வணக்கம் ...தங்களின் வருகைக்கு நன்றி,... வலைப்பதிவு இதழில் உலவுவதற்காக வருகைதந்த தங்களை அன்புடன் அழைத்துச் செல்கிறோம் வாருங்கள்....
இந்த வலைப்பதிவு இதழின் நோக்கம்:- [NCR-புது தில்லி-வைஷாலி வாசகர் வட்டம்:-] அனைவருக்கும் கணினியில், தமிழில் வலைப்பதிவுகளை பதிவுசெய்யும் பயிற்சியும், ஒரு புத்தகம், அல்லது ஒரு இதழ், அல்லது ஒரு செய்தித்தாள் போன்றவற்றிக்கு எப்படியெல்லாம் செய்திகளை சேகரித்துத் தருவது என்பதைப்பற்றியும், ஒரு இதழை அல்லது செய்தி பத்திரிக்கைகளை எப்படியெல்லாம் வடிவமைத்து அழகுபடுத்தி வெளியிடுவது என்கிற எளிய பயிற்சியும், எப்படி நம்முடைய அல்லது பத்திரிக்கையின் கருத்தை, தலைப்பு செய்திகளாக வெளிபடுத்தும் விதம்... மற்றும் வாசகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் எப்படியெல்லாம் நமது பதிப்புகள் இருக்க வேண்டும். போன்ற பல்வேறு பயிற்சிகளை அனைவரும் எளிதில் பெறுவதற்காக, புது தில்லி மற்றும் அதன் எல்லையோரம் இருக்கும் மாநிலங்களில் வசிக்கும் தமிழ் இளைய தலைமுறையினரான சுட்டீஸ் சிறுவர்களை ஒன்றிணைத்து அவர்களோடு அவர்களது பெற்றோர்களையும் முன்னிறுத்தி செய்யும் ஒரு, எளிய பயிற்சி வலைப்பதிவு "சுட்டீஸ்-குல்கந்து" இதழ் இது.
இந்த இதழில் நிறைய நிறை, குறைகள் இருந்தாலும் பத்திரிக்கைத்துறையின் அருமை பெருமைகளை இளம் மனதினில் விதைப்பதே எங்கள் நோக்கம்.... இப்படிக்கு வைஷாலி வாசகர் வட்டம்.
"ஆற்றில் கொட்டினாலும் அளந்துதான் கொட்டவேண்டும்" என்கிற பழமொழிக்கேற்ப இந்த ஆண்டின் இறுதி மாதமான பங்குனி மாதம்:-கணக்கு வழக்கு மாதக் கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும். வருகை தாருங்கள் NCR-New Delhi வைஷாலி வாசகர் வட்டத்தின் 37வது வாசகர் வட்ட சந்திப்பு 19-03-2017 தேதி, 3-வது ஞயிறு அன்றய பங்குனி மாத கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும்.....
கற்க கசடற….!! !! வாய்மையே வெல்லும்!!
“வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம்”
160/Sector-4, Vaishali, Ghaziabad, NCR-New Delhi.-201012
e-mail: vaishalireaderscircle@gmail.com
___________________________________________________________________
சுட்டீஸ் இதழ்=12 பங்குனி மாதம்-தேதி 19-03-2017. வணக்கம், தாங்களின் வருகைக்கு நன்றி, இந்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழில்" - மாசி மாத வலைப்பதிவு:- இந்த இதழின் ஆசிரியராக, தொகுத்து வழங்குபவர்:- (Editor of the Page) செல்வி ஜி. ப்ரீதி கெளரி சங்கரன் -வைஷாலி -NCR-புது தில்லி.
வைஷாலி வாசகர்வட்ட 37வது சந்திப்பு, பங்குனி மாதம்:-கணக்கு வழக்கு மாதக் கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும். (மொத்தம் 30வகை கணக்கு விளையாட்டை விளையாடலாம் வாங்க.. என்று அழைக்கிறார்கள். வைஷாலி வாசகர்வட்ட 37வது சந்திப்பு, பங்குனி மாதம்:-கணக்கு வழக்கு மாதக் கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும்)
அடுத்து வரும் ஏப்ரல்-2017, 16-04-2017 சித்திரை-மாத வலைப்பதிவு இதழின் ஆசிரியராக, (Editor of the page) இந்த வலைப்பக்கத்தை தொகுத்து வழங்க ஆவலுடன் காத்திருப்பவர் யார்? விருப்பம் உள்ளவர் உங்கள் விருப்பத்தை உடனே தெரியப்படுத்துங்கள். மின் அஞ்சல் "vaishalireaderscircle@gmail.com"
வைஷாலி வாசகர் வட்டத்தின் 37வது வாசகர் வட்ட சந்திப்பு 19-03-2017 தேதி, 3-வது ஞயிறு அன்றய பங்குனி மாத கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும்....
வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :-
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து,
தொடர்ந்து எங்க வீட்டு "நூலகம் "
படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும்
(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம்)
"இந்த மாத தலைப்பைச் சார்ந்த" கணக்கு வழக்கு மாதக் கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும், போட்டிகளும் பரிசுகளும்.. தொடர்ந்து அன்றய நிகழ்ச்சியில் உதவிய அனைவரையும் பாராட்டி, நிகழ்ச்சி இனிதாக நிறைவுபெற்றது.
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்தவை. இந்த சிறப்புகளெல்லாம் அந்த மாதங்களில் அமையும் சிறப்புவாய்ந்த நாட்களை நினைவுகூறுமாறு, வழிபாடுகளையும், திருவிழாக்களையும் கொண்டே அமைகின்றன. அவ்வகையில் பங்குனி மாதத்தின் சிறப்பு சிலவற்றை பற்றி தெரிந்துகொள்ளலாம். அதோடு கணித விளையாட்டு, கணித பாட்டு, கணிதக் கதைகள் மற்றும் கட்டுரைகள், கணக்கு வழக்குகள் சார்ந்த போட்டிகளும் பரிசுகளும் என இந்தமாத இதழில் பல விவரங்களை தெரிந்துகொள்ளலாம்
மேலும் இந்த மாத சுட்டீஸ்களின் ஏராளமான செய்திகளை மிகவும் பயனுள்ள வகையில் நமது வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ் "குல்கந்து" குழுவினர்கள் தொகுத்து தந்திருக்கிறார்கள்....
I. முதலில் குட்டி கல்கண்டு தகவல்கள்:-
கணக்கு வழக்கு மாதக் கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும், போட்டிகளும் பரிசுகளும்..
காந்தி கணக்கு என்றாலேதிரும்ப வராத பணம்; வராக் கடன். கிட்டதட்ட 'நாமம்' என்கிற அர்த்தத்தைதான் நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம். ஆனால், காந்தி கணக்கு என்றால் என்ன என்பதற்கான உண்மையான அர்த்தம் என்னவென்று பலருக்கும் தெரியாது. அதை இப்போது தெரிந்துகொள்வோம்.
மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்டிருந்தபோது, அவருக்கு வியாபாரிகள் அத்தனை பேரும் தார்மீக ஆதரவு அளித்தார்கள். அவர்கள் காந்தியிடம் “நேரடியாக எங்களால் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள முடியாது. ஆனால், எப்படியாவது உங்கள் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். இதில் கலந்துகொள்ள வரும் தொண்டர்களை எங்கள் கடைகளில் எது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள சொல்லுங்கள். பணம் தர வேண்டாம். அடையாளம் தெரியாமல் பணம் கேட்க நேரும்போது, 'காந்தி கணக்கு' என்று எங்களுக்கு புரியும்படி சொன்னால் போதும். நாங்கள் அவர்களிடம் பணம் கேட்க மாட்டோம்” என்றார்களாம் அந்த வியாபாரிகள்.
அப்படி வந்ததுதான் காந்தி கணக்கு. ஆனால், நாம் இதற்கு அர்த்தம் வைத்திருப்பதோ புரியாத கணக்கு. ஒவ்வொரு சொல்லிலும் அதன் உள் அர்த்தத்தை புரிந்து செயல்பட்டால் அறிவு விசாலமாகும்.
நன்றி தமிழ் அகராதி.
============================================
2) வாழ்க்கைக்கு கணக்கு புதிர்:- (தகவலைத் தந்தவர் பி.அபிஷேக் பாலகிருஷ்ணன், புது தில்லி)
வாழ்க்கை என்பது :-------
(1,2,3 = 3 is the high value number) ஒன்று இரண்டு மூன்று என்று கூறினால் மூன்று என்ற எண்ணுக்கே அதிக மதிப்புடையாதாக போற்றப்படுகிறது.
(1st 2nd 3rd = 1st is the high value number) முதலாவது, இரண்டாவது, மூன்றாவது என்று கூறும்போது, முதலாவது என்ற ஒன்று என்கிற எண்ணுக்கே சிறந்த மதிப்புக்கொண்டதாக போற்றப்படுகிறது.
வாழ்க்கையும் அப்படித்தான் உங்கள் மனம் அதை எப்படி எடுத்துக்கொள்கிறது என்பதை பொறுத்து அமையும்.
===========================================
3. பேசும் மொழிக் கணக்கு புதிர் :- (தகவலை பெற்றுத்தந்தவர் செல்வி A.K. பவித்ரா. வைஷாலி -NCR-புது தில்லி)
ஒரு எலி தன் குடும்பத்தோடு போய்க் கொண்டிருந்தது.. அப்போது திடீரென ஒரு பூனை வழி மறித்தது.
தாய் எலியும், குட்டி எலிகளும் பயத்தில் உறைந்து நிற்க, தந்தை எலி தைரியமாக முன்னே பாய்ந்து, லொள்... லொள்.. என்று சத்தமிட்டது.
அதிர்ச்சி அடைந்த பூனை ஓடிவிட்டது.
குட்டி எலி அப்பாவிடம் இது என்னா கூத்து..? என்று கேட்க
அப்பா எலி சொன்னது..:- "அதுக்குதான் பெரியவங்க சொல்லுவாங்க.. ரெண்டு பாஷை தெரிஞ்சு வச்சுக்கறது நல்லதுன்னு..!"
=========================================
4. கருத்துக்கணக்கு புதிர் :- (தகவலை பெற்று பதிவு செய்தவர் செல்வி ஜி. ப்ரீதி கெளரி சங்கரன் வைஷாலி -NCR-புது தில்லி)
கடை தெரு ஒன்றில் கண் தெரியாத பிச்சைக்காரர் ஒருவர் பிச்சை எடுத்து கொண்டிருந்தார்.
அவர் அருகில் ஒரு பலகையில்,
"எனக்கு கண் தெரியாது, உதவி செய்யுங்கள் " என்று எழுதி வைத்திருந்தார். இதை பார்த்து அவ்வழியில் செல்வோர் அவருக்கு உதவி செய்தனர்.
அவ்வழியில் சென்ற ஒரு நபர் அந்த பலகையில் இருந்த வாசகத்தை அழித்து விட்டு , வேறொரு வாக்கியத்தை அதில் எழுதி விட்டு சென்று விட்டார்.
அடுத்த நாள் பிச்சைக்காரருக்கு ஏராளமானோர் உதவி செய்தனர்.
பிச்சைக்காரருக்கு மிக்க மகிழ்ச்சி. எனவே அதில் என்ன வாக்கியம் இருக்கிறது என தெரிந்து கொள்ள அவ்வழி சென்ற ஒருவரிடம் ,
"இந்த பலகையில் இருக்கும் வாக்கியத்தை எனக்கு வாசித்து காட்ட முடியுமா?" என கேட்டார்.
அந்த நபர் வாசித்தார்,
"இந்த நாள் மிகவும் அழகான நாள், ஆனால் என்னால் பார்க்க முடிய வில்லை!!!"
**நம்முடைய கருத்தை வெளிபடுத்தும் விதம் பிறரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்க வேண்டும்.**
=======================================
5.காப்பீட்டுக் கணக்கு புதிர் :- (தகவலை அனுப்பி பகிர்ந்துகொண்டவர் செல்வி ஆர் . கீர்த்தனா ராஜேந்திரன் புது தில்லி.)
பேரக்குழந்தைகளான நீங்கள்தான் உங்களுடைய பாட்டியின் செல்லக்குட்டி.... பாட்டிக்கு உங்களையும், உங்களுக்கு பாட்டியையும் ரொம்ப பிடிக்கும். பாட்டிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் அருகிலிருந்த மருத்துவமனையில் ரூபாய் 5000 முன்பணம் செலுத்தி அவசர செகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டார்.
உங்களது தந்தை, பாட்டியின் பெயரில் வயது முதிர்ந்தோர் சிறப்பு மருத்துவ காப்பீடு செய்திருந்தார். ஆகவே ஓரிருநாளில் உங்கள் பாட்டிக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை சிறப்பாக முடிந்து, அன்று பாட்டியை வீட்டிற்கு அழைத்துவர நீங்கள் மருத்துவமனைக்கு செல்கிறீர்கள். பாட்டியின் மருத்துவ காப்பீட்டின்படி 90%சதவீதம் காப்பீட்டு நிறுவனமும் 10%உங்களின் தந்தையிடமும் வசூலிக்கப்படும். மருத்துவமனை கணக்கு அதிகாரி மீதம் ரூபாய் 7000/- செலுத்தவேண்டும் என்கிறார்கள். அப்படியானால் பாட்டியின் மொத்த மருத்துவ செலவு எவ்வளவு?
சரியான விடையைக்கூறி பரிசுகளை வெல்லுங்கள்!!!!!
======================================
6. ஆறு வித்தியாச கணக்கு புதிர் :- சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்"..... "பங்குனி-மாத-படத்தில் உள்ள (6) ஆறு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் -வலைப்பதிவு இதழ் போட்டி என்-12.
சரியான விடை அடுத்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" http://gulkanthu.blogspot.in/வலைப்பதிவர் இதழில் வெளியாகும். போட்டியில் பங்குகொள்ள விருப்பமுடையவர்கள் விடைகளை "vaishalireaderscircle@gmail.com" என்கிற மினஞ்சல் முகவரிக்கு 10-04-2017 முன்பாக அனுப்பிவைக்கவேண்டும். சரியான விடை எழுதிய அனைவருக்கும் அடுத்தமாத வாசகர் வட்ட சந்திப்பில் பரிசுகள் வழங்கப்படும்.
1) காகித தோரணம் 2) கோபுர உச்சியில் உட்கார்ந்திருக்கும் காகம் 3) மணப்பெண்ணின் ஜொலிக்கும் வைர மூக்குத்தி 4) மாப்பிள்ளை நெத்தியில் சந்தனப்பொட்டு 5) அருகிலிருக்கும் மாப்பிள்ளைத் தோழனின் மூக்கு கண்ணாடி 6) வழக்கமான ஓவியம் வரைந்தவரை கௌரவிக்கும் வகையில் அவரது பெயர் கையொப்பத்தில் வட்டம் அல்லது பெயரின் கீழ் கோடிட்டு காட்டுதல்.
சென்ற மாத ஆறு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடையை 45 நபர்கள் மட்டுமே குறிப்பிட்டிருந்தனர், தமிழில் விடை எழுதியவர்கள்=19, ஆங்கிலத்தமிழில் எழுதியவர்கள்=11, ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=15, ஹிந்தி மொழியில்=0 நபர்களும், பிற மொழியில்=0 நபரும், மேலும் சிலர் ஆறுக்கும் அதிகமான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.
==============================================
7. புத்திசாலி கணக்கு புதிர் ;- (கருத்தாக்கம் திரு .கோபால கிருஷ்ணன்- வைஷாலி NCR-புது தில்லி)
60 கிலோ எடைகொண்ட நீங்கள் ஒரு ஆட்டுக்குட்டி, புல்லுக்கட்டு, வேட்டை நாய், ஒவ்வொன்றும் தலா 10 கிலோ எடை கொண்டது, ஆகா மொத்தம் மூன்றும்- முப்பது கிலோ எடை கொண்டவர்களை உங்களோடு எடுத்துசெல்கிறீர்கள். தலையில் புல்லுக்கட்டையும், வலதுகைப்பக்கம் ஆட்டுக்குட்டியையும் இடதுகைப்பக்கம் வேட்டைநாயையும் கயிற்றைக்கட்டி அழைத்துவருகிறீர்கள்.
இக்கரையில் .....
# ஆட்டையும் வேட்டைநாயையும் தனியாக விட்டுச் சென்றால் வேட்டைநாய் ஆட்டை கடித்து தின்றுவிடும்.
# புல்லுக்கட்டையும் ஆட்டையும் விட்டு விட்டு சென்றால், புல்லுக்கட்டை ஆடு தின்றுவிடும்.
நீங்கள் எப்படி ஆடு, புல்லுக்கட்டு, வேட்டைநாய் போன்றவற்றை ஆற்றின் அந்தப்பக்கம் எடுத்துசெல்லுவீர்கள்?.
சரியான விடையைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்.
விடை:-
முதலில் புல்லுக்கட்டுக்கு வேட்டைநாயை காவலாக வைத்துவிட்டு உங்களோடு ஆட்டுக்குட்டியை மட்டும் அழைத்துக்கொண்டு ஆற்றின் அக்கரைக்கு செல்லவேண்டும்
ஆற்றின் அக்கரைக்கு சென்றதும் ஆட்டுக்குட்டியை அக்கரையில் கட்டிப்போட்டுவிட்டு நீங்கள் மட்டும் திரும்ப இக்கரைக்கு வரவேண்டும்.
புல்லுக்கட்டை கரையில் வைத்துவிட்டு வேட்டைநாயை அழைத்துக்கொண்டு அக்கரைக்கு செல்லவேண்டும்.
வேட்டைநாயை அக்கரையில் கட்டிபோட்டுவிட்டு ஆட்டுக்குட்டியை மட்டும் உடன் அழைத்துக்கொண்டு இக்கரைக்கு திரும்ப வரவேண்டும்.
ஆட்டுக்குட்டியை இக்கரையில் விட்டுவிட்டு புல்லுக்கட்டை அக்கரைக்கு கொண்டுசெல்லவேண்டும்.
புல்லுக்கட்டை அக்கரையில் வைத்துவிட்டு நீங்கள் மட்டும் தனியாக படகில் இக்கரைக்கு திரும்பி வந்து.
இக்கரையிலிருக்கும் ஆட்டுக்குட்டியை அழைத்துக்கொண்டு அக்கறை செல்லவேண்டும். கரையை அடைந்ததும் அனைத்தையும் அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றுவிடலாம்.
=============================================
8. தமிழ் கணித அளவைகள் புதிர்:- (தகவலைத் தந்தவர் பி.அபிஷேக் பாலகிருஷ்ணன், புது தில்லி)
அணு எட்டு கொண்டது- கதிரெழுதுகள்
கதிரெழுதுகள் எட்டு கொண்டது- பஞ்சிற்றுகள்
பஞ்சிற்றுகள் எட்டு கொண்டது - மயிர்முனை
மயிர்முனை எட்டு கொண்டது நுண்மணல்
நுண்மணல் எட்டு கொண்டது சிறுகடுகு
சிறுகடுகு எட்டு கொண்டது- எள்ளு
எள்ளு எட்டு கொண்டது நெல்
நெல் எட்டு கொண்டது விரல்
விரல் பன்னிரெண்டு கொண்டது சாண்
சாண் இரண்டு கொண்டது முழம்
என நட்சத்திர மண்டலம் வரை தூரத்தை அளவிடக்கூடிய முறைகள் விளக்கப்பட்டுள்ளன.
வட்டத்தின் பரப்பளவு :- வட்டத்தின் பரப்பளவைக் காண காரிநாயனார் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
“விட்டத்தரை கொண்டு வட்டத்தரை தாக்கச் சட்டெனத் தோன்றும் குழி”
இதன் விவரம்;
விட்டத்தரை (விட்டத்தில் பாதி) = r
வட்டத்தரை (சுற்றளவில் பாதி) =2r/2= r
குழி (பரப்பளவு) = r X r = r2
======================================
9. பலகாரம் தின்ற நாள் கணக்குப் புதிர்:- (தகவலை அனுப்பி பகிர்ந்துகொண்டவர் செல்வி சக்தி உமா மற்றும் செல்வன் ஜெய் சக்தி வைஷாலி NCR-புதுதில்லி.
பட்டிணத்தில் இருக்கும் செட்டியார் வீட்டுக்கு மருமகப்பிள்ளை வந்தார். அந்த மருமகப்பிள்ளைக்கு தினந்தோறும் பலகாரம் செய்ய சக்தி போதாமல் ஒரே நேரத்தில் முப்பது ஜாணிகளத்தில், முப்பது ஜாணுயரத்தில், முப்பது ஜாண்கலத்தில் ஒரு பலகாரஞ்செய்து அதனைத் தினம் ஜாணிகளம், ஜாணுயரம், ஜாணகலமறிந்து மருமகனுக்கு விருந்திட்டார்கள் எனில் அதை எத்தனை நாளைக்கு விருந்திட்டார்கள்?
புதிர்விளக்கம்:-
பலகாரத்தின் மொத்தக் கனஅளவு = 30 x 30 x 30 = 27000 கன அலகுகள்
தினம் விருந்திட்ட பலகாரத்தின் கனஅளவு = 1 x 1 x 1 = 1 கன அலகு
ஒரு வருடத்துக்கு விருந்திட்ட பலகாரத்தின் கனஅளவு = 360 x 1 = 360 கன அலகுகள் (காரிநாயனார் ஆண்டுக்கு 360 நாட்கள் எனக் கணக்கிட்டுள்ளார்)
அப்படியானால் மொத்தப் பலகாரத்தை விருந்திட்ட ஆண்டுகள் = 27000/360= 75 ஆண்டுகள்.
பழந்தமிழர்கள் அந்தக் காலத்திலேயே கணிதத்தில் புலமை பெற்று விளங்கினார்கள் என்பதற்குக் காரிநாயனார் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார்.
========================================
10. மனக் கணக்கு புதிர்:- (தகவல் செல்வி D. துர்கா வைஷாலி, NCR-புது தில்லி)
ஒரு தச்சர், பக்கவாட்டில் 100 செ.மீ. உள்ள சதுர விளம்பரப் பலகையில் ஆணிகளை அடிக்க வேண்டியதிருந்தது. ஒவ்வொரு பக்கத்திலும் மொத்தம் 27 ஆணிகள் வரவேண்டும். அவை அனைத்தும் சீரான இடைவெளில் அடிக்கப்பட வேண்டும். அப்படியென்றால் மொத்தம் எத்தனை ஆணிகள் தேவை எனக் கணக்கிட்டுச் சொல்லுங்கள் பார்ப்போம்?
சரியான விடையைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்.
ஒரு குளத்தில் பெரிய தாமரைப் பூக்கள் அழகாக மலர்ந்திருந்தன. அந்தக் குளத்தை நோக்கி சில பறவைகள் வந்தன. குளத்தில் மலர்ந்திருந்த தாமரைப் பூக்கள் பறவைகளை கவர்ந்தன.
ஒவ்வொரு தாமரைப் பூவும், பட்டு சிம்மாசனம் போல இருக்கிறது. "நாம் கொஞ்சம் நேரம் இந்தப் பூக்களில் உட்கார்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டு, பிறகு போகலாம்' என்று ஒரு பறவை கூறியது.
அதை மற்ற பறவைகள் ஏற்றுக் கொண்டன.
உடனே, ஒவ்வொரு பூவிலும் ஒரு பறவை வீதம் உட்கார்ந்தன. அவ்வாறு உட்கார்ந்த போது, ஒரு பறவைக்கு பூ கிடைக்கவில்லை. அதனால், பறவைகள், ஒரு பூவுக்கு இரண்டு பறவைகள் வீதம் உட்கார லாம் என்று முடிவு செய்தன. அதன் படி, ஒவ்வொரு பூவுக்கும் இரண்டாக உட்கார்ந்தன. அப்படி உட்கார்ந்த போது ஒரு பூ மீதம் இருந்தது.
அப்படியானால், குளத்தில் இருந்த பூக்கள் எத்தனை? அதில், உட்கார வந்த பறவைகள் எத்தனை? என்று கண்டுபிடிங்க பார்க்கலாம்!
சரியான விடையைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்.
==============================================
11.மின்னல் கணித புதிர்:- மின்னல் கணிதம்னு சொல்றீங்களே உண்மையிலேயே மின்னல் வேகத்தில் போட முடியுமா?
சந்தேகப்படறதை விட்டுட்டு அடுத்த வரியை கவனிங்க.
மின்னல் கணிதம் என்றால் என்ன?
எண்களைப் பார்த்ததுமே விரல்களை விட்டு எண்ணிக் கொண்டிருக்காமல், பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு தலையை சொறியாமல், நொடிகளில் விடையைக் கண்டுபிடிக்கும் சில (Short Cuts) குறுக்கு வழிகளின் தொகுப்பே மின்னல் கணிதம்.
62 x 11 = ?
வலது இலக்கம் 2. இடது இலக்கம் 6
வலது இலக்கம் + இடது இலக்கம் இரண்டையும் கூட்டுங்கள் 2 + 6 = 8
விடையை இடது வலது இலக்கங்களுக்கு இடையே எழுதுங்கள் 6 8 2
என்னது விடை வந்திருச்சா? அப்படின்னு ஆச்சரியப்படாதீங்க. வேணும்னா கால்குலேட்டரை எடுத்து செக் பண்ணிப் பாருங்க. ஆச்சரியம் அதிகமாகணும்னா அடுத்த உதாரணத்தையும் பாருங்க.
81 x 11 = ?
வலது இலக்கம் 1. இடது இலக்கம் 8
வலது இலக்கம் + இடது இலக்கம் இரண்டையும் கூட்டுங்கள் 8 + 1 = 9
விடையை இடது வலது இலக்கங்களுக்கு இடையே எழுதுங்கள் 8 9 1
என்னடா இது விரல் சொடுக்கறதுக்குள்ள விடை வருதேன்னு ஆச்சரியமா இருக்கா. இன்னும் பல ஆச்சரியங்கள் உங்களுக்கு இருக்கு. அதுக்கு முன்னாடி இன்னொரு உதாரணம்.
54 x 11 = ?
வலது இலக்கம் 4. இடது இலக்கம் 5
வலது இலக்கம் + இடது இலக்கம் இரண்டையும் கூட்டுங்கள் 4 + 5 = 9
விடையை இடது வலது இலக்கங்களுக்கு இடையே எழுதுங்கள் 5 9 4
நொடிகளில் விடை, இதுதான் மின்னல் கணிதம். உதாரணங்கள் போதும்னு நினைக்கிறேன். இனிமே நீங்களே முயற்சி பண்ணுங்க
=====================================
12. சிரிப்புக்கு கணக்கு புதிர்:- (தகவல் செல்வி இரண்யா ஷியாம்சுந்தர் மற்றும் செல்வன் S.உத்பவன் ஷியாம்சுந்தர் வைஷாலி, NCR-புது தில்லி)
"உன் கையில 10 சாக்லேட் இருக்கு.
5 நான் எடுத்துக்கறேன். மீதி எத்தனை இருக்கும்?"
"மீதி எதுவும் இருக்காது சார்?"
"ஏன்?"
"ஏன்னா மீதியை நான் சாப்பிட்டுவிடுவேனே?"
கழித்தல் கணக்கு பற்றிய நிரந்தரமான, ஜாலியான ஜோக் இது.
இப்போ நான் சொல்லித் தரப்போற உத்தி இந்த ஜோக்கை விட ஜாலியானது. எளிதானது.
எல்லாமே ஒன்பதிலிருந்து. கடைசி மட்டும் 10லிருந்து. இந்த மின்னல் மந்திரத்தை ஞாபகத்தில் வைத்துக்கொண்டால் கண் மூடித் திறப்பதற்குள் பின்வரும் கழித்தல் கணக்குகளை போட்டுவிடலாம்.
1000 - 326
ஆயிரத்தை விட்டு விடுங்கள்
326ல் கடைசி இலக்கம் (வலது இலக்கம்) 6. அதை பத்திலிருந்து கழித்தால் 4.
2ஐ 9லிருந்து கழித்தால் 7
3ஐ 9லிருந்து கழித்தால் 6
674 இதுதான் விடை.
அட! நல்லா இருக்கே. இன்னொரு உதாரணம் ப்ளீஸ்!
10000 - 7492
பத்தாயிரத்தை விட்டு விடுங்கள்
7492ல் கடைசி இலக்கம் (வலது இலக்கம்) 2.அதை பத்திலிருந்து கழித்தால் 8.
9ஐ 9லிருந்து கழித்தால் 0
4ஐ 9லிருந்து கழித்தால் 5
7ஐ 9லிருந்து கழித்தால் 2
2508 இதுதான் விடை.
"மின்னல் கணிதம், மின்னல் மாதிரியே வேகமா இருக்கு சார்" அப்படின்னு ஒருத்தர் எனக்கு மின்னஞ்சல் பண்ணியிருந்தார்.
"ரொம்ப வேகம்னு சொல்றதை விட ரொம்ப எளிது சார்" அப்படின்னு இன்னொரு நண்பர் எனக்கு எழுதியிருந்தார்.
நான் என்ன சொல்றேன்னா, வேகம் + எளிமை = மின்னல் கணிதம்.
சரி இப்போ இன்னொரு உதாரணம் பாரக்கலாம்.
100000 - 86514
ஒரு இலட்சத்தை விட்டு விடுங்கள்
86514ல் கடைசி இலக்கம் (வலது இலக்கம்) 4.அதை பத்திலிருந்து கழித்தால் 6.
1ஐ 9லிருந்து கழித்தால் 8
5ஐ 9லிருந்து கழித்தால் 4
6ஐ 9லிருந்து கழித்தால் 3
8ஐ 9லிருந்து கழித்தால்1
13486 இதுதான் விடை.
இப்போ நீங்க என்ன பண்றீங்கன்னா . . . ஆஹா ஓஹோன்னு அதிசயப்படறதை நிறுத்திட்டு நல்லா பயிற்சி பண்ணுங்க. 'கணக்குப்புலி வந்தாச்சுன்னு' மத்தவங்க உங்களைப் பார்த்து வியக்க வையுங்க.
நன்றி http://ezymaths.blogspot.in/
=======================================
13. கமர்கட்டுகளில் கணக்கு புதிர் :-
கமர்கட், கொடுக்காப்புளி, எள் அடை, கடலை மிட்டாய், தேன் மிட்டாய், மாங்காய்க் கீற்று என விற்கும் குட்டிக்கடை இல்லாத பள்ளிக்கூட வாசல்களா? எங்கள் பள்ளிக்கூடம் அருகில் கடை விரிக்கும் அம்மையாரின் மகள்தான் காந்திமதி. அவர் என் வகுப்பில் படிக்கிறார் என்றுகூட நான் கவனிக்கவில்லை. காலைநேர இடைவேளை, மதிய உணவு இடைவேளைகளில் அந்தக் கடையில் குழந்தைகளின் கூட்டம் அதிகமாக இருக்கும்.
ஒரு நாள் மாலையில் கிளம்பும்போது கவனித்தேன். அந்தக் கடையில் அந்த அம்மையாருக்குப் பதிலாக ஒரு சிறுமி உட்கார்ந்திருந்தார். அவரைச் சுற்றி மாணவிகள் கூட்டமாக ஏதோ கூவி விவாதித்தனர். “பெருக்கல் ரொம்ப ஈஸி. பத்தை நாலால பெருக்கினா… இதோ பாரு” என்று குரல் வந்தது. பகலில் வகுப்பில் நான் நடத்திய அதே கணக்கு. நான் சற்று தள்ளி நின்றுகொண்டு ஓசையில்லாமல் அங்கு நடந்ததைக் கவனித்தேன்.
கண்ணாடி ஜார் கமர்கட் மிட்டாய்கள் அனைத்தையும் காந்திமதி அட்டையில் கொட்டினார். “இதோ பத்து” என்று எண்ணி ஒரு கூறு கட்டினார். பிறகு “இதோ பாரு நாலு பத்து” என்று பத்து பத்தாய் நான்கு கூறுகள் கட்டினார். “இப்போ எண்ணிப் பாரு” என்றார். அவர்கள் கூட்டமாக எண்ணினார்கள். நாற்பது வந்தது. “பத்தை நாலா பெருக்கினா நாற்பது. இதே மாதிரிதான் …. பெருக்கல் ரொம்ப ஈஸி புள்ள” என்று அவர் பாடம் நடத்தினார். “அப்போ வகுத்தலு?” என்றார் ஒரு மாணவி. “31-ஐ 3-ஆல வகு பார்ப்போம்” என்று சவால் விட்டார் அவர்.
தனது கமர்கட்டுகளை ஒன்றாய் குவித்தார் காந்திமதி. மொத்தம் 31 கமர்கட்டுகளை எண்ணிவைத்தார். “எத்தனையால வகுக்கிறோம் …மூணு… அதனால நாம் ஒரே மாதிரி, இதை மூணா கூறு போடணும்’’ என மூன்று மூன்றாய்ப் பிரித்துக்கொண்டே வந்தார். ‘‘கடைசியா … கையில ஒண்ணுதான் இருக்கு. இந்த ஒண்ணு மீதி… அங்கே எவ்வளவு இருக்கு?’’ மற்றவர்கள் எண்ணிப்பார்த்து “பத்து” என்று கத்தினார்கள் “அதுதான் விடை. ஒன்று மீதி. இதைத்தான் நாம் வாத்தியாரு போர்டுல நம்பரா போடுறாரு புரியுதா” என்று தனது பாடத்தை முடித்தார்.
இன்றைய வகுப்பில் நாம் கூட இந்த மாதிரி ஒரு விளையாட்டை வைத்து வகுத்தல் கணக்கைச் சொல்லிக்கொடுத்திருக்கலாமே? என்று எனக்கு ரொம்பவும் தாமதமாகத் தோன்றியது. கமர்கட்டைக் கூறு போட்டு கணக்கை மிக எளிதாக எனக்குப் பதிய வைத்தவர் காந்திமதி.
விளையாட்டுக் கல்வி: ‘‘கற்றல் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கையாக இருப்பதால் குழந்தைகள் தங்கள் வாழ்க்கையை, பெற்ற அறிவோடு தொடர்புப்படுத்திப் பார்க்க ஊக்கப்படுத்தப்படுவதில்லை’’ என்கிறார் மரியா மாண்டிசோரி. குழந்தைகள் விளையாடும் அன்றாட விளையாட்டோடு கணிதம் கலந்தால் அது கமர்கட்டைவிட இனிக்கும் என எனக்குப் புரியவைத்த காந்திமதி, தனது வறுமையை வென்று பட்டதாரியானார். ‘மதி இட்லிமாவு பாக்கெட்’ எனும் சுயதொழிலில் தற்போது கணக்குப் போட்டு வாழ்க்கையில் முன்னேறிக்கொண்டிருக்கிறார்.
நன்றி தொடர்புக்கு: eranatarasan@yahoo.com
=============================================
14. வியாபார கணக்கு புதிர் விளையாட்டு:- MBA முருங்கைக்காய் வியாபாரம்:- (தகவலை பகிர்ந்துகொண்டவர் செல்வி AK.பவித்ரா-வைஷாலி NCR -புதுதில்லி )
"காண்கு", "நாக்கு" என்ற இரண்டு நபர் முருங்கைக்காய்களை வாங்கி விற்கும் வியாபாரம் செய்ய முனைந்தனர்.
இருவருக்கு தலா ருபாய் 10/- வியாபாரம் செய்வதற்கு மூலதனமாக தரப்பட்டது. அந்த 10 ரூபாயை வைத்து ஒரே நாளில் முருங்கைக்காய் வாங்கி விற்று யார் அதிகம் லாபம் சம்பாதிக்கிறார்களோ அவர்களே வெற்றிபெற்றவர்கள். என முடிவுசெய்து அன்றய மாலை 6மணிக்கு இருவரும் ஒன்றுகூடி போட்டியின் இறுதியை முடிவுசெய்யலாம் என்று முடிவானது.
இருவரும் அவர்களிடம் உள்ள ரூபாய் 10 ஐ வைத்து, தலா 20 முருங்கைக்காய்களை வாங்கி அவற்றை விற்று லாபம் சம்பாதிக்க வெவ்வேறு பகுதிக்கு புறப்பட்டார்கள். அதாவது ஒரு முருங்கைக்காயின் கொள்முதல் விலை 0.50 பைசா.
நாக்கு:- இவர் இனிமையாக பேசக்கூடியவர் தனது பேச்சாலேயே அனைவரையும் கவர்ந்த இழுக்கக்கூடியவர் அதோடு இவர் எதையும் வேகமாக செய்யும் எண்ணம் கொண்டவர் அவர் வாங்கிய 20 முருங்கைக்காய்களை ஒன்றின் விலை ரூபாய் ஒன்று (1.00) என கூவி விற்கத்தொடங்கினார். முதல் ஒருமணிநேரத்தில் நான்கு 4 காய்கள் மட்டுமே விற்றது ஆகவே அவர் தமது முந்தய விலையை சற்று குறைத்து 0.75 காசுகள் என விலை குறைத்து விப்பாணை என கூவி விற்கத்தொடங்கினார். அடுத்த ஒரு மணி நேரத்தில் எட்டு (8) காய்கள் விற்றுத் தீர்ந்தது. அடுத்த ஒரு மணிநேரத்தில் மீண்டும் விலை குறைத்து 0.50 காசுகள் என, "வாங்கிய விலையிலேயே விற்பனை" என கூறி விற்கத்தொடங்கினார். அப்போது 4 காய்கள் மட்டுமே விப்பாணையானது. மீதமிருந்த 4 காய்களை மிகக் குறைந்த விளையான 0.25 பைசாவுக்கு நஷ்டத்தில் விற்றூற்றுமுடித்தார். ஆகமொத்தம் அவரின் 4மணிநேர விற்பனைத் தொகை 4+6+2+1= 13 ரூபாய் கிடைத்தது. கிடைத்த பணத்தை முழுவதுமாக செலவு செய்து 26 முருங்கைக்காய்களை வாங்கி மீண்டும் மேற்கண்டதைப்போலவே விற்பனையை தொடர்ந்தார் அன்று மாலை 6 மணியளவில் அவரிடம் இருந்த அனைத்து முருங்கைக்காய்களையும் விற்று மொத்தம் 28 ரூபாய்களை சம்பாதித்தார் அதாவது 18 ரூபாய் அதிகமாக லாபம் சம்பாதித்தார்.
காண்கு:- பார்ப்பதற்கு சுறுசுறுப்பானவர். எதையும் அழகுபடுத்தி விப்பாணை செய்வதில் வல்லவர். அவருக்கு பசுமையான புதிய முருங்கைக்காய் மீது அதிக நம்பிக்கை வைத்து விற்பனையை தொடர்ந்தார் அவர் வாங்கிய 20 முருங்கைக்காய்களை ஒன்றின் விலை இரண்டு ரூபாய் (2.00) என கூவி விற்கத்தொடங்கினார். அடுத்த ஒரு மணிநேரத்தில் 2 காய்கள் மட்டுமே விற்பனையாகியது. ஆகவே அவர் வைத்திருந்த முருங்கைக்காய் வெய்யில் பட்டு சற்று வாடி வாதங்கத் தொடங்கியது ஆகவே அவர் மேலும் விலை குறைத்து 1.50 ஒரு ரூபாய் ஐம்பது காசுக்கு ஒன்று என்று விற்கத்தொடங்கினார். அடுத்த ஒரு மணி நேரத்தில் மேலும் 4 காய்கள் மட்டுமே விற்றது. ஆகவே மீண்டும் விலை குறைத்து 1.00 ஒரு ரூபாய்க்கு ஒன்று என விற்கத் தொடங்கினார் அப்போதும் 4 காய்கள் மட்டுமே விற்றது ஆகவே தொடர்ந்து மீண்டும் விலை குறைத்து 0.75 எழுபத்தி ஐந்து காசுக்கு ஒன்று என்று விற்கத் தொடங்கினார் அப்போதும் முருங்கைக்காய் சற்று வாடி வதங்கிவிட்டபடியால் 4 காய்கள் மட்டுமே விற்பனையானது ஆக அன்றய மாலை 6 மணியளவில் மீதமிருந்த 6 காய்களை வாங்கிய விலைக்கே விற்றுப்பெற்ற தொகையாக மொத்தம் 4+6+4+3+3=20 ரூபாய்.
இப்போது காண்கு:- 20 ரூபாயும், நாக்கு:- 28 ரூபாயையும் சம்பாதித்தார் ஆகவே அதிகம் சம்பாதித்த நாக்கு வெற்றிபெற்றவராவார்.
இதில் முக்கியமாக நாம் தெரிந்துகொள்வது, நஷ்டத்தில் வியாபாரம் செய்தாலும் நாக்கு திறமையாக அதிகம் லாபம் சம்பாதித்தார், மேலும் நம்மிடமுள்ள முதலீட்டை ஒரு இடத்தில் தங்கிவிடாமல் விரைந்து செயல்பட்டு பலமடங்காக்கிய விதம் அவருக்கு நன்மை கிடைப்பதோடு, அதிக முறை வாங்கி விற்று செலவு செய்வதால் ஒரு நாட்டின் வளர்ச்சியிலும் அவர் சிறந்த பங்குவகிக்கிறார்.
ஆகவே சிறந்த விற்பனையாளர் என்பவர், அவரது விற்பனை விற்றுத் தீரும்வரையில் காத்திருப்பதைவிட. புத்திசாலித்தனமாக ஏற்றத தாழ்வுகள் இருந்தாலும் வேகமாக கிடைக்கும் விலைக்கு விற்று, மேலும் மேலும் பல விற்பனைக்கு தாவுவதே சிறந்த விற்பனை தந்திரமாகும்.
நஷ்ட விற்பனை விலையிலும் லாபம் சம்பாதிக்கும் இந்த முருங்கைக்காய் வியாபார உதாரணம், முதுகளைப் பட்டதாரிகளுக்கான M.B.A எம் பி ஏ- படிப்பின் ஒரு பகுதி பாடம் இது.
நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.
=========================================
15. தன்னாம்பிக்கைக் கணக்கு புதிர் :- (தகவலை பெற்றுத்தந்தவர் A.K.சபரீஷ் கிருஷ்ணன். வைஷாலி -NCR-புது தில்லி)
உங்கள் தன்னம்பிக்கையே உங்கள் சொத்து. தன்னம்பிக்கை குறைந்தவர்களால் எதையும் சாதிக்க முடியாது..
உங்கள் தன்னம்பிக்கையை அதிகப்படுத்திக் கொள்ள சில எளிதான் வழிகள்:
1 . உங்களிடம் நீங்களே தனிமையில் பேசுங்கள்... நீ சாதிக்க பிறந்தவன் என.
2. நேர்த்தியாக ஆடை அணியுங்கள். விலை குறைந்ததோ, அதிகமானதோ கவலை இல்லை... இருப்பதை நேர்த்தியாக அணியுங்கள்.
3 . எதிர்மறையான பயங்களை தவிர்த்து, நேர்மறையாக சிந்திக்க பழகுங்கள்.
4 . வாழ்க்கை விளையாட்டு என்பதை மனதில் நிறுத்தி, எதையும் எதிர்கொள்ளும் வலிமையை மனதிற்கு கொடுங்கள்.
5 . நிமிர்ந்து நிற்கவும், நடக்கவும், அமரவும் பழகுங்கள்.. தன்னம்பிக்கை தானே அதிகரிக்கும்.
6 . உள்ளம் எப்படியும் இருக்கட்டும்... முகத்தில் மட்டும் சிறு புன்னைகையுடன் இருக்க பழக்குங்கள்.
7 . சின்ன இலக்குகளை தினமும் நிர்ணயியுங்கள்.. அதை சாதித்து விட்டு உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்..
8 . தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.. மூச்சை அடிக்கடி இழுத்து, நுறையீரலில் புதுக்காற்றை நிரப்பிக் கொள்ளுங்கள்.
9 . இவை எல்லாவையும் விட மிக முக்கியமாக.. உங்களுக்கு நடந்த நல்லவைகளை அடிக்கடி பட்டியலிட்டு பார்த்துக் கொள்ளுங்கள்..
நிச்சயம் தன்னம்பிக்கை வளரும்..
வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!
========================================
16. மனக்கணக்கின் மகிமைகள்:- கணக்கு விளையாட்டு விளையாடலாம் வாங்க...
குழந்தைகள் அவர்களாகவே கணிதங்களின் பயிற்சிகளிலும், விளையாட்டுக்களிலும் ஈடுபடும் பொழுது கணிதக் கருப்பொருட்களை நன்கு அறிந்து, பயிலுகிறார்கள். கணிதத்தைப் போதிப்பதில் மொழி ஒரு முக்கிய பங்கு ஆற்றுகிறது. மேலும் பயிற்சி பயிலும் நேரம் கணிதத்தைப் பற்றிய விவரங்களைப் பேசித் தெளிவு பெறுவதற்கு ஒரு சிறந்த வழியாகும். விவாதங்கள், உரையாடல்கள், மொழி ஆகியவைகள் கணிதப் பாடத்தின் ஒரு முக்கிய அம்சமாக இருப்பினும், அவைகளின் அவசியங்கள் பல சமயங்களில் உணரப்படுவதில்லை. ஒவ்வொரு பொருட்களை ஆராய்தலும், கணித விளையாட்டுக்களும் கணிதங்களின் கண்களால் பார்த்து அறிய முடியாத கருப்பொருட்களை கிரஹகித்து, அவைகளைக் குழந்தைகள் நன்கு அறிய உதவுகின்றன.
17. கணக்கு விளையாட்டுப் பயிற்சி =01,
ஒற்றைப் படை – இரட்டைப் படை எண்கள் விளையாட்டு:-
முதலில் விளையாட்டுக்கு வந்தவர்கள் அனைவரையும் வரிசையாக நிற்கவைத்து ஒன்று முதல் 1,2,3,4 என வரிசையாக அனைவருக்கும் எங்களை தந்துவிடுங்கள். பிறகு 1,3,5,7,9 என ஒற்றைப்படை எங்களைக்கொண்டவர்களையும், 2,4,6,8,10 என இரட்டைப்படை எங்களைக்கொண்டவர்களையும் இரண்டு குழுக்களாக பிரிக்கவேண்டும்.
இப்பொழுது, வெற்றியாளர்கள் முதலில் அவர்கள் சார்ந்த குழுவின் அடிப்படையில் அமைந்த ஒரு என்னை தேர்வுசெய்யவேண்டும். அதாவது ஒற்றைப் படை எண் குழுவினர் ஒற்றைப் படை எண்ணை தேர்வு செய்வர். உதாரணமாக 5 என்ற எண். பிறகு அதன் எதிராணியினரான இரட்டைப்படைக் குழுவினர் அவர்களின் விருப்பம்போல ஒற்றைப்படையோ அல்லது இரட்டைப்படை எங்களையோ ஏதாவது ஒரு எண்ணைத் தேர்வு செய்ய வேண்டும். அவர்கள் தேர்வு செய்யும் எண் 1 என்றால், முன்பே ஒற்றைப் படைக் குழுவினர் தேர்வு செய்த 5 என்ற எண்ணுடன் கூட்டினால் வரும் விடை – இரட்டைப் படையாக இருந்தால் ஒற்றைப்படை குழுவினர் வெற்றிபெற்றதாக அவர்களுக்கு 10 மதிப்பெண் அறிவிக்கப்படும். தொடர்ந்து அடுத்தடுத்த நிலைகளாக இரண்டு இலக்க எங்கள் (22) அடுத்தது மூன்று இலக்க எங்கள்(333) அடுத்தது நான்கு இலக்க எங்கள் என கூடிக்கொண்டேபோகும்.
18. விளையாட்டுப் பயிற்சி-02 :- மனக்கணக்குப் பயிச்சி விளையாட்டு:-
இந்தப் பயிற்சி எளிதான கணிதப் பாடங்கள் மாணவர்கள் மனதில் பதிய உதவுகிறது. அத்துடன், மாணவர்கள் மிகவும் கடினமான கணிதப் பாடங்களைச் செய்வதற்கு முன்னால், அடிப்படையான மனக் கணக்குகளைப் பற்றி அவர்களுக்கு நம்பிக்கையை இந்தப் பயிற்சி ஏற்படுத்தும்.
இந்தப் பயிற்சியைத் தனியாகவோ அல்லது இருவராகவோ செய்யலாம். பேனாவையும், பேப்பரையும் தயாராக வைத்திருக்கும் படி மாணவர்களிடம் சொல்லவும்.
சில எளிதான கணக்குகளை மாணவர்களுக்குக் கொடுத்து, அவர்களை அவைகளின் விடைகளை மனத்தளவில் செய்து, இறுதி விடையை மட்டும் அவர்களது பேப்பர்களில் எழுதச் சொல்லவும். உதாரணம் – 3-யையும் 11-யையும் கூட்டி அந்த விடையினை எழுதாமல் மனத்தில் வைத்துக் கொள்ளவும். இப்பொழுது அந்த விடையிலிருந்து 5-யைக் கழிக்கவும். இந்தக் கூட்டல் கணக்கைச் செய்வதற்கு மாணவர்கள் தங்களது விரல்களைப் பயன்படுத்தலாம்.
விடையினை மாணவர்கள் தங்களது பேப்பரில் குறித்துக் கொள்ளலாம். சரியான விடையினை கரும்பலகையில் எழுதி, அவர்களது விடை சரிதானா என்பதை மாணவர்கள் சரிபார்கச் சொல்லவும். இந்த இளம் வயதில் கூட்டல், கழித்தல், பெருக்கல் ஆகியவைகளுக்கு மனக் கணக்குகளின் மூலம் பயிற்சி பெறலாம்.
19. விளையாட்டுப் பயிற்சி-03 எண்களுடன் கணித மொழியைப் பயன்படுத்துவதை அறிய இந்தப் பயிற்சி விளையாட்டு:-
ஒரு மாணவனை வகுப்புக்கு முன்னால் வந்து நிற்கச் சொல்லவும். ஒரு எண்ணை அந்த மாணவனுக்கு மட்டும் சொல்லவும். மற்ற மாணவர்களுக்கு அந்த எண் தெரியக்கூடாது.
வகுப்பிலுள்ள மற்ற மாணவர்கள் அந்த மாணவனுக்கு மட்டும் சொன்ன எண்ணை ஊகிக்க வேண்டும். வகுப்பிலுள்ள மாணவர்கள் அந்த மாணவனிடம் எத்தனை கேள்விகள் வேண்டு மென்றாலும் கேட்கலாம். உதாரணம் – அந்த எண் 2-ல் வகுபடுமா ? இதற்குப் பதில் ஆம் என்றால், வகுப்பு மாணவர்கள் அந்த எண் ஒரு இரட்டைப் படை எண் என்று தீர்மானிக்கலாம். மாணவர்கள் மேலும் கேள்வி கேட்கலாம் – அந்த எண் 10-யை விட மதிப்பில் பெரியதா ? அதற்கு அந்த மாணவன் ஆம் அல்லது இல்லை என்று மட்டும் தான் பதில் சொல்ல முடியும்.
அந்த விடை எண் ஒரு மாணவனுக்கு தெரிந்திருந்தால், அந்த விடை எண்ணை ஊகித்துச் சொல்லாம். அந்த மாணவன் சொன்ன பதில் சரியாக இருப்பின், அந்த மாணவனுக்கு ஒரு மதிப்பெண் கிடைக்கும். பதில் தவறாக இருப்பின், அந்தச் சுற்றுக்கு அந்த மாணவன் வேறு கேள்வி கேட்க முடியாது. அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவன் அந்த பயிற்சியில் வெற்றியின் சின்னமான நட்சத்திரக்குறியைப் பெறுவான்.
20 விளையாட்டுப் பயிற்சி-04:- பாட்டுமூலம் எண்களைக் கணிக்கும் விளையாட்டு:-
(பயிற்சிக்கு வேண்டிய கருவிகள் – எண்கள் அட்டைகள், ஒரு இசை ஒலிப்பான் – மியூசிக் பிளேயர். )
மாணவர்கள் ஒரு வட்டமாகச் சுற்றி வரப் போதுமான இடம் இருக்கும் படிப் பார்த்துக் கொள்ளவும். போதுமான இடம் இல்லாவிடில், மாணவர்கள் அவர்களது இருக்கையிலேயே நின்றபடிப் பயிற்சியைச் செய்யலாம்.
எண்கள் உள்ள அட்டைகளைக் குலுக்கி, ஒரு பெட்டியில் இடவும். மாணவர்களை ஒரு அட்டையை எடுக்கச் சொல்லவும். இப்பொழுது ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு எண் அட்டை இருக்கும்.
இசை ஒலிப்பானை இயக்கவும். மாணவர்கள் வட்டமாக சுற்றியோ அல்லது அவர்களது இருக்கையிலே நின்றோ இருக்க வேண்டும். இசையை நிறுத்தி, ஏதாவது ஒரு எண் வரிசையைச் சொல்லவும். உதாரணம் – 10-லிருந்து 15-வரை உள்ள அனைத்து இரட்டைப் படை எண்கள். 4-என்ற எண்ணால் வகுபடும் எண்கள், 3 என்ற எண்ணால் பெருக்கலில் வரும் எண்கள். இந்த விடைகளுக்கு ஏற்ப எண்களுள்ள மாணவர்கள் வட்டத்தை விட்டோ அல்லது இருக்கையில் அமர்ந்தோ செயல்படவேண்டும்.
இந்த விளையாட்டு, ஒரு மாணவன் விடுபடும் வரை தொடரும். அந்த மாணவன் வென்றவனாகிறான்.
கணித விளையாட்டுக்கள் மாணவர்கள் தங்களின் சராசரி நிலைக்கும் மேலாகச் செயல்படுவதற்கு உதவுகின்றன. ஏனென்றால், இதில் கல்வி எல்லைகள் எந்த விதத்திலும் வரையறுக்கப்படாமல் இருக்கும் நிலையால், மாணவர்கள் அவர்கள் எதிர்பார்த்த்தை விட அதிக பலன்களை அடையும் பாதையில் அவர்களைக் கொண்டு செல்கிறது. பயிற்சிகளும், விளையாட்டுகளும் ஆசிரியர் விரும்புவதையும், எதிர்பார்ப்பதையும் மாணவர்கள் செய்வதாக இல்லாமல், அவர்கள் மிகவும் விரும்பிச் செய்யும் ஒரு செயலாக அமைகின்றன. ஆகையால் மாணவர்கள் ஆர்வமாகச் செயல்படுவதுடன், அதைப் பற்றிச் சுதந்திரமாகவும் சிந்திக்கிறார்கள்.
===========================================
21. பூமியின் பூஜ்ய எடைப் புதிர்:- உயரமான இடத்திலிருந்து நாம் கீழே விழும்போது நமது எடை பூஜ்யம் என்பது உங்களுக்கு தெரியுமா? (தகவலை சேகரித்து பகிர்ந்துகொண்டவர் செல்வி பி.அபிநயா பாலகிருஷ்ணன், புது தில்லி)
திருவிழாக்களிலும், உல்லாச "தீம்" பார்க்குகளில் ரங்கராட்டினம் சுற்றும்போதும், மேலிருந்து கீழ் சருக்கும்போதும் நாம் ‘வீல்’ என்று சப்தமாக அலறுவதற்கு காரணம், நமது உடலில் ஏற்படும் அந்த வித்தியாசமான உணர்ச்சியால் அல்லது பயத்தினால் ஏற்படும் உணர்வே அது.
இதே மாதிரியான ஓர் அனுபவம் நமக்கு லிஃப்ட்டில் ஏறி இறங்கும்போதும் ஏற்படும். இந்த விசித்திர உணர்ச்சிக்கு காரணம் என்ன? விடை என்னவோ மிவாகும் சிறியதுதான் அதாவது நாம் நமது உடல் எடையை முற்றிலுமாக இழக்கிறோம் என்பது தான் அதற்கான காரணம், இதன் விளக்கம்தான் மிகப் பெரிது..
லிஃப்ட்டில் கீழே இறங்கும்போது கொஞ்ச நேரத்திற்கு நீங்கள் எடையே இல்லாத மனிதன் ஆகிவிடுகிறீர்கள். நீங்கள் 80 கிலோ எம்டன் பாடியாகக் கூட இருக்கலாம். ஆனால் நீங்கள் லிஃப்ட்டில் இறங்கும்போது சில வினாடிகளுக்கு உங்கள் எடை பூஜ்ஜியம்தான்.
அது என்ன சில வினாடிகளுக்கு மட்டும் என்ற கணக்கு?
ஆமாம்! உதாரணமாக, நான்காவது தளத்திலிருந்து தரைத் தளத்திற்கு லிஃப்ட்டில் வருவதற்கு 2 நிமிடங்கள் ஆகிறது என்று வைத்துக்கொள்வோம். இதில் நான்காவது தளத்தில் இருந்து மூன்றாவது தளத்திற்கு இறங்கும் அந்த 15 வினாடிகள்தான் சுவாரசியமானவை. அந்த 15 வினாடிகளும் நீங்கள் உங்கள் எடை முழுவதையும் இழந்துவிடுவீர்கள்.
இந்த திடீர் எடை இழப்பால்தான் உங்கள் உடல் முழுவதும் ஒரு ஜிலீரிடுகிற மாற்றம் ஏற்படுகிறது. லிஃப்ட் கூண்டு திடீரென்று கீழே இறங்கும் அந்த வினாடியில் நீங்கள் நின்று கொண்டிருக்கும் ப்ளாட்பாரத்தின் மீது நீங்கள் எந்த எடையையும் செலுத்துவதில்லை.
திடீரென்று கீழிறங்கத் தொடங்கும் லிஃப்ட்டில், உங்கள் எடை சற்றுநேரம் பூஜ்யமாகவே இருக்கும். இப்படி உங்கள் உடல் ஒட்டுமொத்த எடையையும் இழந்துவிடுவதுதான் உங்கள் உடலில் தோன்றும் வித்தியாசமான குறுகுறு உணர்ச்சிக்குக் காரணம். சிறிது நேரத்தில் உங்கள் உடலின் வேகமும் லிஃப்ட்டின் வேகமும் சமமாகி விடுவதால் இந்தக் குறுகுறு உணர்ச்சி சிறிது நேரத்தில் நின்று போய்விடும்.
சரி, ‘கீழே விழும் பொருளுக்கு எடை இல்லாமல் போகுமா?’ இதை ஒரு சிறிய சோதனையில் நிரூபிக்கமுடியும். சுருள் தராசு ஒன்றினை எடுத்துக் கொள்ளவும். அதன் கொக்கியின் முனையில் ஒரு 5 கிலோ ‘வெயிட்’டினைத் (எடையை) தொங்க விடவும். இப்போது சுருள் தராசு காட்டும் எடை முள் 5 கிலோ என்று காட்டும். இப்போது வெயிட்டுடன் இருக்கின்ற தராசினை கீழ்நோக்கி வேகமாக இழுக்கவும் (அல்லது கீழே விழுமாறு விட்டுவிடவும்). பிறகு வில் தராசின் எடை காட்டும் முள்ளை கவனித்துப் பாருங்கள் அது பூஜ்யம் என்கிற நிலையை தொட்டிருக்கும்.
ஒரு பொருள் தன்னை மேலே பிடித்து இழுத்துக் கொண்டிருக்கும் சக்தியின் மீதோ, தன்னைத் தாங்கிக் கொண்டிருப்பதன் மீதோ செலுத்தும் சக்தியே அதன் ‘எடை’ எனப்படுகிறது. கீழே விழும்பொருள் தராசின் சுருள் வில்லை இழுக்க முடியாது. ஏனெனில் தராசும் அதனோடு சேர்ந்து விழுந்து கொண்டிருக்கிறது.
விழுந்து கொண்டிருக்கும் பொருளினால், எதையும் இழுக்கவோ, அழுத்தவோ முடியாது. எனவே கீழே விழும் பொருளுக்கு எடை இருக்காது.என்கின்ற இந்த அறிவியலைப் புரிந்து கொண்டவர்கள் இனி அடுத்தமுறை லிஃப்ட்டில் இறங்கும்போது இதைப்பற்றி சிந்திப்பீர்கள் அல்லவா. தொடர்ந்து அதே சிந்தனையில் ஆழ்ந்துவிட்டால் நீங்கள் கீழிறங்கிவந்த லிஃப்ட் மறுபடியும் மேலே போய்விடும்!!!. விழிப்புடன் இருங்கள். நன்றி மருத்துவர் ஆதலையூர் சூரியகுமார்.
=========================================
22. ஈசி மேஜிக் புதிர் கணக்கு ! (தகவலை சேகரித்து பகிர்ந்துகொண்டவர் செல்வன் பி.அபிஷேக் பாலகிருஷ்ணன், புது தில்லி)
மேஜிக் கணக்குல எத்தனை பெரிய எண்ணையும் 5ஆல் ஒரே வரியில் வகுக்க முடியும்.
உதாரணம்: 123456789 எண்ணை தேர்வு செய்துள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்போ இந்த எண்ணை 5ஆல் வகுக்க வேண்டும். அதுக்கு தேர்வு செய்த எண்னை 2 ஆல் பெருக்க வேண்டும். 123456789 X 2 = 246913578 என்று வரும். கடைசி இலக்க எண்ணுக்கு முன்னர் தசம குறியீடு போட வேண்டும். இதுதான் விடை. 24691357.8.
இதே போல் எந்த எண்ணாக இருந்தாலும் இரண்டால் பெருக்கி வரும் விடையின் கடைசி எண்ணுக்கு முன்னர் தசம குறியீடு ( புள்ளி ) போட வேண்டும்.
xxxxx
ஈசி கணக்கு புதிர்:-
15 வது வாய்பாடு உங்களுக்குத் தெரியுமா? தெரியவில்லைன்னா கவலை விடுங்கள்... எத்தனை இலக்க எண்ணாக இருந்தாலும் அதை ஒரு நிமிடத்தில் கண்டுபிடித்து விடலாம்... ரொம்ப ரொம்ப சிம்பிள்.
உதாரணத்துக்கு ஒரு இரண்டு இலக்க எண்ணை தேர்வு செய்துகொள்ளுங்கள். உதாரணம் 23. இதை 15ஆல் பெருக்க வேண்டும். 23 X 15 தேர்வு செய்த எண்ணுடன் ' 0 ' சேர்த்துக்கொள்ளுங்கள். 230.
230 எண்ணை '2' ஆல் வகுக்க வேண்டும். 230 / 2 = 115.
இப்போ 230 ஐயும் 115 யும் கூட்ட வேண்டும். 230 + 115 = 345.
இதுதான் விடை, 23 X 15 = 345.
இதே போல் மூன்று, நான்கு, ஐந்து இலக்க எண்ணையும் பெருக்கலாம்.
xxxxxxxxxxxxxxx
மேஜிக் கணக்கு புதிர் .( தகவலை சேகரித்து பகிர்ந்துகொண்டவர் செல்வன் பி.அபிஷேக் பாலகிருஷ்ணன், புது தில்லி)
பெருக்கலில் 5ல் முடியும் இரண்டு இலக்க எண்கள் ஒரே மாதிரி இருந்தால் அதற்கு ஒரே விநாடியில் விடை கொடுக்க முடியும் .
உதாரணம் :
35 x 35 ஒரே வரியில் விடை பெற
கடைசி எண் 5 ஐ 5 ஆல் பெருக்க வேண்டும் .
விடை : 25 .
முதல் எண் 3 ஐயும் 3 க்கு அடுத்து வரும் எண் 4 ஐயும் பெருக்க வேண்டும் .
விடை : 3 x 4 = 12 .
ஆக 35 x 35 = 1225 .
=========================================
23. கணிதத்தில் மேஜிக்-தந்திர எழுத்து புதிர் :- (தகவலை பகிர்ந்துகொண்டவர் செல்வன் ஆர் ராமகிருஷ்ணன் மற்றும் செல்வன் ஆர். வைத்தியநாதன் வைஷாலி NCR-புதுதில்லி)
* ஒன்றிலிருந்து 99 வரை ஆங்கிலத்தில் எண்களை எழுதினால் ஏ, பி, சி, டி என்ற நான்கு எழுத்துக்கள் வராது .
* ஒன்றிலிருந்து 999 வரை ஆங்கிலத்தில் எண்களை எழுதினால் ஏ, பி, சி, என்ற மூன்று எழுத்துக்கள் வராது .
* ஆயிரம் என்ற எண் பெயரில் மட்டுமே ஏ என்ற எழுத்து வரும் .
* ஒன்றிலிருந்து 99, 999,999 வரை ஆங்கிலத்தில் எண்களை எழுதினால் பி, சி, என்ற எழுத்துக்கள் இடம் பெறாது .
* பில்லியன் என்று எழுதும் போது மட்டுமே பி எழுத்து வரும் .
==========================================
24. கணித மதிப்பு 'X' புதிர்:- கணித மதிப்பு கண்டுபிடிக்க ஏன் 'X' பயன்படுத்துகிறோம் (தகவல் செல்வி பி.அபிநயா பாலகிருஷ்ணன், புது தில்லி)
கணிதத்தில் மதிப்பு கண்டுபிடிக்க ' X ' -- ஐப் பயன்படுத்தக் காரணம் :
ஆங்கில எழுத்துக்களில் இருபத்திநாலாவது எழுத்து X , ரோமன் எண்களில் X என்றால் பத்து ( 10 ). X -- க்குத் தனி உச்சரிப்பு கிடையாது . உதாரணமாக, axe என்பதை உச்சரிக்கும்போது aks என்பதாகவே உச்சரிக்கிறோம் . தெரியாத, புரியாத ஒளிக் கதிர் என்பதால்தான், X -- ray என்று வைத்தார்கள் . எல்லாவற்றுக்கும் மேலாக, X இயேசு கிறிஸ்துவைக் குறிக்கும் எழுத்து ( X mas ) . ' அல்ஜீப்ரா'வில் தெரியாத விஷயத்துக்கு ( unknown quantity ) X என்று வைத்துக்கொண்டது கிறிஸ்து பிறப்புக்குப் பிறகுதான் ! வைத்தது யார் என்று தெரியவில்லை !
=========================================
25. கணிதத்தில் அதிசயங்களும் ஆச்சரியங்களும்:-
கணிதத்தில் அதிசயங்களுக்குப் பஞ்சமே இல்லை . அதில் ஒன்றுதான் இந்த மாயக்கணக்கு ! இதை நன்கு கவனியுங்க... ரசிங்க... நண்பர்களிடம் சொல்லி அசத்துங்க !
1 x 8 + 1 = 9
12 x 8 + 2 = 98
123 x 8 + 3 = 987
1234 x 8 + 4 = 9876
12345 x 8 + 5 = 98765
123456 x 8 + 6 = 987654
1234567 x 8 + 7 = 9876543
12345678 x 8 + 8 = 98765432
123456789 x 8 + 9 = 987654321
xxxxxxxxxxxxxxxxx
எல்லா எண்களைப்போல ' 3 ' - க்கும் சில அதிசயத் தன்மைகள் உண்டு.... உங்கள் நண்பர்களிடம் சொல்லி அசத்த ஒரு ' 3 ' மேஜிக் இதோ :
3 X 1 X 37 = 111
3 X 2 X 37 = 222
3 X 3 X 37 = 333
3 X 4 X 37 = 444
3 X 5 X 37 = 555
3 X 6 X 37 = 666
3 X 7 X 37 = 777
3 X 8 X 37 = 888
3 X 9 X 37 = 999
xxxxxxxxxxxxxxxxxxx
நண்பரிடம் இப்படிச் சொல்லுங்கள் :
1 . ஏதாவது ஒரு எண்ணை நினைத்துக்கொள் .
2 . அதை இரு மடங்காக்கு .
3 . வரும் விடையுடன் 4 - ஐ கூட்டு .
4 . வரும் விடையை 2 - ஆல் வகு .
5 . வரும் விடையைச் சொல் ... நீ நினைத்த எண்ணைச் சொல்கிறேன் .
அவர் சொல்லும் எண்ணிலிருந்து 2 - ஐ கழித்துச் சொல்லுங்கள் ... ' அடடே ! ' என்று அசந்துவிடுவார் .
ஒரு உதாரணம் : நண்பர் நினைத்த எண் = 15 ; இரு மடங்காக்கினால் 30 ; 4 - ஐக் கூட்டினால் 34 ; 2 ஆல் வகுத்தால் 17 ; இதில் நீங்கள் 2 -ஐ கழித்தால் , நண்பர் நினைத்த எண் 15 .
==========================================
26. விசித்திர கணக்கு வழக்கு :-(தகவல் தமிழ் செய்தித்தாள்)
ஆசிரியர்கள், மாணவர்களை ‘பெயில்’ ஆக்குவது இயல்பான ஒன்று. ஆனால் ஆசிரியரை நீதிபதி ‘பெயில்’ ஆக்கிய விசித்திர சம்பவம், இந்தியாவின் காஷ்மீர் மாநில ஐகோர்ட்டில் நடந்தது.
தெற்கு காஷ்மீரில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் முகமது இம்ரான்கான் என்பவர் ஆசிரியராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து ஒருவர் காஷ்மீர் ஐகோர்டில் ‘ரிட்’ வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில், முகமது இம்ரான்கான் பெற்ற சான்றிதழ்கள் அனைத்தும் உரிய அங்கீகாரம் பெறாதவை என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி முஜாப்பர் உசேன் அட்டார், அந்த ஆசிரியரின் அறிவாற்றலை சோதிக்க விரும்பினார்.
அவருக்கு ஆங்கிலத்தில் ஒரு வரியை கொடுத்து உருது மொழியிலும், உருது மொழியில் ஒரு வரி தந்து ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்குமாறு கூறப்பட்டது.
ஆனால் அவரது மொழி பெயர்ப்பு சரியில்லை என்பதால் நீதிபதியை கவரவில்லை.
உடனே அவரை ‘பசு’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதுமாறு கூறினார். அதிலும் அவர் சரியாக எழுதாததால் தேறவில்லை.
கணக்கு நன்றாக வரும் என்று அவர் கூறியதால், 4–வது கிரேடு கணித வினா ஒன்று தரப்பட்டது. அதிலும் அவரால் சரியான விடையை எழுத முடியவில்லை.
இதையடுத்து அவரை ‘பெயில்’ ஆக்கிய நீதிபதி, அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
=======================================
27.எதிர்மறைக் கணக்கு புதிர்:- (தகவலை சேகரித்து பகிர்ந்துகொண்டவர் செல்வி சாய் நந்தினி மற்றும் செல்வி சாய் ஷிவானி ஆகியோர் வைஷாலி, NCR-புது தில்லி)
உங்க வீட்டுல இந்த ஃபோட்டோ இருந்தா உடனே தூக்கி போடுங்க...
உங்களுக்கு ஓவியங்கள் மற்றும் கலைகளின் மேல் அலாதியான பிரியம் இருக்கலாம். இந்த காரணத்தால், வீடு மற்றும் அலுவலகங்களில் பல வித்தியாசமான ஓவியங்களை வைத்திருக்கலாம். ஆனால் குறிப்பிட்ட சில ஓவியங்கள் வாஸ்து சாஸ்திரத்தின் படி, எதிர்மறை ஆற்றலை ஈர்த்து, வெற்றிக்கு தடையை ஏற்படுத்துவதோடு, பல பிரச்சனைகளையும் சந்திக்க வைக்கும்.
அப்படி எந்த மாதிரியான ஓவியங்கள் நம் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. எனவே தமிழ் போல்ட் ஸ்கை, எந்த மாதிரியான ஃபோட்டோக்களை வீடு அல்லது அலுவலகங்களில் வைத்திருக்கக்கூடாது என்று கொடுத்துள்ளது. அதைப் படித்து தெரிந்து, அவற்றை உடனே அகற்றுங்கள்.
நடன கலைஞர்கள் பலரும் நடராஜர் சிலையை தங்கள் வீடுகளில் வைத்திருக்காவிட்டாலும், அதன் ஓவியத்தை அல்லது ஃபோட்டோவை வைத்திருப்பார்கள். இருப்பினும் சிவனின் இந்த நடன நிலை அழிப்பதற்கானது என்பதால், இவற்றை வைத்திருப்பது நல்லதல்ல.
கப்பல் மூழ்குவது போன்ற ஓவியத்தை வீடு அல்லது அலுவலகங்களில் வைத்திருந்தால், அது எதிலும் வெற்றியைக் கிடைக்கச் செய்யாது. ஆகவே இந்த ஓவியத்தை உடனே அகற்றுங்கள்.
நீர் வீழ்ச்சி போன்ற ஓவியங்கள் கண்களைக் கவரும் படி மிகவும் அழகாக இருக்கத் தான் செய்யும். ஆனால் இம்மாதிரியான ஓவியங்களை வீட்டில் வைத்திருந்தால், அது வீட்டில் வறுமையைக் கொண்டு வரும்.
புலியின் ஓவியம் பார்ப்பதற்கு அட்டகாசமாக இருக்கலாம். ஆனால் இதன் ஓவியத்தை வீட்டில் வைத்தால், வீட்டில் சண்டைகளும், வாக்குவாதங்களும் தான் அதிகரிக்கும்.
தாஜ்மஹால் காதலின் நினைவுச் சின்னமாக இருக்கலாம். இருப்பினும் இது ஒரு கல்லறை என்பதால், இதன் ஓவியத்தை வீட்டில் வைத்தால், எதிர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும்.
மகாபாரத கதாபாத்திரங்கள் கொண்ட ஓவியத்தை வீட்டில் வைத்திருந்தால், அதனால் மன அழுத்தம் அதிகரிப்பதோடு, வீட்டில் சண்டைகளும் அதிகரிக்கும்.
குழந்தைகள் அழுவது போன்ற ஓவியங்கள் பார்ப்பதற்கு மார்டன் ஆர்ட் போன்று காணப்படலாம். ஆனால் இந்த ஓவியங்களை வீட்டில் வைத்திருந்தால், அது துரதிர்ஷ்டத்தை தான் கொண்டு வரும்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, போர், பில்லி சூனியம் அல்லது பேய் போன்ற ஓவியங்கள், வீட்டில் உள்ளோரின் மனதை பாதிப்பதோடு, வீட்டில் வாக்குவாதத்தை அதிகரிக்கும.
=======================================
28. பாகப்பிரிவினைக் கணக்கு புதிர் விளையாட்டுக்கு கதை:- (தகவலை சேகரித்து பகிர்ந்துகொண்டவர் செல்வன் ஸ்ரீ சக்ரி செந்தில் குமார், வைஷாலி NCR-புது தில்லி)
"ஏன் என்னை வழி மறிக்கிறீர்கள்?" என்று கேட்டபோது," எங்களைக் கவனித்துவிட்டுச் செல்" என்றனர் காவலர்.அப்போது ராமன் புரிந்து கொண்டான்.அவர்கள் கையூட்டுக் கேட்கின்றனர் என்பதை.அவர்களுக்கு அவர்கள் வழியிலேயே சென்று அறிவுறுத்தவேண்டும் என முடிவு செய்து கொண்டான்.
"ஐயா, நான் ஒரு புலவன் அரசரிடம் பாடிக் காட்டிப் பரிசில் பெற்றுப் போகவே வந்தேன்.உங்கள் விருப்பப் படியே அரசர் கொடுக்கும் பரிசிலை நான் அப்படியே உங்களிடம் தந்து விடுகிறேன். நீங்கள் பார்த்துக் கொடுப்பதை நான்பெற்றுச் செல்கிறேன்." என குழைந்து பேசினான்.
காவலரும் அவனை எச்சரித்து உள்ளே அனுப்பினர்.
அவைக்குள் நுழைந்த ராமன் மக்களுடன் கலந்து அமர்ந்து கொண்டான்.அந்த அவைக்கு பல வழக்குகள் வந்தன. அவற்றுக்கெல்லாம் அப்பாஜி யின் ஆலோசனையின் படி மன்னர் தீர்ப்பு வழங்கிக் கொண்டிருந்தார்.அப்போது மூன்று சகோதரர்கள் வந்து ராயரை வணங்கி நின்றனர்.
அவர்களின் வழக்கு என்ன என்று மன்னர் கேட்டார். வந்த மூவரில் மூத்தவன் கூறினான். "மகாராஜா, எங்கள் தந்தையார் ஒரு யானைப் பாகன். அவரிடம் இருந்த சொத்துக்கள் மொத்தம் பதினேழு யானைகள்தான்.அவற்றை எங்களுக்குப் பாகம் பிரித்து எழுதி வைத்துள்ளார்."
"அப்புறமென்ன? அவரது சொல்படி பாகத்தைப் பிரித்துக் கொள்ள வேண்டியதுதானே? அதிலென்ன சிக்கல்?"
"அதில்தான் சிக்கல் மகாராஜா,"
அமைதியாக நின்றிருந்த அப்பாஜி கேட்டார்."உங்கள் வழக்கை விவரமாகக் கூறுங்கள்.அப்போதுதான் மன்னர் சரியான தீர்ப்பு வழங்க முடியும்."இப்போது இரண்டாவது மகன் கூறினான்."பிரபு, எங்கள் தந்தையார் மூத்தவனுக்கு சரிபாதி யானையைத் தரச் சொல்லியுள்ளார்.பதினேழில் பாதி எட்டரை அல்லவா?எப்படிக் கொடுப்பது? முதலாவதுதான் சிக்கல் என்றால் அடுத்தது அதற்குமேல் இருக்கிறது.""அதையும் சொல்லிவிடப்பா."என்றார் அப்பாஜி. இரண்டாவது மகனான எனக்கு மீதியில் மூன்றில் ஒரு பங்கு. எட்டரையில் மூன்றில் ஒரு பங்கு எப்படிக் கணக்கிடுவது?""மூன்றாமவனுக்கு?" என்று கேட்ட ராயரிடம் "மீதியில் மூன்றில் ஒரு பங்கு என்று எழுதிவிட்டு இறந்துவிட்டார். இந்த உயிலின் படி தாங்கள்தான் எங்களின் பாகத்தைச் சரியாகப் பிரித்துத் தரவேண்டும். "என்று வேண்டுகோள் வைத்தான் மூன்றாவது மகன். அப்பாஜியும் கிருஷ்ண தேவராயரும் சிந்தனை வசப்பட்டனர். எவ்வளவு யோசித்தும் கணக்கைத் தீர்க்கும் வழி தோன்றவில்லை.
ஆனால் இதில் ஏதோ ரகசியம் இருக்கும் என்று மட்டும் மன்னருக்குத் தெரிந்தது. ஆனால் என்னவென்று புரியவில்லை.வெகு நேரம் சபை அமைதியாக இருந்தது.மக்களின் கூட்டத்திலிருந்து தெனாலிராமன் எழுந்து நின்றான்."மாமன்னர் என்னை மன்னிக்க வேண்டும். தாங்கள் சம்மதித்தால் இந்த வழக்கை நான் தீர்த்து வைக்கிறேன்" என்றான் வணங்கியபடியே.
ராமகிருஷ்ணனைக் கண்டு மன்னர் புன்னகைத்தார். "வா ராமகிருஷ்ணா, உன் தீர்ப்பை நீ சொல்."ராமன் உடனேஓடிச் சென்று சபை நடுவே நின்றான்."மகாராஜா, இப்போது பதினேழு யானை பொம்மைகளைக் கொண்டு வரச் சொல்லுங்கள்." என்றான். அதன்படியே பொம்மைகள் ராமனுக்கு முன்னால் வைக்கப் பட்டன.
எல்லோரும் பாருங்கள். இப்போது நானும் ஒரு யானையில் வருகிறேன்.எங்கே இன்னொரு யானைபொம்மை கொண்டு வாருங்கள்."
இன்னொரு யானை பொம்மை கொண்டு வரப்பட்டது.
ராயர் கேள்விக்குறியுடன் ராமனைப் பார்த்தார்.ராமன் "மகாராஜா மன்னிக்க வேண்டும்.நீதி சொல்லும் நான் யானையின் மேல் வரக்கூடாதா?"என்று சொல்லவே சிரித்தபடி அனுமதியளித்தார் ராயர்.
இப்போது ராமன் கணக்கை சீராக்கத் தொடங்கினான்.
"ஐயா,இப்போது மொத்தம் பதினெட்டு யானைகள் உள்ளன அல்லவா?
முதல் மகனான உங்களுக்கு எவ்வளவு யானைகள்?"
"இவற்றில் சரி பாதி."
"அப்படியானால் ஒன்பது.சரிதானே?"
"சரிதான் ஐயா."தன்னிடம் கொடுக்கப்பட்ட ஒன்பது யானைகளுடன் அவன் விலகி நின்றான்.."
அடுத்த மகன் வாருங்கள்" அடுத்தவன் வந்து நின்றான்.
"உங்களுக்கு எவ்வளவு யானைகள்?"
"மீதியில் மூன்றில் இரண்டு பங்கு."
"மீதி எவ்வளவு?"
"ஐயா,மீதி ஒன்பது அதில் மூன்றில் இரண்டு பங்கு ஆறு."
"இதோ உமக்கு ஆறு யானைகள்."
கடைசியாக மீதி மூன்று யானை பொம்மைகள் இருந்தன.
மூன்றாமவனை அழைத்த ராமன் "உமக்கு எவ்வளவு யானைகள் ?" என்று கேட்டான்.
அவனும் "எனக்கு மீதியில் மூன்றில் இரண்டு பங்கு" எனக கூற அவனுக்கு மீதியிருந்த மூன்று யானைகளில் இரண்டு யானையைக் கொடுத்தான் ராமன்.
"இப்போது மீதி இருப்பது ஒரு யானை. நான் ஏறி வந்த அந்த யானையின் மீதே நான் ஏறிச் செல்லலாமா மகாராஜா"?
என்று கேட்டுவிட்டு பணிவுடன் நின்றான் ராமன்.
உயிலின்படி முதல் மகனுக்கு ஒன்பது யானைகளும் இரண்டாவது மகனுக்கு ஆறு யானைகளும் மூன்றாவது மகனுக்கு இரண்டு யானைகளும் உரியன என தீர்ப்புக்கூறினார் மன்னர்.சிறப்பாக பாகப்பிரிவினை செய்த தெனாலிராமனைப் பாராட்டிய ராயர் அவனுக்கு என்ன பரிசு வேண்டும் எனக் கேட்டார்.
தெனாலி ராமனுக்கு உடனே வாயில்காப்போனின் நினைவு வந்தது."மகாராஜா, நான் கேட்கும் பரிசைத் தாங்கள் தட்டாமல் தரவேண்டும். மறுக்கக்கூடாது.
""மறுக்கமாட்டேன். கேள் ராமகிருஷ்ணா"
"எனக்குப் பரிசாக நூறு கசையடிகள் வேண்டும்.அதையும் இந்தச் சபையிலேயே தரவேண்டும்." அனைவரும் திகைத்தனர். ராமனுக்கு என்ன பைத்தியமா?
ஆனால் ராமன் மீண்டும் அதையே கூறவே வேறு வழியில்லாமல் மன்னரும் காவலனிடம் ராமனுக்கு நூறு கசையடிகள் கொடுக்கும்படி ஆணையிட்டார்.
அவனும் கசையைத் தடவியபடி வந்து நின்றான்.அப்போது ராமன் "மகாராஜா, எனக்குக் கிடைக்கும் பரிசில் பாதியை ஒருவருக்கும் மீதியை மற்றொருவருக்கும் தருவதாக வாக்களித்துள்ளேன் அவர்களுக்கு இந்தப் பரிசுகளைத் தரவேண்டும்."என்றான்.
ராயர் புரிந்து கொண்டார். அவர் கண்கள் சிவந்தன.உடனே அவர்களை அழைத்து வருமாறு கட்டளையிட்டார்.இரண்டு வாயில் காப்போரும் நடுங்கியபடியே வந்து நின்றனர்.
மன்னர் "என் நாட்டிலே லஞ்சமா கேட்டாய்?அரண்மனையில் பணிபுரியும் நீ லஞ்சம் கேட்டதற்காக உன் தலையைக் கொய்தால் என்ன?" எனக் கேட்டு அவர்களுக்கு ஐம்பது கசையடிகள் கொடுத்துச சிறையிலும் அடைக்கச் சொல்லி ஆணை பிறப்பித்தார்.
பின்னர் ராமகிருஷ்ணனுக்குப் பெரும் பொருள் பரிசாகக் கொடுத்துப் பாராட்டினார்.
சரியானபடி தீர்ப்புக் கூறியதுமல்லாமல் லஞ்சம் கேட்டவனுக்கும் அறிவு வரும்படி செய்த தெனாலிராமனைப் பாராட்டியபடி மக்கள் கலைந்து சென்றனர்.
==========================================
29.குட்டிப்போடும் வட்டிக்கணக்கு புதிர் விளையாட்டுக்கு கதை:- (தகவலை சேகரித்து பகிர்ந்துகொண்டவர் செல்வன் ஸ்ரீ சக்ரி செந்தில் குமார் வைஷாலி NCR-புது தில்லி)
விஜய நகரத்தில் ஒரு சேட் வசித்து வந்தான். அவன் வட்டித் தொழில் நடத்தி வந்தான். மக்களிடம் அநியாயவட்டி வாங்கி வந்தான். அதாவது ரூபாய்க்கு ஐம்பது பைசா வட்டி இதனால் வட்டிக்கு அவனிடம் பணம் வாங்கும் மக்கள் அவதியுற்றனர்.
இதையறிந்த தெனாலிராமன் அந்த சேட்டை நயவஞ்சகமாக திருத்த திட்டம் தீட்டினான்.
அந்த சேட் பாத்திரங்களையும் வாடகைக்கு விடுவதுண்டு. ஒரு நாள் தெனாலிராமன் சேட்டைச் சந்தித்து "தன் மகனுக்குக் காதணி விழா நடைபெறுவதாகவும் அதற்குச் சில பாத்திரங்கள் வாடகைக்கு வேண்டுமென்றும் விழா முடிந்ததும் கொண்டு வந்து தருவதாகவும்" கூறினான்.
அதன்படியே சேட்டும் பாத்திரங்களை தெனாலிராமனுக்குக் கொடுத்தான். சில நாள் கழித்து தெனாலிராமன் அந்தப் பாத்திரங்களோடு சில சிறிய பாத்திரங்களையும் சேர்த்துக் கொடுத்தான்.
இதைப் பார்த்த சேட் "நான் பெரிய பாத்திரங்கள் மட்டும் தானே கொடுத்தேன். சிறிய பாத்திரங்களை நான் கொடுக்கவில்லையே......... அவற்றையும் ஏன் கொடுக்கிறாய்" என்று கேட்டான்.
அதற்குத் தெனாலிராமன் "உமது பாத்திரங்கள் "குட்டி" போட்டன. அவற்றையும் உம்மிடம் கொடுப்பது தானே முறை. ஆகையால் தான் அவற்றையும் சேர்த்து எடுத்து வந்தேன்" என்றான்.
இவன் சரியான வடிகட்டியான முட்டாளாக இருப்பான் போல என்று எண்ணி "ஆமாம் ஆமாம். இவற்றை நான் உன்னிடம் கொடுக்கும் போது சினையாக இருந்தன. ஆகையால் தான் குட்டி போட்டுள்ளன" என்று அனைத்துப் பாத்திரங்களையும் பெற்றுக் கொண்டான். சில மாதங்கள் கழித்து "தன் வீட்டில் விசேடம் நடைபெற இருப்பதாகவும் அதற்கு மன்னரும் அரசுப் பிரதானிகளும் கலந்து கொள்ள இருப்பதாகவும் அதற்கு தங்கப் பாத்திரங்களும் வெள்ளிப்பாத்திரங்களும் வேண்டும்" என்று கேட்டான்.
இவனுடைய நாணயத்தை அறிந்த சேட் பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களைக் கொடுக்க சம்மதித்தான். கொடுக்கும் போது இவை கர்ப்பமாக இருக்கின்றன. விரைவில் குட்டிபோடும். இவற்றின் குட்டிகளையும் சேர்த்துக் கொண்டு வா என்றான்.
"சரி" என்று ஒப்புக் கொண்டு தங்க வெள்ளிப் பாத்திரங்களைத் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றான். சில மாதங்கள் ஆயின. பாத்திரங்கள் திரும்ப வருவதாகக் காணோம்.
ஆகையால் சேட் நேரே தெனாலிராமன் வீட்டுக்குச் சென்றான். தெனாலிராமனைச் சந்தித்து "இவ்வளவு நாட்களாகியும் ஏன் பாத்திரங்களைத் திரும்ப கொண்டு வந்து தரவில்லை" என மிகக் கோபமாக கேட்டான்.
அதற்கு தெனாலிராமன் "சொன்னால் நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்று தான் தங்களைப் பார்க்க வரவில்லை. பாத்திரங்கள் கர்ப்பமாக இருந்தனவா............... பிரசவம் கஷ்ட்மாக இருந்தது அதனால் அனைத்துப் பாத்திரங்களும இறந்து விட்டன" எனத் தெரிவித்தான்.
இதைக் கேட்ட சேட் "யாரிடம் விளையாடுகிறாய்? பாத்திரங்கள் சாகுமா?" எனக் மிகக் கோபமாகக் கேட்டான். அதற்குத் தெனாலிராமன் "பாத்திரங்கள் குட்டி போடும் போது அவை ஏன் இறக்காது" என்று கேட்டான்.
"என்னுடன் வா மன்னரிடம் முறையிடுவோம் அவரின் தீர்ப்புப்படியே நடந்து கொள்வோம்" என்றதும்
வேக, வேகமாக அவ்விடத்தை விட்டு நகன்றான் சேட்.
இருப்பினும் தெனாலிராமன் அவனை விடாது மன்னரிடம் இழுத்துச் சென்று மக்களிடம் அநியாய வட்டி வாங்குவது பற்றி முறையிட்டான்.
எல்லா விவரங்களையும் கேட்டறிந்த மன்னர் "பாத்திரங்கள் குட்டி போடும் என்றால் அவை பிரசவத்தின் போது ஏன் இறக்கக் கூடாது? உன் பேராசைக்கு இது ஒரு பெரு நஷ்டமே ஆகையால் இனிமேலாவது மக்களிடத்தில் நியாயமான வட்டி வாங்கு" என புத்திமதி கூறி அவனை அனுப்பி வைத்தார் மன்னர்.
தெனாலிராமனின் புத்திசாலித் தனத்தை மன்னர் மனமாரப் பாராட்டி பரிசுகள் வழங்கினார்
=========================================
30. வட்டிக்கணக்கு புதிர் :- (தகவலை சேகரித்து பகிர்ந்துகொண்டவர் செல்வி மொஹௌக் பேகம், வைஷாலி, NCR- புது தில்லி)
பள்ளி மாணவர்களுக்கான எளிய கணித செயல்பாடுகளை பார்க்கும் வரிசையில், வட்டி கணக்குகளில் முக்கிய ஒன்றான, சதவீதம் காணும் வழிமுறைகளை இங்கு காணலாம். சதவீதம் கண்டுபிடிக்கும் கணக்குகள் அனைவருக்கும் தெரிந்தது என்றாலும், அதில் தசம புள்ளியிடுவதில் பலர் தவறு செய்து விடுகின்றனர். தற்போது எந்தவொரு எண்ணிற்கும், அவற்றின் 15 சதவீதம் காணும் முறையினை காணலாம். இதற்காக நாம் பின்பற்ற வேண்டியது மூன்றே மூன்று படிகள் தான்.
== > முதலில் சதவீதம் காண வேண்டிய எண்ணை 10 ஆல் வகுத்து கொள்ள வேண்டும்.
உதாரணமாக எண் 1,600ல் அதன் 15 சதவீதத்தை காண வேண்டும் என்றால், 1,600ஐ 10 ஆல் வகுத்து கொள்க.
1600 / 10 = 160
== > முதல் படியில் விடையாக கிடைத்த எண்ணை, மீண்டும் 2 ஆல் வகுத்து கொள்ள வேண்டும்.
இதில் முதல் படியில் விடையாக கிடைத்த 160ஐ எண் 2 ஆல் வகுத்து கொள்க.
160 / 2 = 80
== > இறுதியாக, முதல் மற்றும் இரண்டாம் படிகளில் நமக்கு கிடைத்த 2 விடைகளையும் ஒன்றுடன் ஒன்றை கூட்டிக் கொள்ள வேண்டும்.
இதில் முதல் படியில் கிடைத்த விடையான 160ஐயும், இரண்டாம் படியில் கிடைத்த விடையான 80ஐயும் கூட்டிக் கொள்க.
160 + 80 = 240
தற்போது நமக்கான சதவீத விடை எளிதாக கிடைத்து விடுகிறது.
ஃ 1600 -- 15% == 240
மற்றுமொரு உதாரணமாக.,
3700 -- 15%
== > 3700 / 10 = 370
== > 370 / 2 = 185
== > 370 + 185 = 555
ஃ 3700 -- 15% == 555...
நன்றி தினகரன் வாரமலர்
============================================
31. மரண கணக்கு புதிர்:-( தகவலை சேகரித்து பகிர்ந்துகொண்டவர் செல்வி மொஹௌக் பேகம், வைஷாலி, NCR-புது தில்லி)
மரணம் ஏற்படுவதை யாராவது முன் கூட்டியே கணித்துக் கூற முடியுமா, அது சாத்தியம் தானா? நிச்சயமாக முடியாது என்பதுதான் நமது பதிலாக இருக்கும். சகலமும் அறிந்த ஜோதிடர்கள் கூட இந்த விஷயத்தில் சற்று தடுமாறத்தான் செய்வர். ஆனால் ஒருவரது மரணத்தை முன் கூட்டியே கணிப்பது மட்டுமல்ல; அவர் இறக்கும் வரை அவர் அருகிலேயே இருந்து அவரை வழியனுப்பி வைத்து விட்டு வருகிறது ஒரு பூனை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. அந்த அமானுஷ்யப் பூனையின் பெயர் ‘ஆஸ்கர்’
அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து பகுதியில் உள்ள ஒரு நகரம்தான் ரோடே ஐலண்ட். இங்கு ஸ்டீரே என்ற இடத்திலுள்ள முதிய நோயாளிகளுக்கான மருத்துவ மற்றும் உயர் சிகிச்சைப் பாதுகாப்பு மையம் மிகவும் புகழ் பெற்றது. அல்சீமர், பக்கவாதம், பர்கின்சன் போன்ற பல நோய்களால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகள் இங்கு தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இங்குதான் ஒரு சிறிய குட்டியாக வந்து சேர்ந்தது அமானுஷ்யப் பூனை ஆஸ்கர். முதலில் அதன் செயல்பாடுகளை யாரும் கவனிக்கவில்லை. அது ஒரு சாதாரணப் பூனை என்றே அனைவரும் எண்ணிக் கொண்டிருந்தனர். ஆனால் ப்ரௌன் யுனிவர்சிடியைச் சார்ந்த ஆல்பர்ட் மருத்துவப் பள்ளியில் பேராசிரியராகப் பணியாற்றுபவரும், அந்த ரோலண்ட் மருத்துவமனையின் மருத்துவர்களில் ஒருவருமான டாக்டர் டேவிட் டோசா, இந்தப் பூனையேச் சற்றே அவதானித்து சில செய்திகளை வெளியிட்ட போதுதான் அனைவரது கவனமும் ஆஸ்கர் மீது திரும்பியது.
அப்படி என்னதான் செய்தது ஆஸ்கர்? வழக்கமாக மற்ற பூனைகளைப் போலவே வலம் வரும் ஆஸ்கர், யாராவது ஒருவர் மரணிக்கப் போகிறார் என்று தனது அமானுஷ்ய ஆற்றலால் உணர்ந்து கொண்டால் உடனே அந்த நபரின் படுக்கையறைக்குச் சென்று விடும். அங்கேயே பல மணி நேரம் அமர்ந்திருக்கும். அப்போது அதன் உடல், கண்கள் என அனைத்தும் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும். அந்த நபர் இறக்கும் வரை காத்திருந்து, அவர் உயிர் பிரிந்ததும் வித்தியாசமான ஒரு குரலை எழுப்பி விட்டு அங்கிருந்து வேகமாக நகர்ந்து சென்று விடும்.
இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல. நூற்றுக்கணக்கான மரணங்களை முன் கூட்டியே கணித்திருக்கிறது ஆஸ்கர். அதனால் இங்கே தங்கியிருப்பவர்களுக்கு ’ஆஸ்கர் பூனை’ என்றால் ஒருவித அச்சம்.
ஒருவர் இறக்கப் போகிறார் என்பதை உணர்ந்து கொள்ளும் ஆஸ்கர் முதலில் அவரது படுக்கை அருகே சென்று வித்தியாசமான ஒரு ஓசையை எழுப்பும். பின்னர் அங்கேயே அமர்ந்து விடும். அதைக் கண்ட மருத்துவர்களும், செவிலிகளும் எச்சரிக்கை உணர்வை அடைந்து மேல் சிகிச்சைகளுக்கு உடனடியாகத் தயாராகின்றனர். நோயாளின் உறவினர்களும் எச்சரிக்கை அடைந்து, முன்னேற்பாடாகச் செய்ய வேண்டிய செயல்களைச் செய்ய ஆரம்பிக்கின்றனர்.
இங்கு பணியாற்றும் மருத்துவர்களோ அதன் செயல்பாடுகளைக் கண்டு வியப்பதுடன், இது எப்படி சாத்தியம் என்றும் புரியாமல் விழிக்கின்றனர். ஆனால் டேவிட் டோஸா இதுபற்றிக் கூறும் போது, “ ஆஸ்கருக்கு கூடுதல் புலனறிவு மிக அதிகமாக உள்ளது. அதன் சக்தியால், இறப்பிற்கு முன் ஓர் உடலில் ஏற்படும் மிக நுணுக்கமான வேதியியல் மற்றும் உயிரியல் மாற்றங்களை அதனால் எளிதாக உணர்ந்து கொள்ள முடிகிறது. அதனால் இறக்கும் நபர் யார் என்பதை முன் கூட்டியே அதனால் கணிக்க முடிறது” என்கிறார்.
”சரி, ஆனால் இறக்கும் நபர் அருகே சென்று ஏன் ஆஸ்கர் அமர வேண்டும். எதற்கு அந்த இறப்பை உற்று கவனித்துக் கொண்டிருக்க வேண்டும்?” என்ற கேள்விக்கு விடையளிக்க அவரால் முடியவில்லை.
==================================
32. சித்திரக்கணக்கு புதிர் :- (தகவலை அனுப்பி பகிர்ந்துகொண்டவர் செல்வி டி.துர்கா சக்திராஜ், வைஷாலி, NCR-புது தில்லி)
1. கீழ்காணும் " ? " குறியிட்ட இடத்தில் வரும் எண் என்ன?
2. கீழ்காணும் " ? " குறியிட்ட இடத்தில் வரும் எண் என்ன?
3. கீழ்க்கண்ட மூன்று தேதிகளிலும் உள்ள ஒற்றுமை என்ன?
4. இந்த " UMNI " நான்கு எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்தி, ஏழு
எழுத்துக்களில் வரும் வாக்கியத்தை அமையுங்கள்...
5. இவ் எண்களின் மாறுபட்ட ஒரு எண் (odd one out) என்ன? விளக்கத்துடன் கூறவும்...
67626, 36119, 96131, 41225, 78428.
சரியான விடையைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்.
=====================================
33. வாகன விளையாட்டு கணக்கு புதிர்:- சரியான விடைகளைக்கூறி சிறப்பு பரிசுகளை வெல்லுங்கள்.தொகுத்து வழங்கியவர்:- (கோகி )
அது ஒரு விளையாட்டு வாகனம் (கார்) மகிழூந்து. இப்போது நீங்கள் அந்த விளையாட்டு வாகனத்தை இயக்குகிறீர்கள் அல்லது ஒட்டுகிறீர்கள் என்றால்.
ஓட்டுனரான உங்களுக்கு பக்கத்தில் இருக்கும் இருக்கையில் (10) பத்து கிலோ எடை கொண்ட உங்களது சகோதரனை உட்காரவைத்து. வாகனத்தின் பின்புறம் இருக்கும் இரண்டு இருக்கைகளில் (25) இருபத்தைந்து கிலோ மற்றும் (30) முப்பது கிலோ எடை கொண்ட உங்களது இரண்டு சகோதரிகளை உட்காரவைத்து வாகனத்தை செலுத்துகிறீர்கள் என்றால் ..... கீழ் வரும் கேள்விகளுக்கான சரியான விடையைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்.
1. வாகனத்தில் இருக்கும் மொத்த இருக்கைகள் எத்தனை?
2. வாகன ஓட்டுனரின் எடை என்ன?
3. வாகனத்தில் அமர்ந்திருக்கும் அனைவரின் மொத்த எடை என்ன?
4. வாகனத்தில் இருக்கும் உங்களின் இளைய மற்றும் மூத்த சகோதர சகோதரிகள் எத்தனை பேர்?
5. வாகனத்தில் பெண்கள் அதிகமா? ஆண்கள் அதிகமா?
சரியான விடைகளைக்கூறி சிறப்பு பரிசுகளை வெல்லுங்கள். சரியான விடைகளை 10-04-2017 தேதிக்கு முன்னதாக "vaishalireaderscircle@gmail.com" மின்னஞ்சலில் அனுப்பவேண்டும்.
சரியான விடையையும், சரியான விடை எழுதியவர்களுக்கான பரிசுகளும் 16-04-2017 (3-வது ஞாயிறு) அன்றைய, 38-வது வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில் வழங்கப்படும்.
போட்டிக்கான சரியான விடையை பலரும் குறிப்பிட்டிருந்தால், பரிசு பெறுபவர்-குலுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்.(கதைக் கருத்தாக்கம்-ரேடியோ கோபாலகிருஷ்ணன்).
==============================================
34. வெற்றிக்கணக்கு புதிர்:- எப்போதும் ஜெயிக்க 25 டிப்ஸ்:-(பதிவு செய்தவர் செல்வி ஜி. ப்ரீதி கெளரி சங்கரன் -வைஷாலி -NCR-புது தில்லி)
1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.
2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.
3. உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறைகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்.
4. வருமானத்திற்கான வழி மிகவும் முக்கியம். அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள்.
5. முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங்கள். வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள்.
6. விடியும் முன்னால் எழுந்து விடுங்கள். ஒருநாளின் அலுவல்களை முன் கூட்டியே திட்டமிடுங்கள்.
7.முப்பதுகளைக் கடக்கும் முன், மற்றவர்கள் சொல்லாமலே சர்க்கரை, உப்பு ஆகியவற்றை கணிசமாகக் குறைத்து விடுங்கள். முடிந்தால் தவிர்த்து விடுங்கள்.
8. எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.
9. நிற்கையில் நேராக நில்லுங்கள். பேசுகையில் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்.
10. புன்னகை முகமும் இதமான பேச்சும் உங்கள் இயல்புகளாகவே இருக்கட்டும்.
11. வாரம் மூன்று முறை யாவது உடற்பயிற்சி செய்யுங்கள். முடிந்த வரை நடந்து செல்லுங்கள்.
12.சிறு குறிப்போ, கடிதமோ, கட்டுரையோ, பிழையில்லாமல் எழுதுவதில் கவனம் செலுத்துங்கள்.
13.ஒருவர் இல்லாதபோது அவருடைய சிறப்பம்சங்களையே பேசுங்கள்.
14. அரட்டைப் பேச்சுக்களையும் அபவாதங்களையும் ஊக்குவிக்காதீர்கள்.
15. மற்றவர்களின் தவறுகளை மன்னி யுங்கள். ஒரு போதும் மறக்காதீர்கள்.
16. உங்கள் வாழ்வின் ரகசிய அம்சங்கள் முடிந்தவரை குறைவாகவே இருக்கட்டும்.
17. குடும்பம் என்கிற எல்லையைக் கடந்து, பொது அமைப்பு எதிலாவது ஈடுபடுங்கள்.
18. மாதம் ஒரு முறையாவது உங்கள் தகுதிகளையும் தவறுகளையும் பட்டியல் இடுங்கள்.
19. மற்றவர்களைப் பேச விடுங்கள். அவர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறையை உணர்த்துங்கள்.
20.உங்கள் நேரத் திற்கும், மற்றவர்கள் நேரத்திற்கும் உரிய மரியாதை கொடுங்கள்.
21. உங்களிடம் இல்லாத தகுதிகள் இருப்பதாக நம்பவோ நம்ப வைக்கவோ முயலாதீர்கள்.
22. உங்கள் திறமைகளை நீங்களே விவரித்துக் கொண்டிரா தீர்கள். உரிய நேரத்தில் நிரூபியுங்கள்.
23. மேடைக் கூச்சம், கேமரா கூச்சம் இல்லாமல் இருங்கள்.
24. தண்ணீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்துவது தான் எதிர்காலத்திற்காக சேர்க்கும் சொத்துக்கள்.
25. உங்கள் தனிப்பட்ட நம்பிக்கைகளையும் பழக்கங் களையும் மற்றவர்கள் மேல் திணிக்காதீர்கள்
==============================================
35. சேவை கணக்கு புதிர் :- வைஷாலி வாசகர் வட்டத்தின் சரியான விடை கூறி பரிசுகளை வெல்லுங்கள்... போட்டி என்-35 இதழ்=12 பங்குனி மாதம்-தேதி 19-03-2017.
அம்மாவுக்கு உதவுவதற்காக நீங்களும் அம்மாவுடன் சேர்ந்து அழுக்கு துணிகளை மட்டும் துவைப்பதாகக் கொண்டால், அப்பாவின் துணி அலமாரியில் (2)-இரண்டு கால் சட்டையும், (2)-இரண்டு அழுக்கான முழுக்கை சட்டை என மொந்தம் (4) நான்கு துணிகள் இருந்தது, அம்மாவின் அலமாரியிலிருந்த துணிகள் மொத்தம் (6) ஆறு துணிகள் இருந்தது, உங்களின் அழுக்கு துணிகள் (4) நான்கும், உங்களுக்கு பிடித்த குட்டி பொம்மை அணிந்திருந்த துணி (1) ஒன்றும் இருந்தன.
அனைத்து அழுக்கு துணிகளையும் ஒன்றாக சேர்த்து துணி துவைக்கும் எந்திரத்தில் போட்டு, துவைத்து முடித்து, ....துவைத்த துணிகளை கொடியில் உலர்த்துவதாகக் கொண்டால்...... கீழ் வரும் கேள்விகளுக்கான சரியான விடையைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்.
1) நீங்கள் மொத்தம் எத்தனை துணிகளை துவைத்தீர்கள்?
2) நீங்கள் துவைத்து உலர்த்திய துணிகளில், ஒரு(1) துணி உலர்வதற்கு (அல்லது) காய்வதற்கு (1) ஒரு மணி நேரம் தேவை என்றால், நீங்கள் துவைத்த மொத்த துணிகளும் உலர்வதற்கு (அல்லது) காய்வதற்கு எத்தனை மணி நேரம் தேவை?
3)துவைத்த துணிகளில் ஆண்கள் அணியும் துணிகள் மொத்த எண்ணிக்கை எத்தனை, பெண்கள் அணியும் துணிகள் மொத்த எண்ணிக்கை எத்தனை?
4)நீங்கள் துவைத்த துணியில், குறைவான எண்ணிக்கை கொண்ட துணி யாருடையது?
5)நீங்கள் துவைத்த துணியில், அதிக எண்ணிக்கை கொண்ட துணி யாருடையது?
சரியான விடைகளைக்கூறி சிறப்பு பரிசுகளை வெல்லுங்கள். சரியான விடைகளை 10-04-2017 தேதிக்கு முன்னதாக "vaishalireaderscircle@gmail.com" மின்னஞ்சலில் அனுப்பவேண்டும்.
சரியான விடையையும், சரியான விடை எழுதியவர்களுக்கான பரிசுகளும் 16-04-2017 (3-வது ஞாயிறு) அன்றைய, 38வது வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில் வழங்கப்படும்.
போட்டிக்கான சரியான விடையை பலரும் குறிப்பிட்டிருந்தால், பரிசு பெறுபவர்-குலுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்.
(கதைக் கருத்தாக்கம்-ரேடியோ கோபாலகிருஷ்ணன்)
===============================================
36. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்தவை. இந்த சிறப்புகளெல்லாம் அந்த மாதங்களில் அமையும் சிறப்புவாய்ந்த நாட்களை நினைவுகூறுமாறு, வழிபாடுகளையும், திருவிழாக்களையும் கொண்டே அமைகின்றன. அவ்வகையில் புதிர் சிலவற்றை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
@ பங்குனி தமிழ் மாதங்கள் பன்னிரெண்டில் கடைசி மாதமாகும்.
@ சித்திரை முதல் பங்குனி வரையான தமிழ் மாதங்கள் சூரிய மாதங்களாகும். அதாவது சூரியனைப் பூமி சுற்றுவதனால் ஏற்படும் பூமிக்குச் சார்பான சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்தே இம் மாதங்கள் கணிக்கப்படுகின்றன. சூரியன் இராசிச் சக்கரத்தில் மீன இராசிக்குச் செல்வது பங்குனிமாதப் பிறப்பைக் குறிக்கிறது. இந்த மாதம் முழுதும் சூரியன் மீன இராசியிலேயே சஞ்சரிக்கும். இந்த மாதம் 30 நாட்களைக் கொண்டது. ஆங்கில காலக்கணிப்பின் படி மார்ச் மாதம் 15 ஆம் நாளிலிருந்து ஏப்ரல் மாதம் 13 ஆம் நாள் வரையான காலப்பகுதி தமிழ்ப் பங்குனி மாதத்துடன் பொருந்துகிறது.
@ மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் முடிப்பர். இந்த நோன்பை காமாட்சி நோன்பு, கவுரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வார்கள். சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் விருத்திக் காக காரடையான் நோன்பு அனுஷ்டிக்க வேண்டும். கார்காலத்தில் விளையும் நெல்லைக் குத்தி, பச்சரிசி மாவுடன் இனிப்பு கலந்து தயாரிப்பதே காரடை ஆகும்.
@ பழந்தமிழர்கள் இந்த மாதம் பங்குனி உத்தரம் பண்டிகையை செய்கிறார்கள், பங்குனி உத்தரம் என்பது சைவக் கடவுளாகிய முருகனுக்குரிய சிறப்பு விரத தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திர தினமாகும்.
@ பங்குனி உத்திரத்தின் மகிமை :- தெய்வங்களின் திருமணம் மட்டுமல்லாது, பல தெய்வ அவதாரங்களும் இந்த பங்குனி உத்திரத்தில் நடந்துள்ளது. ஸ்ரீ வள்ளியின் அவதாரமும், ஸ்ரீ ஐயப்பனின் அவதாரமும், அர்ஜ்ஜுனன் தோன்றியதும் இந்த பங்குனி உத்திர நந்நாளில்தான். இத்தினத்தில் பார்வதியை, பரமேஸ்வரன் மணந்தார். ராமன், சீதையை கரம் பிடித்தார். மேலும் முருகன், தெய்வானையை கரம் பிடித்தார். திருவரங்கநாதர், ஸ்ரீ ஆண்டாள் முதலிய தெய்வ திருமணங்கள் பலவும் பங்குனி உத்திரத்தன்று தான் நடைபெற்றன. இதனால் பங்குனி உத்திர விரதம் திருமண விரதம் என்றும், கல்யாண விரதம் என்றும் போற்றப்படுகிறது.
இளைஞர்களும், கன்னிகளும் இத்தினத்தில் சிவனையும், முருகனையும் திருமணக் கோலத்தில் வணங்கி வழிபட்டால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என நம்பப்படுகிறது
தெய்வங்களெல்லாம் தேர்ந்தெடுத்து சிறப்பித்த இந்த பங்குனி உத்திர நட்சத்திரத்தன்று விரதம் இருப்பதற்கும், அன்னதானம் வழங்குவதற்கும் உகந்த நாள் என்று கருதப்படுகிறது.
@ யுகாதி என்பதற்கு யுகம் என்கிற ஆண்டு ஆதியில் இருந்து தொடங்குகிறது என்று பொருள். தெலுங்கு சம்பிரதாயப்படி புத்தாண்டு தொடங்குவதைக் குறிக்கிறது. இன்றைய நாளில் சம்ஹத்தர கௌரி விரதம் என்ற விசேஷ விரதத்தைக் கொண்டாடுவார்கள். நாம் எல்லோரும் வேத வராகக் கர்ப்பத்தில் இருக்கிறோம்.
அந்தக் கர்ப்பம் தொடங்கிய நாளும் தேவர்களால் இன்று கொண்டாடப்படுகிறது. சூரியன் பன்னிரெண்டு ராசிகளில் நிற்பதைக் குறிக்கும் வகையில் சௌரமான மாதங்கள் என்று குறிப்பிடப்படுகிறது. அதேபோல் சந்திரன் நிற்கின்ற ஒரு மாதத்தின் நட்சத்திரத்தை வைத்து சாந்திரமான மாதங்கள் என்று தெலுங்கு சம்பிரதாயத்தில் குறிப்பிடப்படுகிறது.
@ "நந்திக் கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம்' என்பது சொல் வழக்கு.
@ மருந்து நிவேதனம்:- கேரளாவில் உள்ள கூத்தாட்டுக்குளம் என்ற இடத்தில் உள்ள நெல்லிக்கட்டு பகவதி கோவிலில், பங்குனி மாத அஸ்த நட்சத்திரத்தில் கொடியேற்றி 12 நாட்கள் விழா நடத்துவார்கள். நோயாளி களுக்கான மருந்தை இங்குள்ள அம்மன்முன் வைத்துப் படைத்தபின்தான் நோயாளிகளுக்குக் கொடுப்பார்கள். அத்துடன் ஆலயத்திலும் அம்மனுக்கு மருந்து நிவேதனம் செய்வார்கள்.
@ ஆண்டுதோறும் புது அம்மன்:- பங்குனி மாத இரண்டாம் செவ்வாயன்று இரவு, பச்சை மண்ணில் புது அம்மன் உருவாக்கி கொண்டாடும் விழா இது. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சிறுகுடி என்ற கிராமத்தில், மந்தை முத்தாலம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் இரு நாட்கள் விழா நடக்கின்றது. ஒரு காலத்தில் இவ்வூருக்கு வந்த ஒரு கன்னிப் பெண், நாளடைவில் பெண் தெய்வமானாள். இவள் வந்த நாளை இவ்வாறு கொண்டாடுகின்றனர்.
@ பெண்டாட்டித் திருவிழா:- திருச்சியில் முசிறியை அடுத்துள்ள பொன்னாங் கன்னிப்பட்டி ஊரைச் சுற்றியுள்ள 18 கிராம மக்கள் அனைவரும் பங்குனி மாத மூன்றாவது திங்கட் கிழமையன்று மாரியம்மன் கோவில் திருவிழாவில் கூடுவர். இவர்கள் அனைவரும் உறவினர்கள்தான். ஒருகாலத்தில் பசு ஒன்று தினம் பாம்புப்புற்றில் பால் சொரிந்து வந்தது. இதுகண்ட மக்கள் புற்றை இடித்தனர். உள்ளே தோளில் ரத்தம் கசிய அழகிய மாரியம்மன் சிலை இருந்தது. அச்சிலை பெண்களுக்கு சம உரிமை கொடுத்து, பெண் களை தெய்வமாக மதிக்கும்படி அசரீரியாகக் கூறியது. அதன்படி கோவில் கட்டி அம்மனை பிரதிஷ்டை செய்ததிலிருந்து பெண்களுக்கு சம உரிமை தந்து, கிராம சுயம்வரம் நடத்த ஏற்பாடு செய்து அதை இவ்வாலயத்திலேயே விழாவாகவும் இன்றளவும் நடத்தி வருகின்றனர் இவ்வூரார். ஊர் மக்கள் ஆலயத்தில் கூடிப்பேசி, பொது வில் முடிவெடுத்து திருமணம் முடிப்பார்கள். இதனால் பிற்காலத்தில் சீர்வரிசை தகராறு, குடும்பச் சண்டை ஏதும் இதுவரை வந்ததில்லை என இம்மக்கள் பெருமையாகக் கூறுகின்றனர். இவ்விழாவைதான் பெண்டாட்டி திருவிழா என்று கூறுகின்றனர்.
@ பூ ஐயப்பன் :- திருநெல்வேலி மாவட்ட தென்கோடி யில், தெற்கு கருங்குளம் என்ற கிராமத்தில் இவ்வாலயம் அமைந்துள் ளது. இங்கு பங்குனி உத்திரத்தன்று மெகா கொழுக்கட்டை வழிபாடு செய்கின்றனர்.
இது முழுக்க முழுக்க ஆண்களே செய்யும் வேலை. விரதம் இருந்து, எச்சில் படாமல் இருக்க வாயில் துணி கட்டிக் கொண்டு செய்வர். ஒரு கோட்டை நெல்லிலிருந்து பெறப்படும் பச்சரிசி 42 படி இருக்கும். இது கிலோ கணக்கில் பார்த்தால் 63 கிலோ வரும். இந்தப் பச்சரிசியை ஆண்களே இடித்து மாவாக்கு வார்கள்.
மாவில் நீர் விட்டுப் பிசைந்து உருட்டித் தட்டுவார்கள். இதை காட்டுக்கொடி நிரவி, அதன்மீது இலைகளைப் பரப்பி உருட்டித் தட்டிய அரிசி மாவை அடுக்குவார்கள். அதன் மீது சிறுபயறு, தேங்காய்த் துருவல் கலந்த பூரணத்தையும் வைப்பர். இப்படி மாவு, பூரணம் என மாறி மாறி அடுக்கியபின் காட்டு இலையைப் பரப்பி மூடி, காட்டுக்கொடியால் உருண்டை வடிவில் கட்டிவிடுவார்கள். மெகா கொழுக்கட்டை உருவாகிவிட்டது. இரவில் வெந்த கொழுக்கட்டையைப் பூஜித்து படையல் போடுவார்கள். ஆயிரக் கணக்கானோர் இவ்வழிபாட்டை தரிசிப்பார் கள். பின் மறுநாள் கொழுக்கட்டையைப் பிரித்து ஊரிலுள்ள எல்லா வீடுகளுக்கும் பிரசாதமாகக் கொடுப்பார்கள்.
@ திருநெல்வேலி மாவட்ட தென்கோடி யில், தெற்கு கருங்குளம் என்ற கிராமத்தில் பெயரில்லா பூமரத்தடியில் சாஸ்தா அமர்ந்து அருள்புரிவதால் இவருக்கு பூ சாஸ்தா- பூ ஐயனார் என்று பெயர். இம்மரம் பங்குனி உத்திரத்தை ஒட்டிதான் பூ பூக்கும். இப்பூக்களை தேங்காய் எண்ணெயில் போட்டால் எண்ணெய் சிவப்பாகிவிடும், மணமுடன் இருக்கும். இதைப் பெண்கள் தங்கள் தலையில் தடவினால் கருகருவென நீண்ட கூந்தல் வளரும். இது தோல்நோய்களுக்கும் பயன்படும்.
@ பன்னாரி மாரியம்மன் கோவில் அக்னி குண்ட விழா மிகவும் புகழ் பெற்றது. ஆயிரக்கணக்கானவர்கள் அக்னி குண்டம் இறங்கு வர். பங்குனி மாத உத்திரத்திற்கு முந்தின 15-ஆம் நாள் இரவு பன்னாரி மாரியம்மனுக்கு பூச் சாற்று நடைபெறும். மறுநாள் வனதுர்க்கை அம்மன் புறப்பாடு நடக்கும். சத்தியமங்கலத்திலிருந்து மைசூர் செல்லும் வழியில் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பன்னாரி.
@ திருச்சி தாயுமானவர் தெப்பம்:- திருச்சி தாயுமானவர் ஆலயம் குழந்தைப்பேறு, சுகப்பிரசவ பிரார்த்தனை தலம். பங்குனி மாத 15-ஆம் நாளன்று கொடி யேற்றம் நடைபெறும். ஒன்பதாம் நாள் பங்குனி உத்திரமாக இருக்கும்படிதான் விழா ஏற்பாடு செய்வார்கள். இரண்டாம் நாள் கற்பக விருட் சம். மூன்றாம் நாள் பூதவாகனம். நான்காம் நாள் கைலாச பர்வதம். ஐந்தாம் நாள் வெள்ளை ரதம். ஆறாம் நாள் யானை வாகனம். ஏழாம் நாள் நந்தி வாகனம். எட்டாம் நாள் தங்க குதிரை வாகனம். ஒன்பதாம் நாள் தெப்ப உற்சவம். பத்தாம் நாள் தீர்த்தவாரியுடன் விழா இனிதே நடைபெற்று முடிவடையும்.
@ சிவனின் திருமணத்தலம்- வேதாரண்யம்:- இங்குதான் பார்வதியும் பரமேஸ்வரனும் பங்குனி உத்திரத்தன்று நடைபெற்ற தங்கள் திருமணக் கோலத்தை அகத்தியருக்கு மீண்டும் சித்திரை வளர்பிறை சப்தமி திதியில் காட்டி அருளினர். அந்தக் கோல சிற்பத்தைக் கருவறை யில் லிங்கத்தின் பின்புற சுவரில் காணலாம். இவ்வாலயம் வேத காலத்திற்கும் முற்பட்டது என்பதால் பிற்காலத்தில் பாழ்பட்டது. மூடிய கதவை யாராலும் திறக்க முடியவில்லை. இச்சமயம் திருநாவுக்கரசரும் சம்பந்தரும் பல சிவத்தலங்களை தரிசித்துக் கொண்டே இங்கும் வந்தனர். கதவு மூடியிருந்ததால் சிவனை தரிசிக்க முடியாமல் வருத்தமுற்றனர். பின்னர் திருநாவுக்கரசர் மனம் உருக "மணிக்கதவம் தாள் திறவாய்' என்ற தேவாரப் பாடலைப் பாடினார். அப்போது கதவு தானே திறந்தது. எல்லாரும் உள்ளே சென்று சிவதரிசனம் செய்தனர். பின்னர் வெளியே வந்ததும் திறந்த கதவை மூட முடியவில்லை. அப்போது சம்பந்தர் ஒரு பாடல் பாட கதவு மூடிக் கொண்டது. இக்கதவுதான் இவ்வாலயத்திற்கு பிரதானம். கதவிற்கும் பூஜை உண்டு. இப்போது இதற்கு வெள்ளித் தகடு போர்த்தியுள்ளனர். இத்தலம் தஞ்சையிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
@ உறையூர் ஸ்ரீ ரங்க நாதர் கமலாவல்லியார் திருமணம்:- இதற்கு கோழியூர் என்றும் பெயர். இது சோழர்களின் தலைநகராக இருந்துள்ளது. திருவாகிய லட்சுமி உறைந்த தலமாதலால் இதற்கு உறையூர் என்று பெயர். நந்தசோழனின் புத்திர பாக்கியத்திற்கு- மகாவிஷ்ணு லட்சுமியை கமலவல்லியாக இத்தலத்தில் தோன்றச் செய்து, மன்னனின் குழந்தையில்லாத குறையைத் தீர்த்தார்.
@ கமலவல்லி ரங்கநாதரிடம் கொண்ட பக்தியின் காரணமாக அவளை ஆட்கொள்ள எண்ணிய பெருமாள், மன்னன் கனவில் தோன்றி, "கமலவல்லியை திருமணக் கோலத்துடன் ஸ்ரீரங்கம் அழைத்துவா' எனக் கூறி மறைந்தார். அதன்படி மன்னன் மகளை அழைத்துச் சென்றான். ஆலயத்தில் நுழைந்ததும் அவள் அரங்கனுடன் இரண்டறக் கலந்தாள்.
இதை நினைவுகூரும் வண்ணம் பங்குனி ஆயில்யத்தன்று இவ்வாலயத்தில் ஏகாசன சேவை விழா நடத்துகின்றனர். கமலவல்லியைத் திருமணம் புரிய மணவாளனாக ரங்க நாதர் உறையூர் வருவதையொட்டி ஊரே திருவிழாக் கோலம் பூணும். இதில் அனைவரும் உற்சாகமாகக் கலந்து கொள்வார்கள். சேவை மண்டபத்தில் பங்குனி உத்திரத்தன்று (5-4-2012) தாயாரும் பெருமாளும் சேர்த்தி காண்பர். இதனைக் காண பக்தர்கள் திரண்டு வருவார்கள். திருச்சிக்கு அருகே இத்தலம் அமைந்துள்ளது.
@ பங்குனி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி நாகை தகட்டூரில் உள்ள பைரவர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
@ வளங்கள் பெருக்கும் வசந்த நவராத்திரி:- பன்னிரண்டு மாதங்களுக்கும் பன்னிரண்டு விதமான நவராத்திரிகள் உண்டு என்கின்றன சாக்த சாஸ்திரங்கள். அந்த பன்னிரண்டிலும் மிக முக்கியமானவை நான்கு. பங்குனி மாதத்தில் கொண்டாடப்
படுவது வசந்த நவராத்திரி. பொதுவாக வட இந்தியாவிலும் தென் இந்தியாவில் சில கோயில்களிலும் மட்டுமே கொண்டாடப்படுகிறது இந்த வசந்த நவராத்திரி. வசந்த நவராத்திரி யோகம் எனும் பக்தி நிலையை தரக் கூடியது. மேரு எனும் ஸ்ரீசக்ரம் அமைந்திருக்கும் ஆலயங்களில் வசந்த நவராத்திரி பொதுவாகக் கொண்டாடப்படும். ஒன்பது தினங்களிலும் காலை வேளையில் சிறப்பு அபிஷேகம் நடத்தப் பெறும். ஒன்பது தினங்களிலும் அம்பிகை ஒவ்வொரு சிறப்பு அலங்காரத்தில் காட்சி தருவாள். மாலை வேளையில் அம்பிகைக்கு உகந்த, சாக்தத்தின் மிக உயர்நிலை பூஜையான ஸ்ரீநவாவரண பூஜையும் லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனையும் கன்யா பூஜையும் ஸுவாஸினி பூஜையும் நடைபெறும். வசந்த நவராத்திரி வழிபாட்டால், பெண் குழந்தைகள் மகிழ்ச்சி அடைவார்கள். கன்னியர்கள் திருமணம் நிறைவேறப் பெறுவார்கள். சுமங்கலிகள் மாங்கல்ய பலம் பெறுவார்கள். வசந்த நவராத்திரியை அனுஷ்டிக்கிறவர்களுக்கு கடன் தொல்லைகள் தீர்வதோடு, கணவன்-மனைவி உறவு பலப்படும்; அன்யோன்யம் உண்டாகும்.
@ கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பின்னத்தூர் கிராமத்தில் ராமநாத ஈஸ்வரன் கோவில் உள்ளது. மிக பழமையான இக்கோவிலில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் மூலவர் மீது சூரிய ஒளி நேரடியாக படும் நிகழ்வு நடைபெறும்.
@ விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரில் வரலாற்று சிறப்புமிக்க பக்த ஜனேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. சுந்தரர் கயிலையில் பெற்ற சாபம் நீங்க அரூரராக அவதரித்த இத்தலத்தில் சிவன் சுயம்புவாக காட்சியளிக்கிறார். நவக் கிரகங்களில் ஒன்றான சூரியன் இத்தலத்தில் ஈசனை நோக்கி (மேற்கு திசை நோக்கி) பங்குனி மாதம் 23 முதல் 27-ம் தேதி வரை வழிபட்டுள்ளார். அதனால் இந்த தேதிகளில் பக்த ஜனேஸ்வரர் (சிவன்), மனோன்மணி அம்பாள் (பார்வதி) ஆகியோர் மீது காலை சூரிய உதயம் படுவது ஒர் அற்புதமான நிகழ்வாகும்.
@ ஸ்ரீ ராம நவமி தினம்:- 05-04-2017 பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில், கிருஷ்ணபட்ச நவமி திதியில் தான் ராம அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. வரும் சனிக்கிழமை (மார்ச் 28ம் தேதி) இந்தியா முழுவதும் ராம நவமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ராமநவமி நாளில் ராமர் கோயில்களுக்குச் சென்று, அவருக்கு துளசி அர்ச்சனை செய்து வழிபடலாம். பெருமாள் கோயில்களுக்கும் சென்று சுவாமியை வணங்கி வரலாம். அன்று முழுதும் ராமபிரானை எண்ணிக்கொண்ட ஸ்ரீராமஜெயம் என்னும் ராம மந்திரம் உச்சரிக்கலாம். ராம அவதாரத்தில் தான் மனிதர்கள் படும் அனைத்து இன்னல்களையும் இறைவனும் அனுபவித்து அதன் மூலம் மக்களுக்கு பாடம் புகட்டியிருக்கிறார். அவதார நாயகன் உதித்த நாளை, ஸ்ரீராம நவமி விழாவாக ஆண்டு தோறும் பக்தர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். இராமாயணச் சொற் பொழிவுகள் நடைபெறும். பக்தர்களுக்கு பானகம், நீர்மோர், சுண்டல், விசிறி முதலியவை வழங்கப்படும். வைஷ்ணவ ஆலயங்களில் ஸ்ரீராமருக்கு பட்டாபிஷேக விழா சிறப்பாக நடைபெறும். வீடுகளில் ஸ்ரீராமர் பட்டாபிஷேகப் படத்தை வைத்துப் பூஜை செய்து, வடை, பருப்பு, நீர் மோர், பானகம், பாயசம் நிவேதனம் செய்து வழிபடுவார்கள். ஸ்ரீராமர் படம் அல்லது விக்ரகத்துடன் ராமாயணப் புத்தகத்தையும் வைத்துப் பூஜிப்பார்கள். ஸ்ரீ ராமரை வாங்குவோம் நலம் பெறுவோம் ..
@ புனித வெள்ளி, ஹோலி, மிலாது நபி என அனைத்து மத பண்டிகைகளையும் இந்த மாதத்தில்தான் கொண்டாடுகிறோம்.
@ தமிழ் சித்திரை புத்தாண்டு தினம்:- 14-04-2017.
"அனைவருக்கும் மகிழ்ச்சியா சித்திரை தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்"
================================================
37. இந்த மாத வாசகர் வட்ட நிகழ்ச்சியின் சிறப்பு புகைப்படங்கள் :-
நாங்கள் தொகுத்து வழங்கிய பதிவுகளில் உள்ள குறை நிறைகளை வாசகர்கள், அன்பான முறையில் எங்களுக்கு எடுத்துக்கூறி, எங்களது பதிவுகள் மேலும் சிறப்படைய வாழ்த்தி உற்சாகப்படுத்துமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ் தமிழ் ரோஜாக்கள்.
No comments:
Post a Comment