"தமிழ் ரோஜாக்களின் குல்கந்து"

"தமிழ் ரோஜாக்களின் குல்கந்து"

Sunday, June 19, 2016

வாசகர்வட்ட சுட்டீஸ் இதழ்= 03 ஆனி மாதம்-தேதி 19-06-2016.வலைப்பதிவர் பூவிதழ் தொகுப்பு....

 கற்க கசடற….!!                               !வாய்மையே வெல்லும்!!

 “வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம்
Vaishali, Ghaziabad, NCR-New Delhi.
e-mail:  vaishalireaderscircle@gmail.com
___________________________________________________________________
சுட்டீஸ் இதழ்= 03 ஆனி மாதம்-தேதி 19-06-2016. வணக்கம், தாங்களின் வருகைக்கு நன்றி,  எங்களின் இந்த மாத சுட்டீஸ் வலைப்பதிவர் பூவிதழில்" - ஆனி மாத வலைப்பதிவு:- இந்த இதழின் ஆசிரியராக, தொகுத்து வழங்குபவர்:-(Editor of the Page) செல்வன் ரோஹித் ராகவன்,  Master. Rohit Raghavan , S/o Mr. Raghavan Sarangarajan செக்டர்-4, வைஷாலி, காசியாபாத், NCR-NEW DELHI. (Studying in 8th standard, Bal Bharati Public School)
நமது வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில் இந்த மாதக் கொண்டாட்டமாக :-ஆனிமாதம் 19-06-2016 3வது ஞாயிறு, 28-வது சந்திப்பு :- தாவர / விவசாய / பசுமை மாதக் கொண்டாட்டங்கள்.
அடுத்து வரும் ஜூலை-2016, 17-07-2016 ஆடி மாத வலைப்பதிவு இதழின் ஆசிரியராக, (Editor of the page) இந்த வலைப்பக்கத்தை தொகுத்து வழங்க ஆவலுடன் காத்திருப்பவர் யார்? விருப்பம் உள்ளவர்  உங்கள் விருப்பத்தை உடனே தெரியப்படுத்துங்கள். மின் அஞ்சல் "vaishalireaderscircle@gmail.com"

19-06-2016 இன்று நமது 28-வது வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில்:- பல புதிய வாசக அன்பர்களும் நமது வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பு நிகழ்ச்சியில் பங்குகொண்டனர். நிகழ்ச்சியின்  முதலில் சென்னை புத்தக கண்காட்சி பற்றிய ஒரு அலசல்... (காட்சிப் புத்தகம்/ எழுத்தாளர்கள்/ பதிப்பகங்கள்) மேலும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் போட்டி பரிசு என வாசகர் வட்ட சந்திப்பு வெகு சிறப்பாக நடந்தது.


பகுதி I-கைவண்ணம்:-

1) சித்திரமும் கைப்பழக்கம் பகுதியில் :-
(நான் வரைந்த ஓவியம் / எனக்குப் பிடித்த ஓவியம்)
a) R.வைத்தியநாதன்:-


b) D. துர்கா 2ம் வகுப்பு. 
c) குழந்தைகள் H. சாய் நந்தினி மற்றும் H.சாய் ஷிவானி சகோதரிகள்:- 
(நான் வரைந்த ஓவியம் / எனக்குப் பிடித்த ஓவியம்)





2. நகைச்சுவை-சிரி சிந்தி செயல்படு- பகுதியில் :-
(புகைப்படமும் விளக்கமும்):-
"கோவில் பஜனை  பாடல்கள் பாடும்போது, பாடும் அனைவரோடு சேர்ந்து பாடு, அப்படி பாட்டைக்கேட்டு வாங்கி பாடமுடியாவிட்டால், தலையாவது ஆட்டு"....
_________________________________________________
(புகைப்படமும் விளக்கமும்):-

_________________________________________________
(புகைப்படமும் விளக்கமும்):-
ரொம்ப லேசாம்....
_________________________________________________

(புகைப்படமும் விளக்கமும்):-

இங்கெல்லாம் போகக்கூடாது போலிஸ் பிடிச்சுப்பாங்க... 
சும்மா வீணுக்கு கீழே போவதை எவ்வளவு வேணுமென்றாலும் பிடித்துகொள்ளட்டும். (B அபிஷேக்)
__________________________________________________________

3. சிறுகதைகள் பகுதியில் :- சரியான விடைகளைக்கூறி சிறப்பு பரிசுகளை வெல்லுங்கள்.தொகுத்து வழங்கியவர்:-  
(எனக்குப் பிடித்த கதை):-

1) வைஷாலி வாசகர் வட்டத்தின்... மீதிக் கதையைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்... போட்டி என்-3 ஆனி மாதம், இதழ்-3 தேதி 19-06-2016.
......"எனக்கு நீச்சல் தெரியாது" என்று உரக்க கத்திக்கொண்டிருந்தேன்....... என்னை சுற்றி என்ன நடக்கிறது என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை, என்னுடைய அலறல் சத்தம் கேட்டு....யாரோ என்னை இறுக்கி கட்டிப் பிடித்துக்கொண்டிருப்பதை என்னால் உணரமுடிந்தது.... 

...பள்ளிக்கூடத்தில் முதன் முதலாக ஆகாய விமானத்தில், வானூர்தி வழியாக சுற்றுலா சென்று திரும்பிக்கொண்டிருந்தோம்...ஆகாய விமானத்தில் பயணிப்பது அதுதான் முதல் முறை, முதல் அனுபவம் என்பதால் விமானத்தின் சன்னல் வழியாக வேடிக்கை பார்த்துகொண்டிருந்தேன்...

இன்னும் சற்று நேரத்தில் நாம் சென்று சேரவேண்டிய விமான தளத்தில் தரை இறங்கப் போகிறோம் என்கிற அறிவிப்பு வந்தது. எனக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்த எனது நண்பனும் நானும் சன்னல் வழியே விமானம் கீழ் இறங்கும் காட்சியை பார்க்க மிக ஆவலோடு காத்துக்கொண்டிருந்தோம். எங்கோ வெகு தூரத்தில் கடுகு போன்று காட்சியளித்த கட்டிடங்கள் சிறிது சிறிதாக பெரியதாகிக் கொண்டிருந்தது, விமானம் ஓடு தளத்தை நெருங்கும்போது விமானத்தின் சக்கரங்களில் எதோ பழுது ஏற்ப்பட்டதால்,  விமானத்தை...விமான தளத்தில் தரை இறங்க முடியாமல், அருகில் இருக்கும் கடல் தண்ணீரில் விமானத்தை கீழிறக்கப் போவதாக அவசர அறிவிப்பு வந்தபோது... எனக்கு நீச்சல் தெரியாது என்பது சட்டென்று ஞாபகம் வந்தது... உடனே நான் அலற ஆரம்பித்துவிட்டேன்... எனக்கு  நீச்சல் தெரியாது... எனக்கு நீச்சல் தெரியாது!!!!  

....விமானத்திலிருந்த பயணிகளும், விமானமும் என்னவானது? மீதிக் கதையைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள். 

மிகச் சரியான, பொருத்தமான- மீதிக்கதையை, ஐந்து (5) வரிகளுக்கு மிகாமல் 15-07-2016 தேதிக்கு முன்னதாக எங்களுக்கு வந்து சேருமாறு "vaishalireaderscircle@gmail.com"  மின்னஞ்சலில் அனுப்பவேண்டும். 

சரியான விடையையும், சரியான விடை எழுதியவர்களுக்கான பரிசுகளும்  17-07-2016 (3-வது ஞாயிறு) அன்றைய, 29வது வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில் வழங்கப்படும்.

போட்டிக்கான சரியான விடையை (பொருத்தமான கதையை) பலரும் குறிப்பிட்டிருந்தால், பரிசு பெறுபவர்-குலுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார். 
(கதைக் கருத்தாக்கம்-ரேடியோ கோபாலகிருஷ்ணன்)
==============================================
2) வைஷாலி வாசகர் வட்டத்தின் சரியான விடை கூறி பரிசுகளை வெல்லுங்கள்... போட்டி என்-3 ஆனி மாதம், இதழ்-3 தேதி 19-06-2016.
அம்மாவுக்கு உதவுவதற்காக நீங்களும் அம்மாவுடன் சேர்ந்து அழுக்கு துணிகளை மட்டும் துவைப்பதாகக் கொண்டால், அப்பாவின் துணி அலமாரியில் (2)-இரண்டு கால் சட்டையும், (2)-இரண்டு அழுக்கான முழுக்கை சட்டை என மொந்தம் (4) நான்கு துணிகள் இருந்தது, அம்மாவின் அலமாரியிலிருந்த துணிகள் மொத்தம் (6) ஆறு துணிகள் இருந்தது, உங்களின் அழுக்கு துணிகள் (4) நான்கும், உங்களுக்கு பிடித்த குட்டி பொம்மை அணிந்திருந்த துணி (1) ஒன்றும் இருந்தன. 

அனைத்து அழுக்கு துணிகளையும் ஒன்றாக சேர்த்து துணி துவைக்கும் எந்திரத்தில் போட்டு, துவைத்து முடித்து, ....துவைத்த துணிகளை கொடியில் உலர்த்துவதாகக் கொண்டால்...... கீழ் வரும் கேள்விகளுக்கான சரியான விடையைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள். 

0. உங்களின் அம்மாவுக்கு நீங்கள் ஆன் பிள்ளையா அல்லது பெண் பிள்ளையா? உங்களின் பெயர், மற்றும் வயது என்ன?

1) நீங்கள் மொத்தம் எத்தனை துணிகளை துவைத்தீர்கள்?

2) நீங்கள் துவைத்து உலர்த்திய துணிகளில், ஒரு(1) துணி உலர்வதற்கு (அல்லது) காய்வதற்கு (1) ஒரு மணி நேரம் தேவை என்றால், நீங்கள் துவைத்த மொத்த துணிகளும் உலர்வதற்கு (அல்லது) காய்வதற்கு எத்தனை மணி நேரம் தேவை?

3)துவைத்த துணிகளில் ஆண்கள் அணியும் துணிகள் மொத்த எண்ணிக்கை எத்தனை, பெண்கள் அணியும் துணிகள் மொத்த எண்ணிக்கை எத்தனை? 

4)நீங்கள் துவைத்த துணியில், குறைவான எண்ணிக்கை கொண்ட துணி யாருடையது? 

5)நீங்கள் துவைத்த துணியில், அதிக எண்ணிக்கை கொண்ட துணி யாருடையது?

சரியான விடைகளைக்கூறி சிறப்பு பரிசுகளை வெல்லுங்கள். சரியான விடைகளை 15-07-2016 தேதிக்கு முன்னதாக "vaishalireaderscircle@gmail.com" மின்னஞ்சலில் அனுப்பவேண்டும். 

சரியான விடையையும், சரியான விடை எழுதியவர்களுக்கான பரிசுகளும்  17-07-2016 (3-வது ஞாயிறு) அன்றைய, 29வது வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில் வழங்கப்படும்.

போட்டிக்கான சரியான விடையை பலரும் குறிப்பிட்டிருந்தால், பரிசு பெறுபவர்-குலுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார். 
(கதைக் கருத்தாக்கம்-ரேடியோ கோபாலகிருஷ்ணன்)

விளம்பரம் :-இப்பகுதியை உங்களுக்கு வழங்குபவர்:-

-----------------------------------------------------------------------------
4. கட்டுரை:- உங்கள் கவனத்திற்கு வழங்கியவர்:- ஹரி ஹரன்.  
அ ) இன்று ஒரு தகவல் பகுதியில்:-
1. வாஸ்த்து தாவரங்கள்:- மனிதர்களுக்கு வெளிப்புற சக்தியைத் சரியான வகையில் அமைத்துத் தருகிற வேலையை வாஸ்த்து தாவரங்கள் செய்கிறது, அதாவது உயிரினங்களை சுற்றியிருக்கும் காந்த விசைப் சூழலை சீராக வைப்பதற்கு வாஸ்த்து தாவரங்கள் மிகவும் உதவியாக இருக்கிறது என ஆராய்சிகள் தெரிவிக்கிறது.
சீன  மூங்கில் செடிகள்... இந்தியாவில் கூறப்படும் வாஸ்து சாஸ்திரத்திற்கும், சைனாவின் பெங்சூயி சாஸ்திரத்திற்கும் தொடர்பிருப்பதாக நம்பப்படுகிறது. எனவேதான் சீன மூங்கில் செடிகளை வீட்டில் வளர்ப்பது வீட்டிற்கு அதிர்ஷ்டம் என்கிற நம்பிக்கை உண்டானது.
கொத்து கொத்தாக வண்ண ஓரங்களோடு கூடிய இலையைக் கொண்ட "ஜேட்-ஐஸ்வரியம்" என்கிற செடியை வீட்டின் செல்வ வளமிக்க தென் மேற்கு திசையில் வைத்து வளர்ப்பது மிகவும் அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. 

புனிதமும், மருத்துவமும் நிறைந்த துளசி செடி 
வீட்டின் முன் பகுதிக்கு அழகு சேர்க்க பல வண்ண பூக்கள் பூக்கும் தாவரங்களையும், வண்ண வண்ண வேவ் வேறு வடிவங்களில் இலைகளைக் கொண்ட தாவரங்களையும் வளர்க்கலாம். இவை வீட்டிற்கு வருபவர்களின் மனதை உற்சாகப்படுத்தும். நமது வீட்டிற்கு வரும் நண்பர்களும் விருந்தினர்களும் மன மகிழ்ச்சியான உற்சாகத்தை நமக்குத் தருவார்கள்.
மணிப் பிளான்ட் என்று ஆங்கிலத்தில் அழைக்கும் பணத் தாவரம் இது காற்றில் உள்ள ஈரப்பதத்தைக் கொண்டே வாழக்கூடியது மணல் இல்லாத நீர் நிரம்பிய பாட்டில்களிலும் வளரும் தன்மை கொண்டது. முக்கியமாக காற்றில் ஈரப்பதம் இல்லாத சூழலில் இந்த தாவரம் வளராது ஆகவே இந்த "மணி பிளான்ட்" தாவரம் வளராத இடங்களில் ஆரோக்கியம் இல்லாமல் போகும், அதனால் பணம் செலவுதான் ஆகும். பண வரவு இருக்காது என்பதை குறிப்பதால்... காற்றில் ஈரப்பதம் இருக்கும் ஆரோக்கியமான சூழலில் உயிரினங்களுக்கு இரட்டிப்பு சக்தியை தந்து ஏராளமான செல்வங்களை ஈட்டும் சக்தியாக, மனதை மாற்றுகிறது என்பதால் இதற்க்கு பண வரவு தாவரம் "மணி பிளான்ட்" என்று பெயர் 
வெற்றிலைக் கொடி இருக்கும் வீட்டில் (சந்தான லட்சுமி வாசம் செய்வார்) குழந்தைச் செல்வம் நிறைந்திருக்கும் என்று கூறுபவர்களும் உண்டு. 

பொதுவாக வாஸ்த்து தாவரங்கள் அனைத்தும் விதை இல்லாத தாவரங்களாக இருப்பதும் ஒரு சிறப்பு என்கிறார்கள்...

சில தாவரங்களை வீட்டில் வளர்க்ககூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. அதற்க்கு முக்கிய காரணங்களாக, கிள்ளினால் பால் போன்ற திரவம் உள்ள இலை மற்றும் கிளைகளைக் கொண்ட தாவரங்கள் வீட்டின் உள்ளே அல்லது வாசல் பகுதி மற்றும் தோட்டங்களில் இருந்தால் அந்த வீட்டில் வசிப்பவர்கள் அதிக கோபம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.  
அதிகம் சிகப்பு நிறம் கொண்ட இலை, பூ, தண்டுத், மற்றும் முட்கள் நிறைந்த காட்டுத் தாவர வகைகளும் வீட்டில் உள்ளவர்களுக்கு அதிக கோபத்தை தரும் தாவரங்களாக கருதப்படுகிறது.
முக்கியமாக முருங்கை மரம் வீட்டில் இருக்க கூடாது என்பது அந்த மரத்தைச் சுற்றி  முசுக்கொட்டை மற்றும் கம்பளிப் பூச்சிகள் விரும்பி வாழும் மரமாக முருங்கை மரம் இருப்பதால் அந்தப் பூச்சிகளினால் ஏற்ப்படும் ஆபத்துக்களை தவிர்ப்பதற்கு முருங்கை மரத்தை வீட்டில் வளர்க்ககூடாது என்கிறார்கள்.  கிராமங்களில் வீட்டுத் தோட்டத்தில் நிறைய இடம் இருப்பதால், வசிப்பிடத்திலிருந்து சற்று தொலைவில் முருங்கை மரம் நடுவார்கள்.
மேற்கண்ட வீட்டில் வளர்க்கக் கூடாத தாவரங்களை அலுவலகங்களிலும் வளர்க்காமல் இருப்பதும் இலாபகரமான சிறப்பான அலுவலகம் அமைய வழி வகுக்கிறது...... 
இப்படிக்கு........ அன்புடன் வைஷாலி வாசகர் வட்டம். 
========================================
2. கொள்ளிவாய் பிசாசை பார்க்கலாம் வாங்க????

கொள்ளிவாய் பிசாசு, இது மண்ணிற்கு கீழேயிருந்து மீத்தேன் வாயுவின் வெளியேற்றம் காரணமாக சதுப்பு நிலங்களில், கிராமங்களில் உள்ள வயல்களிலும் கரும்பு தோட்டங்களிலும், சில நேரங்களில் திடீர் தீப்பிளம்பு உருவாகும். ஆனால், அது வெப்பக் காற்றின் மீது பட்டவுடன் எரியத் தொடங்கும். அதனால் அதை தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு யாரோ தீப்பிடித்துக் கொண்டு நடந்து போவது போலத் தெரியுமாம். அதனையே அக் காலத்தில் மக்கள் கொள்ளிவாய் பிசாசுகள் என தவறாகப் புரிந்து வைத்திருக்கின்றனர் என தற்கால ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். காவிரி கழிமுக மாவட்டங்களில் அதிகளவு மீத்தேன் வாயு வேளாண் நிலத்திற்கடியில் இருப்பதை அண்மைய ஆய்வுகள் தெளிவாக்கியிருப்பதும் இத்தோடு ஒப்பு நோக்க வேண்டியதாகும்.சதுப்பு நிலங்களைக்கொண்ட வயல்வெளிகளிலும், கரும்புத் தோட்டங்களிலும், மீத்தேன் வாயு இரவு நேரங்களில் சதுப்பு நில மணல் பரப்பிலிருந்து அதிகம் வெளிவரும். 

கொள்ளி வாய்ப் பிசாசு அல்லது கொள்ளிவாய்வளிப் பிசாசு என்பது தமிழக நாட்டுப்புற மக்களிடையே நம்பப் பட்டு வந்த மனிதிலி (அமானுஷ்யம்) அல்லது பேய்க்கதைகளில் வரும் ஒரு பேயாக சித்தரிக்கப்பட்டுள்ளது. தீயில் எறிந்து இறந்தவர்களே கொல்லிவாய் பிசாசுகள் அடித்துவிட்டது என்பார்கள். மீத்தேன் வாயுக்கள் நிறைந்த சதுப்பு விலை நிலங்களில் வெளிவரும் வாயுக்கள் காற்றில் கலந்து எரிவதால், இரவில் காட்டுத்தீ பற்றி எரியும் போது அவையே மனிதன் போல் உருவம் கொண்டு தெரிவதே நாளடைவில் கொல்லி வாய்ப் பிசாசு என்ற கருத்துரு தோன்றுவதற்கு காரணம் என்பர் அறிவியல் ஆதரவாளர்கள்...... இப்படிக்கு..... அன்புடன் வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ் குழுவினர்.
====================================
3. உன்னால் முடியும்: கழிவுப் பொருட்களில் உருவான வருமானம்:-
திரு.நீரை மகேந்திரன் அவர்கள், பொறியியல் பட்டதாரியான இவர் பித்து என்கிற தேங்காய் நார் கழிவு கேக்குகளைக் கொண்டு எல்லா வகையான செடிகளையும் வளர்க்க முடியும் என்கிறார். 

தமிழ் இந்து நாளிதழில் வெளிவந்த அவர்களின் சாதனை விவரங்களை இங்கு பகிர்ந்திருக்கிறோம், செடிகளை வளர்க்கும் பூந்தொட்டியில் பித்து என்கிற தேங்காய் நார் கழிவு கேக்குகளை இட்டு அதில் செடிகளை வளர்ப்பதால் தேங்காய் நார் கழிவு கேக்குகளுக்கு குறைந்த அளவு தண்ணீர் விட்டால் போதும். இந்த பித்துகளின் நீர் உறிஞ்சும் தன்மையால் நீரினை அப்படியே ஈர்த்து பல நாட்களுக்கு வைத்துக் கொள்ளும் தன்மையை தருகிறது. வெளிநாடுகளில் இந்த பொருளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. வெளிநாடுகளில் பசுமை வீடுகள் கான்செப்ட் பரவலாக உருவானதால் இதற்கான தேவையும் அதிகரித்தது. இதனால் நான் இதையே தொழிலாக எடுத்து செய்ய முடிவெடுத்தேன்..மேலும் விவரங்களுக்கு .... http://tamil.thehindu.com/business/business-supplement/

 ========================================
பொது அறிவுத் தகவல்கள் பகுதியில்:-
1.வேப்ப மரத்தின் பால்- விஞ்ஞானமும் மெய்ஞானமும்:-
வேப்ப மரத்திலிருந்து வெளிவரும் வேப்பம்பாலை சாப்பிடலாமா? 
ஒரு வேப்ப மரத்தின் குறைபாடே வேப்பம் பாலாக வெளிவருகிறது என்று விஞ்ஞானம் கூறுகிறது. பொதுவாக ஒரு சில முதிர்ந்த வயதான வேப்ப மரங்களில்தான் இப்படி பால் வடிவதாக விஞ்ஞான ஆராய்சிகள் கூறுகிறது.

வேப்ப மரத்தில் இப்படி பால் வடிவதற்கு எந்தவிதமான தெய்வீகக் காரணமும் அல்ல என்று 1980 கலீல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தாவர இயல் பேராசிரியர் திரு நாராயணசாமி அவர்கள் அறிவியல் ரீதியாக இதன் குட்டை போட்டு உடைத்துவிட்டார்.

இந்த மரத்தில் உள்ள மாவுச் சத்தை (ஸ்டார்ச்சை) வேப்பமர இலைகள் சர்க்கரையாக மாற்றுகின்றன. வேப்பமரப் பட்டையின் அடிப்பகுதியில் புளோயம் (Phloem) என்ற திசு இருக்கிறது. இந்தத் திசு வழியாக சர்க்கரையாக மாற்றப்பட்ட மாவுச் சத்து வரும்போது, அது பாலாக இனிக்கிறது. எல்லா வேப்ப மரத்திலும் இப்படி பால் வடிவதில்லை. இந்த மரத்தில் இந்தத் திசு பாதிக்கப்பட்ட காரணத்தால், இப்படிப் பாலாகக் கொட்டுகிறது. தேவையைவிட மரத்தில் உள்ள தண்ணீரின் அளவு அதிகமாகும்போது பட்டையின் அடிப்பகுதியில் உள்ள திசு பாதிக்கப்பட்டு, அதன் வழியாகப் பாலாகக் கொட்டுகிறது. மரத்தில் தண்ணீரின் அளவு குறையும்போது திசு அடைபட்டு, இனிப்புப் பால் வடிவதும் நின்று போகும். 
அதெல்லாம் சரிங்க... நாங்க கேட்ட கேள்விக்கு பதிலைச் சொல்லுங்க .....வேப்ப மரத்திலிருந்து வெளிவரும் வேப்பம்பாலை சாப்பிடலாமா? 
வேப்ப மரத்திலிருந்து வடியும் பால் என்பது வேப்ப மரத்திற்கு தேவையான சக்தியைத் தருவதற்காக உருவாகும் சத்து நீர்மப் பொருள் அந்தப் பால் வேப்ப மரத்தில் இருக்கும் வரை அந்த மரத்திற்கு நன்மை தரும், அந்த சத்து நீர்ம பால் மரத்தை விட்டு வெளியில் வந்ததும் எவருக்கும் பயனின்றி கெட்டுப்போகும். ஆகவே வேப்பமரத்துப் பாலை மனிதர்கள் அருந்துவதால் எவ்வித நன்மையையும் கிடைக்காது. 
இப்படிக்கு..... அன்புடன் கோகி-ரேடியோ மார்கோனி. 
=================================
2. தாவர மின்சாரம்:- 
தாவர ஒளிச்சேர்க்கையில் உருவாகும் மின்சக்தியை அறுவடைசெய்யும் முயற்சியில் கேம்பிரிட்ஜ் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். ஆரம்பகட்டமாக செல்பேசிகளை சார்ஜ் செய்யத்தேவைப்படும் அளவுக்கு மின்சாரத்தைத் தாவரங்களில் இருந்து பெறமுடியும் என்று நம்பிக்கை ஏற்ப்பட்டுள்ளது. இப்படிக்கு..... அன்புடன் வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ் குழுவினர்.
==================================
3. உயிர்களைக் கொள்ளும் தாவரம்:-
பூச்சி உண்ணும் தாவரங்கள் பற்றி நாம் நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம்.  தமிழகத்தின் கிழக்கு தொடர்ச்சி மலையில் ஒருவகை மரம் வாசனை திரவத்தை கசியவிடும் அந்த மரத்தின் அருகே எந்த ஒரு உயிர்களும் அந்த வாசனை முகர்ந்தால் உடனே மயக்கமாகி இறந்துபோவார்கள்.  பல சித்தர்களுக்கு இது நன்கு தெரியும் அதற்க்கான மாற்று மருந்துகளும் சித்தர்களின் கைவசம் இருந்ததாக கூறப்படுகிறது. சாதாரண மனிதர்கள் இந்த மரத்தினருகே சென்று மயக்கமாகி இறந்து போவது இன்றளவும் நடக்கும் உண்மை.

பூச்சி உண்ணும் தாவரங்களைப் பற்றிய பல கட்டுக் கதைகள் வெளி வந்துள்ளன. 1900 ஆம் ஆண்டு சுண்டெலிக்கூண்டு (BLadder wort) செடி முதலையைப் பிடித்து சாப்பிட்டதாகவும், வில்பொறிக் கூண்டு (veenas fly trap) செடி மனிதனைப் பிடித்துச் சாப்பிட்டதாகவும் ஒரு கட்டுக் கதை வெளி வந்தது.

மேலும் தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு வகைச் செடி, அதில் சிக்கிய யானையின் சதையையும், ரத்தத்தையும் உறிஞ்சிவிட்டு எலும்புக்கூட்டை மட்டும் தூக்கி எறிந்ததாகவும் , மனிதர்களைச் சுற்றி வளைத்து சத்தை உறிஞ்சிவிட்டு எலும்புகளைத் தூக்கி எறிந்து விடுவதாகவும் கதைகள் வந்துள்ளன. இவை எல்லாம் உண்மையல்ல. கற்பனையாக எழுதப்பட்டவை. உண்மையில் சுண்டெலிக்கூண்டு செடியின் பை 0.5 செ.மீ அளவே உள்ளது. வில்பொறிக்கூண்டுச் செடியின் இலை 6.செ.மீ நீளமே உள்ளது. இதுவரைக் கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் ஒரு சிறிய சுண்டெலியும், ஒரு தேன் சிட்டுப் பறவையுமே ஜாடிச் செடியின் பையில் கிடைத்துள்ளன. எனவே இச்செடிகள் மிகச் சிறிய பூச்சிகளை மட்டுமே பிடிக்கின்றன என்பது மட்டுமே உண்மையானதாகும்.
மேலும் பல வகைத் தாவரங்களைப்பற்றி பார்ப்போம்"-
1. கெண்டி அல்லது நெப்பந்திஸ் (Nepenthes) அல்லது  குடுவையுருத் தாவரத்தில் சுமார் 70 வகைச் செடி இனங்கள் உள்ளன. தொங்கும் குடுவைகள் (Hanging Pitcher Plant) எனவும் அழைக்கப்-படுகின்றன. பூச்சிகளை உண்ணும் கெண்டித் தாவரங்கள் இலங்கை, மடகாஸ்கர், சீனா, வங்காளம், இந்தியா போன்ற பல நாடுகளில் காணப்படுகின்றன.
2.ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா மழைக்காடுகளில் காணப்படும் ஜிம்பி (Gympie) என்ற தாவரம் நாய், குதிரை, மனிதனைக்கூட கொல்லும் ஆற்றல் படைத்தது. இதன் இலை உடலின்மீது பட்டதுமே காயத்தை ஏற்படுத்தி அதனுள் விஷத்தைச் செலுத்திவிடும். உடனே நாம் மருத்துவரை அணுகினாலும், பாதிப்பிலிருந்து மீண்டு வர பல மாதங்கள் ஆகும்.

நூறு ஆண்டுகளுக்கு முன் பறித்த காய்ந்த இலையினைத் தொட்டாலே வலியை உணர முடியுமாம். செடியின் வேர் தவிர அனைத்துப் பகுதிகளிலும் காயம் ஏற்படுத்தும் மென்மையான முட்கள் நீட்டிக் கொண்டிருக்குமாம். 

3. செபலோட்டஸ் (Cephalotus) என்பது செபலோட்டேசியி என்ற குடும்பத்தைச் சேர்ந்தது. இதில், செபலோட்டஸ் போலிகுளோரிசு என்ற ஒரு இனம் மட்டுமே இப்போது காணப்படுகிறது. இலைகளை ஒட்டி வெளிப்புறத்தில் இலையிலிருந்து மாறுபட்டு ஜாடி போன்றோ கூஜா போன்றோ இலைகள் உள்ளன. குழல் போன்று இருக்கும் ஜாடியின் மேற்பகுதியில் மூடி இருக்கும்.
அதில் நரம்புகள் சிவப்பு நிறத்தில் கீழ்நோக்கி இயங்கும் வகையில் உள்ளன. குடுவையின் வாய் விளிம்புக்குக் கீழே இளம் பச்சையுடன் கூடிய சிவப்புப் புள்ளிகள் காணப்படும் இடத்தில் தேன் சுரப்பிகள் உள்ளன. உள்ளே வழுவழுப்பாக இருக்கும் பகுதியில் பூச்சியின் கால் பட்டதும் உள்ளே விழுந்துவிடும்.

4. மெக்சிகோ நாட்டில் வளரும் பிங்குய் குலா ஜிப்சிகோலா (Pinguicula Gypsicola)
ஈக்கள் பிடிக்கும் செடி என அழைக்கப்படுகிறது. இதன் இலைகள் நீண்டு, மேல்நோக்கி நீட்டிக் கொண்டு இருக்கும்.
... அன்புடன் வைஷாலி வாசகர் வட்டம். 
==================================================================
4.  மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது பற்றிய தகவல் !!!
மின்மினி பூச்சிகளை ஆங்கிலத்தில் Firefly என்கிறோம். மின்மினி பூச்சிகள் Coleoptera என்ற குடும்பத்தைச் சேர்ந்த வண்டுகள் ஆகும். மின்மினி பூச்சிகளில் உலகம் முழுதும் சுமார் 2000 சிற்றினங்கள் உள்ளன.
மின்மினி பூச்சிகள் முட்டை புழு மற்றும் முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவை மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி ?
இது ஒரு சிக்கல் நிறைந்த உயிர்வேதியியல் (bio-chemical) முறையாகும். இம்முறை bioluminescence எனப்படும். மெழுகுவர்த்தி, மின்விளக்கு ஆகியன தரும் ஒளி வெப்பம் நிறைந்தது. ஆனால் இங்கே வெப்பம் ஏதும் உண்டாவதில்லை. மின்மினிப் பூச்சி தரும் ஒளியில் எரி
பொருளாகப் பயன்படுவது லூசிஃபெரின் (luciferin) என்ற வேதியியல் கூட்டுப் பொருள். இது பூச்சியின் ஒளியுமிழ் உறுப்பில் (light emitting organ) நிறைந்துள்ளது.

இந்த லூசிஃபெரின், லூசிஃபெரெஸ் என்ற என்ஸைமில் (enzyme) உள்ள உயிர்வளி (oxygen), உயிரணுக்களில் (cells) நிறைந்துள்ள ATP என்ற வேதியியல் பொருள், மற்றும் மக்னிசியம்
ஆகியவற்றுடன் சேரும்போது ஒளி உண்டாகிறது.

இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாவிடினும் ஒளியுண்டாகாது. மின்மினிப் பூச்சி விட்டுவிட்டு ஒளிர்வதற்குக் காரணம், அதன் ஒளியுமிழ் உறுப்புக்குச் செல்லும் நரம்புத் தூண்டல்கள் (nerve impulses) விட்டு விட்டுச் செல்வதேயாகும்.

மின்மினி பூச்சிகள் பற்றிய ஒரு பார்வை பெண் வண்டுகள் மண்ணில் முட்டை வைக்கும். சுமார் 4 வாரங்களில் முட்டையில் இருந்து புழு வந்துவிடும். புழுக்கள் கோடையிலும், வேனில் காலத்திலும் நன்கு சாப்பிட்டுவிட்டு ‘ஹாயாக’ டார்ச் பிடித்துக் கொண்டு வளைய வரும். குளிர்காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் மண்ணுக்கடியில் பதுங்கி விடும். பெரும்பாலும், இவை மண்புழு மற்றும் நத்தை ஆகியவற்றையே தின்னும். இவை இரையைப் பிடித்துத் தின்னும் முறையே அலாதியானது. இரையைக் கண்டுபிடித்தவுடன் அதை முதலில் மயக்கமடையச் செய்துவிடும். இதற்கென்றே இதன் முகத்தில் ஒரு பிரத்தியேக அரிவாள் போன்ற கொடுக்கு நீட்டிக்கொண்டு இருக்கும். அதைக் கொண்டு இரையின் உடலினுள் மயக்கமடையச் செய்யும் வேதிப்பொருளை செலுத்திவிடும்.

பிறகு இரைக்குள் செரிமான நொதிகளை செலுத்தும். சில மணி நேரத்தில், இரையின் உடலினுள் உள்ள அவயங்கள் கூழ்மமாக மாறிவிடும். உடனே மின்மினி பூச்சிகளின்புழுக்கள் இரையைச் சுற்றி அமர்ந்து, ஜூஸ் குடிப்பது போல உறிஞ்சிவிடும். பிறகு ஜாலியாக ரவுண்ட்ஸ் போக தொடங்கும். அப்போது அதன் உடலில், அதாவது அடிவயிற்றின் முடிவில் விளக்கு எரிந்துகொண்டு இருக்கும். ஒரு சில பறவைகள்கூட, ஒளிக்காக இந்த புழுக்களைப் பிடித்து வந்து, தங்கள் கூட்டில் வைத்திருக்கும்....  அன்புடன் வைஷாலி வாசகர் வட்டம். 
========================================
இ) சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம் கேள்வி பதில் பகுதியில்:-
1.  ஷூக்கள் மற்றும் சாக்ஸ் காலனி மற்றும் அதன் காலுறை போன்றவற்றில் ஏற்ப்படும்   துர்நாற்றம் நீங்கிட.. dry tea bags டி-தூள் களை ஷூக்களின் உள்ளே இட்டு வையுங்கள்.

2. மாமாங்கப் பூ என்று எதைக் குறிப்பிடுகிறார்கள்? எந்த ஆண்டு எங்கு இந்த வகை பூக்களை அதிகம் பார்க்கமுடியும்.? 

மாமாங்கப் பூ என்று அழைக்கப்படும் மலர் குறுஞ்சி  மலர் :- குறிஞ்சிச் செடி அல்லது நீலக்குறிஞ்சி என்பது இந்தியாவின் மேற்கு மலைத்தொடர்ச்சியில் பரவலாக வளரும் ஒரு செடியாகும். இதில் பூத்துக் குலுங்கும் நீல மலர்களினால் இம்மலைப் பிரதேசம் நீல நிறத்தில் தோன்றுவதால், தென்னிந்தியாவில் இம்மலைத் தொடர்ச்சிக்கு நீலகிரி மலை என்ற பெயர் வந்தது. 12-வருடங்களுக்கு ஒரு முறை பூப்பதால் இதை மாமாங்க மலர் என்றும் கூறுவார்கள். 

தமிழின் முதல் இலக்கண நூல் என கருதப்படும் தொல்காப்பியத்தில், ஏழு திணைகளான கைக்கிளை, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை ஆகியவற்றில், மலையும், மலையைச் சார்ந்த இடமும் குறிஞ்சி என அழைக்கப்படுகிறது.

கடல் மட்டத்திலிருந்து 1300 முதல் 2400 மீ. உயரத்தில் வளரும் இச்செடி, பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறையே பூக்கும். பொதுவாக 30 முதல் 60 செ.மீ. உயரம் வரை வளரும் இது, இதற்கேற்ற தட்பவெட்ப சூழ்நிலை இருந்தால் 180 செ.மீ. உயரம் வரையிலும் வளரும்.

1994-ஆம் ஆண்டில் பூத்த இச்செடி, பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகத்திலும் கேரளாவிலும் 2006-ஆம் ஆண்டில் பூத்தது. வரும் 2018-ம் ஆண்டில் ஆகஸ்டு முதல் டிசம்பர் வரை இம்மலர்களைக் காண முடியும். 

========================================
ஈ ) நல வாழ்வு பகுதியில்:-
1) உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல் !!!
சில உணவுப் பொருட்கள் நல்ல உறக்கத்தைக் கொடுப்பதற்கு உதவி புரிகின்றன. உறக்கம் வருவதில் பிரச்சினை இருப்பவர்கள் முதலில் உங்கள் உணவுக் கட்டுப்பாடு குறித்து அக்கறை செலுத்த வேண்டும். உறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் சரியான உணவினை உட்கொள்வதன் மூலம் நல்ல உறக்கத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பாதாம்:
பாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. அதோடு பாதாமில் உள்ள புரதங்கள் நீங்கள் உறங்குகின்ற போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது. இதை படுக்கை நேர சிற்றுண்டியை முயற்சித்துப் பாருங்கள். ஒரு கரண்டி பாதாம் பட்டர் அல்லது ஒரு அவுன்ஸ் பாதாமினை சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்லுங்கள்.

தேநீர்:
உறங்கச் செல்வதற்கு முன்னர் தேநீர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது தான். ஆனால் சில தேநீர் வகைகள் உறக்கத்தைக் கொடுக்கக் கூடியவை.
அந்த வகையில் தூங்கச் செல்வதற்கு சிறிது நேரத்தின் முன்னர் கிரீன் டீ அருந்துவது நல்லது. இதில் தியனைன் எனும் பொருள் உள்ளது. இது நல்ல உறக்கம் ஏற்பட உதவி செய்கிறது.

வாழைப்பழம்:
மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அடங்கிய சிறந்த பழம் வாழைப்பழம் தான். இது அதிக தசை இறுக்கத்தைத் தளர்த்த உதவி செய்கிறது. அத்துடன் இதில் ட்ரிப்டோபன்னும் உள்ளது. இந்த ட்ரிப்டோபன் செரடோனின் ஆகவும் மெலடோனின் ஆகவும் மாற்றப்படுகிறது. இந்த இரண்டும் மூளையின் அமைதியான ஹோர்மோன்களுக்கு அவசியமானவை. ஒரு கப் பாலில் ஒரு வாழைப் பழத்தை மசித்து சேர்த்து அருந்தவும்.

பால்:
பால், யோகட், பாலாடைக்கட்டி(சீஸ்) போன்றவற்றில் ட்ரிப்டோபன் அடங்கியுள்ளது. இது தவிர இந்த மூன்று பொருட்களிலும் அடங்கியுள்ள கால்சியம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவி செய்வதுடன் நரம்பிழைகளின் உறுதித் தன்மைக்கும் உதவி செய்கிறது. ஆகவே நீங்கள் உறங்க ச்செல்வதற்கு முன்னர் யோகட் சாப்பிடுவது நல்ல உறக்கத்திற்கு உதவி செய்கிறது.

ஓட்ஸ்:
நீங்கள் பொதுவாக இந்த ஓட்ஸ் உணவுப் பொருளினை காலை நேரத்தில் மட்டும் தான் உட்கொள்வீர்கள். ஆனால் ஒரு கோப்பை வெதுவெதுப்பான ஓட்ஸ் உணவுப் பதார்த்தம் உறக்கம் வருவதற்கும் உதவி செய்கிறது.

இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கன் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் உறங்கச் செய்வதற்கு ஒத்துழைக்கின்றன. ஆனால் அதிகமாக ஓட்ஸில் சீனி சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக வாழைப்பழம் போன்ற பழங்களை சேர்த்துக்கொள்ளப் பாருங்கள்.

செர்ரிபழம்: மிக வேமாக உறங்க வேண்டுமானால் ஒரு கிளாஸ் செர்ரிப்பழரசம்(ஜூஸ்) அருந்திவிட்டுப் படுக்கைக்குச் செல்லுங்கள் என பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்சோம்னியா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவக்கூடிய மெலடொனின் செர்ரிப்பழங்களில் அதிகம் காணப்படுகிறது.

2) பகுதி-3, HEPATITIS A,B,C -Virus and  HEPATITIS inflammation-ஹெபடைடிஸ் ABCவைரல் என்று ஆங்கிலத்தில் அழைக்கும், கல்லீரலைத் தொற்றித் தாக்கும் நுண் கிருமியால் கல்லீரல் அழற்சி அல்லது கல்லீரல் வீக்கம் என்கிற நோய் ஏன் ஏற்ப்படுகிறது? 

இந்தியாவில் ‘ஹெபடைடிஸ்-சி’ பாதிப்பு உள்ளவர் களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தி சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. இந்த பாதிப்புக்கான மருந்துகளான சோஃபோஸ்புவிர் மற்றும் லெடிபஸ்விர் மற்றும் டாக்லாடஸ்விர் ஆகிய மருந்துகளின் பொதுப் பெயர் மருந்துகள் நோயாளிகளுக்கு நேரடியாகக் கிடைக்க மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் (சி.டி.எஸ்.சி.ஓ.) நடவடிக்கை எடுத்திருக்கிறது. வரும் வாரங்களில் இந்த மருந்துகள் இந்தியச் சந்தைகளில் கிடைக்கும். ‘ஹெபடைடிஸ்-சி’ நோயாளிகளுக்குச் செலுத்திப் பரிசோதிக்க மட்டும் பயன்படுத்தப்படும் இந்த வகை மருந்துகளை, நேரடிப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வழிவகுத்திருக்கிறது சி.டி.எஸ்.சி.ஓ. நிறுவனம்.

இந்தியாவில் சுமார் 1.2 கோடிப் பேர் ‘ஹெபடைடிஸ்-சி’ வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இந்த மருந்துகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது அதீத செலவுபிடிக்கும் விஷயமாக இதுவரை இருந்துவந்த நிலை இதன் மூலம் மாறும். அமெரிக்காவில் ‘இன்டர்ஃபெரான்-ஃப்ரீ’ சிகிச்சைக்கான கட்டணம் சுமார் ரூ. 59 லட்சம். ஐரோப்பிய ஒன்றியத்தில் சுமார் ரூ. 35 லட்சம். இத்தனை விலையுயர்ந்த மருந்துகள் இந்தியாவில் இனி ரூ. 67,000-க்கு அல்லது அதற்கும் குறைவான விலையில் கிடைக்கவிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மரபுவழி மருந்து தயாரிப்பாளர் களுக்கு இடையிலான போட்டியும் இந்த மாற்றத்துக்கு ஒரு காரணம்.
(பகுதி-3 தொடரும்)

உ ) சமையல் குறிப்புக்கள் / விருந்துக்கு வாங்க பகுதியில்:-
உங்களுக்கு தெரியுமா???? முடக்கத்தான் வேலிகளில் காட்டுச் செடியாக வளர்ந்து கிடக்கும் ஒரு வகைக் கீரை. இதன் இலை துவர்ப்புச் சுவையுடையது.

முடக்கத்தான் கீரையை எண்ணெயில் வதக்கி மிளகாயும், உப்பும் சேர்த்துத் துவையல் அரைத்துத் தொடு கூட்டாகப் பயன்படுத்தினால் சுவையாக இருக்கும்.

இந்தக் கீரையைச் சன்னமாக நறுக்கி வெங்காயம் அதிகமாகச் சேர்த்துப் பொரியல் செய்தும் சாப்பிடலாம். கொடியை மிளகு, சீரகத்துடன் சேர்த்து ரசம் வைக்கலாம்.

துவரம் பருப்பு, பாசிப்பருப்பு மற்றும் வேறு பருப்புகளுடன் இந்தக் கீரையைச் சேர்த்துக் கூட்டும் செய்யலாம். அதோடு, அடை செய்வதற்கும், தோசை மாவை புளிக்க வைப்பதற்கும் இந்தக் கீரையை அரைத்துச் சேர்த்துக்கொள்ளலாம்.

முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம்  மலச்சிக்கல், மூல நோய், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற நோய்கள் குணமாகின்றன.

இந்தக் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உண்டால் மூட்டுவலி, கைகால் வலி, முதுகு வலி, உடல் வலி ஆகிய அனைத்து வலிகளும் அகலும். முடக்கத்தான் கீரையுடன் வெல்லம்  சேர்த்து நெய்யில் வதக்கி உட்கொண்டால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

இந்தக் கீரையின் சாற்றைக் காதில் விட்டால் காது வலி நிற்கும். கட்டிகளில் வைத்து கட்டினால் அவை உடைந்து புண் ஆறும்.

வாய்வுத் தொல்லையுடையவர்கள் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். மாதவிடாய்  நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு இந்தக் கீரை நல்லது. பெண்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்னைகளுக்கு இந்தக் கீரையின் சாறு ஒரு மேஜைக்கரண்டி போதும். இந்தக் கீரையை அரைத்து கர்ப்பிணிப் பெண்களின் அடிவயிற்றில் கட்டினால் சுகப்பிரசவமாகும்.

பொதுவாக வயது ஆக ஆக மூட்டுவலி பெரும்பாலானவர்களுக்கு வந்து விடுகிறது. அதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் எல்லா வயதினருக்குமே மூட்டுக்களில் ஏற்படும் உபாதைகள் இயல்பான ஒன்றாகிவிட்டன. இதற்குக் காரணம் மூட்டுகளில் தங்கிய யூரிக் அமிலம், புரதம், கொழுப்புத் திரட்சி, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் படிவங்கள்தான்.
இவைகளைத் கரைத்து வெளியேற்றும் சக்தி முடக்கத்தான் கீரைக்கு உண்டு. சாதாரணமாக காய்கறிச் சந்தையில் இந்தக் கீரையும் கிடைக்கும்.
இரண்டு கைப்பிடி அளவு சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய முடக்கத்தான் கீரையை எடுத்துக்கொள்ள வேண்டும். தண்டு, இலை எல்லாவற்றையுமே பயன்படுத்தலாம். பூண்டு நான்கு பல், இஞ்சி சின்னத்துண்டு, சிறிய வெங்காயம் ஒன்று, மிளகு அரைத்தேக்கரண்டி, சீரகம் அரை தேக்கரண்டி. இவைகளை ஒரு தேக்கரண்டி சமையல் எண்ணெய் விட்டு வதக்கி எடுக்கவேண்டும். பிறகு இரண்டு குவளை நீர் ஊற்றி நல்லா வேக வைக்கவேண்டும். கீரை நல்லா வெந்து அதன் சாரம் நீரில் இறங்கிய பிறகு வடிகட்டி எடுத்தால் முடக்கத்தான் சாறு தயார். மூட்டுகளில் தங்கிய எல்லா எதிரிகளும் கரைந்து இருந்த இடம் தெரியாமல் ஓடிடும்.

முதுகு தண்டுவடம் தேய்மானம் இருப்பவர்கள், மாதவிலக்கு நின்ற பிறகு பெண்களுக்கு ஏற்படக் கூடிய எலும்புத் தேய்மானம், எல்லாவிதமான மூட்டுவாதம், மூட்டுவலிகளைக் குணப்படுத்தும். இந்த நோய்கள் வருவதற்கு முன்பே சாப்பிட்டால் வராமல் தடுக்கலாம். 40 வயது தொடங்கியவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வருவது நல்லது.

இதனைச் சாப்பிடத் தொடங்கும்போது முதல் ஒன்று இரண்டு நாட்களுக்கு சிலருக்கு மலம் பேதி போன்று போகும். ஆனால் பயப்படத் தேவையில்லை. தொடர்ந்து சாப்பிடலாம்.


2. சத்துமாவு செய்யலாம் வாங்க:- வழங்கியவர்,  N.ஆர்த்தி  :-
இயற்கையான ஊட்டச்சத்து பானங்களில் இந்த சத்து மாவு காஞ்சி மிக முக்கிய இடத்தைப் பிடிக்கிறது கம்பு, கோதுமை, சோளம், கேழ்வரகு, பொட்டுக்கடலை(உடைத்த கடலை) மற்றும் வேர்கடலை போன்றவற்றை சம அளவில் எடுத்துக் கொண்டு, தீய்ந்து போகாமல் தங்கப் பொன்னிறத்தில் வறுத்து, பின்பு பொடியாக அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும். அத்துடன் வாசனைக்காக சிறிது ஏலக்காய் பொடிசெய்து கலந்து ஒரு பாட்டிலில்  சேமித்து வைத்துக் கொண்டால் “சத்துமாவு’ தயார்.

காலையிலும், மாலையிலும் சூடான பாலிலோ, தண்ணீரிலோ நாம் தயாரித்து வைத்துள்ள சத்து மாவை தேவைக்கேற்ப கலந்து, மிதமான சூடில் கொதிக்கவைத்து சூடு ஆறியதும் சர்க்கரை சேர்த்து பருகலாம். 

ஊ ) பாட்டி சொல்லைத் தட்டாதே பகுதியில்:-
$ காதுவலி குறைய: :-வெள்ளை வெங்காயத்தை துணியில் கட்டிச் சாறு பிழிந்து இரண்டு காதுகளில் அச்சாற்றை ஊற்றினால் காதுவலி குணமாகும்.
$ பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.

$ உடலில் சொறி, சிரங்கு இருந்தால் வேறு வேலையே ஓடாது. எப்போதும் கை சொரிந்து கொண்டிருப்பதிலேயே மும்முரமாக இருக்கும். எனவே, முல்லைப் பூவை அரைத்து உடல் முழுவதும் தடவி அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். ஒரு நாள் விட்டு ஒரு நாளாக 3 நாட்கள் செய்து வர நல்ல குணம் கிடைக்கும்.


$ பால் கலக்காத டீயில் ஒரு ஸ்லைஸ் லெமன் துண்டை நறுக்கிபோட்டு குடியுங்க பிந்தம், பேதி, வாயிற்று வலி போன்ற வயிற்று கோலாறேல்லாம் மறைந்திடும்.

5. கைத்தொழில் பகுதியில் இந்தமாதம், வழங்கியவர்:-"கைத்தொழில்-கற்றுக்கொள்ள வாருங்கள்"- பயிற்சி வகுப்பில் இந்தமாதம்-
"ஆடிப் பட்டம் தேடி விதை" என ஒரு மாதத்திற்கு முன்பே ஆணி (ஜூன்) மாத வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில் "வீட்டுத் தோட்டம்" பெருநகர அடுக்குமாடி குடியிருப்பு வாழ்க்கையில் மிக அதிக லாபம் தரும் எளிமையான வீட்டு வணிகம்-மணல் தொட்டித் தாவரங்கள் மற்றும் வசிப்பிடங்களின் வாஸ்த்து என்னும் வண்ணமயமான பூந்தொட்டி தாவரங்கள், தொங்கும் தோட்டம், மற்றும் "இக்கிபானா" என்னும் போன்சாய்-குட்டி மரங்கள், மேலும் அடுக்கு மாடி குடியிருப்பின் குட்டி பால்கனியின் காய்கறிகள் தோட்டம்.... என எளிமையான வீட்டுத் தோட்டத்தின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. 

1. 'பஞ்சகவ்யா' :- பெருநகரங்களில் பால்கனி தொட்டத்திர்க்காக பலரும் விரும்பி வாங்கும் இயற்கைத் உரம் "பஞ்சகவ்யா". பசுவின் சாணம் மற்றும் கோமியம் (பசு-மூத்திரம்) இரண்டையும் சம அளவு தண்ணீரில் கலந்து, 21 நாட்கள் ஊற வைத்து, அதனுள் இருக்கும் மீத்தேன் வாயு நீங்கியதும், அதனுடன் சில நுண்ணூட்டங்களைச் சேர்க்கவேண்டும், அதாவது ஈஸ்ட் நுண்ணுயிரிகளை உருவாக்கும் சிறிது பால் மற்றும் தயிரோடு,  சுவையான வெல்லம் அல்லது கருப்பஞ்சாறு சேர்த்து... அந்தக் கரைசலில் 20 மில்லியை, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்த கலவைதான் "பஞ்சகவ்யா" என்கிற ஊட்டச்சத்து மிகுந்த தாவர இயற்க்கை உரம் மட்டுமல்லாது, இது ஒரு பூச்சி கொல்லியாகவும், தாவரங்களுக்கு நோய் எதிர்ப்புத் தன்மையையும் அதிகரிக்கச் செய்கிறது. இந்த இயற்க்கை உரத்தை செய்தோ அல்லது வாங்கி விற்றால் நிறைய லாபம் ஈட்டலாம்.

வாஸ்து தாவரங்களுக்கு பெருநகர இல்லங்களில் நிறைய தேவை உள்ளது முக்கியமாக சீன  மூங்கில் செடிகள்....
என்னும் வாஸ்த்து செடியானது பூங்கொத்து "பொக்கே" தயாரிக்கும் கடைகளில் இரண்டு மூங்கில் செடிகளை வாங்கிவந்து அதை சிறு சிறு துண்டுகளாக, மூங்கில் தண்டின் கனுப்பகுதியில் வெட்டி தனித் தனியாக சிறு தொட்டிகளில் வளர்த்து அதை பலருக்கும் விப்பனை செய்யலாம், இந்த வாஸ்த்து தாவர விற்பனை தற்போது பெருநகரங்களில் மிகவும் வரவேற்ப்பு பெற்ற ஒரு சிறுதொழில் வருமானமாகும். இதைப்போலவே மனிபிளான்ட் என்று கூறும்...
பணச்செடியையும் சிறு சிறு துண்டுகளாக வெட்டி வேறு வேறு தொட்டிகளில் நட்டு விற்பனை செய்யமுடியும். 
திரு.நீரை மகேந்திரன் அவர்களின், செடிகளை வளர்க்கும் பூந்தொட்டியில் பித்து என்கிற தேங்காய் நார் கழிவு கேக்குகளை வாங்கி உபயோகிக்கலாம் அல்லது பூந்தொட்டிகளில் அடியில் தேங்காய் நார் (பித்) கழிவுகளை போட்டு அதன் மேல் மண்ணை நிரப்பி செடிகள் வளர்ப்பதால், பூந்தொட்டியில் உள்ள தேங்காய் நார் நீரை உறுஞ்சி பூந்தொட்டியில் பாதுகாப்பதால், பெருநகர பால்கனி தோட்டங்களுக்கு வாரத்திற்கு ஒருமுறை நீர் ஊற்றினால் போதும்.  இதுபோல தேங்காய் நார் தொட்டிகளை உருவாக்கி பலருக்கும் விற்று லாபம் சம்பாதிக்கலாம். 
மேற்கண்ட படத்தில் உள்ளதுபோல, பால்கனியில் நிறைய இடம் இல்லாதவர்கள் பால்கனி சுவற்றிலும் தோட்டம் அமைக்கலாம். இதையே மற்றவர்களுக்கும் அவர்களின் பால்கனியில் தோட்டம் அமைக்க உதவிசெய்து சம்பாதிக்கலாம். 

வெறும் 10 முதல் 20 தேங்காய் கொட்டாங்கச்சி  இருந்தால் போதும் உங்களின் அடுக்கு மாடி குடியிருப்பில் கீரைத் தோட்டம் போடலாம். மாதம் இரண்டுமுறை கீரை கூட்டுப் பொரியல் செய்யலாம். 


வீட்டுத் தோட்டத்தில் கீரை பயிரிடுவதால் அதிக லாபம் தரும் கீரை வகையில் பொன்னாங்கண்ணி கீரை முதலிடம் வகுக்கிறது.  இந்தக் கீரையின்  காம்புகளை கிள்ளி வைத்தாலே எந்த சூழலிலும் வளரக்கூடிய கீரை பொன்னாங்கண்ணி. இதில் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, மினரல்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம் போன்ற சத்துகள் அடங்கியுள்ளன.
இ‌ந்த‌க் ‌கீரையை தொடர்ந்து 27 நாட்களுக்கு சாப்பிட்டால் பகலிலும் நட்சத்திரத்தைப் பார்க்கலாம் என்கிறார்கள் முன்னோர்கள். அந்த அளவுக்கு கண் பார்வைக்கு உதவுவது பொன்னாங்கண்ணி கீரை. அவற்றின் பயன்களை பார்ப்போம். 

1. பொ‌ன்னா‌ங்க‌ண்‌ணி கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல்  எடை குறையும்.

 2. துவரம் பருப்பு, நெய்யுடன் இந்தக் கீரையை சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை கூடும். 

3.உடலை, தோலைப் பளபள என்று மாற்றுவதில் பெரும் பங்கு பொ‌‌ன்னா‌ங்க‌ண்‌ணி‌க்கு உ‌ண்டு. 

4. மூல நோய், மண்ணீரல் நோய்களைப் குணப்படுத்த வ‌ல்லது. 

5. பொன்னாங்கண்ணி கீரையை நன்றாக அலசி சிறிதாக  நறுக்கி, அதனுடன்  பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம்,  சீரகம், பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து மசியல் செய்து சாப்பிட்டு  வந்தால் அசுத்த இரத்தம் சுத்தமாகும், உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.

6. அதிக வெயிலில் அலைந்து வேலை செய்பவர்களுக்கும், கணினி முன் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு, சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கு கண்கள் சிவந்து காணப்படும், கண்களில் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். இவர்கள் பொன்னாங்கண்ணி கீரையை பொ‌ரியல் செய்து சாப்பிட்டு வந்தால் இப்பிரச்சனை நீங்கும். 

7. பொன்னாங்கண்ணி கீரை வாய் துர்நாற்றத்தை போ‌க்கு‌ம் தன்மை கொண்டது. இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்வைக் கொடு‌க்கு‌ம். 

இப்படி உங்களின் அடுக்கு மாடி குடியிருப்பின் பால்கனி தோட்டத்தில் விளையும் பூ, காய், கனிகளால் உங்கள் வீட்டிற்கான காய்கறிகள் வாங்கும் மாதச் செலவை கணிசமாக குறைத்து, உங்களின் சேமிப்பிற்கு வழி வகை செய்யும். 

(இலாபகரமான வீட்டுத் தோட்டம் பற்றிய பல சுவையான விவரங்களை வழங்கினார் :-திரு. கோபால் கிருஷ்ணன் அவர்கள்)
==============================================
6. சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்"- "வாழைப்பழ வாத்து" புகைப்படத்தில் உள்ள 6 வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்-  ஜூன்-2016-ஆனி மாத இதழ் போட்டி என்-03.


சரியான விடை அடுத்த இதழில் வெளியாகும். போட்டியில் பங்குகொள்ள விருப்பமுடையவர்கள் விடைகளை "vaishalireaderscircle@gmail.com" என்கிற மினஞ்சல் முகவரிக்கு 10-7-2016 முன்பாக அனுப்பிவைக்கவேண்டும். சரியான விடைஎழுதிய அனைவருக்கும் அடுத்தமாத வாசகர் வட்ட சந்திப்பில் பரிசுகள் வழங்கப்படும்.

சென்ற வலைப்பதிவர் இதழ்-2 வைகாசி மாத இதழின் 6-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடை :- 1) அலமாரி 2) காலணிக் கயறு 3) காலனி கால் உறை 4) சாவிக் கொத்து 5) காலனி மெருகேற்றும் களிம்பு டப்பி 6) இரண்டாம் அலமாரியரையில் காலணிகள் இடம் மாற்றி வைக்கப்பட்டிருப்பது.  சரியான விடையை 14 நபர்கள் குறிப்பிட்டிருந்தனர், சிலர் ஆறுக்கும் அதிகமான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.
==========================================
7. அறுவை ஆயிரம்:-  ((A.K.சபரிஷ்)
டீ- கப்புல டீ இருக்கும், ஆனா வேல்டு-கப்புல(உலக கோப்பையில்) வேல்டு இருக்காது.
பொங்கலுக்கு லீவு கொடுப்பாங்க.. ஆனா இட்லி வடைக்கு லீவு கொடுப்பாங்களா?? 
8. சொர்கமே என்றாலும்  நம்ம ஊரைப் போலவருமா?:- பயனுள்ள தமிழ் வலைப்பதிவர் பக்கங்களில் இந்தமாதம் பகுதி:
1. திரு வெங்கட் நாகராஜ் அவர்கள் தமது பயண அனுபவங்களை தொகுத்து வழங்கியிருக்கிறார் விவரங்களுக்கு  இந்த வலைப்பதிவு பக்கத்தில் காணவும்  http://venkatnagaraj.blogspot.com/
2.  திரு சுரேஷ் அவர்கள் அவரது "தளிர்" வலைப்பதிவில் பல சுவையான சிறு கதைகளை தொகுத்து தந்திருக்கிறார் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் http://thalirssb.blogspot.com/
9. கருத்து சொல்லப்போறேன்:- (A.K.சபரிஷ்)
$ "நோக்கம் ஓராண்டாயிருந்தால் பூக்களை வளர்ப்போம்,
நோக்கம் பத்தாண்டாயிருந்தால் மரங்களை வளர்ப்போம்,
நோக்கம் முடிவில்லாமலிருந்தால் மனித குலத்தை வளர்ப்போம்."
$ "கையளவு காசிருந்தால் கவலையில்லை, கழுத்தளவு காசிருந்தால் கவலைக்கு பஞ்சமில்லை"
10. புது மொழி:- (A.K.சபரிஷ்)
தான் ஓடாவிட்டாலும் தம் கடிகாரம் ஓடும்..
அகத்தின் நோய்கள் நகத்தில் தெரியும்..
11. கவிதை:- 
நட்சத்திர விடுதிக்கு 
போகும் வழியெங்கும் 
நட்சத்திரம்.... 
மின்னிக்கொண்டிருந்தது...(S.ஸ்ரீ சக்ரி)
================================

வெப்ப நகரம் 
கண்ணாடி மாளிகையின் 
கண்ணீரால் 
குளிர்ந்தது..... 
எதோ ஒரு சில 
மரங்களின் 
புண்ணியத்தால்... ( AK.பவித்ரா)
=================================
மற்றவரது எழுத்துக்களை
கொள்ளையடிக்காதீர்கள் ... 
உங்களின் எழுத்துக்களால் 
மற்றவர் மனங்களைக் 
கொள்ளை கொள்ளுங்கள்...
(A.K.பவித்ரா)

Don't Copy Writers. 
Become a Copywriter.
(AK.Pavithra)
=================================
."இப்படிக்கு நான்-மரம்" 
உங்களின் 
பல தலைமுறையினருக்கும் 
நான் உதவியாய் இருப்பேன்...
ஒரு தலைமுறைக்கு 
ஒரு மரமாவது  
நடக்கூடாதா??
உதவியாக இல்லாவிட்டாலும்
ஊறுவிளைவிக்காதீர்கள்....
.. (AK.சபரிஷ்) 
================================
12. நமது வாசகர் வட்டத்தின் இந்த மாத சரித்திரம் முக்கியம் பகுதியில், 
"ஊட்டி- தாவரவியல்பூங்கா (Ooty Botanical Gardens) மற்றும் மலர் கண்காட்சி உருவான வரலாறு" மற்றும் சென்ற ஏப்பரல் மாதம் 2016இல் நடந்த 120வது-மலர் கண்காட்சி பற்றிய பல சுவையான விவரங்களை வழங்கினார் :-திரு. கோபால் கிருஷ்ணன் அவர்கள்.
=============================================
13.விளம்பரதாரர் நிகழ்ச்சி பகுதியில்:- உங்களுக்கு வழங்குபவர் மற்றும் விளம்பர இடைவேளை (தேநீர் இடைவேளை) மற்றும் விளம்பரதாரர்களின் கண்காட்சி, பயிற்சிப்பட்டறை மற்றும் பல...

வழங்கியவர் திரு. ஹரிஹரன் (டாபர் ஹரி )
=================================
14.பயனுள்ள முகநூல் பக்கங்களில் இந்தமாதம் பகுதி:- 
1. https://www.facebook.com/A9RADIO/app/402411266453495/?__mref=message_bubble
முகநூளில் தமிழ் வானொலியில் பாடலைக் கேட்டுக்கொண்டு முகநூளில் உலவலாம். ..விருப்பமுடையவர்கள் இந்த முகநூல் பக்கத்தில் இணைந்து பயன்பெறலாம்.) நன்றிகளுடன் AK.பவித்ரா.
==============================================
பகுதி II -கால்வண்ணம் :- (நடனம், நாடகம், விளையாட்டு போட்டிகள்) :-

15. இந்த மாத வாசகர் வட்ட நிகழ்ச்சியின் சிறப்பு புகைப்படங்கள் :-



நாங்கள் தொகுத்து வழங்கிய பதிவுகளில் உள்ள குறை நிறைகளை வாசகர்கள், அன்பான முறையில் எங்களுக்கு எடுத்துக்கூறி, எங்களது பதிவுகள் மேலும் சிறப்படைய வாழ்த்தி உற்சாகப்படுத்துமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு   
வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ் தமிழ் ரோஜாக்கள்.

1 comment:

  1. பயனுள்ள பல தகவல் களஞ்சியம் உள்ளது படிக்க படிக்க படித்தி கொண்டே இருக்கலாம்........ இதை உருவாக்கியவர்களுக்கு
    இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.............

    ReplyDelete