுத்துங்கள். மின் அஞ்சல் "vaishalireaderscircle@gmail.com"


சுட்டீஸ் ரோஜாக்களின் "குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழ் -21 மார்கழி  மாதம், 17-12-2017, ஆங்கிலமாதத்தின் 3வது ஞாயிறு அன்றய வைஷாலி வாசகர் வட்டத்தின் 46வது வாசகர் வட்ட சந்திப்பு மற்றும் விழிப்புணர்வு பயிற்சி மாதக் கொண்டாட்டங்களும். நிகழ்ச்சிகளும்.....


வைஷாலி வாசகர் வட்டத்தின் 45வது வாசகர் வட்ட சந்திப்பு 19-11-2017  

 "மனையியல்" நுண்ணறிவு சிறப்பு பயிற்சி பட்டறை"...


வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :- 

முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து, 

தொடர்ந்து எங்க வீட்டு "நூலகம் " 

படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும் 

(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம் / செல்லப் பிராணிகள் வளர்ப்போம் )

===========

குட்டிக் கவிதை:- (AK.சபரிஷ்) 

உங்களின் 

பல தலைமுறையினருக்கும் 

நான் உதவியாய் இருப்பேன்...

ஒரு தலைமுறைக்கு 

ஒரு மரமாவது  

நடக்கூடாதா??

உதவியாக இல்லாவிட்டாலும்

ஊறுவிளைவிக்காதீர்கள்....

(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம்) 

.. (AK.சபரிஷ்) 

==============

தொடர்ந்து ......


"இந்த மாத தலைப்பைச் சார்ந்த" "துப்பறியும் நிபுணர்களுக்கான சிறப்பு பயிற்சி பட்டறை"என்ற பயிற்சி மாதக் கொண்டாட்டங்களும். நிகழ்ச்சிகளும்.போட்டிகளும் பரிசுகளும்.. என நடந்தேறிய அன்றய நிகழ்ச்சியில் உதவிய அனைவரையும் பாராட்டி, நிகழ்ச்சி இனிதாக நிறைவுபெற்றது.

===========================================================

சித்திரமும் கைப்பழக்கம் பகுதியில்:-

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்  நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்கொடையும் பிறவிக் குணம். – வெண்பா 7


விளக்கம்:
பழகப்பழக பழக்கம் வந்துவிடும். ஆனால் பிறவிக்குணத்தை மாற்ற முடியாது. வரைய வரையச் சித்திரமும் கைப்பழக்கம் ஆகிவிடும். பேசப் பேசச் செந்தமிழும் பழக்கமாகிவிடும். திரும்பத் திரும்ப நினைத்தால் கற்றது மனத்தில் பதிந்துவிடும். நல்லொழுக்கத்தைத் திரும்பத் திரும்பக் கடைப்பிடித்தால் அதுவும் பழக்கமாகிவிடும். ஆனால், நல்லவர் நட்பு, இரக்கக் குணம், கொடைப் பண்பு ஆகியவை பிறவியிலேயே பதிந்திருந்தால்தான் வரும்.

@சுட்டீஸ் தக்ஷின் சிவா LKG- வைஷாலி 


@சுட்டீஸ்  M.Tejaswini Class-2,CRPF School.



@சுட்டீஸ் சாய் நந்தினி & சாய் ஷிவானி

@சுட்டீஸ் கிருத்திகா ராஜேந்திரன் 








==========================================

@விளம்பரம்:- "இந்தப்பகுதியை உங்களுக்கு வழங்குபவர்கள்":-  

@விளம்பரம்:- "இந்தப்பகுதியை உங்களுக்கு வழங்குபவர்கள்":-  

====================================
"மனோன்மணீயம்" நமக்களித்த "தமிழ் தாய் வாழ்த்து":-
"நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்,

சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்,

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற,

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் 
தமிழணங்கே!  தமிழணங்கே! .....

உன் சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து 
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!"

இந்த வாழ்த்துப்பாடலை இயற்றியவர் திரு.பெ. சுந்தரம் பிள்ளை (அவர் வாழ்ந்த காலம் "ஏப்ரல் 4, 1855 - ஏப்ரல் 26, 1897") 

அவர் எழுதிய "மனோன்மணீயம்" என்ற புகழ்பெற்ற நாடக நூலில் இடம்பெற்றிருக்கும் தமிழ் தாய் வாழ்த்துப்பாடல் இது. 

இந்த மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த என்று ஆரம்பமாகும் பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது.

தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலின் கருத்து:- 
அலை கடலே ஆடையான இந்த அழகான பூமிப் பெண்ணிற்கு, பாரத நாடே முகமாம், தென்திசை அதன் நெற்றியாம், அதில் திலகமென திகழ்வது திராவிட திருநாடாம், அந்தத் திலகத்தின் வாசனைப் போல்அனைத்து உலகமும் இன்பம் காண எல்லா திசையிலும் புகழ் மணக்க இருக்கும் தெய்வமகள் ஆகிய தமிழே, என்றென்றும் இளமையாக இருக்கிற உன்னுடைய இந்த அழகைக் கண்டு வியந்து, செய்யும் செயலையும் மறந்து, வாழ்த்துகிறோம்! வாழ்த்துகிறோம்! வாழ்த்துகிறோம்!.....
நன்றிகளுடன் "வைஷாலி வாசகர் வட்டம்". 
==========================
19-11-2017 அன்றய நமது 45-வது வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில்:- ,
"ஒவ்வொரு மதமும் ஒரு விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை வகுப்புகள். என இந்த வருடம் முழுவதும் கற்றுக்கொள்வோம், தெரிந்துகொள்வோம் பயிற்சிப் பட்டறை மாதங்களின் வருடமாக, நமது வைஷாலி வாசகர் வட்டத்தின், ஒவ்வொரு மாதமும், ஆங்கில மதத்தின் 3வது ஞாயிறு அன்றைய வாசகர் வட்ட சந்திப்பில், ஒவ்வொரு மதமும் ஒரு விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை வகுப்புகள்... பயிற்சி மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும், மற்றும் கதைகள், கட்டுரைகள், பயிற்சிப்பட்டறை சார்ந்த போட்டிகளும் பரிசுகளும்  என இந்தமாத இதழில் பல விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.   
மனையியல்" நுண்ணறிவு சிறப்பு பயிற்சி பட்டறை” ஆச்சரிய தகவல்களை நமக்கு வாரி வழங்கும் குட்டி பயிற்சிப்பட்டறை. மேலும் இந்த மாத சுட்டீஸ்களின் ஏராளமான செய்திகளை மிகவும் பயனுள்ள வகையில் நமது வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ் "குல்கந்து" குழுவினர்கள் தொகுத்து தந்திருக்கிறார்கள்....


அவர்கள் தொகுத்துத் தந்த பல செய்திகளை ஒன்று சேர்த்து, அனைத்தையும் அழகாக கோர்த்து, ஒரு கதம்ப மாலையாக தொடுத்து தந்திருக்கிறார்கள். இந்த மாத வலைப்பதிவு இதழின் அனைத்து விவரங்களும்  உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம்.... இப்படிக்கு வாசகர் வட்ட சுட்டீஸ் "குல்கந்து" ரோஜாக்கள். 


==================================
@. புதிய எட்டு வித்தியாச புதிர் போட்டி :- சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்"..... கார்த்திகை-மாத-படத்தில் உள்ள (8) எட்டு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் -வலைப்பதிவு இதழ் போட்டி என்-20.

சரியான விடை அடுத்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" http://gulkanthu.blogspot.in/வலைப்பதிவர் இதழில் வெளியாகும். 

போட்டியில் பங்குகொள்ள விருப்பமுடையவர்கள் விடைகளை "vaishalireaderscircle@gmail.com" என்கிற மினஞ்சல் முகவரிக்கு 10-12-2017 முன்பாக அனுப்பிவைக்கவேண்டும். சரியான விடை எழுதிய அனைவருக்கும் அடுத்தமாத வாசகர் வட்ட சந்திப்பில் பரிசுகள் வழங்கப்படும்.

சென்ற மாத "சுட்டீஸ் குல்கந்து" வலைப்பதிவர் இதழ்-19  ஐப்பசி-மாதம் வலைப்பதிவு இதழ், எட்டு வித்தியாசப் போட்டி என்-19. போட்டிக்கான  சரியான  விடை,

விடை:- 1.இடம்வலமாக படம் திரும்பியுள்ளது, 2). பூதக்கண்ணாடியில் அழுக்கு, 3). கோட் பையில் துப்பாக்கி, 4). இடுப்பு பட்டை (பெல்ட்), 5). தரையில் விழுந்துகிடக்கும் எழுதுகோல், 6) தொப்பியில் அலங்கார குப்பி 7).மூக்குக்கண்ணாடி, 8) துப்பறிபவரின் கையில் குறிப்பு புத்தகம்.

சென்ற மாத எட்டு-வித்தியாசங்கள் வலைப்பதிவர் இதழ்-19 போட்டிக்கான சரியான விடையை 62 நபர்கள்/போட்டியாளர்கள் எழுதி போட்டியில் கலந்துகொண்டனர். வாட்ஸ் ஆப், முகநூல், மற்றும் குறுஞ்செய்தி, தொலைப்பேசி மேலும் மின்னஞ்சல் மூலம் நிறைய போட்டிக்கான விடைகள் அனுப்பிவைத்தார்கள். சரியான விடையை 60 நபர்கள் மட்டுமே குறிப்பிட்டிருந்தனர், தமிழில் விடை எழுதியவர்கள்=31, ஆங்கிலத்தமிழில் எழுதியவர்கள்=19, ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=10, ஹிந்தி மொழியில்=0 நபர்களும், பிற மொழியில்=0 நபரும், மேலும் சிலர் எட்டுக்கும் அதிகமான தவறான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.
=============================================

@விளம்பரம்:- "இந்தப்பகுதியை உங்களுக்கு வழங்குபவர்கள்":-  

==============================================
பயிற்சி வகுப்பில் வீட்டை எப்படியெல்லாம் அழகுபடுத்தி நிர்வகிக்கலாம் என்று பயிற்சியளிக்கப்பட்டது. பயிற்சியில் சிறுவர் பெரியவர் என்று பாகுபாடு கிடையாது என்றும் ஒவ்வொரு வீட்டின் குழந்தைகளுக்கும் மனையியல் தெரிந்துகொள்வதில் நிறைய பங்குண்டு என்று வீட்டை நிர்வகிக்க பலவிவரங்களை . நமது மனதிற்கு மகிழ்ச்சியைத்தருவது நமது வீடு ஆகவே அப்படிப்பட்ட உங்களின் வீட்டை நீங்கள் எப்படியெல்லாம் அழகுபடுத்தி நிர்வகித்து பலவிவரங்களை தெரிந்துகொண்டு பயனடைத்திருக்கிறீர்கள் என்று கூறுவதோடு மேலும் பல விவரங்களை தெரிந்துகொண்டு பயனடைவதற்கும் இந்த  "மனையியல்" பயிற்சி மாதக் கொண்டாட்டம் மிகவும் உறுதுணையாக இருக்கும்.  

மனையியல் பற்றி சுட்டீஸ்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்போம் :-. 

@  அம்மாதான் வீட்டை பார்த்துக்கொள்கிறார்கள் ஆகவே அம்மா சொல்படி கேட்டாலே வீட்டை சிறப்பாக வைத்துக்கொள்வது போன்றதே 
@ எனக்கு காப்பி மற்றும் டீ-தேநீர் போடத்தெரியும்.
@ வீட்டை அழகாக வைத்துக்கொள்வது எனக்கு பிடிக்கும்.
@ என்னுடைய பாட்டி தாத்தாவிற்குத் தேவையான உதவிகளை நானே செய்து தருவேன்.
@ அம்மாவுக்கு உதவியாக தோய்த்த துணிகளை காயவைத்து, துணிகள் காய்ந்தபின் அவற்றை அழகாக மடித்து அலமாரியில் வைப்பது போன்ற பணிகளை செய்வேன் .
@ நான் சாப்பாடு சமையல் செய்வதை கற்றுக்கொண்டேன். சமயத்தில் அம்மாவுக்கு உடல்நிலைசரியில்லாது போனால் நானே அனைவருக்கும் தேவையான சமையலை செய்துவிடுவேன்.
@ வீட்டில் நான் படிக்கும் பள்ளிப் புத்தகங்களை எனது அலமாரியில் அழகாக அடுக்கிவைப்பேன். எனது பள்ளிக்கூட நோட்டுப்புத்தகத்திற்கு நானே அட்டைபோட்டு அந்த புத்தகத்தை கிழியாமல் பார்த்துக்கொள்வேன்.
@ புத்தக அலமாரி, துணி அலமாரி, பாத்திரங்கள் வைக்கும் சமையலறை அலமாரி போன்றவற்றை தினமும் சுத்தம் செய்து அழகாக வைத்துக்கொள்வேன்.
@ தினமும் நான்தான் வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்கிறேன்.
@ அம்மாவிற்கு தேவையான வங்கிக்கு செல்வது பணம் எடுப்பது, காசோலை எழுதுவது போன்ற பணிகளை நானே அவருக்கு உதவியாக இருந்து செய்கிறேன்.

இப்படி இன்னும் பலவிவரங்களை சட்டீஸ்கள் தெரிவித்தார்கள்.
====================================

I.முதலில் சுட்டீஸ் குல்கந்து தகவல்கள் :- 

@ மனையியல்(ஹோம் சயின்ஸ்) படிப்பு என்பது வீடு சம்பந்தப்பட்டது. மனையில் படிப்பை படிப்பது, இது இரண்டு விதங்களில் முக்கியமானது. இந்த படிப்பானது உங்களை ஒரு தொழிலுக்கு பயன்படுத்துவது முதல் வகை. உங்களின் குடும்பத்தையும், வீட்டையும் எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லித்தருவது இரண்டாம் வகை. மேலும் கிடைப்பதை வைத்து எவ்வாறு அதிகபட்ச பயன்பெறுவது என்பதையும் இந்த படிப்பு கற்றுத்தருகிறது. சுருக்கமாக சொல்வதெனில், எவ்வாறு ஒரு வெற்றிகரமான ஹோம் மேக்கராக இருப்பது என்று இந்த படிப்பு கற்றுத் தருகிறது.

@ மனையியல் படிப்பு என்பது சாதாரணமான வீட்டு வேலைகளை எப்படி செய்வது என்று மட்டும் சொல்லித்தருவதில்லை. மாறாக, எவ்வாறு நமது உடல் செயல்படுகிறது, சத்துணவு பற்றிய உண்மைகள், தனிப்பட்ட மற்றும் சுற்றுப்புற தூய்மை, உங்களின் குடும்ப உறுப்பினர்கள் நோய்வாய்ப் பட்டிருந்தால், அவர்களை எப்படி கவனிப்பது, உங்களின் நேரம், பணம் மற்றும் ஆற்றலை சேமிக்க வேண்டுமெனில், எதுபோன்ற துணிகளை உடுத்துவது போன்ற முக்கிய விஷயங்களும் இந்த படிப்பின் மூலம் நமக்கு தெரிய வருகிறது.

@ மனையியல் படிப்பு என்பது பெண்களுக்காக மட்டும் என்பது ஒரு தவறான எண்ணம். இன்றைய மாறிவரும் வாழ்க்கை சூழலில், ஆண்-பெண் இருவருக்குமே, குடும்பத்தின் மீது சம பொறுப்பு இருப்பதால், இந்த படிப்பு இருவருக்குமே முக்கியம். மேலும் ஒரு தனி மனிதரின் மேம்பாட்டிலும் இந்த படிப்பு மிகவும் முக்கிய பங்காற்றுகிறது.

@ ஒரு வீட்டை பராமரிப்பதின் பல்வேறு அம்சங்களை மனையியல் துறை விளக்குவதால், இது ஒரு கலையாகவும், அதேசமயம் ஒரு அறிவியலாகவும் இருக்கிறது. மனையியல் படிப்பில் 5 பெரிய பிரிவுகள் உள்ளன. உணவு மற்றும் சத்துணவு, குழந்தை மேம்பாடு, வீட்டு நிர்வாகம், ஆடை வகைகள், விரிவாக்குதல் மற்றும் தகவல் தொடர்பு போன்றவையே அந்த பெரும் பிரிவுகள்.

@ மனையியல் சார்ந்த தொழிலுக்கு தேவைப்படும் பண்புகள்:- பகுப்பாய்வு திறன், விஞ்ஞான மதிநுட்பம், நடைமுறை அணுகல் போன்றவை முக்கியம். மேலும், அழகுணர்ச்சி, படைப்புத் திறன் மற்றும் பகுத்தறிவு ஆகியவையும் முக்கியமாக தேவைப்படும் திறன்கள்.

@ மனையியல் படித்தவர்களுக்கு சமூகப் பணிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மருத்துவமனைகளில் உணவு மற்றும் சத்துணவு துறைகள், உணவு சேவைகள், ஹோட்டல்களில் உணவுப் பதப்படுத்தல் மற்றும் தயாரிப்பு துறை, உணவுப் பொருட்களின் விற்பனை மேம்பாடு, குழந்தை உணவுகள் போன்ற துறைகளில் வேலை உண்டு. மேலும் முதுநிலை பட்டதாரிகளுக்கும் சிறப்பான வேலைவாய்ப்புகள் உள்ளன. மேற்கண்ட துறைகள் மட்டுமல்லாது, ஆசிரியர் தொழிலிலும் வாய்ப்பு உண்டு. மேலும், குடும்ப ஆலோசகர்களாகவும் பணியாற்றலாம். ஆடைகள் மற்றும் டெக்ஸ்டைல் பிரிவில் நிபுணத்துவம் பெற்றவர்கள், வடிவமைப்பு தொடர்பான பணிகளில் ஈடுபடலாம். மனையியல் தொழிலை விரும்பி தேர்ந்தெடுத்தவர்கள் ஆரம்பத்தில் ரூ.10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை மாத சம்பளமாக பெறலாம். அனுபவம் அதிகரிக்கும்போது சம்பளமும் அதிகரிக்கும்.

@ மனையியல் படித்தவர்களுக்கான வேலை வாய்ப்புகள்:- சத்துணவு ஆலோசகர், ஆராய்ச்சி உதவியாளர், உணவு விஞ்ஞானி, உணவு பகுப்பாய்வாளர் போன்ற பணிகளும் இத்துறையில் உள்ளன. இத்துறை டயடீஷியன்கள், மருத்துவமனைகள், மகப்பேறு விடுதிகள், உடல் எடை குறைப்பு மையங்கள் மற்றும் பள்ளி விடுதிகளிலும் வேலைவாய்ப்பை பெறலாம். மேலும் மனையியல் படித்தவர்கள், உடல் பருமனால் அவதிப்படுபவர்களுக்கு சரியான உணவுக் கட்டுப்பாட்டை திட்டமிடுகிறார்கள்.

@ இந்தியாவில் மனையியல் படிப்பை மேற்கொள்வதற்கான சில முக்கிய கல்வி நிறுவனங்கள்:- 
Avinashilingam University for women - Tamilnadu, Madurai Kamarajar University, Delhi University - Delhi, Andrapradesh Agricultural Universtiy,  Bharathiyaar University - Tamilnadu,  Periyar Universtiy - Tamilnadu, Mahatma Gandhi University - Kottayam. போன்றவை மிகப் பிரபலமானவை.

@ மனையியலின் உற்பத்திக்கான தளமாக நாம் வாழும் வீடு விளங்குகிறது :-  வீட்டுத் தோட்டம், கோழி,ஆடு,மாடு வளர்த்தல், சமைத்தல், தைத்தல், தோய்த்தல், பின்னுதல், வீடு திருத்தல், கைத்தொழில்கள், குழந்தை வளர்ப்பு/பராமரிப்பு, குழந்தைகள் கல்வி, போக்குவரத்துச் சேவைகள் என பல உற்பத்திச் செயற்பாடுகள் வீடு சார்ந்தே நடைபெற்றன, நடைபெறுகின்றன. இதனை முறைப்படி ஆயும் ஒரு துறையாக உருவாகியதே மனைப் பொருளியல் துறை. ஒரு வீட்டை, குடும்பத்தை சிறப்பாக மேலாண்மை செய்ய பல்வேறு அறிவுகள் தேவைப்படுகிறன. அவ்வாறான முதலுதவி, ஊட்டச்சத்து, சுகாதாரம் (hygiene), நிதி மேலாண்மை போன்ற பல்வேறு உட்பிரிவுகளைச் சேர்த்து இது விரிவானது.

@ மனையியல் படைத்தவர்களின் கூற்று:-  தயிர்ச் சோறு சிறந்தது,  தயிரைச் சிதைத்து மற்றொன்று சமைத்தல் தயிர் தரும் பலனை மோர்க்குழம்பு தராது.

@ கலைகள் பல. கலைகள் யாவும் வாழ்க்கை அல்லது வாழ்க்கை பற்றிய உணர்வுகளின் மீது தான் அமைகின்றன. ஆனால், எதன் மூலமாக அல்லது எதனைக் கருவியாகக் கொண்டு அமைகின்றன என்று பார்க்கும் போது, அவற்றின் சில அடிப்படை வேறுபாடுகள் புலனாகின்றன. சிற்பம், கல்லால் ஆனது. இசை, ஓசையின் விகற்பங்களால் ஆனது. ஓவியம், வண்ணக் குழம்புகளாய் ஆனது. இலக்கியம், ஒரு கலை, அது எதனால் ஆனது? அது மொழியால் ஆனது.  இப்படி ஒவ்வொன்றையும் சிந்தித்து வகைப்படுத்தி பகுத்தாயும் அறிவும் ஆற்றலும் மனையியல் படித்தவர்களுக்கு உண்டு.  

@ இல்லத்தரசி:- திருமணமாகி கணவன் வீட்டில் இருக்கும் வெளியே வேலைக்கு செல்லாத ஒரு பெண்ணிடம் (திருமணமாகாத‌ பெற்றோர் வீட்டில் இருக்கும் பெண்ணிடமும்) நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என யாராவது கேட்டால், அவர்களில் பெரும்பான்மையானோர் நான் வீட்ல சும்மா தாங்க இருக்கேன் என சொல்வார்கள் . உண்மையாகவே அவர்கள் வீட்டில் எந்த ஒரு வேலையும் செய்யாமல் சும்மா இருக்கின்றார்களா என வினவினால்..., வீட்டில்  அவர்கள் தான் சமையல், துணிகளை துவைப்பது, வீட்டை தூய்மைப்படுத்துவது , குழந்தை வளர்ப்பு, வீட்டில் குழந்தைகளுக்கு கல்வியளிப்பது, பல வீடுகளில் கணவன் கொடுக்கும் சம்பள பணத்திற்குள் எல்லா செலவுகளையும் செய்து பொருளாதாரத்தை நிர்வகிப்பது என எல்லா வேலைகளையும் செய்கின்றனர். ஆகவே இனி யாராவது வீட்டை நிர்வகிப்பவர்களை என்ன செய்கிறாய் என்று கேட்டால் ஆங்கிலத்தில் "ஹோம் மேக்கர்" அல்லது தமிழில் "வீட்டு நிர்வாகி" வீட்டை நிர்வகிப்பவர் என்று சொல்லுங்கள். 

@ வீடு மற்றும் அலுவலக பணியிட சூழல் காரணமாக அதிக மன அழுத்தம், மன உளைச்சல் மற்றும் மனம் சார்ந்த சிக்கலுக்கு ஆளாகிறார்கள். இவர்களால் மனதை இயல்பாக வைத்து கொள்ள முடிவதில்லை. அத்துடன் மனதை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளவும் முடிவதில்லை. இதனால் முதலில் தூக்கமின்மைக்கு ஆளாகிறார்கள். அதனைத் தொடர்ந்து சத்தான சரிவிகித உணவையும் இவர்களால் எடுத்துக் கொள்ள முடிவதில்லை. மனதை இயல்பாகவைத்துக் கொள்ள உதவும் யோகா, தியானம் போன்றவற்றில் முழுமையாகவும், தொடர்ச்சியாகவும் இவர்களால் ஈடுபட முடிவதில்லை இதுபோன்ற சூழ்நிலைகளில் மனையியல் படித்த ஒரு வல்லுனரால் இப்படிப்பட்டவர்களுக்கு சரியான சிறந்த ஆலோசனைகள் தந்து ஒரு சிறந்த ஆலோசகராக திகழமுடியும். 

@ பிளாஸ்டிக் கழிவில் இருந்து பரிசுப்பொருள்: பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடியின் பாராட்டைப் பெற்ற இல்லத்தரசி:-  பிஹார் சமஷ்டிபூரை சேர்ந்தவர் திருமதி கீதா தேவி இவர் வீட்டில் தினமும் வேண்டாம் என்று தூக்கியெறியும் பிளாஸ்டிக் கழிவுப்பொருட்களைக் கொண்டு பல அழகிய பொம்மைகள் போன்ற பொருட்களை தயாரித்து அவற்றை அழகாக அலங்கரித்து ஒரு பரிசுப்பொருள் போன்று செய்து அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பரிசாக தந்துவந்தார். அதில் ஒரு பிளாஸ்டிக் கூடை பரிசுப்பொருளை அவர் பிரதமருக்கு அனுப்பிவைக்க.  இவரது செயலை பாராட்டி நமது பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் திருமதி கீதா தேவி அவர்களுக்கு சிறப்பு பரிசை வழங்கியுள்ளார். மேலும் பிரதமர் அவரது கடிதத்தில் பாரத பிரதமரின் தூய்மை இந்தியாவின் திட்டத்தை ஊக்குவிப்பதாக இவரது பிளாஸ்டிக் கழிவு அழகு பொருளாக மாறும் செயல் உள்ளதால் அவரை பாராட்டுவதாகவும் அவரது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆகவே நாம் நமது வீட்டில் வேண்டாம் என்று தூக்கியெறியும் எந்த பொருளையும் சற்று யோசித்து அவற்றை பயன்படுத்தி அழகுபொருளாக மாற்றி பயனடைவோம்.
=====================================
பொதுவாகவே வடையில் உளுத்தம்வடை, கடலைப்பருப்பு வடை என்று இரண்டு வகைகள் உண்டு இந்த இரண்டு வகை வடைகளையே வெவ்வேறு வகையில் வேறு சில பொருட்கள் சேர்த்து செய்யும் வடைகளை பலவகையான வடைகளாக பிரிக்கிறார்கள்.

உளுத்தம்பருப்பு வடை, உளுத்தம்பருப்புடன் மிளகும் சேர்த்து வடை செய்தால் மெதுவடை, உளுத்தம்பருப்பை கையில் தட்டி தட்டைப்போன்று பொரித்தெடுத்தால் அது வடைமாலை வடை, அதே உளுத்தம்பருப்புடன் வெங்காயம் கலந்து பொரித்தெடுத்தால் தவளைவடை, உளுத்தம்பருப்போடு முருங்கைக்கீரை சேர்த்து பொரித்தெடுத்தால் பாக்யராஜ் வடை, அதேபோல் அரைத்த உளுத்தமாவுடன் வெவ்வேறான கீரைகளை சேர்த்து வடைசெய்தால் அது கீரை வடை, உளுத்தமாவுடன் கருவேப்பிலை சேர்த்து வடை செய்தால் தொந்தி வடை, அதே உளுத்த மாவுடன் கருவேப்பிலை மிளகு போன்றவற்றை சேர்த்து செய்யும் வடை விருந்து வடை, அரைத்த உளுத்தமாவுடன் நறுக்கிவைத்த கோஸ், இஞ்சி, கேரட், பட்டாணி போன்றவற்றை சேர்த்து செய்யும் வடை கதம்பவடை,    கடலைப்பருப்பு வடை, கடலைபருப்பொடு வெங்காயம் சேர்த்தால் மசால்வடை, அதே கடலைப்பருப்புடன் ஜவ்வரிசி சேர்த்தால் ஜ்வகி வடை,  ஜவ்வரிசியை ஊறவைத்து கடலைமாவோடு சேர்த்து செய்யும் வடை ஜவ்வரிசி வடை, ஒன்பதுவிதமான பருப்புவகைகளை சேர்த்து செய்யும் வடை நவரத்தினவடை 

உடலுக்கு நன்மை தரும் வாழை பூ வடை செய்வது எப்படி:- கடலைப்பருப்பு உசிலி என்று சொல்லுவார்கள் அதை செய்து, வடைபோல் தட்டி எண்ணையில் பொறித்து எடுத்தால் வாழைப்பூ வடை ரெடி. வாழைப்பூ  பொடிப்பொடியாக வெட்டி தனியாக எடுத்து வைத்துவிட்டு, ஊறவைத்த கடலைப்பருப்பு பெருங்காயம் உப்பு காய்ந்தமிளகாய் போன்றவற்றை அரைத்து சிறிது கெட்டியாக அடைமாவுக்கு அரைப்பதைப்போல அரைத்து அதோடு வெட்டிவைத்த வாழைப்பூவை சேர்த்து வாணலியில் சற்று என்னைவிட்டு கிளறி அரைத்த மாவு வெந்ததும் சூடு ஆறியதும் அந்த வெந்த மாவை வடைபோல தட்டி எண்ணையில் போட்டு பொறித்துஎடுக்கவேண்டும். 

சுவை மிகுந்த கோஸ் வடை:-
தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு – 1 கப்
பொடியாக நறுக்கிய கோஸ் – 1 கப்
இஞ்சி – 1 துண்டு
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிது
சீரகம் – அரை டீஸ்பூன்
உப்பு – ருசிக்கேற்ப
எண்ணெய் – தேவையான அளவு

உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் நன்கு மெத்தென்று அரைத்து, அதில் மிகவும் பொடியாக நறுக்கிய கோஸ், இஞ்சி, மிளகாய், சீரகம், பெருங்காயம்,

உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். சற்று மெல்லிய வடைகளாக தட்டி காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள்.

சற்று வித்தியாசமான, சுவையான கோஸ் வடை ரெடி. காய்கறி சேர்த்து செய்யும் போது, குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, பிடித்தமானதாக இருக்கும்.

=====================================
@ ட்ரிபிள் டெக்கர் இட்டிலி..
..
இட்டிலித் தட்டில் ஒரு சின்னக் கரண்டி இட்டிலி மாவை ஊற்றி  அதன்மேல் நல்ல MTR  போன்ற வாசனை மிகுந்த ருசியான .. மிளகாய்ப் பொடியைத் தூவி அதன்மேல் மறுபடியும் ஒரு சின்னக் கரண்டி இட்டிலி மாவை ஊற்றி வேக வைத்து எடுக்க.. ட்ரிபிள் டெக்கர் இட்டிலி தயார்..  மிளகாய்ப் பொடிக்கு எண்ணை வேண்டாம்.. 

..
எள்ளுப்பொடி.. தேங்காய் மிளகாய்ப் பொடி.. உருளைக் கிழங்கு மசால் (மசாலா தோசை அல்லது பூரி மசால்).. வெஜிடபிள் குருமா.. நேத்து வெச்ச மீன் குருமாவை நடுவிலே வைத்து ட்ரிபிள் டெக்க்கர் இட்டிலி செய்யலாம்.. குழந்தை... முதியோர் வரை வெளுத்துக் கட்டுவார்கள். 
..
புகைப்படங்கள்: வீட்டில் இன்று ட்ரிபிள் டெக்கர் இட்டிலி. MTR மிளகாய்ப் பொடி தூவி செய்யப் பட்டது..

======================================
சம்மர் ஹோம்:-

வெயில் காலம் தொடங்கிவிட்டது. சுட்டெரிக்கும் சூரியன் நம்மை பதம் பார்க்க ஆரம்பித்துவிட்டான். சாலை நெடுக பழச்சாறு, தர்பூசணி, வெள்ளரி பழங்கள் எல்லாம் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கின்றன. இவைகளை சாப்பிட்டால் உடல் குளுமையாகும்.ஓகே. இதுபோல் நாம் வசிக்கும் வீட்டையும் குளுமைப்படுத்த முடியுமா? ‘அப்பாடா... என்ன வெயில்...’ என்று வீட்டுக்குள் நுழையும்போது சில்லென்று காற்று நம் முகத்தை வருடினால் எப்படியிருக்கும்? அந்த சில்லும் ஏசி ஆக இல்லாமல் இயற்கை காற்றால் இருந்தால் அந்த சுகமே தனிதானே?‘‘குறைந்த செலவில் இந்த கற்பனையை நிஜமாக்க முடியும்...’’ என்று அழுத்தம்திருத்தமாக சொல்கிறார் இன்டீரியர் டிசைனரான சரஸ்வதி.

எப்படி? அவரே சொல்கிறார். சொல்வதுடன் நிறுத்தவில்லை. தன் வீட்டையும் அப்படியே மாற்றியிருக்கிறார். அவரது இல்லத்துக்குள் நுழையும்போதே பச்சை இலைகளின் வாசனை நம் நாசியை வருடுகிறது. அருகிலேயே மெல்லிய ஓடை சலசலவென்று ஓடுவது போன்ற சத்தம். ‘‘இவை எல்லாம் தனி வீடுகளில் மட்டுமல்ல... அடுக்குமாடி குடியிருப்புகளில் ப்ளாட்டில் வசிப்பவர்களுக்கும் சாத்தியமே...’’ என்று சிரித்தவர் தொடர்ந்தார்.‘‘வெயில் காலத்தில் நாம் மோர், பழச்சாறு, தர்பூசணி பழம் போன்றவற்றை சாப்பிட்டு உடல் சூட்டை தணிக்கிறோம். அதே போல் பருத்தி உடைகளை அணிந்து வெயில் நம்மை அதிகம் தாக்காமல், பாதுகாத்துக் கொள்கிறோம்.

எப்படி உணவு மற்றும் உடைகள் மூலம் நம்மை ஆரோக்கியமாக பாதுகாத்துக் கொள்கிறோமோ அதே போல் நாம் தங்கி இருக்கும் வீட்டையும் அதன் சுற்றுப்புறத்தையும் சுத்தமாகவும் குளுமையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்தில் வசிப்பவர்களுக்குதான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதாவது அவர்கள் வீட்டுக்கு மேல் மொட்டை மாடி இருந்தால், வெயில் நேரடியாக அவர்கள் வீட்டு தளத்தில் இறங்கும். இல்லம் முழுக்க சூடாகும். இதைத் தவிர்க்க அந்த காலத்தில் வீட்டின் மேல் கூரையை உயரமாக கட்டி இருப்பார்கள். அதே சமயம் கூரையின் இடையே பீட்டிங் போல் அமைத்திருப்பார்கள். இதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக தெரியாது. தனி வீடுகள் என்றால் நாம் 
இஷ்டப்படி இவ்வாறு அமைத்துக் கொள்ளலாம். 

ஆனால், அடுக்குமாடி குடியிருப்பு என்று வரும்போது, நாம் அதை குறிப்பிட்டு சொல்ல முடியாது. அந்த சமயத்தில் நாம் கூரைக்கு கீழ் ஃபால்ஸ் சீலிங் அமைத்துக் கொள்ளலாம். இந்த சீலிங் பல வகைகளில் வருகின்றன. பிளாஸ்டிக்கில் அழகான டிசைன்களில் கிடைக்கின்றன. இதை கூரையில் அமைக்கும் போது மரத்தால் செய்யப்பட்டது போல் காட்சி அளிக்கும். விலையும் குறைவு. அதே சமயம் பார்க்கவும் அழகாக இருக்கும். மற்றொன்று தர்மாக்கோலால் அமைக்கப்படும் ஃபால்ஸ் சீலிங். தர்மாக்கோலால் சீலிங் வெயிலின் தாக்கத்தை கட்டுப்படுத்தும். மேலும் அந்த அறையில் ஏ.சி.யை பயன்படுத்தும் போது, அந்த அறையே அன்டார்டிக்காவில் இருப்பது போல் குளுகுளுவென்று இருக்கும். 

ஒரு அறையில் ஏ.சியை பயன்படுத்தும் போது, அந்த அறையில் உள்ள அனைத்து கதவுகளையும் மூடி வைக்க வேண்டும். குறிப்பாக அலமாரி இருந்தால், அதையும் கதவு கொண்டு மூடிவிடுவது நல்லது. அப்போது தான் ஏ.சி.யின் குளிர்ந்த காற்று அறை முழுக்க சமமாக பரவும்.அடுத்து சமையல் அறை. பெண்கள் குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் அதிகம் புழங்கும் இடம் இதுதான். சமையல் செய்யும் போது எரிவாயு  மூலமாக சூடு பரவும். அதனால் இங்கு பெரிய ஜன்னல்கள் இருப்பது அவசியம். அப்போதுதான் ஜன்னல் வழியாக வரும் காற்று, சமையல் அறையை குளுமையாக வைத்துக் கொள்ளும். 

இப்போது மாடுலர் கிச்சன்தான் பல வீடுகளில் உள்ளன. அதனால் அதிகமாக கண்ணாடிகளை பயன்படுத்துவது வழக்கமாகிவிட்டது. கண்ணாடிகள் சூரிய கதிர்களை பிரதிபலிக்கும். அதனால் வீட்டினுள் வெயில் அதிகம் வரும் வாய்ப்புள்ளது. இதற்கு பதிலாக கண்ணாடிகளில் சன்ஸ்கிரீன் ஷீட்டையோ அல்லது வண்ண வண்ண படங்களையோ ஒட்டலாம். அதே போல் வீட்டு சுவற்றில் இயற்கை காட்சிகள் நிறைந்த படங்களை ஒட்டலாம். பச்சை பசேல் என்று இருக்கும் அந்த படங்களை பார்க்கும் போது கண்களும் இதமாகும். வீடும் பார்க்க அழகாக இருக்கும்.இப்போது வீட்டு அறையின் ஜன்னல்களிலும் பிளைண்டர்களை போடுவது வழக்கமாக உள்ளது. 

இதற்காக நீளமான, அகலமான பிளைண்டர்களை பயன்படுத்துகிறார்கள். இது பல வகையில் வருகின்றன. துணியில், மூங்கிலில், பிளாஸ்டிக்கில் என இதை போட்டு விட்டு ஜன்னலை திறந்துவிட்டால், அறைக்குள் வெயில் வராது. அதே சமயம் பிளைண்டர்களில் இருக்கும் இடைவெளி வழியாக காற்றும் வரும். எப்படி பருத்தி ஆடைகளை கோடை காலத்தில் அணிகிறோமோ அப்படி வீட்டில் பயன்படுத்தும் பெட்ஷீட், குஷன் கவர், ஸ்கிரீன் துணிகள் ஆகியவற்றிலும் பருத்தி துணிகளை பயன்படுத்துவது நல்லது. இது வெயிலினால் ஏற்படும் சூட்டை உள்வாங்கி, அறையை குளுகுளுவென்று வைத்துக் கொள்ளும். 

இந்த துணிகள் மெல்லியதாகவும், லைட் நிறங்களான வெள்ளை, ஹாஃப் வைட், கிரீம் போன்ற நிறங்களில் இருப்பதும் அவசியம். காரணம் வெயில் காலத்தில் அடர்ந்த நிறங்கள் அணிந்தால், அது வெயில் சூட்டை அப்படியே வீட்டுக்குள் பிரதிபலிக்கும். எனவே அறையும் சூடாக இருக்கும். முன்பெல்லாம் மூங்கில் நாற்காலிகளை பயன்படுத்தி வந்தோம். இப்போது லெதரால் செய்யப்பட்ட சோஃபாக்களைதான் அழகு என்று வாங்குகிறோம். பார்க்க அழகாக இருக்கும் இந்த சோஃபாக்களில் நாம் அதிக நேரம் அமர முடியாது. அது உடல் சூட்டை அதிகரிக்கும். குறிப்பாக வீட்டில் வயதானவர்கள் இருக்கும் போது வெயில் காலத்தில் அவர்களால் உடல் சூட்டை தாக்கு பிடிக்க முடியாது. அந்த சமயத்தில் சோஃபாக்கள் மேல் அழகான மெல்லிய பருத்தி துணிகளை விரிக்கலாம். 

இன்னொரு விஷயம். என்னதான் சோஃபாக்கள் இருந்தாலும், தரையில் அமர்வது தனி சுகம். முன்பு சிமென்ட் தரைகளாக இருந்தவை இப்போது பளிங்கு தரைகளாக பளிச்சிடுகின்றன. இந்த டைல்ஸ் தரைகளை தினமும் இரண்டு முறை பச்சை தண்ணீர் கொண்டு துடைத்தால் தரையும் குளுகுளுவென்று இருக்கும். எத்தனை ப்ளாட் இருக்கிறதோ அத்தனையிலும் இன்று பால்கனி இருக்கின்றன. அங்கு சின்னச் சின்ன பூச்செடிகளையும், குரோட்டன்ஸ் போன்ற செடிகளையும் அழகான பானைகளில் வைக்கலாம். அதே போல் கொடி வகை செடிகளை பால்கனியில் படர விட்டால் பார்க்க அழகாகவும் இருக்கும் வீடும் குளுகுளுவென்று இதம் தரும். 

தனி வீடுகளாக இருந்தால், வீட்டை சுற்றி தென்னை, வாழை மற்றும் வேப்ப மரங்களை வைக்கலாம். ஆனால், இந்த வசதியை அடுக்குமாடி குடியிருப்புகளில் அனுபவிக்க முடியாது என்று ஒரேயடியாக சொல்லிவிட முடியாது. காரணம் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஏற்ப போன்சாய் செடிகள், ரப்பர் செடிகள், காக்டஸ் செடிகள், சின்னச் சின்ன குரோட்டன்ஸ் செடிகள் ஆகியவற்றை வளர்க்கலாம். ஒரு சில குரோட்டன்ஸ் செடிகளை குளியல் - சமையல் அறைகளிலும் சின்ன பாட்டிலில் வளர்க்கலாம். இது வீட்டுக்கே ஒரு தனி அழகை கொடுக்கும். தண்ணீர் பவுன்டெயின்களை கூட நம்முடைய வீட்டுக்கு ஏற்ப சிறிய வடிவில் அமைக்கலாம். இது சீன வாஸ்துப்படி வளர்ச்சியை குறிக்கும். வடகிழக்கு திசையில் இந்த பவுன்டென்களை வைக்க வேண்டும். அந்த இடத்தில் தண்ணீரின் ஓட்டம் இருப்பது வீட்டுக்கு நல்லது. 

மேலும் தண்ணீர் சத்தம் வீட்டுக்குள் மெல்லியதாக கேட்கும் போது அது புத்துணர்ச்சியை கொடுக்கும். தண்ணீர் ஓட்டம் இருக்கும் இடம் எப்போதும் ஜில்லென்று இருக்கும். அந்த குளுமை வீடு முழுக்க பரவும். எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது, சுவற்றில் பயன்படுத்தும் சுண்ணாம்பின் நிறம். அடர்ந்த நிறங்களை விரும்பியவர்கள் இப்போது லைட்டான நிறங்களையே விரும்புகிறார்கள். ஐவரி, பிங்க், வெளிர் பச்சை... போன்ற நிறங்களை அடிக்கும் போது வீடும் பெரியதாக காட்சி அளிக்கும். அதே சமயம் விட்டினுள் நுழையும் போதே சுவற்றில் நிறங்களை பார்க்கும் போது மனதும் ரம்மியமாக மாறும். சுண்ணாம்பின் நிறம் போல வீட்டில் உள்ள விளக்குகளையும் பயன்படுத்த வேண்டும். இதில் மூன்று வகைகள் உள்ளன. வர்க்கிங் விளக்கு, டெக்கரேட்டிவ் மற்றும் காமென். 

இதில் நாம்காமென் விளக்கான டியூப்லைட்களை பயன்படுத்துவது நல்லது. இது மற்ற விளக்குகள் போல் அதிக உஷ்ணத்தை வெளியேற்றாது...’’ என்று சொன்ன சரஸ்வதி வீட்டை அலங்காரம் செய்வது மிகப் பெரிய வேலை இல்லை என்கிறார்.‘‘வீட்டின் உள் அலங்காரத்தை நம் விருப்பம் போல் எப்படி வேண்டுமானாலும் மாற்றி அமைக்கலாம். இதற்கு அதிக செலவாகும் என்று சொல்ல முடியாது. ஒவ்வொருவரின் பட்ஜெட்டுக்கு ஏற்ப எல்லா பொருட்களும் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. அதை பயன்படுத்தி அழகாக்கலாம். 


நாம் அதிக நேரம் இருப்பது வீட்டில்தான். அது எப்போதும், நம் மனதுக்கு நிம்மதியும், புத்துணர்ச்சியும் தர வேண்டும். வீட்டுக்கு ஏன் வரவேண்டும் என்று நினைப்பதற்கு பதில், எப்போது அலுவலகம் முடிந்து வீட்டுக்கு செல்வோம் என்ற எண்ணம் வரவேண்டும். அதற்கு ஏற்ப வீட்டின் உள் அலங்காரத்தை செய்துவிட்டால், அதை விட சொர்க்கம் வேறு எதுவுமே இல்லை...’’ என்று சிரிக்கிறார் சரஸ்வதி அவர்கள் உண்மைதானே? 

======================================


சுட்டீஸ், நாங்கள் தொகுத்து வழங்கிய பதிவுகளில் உள்ள குறை நிறைகளை வாசகர்கள், அன்பான முறையில் எங்களுக்கு எடுத்துக்கூறி, எங்களது பதிவுகள் மேலும் சிறப்படைய வாழ்த்தி உற்சாகப்படுத்துமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.


இப்படிக்கு 



வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ் தமிழ் ரோஜாக்கள். 

No comments:

Post a Comment