"சுட்டீஸ்-குல்கந்து" கார்த்திகை மாத வலைப்பதிவர் பூவிதழ்-8" நாள்/தேதி:- ஆங்கில மாதத்தின் 3-வது ஞாயிறு 20-11-2016.
கற்க கசடற….!! !! வாய்மையே வெல்லும்!!
“வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம்”
Vaishali, Ghaziabad, NCR-New Delhi.
e-mail: vaishalireaderscircle@gmail.com
___________________________________________________________________
சுட்டீஸ் இதழ்=08 கார்த்திகை மாதம்-தேதி 20-11-2016. வணக்கம், தாங்களின் வருகைக்கு நன்றி, இந்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழில்" - கார்த்திகை மாத வலைப்பதிவு:- இந்த இதழின் ஆசிரியராக, தொகுத்து வழங்குபவர்:-(Editor of the Page) செல்வி கீர்த்தனா ராஜேந்தரன், NCR-NEW DELHI.
வைஷாலி வாசகர் வட்ட 33வது சந்திப்பு...20-11-2016 கார்த்திகை மாதம் -புதுமை, புத்துணர்ச்சி, புதுப்பொலிவு, தீபத் திருநாள் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும்.
இருள் சூழ்ந்திருக்கும் இடத்தில் பிரகாசமான ஒளி ஏற்றப்படுமேயானால் அவ்விடத்தில் புத்துணர்ச்சியும் புதுப்பொலிவும் உண்டாகும்.
இருள் சூழ்ந்திருக்கும் இடத்தில் பிரகாசமான ஒளி ஏற்றப்படுமேயானால் அவ்விடத்தில் புத்துணர்ச்சியும் புதுப்பொலிவும் உண்டாகும்.
அடுத்து வரும் திசம்பர்-2016, 18-12-2016 மார்கழி மாத வலைப்பதிவு இதழின் ஆசிரியராக, (Editor of the page) இந்த வலைப்பக்கத்தை தொகுத்து வழங்க ஆவலுடன் காத்திருப்பவர் யார்? விருப்பம் உள்ளவர் உங்கள் விருப்பத்தை உடனே தெரியப்படுத்துங்கள். மின் அஞ்சல் "vaishalireaderscircle@gmail.com"
கார்த்திகை மாத வாசகர் வட்டத்தின் :-33வது சந்திப்பில் (20-11-2016) முதலில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் தொடர்ந்து கார்த்திகை மாதம் -புதுமை, புத்துணர்ச்சி, புதுப்பொலிவு, தீபத் திருநாள் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும். வாழ்க்கையை ஒளிமயமாக்கும் கார்த்திகை மாத சிறப்புகள் பற்றியும் ஒரு அலசல்....
கார்த்திகை விழாவை குமராலாய தீபம், சர்வாலய தீபம், விஷ்ணுவாலய தீபம் என மூன்றாக ஆலயங்களிலும் இல்லம்தோறும் கொண்டாடுவர்.
குமராலய தீபம் என்பது முருகன் ஆலயங்களில் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் கூடிவரும் நாள். விஷ்ணுவாலய தீபம் என்பது விஷ்ணு ஆலயங்களில் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தில் ரோகினி நட்சத்திரம் கூடிவரும் நாள். சர்வாலய தீபம் என்பது ஏனைய இந்து ஆலயங்களிலும் வீடுகளிலும் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்து முழுமதி திதி. அதாவது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர்கள் தமது இல்லங்களிலும் கோயில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்.
இருள் சூழ்ந்திருக்கும் இடத்தில் பிரகாசமான ஒளி ஏற்றப்படுமேயானால் அவ்விடத்தில் புத்துணர்ச்சியும் புதுப்பொலிவு ஏற்படும்.
முன்னொரு காலத்தில் ஒரு அரசரின் அழகிய மகள், கல்வியிலும் கேள்வியிலும் சிறந்து விளங்கிய கண்கள் தெரியாத குருடரான அரசு கவிஞ்சர் மகன் மீது விருப்பம் கொண்டு, கார்த்திகை மாதத்தில் ஒரு சுபநாளில் திருக்கோவிலில் திருமணம் செய்துகொண்டார்.
மன்னருக்கு தனது மகளின் பிடிவாத திருமணம் பிடிக்காது போனதால் ,இனி அரண்மனையில் உனக்கு இடமில்லை என்று கூறியதோடு உனது வாழ்க்கைக்குத் தேவையான பொருளை பெற்றுக்கொண்டு வேறு எங்காவது சென்று வாழும்படி கூறிவிட்டார்.
அதற்க்கு மன்னரின் மகள் தமக்கு எந்த பொருளும் வேண்டாம் என்று கூறியதோடு, இன்று ஒருநாள் மட்டும் அரண்மனையிலும் இந்த நாட்டின் எவர் வீட்டிலும் விளக்குகள் ஏற்றக்கூடாது என்கிற ஒரு வேண்டுகோளை அரசரின் முன் வைத்தார். அதைக்கேட்ட மன்னருக்கு மிகுந்த ஆச்சரியம் ஏற்பட... சரி அப்படியே ஆகட்டும் என்று கூறி, அதற்கான உத்தரவை செயல்படுத்துங்கள் என ஆணையிட்டார்.
அந்த நாட்டின் எல்லையில் ஒரு குடுசை வீடை கட்டி, வீடுமுழுவதும் பசுங் கோமியம் சாணம் தெளித்து மொழுகி, வீட்டின் அனைத்து இடங்களிலும் அகல் விளக்குகள் ஏற்றி, அந்த வீட்டின் வாசலருகே தனது கண்கள் குருடான கணவரை ஸ்ரீ லட்சுமி தேவியாரைப் துதித்து கவிபாடும்படி கூறியதோடு, என்னிடம் அனுமதி பெறாமல் எவரையும் வெளியில் செல்லவோ உள்ளே வரவோ அனுமதிக்கவேண்டாம் என்று கூறினாள். பிறகு வீட்டின் உள்ளே சென்று கடவுளுக்கு படைப்பதற்கான நெய்வேத்திய சாதத்தை சமைக்க துவங்கினார்.
வீட்டின் உள்ளே ஏற்றப்பட்டிருந்த விளக்குகளின் வெளிச்சத்தை தாங்கமுடியாமல் வீட்டின் உள்ளே இருந்த கெட்ட "துர்"-தேவதைகள் வீட்டை விட்டு வெளியேற முயன்றார்கள். அவர்களை தடுத்து நிறுத்திய தனது கணவரின் அருகே சென்ற அரசரின் மகள், அந்த துர் தேவதைகளிடம் இனி எப்போதும் எந்தக்காரணத்தைக் கொண்டும் இந்த வீட்டிற்குள் நுழையமாட்டோம் என்று சத்தியம் பெற்றுக்கொண்டு வீட்டை விட்டு வெளியே விரட்டியடித்தார்.
சற்று நேரத்திற்குப்பிறகு அந்த நாட்டில் எங்கும் விளக்குகள் ஏற்றப்படாமல் இருள் சூழ்ந்த இடத்திலிருந்த நல்ல தேவதைகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஸ்ரீ மஹாலட்சுமி தேவியருடன், விளக்குகள் ஏற்றப்பட்டு புதுப்பொலிவுடன் பிரகாசமாக இருக்கும் நாட்டின் எல்லையருகே இருந்த அந்தக் குடுசைக்குள் நுழைய முற்பட்டார்கள். அப்போது அவர்களை வாசலில் தடுத்து நிறுத்திய தனது கணவரின் அருகே சென்ற அரசரின் மகள் நல்ல தேவதைகளையும், ஸ்ரீ மஹாலட்சுமி தேவியாரையும் சிறப்பாக வரவேற்று இனி எப்போது எந்தக்காரணத்தைக் கொண்டும் இந்த வீட்டை விட்டு போகமாட்டோம் என்று சத்தியம் பெற்றுக்கொண்டதோடு, அவர் கணவரின் குருட்டுத்தன்மை நீங்கச் செய்து ஏராளமான செல்வங்களைப்பெற்று அந்நாட்டு மன்னரைவிட பலமடங்கு சிறப்பாக தனது வாழ்க்கையை வாழத் தொடங்கினார்.
அனைவருக்கும் தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
தொடர்ந்து வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பின் எங்கவீட்டு நூலகம், படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும் (தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம்) மற்றும் இந்த மாத தலைப்பைச் சார்ந்த போட்டிகளும் பரிசுகளும்... என நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக நடந்தது..........
நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்????????????????????
"வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்...."
" வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்..........."
"என் கேள்விக்கு என்ன பதில்?" நிகழ்ச்சியில்
வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்"...
வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்".. நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் ??????????? என்கிற கேள்விக்கு ...வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ்கள் வழங்கிய "என் கேள்விக்கு என்ன பதில்? " நிகழ்ச்சியில்....மனம்திறந்து பேசினார்கள் ...
# D. துர்கா 2ம் வகுப்பு:- "என்னால மரம் மட்டுமே நடமுடியும், மரம் நட்டால் மட்டும் போதாது அதை சரியாக கவனித்து வளர்க்கவும் செய்யணும்..."
# H. சாய் நந்தினி மற்றும் H.சாய் ஷிவானி சகோதரிகள்:-(பேப்பர்) காகிதம் தயாரிக்க மரங்கள் வெட்டப்படுவது தடுக்கவேண்டுமானால், நாம் நமது நோட்டு மற்றும் புத்தக தாள்களை வீணாக்காமல் பாதுகாக்கவேண்டும்.
# செல்வி கீர்த்தனா ராஜேந்திரன்:- குப்பைக் கூளங்களை, குளங்களில் கொட்டாமல் பார்த்துக்கொண்டாலே போதுமே. அதனால் குளங்களில் அதிக நீரை சேமித்து வைத்து பயன்படுத்தமுடியும், அதோடு குளத்தில் உள்ள நீர் கெட்டுப்போகாமல் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கும்.
# செல்வன் A.K.சபரீஷ் மற்றும் B.அபிஷேக் சகோதரர்கள்:- மரங்களை வெட்டாமல் பாதுகாக்க, நாம் நமது காகிதம் பயன்பாட்டைக் குறைத்துக்கொண்டு தற்போதைய நவீன கைத்தொலைப்பேசி, மடிக்க கணினி, "டேப்ளட்" என்னும் தொடுதிரைக் கைப்பேசி கணினி போன்ற மின்னணு சாதனங்களை பயன்படுத்தி அதிகப்படியான காகித தேவை ஏற்பாடாதவண்ணம் செய்யமுடியும்.
# பவித்ரா மற்றும் அபிநயா சகோதரிகள்:-"Used Paper recycling process" என்கிற காகிதம் மறுசுழற்சி முறையில் பயன்படுத்திய பழைய காகிதங்களை திரும்ப உபயோகப்படுத்துமாறு உற்பத்தி செய்து மரங்களை வெட்டுவதைக் காக்கமுடியும்" ஒருமுறை பயன்படுத்திய காகிதக் கடிதங்களை ஜெராக்ஸ் மற்றும் ஸ்கேனர் என்கிற தாள் -நகல் சேமிக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தி, கணினியில் சேமித்து வைத்து பயன்படுத்தினால் மேலும் மேலும் நகல் எடுக்கவேண்டிய காகித செலவும் மிச்சமாவதோடு, பயன்படுத்திய காகிதத்தை மறுசுழற்சி செய்து மீண்டும் காகிதம் தயாரிப்பதால், காகிதத்திற்க்காக மரங்கள் வெட்டப்படுவது தடுக்கப்படும்.
#"எங்க ஊரில் உள்ள குளங்களையும், ஏரியையும் காணவில்லை!!!" என்று முன்பே நமது சுட்டீஸ் இதழில் தெரிவித்திருந்தோம். அரசாங்கமும், அந்தந்த ஊரில் இருக்கும் கிராம பஞ்சாயத்து அமைப்புகளும் குளங்களையும் ஏரிகளையும் பாதுகாப்பதோடு, ஏரிகளை மூடிவிட்டு குடியிருப்பு காட்டும் ஆகிரமிப்புகளை தடுத்தாலே ஏரிகளிலும் குளங்களிலும் மழைநீர் சேமிக்கப்பட்டு நமது தண்ணீர் பற்றாக்குறை தீர்வதோடு, விவசாயமும் செழிப்படையும்....... என நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவரும் ஒன்றாக சேர்ந்து குரல் கொடுத்தனர்...
நிகழ்ச்சியின் இறுதிப்பகுதியில் தொடர்ந்து பேசிய திரு.கோபால கிருஷ்ணன் அவர்கள் அந்தக்கால மாணவப்பருவ நினைவுகளாக (1980-கலீல்- நடிகர் ரஜினிகாந்த் நடித்த "தீ" திரைப்படம் படப்பிடிப்பு நடந்த கூடுவாஞ்சேரி -காயரம்பேடு கிராமம் ஒன்றில் (அதிக திரைப்பட படப்பிடிப்புகள் இந்த சுஜாதா பண்ணை அருகே நடைபெறும்) அங்கு இருந்த ஏரி ஒன்றும் (திரைப்படத்தில் வரும்) அந்த எரியும் தற்போது காணாமல் போய்விட்டது)
ஒரு உண்மைச் சம்பவம் ஒன்று கூறுகிறேன்.... என தொடர்ந்து பேசினார் நான் மாணவனாக இருந்தபோது தமிழகத்தின் - சென்னை- தாம்பரம் அருகே இருக்கும் கூடுவாஞ்சேரி என்கிற ஊரில் (முன்பு அது ஆன் பெண் என இருபாலரும் படித்த உயர்நிலைப்பள்ளியாக இருந்தது) தற்போது இருக்கும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடல் அருகே ஒரு காலத்தில் ஒரு பெரிய ஏரி ஒன்று இருந்தது. (தற்போது அது ஆகிராமிக்கப்பட்டு அடுக்குமாடிக் கட்டிடங்களாக மாறிப்போனது குறிப்பிடத்தக்கது) பள்ளிக்கூடம் நடக்கும் ஒவ்வொருநாளும் அந்தப் பள்ளியின் கைத்தொழில் பாடவேலைப்பிரிவில், மாணவர்களின் ஒரு பகுதியினர் தையல் மற்றும் தச்சு வேலை பழகவும், மற்றும் ஒரு பகுதியினர் பள்ளியின் தோட்டம் அமைக்கும் பணியிலும் செயல்படுவது வழக்கம். அப்படி அந்தப்பள்ளியின் பின்புறம் அமைந்த தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த காய்கறித் தாவரங்களுக்கு அந்தப்பள்ளியின் அருகே அமைந்த ஏரியிலிருந்து மாணவர்கள் வாளியில் தண்ணீர் நிரப்பி எடுத்துவந்து தண்ணீர் பாச்சுவது வழக்கம். அங்கு விளையும் காய்களை பறித்து குறைந்த விலையில் மாணவர்களும் ஆசிரியர்களும் வீட்டிற்கு எடுத்துச்செல்வது வழக்கம். அப்படி விவசாயமும், தோட்டமும் சிறப்பாக இருந்ததற்கு முக்கியக்காரணமான மிகப் பெரிய எப்போதும் வற்றாத நீர் நிரம்பிய ஏரி இன்று காணாமல் போனது. அந்தக்காலங்களில் தமிழகத்தின் ஏரிகளின் மாவட்டம் என்று போற்றப்பட்ட, ஏரிகளில் மிகப்பெரிய ஏரியான செங்கல்பட்டு ஏரியில் கடல் அலைகள் போல பெரிய அலைகள் கரையைத் தொடும். சென்னைக்கருகே அமைந்த செங்கல்பட்டில் பெரிய அலைகளைக்கொண்ட அந்த ஏரி, ஒரு குட்டி மெரினா கடற்கரையாகவே விளங்கியது, செங்கல்பட்டில் வசிப்பவர்களுக்கு தினமும் காலையிலும் மாலையிலும் எரிக்கரையோரம் உலவுவதற்கும், உடற்பயிற்சி செய்யவும் விரும்பி அமைந்த இடமாக இருந்த மிக நீண்ட கரையைக்கொண்ட ஏரி அது.... அப்படி பெரிய அலைகளுடன் கூடிய ஏராளமான நீர் நிரம்பிவழிந்த ஏரிகளின் இன்றய நிலை கேவலமான கேள்விக்குரியதாகப் போய்விட்டது..... அந்த பழைய நினைவுகள் மட்டுமே நிஜமாகிப்போனது.
தொடர்ந்து நிகழ்ச்சியில் மனம்விட்டு பேசிய அனைவரையும் பாராட்டி, நிகழ்ச்சி இனிதாக நிறைவுபெற்றது.
மேலும் இந்த மாத சுட்டீஸ்களின் ஏராளமான செய்திகளை மிகவும் பயனுள்ள வகையில் நமது வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ் "குல்கந்து" குழுவினர்கள் தொகுத்து தந்திருக்கிறார்கள்....
அவர்கள் தொகுத்துத் தந்த பல செய்திகளை ஒன்று சேர்த்து, அனைத்தையும் அழகாக கோர்த்து, ஒரு கதம்ப மாலையாக தொடுத்து தந்திருக்கிறார்கள். இந்த மாத வலைப்பதிவு இதழின் அனைத்து விவரங்களும் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம்.... இப்படிக்கு வாசகர் வட்ட சுட்டீஸ் "குல்கந்து" ரோஜாக்கள்.
I. முதலில் குட்டி கல்கண்டு தகவல்கள்:- கார்த்திகை மாதம் -புதுமை, புத்துணர்ச்சி, புதுப்பொலிவு, தீபத் திருநாள் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும் என்கிற தலைப்பில் தகவல்களை ஒன்றுதிரட்டி..
@. தீபம் ஏற்றும் முறையும் பலனும் :-
ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும். வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.
@.கார்த்திகை மாதம் முழுதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது, அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும். கார்த்திகை மாதத்தின் தொடக்கத்திலும் முடிவிலுமாக இரு நாட்களில் கார்த்திகை நட்சத்திரம் வருமாயின், இரண்டாவதாக வரும் நாளில் கொண்டாடுவது மரபு.
@.வீட்டின் சுவாமி அறை மட்டுமல்லாது நடு முற்றம், சமயலறை, துளசி மாடம் போன்ற இடத்திலும் தீபங்களை ஏற்றலாம் மாலை நேரம் நடு முற்றத்தில் மாக்கோலம் போட்டு மஞ்சள் திரி வைத்து நெய் தீபம் ஏற்றினால் அந்த குடும்பம் வறுமையின் ஆழத்தில் கிடந்தாலும் மிக கண்டிப்பாக செல்வ செழிப்பின் உச்சத்திற்கு வருமென்று சாஸ்திரங்கள் உறுதியாக சொல்லுகின்றன.
@. தீபம் ஏற்றும் நேரம் :-
தீபம் எற்றுவதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் (சூரிய உதயதிற்கு முன்) மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை (சூரிய உதயதிற்கு பின்).
காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். மாலையில் 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம் மற்றும் வீட்டில் லெட்சுமி வாசம் செய்வாள்.
@.விளக்கு ஏற்றும் முறை:-
ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும்.
இரு முகம் ஏற்றினால் - குடும்ப ஒற்றுமை கிட்டும்.
முன்று முகம் ஏற்றினால்- புத்திரதோஷம் நீங்கும்.
நான்கு முகம் ஏற்றினால் - பசு,பூமி,செல்வம், சர்வபீடை நிவர்த்தி ஆகும்.
ஐந்து முகம் ஏற்றினால் - சகலநன்மையும்,ஐஸ்வர்யம் பெருகும்.
@.விளக்கேற்றும் திசை:-
கிழக்கு - துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி
மேற்கு - கடன், தோஷம் நீங்கும்
வடக்கு - திருமணத்தடை அகலும்
தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது (மரணபயம் உண்டாகும்)
@. ஐந்து கூட்டு எண்ணெய் (விளக்கெண்ணை, இலுப்பை எண்ணை, நெய், நல்லெண்ணை, தேங்காய் எண்ணை ) - அம்மன் அருள்
@. எண்ணெயின் பலன்:-
தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொறுத்தும் பலன் கிடைக்கும்.
நெய் - செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்
நல்லெண்ணெய் - ஆரோக்கியம் அதிகரிக்கும்
தேங்காய் எண்ணெய் - வசீகரம் கூடும்
இலுப்பை எண்ணெய் - சகல காரிய வெற்றி
விளக்கெண்ணெய் - புகழ் தரும்
@.வேப்பெண்ணை - கணவன் மனைவி உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவி பெறவும்
@.ஆமணக்கு எண்ணை - அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெற வழி செய்வது
@.கடலை எண்ணை, கடுகு எண்ணை, பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது. மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையுமே பெருக்க வல்லவை இந்த எண்ணையின் தீபங்கள்.
@.எண்ணெய்க்கு உகந்த தெய்வங்கள்:-
விநாயகர் - தேங்காய் எண்ணெய்
மகாலட்சுமி - பசுநெய்
குலதெய்வம் - வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்
பைரவர் - நல்லெண்ணெய்
அம்மன் - விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த
@. 5 கூட்டு எண்ணெய்:-
பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்கள் – நல்லெண்ணெய்
@.திரிகளின் வகைகளும் அவை தரும் பலன்கள்
திரிகள் புதிதாகவும், கெட்டியானதாகவும் இருக்க வேண்டும். திரிகளும்,பயன்களும் குத்துவிளக்கிற்கு பயன்படுத்தும் திரிகளாலும் பயன்கள் மாறுபடுகின்றன.
• பருத்திப் பஞ்சு - குடும்பம் சிறக்கும், நற்செயல்கள் நடக்கும்.
•வாழைத் தண்டின் நார் - முன்னோர் சாபம், தெய்வ குற்றங்கள் நீங்கி அமைதி உண்டாகும்.
•தாமரைத்தண்டு நூல் - முன்வினைப் பாவங்கள் நீங்கி, நிலைத்த செல்வம் கிடைக்கும்.
• வெள்ளை எருக்கம்பட்டை - செல்வம் பெருகும்.
• புதிய மஞ்சள் துணி - நோய்கள் குணமாகும்.
• புதிய சிவப்பு வண்ண துணி - குழந்தையின்மை தொடர்பான தோஷம் நீங்கும்.
• புதிய வெள்ளை துணி திரி - அனைத்து நற்பலன்களும் கிடைக்கும்.
(துணியின் மீது பன்னீர் தெளித்து காயவைத்து பின்பு திரியாக்கி விளக்கேற்றுவது மிகவும் நல்லது.)
@ விளக்கின் தன்மை:-
மண்ணால் செய்யப்பட்ட விளக்கு – பீடை விலகும்
வெள்ளி விளக்கு – திருமகள் அருள் கிடைக்கும்
பஞ்ச லோக விளக்கு – தேவதை வசியம் உண்டாகும்
வெண்கல விளக்கு - ஆரோக்கியம் உண்டாகும்
இரும்பு விளக்கு – சனி கிரக தோஷம் விலகும்.
@. திருவிளக்கின் சிறப்பு:-
திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.
@. விளக்கு துலக்க நல்ல நாள்:-
குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் துலக்குவது நல்லது. இதற்கு காரணம் உண்டு. திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி (குபேரனின் பிரதிநிதியான பதுமநிதியின் துணைவி) குடியிருக்கிறாள். செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கை கழுவினால் இவள் வெளியேறிவிடுவாள் என்பது ஐதீகம். வியாழன் நள்ளிரவு முதல் வெள்ளி நள்ளிரவு வரை விளக்கில் குபேர சங்கநிதி யட்சணி (குபேரனின் பிரதிநிதியான சங்கநிதியின் துணைவி) குடியேறுகிறாள். எனவே வெள்ளிக்கிழமை துலக்குவதைத் தவிர்த்து, வியாழன் முன்னிரவில் துலக்குவது நல்லது.
@. விளக்கு துலக்கும் நாட்களுக்குரிய பலன்:-
ஞாயிறு - கண் நோய் குணம், பார்வை பிரகாசம்.
திங்கள் - மனசஞ்சலம், குழப்பம் நீங்குதல், மன அமைதி, தீர்க்கமாக முடிவெடுக்கும் பண்பு வளர்தல்.
வியாழன் - குருபார்வையால் கோடி நன்மை, மன நிம்மதி.
சனி - வீட்டிலும், பயணத்திலும் பாதுகாப்பு, இழந்த பொருள் கிடைத்தல்.
@. தீபத்தை குளிர வைக்கும் முறை:-
பொதுவாக தீபம் ஏற்றினால் எண்ணெய் முழுவதும் தீர்ந்து, தீபம் தானாக அணையும் வரை விட்டு விடக் கூடாது. இது கெடுதலைக் கொடுக்கும். தீபம் ஏற்றியதிலிருந்து தீபத்தை குளிர வைக்கும் வரை விளக்கில் எண்ணெய் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
விளக்கை குளிர்விக்கும் போது, கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது. வாயால் ஊதி அணைக்கக்கூடாது.
பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம். இதற்கென பித்தளை குச்சிகள் கடைகளில் கிடைக்கின்றன.
தீபத்தை குளிர வைக்க, திரியின் அடிப்பகுதியை (எண்ணெய் அமிழ்ந்திருக்கும் நுனியை) ஓம் சாந்த ஸ்ரூபிணே நம என்று சொல்லி பின்புறமாக இழுக்க வேண்டும். அப்பொழுது தீச்சுடர் சிறிது சிறிதாக குறைந்து திரி எண்ணெயில் அமிழ்ந்து தீபம் குளிரும்.
அதிசய செய்திகள்:-
$ இந்தியாவின் முதல் படுக்கைகளுடன் கூடிய திரையரங்கு, குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரின், எஸ். ஜீ. விரைவு சாலை ஓரம் அமைந்த "ரிலையன்ஸ் மால்" திரையரங்கில் தலா ருபாய் 800/- கட்டணத்தில், திரைப்படத்தை மெத்தையில் படுத்துக்கொண்டு கண்டு களிக்கலாம். இந்தியர்கள் தனது பொழுதுபோக்கை எப்படியெல்லாம் ரசித்து அனுபவிக்கவேண்டும் என்கிற சிந்தனையில் உருவான திரையரங்குதான் இந்த படுக்கைகளுடன் கூடிய திரையரங்கு.
==================================================
$நமது வைஷாலி வாசகர் வட்டத்தின் அனைவரையும் வாழ்த்தி வழிநடத்திச்செல்லும் தலைமை உறுப்பினர் திரு முத்து கிருஷ்ணன் அவர்களின் ஆன்மீகத் தொடர்-04.
அன்பான சுட்டீஸ்!... எப்படி இருக்கீங்க?
கார்த்திகை மாதச் சிறப்பு:- நான் முன்பே எழுதியதுபோல ஆடி மாதம் முதல் மார்கழி 30-ஆம் தேதி வரை தக்ஷிணாயனம் என அழைக்கப் படுகிறது. இது தேவர்களுக்கு மாலை, இரவுப் பொழுது எனக் கருதப் படுகிறது. இரவு நேரங்களில் நாம் பொதுவாய் ஒளியைத் தேடிப்போவது இயல்பு. ஆகையால், ஐப்பசி மாதம் முதல் மார்கழி இறுதிவரை இரவுப் பொழுது. அதுவும் மார்கழி தேவர்களுக்குப் பின்னிரவு. இதனால்தான் மார்கழி மாதத்தில் இந்துக்கள் சுபகாரியங்களான திருமணம் போன்றவற்றை நிகழ்த்துவதில்லை. மார்கழிக்குமுன் வரும் கார்த்திகை இருள்சூழ்ந்த மாதம். இம் மாதத்தில் நமக்கெல்லாம் பகல் பொழுது குறைவாகவும், இருள் பொழுது நெடுநேரமும் சூழ்ந்திருப்பதை நாம் காணலாம். பூகோள ரீதியாகவும் நெடும் இரவுப் பொழுது கொண்ட நாளும் இந்தமாதத்தில்தான் காணமுடியும். எனவே
கார்த்திகை மாதத்தில் நாம் தீபத் திருநாளையும் கொண்டாடுவது வழக்கம். அதைத்தான் கார்த்திகை தீபம் என்று அழைப்போம். இந்தப் புனிதநாள் இந்துக்களுக்கு கார்த்திகை மாதம் பூரணச் சந்திரன் திகழும் பௌர்ணமி தினத்தில் கார்த்திகை நட்சத்திரம் அமைவதும் இயற்கையாகவும் அமையும். அந்தப் புனித நாளில் நாம் வீடெங்கும் களிமண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்கில், இலுப்பை எண்ணை விட்டு, பருத்திப் பஞ்சில் செய்த திரியில் தீபம் ஏற்றுவது வழக்கம்.
இந்தக் கார்த்திகைத் திருவிழா மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. கார்த்திகைக்கு முன் வரும் பரணி நட்சத்திரத்தில் பரணி தீபம் என்றும். கார்த்திகை நட்சத்திரத்தன்று கார்த்திகை தீபம் அல்லது மகா தீபம் என்றும் அதற்கு மறுநாள் வரும் ரோகிணி நட்சத்திரத்தில் குப்பைக் கார்த்திகை என்றும் மேடுகளிலெல்லாம் தீபம் வைப்பது வழக்கம்.
முதலில் சிவனின் பிண்ணணியில் திகழும் புராணத்தைப் பார்ப்போம். உலகை சிருஷ்டிக்கும் கடவுள் பிரம்மா, உலகைக் காக்கும் கடவுள் விஷ்ணு, இறுதியில் நமக்கு அடைக்கலம் தரும் இறைவன் சிவனாகிய ருத்திரன். ருத்திரன் இறுதிநிலைக் கடவுளாகையால், சிருஷ்டிக்கும் பிரம்மனுக்கும், காக்கும் கடவுள் விஷ்ணுவுக்குமிடையில்"நாம் இருவருள் யார் பெரியவர்” என்ற போட்டி வந்தது. இருவரும், “நாந்தான் பெரியவன்” என்று நிர்ணயமில்லாத போட்டி வந்தது. இருவரும் இறுதியில் “நாம் அந்த சிவனிடமே போய் கேட்போம்” என்று முடிவெடுத்து சிவனேயென்று இருந்த அந்த சிவனிடம் வந்தனர். சிவன் அவர்கள் பிரச்சனையைக் கேட்டு “தன்னை இவர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை! இவர்களுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும்” என்று தனக்குள் எண்ணியவண்ணம் இருவருக்கும் ஒரு போட்டி வைத்தார். போட்டி வைப்பது என்பது சிவனுக்கு மிக பிடித்தமான ஒன்று. முருகனுக்கும், பிள்ளையாருக்கும் போட்டி வைத்துத்தானே, முருகன் கோபம் கொண்டு பழநி மலையில் தனி ராஜ்ஜியமே அமைத்தார். அதுபோல் இங்கும் விபரீதம் ஏதும் நடந்துவிடக்கூடாதேயென்று தேவர்கள் அஞ்சினர். மூவரும் திருவண்ணாமலைக்கு வந்து, சிவன் போட்டியை அறிவித்தார். அதாவது ‘பிரம்மா, விஷ்ணு இருவருள் ஒருவர் சிவனின் பாதங்களை, அவரது அடியைக் கண்டு வரவேண்டும். மற்றவர் தன் ஜடாமுடியின் சிகரத்தைக் கண்டறிய வேண்டும்’ என்று அறிவித்தார். உடனே விஷ்ணு கூர்மாவதாரமெடுத்து பூமியைத் துளைத்துக்கொண்டு சிவனின் அடியைத் தேடச் சென்றுவிட்டார். பிரம்மா சிவனின் முடியைத் தேடி மேலே சென்றார். இங்குதான், சிவன் அங்கிங்கெனாதபடி எங்கும் சிவமாய் “விஸ்வரூபம்” எடுத்தார் என்று அண்ணாமலைத் தலபுராணம் கூறுகிறது. பிரம்மா மேலே செல்லச் செல்ல முடிவின்றி நீண்டது. கூர்மாவதாரமெடுத்த விஷ்ணுபகவான் பாதாளலோகம் சென்று களைத்து, பூமா தேவியருடன் குடும்பமே நடத்தத் தொடங்கி விட்டார்.
பிரம்மா மேலே செல்லும்போது ஒரு தாழம்பூவின் இதழ் சிவனின் முடியிலிருந்து விழுந்து கீழ்நோக்கி வந்துகொண்டிருந்தது. அதைப் பார்த்த பிரம்மா “நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று வினவ, தாழம்பூ மடல், “நான் சிவனின் ஜடை உச்சியிலிருந்து வருகிறேன்” என்றதும், அந்தத் தாழம்பூவின் மடலை தனக்கு சாட்சியாக வைத்துக்கொண்டு பிரம்மா கீழ்நோக்கி வந்தார். இதற்கிடையில் விஷ்ணு பகவானும் தன் நிலை உணர்ந்து, பூமா தேவிக்கு ஒரு புத்திர பாக்கியத்தைக் கொடுத்துவிட்டு மேலே வந்தார். இருவரும் சிவன் சன்னிதிக்குச் சென்று, விஷ்ணு தன் தோல்வியை ஒப்புக்கொள்ள, பிரம்மா தாழம்பூ மடலை சாட்சியாகக் காட்டி “நான் தாங்களது ஜடாமுடி தரிசனம் கண்டுகளித்தேன்” என்று பொய் உரைத்தவுடன் சிவன் ருத்திரமூர்த்தியாகி, “பொய்க்கு உடந்தையாயிருந்த தாழம்பூவை இனி நான் தலையில் சூடமாட்டேன்” என்று கூறி ஜோதிப்பிழம்பாய் பெரும் ஜ்வாலையாகக் காட்சியளித்தார். அதுவே இன்று சிவ ஜோதியாக திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றி வழிபட்டு வருகிறோம். பிரம்மனுக்கும் தண்டனை கிடைத்தது. அது ஒரு தனிக் கதை. அதைப் பின்பு ஒருசமயம் பார்ப்போம். இப்போது, கார்த்திகை மாதத்தையொட்டிய இன்னுமொரு புராணக் கதையைப் பார்ப்போம்.
சிவனின் உமையொருபாகளானவள் தாக்ஷாயணி. இவள் தக்ஷணின் மகள். தக்ஷணுக்கு மற்றும் 27 மகள்களிருந்தனர். அவர்கள் எல்லோரும் சந்திரனை விரும்பி மணமுடிக்க எண்ணினர். அதைத் தன் தந்தை தக்ஷணிடம் கூறவே, தக்ஷன் சந்திரனை அழைத்து தன் 27 பெண்களையும் அவனுக்கு மணமுடித்து வைத்தான். அவர்கள்தான் அஸ்வினி, பரணி, கார்த்திகை என்று 27 நட்சத்திரங்களாவர். இதை ஹாஸ்ய ரசம் ததும்ப “சோமனுக்கு 27 தையல்” என்றும் கூறுவதுண்டு. சோமன் என்றால் நாம் உடுத்தும் வேஷ்டியை சோமன் என்று கூறுவதுண்டு. இன்றும் இது கேரளாவில் வழக்கில் இருக்கிறது. தையல் என்றால் பெண் என்ற ஒரு பொருளிருந்தாலும், தையல் என்பதை நாம் பொதுவாக ஊசி,நூல் கொண்டு தைப்பதையும் தையல் என்று கூறுவது வழக்கு. அதாவது வேஷ்டியில் 27 தையல் என்றால், அந்த வேஷ்டியில் 27 கிழிசல்கள் இருந்திருக்க வேண்டும் என்பதுதானே உண்மை. சந்திரனுக்கு அந்த 27 பெண்களும் பலவந்தமாக மணமுடிக்கப் பட்டவர்கள், கிழிசல்கள் என்றும் பொருள்படும். ஆனால் அதில் ரோகிணி என்ற ஒரு பெண்மட்டும் மிக அழகாக இருப்பாள். ஆகையால், சந்திரனுக்கு ரோகிணியை மிகவும் பிடித்து அவளை எப்போதும் தன் அருகிலேயே இறுத்திக் கொண்டான், அதாவது வைத்துக் கொண்டான். இன்றும் வானத்தை நாம் நோக்குவோமேயானால் சந்திரனின் பக்கத்தில் தெரியும் நட்சத்திரம்தான் ரோகிணி எனப் படுகிறது. இப்படியிருக்க, ரோகிணியைத் தவிர மற்ற 26 பெண்களும் அரக்கனான தன் தந்தை தக்ஷனிடம் போய் “சந்திரன் அந்த 26 பேர்களிடமும் ஆசையாகவேயிருப்பதில்லை. எப்போதும் ரோகிணியை மட்டும்தான் விரும்புகிறார்” என்று முறையிட்டனர். இதனால் வெகுண்டுபோன அரக்கன் தக்ஷன் சந்திரனை அழைத்து “நீ இனி அந்தக் கார்த்திகை பௌர்ணமியிலிருந்து உருவிழந்து தேய்ந்துபோகக் கடவாய்” என்று சாபமமிட்டான். மறுநாள் முதல் சந்திரன் சிறுகச் சிறுக தேய ஆரம்பித்துவிட்டன். இதைத் தான் நாம் தேய்பிறை என்று அழைக்கிறோம். தேய்ந்து, தேய்ந்து அமாவாசை நெருங்கிவிட்டது. சந்திரன் பிரம்மனிடம், விஷ்ணுவிடம், பல ரிஷிகளிடமெல்லாம் முறையிட்டு தக்ஷனின் சாப விமோசனத்திற்கு முயற்சித்தான். கடைசியில் சிவனிடம் சென்று முறையிடத் தீர்மானித்து சிவனைத் தஞ்சமடைந்தான் சந்திரன். சிவன் சந்திரனுக்கு சாப விமோசனமளித்து, அவனை தன் தலையில் இருக்க இடம் கொடுத்தார். இதனால் சிவனுக்குப் பிறைசூடிய பெம்மான் என்ற பெயரும் வந்தது.
சந்திரன் சிவன் தலையில் அமரவே தக்ஷன் தன் மகள் தாக்ஷாயிணியின் நலன் கருதி சிவனை எதிர்க்கத் துணிவில்லாதவனானான்.
இப்படி சாப விமோசனம் பெற்ற சந்திரன் (திங்கள் என்று சந்திரனுக்கு மற்றுமொரு பெயருமுண்டு) சிவனை அந்தக் கார்த்திகை மாதம் ஒவ்வொரு திங்கட் கிழமையும், அதாவது சோமவாரத்திலும் அவனை சங்குகொண்டு நீரால் நீராட்டி குளிரச் செய்து சிவனைத் துத்தித்தான். அதனால் கார்த்திகை மாதத்தில் சோமவாரமும், கார்த்திகை தீபமும், கார்த்திகை அமாவாசையும் ரொம்பவும் விசேஷமாகக் கருதப் படுகிறது.
எனவே, கார்த்திகை மாதம் சிவனை பூஜிக்கத் தக்க மிகவும் உயர்ந்த மாதம்.
கதைகள் இரண்டும் சுவாரஸ்யமாயிருந்ததா?
சரி, சுட்டிகளே மீண்டும் அடுத்த இதழில் சந்திப்போம்!
நன்றி. வணக்கம்!
...............முத்து ஐயர்..........
வைஷாலி வாசகர் வட்டம்..
=================================================
பகுதி I-கைவண்ணம்:-
1) சித்திரமும் கைப்பழக்கம் பகுதியில் :-
(நான் வரைந்த ஓவியம் / எனக்குப் பிடித்த ஓவியம்)
A) D. துர்கா 2ம் வகுப்பு.
A) D. துர்கா 2ம் வகுப்பு.
G) செல்வி மேஹோக் பேகம் (Mehok Begam):-
(நான் வரைந்த ஓவியம் / எனக்குப் பிடித்த ஓவியம்)
G) D. துர்கா :-
(நான் வரைந்த ஓவியம் / எனக்குப் பிடித்த ஓவியம்)
G) குழந்தைகள் சக்தி உமா மற்றும் ஜெய் சக்தி ) :-
2. நகைச்சுவை-சிரி சிந்தி செயல்படு- பகுதியில் :-
1. (புகைப்படமும் விளக்கமும்):-
2. (படமும் விளக்கமும்):-
சவுக்கைமரக்காயிலிருந்து பொம்மைகள் செய்வது எப்படி?4. (படமும் விளக்கமும்):-
5. (படமும் விளக்கமும்):-
6. (புகைப்படமும் விளக்கமும்):-
முதலில் தமிழ் வாசிக்க கற்றுக்கொள்ளுங்கள்....வாருங்கள் நமது வைஷாலி வாசகர்வட்டத்தின் தமிழ் கற்கும் வகுப்புகளில் கலந்துகொண்டு, தரணி போற்றும் மொழி தமிழ் மொழியே!! என பறைசாற்றுவோம்.....
===========================================
3. (அ).சிறுகதைகள் பகுதியில் :- முதலாவது போட்டி :- வைஷாலி வாசகர் வட்டத்தின்... சரியான விடைகளைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்... போட்டி என்-8 கார்த்திகை மாதம், இதழ்-8 தேதி 20-11-2016. தொகுத்து வழங்கியவர்:- திருமதி நாமகிரி சந்திரசேகரன் - வைஷாலி, காசியாபாத்.
கடற்கரை ஓரமாக பெரிய மரம் ஒன்று வளர்ந்திருந்தது. அதன் கிளை ஒன்று மிக நீண்டு கடல் நீருக்கு மேலாக நீட்டிக் கொண்டிருந்தது. அதன் உச்சியில் கடற்குருவி ஒன்று கூடு கட்டியது. அதனுள் நாலைந்து முட்டைகளை இட்டு அடைகாத்து வந்தது. ஆண் குருவியும் பெண் குருவியும் அதே கூட்டில் வசித்தபடி தங்கள் குஞ்சுகள் வெளிவரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தன.
ஒரு நாள் பெரும் காற்று வீசியது. பெரிய அலைகள் பொங்கி எழுந்தன. கிளையில் இருந்த கூடு நழுவி காற்றின் வேகத்தில் கடலில் விழுந்து மூழ்கியது. குருவிகள் மனம் பதறிக் கதறின. கடல் நீரில் விழுந்து கூடு மூழ்கிய இடத்திற்கு மேலாக கீச், கீச் என்று கத்தியபடியே சுற்றிச் சுற்றி வந்தன.
பெண் குருவி மனம் உடைந்து சொல்லியது. எப்படியாவது முட்டைகளை மீண்டும் நான் காண வேண்டும். இல்லையேல் நான் உயிர் வாழ மாட்டேன் என்றது .
ஆண் குருவி சொன்னது. அவசரப்படாதே ஒரு வழி இருக்கிறது. நமது கூடு கரையின் ஓரமாகத் தான் விழுந்துள்ளது. கூட்டுடன் சேர்ந்து முட்டைகள் விழுந்ததால் நிச்சயம் உடைந்திருக்காது. அதனால் இந்த கடலிலுள்ள தண்ணீரை வற்றவைத்து விட்டால் போதும். முட்டைகளை நாம் மீட்டுவிடலாம்.என்று பெண் குருவிக்கு தன்னம்பிக்கை ஊட்டியது .
கடலை எப்படி வற்றவைப்பது?
முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவர இன்னும் பல நாட்கள் ஆகலாம். எனவே நாம் இடைவிடாமல் சில நாட்கள் முயல வேண்டும். நம் வாயில் கொள்ளும் மட்டும் தண்ணீரை எடுத்துக் கொண்டு பறந்து சென்று தொலைவில் கொட்டுவோம். மறுபடியும் திரும்பி வந்து மீண்டும் நீரை நிரப்பிக் கொண்டு போய் தொலைவில் உமிழ்வோம். இப்படியே இடைவிடாமல் செய்து கடல் நீரை வேறு இடத்தில் ஊற்றினால் கடல் நீர் மட்டம் குறைந்து தரை தெரியும். நமது முட்டைகள் வெளிப்படும்.
இதையடுத்து இரண்டு குருவிகளும் தன்னம்பிக்கையுடன் ஊக்கத்துடன் செயலில் இறங்கின. விர்ரென்று பறந்து போய் தங்களது சிறிய அலகில் இரண்டு விழுங்கு நீரை நிரப்பிக் கொண்டன. பறந்து சென்று தொலைவில் போய் உமிழ்ந்தன. மீண்டும் பறந்து வந்து இரண்டு வாய் தண்ணீரை அள்ளின. கொண்டுபோய் தொலைவில் கக்கின.
இப்படியே இரவு பகல் நாள் முழுவதும் இடைவிடாமல் நடந்து கொண்டிருந்தது, இவற்றின் நீர் அகற்றும் படலம்.
அப்போது அந்தக் கடற்கரை ஓரமாக முனிவர் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். மகா சக்திகள் நிறைந்த மகான் அவர். ஆளில்லாத அந்தப் பகுதியில் கீச் கீச் என்ற சப்தம் கேட்கவும் அவர் திரும்பிப் பார்த்தார். இரண்டு குருவிகள் பறந்து போவது கண்டு சிரித்தபடி மேலே நடந்தார்.
மீண்டும் கீச் கீச் என்ற சப்தம். குருவிகள் கடலுக்கு மேல் பறந்தன. எதையோ அள்ளின. மீண்டும் பறந்தன. இப்படி பலமுறை நடைபெறவும், முனிவருக்கு வியப்பு. கடலில் இருக்கும் எதைக் கொத்துகின்றன இவை? அங்கு இரை ஏதும் இல்லையே என்று நினைத்தார் அவர்.
உடனே அந்த மகான் கண்களை மூடினார். உள்ளுக்குள் அமிழ்ந்தார். மறுகணம் அவர் மனதில் எல்லா நிகழ்ச்சிகளும் படம்போல் ஓடின. அவர் மனம் உருகியது. முட்டைகளை இழந்த தாயின் தவிப்பும் கடலையே வற்ற வைத்தாவது முட்டைகளை மீட்க வேண்டும் என்ற அதன் துடிப்பும் அவரது உள்ளத்தை நெகிழச் செய்தன.
உடனே தனது தவ பலத்தை ஒன்று திரட்டிய முனிவர் கையை உயர்த்தினார். மறுகணம் கடல் சில அடிகள் பின் வாங்கியது. அங்கே கூட்டுடன் இருந்த முட்டைகள் தென்பட்டன. குருவிகள் அதைப் பார்த்து குதூகலத்துடன் கீச்சிட்டன. ஆளுக்கொன்றாக முட்டைகளை பற்றிக் கொண்டு போய் வேறிடத்தில் சேர்த்தன.
நான் அப்போதே சொன்னேன் பார்த்தாயா? நமது ஒரு நாள் உழைப்பில் கடல் நீரை குறைத்து முட்டைகளை மீட்டு விட்டோம் பார்த்தாயா? என்றது ஆண் குருவி பெருமிதமாக.
முனிவர் சிரித்தபடி தொடர்ந்து நடந்தார். இங்கே குருவிகள் முட்டைகளை மீட்டது அவற்றின் உழைப்பாலா? இல்லை. முனிவரின் அருளால். ஆனால் அந்தக் குருவிகளுக்கு முனிவர் என்ற ஒருவரைப் பற்றியோ தவ வலிமை என்றால் என்ன என்பது பற்றியோ, எதுவுமே தெரியாது.ஆனால் தன்னம்பிக்கையுடன் கடல் நீரை அள்ளின .
அதே சமயம் குருவிகள் மட்டுமே கடல் நீரை மொண்டு சென்று ஊற்றிக் கொண்டிருக்காவிட்டால் முனிவர் தம் வழியே போயிருப்பார். அவரை மனம் நெகிழ வைத்தது எது? அவற்றின் உழைப்பும் முயற்சியும்தான். ஆக இங்கே முட்டைகள் மீட்கப்பட்டது, குருவிகளாலும் தான். முனிவராலும் தான். முனிவரின் ஆற்றல் அவற்றுக்குப் பக்க பலமாக வந்து சேர்ந்தது. குருவிகளின் உழைப்புத்தான் அதற்கு அடிப்படையாக அமைந்தது.
அன்பு நண்பர்களே .
எல்லையில்லா ஆற்றல் பெற்ற இளமைப் பருவம் வாழ்வின் இன்றியமையாப் பருவம். பருவத்தே பயிர் செய் என்பார்களே. இளமையில் வியர்வை சிந்தாவிட்டால் முதுமையில் கண்ணீர் சிந்த வேண்டி இருக்கும்.
எனவே விழித்திருக்கும் நேரமெல்லாம் உபயோகமான வகையில் உழைத்துக் கொண்டிருங்கள். வாழ்வில் எல்லா நேரமும் நல்ல நேரம்தான். உழைக்காத நேரம்தான் ராகு காலம். எதையும் செய்வதற்குமுன்பாக திட்டமிடுங்கள். பிறகு செயல்படுங்கள் ... கஷ்டப்பட்டு உழைக்காமல் இஷ்டப்பட்டு உழைக்க பழகிடுங்கள் உங்களின் எதிர்கால வாழ்க்கை ஒளிமயமானதாக இருக்கும்....
கேள்வி 1. இந்தக்கதையிலிருந்து நாம் தெரிந்துகொள்ளும் கருத்து என்ன?
சரியான விடைகளைக்கூறி சிறப்பு பரிசுகளை வெல்லுங்கள். சரியான விடைகளை 10-12-2016 தேதிக்கு முன்னதாக "vaishalireaderscircle@gmail.com" மின்னஞ்சலில் அனுப்பவேண்டும்.
சரியான விடையையும், சரியான விடை எழுதியவர்களுக்கான பரிசுகளும் 18-12-2016 (3-வது ஞாயிறு) அன்றைய, 34-வது வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில் வழங்கப்படும்.
போட்டிக்கான சரியான விடையை பலரும் குறிப்பிட்டிருந்தால், பரிசு பெறுபவர்-குலுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்.
முகநூல் பக்கங்களிலிருந்து இந்த, சிறந்த கதையை தேர்ந்தெடுத்து வழங்கியவர் (திருமதி நாமகிரி சந்திரசேகரன் - வைஷாலி, காசியாபாத்)
==========================================கேள்வி 1. சென்றமாத பரிசுப்போட்டிக் கதையிலிருந்து நாம் தெரிந்துகொள்ளும் கருத்து என்ன?
(விடை:-குழந்தைகளே இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால் நாம் செல்லும் பாதையில் பொதுமக்களுக்கு இடைஞ்சலாக எந்த பொருளே தடைகளோ இருப்பதைக் கண்டால் அதை உடனே அப்புறப்படுத்தினால், அது பிறருக்கு மட்டுமல்லாது நமக்கும் உதவியாக இருப்பதோடு, நாம்மால் ஆனா சிறு உதவி செய்தோம் என்கிற மகிழ்ச்சியும் நமக்கு கிடைக்கும். ஆகவே இதுபோன்ற சின்ன சின்ன உதவிகள் எப்போதும் நாம் மற்றவர்களுக்கு செய்யவேண்டும் என்பதை நினைவில் வைத்திருங்கள்.
நன்றி . திருமதி நாமகிரி சந்திரசேகரன் - வைஷாலி, காசியாபாத்).
சரியான பொருத்தமான விடையை 12 நபர்கள் குறிப்பிட்டிருந்தார்கள் அவர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் கலந்துகொண்ட மற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது.
=========================================
3.(ஆ) சிறுகதைகள் பகுதியில் :-இரண்டாவது போட்டி:- வைஷாலி வாசகர் வட்டத்தின் சரியான புகைப்படக் கதையைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் போட்டி என்-8 கார்த்திகை மாதம், இதழ்-8 தேதி 20-11-2016.
தலைப்பு:- திருவண்ணாமலையில் உறையும் அண்ணாமலையார்:-
சரியான படக்கதைக்கான விடைகளைக்கூறி சிறப்பு பரிசுகளை வெல்லுங்கள். சரியான விடைகளை 10-12-2016 தேதிக்கு முன்னதாக "vaishalireaderscircle@gmail.com" மின்னஞ்சலில் அனுப்பவேண்டும்.
சரியான விடையையும், சரியான விடை எழுதியவர்களுக்கான பரிசுகளும் 18-12-2016 (3-வது ஞாயிறு) அன்றைய, 34-வது வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில் வழங்கப்படும்.
போட்டிக்கான சரியான விடையை பலரும் குறிப்பிட்டிருந்தால், பரிசு பெறுபவர்-குலுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்.
==============================================
சென்ற மாதத்திற்கான சரியான படக்கதை விடை:-
3.(ஆ) சிறுகதைகள் பகுதியில் :-இரண்டாவது போட்டி:- வைஷாலி வாசகர் வட்டத்தின் சரியான புகைப்படக் கதையைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் போட்டி என்-7 ஜப்பசி மாத, இதழ்-7 தேதி 16-10-2016.
தலைப்பு:- தீபாவளி, நரகாசுரன்:-
தலைப்பு:- தீபாவளி, நரகாசுரன்:-
நரகாசுரன் கதை:- இரண்யாட்சன் என்ற அரக்கன் வேதங்களை எடுத்துச் சென்று மறைத்து வைத்துவிட்டனர். அதனை மீட்டெடுக்க மகாவிஷ்ணு பாதாளம் நோக்கி சென்று அசுரனுடன் போரிட்டு அவனை வெனறார். அப்போ து பூமாதேவியுடன் ஏற்பட்ட பரிசத்தினால் பூமாதேவி பவுமன் என்ற மகனைப் பெற்றெடுத்தார்கள். அந்த பவுமன் சாகாவரம் வேண்டி பிரம்மதேவரை நோக்கி கடும் தவம் செய்து பிரம்மதேவரிடம் பெற்ற தாயைத் தவிர வேறு ஒருவரால் மரணம் ஏற்படாது என வரம் பெற்றான்.
பிற்காலத்தில் நரகர் எனப்படும் மனிதர்களிற்கு எதிராக கொடுமைகள் செய்த அசுரன் என்பதால் அவன் நரகாசுரன் என அழைக்கப்பட்டான். மகாவிஷ்ணுவின் கிருஷ்ணாவதாரத்தில் பூமாதேவி சத்யபாமாவாக அவதரித்து கிருஷ்ணரை மணந்து கொண்டார். மனித அவதாரத்தில் சத்யபாமாவிற்கு நரகாசுரன் தனது மகன் என்ற நினைப்பு மறந்திருந்தது. நரகாசுரனை வதம் செய்ய கிளம்பிய கிருஷ்ணர் தோரோட்டுவதிலும், விற்போர், வாட்போர் போன்றவற்றில் வல்லவரான சத்தயபாமாவை தனது தேரை ஓட்டும்படி பணித்தார்.
நரகாசுரன் உடன் நடந்த சண்டையில் கிருஷ்ணர் காயமடைந்து மயங்கடைந்தது போல நடித்தார். தனது கணவரின் நிலை கண்டு கடும் கோபம் கொண்ட சத்யபாமா நரகாசுரனை எதிர்த்து போர்செய்து அவனை அழித்தார். அப்போது தான் அவன் தனது மகன் என அவர் தெரிந்து கொண்டார்.
நரகாசுரன் இறந்ததும் மக்கள் தீபமேற்றி அதனைக் கொண்டாடுவதை கண்ட சத்யபாமா கிருஷ்ணரிடம் இப்படி ஒரு தீய மகன் தமக்கு பிறக்கக்கூடாது என மக்கள் நரகாசுரன் இறந்த நாளை தீபமேற்றிக் கொண்டாட வேண்டும். ஒருவர் இறந்தபின் செய்யும் எண்ணைக் குளியல் புனிதமாக்கப்பட வேண்டும். இன்றைய தினத்தில் செய்யப் படும் எண்ணைக்குளியலின் எண்ணையில் மகாலட்சுமி வாசம் செய்ய வேண்டும். இந்த நாளில் ஒவ்வொருவர் வீட்டுத் தண்ணீரிலும் கங்காதேவி எழுந்தருள வேண்டும் என வரம் வேண்டி அதனைப் பெற்றுக் கொண்டார்கள்.
சென்ற மாதத்திற்கான சரியான படக்கதையை கூறி போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
பிற்காலத்தில் நரகர் எனப்படும் மனிதர்களிற்கு எதிராக கொடுமைகள் செய்த அசுரன் என்பதால் அவன் நரகாசுரன் என அழைக்கப்பட்டான். மகாவிஷ்ணுவின் கிருஷ்ணாவதாரத்தில் பூமாதேவி சத்யபாமாவாக அவதரித்து கிருஷ்ணரை மணந்து கொண்டார். மனித அவதாரத்தில் சத்யபாமாவிற்கு நரகாசுரன் தனது மகன் என்ற நினைப்பு மறந்திருந்தது. நரகாசுரனை வதம் செய்ய கிளம்பிய கிருஷ்ணர் தோரோட்டுவதிலும், விற்போர், வாட்போர் போன்றவற்றில் வல்லவரான சத்தயபாமாவை தனது தேரை ஓட்டும்படி பணித்தார்.
நரகாசுரன் உடன் நடந்த சண்டையில் கிருஷ்ணர் காயமடைந்து மயங்கடைந்தது போல நடித்தார். தனது கணவரின் நிலை கண்டு கடும் கோபம் கொண்ட சத்யபாமா நரகாசுரனை எதிர்த்து போர்செய்து அவனை அழித்தார். அப்போது தான் அவன் தனது மகன் என அவர் தெரிந்து கொண்டார்.
நரகாசுரன் இறந்ததும் மக்கள் தீபமேற்றி அதனைக் கொண்டாடுவதை கண்ட சத்யபாமா கிருஷ்ணரிடம் இப்படி ஒரு தீய மகன் தமக்கு பிறக்கக்கூடாது என மக்கள் நரகாசுரன் இறந்த நாளை தீபமேற்றிக் கொண்டாட வேண்டும். ஒருவர் இறந்தபின் செய்யும் எண்ணைக் குளியல் புனிதமாக்கப்பட வேண்டும். இன்றைய தினத்தில் செய்யப் படும் எண்ணைக்குளியலின் எண்ணையில் மகாலட்சுமி வாசம் செய்ய வேண்டும். இந்த நாளில் ஒவ்வொருவர் வீட்டுத் தண்ணீரிலும் கங்காதேவி எழுந்தருள வேண்டும் என வரம் வேண்டி அதனைப் பெற்றுக் கொண்டார்கள்.
சென்ற மாதத்திற்கான சரியான படக்கதையை கூறி போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
=====================================================
3. அ) குட்டிக் கதைகள் பகுதியில் இந்தமாதம் தலைப்பைச் சார்ந்த கதை :-
"மாவலியோ மாவலி' என்று குழந்தைகள் கூறிக் களிப்பதேன்?
ஒரு கார்த்திகை பௌர்ணமியன்று ஆலயம் ஒன்றில் தீபம் எரிந்து கொண்டிருந்தது. அது அணையும் சமயம், எண்ணெயைப் பருக வந்த எலியொன்று தற்செயலாக விளக்கின் திரியைத் தூண்டியது. உடனே தீபம் அணையாமல் பிரகாசிக்கலாயிற்று. அப்புண்ணியத்தின் பலத்தால் மறுபிறவியிலே அந்த எலி மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறந்தது.
மகாபலி சக்கரவர்த்தியோ மகாதானம் செய்தான். திருமால், வாமன அவதாரம் எடுத்து அவனிடம் மூவடி மண் யாசித்தார்: அவனும் கொடுத்தான்.
மகாபலியின் மகாதானம் கண்டு மகாவிஷ்ணு வுக்கு உவகை பிறந்தது. அதனால் பரமபதம் அளித்தார். அப்போது அவன் வரமொன்று வேண்டினான். அது யாது?
""கார்த்திகைப் பௌர்ணமியன்று, எலி வடிவில் ஆலய தீபத் திரியைத் தூண்டினேன். மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறந்தேன். கார்த்திகை தீபோற்சவத்தை எனது ஆயுள் அளவு கொண்டாடினேன். பரம பாகவதர்களுக் கும், ஏழை எளியவர்களுக்கும் வாரி வாரிப் பொருள்களை வழங்கினேன்; பரமபதம் எய்தினேன். அதனால், இப்பூலோக மாந்தரும் கார்த்திகைத் தீப உற்சவத்தைக் கொண்டாடி எல்லா நன்மைகளும் பெறுதல் வேண்டும்''
"யான் கண்ட இன்பம் இவ்வையகமும் எய்துக' என்பதே மகாபலியின் குறிக்கோளா யிற்று, அத்தகைய மகாபலியை நாம் மறந்து இருக்கலாம். ஆனால், நமது சிறுவர்- சிறுமியரோ நமது முன்னோர்களின் அருளால் மறவாதிருந்து, "மாவலியோ மாவலி' என்று கூறித் தீப்பொறி பறக்கவிட்டுக் களிப்பெய்துகின்றனர்.
தீ மிகவும் நன்றாக எரிய வேண்டி குங்கிலியத்தை தீபத்தின்மீது வீசுவதுண்டு. அதனால் ஜோதி பெருகும். மணிமணிப் பொறிகளாகக் கிளம்பும். குங்கிலியக் கலய நாயனார், அது பற்றியே குங்கிலியக் கைங்கர்யம் செய்து வந்தார் போலும்.
முப்புரம் எரித்தான் முக்கண்ணன். கார்த்திகை தீபம் அன்று அவனை மறவாது பக்தி செய்தால் திரிபுரங்கள் எரிந்ததுபோல நமது பாவங்களும் தீர்ந்து போகும்; நற்கதியும் கிட்டுதல் திண்ணம்.
தெய்வத்தை ஒரு நாளும் மறக்க வேண்டாம் என்பது உலக நீதி. தெய்வ நினைவே வாழ்க்கைக்கு அடிப்படை! வாழ்வு பெருகவே யாவரும் விரும்புவர். இதனை எண்ணி நமது சமயப் பண்பாடு அமைந்த விதம் அதிசயமே! "அரனை மறவேல்' என்றாள் ஔவைப் பிராட்டியும்!
விடாமல் முயலுங்கள்,
விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....
மீண்டும் சிந்திப்போம்!
நன்றிகளுடன் கோகி.
================================================
3. ஆ) குட்டிக் கதைகள் பகுதியில் இந்தமாதம் தலைப்பைச் சார்ந்த கதை :-
“சாந்தி இன்னைக்கி பனம்பூ பொருக்கனும்” என்றான் காட்டுபூச்சி.
“எதுக்கு அண்ணா?” வினவினாள் சாந்தி.
“மாவலி-காத்தி செய்யனும்ல” என்றான். “அதுக்கு இன்னும் பத்துநாள் இருக்கே” என்றாள்.
“ஞாபகம் இல்லையா?, போன தடவை நம்ம மாவலி-காத்தி செய்யும்போது மழை பெஞ்சி கெடுத்தது” என்றான்.
காத்தி செய்ய தேவையான இடுபொருட்களை சேகரிக்க தொடங்கினர். இருவரும் வழியில் இருந்த பனைமரங்களின் கீழே கிடக்கும் காய்ந்த பனம்பூக்களை, பொருக்கி புத்தக பைக்குள் போட்டுக்கொண்டனர். வீட்டிற்கு வந்தவுடன் பனம்பூக்களை சிறிய துண்டுகளாக உடைத்து உர சாக்கு ஒன்றில் பரப்பி, வீட்டின் வாசலில் இருந்த களத்தில் நன்கு வெயில் படும் இடத்தில் வைத்தான் காட்டுபூச்சி. காற்றில் பறக்காமல் இருக்க சாக்கின் நான்கு மூலைகளிலும் சிறிய கற்களை வைத்தான்.
மேலும் தொடர்ந்து இந்த பதிவை "குடிமகன்-தமிழகம்-பாரதம்" என்கிற பெயரில் உள்ள வலைப்பதிவில் "காத்தீ சுத்தலாம் வாங்க – திருக்கார்த்திகை தீப சிறப்பு பதிவு!" இங்கு சொடுக்கி தொடர்ந்து வாசிக்கலாம் http://kudimakan.blogspot.in/2011_12_01_archive.html
===================================
3. இ) குட்டிக் கதைகள் பகுதியில் இந்தமாதம் தலைப்பைச் சார்ந்த கதை :-
கார்த்திகை தீபம் அன்று கோவிலில் சொக்கப்பானை கொளுத்துவது ஏன்? காரணம் என்ன?
கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவது சிறப்பு பெற்றதாகும். பெரியகார்த்திகை தினமாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.திருவண்ணாமலையில் மகாதீபம் கொண்டாடப்படுவதைப் போல தமிழகம் முழுவதும், சிவன், முருகன்ஆலயங்களில் கார்த்திகை தீப திருவிழா சிறப்பாக கொண்டாப்படுகிறது.
சிவபெருமான் திரிபுரங்களை எரித்த நாள் திருக்கார்த்திகை நாளாகும். சிவன் எரித்த பாவனையை வெளிப்படுத்துவதற்காக சொக்கப்பனை கொளுத்து கின்றனர். மேலும் அடி, முடி தேடிய விஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும், ஆதி, அந்தம் இல்லாத அருட்பெரும் ஜோதி வடிவமாக சிவபெருமான் காட்சி கொடுத்தார். நெருப்புக்கு முதலும், முடிவும் கிடையாது. சிவபெருமான் ஜோதி வடிவாக காட்சி கொடுத்ததை நினைவு கூரும் விதத்திலும் சொக்கப்பனை கொளுத்துகின்றனர்.விளக்கேற்ற நல்ல நேரம்கார்த்திகை தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும் என்பது நம்பிக்கை அதன்படி இன்று ஆலயங்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
சொக்கப்பானை என்பது நடுவில் பச்சை வாழைமரம் நட்டு சுற்றிலும் துவரை மெளார் (மகசூல் முடிந்து வெட்டப்பட்ட காய்ந்த செடி) நட்டு அதை சற்றிலும் காய்ந்த தென்னங்கீற்று நட்டு. பின்னர் அதை கொளுத்துவர் சுற்றிலும் உள்ள மக்கள் தீச்சுவாலையில் உப்பை போடுவார்கள். சொக்கப்பானை படபட வென்று மிகுந்த வெடி சத்தத்துடன் எரியும்.
நன்றி "குடிமகன்-தமிழகம்-பாரதம்"
================================================
3. ஈ ) குட்டிக் கதைகள் பகுதியில் இந்தமாதம் தலைப்பைச் சார்ந்த கதை :-
குயவர் என்பவர் யார்? புதிதாக வாங்கும் மண்பாண்ட அகல் விளக்குகளை நாம் எப்படி பயன்படுத்தவேண்டு?குயவர் என்பவர் மண்ணை முக்கிய ஆதாரமாக கொண்டு மண்ணாலான பொருள்களை செய்பவராவர். சுழலும் சக்கரத்தின் உதவியுடன் மண்ணலான பொருள்களான மண்பானை, சட்டி, மண்தொட்டி போன்ற பல பொருள்களை குயவர் வடிவமைக்கிறார்.
மண்பாண்டங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள குடும்பம், கார்த்திகை ஆரம்பித்தவுடன் அகல் விளக்குகள் தயாரிப்பில் இறங்கிவிடுவார்கள்.
தீபத்திற்கு மூன்று நாட்கள் முன்னதாக வீடுவீடாக சென்று அகல்களை விற்பனை செய்ய தொடங்கிவிடுவார்கள். ஊரில் விற்பனை முடித்து, காட்டுகொட்டாய் பகுதிகளுக்கு தீபம் அன்று காலையில் தான் வருவார்கள். அப்படி தீபம் அன்று நமது வீட்டிற்கும் அகல் விற்பவர் வருவார்.
பழைய காலங்களில் என் பாட்டி மூன்று படி அரிசி கொடுத்து 25 அகல்கள் வாங்கினார்.
அகல் விளக்குகளை நாம் எப்படி பயன்படுத்தவேண்டு?
அகல்களை தண்ணீரில் போட்டு ஊறவைத்து பின்னர் எடுத்து பயன்படுத்துவது வழக்கம். ஒரு வெண்கல (பாத்திரத்தில்) அண்டாவில் அகல்களை போட்டு தண்ணீரை ஊற்றினார் பாட்டி. அகல்கள் சலசல என்ற சத்தத்துடன் தண்ணீரை குடித்து. அண்டாவிலிருந்து காற்று குமிழ்கள் சத்தத்துடன் வெளியேறுவதை ஆச்சர்யமாக பார்த்துகொண்டிருந்தாள் எங்க வீட்டு குட்டீஸ்.
மாலை ஐந்து மணியானதும் பாட்டி சுட்டீஸ்களிடம் அண்டாவிலிருந்த அகல்களை வெளியே எடுத்து வைக்குமாறு கூறினார். அகல் எடுக்கச்சென்ற சுட்டீஸ்களுக்கு ஆச்சரியம் அண்டாவில் பாதிக்கு கீழ் தண்ணீர் குறைந்திருந்தது. அகல்கள் அவ்வளவு தாகத்தில் இருந்திருக்கின்றன.
சுட்டீஸ் அனைவரும் அகல்களை எடுத்து கிழே வரிசையாக வைத்தார்கள். அதற்குள் பாட்டி பஞ்சை திரித்து அகலுக்கான திரி செய்ய தொடங்கி இருந்தார். சட்டீஸ்கள் அனைவரும் பாட்டி தயாரித்த திரியை ஒவ்வொன்றாக அகல்களுக்குள் திரிகளை வைத்தார்கள் பிறகு அனைத்து அகல்களிலும் நல்லெண்ணெய் விட்டு இரவு கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அகல் விளக்குகளை தயாராக வைத்துவிட்டு ஆதவன் மறைய காத்திருந்தனர்.
நன்றி "குடிமகன்-தமிழகம்-பாரதம்"
======================================
ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ...ஒரு சிறு விளம்பர இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடர்ந்து வாசிக்கலாமா?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
விளம்பரம் :-இப்பகுதியை உங்களுக்கு வழங்குபவர்:-
விளம்பரம் :-இப்பகுதியை உங்களுக்கு வழங்குபவர்:-
விளம்பரம் :-இப்பகுதியை உங்களுக்கு வழங்குபவர்:-
==============================================================
==============================================================
4. கட்டுரை=1:- இந்தமாதம் தலைப்பைச் சார்ந்த கதை /கட்டுரைகள்:-
அ ) இன்று ஒரு தகவல் பகுதியில்:- ஐந்து எண்ணெய். மூன்று எண்ணெய் கூட்டி விளக்கேற்றினால் நல்லது என்று வரும் செய்திகளை நம்பி அப்படியே தவறு செய்யும் அப்பாவி மக்கள் கவனத்திற்கு
கலப்பு எண்ணெய் தீபம் - தீமையும் நன்மையும்
1, ஐந்து எண்ணெய். மூன்று எண்ணெய் கூட்டி விளக்கேற்றினால் நல்லது என்று வரும் செய்திகளை நம்பி அப்படியே தவறு செய்யும் அப்பாவி மக்கள் கவனத்திற்கு:-
எப்பொழுதுமே ஒரு எண்ணெய்யுடன் இன்னொரு எண்ணெய் சேர்ந்து எரியக்கூடாது அதர்வன மாந்திரிகத்தில் அசுப நிகழ்வுகளை தன் விரோதிக்கு ஏற்படுத்த தந்திரமாக கையாண்ட முறைதான் கூட்டு எண்ணெய் தீப வழிபாடாகும் . அதே போல் தன் குறைதீரவும். கடுமையான பிரச்சினைகள் விலகவும் பல எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றும் வழக்கமும் இருந்தது, இந்த வழக்கம்தான் இன்று தவறாக கையாளப்படுகிறது.
விளக்கமாக அறிவீராக, பௌர்ணமி கழித்து வரும் அஷ்டமி தேய்பிறை அஷ்டமி என்று அனைவருக்கும் தெரிந்ததுதான், இந்த அஷ்டமி கார்த்திகை மாதத்தில் வரும் போது பஞ்ச எண்ணெய் தீபம் கால பைரவருக்கு ஏற்ற வேண்டும், இதற்கு பஞ்ச (5) தீபம் என்று பெயர், 5 வகை எண்ணெய் கொண்டு ஏற்றப்பட வேண்டும், 5 தனி தனி அகல் எடுத்துக் கொண்டு ஒரு அகலில் நல்லெண்ணெய். இன்னொரு அகலில் இலுப்ப எண்ணெய். மற்றொன்றில் விளக்கு எண்ணெய். அடுத்ததில் பசு நெய். அடுத்த அகலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி பைரவ சுவாமியை நோக்கி அகலின் திரி முகம் வைத்து தனித்தனியாக ஏற்ற வேண்டும், ஒரு அகலில் ஏற்றிய நெருப்பில் இருந்து இன்னொரு தீபம் ஏற்றக்கூடாது, (ஒவ்வொரு எண்ணெய் கொண்டு எரியும் தீபத்தின் சக்தி வெவ்வேறாகும், ஒன்று இன்னுமொன்றோடு சேரக்கூடபாது சக்தி மோதல் உண்டாகும்) இவ்வாறு தனித்தனியாக ஏற்றி வழிபட்டால் தீரா பிரச்சினையும் தீரும், இந்த முறை பிரச்சினைகளுக்கான தீர்வு மட்டுமே, பில்லி சூன்யம். வம்பு. வழக்கு. தீரா நோய் இவைகள் அடங்கும் .
அடுத்து ஒவ்வொரு செவ்வாய்கிழமை காலையும். மாலையும் ஸ்ரீ கால பைரவரை அஷ்டலட்சுமியும் வழிபடுவார்கள், அந்த நேரத்தில் கடன் தீரவும். செல்வம் பெருகவும் நாமும் இரு அகலில் நெய்தீபம் ஒன்றிலும். நல்லெண்ணெய் ஒன்றிலும் ஊற்றி சிவப்பு திரி போட்டு தனித்தனியே ஏற்றினால் கஷ்டங்கள் தீரும், நவகிரக தோஷம் விலக அரசடி விநாயகருக்கு சதுர்த்தி திதி அல்லது ஞாயிற்றுக்கிழமை மூன்று அகலில் ஒவ்வொன்றின் வீதம் தேங்காய் எண்ணெய். நல்லெண்ணெய். பசு நெய் இவைகளை தனித்தனியே ஏற்றி வழிபட கிரக தோஷம் விலகும் .
அடுத்து சித்திரை. ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்கிழமையில் ராகுகால வேளையில் சிவாலயத்தில் உள்ள அன்னை துர்க்கைக்கு 9 அகலில் 9 வகை எண்ணெய் தனித்தனியே ஊற்றி 9 வகை கலர் திரி ஒவ்வொன்றிலும் ஒரு கலர் திரி வீதம் போட்டு தீபம் ஏற்றி அன்னையை வழிபட தீரா பிரச்சினையும் தீரும், இவ்வாறு பல செயல்களுக்கும் இந்த பல வகை எண்ணெய் தீபம் ஏற்றும் முறை உண்டு, ஆனால் இன்று இந்த நல்முறை அறியாததால் தவறு நடக்கிறது, 5 எண்ணெய் கூட்டி தீபம் ஏற்றுங்கள் என அக்காலத்தில் சொன்னது தவறாக செய்தி பரவிவிட்டது, 5 எண்ணெய்ûயும் ஒன்றாக கலந்து தீபம் ஏற்றுவது என தவறாக புரிந்து பாதகத்தை அறியாமலேயே பெருகிறார்கள், (அறியாமல் செய்தால் தவறில்லை என்ற மன ஆறுதல் பேச்சு இதில் செல்லாது, விஷம் என்று அறியாமல் நாம் எடுத்து குடித்தால் அது உடலில் பரவாமல் இருக்காது, அதை போலத்தான் தெய்வ சபையும், தெரிந்தோ தெரியாமலோ செய்தாலும் குற்றம் குற்றம்தான், அதனால்தான் ஆன்மிகத்தை பொருத்தவரை தெரியாததை புதிதாக செய்யக்கூடாது என்பார்கள்,) ஆக தீபத்திற்கான எண்ணெய் கலப்படமாகாமல் ஏற்றுவதே சிறந்தது .
எதிரியை உறவாடி கெடுக்கும் முறை ஒன்று உண்டு .இது அதர்வன முறையில் நிறையவே உண்டு, சூழ்ச்சி. தந்திரம் இவைகளை எதிரி அறியாமல் செயல்படுத்துவதாகும் மூலிகை. யந்திரம். எண்ணெய். மந்திரம் இவைகளில் ஒன்றுக்கொன்று எதிர்ப்பு எதுவென்று அறிந்து அதை சேர்த்து தன் விரோதிக்கு நல்லது என கொடுத்து பயன்படுத்துவார்கள், அது என்னவென்று தெரியாமலேயே பயன்படுத்தும் அப்பாவிகள் அதன் விளைவை சந்திக்க வேண்டியதாகிறது . அக்காலத்தில் இதே முறையில் உறவாடி கெடுத்தவர்கள் ஏராளம், அந்த முறையில் ஒன்றுதான் இந்த கூட்டு எண்ணெய் முறை பயன்படுத்தப்பட்டதாகும் . இந்த முறையை அறிந்தவர்கள் அதன் பலனை அறியாமல் செய்திகளை வெளியிட்டு மக்களும் அதை பின்பற்றி துன்பப்படுகிறார்கள், அப்படி என்னதான் துன்பம் என்று சந்தேகம் உண்டாகிறதல்லவா ? அதையும் அறியுங்கள்
(ள்ப்ர்ஜ் ல்ர்ண்ற்ண்ர்ய்) ஸ்லோ பாய்சன் என்ற கேள்விப்பட்டிருப்பீர்கள் அது மனிதன் அறியாமலேயே கொஞ்ச கொஞ்சமாய் கொல்வதாகும், அதே போல் இந்த எண்ணெய்களை ஒன்றாக கலக்கி தீபம் ஏற்றினால் அதன் விளைவு இதனால்தான் உண்டானது என சந்தேகப்படா வண்ணம் நடக்கும். அந்த செயல் என்னென்ன என்று அறியுங்கள், குழந்தைகளுக்கு முறை தவறிய திருமணம் நடக்கும். இது கலப்பு கல்யாணமாகவும் இருக்கும், காதல் திருமணமாகவும் இருக்கும். பெண்ணுக்கு வயது கூடி ஆணுக்கு குறைந்தும் நடக்கும், திருமணத்தில் நம்பி மோசம் போகும் சம்பவங்கள் நடக்கம். இதில் எது வேண்டுமானாலும் நடக்கும், அடுத்து குடும்பத்தில் நம் விருப்பத்தோடு உறவுகள் விலகல் உண்டாகும், கலகங்கள் உண்டாகும், திடீர் என பொருள் களவு போதல் உண்டாகும். திடீர் அறுவை சிகிச்சை கொடுக்கும், இது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம், அதிலும் குறிப்பாக மேற்கண்ட நிகழ்வுகள் யாவுமே நமக்கு நல்ல நேரம் காலம் என்று எப்போது ஜோதிடம் காட்டுகிறதோ அப்போதுதான் நடக்கும், வழிமுறை தெரியாமல் அகப்பட்டுக் கொண்ட மக்கள் பின்னாளில் துன்பப்படும்போது இதனால்தான் நமக்கு நடக்கிறது என்று அறியாமல் விழிப்பார்கள்.
ஜோதிடத்தில் நன்றாக இந்த ஆண்டு இருக்கும் என்றார்களே ஆனால் இந்த ஆண்டுதானே கஷ்டப்படுகிறேன் அவ்வாறெனில் ஜோதிடம் தெய்வம் பொய்யா என கேள்வியும் கேட்பார்கள் இவ்வாறு கேட்பவர் குடும்பம் இப்படி ஏதாவது ஒரு தவறை செய்து அகப்பட்டுக் கொண்டவர்களாக இருப்பார்கள் . எத்தனையோ வழிமுறையில் தவறுகள் நடந்தாலும் அதில் இந்த கலப்பு எண்ணெய்யாலும் தவறு நடப்பதால் சுட்டி காட்டினோம் . கலப்பாக எண்ணெய் கூட்டி ஏற்றும் போது அப்போதைக்கு செயல் நடந்தார் போல் இருக்கும் அது மட்டும் தான் நமக்கு தெரியும் ஆனால் அதன் எதிர்மறை பலன் மேலே கூறியிருந்தார்போல் நடக்கும் .
10 ஆண்டுகள் யாம் இதற்காக எடுத்துக் கொண்ட ஆய்வில் சுயமாகவே அறிந்தே கூறியுள்ளேன், அதே நேரத்தில் இக்கருத்தை ஆய்வு செய்தேனே தவிர இதை அக்காலத்திலேயே தெளிவாக கூறிச் சென்றுள்ளார்கள், நமக்கு முறையாக தெளிவாக கூற இன்று யாரும் இல்லாததால் நல்லது கெட்டது அறிய முடியாமல் போகிறது, மீண்டும் அக்காலம் போல் ஆய்வு செய்து தெரிந்து கொள்ள வேண்டியதாகிறது .
ஒரு ரகசியத்தை அறிக அக்காலத்தில் காளி அம்மன் அருளை பெறவும் கடினமான பிரச்சனைக்கு உடனே தீர்வு காணவும் 5 எண்ணெய் கூட்டி புது அகலில் தீபம் தனி அறையில் ஏற்றி அங்கு அண்ணம் தண்ணீர் எதுவுமின்றி மௌனமாய் மூன்று தினம் விரதமிருந்து தீப வெளிச்சத்தை தவிர பிற வெளிச்சமும் காணாமல் அம்மனை மனதிலே பூஜித்திருந்தால் அம்மன் கோரிக்கையை நிறைவேற்றி கொடுப்பாள் விரைவில் தீர்வுகிடைக்கும் . இந்த முறையை இன்றைக்கும் கடைபிடிக்கலாம் . வேறு மார்கத்தில் 5 எண்ணெய் கூட்டி திபம் ஏற்றினால் பஞ்சமே உண்டாகும் .
நன்றி ஸ்ரீபீடம் வலைப்பதிவு ( http://sripeedam.blogspot.in/)
================================================
4. கட்டுரை=2:- இந்தமாதம் தலைப்பைச் சார்ந்த கதை /கட்டுரைகள்:-
அ)"திருமதி கங்காதரன்" அவர்கள் சுட்டீஸ்களுக்கு தொகுத்துத்தரும் கார்த்திகைப் பெண்களைப் போற்றும் நாள் "திருக்கார்த்திகைத்" திருநாள் பற்றிய சிறப்புக் கட்டுரை...
கார்த்திகைப் பெண்களைப் போற்றும் நாள் திருக்கார்த்திகைத் திருநாள்:-
நன்றி மறப்பது நன்றன்று என்பார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். தமிழ்த்தெய்வமான முருகப்பெருமானும் நன்றி மறவாமல் தன்னை வளர்த்த கார்த்திகைப் பெண்களைப் போற்றும் நாள் திருக்கார்த்திகைத் திருநாள். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் கிளம்பின. அப்பொறிகளை கங்கை தாங்கிக் கொண்டாள். ஆறு தாமரைகளில் ஆறு குழந்தைகளாக முருகப்பெருமான் அவதரித்தார். மகாவிஷ்ணு அப்பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கும்படி கார்த்திகைப்பெண்கள் ஆறுபேருக்கு கட்டளையிட்டார். அவர்கள் ஆறுபிள்ளைகளுக்கும் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். இதனால் அவர்கள் ஒரே நட்சத்திரமாக மாற்றப்பட்டு வானமண்டலத்தில் இடம் பிடித்தனர்.
இந்த நட்சத்திர நாளில் தன்னை வழிபட்டால் எல்லா வரங்களும் தந்தருள்வதாக குழந்தை முருகன் வரம் அளித்தார். முருகனுக்குரிய ஜென்ம நட்சத்திரம் விசாகம். ஆனால், அந்த நட்சத்திரத்தில் மாதவிரதம் மேற்கொள்ளும் வழக்கமில்லை. கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகனுக்கு அபிஷேக ஆராதனைகளும், விரதமும் மேற்கொள்வதில் இருந்து நன்றி மறவாத நாயகன் முருகன் என்பதை உணர முடிகிறது.
நன்றி - திருமதி கங்காதரன்.
==============================================================
ஆ) பொது அறிவுக் கதை. கட்டுரை, தகவல்கள் பகுதியில்:-
ஆலயங்களில் இறைவனுக்குப் பதினாறு வகை உபசாரங்கள் செய்வார்கள். அவற்றுள் தூப - தீபம் சமர்ப்பித்தலும் ஒன்று.
தீப சமர்ப்பணத்தில் 16 வகை தீபங்கள் இடம்பெறும். ஒவ்வொரு தீபத்துக்கும் ஒவ்வொரு தேவர்கள் உரிமையானவர்கள். புஷ்ப தீபம்- பிரம்மன்; புருஷாமிருகம் - கலைமகள்; நாகதீபம்-நாகராஜர்; கஜ தீபம் - விநாயகர்; வியாக்ர தீபம்-பராசக்தி; ஹம்ச தீபம் - பிரம்மா; வாஜ்ய தீபம்- சூரியன்; சிம்ம தீபம்-துர்கை; சூல தீபம்-மும்மூர்த்திகள்; துவஜ தீபம்-வாயு; வ்ருஷப தீபம்-ரிஷபதேவர்; பிரமா தீபம்-துர்காதேவி; குக்குட தீபம்-கந்தப்பெருமான்; கூர்ம தீபம்-மகாவிஷ்ணு; ஸ்ருக் தீபம்-அக்னி; சக்தி தீபம்-பராசக்தி.
ஒவ்வொரு தீபத்தை ஏற்றி இறைவனுக்குக் காட்டும்போது, அதற்குரிய தேவர்கள் சூட்சுமமாகத் தோன்றி இறைவனை வழிபடுவதுடன், நமக்கும் அருள்புரிவார்கள். திருக்கோயில்களில் நடைபெறும் இந்த தீப உபசாரத்தைத் தரிசிக்க, 16 பேறுகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
========================================
ஆ) பொது அறிவுக் கதை. கட்டுரை, தகவல்கள் பகுதியில்:-
# சிவலிங்கம் சாட்சி சொன்ன கதை பற்றி உங்களுக்குத் தெரியுமா?
முன்னொரு காலத்தில்....காவிரிபூம்பட்டினத்தை சேர்ந்த வணிகன் ஒருவன் ..அவன் பெயர் அரதன குப்தன் ....மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு , மதுரையிலேயே வாழ்ந்து வந்தானாம்... காவிரிபூம்பட்டினத்தில் வசித்து வந்த , அவன் தங்கைக்கும் , தங்கையின் கணவருக்கும் தங்கள் மகள் ரத்னாவளியையும் அரதன குப்தனுக்கே மணம் முடித்து விட மனதுக்குள் ஆசை...
எதிர்பாராமல் ஒரு நாள் , அரதன குப்தனின் தங்கையும் , அவள் கணவரும் இறந்துவிட்டதாக காவிரிபூம்பட்டினத்திலிருந்து தகவல் வர ....உடனே புறப்பட்ட அரதன குப்தன், காவிரிபூம்பட்டினம் சென்று தங்கையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு விட்டு , திரும்பும்போது தாய் தகப்பனை இழந்து நின்ற ரத்னாவளியையும் அழைத்துக் கொண்டு மதுரைக்கு புறப்பட்டான் .... வரும் வழியில் திரும்புறம்பயம் என்ற இடத்திலே... ஒரு புன்னைவனம் ..அதில் ஒரு வன்னிமரம் ..அருகில் ஒரு சிவலிங்கம்..சற்றுத் தள்ளி ஒரு கிணறு... கட்டுசோறை பிரித்து சாப்பிட்டு விட்டு .... அங்கேயே தங்கி விட்டார்கள் இருவரும்..!
காலையில் கண் விழித்த ரத்னாவளி பதறிப் போனாள்... கதறி அழுதாள் ...காரணம்...அசைவற்றுக் கிடந்தான் அரதன குப்தன்... நள்ளிரவில் நல்ல பாம்பு வந்து கடித்திருக்கிறது....தற்செயலாக அந்த வழியாக வருகிறார் திருஞானசம்பந்தர் ....நடந்ததை அறிந்து அவர், ஈசனிடம் முறையிட... உயிரோடு எழுந்தான் அரதன குப்தன்...
சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாவற்றையும் ரத்னாவளியிடம் கேட்டுப் புரிந்து கொண்டாராம் சம்பந்தர்.... அப்புறம் சொன்னாராம் : “ஈசனுக்கு முன்பாகவே ஒரு தாலியைக் கட்டி , இவளை உன் மனைவியாகவே ஊருக்கு அழைத்துக் கொண்டு போ..” என்கிறார்...
மறு பேச்சுப் பேசாமல் மணம் செய்து கொண்டான் அரதன குப்தன்.. இந்த கல்யாணத்திற்கு சாட்சிகள் ...அங்கே இருந்த ஒரு வன்னிமரமும், கிணறும் , சிவலிங்கமும்தான் ...!
இருவரும் மதுரை வந்து சேர்ந்தார்கள்.....கணவனோடு இன்னொரு பெண்ணைக் கண்டு கோபம் கொண்ட முதல் மனைவி , கொதித்துப் போனாளாம்... ரத்னாவளி நடந்த விஷயங்களை , உள்ளது உள்ளபடியே சொல்ல... அதை கொஞ்சமும் நம்பவில்லையாம் முதல் மனைவி..!
வழக்கு சபைக்கு வந்தது...
திருமணம் நடந்ததற்கு சாட்சி என்ன என்று எல்லோரும் கேட்டார்கள்... “மனிதர்கள் யாரும் இல்லை. சிவலிங்கமும், வன்னிமரமும், கிணறும்தான் சாட்சி..” என்று கூறினாள் ரத்னாவளி...
முதல் மனைவி கேலியாக கேட்டாளாம் இப்படி ஒரு கேள்வி : .. “ஓஹோ...அந்த சிவலிங்கம் இங்கே வந்து சாட்சி சொல்லுமா?”
கூடி இருந்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்களாம்.... கூனிக்குறுகிப் போன ரத்னாவளி , கைகூப்பி அழுதாள் ...தொழுதாள்....! கண்களில் கண்ணீர் வடிய கதறினாளாம் ரத்னாவளி.... “ஈசனே...இது என்ன சோதனை..? இப்போது எனக்காக இங்கு சாட்சி சொல்ல வருவது யார்..? சொல் இறைவா..சொல்....?”
ரத்னாவளி பெரும் குரல் எடுத்து கதறி அழ ...அந்த அழுகையை நிறுத்தியது அங்கே கேட்ட ஒரு குரல்...
"நாங்கள் சாட்சி.."
குரல் வந்த திசையில் கூட்டத்தினர் அனைவரும் திரும்பிப் பார்க்க....
ஈசன் அங்கே காட்சி தந்தார் ...
“ ஆம்...இவர்கள் திருமணம் நடந்தது உண்மைதான்... அதற்கு நாங்கள் மூவருமே சாட்சி” “ரத்னாவளி கல்யாணத்துக்கு சாட்சியாக திரும்புறம்பயத்தில் இருந்த வன்னிமரமும், கிணறும், லிங்கமும் , இன்று முதல், மதுரை கோவிலில், என் சந்நிதிக்கு ஈசான்ய மூலையில் சாட்சியாக இருக்கும்..” என்று சொல்லி மறைந்தாராம் ஈஸ்வரன்...!
பார்த்தவர் அனைவரும் பரவசப்பட்டுப் போனார்களாம்..!
இப்போதும் , மதுரையில் சுவாமி சன்னதிக்கு வெளி பிரகாரத்தில் சிவன் சன்னதி மூலையில்... வன்னி மரம் , கிணறு, சிவலிங்கம் ஆகியவை இருக்கிறதாம்....! நீங்கள் பார்த்திருக்கிறீர்களா...?
ஏற்கனவே மதுரை கோவிலுக்கு அடிக்கடி நான் போயிருக்கிறேன் ... ஆனால் அப்போது இந்தக் கதை தெரியாததால் கவனிக்கவில்லை..! இனி போகும்போது தேடிப் போய்ப் பார்க்க வேண்டும்..!
# கும்பகோணத்திலிருந்து சாட்சி சொல்ல மதுரை சென்றதால் “சாட்சி நாதர்” என்றும் “ஸ்ரீ சாட்சிநாதசுவாமி” என்ற பெயர் கிடைத்ததாம் திரும்புறம்பயம் கோவில் சிவனுக்கு...! கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ. தூரத்தில் இந்த திரும்புறம்பயம் ஸ்ரீ சாட்சிநாதசுவாமி கோவில் இருக்கிறதாம்..!
[“பொன்னியின் செல்வன்” நாவலில் திரும்புறம்பயம் பள்ளிப்படைக்கோவில் பற்றி எழுதி இருக்கிறாராம் கல்கி..]
#.. கதையைப் படித்து முடித்த நான் , கண்ணதாசனை எண்ணி எண்ணி வியந்தேன்...!
“சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ..?”என்ற திருவிளையாடல் திரைப்படத்தின் பாடலை கேட்கும்போதெல்லாம்...
சரி.... ஒரு பாடலுக்கே இப்படி என்றால் அவர் எழுதிய ஆயிரக்கணக்கான பாடல்களில் எத்தனை எத்தனை அர்த்தங்கள் இருக்கும்..? அவற்றை தெரிந்து கொள்ள, அவர் எத்தனை ஆயிரக்கணக்கான கதைகளை.... நூல்களை ..புராணங்களை...இதிகாசங்களை படித்திருக்க வேண்டும்...
"கற்க கசடற கற்பவை கற்றபின். நிற்க அதற்குத் தக"...
தொகுத்து வழங்கியவர், நன்றிகளுடன் - கோகி-ரேடியோ மார்கோனி.
====================================================
இ) சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம் கேள்வி பதில் பகுதியில்:-
ஆன்மீக பழக்கங்கள்:-
அனைவரின் வீட்டிலும் ஆன்மீகம் கமழும் சில விஷயங்கள் உள்ளன. அதை சரியாக புரிந்து தெரிந்து செயல்படுத்தினால் இறைவனின் ஆசீர்வாதம் பரிபூரணமாக கிடைக்கபெறும். ஆன்மீகங்களில் முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டிய பழக்கங்களை பற்றி இங்கு பார்ப்போம்.
வீடுகளில் தினசரி தீபம் ஏற்றுவது அவசியம். வீடுகளில் மாலை நேரத்தில் விளக்கேற்றும்போது, ஜன்னல்கள் திறந்திருக்கக் கூடாது. வீட்டின் முன்புற வாசல் மட்டுமே திறந்திருக்க வேண்டும்.
தீபத்தில் எரியும் சுடர், கிழக்கு நோக்கி எரிந்தால் ஐஸ்வர்யம் உண்டாகும். வடக்கு நோக்கி எரிந்தால், நோய்நொடிகள் குணமாகும். தீபத்தின் சுடர் மேல்நோக்கி நீண்டவாறு எரிந்தால் ஆரோக்கியம் சிறக்கும்.
வீட்டில் வழக்கமாக ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது. அப்படிச் செய்தால், வீட்டின் வருமானத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும்.
மங்கலகரமான பொருட்களில் முதன்மையானது மஞ்சள். எந்த ஒரு சுபகாரியத்துக்கும் மஞ்சள் அவசியம். எனவே, வீடுகளில் எப்போதும் மஞ்சளை வைத்திருக்க வேண்டும். மஞ்சள் இருக்கும் வீட்டில் மங்கலம் உண்டாகும்.
வீடுகளில் காலை, மாலை இரண்டு வேளையும் மஞ்சள் நீரைத் தௌpத்து வந்தால், லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்.
அதிகாலை எழுந்தவுடன் சூரியனை வழிபடுவதால் ஆரோக்கியம் பெருகும். அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்மையளிக்கும் சூரியனின் அருளால் நமது கர்மவினைகள் அனைத்தும் நீங்கும்.
பிறந்த குழந்தையை முதன் முதலில் சூரிய வெளிச்சம் படும் வகையில் வீட்டிலிருந்து வெளியே கொண்டு வருவதை, நம் முன்னோர்கள் பல்லாண்டு காலமாக ஒரு சம்பிரதாயமாகவே கடைப்பிடித்து வந்தனர். அப்படிச் செய்தால் சூரியனின் ஆசி பெற்று, குழந்தையின் ஆரோக்கியம் சிறக்கும்.
-நன்றி முகநூல் பக்கங்கள்.
===================================
ஈ )நல வாழ்வு பகுதியில்:- 1.உணவே மருந்தாக 26 நோய்களுக்கும் தீர்வளிக்கும் ஒரே மூலிகை காய்! :-
"கடுக்காய்"
*சித்த மருத்துவம் குறிப்பிடும் எந்த ஒரு மூலிகையிலும் நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அதில்* *பக்கவிளைவுகளோ அல்லது பின் விளைவுகளோ கிடை யாது. அந்த வரிசையில்* *26 (இருபத்தி ஆறு) விதமான நோய்களுக்கும் ஒரே மருந்தாக தீர்வளிக்கும் வல்லமை கொண்ட ஓர் அதிசய* *மூலிகைத்தான் இங்கு நாம் பார்க்க* *விருக்கிறோம்.*
*சித்த மருத்துவம் குறிப்பிடும் எந்த ஒரு மூலிகையிலும் நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அதில்* *பக்கவிளைவுகளோ அல்லது பின் விளைவுகளோ கிடை யாது. அந்த வரிசையில்* *26 (இருபத்தி ஆறு) விதமான நோய்களுக்கும் ஒரே மருந்தாக தீர்வளிக்கும் வல்லமை கொண்ட ஓர் அதிசய* *மூலிகைத்தான் இங்கு நாம் பார்க்க* *விருக்கிறோம்.*
*இம்மூலிகை காயால்* *குணமாகும் நோய்களை முதலில் பார்ப்போம்.*
*1. கண் பார்வைக் கோளாறுகள்*
*2. காது கேளாமை*
*3. சுவையின்மை*
*4. பித்த நோய்கள்*
*5. வாய்ப்புண்*
*6. நாக்குப்புண்*
*7. மூக்குப்புண்*
*8. தொண்டைப்புண்*
*9. இரைப்பைப்புண்*
*10. குடற்புண்*
*11. ஆசனப்புண்*
*12. அக்கி, தேமல், படை*
*13. பிற தோல் நோய்கள்*
*14. உடல் உஷ்ணம்*
*15. வெள்ளைப்படுதல்*
*16. மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண்*
*17. மூத்திர எரிச்சல், கல்லடைப்பு*
*18. சதையடைப்பு, நீரடைப்பு*
*19. பாத எரிச்சல், மூல எரிச்சல்*
*20. உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், பௌத்திரக் கட்டி*
*21. ரத்தபேதி*
*22. சர்க்கரை நோய், இதய நோய்*
*23. மூட்டு வலி, உடல் பலவீனம்*
*24. உடல் பருமன்*
*25. ரத்தக் கோளாறுகள்*
*26. ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள்*
*மேற்கண்ட 26 வகையான* *நோய்களுக்கும் ஒரே மருந்து சித்த மருத்துவத்தில் மட்டுமே உண்டு.*
*இது ரொம்ப எளிமைதானுங்க*
*நாட்டு மருந்து* *கடைகளில் கடுக்காயை* *வாங்கி அதனுள் இருக்கும் பருப்பை நீக்கிவிட்டு, அதன்பிறகு அதனை நன்றாக தூள் தூளாக அரைத்து வைத்துக் கொண்டு, தினமும் ஒரு ஸ்பூன் அளவு வீதம் இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, மேற்கண்ட 26நோய்களில் இருந்துமுற்றிலும் விடுபட்டு, நோயில்லா பெரு வாழ்வுடன் இளமையாகவும் வாழ்ந்து வாழ்க்கையை சுகமாக அனுபவியுங்கள்.*
நன்றி:- தமிழ்மருத்துவம் வாட்ஸ் அப் குழு
===========================================
உ ) சமையல் குறிப்புக்கள் / விருந்துக்கு வாங்க பகுதியில்:-
இஞ்சிப் பால்..! இதைச் சாப்பிட்டால்…..
கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க.
ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?
ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும்.
அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும்.
அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்?
1. நுரையீரல் சுத்தமாகும்.
2. சளியை ஒழுச்சு கட்டிடும்.
3. வாயுத் தொல்லை என்பதே வராது.
4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.
5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.
6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.
7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.
8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.
9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.
10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே.
அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா?
3 வயசுக்கு மேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம்.
ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் தவிர்க்கனும்.
மீதிப்பேர் சாப்பிடலாம்.
என்ன நாளையில இருந்து உங்க வீட்டில காப்பிக்கு பதில் இஞ்சிப்பால்தானே?
==============================================
5 "கைத்தொழில்-கற்றுக்கொள்ள வாருங்கள்"-கைத்தொழில் பகுதியில் இந்தமாதம்:-
'கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை இல்லை ஒத்துக்கொள்' என்ற கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை அவர்களின் பாடலுக்கேற்ப பலவிதமான சிறுதொழில் வாய்ப்புகள் தரும் கைவினை வேலைப்பாடுகள்: கற்றுத்தருகிறார் திருமதி ஜெயஸ்ரீ நாராயணன் அவர்கள்.
சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை ஒயர்கூடை பின்னுதல், எம்பிராய்டரி, குரோஷா, பொம்மைகள் செய்தல் போன்ற கைவினை வேலைப்பாடுகள் பெண்களின் உபரி வருமானத்துக்கு வாய்ப்பளித்தன. இன்று பெண்களின் பெரும்பாலான நேரத்தை டிவி பிடித்துக் கொள்கிறது. பொருளாதார காரணங்களுக்காக வீட்டின் ஆணை சார்ந்திருக்கும் பெண்கள், அவர்களின் திடீர் இழப்புகளின்போது செய்வதறியாமல் தவிக்கின்றனர். கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்; கவலைகள் உனக்கில்லை ஒத்துக்கொள் என்கிற அர்த்தமுள்ள வரிகளை மெய்ப்பிக்கவே பல்வேறு கைவினை வேலைப்பாடுகளை கற்றுத்தரும் இந்தத் தொடரை ஆரம்பித்திருக்கிறோம்.
தமிழகம் முழுக்க கல்லூரி, பள்ளிகள், பெண்கள் குழுக்களுக்கு கைவினைப் பொருட்கள் செய்யக் கற்றுத் தந்துக்கொண்டிருக்கும் ஜெயஸ்ரீ நாராயணன், இனி வாரம் ஒரு கைவினைப் பொருள் செய்யக் கற்றுத்தர இருக்கிறார்.சென்னையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ, திருமணத்துக்குப் பிறகு ஓவியப் பயிற்சி, நகைகள் செய்தல் உள்ளிட்ட பயிற்சிகள் எடுத்துக் கொண்டவர். 32 ஆண்டு கால ஆர்வமும் உழைப்பும் இவரை தேர்ந்த கைவினை கலைஞராக மாற்றியிருக்கிறது. ஆர்வமுள்ளவர்களுக்கு இவர் கற்றுத்தருவதோடு, கற்றுக்கொண்ட பிறகு தொழில் தொடங்கவும் குழுக்களாக சேர்ந்து கண்காட்சிகள் நடத்தவும் வழிகாட்டுகிறார்.
பல்வேறு ஓவிய வகைகள், பேப்பர் நகைகள், டெரகோட்ட நகைகள், செராமிக் நகைகள், அலங்கார சணல் பைகள் போன்றவற்றை கற்றுத்தருகிறார். தமிழ் பத்திரிகைகளிலும் இவர் பத்திகள் எழுதிவருகிறார்.
நன்றி - நான்கு பெண்கள் இனைய வலைப்பதிவு https://fourladiesforum.com/
==============================================
6. சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்"..... "கார்த்திகை-மாத-தீபத்திருநாள் கொண்டாட்டம்" படத்தில் உள்ள (6) ஆறு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்- நவம்பர்-2016-கார்த்திகை-மாதம் தீபத்திருநாள் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும்-வலைப்பதிவு இதழ் போட்டி என்-08.
சரியான விடை அடுத்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" http://gulkanthu.blogspot.in/வலைப்பதிவர் இதழில் வெளியாகும். போட்டியில் பங்குகொள்ள விருப்பமுடையவர்கள் விடைகளை "vaishalireaderscircle@gmail.com" என்கிற மினஞ்சல் முகவரிக்கு 10-12-2016 முன்பாக அனுப்பிவைக்கவேண்டும். சரியான விடை எழுதிய அனைவருக்கும் அடுத்தமாத வாசகர் வட்ட சந்திப்பில் பரிசுகள் வழங்கப்படும்.
=======================================
1. தகரக்கதவின் சட்டம், 2.கதவின் அருகே சுவற்றின் மீது மின் விளக்கு, 3. சிறுவன் அருகில் சோப்பு கட்டி, 4. நீர் நிரம்பும் வாலி , 5.சிறுமியின் தலையில் பூ ... என ஆறு வித்தியாசங்கள் உள்ளன.
சென்ற மாத ஆறு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடையை 23 நபர்கள்மட்டுமே குறிப்பிட்டிருந்தனர், (முதல்முறையாக மிக அதிகமானவர்கள் தவறான பதிலை கூறியிருந்தார்கள்.) தமிழில் விடை எழுதியவர்கள்=18, ஆங்கிலத்தமிழில் எழுதியவர்கள்=04, ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=01, ஹிந்தி மொழியில்=0 நபர்களும், தெலுங்கு மொழியில்=0 நபரும், மேலும் சிலர் ஆறுக்கும் அதிகமான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.
==============================================
7. அறுவை ஆயிரம், பொன் மொழிகள், பழ மொழிகள், உலக மொழிகள், விடுகதைகள், பஞ்ச். :-தொகுத்து வழங்கியவர்... எ.கே. சபரீஷ்....
$ ஆறுதரம் பூமியை வலம் வருதலும், ஆயிரம் முறை காசியில் குளித்தலும், நூறு தடவை சேது ஸ்நானம் செய்தலும், என இவற்றால் கிடைக்கும் புண்ணியம், தாயை பக்தியுடன் ஒருதரம் வணங்கினாலே கிடைக்கும்."
==============================================
8.பயனுள்ள தமிழ் வலைப்பதிவர் பக்கங்களில் இந்தமாதம் :-
1. மதிப்பிற்குரிய திரு பொள்ளாச்சி நசன் - (தமிழம்.வலை-தமிழம். பண்பலை) அவர்களின் "திருக்குறள் படித்தல் - (எளியமுறையில் ஒரே நாளில் 300 திருக்குறளை அறிதல்)" http://win.tamilnool.net/ tkl300/index.html என்கிற இனைய வலைப்பக்கத்தை, புது தில்லியின் வைசாலி (தமிழ்) வாசகர் வட்ட உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்வதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.
2. திரு சுரேஷ் அவர்கள் "தளிர்" http://thalirssb.blogs pot.com/ (thalir.ssb@gmail.com ) என்கிற வலைப் "பூ" பக்கத்தில் சிறுவர் பகுதியை மிகவும் அருமையான வகையில் பல படக் கதைகளை பதிவு செய்து வருகிறார். சிறு கதைகளில் விருப்பமுடைய அனைவருக்கும் மிகவும் பயனுள்ள வலைப்பதிவுப் பக்கமாக திரு சுரேஷ் அவர்களின் வலைப்பதிவு திகழ்கிறது. அவருக்கு நமது நன்றிகளை தெரிவித்துக்கொண்டு, நமது (NCR-புது தில்லி) வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ்களுக்கு பயனுள்ள வலைப்பதிவு பக்கமாக மேற்கண்ட அவரது வலைப்பதிவுகளை முன்மொழிவதில் மகிழிச்சியடைகிறோம்.
1. மதிப்பிற்குரிய திரு பொள்ளாச்சி நசன் - (தமிழம்.வலை-தமிழம். பண்பலை) அவர்களின் "திருக்குறள் படித்தல் - (எளியமுறையில் ஒரே நாளில் 300 திருக்குறளை அறிதல்)" http://win.tamilnool.net/
2. திரு சுரேஷ் அவர்கள் "தளிர்" http://thalirssb.blogs
==============================================
9. கருத்து சொல்லப்போறேன்:- (A.K.சபரிஷ்)
$"ஆலய மணி தலை கவிழ்ந்து உள்ளது. ஆனால் அதன் நாதம் தொலைதூரம் வரை கேட்கிறது. அதுபோல அடக்கமாக செய்யும் தொண்டு நெடுங்காலம் பயன் தரும்."
$கெட்டத, கேட்ட உடனே மறக்கணும், நல்லத நாலு பேர்கிட்டயாவது சொல்லணும்!
==============================================
10. விடுகதைகள் :- (A.K.சபரிஷ்)
# முன்னும் பின்னும் போவான், ஒற்றைக்காலிலே நிற்பான் – யார் அவன்?– [விடுகதைக்கான விடை:- கதவு]
# அடித்தாலும், உதைத்தாலும் அவன் அழ மாட்டான் – அவன் யார்?[விடுகதைக்கான விடை:- பந்து ]
==============================================
11. கவிதை:-
முதலில் அணிந்த சட்டை
முதலாவதாக போட்ட ஊசி
முதன் முதல் வெட்டிய நகங்கள்
முதலில் விளையாடிய கிலுகிலுப்பை
என்று உனது
எல்லா ‘முதல்’களையும்
சேமித்து வைத்திருக்கிறேன்
முதன் முதலாக
‘அம்மா’ என்று என்னை
நீ மழலையாக அழைத்ததை
எப்படி சேமிப்பேன் என அறியாமல்!
மூச்சுக் காற்று மட்டும்
உரிமை கோரும்
ஏகாந்தமான இரவொன்றில்
உன் நினைவு சேமிப்பை
கொஞ்சம் செலவு செய்து கொள்கிறேன்
என் செல்லத் தோழியே! (திருமதி. பிரியா கங்காதரன்)
முதலாவதாக போட்ட ஊசி
முதன் முதல் வெட்டிய நகங்கள்
முதலில் விளையாடிய கிலுகிலுப்பை
என்று உனது
எல்லா ‘முதல்’களையும்
சேமித்து வைத்திருக்கிறேன்
முதன் முதலாக
‘அம்மா’ என்று என்னை
நீ மழலையாக அழைத்ததை
எப்படி சேமிப்பேன் என அறியாமல்!
மூச்சுக் காற்று மட்டும்
உரிமை கோரும்
ஏகாந்தமான இரவொன்றில்
உன் நினைவு சேமிப்பை
கொஞ்சம் செலவு செய்து கொள்கிறேன்
என் செல்லத் தோழியே! (திருமதி. பிரியா கங்காதரன்)
====================================================
11. கவிதை:-
நட்சத்திர விடுதிக்கு
போகும் வழியெங்கும்
நட்சத்திரம்....
மின்னிக்கொண்டிருந்தது...(S.ஸ்ரீ சக்ரி)
================================
11. கவிதை:-
11. கவிதை:-
மத்திய தொல்பொருள் துறையினர் மேற்கொண்டுள்ள ஆராய்ச்சிகளின் பலனாக, மதுரை மண்ணுக்குள் புதைந்து போயிருந்த ரகசியங்கள் வெளிக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. 2200 முதல் 2300 வருடங்களுக்குள் வாழ்ந்த நம் மூதாதையர்களின் கிராமத்தைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஓர் அரிய வாய்ப்பு தொல்பொருள் துறையினரால் சாத்தியமாயிற்று...."மதுரை
கீழடி - மண்ணுக்குள் மறைந்திருந்த நம் மூதாதையர் கிராமம் - வனிலா பாலாஜியின் மூன்றாம் கண் (13)" ----11 படங்களுடன் ஒரு பகிர்வு.
மற்றுமொரு சிறப்பு என்னவென்றால், தமிழ்நாட்டை பொருத்தவரை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பழங்காலத்து நாணயங்கள், அணிகலன்கள், முதுமக்கள் தாளி, நடுகற்கள் போன்ற மக்கள் உபயோகப்படுத்திய பொருட்களை மட்டுமே கண்டுபிடித்து வந்துள்ளார்கள். மக்கள் வாழ்ந்த வீடுகள், வீட்டின் சுவர்கள் ஆகியவற்றை கண்டுபிடித்திருப்பது இதுவே முதன்முறை. மேலும், அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள உறை கிணறுகள், நம்மில் சில வருடங்களுக்கு முன்பு வரை உபயோகத்தில் இருந்த உறை கிணறுகளை ஒத்திருக்கின்றன.
நன்றி http://www.atheetham.com/2015/09/13_2.html
===============================================
13.விளம்பரதாரர் நிகழ்ச்சி பகுதியில்:-
இந்தமாத சிறந்த முகநூல் பக்கங்களாக:-
1. கீரை மற்றும் கிழக்கு வகைகளை சமையலுக்கு நறுக்கும்போது, சமயலுக்குத் தேவையற்ற காம்பு, தண்டு, கிழங்கு வேர் போன்ற பகுதிகளை தூக்கியெறியாமல் அவைகளை நமது வீட்டுத் தோட்டத்தில் அல்லது அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனி பகுதியில் மண்தொட்டிகளில் நட்டுவைத்து நீரூற்றி பராமரித்துவந்தால் சிறு தோட்டம் அமைவதோடு வீட்டிற்குத் தேவையான கொத்தமல்லி, மிளகாய், கீரை, காய்கள் போன்றவை இலவசமாக நமது வீட்டுத்தோட்டத்த்திலேயே கிடைத்துவிடும். மேலும் அருமையான பல விவரங்களுக்கு இந்த முகநூல் பக்கத்தில் இணைந்து காணொளியில் பல விவரங்களை பெற்று பயன்பெறலாம்.
https://www.facebook.com/officialgoodful/videos/1300037320066731/
https://www.facebook.com/officialgoodful/
2. தமிழ் கடல். https://www.facebook.com/groups/264740130252643/ என்ற முகவரியில் சொடுக்கி (click செய்து) தமிழ் கடல் குழுமத்தின் உள்ளே நுழைந்து, குழுமத்தில் இணைந்து பயன்பெறுங்கள்.
3. முகநூலில் சிறுகதைகள் என்னும் முகநூல் பக்கத்தையும்
http://www.facebook.com/siru.kathaigal நமது வாசகர் வட்ட குழுவினர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
==================================================
15. வாசகர் வட்ட நிகழ்ச்சியின் சிறப்பு புகைப்படங்கள் :-
வாசகர் வட்ட நிகழ்ச்சியின் போட்டியில் பங்குபெற்றவர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
பகுதி II -கால்வண்ணம் :- (நடனம், நாடகம், விளையாட்டு போட்டிகள்) :-
அன்புள்ள வாசகர்களுக்கு:- நாங்கள் தொகுத்து வழங்கிய பதிவுகளில் உள்ள குறை நிறைகளை வாசகர்கள், அன்பான முறையில் எங்களுக்கு எடுத்துக்கூறி, எங்களது பதிவுகள் மேலும் சிறப்படைய வாழ்த்தி உற்சாகப்படுத்துமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ் தமிழ் ரோஜாக்கள்.
நன்றி... மீண்டும் அடுத்தமாத இதழில் சந்திப்போம்... வணக்கம்.
No comments:
Post a Comment