"தமிழ் ரோஜாக்களின் குல்கந்து"

"தமிழ் ரோஜாக்களின் குல்கந்து"

Sunday, October 16, 2016

சுட்டீஸ் வலைப்பதிவர் பூவிதழ்= 07 ஐப்பசி மாதம்-தேதி 16-10-2016.

"சுட்டீஸ்-குல்கந்து" ஐப்பசி மாத வலைப்பதிவர் பூவிதழ்-7" நாள்/தேதி:- ஆங்கில மாதத்தின் 3-வது ஞாயிறு 16-10-2016.


கற்க கசடற….!!                               !வாய்மையே வெல்லும்!!

 “வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம்
Vaishali, Ghaziabad, NCR-New Delhi.
e-mail:  vaishalireaderscircle@gmail.com
___________________________________________________________________
சுட்டீஸ் இதழ்= 07 ஐப்பசி மாதம்-தேதி 16-10-2016. வணக்கம், தாங்களின் வருகைக்கு நன்றி, எங்களின் இந்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழில்" - ஐப்பசி மாத வலைப்பதிவு:- இந்த இதழின் ஆசிரியராக, தொகுத்து வழங்குபவர்:-(Editor of the Page) செல்வி D.துர்கா, செக்டர்-4, வைஷாலி, காசியாபாத், NCR-NEW DELHI

அக்டொபர்-31, உலக சிக்கன தினம் (Word Thrift Day). வைஷாலி வாசகர் வட்ட 32வது சந்திப்பு...16-10-2016 ஐப்பசி மாதம் -சிக்கனம் மற்றும் சேமிப்பு மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும்... 

”சேமிப்பு இல்லாத குடும்பம் , கூரையில்லாத வீடு “

"சேமிப்பு பழக்கத்தை முதலில் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க பாடமாக இருக்கவேண்டும் வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கொடுக்கும் பெரிய சொத்தே இந்த சேமிப்பு பழக்கம் என்பதை, முதலில் கற்றுத்தரும் பாடமாக இருக்கவேண்டும்."  

அடுத்து வரும் நவம்பர்-2016, 20-11-2016 கார்த்திகை மாத வலைப்பதிவு இதழின் ஆசிரியராக, (Editor of the page) இந்த வலைப்பக்கத்தை தொகுத்து வழங்க ஆவலுடன் காத்திருப்பவர் யார்? விருப்பம் உள்ளவர்  உங்கள் விருப்பத்தை உடனே தெரியப்படுத்துங்கள். மின் அஞ்சல் "vaishalireaderscircle@gmail.com"

16-10-2016 இன்று நமது 32-வது வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில்:- ,  
ஐப்பசி மாத வாசகர் வட்டத்தின் :-32வது சந்திப்பில் (16-10-2016) முதலில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் தொடர்ந்து அக்டொபர்-31, உலக சிக்கன தினம் (Word Thrift Day). ஐப்பசி மாதம் -சிக்கனம் மற்றும் சேமிப்பு மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும்.. வாழ்க்கையை வளமாக்கும் உலக சிக்கன தினத்தின் (Word Thrift Day). சிறப்புக்கள் பற்றியும் ஒரு அலசல்.... 

இந்தியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளிப் பண்டிகை, இந்த ஐப்பசி மாதத்தில் 29-10-2016 அன்று கொண்டாடப்படுகிறது.  தீபாவளி பண்டிகையை தமிழர்கள் அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்து புத்தாடை அணிந்து, கடவுளை வழிபட்டு கொண்டாடுகிறார்கள். 

நரகாசுரனை கிருஷ்ண பகவான் அழித்து, அசுரனின் பிடியில் இருந்த மக்களை மீட்டதால், அசுரனை ஒழித்து வெற்றி பெற்ற நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.

தவிர, தீமையை நன்மை வெல்வதாகவும், இருள் அகன்று ஒளி பிறக்கும் நாளாகவும் தீபாவளி கொண்டாடப்படுகிறது.

வட மாநிலங்களில் லட்சுமி பூஜை, இராவணனை ராமன் அழித்து அயோத்திக்கு சீதையுடன் திரும்பிய நாளாகவும் கொண்டாடப்படுகிறது.

தீபாவளியன்று வீடுகளில் தீபங்களை ஏற்றியும், பட்டாசுகளை கொளுத்தியும், இனிப்புகளை சாப்பிட்டும் உவகையுடன் மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.


தீபாவளிக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. இது இந்துக்கள் பண்டிகை என்றாலும், இந்தியா முழுவதும் இந்த விழாவை சாதி, மத வேறுபாடின்றி அனைத்து தரப்பினரும் கொண்டாடுவதை காணலாம். எனவே, இதை தேசிய திருவிழா என்றும் கருதலாம்.

தீபாவளியை கொண்டாடுவதற்கான நேரம் எது?
நரகாசுரன் வதம் செய்யப்பட்ட நிலையில், "நான் முக்தி அடைந்த தினத்தில், அனைவரும் புண்ணிய லோகத்தை அடைய வேண்டும் என்றும், புண்ணிய நதிகளில் முதன்மையான கங்கையில் நீராடிட வேண்டும் என்றும் நரகாசுரன் வேண்டுகோள் விடுத்தான்'' என்று புராணங்களில் கூறப்பட்டு உள்ளது.

ஐப்பசி மாதம் அதாவது துலா மாதம் சூரியன்-சந்திரன் ஒன்று கூடும்(அமாவாசை) தினத்தில், நள்ளிரவு முடிந்து, அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்துக்கு முன்பு(அதுதான் நரகாசுரனை வதம் செய்த நேரம்) சூரியன், சுவாதி நட்சத்திரத்தில் இருக்கையில், சந்திரன் கூடுகிற சதுர்த்தசி திதியில், நல்லெண்ணெய் தேய்த்து, வென்னீரில் குளிக்க வேண்டும். வென்னீரில் கங்கை வாசம் செய்வதாக கூறப்படுகிறது.

சுடு தண்ணீரைக்கூட எப்படி தயாரிக்க வேண்டும் என்றும் புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது, தீபாவளிக்கு முன் தினம் இரவில், வென்னீர் வைக்கும் பாத்திரத்தில், சூரியன்-சந்திரன் படம் வரைந்து, தண்ணீர் ஊற்றி, பாத்திரத்தில், ஆல், அரசு, அத்தி, பூவரசு ஆகிய 4 மரங்களின் பட்டைகளைப்போட்டு மூடி வைத்து விடவேண்டும். 

குறைந்தது 2-1/2 மணி நேரத்துக்குப் பின், தண்ணீரை சூடு செய்து, எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தசி, துவாதசி, அஷ்டமி, சப்தமி, சஷ்டி, சங்கரமனம் இவைகளில் எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது என்று சொல்வார்கள். திதி வார நட்சத்திர முதலிய எவ்விதமான தோஷம் இருப்பினும் தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது எந்த தோஷமும் எவரையும் பாதிக்காது.

அதிகாலை 3 மணியில் இருந்து 5 மணிக்குள் சதுர்த்தசி திதி, எண்ணெய் குளியலுக்கு உகந்த நேரம் ஆகும்.

தீபாவளி தினத்தில், வென்னீரில்தான் குளிக்க வேண்டும். வென்னீரில் குளிப்பது கங்கையில் குளிப்பதற்கு சமம் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 3 மணியில் இருந்து 4 மணிவரையில் குரு ஹோரை நேரம் ஆகும்.

குளித்து முடித்தபின், வீடு முழுவதும் தீபம் ஏற்றி, சுவாமி, அம்பாள் முன்பாக இனிப்பு வகைகளுடன் புத்தாடையை வைத்து பூஜை செய்து தீபாவளியை மகிழ்ச்சியோடு கொண்டாடவேண்டும்.

சிவபெருமான் தன்னிடம் எப்போதும் அன்பாக இருக்கவேண்டும் என்பதற்காக, தவம் இருந்த நிகழ்வே கேதார கவுரி விரதமாக கருதப்படுகிறது. கணவன்-மனைவி இடையே எப்போதும் ஒற்றுமை நிலவ வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் பெண்கள் தீபாவளி தினத்தில், இந்த விரதத்தை மேற்கொள்கிறார்கள்.

தீபாவளி அன்று காலை 6 மணியில் இருந்து 9 மணி வரை, 10 மணியில் இருந்து 10.30 மணி வரை, மாலை 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரையில் கேதார கவுரி அனுஷ்டிப்பதற்கு உகந்த நேரம் ஆகும்.
=========================================

ஏன் தீபாவளி? பட்டாசு வெடிப்பது எதனால்?
#தீபாவ‌ளியை நரக சது‌ர்‌தசி எ‌ன்று‌ம் அழை‌ப்பா‌ர்க‌ள். ஐ‌‌ப்ப‌சி மாத‌த்‌தி‌ல் சூ‌ரிய‌ன் துலா ராசி‌யி‌ல் இரு‌ப்பார். அ‌ப்போது தே‌ய் ‌பிறையான (‌கிரு‌ஷ்ண ப‌ட்ச‌ம்) 14ஆ‌ம் நா‌ளி‌ல் கொ‌ண்டாட‌ப்படு‌ம். ‌தி‌ரியோத‌சி இரவு சது‌ர்த‌சி காலை கொ‌ண்டாட‌ப் பெறுவ‌தினா‌ல் இத‌ற்கு நரக சது‌ர்‌த்த‌சி எ‌ன்று வழ‌ங்க‌ப்படு‌கிறது.

#தீபாவ‌ளி எ‌ன்றா‌ல் ‌‌தீப‌ங்க‌ளி‌ன் வ‌ரிசை எ‌ன்று பொரு‌ள் உ‌ண்டு. ராம‌பிரா‌ன் இல‌‌ங்கை செ‌ன்று ராவணனோடு கடு‌ம் போ‌ர் பு‌ரி‌ந்து, தனது இ‌ல்லாளான ‌(மனை‌வி) சீதா ‌பிரா‌ட்டியாரை ‌மீ‌ட்டு‌க் கொ‌ண்டு அயோ‌த்‌தி‌க்கு ‌திரு‌‌‌ம்‌பி வ‌ந்தா‌ர். த‌ன் வனவாச‌ம் முடி‌ந்து நா‌ட்டை ஆள வரு‌ம் வெ‌ற்‌றி ‌வீர‌ர் ராமரை வரவே‌ற்க ம‌க்க‌ள் ‌மிகவு‌ம் ம‌கி‌ழ்‌ச்‌சியாக ‌தீப‌ங்களை ஏ‌ற்‌றி கொ‌ண்டாடினா‌ர்க‌ள். அதனா‌ல்தா‌ன் ‌தீபாவ‌‌ளி அ‌ன்று ‌திரு‌விள‌க்குகளை வரிசையாக ஏ‌ற்‌றி வை‌க்கு‌ம் வழ‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டதாக கூறுவா‌ர்க‌‌ள்.

#இற‌க்கு‌‌ம் ‌நிலை‌யி‌ல் இரு‌ந்த நரகாசுர‌ன், ஸ்ரீ கிரு‌ஷ்ண‌னி‌ன் காலை ‌பிடித்துக்கொண்டு, பகவானே எ‌ன்னுடைய சாவு கெ‌ட்டவ‌ர்களு‌க்கு ஒரு பாடமாக இரு‌க்க வே‌ண்டு‌ம். கொடியவனாக நா‌ன் இற‌க்கு‌ம் இ‌ந்நாளை ம‌க்க‌ள் அனைவரு‌ம் அ‌‌ல்ல‌ல் ‌நீ‌ங்‌கிய ந‌ன்நாளாக ம‌ங்களகரமான நாளாக கொ‌‌ண்டாடி ம‌கிழ வே‌ண்டு‌ம் எ‌ன்று வே‌ண்டினா‌ன். ‌கிரு‌ஷ்ண பகவானு‌ம் அ‌வ்வாறே அவனு‌க்கு அரு‌ளினா‌ர். இதனா‌ல் தா‌ன் நரகாசுர‌ன் இ‌ற‌ந்த நாளை‌த்தா‌ன் ‌தீபாவ‌ளியாக கொ‌‌ண்டாடி வரு‌கி‌ன்றன‌ர் எ‌‌ன்று ஜ‌தீக‌ம் கூறு‌கிறது. 

#துலாம் மாதத்தில் வரக்கூடிய சதுர்தசி திதியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட வேண்டும் என சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. சதுர்தசி திதியும், அமாவாசையும் இணைந்த நேரத்தில்தான் நரகாசுர வதம் நடந்தது என புராணங்கள் கூறுகின்றன. எனவே சதுர்தசி, அமாவாசை சந்திக்கும் நேரமே அல்லது நாளே தீபாவளி கொண்டாடுவதற்கு உகந்த நாளாகும். 

#மேலும் பாட்டசை வெடிப்பது எதனால்-
ஸ்ரீ கிருஷ்ண பகவான் நரகாசுரனின் தலையை துண்டித்தபோது மிகப்பெரிய பிரகாசமான வெளிச்சம் தோன்றியதாம், அதாவது கெட்டவைகள் அழிந்து மிகப்பிரகாசமான நல்லவை பிறந்தது என்று பொருள்படும் விதமாக பட்டாசை வெடித்து அதுபோன்ற ஒரு காட்சியை நாமும் கண்டு களித்திடவே... பட்டாசு வெடி வெடிக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கலாம்.

இந்த இனிய தீபாவளி நாளில் மகிழ்ச்சி பொங்கி, என்றென்றும் இன்பம் தழைக்கட்டும் என வைஷாலி வாசகர் வட்டத்தின் சார்பாக எங்களது இனிமையான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அனைவருக்கும்  தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

தொடர்ந்து வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பின் எங்கவீட்டு நூலகம்,  படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும் (தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம்) மற்றும் இந்த மாத தலைப்பைச் சார்ந்த போட்டிகளும் பரிசுகளும்...  என நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக நடந்தது..........



சிறப்பு விருந்தினர் பகுதியில்,   வைஷாலி வாசகர் வட்ட 32வது சந்திப்பின் சிறப்பு விருந்தினராக திரு வெங்கட் சுப்பிரமணி அவர்கள் நம்மோடு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு "சிக்கனமும் சேமிப்பும்"  பற்றிய சிறப்புரையாற்றினார்.

மேலும் இந்த மாத சுட்டீஸ்களின் ஏராளமான செய்திகளை மிகவும் பயனுள்ள வகையில் நமது வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ் "குல்கந்து" குழுவினர்கள் தொகுத்து தந்திருக்கிறார்கள்....



அவர்கள் தொகுத்துத் தந்த பல ஆன்றோர்கள் / சான்றோர்கள் / பெரியோர்களின் அறிவுரைகளான சிக்கன மற்றும் சேமிப்பு மாதக் கொண்டாட்ட செய்திகளை ஒன்று சேர்த்து, அனைத்தையும் அழகாக கோர்த்து, ஒரு கதம்ப மாலையாக தொடுத்து தந்திருக்கிறார்கள். இந்த மாத வலைப்பதிவு இதழின் அனைத்து விவரங்களும்  உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம்.... இப்படிக்கு வாசகர் வட்ட  சுட்டீஸ் "குல்கந்து" ரோஜாக்கள். 
I. முதலில் குட்டி கல்கண்டு தகவல்கள்:- சேமிக்கும் வழிகள் 100 நூறு என்கிற தகவல்களை ஒன்றுதிரட்டி..
$ஒவ்வொரு குடும்பத்திலும் பட்ஜெட்போடும் பழக்கம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஒரு நிகழ்ச்சியை நடத்துவதற்கும் நாம் என்னென்ன செலவுகள் என்றும் அந்த செலவுகளுக்காக தொகையை எப்படி பெறுவது போன்ற பல வழிகள் குறித்து பட்ஜெட் என்கிற வரவு செலவு கணக்கு போடுவதும் அனைவருக்கும் தெரிந்ததே. ஒரு குடும்பத்திற்கான  வரவு, செலவு எவ்வளவு என்பதை அறிந்து அதற்குள் வாழ்க்கை நடத்துவது தான் மிகவும் பாதுகாப்பானது. அதிலும், எதிர்காலத்துக்கான சேமிப்பே நமது முதல் செலவாக இருப்பது மிக மிக முக்கியமானது. அந்த சேமிப்புக்கான வழிகள் என்ன? அது நமக்கு வழங்கும் பாதுகாப்புகள் என்னென்ன? சில சமயங்களில் ‘சேமிப்பு’ என்று பெயரில் நம் பணத்தை சுருட்ட வரும் வில்லங்கங்கள் என்ன என்பது பற்றியயெல்லாம் ‘அலர்ட் டிப்ஸ்’க ளை முன்னெச்சரிக்கை குறிப்புகளாக கீழ்வரும் 100 நூறு குறிப்புகள் தெரிவிக்கிறது. 

1. காலம் காலமாக பின்பற்றப்படும் சேமிப்பு, தங்கம். அதன்மீதான சேமிப்பு புத்திசாலித்தனமான ஒன்று.

2. டாலர், பவுண்ட் உட்பட எந்தப் பணமானாலும் அதன் மதிப்பு குறை ய வாய்ப்பு உண்டு. ஆனால், தங்கத் தின் மதிப்பு மட்டும் எப்போதும் வளர் ந்துகொண்டேதான் இருக்கும். கடந்த பத்து ஆண்டுகளில் இதன் வளர் ச்சி 200 சதவிகிதத்துக் கும் மேல். எனவே, தங்கத்தில் சேமிப்பது எப்போதுமே உத்தரவாதம் மிக்கது.
3. ஷேர் மார்க்கெட், ரியல்எஸ்டே ட் போல தங்கம் வாங்குவதில் சட்டச் சிக்கல்கள் இல்லை. நம் பிக்கையான தரத்தில் கிடைத்தா ல் சட் டென வாங்கிவிடலாம்.
4. ஸ்விஸ் கோல்ட் போன்ற நம்பிக்கையான 24 காரட் தங்கம் வாங்கினால், அதை எந்த நாட்டுப் பணமாகவும் மாற்றலாம், எந்த நாட்டில் வேண்டுமா னாலும் மாற்றலாம்.
5. தங்க முதலீட்டில் நகைகள், நாணயங் கள், தங்கப் பத்திரங்கள் என பல்வேறு வடிவங்கள், வகைகள் உண்டு. வசதி, விருப்பத்துக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கலாம்.
6. பொதுவாக, தங்கத்தை பிஸ்கட்டாகவோ, நாணயமாகவோ வாங்கிச் சேமிப்பதுதான் ரிஸ்க் இல்லாதது.
7. முழுவதும் நகைகளாக வாங்கி வைப்பது செய்கூலி, சேதாரம் உட்பட பல்வேறு செலவினங்களை உள்ளட க்கியிருக்கிறது என்பதைக் கவன த்தில் கொள்ளவும்.
8. லட்சக்கணக்கான ரூபாய்க்கு வாங்கும் தங்கம், நகைகளைப் பாதுகாக்க சில ஆயிரம் செலவு செய்யத் தயங் காதீர்கள். நல்ல நம்பிக்கையான வங் கியின் லாக்கரில் பத்திரப்படுத்துங்கள்.

9. தங்கம் வாங்கும்போது தரத்தை உறுதிபடுத்திக் கொள்வது முக்கி யம். அது 18 காரட்டாக கூட இருக்கலாம். திரும்ப விற்கும்போதோ அல்லது அடகு வைக்கும்போதோதான் வில்லங்கம் தெரியவரும். ஆபரண நகை என்பது 22 காரட் இருந்தால்தா ன் தரமான தங்கம். எனவே, நம்பிக் கையான நகைக்கடைகளில் வாங்கு வதே நல்லது.
10. ‘கொஞ்சம் கொஞ்சமாக பணம் கட்டுங்க. ரெண்டு வருஷத்துல அஞ்சு பவுன் உங்க கையில…’ என்றெல்லாம் யாராவது சொன்னால் யோசியுங்கள். சொ ல்லும் கம்பெனியின் தரம், வரலாறு, தற் போதைய நிலை அனைத்தையும் தெரிந் தபின் இறங்குங்கள்.
ரியல் எஸ்டேட் நல்ல தேர்வு!
11. நிலத்தில்போட்ட பணம் நிலைக்கும் என்பார்கள். படிப்படியாகநீண்ட காலத்தில் விலையேறும். அதே சமயம், வேகமாக இறங்க வாய்ப்பில்லை.

12. பக்காவான நிலத்தை வாங்கிப் போடுவதி ல் உள்ள முக்கியமான நன்மை, அந்த அசையா சொத்தை யாரும் திருடிக்கொண்டு போக முடியாது என்பது. சரியான டாக்குமென்ட், பத்திரம், பட்டா என சர்வமும் இருக்கிறதா என்பதை சரிபார்த்தபின் சந்தோஷமாக ரிய ல் எஸ்டேட்டில் முதலீடு செய்யுங்கள். வாங் கிப்போட்ட நிலத்தை யாரும் ஆக்கிரமிக்காமல் இருக்க… அடிக்கடி சென்று பார்த்துக் கொள்வது முக்கியம்.
13. நிலத்தை வாங்கினால் லோன் பெறுதல் போன்றவற்றுக்கு அது கை கொடுக்கும். நில த்தில் வீடு கட்டிய பின்பு மார்க்கெட் விலைக் கு ஏற்ப மேலும் லோன் எடுக்க முடியும்.
14. வங்கி வட்டி விகிதம், பணவீக்கம் என எல்லாவற்றையும் மீறி வளரும் தன்மை நிலத்துக்கு உண்டு. குறிப்பாக நகர்ப்புறங்கள், அதிக போக்குவரத்து வசதியுடைய இடங்க ள் போன்றவை எப்போதுமே ‘ஜாக்பாட்’ நில ங்கள்தான்.
15. விளைச்சல் நிலங்களில் முதலீடு செய்தால் வருடாந்திர குத்தகை போன்ற வற்றின் மூலமும் லாபம் பெறலாம். ரப்பர், முந்திரி, தேயிலை போன்ற தோட் டங்களில் முதலீடு செய்தால் சிறப்பான மாதா ந்திர வருமானமும் நிச்சயம்.
16. நிலத்தை நினைத்த நேரத்தில் விற்றுப் பணமாக்க முடியாது என்பது ஒரு சிக்கல். அதுபோல சமூக விரோத சக்திகள், அரசியல் பின்புலத்தில் உள்ள கில்லாடிகளெல்லாம் நம் நிலத்தை வளைத்துப் போட்டு அராஜகம் பண்ண வாய்ப்பு உண்டு. ஒரே நிலத்தை இரண்டு மூன்று பேருக்கு விற்கும் திரு ட்டுத்தனமும் உண்டு. இவையெல்லாம் உஷாராக இருக்க வேண்டிய சங்கதிகள்.
17. நிலத்தின் வருவாய் நீண்ட காலத்து க்குரியது. சரியான நிலத்தை வாங்கினால் காலம் முழுதும் நமக்குப் பயன் தரக்கூடியதாக இருக்கும்.
18. கையில் பணம் இல்லாவிட்டாலும் வங்கிக் கடன் மூலமாக நிலத்தை வாங்க முடியும். அதே சமய ம், வங்கிக் கடன் வாங்கும்போது கவனமாக இருப்பதோடு, தகுந்த ஆலோசனைக்குப் பிறகே வாங்க வேண்டும் என்பது முக்கியமான விஷயம்.
ஷேர் மார்க்கெட் பாதுகாப்பானதா?

19. அதிக ரிஸ்க் உடைய ஒரு முதலீடு இது. அதேபோல அதிக வருவாய் கிடைக்க வாய்ப்புள்ள இன்வெஸ்ட்மென்ட்டும் கூட! அடிக்கடி வெளியாகும் செய்திகளை வைத் து ஏகப்பட்ட நஷ்டம் போன்று தோன்றும். ஆனால், விழிப்போடு இருந்தால்… ஷேர் என்பது பெரும்பாலும் லாபகரமான தே! திறமையும் பொறுமையும் இருந்தால் கல க்கலாம்.
20. நல்ல நம்பிக்கையான கம்பெனிகளில் இன்வெஸ்ட் செய்தால் அதிக லாபம் கிடைப்பது உறுதி. அதற்கு நல்ல அலசல் திறமை அவசியம். கம்பெனிகளி ன் வரவு, செலவு, லாப விவரங்கள் தெரிந் திருப்பது அவசிய மானது.
21. போனஸ் ஷேர்ஸ் கிடைப்பது ஷேர் மார்க்கெட்டில் உள்ள ஒரு அட்வான்டேஜ்.
22. வங்கி வட்டியைவிட பலமடங்கு அதிக பணம் டிவிடென்ட் மூலம் வருவதற்குரிய வாய்ப்புண்டு. மார்க்கெட் நன்றாக இருந்தால் அதிக லாபம் ஈட்டலாம்.

23. பங்கு வர்த்தக பங்குகளை (ஷேரை) எளிதில் பணமாக்கிக் கொள்ளலாம். அதிக அலைச்சலோ, குழப்பமோ, பயமோ இல்லாமல் இருந்த இடத்தில் இருந்து கொண்டே ‘ஆன்லைன்’ மூலமாகப் பணமாக்கிக் கொள்ளும் வசதி இதில் உண்டு.
24. எந்த கம்பெனி ஷேர் ரிஸ்க்கானது என தோன்றுகிறதோ அதை சட்டென விட்டுவிட்டு வேறொன்றை வாங்குவது வெகு எளிது.
25. பங்கு வர்த்தகத்தில் / ஷேரில் உள்ள மிகப் பெரிய சிக்கல், நம் பகத்தன்மை. இன்று ஒரு லட்சம், நாளை பத்து லட்சம்,. என்று உயரும். அதேசமயம், மறுநாள்பத்தாயிரம்… வெறு ம் ஜீரோ என்றுகூட ஏற்ற, இறக்கங்கள் இங் கே சர்வ சாதாரணம். எனவே, தொடர்ந்து கவனிக்க இயலாதவர் கள், ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் ஷேர் மார்க்கெட்டை நாடாமல் இருப்பதே நல்லது.

மியூச்சுவல் ஃபண்ட், மிக நன்மை!
26. பங்கு வர்த்தகத்தில் / ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவர்களில் பலருக்கும் தயக்கமும் பயமும் இருக்கும். அவர்களுக்கு சிறப்பு வாய்ப்பாக / பெஸ்ட் சாய்ஸ் "மியூச்சுவல்ஃபண்ட்". இதுவும் வாங்குவர்த்தகத்தின் (ஷேர் மார்க்கெட்) சமாசாரம்தான். ஆனால், ரிஸ்க் குறைவான சமாசாரம்.
27. வங்கிக் கணக்கு, வருமானவரி கணக்கு என்- பான் கார்டு… இரண்டும் போதும் நீங்கள் மியூச் சுவல் ஃபண்ட்-ல் இன்வெஸ்ட் செய்ய. அதேபோல சில நூறு ரூபாய் தொடங்கி, பல லட்சக்கணக்கான ரூபாய்களையும் தாண்டி சேமிக்க இதில் வழி இருக்கிறது.
28. மற்ற முதலீடுகளைப் போலில்லாமல் ‘மியூச்சுவல் ஃபண்ட்’ என்பது இந்திய அரசின் ‘செக்யூரிட்டி மற்றும் எக்ஸ்சேஞ்ச் போர்ட்’-ன் கண்காணிப்பில் வருகிறது. அதே போல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஆடிட் போன்ற வைகளுக்கும் கட்டுப்படவேண்டும். இது முதலீட்டாளர்களுக்கு அதிக நம்பிக்கை தரும் விஷயமாகும்.

29. மியூச்சுவல் ஃபண்ட்டில் போடும் பணம், பல நிறுவனங்கள், பாண்டு கள், அரசு நிறுவனங்கள் என கலந்து கட்டி முதலீடு செய்யப்படும். அந்த முடிவை நல்ல ஒரு திறமையான நிதி நிபுணர் குழு தீர்மானிக்கும். எனவே, ஒரு கம்பெனி வீழ்ச்சியடைந்தாலும் ஒட்டு மொத்த பணத்தையும் பாதிக்காது.
30. மியூச்சுவல் ஃபண்ட்டில் ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை நம்பிக்கையான பாண்ட், அரசு நிறுவனம் போன்றவற்றில் போட்டுவிடுவதால் குறைந்த பட்ச லாபம் பெரும்பாலும் கிடைத்துவிடுகிறது.
31. ஓபன் எண்ட் (open-End) மற்றும் குளோஸ்டு எண்ட் (Closed-end) என்று இரு வகைகளில் மியூச்சுவல் ஃபண்ட்கள் உள்ளன. ஓபன் எண்ட் என்பது… எப்போது வேண்டுமானாலும் விற்றுப் பணமாக்கிக் கொள்ளக்கூடியது. குளோஸ்டு எண்ட் என்பது குறிப்பிட்ட கால வரையறைக்குப் பிறகே விற்கக்கூடியது. தேவைக்கு ஏற்றபடி தே வையானதை தேர்வு செய்வது நல்லது.
32. வருமான வரியை சேமிக்கும் வகையிலான மியூச்சுவல் ஃபண்டுகளும் உண்டு. அவற்றை ஈக்விடி லிங்டு சேவிங்ஸ் ஸ்கீம் (ELSS) என்பார்கள்.
33. சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) என்ற முறையிலான மியூச்சு வல் ஃபண்ட்களும் உண்டு. மாதந்தோறும் சிறுசிறு தவணையாக முதலீடு செய்யலா ம். மாதாந்திர சேமிப்பைக்கூட இப்படி முத லீடு செய்து நல்ல லாபம் பார்க்கலாம்.
34. மியூச்சுவல் ஃபண்டில் வரும் லாபத்தை, அப்படியே மியூச்சுவல் ஃபண்டில் மறுபடி மறுபடி இன்வெஸ்ட் செய்வது வெகு எளிது. வேறுசிக்கல் இல்லாமல் இந்த முதலீட்டுச் சக் கரம் சுழன்று கொண்டே இருக்கும்.
35. லாபத்தை மீண்டும் முதலீடு செய்ய விரும்பவில்லை எனில் வீட்டுக்கே ‘செக்’காசோலைகளாக வரவழைத்து பெற்றுக்கொள்ளலாம். வேறுசிக்கல்களோ , கவலைகளோ, அலைச்சல்களோ இல்லை.
இன்ஷுரன்ஸ் மேல் இஷ்டமா?!
36. இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நம்பும் ஒரு முதலீடு, காப்பீடுகள் இன்ஷுரன்ஸ்தான். பொதுவாக இன்ஷுரன்ஸ் முதலீடு என்பது மிகக் குறைந்த வருவாய் கொண்டது என்பார்கள். ஆனால், சிறு சேமிப்பு எனும் நோக்கில் பார்த்தால் நிச்சயமாக அது லாபகரமானதுதான். அதுமட்டுமல்ல, நம்முடைய ரிஸ்க்கையும் சேர்த்து அது தாங்கு கிறது என்பதுதான் முக்கியம்.
37. காப்பீடுகள் என்னும் இன்ஷுரன்ஸ் போட்டால்… எதிர்காலம் பாதுகாப்பானது என்பதனால் மக்களின் முதல் தேர்வு இதுவாகிறது. கடந்த ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பின்படி, சுமார் 44% சதவிகித மக்கள் இன்ஷுரன்ஸைத் தான் விரும்புகிறார்கள்.

38. முதலீடு எனும் நிலையைத் தாண்டி, விபத்து, மரணம் போன்ற எதிர்பாராத சிக்கல்களுக்குக் கைகொடுக்கும் என்பது தான் காப்பீடு / இன்ஷுரன்ஸ் மக்களைக் கவரக் காரணம். மெச்சூரிட்டி என்னும் முதிச்சி அல்லது விபத்து / அசம்பாவித சமயங்களில் பணம் கிடைக்கும்.
39. இன்ஷுரன்ஸில் பலவிதங்கள் உள்ளன. அதில் மணி பேக் பாலிஸியில் மூன்று அல்லது ஐந்து ஆண்டு களுக்கு ஒருமுறை குறிப்பிட்ட அளவு தொகை உங்களுக்கு வழங்கப்படும். மற்றபடி வழக்கமான காப்பீடு வசதியும் உ ண்டு.
40.ஓய்வூதிய காப்பீடுகள் / ரிட்டயர்மென்ட் இன்ஷுரன்ஸ்கள், இன்னொரு வசீகரத் திட்டம். எதிர்காலத் தின் நிலையைக் கணிக்க முடியாது என்பதால் இது பரவலாக விரும்பப்படுகிறது. ஆண்டுதோறும் குறிப்பிட்ட பணம் செலுத்தினால், குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு மாதம்தோறும் ஓய்வூதியம் / பென்ஷன் போல பணம் வந்துகொண்டிருக்கும். இந்தப் பென்ஷனைப் பெறுவதற்கான குறைந்தபட்ச வயது நாற்பது. பென்ஷன் தொடங்கும் வயதை உங்கள் விருப்பம் போல தேர்வு செய்யலாம்.
41. இன்ஷுரன்ஸ் மூலமாக குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு லோன் எடுத்துக் கொள்ளலாம். எந்த அளவுக்கு இன்ஷுர ன்ஸ் எடுத்திருக்கிறீர்களோ,. அதனடிப்படையில் உங்களுக்கு லோன்கி டைக்கும். வங்கிக் கடனைவிட வட்டி குறைவு என்பது குறிப்பிடத்தக் கது.
42. மாதாந்திர சம்பளம் வாங்குவோருக் கு இன்ஷுரன்ஸ் என்பது முதலீடு மட்டு மல்ல. அது வரி சேமிப்பு வழியும்கூட. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல. அதனாலேயே இது அவர்களால் பெரிது ம் விரும்பப்படுகிறது.
43. கல்வி, திருமணம், படிப்பு, வீடு என பல்வேறு திட்டங்களுடன் இன் ஷுரன்ஸில் முதலீடு செய்யலாம். எந்தத் திட்டம் சரிவரும் என் பதைமட்டும் கவனமாகத் தேர்வு செய்ய வேண்டும்.
44. குழந்தைகள் பெயரில் வங்கியில் ஃபிக் ஸட் டெபாசிட் போடுவதுபோல, இன்ஷு ரன்ஸிலும் போடலாம். இது இன்ஷுரன் ஸுக்கு இன்ஷுரன்ஸ், முதலீட்டுக்கு முதலீடு!
45. நம்முடைய இன்ஷுரன்ஸ் பணத்தை தகிடுதத்தம் மூலம் அபகரிப் பதற்கு பெரும்பாலும் வாய்ப்பே இல்லை. எனவே, அதிக நம்பகத் தன் மை இந்த முதலீட்டில் உண்டு.
46. இன்ஷுரன்ஸ் கம்பெனிகளும் இப் போது அதிக லாபம் தரும் முத லீட்டுத் திட்டங்களுடன் களமிறங்கியிருக்கின்ற ன. அவற்றுள்நல்ல, நம்பிக்கையான இன்ஷுரன்ஸ் கம்பெனியைத் தேர்ந்தெ டுத்துப் பயன் பெறலாம்.
வங்கிகளில் சேமிக்க வாருங்கள்!

47. வங்கியில் சேமிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கும் பிரசித்தம். சேமிப்பில் எப்போது வேண்டுமானாலும் பண த்தை அதிகரிக்கலாம். தேவைப்படும் போது எடுத்துக் கொள்ளலாம் போன்ற வை இதன் நல்ல அம்சங் கள்.
48. வங்கியில் குறைந்த லாபமே ஆனா லும் நிச்சயமாக அதிக நம்பிக்கை உண் டு. எனவே, வங்கிச் சேமிப்புகளில் பயம் வேண்டாம்.
49. நல்ல நம்பிக்கையான தேசிய வங்கிகள் பாதுகாப்பானவை. அதிலும் கூட, பணத்தை ஒரே வங்கியில் போடாமல், பல வங்கிகளிலும் பிரித் துச் சேமிப்பதால் உங்கள் பணம் அதிக உத்தரவாதத்துடன் இருக்கு ம்.
50. அதிக வட்டி கிடைக்கும் என்ப தற்காக, திடீர் தனியார் வங்கிகளி ல் முதலீடு செய்யவேண்டாம். பின்னணியை முழுதும் அறியாமல் உங்கள் வியர்வைப் பணத்தை யாரோ ஒருவரின் பாக்கெட்டில் போ டாதீர்கள்.
51. சேமிப்புக்கு வங்கியிலேயே பல திட் டங்கள் உள்ளன. மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட அளவு பணம் செலுத்தும் ஆர்.டி, ஃபிக்ஸட் டெபாசிட், முதியோரு க்கான சிறப்பு வட்டி திட்டங்கள் என பல உள்ளன. அவற்றை யெல்லாம் அலசி ஆராய்ந்து முதலீட்டைத் துவக்கினால் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.
52. கண்டிப்பாக ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு இந்தப்பணம் தேவைப் படாது என்பதைத்தெரிந்த பின்பே ‘ஃபிக்ஸட்டெபாசிட் செய்யுங்கள்.
53. காலம் மாறுகிறது. திட்டங்கள், லாபங்கள் எல்லாம் மாறுகின்றன. எனவே, ‘ஃபிக்ஸட் டெபாசிட்’ போன்றவற்றை பத்து ஆண்டு, இருபது ஆண்டு என நீட்டாமல் இருப்பது நல்லது. ஓரிரு வருடங்கள் என்பது சரியான அணுகுமுறை.
54. ஃபிக்ஸட் டெபாசிட்-ன் விதிமுறைகளை கவனமாகப் படியுங்கள். குறிப்பாக, பணத் தை எடுக்கும்போது ஏதாவது கட்டணம் வசூ லிப்பார்களா… குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாகவே திரும்பப் பெற்றா ல், உங்களுடைய லாபத்தில் எவ்வளவு குறையும் என்பதையெல்லாம்கண்டறியுங்கள்.
55. வங்கிகளில் நீண்டகால சேமிப்புகள் வை க்கும்போது ‘வாரிசு’ பெயரைத் தெளிவாகக் குறிப்பிடுங்கள். அது சரியாகக் குறிப்பிடப்ப டவில்லை எனில், சேமிப்பவருக்கு ஏதேனு ம் ஆபத்து நேரும்போது , ‘வாரிசு’ அந்தப் பண த்தை எளிதாக எடுக்கமுடியாது. தேவையற் ற அலைச்சல் கள் நேரிட வாய்ப்பு உண்டு.
56. வங்கிகளில் பெரும்பாலும் சர்வீஸ் சார்ஜ், மறைமுகக் கட்டணம் போன்றவை இருப்பதில்லை என்பது வங்கி முதலீட்டின் இன்னொரு சிறப்பம்சம். அதேபோல எவ்வளவு காலத்துக்கு வே ண்டுமானாலும் உங்கள் சேமிப்பை நீட்டி க்கொள்ளலாம் என்பதும் இன்னொரு சிறப்பம்சம்.
போஸ்ட் ஆபீஸில் சேமியுங்கள்!

57. கிராமப்புறங்களில் இன்றும் சேமிப்பி ல் சிறப்பிடம் போஸ்ட் ஆபீஸுக்குத்தா ன். கொஞ்சம் கொஞ்சமாக சேமிக்கலாம், எளிதில் போய் சேமிக்கலாம், எல்லா ஊர் களிலும் சேமிக்கலாம் போன்றவையெல் லாம் போஸ்ட் ஆபீஸ் சேமிப்புகளின் சிற ப்பம்சம்.
58. கிஸான் விகாஸ், நேஷனல் சேவிங்ஸ் சர்டிஃபிகேட் போன்ற வை தபால் அலுவலகங்களில் உள்ள பாப்புலர் முதலீடுகள்.

59. கிஸான் விகாஸ் பத்திரங்க ளில் முதலீடு செய்தால், உங்க ள் பணம் எட்டு ஆண்டுகள் மற் றும் ஏழு மாதங்களில் இரட்டிப் பாகும். நூறு முதல் ஐம்பதாயி ரம் ரூபாய் மதிப்பிலான பத்திர ங்களை வாங்கிக் கொள்ளலாம். இவற்றுக்கு எட்டு சதவிகித வட்டி உண் டு.
60. ‘டைம் டெபாசிட்’ எனும் ஒரு ஃபிக்ஸட் டிபாசிட் திட்டமும் இங்கு உண்டு. சில நூறு ரூபாய்கள் தொடங்கி, லட்சக்கணக்கிலும் சேமிக்கலாம். ஓர் ஆண்டு, இரண் டு ஆண்டு, மூன்று ஆண்டு மற்றும் ஐந்து ஆண்டு என நம் வசதிக்கேற்ப கால நிர்ணயம் வைத்துக் கொ ள்ளலாம்.

61. மாதாந்திர சேமிப்புத் திட்டம் என்பது அதிக வட்டி தரும் தபால் அலு வலக சேவைகளுள் ஒன்று. இதில் ஆயிரம் ரூபாய் தொடங்கி, மூன்று லட்சம் வரை சேமிக்கலா ம். எட்டு சதவிகித வட்டி, வரி வில க்கு, ஆறு ஆண்டுகள் சேமித்தால் அதன் பின் பத்து சதவிகித போனஸ் என பல சிறப்பு அம்சங்கள் இதில் உண்டு.
62. ‘பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட்’ (பி. பி.எஃப்), தபால் அலுவலகத்தின் சிற ப்பு சேமிப்புத் திட்டங்களில் ஒன்று. ஆண்டுக்கு 500 முதல் 70,000 ரூபாய் வரை சேமிக்கலாம்.

63. பி.பி.எஃப்-க்கு வரிச் சலுகை உள்ளது. சேமிப்புக்குத் தக்கபடி தபால் அலுவலகத்திலிருந்து லோன் எடுத்துக் கொள்ளலாம் என்பது கூடுதல் சலுகை.

64. ஊர் மாறிப் போகிறீர்கள் என்றால், நீங்கள் செல்லும் இடத்தில் உள்ள தபால் அலுவலகத்துக்கு உங்கள் சேமிப்புகளை எளிதாக மாற்றிக் கொ ள்ளலாம்.
65. ‘மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு பணத்தைக் கட்டுவது வசதியாக இருக்குமே…’ என விரும்புப வர்களுக்கு இருக்கிறது ‘ரெக்கரிங் டெபாசிட்’ திட் டம். இதில் அறுபது மாதங்கள் தொடர்ந்து பணம் கட்ட வேண்டும்.
66. தபால் நிலைய சேமிப்புகளில் ‘வாரிசு’ நியமிக்கும் வசதி உண்டு.எப்போது வேண்டுமானாலும் அதை மாற் றிக் கொள்ளலாம்.
67. இந்திய அரசு சார்ந்தது, மிக அதிக பாது காப்பானது, நம்பிக்கையானது என்பவை யெல்லாம் தபால் அலுவலகங்களின் முத லீட்டுத் திட்ட ங்களுக்கான அரண்.
சேமிப்பு பழக்கத்தை குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுங்கள்!
68. குழந்தைகள் முதலில் நாணயத்தின் மதிப்பை அறியும்படி செய்யு ங்கள். 10 ரூபாயில் மொத்தம் 10 ஒரு ரூபாய் இருக்கிறது போன்ற அடிப்படை யான விஷயங்களை தெளிவுபட சொல்லித் தாரு ங்கள்.
69. கடைகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல் லும்போது அவர்கள் கையாலேயே பணம் கொடு க்க சொல்லுங்கள். அப்போதுதான் அந்த பொருட் களின் மதிப்பு புரியும்.

70. அவர்களை கவரக் கூடிய கலர்ஃபுல் உண்டிய லை வாங்கிக் கொடுத்து ஆர்வம் ஏற்படுத்தி, சேமி க்க உற்சாகப்படுத்துங்கள்.
71. தினமும் இரண்டு ரூபாய் அவர்களின் ‘பாக்கெட் மணி’ என்றால், கூடு தலாக ஒரு ரூபாய் கொடுத்து தின மும் உண்டியலில் போடச்சொல் லுங்கள்.
72. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், அவர்களு க்குள் போட்டிபோல வைத்து யார் அதிகம் சேமித்திருக்கிறார்களோ …அவர்களுக்கு சின்னச் சின்ன பரிசுகள் கொடுக்கலாம். இதனா ல் சேமிப்பில் அதிக ஆர்வம் ஏற் படும்.
73. மாதம் ஒருமுறை குறிப்பிட் ட தேதியில் அவர்கள் சேர்த்த பணத்தை அவர்களையே எண் ணச் சொல்லி, ஒரு நோட்டில் எழுதச் சொல்லு ங்கள்.
74. குழந்தைகள் அடிக்கடி கேட்டு அடம் பிடிக்கும் தேவையில்லாத பொருட்க ளை அந்த சேமிப்பு பணத்தில் இருந்தே வாங்கிக் கொடுங்கள். அப்போதுதான் அத்தியாவசியம் இல்லாத பொருட்களி ன் மீது அவர்களுக்கு மோகம் குறையும்.
75. நீங்கள் போடும் மாத பட்ஜெட்டை குழ ந்தைகளுக்கும் காண்பியு ங்கள். அப்போதுதான் அவர்களுக்காக நீங்கள் செய்யும் செலவு அவர்களுக்குப் புரியும்.
கலைப் பொருட்களிலும் சேமிக்கலாம்!

76. கலைப் பொருட்களில் சேமிப்பது என்பது ஒரு தனி ரகம். அதற்கு கொஞ்சம் விஷய ஞான மும், ரிஸ்க் எடுப்பதும் தேவைப்படும். ஆனால், ஜாக்பாட் அடித்தால் ஒரு சேமிப்பே நமது வாழ் க்கையை ஒட்டுமொத்தமாக மாற்றிவிடக்கூடு ம்.
77. கலைப் பொருட்கள் வாங்கும்போது அதன் காலத்தை அறிந்து கொள்ளுங்கள். அந்த கலை ப்பொருளுக்குச் சொந்தக்காரர் யார் என தெரிவ தும், அது நிரூபிக்கக் கூடியதாக இருக்க வேண் டியதும் மிக முக்கியம்.
78. பெயின்ட்டிங் பொருட்களை வாங்கிச் சேமி ப்பாக வைக்கலாம். ஆனால், அவை ஒரிஜின ல் பெயின்ட்டிங்காக இருந்தால்தான் பயனளிக் கும். விலை குறைவான டிஜிட்டல் பிரின்ட்டு கள் பார்க்க ஒரிஜினல்போலவே இருக்கும். மலிவான விலைக்குக்கூட கிடைக்கும். ஆனா ல், அவை பிற்காலத்தில் விலை போகாது.
79. மிக அதிகமான ஏமாற்றுகள் நடப்பதும் இந் த கலைப் பொருள் விற்பனையில்தான் என்ப தைக் கவனத்தில் கொள்ளுங்கள். குறிப்பாக, இணையம் மூலமாக எந்தக் கலைப்பொருளையும் வாங்காமல் இருப்ப து உசிதம். கலைப்பொருட்களை அந்தந்த கலை ஏரியாவில் கில்லாடி யான நபர் மூலமாக ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளுங்கள்.
வளமான வாழ்க்கைக்கு சேமிப்புதான் ஆக்ஸிஜன்!
80. குழந்தைகளின் எதிர்கால படிப்பு, வீடு வாங்குவது போன்ற தெரிந்த தே வைகள் முதல், உடல் நலம், அவசர பயணம் போன்ற திடீர் தேவைகள் வரை அனைத்துக்குமே சேமிப்பு மிக முக்கியம்.
81. தொடர்ச்சியான சேமிப்புகளில் நிலைத்திருங்கள். உங்களுக்கு நீங்களே தரும் சம்பளமாக அதைக் கணக்கில் வையுங்கள். எல்லாமாதமும் உங்களுக்குச்சம்பளம் கொடுங்கள்.
82. சேமிப்பு சமாசாரங்களுக்கென ஒரு தனி வங்கிக் கணக்கு வைத் திருப்பது நல்லது. நாம் எப்போதும் பயன்படுத்தும் டெபிட் கார்டு டன் இருக்கும் வங்கியிலேயே அந்தப் பணமு ம் இல்லாமல் இருப்பது ரொம்ப நல்லது.
83. தொழில் தொடங்குவது, கடை ஆரம்பிப்பது என உங்களுடைய தீவிரமான லட்சியங்க ளுக்கு சேமிப்புகை கொடுக்கும். அதற்காக குறைந்தபட்சம் 20% சம்பளத்தை ஒதுக்கி வைப்பது பயன் தரும்.

84. ஓய்வு பெற்றபின் வரும் தேவைக ளுக்காக சேமியுங்கள். உங்கள் சேமிப்பு உங்கள் முதுமையை தன்னம்பிக்கை யுடனும், இயல்பாகவும், மனஉளைச் சல் இல்லாமலும் அனுபவிக்க உத வும். எவ்வளவுதான் அன்பைப்பொழி யும் பிள்ளைகள் இருந்தாலும் முது மைக்காக சேமிக்கத் தவறாதீர்கள்.
85. எதற்காகசேமிக்கிறோம், எவ்வளவு சேமிக்கப்போகிறோம் என்பதை கணவன், மனைவி இருவரும்சேர்ந்து முடிவெ டுங்கள். குழப்பமில்லாத தெளிவான திட்டமிடு தல் மிகவும் அவசியம்.
86. ‘ஒரு மாதம் என்னென்ன செலவு செய்கிறோ ம், அதில் எவையெல்லாம் தவிர்க்க முடியாதவை, எவையெல்லாம் தவிர்க்கக் கூடியவை…’ எனப்பட்டியலிடுங்கள் அதன்படி செலவிடுங் கள்.
87. வீட்டுக் கடன் வட்டி, மின்சார பில், ஸ்கூல் ஃபீஸ் என்று வரும் தவிர் க்கமுடியாத செலவுகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். ஹோட்டல், சினிமா, கேளிக்கை போன்ற தவிர்க்கக் கூடியவற்றுக்கு பின்னுரிமை கொடுங்கள்.
88. மிச்சமிருப்பதைச் சேமிப்பது என்று நினைத்தா ல் சேமிக்கவே முடியாது. சேமித்தபின் மிச்சமிருப் பதை செலவு செய்ய முடிவெடுங்கள். அப் போது சேமிப்பும் நிற்காது… வாழ்க்கையும் முடங்காது.
89. உங்கள் சேமிப்புப் பணத்தை உப்பு சப்பில்லா த காரணங்களுக் கெல்லாம் எடுக்காதீர்கள். தவி ர்க்கவே முடியாத இயற்கைச் சீற்றம், மருத்து வத் தேவை போன்றவை தவிர எதற்கும் தொ டாதீர்கள்.
90.குடும்பத்தின ருக்கு பரிசுகள் கொடுப்பது, அன்பை வெளிப்படுத்து வதையெல்லாம் கொஞ் சம் பயனுள்ள வகையில் செலவிடலா ம். சேமிப்புக்கு உதவும் தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்கிப் பரிசளிக்கலா ம்.
பொதுவான எச்சரிக்கைகள்!

91. ‘அதிக லாபம்’ என ஆசை காட்டும் இடங்களில் எல்லாம் முதலீடு செய்யாதீர் கள். அந்த கம்பெனி அதிக வருடங்களாக நம்பகத்தன்மையுடன் இருக்கிறதா, அதற் கு அரசின் அங்கீகாரம் இருக்கிறதா என்ப தைப் பாருங்கள். அந்த கம்பெனி கடந்த காலங்களில் எப்படிச் செயல்பட்டது என்ப தையும் அலசுங்கள்.
92. ‘உடனே முதலீடு செய்யுங்கள்… இன்றே கடைசி!’ என்றெல்லாம் உங்களை அவசரப்படு த்தும் நிறுவனங்களின் அழைப்புகளை அலட்சி யப்படுத்துங்கள். இவையெல்லாம் உங்களை சிந்திக்க விடாமல் திடீரென முடிவெடுக்க வைப்பவை. இவை, பெரும்பாலும் ஏமாற்று வேலை களாகத்தான் இருக்கும்.
93. மற்றவர்கள் வாங்குகிறார்கள் என கண்மூடித்தனமாக நீங்களும்போய் மாட்டாதீர்கள். பெரும்பாலான சிக்கல் களுக்கு இதுதான் காரணம். உங்களுக்கு முழுமையான நம்பிக்கை வராவிட்டால் எதி லும் இற ங்காதீர்கள்.
94. முதலீடு செய்யும்போது அது தொடர்பா ன எல்லா ஆவணங்க ளையும் பாதுகாத்து வையுங்கள். பணம் கட்டிய ரசீது, கடிதங்க ள்… அது, இது என அனைத்து சமாசாரங்களையும் பத்திரப்படுத்துங்கள். எதுவும் தேவையில்லை என உதாசீனப்படுத்தாதீர்கள். எழுத்துப்பூர்வ மான உத்தரவாதம் இல்லாத முதலீடுகள் ஆபத்தானவை. அவற்றில் இறங்க வே ண்டாம்.
95. முதலீட்டில் ஏதேனும் சிக்கல் இருந் தால் அதை உடனடியாக எழு த்து மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு தெரிவியு ங்கள். நீங்கள் அனுப்பும் கடிதங்களின் ஒரு காப்பியையும், அதற்கு வரும் பதில் களையும் பாதுகாத்து வையுங்கள்.
96. இணையம் மூலமாக ஏதேனும் இன்வெஸ்ட் செய்கிறீர்கள் என்றால் இரட்டைக் கவனம் தேவை.
97. ஒருவருடைய முதலீட்டு திட்டங்கள் எல்லோ ருக்கும் பொருந்துவதில்லை. எனவே, ‘கலைவாணி போட்டிருக்கா, நானும் போடறேன்’ என ஓடாதீ ர்கள்.
98. ‘கோயில்ல உங்களைப் பார்த்தேன். எனக்கும் வாரத்துக்கு எட்டு நாள் (!) கோயிலுக்கு போகலேனா தலையே வெடிச்சுடும்…’ என்றெல்லாம் ஒரு பில்டப் கொடுத்து உங்களிடம் கொஞ்ச நாளாக பழகும் நபர், நைஸாக முதலீட்டுத் திட்டத்தை அவிழ்த்தால், எச்சரிக்கையாக இருங்கள். பகவான் பக்தன் என ஏமாந்து விடாதீர்கள். இது போன் ற எமோஷனல் ஏமாற்றுவேலை இப்போது பெருகி வருகிறது… உஷார்.
99. ‘ஆஸ்திரேலியாவில் தேக்குத் தோட்டம். அற்புத மான ஒரு வீடு. அடிக்கடி நீங்கள் போய் தங்கலாம்…’ என்றெல்லாம் காற் றில் கோட்டை கட்டும் முதலீடுகளை மறுதலிப்பதே புத்திசாலித்தனம்.
100. ‘ஒரு செமினாருக்கு வாங்க, சாப்பாடு ஃப்ரீ…’ என்றெல்லாம் விளம் பரம் வந்தால் போகாதீர்கள். கோட்டு, சூட்டுடன் பத்து பேர் உங்களைச்சுற்றி உட் கார்ந்து முதலீட்டு விஷயம் பேசுவார்கள். கொஞ்சம் ஏமாந்த சோணகிரிகளைக் கொண்டு அவர்கள் பணத்தைப்பிடுங்குவதே இவர்களின் ஒரேநோக்கம்.


நன்றி விதையிலிருந்து விருட்சம் இனைய பக்கம்  https://vidhai2virutcham.com/2013/09/27/சேமிக்க‍-வழிகள்-உண்டு-நூ/

==================================================
$நமது வைஷாலி வாசகர் வட்டத்தின் அனைவரையும் வாழ்த்தி வழிநடத்திச்செல்லும் தலைமை உறுப்பினர்  திரு முத்து கிருஷ்ணன் அவர்களின் ஆன்மீகத் தொடர்-03

அன்பான சுட்டீஸ்!... எப்படி இருக்கீங்க? 
குட்டீஸ் சுட்டீஸ் நீங்க சாலையை கடக்கும்போது மிகவும் கவனமாக, சாலையின் இரண்டுபக்கங்களிலும் வண்டி வருகிறதா என்பதை கவனித்து, வாகனங்கள் எதுவும் வரவில்லை என்பதை முடிவுசெய்துவிட்டு பிறகுதான் சாலையை கடக்கவேண்டும். 

அதேபோலவே சாலையில் அமைந்திருக்கும் ஆளில்லாத இரயில்பாதையை கடப்பதற்கு முன்பும் இரண்டு பக்கங்களிலும் இரயில் வண்டி வரவில்லை என்பதை உறுதிசெய்துவிட்டு இரயில் பாதை சாலையை கடக்கவேண்டும். இன்று உங்களுக்கும் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கியமான விவரங்கள்.... வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை.

* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.

* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லதுவாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.

* சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.

* ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.

* ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருதவேண்டும்.

* ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்தஅழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.

* கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.

* நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே “டிம்’ செய்ய வேண்டும்.

* வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு “இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்’ என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.

* கார்களில் செல்வோர் “சீட் பெல்ட்’ அணியும்போது சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.

* நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளிவராது.

இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் “அப்சர்வ்’செய்கிறது. விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.


* நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் “சிக்னல்’ இல்லாத இடங்களிலும், மொபைலின் “கீ லாக்’ செய்யப்பட்ட நிலையிலும், ஏன் “சிம்கார்டு’ இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.

மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

என்ன சுட்டிகளா! எப்படியிருந்தது? சுவாரஸ்யமா இருந்திச்சா. இனி மஜாதான். சரி அடுத்த மாதம் சந்திப்போம். நன்றி. வணக்கம்!

...............முத்து ஐயர்..........
வைஷாலி வாசகர் வட்டம்..
=================================================
பகுதி I-கைவண்ணம்:-

1) சித்திரமும் கைப்பழக்கம் பகுதியில் :-
(நான் வரைந்த ஓவியம் / எனக்குப் பிடித்த ஓவியம்)
A) D. துர்கா 2ம் வகுப்பு. 




f) குழந்தைகள் H. சாய் நந்தினி மற்றும் H.சாய் ஷிவானி சகோதரிகள்:- 
(நான் வரைந்த ஓவியம் / எனக்குப் பிடித்த ஓவியம்)






G) செல்வி மேஹோக் பேகம் (Mehok Begam):- 
(நான் வரைந்த ஓவியம் / எனக்குப் பிடித்த ஓவியம்)


G)  D. துர்கா  :- 
(நான் வரைந்த ஓவியம் / எனக்குப் பிடித்த ஓவியம்)



G)  குழந்தைகள்  சக்தி உமா மற்றும் ஜெய் சக்தி  ) :- 
(நான் வரைந்த ஓவியம் / எனக்குப் பிடித்த ஓவியம்)

=================================================
2. நகைச்சுவை-சிரி சிந்தி செயல்படு- பகுதியில் :-
1. (புகைப்படமும் விளக்கமும்):-

2. (படமும் விளக்கமும்):-


3. (படமும் விளக்கமும்):-

4. (படமும் விளக்கமும்):-

5. (படமும் விளக்கமும்):-

6. (புகைப்படமும் விளக்கமும்):-

7. (புகைப்படமும் விளக்கமும்):-
முதலில் தமிழ்  வாசிக்க கற்றுக்கொள்ளுங்கள்....வாருங்கள் நமது வைஷாலி வாசகர்வட்டத்தின் தமிழ் கற்கும் வகுப்புகளில் கலந்துகொண்டு, தரணி போற்றும் மொழி தமிழ் மொழியே!! என  பறைசாற்றுவோம்.....


_________________________________________________
===========================================
3. (அ).சிறுகதைகள் பகுதியில் :- முதலாவது போட்டி :- வைஷாலி வாசகர் வட்டத்தின்... சரியான விடைகளைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்... போட்டி என்-7  ஐப்பசி மாதம், இதழ்-7 தேதி 16-10-2016. தொகுத்து வழங்கியவர்:-  திருமதி நாமகிரி சந்திரசேகரன் - வைஷாலி, காசியாபாத்.

சுட்டீஸ் குட்டிக் கதை:- ஒரு சமயம் சாலமன் என்ற அரசர் தன அமைச்சரை அழைத்து, நான் நதியில் சென்று நீராட போகிறேன், மக்கள் கூட்டம் எப்படி இருக்கிறது என்று பார்த்துவிட்டு வரச் சொன்னார்.
அமைச்சர் சென்று பார்த்துவிட்டு, ரொம்ப கூட்டம் இல்லை அரசே! ஒருவரை மட்டுமே பார்த்தேன். என்று சொன்னார். அதைக்கேட்ட மன்னரும் நீராடச் சென்றார்.  நீராட நிறையபேர் நதியை நோக்கி சென்றுகொண்டும் சிலர் நதியில் நீராடிவிட்டுத்  திரும்ப வந்தவண்ணம் இருந்தார்கள்.

நிறைய கூட்டத்தைக் கண்டா அரசர் கோபமாக அமைச்சரைப் பார்த்து " நீராடும் நதிக்கரையில்  யாரும் இல்லை ஒருவர் மற்றும் நீராட சென்றார் என்ரீரே, இப்போது இங்கு  நிறையபேர் கூட்டமாக இருப்பது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா என்றார்"

அரசரை பார்த்து அமைச்சர் அமைதியாக பதில் கூறினார். " மன்னா இங்கு வழியில் பாருங்கள், ஓர்  பெரிய பாறாங்கல் ஒன்று இருக்கிறது. வழியில் இருக்கும் இந்தக்கல்லை சிலர் தாண்டியும், சிலர் அதில் முட்டிக்கொண்டும், சிலர் அதில் தடுக்கி விழுந்து காயமுடன் செல்வதைப்பார்த்தேன்..... 
இதே வழியில் சென்ற ஒருவர் மட்டும் வழியில் கிடக்கும் பாறாங்கல்லை ஓரமாக நகர்த்திவைத்துவிட்டு சென்றார். எனவேதான் ஒரே ஒரு நபர் மட்டுமே என் கண்ணில் தெரிந்தார் என்று கூறினேன். என்கிறார் 

இதைக்கேட்ட மன்னரும் மனம் மகிழ்ந்து தமது அமைச்சரைப் பாராட்டி அவருக்கு பரிசுகள் வழங்கினார். 

கேள்வி 1. இந்தக்கதையிலிருந்து நாம் தெரிந்துகொள்ளும் கருத்து என்ன? 

சரியான  விடைகளைக்கூறி சிறப்பு பரிசுகளை வெல்லுங்கள். சரியான விடைகளை 10-11-2016 தேதிக்கு முன்னதாக "vaishalireaderscircle@gmail.com" மின்னஞ்சலில் அனுப்பவேண்டும். 

சரியான விடையையும், சரியான விடை எழுதியவர்களுக்கான பரிசுகளும்  20-11-2016 (3-வது ஞாயிறு) அன்றைய, 33-வது வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில் வழங்கப்படும்.

போட்டிக்கான சரியான விடையை பலரும் குறிப்பிட்டிருந்தால், பரிசு பெறுபவர்-குலுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்.

கதைக்க கருத்தாக்கம் (திருமதி நாமகிரி சந்திரசேகரன் - வைஷாலி, காசியாபாத்) 
==========================================

3.(அ) விடை:- சென்ற மாத பரிசுப் போட்டிக் கதைக்கான முதலாவது கதையின் சரியான விடைகள்:-போட்டி என்-6 புரட்டாசி மாத இதழ்-6 தேதி 18-09-2016. விவரங்களை சென்ற மாத இதழை பாருங்கள்:
கீழ் வரும் கேள்விக்கான சரியான பதிலைக் கூறுங்கள்:-
#1. சாலமன் கிரண்டி என்கின்ற இந்த ஆங்கிலப் பாடலில் என்ன என்ன கிழமைகள் உள்ளது? 

(விடை:-திங்கட் கிழமை, செவ்வாய்க் கிழமை, புதன் கிழமை, வியாழக் கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக் கிழமை, ஞாயிற்றுக் கிழமை)

#2. சாலமன் கிரண்டியின் இளமைக்காலம் என எத்தனை கிழமைகள் பாடலில் இடம்பெற்றுள்ளது ? அவை என்ன கிழமைகள்?

(விடை:- திங்கட் கிழமை, செவ்வாய்க் கிழமை, புதன் கிழமை,)

#3.  சாலமன் கிரண்டியின் முதுமைக்காலங்கள் என எத்தனை கிழமைகள் பாடலில் இடம்பெற்றுள்ளது ? அவை என்ன கிழமைகள்? 

(விடை:-வியாழக் கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக் கிழமை, ஞாயிற்றுக் கிழமை)

# 4. பாடலில் குறிப்பிட்டுள்ள ஒரு மனிதனின் இளமைக்காலம் என்பது நீண்ட நாட்களா?  அல்லது முதுமைக்காலம் என்பது நீண்ட நாட்களா?  


விடை:- மனிதனின் இளமைக்காலம் அது மிகவும் நீண்ட நாட்களைக் கொண்டது.  

#5. இந்த சாலமன் கிரண்டி என்கிற பாடலில் கூறியுள்ள கருத்து என்ன? 

விடை:- மனிதனே உன்னுடைய இளமைக்காலம் அது நீண்டது அப்போதே உன்னுடைய கடமைகளை செய்துவிடு, மனிதனின் இறுதிக்காலம் அது மிக மிக குறுகியது. முதுமை காலம் வரை பொறுத்திருந்தால் உன்னால் எதையும் செய்யமுடியாமல் போகும்  

சரியான பொருத்தமான விடையை 07 நபர்கள் குறிப்பிட்டிருந்தார்கள் அவர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளும்  வழங்கப்பட்டது. 
=========================================
3.(ஆ) சிறுகதைகள் பகுதியில் :-இரண்டாவது போட்டி:- வைஷாலி வாசகர் வட்டத்தின் சரியான புகைப்படக் கதையைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் போட்டி என்-7  ஐப்பசி மாதம், இதழ்-7 தேதி 16-10-2016.


தலைப்பு:- தீபாவளி,  நரகாசுரன்:-
சரியான படக்கதைக்கான  விடைகளைக்கூறி சிறப்பு பரிசுகளை வெல்லுங்கள். சரியான விடைகளை 10-11-2016 தேதிக்கு முன்னதாக "vaishalireaderscircle@gmail.com" மின்னஞ்சலில் அனுப்பவேண்டும். 

சரியான விடையையும், சரியான விடை எழுதியவர்களுக்கான பரிசுகளும்  20-11-2016 (3-வது ஞாயிறு) அன்றைய, 33-வது வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில் வழங்கப்படும்.


போட்டிக்கான சரியான விடையை பலரும் குறிப்பிட்டிருந்தால், பரிசு பெறுபவர்-குலுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்.

சென்ற மாதத்திற்கான சரியான படக்கதை விடை:-
3.(ஆ) சிறுகதைகள் பகுதியில் :-இரண்டாவது போட்டி:- வைஷாலி வாசகர் வட்டத்தின் சரியான புகைப்படக் கதையைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் போட்டி என்-6 புரட்டாசி மாத, இதழ்-6 தேதி 18-09-2016.

தலைப்பு:- நவராத்திரி 'ராவண வதம்' என்ற பெயரில், ராவணனின் பிரமாண்ட உருவ பொம்மை எரிக்கும் நிகழ்ச்சி, 
புகைப்படக் கதை விடை:-ஆண்டுதோறும் நவராத்திரியில் தசரா விழாவை கொண்டாடும் மக்கள், "ராவண வதம்" என்ற பெயரில் ராவணன், கும்பகர்ணன் மற்றும் மேகநாதன் ஆகியோரின் உருவபொம்மைகளை தீயிட்டு எரிப்பது வழக்கம். இதன்மூலம், தீமை அழிந்து தர்மம் வென்றது என மக்கள் பூரிப்படைவர். இத்தகைய சிறப்புமிக்க தசரா திருவிழா, நவராத்திரியின் பத்தாவது நாளன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. வாட இந்தியாவில் மட்டுமல்லாது தென் இந்தியாவின்  மைசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் "ராவணவதம்" நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 

சென்ற மாதத்திற்கான சரியான படக்கதையை கூறி போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. 
=====================================================
3. குட்டிக் கதைகள் பகுதியில் :-
பணக்கார கருமியின் பரோபகாரம் - அக்பர் பீர்பால் கதை :-

ஒரு சமயம் பருவ மழைக் காரணமாக டெல்லி மாநகரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. விவசாயப் பயிர்களெல்லாம் நாசமாயின.

மக்களின் கஷ்டத்தைப் போக்க உணவுப் பொருட்களை கொடுத்து மன்னர் உதவினார் என்றாலும் நிலைமை மிக மோசமாக உள்ளதை எண்ணி பீர்பால் கவலையடைந்தார்.

விவசாய மக்களின் பெரும்பான்மையானவர்கள் ஏழைகளாக இருந்தமையினால் அவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு வர பண உதவி செய்ய வேண்டும் அதற்கு ஏராளமான பணம் தேவை. ஆதலால் பீர்பால் வசதி படைத்தவர்களிடமெல்லாம் நிதி திரட்ட முடிவு செய்தார். அதன்படி தன் நண்பர்களுடன் உண்டியல் ஏந்தி தெரு தெருவாக வந்தார்.

பீர்பாலின் நல்லெண்ணத்தைப் புரிந்து கொண்ட பொது மக்களும், பணக்காரர்களும் தாராளமாக நிதி உதவி செய்தனர்.

பீர்பால் அன்று நிதி வசூல் செய்ய அடுத்த ஊருக்குச் சென்றார். அந்த ஊரில் ஒரு பெரிய பணக்காரர் இருந்தார். பணம் படைத்தவராக இருந்தாரே தவிர அவர் பிறருக்கு பத்து காசு உதவி செய்ய மாட்டார். சாமர்த்தியமாகப் பேசி வந்தவர்களை அனுப்பி விடும் மகா கருமி அவன். 

பீர்பால் அந்த பணக்கார கருமியின் வீட்டிற்கு உண்டியலுடன் நிதி கேட்கச் சென்றார்.நிதி கேட்க வருவதைக் கண்ட அந்த பணக்கார கருமி முகத்தை சோகத்துடன் வைத்துக் கொண்டு, வாருங்கள் அய்யா, நானும் வெள்ளத்தில் பாதிக்கப் பட்டவர்களில் ஒருவன்தான். என்னுடைய விவசாய நிலத்தில் வெள்ளம் புகுந்து பயிர்களையெல்லாம் நாசம் செய்து விட்டது. ஆகையினால் இச்சமயம் நான் மற்றவர்களுக்கு நிதி உதவி செய்யும் நிலையில் இல்லாது கஷ்டப்படுகிறேன் என்றான்.

பணக்காரன் பேச்சிலிருந்து அவன் மகா கருமி என்பதை பீர்பால் உணர்ந்து கொண்டார். உதவி செய்ய மனமில்லாது இப்படி நாடகமாடுகிறான் என்பதையும் புரிந்து கொண்டார்.

நீங்கள் கஷ்டப்படுவதைப் பார்த்தால் முதலில் எங்கள் உதவி உங்களுக்குத்தான் தேவைப்படும். ஆகையினால் உங்களுக்குத் தேவையான பணத்தை நாங்கள் வசூலித்த இந்த உண்டியலிருந்து எடுத்துக் கொள்ளுங்கள். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு ஏழையாகிவிட்ட உங்களுக்கு உதவி செய்யாவிட்டால் நாங்கள் மனிதர்களே அல்ல, மிருகத்திற்கு சமமானவர்களாகி விடுவோம். ஆதலில் தேவையான பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள், என்று கூறி உண்டியலை நீட்டினார் பீர்பால்.

பணக்கார கருமியின் முகம் மலர்ந்தது, எப்படியோ நம்முடைய பணம் பறிபோகாமல், நிறைய பணம் நமக்கு கிடைக்கப்போகிறதே என்று மகிழ்ச்சியில் உண்டியலை பெற்றுக்கொள்ள முன்வந்தார்.

இதைப்பார்த்த பீர்பால் அந்த பணக்கார கருமியை நோக்கி அய்யா இந்த உண்டியல் முழுவதும் நிரம்பாமல் குறைவாகவே உள்ளது ஆகவே முதலில் நீங்கள் இந்த உண்டியல் நிரம்புமளவிற்கு உங்களுக்கு தெரிந்தவர்களிடம் நிதி திரட்டி வாருங்கள் அதன்பிறகு உங்களுக்கு தேவையான அளவு நிறைய பணம் இந்த உண்டியலிருந்து பெறலாம் அல்லவா என்கிறார்.       

அதைக்கேட்ட அந்த பணக்கார கருமி, பக்காரனான நான் உண்டியல் ஏந்தி மற்றவர்களிடம் நிதியுதவி கேட்பதா அப்படி செய்வது வெட்கமாக செயலாக தோன்றியதால், பீர்பாலின் சமயோசித செயலைக் கண்டு பணக்கார கருமியின் மனத்தை வாட்டியது. 

பீர்பாலிடம் தான் ஆடிய ஏழை நாடகத்தை நிறுத்திக் கொண்டு மவுனமாக நின்றிருந்தார்.
எதற்காக மவுனமாக இருக்கின்றீர். கவலைப்படாமல் தேவையானவற்றை எடுத்துக் கொள்ளுங்கள் என்றார் பீர்பால்.

என்னை மன்னித்து விடுங்கள் கஷ்டத்திற்கு உதவாத கஞ்சனாக இருப்பதை எண்ணி வெட்கப் படுகிறேன். நீங்கள் சேகரித்துள்ள நிதியைக் காட்டிலும் நான் பெரும் நிதியை அளிக்கிறேன். ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி பெரும் பணமும், நகைகளையும் பீர்பாலிடம் அளித்தார்.
ஒரு பணக்கார கருமியை அறிவின் ஆற்றலினால் பெரும் நிதியைப் பெற்ற பீர்பாலை கூட வந்த நண்பர்கள் மனதார பாராட்டி புகழ்ந்தனர்.

நன்றி தமிழ் கடல். https://www.facebook.com/groups/264740130252643/ என்ற முகவரியில் சொடுக்கி (click செய்து) தமிழ் கடல் குழுமத்தின் உள்ளே நுழைந்து, குழுமத்தில் இணைந்து பயன்பெறுங்கள்.

விடாமல் முயலுங்கள், 
விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....
மீண்டும் சிந்திப்போம்! 
நன்றிகளுடன் கோகி.

================================================

ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ...ஒரு சிறு விளம்பர இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடர்ந்து வாசிக்கலாமா? 
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
விளம்பரம் :-இப்பகுதியை உங்களுக்கு வழங்குபவர்:-
விளம்பரம் :-இப்பகுதியை உங்களுக்கு வழங்குபவர்:-

==============================================================

4. கட்டுரை=1:- இந்தமாதம் தலைப்பைச் சார்ந்த  கதை /கட்டுரைகள்:- 
அ ) இன்று ஒரு தகவல் பகுதியில்:- சிக்கனமான, சுவையான, சத்தான, சேமிப்பு சமையல் :-

அந்தக்காலத்தில் வீட்டின் சமையலுக்கு தேவையான காய்கறிகளை நறுக்கி வைத்துவிட்டு, மீதமிருக்கும் அனைத்து காய்களையும் வீட்டின் வாசல் திண்ணையில் வைத்துவிடுவோம். அந்த ஊரில் யாருக்கு சமைக்க காய்கள்/பழங்கள்  வேண்டுமோ அவர்கள் தேவைக்கு ஏற்ப திண்ணையில் வைத்திருந்த காய் பழங்களை இலவசமாக எடுத்துக்கொள்வார்கள். அந்தக்காலத்தில் வீட்டுத் தோட்டத்தில் விளைந்த காய்களை காசுக்கு விற்கக்கூடாது என்பார்கல். இந்தக்காலத்தில் நீங்கெல்லாம் அரைக்கிலோ, கால்கிலோ என்று காய் பழங்களை அதிக விலைகொடுத்து வாங்கிவந்து அதையும் குளிர்பெட்டிக்குள் வாரக்கணக்கில் வைத்து சமைத்து உண்பதை பார்க்க மனம்பொறுக்கவில்லையடா என்று என்னுடைய பாட்டி அங்கலாய்த்தது இன்னமும் என் காதுகளில் கேட்கும் நினைவுகள்.... 

இன்றய காய்கறிகளின் மிக அதிக விலைவாசியில் எதை வாங்குவது எதை சமைப்பது என்பது மிகப்பெரிய சவாலாகத்தான் இருக்கிறது.

இந்நிலையில் தினமும் சமையல் செய்ய அதிக செலவு செய்யாமல் சிக்கனமாக காய் பழங்களை வாங்க நிறைய யோசித்து செயல்படவேண்டியிருக்கிறது.  

$ தினச் சமையலுக்கு சில காய்கள் இரு வேறு நன்மைகள் கொண்டவை, (2-IN-ONE) அதாவது நான்கு நபர்கள் கொண்ட வீட்டிற்கு அரைக் கிலோ வெண்டைக்காய் வாங்கினால் அதிலிருந்து நான்கு ஐந்து வெண்டைக்காயை பிரித்தெடுத்து சாம்பார் செய்யவும், மீதம் இருக்கும் வெண்டைக்காய் அனைத்தையும் பொரியல் செய்யும்விதமாக, அங்காடியில் கிடைக்கும் காய்கறிகளை இருவேறு நன்மை கொண்ட காய்களை (2-IN-ONE) வாங்கிப் பயன்படுத்துமாறு, சமயோசிதமாக செயல்பட்டால் சிக்கனமான, சுவையான, சத்தான, சேமிப்பு சமையலை சாப்பிடலாம்.

$. காய்கறிகளை வாரச்சந்தையில் வாங்கிவந்தால் குறைந்த செலவில் அதிக பலனைப் பெறலாம்.


$ ஒரு வாரத்திற்குத் தேவையான காய்கறிகளை வாங்கும்போது, கீரை போன்ற பச்சைக்காய்களான வெகு சீக்கிரம் காய்ந்து வாடி வதங்கிப்போகும் காய்களை முதல்நாள் சமைப்பதற்கு என்றும், ஒரு வாரம்வரை தாக்குப்பிடிக்கும் சில கிழங்குவகைகள் என, யோசித்து வாரச்சந்தை அல்லது மொத்தவிலைக் காய்கறி அங்காடியிலிருந்து காய் பழங்களை வாங்கினால் சிலவும் குறைவதோடு ஆரோக்கியமான உணவையும் உண்ணலாம்.     
  
$ வீட்டுக்குத் தேவையான மளிகை மற்றும் காய் பழங்களை, மொத்தவிலை அங்காடியில் வாங்குவதால் விலை குறைவாக கிடைக்கும், ஆனால் குறைந்தது ஐந்து கிலோ என்கிற அளவில் மிக அதிகமான அளவில் பொருட்களை வாங்கவேண்டியதாக இருக்கும். ஆகவே மாளிகைப் பொருட்களை இரண்டு, மூன்று, ஆறுமாதங்களுக்கு என்றும், காய் பழங்களை ஐந்து கிலோ என்று வாங்கி நீங்களும் உங்கள் நண்பர் மற்றும் உங்கள் அருகாமையில் வசிப்பவர்களோடு பகிர்ந்துகொள்ளும் வகையில் வாங்கினால் பெருமளவு செலவு மிச்சமாகும். 

$. கீரை மற்றும் கிழங்கு வகைகளை சமையலுக்கு நறுக்கும்போது, சமயலுக்குத் தேவையற்ற காம்பு, தண்டு, கிழங்கு வேர் போன்ற பகுதிகளை தூக்கியெறியாமல் அவைகளை நமது வீட்டுத் தோட்டத்தில் அல்லது அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனி பகுதியில் மண்தொட்டிகளில் நட்டுவைத்து நீரூற்றி பராமரித்துவந்தால் சிறு தோட்டம் அமைவதோடு வீட்டிற்குத் தேவையான கொத்தமல்லி, மிளகாய், கீரை, காய்கள் போன்றவை இலவசமாக நமது வீட்டுத்தோட்டத்த்திலேயே கிடைத்துவிடும். மேலும் அருமையான பல விவரங்களுக்கு இந்த முகநூல் பக்கத்தில் இணைந்து காணொளியில் பல விவரங்களை பெற்று பயன்பெறலாம்.
https://www.facebook.com/officialgoodful/videos/1300037320066731/

https://www.facebook.com/officialgoodful/

$ வெப்பம், மற்றும் குளிர்கால விளைபொருட்கள் என காலநிலைக்கேற்ப சில பொருட்கள் மிக மிக விலை குறைவாக கிடைக்கும். அப்படி விலை குறைவாக கிடைக்கும சமயல்புளி, மிளகாய் போன்ற மேலும் சில பொருட்களை வாங்கி சேமித்துவைத்து பயன்படுத்துவதால் நிறைய செலவு மிச்சப்படுவதோடு நமது சேமிப்பும் பெருகும்.



வெப்பம், மற்றும் குளிர்கால காய்கறிகள் அவைகளின் காலநிலைக்கேற்ப அதிக விளைச்சலின்போது விலைகுறைவாக கிடைக்கும் அப்படி விலை குறைவாக கிடைக்கும் வெண்டைக்காய், பாகற்காய் போன்ற பொருட்களை அதிகம் வாங்கி வத்தல் வைகைகளை செய்தும்,
மாங்காய் எலுமிச்சை போன்ற  சில ஊறுகாய் வகையான காய்வகைகள் கிடைக்கும்போது அவற்றை வாங்கி ஊறுகாய் போட்டுவைத்தால், கடையில் வாங்கும் ஊறுகாயைவிட வீட்டில் செய்யும் ஊறுகாய் சுவையானதாகவும் ஆரோக்கியமானதாகவும் அமைவதோடு, செலவு மிச்சமாகி நமது சேமிக்கும் திறனை அதிகமாக்குகிறது. 

இப்படி மேலும் பலவழிகளில் செலவுகளை மிச்சப்படுத்தி நமது சேமிக்கும் திறனை அதிகமாக்கிக்கொள்வதால் நம் நாடும் வீடும் சிறந்தநிலையினை பெற்றிடும். 

நன்றி,  திருமதி நா. ஆர்த்தி கிருஷ்ணன், வைசாலி. 
================================================

4. கட்டுரை=2:- இந்தமாதம் தலைப்பைச் சார்ந்த  கதை /கட்டுரைகள்:- 

அ)"திருமதி பிரியா கங்காதரன்" அவர்கள் சுட்டீஸ்களுக்கு தொகுத்துத்தரும் வாழ்க்கையை வளப்படுத்தும் சிக்கனமும் சேமிப்பும் பற்றிய சிறப்புக் கட்டுரை...

அக்டோபர் மாதம் 31ம் தேதி உலக சிக்கன தினம் (Word Thrift Day) கொண்டாடப்படுகிறது.



”சேமிப்பு இல்லாத குடும்பம் , கூரையில்லாத வீடு" என்பார்கள்....

"சிறுவர்களின் மிகப்பெரிய சொத்தே சேமிப்பு" சேமிக்கும் பழக்கத்தைதான் நாம் முதலில் கற்றுக்கொள்ளும் பாடமாக இருக்கவேண்டும். 


குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் பெரிய சொத்தே இந்த சேமிப்பு பழக்கம் தான்! என்பதை பெரியவர்களும் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய செயலாகும். 

‘சிறு துரும்பும் பல் குத்த உதவும்” என்பது பழமொழி. சேமிக்கும் சிறிய தொகையும் கூட நம்ம குழந்தைகளின்  சிறு சிறு தேவைகளை நிவர்த்தி செய்யும். ஏதோ ஒரு ரூபாய்தானே என்று ஆரம்பத்தில் நினைக்கும் நம்ம குழந்தைகளின் மனம், சிறு சேமிப்பு பெட்டி நிரம்பியவுடன் ஆச்சரியமாகிறது. காரணம் ஒரு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என்று சேர்த்த பணம் நூறுகளைக் கடக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியின் வெளிப்பாடே, சேமிப்பின் முக்கியத்துவத்தை நமது செல்லங்களுக்கு உணர்த்தும்…

சேமிப்பின் முதல் படி. ஒரு எளிய வழியைப் பயன்படுத்திப் பார்க்கலாம். அன்றாடம் வரவு -செலவு கணக்கு எழுதுவது. இதில் இரண்டு நன்மைகள் உண்டு. ஒன்று, நம் வீட்டில் உள்ள அனைவரும் இதில் ஈடுபடுவதால், குடும்பப் பொருளாதாரம் எல்லாருக்கும் தெரிய வரும். அதனால், அவரவரின் செலவுகள் ஒழுங்குபடுத்தப்படும். பொதுவாக குழந்தைகளுக்கு குடும்பப் பொருளாதார நிலை தெரிந்தால் அவர்களது பொருளாதார அறிவு வளரும். மாறும் சூழ்நிலைக்கேற்ப சரியான முடிவுகளை எடுக்க அவர்கள் தயாராவார்கள். 

செலவு செய்வதில் முக்கியமாக நான்கு நிலைகள் இருப்பதனை இனங்காட்டலாம்.

(1) கஞ்சத்தனம்

(2) சிக்கனம்

(3) ஆடம்பரம்

(4) ஊதாரித்தனம்.

கஞ்சத்தனம் என்பது தேவையான அன்றாடச் செலவுகளுக்குக் கூடப் பணம் செலவு செய்ய மனம் வராமல் வீணாகப் பூட்டி வைத்து மகிழ்வது. கஞ்சத்தனம் என்பது சமூக வாழ்க்கைக்கு உகந்ததல்ல. கஞ்சத்தனம் மிகைக்கும்போது  மனிதனுக்கு தன் வாழ்க்கையையே அனுபவிக்க முடியாமல் போகலாம்.

சிக்கனம் என்பது தேவையில்லாதவை என்று நினைக்கும் செலவுகளை நீக்கி விட்டுத் தேவையான செலவுகளை மட்டும் நல்ல முறையில் செய்வது. பண்டைக் காலத்திலிருந்து எமது நாகரிகமும் பண்பாடும், சிக்கனம், சேமிப்பு என்பவற்றின் பயன்களை அங்கீகரித்து வந்துள்ளன. தேனீ, தேனைச் சிறுகச் சிறுகச் சேமிப்பதும், எறும்புகள் படிப்படியாக புற்றுக்களைக் கட்டியெழுப்பி உணவு சேமிப்பதும், மழையின்போது அருவி நீர் குளத்தில் சேமிக்கப்படுவதும், சேமிப்புக்குத் தகுந்த உதாரணங்களாகும். ஒரு மனிதன் சேமிப்புப்புக்குப் பழகிக் கொள்ளும்போது அச்சேமிப்பு எதிர்காலத்தில் பல விடயங்களுக்கு அவனுக்கு கை தரப்போதுமாகும்.

ஆடம்பரம் என்பது, அண்டை வீட்டாரும் மற்ற உறவுக்காரர்களும் நம்மைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக, வகையறியாமல் நடை உடைபாவனைகளில் மெருகேற்றிக் கொண்டு வெளித் தோற்றத்துக்காகச் செலவிடுவது. இது தம்மை பணம் பொருள் படைத்தவர்கள் என இனங்காட்டிக் கொள்வதற்காக மேற்கொள்ளும் ஒரு நடவடிக்கையாகும். அடுத்தவனைப் போல தானும் வாழ வேண்டும் என்ற உணர்வு சிலநேரங்களில் அவனை பல தவறான வழிகளுக்கு இட்டுச் செல்வதையும் அனுபவ வாயிலாக நாம் காண்கிறோம்.

ஊதாரித்தனம் என்பது எந்தவிதப் பயனும் இன்றி, கட்டுக் கடங்காமல் வீணாக மனம் போனவாறெல்லாம் தம்முடைய சக்திக்கு மீறிச் செலவிடுவது.ஒருமுறை அமெரிக்க ஃபோர்டு கார் நிறுவன அதிபர் ஹென்றிபோர்டு, மாநாடு ஒன்றுக்காகச் சென்றிருந்த இடத்தில், ஹோட்டலில் இரண்டாம் தரமான அறையை எடுத்தார். ஹோட்டல் பணிப்பெண் கேட்டார், ‘சற்று நேரத்துக்கு முன்னால் வந்த தங்கள் மகன், முதல் தர அறையை எடுத்திருக்கிறார், தாங்கள் ஏன்?‘’

உடனே ஹென்றிபோர்டு சொன்ன பதில் இதுதான். “”அவனுக்குப் பணக்கார அப்பா இருக்கிறார். எனக்கு அப்படி இல்லையே!

”சிக்கன வாழ்க்கைக்கு அடிப்படை எளிமை போதுமென்ற மனம் இவைதாம். பொதுவாகச் செலவுகளை எல்லாம் நம்முடைய நியாயமான வருமானத்துக்குள் மட்டுப்படுத்திக் கொள்ளப் பழக வேண்டும். அப்படி இல்லாமல் வரவை மீறிச் செலவு செய்வது என்று வந்து விட்டால் எத்தனை நல்ல பண்புகள் இருந்தாலும் ஒவ்வொன்றாக அவற்றை இழந்துவிட நேரும்.

தனிப்பட்ட வாழ்க்கைக்கு சேமிப்பு, சிக்கனம் எவ்வளவு முக்கியமோ அதேபோல இந்த சேமிப்பும், சிக்கனமும் தேசிய ரீதியிலும் முக்கியத்துவம் பெறுகின்றன. சேமிப்பு ஒரு நாட்டுக்கு மூலதனமாக அமைந்து நாட்டின் அபிவிருத்திற்கு துணைபுரிகின்றது. நவீன பொருளாதார முறைமை, சேமிப்பைத் தூண்டுகின்றது. கவர்ச்சியான வட்டி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை போன்றவற்றை வங்கிகள் உறுதியளிப்பதன் மூலம் சேமிப்பின் மீது மக்களின் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்கின்றன. அரச அங்கீகாரம், பாதுகாப்பு, சலுகைகள் என்பனவும் மக்களின் நம்பிக்கையை வளர்த்துள்ளன..

எதிர்கால செலவுகளை திட்டமிடுவது சேமிப்பைத் தூண்டும் மற்றொரு வழி. உங்களது எதிர்கால செலவுகள் என்ன என்பதை எழுதிப் பாருங்கள். குழந்தைகளின் கல்வி, வீடு கட்டுதல், ஓய்வுகால செலவுக்கு பணம் என பல இருக்கின்றன. இவற்றைத் தோராயமாக அளவிட்டுப் பார்த்தால், வருங்கால செலவின் தொகை மிகப்பெரிதாக இருக்கும். மிரளாதீர்கள்! உங்கள் வருவா யைக் கூட்டவேண்டிய கட்டாயத்தை இது உணர்த்தும். வழி பிறக்கும்.

மீண்டும் யோசித்துப் பார்த்தால், சேமிப்பு என்பதே வருவாயைக் கூட்டும் இன்னொரு வழிதானே. சேமித்த பணத்தை சரியாக முதலீடு செய்யும்போது அதுவே உங்களுக்கு கூடுதல் வருவாயைப் பெற்றுத் தரும்…

பல நேரங்களில் எது அவசியமான செலவு என்பதில் குழப்பம் இருக்கும். புலன்களின் பேச்சைக் கேட்காமல், கற்பனையான சமுதாய நிலையைப் பார்க்காமல், அறிவு சொல்லும் தீர்ப்பே இதில் சரியாக இருக்கும்…

சேமிப்பு என்பது இப்போதைய காலத்தில் பணம் தவிர … மழை நீர், குடிநீர், மின்சாரம் , எரிசக்தி , என எல்லாவற்றிலும் அவசியம் ஆகி விட்டது.

சேமிப்பை உணர்ந்தால் மட்டுமே எதிர்கால வாழ்வில் சிறப்படைய முடியும் என்பது நிதர்சனம்!

நன்றி - திருமதி பிரியா கங்காதரன்.

==============================================================
ஆ) பொது அறிவுக் கதை. கட்டுரை, தகவல்கள் பகுதியில்:-

1. புத்திசாலித்தனமான சேமிப்பிற்காக அரசர் மெச்சிய பரிசு!

அரசருக்கு பிறந்தநாள் என்பதால் மக்களிடையே பெரும் சந்தோஷம் நிரம்பியிருந்தது. அரசர் அளித்த அறுசுவை உணவை வயிறார உண்டு, அரசரை வாழ்த்த மக்கள் காத்திருந் தார்கள். அரசருக்குப் பரிசளிக்க தங்களால் இயன்ற பொருட்களை கொண்டு வந்திருந்தார்கள். அங்கு அரசர் வந்தார்...

... ஒவ்வொருவராக பரிசுகளை அளித்து வணங்கிச் சென்றனர். பிறகு அரசர் அவர்கள் அளித்த பரிசு பொருட்களை கண்ட பிறகு, மக்களைப் பார்த்து... "நீங்கள் அன்புடன் எனக்கு பரிசுகளை அளித்து கௌரவித்தீர்கள். நன்றி... அவற்றில் மிக மிகச் சிறந்த பரிசு ஒன்றைக் கண்டேன்" என்று நிறுத்தினார். இதைக் கேட்ட மக்களுக்கு ஆவலாக இருந்தது. ‘அந்த உயர்ந்த பரிசு எது? யார் அளித்திருப்பார்கள்?’ தங்களுக்குள் முணுமுணுத்தார்கள். 

"நான் கொடுத்த மாணிக்கக்கல்லாகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் உலகில் அதைப்போல் வேறொன்றைக் காணமுடியாது" என்றான் மாணிக்க வியாபாரி.

இதைக் கேட்ட வைர வணிகரோ,"உலகின் தலைசிறந்த வைரம். அதற்கு ஈடு இணை எதுவும் கிடையாது. எனவே என்னுடையதுதான் சிறந்த பரிசாக இருக்க முடியும்" என்று கூறினார்.

அதற்கு நெசவாளி... "நான் அரும்பாடுபட்டு நெய்து அளித்த பட்டாடைகள் மேலை நாடுகளில் கூட கிடைக்காது. அதைத்தான் மன்னர் சொல்லி இருப்பார்" என்றார். இவர்கள் பேசுவதைக் கேட்ட பூக்காரி... "ஆடையோ, ஆபரணங்களோ அரசரைக் கவர்ந்திருக்க முடியாது. நான் புத்தம் புதிய மலர்களை வண்ணமிகு மாலையாக்கி அரசருக்கு அளித்தேன். வாசம் மிகுந்த மென்மையான மலர் மாலையை விடவும் சிறந்தது உண்டோ? இதைத்தான் அவர் குறிப்பிட்டிருக் கிறார்" என்றாள்.

இப்படி ஒருவருக்கொருவர் தாங்கள் அளித்த பரிசைத்தான் அரசர் மெச்சியிருக்கிறார் என்று பேசிக்கொண்டனர். இந்த சலசலப்பைக் கேட்ட பிறகு அரசரே பதில் கூற ஆரம்பித்தார். "எல்லா பரிசுகளும் சிறந்தவையே. இதில் என்னை மிகவும் கவர்ந்த பரிசு, காலத்துக்கும் நிலைத்து நிற்கக்கூடியது. எல்லோருக்கும் பலன் தரக்கூடியது. அதுதான் இது..."என்று ஒரு சிறிய மரக் கன்றைக் காட்டினார்.

"பொன்னையும் பொருளையும் சேமிப்பதைவிட உயிருள்ள மரங்களையும் செடிகளையும் சேமிப்பதே புத்திசாலித்தனம்" என்று கூறி மரக்கன்றை பரிசளித்த விவசா யியை மெச்சி, அரசர் பரிசளித்துப் பாராட்டினார்.
==========================================

ஆ) பொது அறிவுக் கதை. கட்டுரை, தகவல்கள் பகுதியில்:-

2. பணக்கார கருமியின் பரோபகாரம் அக்பர் பீர்பால் கதை :-

ஒரு சமயம் பருவ மழைக் காரணமாக டெல்லி மாநகரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. விவசாயப் பயிர்களெல்லாம் நாசமாயின.

மக்களின் கஷ்டத்தைப் போக்க உணவுப் பொருட்களை கொடுத்து மன்னர் உதவினார் என்றாலும் நிலைமை மிக மோசமாக உள்ளதை எண்ணி பீர்பால் கவலையடைந்தார்.

விவசாய மக்களின் பெரும்பான்மையானவர்கள் ஏழைகளாக இருந்தமையினால் அவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு வர பண உதவி செய்ய வேண்டும் அதற்கு ஏராளமான பணம் தேவை. ஆதலால் பீர்பால் வசதி படைத்தவர்களிடமெல்லாம் நிதி திரட்ட முடிவு செய்தார். அதன்படி தன் நண்பர்களுடன் உண்டியல் ஏந்தி தெரு தெருவாக வந்தார்.

பீர்பாலின் நல்லெண்ணத்தைப் புரிந்து கொண்ட பொது மக்களும், பணக்காரர்களும் தாராளமாக நிதி உதவி செய்தனர்.

பீர்பால் அன்று நிதி வசூல் செய்ய அடுத்த ஊருக்குச் சென்றார். அந்த ஊரில் ஒரு பெரிய பணக்காரர் இருந்தார். பணம் படைத்தவராக இருந்தாரே தவிர அவர் பிறருக்கு பத்து காசு உதவி செய்ய மாட்டார். சாமர்த்தியமாகப் பேசி வந்தவர்களை அனுப்பி விடும் மகா கருமி அவன். 

பீர்பால் அந்த பணக்கார கருமியின் வீட்டிற்கு உண்டியலுடன் நிதி கேட்கச் சென்றார்.நிதி கேட்க வருவதைக் கண்ட அந்த பணக்கார கருமி முகத்தை சோகத்துடன் வைத்துக் கொண்டு, வாருங்கள் அய்யா, நானும் வெள்ளத்தில் பாதிக்கப் பட்டவர்களில் ஒருவன்தான். என்னுடைய விவசாய நிலத்தில் வெள்ளம் புகுந்து பயிர்களையெல்லாம் நாசம் செய்து விட்டது. ஆகையினால் இச்சமயம் நான் மற்றவர்களுக்கு நிதி உதவி செய்யும் நிலையில் இல்லாது கஷ்டப்படுகிறேன் என்றான்.

பணக்காரன் பேச்சிலிருந்து அவன் மகா கருமி என்பதை பீர்பால் உணர்ந்து கொண்டார். உதவி செய்ய மனமில்லாது இப்படி நாடகமாடுகிறான் என்பதையும் புரிந்து கொண்டார்.

நீங்கள் கஷ்டப்படுவதைப் பார்த்தால் முதலில் எங்கள் உதவி உங்களுக்குத்தான் தேவைப்படும். ஆகையினால் உங்களுக்குத் தேவையான பணத்தை நாங்கள் வசூலித்த இந்த உண்டியலிருந்து எடுத்துக் கொள்ளுங்கள். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு ஏழையாகிவிட்ட உங்களுக்கு உதவி செய்யாவிட்டால் நாங்கள் மனிதர்களே அல்ல, மிருகத்திற்கு சமமானவர்களாகி விடுவோம். ஆதலில் தேவையான பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள், என்று கூறி உண்டியலை நீட்டினார் பீர்பால்.

பணக்கார கருமியின் முகம் மலர்ந்தது, எப்படியோ நம்முடைய பணம் பறிபோகாமல், நிறைய பணம் நமக்கு கிடைக்கப்போகிறதே என்று மகிழ்ச்சியில் உண்டியலை பெற்றுக்கொள்ள முன்வந்தார்.

இதைப்பார்த்த பீர்பால் அந்த பணக்கார கருமியை நோக்கி அய்யா இந்த உண்டியல் முழுவதும் நிரம்பாமல் குறைவாகவே உள்ளது ஆகவே முதலில் நீங்கள் இந்த உண்டியல் நிரம்புமளவிற்கு உங்களுக்கு தெரிந்தவர்களிடம் நிதி திரட்டி வாருங்கள் அதன்பிறகு உங்களுக்கு தேவையான அளவு நிறைய பணம் இந்த உண்டியலிருந்து பெறலாம் அல்லவா என்கிறார்.       

அதைக்கேட்ட அந்த பணக்கார கருமி, பக்காரனான நான் உண்டியல் ஏந்தி மற்றவர்களிடம் நிதியுதவி கேட்பதா அப்படி செய்வது வெட்கமாக செயலாக தோன்றியதால், பீர்பாலின் சமயோசித செயலைக் கண்டு பணக்கார கருமியின் மனத்தை வாட்டியது. 

பீர்பாலிடம் தான் ஆடிய ஏழை நாடகத்தை நிறுத்திக் கொண்டு மவுனமாக நின்றிருந்தார். எதற்காக மவுனமாக இருக்கின்றீர். கவலைப்படாமல் தேவையானவற்றை எடுத்துக் கொள்ளுங்கள் என்றார் பீர்பால்.

என்னை மன்னித்து விடுங்கள் கஷ்டத்திற்கு உதவாத கஞ்சனாக இருப்பதை எண்ணி வெட்கப் படுகிறேன். நீங்கள் சேகரித்துள்ள நிதியைக் காட்டிலும் நான் பெரும் நிதியை அளிக்கிறேன். ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி பெரும் பணமும், நகைகளையும் பீர்பாலிடம் அளித்தார்.

ஒரு பணக்கார கருமியை அறிவின் ஆற்றலினால் பெரும் நிதியைப் பெற்ற பீர்பாலை,  கூட வந்த நண்பர்கள் மனதார பாராட்டி புகழ்ந்தனர்.

நன்றி தமிழ் கடல். 

https://www.facebook.com/groups/264740130252643/ என்ற முகவரியில் சொடுக்கி (click செய்து) தமிழ் கடல் குழுமத்தின் உள்ளே நுழைந்து, குழுமத்தில் இணைந்து பயன்பெறுங்கள்.
========================================

ஆ) பொது அறிவுக் கதை. கட்டுரை, தகவல்கள் பகுதியில்:-

3. எளிமையான கல்விக்கடனுக்கு  இளையவர் வங்கிக்கணக்கு அவசியம்.....



உங்களின் குழந்தைகளுக்கு பத்து வயது பூர்தியாகும்போதே ஏதாவது ஒரு வங்கியில் இளையவர் வங்கிக்கணக்கை துவங்கிவிடுங்கள். அதோடு அவர்களின் பள்ளிப்படிப்பிற்கு செலுத்தவேண்டிய கட்டணங்களை இந்த வங்கிக்கனக்கின் மூலம் செலுத்துங்கள். காரணம் உயர் கல்வி படிப்பிற்கு தேவையான தொகை கிடைக்காதபோது நீண்ட நாட்கள் வங்கி கணக்கை வைத்திருந்த தகுதியின் அடிப்படையில் உங்களின் மகள்/மகனுக்கு அதே வங்கியில் உடனே கல்விக்கடன் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அதாவது 18 வயதிற்கு பிறகு உங்களின் மகள்/மகன் படிப்பு செலவுக்கு உங்களை சார்ந்து இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை, அவர்களாகவே கல்விக்கடன் பெற்று அவர்களின் விருப்பப்படி படிக்க முடியும். அவர்களின் காலில் அவர்களே நிலைத்து நிற்கும் பொறுப்புள்ளவர்களாக உங்கள் பிள்ளைகளும் இப்படிப்பாடுவார்கள்......"எங்களுக்கும் காலம் வரும், காலம் வந்தால் வாழ்வு வரும்...வாழ்வு வந்தால் அனைவரையும் வாழவைப்போமே". 

மாணவர்களின் கல்விக் கடன் பிரச்சினைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதற்காக ‘கல்விக் கடன் விழிப்புணர்வு இயக்கம்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

படிப்பை முடித்து ஓராண்டு வரை கல்விக் கடனுக்கான வட்டியோ, அசலோ திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயமில்லை. இந்தக் காலகட்டத்தில் கடனுக்கான வட்டியை மத்திய அரசே சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு வழங்கிவிடும். வட்டி தள்ளுபடி காலம் முடிந்த பிறகு அந்தந்த வங்கிகளின் வட்டி விகிதப்படி வட்டி நிர்ணயம் செய்யப்பட்டு 72 அல்லது 120 தவணைகளில் வட்டியையும் அசலையும் மாணவர்கள் செலுத்த வேண்டும்.

இது தான் 2009-ம் ஆண்டு மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு. ஆனால், இதன்படி எந்த வங்கியும் செயல்படுவதில்லை என்கிறார் நாமக்கல்லைச் சேர்ந்த ராஜ்குமார். தனது மகளுக்கு கல்விக் கடன் வழங்கிய நாளில் இருந்து 14 சதவீதம் வட்டி விதித்த ஒரு தனியார் வங்கியை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்திருக்கும் ராஜ்குமார், தன்னைப் போல பாதிக்கப்பட்ட நபர்களை ஒருங் கிணைத்து ‘கல்விக் கடன் விழிப் புணர்வு இயக்கம்’ என்ற அமைப்பை தொடங்கி இருக்கிறார்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய அவர் கூறியதாவது: கல்விக் கடன் விவகாரத்தில் மாணவர்க ளுக்காக தவணை விடுப்பு காலத்தில் மத்திய அரசிடம் இருந்து 5 சதவீதம் வட்டியைப் பெற்றுக்கொள்ளும் சில வங்கிகள், அதை மறைத்து சம்பந்தப் பட்ட மாணவர்களிடமும் 14 சதவீதம் வரை வட்டி வசூலிக்கின்றன. மத்திய அரசு வழங்கும் வட்டி மானியத்தை மற்ற வங்கிகளுக்கு வழங்கும் முன்னோடி வங்கியாக (Lead Bank) கனரா வங்கியை நியமித்திருக்கிறார்கள். இதில் என்ன வேதனை என்றால், பெரும்பாலான வங்கிகள் தங்களுக்கு வரவேண்டிய வட்டி மானியத்தை கனரா வங்கியிடம் இருந்து பெறுவதற்கு அக்கறை காட்டவில்லை.

இதனால் அந்த நிதியானது மத்திய அரசின் கஜானாவுக்கே திரும்பிவிட்டது. அரசு கொடுத்த மானியத்தை வாங்காத வங்கிகள் இப்போது அதையும் மாணவர்கள் தலையில் ஏற்றிவிட்டன. எஸ்.சி - எஸ்.டி மாணவர்களின் கல்விக் கடனுக்கான வட்டி மானியத்தை 2009-ல் இருந்து பெரும்பாலான வங்கிகள் பெற்றுக் கொள்ளாமல் இருக்கின்றன.

ஒன்று அந்த வங்கிகள் அந்தப் பிரிவு மாணவர்களுக்கு கடன் வழங்க மறுத்திருக்க வேண்டும் அல்லது கடனுக்கான வட்டியை அந்த மாணவர்களிடம் இருந்தே வசூலித்திருக்க வேண்டும்.
இந்தக் காரணங்களால்தான் அந்த வங்கிகள் வட்டி மானியத்தை பெறாமல் இருக்கின்றன. இதை அறிந்த இந்திய வங்கிகள் சங்கம், எஸ்.சி - எஸ்.டி மாணவர்களின் கல்விக் கடனுக்கான வட்டி மானிய தொகை கனரா வங்கியில் ஏராளமாக இருப்பில் உள்ளது.

சம்பந்தப்பட்ட வங்கிகள் அதை உடனடியாக பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகின்றன என்று நவம்பர் 5-ம் தேதி, அனைத்து வங்கி களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. மொத்தத்தில் கல்விக் கடன் விவகாரத்தில் மத்திய அரசு விதித்த நிபந்தனைகளை வங்கிகள் கண்டுகொள்ளவில்லை.

இது குறித்து நிதியமைச்சகம், ரிசர்வ் வங்கி, இந்திய வங்கிகள் சங்கம் ஆகி யோருக்கு நான் அனுப்பிய புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப் படாததால் அவர்களையும் வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்த்திருக் கிறேன். எனவே, கல்விக் கடன் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ‘கல்விக் கடன் விழிப்புணர்வு இயக்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறோம்.


கல்வி சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினை களுக்கும் உரிய தீர்வை இந்த இயக்கம் முன்னெடுத்துச் செய்யும் என்று ராஜ்குமார் தெரிவித்தார். (தொடர்புக்கு: +91-9442164601)

===========================================
ஆ) பொது அறிவுக் கதை. கட்டுரை, தகவல்கள் பகுதியில்:-

4. நூற்றாண்டு காணும் நமது தமிழ்த் திரையுலகின் "சிக்கன" பாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகர்கள் மற்றும் காட்சிகள் குறித்த செய்கிகளும்.


சிக்கனத்தை மையமாகக் கொண்டு உருவான திரைப்படங்களில் கஞ்சத்த தனத்தை தனது நடிப்பில் சிறப்பாக வெளிப்படுத்திய ஒரே தமிழ் நடிகர் சுருளிராஜன் அவர்கள் நடித்த திரைப்படம் 'மாந்தோப்பு கிளியே' மிகவும் பிரபலமானது.  அந்தப் படத்தில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தனது மகனுக்கு மருந்து வாங்க 100 ரூபாய் செலவு செய்ய கஞ்சத்தனம் பார்த்து தெருவில் விற்கும் போலி மருந்தான,  ரூபாய்க்கு 10மாத்திரை என்று விற்கும் விஷ ஜுரத்திற்கு மாத்திரை வாங்கிவருவார். அதிலும் 2 மாத்திரை கொசுறாகத் தா என்று விடாப்பிடியாக கேட்டு, கொடுக்கும் பணத்திற்கு அதிக மாத்திரை என்று வாங்கி வருவார்.
சரியான மருந்தை வாங்கித் தாராததினால் பெற்ற மகன் இறந்துபோக, 10 ரூபாய்க்கு வாங்கிய விஷ ஜூரா மாத்திரை வீணாகிப்போனதே என்று கஞ்சத்தனத்தின் உச்ச நிலையை தனது நடிப்பில் சிறப்பாக வெளிப்படுத்தியவர் நடிகர் சுருளிராஜன் அவர்கள்.  

அதே படத்தில் மற்றுமொரு காட்சியில் நடிகர் சுருளிராஜன் அவர்கள் தன மகனிடம் கூறுவார்.. ஏண்டா பஸ் பின்னால ஓடி வந்த, டாக்ஸி பின்னால ஓடி வந்தா 10 ரூபா மிச்சமாயிருக்குமே என்று.. 

ஒரு படத்தில் திரு.M.R.ராதா அவர்கள் பணக்காரராகவும் அதே நேரத்தில் வடிகட்டின கஞ்சனாகவும் நடித்திருப்பார். படம்: பட்டினத்தார்.

அந்தப் படத்தில் தன்னுடைய நெறிமுறைகளை அட்டைகளில் எழுதி வீட்டில் தொங்க விட்டிருப்பார். அதை நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டுக் கீழே கொடுத்துள்ளேன்.

1. கட்டிய மனைவியானாலும் வட்டியை வாங்கு!
2. ஊரான் பொருளானாலும் உனதென்று நினை!
3. மனதைச் செலவிட்டாலும் பணத்தைச் செலவிடாதே!
4. கணக்கன் சம்பளத்திற்குக் கடனைச் சொல்லு!
5. உற்ற தாயானாலும் உள்ளதைச் சொல்லாதே!

இன்று பல பேர் கஞ்சனாக இருக்கிறார்கள். அதற்குக் காரணம் சுயநலம். தற்காலத்து திரைப்படங்களில் கஞ்சத்தனம் என்பது நடிகைகளின் உடை அலங்காரங்களில் கட்டாயமாகத் தினிக்கப்பட்டிருக்கிறது.  .      

கஞ்சனைக்கூடச் சேர்த்துக் கொள்ளலாம், ஆனால் அவனைவிட மோசமானவன் கருமி.

கஞ்சனுக்கும் கருமிக்கும் என்ன வித்தியாசம்?

தன் வீட்டுத் தோட்டத்தில் விளையும் மாம்பழங்களில், தன் மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் மட்டும் பத்து அல்லது இருபது பழங்களைக்கொடுத்துவிட்டு மற்றதை யெல்லாம் சந்தையில் விற்றுக் காசாக்குபவன் கஞ்சன். (அவன் தன் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அந்தப் பழங்களைக் கண்ணிலேயே
காட்ட மாட்டான்)

கருமி தன் மனைவி மக்களுக்குக் கூட ஒன்றையும் கொடுக்காமல் அத்தனை பழங்களையும் சந்தையில் விற்றுக் காசாக்கிவிடுவான் ( மனைவி மக்களிடம் சொல்லுவான். இது உயர்ந்த வகைப் பழம் - நல்ல விலை கிடைத்தது. ஆகவே விற்றுவிட்டேன். நமக்கு வேண்டுமென்றால் அவ்வப்போது வாங்கித் திண்போம்! என்பான்)

தொகுத்து  வழங்கியவர்,  நன்றிகளுடன் - கோகி-ரேடியோ மார்கோனி. 


====================================================


இ) சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம் கேள்வி பதில் பகுதியில்:-


மனோசக்தியை எப்படி வளர்த்துக் கொள்வது?
🍁 *_```எண்ண ஓட்டங்கள் குறைய குறைய மூளையின் செயல்திறன் அதிகரித்து கொண்டே போகும்!_* 
🍁 *_```Extra Sensory Perceptionஐ எல்லோராலும் வளர்த்து கொள்ள முடியும் ஆழ்ந்த தியானத்தால்!!_* 

🌴 *_```ஆழ்மன பதிவை எப்படி மாற்றுவது!?```_* 

🍁 *_```நம் வாழ்வை பெரும்பாலும் வெறும் ஐந்து நிமிடங்களே தீர்மானிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?!```_* 

🍁 ```ஆம் நாம் படுத்தபின் உறங்குவதற்கு முன்பு இருக்கும் அந்த ஐந்து நிமிடங்கள்தான் அவை!!``` 

🍁 ```அப்போது நாம் எதைப்பற்றி சிந்திந்து கொண்டே உறங்குறோமோ அது நம் ஆழ்மனதால் விடிய விடிய பரிசீலிக்கப்பட்டு விரைவில் நம்மை வந்தைடைந்தே தீரும்!!``` 

🍁 ```தயவுசெய்து இனி படுத்தபிறகு அந்த நேரத்தில் பிரச்சனைகளை பற்றி யோசித்துவிடாதீர்கள். பிறகு அந்த பிரச்சனையே வாழ்கையாகிவிடும்!!``` 

🍁 ```உங்களுக்கு என்னவெல்லாம் தேவையோ அதை அடைந்துவிட்டதாக சிந்தித்து கொண்டே உறங்குங்கள். அது பிடித்த உறவு, பொருளாதார சூழல், ஆரோக்கியம் இப்படி எதுவாகவும் இருக்கலாம்.!!``` 

🍁 ```அந்த நேரத்தில் மூச்சை கவனித்துக் கொண்டே உறங்குபவன் மறுநாள் எழும்வரை ஆழ்ந்த தியான நிலையிலேயே இருந்திருப்பான்!!``` 

🌴 ```ஆழ்மன சக்தியை எது எதுக்கு பயன்படுத்த முடியும்?!``

🍁 ```நாம் கற்பனை கூட செய்ய முடியாத அனைத்தும் சாத்தியமாகும் வாய்ப்பு இந்த பிரபஞ்சத்தில் உள்ளது!!``` 

🍁 ```சாத்தியமாக வாய்ப்பு இல்லாத எதையும் நீங்கள் யோசிக்கவே முடியாது!``` ```அதனால்; நல்லவை அனைத்திற்கும் ஆழ்மன சக்தியை பயன்படுத்தலாம்!!!``` 

🍁 ```வாழ்வில் வெற்றி பெற்ற பலரும் அதிகாலை எழும் பழக்கம் உள்ளவர்களே!!"``` 


🍁 ```ஆம் நாம், பூமி, இயற்கை என அனைத்தும் அந்த நேரத்தில் உச்சகட்ட ஆற்றலோடு செயல்படும் நேரம் பிரம்ம முகூர்த்தமே பேரன்பாளர்களே!` 

-நன்றி முகநூல் பக்கங்கள்.
===================================
ஈ )நல வாழ்வு பகுதியில்:- 1.உணவே மருந்தாக  சிக்கனமும் சேமிப்பும் :-


===========================================


உ ) சமையல் குறிப்புக்கள் / விருந்துக்கு வாங்க பகுதியில்:-


• அடை செய்யும் போது மிளகாய்க்குப் பதில் இஞ்சி மற்றும் மிளகு சேர்த்துச் செய்தால் சுவையாக இருக்கும். ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.

• வாழைத்தண்டு கூட்டு செய்யும் போது, அதனுடன் ஒரு பிடி முருங்கைக் கீரை துளிர் சேர்த்துச் செய்தால் சுவையாக இருக்கும்.

• மிளகாய்த் தூள் அரைப்பதற்கு முன்பு மிளகாயை நன்கு வெயிலில் காயவைத்து அரைக்க வேண்டும். அதேபோல் மிளகாய்த் தூள் அரைத்து வந்ததும், ஒரு பேப்பரில் கொட்டி ஆற விட வேண்டும். பிறகுதான் டப்பாவில் எடுத்து வைக்க வேண்டும்.

நன்றி - எம்.ஏ.நிவேதா.

==============================================
ஊ ) பாட்டி சொல்லைத் தட்டாதே பகுதியில்:-
இயற்கை மருத்துவம் :-

1) என்றும் 16 வயது வாழ ஓர் "நெல்லிக்கனி."

2) இதயத்தை வலுப்படுத்த🌺 ""செம்பருத்திப் பூ"".

3) மூட்டு வலியை போக்கும் 🌿 ""முடக்கத்தான் கீரை.""

4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் 🍃""கற்பூரவல்லி"" (ஓமவல்லி).

5) நீரழிவு நோய் குணமாக்கும் 🌿""அரைக்கீரை.""

6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும்
"மணத்தக்காளிகீரை"".

7) உடலை பொன்னிறமாக மாற்றும் 🍂""பொன்னாங்கண்ணி கீரை.""

8) மாரடைப்பு நீங்கும் 🍊""மாதுளம் பழம்.""

9) ரத்தத்தை சுத்தமாகும் 🌱""அருகம்புல்.""

10) கான்சர் நோயை குணமாக்கும் 🍈"" சீதா பழம்.""

11) மூளை வலிமைக்கு ஓர் ""பப்பாளி பழம்.""

12) நீரிழிவு நோயை குணமாக்கும் "" முள்ளங்கி.""

13) வாயு தொல்லையிலிருந்து விடுபட 🌿""வெந்தயக் கீரை.""

14) நீரிழிவு நோயை குணமாக்க 🍈"" வில்வம்.""

15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் 🌿""துளசி.""

16) மார்பு சளி நீங்கும் ""சுண்டைக்காய்.""

17) சளி, ஆஸ்துமாவுக்கு 🌿""ஆடாதொடை.""

18) ஞாபகசக்தியை கொடுக்கும் 🌿""வல்லாரை கீரை.""

19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் 🌿""பசலைக்கீரை.""

20) ரத்த சோகையை நீக்கும் 🍒"" பீட்ரூட்.""

21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்🍍"" அன்னாசி பழம்.""

22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை 🌾(முள் முருங்கை)

23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் 🌿🍪 கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.

24) மார்புசளி, இருமலை குணமாக்கும் ""தூதுவளை""

25) முகம் அழகுபெற 🍇""திராட்சை பழம்.""

26) அஜீரணத்தை போக்கும் " புதினா."

27) மஞ்சள் காமாலை விரட்டும் 🌱“கீழாநெல்லி”

28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”.

பகிர்ந்துகொள்ளுங்கள் கண்டிப்பாக மற்றவரும் அறிந்துகொள்ளட்டும்..
==============================================
"கைத்தொழில்-கற்றுக்கொள்ள வாருங்கள்"-கைத்தொழில் பகுதியில் இந்தமாதம்:-
'கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை இல்லை ஒத்துக்கொள்' என்ற கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை அவர்களின் பாடலுக்கேற்ப பலவிதமான சிறுதொழில் வாய்ப்புகள் தரும் கைவினை வேலைப்பாடுகள்: கற்றுத்தருகிறார் திருமதி ஜெயஸ்ரீ நாராயணன் அவர்கள். 


சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை ஒயர்கூடை பின்னுதல், எம்பிராய்டரி, குரோஷா, பொம்மைகள் செய்தல் போன்ற கைவினை வேலைப்பாடுகள் பெண்களின் உபரி வருமானத்துக்கு வாய்ப்பளித்தன. இன்று பெண்களின் பெரும்பாலான நேரத்தை டிவி பிடித்துக் கொள்கிறது. பொருளாதார காரணங்களுக்காக வீட்டின் ஆணை சார்ந்திருக்கும் பெண்கள், அவர்களின் திடீர் இழப்புகளின்போது செய்வதறியாமல் தவிக்கின்றனர். கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்; கவலைகள் உனக்கில்லை ஒத்துக்கொள் என்கிற அர்த்தமுள்ள வரிகளை மெய்ப்பிக்கவே பல்வேறு கைவினை வேலைப்பாடுகளை கற்றுத்தரும் இந்தத் தொடரை ஆரம்பித்திருக்கிறோம்.

தமிழகம் முழுக்க கல்லூரி, பள்ளிகள், பெண்கள் குழுக்களுக்கு கைவினைப் பொருட்கள் செய்யக் கற்றுத் தந்துக்கொண்டிருக்கும் ஜெயஸ்ரீ நாராயணன், இனி வாரம் ஒரு கைவினைப் பொருள் செய்யக் கற்றுத்தர இருக்கிறார்.சென்னையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ, திருமணத்துக்குப் பிறகு ஓவியப் பயிற்சி, நகைகள் செய்தல் உள்ளிட்ட பயிற்சிகள் எடுத்துக் கொண்டவர். 32 ஆண்டு கால ஆர்வமும் உழைப்பும் இவரை தேர்ந்த கைவினை கலைஞராக மாற்றியிருக்கிறது. ஆர்வமுள்ளவர்களுக்கு இவர் கற்றுத்தருவதோடு, கற்றுக்கொண்ட பிறகு தொழில் தொடங்கவும் குழுக்களாக சேர்ந்து கண்காட்சிகள் நடத்தவும் வழிகாட்டுகிறார்.

பல்வேறு ஓவிய வகைகள், பேப்பர் நகைகள், டெரகோட்ட நகைகள், செராமிக் நகைகள், அலங்கார சணல் பைகள் போன்றவற்றை கற்றுத்தருகிறார். தமிழ் பத்திரிகைகளிலும் இவர் பத்திகள் எழுதிவருகிறார். 

நன்றி - நான்கு பெண்கள் இனைய வலைப்பதிவு  https://fourladiesforum.com/
==============================================
6. சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்"..... "சிக்கனம் மற்றும் சேமிப்பு மாதக் கொண்டாட்டம்" படத்தில் உள்ள (6) ஆறு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்- ஆக்டொபர்-2016-ஐப்பசி-மாதம் தண்ணீர் சிக்கனமும் சேமிப்பும் வலைப்பதிவு இதழ் போட்டி என்-07.

சரியான விடை அடுத்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" http://gulkanthu.blogspot.in/வலைப்பதிவர் இதழில் வெளியாகும். போட்டியில் பங்குகொள்ள விருப்பமுடையவர்கள் விடைகளை "vaishalireaderscircle@gmail.com" என்கிற மினஞ்சல் முகவரிக்கு 10-11-2016 முன்பாக அனுப்பிவைக்கவேண்டும். சரியான விடை எழுதிய அனைவருக்கும் அடுத்தமாத வாசகர் வட்ட சந்திப்பில் பரிசுகள் வழங்கப்படும்.

$ சென்ற மாத "சுட்டீஸ் குல்கந்து" வலைப்பதிவர் இதழ்-6 செப்டம்பர்-2016-புரட்டாசி-மாத இதழின் பெரியோர்களின் ஆசிபெறும் மாத, வலைப்பதிவு இதழ் போட்டி என்-06. ஆறு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடை,
1. ஆசீர்வதிக்கும் பெரியவரின் நெற்றி குங்கும பொட்டு, 2. ஆசீர்வதிக்கும் தாயாரின் புடவை ஒர (பார்டர்) நிறம், 3.தாயாரின் காது வைர தோடு,  4. ஆசி பெரும் மகனின் மூக்கு கண்ணாடி, 5) ஆசி பெரும் மருமகளின் கை ரவிக்கை நிறம், 6.மாவிலைத் தோரணங்கள் எண்ணிக்கை. 

சென்ற மாத ஆறு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடையை 57 நபர்கள் குறிப்பிட்டிருந்தனர், தமிழில் விடை எழுதியவர்கள்=36, ஆங்கிலத்தமிழில் எழுதியவர்கள்=14, ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=05, ஹிந்தி மொழியில்=02 நபர்களும், தெலுங்கு மொழியில்=0 நபரும், மேலும் சிலர் ஆறுக்கும் அதிகமான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.
==============================================
7. அறுவை ஆயிரம், பொன் மொழிகள், பழ மொழிகள், உலக மொழிகள், விடுகதைகள், பஞ்ச். :-தொகுத்து வழங்கியவர்... எ.கே. சபரீஷ்....

ஆறுதரம் பூமியை வலம் வருதலும், ஆயிரம் முறை காசியில் குளித்தலும், நூறு தடவை சேது ஸ்நானம் செய்தலும், என இவற்றால் கிடைக்கும் புண்ணியம், தாயை பக்தியுடன் ஒருதரம் வணங்கினாலே கிடைக்கும்."

தொகுத்து  வழங்கியவர் எ.கே. சபரீஷ்....
==============================================

8.பயனுள்ள தமிழ் வலைப்பதிவர் பக்கங்களில் இந்தமாதம் :-

1.மதிப்பிற்குரிய திரு பொள்ளாச்சி நசன் - (தமிழம்.வலை-தமிழம். பண்பலை)  அவர்களின் "திருக்குறள் படித்தல் - (எளியமுறையில் ஒரே நாளில் 300 திருக்குறளை அறிதல்)" http://win.tamilnool.net/tkl300/index.html என்கிற இனைய வலைப்பக்கத்தை, புது தில்லியின் வைசாலி (தமிழ்) வாசகர் வட்ட உறுப்பினர்களுக்கு அறிமுகம்  செய்வதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.  

2. சிறந்த எழுத்தாளர் திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள் எழுதிய சிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு என்கிற வலைப்பதிவை வைஷாலி வாசகர் வட்டத்தின் இந்தமாத சிறந்த தமிழ் வலைப்பதிவு பக்கமாக வாசகர் வட்ட நிகழ்ச்சியில் பெருமைப்படுத்தப்படுகிறது. http://honeylaksh.blogspot.in/2013/06/blog-post_12.html அவருக்கு நமது நன்றிகளை தெரிவித்துக்கொண்டு, நமது (NCR-புது தில்லி) வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ்களுக்கு பயனுள்ள வலைப்பதிவு பக்கமாக மேற்கண்ட அவரது வலைப்பதிவுகளை  முன்மொழிவதில் மகிழிச்சியடைகிறோம்.

==============================================
9. கருத்து சொல்லப்போறேன்:- (A.K.சபரிஷ்)

$"ஆலய மணி தலை கவிழ்ந்து உள்ளது. ஆனால் அதன் நாதம் தொலைதூரம் வரை கேட்கிறது. அதுபோல அடக்கமாக செய்யும் தொண்டு நெடுங்காலம் பயன் தரும்." 


$கெட்டத, கேட்ட உடனே மறக்கணும், நல்லத நாலு பேர்கிட்டயாவது சொல்லணும்!
==============================================
10. விடுகதைகள் :- (A.K.சபரிஷ்)
முன்னும் பின்னும் போவான், ஒற்றைக்காலிலே நிற்பான் – யார் அவன்?– [விடுகதைக்கான விடை:- கதவு]

அடித்தாலும், உதைத்தாலும் அவன் அழ மாட்டான் – அவன் யார்?[விடுகதைக்கான விடை:- பந்து ]


==============================================
11. கவிதை:- 
முதலில் அணிந்த சட்டை
முதலாவதாக போட்ட ஊசி
முதன் முதல் வெட்டிய நகங்கள்
முதலில் விளையாடிய கிலுகிலுப்பை
என்று உனது
எல்லா ‘முதல்’களையும்
சேமித்து  வைத்திருக்கிறேன்
முதன் முதலாக
‘அம்மா’ என்று என்னை
நீ மழலையாக அழைத்ததை
எப்படி சேமிப்பேன்  என அறியாமல்!
மூச்சுக் காற்று மட்டும் 
உரிமை கோரும் 
ஏகாந்தமான இரவொன்றில் 
உன் நினைவு சேமிப்பை 
கொஞ்சம் செலவு செய்து கொள்கிறேன்  
என் செல்லத் தோழியே!   (திருமதி. பிரியா கங்காதரன்)
====================================================
11. கவிதை:- 

வெடி வெடிக்க வேண்டாமே....!!!!
மாசற்ற காற்றை சுவாசிக்க,
பட் டாசற்ற தீபாவளியைக் 

கொண்டாடுங்கள் ......கோகி

========================================================
11. கவிதை:- 
நட்சத்திர விடுதிக்கு 
போகும் வழியெங்கும் 
நட்சத்திரம்.... 
மின்னிக்கொண்டிருந்தது...(S.ஸ்ரீ சக்ரி)
================================
11. கவிதை:- 

வெப்ப நகரம் 
கண்ணாடி மாளிகையின் 
கண்ணீரால் 
குளிர்ந்தது..... 
எதோ ஒரு சில 
மரங்களின் 
புண்ணியத்தால்... ( AK.பவித்ரா)
=================================
12. நமது வாசகர் வட்டத்தின் இந்த மாத சரித்திரம் முக்கியம் பகுதியில், 




மத்திய தொல்பொருள் துறையினர் மேற்கொண்டுள்ள ஆராய்ச்சிகளின் பலனாக, மதுரை மண்ணுக்குள் புதைந்து போயிருந்த ரகசியங்கள் வெளிக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. 2200 முதல் 2300 வருடங்களுக்குள் வாழ்ந்த நம் மூதாதையர்களின் கிராமத்தைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஓர் அரிய வாய்ப்பு தொல்பொருள் துறையினரால் சாத்தியமாயிற்று...."மதுரை 
கீழடி - மண்ணுக்குள் மறைந்திருந்த நம் மூதாதையர் கிராமம் - வனிலா பாலாஜியின் மூன்றாம் கண் (13)" ----11 படங்களுடன் ஒரு பகிர்வு.

மற்றுமொரு சிறப்பு என்னவென்றால், தமிழ்நாட்டை பொருத்தவரை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பழங்காலத்து நாணயங்கள், அணிகலன்கள், முதுமக்கள் தாளி, நடுகற்கள் போன்ற மக்கள் உபயோகப்படுத்திய பொருட்களை மட்டுமே கண்டுபிடித்து வந்துள்ளார்கள். மக்கள் வாழ்ந்த வீடுகள், வீட்டின் சுவர்கள் ஆகியவற்றை கண்டுபிடித்திருப்பது இதுவே முதன்முறை. மேலும்,  அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள உறை கிணறுகள், நம்மில் சில வருடங்களுக்கு முன்பு வரை உபயோகத்தில் இருந்த உறை கிணறுகளை ஒத்திருக்கின்றன.



நன்றி http://www.atheetham.com/2015/09/13_2.html

===============================================

13.விளம்பரதாரர் நிகழ்ச்சி பகுதியில்:- 

==================================================


14.பயனுள்ள முகநூல் பக்கங்களில் இந்தமாதம் பகுதி:- 
சிறந்த முகநூல் பக்கங்களாக  
1. கீரை மற்றும் கிழக்கு வகைகளை சமையலுக்கு நறுக்கும்போது, சமயலுக்குத் தேவையற்ற காம்பு, தண்டு, கிழங்கு வேர் போன்ற பகுதிகளை தூக்கியெறியாமல் அவைகளை நமது வீட்டுத் தோட்டத்தில் அல்லது அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனி பகுதியில் மண்தொட்டிகளில் நட்டுவைத்து நீரூற்றி பராமரித்துவந்தால் சிறு தோட்டம் அமைவதோடு வீட்டிற்குத் தேவையான கொத்தமல்லி, மிளகாய், கீரை, காய்கள் போன்றவை இலவசமாக நமது வீட்டுத்தோட்டத்த்திலேயே கிடைத்துவிடும். மேலும் அருமையான பல விவரங்களுக்கு இந்த முகநூல் பக்கத்தில் இணைந்து காணொளியில் பல விவரங்களை பெற்று பயன்பெறலாம்.
https://www.facebook.com/officialgoodful/videos/1300037320066731/
https://www.facebook.com/officialgoodful/
 2. முகநூலில் சிறுகதைகள் என்னும் முகநூல் பக்கத்தையும் 
http://www.facebook.com/siru.kathaigal நமது வாசகர் வட்ட குழுவினர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம். 
==================================================

15. வாசகர் வட்ட நிகழ்ச்சியின் சிறப்பு புகைப்படங்கள் :-
வாசகர் வட்ட நிகழ்ச்சியின் போட்டியில் பங்குபெற்றவர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

பகுதி II -கால்வண்ணம் :- (நடனம், நாடகம், விளையாட்டு போட்டிகள்) :-



அன்புள்ள வாசகர்களுக்கு:- நாங்கள் தொகுத்து வழங்கிய பதிவுகளில் உள்ள குறை நிறைகளை வாசகர்கள், அன்பான முறையில் எங்களுக்கு எடுத்துக்கூறி, எங்களது பதிவுகள் மேலும் சிறப்படைய வாழ்த்தி உற்சாகப்படுத்துமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு   
வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ் தமிழ் ரோஜாக்கள்.
நன்றி... மீண்டும் அடுத்தமாத இதழில் சந்திப்போம்... வணக்கம். 

No comments:

Post a Comment