"தமிழ் ரோஜாக்களின் குல்கந்து"

"தமிழ் ரோஜாக்களின் குல்கந்து"

Sunday, September 18, 2016

"சுட்டீஸ்-குல்கந்து" புரட்டாசி மாத வலைப்பதிவர் பூவிதழ்-6"

"சுட்டீஸ்-குல்கந்து" புரட்டாசி மாத வலைப்பதிவர் பூவிதழ்-6" நாள்/தேதி:- ஆங்கில மாதத்தின் 3-வது ஞாயிறு 18-09-2016.


கற்க கசடற….!!                               !வாய்மையே வெல்லும்!!

 “வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம்
Vaishali, Ghaziabad, NCR-New Delhi.
e-mail:  vaishalireaderscircle@gmail.com
___________________________________________________________________
சுட்டீஸ் இதழ்= 06 புரட்டாசி மாதம்-தேதி 18-09-2016. வணக்கம், தாங்களின் வருகைக்கு நன்றி, எங்களின் இந்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழில்" - புரட்டாசி மாத வலைப்பதிவு:- இந்த இதழின் ஆசிரியராக, தொகுத்து வழங்குபவர்:-(Editor of the Page) செல்வி B.அபிநயாசெக்டர்-4, வைஷாலி, காசியாபாத், NCR-NEW DELHI

செப்டம்பர்18 - உலக அறிவாளர் தினமான 18-09-2016 அன்று  புரட்டாசி மாதம்:- ஆன்றோர்கள் / சான்றோர்கள் / பெரியோர்களின் அறிவுரைகளையும் ஆசிகளையும் பெற்று வாழ்க்கையை வளப்படுத்தும் மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும். 

அடுத்து வரும் அக்டொபர்-2016, 16-10-2016 ஐப்பசி மாதவலைப்பதிவு இதழின் ஆசிரியராக, (Editor of the page) இந்த வலைப்பக்கத்தை தொகுத்து வழங்க ஆவலுடன் காத்திருப்பவர் யார்? விருப்பம் உள்ளவர்  உங்கள் விருப்பத்தை உடனே தெரியப்படுத்துங்கள். மின் அஞ்சல் "vaishalireaderscircle@gmail.com"

18-09-2016 இன்று நமது 31-வது வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில்:- ,  
புரட்டாசி மாத வாசகர் வட்டத்தின் :-31வது சந்திப்பில் (18-09-2013) முதலில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் தொடர்ந்து செப்டம்பர்18 - உலக அறிவாளர் தினம் பற்றியும், ஆன்றோர்கள் / சான்றோர்கள் / பெரியோர்களின் அறிவுரைகளையும் ஆசிகளையும் பெற்று வாழ்க்கையை வளப்படுத்தும் புரட்டாசி மாதத்தின் சிறப்புக்கள் பற்றியும் ஒரு அலசல்.... புரட்டாசி (புரட்டாதி) தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டொன்றின் ஆறாவது மாதம் ஆகும். சூரியன் கன்னி இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 30 நாள், 27 நாடி, 22 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 31 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும்.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி, புரட்டாதி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி வரை கொண்டாடப்படுகிறது.  

ஆடி மாதம் என்பது அம்மன் மாதம் என முன்பே பார்த்தோம். அதே போல புரட்டாசி மாதம் பெருமாள் மாதம். புரட்டாசி மாதத்தில் எங்கும் "கோவிந்தா, கோவிந்தா" என்ற ஒலி முழங்கும். அதுவும் இந்த மாதத்தின் சனிக்கிழமை, மிகவும் விசேஷம். திருப்பதியில் ’ஏழுகொண்டலவாடா வெங்கட்ரமணா கோவிந்தா, கோவிந்தா’ என்று பலவிதமான பக்தி ஒலி கிளம்ப, நம்முள்ளும் ஒரு அதிர்வு ஏற்படுத்தும் மாதமிது....   

தொடர்ந்து வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பின் எங்கவீட்டு நூலகம்,  படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும் (தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம்) மற்றும் இந்த மாத தலைப்பைச் சார்ந்த போட்டிகளும் பரிசுகளும்...  என நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக நடந்தது..........

மேலும் இந்த மாத சுட்டீஸ்களின் ஏராளமான செய்திகளை மிகவும் பயனுள்ள வகையில் நமது வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ் "குல்கந்து" குழுவினர்கள் தொகுத்து தந்திருக்கிறார்கள்....


அவர்கள் தொகுத்துத் தந்த பல ஆன்றோர்கள் / சான்றோர்கள் / பெரியோர்களின் அறிவுரைகளையும் ஆசிகளையும் பெற்று வாழ்க்கையை வளப்படுத்தும் மாதக் கொண்டாட்ட செய்திகளை ஒன்று சேர்த்து, அனைத்தையும் அழகாக கோர்த்து, ஒரு கதம்ப மாலையாக தொடுத்து தந்திருக்கிறார்கள். இந்த மாத வலைப்பதிவு இதழின் அனைத்து விவரங்களும்  உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம்.... இப்படிக்கு வாசகர் வட்ட  சுட்டீஸ் "குல்கந்து" ரோஜாக்கள். 
முதலில் குட்டி கல்கண்டு தகவல்கள்:- விவரங்களை தொகுத்திருப்பவர் AK.பவித்ரா :-
"தாத்தா பாட்டிகள் உள்ள வீடு" ஆயிரக்கணக்கான புத்தகங்களை கொண்ட நூலகத்திற்கு சமம் !


பெரியவர்களின் ஆசீர்வாதம் :- தமிழர்களின் கலாச்சார வழக்கத்தில் ஒன்று ஆசீர்வாதம்/ வாழ்த்துதல். இது திருமணம், காதுகுத்து, பிறந்தநாள், கோயில்கள், விசேட தினங்கள் போன்ற எதுவாக இருந்தாலும் ‘பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கு’ என்று நம்மை கூறுவது வழக்கம். ஆசீர்வாதம் என்றால் என்ன? வயதில் பெரியவர்கள் தான் ஆசி வழங்க முடியுமா? ‘எல்லாம் நல்லதே நடக்கட்டும்’ என்று உங்களிடம் யாரேனும் சொன்னால், அது ஆசீர்வாதம் கிடையாது. அது ஒரு விருப்பம், ஒரு நல்ல எண்ணம். அவ்வளவுதான். ‘ஆசி’ என்பது எண்ணங்கள் அல்ல. அது ஒரு குறிப்பிட்ட அளவிலான சக்தி. ஆசி என்பது நல்லதும் அல்ல; கெட்டதும் அல்ல. அது எரிபொருள். உங்கள் வளர்ச்சியை துரிதப்படுத்திக் கொள்ள உங்களுக்கு உதவும் வஸ்து அது. உதாரணத்திற்கு, உங்கள் காரில் எரிவாயு இல்லை. காரைத் தள்ளிக் கொண்டு போவது மிகவும் கடினம், அதோடு தாமதம் வேறு ஆகும். இதுவே யாரேனும் எரிபொருள் தந்து உதவினால், வெகு சுலபமாக, வெகு விரைவாக வேண்டிய இடத்திற்குச் சென்று விடலாம். ஆசி என்பது இந்த எரிவாயு போன்றது. அது வெறும் வாழ்த்தோ, எண்ணமோ, உணர்ச்சியோ அல்ல. அது ஒரு சக்தி.

$ என்ன சொல்லி வாழ்த்தவேண்டும்? மனதிற்கு பிடித்தமான எந்தவொரு நல்ல சொல்லையும் கூறி வாழ்த்த முடியும். உதாரணமாக பெண்களுக்கு- தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும்  என்றும் ஆண்களுக்கு - சகல செளபாக்கியங்களும் கிடைக்கவேண்டும் என்றும், மணமக்களுக்கு - பதினாறும் பெற்று வாழ்க என்றும் பலவகையாக வாழ்த்தலாம்.

$மஹாளய அமாவாசை:- நம் வாழ்க்கையில் பங்கெடுத்த அத்தனை மூதாதையர்களின் தலைமுறை மக்களுக்கும் நம்முடைய நன்றியை வெளிப்படுத்தும் விசேஷமான நாளாக மஹாளய அமாவாசை விளங்குகிறது.  நமது மூதாதையர்கள் மேல் கொண்ட மரியாதையையும் நன்றியையும் வெளிப்படுத்தும் விதமாக, நவராத்திரி, விஜயதசமி மற்றும் தீபாவளி போன்ற பண்டிகை கொண்டாட்டங்களில் திளைப்பதற்கு முன்னால், புதிய பயிர்கள் விளைச்சலின் பலனைத் தரத் துவங்கியிருக்கும் அந்த விளைச்சலை அவர்களுக்குப் பிண்டமாகப் படைத்து அர்ப்பணிக்கிறோம்.

$ பல பெரிய நகரங்களில் மெட்ரோ ரயில் செல்லுவதைப்போல கேரளா மாநிலத்தின் கொச்சியில் உலகின் முதல் மிதக்கும் மெட்ரோ படகு-ரயில் சேவையை தொடங்கியுள்ளனர். 


$உலகிலேயே அதிக வயதானவர்:- இதுவரை ஜப்பானைச் சேர்ந்த 115 வயது மிசாவேர் ஒக்காவா தான் உலகிலேயே அதிக வயதானவர் என்று சாதனைப் புத்தகமான கின்னஸ்ல இடம் பிடிச்சிருக்கார். ஆனா, இப்போ, வேறு ஒருவரை இவர் தான் உலகிலேயே மிகவும் வயதானவர்னு தென்னாப்பிரிக்காவுல ஒரு பாட்டியைக் சுட்டிக் காட்டுகிறது அந்நாட்டு அரசு. 
பாட்டிக்கெல்லாம் பாட்டி... தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஒரு சிற்றூரில் வாழ்ந்துவருபவர் ஜொஹன்னா மசிபுகோ. தற்போது இவருக்கு 119 வயதாவதால், இவரே உலகில் அதிக வயதானவர் என அறியப்பட்டுள்ளாராம்.

$ பிரான்ஸ் தாத்தா... இதற்கு முன்னர், அதிக வயதானவராகக் குறிப்பிடப்பட்ட ஜீன் கால்மென்ட் என்ற பிரான்ஸ் தேசத்தவர் தன்னுடைய 122-வது வயதில் கடந்த 1997-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி இறந்துபோனார்.

$ இந்தியன் தாத்தா... சமீபத்தில், இந்தியாவைச் சேர்ந்த காஷ்மீரைச் சேர்ந்த பெரோஸ் உன் மிர் என்ற தாத்தா தனக்கு 141 வயதாவதாகவும், தனது மனைவி தன்னை விட 60 வயது இளையவர் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.

$ கடலுக்கு அடியில் சாலை அமைத்து மகிழுந்தில் பயணம் செய்யமுடியுமா? நார்வேயை சேர்ந்த ஒரு கட்டிட பொறியாளர் ஒருவர் முடியும் என்று நிரூபிக்க   அரேபிய நாட்டின் கடலுக்கடியில் குழாய் அமைந்து சாலை அமைக்கும் கட்டுமான பணிக்கான திட்டப் பனி உத்தரவை பெற்றுள்ளதாகவும் விரைவில் அதை நிரூபிப்பதாகவும் கூறியுள்ளார்.   

$ நமக்கு எப்போது வயது முதுர்ச்சி துவங்குகிறது ? தசைகள் (30வயதிலிருந்து முதிர்ச்சி துவங்குகிறது ), மூளை (30 வயதிலிருந்து முதிர்ச்சி துவங்குகிறது ) பெண்களுக்கு ஆண்களைவிட மூளைச்செயல் பாட்டில் காலம் கடந்தே ஆரம்பிகிறது. காரணம் அவர்களுக்குள்ளே சுறக்கும் ஈஸ்ட்ரோஜன் ஆர்மோன் காரணமாகிறது. நமது கண்கள் (40 வயதிலிருந்து), இருதயம் (40 வயது முதல்)
முடி (30வயது முதல்), தோல் (25வயது முதல்), முதிர்ச்சியடையத் துவங்குகிறது... ஆதாரம் சென்னை, டிகான் கிரானிகல் 08.03.2009 நாளிட்ட ஆங்கில நாளிதழில் டாக்டர் வி. ரவிந்தர நாத் ரெட்டி, அமெரிக அக்கடாமியின் வயது மூப்பு மருத்தவப் பிரிவு அவர்கள் எழுதியது.

$ மனித இனத்தின் ஆயுட் காலம் அதிகரித்து வருவதாகவும், எதிர்காலத்தில் மனிதனின் ஆயுட் காலம் ஆயிரம் ஆண்டுகள் வரையில் நீடிக்கக் கூடும் எனவும் அண்மைய மருத்துவ ஆய்வு ஆச்சரிய தகவல் வெளியிட்டுள்ளது.கேம்ரீட்ஜ் பல்கலைக்கழகத்தின் மரபணுவியல் ஆய்வாளர் அயுப்ரே டி க்ரே தெரிவித்துள்ளார்.
$ வயது மூப்பு மற்றும் புற்றுநோய்களுக்கு எதிராகவும் செயலாற்றக் கூடியது. மேற்கிந்திய தீவுகளில் கிடைக்கும் அசெரோலாவகை செர்ரி பழங்கள், பிற நாடுகளில் கிடைக்கும் செர்ரிபழங்களைவிட வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏமிகுதியாகக் கொண்டது. 100 கிராம் பழத்தில் 1677.6 மில்லிகிராம் வைட்டமின் சியும், குறிப்பிட்ட அளவில் வைட்டமின ஏ யும் உள்ளது.
$ ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் ஒரு கிணற்றுத் தவளையை போட்டு பாத்திரத்தை வெப்பப் படுத்தும்போது. நீரின் வெப்பம் அதிகரிக்கும் பொது அந்த பாத்திரத்தில் இருக்கும் தவளை அந்த வெப்பத்திற்கு ஏற்றவாறு தனது சக்திகள் அனைத்தையும் திரட்டி வெப்பத்தை தாங்கும் திறனாக மாற்றிக்கொள்கிறது. ஒரு கட்டத்தில்  அந்த பாத்திரத்திலிருந்து வெளியே குதித்து தப்பிக்கவே அல்லது தனது சக்திகள் அனைத்தையும் இழந்து இறுதியில் அந்த நீரில் வெந்து உயிர் விடுகிறது. எனவே ஒருவரிடம் எத்தனை சக்தி இருந்தாலும் முடிவெடுக்கும் திறன் மிகவும் முக்கியம். அதுபோல நமது சக்தியை விரயமாக்கி காலம்தாழ்த்தாமல் உடனே முடிவெடுக்கும் திறனை வளர்த்துக்கொண்டால் அது நமது வாழ்வை வளமாக்கும்.      

$வயதானவர்கள், தினமும் பழங்கள் சாப்பிடுவது நல்லது. மனித உடலுக்கு நேரடியாக சத்துக்ளை கொடுப்பது பழங்கள் மட்டுமே. பழங்கள் எளிதில் சீரணமாவதற்கும், வாய், வயிறு, குடல் பகுதியில் உள்ள புண்களை ஆற்றுவதற்கும் ஏற்றவை. உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்து அதாவது புரதச் சத்து, வைட்டமின் சத்துக்கள், கால்சியம் சத்து, நார்ச்சத்து என அனைத்து சத்துக்களும் பழங்களில் அதிகம் அடங்கியிருக்கின்றது. தினமும் அந்தந்த சீதோஷ்ண காலங்களில் அதிகம் விளையும் பழங்களைச் சாப்பிட்டால் நல்லது.

$ மன்னன் அதியமான் அவ்வைப் பாட்டிக்கு நீண்ட ஆயுள் அமையும் பொருட்டு நெல்லிக்கனி கொடுத்ததாக சங்க இலக்கியங்களில் சொல்லப்படுகிறது. நெல்லிக்காய் நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளமையாக இருக்க வழி செய்கிறது. உடல் திசுக்களுக்கு புத்துணர்ச்சியளித்து உடல் செல்கள் நன்கு செயல்பட உதவி புரிகிறது. நெல்லிக்காயில் வைட்டமின் “சி” வேறு எந்த வகை காய்கறி பழங்களிலும் இல்லாத அளவுக்கு 600 மில்லிகிராம் உள்ளது. கால்சியம் 50 மில்லிகிராம், பாஸ்பரஸ் – 20 மில்லிகிராம், இரும்புச் சத்து 1.2 மில்லிகிராம் உள்ளது. ஆப்பிள் பழத்தை விட இது அதிக சக்தி வாய்ந்தது.

$வெற்றிக்கு எப்போதும் உழைப்பைவிட புத்திசாலிதனமே தேவை.. நாரதர் பழம் கொண்டு வந்துஆரம்பித்ததுதான் இந்தபிரசினைக்கு விடை.. சிவ பெருமான் பார்வதியிடமிருந்து, பிள்ளையார் பழத்தை பெற்றதுதான் புத்திசாலிதனத்தின் அடையாளம்..உழைப்பு இருந்தால் மட்டும் போதாது புத்திசாலிதனமும் இனைய வேண்டும் என உணர்த்தும் ஆதியான கதை இதுதான்..

==================================================
$நமது வைஷாலி வாசகர் வட்டத்தின் அனைவரையும் வாழ்த்தி வழிநடத்திச்செல்லும் தலைமை உறுப்பினர்  திரு முத்து கிருஷ்ணன் அவர்களின் ஆன்மீகத் தொடர்-03

அன்பான சுட்டீஸ்!... எப்படி இருக்கீங்க? 
மனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய 21 பாடங்கள் ..!

சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், 
கொக்கிடம் இருந்து இரண்டையும்,
கழுதையிடம் இருந்து மூன்றையும், 
கோழியிடம் இருந்து நான்கையும், 
காக்கையிடம் இருந்து ஐந்தையும், 
நாயிடம் இருந்து ஆறையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.

1 - சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, 
நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.

2 - கொக்கு ஓடு மீன் ஓட, உறு மீன் வரும் வரை காத்து நிற்கும். அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.

3 - கழுதையானது களைப்புற்றாலும் தன் வேலையை தொடர்ந்து செய்யும்,
வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், 
தன் முதலாளிக்கு கட்டுப்பட்டிருக்கும் குணம் ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

4 - விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவரவர்க்கு தேவையானவற்றை பிரித்துக் கொடுத்தல், 
தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

5 - இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், 
தேவையான பொருள்களை சேமித்து வைத்தல்,
யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல்,
தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

6 - கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், 
உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், 
நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், 
தன்னைவிடவும் உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.

யார் ஒருவர் மேலே சொன்ன இந்த இருபத்தியொரு விஷயங்களை கடைபிடிக்கிறாறோ அவர் எதிலும் வெற்றி அடைவார். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.

இது நாண் சொல்லலைங்க ..!

சாணக்கியர் சொல்லியிருக்கார் ..!!!

என்ன சுட்டிகளா! எப்படியிருந்தது? சுவாரஸ்யமா இருந்திச்சா. இனி மஜாதான். சரி அடுத்த மாதம் சந்திப்போம். நன்றி. வணக்கம்!

...............முத்து ஐயர்..........
வைஷாலி வாசகர் வட்டம்..
=================================================
பகுதி I-கைவண்ணம்:-

1) சித்திரமும் கைப்பழக்கம் பகுதியில் :-
(நான் வரைந்த ஓவியம் / எனக்குப் பிடித்த ஓவியம்)
A) D. துர்கா 2ம் வகுப்பு. 




f) குழந்தைகள் H. சாய் நந்தினி மற்றும் H.சாய் ஷிவானி சகோதரிகள்:- 
(நான் வரைந்த ஓவியம் / எனக்குப் பிடித்த ஓவியம்)






G) குழந்தைகள்  ரியாஸ்  சகோதர சகோதரிகள்:- 
(நான் வரைந்த ஓவியம் / எனக்குப் பிடித்த ஓவியம்)

G)  சக்தி உமா :- 
(நான் வரைந்த ஓவியம் / எனக்குப் பிடித்த ஓவியம்)

2. நகைச்சுவை-சிரி சிந்தி செயல்படு- பகுதியில் :-
1. (புகைப்படமும் விளக்கமும்):-
“வயோதிகம்" உனக்கென்ன குறைச்சல் நீ ஒரு ராஜா வந்தால் வரட்டும் முதுமை” இந்த வரிகளை கேட்கும்போது தெம்பாகத்தான் இருக்கிறது ஆனால் யதார்த்தம் என்ன? முதியவர்களுக்குரிய தேவைகள் சரிவர நிறைவேற்றப்படுகின்றனவா? இயந்திரமயமாகிய வாழ்க்கை ஓட்டத்தில் இளையவர்கள் சிக்கியதால் முதியவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா?உதவியாக இல்லாவிட்டாலும் உபத்திரமாக இருக்காதே...



2. (புகைப்படமும் விளக்கமும்):-

3. (புகைப்படமும் விளக்கமும்):-

4. (புகைப்படமும் விளக்கமும்):-

5. (புகைப்படமும் விளக்கமும்):-
முதலில் தமிழ்  வாசிக்க கற்றுக்கொள்ளுங்கள்....வாருங்கள் நமது வைஷாலி வாசகர்வட்டத்தின் தமிழ் கற்கும் வகுப்புகளில் கலந்துகொண்டு, தரணி போற்றும் மொழி தமிழ் மொழியே!! என  பறைசாற்றுவோம்.....


_________________________________________________
===========================================
3. (அ).சிறுகதைகள் பகுதியில் :- முதலாவது போட்டி :- வைஷாலி வாசகர் வட்டத்தின்... சரியான விடைகளைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்... போட்டி என்-6  புரட்டாசி மாதம், இதழ்-6 தேதி 18-09-2016. தொகுத்து வழங்கியவர்:-  (கோகி )

$ இளம் சிறார்களின் வகுப்பு பாடக் கதையான,  சாலமன் கிரண்டி என்ற பெயருடைய ஒருவரின் ஆங்கிலக் கதைப் பாடல் இது.  இந்தப் பாடல் என்ன சொல்கிறது என்றால் 
Solomon Grundy,
Born on a Monday,
Christened on Tuesday,
Married on Wednesday,
Took ill on Thursday,
Grew worse on Friday,
Died on Saturday,
Buried on Sunday.
மனிதனே உன்னுடைய  இறுதிக்காலம் அது மிக மிக குறுகியது, முதுமை வயதடைந்த சாலமன் கிரண்டிக்கு ஒரு விழாழக்கிழமை அவனது உடல் நிலை சரியில்லாமல் போனது... அதற்க்கு அடுத்தநாளே வெள்ளிக்கிழமை மிகவும் மோசமானதால், அடுத்த நாள் சனிக்கிழமை அன்று செத்துப்போனான் அதற்க்கு அடுத்தநாள்  ஞாயிறு அன்றே புதைத்துவிட்டார்கள்...

ஆனால் மனிதனின் இளமைக்காலம் அது மிகவும் நீண்டது  இளம் வயதில் சாலமன் கிரண்டியின் ஒரு திங்களில் பிறந்தான், அதன் அடுத்த வந்த வருடத்தின் ஒரு செவ்வாய்க்கிழமையில் பெயர் வைக்கப்பட்டு, நீண்ட பல வருடங்களுக்குப்பிறகு வந்த ஒரு புதன் கிழமை அவனுக்கு திருமணமானது.

ஆகா மனிதனே உன்னுடைய இளமைக்காலம் அது நீண்டது அப்போதே உன்னுடைய கடமைகளை செய்துவிடு, முதுமைக்கு காலம் வரை பொறுத்திருந்தால் உன்னால் எதையும் செய்யமுடியாமல் போகும்  ....முதுமையில் உன்னால் எதையும் செய்ய இயலாமல் இறந்துபோவாய்....  

கீழ் வரும் கேள்விக்கான சரியான பதிலைக் கூறுங்கள்:-
#1. சாலமன் கிரண்டி என்கின்ற இந்த ஆங்கிலப் பாடலில் என்ன என்ன கிழமைகள் உள்ளது?

#2. சாலமன் கிரண்டியின் இளமைக்காலம் என எத்தனை கிழமைகள் பாடலில் இடம்பெற்றுள்ளது ? அவை என்ன கிழமைகள்?

#3.  சாலமன் கிரண்டியின் முதுமைக்காலங்கள் என எத்தனை கிழமைகள் பாடலில் இடம்பெற்றுள்ளது ? அவை என்ன கிழமைகள்? 

# 4. பாடலில் குறிப்பிட்டுள்ள ஒரு மனிதனின் இளமைக்காலம் என்பது நீண்ட நாட்களா?  அல்லது முதுமைக்காலம் என்பது நீண்ட நாட்களா?  

#5. இந்த சாலமன் கிரண்டி என்கிற பாடலில் கூறியுள்ள கருத்து என்ன? 


சரியான  விடைகளைக்கூறி சிறப்பு பரிசுகளை வெல்லுங்கள். சரியான விடைகளை 10-10-2016 தேதிக்கு முன்னதாக "vaishalireaderscircle@gmail.com" மின்னஞ்சலில் அனுப்பவேண்டும். 

சரியான விடையையும், சரியான விடை எழுதியவர்களுக்கான பரிசுகளும்  16-10-2016 (3-வது ஞாயிறு) அன்றைய, 32-வது வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில் வழங்கப்படும்.

போட்டிக்கான சரியான விடையை பலரும் குறிப்பிட்டிருந்தால், பரிசு பெறுபவர்-குலுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்.

(கதைக் கருத்தாக்கம்-ரேடியோ கோபாலகிருஷ்ணன்).

3.(அ) விடை:- சென்ற மாத பரிசுப் போட்டிக் கதைக்கான முதலாவது கதையின் சரியான விடைகள்:-போட்டி என்-5 ஆவணி மாத இதழ்-5 தேதி 21-08-2016. விவரங்களை சென்ற ஆவணி மாத இதழை பாருங்கள்:

சரியான விடைகள்:-
1. ஒவ்வொருமுறையும் நாம் உணவு உண்பதற்கு முன்பாக  ஆ) கை, கால் கழுவவேண்டும்.

2. மேற்கண்ட கதையில் வரும் மூன்று சகோதரர்களில் எந்த சகோதரர் உங்களுக்கு பிடித்த சகோதரர்?? (மூன்றாவது இளைய சகோதரர்)

3. சுத்தம் ....(சோறு)...... போடும் ?

4. சுத்தமாக இருப்பதால் என்ன பலன் கிடைக்கும்?
#சுத்தமாக இருப்பதால் சுகாதாரமான நோயற்ற நீண்டநாள் வாழ்வைப்பெறலாம்.  

5. நீங்கள் வசிக்கும் உரை சுத்தமாக வைப்பதற்கு நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? 
# சாலைகளில் குப்பையை தூக்கியெறியாமல் குப்பைத்தொட்டியில் போடுவது. 

# நாம் வாழும் இடங்களை அசுத்தம் செய்யாமல் சுத்தமாக பராமரிப்பது. 
சரியான பொருத்தமான விடையை 09 நபர்கள் குறிப்பிட்டிருந்தார்கள் அவர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளும்  வழங்கப்பட்டது. 
=========================================

3.(ஆ) சிறுகதைகள் பகுதியில் :-இரண்டாவது போட்டி:- வைஷாலி வாசகர் வட்டத்தின் சரியான புகைப்படக் கதையைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் போட்டி என்-6 புரட்டாசி மாத, இதழ்-6 தேதி 18-09-2016.

தலைப்பு:- நவராத்திரி 'ராவண வதம்' என்ற பெயரில், ராவணனின் பிரமாண்ட உருவ பொம்மை எரிக்கும் நிகழ்ச்சி, 

3.(ஆ) விடை:- சென்ற மாதசிறுகதைகள் பகுதியில் :-இரண்டாவது போட்டி:- வைஷாலி வாசகர் வட்டத்தின் சரியான புகைப்படக் கதையைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் போட்டி என்-5 ஆவணி மாத, இதழ்-5 தேதி 21-08-2016. தலைப்பு:-தசாவதாரம்:-
மகாபலியின் யாகசாலை : ஏராளமான முனிவர்களும் , கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய பண்டிதர்கள் பலரும் , மகாபலி யிடமிருந்து தானம் பெற்று பெரு மகிழ்வுடன் சென்று கொண்டிருந்தனர் ..........

அப்போது அங்கே வந்தார் ஸ்ரீ வாமனர் !! அவரது தோற்றம் அனைவரையும் கவர்ந்தது ! குறிப்பாக மகாபலியின் மகளான ரத்னமாலாவின் மனதிலோ ஆயிரமாயிரம் எண்ண அலைகள் !! ' அடடா என்ன ஒரு தேஜஸ் !..இவன் என் மகனாக இருந்தால் எப்படி இருந்திருக்கும் ...' அவளது சிந்தனை ஓட்டத்தை தடை செய்வது போல் ஸ்ரீ வாமனரின் குரல் ஒலித்தது ! 
" மன்னா !எனக்கு தானம் வேண்டும் !"
'' என்ன வேண்டுமோ கேளுங்கள் ....தருகிறேன் "
மகாபலி பதிலளிக்க ...
.அடுத்த கணம் ஸ்ரீ வாமனரின் குரல் ஆணி அடித்தாற்போல் ஓங்கி ஒலித்தது !
" மூன்றடி மண் வேண்டும் !"
"தருகிறேன் சுவாமி !"
குரு சுக்கிராச்சாரியார் தடுத்தும் ஸ்ரீ வாமனருக்கு மூன்றடி நிலத்தை தானம் அளித்தான் மகாபலி ;
மறுகணம் பிரம்மாண்ட வடிவெடுத்த ஸ்ரீ வாமனர் , திரிவிக்கிரமராக ஓரடியால் பூமியையும் , மற்றோர் அடியால் விண்ணையும் அளந்தார் !

"மன்னா ....மூன்றாவது அடியை எங்கே வைப்பது ?" கேட்ட ஸ்ரீ வாமனருக்கு பணிவுடன் , அமைதியாக பதிலளித்தான் மகாபலி ; " அடியேன் தலை மீது வையுங்கள் சுவாமி !"..அவன் சொல்லி முடித்தது தான் தாமதம் ...அப்படியே பாதாள லோகத்துக்கு அவனை அமிழ்த்தினார் திரிவிக்கிரமர் !

தந்தைக்கு நேர்ந்த இந்த நிலைமையைக் கண்டு கதிகலங்கி போனாள் ரத்னமாலா ! பீதி நிறைந்த விழிகளுடன் அந்த காட்சியை பார்த்து கொண்டிருந்த அவளின் மனதில் இப்பொது கொடூரமான எண்ணம் ! ' இப்போது வாமனரைக் கொல்ல வேண்டும் '  

ஆம் ....வாமனரைக் கொல்லும் அவளின் இந்த நோக்கமே , பூதகி எனும் அரக்கியாக பிறக்க வைத்தது !!

யாகசாலையில் முதன்முதலில் வாமனரை கண்டதும் , அவருக்கு தாயாக வேண்டும் எனகிற அவளது எண்ணம் கண்ணனுக்கு பாலூட்டும் பாக்கியத்தை அவளுக்கு அளித்தது !!


சுருக்கமான விவரங்களைத் தொகுத்துத் தந்த திருமதி. தங்கம் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு. நன்றி.

சென்ற மாதத்திற்கான சரியான படக்கதையை கூறி போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. 
=====================================================
3. குட்டிக் கதை:-புரட்டாசி மாதம் பெருமாள் மாதம்:-

வயதான பாட்டி, அவருக்கு தினமும் தான் பிரியமுடன் வணங்கும் பகவான் ஸ்ரீ ராதா கிருஷ்ணனுக்கு நெய்வேத்தியம் படைப்பது வழக்கம். பாட்டியிடம் போதிய பணவசதி இல்லை என்றாலும் வீட்டில் சமைக்கும் உணவை-"சாதத்தை" தினமும் தான் வணங்கும் ஸ்ரீ ராதா கிருஷ்ணனுக்கு படைத்த பிறகுதான் அனைவரும் உண்ணவேண்டும் என்பதை வழக்கத்தில் வைத்திருந்தார்.  

திடீரென அதற்கும் இடைஞ்சலாக மகனுக்கும் அவனுடைய மனைவிக்கும் அவர்களது அலுவலக நேர மாற்றத்தின் விளைவாக விடியற்காலையிலேயே சமைத்த சாதத்தை சாப்பிட்டுவிட்டு , மதியத்திற்கான உணவையும் கையேடு எடுத்துச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டதால், பாட்டிக்கு தர்ம சங்கடம் ஏற்ப்பட்டது. 

தனியாக சுவாமிக்கு நெய்வேத்திய பிரசாதம் தயார் செய்ய, தன்னால் ஒரு செலவு மற்றும் தொந்தரவு என்கிற பழிச்சொல் வந்துவிடுமோ? அப்படி பழிச்சொல்லோடு செய்யும் நெய்வேத்திய பிரசாதம் சரியானது இல்லை என்கிற முடிவில், அங்கும்-இங்கும் வைத்திருந்த காசுகளை ஒன்றாக சேர்த்து, கடையிலிருந்து கல்கண்டு வாங்கிவந்து, அதை பிரசாதமாக  நெய்வேத்தியம் செய்து, பேரன், பேத்தி,மருமகள் என்று அனைவருக்கும் கைநிறைய கல்கண்டு பிரசாதம் வழங்கியதோடு, தனது கணவருக்கும், மகனுக்கும் மட்டும் சக்கரை வியாதி இருப்பதால் ஒரு சிறு கல்கண்டு துகளை மட்டும் பிரசாதமாக தந்தார். அன்றைய பொழுது அதே சிந்தனையில் நகர்ந்தாலும், மேலும் இரண்டு நாட்கள் அதே நிலை தொடர்ந்தது.

மறுநாள் புரட்டாசி மாதம், முதல் சனிக்கிழமை, துவாதசி திதி கூடிய விசேஷமான நாளாக இருந்ததால்,  காலையில் வழக்கம்போல ஸ்ரீ ராதா கிருஷ்ணனுக்கு நெய்வேத்தியம் செய்ய முனைந்தபோது,  அவர் வாங்கிவைத்திருந்த கல்கண்டு பிரசாதத்தை சுற்றி ஏராளமான எறும்புகள் மொய்த்தவண்ணம் இருந்ததைக்கண்டு... இன்று பகவானுக்கு தன்னால் நெய்வேத்திய பிரசாதம் படைக்க முடியாமல் போகுமோ? என்று மனம் வருந்தினார். 

வேறு வழிதோன்றாமல் வீட்டு தோட்டத்திலிருந்து பறித்த துளசி இலைகளை தண்ணீரில் கலந்து "துளசி தீர்த்தமாக" செய்து பகவானுக்கு நெய்வேத்தியம் செய்தார். அதிசயமாக அன்று அனைவரும் துளசி தீர்த்தப் பிரசாதத்தை இரண்டு மூன்று முறை கேட்டு வாங்கி சாப்பிட்டதை நினைத்து பெருமிதமடைந்தார். விலை கொடுத்து வாங்கிய கல்கண்டு பிரசாதம் கடுகளவே உண்டாலும், சக்கரை நோய்க்கு விஷமாகும். விலையில்லா துளசி தீர்த்தப் பிரசாதம் எந்த நோய்க்கும் மருந்தாகும்.  விலைகொடுத்து வாங்கிய "கல்கண்டு" பிரசாதத்தைவிட, விலையில்லா "துளசி தீர்த்தத்தின்" விலைமதிப்பற்ற  பெருமையை  எண்ணி வியந்தார்.  

திருமலைக்கு வருகிறேன், காணிக்கை தருகிறேன் என்கிற பெருமாள் கோவிலுக்கு வேண்டுதல்  எப்போது நிறைவேறுமோ? அதை உடனே நிறைவேற்றமுடியவில்லையே? என்கிற கவலை உங்களுக்கு இருந்தால், உடனே சிறு துளசிதளம் (துளசி இலைக் கொத்து) பறித்து அதை தாமிர அல்லது வெண்கல கிண்ணத்தில் போட்டு அந்தக் கிண்ணம் நிறைய தண்ணீர் ஊற்றி,  நடு வீட்டில் ஒரு சிறு மாக்கோலம் போட்டு அதன் மீது கிண்ணத்தை வைத்து, அந்தக்கின்னத்தை நூத்திஎட்டு  சுற்றுக்கள் "ஓம் நமோ நாராயணாய" என்று கூறியபடி சுற்றிவந்தால்...108-பெருமாள் கோவிலுக்கு சென்று வந்த புண்ணியமும் உங்களின் வேண்டுதலும் நிறைவேறும் என்பது ஆன்றோர் கூற்று. 

விடாமல் முயலுங்கள், 
விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....
மீண்டும் சிந்திப்போம்! 
நன்றிகளுடன் கோகி.

================================================

ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ...ஒரு சிறு விளம்பர இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடர்ந்து வாசிக்கலாமா? 
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
விளம்பரம் :-இப்பகுதியை உங்களுக்கு வழங்குபவர்:-
விளம்பரம் :-இப்பகுதியை உங்களுக்கு வழங்குபவர்:-

==============================================================
3. சிறு கதைகள்:- கதை கதையாம் காரணமாம் பகுதி:-பகவத் பாகவத பக்தி:-
திருவரங்கம் சென்று அந்த கருட மண்டபத்தையும் கீழக்கோபுர வாசலையும் ஒரு தடவை பார்த்துவிட்டு வர வேண்டும் போல் இருக்கிறது.

திருவரங்கம் கோயிலில் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியை, எனது நண்பர் விபரித்ததை, எழுத்து வடிவில் தருகிறேன்.

அரங்கனை தினம் காலை மாலை இருவேளையும் தரிசித்து வரும் பக்தர் குழாமில், வயதான பண்டிதரும் ஒருவர். ஆர்வம் மிக இருந்தும், வயது மூப்பு காரணமாய், அவரால் மற்றவர்கள் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத காரணத்தால் பல நேரங்களில் கருடன் சந்நிதியுடன் நின்று விடுவார்.

அரங்கன் திசை நோக்கி வணங்கிவிட்டு கருட மண்டபத்தில் சற்று இளைப்பாறி, மற்றவர்கள் திரும்பி வரும்போது தானும் திரும்பி விடுவார். பலவித விமர்சனங்கள், கேட்டும் கேளாதது போல், தினம் தினம் வருவதும் ஒரு சில நாட்கள் அரங்கன் கோயில் உள்ளே சென்று தரிசித்து வருவதுமாக இருந்த அவர், ஒரு நாள் கையில் பாகவதம புத்தகத்துடன் வந்து, கருட மண்டபத்தின் கீழ் பகுதியில் ஓரமாய் அமர்ந்து, சிறிது நேரம் படித்து விட்டு, வீடு திரும்புவது என வழக்கத்தை ஏற்படுத்துக் கொண்டார். ஆக அரங்கனை சென்று சேவிப்பது என்பது அபூர்வமாகி விட்டது.
பலரும் அவர் புத்தகம் படிப்பதை பார்த்துவிட்டு செல்வார்கள். பண்டிதர்கள் சிலர் நின்று சற்று நேரம் கேட்டு விட்டு செல்வார்கள். அதில் ஒரு சிலர் இவர் சில வரிகளை விட்டு விட்டு சில வரிகளை படித்து பக்கங்களை புரட்டுவதை பார்த்து, வயது மூப்பு காரணமாய் ஒரு ஒழுங்கை கடைபிடிக்க இயலாது ஆர்வம் ஒன்றே முதலாய் கொண்டு ஏதோ வயதான காலத்தில் படிக்கிறார் - பாவம்! தவறை தெரிந்தா செய்கிறார்? போகட்டும் என நினைத்து அவரிடம் பேசுவதையே குறைத்துக் கொண்டனர்.

அங்கும் இங்கும், அவரவர் பேச, பண்டிதர் படிக்கிறாரே தவிர ஒரு ஒழுங்கும் இல்லை. பக்கத்தில் பாதி படிப்பது, மீதி விழுங்குவது என எதோ படிக்கிறார். அவ்வளவுதான்! மூப்பு காரணமாய் புத்தி சரியாக வேலை செய்யவில்லை, என பேசி கடைசியில் 'அதுவா! அது ஒரு அரைப்பைத்தியம்' என பட்டம் கட்டி விட்டார்கள்.

எது எப்படியோ! பண்டிதர், தான் தினமும் பாகவதம் படிப்பதை நிறுத்தவில்லை.

ஒரு நாள் அரங்கனை சேவிக்க, வெளியூரிலிருந்து, ஆச்சாரியார் நிலையில் உள்ள பெரிய பண்டிதர் ஒருவர் வரப்போவதாய் சேதி வந்தது. உள்ளூர் பண்டிதர்கள் கூடி அவரை வரவேற்க ஏற்பாடுகள் செய்தனர்.

மேளதாளத்துடன், வேத கோஷத்துடன், பூர்ண கும்ப மரியாதையோடு வரவேற்க வேண்டுமென முடிவு செய்யும் போது, கருட மண்டபத்தில் தினம் பாகவதம் படிக்கும் பண்டிதரைப் பற்றியும் பேச்சு வந்தது. அரைகுறையாக பாகவதம் படிக்கும் இவரை வெளியூர் பண்டிதர் பார்த்தால், இவர் படிப்பதைக் கேட்டால் உள்ளூர் பண்டிதர்கள் அனைவருக்கும் அவமானம். இதைத் தவிர்க்க என்ன செய்வது என்று கேள்வி பிறந்தது.

மூத்த பண்டிதர்கள் பலரும், அவர் ஒரு ஓரமாய் வயதான காலத்தில் ஏதோ ஆர்வத்துடன் படிக்கிறார்; அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என சொல்ல, சில இளவட்டங்கள் பிரச்சனையை வேறு விதமாக தீர்ப்பதாக சொன்னார்கள்.

“பெரியவரே! அரங்கனை தரிசிக்க வெளியூர் பண்டிதர் ஒருவர் வரப்போகிறார். மேளதாளம் என கூட்டம் அதிகம் கூடும். தாங்கள் பாகவதம் பக்தி சிரத்தையுடன் படிப்பதற்கு இங்கு இடைஞ்சலாய் இருக்கும். ஆகையால் ஒரு நாள் மட்டும், கிழக்கு கோபுரவாசல் பக்கம் மணல் வெளியில் உள்ள மண்டபத்தில் அமர்ந்து, எவ்வித தொந்தரவும் இல்லாமல் படிக்க வேண்டும்”, என பவ்யமாய் அவரிடம் கேட்டுக் கொண்டார்கள். அந்த அரைப் பைத்தியம் முரண்டு பிடித்தால் என்ன செய்வது என்ற பயமும் கூடவே இருந்தது.

ஆனால், அவரோ “ரொம்ப சங்தோஷம். முன்கூட்டியே சொன்னதற்கு மிக்க நன்றி. எல்லம் கண்ணன் கிருபை”, எனக் கூறி மறு நாள் தான் நேராக கிழக்கு கோபுரவாயில் வழியாய் வந்து, அங்கு மண்டபத்தில் பாகவதம் படிப்பதாக உறுதி கூறி விடை பெற்றார்.
இளைஞர்களுக்கு சந்தேகம். ஞாபக மறதி காரணமாய் பெரியவர் கருட மண்டபம் வந்து விட்டால் என்ன செய்வது என யோசித்து அன்று காலை தெற்கு கோபுர வாயிலில் இருவரும், கிழக்கு கோபுர வாயிலில் இருவரும் பெரியவரை எதிபார்த்து நின்றனர்.

பெரியவரும் சொன்னபடி கிழக்கு கோபுர வாசல் வழிவந்தார். அவரை உபசரித்து, மணல்வெளி மண்டபத்தில் அமர்த்த வந்த இளைஞர்களிடம், 'நீங்கள் வெளியூர் பண்டிதரை வரவேற்க செல்லுங்கள். நான் இங்கு பார்த்துக் கொள்கிறேன்', எனக் கூறி மண்டபத்தின் தூண் ஓரமாய் புத்தகத்தை வைத்து விட்டு, முன்னால் உள்ள மணல் வெளியில் பத்து அடி சதுரத்திற்கு சமன் செய்ய ஆரம்பித்தார். மேலாக தென்பட்ட சிறு கற்கள், தூசு தும்புகளை அகற்றி கைகளால் நன்றாக தட்டி மணலை அவர் சீர் செய்வதைப் பார்த்த அந்த இளைஞர்களுக்கு சிரிப்பு வந்தது. ஏதோ வரப்போகும் பண்டிதர் நேராக இங்கே வந்து, இவர் முன்னால் உட்கார்ந்து பாகவதம் கேட்கப் போவது போல, தன் முன்னால் மணலை சீர்செய்து விட்டு, அவர் புத்தகம் எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்ததும், இனி இவர் எழுந்து வர மாட்டார் என சொல்லிக் கொண்டு வேகமாய் தெற்கு வாசலுக்கு, வெளியூர் பண்டிதரை வரவேற்கும் கூட்டத்தில் சேர விரைந்தனர்.

வெகு விமரிசையாக வரவேற்கப்பட்ட அந்த வெளியூர் பண்டிதர் கருட மண்டபம் வந்ததும், சற்று நேரம் உற்று கேட்டு விட்டு, எல்லோரையும் சற்று அமைதியாக இருக்கும்படி சொல்லி தொடர்ந்தார்.

“பண்டிதர்களே! இங்கு எங்கோ மிக மன அமைதியுடன் ஆத்ம சுகத்துடன் பாகவதம் படிப்பது என் காதில் விழுகிறது. அந்த யோகியை, பரம் பாகவதரை, முதலில் தரிசித்து வணங்கி, பிறகு அரங்கனை சேவிக்கலாம். அந்த மகானை தாங்கள் எனக்கு காட்ட வேண்டும்”, என கை கூப்பி தொழுதார்.

பண்டிதர்கள் பலருக்கும் ஆச்சர்யம்! கிழக்கு கோபுர வாயிலை ஒட்டி மணல் வெளியில் இருந்து கொண்டு பாகவதம் படிக்கும் அவர் குரல் இங்கு இவருக்கு எப்படி கேட்கிறது? ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க, கிழக்கு கோபுர வாயிலில் இருந்து வந்த அந்த இளைஞர்களுக்கு மிக ஆச்சர்யம். ஆகா! அந்த பண்டிதர் பெரிய மகான் போலும்!இவர் அங்கு வந்து பாகவதம் கேட்பார் என நினத்துதானோ என்னவோ, தன் முன் மணலை சரி செய்து வைத்து விட்டு பாகவதம் படிக்கிறார் போலும் என நினைத்து உள்ளூர் பெரிய பண்டிதர்கள் வார்த்தையை எதிர்பார்த்து நின்றனர்.

உள்ளூர் பண்டிதர்களில் ஒருவர் தொடர்ந்தார். “ஸ்வாமி! இங்கு கருட மண்டபத்தில் உள்ளூர் பெரியவர், வேத சாஸ்திரங்களில் தேர்ந்தவர், தினம் இங்கு வந்து பாகவதம் படிப்பார். இன்று தாங்கள் வரும் போது கூட்டம் அதிகமாய் இருக்கும், அவருக்கு தொந்தரவு கூடாது என நினைத்து, இன்று மட்டும் அவரை கிழக்கு வாயிலில், அமைதியான சூழ்நிலையில் பாகவதம் படிக்கும்படி நாங்கள் தான் கேட்டுக் கொண்டோம். அவரும் சந்தோஷமாய் கண்ணன் கிருபை என சொல்லிப் போனார். அவர்தான் கிழக்கு வாயிலில் பாகவதம் படிக்கிறார் போலும்”.

இந்த வார்த்தைகளை கேட்டதும் வெளியூர் பண்டிதர், “ஆகா! நாம் எல்லோரும் அபசாரப்பட்டு விட்டோமே! இதற்கு நான் காரணமாகிவிட்டேனே! முதலில் அவரிடம் சென்று மரியாதை செலுத்தி விட்டு பிறகு தான் அரங்கனை சேவிக்க வேண்டும். பாகவத அபசாரம் கொடியது அல்லவா? சற்றே தள்ளியிரும் எனச் சொன்னது பாவம் அன்றோ? வாருங்கள், அவர் இருப்பிடம் போகலாம்” என விரைய, பலரும் அவரைப் பின் தொடர்ந்தார்கள்.

உள் மணல் வெளியை தாண்டி, வெளி மணல் வெளியை அடந்த போது, எல்லோரையும் அங்கேயே சற்று நிற்கும்படி கையசைப்பின் மூலம் சொல்லி விட்டு, கூப்பிய கரங்களுடன் பாகவதம் படிக்கும் பண்டிதரின் வலது புறம் வந்து நின்றார். தனக்கு முன்னால் திரண்ட கூட்டத்தையோ, அல்லது வெளியூரிலிருந்து வந்திருந்த பண்டிதரையோ, பாகவதம் படித்துக் கொண்டிருந்தவர் கவனிக்கவில்லை. அவர் தமது வழக்கப்படி சில வரிகள் படிப்பதும், மெய்மறந்து தன் முன்னால் உள்ள மணல் பரப்பை மகிழ்வுடன் பார்ப்பதும், மாறி மாறி படிப்பதும், மெளனமாய் இருப்பதுமாக ஒருவாறு பாகவத புத்தகத்தை மூடி வைத்தார்.

அதுவரை பக்கத்தில் நின்று கொண்டிருந்த வெளியூர் பண்டிதர் சற்று முன்பாக வந்து, பெரியவர் சமன் செய்து வைத்திருந்த மணல் திட்டை நோக்கி சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, மிகவும் பய பக்தியுடன் அந்த மணல் திட்டிலிருந்து, சர்வ ஜாக்கிரதையுடன் சிறிது சிறிதாக மணல் துளிகளை தன் மேல் உத்திரியத்தில் திரட்டி, பாகவத பண்டிதரிடம் இரு கைகளாலும், மிக பணிவுடன் கொடுத்தார்.

அவரும் எழுந்து நின்று 'தங்களுக்கு தெரிந்தது எனக்கு தெரியவில்லையே' என மன நெகிழ்வுடன் கூறி 'தாங்கள் ஸ்வீகரித்தபின் அல்லவோ, நான் பெற வேண்டும்', என்று கை கூப்பி நின்றார். வெளியூர் பண்டிதரோ, 'தங்களால் கிடைக்கப் பெற்றது. தங்களுக்கு முதலில் சமர்ப்பித்த பிறகு அல்லவோ மற்றவர்களுக்கு' எனக் கூறி மறுபடியும் மணல் துகள்களை உத்தரியத்துடன் காட்ட, உடனே பாகவதம் படித்த பண்டிதர் மிகவும் அடக்கத்துடன் சிறிது மணல் துளிகளை எடுத்து நெற்றியில் திலகமாய் இட்டுக் கொண்டு, சிரசிலும் தரித்துக் கொண்டு, சந்தனம் பூசிக்கொள்வது போல மார்பிலும் பூசிக் கொண்டார்.

இதைப் பார்த்த மக்களுக்கு ஏதும் புரியவில்லை. அதே சமயம் அவர்கள் மனத்தில் ஒரு தெளிவு. 'இது நாள் வரையில் அரைப் பைத்தியம் எனக் கருதப்பட்ட பெரியவர், சாதாரண பண்டிதர் இல்லை; கண்ணனின் கிருபை, அரங்கனின் அருள் பூரணமாய்ப் பெற்றவர். நாம் தவறு செய்துவிட்டோம்' என்ற எண்ணத்துடன் அவர்கள் மெளனமானார்கள். கூட்டத்தினர் ஆச்சர்யத்துடன் பார்த்துக் கோண்டு இருக்கும் போது வெளியூர் பண்டிதரி தொடர்ந்தார்.

“ஸ்வாமி! தாங்கள் ஏன் பாகவத்தை தொடர்ச்சி விடாமல் படிப்பது இல்லை? சில பல இடங்களை விட்டுவிட்டு படிப்பதன் விபரம்தான் என்ன?”

பாகவதம் படித்த பண்டிதர் மிக அடக்கமாய் சிரித்துக் கொண்டே, “ஸ்வாமி! தாங்கள் எல்லாம் தெரிந்தும் தெரியாது போல் ஏன் கேட்கிறீர்கள்? பல நூறு மனிதர்கள் மன சந்தோஷத்துடன் உணவு உண்ணும் போது, அங்கே ஒரு பசித்தவன், அந்த விருந்தை பார்த்தாலும் அவன் பசி போகாதல்லவா? பசித்தவன் புசித்தால் அல்லவோ பசி போகும், வயிறு நிறையும், மனம் குளிரும்? அதே போல் பகவானை அனுபவிக்கும் போது, சுற்றிலும் பலர் பார்த்துக் கொண்டிருந்தாலும், அவர்களுக்கு அந்த ருசி தெரியாதல்லவா? தாங்கள் ருசி தெரிந்து, கண்ணன் பாத துளியை சேகரித்து எனக்கு கொடுத்தீர்கள். கண்ணனை கண்டேனே தவிர, அவன் பாத துளியை தரிசிக்க மறந்தேன். தங்களால் அந்த பாக்கியம் கிடைத்தது. தங்களுக்கு தோன்றியது எனக்கு தோன்றவில்லை. இன்று தங்கள் வருகையால் அல்ல்லவோ எனக்கு அந்த பாக்கியம் கிடைத்தது. நான் ஏதும் சொல்லுவதற்கு பதில், தாங்களே ஏதும் சொல்ல வேண்டும் என்றால் சொல்லலாம். நானும் அதை உவப்புடன் கேட்பேன்.”

உடனே வெளியூர் பண்டிதர் கூட்டத்தினரைப் பார்த்து பேச ஆரம்பித்தார்.

“திருவரங்கவாசிகளே! நீங்கள் எல்லோரும் அரங்கனை தினம் தினம் தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர்கள். பரம பக்தரான இந்த பண்டிதர் பாகவதம் படிக்கும் போது, என்ன நடந்தது என்று பலருக்கும் தெரியாது. பேரருளாளன் கண்ணன் அறிவான். அவனை இவருக்கு தெரியும். இன்று காலை நான் வந்தவுடன் மேளதாள ஆரவாரத்திற்கும், வேத கோஷத்திற்கும் நடுவில் பாகவதம் படிப்பது என் காதருகில் மிக தெளிவாகக் கேட்டது. படிப்பது நின்றபோது சதங்கை ஒலி மட்டும் கேட்டது. ஆக பரமபாகவதாரன பெரியவர் முன் கண்ணன் களி நடனம் ஆடுகிறான். அதை அவர் அனுபவிக்கும்போது படிப்பதை நிறுத்தி விடுகிறார். கண்ணன் லீலை தொடற்கிறது. கண்முன் நின்ற கண்ணன் மறைந்ததும், பாகவதம் அங்கு தொடர்கிறது. மறுபடி கண்ணன் இவர் படிப்பதற்கு ஏற்ப நடனம் ஆட, கண்ணனை இவர் பார்ப்பதும், விட்டு விட்டு பாகவதம் படிப்பதும் தொடர்கிறது.

ஆக பாகவதம் எந்த குறையும் இல்லாமல் தொடர்கிறது. கருட மண்டபத்தில் இவர் தன் மேல் துண்டினால் தினமும் தன் முன்பாக சுத்தம் செய்துவிட்டு பிறகு பாகவதம் படிப்பது நம்மில் யாரும் அவர் முன்வந்து அமர்ந்து பாகவதம் கேட்போம் என்ற எண்ணத்தில் அல்ல. பாகவதம் படிக்க ஆரம்பித்ததும், கண்ணன் அவர் முன் தோன்றி, படிப்பதற்கு ஏற்ப நடனம் ஆடுகிறான். அவன் கால்படும் இடம் சுத்தமாக இருப்பதற்காகத்தான் தனது வஸ்திரத்தைக் கொண்டு சுத்தம் செய்கிறார். அதேபோல் இங்கு மணல் வெளியில் இவர் கையால் செய்த மணல்மேட்டில் கண்ணன் பாத சுவடுகள் படிந்திருப்பதைப் பாருங்கள். கண்ணன் இவர் முன் நடனம் ஆடியதற்கு அதுவே சாட்சி. அவர் தினமும் காணும் காட்சியைத்தான் நான் கண்டேன். இவர் தயவால் கண்ணன் களிநடனம் கண்டேன். அவன் பாதம்பட்ட இடத்திலிருந்து பாத துளி சேகரித்தேன். அதுதான் இந்த திருமண். திருவரங்கத்தில் பரம பாகவதர் இவர் வழிகாட்ட அரங்கனை சேவிக்க அனைவரும் செல்வோம்.”

அரைகுறை பைத்தியம் என அதுவரை ஊரால் கருதி வந்த அந்த பரம பக்தர் முன் செல்ல, அரங்கனை தரிசிக்க பின் தொடர்ந்தார் வெளியூர் பண்டிதர்!
நன்றி திரு ரெங்கா-நியூஜெர்சி-USA, அவர்களின்  பிதாவின் கதைகள்,  http://pithavinkathaigal.blogspot.in/ வலைப்பதிவிலிருந்து...
====================================================

4. கட்டுரை=1:- இந்தமாதம் தலைப்பைச் சார்ந்த  கதை /கட்டுரைகள்:- 
அ ) இன்று ஒரு தகவல் பகுதியில்:-

தண்ணீரில் விளக்கேற்றிய சீரடி சாய்பாபா.

சாய்பாபாவின் அருளாற்றலை அறிந்து மராட்டிய மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமானவர்கள் சீரடிக்கு வந்தனர். இதனால் பாபா எப்போதும் பக்தர்களால் சூழப்பட்டிருந்தார்.

மதிய உணவுக்குப் பிறகு சற்று ஓய்வு எடுக்கும் சாய்பாபா மாலை நேரத்தில் லெண்டித் தோட்டத்தில் உலாவுவார். சில நாட்கள் அவர் சீரடி அருகில் உள்ள கிராமங்களுக்கு நடந்தே சென்று வருவார்.

சீரடியின் தெற்கு பகுதியில் ராஹ்தா எனும் கிராமம் உள்ளது. வடக்குப் பகுதியில் நிம்கான் எனும் கிராமம் உள்ளது. நிம்கான் கிராமத்துக்கு பாபா அடிக்கடி சென்றதால் அவருக்கு அந்த ஊரைச் சேர்ந்த திரியம்பகடேங்க்லே என்பவர் அறிமுகம் கிடைத்தது. எனவே திரியம்பக வீட்டுக்கு பாபா அடிக்கடி செல்வார்.

அப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த பாபா சாகேப் என்பவரும் வந்து சாய்பாபாவிடம் பேசிக் கொண்டிருப்பார். சாய்பாபாவின் அருள் உரைகளைக் கேட்ட பிறகு அவரது பக்தராகவே பாபா சாகேப் மாறி விட்டார். பாபா சாகேப்புக்கு நானா சாகேப் என்று ஒரு தம்பி இருந்தார். நானா சாகேப்புக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் நானா சாகேப் மிகவும் கவலையுடன் இருந்தார்.

வேறொரு பெண்ணை திருமணம் செய்தால் “குழந்தை பாக்கியம்” கிடைக்கும் என்று அவர் நம்பினார். எனவே இரண்டாவது திருமணம் செய்தார். ஆனால் அதன் பிறகும் அவருக்கு குழந்தை பிறக்கவில்லை. தேவையான அளவுக்கு செல்வம் இருந்தும் கொஞ்சி மகிழ குழந்தை இல்லையே என்ற ஏக்கம் நானாவுக்கு நாளுக்கு நாள் அதிகரித்தது. இந்த நிலையில் ஒரு நாள் சாய்பாபா நிம்கான் கிராமத்துக்கு வந்து திரியம்பக டேங்க்லே, பாபா சாகேப் ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது பாபா சாகேப் தன் தம்பி நானாவுக்கு நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லை என்ற வருத்தத்தை தெரிவித்தார். உடனே பாபா அவரிடம், “நானாவை சீரடிக்கு வந்து என்னைப் பார்க்க சொல்” என்றார். இந்த தகவலை பாபா சாகேப் அன்றே தன் தம்பி நானாவிடம் தெரிவித்தார். அதை கேட்டதும் நானா சாகேப்புக்கு மனதில் நம்பிக்கை பிறந்தது.

“பாபாவிடம் ஆசி பெற்றால் எல்லாம் மகிழ்ச்சியாக முடியும்“ என்ற நினைப்புடன் நானா சீரடிக்கு வந்தார். சாய்பாபாவை வழிபட்டு பணிவோடு நின்றார். அவரிடம் சாய்பாபா, “நம் இருவருக்கும் 4 பிறவிகளாகத் தொடர்பு இருக்கிறது. இந்தப் பிறவியில் உன்னைப் பார்க்க வேண்டும் என்று நினைத்ததால் வரச் சொன்னேன்” என்றார்.

பிறகு “இன்னும் 10 மாதங்களில் உனக்கு வாரிசு கிடைக்கும். போய் வா...” என்று கூறி உதி கொடுத்து அனுப்பினார். சாய்பாபா சொன்னபடி அடுத்த 10-வது மாதம் நானா சாகேப்பின் மனைவிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. சீரடியில் மிகவும் வெளிப்படையாக சாய்பாபா நிகழ்த்திய அற்புதங்களில் இந்த அற்புதம் தான் முதல் அற்புதமாகக் கருதப்படுகிறது. குழந்தை பாக்கியம் கிடைத்ததால் நானா சாகேப் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சாய்பாபாவின் தீவிர பக்தராக மாறிய அவர் பாபாவின் அற்புதத்தை அருகில் உள்ள மற்ற கிராமங்களுக்கும் பரவச் செய்தார்.

சாய்பாபா பால பாபாவாக சீரடிக்கு வந்திருந்த போது கண்பட் என்பவரை தொழுநோயில் இருந்து மீட்ட அற்புதத்தை நிகழ்த்தி இருந்தார். என்றாலும் நானா சாகேப்புக்கு அவர் அருளால் குழந்தை பிறந்த சம்பவம்தான் பெரும் தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து சீரடியில் மற்றொரு அற்புதத்தையும் சாய்பாபா நடத்தினார். தண்ணீரில் விளக்கு எரிந்ததே அந்த அற்புதமாகும். சாய்பாபாவுக்கு இரவில் விளக்கு ஏற்றுவதில் தனியாத ஆர்வம் உண்டு. இரவு முழுவதும் தான் ஏற்றும் விளக்குகள் சுடர் விட்டு எரிய வேண்டும் என்று அவர் ஆசைப்படுவார்.

எந்த மதத்தையும் பின்பற்ற சொல்லாத அவர், தினமும் ஆலயங்களிலும், வீடுகளிலும் விளக்கு ஏற்ற வேண்டும் என்று தன் பக்தர்களிடம் சொல்வார். விளக்கு ஏற்றும் பழக்கத்தை ஒருநாள் கூட அவர் மறந்ததே இல்லை. துவாரகமாயி மசூதி, சாவடி, லெண்டித் தோட்டம் உள்பட சீரடியில் 5 இடங்களில் பாபா தினமும் விளக்கு ஏற்றுவார். அந்த விளக்குகள் விடிய, விடிய எரிய வேண்டும் என்பதற்காக அப்துல் என்பவரை பொறுப்பாளராக நியமனம் செய்திருந்தார்.

மசூதியில் விளக்கு ஏற்றியதும், அதன் அருகில் உட்கார்ந்து கொள்வார். சில சமயம் சுடர்விட்டு எரியும் விளக்கை அவர் உன்னிப்பாக உற்று பார்த்துக் கொண்டே இருப்பார். இதில் அவர் ஒரு தத்துவத்தை வெளிப்படுத்தினார். எந்த விளக்கும் தானே எரிவது இல்லை. ஒரு சுடரை தூண்ட மற்றொரு தீ சுடர் அவசியம் வேண்டும். அது போல எந்த ஒரு ஆத்மாவும் தாமே முயன்று முக்தி அடைந்து விட முடியாது. அதற்கு இறை அருள் பெற்ற இன்னொரு ஆத்மாவின் துணை தேவை. 

- இப்படி ஆண்டவனுக்கும் ஆத்மாவுக்கும் உள்ள உறவை விளக்குகள் உணர்த்துவதாக சாய்பாபா தமது செயல்பாடுகள் மூலம் பக்தர்களுக்கு காட்டினார். விளக்கு எரிப்பதற்காக சீரடியில் உள்ள வியாபாரிகளிடம் தினமும் இலவசமாக எண்ணெய் பெறுவதை சாய்பாபா வழக்கத்தில் வைத்திருந்தார். அந்த காலக்கட்டத்தில் சீரடியில் பிரேம்சந்த் மார்வாடி என்பவர் உள்பட 2 எண்ணெய் வியாபாரிகளும், ஒரு மளிகைக்கடை வியாபாரியும் இருந்தனர். 

பாபா ஒரு தகரக் குவளையை எடுத்துச் செல்வார். அந்த குவளை நிரம்பும் அளவுக்கு மூன்று வியாபாரிகளும் எண்ணெய் கொடுப்பார்கள். அந்த எண்ணெயை வைத்து தான் அவர் மசூதி, சாவடி உள்ளிட்ட இடங்களில் விளக்கு ஏற்றுவார். இது தினமும் நடக்கும் நிகழ்வாகும். ஒருநாள் வியாபாரிகள் மூன்று பேரும் ஒன்று சேர்ந்து பேசினார்கள். சாய்பாபாவுக்கு இனி எண்ணெய் கொடுக்கக் கூடாது. அவர் என்ன செய்வார் பார்க்கலாம் என்று முடிவு செய்தனர்.

முக்காலமும் உணர்ந்த பாபாவுக்கு இது நன்றாகவே தெரியும். என்றாலும் வழக்கம் போல அவர் எண்ணெய் வாங்கும் தகர குவளையை எடுத்துக் கொண்டு வியாபாரிகளிடம் சென்றார். விளக்கு ஏற்ற எண்ணெய் தருமாறு வேண்டினார். மூன்று வியாபாரிகளும், சொல்லி வைத்தது போல ‘‘பாபா..... என் கடையில் இன்று ஒரு சொட்டு எண்ணெய் கூட இல்லை’’ என்றனர். அதை கேட்டதும் பாபாவிடம் எந்த சலனமும் ஏற்படவில்லை. யாரிடமும் கோபப்படவும் இல்லை. 

‘‘எல்லாம் அல்லா விட்ட வழி’’ என்று கூறியபடி சிரித்துக் கொண்டே மசூதிக்கு திரும்பி வந்து விட்டார். அவரைப் பின் தொடர்ந்து 3 வியாபாரிகளும் வந்தனர். 

‘‘பாபாவை பெரிய மகான் என்கிறார்களே.... இன்றிரவு எண்ணெய் இல்லாமல் அவர் எப்படி விளக்கு எரிப்பார் என்று பார்த்து விடலாம்’’ என்று 3 வியாபாரிகளும் கேலியும் கிண்டலுமாக பேசிக் கொண்டனர். 

அதோடு பாபா என்ன செய்கிறார் என்பதை அவர்கள் மசூதி அருகே மறைந்து நின்று பார்த்தனர். 

சாய்பாபா தகர குவளையை எடுத்தார். அதில் கொஞ்சமாக இருந்த எண்ணெய்யை எடுத்துக் குடித்தார். பிறகு அதை குவளைக்குள் உமிழ்ந்தார். பிறகு அந்த தகரக் குவளையில் தண்ணீர் எடுத்து வந்தார். வரிசையாக இருந்த விளக்குகளில் தண்ணீரை ஊற்றினார். திரிகளை சரி செய்து தீ பற்ற வைத்தார்.

என்ன ஆச்சரியம்..... எல்லா விளக்குகளும் பளீரென எரிந்தன. விடிய, விடிய அந்த விளக்குகள் அனைத்தும் தண்ணீரில் பிரகாசமாய் சுடர் விட்டு எரிந்தன. மறைந்து நின்று இதைப் பார்த்துக் கொண்டிருந்த வியாபாரிகள் மூன்று பேரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பாபா கடவுள் அவதாரம் என்ற உண்மை அவர்களுக்கு அதன் பிறகே புரிந்தது.

பாபாவை ஏமாற்றியதால் அது பாவமாக மாறி தங்களுக்கு தீமையாக ஏதாவது நடந்து விடுமோ என்று மூன்று வியாபாரிகளும் பயந்தனர். ஓடோடி சென்று பாபா காலில் விழுந்து வணங்கி, தங்களை மன்னிக்கும்படி கதறினார்கள். அவர்களை மன்னித்த பாபா, “பிறரது துன்பத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைவது மிகப்பெரிய பாவமாகும். இனி மேலும் இத்தகைய பாவத்தை செய்யாதீர்கள்” என்று கூறி அனுப்பி வைத்தார்.

மறுநாள் மூன்று வியாபாரிகளும் நடந்த சம்பவத்தை மற்றவர்களிடம் சொன்னதால், பாபா தண்ணீரில் விளக்கெரித்த சம்பவம் ஊரெங்கும் பரவியது. ஊரே திரண்டு வந்து பாபாவிடம் ஆசி பெற்றது. ஆனால் அவர்களுக்கு பாபாவிடம் பஞ்ச பூதங்களும் கட்டுப்பட்டுக் கிடந்தன என்ற உண்மை போகபோகத்தான் தெரிந்தது. அது பற்றிய அற்புதங்களை அவர் அடிக்கடி வெளிப்படுத்தினார். (தொகுத்து வழங்கியவர்.....A.K.பவித்ரா)
================================================
4. கட்டுரை=2:- இந்தமாதம் தலைப்பைச் சார்ந்த  கதை /கட்டுரைகள்:- 
"கீதகோவிந்தம்" ஒரு பெண்ணின் பாதத்தை கண்ணனின் தலையில்!!!!:-
(தொகுத்து வழங்கியவர்.....திருமதி. ஆர்த்தி கிருஷ்ணன்)
இப்படி எழுதுவது சரிதானா? ஒரு பெண்ணின் பாதத்தை கண்ணனின் தலையில் வைப்பது போல மனதில் கற்பனை எழுகிறதே. இதை நூலில் எழுதிவிடலாமா? இதனால் விபரீதம் ஏதும் ஏற்படுமா? என்றெல்லாம் ஜெயதேவர் சிந்தித்தார். அப்படியே எழுத்தாணியை வைத்துவிட்டு உச்சிகால பூஜைக்கு செல்வதற்காக எண்ணெய் தேய்த்து ஆற்றில் குளிக்க சென்று விட்டார். 

பத்மாவதி ஜெயதேவருக்காக காத்திருந்தார். அப்போது எண்ணெய்த் தலையுடன் சென்ற ஜெயதேவர் மீண்டும் திரும்பிவந்தார். அவர் பத்மாவதியிடம், நான் நினைத்ததுபோலவே ராதையின் பாதத்தை கண்ணனின் தலையில் வைப்பதுபோல எழுதிவிடு என்றார். இதை நீங்கள் குளித்துவிட்டு வந்தபின் எழுதலாமே! என்ன அவசரம்? என பத்மாவதி சொன்னார். நான் வந்தபிறகு எழுதினால் மறந்துவிடும். இப்போதே எழுதிவிடு. அல்லது சுவடிகளை எடுத்துவா. நானே எழுதிவிடுகிறேன் என்றார். சுவடிகளை பத்மாவதி எடுத்துக் கொடுத்தார். ஜெயதேவர் அவசர அவசரமாக எழுதிவிட்டு மீண்டும் குளிக்க சென்றுவிட்டார். 

சற்று நேரத்தில் ஆற்றில் நீராடிவிட்டு வீடு திரும்பினார். கோயிலுக்கு சென்று இறைவனை வணங்கிவிட்டு வந்தார். மீண்டும் எழுத தொடங்கினார். ஏட்டைப் பார்த்ததும் அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. ராதையின்பாதம் கண்ணனின் தலையில் படுவதுபோல எழுதப்பட்டிருந்தது. அவர் பத்மாவதியை அவசரமாக அழைத்தார்.இதை எழுதியது யார்? நீ ஏதாவது எழுதினாயா? என கேட்டார். பத்மாவதி, சற்று முன்பு நீங்கள்தானே எழுதினீர்கள். ஆற்றுக்கு குளிக்க சென்றவர் எண்ணெய்த் தலையோடு வந்து எழுதினீர்களே என சொல்லவும் ஜெயதேவருக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது. 

சாட்சாத் கண்ணனே அங்கு வந்து தனது கருத்தை ஏற்றுக்கொண்ட விதமும், ராதை மீது அவர் வைத்திருந்த அன்பும் புரிந்தது. தொடர்ந்து கீதகோவிந்தத்தை எழுதிமுடித்தார் ஜெயதேவர். 

இதன்பிறகு அவரது புகழ் நாடெங்கும் பரவியது. இவர் கி.பி.11ம் நூற்றாண்டில் அவதரித்தவர். வங்காளதேசத்து அரசனான லட்சுமண சேனனின் அவையில் ஆஸ்தான கவியாக இருந்தார். கவிராஜர் என்ற விருதையும் பெற்றார். 

கடைசியாக ஜெயதேவர் காசியில் வசித்து வந்தார். ஒரு சுப முகூர்த்தநாளில் அவர் இறைவனுடன் கலந்தார். 

ஜெயதேவர் மறைந்து விட்டாலும், "கீதகோவிந்தம்" இன்றும் கண்ணன், ராதை புகழ் பாடும் நூலாக சாகாவரம் பெற்று விளங்குகிறது.  
...(தொகுத்து வழங்கியவர்.....திருமதி. ஆர்த்தி கிருஷ்ணன்)
==============================================================
ஆ) பொது அறிவுத் தகவல்கள் பகுதியில்:-
1. நோபல் பரிசு பெற்ற பிரிட்டன் பிரதமரான சர் "வின்ஸ்டன் சர்ச்சில்" அவர்கள் ஒரு முறை,  ஓர் ஒற்றையடி பாலத்தை கடக்கமுயன்றார். அப்போது அதே ஒற்றையடி பாலத்தின் மறு முனையில் ஓர் மிகப்பெரிய செல்வந்தர் ஒருவரும் பாலத்தை கடக்க முயன்றார்.
செல்வந்தருக்கு வின்ஸ்டன் சர்ச்சில் பற்றி நன்கு தெரியும், தனது பெயரைக்கூட சரியாக எழுத தெரியாத" சர்ச்சில்" படித்த பள்ளியிலேயே கடைசி மாணவன் என்பதால்....  பாலத்தை கடக்க முயன்ற செல்வந்தர் வின்ஸ்டன் சர்சினைப்பார்த்து "முட்டாள்களுக்கு" நான் வழிவிடுவதில்லை ஆகவே வழியைவிட்டு விலகி நில் என்றார். 

அதற்க்கு வின்ஸ்டன் சர்ச்சில் சமயோசிதமாக யோசித்து "நான் வழிவிடுவதுண்டு" என்று கூறி வழிகேட்ட செல்வந்தரை முட்டாளாக்கினார். 


ஆகவே நாம் எப்போதும் எதற்கும் (சமயோசிதமாக யோசித்து) சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றபடி நமது சொல்லும் செயலும் இருக்குமாறு நம்மை நாமே பார்த்துக்கொள்ளப் பழகவேண்டும்.  
(தொகுத்து வழங்கியவர்.....திருமதி. ஆர்த்தி கிருஷ்ணன்)
==================================================

ஆ) பொது அறிவுத் தகவல்கள் பகுதியில்:-
2. "நீ எதை தூக்கியெரிகிராயொ  அது திரும்ப உன்னிடம் வந்தடையும் - மகாபாரதம்" 

ஒரு தந்தையும் அவனது பத்து வயது மகனும் காட்டுப் பாதை வழியாகப் பயணித்துக் கொண்டிருந்தனர்.

மகனுக்குத் திடீரெனக் காலில் ஏதோ குத்தியது. வலி பொறுக்க முடியாமல் "ஆ" என்று கத்தினான். காட்டிலிருந்து இன்னொரு "ஆ" என்று திரும்பக் கத்தியது. கோபங்கொண்ட அவன் "நீ யார்?" என்று குரல் கொடுத்தான். "நீ யார்?" சுவரில் எறிந்த பந்தாக அது திருப்பி வந்தது. "நீ ஒரு முட்டாள்" என்றான். அதே வாசகம் திரும்ப வந்தது.

வருத்தமுற்ற அவன் தந்தையிடம் கேட்டான். "இங்கே என்ன நடக்கிறது அப்பா?"

"பேசாமல் என்னைக் கவனி பின்பு புரியும்" என்று மெதுவாகச் சொன்ன தந்தை
"நீ ரொம்ப நல்லவன்" நன்றாகக் கத்தியபடி சொன்னார்.
"நீ ரொம்ப நல்லவன்" எனப் பதில் வந்தது.
"நீ அழகாக இருக்கிறாய்" அதே வார்த்தைகள் திரும்பக் கிடைத்தன.

தந்தை மெதுவான குரலில் அவனிடம் பேச ஆரம்பித்தார்.
"உலகில் எல்லோரும் இதை எதிரொலி எனக் கூறுவார்கள். ஆனால் நான் சொல்வேன், இது தான் வாழ்க்கை என்று."

"வாழ்வின் உண்மையான தத்துவம் என்ன என்பது உனக்குச் சொல்லட்டுமா?" என்றவர் தொடர்ந்தார்.

"நீ எதைக் கொடுக்கிறாயோ அதுவே உனக்குத் திரும்பக் கிடைக்கும். மதிப்பைக் கொடு. மதிப்பு திரும்பக் கிடைக்கும். நன்கு புரிதலைக் கொடு, அது அப்படியே கிடைக்கும். "மாறாக வெறுப்பை உமிழ்ந்தால் வெறுப்பு உனக்குத் திரும்ப வரும். கசப்பைக் காட்டினால் அதுவே உன்னை வந்தடையும்."

எனவே எதை அடுத்தவர்களிடமிருந்து எதிர்பார்க்கிறாயோ அதையே அடுத்தவர்களுக்குக் கொடு. அது உனக்கு அப்படியே கிடைக்கும். நல்லதையே கொடு அல்லாததை ஒரு போதும் அளிக்காதே" என்றார்.

"நன்றி அப்பா! நல்ல பாடத்தைக் கற்றேன்" என்று மகிழ்ச்சியுடன் கூறினான்.
"ஆ ஜாலி" என்று கத்தினான். "ஆ ஜாலி" என்றது குரல்.

நமது வாழ்வு என்பது தற்செயலாக நடைபெறும் ஒரு நிகழ்ச்சி அல்ல. அது நமது செய்கைகளின் அப்பட்டமான பிரதிபலிப்பு.

நாம் எதைக் கொடுக்கிறோமோ அதுவே நம்மை வந்து அடையும். நமது வாழ்வின் ஒவ்வொரு கோணத்திலும் இது பொருந்தும். அதுவே வாழ்வின் தத்துவம். ....நன்றிகளுடன் பி.அபிநயா.
=======================================
இ) சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம் கேள்வி பதில் பகுதியில்:-


பிறந்தநாள் இன்று பிறந்தநாள், பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்தநாள்.....HAPPY BIRTH DAY 2 U.... Wish you many happy returns of the day ... மேலும் மேலும் பல வெற்றிகளுடன் எல்லா நலமும் எல்லா வளமும் பெற்று நீங்களும், உங்களின் உற்றார் உறவினர்கள் மற்றும் குடும்ப நபர்களும், சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம்... "நூறாண்டு காலம் வாழ்க, நோய் நொடி இல்லாமல் வளர்க, ஊராண்ட மன்னர் புகழ் போலே, உலகாண்ட புலவர் தமிழ் போலே, நூறாண்டு காலம் வாழ்க "... 

பெரியவர்கள் ஆசீர்வாதம் செய்யும் போது, நூறாண்டு காலம் வாழ்க! என்று சொல்லி வாழ்த்துவர். இதற்குள் பெரிய அர்த்தம் புதைந்து கிடக்கிறது. மனிதர்களின் சராசரி வாழ்க்கையில் மனைவி, மக்களின் முன்னேற்றத்திலேயே 60 வயது வாழ்க்கை கழிந்து விடுகிறது. இந்த வயதில், உலக பந்தத்தில் இருந்து விடுபட்டு விட வேண்டும். எனவே இச்சமயத்தில், சஷ்டியப்த பூர்த்தி என்னும் அறுபதாம் கல்யாணம் நடத்துகிறார்கள். இதன்பிறகு கணவன், மனைவி இருவரும் பொறுப்புகளை தங்களுக்கு அடுத்த தலைமுறையிடம் ஒப்படைத்துவிட வேண்டும். எண்பது வயதுக்குள் இவர்கள் பக்குவமுதிர்ச்சியும் பெற்று விடுவார்கள். இதன் பிறகு நற்கதி அடைய கடவுள் இவர்களுக்கு வழிகாட்டுவார். எனவே சதாபிஷேகம் செய்து கொள்வார்கள். தொண்ணூறு வயது வரை வாழ்ந்தால் அவர்களைப் பிடித்த நவக்கிரக தோஷங்கள் அகன்று விடும் என்பார்கள். நூறு வயது வரை வாழும் வாய்ப்பு கிடைத்தால், கடவுளுடன் மனிதன் ஒன்றிப் போவான். சாப்பிடுவது, உறங்குவது, உணர்வது, பார்ப்பது, நடப்பது எல்லாமே இறைவனுக்குள் ஒடுங்கிப் போகும். அதாவது இவற்றை செய்யும் ஐம்புலன்களும் அடங்கிப் போகும். இப்படி இறைவனுக்குள் அடங்கிப் போகிறவர்கள் மீண்டும் பிறவியெடுக்கமாட்டார்கள் என்பது ஐதீகம். இதன் அடிப்படையில் தான் நூறாண்டு காலம் வாழ்க! என்று சொல்லி வாழ்த்துகிறார்கள். 

-நன்றி தினமலர் ஆன்மீக வகுப்பறை.
===================================

ஈ )நல வாழ்வு பகுதியில்:- 1.மனதுக்கு இல்லை வயது!- முதுமைக்கு அருமருந்தாகும் உடற்பயிற்சி:-
முதுமையில் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் பற்றி முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜன் ஆலோசனை வழங்குகிறார்.


முதுமையில் உணவு முறைகள் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு முக்கியம் மிதமான, சீரான உடற்பயிற்சிகள். முதுமையில் வயது மூப்பு காரணமாக 33% பிரச்சினையும், நோயினால் 33% பிரச்சினையும், உடல் உறுப்புகளை சரியாக பயன்படுத்தாததால் 33% பிரச்சினையும் ஏற்படுகின்றன என்கிறது மருத்துவம். முதுமையில் உடல் உறுப்புகளை சீராக உபயோகப்படுத்தினால் ஆரோக்கியமாக இருக்கலாம். உறுப்புகளுக்கு ஓய்வு கொடுத்தால் உடல் பலவீனமாகி விடும்.

முதுமையில் உடற்பயிற்சி மிகவும் அவசியம். உடற்பயிற்சியினால் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், கொழுப்பு, உடல் பருமனை குறைக்கலாம். இதயத் தாக்குதல், மலச்சிக்கலை தவிர்க்கலாம். உடற்பயிற்சி எலும்புகளை உறுதிப்படுத்தும். நல்ல தூக்கத்தை கொடுக்கும். மனநலம் சீராக இருக்கும். எந்த மருந்து, மாத்திரையும் கொடுக்காத ஆரோக்கியத்தை உடற்பயிற்சி கொடுக்கிறது.

தினமும் ஒரு மணி நேரம் வீதம், வாரத்துக்கு 5 மணி நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப ஓரளவு விரைவான நடைப் பயிற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும். ஆனால், வேகமாக ஓடக்கூடாது. இரண்டு கி.மீ. முதல் 5 கி.மீ. வரை நடைப்பயிற்சி செய்யலாம். இதன் மூலம் இதயத் தாக்குதலை 50 சதவீதம் தவிர்க்கலாம். நடைப்பயிற்சியை வெறும் வயிற்றில் செய்யக் கூடாது. டீ, காபி, பால் போன்ற ஏதாவது ஒன்றை குடித்துவிட்டு நடைப்பயிற்சி செய்ய வேண்டும். குறிப்பாக, நீரிழிவு நோய் உள்ளவர்கள் நடைப்பயிற்சியின் போது சாக்லெட், சர்க்கரை, இனிப்பு மிட்டாய் போன்றவற்றை எடுத்து செல்ல வேண்டும். மயக்கமாக உணர்ந்தால் உடனே இனிப்பு சாப்பிடவும்.

நடைப்பயிற்சிக்கு செல்லும் முதியவர்கள் கட்டாயம் தங்களுடைய பெயர், வயது, முகவரி, என்ன நோய், சாப்பிடும் மாத்திரை, அவசரத்துக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி, அலைபேசி எண் ஆகிய தகவல்களை ஒரு அட்டையில் எழுதி சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம். அதை வியர்வையில் நனையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பார்வை குறைபாடு, பக்கவாதம், மூட்டு வலி பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் வெளியே செல்ல வேண்டாம். வீட்டுக்கு உள்ளேயே காலை, மதியம், மாலையில் தலா 10 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யலாம். வயதான பெண்கள் தரையில் படுத்து ஆசன பயிற்சிகளை செய்யலாம். முதியவர்களுக்கு வைட்டமின் ‘டி’ குறைவாக இருக்கும். வைட்டமின் ‘டி’ எலும்புகளை வலுவடைய செய்கிறது. அதனால் காலை 7 மணி, மாலை 5 மணிவாக்கில் நடைப்பயிற்சி செய்யலாம்.


தீவிர உடற்பயிற்சி கூடாது. உடற்பயிற்சியின்போது நாடித்துடிப்பு 120-க்கு மேல் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உடற்பயிற்சியின்போது இதயத்தில் படபடப்பு, இதயத்தில் வலி, மூச்சு விடுவதில் சிரமம், அளவுக்கு அதிகமான வியர்வை, உடல் ஜில்லிடுதல் மற்றும் மூட்டு வலி ஏற்பட்டால் உடனடியாக டாக்டரை சந்தியுங்கள்.
===========================================

ஈ ) நல வாழ்வு பகுதியில்:- 2.கொடிய நோயான ’ப்ரோகேரியா’ (Progeria) எனப்படும் வயது மூப்பு நோயால் பாதிக்கப்பட்ட பெண்:-
தெற்கு இங்கிலாந்தின் கிழக்கு சஸ்ஸெக்ஸ் நகரின் அருகேயுள்ள பெக்ஸ்ஹில் பகுதியைச் சேர்ந்தவர், ஹேய்லே ஓகினெஸ்.

17 வயது பெண்ணான இவர், கொடிய நோயான ’ப்ரோகேரியா’ (Progeria) எனப்படும் வயது மூப்பு நோயால் பிறவியில் இருந்தே பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சராசரி மனிதர்களைவிட 8 மடங்கு அதிகமாக வயது மூப்பை அடைந்து விடுவர். அதாவது, இவர்களுக்கு 10 வயதாகும்போதே 80 வயதை அடைந்தவர்களுக்குரிய உடல் தளர்ச்சியையும், முதுமையையும் இவர்கள் அடைந்து விடுவர். இவர்கள் சராசரியாக 13 வயது வரை மட்டுமே உயிர்வாழ முடியும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நோயை குணப்படுத்தும் மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியாளர்கள் தங்களது கண்டுபிடிப்புகளை ஹேய்லே ஓகினெஸ்-க்கு அளித்து இவரை ஒரு ஆய்வுப் பொருளாக பயன்படுத்தி வந்தனர்.

இதுதவிர, ‘காலத்தை கடந்த எனது மூப்பு’ என்ற தலைப்பில் தனது வாழ்க்கை வரலாற்றை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் புத்தகமாகவும் எழுதியிருந்தார். இந்த புத்தகத்தின் மூலம் ஹேய்லே ஓகினெஸ் மிகவும் பிரபலம் அடைந்தார். அது மட்டுமின்றி,  உலகளாவிய அளவில் ‘ப்ரோகேரியா’ தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நல்லெண்ண தூதராகவும் ஹேய்லே ஓகினெஸ் செயல்பட்டு வந்தார்.
இவரது மருத்துவ சிகிச்சைக்கு கருணை மனமும், ஈகை குணமும் கொண்ட பலர் நிதியுதவி அளித்து வந்தனர்.

இந்நிலையில், அவரது  17வது  வயதில் ஹேய்லே ஓகினெஸ் இயற்கையோடு இணைந்து விட்டதாக இவரது தாயார் இப்படி ஒரு அறிவிப்பு வெளியிட்டார் 


"என் குழந்தை வேறொரு நல்ல இடம்தேடி சென்றுவிட்டாள். இன்றிரவு 9.39 மணியளவில் எனது கரங்களில் சாய்ந்தபடி தனது இறுதி மூச்சை ஹேய்லே ஓகினெஸ் நிறுத்திக் கொண்டாள்’ என இவரது தாயார் கெர்ரி மரண அறிவிப்பாக வெளியிட்டார்"  இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரவ ஆரம்பித்ததும் லட்சக்கணக்கான மக்கள் ஹேய்லே ஓகினெஸ்-ன் ஆன்மா சாந்தியடைய அனுதாப செய்திகளை பகிர்ந்திருக்கிறார்.  

நன்றி-நா.ஈஸ்வரன்-புது தில்லி.
===========================================

உ ) சமையல் குறிப்புக்கள் / விருந்துக்கு வாங்க பகுதியில்:-

• சேனைக் கிழங்கைத் துருவி, அறிந்த வெங்காயம் உப்பு, காரம் சேர்த்து வதக்கி, வடைகளாகத் தட்டிப் போட்டுப் பொரித்து எடுத்தால் சூப்பராக இருக்கும்.

• அடை செய்யும் போது மிளகாய்க்குப் பதில் இஞ்சி மற்றும் மிளகு சேர்த்துச் செய்தால் சுவையாக இருக்கும். ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.

• வாழைத்தண்டு கூட்டு செய்யும் போது, அதனுடன் ஒரு பிடி முருங்கைக் கீரை துளிர் சேர்த்துச் செய்தால் சுவையாக இருக்கும்.

• மிளகாய்த் தூள் அரைப்பதற்கு முன்பு மிளகாயை நன்கு வெயிலில் காயவைத்து அரைக்க வேண்டும். அதேபோல் மிளகாய்த் தூள் அரைத்து வந்ததும், ஒரு பேப்பரில் கொட்டி ஆற விட வேண்டும். பிறகுதான் டப்பாவில் எடுத்து வைக்க வேண்டும்.

- எம்.ஏ.நிவேதா

==============================================
ஊ ) பாட்டி சொல்லைத் தட்டாதே பகுதியில்:-
வாழையின் பூ, தண்டு, காய், பழம், இலை என அனைத்தும் மருந்தாகி பயன்தருகிறது. பல்வேறு நன்மைகளை கொண்ட வாழையின் மகத்துவம் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம்.  வாழை பூவை பயன்படுத்தி மாதவிலக்கு பிரச்னைக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள் வாழைப்பூ, மோர். வாழைப்பூவின் மேலிருக்கும் தோல் பகுதியை நீக்கி பூக்களை எடுக்கவும். பூக்களின் தடிமனான தண்டு பகுதி, தோல் பகுதியை நீக்கவும். இதழ்களை பசையாக அரைக்கவும். இதிலிருந்து பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து, அரை டம்ளர் மோருடன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர மாதவிலக்கின்போது ஏற்படும் அதிகளவு ரத்தப்போக்கு பிரச்னை சரியாகும். ரத்த மூலம், சீத கழிச்சல் குணமாகும். 

ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை வாழைப்பூவுக்கு உண்டு. ரத்தசோகை வராமல் தடுக்கும் மருந்தாக விளங்குகிறது. வாழைப்பூவில் வைட்டமின் ஏ, சி, இ, பொட்டாசியம், கால்சியம், இரும்பு சத்துக்கள் உள்ளன. இது, உடல் தேற்றியாக விளங்குகிறது. வாழை பிஞ்சுவை பயன்படுத்தி அல்சருக்கான மருந்து தயாரிக்கலாம். வாழை பிஞ்சுவை துண்டுகளாக்கி உப்பு, நீர் சேர்த்து வேக வைக்கவும். பின்னர், இந்த துண்டுகளுடன் அதிகம் புளிப்பில்லாத கெட்டித் தயிர் சேர்த்து சாப்பிட்டுவர வயிற்று புண், வாய்ப்புண் சரியாகும். உணவுக் குழாயில் புண் இருந்தால் ஆறும். 

வாழையின் அனைத்து பகுதிகளும் துவர்ப்பு சுவையை அடிப்படையாக கொண்டது. அதிக ரத்தப்போக்கு பிரச்னைக்கு துவர்ப்பு சுவை உடைய உணவுகள் மருந்தாக விளங்குகிறது. வாழை பிஞ்சுவை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் புண்கள் விரைவில் ஆறும். வாழை தண்டுவை பயன்படுத்தி சிறுநீரக கற்களை கரைக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வாழைத்தண்டு, உப்பு, பூண்டு, மிளகு. வாழைத்தண்டுவை சிறு துண்டுகளாக்கி அரைத்து சாறு எடுக்கவும். இதனுடன் பூண்டு தட்டிப்போடவும். உப்பு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதனுடன் மிளகுப்பொடி சேர்த்து சாப்பிடும்போது சிறுநீரக கற்கள் கரையும்.


வாழைத்தண்டு சிறுநீரக கற்களை உடைக்கும் தன்மை கொண்டது. சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல், புண்களை சரிசெய்யும். தேவையில்லாத கொழுப்பு சத்தை குறைக்க கூடியது. உடலுக்கு நல்ல ஆரோக்கியம், ஊட்டத்தை தருகிறது.  வாய்ப்புண்ணுக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். வயிறு புண்ணாக இருந்தால்தான் வாய்ப்புண் வருகிறது. ரோஜா இதழ்களை அரைபிடி எடுத்து நீரில் இட்டு காய்ச்சி இனிப்பு சேர்த்து குடித்துவர வாய்ப்புண், வயிற்றுபுண் குணமாகும். நின்றிகளுடன் திருமதி ராகவன்.
==============================================
"கைத்தொழில்-கற்றுக்கொள்ள வாருங்கள்"- பயிற்சி வகுப்பில் இந்தமாதம்-
கைத்தொழில் பகுதியில் இந்தமாதம், வழங்கியவர்:- புது தில்லி திருமதி விசாலம் மாமி அவர்கள்.
"கைத்தொழில்-கற்றுக்கொள்ள வாருங்கள்"- பயிற்சி வகுப்பில் இந்தமாதம்-நவராத்திரி கொலு பிசினஸ் செய்யலாம் வாங்க:- 
அந்தக்கால கொலுவில் அதிக சிரத்தை, பக்தி இருந்தது. இந்தக்காலத்தில் பக்தியை விட புகழுக்கு ஆசை, தற்பெருமை போன்றவை முக்கியத்துவம் பெருகிறது இதற்கு விதிவிலக்கு இருக்கலாம். அந்தக்காலத்தில் கல்லுரல், அம்மி, குழவி தவிர பிரசாதம் செய்ய வேறு உதவியில்லை. ... இக்காலத்திலேயோ பலவிதமான் மிக்ஸி, அல்லது ரெடிமேட் மாவு, விற்கப்பட்டு வேலைபளுவை மிகவும் குறைக்கிறது, அந்தக்காலத்தில் கொலு மூலம் பல உறவினர்கள் கூடும் வாய்ப்பும், தினமும் மஞ்சள் குங்குமம் கொடுக்கும் பாக்கியமும், வீட்டுத்தலைவிக்கு கிடைத்தது. உறவினர்களின் இணைப்பால் குடும்பம் மேலும் வலிமை பெற்றது , இதனால் வளரும் சிறுமிகளுக்கும் நம் கலாச்சாரம் தெரிய வந்து, அதில் அவர்கள் ஈடுபட்டு கலாசாரமும் வளர்ந்தது. இப்போதோ பத்து நாட்களில் தமக்கு சௌகரியமான நாளை தேர்ந்தெடுத்து அன்று மட்டும் மஞ்சள் குங்குமம் கொடுக்க அநதப்பெண்மணியின் பங்கு அன்றோடு முடிந்து விடுகிறது......... சரி சாப்ஜக்டுக்கு வருவோம்..... 
மூன்று தலைமுறை கொண்ட ஒரு குடும்பம்.....பாட்டி ராஜம்மா ,மருமகள் ராஜி , பேத்தி லலிதா .கொலு சமீபிக்கும் நேரம், பாட்டிரொம்ப ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கிறார். பின் தன் பேத்தியை அழைக்கிறார்.

“ஏண்டி லல்லி கொலு வரதே. இந்த வருஷம் என்ன புதுசா வைக்கப்போறே? தலைவிரிக்கோலமாய் லல்லி வருகிறாள் ஒரு திராட்சைக்குலை காதில் தொங்கியபடி தோளை இடிக்கிறது .

“பாட்டி நான் இந்தக்கொலுவுக்கு ஒரு பிசினஸ் ஆரம்பிச்சிருக்கேன் .கொலு கான்ட்ரேக்ட் பிசினஸ்.”

“அதென்னடி கொலு கான்ட்ரேக்ட் ?’

அதுவா .வந்து ….அது சஸ்பென்ஸ் பாட்டி கொலுக்கு முதல் நாள் நான் உனக்கு சொல்றேன். இப்ப வெளிலே எனக்கு நிறைய வேலை இருக்கு. பை பாட்டி, பை அம்மா.............. 

பாட்டி தன் மருமகளை அழைக்கிறார்.” ஏண்டி ராஜி என்ன சும்மாவே இருக்கே ! இன்னும் பொம்மை எடுக்கலை. இன்னும் படி கட்டலை . இந்த வருஷம் என்ன பண்றதா உத்தேசம். லல்லி என்னவோ பிசினஸ் ன்னு சொல்லிட்டு போறா. என்னமோம்மா......இந்தக்கால பொண்களை என்ன சொல்றது?’ 
“அம்மா நான் என்ன செய்யட்டும்? உங்க பேத்தி ஏதோ கொலு பிசினஸ் செய்யறாளாம் அதோட பேரு முத்தேவி என்டர்பிரைஸ். என்னை கவலப்படாம இருக்க சொல்றா.”

காட்சி இரண்டு:-
கொலுவுக்கு முதல் நாள். வாசலில் பெல் அடிக்க .கதைவைத் திறந்தாள் பாட்டி. இரண்டு பேர்கள் டை கட்டியபடி ஜோராக நின்று வணக்கம் செலுத்தினர் ..... “பெரியம்மா இதுதானே முப்பதாம் நம்பர் வீடு?” 

“ஆமாம் .நீங்கள்ளாம் யாரு ?”

“நாங்க முத்தேவி கம்பெனிலேந்து வந்திருக்கோம்.’

“அதுக்கு இங்க ஏன் வந்திருக்கேள்?

“உங்க வீட்ல கொலு வைக்கணும் ஆர்டர் வந்திருக்கு பெரியம்மா, எங்க கொலு வைக்கணும் ?எத்தனை படிகள் வைக்கணும்?

பாட்டி வழக்கமாய் வைக்கும் இடத்தைக்காட்ட அவர்களும் அந்த இடத்தை மேற்பார்வையிட்டார்கள்..... 

“பெரியம்மா இந்த இடத்தில் ஐந்து படிகள் கட்டினால் கதவு திறக்க இடஞ்சலாக இருக்கும். அந்தக்கார்னர்லேந்து வச்சாக்க இடமும் இருக்கும். போக வர வழியும் இருக்கும். ஒரு ஐந்து நிமிஷத்ல நாங்க வறோம்” என்றபடி வெளியே சென்று பின் அழகான ஹின்டேலியம் படிகளுடன் வந்தனர். மளமளவென்று படிகளைப் பொருத்தினர் .மேலே அழகான நம் கொடி போன்று மூன்று கலர் கொண்ட ஒரு துணியை விரித்தனர். பின் பாட்டியைப்பார்த்தனர்.
“பெரியம்மா ,கொலுவில் எந்த மாதிரி பொம்மை வேணும், சொல்லுங்க, சிவன் பார்வதியா. அனந்த சயனமா, தேச தலைவர்களா .,காந்தியா நேருவா……..அப்பறம் விவேகானந்தர் . ராகவேந்திரர் ன்னு நிறைய இருக்கு”...... 

“எல்லாம் கலந்து இருக்கட்டும் .தம்பி" 

“சரிங்க”.........என்று சொன்னபடி அவர்கள் கொலு வைக்க ஆரம்பித்தார்கள். அழகாக முதல் படியில் கலசம் பின் ஆண், பெண் மரப்பாச்சிக்களுடன் ஆரம்பித்து கன கச்சிதமாக வைத்து முடித்தனர்.....பின் அழகான ரங்கோலி போடப்பட்டது. அருகில் அண்ணா ஹஸாரே உண்ணா விரதம் இருப்பதும்......மியூசிக் அகாடமியில் பாட்டுக்கச்செரி சீனும் மிக அழகாக.... ஒரு கால் மணி நேரத்தில் செய்து முடித்துவிட்டனர். 
“பெரியம்மா நாங்க கொலு வச்சுக்கொடுத்துட்டோம் தினமும் சுண்டல் , வடை, பாயசம் செஞ்சு கொடுக்கறோம். பத்து நாளுக்கும் சேர்த்து ஆர்டர்  சொன்னால் 20% தள்ளுபடி ” 
“அப்படியா ? சரி எத்தனை சார்ஜ் வாங்கறே?”

“வெத்தலை. பாக்கு. மஞ்சள், குங்குமம் பையோட ரூ,10000. ஆனா இது உங்க வீட்டு சின்னம்மாவோட கம்பெனி.  அதனாலே ரூபாயை அவங்க கிட்டே கொடுத்துடுங்கோ”

“வேறு என்ன ஸ்பெஷல் செஞ்சு தரே?”

“கொலுக்கு முதல் நாளிலிருந்து. கடைசி நாள் வரை புடவை .சட்டை மாட்சிங்காக எடுத்து பிரஸ் செய்து தறோம் .அதுக்கு தனியாக ரூபாய் வாங்கறோம் .ஒரு நாளைக்கு நூறு ரூபாய் .தவிர வாசல்ல மாக்கோலம் காவியுடன் போட்டுக்கொடுக்கறோம்."
இந்த நேரத்தில் லல்லி நுழைகிறாள் . “என்ன பாட்டி .என்ன அம்மா கொலு வச்சாச்சா? ரொம்ப கவலைப்பட்டாயே பயந்தாயே!........ 

“நன்னா இருக்குடி இந்த பிசினஸ் ! எத்தன வீட்டை ஆர்டர் பிடிச்சிருக்கே?” 

இது வரை 200 வீடுகளுக்கு ஆர்டர் கிடைத்திருக்கு. இதுக்குன்னு தனியா இரண்டு பேரை ரெக்ரூட்டும் செஞ்சிருக்கேன். அவாளுக்கு நல்ல ஸேலரியும் தரேன் . நமக்கும் நல்ல லாபம் கிடைக்கும்.

“கிடைக்காம என்ன செய்யும் ? இந்தக்காலத்தில் உடம்பு நலுங்காம கொண்டாடத்தானே உங்கள மாதிரி பெண்ணுக்கு பிடிக்கிறது. சரி வேறு என்ன ஸ்பெஷல் வச்சிருக்கே?" 
“அதுவா பாட்டி. இன்னும் நிறைய பிளான் இருக்கு. முகத்துக்கு ஏத்தாற்போல் தலைக்கொண்டை போட்டு விடுகிறோம். தினமும் செய்ய வேண்டிய சுண்டல் பற்றியும் விளக்குகிறோம். ஆர்டர் கொடுத்தால் பிரசாதம் செய்தும் தருகிறோம் .என்ன அம்மா உனக்கு பிடிசிருக்கா எங்க பிசினஸ்? 

“லல்லி ..... நீ சொல்றதெல்லாம கேக்க நன்னாத்தான் இருக்கு. ஆனா சில மாடர்ன் பேமிலி ரொம்ப பெரிய ஹோதாவா, பந்தாவா கொலு வைப்பாளே, அவாளுக்கு எதாவது ஸ்பெஷல் உண்டா?” 
“ஒ உண்டே அவாளுக்கு பீஸா .பாஸ்தா ,நூடுல்ஸ்,சௌமீன், ஸ்பிரிங் ரோல் தவிர ஐஸ் க்ரீமும் கொண்டு தருகிறோம் .பிரண்டோட சேர்ந்து சாப்பிட அவாளுக்கு ரொம்ப பிடிக்கும்..... தவிர ஃப்யூசன் ம்யூசிக்கில் “லலிதா சஹஸ்ரநாமம்" சப்ளை செய்கிறோம். கர்பா டேன்ஸ் இப்போ பேஷன் ஆயிடுத்து.  அதுக்கு தகுந்த பாட்டும் டிவிடி/சீடி ல கிடைக்கும் .”
“ஆஹா கேக்கவே ரொம்ப இன்டெரெஸ்டிங்கா இருக்கே .ம்ம் அப்பறம்” …”

“அப்பறம் நாங்க கொலு காம்படிஷனுக்கும் அப்பிளிகேஷன் பார்ம் தந்து அத பில் அப் செஞ்சு அனுப்பறோம் சரி இன்னும் நாலு வீடு முடிக்கணும், போய்ட்டு வரோம் பெரியம்மா” 
“ஏதாவது சாப்பிட்டு போங்கோ . ஏ ராஜி இவாளுக்கு காபியும் கொஞ்சம் பக்ஷணமும் கொண்டு கொடு” 

இதோ வரேம்மா ” என்றபடி ராஜி வர “எள்ளுங்கறத்துக்குள் எண்ணெயா நிப்பா என் மாட்டுப்பெண் ” என்றாள் மாமியார் பெருமையுடன் ... 


நன்றிகளுடன், விவரங்களை வழங்கியவர் புது தில்லி திருமதி. விசாலம் அவர்களின், அன்னையின் அருள் http://meerambikai.blogspot.in வலைப்பதிவிலிருந்து. .........

==============================================
6. சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்"..... "பெரியோர்களின் ஆசிபெறும் மாதக் கொண்டாட்டம்" படத்தில் உள்ள 6 வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்- செப்டம்பர்-2016-புரட்டாசி-பெரியோர்களின் ஆசிபெறும் மாத, வலைப்பதிவு இதழ் போட்டி என்-06.

சரியான விடை அடுத்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" வலைப்பதிவர் இதழில் வெளியாகும். போட்டியில் பங்குகொள்ள விருப்பமுடையவர்கள் விடைகளை "vaishalireaderscircle@gmail.com" என்கிற மினஞ்சல் முகவரிக்கு 10-10-2016 முன்பாக அனுப்பிவைக்கவேண்டும். சரியான விடைஎழுதிய அனைவருக்கும் அடுத்தமாத வாசகர் வட்ட சந்திப்பில் பரிசுகள் வழங்கப்படும்.

$ சென்ற மாத "சுட்டீஸ் குல்கந்து" வலைப்பதிவர் இதழ்-5 ஆவணி -மாத இதழின் சகோதர, சகோதரிகள்  மாத, வலைப்பதிவு இதழ் போட்டி என்-05.("ரக்ஷா பந்தன் - சகோதர சகோதரி வாழ்த்துக்கள்")6-ஆறு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடை,
1. ராக்கி கயிறு, 2. பரிசு, 3. கையில் லட்டு, 4. தலையில் பூ, 5. சகோதரன் கையில் ராக்கி, 6.  தட்டில் தின்பண்டம்.

சரியான விடையை 31 நபர்கள் குறிப்பிட்டிருந்தனர், தமிழில் விடை எழுதியவர்கள்=11, ஆங்கிலத்தமிழில் எழுதியவர்கள்=14, ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=03, ஹிந்தி மொழியில்=03 நபர்களும், தெலுங்கு மொழியில்=0 நபரும், மேலும் சிலர் ஆறுக்கும் அதிகமான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.
==============================================
7. அறுவை ஆயிரம், பொன் மொழிகள், பழ மொழிகள், உலக மொழிகள், விடுகதைகள், பஞ்ச். :-தொகுத்து வழங்கியவர்... எ.கே. சபரீஷ்....

$ கண்ணா உயரம்னா, ‘எவரெஸ்ட்.......நீ உயரணும்னா, ‘நெவர் ரெஸ்ட்!

யோசிக்காம எல்லோரையும் நேசி. வாழ்க்கை ரொம்ப ஈசி.

$கண்ணா... தியானம் பண்ணினா மனசுக்கு நல்லது... தானம் பண்ணினா மனுஷனுக்கு நல்லது!

தொகுத்து  வழங்கியவர் எ.கே. சபரீஷ்....
==============================================
8. சொர்கமே என்றாலும்  நம்ம ஊரைப் போலவருமா?:- பயனுள்ள தமிழ் வலைப்பதிவர் பக்கங்களில் இந்தமாதம் பகுதி:
தமிழக பள்ளி ஆசிரியர் கார்த்திகேயன் அவர்களின் "கல்விச் சிறகடுகள்" http://rkkalvisiragukal.blogspot.in/ என்கிற வலைப் "பூ" பக்கத்தில் சிறுவர் பகுதியை மிகவும் அருமையான வகையில் பல கல்வி சார்ந்த குறிப்புக்களையும்,  கதைகளையும்  பதிவு செய்து வருகிறார். சிறு கதைகளில் விருப்பமுடைய அனைவருக்கும் மிகவும் பயனுள்ள வலைப்பதிவுப் பக்கமாக திகழ்கிறது. அவருக்கு நமது நன்றிகளை தெரிவித்துக்கொண்டு, நமது (NCR-புது தில்லி) வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ்களுக்கு பயனுள்ள வலைப்பதிவு பக்கமாக மேற்கண்ட அவரது வலைப்பதிவுகளை  முன்மொழிவதில் மகிழிச்சியடைகிறோம்.

==============================================
9. கருத்து சொல்லப்போறேன்:- (A.K.சபரிஷ்)

$செய்த உதவியை வெளியே சொன்னா உதவிக்கு மதிப்பில்லை, செய்யப் போற உதவியை வெளியே சொன்னா உதவுறதிலே அர்த்தமில்லை!

$கெட்டத, கேட்ட உடனே மறக்கணும், நல்லத நாலு பேர்கிட்டயாவது சொல்லணும்!

==============================================
10. விடுகதைகள் :- (A.K.சபரிஷ்)
வெய்யிலோ, மழையோ...  
பொழிந்தபோது...
இரண்டு கால்...
மற்றநேரங்களில்...
மூன்றாவது கால்....
அது என்ன?
(விடை- தாத்தா கைத்தடிக் குடை )

கருப்பன் தண்ணீரில் குளித்து வெள்ளையனாவான், வெள்ளையன் பிறகு விருந்தாவான் – அவன் யார்? (விடை-உளுத்தம் பருப்பு)

==============================================
11. கவிதை:- 
நட்சத்திர விடுதிக்கு 
போகும் வழியெங்கும் 
நட்சத்திரம்.... 
மின்னிக்கொண்டிருந்தது...(S.ஸ்ரீ சக்ரி)
================================

வெப்ப நகரம் 
கண்ணாடி மாளிகையின் 
கண்ணீரால் 
குளிர்ந்தது..... 
எதோ ஒரு சில 
மரங்களின் 
புண்ணியத்தால்... ( AK.பவித்ரா)
=================================
12. நமது வாசகர் வட்டத்தின் இந்த மாத சரித்திரம் முக்கியம் பகுதியில், 




மத்திய தொல்பொருள் துறையினர் மேற்கொண்டுள்ள ஆராய்ச்சிகளின் பலனாக, மதுரை மண்ணுக்குள் புதைந்து போயிருந்த ரகசியங்கள் வெளிக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. 2200 முதல் 2300 வருடங்களுக்குள் வாழ்ந்த நம் மூதாதையர்களின் கிராமத்தைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஓர் அரிய வாய்ப்பு தொல்பொருள் துறையினரால் சாத்தியமாயிற்று...."மதுரை 
கீழடி - மண்ணுக்குள் மறைந்திருந்த நம் மூதாதையர் கிராமம் - வனிலா பாலாஜியின் மூன்றாம் கண் (13)" ----11 படங்களுடன் ஒரு பகிர்வு.





மற்றுமொரு சிறப்பு என்னவென்றால், தமிழ்நாட்டை பொருத்தவரை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பழங்காலத்து நாணயங்கள், அணிகலன்கள், முதுமக்கள் தாளி, நடுகற்கள் போன்ற மக்கள் உபயோகப்படுத்திய பொருட்களை மட்டுமே கண்டுபிடித்து வந்துள்ளார்கள். மக்கள் வாழ்ந்த வீடுகள், வீட்டின் சுவர்கள் ஆகியவற்றை கண்டுபிடித்திருப்பது இதுவே முதன்முறை. மேலும்,  அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள உறை கிணறுகள், நம்மில் சில வருடங்களுக்கு முன்பு வரை உபயோகத்தில் இருந்த உறை கிணறுகளை ஒத்திருக்கின்றன.


நன்றி http://www.atheetham.com/2015/09/13_2.html
===============================================

13.விளம்பரதாரர் நிகழ்ச்சி பகுதியில்:- 

14.பயனுள்ள முகநூல் பக்கங்களில் இந்தமாதம் பகுதி:- 
சிறந்த முகநூல் பக்கங்களாக  
1. குறிஞ்சிகுறிஞ்சிப்பாட்டில் மாம்பூவும் தில்லைப்பூவும் சொல்வதென்ன.. என்கிற முகநூல் பொதுக்குழு சுவற்றில் பழந்தமிழ் நூல்களைப் பகுத்தளித்துள்ள பாங்கு பயில்வோருக்குத் தந்த பலாச்சுளை. என பல விவரங்களை தனது முகநூல் பொதுக்குழு சுவற்றில் திருமதி கமலா பாலச்சந்தர் அவர்கள் தொகுத்து தந்திருக்கிறார். 
மேலும் 2. முகநூலில் சிறுகதைகள் என்னும் முகநூல் பக்கத்தையும் 
http://www.facebook.com/siru.kathaigal நமது வாசகர் வட்ட குழுவினர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம். 

15. வாசகர் வட்ட நிகழ்ச்சியின் சிறப்பு புகைப்படங்கள் :-
வாசகர் வட்ட நிகழ்ச்சியின் போட்டியில் பங்குபெற்றவர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

பகுதி II -கால்வண்ணம் :- (நடனம், நாடகம், விளையாட்டு போட்டிகள்) :-


அன்புள்ள வாசகர்களுக்கு:- நாங்கள் தொகுத்து வழங்கிய பதிவுகளில் உள்ள குறை நிறைகளை வாசகர்கள், அன்பான முறையில் எங்களுக்கு எடுத்துக்கூறி, எங்களது பதிவுகள் மேலும் சிறப்படைய வாழ்த்தி உற்சாகப்படுத்துமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு   
வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ் தமிழ் ரோஜாக்கள்.
நன்றி... மீண்டும் அடுத்தமாத இதழில் சந்திப்போம்... வணக்கம். 

1 comment: