"வாசிப்பு என்பது புத்தகத்திற்கு மட்டுமில்ல வாத்தியக் கருவிகளுக்கும் பொருந்தும் ....வாசிப்போம்.... சுவாசிப்போம்" வருகை தாருங்கள் "சுட்டீஸ்-குல்கந்து" மாசி மாத வலைப்பதிவர் பூவிதழ்-11" நாள்/தேதி:- ஆங்கில மாதத்தின் 3-வது ஞாயிறு 19-02-2017.
கற்க கசடற….!! !! வாய்மையே வெல்லும்!!
“வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம்”
160/Sector-4, Vaishali, Ghaziabad, NCR-New Delhi.-201012
e-mail: vaishalireaderscircle@gmail.com
___________________________________________________________________
சுட்டீஸ் இதழ்=11 மாசி மாதம்-தேதி 19-02-2017. வணக்கம், தாங்களின் வருகைக்கு நன்றி, இந்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழில்" - மாசி மாத வலைப்பதிவு:- இந்த இதழின் ஆசிரியராக, தொகுத்து வழங்குபவர்:-(Editor of the Page) B.அபிஷேக் வைஷாலி , NCR-NEW DELHI.
மாசி மாதம்:- வைஷாலி வாசகர்வட்ட 36வது சந்திப்பு, அன்பு/நட்பு/குடும்ப பாச மாதக் கொண்டாட்டங்களும். நிகழ்ச்சிகளும்.
அடுத்து வரும் மார்ச்-2017, 19-03-2017 பங்குனி-மாத வலைப்பதிவு இதழின் ஆசிரியராக, (Editor of the page) இந்த வலைப்பக்கத்தை தொகுத்து வழங்க ஆவலுடன் காத்திருப்பவர் யார்? விருப்பம் உள்ளவர் உங்கள் விருப்பத்தை உடனே தெரியப்படுத்துங்கள். மின் அஞ்சல் "vaishalireaderscircle@gmail.com"
வைஷாலி வாசகர் வட்டத்தின் 36வது வாசகர் வட்ட சந்திப்பு 19-02-2017 தேதி, 3-வது ஞயிறு அன்றய மாசி மாதம்:- அன்பு / நட்பு / குடும்ப பாச மாதக் கொண்டாட்டங்களும். நிகழ்ச்சிகளும்.
வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :-
"இந்த மாத தலைப்பைச் சார்ந்த" அன்பு / நட்பு / குடும்ப பாச மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும், போட்டிகளும் பரிசுகளும்..
தொடர்ந்து அன்றய நிகழ்ச்சியில் உதவிய அனைவரையும் பாராட்டி, நிகழ்ச்சி இனிதாக நிறைவுபெற்றது.
முழு விவரங்கள் வைஷாலி வாசகர் வட்ட வலைப்பதிவில் காண்க "http://vaishalireaderscircle.blogspot.in"
நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்ட உறுப்பினர்கள்....
வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :-
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து,
தொடர்ந்து எங்க வீட்டு "நூலகம் "
படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும்
(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம்)
தொடர்ந்து ......
"இந்த மாத தலைப்பைச் சார்ந்த" அன்பு / நட்பு / குடும்ப பாச மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும், போட்டிகளும் பரிசுகளும்..
தொடர்ந்து அன்றய நிகழ்ச்சியில் உதவிய அனைவரையும் பாராட்டி, நிகழ்ச்சி இனிதாக நிறைவுபெற்றது.
முழு விவரங்கள் வைஷாலி வாசகர் வட்ட வலைப்பதிவில் காண்க "http://vaishalireaderscircle.blogspot.in"
நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்ட உறுப்பினர்கள்....
$நமது வைஷாலி வாசகர் வட்டத்தின் அனைவரையும் வாழ்த்தி வழிநடத்திச்செல்லும் தலைமை உறுப்பினர் திரு முத்து கிருஷ்ணன் அவர்களின் ஆன்மீகத் தொடர்-07.
அன்பான சுட்டீஸ்!... எப்படி இருக்கீங்க?
"நன்றி மறவாதிருத்தல் வேண்டும்"-- முத்து ஐயர்
"என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு"
என்று திருவள்ளுவர் சொல்கிறார். அப்படின்னா நீங்கள் யாருக்காவது உதவி செய்தால் அதை மறந்து விடலாம். ஆனால், ஒருவர் நமக்கு ஏதேனும் ஒரு சிறு உதவி செய்திருந்தாலும் அவரை என்றும் நாம் மறக்கவே கூடாது என்கிறார் குறுமுனி, தெய்வப் புலவர் திருவள்ளுவர்.
கடமை என்பது வேறு, உதவி என்பது வேறு. ஆனால், இரண்டுமே நன்றி செலுத்த உகந்தவை. நம்ம அம்மா, அப்பா நம்மை வளர்க்க எவ்வளவு பாடு படறாங்க. அல்லும், பகலும் உழைத்து, தனக்கென்று எதுவும் தனியாக வைத்துக் கொள்ளாமல் எல்லாவற்றையும், நம் எதிர்காலம் நன்றாயிருக்கவேண்டும் என்ற தியாக உணர்வோடு நம்மை நன்றாக படிக்க வைக்கிறார்கள், நல்ல வேலையில் சேரும் வகையில் உரிய, சிறந்த கல்விகற்க உதவுகிறார்கள். ஆனால், இதெல்லாம் அவர்களது கடமைதான். இருந்தாலும், இந்தச் சிறந்த தியாக உணர்வுக்கு அவர்களது முதுமையடைந்த காலத்தில் அவர்களை நம்முடனேயே வீட்டில் வைத்துக்கொண்டு கண்கலங்காமல் அவர்களைப் பராமரிக்க வேண்டியது நம் கடமை மட்டுமல்ல, நமது நன்றிக்கடனுமாகும்.
அதுபோல், ஒரு நண்பன் நாம் துன்பப்படும்போது அவனாலான உதவிகளைச் செய்து நம்மை அத் துன்பத்திலிருந்து மீட்கிறானே அவனுக்கும் நாம் வாழ்நாள் பூராவும் நன்றிக்கடன் பட்டிருக்க வேண்டும்.
ஆனால், இவ்விரண்டில் எதுவானாலும், நம் பெற்றோர்களும் சரி, நண்பனும் சரி, அவர்கள் நம்மிடம் எதையும் எதிர்பார்த்துச் செய்வதில்லை. அப்படி இருப்பினும் நாம் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்ற உணர்வு எப்போதும் நம் மனதில் இருக்கவேண்டும், அதுதவிர அவர்களுக்கு வேண்டிய நேரத்தில் நாம் பிரதிஉபகாரமாக நம் நன்றிக்கடனைச் செலுத்திவிட வேண்டும். இதுதான் நல்ல பண்பாட்டுக்கு அடையாளம். இவர்கள் எதையும் எதிர்பார்த்து நமக்கு உதவுவதில்லை என்று சொன்னேனே, அதற்கேற்ப ஔவைப்பாட்டி நமக்குத் தந்த ஒரு பாடலை இங்கு நினைவு கூறுவோம்:
"நன்றி ஒருவருக்குச் செய்தக்கால் அன்நன்றி என்று தருங்கொல் எனவேண்டா - தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தான் தருதலால்,"
அதாவது நாம் ஒருவருக்கு எப்போதாவது ஒரு உதவி செய்திருந்தால், அதற்கு நமக்கு எப்போது பிரதிபலனாக ஏதாவது கிடைக்காதா என்று நாம் என்றும் நினைக்கக் கூடாது. இதற்கு உதாரணம், தென்னை மரம் (தெங்கு). ஒரு தென்னங்கன்றை நட்டு, அதற்கு வேரில் (தாளுண்ட நீரை) தண்ணீர் விட்டு வளர்ப்போம். அந்தத் தென்னை மரம் பெரியதாய் நீண்டு வளர்ந்தபின் (தலையாலே) அதன் உச்சியில் குலை,குலையாய் தேங்காயை சுவையுடன் கூடிய இளநீருடன் நமக்கு ஒரு காலத்தில் தரும். அதை நாமோ அல்லது நம் பிள்ளைகளோ அதை அனுபவித்துச் சுவைப்பார்கள். என்வே, பலனை எதிர் பார்த்து ஒன்றைச் செய்யாதே என்று பகவத் கீதையில் கண்ணனும் சொல்லியிருக்கிறார்.
நன்றி! சுட்டீஸ், மீண்டும் சந்திப்போம்.
"என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு"
என்று திருவள்ளுவர் சொல்கிறார். அப்படின்னா நீங்கள் யாருக்காவது உதவி செய்தால் அதை மறந்து விடலாம். ஆனால், ஒருவர் நமக்கு ஏதேனும் ஒரு சிறு உதவி செய்திருந்தாலும் அவரை என்றும் நாம் மறக்கவே கூடாது என்கிறார் குறுமுனி, தெய்வப் புலவர் திருவள்ளுவர்.
கடமை என்பது வேறு, உதவி என்பது வேறு. ஆனால், இரண்டுமே நன்றி செலுத்த உகந்தவை. நம்ம அம்மா, அப்பா நம்மை வளர்க்க எவ்வளவு பாடு படறாங்க. அல்லும், பகலும் உழைத்து, தனக்கென்று எதுவும் தனியாக வைத்துக் கொள்ளாமல் எல்லாவற்றையும், நம் எதிர்காலம் நன்றாயிருக்கவேண்டும் என்ற தியாக உணர்வோடு நம்மை நன்றாக படிக்க வைக்கிறார்கள், நல்ல வேலையில் சேரும் வகையில் உரிய, சிறந்த கல்விகற்க உதவுகிறார்கள். ஆனால், இதெல்லாம் அவர்களது கடமைதான். இருந்தாலும், இந்தச் சிறந்த தியாக உணர்வுக்கு அவர்களது முதுமையடைந்த காலத்தில் அவர்களை நம்முடனேயே வீட்டில் வைத்துக்கொண்டு கண்கலங்காமல் அவர்களைப் பராமரிக்க வேண்டியது நம் கடமை மட்டுமல்ல, நமது நன்றிக்கடனுமாகும்.
அதுபோல், ஒரு நண்பன் நாம் துன்பப்படும்போது அவனாலான உதவிகளைச் செய்து நம்மை அத் துன்பத்திலிருந்து மீட்கிறானே அவனுக்கும் நாம் வாழ்நாள் பூராவும் நன்றிக்கடன் பட்டிருக்க வேண்டும்.
ஆனால், இவ்விரண்டில் எதுவானாலும், நம் பெற்றோர்களும் சரி, நண்பனும் சரி, அவர்கள் நம்மிடம் எதையும் எதிர்பார்த்துச் செய்வதில்லை. அப்படி இருப்பினும் நாம் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்ற உணர்வு எப்போதும் நம் மனதில் இருக்கவேண்டும், அதுதவிர அவர்களுக்கு வேண்டிய நேரத்தில் நாம் பிரதிஉபகாரமாக நம் நன்றிக்கடனைச் செலுத்திவிட வேண்டும். இதுதான் நல்ல பண்பாட்டுக்கு அடையாளம். இவர்கள் எதையும் எதிர்பார்த்து நமக்கு உதவுவதில்லை என்று சொன்னேனே, அதற்கேற்ப ஔவைப்பாட்டி நமக்குத் தந்த ஒரு பாடலை இங்கு நினைவு கூறுவோம்:
"நன்றி ஒருவருக்குச் செய்தக்கால் அன்நன்றி என்று தருங்கொல் எனவேண்டா - தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தான் தருதலால்,"
அதாவது நாம் ஒருவருக்கு எப்போதாவது ஒரு உதவி செய்திருந்தால், அதற்கு நமக்கு எப்போது பிரதிபலனாக ஏதாவது கிடைக்காதா என்று நாம் என்றும் நினைக்கக் கூடாது. இதற்கு உதாரணம், தென்னை மரம் (தெங்கு). ஒரு தென்னங்கன்றை நட்டு, அதற்கு வேரில் (தாளுண்ட நீரை) தண்ணீர் விட்டு வளர்ப்போம். அந்தத் தென்னை மரம் பெரியதாய் நீண்டு வளர்ந்தபின் (தலையாலே) அதன் உச்சியில் குலை,குலையாய் தேங்காயை சுவையுடன் கூடிய இளநீருடன் நமக்கு ஒரு காலத்தில் தரும். அதை நாமோ அல்லது நம் பிள்ளைகளோ அதை அனுபவித்துச் சுவைப்பார்கள். என்வே, பலனை எதிர் பார்த்து ஒன்றைச் செய்யாதே என்று பகவத் கீதையில் கண்ணனும் சொல்லியிருக்கிறார்.
நன்றி! சுட்டீஸ், மீண்டும் சந்திப்போம்.
...............முத்து ஐயர்..........
வைஷாலி வாசகர் வட்டம்..
=================================================
I. முதலில் குட்டி கல்கண்டு தகவல்கள்:- மாசி மாதம்:- மாசி மாதம்:- அன்பு / நட்பு / குடும்ப பாச மாதக் கொண்டாட்டங்களும். நிகழ்ச்சிகளும். என்கிற தலைப்பில் தகவல்களை ஒன்றுதிரட்டி..
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்தவை. இந்த சிறப்புகளெல்லாம் அந்த மாதங்களில் அமையும் சிறப்புவாய்ந்த நாட்களை நினைவுகூறுமாறு, வழிபாடுகளையும், திருவிழாக்களையும் கொண்டே அமைகின்றன. அவ்வகையில் மாசி மாதத்தின் சிறப்பு சிலவற்றை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
மாசி மகத்தின் சிறப்புக்கள்:- படித்தாலே புண்ணியம்:-
1. மகாவிஷ்ணுவாக அவதாரம் எடுத்தது மாசி மகத்திருநாளில் தான்.
2. மாசி மாதத்து சங்கடஹர சதுர்த்தி மிக விசேஷம். அந் நாளில் விரதம் இருப்பவர்கள் எல்லாவித தோஷங்களிலிருந்தும் விடுபடுவர்.
3. மாசி மாதத்தன்று தான் பார்வதிதேவி காளிந்தி நதியில் ஒரு தாமரை மலரில் வலம்புரிச் சங்காகத் தோன்றினாள்.
4. சிவபெருமான் திரு விளையாடல்கள் பல புரிந்தது மாசிமாதத்தில் தான்.
5. மாசி மாதத்தன்று மந்திர உபதேசம் பெறுவது சிறந்ததாகத் கருதப்படுகிறது.
6. குலசேகர ஆழ்வார் மாசி மாதம் புனர்பூச நட்சத்திர நாளில் தான் அவதரித்தார்.
7. அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது மாசி மகம் தான்.
8. மாசி மாத பூச நட்சத்திரம் தினத்தன்று தான் முருகப்பெருமான் சுவாமி மலையில் தன் தந்தை சிவபெருமானுக்கு உபதேசம் செய்தார்.
9. பிரம்மஹத்தி போன்ற பெரும் பாவங்களைப் போக்கி பேய்க்கும் நற்கதி கொடுக்கும் இரு ஏகாதசிகள் வருவது மாசி மாதத்தில் தான்.
10. உயர் படிப்பு படிக்க விரும்பு பவர்கள் ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் மாசிமக நாளில் அவற்றைத் தொடங்கினால் அதில் சிறந்து விளங்கலாம்.
11. அகத்தியர் தன் விருப்பங்கள் நிறைவேற தவம் இருந்து அருள் பெற்றது மாசிமாதத்தில் தான்.
12. காரடையான் நோன்பும் சாவித்ரி விரதமும் இம்மாதத்தில் வரும் விசேஷ விரதங்கள். மாசி மகத்தன்றுதான் காமதகன் விழா நடைபெறுகிறது.
13. மாசி மாதத்தில் வீடு குடி போனால் வாடகை வீடாக இருந்தாலும் அவ் வீட்டில் அதிக நாட்கள் வாழ்வார்கள். எனவே இம்மாதத்தில் புது வீடு கிரகப்பிரவேசம் நடத்தலாம்.
14. இம் மாதத்தை மாங்கல்ய மாதம் என்றும் கூறுவர்.
15. மாசி மக நட்சத்திரத்தில் பிறப்போர் ஜனத்தை ஆள்வர் என்பதும் மாசிக் கயிறு பாசி படியும் என்பதும் பழமொழி. இம் மாதத்தில் பெண்கள் புது மாங்கல்யச் சரடு கட்டிக் கொள்வது சிறப்பானது.
16. மாசிமக புனித நீராடல் செய்ய இயலாதோர் மாசி மக புராணம் படிக்கலாம். அல்லது கேட்கலாம் அதுவும் புண்ணியமே.
17. மாசி மகத்தன்று நெல்லையப்பர் கோவில் பொற்றாமரை தீர்த்தத்தில் திருநாவுக்கரசருக்கு தெப்ப விழா நடத்துவர். இதற்கு அப்பர் தெப்பம் எனப் பெயர்.
18. மாசி மாதத்தில் அதிகாலை எழுந்து குளித்தபின் துளசியால் மகாவிஷ்ணுவை வழிபட்டால், வைகுண்டத்தில் இடம் கிடைக்கும்.
19. மாசிமக நாளில் அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபடுபவர்களுக்கு, இன்பமும் வெற்றியும் தேடி வரும்.
20. மாசி சுக்ல பக்ஷ பஞ்சமியில் ஸ்ரீசரஸ்வதி தேவியை மணமுள்ள மலர்களால் அலங்கரித்து வழிபட்டால்,கல்வியில் சிறந்து விளங்குவர்.
21. பிப்ரவரி மாதம் (BOOK LOVERS MONTH) புத்தகக் காதலர், புத்தகப் பிரியர்களின் மாதமாக கொண்டாடப்படுவதால் பல புத்தக பதிப்பகத்தினர், மற்றும் புத்தக விற்பனையாளர்கள் பிப்ரவரி மாதம் முழுவதும் புத்தகங்களை வாங்கும் நண்பர்களுக்கு சிறப்பு கழிவு, தள்ளுபடிவிலையில் மற்றும் இலவச புத்தக இணைப்புகளையும் தருகிறார்கள் நீங்களும் உங்களுக்குத் பிடித்த புத்தகங்களை மிகக் குறைந்த விலையில் பெற்று பயனடையுங்கள் ...மேலும் காதலர் தினம்தான்."வாலண்டைன்-தினம்" பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துகொள்ளவேண்டுமா வருகை தாருங்கள் வைஷாலி வாசகர் வட்ட "சுட்டீஸ்-குல்கந்து" இதழ்=11 மாசி மாதம்- தேதி /நாள் 19-02-2017. பிரவரி 3வது ஞாயிறு அன்று.http://vaishalireaderscircle.blogspot.in" "எழுத்துக்களிடம் எனக்குப் பிடித்ததே, அவை நம் கண்ணைப் பார்த்து மட்டும் தான் பேசும்" என்கிறார்கள் "வாசிப்பு என்பது புத்தகத்திற்கு மட்டுமில்ல வாத்தியக் கருவிகளுக்கும் பொருந்தும் ....வாசிப்போம்.... சுவாசிப்போம்".... "சுட்டீஸ்-குல்கந்து" மாசி மாத வலைப்பதிவர் பூவிதழ்-11"http://gulkanthu.blogspot.in/"
மாசி மாத ஆன்மீக சிறப்பு :-
22. மாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசியையே ஷட்திலா ஏகாதசி என்பர். திருமாலை வழிபடுவதுதான் இந்த நாளின் முக்கியமான நோக்கம்.
23. மாசி மாத அமாவாசை நாளில், அனைத்து அங்காள பரமேஸ்வரி ஆலயங்களிலும் மயானக் கொள்ளை விழா நடைபெறும். இவ்விழாவின் அடிப்படை- சிவபெருமான் பிரம்மதேவனின் சிரம் கொய்த நிகழ்வுதான்.
அப்போது பிரம்மாவுக்கும் ஈசனைப்போல ஐந்து தலைகள் இருந்தன. எனவே, சிவனை நாம் ஏன் வணங்க வேண்டும் என்று ஆணவம் கொண்டார் பிரம்மா. அவரது ஆணவத்தை அழிக்க, பிரம்மாவின் ஒரு தலையைக் கொய்துவிட்டார் சிவபெருமான். அதன் காரணமாக சிவனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக் கொண்டதுடன், கொய்யப்பட்ட பிரம்மனின் தலை சிவபெருமானின் கரத்தில் வந்து அமர்ந்தது. அதை அவர் கீழே போட்டாலும் மீண்டும் அவர் கரத்துக்கே வந்தது. இவ்வாறு 99 முறை நடந்த நிலையில், "அதைக் கீழே போடாமல் சிறிது நேரம் கையிலேயே வைத்திருங்கள்' என்று பார்வதி தேவி சிவனிடம் கூறினாள். அவர் அவ்வாறே செய்ய, பிரம்மாவின் தலை கபாலமாக மாறி அவர் கரத்திலேயே ஒட்டிக் கொண்டது. அதையே பிச்சைப் பாத்திரமாக ஏந்தி ஈசன் பிச்சையெடுக்கும் நிலை ஏற்பட்டது. போடப்படும் உணவையெல்லாம் கபாலமே விழுங்கிவிட்டதால், உலகுக்கே படியளக்கும் ஈசனுக்கே உணவு கிட்டவில்லை.
இந்த நிலையில், பிரம்மாவின் தலை கொய்யப்பட்ட வேதனையில் இருந்த சரஸ்வதி தேவி, அது கபாலமாக மாறி சிவன் கையில் ஒட்டிக்கொள்ளுமாறு உபாயம் கூறிய பார்வதிமீது சினம் கொண்டு, "கொடிய உருவத்துடன் பூவுலகில் திரிக!' என சாபமிட்டாள். அதன்படி பார்வதி தேவி பூவுலகில் பல தலங்களில் அலைந்து, முடிவில் மலையனூர் வந்தாள். அங்கே அங்காள பரமேஸ்வரியாகக் கோவில் கொண்டாள்.
அப்போது ஈஸ்வரனும் மலையனூர் வர, அங்காள பரமேஸ்வரி சிவன் கையிலிருந்த கபாலத்தில் சுவையான உணவை இட்டாள். எல்லாவற்றையும் கபாலம் விழுங்கிவிட, அங்கு வந்த மகாலட்சுமி பரமேஸ்வரிக்கு ஒரு உபாயம் கூறினாள். அதன்படி பரமேஸ்வரி இரண்டு கவளம் உணவை கபாலத்தில் இட்டாள். அதை கபாலம் உண்டுவிட்டது. மூன்றாவது கவளத்தைக் கைதவறியதுபோல கீழே போட்டாள். உணவின் சுவையால் கவரப்பட்ட கபாலம், அதை உண்ண சிவனின் கரத்தைவிட்டு நீங்கி கீழே போனது.
அப்போது அங்காள பரமேஸ்வரி விஸ்வ ரூபமெடுத்து, பிரம்ம கபாலம் மீண்டும் ஈசனின் கரத்தை அடைய முடியாதபடி அதைத் தன் காலால் மிதித்து பூமியில் ஆழ்த்திவிட்டாள். ஈசனைப் பற்றிய பிரம்மஹத்தி தோஷமும் அகன்றது.
இந்த சம்பவத்தின் அடிப்படையில்தான் மயானக் கொள்ளை எனும் விழா கொண்டா டப்படுகிறது. மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் இவ்விழா விமரிசை யாக நடக்கும். சென்னை, அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளிலும் இவ்விழா பிரம் மாண்டமாக நடக்கிறது.
24. திருவாலங்காட்டில்- நடராஜர் சந்நிதியின் பின்புறம் ஒரு சுவர் தடுக்கப்பட்டிருக்கும். அதனுள் காரைக்கால் அம்மையார் இருப்பதாக ஐதீகம். இதைத்தான் ஆலங்காட்டு ரகசியம் என்பார்கள். அம்மையார் இறைவனுடன் ஒன்றியது மாசி மாதத்தில்தான்.
25. மாசி மாதத்தில் நாடகம் போடுவதாக, வேடம் கட்டி ஆடுவதாக வித்தியாசமான வேண்டுதல் செய்யும் கோவில் பற்றி தெரிந்துகொள்ள வருகை தாருங்கள் வைஷாலி வாசகர் வட்ட "சுட்டீஸ்-குல்கந்து" இதழ்=11 மாசி மாதம்-தேதி 19-02-2017.
26. *சிவராத்திரி* *"மற்றும் "* *மஹா* *சிவராத்திரி "*
24.2.2017 வெள்ளிக்கிழமை மஹா* *சிவராத்திரி பற்றி நாம் நன்கு அறிந்ததே . இருப்பினும் ஓர் எளிய குறிப்பினை காண்போம்.
சிவராத்திரி ஒவ்வொரு மாதமும் தேய்பிறை நாளில் வரும் சதுர்த்தசிதிதியினை நாம் சிவராத்திரி என்றும் சில சமயங்களில் மிக அரிதாக த்ரியேதசி பகல் பொழுதில் முடியும் பட்சத்தில் அதே நாளில் வரும். மாதத்திற்கு ஒன்று வீதம் மொத்தம் பன்னிரண்டு மகா சிவராத்திரியும் சேர்த்து . மஹா சிவராத்திரி...இது வருடத்திற்கு ஒரே ஒரு முறை மட்டும் வரும் சிவராத்திரி. மாசி மாத சதுர்த்தசி திதியினை நாம் மஹா சிவராத்திரியாக கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு 24-02-2017 வெள்ளிக்கிழமை வருகின்றது.
எண்ணிய எல்லாம் நிறைவேற ஈஸ்வரா நீயே கதி என்று ஈசனது திருவடி பற்றி பணியும் நேரமும் அதுவே. அப்படி பணிந்து பேருபெற்றவர்களில் சிலர்.
# அர்ஜூனன் அவர்கள் தவத்தால் பாசுபதம் என்னும் அஸ்திரத்தை பெற்றது,
# கண்ணப்ப நாயனார் என்னும் அன்புக்குரிய வேடன் சிவகதி என்னும் முக்தி அடைந்தது,
# பகீரதன் தவப்பலன் கங்கையை பாரிக்கு தந்தது,
# என்றும் பதினாறு வயதுடையோன் மார்க்கண்டேயனுக்காக பாச கயிற்றை பஷ்பமாகியது,
# அன்னை உமையாளுக்காக சரீரத்திலும் பாதி தந்து பற்றற்ற நிலையில் இருக்கும் எம் பெருமான் அர்த்தனாதீஸ்வரராக ஆனது, இப்படி கூறிக்கொண்டே செல்லலாம்.
மஹா சிவராத்திரியும் நான்கு கால பூஜைகளும் :
முதல் கால பூஜை:-
இது ஜோதி சொரூபமான ஈசனின் முடி ( தலை பகுதி ) தேடி அன்னப்பறவையாய் மாறிய அய்யன் " பிரம்மன் " எம்பெருமான் ஈசனுக்கு செய்யும் பூஜையாகும்.
அன்னைக்களுக்கெல்லாம் அரசி என்று போற்றப்படும் பசு என்னும் கோமாதா மும்மூர்த்திகள் முதல் முப்பது முக்கோடி தேவர்களும் ரிஷிகள் யாவரும் உறையும் கோமாதா எனும் பசுவின் மூலம் பெறப்படும் அமுதுகளால் செய்யப்படும் பூஜை இதுவே .
இந்த கால பூஜையில் "பஞ்ச கவ்வியத்தால்" (பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமயம், கோசாணம்) அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தும், தாமரைப் பூவால் அர்ச்சனையும், அலங்காரமும் செய்து, பாசிப் பருப்பு பொங்கல் நிவேதனமாக படைத்து, நெய் தீபத்துடன் முதல் கால பூஜை நடத்தப்படும் .
பிறவி பிணி நீங்க இக்காலம் பெரிதும் உதவும் .
இரண்டாவது கால பூஜை:-
திருவடி தேடி சென்ற பரம்பொருள் "விஷ்ணு" அவர்களால் அப்பனுக்கு செய்யும் பூஜையாகும்.
இந்த காலத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும், சந்தன காப்பு சாற்றியும், வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்தும், ஸ்வர்ண நாணயங்களை கொண்டு அர்ச்சனைகள் செய்தும், இனிப்பு பாயசம் நிவேதனமாக படைத்து, நல்லெண்ணை தீபத்துடன் நடைபெறும் .
இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் நோய்கள் தீரும் ; செல்வம் செழித்தோங்கும், திருமாலின் அருள் கிட்டும்.
மூன்றாவது கால பூஜை :-
அம்பாள் அவர்கள் செய்யும் பூசையினை மூன்றாம் கால பூஜை என்போம்.
இந்த காலத்தில் தேன் அபிஷேகம் செய்தும் பச்சை கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும், சிவப்பு வஸ்திரம் அணிவித்தும், ஜாதி மல்லி பூவைக் கொண்டு அர்ச்சனைகள் செய்து "கற்கண்டு அன்னம்" நிவேதனமாக படைத்து, நெய் தீபத்துடன் பூஜை செய்வது நன்று .
இந்த காலத்திற்குரிய சிறப்பு என்றால் இதை லிங்கோத்பவ காலம்என்றும் இந்த காலத்தில் சிவபெருமானின் அடி முடியைக் காண வேண்டி பிரம்மா அன்ன ரூபமாக மேலேயும், மகாவிஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடையது இந்த காலம்.
இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க சக்தியின் அருள் கிடைக்கும்.
நான்காவது கால பூஜை :-
முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது.
குங்குமப்பூ சாற்றி, கரும்பு சாறு & பால் அபிஷேகம் செய்தும், நந்தியாவட்ட பூவால் அலங்காரமும், அர்ச்சனையும் செய்து தூப தீப ஆராதனைகளுடன் 18 வகை சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் செய்யப்படுகிறது...
#பஞ்சாக்சர_ரகசியம்
***********************
இம்மந்திரத்தின் வகைகளை ஐந்தாகக் கூறுவர்.
தூல பஞ்சாசரம் - நமசிவாய
சூக்கும பஞ்சாசரம் - சிவாயநம
காரண பஞ்சாசரம் - சிவாய சிவ.
மகாகாரண பஞ்சாசரம் - சிவ.
மகாமனு பஞ்சாசரம் - சி.
தூல பஞ்சாசரம் - நமசிவாய
*******************************
27. நமசிவாய என்னும் திருவைந்தெழுத்து சிவபெருமானின் முதல் திருமேனியாகும்.
நமசிவாய” என்னும் ஸ்தூல பஞ்சாட்சரம் ஓம்கார பிரணவத்தோடு சேர்த்து “ஓம் நமசிவாய” என்று உச்சரிப்பதே மரபாகும். சித்தர்கள் இம் மந்திரத்தை பஞ்சபூதங்களின் ஒருமித்த வெளிப்பாடகவே உணர்ந்தனர். இம் மந்திரத்தில் சித்தி அடைவதால் பஞ்சபூதங்கள் கட்டுப்படுவதொடு ஐம்பொறிகளும் நமது கட்டுக்குள் அடங்கி நிற்கும்.
"நமச்சிவாய நமச்சிவாய"
பஞ்சபூதங்களில் இம் மந்திரத்தின் ஆளும் தன்மை:-
ந – நிலத்தைக் குறிக்கிறது,
ம – நீரைக் குறிக்கிறது,
சி – நெருப்பைக் குறிக்கிறது,
வ – காற்றைக் குறிக்கிறது,
ய – ஆகாயத்தைக் குறிக்கிறது
ந - கிழக்கு நோக்கிய முகத்திற்கு உரியது, மஞ்சள் நிறம், கௌதம மகரிஷி
ம – தெற்க்கு நோக்கிய முகத்திற்கு உரியது, கருப்பு நிறம், அத்திரி மகரிஷி
சி – மேற்க்கு நோக்கிய முகத்திற்கு உரியது, புகையின் நிறம், விஸ்வாமித்ர மகரிஷி
வ – வடக்கு நோக்கிய முகத்திற்கு உரியது, பொன்னிறம், ஆங்கீரஸ மகரிஷி
ய –மேல் நோக்கிய திருமுகத்திற்கு உரியது, சிவந்த நிறம், பரத்வாஜ மகரிஷி.
மந்திர வடிவான இறைவனின் திருமேனியில்-
திருவடி - ந
திருஉந்தி - ம
திருத்தோள்கள் - சி
திருமுகம் - வா
திருமுடி - ய
இத்தூல மந்திரம் உலக இன்பங்களைத் தந்து
இம்மை நலம் அருளக்கூடியது. இதுவே
ஞானமார்க்கத்தின் முதல் படி ஆகவேதான்
ஞானிகளும் அப்பர். சம்பந்தர், சுந்தரர்
ஆகியோரும் இம்மந்திரத்தைப் போற்றி
ஜெபித்தனர்...
28. மகத்துவம் நிறைந்த மாசி மாத தீர்த்த யாத்திரை:-
சூரியன் கும்பராசியில் சஞ்சாரிப்பதால் இது கும்பமாதம் என்றும் போற்றப்படுகிறது. தமிழ் மாதங்களில் இது 11வது மாதமாகும். இந்தியாவில் உள்ள அனைத்து புண்ணியத் தீர்த்தங்களிலும், சமுத்திரக் கரையிலும், புனித நதிகளிலும் மாசி மாதத்தில் அமிர்தம் நிறைந்திருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இதன் காரணமாகவே இந்த மாதத்தில் நீர்நிலைகளில் புனித நீராடுவதை இந்துக்கள் பழக்கமாகக் கொண்டுள்ளனர்.
முனிவர்களும், சித்தர் பெருமக்களும் கொண்டாடும் மாதம் மாசி மாதம். மகா சிவராத்திரி வைபோகத்திற்கு தயாராகும் தேவர்கள், முனிவர்கள் மற்றும் சிவகணங்கள் யாவரும், பூவுலகில் உள்ள சிவாலயங்களில் பிரசித்தி பெற்றவற்றைத் தொழ, கங்கையில் நீராடும் நாள், மாசி மாதம் பிறந்த உடன் முன்நிற்கும் உஷத் காலமாகும்.
வட இந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். கும்ப மாதத்தில் நடைபெறும் விழா என்பதால் இது கும்பமேளா. பொதுவாக அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்வது வழக்கம். ஆனால், கிரஹண காலம் தவிர்த்து, பௌர்ணமி நாளில் தர்ப்பணம் செய்வது என்பது மாசி மாதத்தில் மட்டுமே. மகாவிஷ்ணுவாக அவதாரம் எடுத்தது மாசி மகத்திருநாளில் தான்.
மாசி மாதத்து சங்கடஹர சதுர்த்தி மிக விசேஷம். அந் நாளில் விரதம் இருப்பவர்கள் எல்லாவித தோஷங்களிலிருந்தும் விடுபடுவர். மாசி மாதத்தன்று தான் பார்வதிதேவி காளிந்தி நதியில் ஒரு தாமரை மலரில் வலம்புரிச் சங்காகத் தோன்றினாள். சிவபெருமான் திருவிளையாடல்கள் பல புரிந்தது மாசிமாதத்தில் தான். மாசி மாதத்தில் மந்திர உபதேசம் பெறுவது சிறந்ததாகத் கருதப்படுகிறது.
மாசி மாத அமாவாசை நாளில் மயானக் கொல்லை என்ற திருவிழா நடைபெறுகிறது. அங்காள பரமேஸ்வரி அம்மன், மயானத்திற்குச் சென்று சூறையாடுவதாக ஐதீகம். மாசிமாத அமாவாசை நாளில் கும்ப ராசியில் சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்து சஞ்சரிப்பர். கதி இல்லாமல் மயானத்தில் பேயாய் அலைவோருக்கு அம்பாள் மோட்சகதி தரும் வகையில் இந்த மயானக்கொல்லை விழா கொண்டாடப்படுகிறது.
மாசி மாதம் மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது. அதே போல மாசி மகம் திருவிழாவும் கொண்டாடப்படுகிறது. மாசிமகம் நாளன்று விருத்தாசலம், கடலூர், பவானி கூடுதுறை, ராமேஸ்வரம் என்று பல புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதை பழக்கமாகக் கொண்டுள்ளனர் தமிழக மக்கள். அதே போல பெரும்பான்மையான ஆலயங்களில் மாசிமக நாளன்று தீர்த்தவாரி திருவிழாவும் நடைபெறுவதைக் காணலாம்.
30. மஹாசிவராத்திரி தினம், அன்றைய இரவில் நீங்கள் கண்விழித்து, முதுகுத்தண்டை நேராக வைத்திருப்பது உங்களுக்கு மாபெரும் பலன்களை அளிக்கும்.
31. ..பிப்ரவரி மாதம் பிறந்ததுமே சட்டென்று நினைவுக்கு வருவது FEB-14th காதலர் தினம்தான்.வாலண்டைன் தினம்....
அது ஒரு பெரிய உண்மைக் கதை.... ரோமாபுரி நாட்டின் மன்னர் "கிளாடிஸ் மிமி" ஆட்சி புரிந்தபோது,... தனது படைவீரர்களுக்கு முட்டாள் தனமாக உத்தரவு பிறப்பிப்பானாம். இந்த அரசனின் நடவடிக்கையால் படையில் சேர பலர் தயங்கினர். திடீரென ஒருநாள் அவன் அமைச்சர்களை அழைத்தான். ‘ரோமாபுரி நாட்டில் இனி எவருமே திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று உடனே ஒரு அறிவிப்பு செய்யுங்கள். ஏற்கனவே நிச்சயித்த திருமணங்களும் ரத்து செய்யப்படுகிறது. இதை மீறுபவர்கள் கைது செய்யப்பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப்படுவார்கள். பின்னர் பொது இடத்தில் அவர்கள் கல்லால் அடித்து தலை துண்டித்து கொல்லப்படுவார்கள்’’ என்றானாம்.
இதை கேட்ட ரோமானியர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகினர். திருமணமானவர்கள் மனைவியை பிரிந்து வரத் தயங்குகிறார்கள். காதலிக்கும் வாலிபர்கள் காதலியை பிரிந்து வர தயங்குகின்றனர். இது இரண்டும் இல்லாவிட்டால் படையில் சேர்வார்கள் என்று அவன் நினைத்துள்ளான். பாதிரியார் வாலண்டைன் அரசனின் இந்த அறிவிப்பை மீறி இரகசியமாகத் திருமணங்களை நடத்தி வைத்தார். இதையறிந்த மன்னன் பாதிரியார் வாலண்டைனை கைது செய்து சிறையில் அடைத்தான்.
வாலண்டைனுக்கு மரணதண்டனையை நிறைவேற்ற நாளும் நிர்ணயிக்கப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் சிறையில் இருந்த பாதிரியார் வாலண்டைனுக்கும் சிறைக் காவலர் தலைவனின் பார்வை இழந்த மகள் அஸ்டோரியசுக்கும் காதல் மலர்ந்துள்ளது. வாலண்டைனை விடுவிக்க அஸ்டோரியஸ் முயன்றாள். இதை அறிந்த சிறைத் துறைத் தலைவன் மகளை வீட்டுச் சிறையில் வைத்தான். அனைத்து காவலையும் மீறி அட்டை ஒன்றில் காகித அட்டை ஒன்றின் மூலம் செய்தி அனுப்பினார் வாலண்டைன். முதல் காதலர் வாழ்த்து இதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
இந்த கடிதத்தை படிக்கும் அதே நேரத்தில் வாலண்டைன் கல்லால் அடிக்கப்பட்டு சித்திரவதை செய்த பின் வாலண்டைனின் தலை துண்டிக்கப்பட்ட அந்த நாள் 270வது வருடம் பிப்ரவரி மாதம் 14ம் தேதி..
வாலண்டைன் ரோம் மக்களின் மனங்களில் மறையாமல் நிறைந்திருந்தார். ரோமானிய சர்ச்சுகள் ஐரோப்பியரின் கட்டுப்பாட்டுக்குள் வந்த போது ‘பாகான்‘ விடுமுறை தினம் அறிவிக்கப்பட்டது. இதுவே வாலண்டைன் தினமாகக் கொண்டாடப்பட்டது. சுமார் 200 ஆண்டுகளுக்கு பிறகு போப்பாண்டவர் ஜெலாசியஸ் மி வாலண்டைனை புனிதராக அறிவித்தார். அன்றிலிருந்து வாலண்டைன் தினம் காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.......அப்பாடி ஒருவழியாக கதை முடிந்தது ... காரணம் புரிந்ததா?
32. வாழ்க்கை என்றால் என்ன என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலாக கீழ்க்கண்டபடி கூறினார்கள்: தாய் சொன்னது - அன்பு, தந்தை சொன்னது - கண்டிப்பு, பெற்ற பிள்ளைகள் சொன்னது - தேர்வு, ஒரு ஏழை சொன்னது - துன்பம், ஒரு பணக்காரர் சொன்னது - சாப்பிடுவதும் தூங்குவதும்தான் வாழ்க்கை, மனிதன் சொன்னது - துன்பத்தை களைந்து அனைவர்க்கும் மகிழ்ச்சியை அளிப்பதே வாழ்க்கை.
நன்றிகளுடன் வைஷாலி வாசகர் வட்ட உறுப்பினர்கள்
==================================================
பகுதி I-கைவண்ணம்:-
1) சித்திரமும் கைப்பழக்கம் பகுதியில் :-
(நான் வரைந்த ஓவியம் / எனக்குப் பிடித்த ஓவியம்)
A) D. துர்கா 2ம் வகுப்பு.
A) D. துர்கா 2ம் வகுப்பு.
G) செல்வி மேஹோக் பேகம் (Mehok Begam):-
(நான் வரைந்த ஓவியம் / எனக்குப் பிடித்த ஓவியம்)
G) D. துர்கா :-
(நான் வரைந்த ஓவியம் / எனக்குப் பிடித்த ஓவியம்)
G) குழந்தைகள் சக்தி உமா மற்றும் ஜெய் சக்தி ) :-
2. நகைச்சுவை-சிரி சிந்தி செயல்படு- பகுதியில் :-
1. (புகைப்படமும் விளக்கமும்):-
2. (படமும் விளக்கமும்):-
சவுக்கைமரக்காயிலிருந்து பொம்மைகள் செய்வது எப்படி?
6. (புகைப்படமும் விளக்கமும்):-
முதலில் தமிழ் வாசிக்க கற்றுக்கொள்ளுங்கள்....வாருங்கள் நமது வைஷாலி வாசகர்வட்டத்தின் தமிழ் கற்கும் வகுப்புகளில் கலந்துகொண்டு, தரணி போற்றும் மொழி தமிழ் மொழியே!! என பறைசாற்றுவோம்.....
===========================================
3. (அ).சிறுகதைகள் பகுதியில் :- முதலாவது போட்டி :- வைஷாலி வாசகர் வட்டத்தின்... சரியான விடைகளைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்... போட்டி என்-11 மாசி மாதம், இதழ்-11 தேதி 19-02-2017. தொகுத்து வழங்கியவர்:- திருமதி நாமகிரி சந்திரசேகரன் - வைஷாலி, காசியாபாத்.
பாசமும் நேசமும் :- 1952ல் (Nirmal Hriday) என்ற இல்லத்தை திறந்தார். அந்த இல்லம்தான் பல்லாயிரக்கணக்கானோருக்கு அவர்களின் கடைசி காலத்தில் கருணை இல்லமாக செயல்பட்டது. கல்கத்தாவின் தெருக்களில் இருந்து உயிர் ஊசலாடிய நிலையில் காப்பாற்றப்பட்ட சுமார் 42 ஆயிரம் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் அந்த இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டனர். சக மனிதர்களாலேயே புறக்கணிக்கப்பட்ட அந்த ஆத்மாக்களுக்கு அதீத அமைதியை தந்தது அன்னையின் இல்லம் சுமார் 19 ஆயிரம் பேர் ஆதரவின்றி மடிந்து போயிருப்பர் ஆனால் அந்த இல்லத்திற்கு கொண்டுவரப்பட்ட அவர்கள் இறுதி நிமிடங்களில் அன்னையின் அரவனைப்பில் அன்பை உணர்ந்து மகிழ்ச்சியுடன் மரணத்தை தழுவினர்.
ஒருமுறை ஏழைகளுக்கு உதவ அன்னை தெரசா ஒரு செல்வந்தரிடம் கையேந்தி நின்றபோது அந்த செல்வந்தர் அன்னையின் கையில் காரி உமிழ்ந்தார். அப்போது அன்னை என்ன சொன்னார் தெரியுமா கைக்குள் விழுந்த எச்சிலை கைக்குள்ளேயே மூடிக் கொண்டு இந்த எச்சில் எனக்கு போதும், என் ஏழைகளுக்கு ஏதாவது கொடுங்கள் என்றார். திக்கு முக்காடிப்போன அந்த செல்வந்தர் அன்னையின் கால்களில் விழுந்து கதறி அழுது வாரி வழங்கினார்.
1953ல் ஓர் அநாதை இல்லத்தையும், 1957ல் தொழுநோளிக்கான இல்லத்தையும் தொடங்கி தமது பணியை அகலப்படுத்தினார் அன்னை தெரசா. பலர் அருவறுத்து ஒதுங்கும்போது அன்னையும் அவரது சகோதரிகளும் தொழுநோயாளிகளின் ரணங்களுக்கும் உள்காயங்களுக்கும் மருந்திட்டனர். அவர்களுக்கு அன்பு எனும் விருந்திட்டனர். ஆரம்பத்தில் 12 கன்னிமார்களுடன் தொடங்கிய அவரது 'Missionaries of Charity' அமைப்பு தற்பொழுது 500க்கும் மேற்பட்ட நிலையங்களாக விரிவடைந்து 132 நாடுகளில் இயங்கி வருகின்றன. தனது பணிக்கு விளம்பரம் தேடாத அன்னை தெரசாவை நோக்கி விருதுகளும் பட்டங்களும் படையெடுத்தன.
என்ன சுட்டீஸ்.... ஒருவர் நமக்கு செய்த உதவியை மறக்காமல் நன்றி பாராட்டுவது நமது கடமையல்லவா? ... ஆகவே நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதோடு, பிறரிடமிருந்து நாம் பெரும் அனைத்து உதவிகளுக்கும் நன்றி சொல்வது நமது கடமை... செய்வீர்கள் அல்லவா??? மீண்டும் அடுத்த மாத பதிவில் சிந்திப்போம். நன்றி-தமிழ் சிறுகதைகள் வலைப்பதிவிலிருந்து
கேள்வி 1. இந்தக்கதையிலிருந்து நாம் தெரிந்துகொள்ளும் கருத்து என்ன?
சரியான விடைகளைக்கூறி சிறப்பு பரிசுகளை வெல்லுங்கள். சரியான விடைகளை 10-03-2017 தேதிக்கு முன்னதாக "vaishalireaderscircle@gmail.com" மின்னஞ்சலில் அனுப்பவேண்டும்.
சரியான விடையையும், சரியான விடை எழுதியவர்களுக்கான பரிசுகளும் 19-03-2017 (3-வது ஞாயிறு) அன்றைய, 37-வது வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில் வழங்கப்படும்.
போட்டிக்கான சரியான விடையை பலரும் குறிப்பிட்டிருந்தால், பரிசு பெறுபவர்-குலுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்.
தமிழ் சிறுகதைகள் வலைப்பதிவிலிருந்து இந்த, சிறந்த கதையை தேர்ந்தெடுத்து வழங்கியவர் (திருமதி நாமகிரி சந்திரசேகரன் - வைஷாலி, காசியாபாத்)
3.(ஆ) சிறுகதைகள் பகுதியில் :-இரண்டாவது போட்டி:- வைஷாலி வாசகர் வட்டத்தின் சரியான புகைப்படக் காட்சி அல்லது கதையைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் போட்டி என்-11 மாசி மாதம், இதழ்-11 தேதி 19-02-2017.
தலைப்பு:- "அம்மா":-
சரியான படக் காட்சி கட்டுரை அல்லது கதைக்கான விடைகளைக்கூறி சிறப்பு பரிசுகளை வெல்லுங்கள். சரியான விடைகளை 10-03-2017 தேதிக்கு முன்னதாக "vaishalireaderscircle@gmail.com" மின்னஞ்சலில் அனுப்பவேண்டும்.
சரியான விடையையும், சரியான விடை எழுதியவர்களுக்கான பரிசுகளும் 19-03-2017 (3-வது ஞாயிறு) அன்றைய, 37-வது வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில் வழங்கப்படும்.
போட்டிக்கான சரியான விடையை பலரும் குறிப்பிட்டிருந்தால், பரிசு பெறுபவர்-குலுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்.
சென்ற மாதத்திற்கான சரியான படக்கதையை கூறி போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
=====================================================
3. அ) இந்தமாதம் தலைப்பைச் சார்ந்த:-திருக்குறள் அல்லது தமிழ் இலக்கியம்.
பதி பசு பாசம் :- திருமூலர் பாடல் [6] திருமந்திர விளக்கம் :-
பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்
பதியினைப் போல் பசு பாசம் அனாதி
பதியினைச் சென்று அணுகாப் பசு பாசம்
பதி அணுகில் பசு பாசம் நில்லாவே.
இப்பாடலுக்கான 16 ஆம் நூற்றாண்டில்தான் முதன் முதலாக உரை எழுதப்பட்டது.
இப் பாடலுக்கான எளிய விளக்கம்:- இறைவன், உயிர், உயிரின ஆசை எனபன பேரண்ட இயக்கத்தின் மூன்று பொருள்கள். இறைவனைப் போலவே உயிரினங்களும், ஆசையும் தாமே தோன்றுபவை. உயிரினங்களும் ஆசையும் உலகியல் வாழ்வில் இறைவனை அணுகுவதில்லை. அணுகினால் நீர் வேறு, நீர்க்குமிழி வேறு என்று இல்லாதது போல ஒன்றாய் இருக்கும்.
அதாவது அறிவுதான் பதி. அதுதான் எங்கும் பதிந்திருப்பது. பதிவு உயிர்த்தெழுந்து மூச்சு விடுவது உயிர். இந்த உயிர்ச்சத்து உடலைக் கட்டிக்கொள்கிறது. பாசம் என்பது கயிறாகிய கட்டு. பாசம் என்பது கட்டும், அவிழும், அறுந்து போகும். இதுதான் வாழ்வு. இவ்வாறு பதி பசு பாசங்களை உணர்ந்து பார்த்தனர்.
விடாமல் முயலுங்கள்,
பதி பசு பாசம் :- திருமூலர் பாடல் [6] திருமந்திர விளக்கம் :-
பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்
பதியினைப் போல் பசு பாசம் அனாதி
பதியினைச் சென்று அணுகாப் பசு பாசம்
பதி அணுகில் பசு பாசம் நில்லாவே.
இப்பாடலுக்கான 16 ஆம் நூற்றாண்டில்தான் முதன் முதலாக உரை எழுதப்பட்டது.
இப் பாடலுக்கான எளிய விளக்கம்:- இறைவன், உயிர், உயிரின ஆசை எனபன பேரண்ட இயக்கத்தின் மூன்று பொருள்கள். இறைவனைப் போலவே உயிரினங்களும், ஆசையும் தாமே தோன்றுபவை. உயிரினங்களும் ஆசையும் உலகியல் வாழ்வில் இறைவனை அணுகுவதில்லை. அணுகினால் நீர் வேறு, நீர்க்குமிழி வேறு என்று இல்லாதது போல ஒன்றாய் இருக்கும்.
அதாவது அறிவுதான் பதி. அதுதான் எங்கும் பதிந்திருப்பது. பதிவு உயிர்த்தெழுந்து மூச்சு விடுவது உயிர். இந்த உயிர்ச்சத்து உடலைக் கட்டிக்கொள்கிறது. பாசம் என்பது கயிறாகிய கட்டு. பாசம் என்பது கட்டும், அவிழும், அறுந்து போகும். இதுதான் வாழ்வு. இவ்வாறு பதி பசு பாசங்களை உணர்ந்து பார்த்தனர்.
விடாமல் முயலுங்கள்,
விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....
மீண்டும் சந்திப்போம் !
நன்றிகளுடன் கோகி.
================================================
3. ஆ) குட்டிக் கதைகள் பகுதியில் இந்தமாதம் தலைப்பைச் சார்ந்த கதை :-
திருக்குறள் மனித வாழ்வில் பின்பற்ற வேண்டிய அறங்கள் பலவற்றைப் பேசுகிறது. மனித உறவுகளைப் பற்றியும் கூடப் பேசுகிறது. திருக்குறள் போற்றிச் சொல்லும் உறவுகளில் இரண்டு - தந்தை, தாய். அண்ணன், தம்பி, அக்கா, தங்கை போன்ற உறவுகள் பற்றிய குறிப்பு குறளில் இல்லை. அவ்வையார் ஸ்ரீஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்!’ என்றும் 'தாயிற் சிறந்த கோயிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை!’ என்றும் தம் கொன்றை வேந்தன் என்ற நூலில் குரல்கொடுக்கிறார். ‘மாதா பிதா குரு தெய்வம்’ என்ற வரிசையில் மாதாவையும் பிதாவையும் நாம் முதலில் வைத்துக் கொண்டாடுகிறோம். தந்தை, தாய் ஆகிய உறவுகளை வள்ளுவர் போற்றிச் சொல்லக் காரணம், அவை இயல்பானவை, உணர்வு சார்ந்தவை என்பதுதான். மனித வர்க்கத்திற்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் கூட தாய்மை உணர்வு இயல்பாக இருப்பதைப் பார்க்கிறோம்.
குஞ்சு பொரித்த பறவை, தன் குஞ்சு, வலிமைபெற்று தானே பறந்து சென்று உணவு தேடும் காலம் வரை அதைப் பராமரிக்கிறது. தாய்ப் பாசத்தைப் பறவையின் மனத்தில் விதைத்தது யார்? ஆடு, மாடு போன்ற எல்லா விலங்கு களும் தம் குழந்தையைத் தாமே விரும்பிப் பாலூட்டி வளர்க்கின்றன. தாம் பெற்ற குழந்தைகளைப் பால் கொடுத்து வளர்க்க வேண்டும் என்ற பாடத்தை அவை எந்தப் பள்ளியில் பயின்றன? (பள்ளியில் சென்று கல்வி கற்ற சில தாய்மார்கள்தான் அழகு குலைந்து விடும் என்று குழந்தைக்குப் பாலூட்ட மறுக்கிறார்கள்!) எலியைக் கவ்விப் பிடிக்கும் பூனையின் பல் அதைக் கொல்கிறது. ஆனால், அதே பல் தன் குட்டியைக் கவ்வும்போது மிக ஆதரவாக அதைக் காக்கிறது. குரங்குக் குட்டி தன் தாயின் வயிற்றை இறுகக் கட்டிக் கொள்கிறது. தாயின் வயிற்றில் உள்ளே இருந்த அது இப்போது வெளியே இருக்கிறது. அவ்வளவுதான் வித்தியாசம்! அந்தக் குட்டியைச் சுமையென உதறாமல் தாய்க்குரங்கு அதோடுதான் கிளைகிளையாகத் தாவிச் செல்கிறது.
பக்திநெறியில் மர்க்கட நியாயம், மார்ஜால நியாயம் என இரண்டு நெறிகள் பேசப்படுகின்றன. மர்க்கடம் என்றால் குரங்கு. அதன் குட்டி தாய்க்குரங்கைச் சார்ந்திருப்பது போல, பக்தன் இறைவனாகிய தாயை இறுகப் பற்றிக் கொண்டு வாழ்வதே மர்க்கட நியாயம். இந்த வகைப்பட்ட பக்தியில் பக்தன் மிக கவனமாக இருக்க வேண்டும். இறைநம்பிக்கை என்ற பிடிப்பை அவன் கைவிட்டுவிட்டால் வீழ்ச்சிதான். இன்னொன்றான மார்ஜால நியாயம் பாதுகாப்பானது. இறைவன் தன்னைக் காக்கிறான் என்ற உணர்வோடு பக்தன் வாழ்கிறான். தன்னை இறைவன் நிச்சயம் காப்பாற்றுவான் என்ற திட நம்பிக்கையே அவன் வாழ்வின் ஆதாரம். குட்டிப் பூனையைக் காப்பாற்ற வேண்டியது தாய்ப் பூனையின் பொறுப்பு. குட்டிப் பூனை தன் பாதுகாப்பைத் தாயிடம் ஒப்படைத்துவிட்டுக் கவலையற்று இருக்கிறது. மனிதர்கள் கொண்டிருக்கும் தாய்ப்பாசத்திற்கும், விலங்குகளும் பறவைகளும் கொண்டிருக்கும் தாய்ப்பாசத்திற்கும் ஒரு வேறுபாடு உண்டு.
விலங்கினத்திடமும் பறவையினத்திடமும் தாய்ப்பாசம் என்பது குறுகிய காலத்திற்குத்தான். அதன்பின் அவை தாம் ஈன்ற குழந்தையை மறந்து விடுகின்றன. மனிதர்கள் அப்படி மறப்பதில்லை. இதிலும் நம் பாரததேச மக்களுக்கு ஒரு சிறப்பம்சம் உண்டு. வெளிதேசங்கள் பலவற்றில் சுமார் பதினைந்து பதினாறு வயதிற்குப் பின் குழந்தைகள் நிரந்தரமாகப் பெற்றோரைப் பிரிந்து விடுகிறார்கள். அதன்பின் ஆண்டிற்கு ஒருமுறை பெற்றோர் தினத்தில் அவர்களை வந்து பார்த்தால்தான் உண்டு. ஆனால், நம் நாட்டில் 'பெற்றோர் குழந்தை உறவு’ என்பது வாழ்நாள் உறவு. குடும்ப உறவுகள் எப்படி அமையவேண்டும் என்பதில் நம் பாரத தேசமே உலகிற்கு வழிகாட்டி. அதனால்தான் தாய்நாட்டுப் பெருமை பற்றிப் பேச வந்த பாரதியார், 'எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே!’ என தாய், தந்தையர் சிறப்பைப் பேசி வந்தேமாதரம் என நாட்டை வணங்குகிறார். வள்ளுவர், ஒரு தந்தை என்ன செய்யவேண்டும் என்பதை வரையறுக்கிறார். தந்தை மகனை அவையத்தில் முந்தி இருக்கச் செய்ய வேண்டும். அதாவது, கற்றறிந்த சான்றோர் கூடுமிடத்தில் மற்றவர் அவனை மதிக்கும் வகையில் புகழுடையவனாக அவனை வளர்க்க வேண்டும்.
'தந்தை மகற்காற்றும் உதவி அவையத்து முந்தி இருப்பச் செயல்.’ சரி. பதிலுக்கு மகன் என்ன செய்யவேண்டும்? 'மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை எந்நோற்றான்கொல் எனும் சொல்.’இவனைப் பெற இவன் தந்தை என்ன தவம் செய்தானோ என்று மற்றவர் பேசும் படியாக மகன் விளங்க வேண்டும். இரண்டு குறள்களுமே தந்தையைதான் முன்னிலைப்படுத்திப் பேசுகின்றன. தந்தைக்கு மகன் ஆற்றவேண்டிய கடமை பற்றி வள்ளுவர் சொல்லவில்லை. மகன் தந்தை தாயைப் பராமரிக்க வேண்டும் என்றெல்லாம் வள்ளுவர் எங்குமே பேசவில்லை. காரணம் அவர் காலத்தில் பெற்றோரைக் குழந்தைகள் காப்பாற்றுவது என்பது மிக இயல்பான நடைமுறையாக இருந்திருக்க வேண்டும். அதை ஒரு நீதியாக எடுத்துச் சொல்லியாக வேண்டிய அளவு சமுதாயம் கெட்டிருக்காது. இன்று நிலைமை அப்படியல்ல. 'தன் மகன் தனக்குப் பல்லாண்டுகளாக சோறு போடவில்லை, நீதிமன்றம் மாதந்தோறும் ஒரு தொகையை மகன் தனக்குக் கொடுக்குமாறு அறிவுறுத்த வேண்டும்' என்ற கோரிக்கையோடு பெங்களூரில் ஒரு தாய் நீதிமன்றம் சென்ற செய்தி சில மாதங்களுக்கு முன் வந்தது.
பெற்ற தாயை விமான நிலையத்தில் அநாதரவாக ஒரு நாற்காலியில் அமர வைத்துவிட்டு, மகன் விமானத்தில் ஏறிச் சிட்டாய்ப் பறந்து வெளிதேசம் சென்றுவிட்ட செய்தியையும் நாளிதழ்கள் நமக்கு அறிவித்தன. காலத்தின் கோலம் இது. ஒரு தாய் தன் மகனைப் புறக்கணிப்பதில்லை. ஆனால், மகன் தன் தாயைப் புறக்கணித்து விடுகிறான். எதனால் இந்நிலை நேர்கிறது? காரணம் இதுதான்: பெற்றோர் மகனிடம் செலுத்தும் பாசம் உணர்வுபூர்வமானது. மகன் பெற்றோரிடம் செலுத்தும் பாசம் பெரிதும் அறிவுபூர்வமானது. காரணம் தனது ஆறு வயது வரை உள்ள நினைவு எதுவுமே மகனின் மனத்தில் தங்குவதில்லை. தன்னைத் தாய் சீராட்டிப் பாராட்டி வளர்த்த எந்த நினைவும் மகனிடம் இல்லை. இயற்கை செய்யும் சதி இது. ஆனால், தாய் தந்தை இருவரிடமும் மகன் பிறந்த அந்த நாள் தொடங்கி இன்று வரை உள்ள அத்தனை நினைவுகளும் இருக்கின்றன. மனத்தின் நினைவை வைத்துக் கணக்கிட்டால் பெற்றோர் குழந்தை மேல் செலுத்தும் பாசத்தின் வயது அதிகம். மகன் பெற்றோர் மேல் செலுத்தும் பாசத்தின் வயது குறைவு.
எனவே பெற்றோர் மகன்மேல் செலுத்தும் பாசம் அதிகமாகவும், மகன் பெற்றோர் மேல் செலுத்தும் பாசம் அந்த அளவு அதிகமில்லாமலும் இருப்பது இயற்கை தானே? மகனைப் பிரிய இயலாத தசரதர் மாள்கிறார் என்கிறது ராமாயணம். தந்தை மகன்மேல் கொண்ட பாசத்தின் ஆழம் அத்தகையது. ராமன், தந்தை தசரதரைப் பிரிந்தான். ஆனால், இறக்கவில்லை. தசரதர் ஆற்றில் யானை நீர் குடிக்கும் சப்தம் என்று தவறாக நினைத்து, அதிகாலை வேளையில் சப்தவேதி என்ற அஸ்திரத்தைச் செலுத்தினார். சிறுவன் சிரவணன் குடத்தில் நீர் முகந்த ஒலி அது. சிரவணன் உயிரிழந்தான். இதையறிந்த பார்வையற்ற அவன் பெற்றோர் நெருப்பில் விழுந்து இறந்தார்கள் என்கிறது ராமாயணம். மகனைப் பிரிந்த தாய், தந்தையர் உயிர்வாழவே விரும்பவில்லை. அவர்கள் பாசம் அவ்வளவு தீவிரமானது. தசரதரின் தந்தை அஜன், தன் மனைவி இந்துமதி இறந்தபோது அளவற்ற வேதனை அடைந்தான். தாயில்லாத தன் மகன் தசரதரை வளர்ப்பதற்காக மட்டுமே தன் உயிரை வைத்துக் கொண்டிருந்தான். தசரதரை வளர்த்து முடி சூட்டியபின் சரயூ நதியில் மூழ்கித் தற்கொலை செய்துகொண்டான்.
அப்படி மகனுக்காகவும் மனைவிக்காகவும் இறந்தவர் பலர் உண்டு. தாய் தந்தைக்காக உயிரை விட்டவர்கள் அதிகமில்லை. காதல், புத்திர பாசம் போன்றவை வலுவான உணர்வுகள். புத்திரனுக்குப் பெற்றோர் மேல் உள்ள பாசம் அந்த அளவு வலுவானதல்ல. இதுவே யதார்த்தம். தன் மகன் வீதிவிடங்கனைத் தேர்ச்சக்கரத்தில் சிக்கச் செய்து உயிர் நீங்கச் செய்தானே மனுநீதிச்சோழன், அவன் அடைந்த துயர் பெரிது. தன் மகன் சீராளனை வெட்டிக் கறி சமைக்குமாறு தன் மனைவியிடம் சொன்னாரே சிறுத்தொண்டர், அவரது துயர் அதனினும் பெரிது. ஆனால், ராமன் தன் காதல் மனைவியை அக்கினிப்பிரவேசம் செய்யச் சொன்ன துயர் அத்தனை பெரிதல்ல. (அனுமன் தன் வாலில் மூட்டப்பட்ட நெருப்பால் இலங்கையை எரித்தபோது, சீதாப்பிராட்டி இருந்த அசோகவனப் பகுதி மட்டும் எரியவில்லை என்பதை ராமபிரானிடம் சொல்லித்தானே இருப்பான்? எனவே கற்பின் கனலியைக் கனல் சுடாது என்பது ராமனுக்கு முன்னரே தெரிந்திருக்கும் அல்லவா?)
எப்படியானாலும் பெற்றோர் மகன் மேல் கொள்ளும் பாசத்தின் ஆழம், கணவன், மனைவிமேல் கொள்ளும் காதலின் ஆழத்தை விட அதிகம்தான். உத்தரகாண்டத்தில் சீதை மண்ணில் புகுந்ததை ராமன் கடும் துயரத்தோடு தாங்கிக் கொண்டான். ஒருவேளை தன் பிள்ளைகளான லவ குசர்கள் மண்ணில் புகுந்திருந்தால் ராமன் தானும் அங்கேயே உயிரை விட்டிருப்பான். இதைத்தான் முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மிக அழகாகச் சொல்கிறார். பாசம் விழுதுபோல். மேலிருந்து கீழே இறங்கும். பெற்றோர் பிள்ளைமேல் அளவற்ற பாசம் வைப்பார்கள். பாசம் கொடிபோல் கீழிருந்து மேலே படர்வதில்லை. பிள்ளைகள் பெற்றோர்மேல் அந்த அளவு பாசம் கொள்வதில்லை. இதைப் பெற்றோர் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அப்படிப் புரிந்துகொண்டால் பிள்ளைகள் தங்களைப் புறக்கணிப்பதைப் பற்றி அவர்களிடம் ஒரு கழிவிரக்கம் தோன்றாது. இயற்கையின் இயல்பே அப்படித்தான் என்ற சமாதானம் தோன்றும்.
இப்படிச் சொல்வதால் பிள்ளைகள் பெற்றோரைப் புறக்கணிப்பது நியாயம் என்பதல்ல. தனக்கு ஒரு குழந்தை பிறந்தால் தாய் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஒரு பெண்ணுக்கு இயற்கை விதித்த கடமையைத் தன்னால் செய்ய முடிந்துவிட்ட பூரிப்பா அல்லது தன் வாழ்க்கைக்கு ஒரு பிடிப்புக் கிடைத்துவிட்டதால் விளையும் ஆனந்தமா? தாய் மகப்பேற்றால் பெறும் இன்பத்தை விளக்க வார்த்தையே இல்லை. ஆனால், தாய் இந்த இன்பத்தை விடவும் கூடுதலாக இன்பம் அடையும் ஒரு தருணம் உண்டு என்கிறார் வள்ளுவர். தன் மகன் நல்லவன் என்று யாரேனும் புகழக் கேட்டால் அவள் அவனைப் பெற்ற காலத்தில் மகிழ்ந்ததை விடவும் அதிகமாக மகிழ்வாளாம்.
'ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய்!’
ஆக, குழந்தை வளர்ப்பின் நோக்கம் என்ன என்பதையும் இக்குறள் மறைமுகமாகத் தெரிவித்து விடுகிறது. குழந்தையை மருத்துவர் ஆக்குவதோ கணிப்பொறி ஆக்குவதோ ஒரு தாயின் நோக்கமாக இருக்க இயலாது. அவனைச் சான்றோன் ஆக்குவதே, நல்லவன் ஆக்குவதே தாயின் குறிக்கோள் என்கிறார் வள்ளுவர்.
'ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே!’
- என தாயின் நிலையில் நின்று ஒவ்வொருவர் கடமை பற்றியும் பேசிய புறநானூற்றுக் கவிஞர் பொன்முடியார், சான்றோன் ஆக்குதல் தந்தையின் கடமை என்கிறார். ஆக பிள்ளையைப் பொறுத்தவரை பெற்றோரின் கடமை அவனை நல்லவனாக்குவதுதான் என்பது உறுதியாகிறது. கல்வித் துறை இந்த நோக்கத்தைக் கணக்கில் கொண்டு பாடத் திட்டங்களை அமைத்திருந்தால் இன்று பாலியல் வன்முறை உள்ளிட்ட வயதுக்கு மீறிய குற்றங்களைச் செய்யும் இளைய சமுதாயம் உருவாகியிருக்குமா? பெளதிகத்தையும் ரசாயனத்தையும் பூகோளத்தையும் படித்தால் போதுமா? மனத்தைப் பண்படுத்தும் நீதிபோதனை வகுப்புகளையும் இலக்கியப் பாடங்களையும் பள்ளிகளில் கூடுதலாக்க வேண்டாமா? முக்கியமாக திருக்குறளைக் கட்டாயப் பாடமாக்கி இளம் வயதிலேயே குறள் கருத்துகள் மாணவர்கள் மனத்தில் பதியும்படிச் செய்தால் நம் தமிழகம் ஜாதி மத இன வேறுபாடுகளைப் பாராட்டாத, ஒற்றுமை நிறைந்த உன்னத சமுதாயமாக உருவாகும் வாய்ப்பிருக்கிறது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
மதிப்பிற்குரிய திரு. திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள், பாசத்தைப்பற்றி இத்தனை நேசமான கட்டுரையை பல பழமையான இதிகாசங்களை மேற்கொள்காட்டி விளக்கி கூறியிருப்பதை படித்துப் பார்க்கும் எவரும் முழுமனதோடு அவரை பாராட்டாமல் இருக்கமாட்டார்கள்.நன்றி தினகரன் ஆன்மிக கட்டுரைகள்-குறளின் குரல் -30.
நன்றி சொன்னால் பேரழகு!
நன்றி செய்தால் பாரழகு !
======================================
ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ...ஒரு சிறு விளம்பர இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடர்ந்து வாசிக்கலாமா?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
விளம்பரம் :-இப்பகுதியை உங்களுக்கு வழங்குபவர்:-
விளம்பரம் :-இப்பகுதியை உங்களுக்கு வழங்குபவர்:-
விளம்பரம் :-இப்பகுதியை உங்களுக்கு வழங்குபவர்:-
==============================================================
==============================================================
4. கட்டுரை=1:- இந்தமாதம் தலைப்பைச் சார்ந்த கதை /கட்டுரைகள்:-
“என்னையன்றி வேறெவரையும் தொழாமல் எவன் இருக்கிறானோ அவன் என்னோடு இருப்பான்; அவனது பாரத்தை நான் எந்நாளும் சுமப்பேன்” என்றும், “என்னையே நினைத்தபடி வாழ்க்கைப் போராட்டத்தில் ஈடுபடு” என்றும் ஸ்ரீமத் பகவத்கீதை கூறுகிறது.
‘நான்’ என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறும் அவர் உனக்கு வெளியேயோ, உனக்குப் புறம்பாகவோ இருப்பவரல்ல. அது உன்னுடைய தெய்வீக மெய்நிலைதான். நீ தியானத்தின் பூரண அமைதிநிலையில், உனது புலன்கள், மனம் மற்றும் அகங்காரத்தை இழுப்பை அகற்றி உணர்வுகளைத் தடுத்த நிலையில், நீ உனக்குள்ளே அதனை இனங்காண்பாய். பகவான் தன்னைச் சாரதியாக அமர்த்திக்கொண்டுள்ள உனது இதயபீடத்தின் குளிர்ந்த அமைதியில் நீ சரண்புகுந்து கொள்ளலாம்.
- ஸ்ரீ சத்திய சாயிபாபா, பிரசாந்தி நிலையம், 23/11/1975
================================================
4. கட்டுரை=2:- இந்தமாதம் தலைப்பைச் சார்ந்த :-
====================================================
4)கட்டுரை=3 சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம் பகுதியில்:-
வணக்கம் நண்பர்களே:-
பொன்வேண்டேன்,
பொருள் வேண்டேன்
மண் வேண்டேன்
மனை வேண்டேன்
பாசமும் நேசமும் கொண்ட,
நோயற்ற வாழ்வை நாம் பெறவேண்டும்
என்பதே அனைவரின் பிராத்தனையாக இருக்கும்.
அரிது அரிது மானிடராய் பிறப்பதரிது, அதனிலும் கூன் குருடும் உடல் குறைபாடுகளும் இல்லாமல் பிறத்தல், அதையும் விட இன்று வாழ்நாள் முழுதும் எந்த வித உடல் பிணிகளும் இன்றி நல்நெடும்வாழ்வு வாழ்வதைவிட பெரிய செல்வம் ஏதும் இல்லை. எண்ணற்ற நோய்கள் வாழ்க்கை முறைகளினால் வந்தாலும் பெரும்பாலும் அவைகள் லைஃப்ஸ்டைல் எனப்படும் வாழ்வுமுறை நோய்களே.
இவ்வகை நோய்களின் ஏன் எதற்கு எப்படி என்றே அறியும் முன் உடலை அரித்து விடும் நோய்களில் ஒன்று கேன்சர் எனப்படும் புற்றுநோய். இன்று உலகம் எங்கும் இதனால் உயிர் விடுவோர் எண்ணிக்கை மற்ற அனைத்தையும் விட அதிகம். புற்றுநோய் வரக்காரணம் எவ்வளவோ இருக்கலாம், யாருக்கு வேண்டுமானாலும் வரலாம், ஆனால் வந்த பின் அதனுடைய பாதிப்பின் அளவையும் நோயின் தீவிரத்தைப்பொறுத்தும் நிறைய சிகிச்சை முறைகள் உள்ளது.
எல்லா நோயைப்போலவும் இதனையும் நாம் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் நூறு சதவீத குணப்படுத்தலாம். எப்படி கண்டறிவது என்பதே விழிப்புணர்வு.
இந்த புது வருடத்தில் சில நண்பர்கள் இணைந்து உருவாக்கிய அமைப்பு நேசம், முழுக்க முழுக்க புற்றுநோய் குறித்த விழிப்புணர்வும் அதுகுறித்த நிகழ்வுகளுமாக இணையத்தில் உங்களின் ஆதரவுடன் ஆரம்பிக்கிறோம்.
நேசம் - அமைப்பில் இருந்து முதல் விழிப்புணர்வு அறிவிப்பு ஜனவரி முதல் அன்று வெளிவரும். புற்றுநோயை கண்டறிந்து களைவோம், போராடி வெல்வோம்
பொன்வேண்டேன்,
பொருள் வேண்டேன்
மண் வேண்டேன்
மனை வேண்டேன்
பாசமும் நேசமும் கொண்ட,
நோயற்ற வாழ்வை நாம் பெறவேண்டும்
என்பதே அனைவரின் பிராத்தனையாக இருக்கும்.
அரிது அரிது மானிடராய் பிறப்பதரிது, அதனிலும் கூன் குருடும் உடல் குறைபாடுகளும் இல்லாமல் பிறத்தல், அதையும் விட இன்று வாழ்நாள் முழுதும் எந்த வித உடல் பிணிகளும் இன்றி நல்நெடும்வாழ்வு வாழ்வதைவிட பெரிய செல்வம் ஏதும் இல்லை. எண்ணற்ற நோய்கள் வாழ்க்கை முறைகளினால் வந்தாலும் பெரும்பாலும் அவைகள் லைஃப்ஸ்டைல் எனப்படும் வாழ்வுமுறை நோய்களே.
இவ்வகை நோய்களின் ஏன் எதற்கு எப்படி என்றே அறியும் முன் உடலை அரித்து விடும் நோய்களில் ஒன்று கேன்சர் எனப்படும் புற்றுநோய். இன்று உலகம் எங்கும் இதனால் உயிர் விடுவோர் எண்ணிக்கை மற்ற அனைத்தையும் விட அதிகம். புற்றுநோய் வரக்காரணம் எவ்வளவோ இருக்கலாம், யாருக்கு வேண்டுமானாலும் வரலாம், ஆனால் வந்த பின் அதனுடைய பாதிப்பின் அளவையும் நோயின் தீவிரத்தைப்பொறுத்தும் நிறைய சிகிச்சை முறைகள் உள்ளது.
எல்லா நோயைப்போலவும் இதனையும் நாம் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் நூறு சதவீத குணப்படுத்தலாம். எப்படி கண்டறிவது என்பதே விழிப்புணர்வு.
இந்த புது வருடத்தில் சில நண்பர்கள் இணைந்து உருவாக்கிய அமைப்பு நேசம், முழுக்க முழுக்க புற்றுநோய் குறித்த விழிப்புணர்வும் அதுகுறித்த நிகழ்வுகளுமாக இணையத்தில் உங்களின் ஆதரவுடன் ஆரம்பிக்கிறோம்.
நேசம் - அமைப்பில் இருந்து முதல் விழிப்புணர்வு அறிவிப்பு ஜனவரி முதல் அன்று வெளிவரும். புற்றுநோயை கண்டறிந்து களைவோம், போராடி வெல்வோம்
-நன்றி http://nesampeople.blogspot.in/2011/12/blog-post_29.html.
=======================================================
4 ) கட்டுரை=4, வேலை தேடும் நண்பர்களுக்கு ஓர் தகவல் !!
வேலை தேடுவதற்கு உதவும் இணையதளங்களை கொடுத்துள்ளோம். இந்த தளங்களில் உங்கள் தகவல்களை பதிவு செய்து உங்கள் தகுதிக்கும் திறமைக்கும் உரிய வேலையை பெற்று வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துகள் ...
www.careerbuilder.co.in
www.clickjobs.com
www.placementpoint.com
www.careerpointplacement.com
www.glassdoor.co.in
www.indtherightjob.com
www.employmentguide.com
www.JOBSTREET.com
www.JOBSDB.COM
www.AE.TIMESJOBS.COM
www.NAUKRIGULF.COM
www.NAUKRI.COM
www.GULFTALENT.COM
www.BAYAT.COM
www.MONSTER.COM
www.VELAI.NET
www.CAREESMA.COM
www.SHINE.COM
www.fresherslive.com
www.jobsahead.com
www.BABAJOBS.com
www.WISDOM.COM
www.indeed.co.in
www.sarkarinaukriblog.com
www.jobsindubai.com
www.jobswitch.in
www.jobs.oneindia.com
www.freshersworld.com
www.freejobalert.com
www.recruitmentnews.in
www.firstnaukri.com
www.freshnaukri.com
www.mysarkarinaukri.com
www.freshindiajobs.com
www.freshersopenings.in
www.freshersrecruitment.in
www.chennaifreshersjobs.com
அரசு வேலைகள்
பற்றி அறிந்துகொள்ள::
www.govtjobs.allindiajobs.in
www.timesjobs.com
www.naukri.com
www.tngovernmentjobs.in
www.sarkariexam.co.in
www.govtjobs.net.in
www.indgovtjobs.in
இந்த பதிவை வேலை தேடும் உங்கள் ஏனைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள்..
பகிர்ந்துகொள்ளுங்கள் கண்டிப்பாக மற்றவரும் அறிந்துகொள்ளட்டும்..
வேலை தேடுவதற்கு உதவும் இணையதளங்களை கொடுத்துள்ளோம். இந்த தளங்களில் உங்கள் தகவல்களை பதிவு செய்து உங்கள் தகுதிக்கும் திறமைக்கும் உரிய வேலையை பெற்று வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துகள் ...
www.careerbuilder.co.in
www.clickjobs.com
www.placementpoint.com
www.careerpointplacement.com
www.glassdoor.co.in
www.indtherightjob.com
www.employmentguide.com
www.JOBSTREET.com
www.JOBSDB.COM
www.AE.TIMESJOBS.COM
www.NAUKRIGULF.COM
www.NAUKRI.COM
www.GULFTALENT.COM
www.BAYAT.COM
www.MONSTER.COM
www.VELAI.NET
www.CAREESMA.COM
www.SHINE.COM
www.fresherslive.com
www.jobsahead.com
www.BABAJOBS.com
www.WISDOM.COM
www.indeed.co.in
www.sarkarinaukriblog.com
www.jobsindubai.com
www.jobswitch.in
www.jobs.oneindia.com
www.freshersworld.com
www.freejobalert.com
www.recruitmentnews.in
www.firstnaukri.com
www.freshnaukri.com
www.mysarkarinaukri.com
www.freshindiajobs.com
www.freshersopenings.in
www.freshersrecruitment.in
www.chennaifreshersjobs.com
அரசு வேலைகள்
பற்றி அறிந்துகொள்ள::
www.govtjobs.allindiajobs.in
www.timesjobs.com
www.naukri.com
www.tngovernmentjobs.in
www.sarkariexam.co.in
www.govtjobs.net.in
www.indgovtjobs.in
இந்த பதிவை வேலை தேடும் உங்கள் ஏனைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள்..
==============================================
5 ஒவ்வொரு மாதமும் ஒரு உலக மொழி பற்றிய சிந்தனை :-
வணக்கம் நண்பர்களே! இந்தமாத வாசகர்வட்ட சந்திப்பில் நமது தாய்மொழி தமிழ் அல்லாது வேற்று உலக மொழிகள் பற்றிய சிந்தனையை உங்களின் மனதில் விதைக்கலாம் என்கிற எண்ணத்தில் உருவான இந்த சிறு சேவை, ஒவ்வொரு மாதமும் ஒரு உலக மொழியில் உள்ள பயனுள்ள தகவல்கள் மற்றும் காவியம், கதை, கட்டுரை, கவிதை போன்ற சிறப்புக்களை தமிழில் மொழிபெயர்த்துத் தரப்போகின்ற தொடர் பதிவு இது. இதன் மூலம் உங்களுக்குக் உலக மொழிகள் பற்றிய விழிப்புணர்வும், அம்மொழியைப் பேசுபவர்களின் வாழ்வியல் கலாச்சாரம், கலைகள், மருத்துவம், அறிவியல்கண்டுபிடிப்பு, மற்றும் இலக்கியங்கள் போன்றவற்றை தெரிந்துகொண்டு..... "சென்றிடுவோம் எட்டுத்திக்கும், கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்"... என்கிற பாரதியாரின் கூற்றுக்கிணங்க, உலகளாவிய பிற மொழியில் இருக்கும் பல படைப்புகளை பற்றி தெரிந்துகொண்டு அவற்றை நமது தாய் மொழியில் பலரும் தெரிந்துகொள்ளும்வண்ணம் அனைவருக்கும் கொண்டுசேர்ப்பது ஒரு சிறப்பான பனி என்பதால் நமது வைஷாலி வாசகர் வட்டத்தின் ஒவ்வொரு மாத சந்திப்பின்போது நமது தாய்மொழியல்லாது வேற்று உலக மொழி ஒன்றில் எழுதப்பட்ட நமக்கு மிகவும் உபயோகமான விவரங்களை தமிழ்மொழியில் அனைவருக்கும் பகிர்ந்துகொள்வதற்காகவும், அந்த மொழியின் சிறப்புகளில் விருப்பம்கொண்டு அந்த உலக மொழிகளைக் கற்றுத் தெரிந்துகொண்டால், அது ஒரு விதத்தில் மேலும் நமது அனுபவத்தோடு, நமது செயல்திறனையும் அதிகரிக்கும் என்பதால், இந்தமாதம் "ஸ்பானிஷ்" மொழியை முதலாவதாக உங்கள் முன் கொண்டுவர முடிவெடுத்துள்ளேன். நான் ரேடியோ மார்கோனி நிறுவனத்தில் பணியாற்றியபோது இத்தாலியர்களோடு பழக்கவேண்டிய சூழலில் அவர்களில் பலர் பேசிய ""ஸ்பானிஷ் மற்றும் லத்தீன் / ரோமானிய இத்தாலினோ" மொழியை தெரிந்துகொள்ள முயற்சித்தது எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. ஸ்பானிஷ் மொழி மொத் தம் 20 நாடுகளில் ஆட்சி மொழியாக உள்ளது. ஸ்பானிஷ் மொழியை 32 கோடி மக்கள் தாய்மொழியாகப் பேசுகிறார்கள். பாலே (Ballet) என்பது இத்தாலியப் புரட்சியின் போது உருவான நடனம் ஆகும்., சல்சா (salsa) போன்ற உலகப்புகழ்பெற்ற நடனங்கள் ஸ்பானிஷ் மொழி கலைகளே! இத்தகைய பெருமை வாய்ந்த மொழியைப்பற்றித்தான் நாம் தெரிந்துகொண்டு பயன்பெறப்போகிறோம். வாருங்கள் இந்தமாதம் நாம் "ஸ்பானிஷ்" மொழியின் சிறப்பானபயனை நமது தாய்மொழியில் பெற்று பயன்பெறலாம், வருகைத்தாருங்கள் வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பு ஒவ்வொரு ஆங்கிலமாதமும் 3வது ஞாயிறு அன்று. கிழக்குதில்லி-எல்லைப்பகுதியில் அமைந்த வைஷாலி மெட்ரோ ரயில்நிலையத்தின் அருகில் அமைந்த செக்டர்-4 மையப்பூக்கவில் மாலை 3மணியளவில் தொடங்கும் வாசகர்வட்ட சந்திப்பிற்கு தவறாமல் வருகைத்தாருங்கள். அனுமதி இலவசம், அனைவரும் மறக்காமல் நிகழ்ச்சியில் பங்குகொண்டு பயன்பெறுங்கள்.
வணக்கம் நண்பர்களே! இந்தமாத வாசகர்வட்ட சந்திப்பில் நமது தாய்மொழி தமிழ் அல்லாது வேற்று உலக மொழிகள் பற்றிய சிந்தனையை உங்களின் மனதில் விதைக்கலாம் என்கிற எண்ணத்தில் உருவான இந்த சிறு சேவை, ஒவ்வொரு மாதமும் ஒரு உலக மொழியில் உள்ள பயனுள்ள தகவல்கள் மற்றும் காவியம், கதை, கட்டுரை, கவிதை போன்ற சிறப்புக்களை தமிழில் மொழிபெயர்த்துத் தரப்போகின்ற தொடர் பதிவு இது. இதன் மூலம் உங்களுக்குக் உலக மொழிகள் பற்றிய விழிப்புணர்வும், அம்மொழியைப் பேசுபவர்களின் வாழ்வியல் கலாச்சாரம், கலைகள், மருத்துவம், அறிவியல்கண்டுபிடிப்பு, மற்றும் இலக்கியங்கள் போன்றவற்றை தெரிந்துகொண்டு..... "சென்றிடுவோம் எட்டுத்திக்கும், கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்"... என்கிற பாரதியாரின் கூற்றுக்கிணங்க, உலகளாவிய பிற மொழியில் இருக்கும் பல படைப்புகளை பற்றி தெரிந்துகொண்டு அவற்றை நமது தாய் மொழியில் பலரும் தெரிந்துகொள்ளும்வண்ணம் அனைவருக்கும் கொண்டுசேர்ப்பது ஒரு சிறப்பான பனி என்பதால் நமது வைஷாலி வாசகர் வட்டத்தின் ஒவ்வொரு மாத சந்திப்பின்போது நமது தாய்மொழியல்லாது வேற்று உலக மொழி ஒன்றில் எழுதப்பட்ட நமக்கு மிகவும் உபயோகமான விவரங்களை தமிழ்மொழியில் அனைவருக்கும் பகிர்ந்துகொள்வதற்காகவும், அந்த மொழியின் சிறப்புகளில் விருப்பம்கொண்டு அந்த உலக மொழிகளைக் கற்றுத் தெரிந்துகொண்டால், அது ஒரு விதத்தில் மேலும் நமது அனுபவத்தோடு, நமது செயல்திறனையும் அதிகரிக்கும் என்பதால், இந்தமாதம் "ஸ்பானிஷ்" மொழியை முதலாவதாக உங்கள் முன் கொண்டுவர முடிவெடுத்துள்ளேன். நான் ரேடியோ மார்கோனி நிறுவனத்தில் பணியாற்றியபோது இத்தாலியர்களோடு பழக்கவேண்டிய சூழலில் அவர்களில் பலர் பேசிய ""ஸ்பானிஷ் மற்றும் லத்தீன் / ரோமானிய இத்தாலினோ" மொழியை தெரிந்துகொள்ள முயற்சித்தது எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. ஸ்பானிஷ் மொழி மொத்
==============================================
6. சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்"..... "மாசி-மாத-படத்தில் உள்ள (6) ஆறு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்- பிப்ரவரி-2017 மாசி-மாதம் அன்பு/ நட்பு/ குடும்ப பாச மாதக் கொண்டாட்டங்களும். நிகழ்ச்சிகளும்-வலைப்பதிவு இதழ் போட்டி என்-11.
=======================================
1) காகித தோரணம் 2) வானத்தில் பறவைகள் பறப்பது 3) மாட்டின் நெற்றியில் குங்குமப்பொட்டு 4) விவசாயியின் சட்டை 5) பொங்கல் பானை கைக்கரண்டி 6) வழக்கமான ஓவியம் வரைந்தவரை கௌரவிக்கும் வகையில் அவரது பெயர் கையொப்பத்தில் வட்டம் அல்லது பெயரின் கீழ் கோடிட்டு காட்டுதல்.
சென்ற மாத ஆறு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடையை 34 நபர்கள் மட்டுமே குறிப்பிட்டிருந்தனர், தமிழில் விடை எழுதியவர்கள்=12, ஆங்கிலத்தமிழில் எழுதியவர்கள்=10, ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=12, ஹிந்தி மொழியில்=0 நபர்களும், தெலுங்கு மொழியில்=0 நபரும், மேலும் சிலர் ஆறுக்கும் அதிகமான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.
==============================================
7. அறுவை ஆயிரம், பொன் மொழிகள், பழ மொழிகள், உலக மொழிகள், விடுகதைகள், பஞ்ச். :-தொகுத்து வழங்கியவர்... எ.கே. சபரீஷ்....
$ அவசரத்துக்கு ஒரு கொத்தனார தேடுனா ஊர்ல ஒரு பய இல்ல,
தெருவுக்கு நாலு "சிவில்" இஞ்சினியர் மட்டும் இருக்கானுங்க !!."
தொகுத்து வழங்கியவர் எ.கே. சபரீஷ்....
==============================================
8.பயனுள்ள தமிழ் வலைப்பதிவர் பக்கங்களில் இந்தமாதம் :-
1. மதிப்பிற்குரிய திரு பொள்ளாச்சி நசன் - (தமிழம்.வலை-தமிழம். பண்பலை) அவர்களின் "திருக்குறள் படித்தல் - (எளியமுறையில் ஒரே நாளில் 300 திருக்குறளை அறிதல்)" http://win.tamilnool.net/ tkl300/index.html என்கிற இனைய வலைப்பக்கத்தை, புது தில்லியின் வைசாலி (தமிழ்) வாசகர் வட்ட உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்வதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.
அவருக்கு நமது நன்றிகளை தெரிவித்துக்கொண்டு, நமது (NCR-புது தில்லி) வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ்களுக்கு பயனுள்ள வலைப்பதிவு பக்கமாக மேற்கண்ட அவரது வலைப்பதிவுகளை முன்மொழிவதில் மகிழிச்சியடைகிறோம்.
1. மதிப்பிற்குரிய திரு பொள்ளாச்சி நசன் - (தமிழம்.வலை-தமிழம். பண்பலை) அவர்களின் "திருக்குறள் படித்தல் - (எளியமுறையில் ஒரே நாளில் 300 திருக்குறளை அறிதல்)" http://win.tamilnool.net/
அவருக்கு நமது நன்றிகளை தெரிவித்துக்கொண்டு, நமது (NCR-புது தில்லி) வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ்களுக்கு பயனுள்ள வலைப்பதிவு பக்கமாக மேற்கண்ட அவரது வலைப்பதிவுகளை முன்மொழிவதில் மகிழிச்சியடைகிறோம்.
==============================================
9. கருத்து சொல்லப்போறேன்:- (A.K.சபரிஷ்)
$"தெருவில் குப்பை போடுகிறவனை மரியாதையாகவும் அதை பொறுக்கி சுத்தம் செய்பவனை கேவலமாக பார்க்கும் சமுதாயம் உள்ளவரை நம் நாடு சுத்தம் ஆகாது!!!."
==============================================
10. விடுகதைகள் :- (A.K.சபரிஷ்)
# முன்னும் பின்னும் போவான், ஒற்றைக்காலிலே நிற்பான் – யார் அவன்?– [விடுகதைக்கான விடை:- கதவு]
# அடித்தாலும், உதைத்தாலும் அவன் அழ மாட்டான் – அவன் யார்?[விடுகதைக்கான விடை:- பந்து ]
==============================================
மசித்து பிசைந்த "மம்மு" சாதம்
எடுத்து ஊட்ட ஒரு தேக்கரண்டி போதும்
கட்டில் அருகே வந்து,
கண்டிப்பும் கட்டளையும் ஊட்டிவிட,
கண்களில் கண்ணீர் வரக்கண்டு...
காரம்தான் உரைத்ததோ என்று
ஒரு குவளை தண்ணீர் பருகத்தந்து
"சொன்ன பேச்சை கேட்கவேண்டும்
சமுத்தாக சாப்பிடவேண்டும்...என்ன? "
என அதிகார பரிமாறல்களோடு
பழுத்த பழத்திற்கு ஊட்டிவிடும் பிஞ்சுக் கைகள்
பாட்டியும் பேத்தியும்....... (கோகி)
====================================================
11. கவிதை:-
என்கிற மிதிவண்டி
ஓடிக்கொண்டிருக்கும் வரை
திடமாக இருக்கும்...
ஓய்ந்து நின்றுவிட்டால்
தள்ளாடும்....( AK.சபரி)
====================================================
11. கவிதை:-
அதிர்ஷ்டம்
அதிர்ஷ்டத்திர்க்காக
நான் ஒத்தைக் காலில்
நின்றாலும்...
அதிர்ஷ்டம் அடிக்கவில்லை...
குடித்துவிட்டு அப்பாதான் அடித்தார். (கோகி)
================================
11. கவிதை:-
11. கவிதை:-
வெப்ப நகரம்
கண்ணாடி மாளிகையின்
கண்ணீரால்
குளிர்ந்தது.....
எதோ ஒரு சில
மரங்களின்
புண்ணியத்தால்... ( AK.பவித்ரா)
=================================
12. நமது வாசகர் வட்டத்தின் இந்த மாத சரித்திரம் முக்கியம் பகுதியில்,
நமது பண்டயத் தமிழர்களின் வரலாறு நமக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும்................
"தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா" ! "தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு "
பதாகைக்கு வரலாறு தேடவேண்டிய நிலைமை பிறர்க்கு,
வரலாற்றுக்கு புத்தகமே போடும் நிலைமை தமிழர்களுக்கு......!
#கல்லணை :-
உலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும், நொடிக்கு இரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரைபுரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை , இன்றைய ஆங்கில அறிவியலாளர்களால் கண்டறிய இயலவில்லை. கரிகாலன் என்ன ஆங்கில அறிவை பெற்றா கல்லணையை கட்டினான் ?
#மாமல்லபுரம் :-
கடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 1400 ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன் பின் உள்நோக்கி குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள். மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி. கோபுரத்தை தாங்கும் வகையில் முதலில் தூண்கள் செதுக்கப்பட்டன. மாமல்லபுரத்தை உலக வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. நரசிம்ம பல்லவன் என்ன ஆங்கிலம் பயின்றனா ?
#அங்கோர்வாட்_கோயில் :-
உலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் இக்கோயிலை கட்டியுள்ளான். இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது. திரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள். இந்த கோயிலின் நான்கு பக்க சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை. 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட 300 ஆண்டுகள் ஆகும். இக்கோயிலின் முழு உருவத்தை காண வானத்தில் 1000 அடிக்கு மேல் சென்று அங்கிருந்து பார்த்தால் மட்டுமே இதை முழுமையாக காண முடியும். இதை முழுமையாக ஒளிப்படம் எடுக்க முடியும் .இதன் முழு கட்டிடமும் அப்போது தான் பதிவாகும்.
#திருநள்ளாறு_காரி_ஈசன்_கோயில் :-
எந்த ஒரு செயற்கைகோளும் தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி திருநள்ளாறு கரி ஈசன் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் போது 3வினாடிகள் செயலிழந்து விடுகிறது. அதே நேரத்தில் செயற்கை கோள்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதை பற்றி நாசா அறிவியலாளர்கள் ஆராய்ந்தனர். முடிவு வியப்பை தந்தது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்து கொண்டே இருக்கிறது. இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் போது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது செயலிழந்துவிடுகிறது. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.
இன்றைய ஆங்கில அறிவியல் தொழில் நுட்ப செயற்கை கோள்களால் கண்டறியயப்படும் காரியின் கதிர்வீச்சை , கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டுபிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் மிகுதியாக விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனி பெயர்ச்சி என்று அறிவிக்கும் தமிழர்களின் அறிவியல் திறமையை,என்ன வென்று சொல்வது. தமிழ் வழி கல்வி பயின்ற தமிழர்கள் செய்த செயலை ஆங்கில அறிவியல் தொழில் நுட்பத்தால் இன்றளவும் செய்யவும் முடியவில்லை கண்டறியவும் இயலவில்லை.
#கடல்_நடுவே_ராமேசுவரம் :-
கடலுக்கு நடுவே உள்ள ராமேசுவரம் தீவில் மலைகளோ பாறைகளோ கிடையாது. ராமேசுவரம் கோயில் 1500 ஆண்டு பழமையானது . 1212 மிகப் பெரிய தூண்கள், 590 அடி நீளம் 435 அடி அகலம் கொண்ட உலகின் மிகப் பெரிய நடை மண்டபம், மற்றும் கற்கோயிலை எவ்வாறு உருவாகியிருக்க முடியும். பெரும் பாறைகளை பாம்பனிலிருந்து கடற் கடந்து எவ்வாறு ராமேசுவரம் கொண்டு சென்றிருக்க முடியும் என்பதை ஆங்கிலம் பயின்ற அறிவாளிகள் கண்டறிந்து சொல்லட்டும்.
#தஞ்சாவூர்_பெருவுடையார்_கற்கோயில்:-
கற்களே கிடைக்காத காவேரி சமவெளி பகுதியில் 66 மீட்டர் உயரம், 15 தளங்கள் கொண்ட தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயிலை இராஜ இராஜ சோழன் எவ்வாறு கட்டினான் என்பது புரியாத புதிர். கோயிலின் கடை கால் வெறும் 5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புவி ஈர்ப்பு மையத்தை கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது. சுமார் 80 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒற்றை கல்லை எவ்வாறு கோயிலின் உச்சியில் நிறுவியிருக்க முடியும். பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகளை ஆயிரம் ஆண்டுக்கும் முன்பே தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே ஒற்றை கல்லை உச்சியில் நிறுவி சிற்பிகள் கோயிலை உருவாகிள்ளனர். கோயில் முழுவதும் ஒரே தன்மையான செந்நிறக் கற்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதை இந்திய வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. ஆங்கில வழியில் பயின்றவர்களாலும், அவர்களது அறிவியல் தொழில் நுட்பத்தாலும் இன்றளவும் கண்டறிய இயலவில்லை. இராஜ இராஜ சோழன் என்ன ஆங்கிலம் கற்றவனா?
#தொல்காப்பியமும் #திருக்குறளும் :-
5000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொல்காப்பியமே, உலகில் உள்ள மொழிகளின் இலக்கண நூல்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது. தமிழ் நாட்டின் எல்லைகளை வரையறைத்து கூறியுள்ளது. ஓருயிர் முதல் ஆறறிவு உயிர் வரை பகுத்து கூறியுள்ளது. பன்னெடுங்காலத்திற்கு முன் இயற்றப்பட்ட இலக்கண நூல் அகத்தியம் என்று குறிப்பிடுவதன் மூலமாக தமிழில் தொன்மைக்கு சான்றாக இருக்கிறது.
2000 ஆண்டுக்கு முன் இயற்றப்பட்ட உலக பொது மறையான திருக்குறள் உலகின் 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர். தமிழ் மொழியின் சிறப்பை அறிந்த ஆங்கில மொழி அறிவு பெற்றவர்கள் தமிழ் மொழியை போற்றி கை கூப்பி வணங்குகின்றனர். இது போன்ற சொற்செழுமை வாய்ந்த நூல்களை ஆங்கிலத்தில் இயற்ற முடியமா ?எல்லா உறவு முறைகளுக்கும் ஆண்டி அங்கிள் என்றும் விளிக்கும் ஆங்கிலத்தில் இது சாத்தியமா? தமிழர்கள் சிந்திக்க வேண்டும் ?
#அணு :-
அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை ...அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே"
-ஆசான் திருமூலர்
சித்தர்களின் அறிவியலின்படி எண்ணிலாடங்கா கோடி அண்டங்கள், பேரண்டங்கள், தோன்றுவதற்கு மூல காரணமாக விளங்கி எல்லாப் படைப்புக்கும் அடிப்படையாக இருப்பது ஒரு அணு ஆற்றல். ஒரணுவை ஆயிரங்கூறாக்கினால் கிடைக்கும் அளவற்ற ஆற்றலையே சித்தர்களும் ஞானிகளும் பரமாணு என்று சொல்கிறார்கள். பரமாணு என்பது பிரிக்க முடியாத அணு என்பது பொருள். அந்தப் பரமணுவே பரந்து விரிந்து கிடக்கின்ற அண்ட பேரண்டங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை பல்லாயிரம் ஆண்டுகளு க்கு முன்பே கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அணுவை சுற்றி மின் காந்தம் அமைத்திருப்பதை கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அவ்வை பாட்டியும் அணுவைத் துளைத்து................... என்று பாடி உள்ளார்.
#சித்தர்கள் :-
சித்தர்கள் என்பவர்கள் மருத்துவர்கள், அறிவியலாளர்கள் ,மக்களை நல்வழிப்படுத்தும் சான்றோர்கள். நூறு ஆண்டுகள் கடந்து வாழும் சூத்திரத்தை கண்டறிந்தவர்கள். அவர்கள் கண்டறிந்த சித்த மருத்துவ முறையை நாம் மதிக்கக் தவறி விட்டோம். தீராத நோய்களுக்கெல்லாம் சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டு. கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த மருந்து சித்த மருத்துவ முறையே என தமிழக அரசு அறிவித்த பொழுதே தமிழர்கள் அதன் பயனை சிறப்பை முழுமையாக உணர்ந்தனர். இத்தகைய சித்த மருத்துவ முறையை சித்தர்கள் ஓலை சுவடிகளில் தங்களது தாய் மொழியான தமிழிலேயே எழுதி வைத்துள்ளனர்.
#வானியல்_அறிஞர்கள் :-
பூமி உருண்டை என்றும், சூரியனை சுற்றியே ஒன்பது கோள்கள் வலம் வருகின்றன என்றும், அதைத் தொடர்ந்து நிகழும் கும்மிருட்டு, முழுநிலவு மற்றும் பருவ மாற்றங்கள் என அனைத்தையும் அன்றே கணித்த வானியல் வல்லுனர்கள் தமிழர்களே! சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே ஒன்பது கிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளின் நிறம் கோள்களின் நிறத்தை அடிப்படையாக கொண்டே இருக்கும். தமிழர்கள் என்றோ கண்டுபிடித்ததை ஆங்கில அறிவு பெற்றவர்கள் இன்று கண்டறிந்து கூறுவதை நாம் உயர்வாக மதிக்கிறோம்.
#பூம்புகார் .......உலகின் தொன்மையான நகரம் :-
9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடற்கோளில் மூழ்கிய நகரம் பூம்புகார் ஆகும். கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கோளில் மூழ்கின. பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். பூம்புகார் நகர் கடலில் மூழ்கியுள்ளதை ஆங்கிலேயே அறிஞர் கிரகாம் குக் என்பவர் காணொளி, ஒளிபடச் சான்றுகளுடன் உலக நாடுகளுக்கு நிரூபித்தார். அதில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன.
#உலகை_கட்டி_ஆண்ட_தமிழன்:-
கடற் வழியே படை எடுத்து சென்று உலகை கட்டி ஆண்ட அருள்மொழித்தேவன் அறிமுகப்படுதியதே உலகம் முழுவதும் சனநாயகம் என்று போற்றி புகழும், மக்கள் வாக்களித்து தலைவனை தேர்ந்தெடுக்கும் குட வோலை முறையை அறிமுகப்படுத்தியவன் பேரரசன் அருள் மொழித் தேவனே.. வெற்றி பெற்ற நாடுகளில் எல்லாம் அம்மக்களை அடிமைபடுத்தாது சிறப்பான ஆட்சி புரிந்து, அம்மக்களை விடுதலையோடு வாழ வைத்தவன் தமிழனே.
அத்தகைய உயரிய பண்பாடு ஒழுக்க நெறிகளோடு வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பது நிரூபனமாகிறது. இவ்வளவும் நமது பாட்டன் முப்பாட்டனின் பெருமைகள் நாம் இவற்றை பாதுகாப்பு அழியாமல் காப்பாற்றினாலே போதும் இவையணைத்தும் நான் படித்து ரசித்தவையே உங்களது மேலான பார்வைக்கும் பதிந்திருக்கிறேன் நிறைய பகிருங்கள் பண்டயத் தமிழர்களின் வரலாற்றை நமக்கு அடுத்துவரும் தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் நமது முன்னோர்கள் எவ்வளவு சிறப்பான வாழ்க்கையினை வாழ்ந்துள்ளார்கள் என்பதை அறிய இது உதவும் நன்றி வணக்கம்.
===============================================
13.விளம்பரதாரர் நிகழ்ச்சி பகுதியில்:-
இந்தமாத சிறந்த முகநூல் பக்கங்களாக:-
1. தமிழ் கடல். https://www.facebook.com/groups/264740130252643/ என்ற முகவரியில் சொடுக்கி (click செய்து) தமிழ் கடல் குழுமத்தின் உள்ளே நுழைந்து, குழுமத்தில் இணைந்து பயன்பெறுங்கள்.
2. முகநூலில் சிறுகதைகள் என்னும் முகநூல் பக்கத்தையும்
http://www.facebook.com/siru.kathaigal நமது வாசகர் வட்ட குழுவினர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
==================================================
15. வாசகர் வட்ட நிகழ்ச்சியின் சிறப்பு புகைப்படங்கள் :-
பகுதி II -கால்வண்ணம் :- (நடனம், நாடகம், விளையாட்டு போட்டிகள்) :-
இப்படிக்கு
வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ் தமிழ் ரோஜாக்கள்.
நன்றி... மீண்டும் அடுத்தமாத இதழில் சந்திப்போம்... வணக்கம்.
No comments:
Post a Comment