"தமிழ் ரோஜாக்களின் குல்கந்து"

"தமிழ் ரோஜாக்களின் குல்கந்து"

Wednesday, April 18, 2018

"சுட்டீஸ்-குல்கந்து" இதழ்=25 சித்திரை மாதம், தேதி-15-04-2018.

வைஷாலி வாசகர் வட்ட 50வது சந்திப்பு, 15-04-2018 (Apr-May)-சித்திரை மாதம்.

வருகை தாருங்கள், தமிழில் சிறுவர்கள் தொகுத்து வழங்கும் வலைப்பதிவர்களின் மாத இதழ், ஒவ்வொரு மாதமும் ஆங்கில மாதத்தின் 3/4-வது ஞாயிறுதோறும் (தமிழ் மாதத்தின் முதல் ஞாயிறு அன்று) இரவு 9 மணியளவில் வெளியாகும் சுட்டீஸ் ரோஜாக்களின் "குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழ்.   http://gulkanthu.blogspot.in/


 

கற்க கசடற….!!                                       !வாய்மையே வெல்லும்!!


 “வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம்
160/Sector-4, Vaishali, Ghaziabad, NCR-New Delhi.-201012
e-mail:  vaishalireaderscircle@gmail.com
___________________________________________________________________
"சுட்டீஸ்-குல்கந்து" இதழ்=25 சித்திரை மாதம், தேதி-15-04-2018.  "வாழ்க்கைக்கு அவசியமான புள்ளியியலும், கைத்தொழிலும், கைவேலைப்பாடுகளும்-சிறப்பு பயிற்சி கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும். 

வணக்கம், தாங்களின் வருகைக்கு நன்றி, இந்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழில்" -சித்திரை மாத வலைப்பதிவு:- இந்த இதழின் ஆசிரியராக, தொகுத்து வழங்குபவர்:- (Editor of the Page) வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ் குழுவினர்கள் இடம் செக்டர்-4, மையப்பூங்கா(Central Park), வைைஷாலி மெட்ரோ இரயில் நிலையம்  அருகில், NCR-New Delhi.


"சுட்டீஸ்-குல்கந்து" இதழ்=25 சித்திரை மாதம், தேதி18-04-2018. "வாழ்க்கைக்கு அவசியமான புள்ளியியலும், கைத்தொழிலும், கைவேலைப்பாடுகளும்-சிறப்பு பயிற்சி. அடுத்து வரும் மே மாதம்-2018 தேதி 20-05-2018 வைகாசி மாத வலைப்பதிவு இதழின் ஆசிரியராக, (Editor of the page) இந்த வலைப்பக்கத்தை தொகுத்து வழங்க ஆவலுடன் காத்திருப்பவர் யார்? விருப்பம் உள்ளவர்  உங்கள் விருப்பத்தை உடனே தெரியப்படுத்துங்கள். மின்அஞ்சல் முகவரி  
"vaishalireaderscircle@gmail.com"

வைஷாலி வாசகர் வட்டம் 50வது சந்திப்பு "சித்திரை மாதம்" 15-04-2018 ஆங்கில மாதத்தின் 3வது ஞாயிறு அன்று வழக்கமான நேரம் மற்றும் இடத்தில் விழிப்புணர்வு பயிற்சி மாத "வாழ்க்கைக்கு அவசியமான புள்ளியியலும், கைத்தொழிலும், கைவேலைப்பாடுகளும்-சிறப்பு பயிற்சி". ஞயிறு அன்றய மாலைநேர பயிற்சி கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும் ....  மாலை 4.00pm மணியிலிருந்து, வழக்கமான இடம்:- வைஷாலி செக்டர்-4, மையப்பூங்கா, வைஷாலி மெட்ரோ ரயில்நிலையம் அருகில், NCR-New Delhi. 

வைஷாலி வாசகர் வட்ட 50வது சந்திப்பு, நமது சுட்டீஸ் உறுப்பினர்கள் ஆர்வமோடு போட்டி போட்டுக்கொண்டு தினமும் அவர்களின் கைவண்ணத்தில் உருவான பொருட்களை அவர்களது முகநூல், வாட்சப், டுவிட்டர், வலைப்பதிவு பக்கங்களில் காட்சிப்படுத்தி அசத்துவதிலிருந்து, அவர்களின் பலருக்கும் பலவிதமான கைவேலைப்பாடு திறமைகள் இருக்கிறது என்பது தெரியவருகிறது. 

@ தொடர்ந்து பொருட்களில் வண்ணம் தீட்டுதல், ஓவியம் வரைதல் போன்ற திறமைகளையும். ஐஸ் குச்சிகளில் பொருட்கள், தேங்காய் மூடியில் பொருட்கள், காகிதக் கூழ் பொம்மைகள், மெழுகு பொம்மைகள், களிமண் விளையாட்டு சொப்புக்கள், மண்தொட்டி தாவரங்கள் செய்தல்... 

@ காகிதத்தில் கைவேலைப்பாடுகளுடன் பலவித போட்ருட்கள் செய்தல் திறமைகளையும்.

@ திருமதி சுகந்தி பாலா அவர்கள் அவரின் குருவான திருமதி செல்லம் மாமி அவர்களின் கலைக்குழுவில் விதவிதமான கோலாட்டம், தாண்டியா நடனம், கும்மியாட்டம், கிராமிய நாட்டியம், பாரம்பரிய முறையில் பாடல்களை பாடி சிறப்பான கோலாட்டக்கலையை சிறப்புசெய்துகொண்டிருக்கிறார்கள். அவைகளை நமது சுட்டீஸ் சிறுவர்களுக்கு சொல்லித்தர முன்வந்திருப்பது பாராட்டுதற்குரியது.

@ எனக்கு தையல் வேலைப்பாடுகள், மற்றும் துணிகளில் வாட்டர் பெயிண்டிங், சமிக்கு வேலைப்பாடுகள் கொஞ்சம் தெரியும் அதை உங்களுடன் பகிர்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் என்று திருமதி ஆர்த்தி கிருஷ்ணன் சொன்னதோடு சுட்டீஸ்களுக்கு கற்றுக்தரும் இலவச வகுப்புகளையும் ஆரம்பித்து நடத்திவருகிறார்.
@ திருமதி அன்னம்மா சங்கரன் அவர்கள் சுட்டீஸ்களுக்கு பூக்களை வாழைநாரில் நெருக்கமாக அடர்த்தியாக, அழகாக பூ கட்டுவது எப்படி என்று சொல்லித்தருகிறார்கள்.

@ திருமதி நாமகிரி சந்திரசேகரன் அவர்கள், வீட்டை அலங்கரிக்கும் தோரணங்கள், மற்றும் பிளாஸ்டிக் ஒயர் கூடைகள், பிளாஸ்டிக் மணி பொருட்கள் செய்வது குறித்து சொல்லித்தருகிறார்கள்.

@ திருமதி விஜயா ராகவன் அவர்கள் சம்பிரதாய (அரக்கு) காவி மற்றும் அரிசிமாவு இழை கோலங்கள் மற்றும் புள்ளிவைத்த கோலங்கள், வண்ண வண்ண ரங்கோலி கோலங்கள் போடுவதை சுட்டீஸ்களுக்கு சொல்லித்தர தயாராக இருக்கிறார்.

18-04-2018 அன்றய நமது 50-வது வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில்:- ,
"ஒவ்வொரு மதமும் ஒரு விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை வகுப்புகள். என இந்த வருடம் முழுவதும் கற்றுக்கொள்வோம், தெரிந்துகொள்வோம் பயிற்சிப் பட்டறை மாதங்களின் வருடமாக, நமது வைஷாலி வாசகர் வட்டத்தின், ஒவ்வொரு மாதமும், ஆங்கில மதத்தின் 3/4வது ஞாயிறு அன்றைய வாசகர் வட்ட சந்திப்பில், ஒவ்வொரு மதமும் ஒரு விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை வகுப்புகள்... பயிற்சி மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும், மற்றும் கதைகள், கட்டுரைகள், பயிற்சிப்பட்டறை சார்ந்த போட்டிகளும் பரிசுகளும்  என இந்தமாத இதழில் பல விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.   

மேலும் இந்த மாத சுட்டீஸ்களின் ஏராளமான செய்திகளை மிகவும் பயனுள்ள வகையில் நமது வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ் "குல்கந்து" குழுவினர்கள் தொகுத்து தந்திருக்கிறார்கள்....

சுட்டீஸ் அவர்கள் தொகுத்துத் தந்த பல செய்திகளை ஒன்று சேர்த்து, அனைத்தையும் அழகாக கோர்த்து, ஒரு கதம்ப மாலையாக தொடுத்து தந்திருக்கிறார்கள். இந்த மாத வலைப்பதிவு இதழின் அனைத்து விவரங்களும்  உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம்.... 



==============================

@சுட்டீஸ்களின்  கைவண்ணமும், கால்வண்ணமும்:-


@கதை மற்றும் பாட்டுப் போட்டிக்கு தயாராகிக் கொண்டிருக்கும் :- சுட்டீஸ் மிருதுளா சாயி கிருஷ்ணன்,  வைஷ்ணவி பரமேஸ்வரன், சுட்டீஸ் கிருத்திகா ராஜேந்திரன் மற்றும் கீர்த்தனா ராஜேந்திரன் ஆகியோர் தொடர்ந்து பல கதைகளை கூறி பயிற்சிமேற்கொண்டுவருகிறார்கள் அத்துடன் பாடல்களும் பாடி தங்களது பாடும் திறமையை மெருகேற்றிக்கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு நமது வைஷாலி வாசகர் வட்டத்தின் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

@ நடனம் ஆடுவதில் சுட்டீஸ் துர்கா சக்திராஜ், சுட்டீஸ் கிருத்திகா ராஜேந்திரன் மற்றும் கீர்த்தனா ராஜேந்திரன் ஆகியோர் தொடர்ந்து பல நாட்டிய நிகழ்ச்சிகளில் தமது நாட்டிய திறமைகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கும் நமது வைஷாலி வாசகர் வட்டத்தின் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

@கைவினைப்பொருட்கள்:- சுட்டீஸ் அரவிந்த் மகாலிங்கம், மிருதுளாசாயி கிருஷ்ணன், துர்கா சக்திராஜ், S.ஆதித்யா வாசு, மற்றும் சில சுட்டீஸ்கள் அனைவரும் தொடர்ந்து பல கைத்தொழில்/ கைவினைப்பொருட்கள் என பல கை வேலைப்பாடுகள் கொண்ட பொருட்களை செய்து தங்களது திறனை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கும் நமது வைஷாலி வாசகர் வட்டத்தின் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

@ ஓவியம் வரைவதிலும், கதை, கட்டுரை, கவிதை என பல சுட்டீஸ்கள் தங்களது திறமையை ஒவ்வொரு மாதமும் வாசகர் வட்ட நிகழ்ச்சியில் தமது திறமைகளை காட்சிப்படுத்துகிறார்கள். அவர்களுக்கும் நமது வைஷாலி வாசகர் வட்டத்தின் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

@பலவித போட்டிகளில் கலந்துகொள்ளும் சுட்டீஸ்கள்:- தொடர்ந்து சுட்டீஸ்கள், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியிலும்,  புதிர் போட்டியிலும், கதைப்போட்டியிலும், பாடல், நடன, போட்டியிலும் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கும் நமது வைஷாலி வாசகர் வட்டத்தின் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.  

==============================


வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :- 

முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து, 

தொடர்ந்து எங்க வீட்டு "நூலகம் " 

படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும் 

(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம் / செல்லப் பிராணிகள் வளர்ப்போம் )


==============

அன்றய வாசகர் வட்ட 50வது  சந்திப்பு சுட்டீஸ் நிகழ்ச்சியில் "வாழ்க்கைக்கு அவசியமான புள்ளியியலும், கைத்தொழிலும், கைவேலைப்பாடுகளும் என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சி கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடந்தேறியது. குல்கந்து சுட்டீஸ்கள் அவர்களின் கைவேலைப்பாடுகள் திறமைகளை  அனைவருக்கும் அழகாக எடுத்துக்கூறியதோடு அவற்றை காட்சிப்படுத்தினார்கள்.  



மேலும் கைவேலைப்பாடுகள் குறித்த அனைவரது பயிற்சிகளும், சுட்டீஸ் சிறுவர்கள் அனைவருக்கும் எளிமையாக புரியுமாறு விளக்கமாக எடுத்துக்கூறியது அனைவருக்கும் மிகவும் பயனுள்ள பயிற்சியாக நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினார். மேலும் சுட்டீஸ்களின் கதை கட்டுரை பாட்டு மற்றும் சுட்டீஸ் குழுவினர்களின் போட்டிகளும் பரிசுகளும்.. என நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது இன்றய 15-04-2018 நிகழ்ச்சியில் உதவிய அனைவரையும் பாராட்டி, நிகழ்ச்சி இனிதாக நிறைவுபெற்றது.


@இந்தமாத பயிற்சி சார்ந்த சுட்டீஸ் குட்டி கல்கண்டு தகவல்கள்:-


========================

@இந்த மாதம் நமது வாசகர்வட்டத்தின் தமிழ் வகுப்புக்கு புதியவர்கள்:-
@10-பத்துபேர்கள் கொண்ட முதல் குழு தமிழை முழுமையாக எழுத படிக்க தெரிந்துகொண்டதோடு தமிழக அரசின் அடிப்படை தமிழ் தேர்வினை எழுத தயாராக இருக்கிறார்கள் 

@மேலும் 9-ஒன்பது புதியவர்கள் தமிழ் எழுத படிக்க கற்றுவருகிறார்கள்.


@இந்த மாதம் மேலும் மூன்று மாணவர்கள் புதியதாக தமிழி கற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்கள் விரைவில் அவர்களும் தமிழி வகுப்பில் சேர இருக்கிறார்கள்.
======================================

@ சுட்டீஸ் கதைகள்:-
திருமதி நாமகிரி சந்திரசேகர் எழுதிய சிறுவர் கதைப்பகுதியில்:-
ஹலோ சுட்டீஸ் இந்தமாத கதைகள் பகுதியில் :-சிறந்த புத்தியும் திறமையும் இருந்தால் பிழைத்துக்கொள்ளலாம் " என்கிற தலைப்பில் ஒரு கதையை கேட்ப்போமா??? 
ஒரு ஊர்ல சைமன் என்ற குட்டிப் பையன் இருந்தான். ஊருக்கு கடைசி யிலதான் அவங்க வீடு. காட்டுக்குள்ளே போய்... பழங்கள், விறகு, ஏதாவது விலங்குனு கொண்டு வர்றதுதான் அவங்க அப்பாவோட வேலை. ஒரு தடவை காட்டுக்குப் போனவர், ஒரு வாரம் ஆகியும் வீடு திரும்பல. சைமனோட அம்மாவுக்கு கவலையாயிடுச்சு. ''நீதான் கண்டுபிடிக்கணும். தைரியமா காட்டுக்குள்ள போய் அப்பாவைத் தேடு!''னு சொல்லி மதியம் சாப்பாட்டுக்கு கட்டுச்சாதம் கொடுத்து அனுப்பி னாங்க.  'அப்பாவோட வர்றேன்!’னு கிளம்பினான் சைமன்.

கொஞ்ச தூரம் போனதுமே... டயர்டா feel  பண்ணினவன், சாப்பிடலாம்னு சாதக்கட்டைப் பிரிச்சா... அவன் முன்ன வந்து நிக்குது பெரிய கொரில்லா. ''ஆஹா... சூப்பர் வாசனையா இருக்கே. எனக்கும் கொடுக்கறியா..?''னு அது கேட்க, உடனே கொடுத்துட்டான் சைமன்.

(''நீங்கள்லாம் உங்ககிட்ட இருக்கறதக் கேட்டா கொடுப்பீங்களா குட்டீஸ்?'’
''ம்... சாதமா இருந்தா கொடுப்போம். சாக்லேட்னா... கொஞ்சம் யோசிப்போம்... ஹாஹாஹா!’')

சாப்பிட்டதும், அவனோட கதையக் கேட்ட கொரில்லா, ''இந்தக் காடு நாலு பகுதியா இருக்கு. நீ இப்பத்தான் முதல் பகுதியில இருக்கே. உன்ன தூக்கிட்டுப் போய் ரெண்டாவது பகுதியில விடறேன்''னு சொல்லி, அப்படியே செஞ்சுது.

அந்தக் காட்டுக்கு நடுவுல அழகான குட்டி வீடு. மெதுவா உள்ளே போய் பார்த்தா... சாக்லேட் வீடு. ரொம்ப tempting ஆயிடுச்சு சைமனுக்கு. கார் மாதிரி இருந்த சாக்லேட்டை ஆசையா தொட்டதும்... வீடு முழுக்க ரெட் லைட் blink ஆக... பயந்து ஓட ஆரம்பிச்சான். ஆனா, கதவு மூடிக்கிச்சு. ''மாட்டிக்கிட்டியா..? இன்னிக்கு நீதான் எனக்கு lunch!''னு சொல்லிட்டே ஓடி வந்துச்சு ஒரு பேய்க்கிழவி. இவன் பயந்து ஓட, அது துரத்த... ஒரு candle light கிழவி மேல விழுந்து,  dress fireஆயிடுச்சு. சைமன் ஓடி வந்து தண்ணி ஊத்தி, போர்வையைப் போட்டு கிழவிய காப்பாத்தினான். ''உன்னைக் கொல்ல வந்த என்னையவே காப் பாத்திட்ட! உனக்கு நான் help பண்றேன்!''னு சொல்லி அவன் கதையக் கேட்டுச்சு பேய்க் கிழவி.

மாயக்கண்ணாடியில பார்த்தப்ப... சைமனோட அப்பா, பெரிய பூதத்துக்கிட்ட சிக்கிஇருக்கறது தெரிஞ்சுது. காட்டோட கடைசியில, அதாவது நாலாவது பகுதியில அவரை அடைச்சு வெச்சிருக்குது பூதம். பார்த்ததுமே சைமன் அழ ஆரம்பிச்சிட் டான். ''கவலைப்படாத.. காப்பாத்திடலாம்!''னு சொன்ன பேய்க்கிழவி, ஒரு invisible தைலத்தைக் கொடுத்து, ''இதுல ஒரு சொட்டு தேய்ச்சுக்கிட்டா, யார் கண்ணுக்கும் நீ தெரியமாட்டே!''னு சொல்லி, காட்டோட மூணாவது பகுதியில விட்டுச்சு.

அந்தக் காட்டுக்குள்ள பெரிய பாம்பு ஒண்ணு, செடி - கொடிக்குள்ள சிக்கிக்கிட்டு அழுதுட்டு இருந்துச்சு. அத எப்படி காப்பாத்தறதுனு அவ னுக்கு தெரியல. அப்ப பாம்பு, ''இன்னும் கொஞ்சம் நீ உள்ள போனா... பெரிய காதுள்ள யானை இருக்கும். அத கூட்டிட்டு வந்தா காப்பாத்தி டும்!''னு சொல்லிச்சு. அப்படியே யானையைக் கூப்பிட்டு வந்து பாம்பைக் காப்பாத்திட்டான். யானையும், பாம்பும் சைமனோட கதையக் கேட்டு பரிதாபப்பட்டு, ''நாங்களும் help பண்றோம்!''னு சொன்னாங்க. கூடவே, அபூர்வ மூலிகையை கிஃப்ட்டா கொடுத்துச்சு பாம்பு.

அது என்ன தெரியுமா?! அதை நல்லா கசக்கி மூக்கில வெச்சா, மயக்கம் போட்டுருவாங்க. மறுபடி எழுந்திரிக்க ஒருநாள் ஆகும். ஸோ, invisible தைலம், மூலிகை, பெரிய பாம்பு, யானை... இதுங்களோட நாலாவது பகுதிக்குப் போனான் சைமன். வழியில இருந்த ஒரு பெரிய பள்ளத்துக்குள்ள யானை, சைமன், பாம்பு மூணு பேரும் விழுந்துட்டாங்க. சத்தம் கேட்டு  பூதம் கிளம்பி வர, உடனே மூணு பேரும் invisible தைலத்தை பூசிக்கிட்டாங்க. பூதம் வந்து பாத்துட்டு, ''யாருமில்லையே’'னு குழப்பமா திரும்பி நடந்துச்சு. மேலே வந்த சைமனும், பாம்பும் பின்னாடியே போய், பூதத்தோட இடத்தைக் கண்டுபிடிச்சாங்க. அப்ப, ''நீ போய் பூதத்தோட கை ரெண்டையும் இறுக்கி சுத்திடணும். அப்ப நான் போய் பூதத்தோட மூக்குல மூலிகை இலையத் தேய்ச்சிடறேன்!''னு சொன்னான் சைமன். good idea னு ரெண்டு பேரும் சூப்பரா அதை முடிக்கறப்பவே யானையும் வெளியில வந்து, மயங்கிக் கிடந்த பூதத்த இழுத்து பள்ளத்துல போட்டுச்சு.

அங்க இருந்த சிறையில சைமனோட அப்பா மட்டுமில்லாம... பக்கத்து நாட்டு ராஜா, இளவரசர், மந்திரிகள்னு நிறையபேர் இருந்தாங்க. எல்லாருமே 'விடுதலை ஆயிட்டோம்'னு சந் தோஷப்பட்டாலும், பூதத்த கொல்லாம வெளியில போகமுடியாதே! சிறைக்குள்ள இருந்த வயசான பெரியவர்... ''பூதத் தோட உயிர், அந்த குளத்துக்குள்ள இருக்கிற பெரிய தாமரை பூவுல இருக்கற, பெரிய வண்டுகிட்ட இருக்கு. அதைப் பிடிச்சு கொன்னா தான் பூதமும் சாகும்!''னு ஐடியா கொடுத்தார். உடனே, யானை குளத்துக்குள்ளே இருக்கற தாமரை செடி எல்லாத்தையும் இழுத்துச்சு. பெரிய தாமரைப்பூகிட்ட வந்தவுடன் பாம்பு குளத்துக்குள்ளே போய் பூவில இருக்கிற பெரிய வண்டை எடுத்திட்டு வந்து சைமன்கிட்ட கொடுக்கறப்ப, பூதம் ரொம்ப ஆக்ரோஷமா ஓடி வந்துச்சு. எல்லோரும் பயந்து கூச்சல் போட்டு அலறி ஓடினாங்க. அப்ப யானை சட்டுனு அந்த வண்டை வாங்கி, கால்ல போட்டு மிதிச்சவுடன் 'ஆஆஆ..!’னு காடே அதிரும்படி  கத்திக்கிட்டே கீழே விழுந்து செத்துடுச்சு பூதம்.

வீரசாகசம் செய்து எல்லாரையும் காப்பாத்தின சைமனுக்கு, பக்கத்து நாட்டு ராஜா நிறைய பொன், பொருள் எல்லாம் கொடுத்து பாராட்டினாரு. நாட்டு மக்களும் நிறைய வெகுமதிகள் கொடுத்தாங்க. இதை எல்லாம் வெச்சுக்கிட்டு சைமன் அப்பா, அம்மாவோடு சந்தோஷமா வாழ்ந்தான்.

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமோ... இப்பவும் இப்படி வீரச்செயல் புரியும் சின்னப் பிள்ளைங்களுக்கு நம் இந்திய அரசு award கொடுக்குது. இந்த வருஷம் மொத்தம் 24 சிறுவர்கள் அந்த விருதை வாங்கினாங்க. அதுல பாய்ஸ் 16 பேர், கேர்ள்ஸ் 8 பேர்.

இந்த வருஷம் ‘Geetha chopra award’வாங்கின பொண்ணு பேர் மிட்டல் பட்டடியா. 12 வயசுப் பொண்ணு. இவங்க வீட்டுல திடீர்னு புகுந்த மூணு பேர், இவங்க அம்மாகிட்ட பணம் கேட்டு அடிக்க... அவங்க கத்தியால குத்தினபோதும், கதவை திறந்து கத்த ஆரம்பிச்சா மிட்டல் பட்டடியா. அக்கம்பக்கம் இருக்கிறவங்க வந்து காப்பாத்திட்டாங்க. இப்போ அவங்க ஊரில அவதான் ஜான்ஸி ராணி!

இப்படி தன் உயிரைப் பணயம் வெச்சு மற்றவங் களுக்கு உதவி செய்யுற சிறுவர்களோட சாகசங்கள் தான் bravery award க்கு தேர்ந்தெடுக்கப்படுது.

நாமளும் எப்பவும் தைரியமா இருக்கணும். இனிமே இடி, இருட்டு, கரப்பான்பூச்சி, 'காஞ்சனா’ வுக்கு எல்லாம் பயப்படுவீங்களா குட்டீஸ்..?!

- இன்னொரு கதை..? அடுத்தமாதம் சொல்றேன் !

நன்றி ஆனந்த விகடன் "கதை கேளு கதை கேளு" 
மீண்டும் அடுத்த மாத கதைப்பகுதியில் சந்திக்கலாம் 
நன்றிகளுடன் திருமதி நாமகிரி சந்திரசேகரன்- வைஷாலி.

==========================================

@விளம்பரம்:- "இந்தப்பகுதியை உங்களுக்கு வழங்குபவர்கள்":-  

@விளம்பரம்:- "இந்தப்பகுதியை உங்களுக்கு வழங்குபவர்கள்":-  

====================================
"மனோன்மணீயம்" நமக்களித்த "தமிழ் தாய் வாழ்த்து":-
"நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்,

சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்,

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற,

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் 
தமிழணங்கே!  தமிழணங்கே! .....

உன் சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து 
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!"

இந்த வாழ்த்துப்பாடலை இயற்றியவர் திரு.பெ. சுந்தரம் பிள்ளை (அவர் வாழ்ந்த காலம் "ஏப்ரல் 4, 1855 - ஏப்ரல் 26, 1897") 

அவர் எழுதிய "மனோன்மணீயம்" என்ற புகழ்பெற்ற நாடக நூலில் இடம்பெற்றிருக்கும் தமிழ் தாய் வாழ்த்துப்பாடல் இது. 

இந்த மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த என்று ஆரம்பமாகும் பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது.

தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலின் கருத்து:- 
அலை கடலே ஆடையான இந்த அழகான பூமிப் பெண்ணிற்கு, பாரத நாடே முகமாம், தென்திசை அதன் நெற்றியாம், அதில் திலகமென திகழ்வது திராவிட திருநாடாம், அந்தத் திலகத்தின் வாசனைப் போல்அனைத்து உலகமும் இன்பம் காண எல்லா திசையிலும் புகழ் மணக்க இருக்கும் தெய்வமகள் ஆகிய தமிழே, என்றென்றும் இளமையாக இருக்கிற உன்னுடைய இந்த அழகைக் கண்டு வியந்து, செய்யும் செயலையும் மறந்து, வாழ்த்துகிறோம்! வாழ்த்துகிறோம்! வாழ்த்துகிறோம்!.....
நன்றிகளுடன் "வைஷாலி வாசகர் வட்டம்". 
==========================
==================================
@. புதிய எட்டு வித்தியாச புதிர் போட்டி :- சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்".....சித்திரை-மாத-படத்தில் உள்ள (8) எட்டு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் -வலைப்பதிவு இதழ் போட்டி என்-25.


சரியான விடை அடுத்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" http://gulkanthu.blogspot.in/வலைப்பதிவர் இதழில் வெளியாகும். 

போட்டியில் பங்குகொள்ள விருப்பமுடையவர்கள் விடைகளை "vaishalireaderscircle@gmail.com" என்கிற மினஞ்சல் முகவரிக்கு 15-05-2018 முன்பாக அனுப்பிவைக்கவேண்டும். சரியான விடை எழுதிய அனைவருக்கும் அடுத்தமாத வாசகர் வட்ட சந்திப்பில் பரிசுகள் வழங்கப்படும்.

சென்ற மாத "சுட்டீஸ் குல்கந்து" வலைப்பதிவர் இதழ்-24 பங்குனி-மாத-படத்தில் உள்ள (8) எட்டு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் -வலைப்பதிவு இதழ் போட்டி என்-24.போட்டிக்கான  சரியான  விடை,

போட்டி என்-23.விடை:-1).இடம்வலமாக படம் திரும்பியுள்ளது, 2)SAFETY FIRST என்பது மாறியுள்ளது, 3)சாலை நிறுத்த பலகையின் மேலே வட்ட துளை, 4).சாலை நிறுத்த பலகையின் கால்கள், 5) சாலை நிறுத்த கூம்பு குப்பியில் முனை 6) தலைக்கவசத்தில் வெள்ளை நிற வட்டம், 7)சாலை நிறுத்த பலகையின் வரிகோடுகள், 8)பாதுகாப்பு சட்டையில் வண்ணம்.

சென்ற மாத எட்டு-வித்தியாசங்கள் வலைப்பதிவர் இதழ்-24 போட்டிக்கான சரியான விடையை 87 நபர்கள்/போட்டியாளர்கள் எழுதி போட்டியில் கலந்துகொண்டனர். வாட்ஸ் ஆப், முகநூல், மற்றும் குறுஞ்செய்தி, தொலைப்பேசி மேலும் மின்னஞ்சல் மூலம் நிறைய போட்டிக்கான விடைகள் அனுப்பிவைத்தார்கள் வாசகர் வட்டத்தை சேர்ந்தவர்களும் அவர்களின் நண்பர்கள் மற்றும் வலைப்பதிவை படிப்பவர்களும் மற்றவர்களும் என சரியான விடையை 37 நபர்கள் மட்டுமே குறிப்பிட்டிருந்தனர், (குறிப்பு- வித்தியாசம் 7 மற்றும் 8 ஆகிய வித்தியாசங்களை சரியாக குறிப்பிடாமல் தவறாக எழுதியிருந்தார்கள்) தமிழில் விடை எழுதியவர்கள்=06, ஆங்கிலத் தமிழில் எழுதியவர்கள்=18, ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=13, ஹிந்தி மொழியில்=0 நபர்களும், பிற மொழியில்(Kerala)=0 நபரும், 43-மேற்பட்ட மேலும் சிலர் எட்டுக்கும் அதிகமான தவறான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.
=============================================

@விளம்பரம்:- "இந்தப்பகுதியை உங்களுக்கு வழங்குபவர்கள்":-  

==============================================

செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும். என்கிற திருக்குறளின் வழியில் ஒவ்வொரு மாதமும் திருமதி விஜயா ராகவன் அவர்கள் எழுதும் மூலிகை சமையல் பற்றிய தொடர்:-


ஹலோ சுட்டீஸ் போன மாதம் "கண்டத்திப்பிலி" ரசம் செய்ய"தெரிந்துகொண்டோம் அல்லவா":-

இந்தமாதம் சுட்டீஸ் மூலிகை சமையல் பகுதியில் "முருங்கைக் கீரை ரசம் " செய்ய பழகலாம் வாங்க.:-

முருங்கைக் கீரை ரசம்:-

தேவையானவை: முருங்கைக் கீரை (ஆய்ந்தது) – கால் கப், எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், தக்காளி – ஒன்று, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, உப்பு – தேவைக்கேற்ப.

அரைத்துக்கொள்ள: வெந்தயம், சீரகம் – தலா அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று, பூண்டு – 2 பல், கறிவேப்பிலை – ஒரு டேபிள்ஸ்பூன், தனியா – ஒரு டீஸ்பூன்.

தாளிக்க: கடுகு – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – ஒன்று, கட்டிப் பெருங்காயம் – சிறிதளவு.


செய்முறை: கீரையுடன் அரை கப் நீர் விட்டு வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை, சிறிதளவு நீர் விட்டு கொரகொரப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களைப் போட்டு வறுத்து, அரைத்த விழுது, நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியதும் முருங்கைக் கீரையை வேகவைத்த நீருடன் சேர்த்து கொதிக்கவிடவும் (தண்ணீர் அளவு போதவில்லை என்றால், சேர்த்துக்கொள்ளலாம்). இறக்கும்போது எலுமிச்சைச் சாறு பிழிந்து இறக்கவும்.


நன்றி வணக்கம்
திருமதி விஜயா ராகவன் - வைஷாலி. 
======================================
@ கதை கதையாம் காரணமாம்-போட்டி எண் 5:- கதையைக் கேட்டு,/படத்தை பார்த்து இறுதியில் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் சொல்லி பரிசுகளை வெல்லுங்கள்.

இந்த மாத "கதை கதையாம் காரணமாம்" சிறுகதைகள்/கட்டுரைகள்  போட்டி பகுதியில் :- படத்தை பார்த்து தகுந்த காரணத்தைக் கூறு????

ஹலோ சுட்டீஸ் உங்களுக்கு ஒரு தமிழ் கட்டுரை போட்டி எண்-25. சிறப்பாக எழுதி வெற்றிபெறுபவர்களுக்கு சிறப்பு பரிசு உண்டு.  

மேலே உள்ள படத்தை பாருங்கள். சிக்கனம், சேமிப்பு  என்று கூறும்போது ஏன் பன்றியின் உருவ பொம்மை அல்லது படம், அல்லது பன்றியின் உருவ உண்டியல் பொம்மைகள் குறிப்பிடப்படுகிறது? இதற்க்கு என்ன காரணம். அழகாக நகைச்சுவையாகவும் சிறப்பான விவரங்களோடு 10-15 வரிகளுக்கு மிகாமல் ஒரு கட்டுரை எழுதி அனுப்புங்கள். சிறந்த கட்டுரை 15-04-2018 சித்திரை மாத சுட்டீஸ் "குல்கந்து" இதழில் இடம்பெறும். கட்டுரைகளை 15-04-2018 முன்பாக வைஷாலி வாசகர் வட்டத்தின் "vaishalireaderscircle@gmail.com" மின்னஞ்சல் முகவரியில் அனுப்பவேண்டும். போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் 15-04-2018 3-வது ஞாயிறு அன்றய நமது 50-வது வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பு நிகழ்ச்சியில் வழங்கப்படும்.  

முதலாவது போட்டி :- வைஷாலி வாசகர் வட்டத்தின்... சரியான விடைகளைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்... போட்டி என்-24 பங்குனி மாதம், சுட்டீஸ் குல்கந்து இதழ்-25 தேதி 18-04-2018.

படத்தை பார்த்து தகுந்த காரணத்தைக் கூறு????சிக்கனத்திற்கும் சேமிப்பிற்கும் ஏன் பன்றியின் உருவம் ஒப்பிடப்படுகிறது.

குழந்தைகள் அவர்களது சேமிப்பிற்காக கடைகளில் கிடைக்கும் மண் பொம்மை உண்டியல் மற்றும் பிளாஸ்டிக், தகரங்களில் செய்யப்பட்ட பன்றியின் உருவத்திலமைந்த உண்டியல் பொம்மைகள் செய்யப்படுகிறது. 

இதற்க்கு முக்கிய காரணம் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தில் மண்பாண்டங்கள் செய்ய பிஃக் என்னும் களிமண் பயன்படுத்தப்பட்டதாக பண்டைய வரலாறு தெரிவிக்கிறது. அதுமட்டுமல்லாது இறைச்சிக்காக வெள்ளைப் பன்றிகள் அதிகம் வளர்க்கப்பட்ட காலம்.  இங்கிலாந்து ஆங்கில மொழியை தாய்மொழியாக கொண்ட நாடு என்பதால் நாளடைவில் பிஃக் என்ற களிமண்ணின் பெயர் "பிக்"  அதாவது ஆங்கிலத்தில் பிக் என்றால் பன்றி என்று குறிப்பிடும் நிலைக்கு மாறிவிட்டது.   
பொதுவாகவே உயிரினங்கள் தமது கொழுப்புகளை தோலுக்கடியில் சேமிக்கும் தன்மையைக் கொண்டது. மனித உயிர்கள் ஒரு குறிப்பிட்ட அளவு கொழுப்பு சத்துக்களை மட்டுமே தமது தோலுக்கடியில் சேமிக்கின்றன. தேவைக்கு அதிகமான கொழுப்புகளை இரத்தத்தோடு கலக்கப்பட்டு வெளியேற்றிவிடும். ஆனால் பன்றியும், காண்டாமிருகமும் தேவைக்கு அதிகமான அத்தனை கொழுப்பு சத்துக்களையும் தமது தோலுக்கு அடியில் சேமித்துவைத்து, கனமான, அடர்த்தியான, செழுமையான தமது தோல்களால் குளிர், வெப்பம், காற்று, மழை போன்ற எந்த காலநிலையையும் தாங்கும் சக்தியை தருகிறது. அதுபோல தேவைக்கு அதிகமான பணத்தை சேமிப்பதற்கு பன்றியின் உருவம் தொடர்பு படுத்தப்பட்டது.  அதோடு சிக்கனம் என்பது வசதிகளை குறைத்துக்கொள்ளவேண்டிய சூழலை கருத்தில் கொண்டு எந்த சூழலிலும் எந்த கால நிலையையும் தாங்கி வாழக்கூடிய பன்றியை தொடர்புபடுத்தப்பட்டது.  

=========================

@சரித்திரம் முக்கியம் பகுதியில் :-
மான்மகால் : புஷ்கர் கரையில் ஆமெர் மன்னர் முதலாவது ராஜா மான்சிங் கட்டிய பிரம்மாண்டமான மாளிகை தா‌ன் மா‌ன்மகா‌ல். இது வெறு‌ம் பா‌ர்வை‌யிடு‌ம் தலமாக இ‌ரு‌ந்தது. ஆனா‌ல் த‌ற்போது ஆர்.டி.டிசி. ஹோட்டல் சரோவராக மாற்றப்பட்டு, வருகிறவர்களுக்கு வசதியான தங்குமிடமாக மா‌ற்‌றியமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது


அங்காடிகள் : பெரிய கடைவீதி நெடுகிலும் வரிசையாகக் கடைகளில் எம்பிராய்டரி துணிகளும், காலணிகளும், வண்ண மணி மாலைகளும், வளையல்களும், பித்தளைப் பாத்திரங்களும், பித்தளை மணிகள் பதிக்கப்பட்ட இடைவார்களும், ஒட்டகங்களுக்கு கண்ணாடி வேலைப்பாடுடைய துணி உறைகளும், வண்ண வண்ணச் சேலைகளும், தோல் பொருட்களும், அழகிய சுவரோவியங்களும், தோளில் மாட்டும் தொங்கு பைகளும் விற்கப்படுகின்றன. ‌ந‌ல்ல கைவேலை‌ப்பாடு கொ‌ண்ட பொரு‌ட்களை வா‌ங்க வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல் அத‌ற்க ராஜ‌ஸ்தா‌ன் செ‌ல்ல வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌நினை‌க்க‌த் தோ‌‌ன்று‌ம் அள‌வி‌ற்கு அ‌வ்வளவு கை‌வினை‌ப் பொரு‌ட்க‌ள் இ‌ங்கு ‌கிடை‌க்‌கி‌ன்றன. 
முக்கிய அங்காடிகள் மையங்கள், ஹோம் சர்க்கஸ், பஸாஸா பஜார், ஸராஃபா பஜார், மாலகீரா பஜார், கேதல்கஞ்ச் பஜார் ஆகியவை ஆகும்.

எவ்வாறு செல்லலாம்

விமானம் : அருகில் உள்ள ஜெய்பூர் விமான நிலையம் 146 கி.மீ. தொலைவில் உள்ளது.

ரெயில்: அருகிலுள்ள ரயில் நிலையம் சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ள அஜ்மேர்.
சாலை : பு‌‌ஷ‌்க‌ர் நகர‌த்‌தி‌ற்கு‌ச் செ‌ல்ல நல்ல சாலைத் தொடர்பு வசதிகள் உள்ளன. 

உள்ளூர் போக்குவரத்து: அஜ்மேருக்கு நகரப் பேருந்து வசதி உள்ளது. அ‌ஜ்மே‌ரி‌ல் இரு‌ந்து‌ம் பேரு‌ந்துக‌ள் இய‌க்க‌ப்படு‌கி‌ன்றன. 

எங்கு தங்கலாம் : பு‌ஷ‌்க‌ர் நக‌ரி‌ல் ஏராளமான த‌ங்கு‌ம் ‌விடு‌திக‌ள் உ‌ள்ளன. மு‌க்‌கியமாக ஏராளமான த‌ர்மசாலைகளு‌ம், ச‌த்‌திர‌ங்களு‌ம் க‌ட்டிவை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. அ‌தி‌ல்லாம‌ல் ராஜ‌ஸ்தா‌ன் சு‌ற்றுலா வள‌ர்‌ச்‌சி‌‌க் கழக‌ம், க‌ழிவறைகளுட‌ன் பல கூடார‌ங்களையு‌ம் அமை‌த்து வை‌த்து‌ள்ளது. இ‌ந்த கூடார‌ங்க‌ளி‌ல் த‌ங்‌கி‌க் கொ‌ள்வது‌ம், அ‌ங்கு அமை‌க்க‌ப்ப‌ட்டுள்ள உணவு மைய‌த்‌தி‌ல் ராஜ‌ஸ்தா‌ன் ‌சிற‌ப்பு உணவுகளை சா‌ப்‌பிடுவது‌ம் பு‌ஷ‌்க‌ர் செ‌ல்லு‌ம் சு‌ற்றுலா‌ப் பய‌ணிக‌ள் பெரு‌ம்பாலு‌ம் ‌விரு‌ம்பு‌ம் ஒரு ‌விஷயமா‌கு‌ம். 
கடைவீதியில் வாங்கக் கூடியவை : புஷ்கர் விழாவின் போது ஏராளமா சாலையோரக் கடைகளில் மணிமாலைகள், வளையல்கள், எம்பிராய்டரி சால்வைகள், துணிகள், ஒட்டகங்களுக்கு எம்பிராய்டரி போட்டு கண்ணாடி பதித்த துணி உறைகள், என்று வகைவகையான பொருட்களின் விற்பனை நடக்கிறது. அழகாக நெய்யப்பட்ட கம்பளங்களும், ஒட்டகத் தோல் பொருட்களும் கிடைக்கின்றன. எதுவாக இரு‌ந்தாலு‌ம் அழ‌கிய கைவேலை‌ப்பாடு கொ‌ண்ட பொரு‌ட்களை‌ப் பா‌ர்‌த்து வா‌ங்கு‌ங்க‌ள். 

===================

சித்திரமும் கைப்பழக்கம் பகுதியில்:-

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்  நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்கொடையும் பிறவிக் குணம். – வெண்பா 7


விளக்கம்:
பழகப்பழக பழக்கம் வந்துவிடும். ஆனால் பிறவிக்குணத்தை மாற்ற முடியாது. வரைய வரையச் சித்திரமும் கைப்பழக்கம் ஆகிவிடும். பேசப் பேசச் செந்தமிழும் பழக்கமாகிவிடும். திரும்பத் திரும்ப நினைத்தால் கற்றது மனத்தில் பதிந்துவிடும். நல்லொழுக்கத்தைத் திரும்பத் திரும்பக் கடைப்பிடித்தால் அதுவும் பழக்கமாகிவிடும். ஆனால், நல்லவர் நட்பு, இரக்கக் குணம், கொடைப் பண்பு ஆகியவை பிறவியிலேயே பதிந்திருந்தால்தான் வரும்.
  
@சுட்டீஸ் குழுவினர்கள் கைவண்ணம்:- (ஓவியம்)
(நான் வரைந்த ஓவியம் / எனக்குப் பிடித்த ஓவியம்)
சுட்டீஸ்களின் கைவண்ணத்தில் உருவான இந்த மாத ஓவியங்கள் :-






































================================

கைவேலைப்பாடுகள்:- துணிகளில் மணல் ஓவியம்:- வழங்குபவர் செந்தமிழ் செல்வி 
தேவையான பொருட்கள்: 
1) மணல் ஓவியம் கிட் - 1  அல்லது 
கருப்பு வெல்வெட் துணி - தேவையான அளவு, 
2) விருப்பமான படம், 
3) ஃபெவிக்ளூ - 1, 
4) வெள்ளை மணல் (கடைகளில் கிடைக்கும்) 
5) தேவையான ஃபேப்ரிக் கலர்கள், 
6) வண்ணம் தீட்ட நெ. 1 பிரஷ் - 1. 

செய்முறை:  
1) கிட் என்றால் அதிலேயே படம் வரைந்து இருக்கும். இல்லையென்றால் விருப்பமான படத்தை மஞ்சள் கலர் டிரேஸ் பேப்பர் வைத்து துணியில் வரைந்து கொள்ளவும். 

2) படத்தின் அவுட் லைனைக்குள் ஃபெவிக்ளூவை நன்றாக தடவவும். 

3) வெள்ளை மணலை அதன் மேல் இடைவெளி இன்றி தூவி கையால் அழுத்தி விடவும். 

4) சிறிது நேரம் கழித்து துணியைத் தூக்கி தட்டினால், மேலாக ஒட்டாத மணல் தனியாக வந்து விடும். 

5) பிரஷ்ஷின் பின்புறத்தால் அவுட்லைனை விட்டு வெளியே பிசிறாகத் தெரியும் மணலை சீராக்கவும்.   

6) ஒரு நாள் முழுதும் நன்கு காய விட்டு, பொருத்தமான ஃபேப்ரிக் கலரை பிரஷ்ஷால் எடுத்து பிசிறின்றி தீட்டவும். 

7) டபுள் ஷேடிங் கூட கொடுக்கலாம்.   

8) படம் முழுவதும் வண்ணம் தீட்டியபின் நன்கு காய விடவும்.   

9) விருப்பம் போல் பிரேம் செய்து அழகாக மாட்டலாம். 

பிரியமானவர்களுக்கு பரிசாகவும் கொடுக்கலாம்.  

நன்றிகளுடன் செந்தமிழ் செல்வி http://senthamizhelango.blogspot.in/
===============================


பலவித போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பெரும் சுட்டீஸ்கள்:-

@சுட்டீஸ் துர்கா சக்திராஜ்:-
@சுட்டீஸ் S.ஆதித்யா வாசு:-
@சுட்டீஸ் மிருதுளாசாயி கிருஷ்ணன்:-

 @சுட்டீஸ் அரவிந்த் மகாலிங்கம் . 

@ வைஷ்ணவி பரமேஸ்வரன்

@சுட்டீஸ் பிரியா

சுட்டீஸ் ஜான்வி குமாரி:-
@சுட்டீஸ்  :- ஆதயா ஷங்கர்

@சுட்டீஸ் குழுவினர்கள் கைவண்ணம்:- (Handicraft)

@சுட்டீஸ் மிருதுளாசாயி கிருஷ்ணன்- வைஷாலி 

@சுட்டீஸ்  அரவிந்த் மகாலிங்கம் வைஷாலி 

@சுட்டீஸ் வைஷ்ணவி வெங்கடேசன் 

@சுட்டீஸ்  M.Tejaswini Class-4,CRPF School.


@சுட்டீஸ் கிருத்திகா ராஜேந்திரன் 
@இந்த மாதம் நமது வாசகர்வட்டத்தின் தமிழ் வகுப்புக்கு புதியவர்கள்:-
@10-பத்துபேர்கள் கொண்ட முதல் குழு தமிழை முழுமையாக எழுத படிக்க தெரிந்துகொண்டதோடு தமிழக அரசின் அடிப்படை தமிழ் தேர்வினை எழுத தயாராக இருக்கிறார்கள் 

@மேலும் 9-ஒன்பது புதியவர்கள் தமிழ் எழுத படிக்க கற்றுவருகிறார்கள்.


@இந்த மாதம் மேலும் மூன்று மாணவர்கள் புதியதாக தமிழி கற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்கள் விரைவில் அவர்களும் தமிழி வகுப்பில் சேர இருக்கிறார்கள்.
======================================

@ கட்டுரைப்போட்டி:- புகைப்படத்தில் உள்ள படத்தைப் பார்த்து 15-வரிகளுக்கு மிகாமல் பொருத்தமான கதை/கட்டுரை எழுத வேண்டும். சரியான படக்கதை விடை கூறி பரிசுகளை வெல்லுங்கள் :- 

போட்டி எண்-5, தேதி 18-03-2018. பாதுகாப்புக்கான படத்தை கவனமாக பாருங்கள். படத்திற்கு தகுந்த விவரங்களை குறிப்பிட்டு பரிசுகளை வெல்லுங்கள் 
சரியான பொருத்தமான கட்டுரையை 15-04-2018 தேதிக்கு முன்னதாக "vaishalireaderscircle@gmail.com" மின்னஞ்சலில், அல்லது குறுஞ்செய்தி, அல்லது "சுட்டீஸ் குல்கந்து"வாட்சப் குழுவிலும், வைஷாலி வாசகர் வட்ட:-முகநூல் மற்றும் நமது டுவிட்டர் பக்கங்களின் வழியாகவும் அனுப்பலாம். 

சரியான விடையையும், சரியான விடை எழுதியவர்களுக்கான பரிசுகளும்  15-04-2018 (3-வது ஞாயிறு) அன்றைய, 50-வது வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில் வழங்கப்படும்.

போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் பரிசுகள் உண்டு. (படக் கதைக் கருத்தாக்கம்-கோபாலகிருஷ்ணன் ரேடியோ-மார்கோனி).

====================================
போட்டிகள் மற்றும் பரிசுகள் (Pottigal Matrum Parisugal)



























சுட்டீஸ், நாங்கள் தொகுத்து வழங்கிய பதிவுகளில் உள்ள குறை நிறைகளை வாசகர்கள், அன்பான முறையில் எங்களுக்கு எடுத்துக்கூறி, எங்களது பதிவுகள் மேலும் சிறப்படைய வாழ்த்தி உற்சாகப்படுத்துமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இந்தப்பதிவில் கீழுள்ள கருத்துக்கூறும் பகுதியில் பதிவு செய்யவும்.

No comments:

Post a Comment