வருகை தாருங்கள், தமிழில் சிறுவர்கள் தொகுத்து வழங்கும் வலைப்பதிவர்களின் மாத இதழ், ஒவ்வொரு மாதமும் ஆங்கில மாதத்தின் 3/4-வது ஞாயிறுதோறும் (தமிழ் மாதத்தின் முதல் ஞாயிறு அன்று) இரவு 9 மணியளவில் வெளியாகும் சுட்டீஸ் ரோஜாக்களின் "குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழ். http://gulkanthu.blogspot.in/
கற்க கசடற….!! !! வாய்மையே வெல்லும்!!
“வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம்”
160/Sector-4, Vaishali, Ghaziabad, NCR-New Delhi.-201012
e-mail: vaishalireaderscircle@gmail.com
___________________________________________________________________
சுட்டீஸ் இதழ்=22 தை மாதம்-தேதி 28-01-2018. வணக்கம், தாங்களின் வருகைக்கு நன்றி, இந்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழில்" -தை மாத வலைப்பதிவு:- இந்த இதழின் ஆசிரியராக, தொகுத்து வழங்குபவர்:- (Editor of the Page) வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ் குழுவினர்கள் இடம்செக்டர்-4, மையப்பூங்கா, வைைஷாலி மெட்ரோ இரயில் நிலையகில்லி.

47-வது வாசகர் வட்ட சந்திப்பு, "சுட்டீஸ் குல்கந்து" இதழ்=22 தை மாதம், தேதி-28-01-2018. மூன்றாவது அல்லது மாதத்தின் இறுதி ஞாயிறு அன்று... இந்த தை மாதம் முழுவதும் :- வழக்கமாக இந்தமாதமும் விழிப்புணர்வு பயிற்சிமாதமாக "புகைப்படக்கலை பற்றி தெரிந்துகொள்வோம் தை மாதக் கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும்":-"சிறப்பு பயிற்சி பட்டறை" வைஷாலி வாசகர் வட்டத்தினர்களும் சுட்டீஸ் குழுவினர்களும் சேர்ந்து அவர்களுக்கு தெரிந்த விவரங்களை ஒன்று திரட்டி "சுட்டீஸ் குகலந்து" -22-வது இதழை உருவாக்கியிருக்கிறார்கள்.


47-வது வாசகர் வட்ட சந்திப்பு, "சுட்டீஸ் குல்கந்து" இதழ்=22 தை மாதம், தேதி-28-01-2018. மூன்றாவது அல்லது மாதத்தின் இறுதி ஞாயிறு அன்று... இந்த தை மாதம் முழுவதும் :- வழக்கமாக இந்தமாதமும் விழிப்புணர்வு பயிற்சிமாதமாக "புகைப்படக்கலை பற்றி தெரிந்துகொள்வோம் தை மாதக் கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும்":-"சிறப்பு பயிற்சி பட்டறை" வைஷாலி வாசகர் வட்டத்தினர்களும் சுட்டீஸ் குழுவினர்களும் சேர்ந்து அவர்களுக்கு தெரிந்த விவரங்களை ஒன்று திரட்டி "சுட்டீஸ் குகலந்து" -22-வது இதழை உருவாக்கியிருக்கிறார்கள்.

அடுத்து வரும் பிப்ரவரி-2018, 18-02-2018 -மாசி மாத வலைப்பதிவு இதழின் ஆசிரியராக, (Editor of the page) இந்த வலைப்பக்கத்தை தொகுத்து வழங்க ஆவலுடன் காத்திருப்பவர் யார்? விருப்பம் உள்ளவர் உங்கள் விருப்பத்தை உடனே தெரியப்படுத்துங்கள். மின் அஞ்சல் "vaishalireaderscircle@gmail.com"
@ தேசிய கதை சொல்லும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிப் பட்டறை புது தில்லியில் இயங்கிவருகிறது. இந்த அரசு இலவசப் பயிற்சிப் பட்டறையில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்திரா காந்தி தேசிய கலை மையம் வழங்கும் சர்வதேச கதைசொல்லும் விழாவில் பங்குபெறும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். IGNCA-இந்திரா காந்தி தேசிய கலை மையம் வழங்கும் "சர்வதேச கதை சொல்லும் விழா" பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் நிவேஷ், அமைப்புடன் இணைந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அரசு சாரா விழாவாக நடந்துவருகிறது.
கலைக்குழு வைத்திருப்பவர்கள் இந்த மையத்தோடு தொடர்புகொண்டு அவர்களது கலையை சர்வதேச அளவில் காட்சிப்படுத்த, இந்த தேசிய மையம் உதவி செய்து வருகிறது தினமும் மாலை 4 மணி முதல் 8 மணி வரை இந்த மையத்தின் கதை சொல்லும் திறன் மேம்பாட்டுப் பட்டறையில் கலந்துகொண்டு அவர்களது திறனை மேம்படுத்திக்கொள்ளலாம்.
கதை சொல்லும் ஒவ்வொரு மாணவர்களும் 25 நிமிடங்களில் 2 கதைகள் சொல்லவேண்டும். திருமதி டாக்டர் மங்களம் சுவாமிநாதன் அவர்கள் கதை சொல்லும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிப் பட்டறைக்குப் பொறுப்பேற்று நடத்திவருகிறார். (Smt. Dr. Mangalam Swaminathan (Programme Director-Kaladarsana Division, IGNCA)
தொலைப்பேசியில் தொடர்புகொள்ள 91+011+23388155,
மின்னஞ்சலில் தொடர்புகொள்ள "igncakaladarsana@gmail.com"
இனைய முகவரி http://ignca.nic.in/
அனைவரும் ஏராளமான வாய்ப்புக்களை பெற்று வெற்றிபெற வாழ்த்துக்கள்.
நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.
==============================
@ வாசகர் வட்ட சுட்டீஸ் தேவதையின் இந்த மாத பிறந்தநாள்.
சுட்டீஸ் செல்வி மிருதுளா சாயி கிருஷ்ணன் (27-Jan)
பிறந்தநாள், இன்று பிறந்தநாள், நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்தநாள்.....HAPPY BIRTH DAY 2 மிருதுளா ..மேலும் மேலும் பல வெற்றிகளுடன் எல்லா நலமும் எல்லா வளமும் பெற்று, சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம்... "நூறாண்டு காலம் வாழ்க, நோய் நொடி இல்லாமல் வளர்க, ஊராண்ட மன்னர் புகழ் போலே, உலகாண்ட புலவர் தமிழ் போலே, நூறாண்டு காலம் வாழ்க"... http://youtu.be/i-jlk4dEFLY
==============================
திரு முத்துக்கிருஷ்ணன் அவர்களின் சுட்டீஸ் தொடர்:-
கதை சொல்வது என்பது நம் தமிழ் கலாச்சாரத்துடன் ஒன்றிய ஒரு வழக்கம். இது காலங்காலமாக நம் பண்பாட்டுடன் கலந்து, வளர்ந்துவரும் ஒன்று. முன்பெல்லாம் கிராமங்களில் இரவு ஒன்பதுமணியானால் போதும் வீட்டுக்கு வெளியே இருக்கும் ஆலோடி எனப்படும் வராண்டாவில் பாட்டி அமர அவளைச் சுற்றி அவள் மடியில் தலைவைத்து சுவாரஸ்யமாக கதைகள் கேட்பது வழக்கம். அவளும் கருத்துச் செறிந்த, வீரமிக்க இதிகாச, புராண, சமூகக் கதைகள் சொல்வாள். அவைகளைக் கேட்டு குழந்தைகளாகிய நம் மனதில் நல்ல பண்பு, பழக்க வழக்கங்கள், வீரம் வளர்வதுமுண்டு. இதன் அடிப்படையில் நம் முன்னோர்களும் பஞ்சதந்திரக் கதைகளென்று நீதி மேம்படவும், விக்ரமாதித்தன் கதைகளென்று நம் புத்தியைத் தீட்டக்கூடிய பலவற்றை எழுதி நமக்களித்துள்ளனர்.
வேனிற்காலங்களில் பெரும்பாலும் நதிகள் வற்றிவிடும். அந்த ஆற்று மணலில் தெருக்கூத்து என்று பல சரித்திரக் கதைகளை நடித்துக் காட்டிச் சொல்வதுமுண்டு. கேரளத்தில் சாக்கியார் கூத்து என்று கதைசொல்லும் பழக்கமும் இன்றுவரை தொடர்ந்து வருகிறது. இது தவிர கோயில்களில் திருவிழாக் காலங்களில் கதாகாலட்சேபம் என்ற நிகழ்ச்சி நடைபெறுவது இன்றும் வழக்கிலுள்ளது. பொம்மலாட்டங்கள் மூலமாகவும் அக்காலத்தில் பல தெய்வீகக் கதைகளும் சொல்லப் பட்டு வந்தது. இவையாவும் காலப் போக்கில் வளரும் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி கதை சொல்லும் இக் கலையை செப்பனிட்டு இப்போதெல்லாம் திரைப்படங்கள் வாயிலாக பல கதைகள் சொல்லப்பட்டு வருவதை நாம் நன்கறிவோம்.
தற்சமையம இந்திரா காந்தி தேசிய கலை மையம் வழங்கும் சர்வதேச கதைசொல்லும் விழா நடைபெறுவதுகேட்டு காலங்காலமாக கதைகளைச் சுவைத்துவந்த எனக்கு மிக்க மகிழ்ச்சியாயிருக்கிறது. இந்தக் கதைசொல்லும் கலை மென்மேலும் பலர் பங்கு பெற்று ஊக்குவிக்கப்பட்டு விரிவடைந்து வளர வேண்டும் என்பதே என் அவா!
வாழ்த்துக்களுடன் முத்துக்கிருஷ்ணன்.
==============================
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து,
தொடர்ந்து எங்க வீட்டு "நூலகம் "
படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும்
(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம் / செல்லப் பிராணிகள் வளர்ப்போம் )
==============
தொடர்ந்து ......
"இந்த மாத தலைப்பைச் சார்ந்த" புகைப்படக்கலை பற்றி தெரிந்துகொள்வோம் மற்றும் வாசகர்வட்டத்தின் பொன்விழா நிகழ்ச்சி தயாரிப்பு பற்றிய சிறப்பு சந்திப்பு."சிறப்பு பயிற்சி பட்டறை"என்ற பயிற்சி மாதக் கொண்டாட்டங்களும். நிகழ்ச்சிகளும்.போட்டிகளும் பரிசுகளும்.. என சிறப்பாக நடந்தேறிய அன்றய நிகழ்ச்சியில் உதவிய அனைவரையும் பாராட்டி, நிகழ்ச்சி இனிதாக நிறைவுபெற்றது.
===========================================================
சித்திரமும் கைப்பழக்கம் பகுதியில்:-
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம் நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்கொடையும் பிறவிக் குணம். – வெண்பா 7
விளக்கம்:
பழகப்பழக பழக்கம் வந்துவிடும். ஆனால் பிறவிக்குணத்தை மாற்ற முடியாது. வரைய வரையச் சித்திரமும் கைப்பழக்கம் ஆகிவிடும். பேசப் பேசச் செந்தமிழும் பழக்கமாகிவிடும். திரும்பத் திரும்ப நினைத்தால் கற்றது மனத்தில் பதிந்துவிடும். நல்லொழுக்கத்தைத் திரும்பத் திரும்பக் கடைப்பிடித்தால் அதுவும் பழக்கமாகிவிடும். ஆனால், நல்லவர் நட்பு, இரக்கக் குணம், கொடைப் பண்பு ஆகியவை பிறவியிலேயே பதிந்திருந்தால்தான் வரும்.
@சுட்டீஸ் குழுவினர்கள் கைவண்ணம்:- (ஓவியம்)
(நான் வரைந்த ஓவியம் / எனக்குப் பிடித்த ஓவியம்)
@சுட்டீஸ் துர்கா சக்திராஜ்:-
@சுட்டீஸ் மிருதுளாசாயி கிருஷ்ணன்:-
@சுட்டீஸ் அரவிந்த் மகாலிங்கம் .
@ வைஷ்ணவி பரமேஸ்வரன்
@சுட்டீஸ் பிரியா
@ சுட்டீஸ் ஜான்வி குமாரி:-
@சுட்டீஸ் :- ஆதயா ஷங்கர்
@சுட்டீஸ் குழுவினர்கள் கைவண்ணம்:- (Handi Craft)
@சுட்டீஸ் மிருதுளாசாயி கிருஷ்ணன்- வைஷாலி
@சுட்டீஸ் அரவிந்த் மகாலிங்கம் வைஷாலி
@சுட்டீஸ் வைஷ்ணவி வெங்கடேசன்
@இந்த மாதம் நமது வாசகர்வட்டத்தின் தமிழ் வகுப்புக்கு புதியவர்கள்:-
@10-பத்துபேர்கள் கொண்ட முதல் குழு தமிழை முழுமையாக எழுத படிக்க தெரிந்துகொண்டதோடு தமிழக அரசின் அடிப்படை தமிழ் தேர்வினை எழுத தயாராக இருக்கிறார்கள்
@மேலும் 9-ஒன்பது புதியவர்கள் தமிழ் எழுத படிக்க கற்றுவருகிறார்கள்.
1. ரிதேஷ் வர்ஷன், 2. அரவிந் மகாலிங்கம், 3. ஆதித்யா வாசு.
======================================
@ சுட்டீஸ் கதைகள்:-
"நம்பிக்கையே வாழ்க்கை "
ஒரு ஊரில் ஒரு மனிதர் பெயர் மணி என்று வைத்துக்கொள்வோம் அவருக்கு முதன் முதலாக வானூர்தியில் பயன் செய்ய வேண்டி வந்தது.
அவருக்கு எங்கோ படித்தது நினைவில் வந்தது, அதாவது வானூர்தியில் முதல் பிரயாணம் வாந்தி வரவழைக்கும், தலை சுற்றும், உடல்நிலை கெட்டுப்போகும் என்று நினைத்துக்கொண்டு அவரது குடும்ப வைத்தியரை சென்று பார்த்து அதற்கான மருந்து வேண்டும் என்று டாக்டரிடம் கேட்டார்.
அவரை எற இறங்க பார்த்த டாக்டர் அவரது மனநிலையை புரிந்துகொண்ட அவருக்கு ஒரே ஒரு மாத்திரையை தந்து அதோடு ஒரு நிபந்தனை ஒன்றையும் சொன்னார், அதாவது அவர் கொடுத்த அந்த மாத்திரையை கண்னை மூடிக்கொண்டு வாயில் போட்டுக் கொள்ளவேண்டும், ஆனால் அந்த மாத்திரையை விழுங்காமல் வாயிலேயே வைத்திருந்து விமானத்திலிருந்து இறங்கி வீடு சென்று சேர்ந்ததும் வாயிலிருக்கும் அந்த மாத்திரையை துப்பிவிடவேண்டும் என்று கூறினார்.
அந்த மாத்திரையை வாங்கிக்கொண்ட மணி பயமில்லாமல் இனிதே விமான பயணத்தை முடித்து வீடு வந்து சேர்ந்ததும் வாயிலிருந்த மாத்திரையை துப்புவதற்காக கையில் எடுத்து பார்த்தவர் அசந்தே போனார் காரணம் அவரின் வாயிலிருந்து எடுத்த அந்த மாத்திரையை நன்கு பார்த்தபோது அது ஒரு பிளாஸ்டிக் சட்டை பொத்தான் என்பது தெரியவர அதிர்ச்சியடைந்தார்.
மருத்துவர் தந்த பிளாஸ்டிக் பொத்தான் போன்ற மாத்திரையால் மணிக்கு எந்த பயனும் ஏற்படவில்லை. இருந்தும் மணி அவரது குடும்ப மருத்துவரின்மீது வைத்திருந்த நம்பிக்கையே அவரது உடல்நிலை மோசமாகாமல் அவரை காப்பாற்றியது என்பதை தெரிந்துகொண்டார்.
ஆகவே எந்த மருந்தும் தராத சக்தியை "நம்பிக்கை" நமக்கு தருகிறதல்லவா. நாம் எந்த செயலை செய்தாலும் நம்பிக்கையோடு செய்தால் வெற்றி நிச்சயம் என்பதை இந்தக்கதையின் வழியே தெரிந்துகொண்டோம் அல்லவா.
மீண்டும் அடுத்த கதைப்பகுதியில் சந்திக்கலாம்
நன்றிகளுடன் நாமகிரி சந்திரசேகரன்- வைஷாலி.
==========================================
@விளம்பரம்:- "இந்தப்பகுதியை உங்களுக்கு வழங்குபவர்கள்":-
====================================
"நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்,
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்,
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற,
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும்
தமிழணங்கே! தமிழணங்கே! .....
உன் சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!"
இந்த வாழ்த்துப்பாடலை இயற்றியவர் திரு.பெ. சுந்தரம் பிள்ளை (அவர் வாழ்ந்த காலம் "ஏப்ரல் 4, 1855 - ஏப்ரல் 26, 1897")
அவர் எழுதிய "மனோன்மணீயம்" என்ற புகழ்பெற்ற நாடக நூலில் இடம்பெற்றிருக்கும் தமிழ் தாய் வாழ்த்துப்பாடல் இது.
இந்த மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த என்று ஆரம்பமாகும் பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது.
தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலின் கருத்து:-
அலை கடலே ஆடையான இந்த அழகான பூமிப் பெண்ணிற்கு, பாரத நாடே முகமாம், தென்திசை அதன் நெற்றியாம், அதில் திலகமென திகழ்வது திராவிட திருநாடாம், அந்தத் திலகத்தின் வாசனைப் போல்அனைத்து உலகமும் இன்பம் காண எல்லா திசையிலும் புகழ் மணக்க இருக்கும் தெய்வமகள் ஆகிய தமிழே, என்றென்றும் இளமையாக இருக்கிற உன்னுடைய இந்த அழகைக் கண்டு வியந்து, செய்யும் செயலையும் மறந்து, வாழ்த்துகிறோம்! வாழ்த்துகிறோம்! வாழ்த்துகிறோம்!.....
==========================
28-01-2018 அன்றய நமது 47-வது வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில்:- ,
"ஒவ்வொரு மதமும் ஒரு விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை வகுப்புகள். என இந்த வருடம் முழுவதும் கற்றுக்கொள்வோம், தெரிந்துகொள்வோம் பயிற்சிப் பட்டறை மாதங்களின் வருடமாக, நமது வைஷாலி வாசகர் வட்டத்தின், ஒவ்வொரு மாதமும், ஆங்கில மதத்தின் 3/4வது ஞாயிறு அன்றைய வாசகர் வட்ட சந்திப்பில், ஒவ்வொரு மதமும் ஒரு விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை வகுப்புகள்... பயிற்சி மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும், மற்றும் கதைகள், கட்டுரைகள், பயிற்சிப்பட்டறை சார்ந்த போட்டிகளும் பரிசுகளும் என இந்தமாத இதழில் பல விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
28-01-2018 அன்றய நமது 47-வது வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில்:- ,
"ஒவ்வொரு மதமும் ஒரு விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை வகுப்புகள். என இந்த வருடம் முழுவதும் கற்றுக்கொள்வோம், தெரிந்துகொள்வோம் பயிற்சிப் பட்டறை மாதங்களின் வருடமாக, நமது வைஷாலி வாசகர் வட்டத்தின், ஒவ்வொரு மாதமும், ஆங்கில மதத்தின் 3/4வது ஞாயிறு அன்றைய வாசகர் வட்ட சந்திப்பில், ஒவ்வொரு மதமும் ஒரு விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை வகுப்புகள்... பயிற்சி மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும், மற்றும் கதைகள், கட்டுரைகள், பயிற்சிப்பட்டறை சார்ந்த போட்டிகளும் பரிசுகளும் என இந்தமாத இதழில் பல விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
மேலும் இந்த மாத சுட்டீஸ்களின் ஏராளமான செய்திகளை மிகவும் பயனுள்ள வகையில் நமது வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ் "குல்கந்து" குழுவினர்கள் தொகுத்து தந்திருக்கிறார்கள்....
சுட்டீஸ் அவர்கள் தொகுத்துத் தந்த பல செய்திகளை ஒன்று சேர்த்து, அனைத்தையும் அழகாக கோர்த்து, ஒரு கதம்ப மாலையாக தொடுத்து தந்திருக்கிறார்கள். இந்த மாத வலைப்பதிவு இதழின் அனைத்து விவரங்களும் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம்....
A fantastic way to hone your photography skills while having fun is joining a photo walk. If you’re not familiar, a photo walk is a group activity typically led by an experienced and sometimes famous photographer. Depending on his/her's focus, you may stroll around NYC shooting building architecture or people or who knows what. All the while, the lead will give you tips, provide inspiration and answer questions. A photo walk is also a great place to meet other photographers who share your interests. (Collect Some tips from Photo District News on how to get the most out of a photo walk).
விளையாட்டாகவும் வேடிக்கையாகவும் சமயம் கிடைக்கும் போது உங்கள் திறமைகளை வெளிக்கொண்டுவந்து சாதிக்க ஒரு அருமையான வழி, நீங்கள் எதிர்பாராத அந்த நேரத்தில் எடுக்கும் புகைப்படங்கள்தான் ஒரு திருப்புமுனையாக புதிய பயனுள்ள படிப்பினைக்கொண்ட வழியைக்காட்டும். உங்களுக்கு புகைப்படமெடுக்கும் நெளிவு சுழிவு, திறமை, அனுபவம் இல்லாவிட்டாலும், இப்படிப்பட்ட வழியில் புகைப்படம் எடுக்கவேண்டும் என்கிற ஒரு புகைப்பட நடை என்பது, அனுபவம் வாய்ந்த மற்றும் சில நேரங்களில் புகழ்பெற்ற புகைப்படக்காரரின் தலைமையிலான குழுக்களோடு இணைந்து செயல்படும்போது கிடைக்கும். அப்படிப்பட்ட குழுக்களில் இணைந்து கற்றுக்கொள்ள முனையும்போது அனுபவம்வாய்ந்த அவர்கள் உங்களை வழிநடத்தி செல்வார்கள். குழுவிலிருக்கும் ஒருவன்/ஒருவள் கவனத்தைப்பொறுத்து, நீங்கள் NYC உங்களை சுற்றியிருக்கும் கட்டிடங்களின் கட்டமைப்பு அல்லது மக்கள் அல்லது யாருக்கு என்ன என்ன தோன்றுகிறதோ அவைகளை மையமாகவைத்து புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களில், குழு தலைமையிலான சில குறிப்புகள் உங்களுக்கு கிடைக்கவும், உங்களது தவறுகள் சுட்டிக்காட்டப்படுவதோடு, புகைப்பட கோணங்களின் நெளிவு சுழிவுகளை புரிந்துகொள்ளவும், உத்வேகத்துடன் செயல்படவும், மேலும் உங்களது சந்தேக கேள்விகளுக்கு உடனடியாக விடைகிடைப்பதோடு, ஒரு சிறந்த புகைப்பட நடையாக பயிற்சி பெறவும், குழுவின் பிறரது புகைப்பட நடைகளை தெரிந்துகொள்ளவும், குழு பயிற்சி சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.(நீங்கள் வசிக்கும் பகுதியில் வெளியாகும் செய்தித்தாள் புகைப்படக் காட்சியில் இருந்து சில குறிப்புகளை எடுத்துக்கொண்டு, எப்படி அதுபோன்றதொரு சிறந்த புகைப்படங்களை எடுக்கமுடியும் என்கிற செய்தியாளர்களின் புகைப்பட நடை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்).
புகைப்பட நுணுக்கங்களை தெரிந்துகொள்ள விருப்பமுடையவர்கள் நமது வாசகர் வட்டத்தின் வழிநடத்துபவரான திரு வி சுப்ரமணியம் அவர்களின் பறவைகள் கண்காணிப்பு மற்றும் கணக்கெடுப்பு பணியில் அவர்களின் குழுவோடு உங்களை நீங்கள் இணைத்துக்கொண்டாள், பல அரியவகை புகைப்பட கருவிகளை கையாளுவதையும், அந்த புகைப்படக்கருவிகளைக்கொண்டு வெகுதூரத்திலிருக்கும் எந்த காட்சியையும் சிறப்பாக படம்பிடிக்கும் புகைப்பட நடை பற்றிய பயிற்சியை எந்தவித செலவும் இல்லாமல் தெரிந்துகொள்வதோடு புது தில்லியின் பறவைகள் கணக்கெடுப்புக்கு குழுவின் ஒரு அங்கத்தினர்களாகவும் தங்களை பதிவுசெய்து கொள்ளவும் ஒரு வாய்ப்பாக இருக்கும். இது நமது வைஷாலி வாசகர் வட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வசதியும் வாய்ப்புமாகும். விருப்பமுடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம்.
கீழே காணும் சில புகைப்படங்களை உற்றுநோக்குங்கள். ஒரு சிறந்த தொழில்முறை (professional photographer ) புகைப்படக்காரர் ஒருவரின் செயல்களை விளக்கும் புகைப்படங்கள்தான் அவைகள்
புகைப்படக்கலைவரலாறு:-
காட்சிப்படுத்துதல் என்பது மனிதகுலம் தோன்றிய காலம்தொடக்கம் காணப்பட்டுள்ளது. சிந்துவெளி நாகரீகம் முதலே மனிதன் தனது நடவடிக்கைகளை ஓவியம், சிற்பம் மூலமாக நிலைநிறுத்தியிருக்கின்றான். அதன்பிறகு மன்னராட்சிக்காலத்தில் மன்னர்கள் தமது வெற்றிகளையும் தமது சாதனைகளையும் பதிவுசெய்ய முனைந்திருக்கின்றார்கள். அவைகளில் சில காலப்போக்கில் அழிந்துபோனாலும் இன்றும் சில பதிவுகள் நாம் காணக்கூடியதாக உள்ளது. இலத்திரனவியல் காலத்தில் மனிதன் அதனை ஒளிப்படம் மூலமாக பெற்றுக்கொண்டான். அதன் மூலம் இருவானதே ஒளிப்படக்கலை(photography). Photography என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து உருவானது. இதற்கு ஒளியினைப்பதிதல் என்று பொருட்படும். முதன் முதலாக ஒளிப்படத்தினை சீன தத்துவஞானி ‘மோ டீ’, கிரீக் கணிதமேதை அரிஸ்டோடில் மற்றும் இயுக்லிட்டால் 4ம் 5ம் நூற்றாண்டில் ஊசித்துளை கமராவால் எடுக்கப்பட்டது. ஆனாலும் முதலில் நிரந்தரமாகப்பதியும் ஒளிப்படம் 1826ம் ஆண்டு பிரான்ஸ் படைப்பாளியான ஜோசப் நைசிப்போர் நிப்ஸ் பிடிக்கப்பட்டது. மேலும் வர்ணப்புகைப்படம் 1970 இல் ஸ்கொட்லாந்து பெளதீகவியலாளரான ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல்லால் கண்டுபிடிக்கப்பட்டது. நவீன கால எண்ணியல் ஒளிப்படக்கருவி 1969 களிலேயெ உருவாக்கப்பட்டது.
சிறந்த புகைப்படங்களைப்பார்து ரசிக்கக்கற்றுக்கொள்ளுங்கள். அந்த புகைப்படங்கள் அழகாகவும் வித்தியாசமாகவும் இருக்க அவரிகள் என்ன யுக்திகளைக்கையாண்டிருக்கிறார்கள் என்று அராட்சி செய்துபாருங்கள். சிறந்த படம் எடுக்க நாமும் என்ன செய்யலாம் என்று எண்ணுங்கள்.
இவ்வாறு சில புகைப்படங்களைப்பதியும் இணையத்தளங்கள் நிறய உள்ளன. உதாரணத்திற்கு http://www.flickr.com/explore/interesting/7days/?
இங்கு உலகில் பல்வேறு இடங்களிலும் இருந்து எடுக்கப்பட்ட ஒளிப்படத்தொகுப்பினை காண்பித்திருப்பார்கள். சென்று பார்வையிடவும்.
வெறுமனே உங்கள் படங்களையும் உங்கள் நண்பர்களது படங்களையும் மாறி மாறி எடுப்பதுவல்ல ஒளிப்படக்கலை. இங்கு நிறய உள்ளது. அதனைப்பகிர்வதற்கு முன்னய காலகட்டத்தைவிட நமக்கு சந்தர்ப்பம் உள்ளது. அதனை எவ்வாறு செய்யலாம், என்ன நுட்பங்கள் பயன்படுத்தலாம் என்பதினை நான் உங்களுக்கு எனது பதிவுகள் மூலம் தருவேன். ஒளிப்படக்கலையின் ஒவ்வ்வொரு சிறப்பையும் பெற என்னோடு சேர்ந்து பயணியுங்கள். நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி
இப்படிக்கு வாசகர் வட்ட சுட்டீஸ் "குல்கந்து" ரோஜாக்கள்.
@. புதிய எட்டு வித்தியாச புதிர் போட்டி :- சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்"..... மார்கழி-மாத-படத்தில் உள்ள (8) எட்டு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் -வலைப்பதிவு இதழ் போட்டி என்-22.
போட்டியில் பங்குகொள்ள விருப்பமுடையவர்கள் விடைகளை "vaishalireaderscircle@gmail.com" என்கிற மினஞ்சல் முகவரிக்கு 15-02-2018 முன்பாக அனுப்பிவைக்கவேண்டும். சரியான விடை எழுதிய அனைவருக்கும் அடுத்தமாத வாசகர் வட்ட சந்திப்பில் பரிசுகள் வழங்கப்படும்.
$சென்ற மாத "சுட்டீஸ் குல்கந்து" வலைப்பதிவர் இதழ்-21 விடை, மார்கழி-மாத-படத்தில் உள்ள (8) எட்டு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் -வலைப்பதிவு இதழ் போட்டி என்-21. போட்டிக்கான சரியான விடை,
விடை:-1).இடம்வலமாக படம் திரும்பியுள்ளது, 2) பச்சை நிற தட்டு, 3) அம்மையாரின் தலையில் பொட்டு,4) அம்மையாரின் கையில் இருக்கும் ஜாலரா, 5)ஆர்மோனியப்பாடகரின் தலையில் பொட்டு, 6)ஆர்மோனியத்தின் கருப்பு/பச்சை நிறம், 7)மேளம் தட்டுபாகரின் மீது மாலை, 8)மேளத்தின் மீது வரிக்கோடுகள்.
சென்ற மாத எட்டு-வித்தியாசங்கள் வலைப்பதிவர் இதழ்-21 போட்டிக்கான சரியான விடையை 97 நபர்கள்/போட்டியாளர்கள் எழுதி போட்டியில் கலந்துகொண்டனர். வாட்ஸ் ஆப், முகநூல், மற்றும் குறுஞ்செய்தி, தொலைப்பேசி மேலும் மின்னஞ்சல் மூலம் நிறைய போட்டிக்கான விடைகள் அனுப்பிவைத்தார்கள். வாசகர் வட்டத்தை சேர்ந்தவர்களும் அவர்களின் நண்பர்கள் மற்றும் வலைப்பதிவை படிப்பவர்களும் மற்றவர்களும் என சரியான விடையை 90 நபர்கள் மட்டுமே குறிப்பிட்டிருந்தனர், தமிழில் விடை எழுதியவர்கள்=30, ஆங்கிலத்தமிழில் எழுதியவர்கள்=20, ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=40, ஹிந்தி மொழியில்=07 நபர்களும், பிற மொழியில்=0 நபரும், மேலும் சிலர் எட்டுக்கும் அதிகமான தவறான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.
=============================================
==============================================
செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும். என்கிற திருக்குறளின் வழியில் ஒவ்வொரு மாதமும் திருமதி விஜயா ராகவன் அவர்கள் எழுதும் மூலிகை சமையல் பற்றிய தொடர்:-
இந்தமாதம் நாம் சாப்பிடும் உணவே மருந்தாகும் சில மூலிகை காய்கறிகளைப் பற்றி கூறுகிறேன்:-
2) இதயத்தை வலுப்படுத்த ""செம்பருத்திப் பூ"".
3) மூட்டு வலியை போக்கும் ""முடக்கத்தான் கீரை.""
4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் ""கற்பூரவல்லி"" (ஓமவல்லி).
5) நீரழிவு நோய் குணமாக்கும் ""அரைக்கீரை.""
6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும்
7) உடலை பொன்னிறமாக மாற்றும் ""பொன்னாங்கண்ணி கீரை.""
8) மாரடைப்பு நீங்கும் ""மாதுளம் பழம்.""
9) ரத்தத்தை சுத்தமாகும் ""அருகம்புல்.""
10) கான்சர் நோயை குணமாக்கும் "" சீதா பழம்.""
11) மூளை வலிமைக்கு ஓர் ""பப்பாளி பழம்.""
12) நீரிழிவு நோயை குணமாக்கும் "" முள்ளங்கி.""
13) வாயு தொல்லையிலிருந்து விடுபட ""வெந்தயக் கீரை.""
14) நீரிழிவு நோயை குணமாக்க "" வில்வம்.""
15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் ""துளசி.""
16) மார்பு சளி நீங்கும் ""சுண்டைக்காய்.""
17) சளி, ஆஸ்துமாவுக்கு ""ஆடாதொடை.""
18) ஞாபகசக்தியை கொடுக்கும் ""வல்லாரை கீரை.""
19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் ""பசலைக்கீரை.""
20) ரத்த சோகையை நீக்கும் "" பீட்ரூட்.""
21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்"" அன்னாசி பழம்.""
22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை)
23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.
24) மார்புசளி, இருமலை குணமாக்கும் ""தூதுவளை""
25) முகம் அழகுபெற ""திராட்சை பழம்.""
26) அஜீரணத்தை போக்கும் " புதினா."
27) மஞ்சள் காமாலை விரட்டும் “கீழாநெல்லி”
28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”.
என்ன சுட்டீஸ் நீங்களும் இதுபோன்ற மூலிகை காய்கறிகள் பற்றிய விவரங்களை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள் கண்டிப்பாக மற்றவரும் அறிந்துகொள்ளட்டும்.. செய்வீர்கள் அல்லவா?? மீண்டும் அடுத்தமாதம் வேறொரு மூலிகை சமையல் பற்றி பார்ப்போம்.
@அடுத்த மாதம் நமது சுட்டீஸ் மூலிகை சமையல் பகுதியில் "கண்டத்திப்பிலி" ரசம் செய்ய பழகலாம் வாங்க.
ஹலோ சுட்டீஸ் போன மாதம் "மணத்தக்காளி கீரை கூட்டு" எப்படி செய்வது என்று சொல்லித்தந்தேன் அல்லவா :-
இந்தமாதம் நாம் சாப்பிடும் உணவே மருந்தாகும் சில மூலிகை காய்கறிகளைப் பற்றி கூறுகிறேன்:-
1) என்றும் 16 வயது வாழ ஓர் "நெல்லிக்கனி."
2) இதயத்தை வலுப்படுத்த ""செம்பருத்திப் பூ"".
3) மூட்டு வலியை போக்கும் ""முடக்கத்தான் கீரை.""
4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் ""கற்பூரவல்லி"" (ஓமவல்லி).
5) நீரழிவு நோய் குணமாக்கும் ""அரைக்கீரை.""
6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும்
"மணத்தக்காளிகீரை"".
7) உடலை பொன்னிறமாக மாற்றும் ""பொன்னாங்கண்ணி கீரை.""
8) மாரடைப்பு நீங்கும் ""மாதுளம் பழம்.""
9) ரத்தத்தை சுத்தமாகும் ""அருகம்புல்.""
10) கான்சர் நோயை குணமாக்கும் "" சீதா பழம்.""
11) மூளை வலிமைக்கு ஓர் ""பப்பாளி பழம்.""
12) நீரிழிவு நோயை குணமாக்கும் "" முள்ளங்கி.""
13) வாயு தொல்லையிலிருந்து விடுபட ""வெந்தயக் கீரை.""
14) நீரிழிவு நோயை குணமாக்க "" வில்வம்.""
15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் ""துளசி.""
16) மார்பு சளி நீங்கும் ""சுண்டைக்காய்.""
17) சளி, ஆஸ்துமாவுக்கு ""ஆடாதொடை.""
18) ஞாபகசக்தியை கொடுக்கும் ""வல்லாரை கீரை.""
19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் ""பசலைக்கீரை.""
20) ரத்த சோகையை நீக்கும் "" பீட்ரூட்.""
21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்"" அன்னாசி பழம்.""
22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை)
23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.
24) மார்புசளி, இருமலை குணமாக்கும் ""தூதுவளை""
25) முகம் அழகுபெற ""திராட்சை பழம்.""
26) அஜீரணத்தை போக்கும் " புதினா."
27) மஞ்சள் காமாலை விரட்டும் “கீழாநெல்லி”
28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”.
@அடுத்த மாதம் நமது சுட்டீஸ் மூலிகை சமையல் பகுதியில் "கண்டத்திப்பிலி" ரசம் செய்ய பழகலாம் வாங்க.
நன்றி வணக்கம்
விஜயா ராகவன் - வைஷாலி.
விஜயா ராகவன் - வைஷாலி.
======================================
திருமதி விசாலம் மாமி (WHO-Delhi) அவர்களின் இந்திய பண்டிகைகள் பற்றிய தொடர்:-
நாரியல் பூர்ணிமா என்பது தான் மராட்டியி நாராலி பூர்ணிமா ஆனது ஹிந்தியில் நாரியல் என்றால் தேங்காய் கேரளாவின் ஓணம் தமிழர்களின் யக்ஞோபவீததாரணம் அதாவது ஆவணியாவட்டம் அத்துடன் வடநாட்டின் ராக்கித்திருநாள் பின் கடற்கரையோரம் வசிக்கும் மீனவர்களுக்கு இந்த நாரியல் பூர்ணிமா எல்லாம் அநேகமாக ஒரே நாளில் வரும் அதாவது ஆவணி மாத பௌர்ணமியில் ,,,,
மும்பய் தாதர் கடற்கரைப்பக்கமோ அல்லது சௌப்பாதி கடற்கரைபக்கமோ போனால் பல வண்ணங்களில் படகைப்பார்க்கலாம் நாம் மாட்டுப்பொங்கலுக்கு கொம்புகளில் வர்ணம் அடிப்பது போல் மீனவர்கள் படகுகளுக்கு வர்ணம் அடித்து அதற்கு மாலைகளால் அலங்காரமும் செய்திருப்பார்கள். எல்லா படகுகளும் புது மாப்பிள்ளைப்போல் மிளிரும் வடக்கில் உள்ள அதுவும் மேற்கு திசையில் இருக்கும் எல்லா மீனவர்களும் இதைக்கொண்டடுகின்றனர். தமிழ் நாட்டு மீனவர்கள் இதைக்கொண்டாடுகிறார்களா எனத்தெரியவில்லை.
மீனவர்களுக்கு கடலே கோயில் கடலரசனே தெய்வம் அவர்கள் வயிற்றை நிரப்புவது அந்தக்கடல்தான் கடலுக்குள் சென்று மீன் பிடித்தால்தான் ஜீவனம் அதுவும் மே மாதத்திலிருந்து சுமார் செப்டம்பர் வரை கடும் மழை நீடித்திருக்கும். தென் மேற்குப்பருவமழையின் காரணமாக மீனவர்கள் இந்த மாதங்களில் நித்ய கண்டம் பூரண ஆயுசு என்பதுபோல் மன உறுதியுடன் மீன் பிடிக்கப்போயாக வேண்டும். ஒவ்வொரு நாள் இயற்கையின் சீற்றத்தினால் போகாமலும் இருக்கும் சந்தர்ப்பங்களும் வரும் ஆகையால் இந்த ஆவணி மாதம் வர இனி கடும் மழை குறைந்து இனி தன் வியாபாரம் நன்றாக அமைய மீனவர்கள் கடல் தெய்வத்தை வேண்டிக்கொண்டு தினமும் கடல் தங்கள் வாழ்க்கைக்குப்படி அளப்பதால் அதற்கும் நன்றியை பூஜை செய்து தெரிவிப்பார்கள் அத்துடன் வருண பகவானுக்கும் பூஜை செய்வார்கள். பிரசாதம் நாரியல் அதாவது தேங்காய் சமபந்தப்பட்டே இருக்கும் தேங்காய் சாதம் தேங்காய் பர்பி என்று செய்து எல்லோருக்கும் வினியோகிப்பார்கள் தவிர பூஜை முடிந்தவுடன் மட்டைத்தேங்காயை கடலுக்கு சமர்ப்பிப்பார்கள் ஆஹா அருமையான காட்சி தான் அப்படியே அலைகளில் இரண்டு தடவைகள் மேலும் கீழுமாக வந்து பின் அலை அதை இழுத்துக்கொண்டுப்போய்விடும் ,ஒரு தேங்காயா இரண்டுத்தேங்காயா ! ஆயிரக்கணக்கில் தேங்காய் எல்லாம் எங்கே போகும் ?
இதேபோல் பிள்ளையார் சதுர்த்தி முடிந்த பததாம் நாள் எல்லா மண் பிள்லையார்களும் கடலில் விடப்படுவார்கள் இதே போல் பெங்காலிகள் துர்கைச்சிலைகளை நவராத்திரி முடிந்தவுடன் கடலில் வீசிவிடுவார்கள் . இந்தச்சிலைகள் மண்ணால் செய்ததால் கரைந்து போய்விடலாம் ஆனால் இத்தனை மட்டைத்தேங்காய் என்ன ஆகும் என்ற கேள்வி என்னுள் எழும் .ஒருவேளை கடற்பிராணிகள் தேங்காயை முழுங்கி விடலாம் என நினைக்கிறேன்.
இந்தத்திருநாளன்று மாலையில் பார்ட்டிதான் ,எல்லோரும் புதிய உடைகளுடன் மின்னுவார்கள். ஆண்கள் கட்டம் போட்ட லுங்கிகளை உடுப்பார்கள் முன் பக்கம் முக்கோணம் போல் இருக்கும் மீனவப் பெண்மணிகளின் புடவைக்கட்டு மிகப்பிரமாதமாக இருக்கும். அத்துடன் அவர்கள் தலைக்கொண்டையும் கொண்டையில் வேணி என்ற பூ அலங்காரமும் மிகவும் அழகாக இருக்கும் அந்த வேணியின் அருகில் மருதாணிபூக்கள் பெரியக்காம்புகளுடன் சொருகப்பட்டிருக்கும். ஒரு படத்தில் மாதுரி தீட்சித் மீனவப்பெண்மணியாக வருவார். நெற்றியில் கால் சந்திரன் போல் பச்சையில் பொட்டு வைத்திருப்பார் அவரைப்பார்த்தால் எனக்கு இந்தத்திருநாள் ஞாபகம் வரும் அவர்கள் நடனமும் மிக வேகமாக இருக்கும் . உடலில் நிறைய சக்தி இருந்தால் தான் இந்த நடனத்தை ஆடமுடியும்.
கடல் நீருக்கு என்றுமே நெகடிவ் என்ற வேண்டாத சக்தியை எடுக்கும் சக்தி உண்டு உப்பு கலந்த நீராயிற்றே! ஆடி அமாவாசை தை அமாவாசைப்போன்ற தினங்களில் சமுத்திர ஸ்னானம் செய்கிறார்கள் அத்துடன் கிரகணம் விட்டப்பின்னும் ஸ்னானம் செய்கிறார்கள் இந்த நெகடிவ் விஷயமும் சம்பந்தப்ப்ட்டத்தாக இருக்கலாமோ என்று எனக்குத் தோன்றுகிறது திருஷ்டி சுற்றிப்போடுவதிலும் இந்தக்கல்லுப்பு முக்கியப்பங்கு வகிக்கிறது.
சரி இப்போது தேங்காய்க்கு வருவோம் மீனவர்கள் தேங்காயை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும் தேங்காயை அனுபவிக்க முதலில் அதன் மட்டைகளைப்ப்பிய்க்க வேண்டும். பின் அதன் அழுத்தமான ஓட்டை உடைக்க வேண்டும் ,பின் தான் உள்ளே இருக்கும் கனியைப்பெறமுடியும் அதையும் அப்படியே தின்ன முடியாது .கீறல் போட்டோ அல்லது துருவியோ எடுக்க வேண்டும். மீனவர்கள் வாழ்க்கையும் காலையில் கடுமையான உழைப்பு இருக்க மாலையில் தான் அதன் பலன் கிடடக்கிறது இதை வெளிப்படுத்துகிறதோ இந்தத் தேங்காய்.
தேங்காய் நமக்கு வாழ்க்கை எடுத்த உத்தேசத்தைத்தெரிவிக்கிறது உள்ளே இருக்கும் இனிப்பான கடவுளைக் காண முதலில் ஆன்மீகப்பாதையில் கடுமையான உழைப்பும் பல போராட்டங்களும் சந்திக்க வேண்டும். மனம் தளராமால் அந்த ஓட்டை உடைத்து எறிய வேண்டும் பின் தெரிவார் அந்த முக்கண்ணன் நமக்கு. தேங்காயிலேயே மூன்று கண்கள் இருக்கின்றனவே !
இந்தியப்பண்டிகை பற்றிய விவரங்கள் மேலும் தொடரும்.
மீனவர்களுக்கு என் வாழ்த்துகள். நன்றி.
போட்டிகள் மற்றும் பரிசுகள் (Pottigal Matrum Parisugal)
சுட்டீஸ், நாங்கள் தொகுத்து வழங்கிய பதிவுகளில் உள்ள குறை நிறைகளை வாசகர்கள், அன்பான முறையில் எங்களுக்கு எடுத்துக்கூறி, எங்களது பதிவுகள் மேலும் சிறப்படைய வாழ்த்தி உற்சாகப்படுத்துமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ் தமிழ் ரோஜாக்கள்.
No comments:
Post a Comment