வைஷாலி வாசகர் வட்ட "சுட்டீஸ்-குல்கந்து" இதழ்=16 ஆடி மாதம்-தேதி 16-07-2017.
வருகை தாருங்கள், தமிழில் சிறுவர்கள் தொகுத்து வழங்கும் வலைப்பதிவர்களின் மாத இதழ், ஒவ்வொரு மாதமும் ஆங்கில மாதத்தின் 3-வது ஞாயிறுதோறும் (தமிழ் மாதத்தின் முதல் ஞாயிறு அன்று) இரவு 9 மணியளவில் வெளியாகும் சுட்டீஸ் ரோஜாக்களின் "குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழ். http://gulkanthu.blogspot.in/
கற்க கசடற….!! !! வாய்மையே வெல்லும்!!
“வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம்”
160/Sector-4, Vaishali, Ghaziabad, NCR-New Delhi.-201012
e-mail: vaishalireaderscircle@gmail.com
___________________________________________________________________
சுட்டீஸ் இதழ்=16 ஆடி மாதம்-தேதி 16-07-2017. வணக்கம், தாங்களின் வருகைக்கு நன்றி, இந்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழில்" -ஆடி மாத வலைப்பதிவு:- இந்த இதழின் ஆசிரியராக, தொகுத்து வழங்குபவர்:- (Editor of the Page) வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ் குழுவினர்கள் -வைஷாலி -NCR-புது தில்லி.
அடுத்து வரும் ஆகஸ்ட் மாதம்-2017, 20-08-2017 ஆவணி-மாத வலைப்பதிவு இதழின் ஆசிரியராக, (Editor of the page) இந்த வலைப்பக்கத்தை தொகுத்து வழங்க ஆவலுடன் காத்திருப்பவர் யார்? விருப்பம் உள்ளவர் உங்கள் விருப்பத்தை உடனே தெரியப்படுத்துங்கள். மின் அஞ்சல் "vaishalireaderscircle@gmail.com"
16-07-2017 அன்றய நமது 41-வது வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில்:- ,
வைஷாலி வாசகர் வட்டத்தின் 41வது வாசகர் வட்ட சந்திப்பு 16-07-2017 தேதி, 3-வது ஞயிறு அன்றய ஆணி மாத கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும் .... ( உறுப்பினர்கள் பலர் விடுமுறைக்கால பயணமாக தமிழகம் சென்றுள்ளதால் இந்த மாத வலைப்பதிவு இதழில் அதிகமான விவரங்கள் இடம்பெறவில்லை. )
வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :-
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து,
தொடர்ந்து எங்க வீட்டு "நூலகம் "
படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும்
(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம் / செல்லப் பிராணிகள் வளர்ப்போம் )
தொடர்ந்து ......
"இந்த மாத தலைப்பைச் சார்ந்த" ஆன்மீக பழக்கவழக்கங்கள் மற்றும் ஜோதிடம் வானவியல் கோள்களின் இயக்கம் பற்றிய கணிதம், பஞ்சாங்கம், வாஸ்து, கைரேகை, எண்கணித பலன்களும் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி மாதக் கொண்டாட்டங்களும். நிகழ்ச்சிகளும். போட்டிகளும் பரிசுகளும்.. என நடந்தேறிய அன்றய நிகழ்ச்சியில் உதவிய அனைவரையும் பாராட்டி, நிகழ்ச்சி இனிதாக நிறைவுபெற்றது.
====================================
"நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்,
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்,
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற,
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும்
தமிழணங்கே! தமிழணங்கே! .....
உன் சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!"
இந்த வாழ்த்துப்பாடலை இயற்றியவர் திரு.பெ. சுந்தரம் பிள்ளை (அவர் வாழ்ந்த காலம் "ஏப்ரல் 4, 1855 - ஏப்ரல் 26, 1897")
அவர் எழுதிய "மனோன்மணீயம்" என்ற புகழ்பெற்ற நாடக நூலில் இடம்பெற்றிருக்கும் தமிழ் தாய் வாழ்த்துப்பாடல் இது.
இந்த மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த என்று ஆரம்பமாகும் பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது.
தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலின் கருத்து:-
அலை கடலே ஆடையான இந்த அழகான பூமிப் பெண்ணிற்கு, பாரத நாடே முகமாம், தென்திசை அதன் நெற்றியாம், அதில் திலகமென திகழ்வது திராவிட திருநாடாம், அந்தத் திலகத்தின் வாசனைப் போல்அனைத்து உலகமும் இன்பம் காண எல்லா திசையிலும் புகழ் மணக்க இருக்கும் தெய்வமகள் ஆகிய தமிழே, என்றென்றும் இளமையாக இருக்கிற உன்னுடைய இந்த அழகைக் கண்டு வியந்து, செய்யும் செயலையும் மறந்து, வாழ்த்துகிறோம்! வாழ்த்துகிறோம்! வாழ்த்துகிறோம்!.....
நன்றிகளுடன் "வைஷாலி வாசகர் வட்டம்".
==========================
"ஒவ்வொரு மதமும் ஒரு விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை வகுப்புகள். என இந்த வருடம் முழுவதும் கற்றுக்கொள்வோம், தெரிந்துகொள்வோம் பயிற்சிப் பட்டறை மாதங்களின் வருடமாக, நமது வைஷாலி வாசகர் வட்டத்தின், ஒவ்வொரு மாதமும், ஆங்கில மதத்தின் 3வது ஞாயிறு அன்றைய வாசகர் வட்ட சந்திப்பில், ஒவ்வொரு மதமும் ஒரு விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை வகுப்புகள்... பயிற்சி மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும், மற்றும் கதைகள், கட்டுரைகள், பயிற்சிப்பட்டறை சார்ந்த போட்டிகளும் பரிசுகளும் என இந்தமாத இதழில் பல விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
மேலும் இந்த மாத சுட்டீஸ்களின் ஏராளமான செய்திகளை மிகவும் பயனுள்ள வகையில் நமது வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ் "குல்கந்து" குழுவினர்கள் தொகுத்து தந்திருக்கிறார்கள்....
@. புதிய எட்டு வித்தியாச புதிர் போட்டி :- சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்"..... ஆடி-மாத-படத்தில் உள்ள (8) எட்டு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் -வலைப்பதிவு இதழ் போட்டி என்-16.
சரியான விடை அடுத்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" http://gulkanthu.blogspot.in/வலைப்பதிவர் இதழில் வெளியாகும்.
போட்டியில் பங்குகொள்ள விருப்பமுடையவர்கள் விடைகளை "vaishalireaderscircle@gmail.com" என்கிற மினஞ்சல் முகவரிக்கு 10-08-2017 முன்பாக அனுப்பிவைக்கவேண்டும். சரியான விடை எழுதிய அனைவருக்கும் அடுத்தமாத வாசகர் வட்ட சந்திப்பில் பரிசுகள் வழங்கப்படும்.
$ சென்ற மாத "சுட்டீஸ் குல்கந்து" வலைப்பதிவர் இதழ்-15 ஜுலை-2017 ஆனி -மாதம் வலைப்பதிவு இதழ், எட்டு வித்தியாசப் போட்டி என்-15. போட்டிக்கான சரியான விடை,
1. மரக்கதவில் பூட்டு, 2) வெள்ளை நிற நாயின் கண்கள், 3)வெள்ளை நிற நாயின் கழுத்துப்பட்டை, 4) பழுப்பு நிற நாயின் மூக்கு, 5)பழுப்பு நிற நாயின் பற்கள், 6) பழுப்பு நிற நாயின் கழுத்து டாலர், 7) சிறுவன் வைத்திருக்கும் கைப்பையில் பட்டை, 8)கைப்பையில் இருக்கும் படம்.சென்ற மாத எட்டு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடையை 75 நபர்கள் மட்டுமே குறிப்பிட்டிருந்தனர், தமிழில் விடை எழுதியவர்கள்=40, ஆங்கிலத்தமிழில் எழுதியவர்கள்=15, ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=13, ஹிந்தி மொழியில்=0 நபர்களும், பிற மொழியில்=0 நபரும், மேலும் சிலர் எட்டுக்கும் அதிகமான தவறான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.
==============================================
I. முதலில் சுட்டீஸ் குல்கந்து தகவல்கள்:-
@ முதலில் வானவியல் கோள்களின் இயக்கம் குறித்தும் நாம் வாழும் பூமியைப்பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.
சூரியனிடமிருந்து 3 வது இடத்தில் அமைந்துள்ள கிரகமான பூமி பிரபஞ்சத்தில் உள்ள நன்கு அறியப்பட்ட உயிர் வாழ்க்கைக்கு உகந்த ஒரே கிரகமாக விளங்குகிறது எனலாம். சூரியனைச் சுற்றி அமைந்துள்ள நிலப்பரப்பை உடைய நான்கு கிரகங்களிலும் (Terrestrial Planets) மிகப் பெரியதான பூமி, ஏனைய எல்லா கிரகங்களிலும் மிகவும் அடர்த்தி கூடியதுடன் ஐந்தாவது மிகப் பெரிய கிரகமாகவும் விளங்குகின்றது.
சூரிய குடும்பம் தோன்றக் காரணமாக அமைந்த சோலார் நெபுலா எனும் அடர்ந்த வாயுப் படலத்திலிருந்து இயற்கையான திரள் வளர்ச்சி (acccretion) மூலம் சூரியனுடன் சேர்ந்து 4.54 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் நம் பூமி தோன்றியது.
எனினும் நம் பூமியில் உயிர் வாழ்க்கை தொடங்கி 1 பில்லியன் வருடங்களே ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பூமியின் தரைப் பரப்பை பெருமளவில் ஆக்கிரமித்துள்ள சமுத்திரங்களின் காரணமாக விண்வெளியிலிருந்து பார்க்கும் போது அழகிய நீல நிறமாகத் தென்படுவதால் “புளூ பிளானெட்” என பூமி அழைக்கப் படுகின்றது.
புவி மேற்பரப்பில் 70.8% வீதம் தண்ணீரால் மூடப்பட்டுள்ளது. மேலும் பூமியின் மேற்பரப்பில் காணப்படும் மூலகங்களின் அளவை ஒப்பிடும் போது சிலிக்கன் மிக அதிகமாக 60.2% வீதமும், அலுமினியம் 15.2% வீதமும் நீர் 1.4% வீதமும் கார்பனீரொட்சைட் 1.2% வீதமும் காணப் படுகின்றன.
பூமியின் திணிவு (5.98 * 10 இன் வலு 24) Kg ஆகும். பூமியின் மொத்தத் திணிவில் அதிக பட்சமாக இரும்பும் (32.1%), அதையடுத்து ஆக்ஸிஜெனும் (30.1%) தொடர்ந்து சிலிக்கனும் (15.1%) காணப்படுகின்றன.
நாம் வாழும் பூமி இன்னமும் 500 மில்லியன் தொடக்கம் 2.3 பில்லியன் வருடங்களுக்கு உயிர் வாழ்க்கைக்கு உகந்ததாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இனி பூமி பற்றி சுருக்கமான விபரங்களைப் பார்ப்போம் -
1. பூமி தன்னைத் தானே ஒரு முறை சுழல எடுக்கும் காலம் - 0.99 நாள் அல்லது 23 மணி 56 நிமிடம் 4 செக்கன்
2. சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் - 365.256366 நாட்கள் அல்லது 1.0000175 வருடம்
3. சூரியனைச் சுற்றி பயணிக்கும் வேகம் - 29.783 Km/s
4. பூமியின் சராசரி ஆரை: 6371 Km
5. துருவ ஆரை: 6356.8 Km (பூமி பந்துபோல் உருண்டையாக இல்லாது துருவப் பகுதி சற்று தட்டையாக இருப்பதனால்)
6. சுற்றளவு (கிடை அச்சில்) : 40 075.02 Km
7. நீள் கோள மேற்பரப்பளவு : 510 072 000 Km2
8. கனவளவு - 1.0832073 * 10 இன் வலு 12 Km3
9. நிறை - 5.9736 * 10 இன் வலு 24 Kg
10. சராசரி அடர்த்தி : 5.5153 g/cm3
11. மையத்திலிருந்து ஈர்ப்பு விசை : 9.780327 m/s2 அல்லது 0.99732 g
12. தப்பு வேகம் : 11.186 Km/s
13. சாய் கோணம் : 23.439281 பாகை
14. எதிரொளி திறன் : 0.367
15. மேற்பரப்பு வெப்பம் : 184 K(குறைந்த), 287 K (மத்திய), 331 K (அதிக பட்ச)
16. வளிமண்டலத்தில் மேற்பரப்பு அழுத்தம் : 101.3 Pa
17. துணைக் கோள் : 1 (சந்திரன்)
பூமியானது தன் அச்சில் சுழலும் மற்றும் சூரியனையும் சுற்றி வரும் தன்மைகளைக் கொண்டு காலம் கணிக்கப் படுகின்றது. பூமி தன்னைத் தானே ஒரு முறை சுற்ற எடுக்கும் நேரம் சராசரியாக 24 மணித்தியாலங்கள் அல்லது ஒரு நாளாகவும், சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுக்கும் காலம் 365 1/4 நாட்கள் அல்லது ஒரு வருடமாகவும் கணிக்கப் படுகின்றது. இதில் சூரியனை சுற்றி வர எடுக்கும் காலத்தில் ஒரு நாளின் கால் பங்கை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கணிப்பிட்டு நான்காவது ஆண்டில் பெப்ரவரி மாதம் 29ம் திகதியாக சேர்க்கப்படுகின்றது. இதனையே நாம் லீப் வருடம் என்கிறோம்.
பண்டைய காலத்தில் சந்திரனின் பிறைகளை அடிப்படையாகக் கொண்டு மாதங்கள் கணிப்பிடப்பட்ட போதும் தற்போது அந் நடை முறை பின்பற்றப் படுவதில்லை. ஓரு மாதத்துக்கு மிக அண்மையாக அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரை வளர்பிறை 14 நாட்களும் பௌர்ணமியிலிருந்து அமாவாசை வரை தேய்பிறை 14 நாட்களும் மொத்தமாக 28 நாட்களே சந்திர மாதத்தில் வருவது குறிப்பிடத்தக்கது.
எனினும் சராசரியாக சந்திரன் ஒருமுறை பூமியைச் சுற்றி சூரியனையும் சுற்றி வரும் வீதத்துடன் ஒப்பிடுகையில் முதல் பௌர்ணமியிலிருந்து அடுத்த பௌர்ணமி வரை 29.53 சராசரியாக 30 நாட்கள் எடுப்பதாக வானியலாளர்கள் கணித்துள்ளனர். இது சைனோடிக் மாதம் எனப்படுகின்றது.
பூமியின் அச்சு சுழற்சி அதன் கோளப் பாதையிலிருந்து 23.4 பாகை செங்குத்தாக விலகி சாய்ந்திருப்பதால் பருவ நிலை வேறுபாடுகள் ஏற்படுகின்றன. பூமியின் மேற்பரப்பில் விழும் சூரிய ஒளியின் அளவு வெவ்வேறு இடங்களில் படுவதே இதற்குக் காரணமாகும்.
வட துருவம் சூரியனை நோக்கி உள்ள போது வடவரைக் கோளத்தில் கோடை காலமும் சூரியனை விட்டு விலகி உள்ள போது குளிர் காலமும் ஏற்படுகின்றது. இதே போன்றே தென் துருவத்திலும் எதிரிடையாக காலநிலை வேறுபாடுகள் ஏற்படுகின்றன.
துருவப்பகுதிகளின் உச்சியில் குறிப்பிட்ட சில பகுதிகளில் வருடத்தின் ஆறு மாதம் பகல் மற்றும் ஆறு மாதம் இரவு என பருவங்கள் நிகழ்கின்றன. புவியின் சாய்வு காரணமாக சிறிது ஒழுங்கற்ற இயக்கம் நிகழ்வதாக வானியலாளர்கள் கருதுகின்றனர். பூமி மற்றும் சந்திரனின் ஈர்ப்பு காரணமாக துருவ நகர்வுகள் நிகழ்கின்றன. இது சாண்ட்லேர் தள்ளாட்டம் எனப் படுகின்றது. மேலும் சூரியன் பூமிக்கிடையிலான தூரமும் மிகச்சிறியளவில் அதிகமாகிக் கொண்டு வருவதாகவும் இவர்கள் கூறுகின்றனர்.
பூமியின் தரையியல்பைப் பார்ப்போம். பூமியில் மிக உயர்ந்த இடமாக வட இந்தியாவின் இமய மலைத் தொடரில் அமைந்துள்ள எவரெஸ்ட் சிகரமும் (8048 m) மிகத் தாழ்ந்த இடமாக பசுபிக் பெருங்கடலிலுள்ள மரியானா ஆழியும் (10 911.4 m or 11 Km) காணப்படுகின்றன.
பூமியில் உள்ள நிலப் பரப்பு 7 கண்டங்களாகவும் 5 சமுத்திரங்களாகவும் வகுக்கப் பட்டுள்ளது. சமுத்திரங்களில் அடங்கியுள்ள நீரில் 97.5% வீதம் உப்பு நீராகவும் 2.5% வீதம் தூய நீராகவும் தூய நீரில் 68.7% வீதம் பனிக்கடிகளாகவும் காணப்படுகின்றன.
பூமியின் வளி மண்டலத்தை எடுத்துக் கொள்வோம். வளி மண்டலத்தின் மேற்பகுதி ஓசோன் படலத்தால் சூழப் பட்டிருப்பதால் பிரபஞ்ச பின்புலக் கதிர்கள் மற்றும் சூரியனிடமிருந்து வரும் அல்ட்ரா வயலெட் எனப் படும் புற ஊதாக் கதிர்கள் தடுக்கப் படுகின்றன. இதனால் உயிர் வாழ்க்கைக்கு உகந்த சூழல் பூமியில் நிகழ ஏதுவாகின்றது.
புவி மேற் பரப்பில் சராசரி வளி மண்டல அழுத்தம் 8.5 Km வரை 101.325 Kpa ஆகக் காணப்படுகின்றது. பூமியில் தாவர வளர்ச்சிக்கு ஏதுவான சூரிய ஒளி மூலம் நிகழும் பச்சை வீடு விளைவு எனும் ஒளிப்பெருக்கம் 2.7 பில்லியம் ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது. தற்போது வளி மண்டலத்தில் காணப்படும் வாயுக்களின் வீதத்தைப் பார்த்தால் அதிகளவாக நைட்ரஜன் 78% வீதமும் ஆக்ஸிஜன் 21% வீதமும் மிகச்சிறியளவில் நீராவி மற்றும் காபனீரொட்சைட்டு வாயுக்களும் காணப்படுகின்றன.
பூமியானது தன்னையும் சுற்றிக்கொண்டு சூரியனைச்சுற்றி வருகின்றது என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் அறிந்திருப்பீர்கள்.
பூமியில் இருக்கும் நாம் முதலில் நம்மைச்சுற்றி என்ன நடக்கின்றது என்பதை அவதானித்துக்கொள்ள வேண்டும் என்பதை பூமி சொல்லித்தரும் பாடமாக அறிந்து கொள்வோம். அத்தோடு இதையும் அறிந்து கொள்ளுங்கள்.
பூமியின் நீர்ப்பரப்பு: 139,440,000 சதுர கி.மீ
பூமியின் நிலப்பரப்பு: 14 கோடி 90லட்சம் கி.மீxகி.மீ
பூமியின் விட்டம்: 7920 கி.மீ
பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரம்: 240,000 கி.மீ
பூமியிலிருந்து வாயு பரந்திருக்கும் தூரம் :1000 கி.மீ
பூமி சுழலும் வேகம்: 66,600 கிமீ/மணிக்கு
பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும்போது : அமாவாசை
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வருவது: பெளர்ணமி
பூமி சுழலும் பக்கம்: மேற்கிலிருந்து கிழக்காக
பூமிக்கு சூரிய ஒளி வர எடுக்கும் நேரம்: 480 செக்கன் (8 நிமிடம்)
சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வரும் சந்திரன் சூரியனை மறைப்பதால் ஏற்படும் நிழல் பூமியின் மீது விழும் போது “சூரிய கிரகணம்” ஏற்படும் அதாவது அமாவாசையில் வரும்
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வரும் பூமியின் நிழல் சந்திரனை மறைக்கும் போது “சந்திரகிரகணம்” ஏற்படும்; அதாவது பெளர்ணமியில் வரும்.
நன்றி நன்றி பணிப்புலம். காம் - சிறுவர் பூங்கா.
===============================
@சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்
ஓம் ஸ்ரீ பரமேஸ்வரியே நம
ஓம் பிரும்ம விஷ்ணு சிவாத்மிகாயை நம
ஓம் சிவாய நம
- இந்த மந்திரத்தை 108 முறை சொல்லிக்கொண்டே ஒரு செம்பில் தண்ணீர் வைத்து அதில் வேப்பிலைக் கொத்தால் நீரை தொட்டு குழந்தை முகத்தில் தெளிக்க, சகல தோஷங்களும் நிவர்த்தியாகும்.
==========================
@ "சூடம் - கற்பூரத்தின் மகிமை " தற்போது நகர்புறக் காற்றில் எங்கும் நோய்க்கிருமிகள் பரவிக்கிடக்கிறது. புரியாத பல மர்ம நோய்கள் உயிர்களை பலிவாங்குகிறது.
வீட்டை விட்டு வெளியில் செல்லும் அனைவரும் அவர்களது சட்டைப்பையில் சிறு சூடம் அல்லது கற்பூரத்தை போட்டு வையுங்கள்.
கற்பூரம் ஒரு கிருமி நாசினியாக வேலைசெய்கிறது. இது நாம் சுவாசிக்கும்போது சுவாசக்காற்றோடு நோய்க்கிருமிகள் நம்மை அணுகாதவண்ணம் கற்பூர வாசம் நம்மை காக்கிறது.
சிறு வயதில் ஊரில் எந்த திருவிழா போன்ற கூட்ட நெரிச்சல் நிறைந்த இடங்களுக்கு செல்லும்போது அம்மாவும் பாட்டியும் மறக்காமல் சூடம் அல்லது கற்பூரத்தை எனது சட்டைப்பையில் வைக்க தவறமாட்டார்கள்...
நன்றி கோகி-ரேடியோ மார்கோனி.
==============================
@ சங்கல்ப மந்திரத்தின் கணக்கு தெரியாமல் அந்த மந்திரத்தை சொல்லுவதால் எந்தப்பயனும் இல்லை! ஆகவே சங்கல்ப மந்திரத்தின் சாரஹம்சத்தை தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்....
கோவிலில் அர்ச்சனை செய்யும்போதோ அல்லது ஒரு சாஸ்திர சம்பிரதாய நிகழ்ச்சிகளாக திருமணம் மற்றும் பூஜை, திதி சிரார்த்தம், தர்ப்பணம் போன்றவைகளை செய்யும்போதோ, முதலில் "ஸங்கல்பம்" செய்கிறோம். அப்படி சங்கல்பம் செய்யும்போது கூறும் சம்ஸ்கிருத மந்திரங்களின் விவரங்களை நாம் ஓரளவாவது தெரிந்துவைத்திருக்கவேண்டும்.
"சங்கல்பம்" :- "மாமோ பாத்த: ஸமஸ்த: துரிதக்ஷய த்வார: ஸ்ரீபரமேஸ்வர: ப்ரீத்யர்த்தம்.. என்று ஆரம்பித்து ..." ஆத்யப்ரஹ்மண: த்விதிய ப்ரார்தே ஸ்வேதவராஹ கல்பே, வைவஸ்வத மந்தரே, அஷ்டாவிம்ஸதிதமே, கலியுகே, ப்ரதமே பாதே ஜம்பூத்வீதே பாரதவர்ஷே பரதகண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே, சாலீவாஹண ஸகாப்தே அஸ்மிந்வர்த்தமானே வ்யவஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி: ஸம்வத்ஸராணாம் மத்யே.. அன்றைய தினத்திற்க்கு உள்ள திதி, வார, நக்ஷத்திரத்தைப் உச்சரித்து ஸங்கல்பம் செய்கிறோம்"
அது என்ன சங்கல்ப மந்திர கணக்கு என்றால்? மிக எளிமையான உங்களுக்கு தெரிந்த கணக்குதான் அது!!!!
30 நாள் = 1 மாதம்
12 மாதங்கள் = 1வருடம்
60 வருடங்கள் = 1 சுழற்சி (பிரபவ முதல் அக்ஷய வரை)
3000 சுழற்சிகள் = 1 யுகம் (அதாவது 3000' x 60 வருடங்கள்)
4 யுகங்கள் = 1 சதுர்யுகம்
71 சதுர்யுகங்கள் = 1 மன்வந்தரம்
14 மன்வந்த்ரங்கள் = 1 கல்பம்
ஒரு கல்பம் என்பது நானூற்று முப்பத்து இரண்டு கோடி மானுட வருடங்கள் (கணக்கதிகாரம்).தற்போது இதில் பாதி முடிந்து விட்டது. இப்பொழுது நடந்துகொண்டிருப்பது, த்விதீய பரார்த்தம் - இரண்டாவது பரார்த்தம்.
ஸ்வேதவராஹ கல்பம் என்றால் - இரண்டாவது பரார்த்தத்தின் பிரம்மாவின் முதல் நாள் ஸ்வேத வராஹ கல்பம் எனப்படும். வாயு புராணத்தின் கணக்குப்படி மொத்தம் 36 கல்பங்கள் உள்ளன. இந்த உலகத்தை விஷ்ணு வெள்ளைப் பன்றி உருவம் (ஸ்வேத வராஹம்) கொண்டு வெளிக்கொணர்ந்த காலவெள்ளத்தில் உட்பட்டது என்பதால் இது ஸ்வேத வராஹ கல்பம் எனப்பட்டது.
வைவஸ்வத மன்வந்தரம் என்றால் - நடந்து கொண்டிருக்கும் ஸ்வேத வராஹ கல்பம் 14 மன்வந்திரங்களை உள்ளடக்கியது. ஒரு மன்வந்தரம் என்பது 71 சதுர் யுகங்கள் கொண்டது.
14 மன்வந்திரங்களாவன என்பவை:-
: 1.ஸ்வாயம்புவ மன்வந்திரம், 2.ஸ்வரோசிஷ மன்வந்திரம், 3.உத்தம மன்வந்திரம், 4.தாமச மன்வந்திரம், 5.ரைவத மன்வந்திரம், 6.சாக்ஷ¤ஷ மன்வந்திரம், 7.வைவஸ்வத மன்வந்திரம், 8.சாவர்ணிக மன்வந்திரம், 9.தக்ஷ சாவர்ணிக மன்வந்திரம், 10.ப்ரமஹா சாவர்ணிக மன்வந்திரம், 11.தர்ம சாவர்ணிக மன்வந்திரம், 12.ருத்ர சாவர்ணிக மன்வந்திரம், 13.தேவ சாவர்ணிக மன்வந்திரம், 14.சந்திர சாவர்ணிக மன்வந்திரம்.
அதாவது நாம் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கிற ஏழாவது மன்வந்திரமாகிய வைவஸ்வத மன்வந்திரத்தில் இருக்கின்றோம். அஷ்டாவிம்சதி (28) தமே கலியுகே - (71 சதுர்யுகங்கள் கொண்டது ஒரு மன்வந்திரம் என்று கண்டோம் அல்லவா, ஆகவே வைவஸ்வத மன்வந்திரத்தினுடைய 71 சதுர்யுகங்கள் கொண்ட பாதையில் 28வது சதுர்யுகத்திலிருக்கும் நான்கு யுகங்களான கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என்பதில் வரும் கடைசி யுகமான கலியுகம் நடந்து கொண்டிருக்கிறது).
இந்தக் கலியுகம் முடிந்து அடுத்த சதுர்யுகம் தொடங்கும். அது 29 வது சதுர்யுகத்தின் கிருத யுகத்தில் தொடங்கும்.
இதுவரை வந்தது கால அளவைகள் அடுத்தது நாம் இருக்கும் இடத்தின் அளவைகள். இவற்றைச் சற்றே சுருக்கமாகக் காண்போம்.
ஜம்பூத்வீபே - பரந்த பால்வெளியின் பல அண்டங்களில் ஒரு அண்டத்தின் சின்னஞ்சிறு பாகத்தின் ஒரு மூலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். த்வீபம் என்பது தீவு என்று அர்த்தம். பரந்த பால்வெளிக் கடலில் உள்ள ஒவ்வொரு அண்டமும் ஒரு தீவு போலத்தான். ஏழு தீவுகள் உள்ளன. (1. ஜம்பூ த்வீபம் (நாம் வசிப்பது - நீரால் சூழப்பட்டுள்ளது), 2. பிலக்ஷ த்வீபம், 3. சான்மலி த்வீபம், 4. குச த்வீபம், 5. க்ரௌஞ்ச த்வீபம், 6. சாக த்வீபம், 7. புஷ்கர த்வீபம்)
பாரத வர்ஷே - த்வீபங்கள் எனும் தீவுகளுள் ஒன்றான ஜம்புத்வீபம் ஒன்பது வர்ஷங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் பாரத வர்ஷத்தில் தான் நாம் வசிக்கின்றோம். (1. பாரத வர்ஷம், 2.ஹேமகூட வர்ஷம், 3. நைஷத வர்ஷத்ம், 4.இளாவ்ருத வர்ஷம், 5. ரம்ய வர்ஷம், 6. ச்வேத வர்ஷம், 7. குரு வர்ஷம், 8. பத்ராச்வ வர்ஷம், 9.கந்தமாதன வர்ஷம்)
பரத கண்டே - பாரத வர்ஷம் ஒன்பது கண்டங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. (1.பரதகண்டம், 2. கிம்புருகண்டம், 3. அரிவருடகண்டம், 4. இளாவிரதகண்டம், 5. இரமியகண்டம், 6. இரணியகண்டம், 7. குருகண்டம், 8. கேதுமாலகண்டம், 9.பத்திராசுவகண்டம).
இதில் நாம் பரத கண்டத்தில் வசிக்கின்றோம்.
மேரோர் தக்ஷ¢ணே பார்ச்வே - பரத கண்டத்திலிருக்கும் மேரு எனும் மலையின் தெற்கு புறத்திலிருக்கின்றோம்.
.
எண்ணற்ற பிரம்மாக்களின் சிருஷ்டி வரிசைகளில், ஒரு பிரம்மாவின் படைப்பில், அவரின் இரண்டாவது காலத்தின், முதல் தினத்தில் (கோடிக்கணக்கான வருடங்களுக்கு இடையில்) வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
மேலே சொல்லப்பட்டுள்ள கணித வகைகள் தமிழின் தொல்லிய நூலாகிய காரி என்பவர் எழுதிய கணக்கதிகாரத்தை மையமாகவும் கொண்டு சொல்லப்பட்டுள்ளது. கணக்கதிகாரம் மிக அற்புதமான நூல். கால கணிதம் மட்டுமன்றி, எடையறிதல், நீளமறிதல் போன்ற நுண்ணிய கணிதங்களைக் கொண்டது. அதில் கிடைக்கும் ஒரு செய்யுளில் ஒரு பலாப் பழத்தைப் பார்த்தே, அதைப் பிளக்காமலே அதில் உள்ள பலாச் சுளைகளை அறிய ஒரு கணித சமன்பாடு இருக்கின்றது. ஒரு பலாப்பழத்திலுள்ள காம்பைச் சுற்றிய முதல் வரிசையில் உள்ள முட்களை எண்ண வேண்டும். அந்த எண்ணிக்கையை ஆறால் பெருக்க வேண்டும். அதில் கிடைக்கும் தொகையை ஐந்தால் வகுத்தால் பலாப்பழத்தில் உள்ள பலாச் சுளைகளின் எண்ணிக்கை கிடைக்கும். என்னே ஒரு கணிதம்!
ஒரு மரத்தை வெட்டினால் வெட்டுப்பட்ட பாகத்தில் உள்ள கோடுகளைக் கொண்டு மரத்தின் ஆயுளைக் கூறிவிட முடியும்.
இவ்விதம் காலமானம் பேசப்படுகிறது இது தான் சனாதன சமய கால கணக்கீட்டில் மிகச்சிறிய பகுதி, மேலும் வானசாஸ்திரத்தை (Astronomy) அறிய அதன் பெருமையை பேச நமக்கு 2017 வருடங்கள் போதாது.
நேரம் கிடைக்கும்போது உங்களின் கைத்தொலைப்பேசியில் இணையத்தில் இணைந்து "கூகிள்" கணினி சாமிகளிடம் தமிழில் "கணக்கதிகாரம்" என்று தேடினால் இந்தப் நூல்/ புத்தகத்தைப்பற்றி பல விவரங்களை படித்து தெரிந்துகொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு எங்களோடு "வைஷாலி வாசகர் வட்டம்" என்கிற முகநூல் பக்கத்தில் உங்களையும் இணைத்துக்கொண்டு பயனடையலாம்.
நன்றிகளுடன்
"கோகி" என்னும் கோபால கிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி.
======================
@ பூர்வ ஜென்மத்தில் ஒரு ஆன்மா புண்ணியம் செய்திருந்தால் தான் ருத்ராட்சம் கழுத்தில் அணியும் பாக்கியம் கிடைக்கும் .
இந்த பதிவை ஒருவர் படிக்கிறார் எனில் அதற்கு அவர்கள் நற்காரியங்கள் செய்திருக்க வேண்டும் இதை படித்த பின் ருத்ராட்சம் அணிந்து கொள்வார் எனில் இறைவன் அவர்கள் மீது கருணை செய்திருக்க வேண்டும், ஏனெனில் ருத்ராட்சம் அணிந்து இருப்பவர்கள் அனைவரும் சிவ குடும்பமே சிவ குடும்பத்தில் ஒருவர் ஆவார்.
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. பல பிறவிகள் எடுத்த பிறகே இந்த மானிடப்பிறவியை அடைகிறோம். சிவபுராணத்தில் "புல்லாகிப், பூடாய்ப், புழுவாய், மரமாகிப், பல்விருக மாகிப், பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப், பேயாய்க் கணங்களாய் வல்லசுரர், ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்! என்ற பாடல் வரிக்கேற்ப நாம் பல பிறவி கஷ்டங்களை கடந்து வந்துள்ளோம். உலகில் மொத்தம் 84 நான்கு லட்சம் உயிரினங்கள் உள்ளது அதில் கடைசி பிறப்பு தான் மானிட பிறவி.
ஒரு அறிவு புல் பூண்டு மரம் செடி கொடிகள்!
இரண்டு அறிவு நீரில் வாழ்பவை மீன் தவளை முதலை நண்டு!
மூன்று அறிவு நிலத்தில் ஊர்பவை பாம்பு பல்லி ஓணான்!
நான்கு அறிவு வானில் பறப்பவை மயில் குயில் கழுகு புறா காகம்!
ஐந்து அறிவு ஆடு மாடு சிங்கம் புலி யானை எருமை நாய் பூனை!
ஆறு அறிவு ஆண் பெண், திருநங்கை
என்று இந்த ஆறு அறிவும் ஒன்று முதல் எண்பத்தி நான்கு லட்சம் முடிய பிறந்து இறந்து இறந்து பிறந்து 8399999 வரை மற்ற உயிரினங்களாக வாழ்ந்து 8400000 லட்சம் எண்ணும்போது தான் மானிடப் பிறவி அதுவும் 8399999 இறந்த பிறந்து வாழும்போது இதில் ஏதாவது ஒரு பிறப்பில் புண்ணிய காரியம் செய்து இருந்தால்தான் மானிட பிறவி கிடைக்கும் அப்படி பட்ட அரிதான மனித பிறவி எடுத்து பிரயோஜனம் இல்லாமல் போய்விடகூடாது என்பதற்காகத்தான் இறைவன் நம்மீது கருணை கொண்டு தேவர்களுக்கு கூட கிடைக்காத மஹா பொக்கிஷம்மான *திருநீறு* *ருத்ராட்சம்* *பஞ்சாட்சரம்* அருளி உள்ளார் இவைகளை பயன் படுத்தி அனைவரும் பயன்பெறலாம் இதை என் அனுபவத்தில் அனுபவித்து சொல்லுகின்றேன்.
சிலர் சொல்லுவார்கள் சுத்தமாக இருப்பவர்கள் தான் ருத்ராட்சம் அணிய வேண்டும் என்று?
ஆம் சுத்தம் என்பது மனதை சுத்தமாக வைத்துக்கொள்வது பிறர்க்கு துன்பம் தராமல் இருப்பது, பிறரின் சொத்துக்களை அபகரிப்பு செய்வது, கடும் பொறாமை படுவது, திருடுவது, ஏளனமாக நடப்பது, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நம்பிக்கை துரோகம் செய்வது, தவறு செய்யாத பிறருக்கு தண்டனை தருவது, தண்டிப்பது, கோர்ட்டில் பொய் சாட்சி சொல்வது, இதைப்போன்ற சுத்தம் இல்லாத மனிதநேயம் இல்லாத காரியங்கள் செய்பவர்கள் தான் ருத்ராட்சம் அணிய கூடாது.
தர்மம் மனிதாபிமானம் மனிதநேயம் மரியாதை கனிவு அன்பு கருணை பக்தி பிரதோஷம் அன்று ஆலயம் செல்வது இதுபோன்ற நல்ல நற்காரியங்களை செய்பவர்கள் ருத்ராட்சம் கண்டிப்பாக 10000000000000008,மடங்கு அணியலாம் நாம் பிறந்ததின் பயனும் பெறலாம்...
உதாரணத்திற்கு 63 நாயன்மார்கள் பெரியபுராணம் படியுங்கள் தெளிவு கிடைக்கும் வெற்றி நிச்சயம். "திருச்சிற்றம்பலம்".
திருநீறு (நெற்றியில்) தரித்தல் ருத்ராட்ஷம் (கழுத்தில்) அணிதல் பஞ்சாட்சர மந்திரம் (ஓம் நமசிவாய மனதில்) உச்சரித்தல் இம்மூன்றும் ஒருவர் ஒரு சேரச் செய்வார் எனில் அவர்கள் இல்லத்தில் ஐஸ்வர்யங்கள் பெறுகும், இறைவனின் (சிவபெருமானின்) கருணை கிடைக்கப்பெறும்.
=========================
@சிவ மூலிகைகளின் சிகரம் - வில்வம் !!!
சிவ வழிபாட்டுக்கு எத்தனையோ மலர்கள் உகந்ததாக உள்ள போதிலும், வில்வ இலை தனித்துவம் கொண்டது. வில்வ இலையால் சிவனை அர்ச்சனை செய்து வழிபடும் போது கிடைக்கும் பலன்கள் ஏராளம்.
யார் ஒருவர் தினமும் சிவாலயத்துக்கு சென்று வில்வத்தை வழங்கி ஈசனை வழிபடுகிறாரோ, அவரது சகல பாவங்களும் நீங்கி விடும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
வில்வமானது பாதிரி, வன்னி, மந்தாரை, மா ஆகிய மரங்களுடன் தேலோகத்தில் இருந்து வந்த ‘பஞ்ச தருக்கள்‘ என்ற சிறப்பைப் பெற்றது.
=================================
@இறைவனின் மேல் முழு நம்பிக்கை வை:-
ஒரு ஊரில் ஒரு ஆதரவற்ற ஏழைப் பெண் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு என்று சொந்தம் அவள் வளர்க்கும் சில மாடுகள் தான். அந்த மாடுகளிடமிருந்து பாலை கறந்து அக்கம் பக்கத்து கிராமங்களில் உள்ள பல வீடுகளுக்கு சென்று தினசரி கொடுப்பதை அவள் வழக்கமாக கொண்டிருந்தாள். அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து வாழ்ந்து வந்தாள்.
ஊரின் எல்லையில் இருக்கும் ஒரு சன்னியாசியின் ஆஸ்ரமத்துக்கும் இவள் தான் தினசரி பால் கொடுப்பது வழக்கம்.
ஒரு நாள் வழக்கம் போல, சன்னியாசி பூஜையில் உட்கார்ந்தார். ஆனால் நைவேத்தியத்துக்கு தேவையான பால் இன்னும் வரவில்லை. அடிக்கடி இந்த பால் கொண்டு வரும் பெண் தாமதமாக வருகிறாள் என்பதை புரிந்துகொள்ளும் அவர் அந்த பெண்ணிடம் கடிந்துகொள்கிறார்.
“ஏன்மா… உன்னாலே ஒழுங்கா சரியான நேரத்துக்கு பால் கொண்டுவர முடியாதா? உன்னாலே எனக்கு எல்லாமே தாமதமாகுது”
“மன்னிக்கணும் சாமி. நான் என்ன பண்ணுவேன்…. நான் வீட்டை விட்டு சீக்கிரமா தான் கிளம்புறேன். ஆனால், இங்கே வர்றதுக்க்கு கரையில படகுக்காக காத்திருக்க வேண்டியிருக்கு.”
“என்னது ஆத்தை கடக்குறதுக்கு படகுக்கு காத்திருக்கியா? அவனவன் பிறவிப் பெருங்கடலையே “கிருஷ்ணா கிருஷ்ணா’ன்னு சொல்லிகிட்டே தாண்டிடுறான். நீ என்னடான்னா ஆத்தை கடக்குறதை போய் ஒரு பெரிய விஷயமா சொல்லிகிட்டிருக்கியே…. என்னமோ போ…. இனிமே சீக்கிரம் வரணும் இல்லேன்னா எனக்கு பால் வேண்டாம்” என்று கூறிவிட்டு உள்ளே சென்றுவிடுகிறார்.
அவர் என்ன நினைச்சு சொன்னாரோ…. ஆனால் அந்த பெண் அதை மிகவும் தீவிரமாக பயபக்தியுடன் கேட்டுக்கொண்டாள்.
மறுநாளிலிருந்து சரியாக குறித்த நேரத்துக்கு பால் கொண்டு வர ஆரம்பித்துவிடுகிறாள். சந்நியாசிக்கோ திடீர் சந்தேகம் வந்துவிடுகிறது.
“என்னமா இது அதிசயமா இருக்கு? இப்போல்லாம் சரியான நேரத்துக்கு வந்துடுறியே?”
“எல்லாம் நீங்க சொல்லிக் கொடுத்த மந்திரம் தான் ஐயா…. அது மூலமா நான் ஆத்தை சுலபமா தாண்டிடுறேன். படகுக்காக இப்போல்லாம் காத்திருக்கிறதில்லை”
“என்ன நான் சொல்லிக் கொடுத்த மந்திரமா? அதை வெச்சு ஆத்தை தாண்டிடுறியா? நம்பமுடியலியே…. ” என்று கூறும் சந்நியாசி அவள் ஆத்தை தாண்டுவதை தான் நேரில் பார்க்க வேண்டும் என்கிறார்.
ஆற்றின் கரைக்கு சென்றவுடன், “எங்கே தாண்டு பார்க்கலாம்” என்கிறார் அந்த பெண்ணிடம்.
பால்காரப் பெண், கை இரண்டும் கூப்பியபடி “கிருஷ்ணா கிருஷ்ணா” என்று கூறியபடியே தண்ணீரில் நடக்க ஆரம்பித்துவிடுகிறாள்.
நடந்ததை நம்ப முடியாது பார்க்கும் சன்னியாசிக்கு ஒரு பக்கம் அதிர்ச்சி மறுபக்கம் தயக்கம். “ஆறு எவ்வளவு ஆழம்னு தெரியலையே…. தவிர கால் உள்ளே போய்ட்டா என்ன செய்றது? ஆடை நனைந்துவிடுமே…? என்று அவருக்கு பலவாறாக தோன்றியது. ஒரு சில வினாடிகள் தயக்கத்துக்கு பிறகு ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ என்று கூறியபடி தண்ணீரில் காலை வைக்க முயற்சிக்கிறார். ஆனால் கால் உள்ளே செல்கிறது. சன்னியாசி திடுக்கிடுகிறார்.
“அம்மா உன்னாலே முடியுது என்னால ஏன் முடியலே….?” என்கிறார் அந்த பெண்ணை பார்த்து.
அந்த பெண் பணிவுடன், “ஐயா…. உங்க உதடு ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ன்னு சொன்னாலும் உங்க கை ரெண்டும் உங்க உடுப்பு நனையக்கூடாதுன்னு தூக்கி பிடிச்சிருக்கே….? தவிர ஆத்தோட ஆழத்தை பரீட்சித்து பார்க்கும் உங்க முயற்சி அந்த ஆண்டவனையே ஆழம் பார்க்கிறது போலல்ல இருக்கு!” என்கிறாள்.
சந்நியாசி வெட்கி தலைகுனிகிறார்.
கடவுள் மேல் நமது நம்பிக்கை எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை விளக்க பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறிய கதை இது.
பிரார்த்தனை செய்கிறவர் மனநிலை அந்த பெண்ணின் மனநிலை போலத் தான் இருக்கவேண்டும். அந்த சன்னியாசியை போல அல்ல.....
=======================
@ கோவில் மணிகள்:
கோவில் மணிகள் சாதாரண உலோகத்தில் செய்யப்படுவதில்லை. காட்மியம், ஜின்க், லெட், காப்பர், நிக்கல், க்ரோமியம் மற்றும் மாங்கனீஸ் போன்ற பல உலோகங்களை கொண்டு செய்யப்படுபவை தான் மணிகள். கோவில் மணியை செய்ய ஒவ்வொரு உலோகத்தையும் சரியான அளவில் கலக்க வேண்டும். அதன் பின்னணியில் இருக்கும் விஞ்ஞானம் என்னவென்று தெரியுமா?
மணியை ஒலிக்க செய்யும் போது ஒவ்வொரு உலோகமும் ஒவ்வொரு தனித்துவமான ஒலியாய் எழுப்பும். இது உங்கள் இடது மற்றும் வலது மூளையை இணைக்க செய்யும். அதனால் மணி அடித்த அடுத்த தருணமே, நீண்ட நேரம் ஒலிக்கும் கூர்மையான சத்தம் எழும்.
இது 7 நொடிகள் வரை நீடிக்கும். மணியில் இருந்து எழும் எதிரொலி உங்கள் உடலில் உள்ள 7 குணமாதல் மையங்களையும் (சக்கரங்கள்) தொடும்.
அதனால் மணி ஒலித்த உடனேயே, உங்கள் மூளை சில வினாடிகளுக்கு வெறுமையாகி விடும். அப்போது மெய்மறதி நிலையை அடைவீர்கள். இந்த மெய்மறதி நிலையில், உங்கள் மூளை சொல்வதை வரவேற்கும் பண்பை பெறும்.
====================================
@ அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என்று நான்கு மாணவிகளை அனுப்பினார் ஆசிரியை.
திரும்பி வந்த ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது.
இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது.
மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது.
முதலில் கிளம்பிப்போன மாணவியோ கடைசியில் வெறுங்கையோடு திரும்பி வந்தாள். ஏனென்று கேட்டபோது சொன்னாள்:
“நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.
வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன்
குஞ்சுப் பறவையைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன்...”
அந்த மாணவியை அணைத்துக் கொண்ட ஆசிரியை சொன்னார்:
“அன்பு என்றால் இதுதான்!”
ஒன்றுமே கொடுக்க வேண்டாம். எதையுமே பறிக்காமல் இருந்தால் அதுவே போதும்...
எதையும், யாரையும் காயப்படுத்தாமல் இருப்போமே...
நாம் உலகிற்கு எதையேனும் கொடுக்க வேண்டுமென நினைத்தால் அன்பைக் கொடுப்போம்...ஏனெனில் உலகில் எங்கும் பரவிக் கிடப்பது அன்பு ஒன்று தான்... ஆனால் உலகம் அதிகமாக ஏங்கிக் கிடப்பதும் அதே அன்புக்காகத்தான்...
விட்டு விடுங்கள் ஆனவத்தையும் அதிகாரங்களையும், வாழ்வது சில காலங்கள் மட்டும், அன்பை மட்டும் பிடித்துக் கொள்ளுங்கள் அது தான் கடைசி வரை உதவியாக இருக்கும்.
==============================
@ நவரத்தினம் - அதிஷ்டக் கற்களும் அவற்றின் பலன்களும்
அதிஷ்டக் கற்களை தெரிவு செய்வதற்கு ஜாதகம் எதற்கு?
பூமியைச் சுற்றியுள்ள ராசிச் சக்கரமானது; பூமி சுற்றும் போது ஒவ்வொரு கணமும், பூமியிலுள்ள ஒரு புள்ளிக்குச் சார்பாக, அடிவானத்தில் ஏதாவது ஒரு இராசியிலுள்ள ஒரு புள்ளி உதயமாகும். சோதிடத்தின்படி, அப்புள்ளியே குறிப்பிட்ட இடத்திற்கு அந்நேரத்துக்குரிய இலக்கினம் ஆகும். அந்த குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கும் ஒரு குழந்தையின் ஜாதக-குறிப்பில் உதயமான அந்த ராசி இலக்கினமாக "//ல" என குறிக்கப்பட்டிருக்கும்.
நம்மைச் சூழ்ந்துள்ள ஒவ்வொரு கோளும் (நட்சத்திரங்களும், கிரகங்களும்) தனித்தனி ஆற்றல் கதிர்களைப் பெற்றுள்ளன. அவற்றின் பிரமாணம், தட்ப-வெட்பநிலை, அதில் அடங்கியுள்ள தாதுப்பொருள்கள் என்பனவற்றின் அடிப்படையில் அவற்றின் கதிர்வீச்சுகள் வெளிப்படுகின்றன. சனிக் கோள் கருநீல நிறத்தையும், செவ்வாய்க் கோள் சிகப்பு நிறத்தையும் கொண்டிருப்பதுபோல் ஒவ்வொரு கோளுக்கும் தனித்தனி நிறமும், வெவ்வேறு நிறங்கொண்ட ஒளிக் கதிர்களும் உண்டு.
அத்துடன் ஒளிக் கதிர்களின் அலை (வீச்சின்) நீளங்களும், ஒளிச் சிதறல் (தெறிப்பு) தன்மைகளும் வேறுபட்டவை யாகும். ஜாதக-குறிப்பில் குறிக்கப்படும் ஒன்பது கோள்களும் தத்தமது ஒளிக் கதிர்களை வெளிப்படுத்திக் கொண்ட வண்ணம் உள்ளன. அவை அமைந்துள்ள இடத்திற்கேற்ப பிற கோள்களின் கதிர் வீச்சையும் பெறுகின்றன.
அதேபோல் உலகில் தோன்றி வாழும் உயிரினங்களின் உடலில் உள்ள தாதுப்பொருள்கள்; கிரகங்களில் இருந்து வரும் (நல்ல-தீய) கதிர்வீச்சை எந்த அளவு உட்கிரகிக்கின்றதோ அதற்கேற்ற வகையில் அவற்றிற்கு நன்மைகளும், தீமைகளும் ஏற்படுகின்றன என ஜோதிடம் கூறுகின்றது. அதனால்; எமது உடலுக்கு நன்மை தரக்கூடிய கதிர்களை உட்கிரகிக்ககூடிய "நவரத்தின கற்களை" கண்டறிந்து அதனைப் பாவிப்பதன் மூலம் எமக்கு ஏற்படும் துன்பங்களில் இருந்து தப்பிக்கொள்ளலாம் என்றும் அதன் பயனாக வாழ்க்கையில் அதிக நன்மைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக ஜோதிடர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஒரே சூழ்நிலையில் வாழும் ஒவ்வொருவருக்கும் வாழ்கையில் பல வித்தியாசங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள்:
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் "உயிர்க் காந்தம்" (ஜீவ காந்தம்) ஒன்றுண்டு. இந்த உயிர்க் காந்தம் மனிதன் ஜெனன மாகும் போது அவனுக்கு உருவாகின்றது. நாம் கருப்பையில் ஒளியைப் பெறவில்லை. கருப்பையினுள் சிசுவைச் சூழ்ந்துள்ள திரவம் பிற கதிவீச்சுகளில் இருந்து சிசுவை பாதுகாக்கின்றது. சிசு பிறக்கும் போது எந்தெந்தக் கோள்களின் கதிர் வீச்சுகள் எந்தெந்தப் பாகைகளிலிருந்து எவ்வளவு வலிமையுடன் சிசுவில் படுகின்றனவோ அவற்றின் தொகுபயனே நமக்கு உயிர்க் காந்தப் புலத்தை ஏற்படுத்துகிறது.
விளக்கமாக கூறுவதாயின்; ஒரு புகைப்பட கருவியில் (கமராவில்) படச்சுருளில் நொடிப் பொழுதிற்குள் பதியப்படும் முதல் ஒளியின் வடிவமே அதில் பதியப்படுதல் போன்று; நாம் பிறந்த வேளையின் கோள்களின் அமைவிடமும்; அவற்றின் கதிரியக்கம், ஒளிச்சிதறல், ஒளிக்கசிவு போன்ற தன்மைகளுக் கேற்பவே நமது உயிர்நிலைக் காந்தமும் (படச் சுருள்-நெகரிவ் ஆக) அமைகிறது. ஒளிப்படத்தில் வெளிச்சம், படம் பிடிக்கப்படும் வேகம், ஒளி அளவு முதலியவற்றால் படம் மங்கலாகவோ தெளிவாகவோ அமைதல் போன்று நாம் பிறக்கும் காலத்தின் உருவாகும் உயிர்க் காந்தப் புலமும் கோள்களின் நிலைகளால் எமது வாழ்கை எப்படி அமையும் என படம் பிடித்துக் காட்டுகின்றது என கூறலாம்.
அதிஷ்டக் கற்கள் பாவிப்பதற்கான காரணங்கள்:
ஒளி குறைவாக இருந்தால், மேலும் வெளிச்சத்தை கூட்டி தெளிவான படங்கள் எடுப்பது போன்று, எமது உடம்பு கிரகங்களில் இருந்து பெற்றுக்கொள்ளும் நல்ல கதிர்கள் குறைவாக காணப்படும் போது அவற்றைப் பெற்றுத்தரக்கூடிய அந்த கதிகளுக்குரிய கிரகத்தின் அதிஷ்டக் கற்களை பாவிக்கின்றோம். நவரத்தினக் கற்கள் சில நிறக் கதிகளை மாத்திரம் உள்வாங்கும் சக்தி கொண்டவை. அதனால்தான் அவை அந்த நிறத்தை பிரதிபலிக்கின்றது. அதிஷ்டக் கற்களை பாவிக்கும் போது அந்தக் கற்களின் குவியம் எமது உடம்பின் ஒரு பகுதியில் முட்டும்படியாக அணிந்து கொள்வதனால் அவ்வொளி எம்மீதுபட்டு வாழ்கை பிரகாசிக்கும் என்பது சோதிடர்கள் நம்பிக்கை. தவறான கற்கள் தீங்கு விளைவிக்கக் கூடியன.
மனிதர்களுக்குள் இருக்கும் "உயிர்க் காந்தம்" பிறக்கும்போதே இயற்கையாக உருவானது. அதனை மாற்றிவிட முடியாது. ஆனால் அவற்றினால் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்யவே பொருத்தமான அதிஷ்டக் கற்கள் பாவிக்கப்பெறுகின்றன. கண் பார்வை குறைவானவர்கள் அதனை நிவர்த்தி செய்வதற்கு கண்ணாடி பாவிப்பது போன்ற செயல்பாடே நல்ல கிரகங்களின் கதிவீச்சைப் (அனுக்கிரகத்தை) பெறுவதற்கு அதிஷ்டக் கற்களைப் பாவிக்கின்றோம் எனறும் கூறலாம்.
இராசிகளின் பிரகாரம் ஒருவருக்கு அதிஷ்டத்தை தரக்கூடிய நவரத்தின கற்கள்;
மேஷம் - பவளம்:
மேஷராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இதை அணிவதால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும், அதிர்ஷ்டம் உண்டாகும்.
ரிஷபம் - வைரம் (Diamond):
ரிஷப ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம் இதை அணிந்தால் மகிழ்ச்சியையும் யோகத்தையும் வசீகரத்தையும் கொடுக்கும்.
மிதுனம் - மரகதம்:
மிதுன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். இது செய்யும் தொழிலில் விருத்தியும், அதிர்ஷ்டத்தையும் அளிக்க வல்லது.
கடகம் - முத்து:
கடக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது முத்து. இது அமைதியும் மகிழ்ச்சியும் செல்வ விருத்தியும் அளிக்க வல்லது.
சிம்மம் - மாணிக்கம் (Ruby):
சிம்ம ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மாணிக்கம். இதை அணிந்தால் மிகுந்த அதிர்ஷ்டசாலியாகலாம்.
கன்னி - மரகதம்:
கன்னி ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். இது செய்யும் தொழிலில் விருத்தியும் அதிர்ஷ்டத்தையும் அளிக்க வல்லது
துலாம் - வைரம் (Diamond):
துலாம் - வைரம் (Diamond) துலாம் ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம். இதை அணிந்தால் மகிழ்ச்சியையும், யோகத்தையும், வசீகரத்தையும் கொடுக்கும்.
விருச்சிகம் - பவளம்:
விருச்சிக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இதை அணிந்தால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும், அதிர்ஷ்டம் உண்டாகும்.
தனுசு - கனக புஷ்பராகம். (Yellow Shappire):
தனுசு ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்ப ராகம். இந்தக் கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். இது மன அமைதியையும் செல்வ விருத்தியையும் கொடுக்கும்.
மகரம் - நீலக்கல் (Blue Shappire):
மகர ராசிக்காரர்கள் அணிய வேணிடியது நீலக்கல். செல்வ விருத்தியையும், செல்வாக்கையும், தெய்வீகத்தன்மையையும் கொடுக்க வல்லது
கும்பம் - நீலக்கல் (Blue Shappire):
கும்ப ராசிக்காரர்கள் அணிய வேணிடியது நீலக்கல். செல்வ விருத்தியையும், செல்வாக்கையும், தெய்வீகத்தன்மையையும் கொடுக்க வல்லது
மீனம் - கனக புஷ்பராகம். (Yellow Shappire) :
மீன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்ப ராகம். இந்தக் கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். இது மன அமைதியையும், செல்வ விருத்தியையும் கொடுக்கும்.
நவரத்தினங்கள்: முத்து, வைரம், வைடூரியம், மாணிக்கம், நீலம், மரகதம், புஷ்பராகம், பவளம், கோமேதகம்,
முத்து (pearl)
முத்தை பெரும்பாலும் பெண்களே விரும்பி அணிகிறார்கள். முத்து ஆண்களுக்கு தன்னம்பிக்கையையும்,பெண்களுக்கு பாதுகாப்பையும் அளிக்கும்.மணவாழ்க்கையில் மகிழ்ச்சியை கொடுத்து தம்பதியினரை ஒற்றுமையாக வைக்கும் சக்தி இதற்கு உண்டு.
வீட்டில் தீ விபத்து நேராமல் காக்கும். நீண்டஆயுளை கொடுக்கும். பேய்களை விரட்டும். முத்து கற்களை மாணிக்க கல்லை சுற்றிலும் பதித்து அணிந்தால் அதிஷ்டம் கிடைக்கும்,
அசையாசொத்துகள் வாங்கும்போது ஏற்படும் தடைகளை முத்து போக்கும். விலகிசென்ற நட்புகளையும், உறவுகளையும் சேர்த்து வைக்கும்.
முத்தின் மருத்துவ குணங்கள்
முத்தை ஊறவைத்த நீர் நல்ல ஊட்டம் மிகுந்தது. அந்த நீரை பருகினால் வயிற்றில் அமில சக்தியை மாற்றும். குடல் அழற்சி வராமல் காக்கும். மூத்திர கடுப்பை போக்கும்.
இதய வால்வுகோளாறு,எலும்புருக்கி,வாதம்,பித்தம், மூளைவளர்ச்சியின்மை, தூக்கமின்மை, ஆஸ்த்துமா ஆகிய நோய்களுக்கு நிவாரணம் கொடுக்கும். சர்க்கரையை குறைத்து கல்லீரலை சரியாய் இயங்க செய்யும்.
யாரெல்லாம் முத்து அணியலாம்
கடக ராசிக்கு அதிபதி சந்திரன். சந்திரனுக்குரிய ரத்தினம் முத்து. எனவே கடக ராசிக்காரர்கள் முத்து அணியலாம்.
ரோஹிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திர காரர்களும் முத்து அணியலாம்.
எண் கணிதபடி 2,11,20,20 தேதிகளில் பிறந்தவர்களும், பிறந்த தேதி, மாதம், வருடம் அனைத்தையும் கூட்டினால் 2 எண் வருபவர்களும், பெயர் எண் 2 கொண்டவர்கள்களும் முத்து அணியலாம்.
மேலும், 7,16, 25 தேதிகளில் பிறந்தவர்கள், பெயர் எண் 7 கொண்டவர்களும் முத்து அணியலாம்.
வைரம் (diamond)
உடல் உரம்,மன உரம், வெற்றி, செல்வம், அதிஷ்டம், நட்பு ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது. வைரம். தன்னம்பிக்கையை வளர்க்கும். ஆணுக்கு பெண்ணிடமும், பெண்ணுக்கு ஆணிடமும் நேசத்தை வளர்க்கும். கோரக் கனவுகளை நீக்கி இனிய தூக்கத்தை கொடுக்கும்.
கூட்டுதொழிலில் உள்ள கருத்து வேறுபாட்டை போக்கும் .கலைத்துறையில் உள்ளவர்களுக்கு செல்வாக்கும் பெரும் புகழும் வந்து சேரும் . பிறரை வசீகரிக்கும் வகையில் பேச்சாற்றல் உருவாகும் . சிலருக்கு வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு உருவாகும்.
வைரத்தின் மருத்துவ குணங்கள்
மலட்டு தன்மையை போக்கும், ஆண்குழந்தையை விரும்பும் பெண்கள் வைரம் அணிந்தால் நல்ல பலன் கிடைக்கும். இதயத்துக்கு வலிமை சேர்க்கும் சக்தி இதற்க்கு உண்டு. சளி,சம்பந்தப்பட்ட நோய்களை போக்கும்.கருப்பை கோளாறை சரி செய்யும். சக்கரை நோய், மனநோய் ஆகியவற்றை சரி செய்யும்.வாதம், பித்தம் போன்ற நோய்களில் இருந்து காத்து ஆண்மை தன்மையை இழக்காதவாறு செய்யும்.
யாரெல்லாம் வைரம் அணியலாம் ..!
சுக்கிரனை அதிபதியாய் கொண்ட ரிஷபம் மற்றும் துலாம் ராசிகாரர்களும் பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திர காரர்களும் 6, 15. 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், பெயர் எண் மற்றும் விதி எண் 6, 15, 25 கொண்டவர்களும் வைரம் அணியலாம்..!
வைடூரியம் (cat's eye)
இந்த கல் உடம்பில் பட்டால் மனம்பற்றிய முன்னேற்றத்தை கொடுக்கும் .சிந்தனையை மேம்படுத்தும் . தியானத்திற்கு ஏற்றது நம்மை மேல்நிலைக்கு கொண்டு செல்லும் ஆன்மிக சக்திவாய்ந்த கல். மனதில் அமைதியான அதிர்வுகளை உண்டாக்கும். மனநோய்களை குணப்படுத்தும். பெருந்தன்மையயும் பரந்த நோக்கத்தையும் கொடுக்கும். மனதெளிவை கொடுத்து மனசோர்வை அகற்றும்.
சூதாட்டம் போட்டி பந்தயங்களில் வெற்றியை கொடுக்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். நிலையான வருமானம் அமையும். முகத்தில் வசீகரம் உண்டாகும் .
வைடூரியத்தின் மருத்துவ குணங்கள்
வைடூரியம் பதித்த நகைகளை குழந்தைகளுக்கு அணிவித்தால் நல்ல வளர்ச்சி, ஆரோக்கியம் பாதுகாப்பு கிடைக்கும். பயத்தை போக்கும் வைடூரியகல்லை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து காலையில் அந்த தண்ணீரை கொண்டு கண்களை கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.காக்கை வலிப்பு,தோல் நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.
யாரெல்லாம் வைடூரியம் அணியலாம்
அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திர காரர்களும், 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் விதி எண், பெயர் எண் 7 வருபவர்களும் வைடூரியம் அணியலாம்.
மேலும், 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், விதி எண் பெயர் எண் 2 வருபவர்களும் இந்த கல்லை அணியலாம் ...!
மாணிக்கம் (ruby)
இரத்தினங்களின் ராஜா எனப்படும் மாணிக்கம் சிவப்பு மற்றும், இளஞ்சிவப்பு நிறங்களில் காணப்படும் .
பண்புகள்
மாணிக்ககல் உணர்ச்சி வசப்படுதலை கட்டுபடுத்தும். வாழ்வில் உயர்வையும் தைரியத்தையும் கொடுக்கும். வெகுளித்தனமாகவும், ஏமாளித்தனமும் உள்ளவர்கள் இந்த கல்லை அணிந்தால் அவர்கள் புத்தி சாதுர்யம் பெறுவார்கள். தீய எண்ணங்கள், கவலை, கருத்து வேறுபாடுகளை போக்கும். இந்த கல் நீண்ட ஆயுளை கொடுக்கும் என்பது சீனர்களின் நம்பிக்கை .
மாணிக்கத்தை கனவில் கண்டால் அதிஷ்டம் உண்டாகும். இது செல்வத்தை ஈர்க்கும் சக்தி கொண்டது. மன உறுதியையும், தன்னம்பிக்கையையும் கொடுக்கும். இதனை தலையணை அடியில் வைத்து வைத்து தூங்கினால் தீய கனவுகளை தடுத்து நல்ல நித்திரையை கொடுக்கும்.
மாணிக்க கல்லை அணிவதால் முக வசீகரம் அதிகரிக்கும் .கடினமான காரியங்கள் எளிதில் கைகூடும் .நினைவாற்றல் அதிகரிக்கும் .தொழில்,வியாபாரத்தில் அதிக லாபம் கிட்டும் .
யாரெல்லாம் மாணிக்கம் அணியலாம் ..!
சிம்ம ராசிக்கு அதிபதி சூரியன். சூரியனுக்குரிய ரத்தினம் மாணிக்கம் ஆகும். எனவே சிம்மராசிக்காரர்கள் இந்த கல்லை அணியலாம். மேலும் கிருத்திகை, உத்தரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் மாணிக்கம் அணியாலாம். எண்கணித படி 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இந்த கல்லை அணியலாம். பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றை கூட்டினால் 1 வருபவர்களும், பெயர் எண் 1 ஆக அமைந்தவர்கள் மாணிக்கம் அணியலாம்.
மரகத பச்சை (emerald)
ஆக்கபூர்வமான கற்பனை வளத்தை கொடுக்கும் திறன் படைத்தது மரகதகல். மலட்டுதன்மையை போக்கும், தீய சக்திகள், பில்லி சூனியங்களில் இருந்து காக்கும். போரிலும் வம்பு வழக்குகளிலும் வெற்றி தேடி தரும். காதல் உணர்வை கொடுக்கும். சிறந்த கல்வியை கொடுக்கும்.
பேச்சாற்றலை வளர்க்கும். ஜோதிடர்கள், மருத்துவர்கள் இந்த கல்லை அணிந்தால் மிக சிறந்த இடத்தை அடைவார்கள். உடல் வளர்ச்சி குன்றியவர்கள் மரகதகல்லை அணிந்தால் உடல் வளர்ச்சி திருப்திகரமாய் இருக்கும். மரகத கல்லை உற்று நோக்கினால் களைபடைந்த கண்கள் புத்துணர்ச்சி அடையும். நினைவாற்றலை பெருக்கும்.
மரகதத்தின் மருத்துவ குணம்
மரகத கல் வயிற்று கடுப்பை போக்கும். பெண்களுக்கு சுகப்பிரசம் ஆக உதவும். இருதய கோளாறு, ரத்த கொதிப்பு, புற்றுநோய், தலைவலி, நுரையீரல் சம்பந்த பட்ட நோய்களை குணப்படுத்தும்.
யாரெல்லாம் மரகதம் அணியலாம்..?
மிதுனம் மற்றும் கன்னி ராசிக்கு அதிபதி புதன். புதனுக்குரிய ரத்தினம் மரகதம்.
மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் மற்றும் ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திர காரர்கள் மரகதம் அணியலாம். எண்கணிதப்படி 5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் பெயர் எண் 5 உடையவர்களும் மரகதம் அணியலாம்
புஷ்பராகம் (topaz)
இந்தகல் நிறமற்றதாகவும், மஞ்சள் நிறத்திலும் காணப்படும். மஞ்சள் நிற புஷ்பராகம் கனக புஷ்பராகம் ஆகும் இதுவே சிறந்தது. இந்த கல்லை அணிந்தால் தோற்றத்தில் ஒரு கம்பீரம் உண்டாகும். துணிச்சல் பிறக்கும். பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும். திருமணதடை நீங்கும். நின்றுபோன கட்டட வேலைகள் மீண்டும் தொடங்கும்.
கோபம் குறையும், மனம்அமைதியாக இருக்கும். நிலம், வீடு, வாகனம், வாங்கும் நிலை உருவாகும். பெரும் புகழ் கிடைக்கும். பகை, சதி, சூழ்ச்சி ஆகியவற்றில் இருந்து காக்கும். நல்ல நட்பை கொடுக்கும்.
புஷ்பராகத்தின் மருத்துவ குணங்கள்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நுரையீரல், இதயம்,குடல் சம்பந்தபட்ட நோய்களில் இருந்து காக்கும். நல்ல செரிமானத்தை கொடுக்கும். மூட்டுவலி,மூட்டு பிடிப்பு ஆகிய வற்றில் இருந்து காக்கும்.உடல் எடையை குறைக்கவும் பயன்படும்.
யாரெல்லாம் புஷ்பராகம் அணியலாம்
தனுசு, மீனம் ஆகிய ராசிகளின் அதிபதியான குரு விற்கு உரிய ரத்தினம் புஷ்பராகம்.
தனுசு, மீன ராசிக்காரர்களும் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திர காரர்களும் புஷ்பராகம் அணியலாம். எண்கணித படி 3 ,12, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் விதி எண்,பெயர் எண் 3 அமைய பெற்றவர்களும் புஷ்பராகம் அணியலாம்
பவழம் (coral)
இந்தகல் பகுத்தறிவையும், செயல் அறிவையும், துணிச்சலையும் கொடுக்கும். அதிககோபம், பொறாமை, வெறுப்பு, கொலை சிந்தனை ஆகிய தீய குணங்களை அகற்றி சிறந்த ஞானத்தை கொடுக்கும். பயத்தையும் முட்டாள் தனத்தையும் போக்கும்.
சிவப்பு பவழம் பெண்களின் மாங்கல்யத்தை காப்பாற்றும். முறிந்துபோன கணவன் மனைவி உறவினை புதுப்பிக்கும். குழந்தைகளை கண்திருஷ்டியில் இருந்து காக்கும். பெண்களுக்கு விரைவில் திருமணமாக இந்த கல் உதவும்.
அடிமை தொழில் செய்துவந்தால் அதிலிருந்து மீண்டு சுய தொழில் செய்யும் வாய்ப்பினை உருவாக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.செல்வந்தர்களின் தொடர்பு கிடைக்கும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் பதவி கிடைக்கும்.நிலம் சம்பந்தமான சிக்கல்களை போக்கும்.
பவழத்தின் மருத்துவ குணங்கள்
ஒவ்வாமை நோய்கள், ரத்த சோகை, மஞ்சள் காமாலை ஆகிய நோய்களுக்கு இக்கல் உகந்தது. ஆரம்ப நிலை கருச்சிதைவை தடுக்கும். பவழத்தை பஸ்பமாக்கி உட்கொண்டால் ரத்த சம்பந்த நோய்களையும், நுரையீரல் நோய்களையும் தடுக்கும். வெள்ளை நிற பவழத்தை புஷ்பராக கல்லுடன் சேர்த்து அணிந்தால் சர்க்கரை நோயை கட்டுபடுத்தும். மலட்டுதன்மையை போக்கும். நரம்பு தளர்ச்சியை குணபடுத்தும். சிவப்பு பவழத்தை ரத்தத்தை தூய்மை செய்ய பயன்படுத்தினர் இந்திய மருத்துவர்கள்.
யாரெல்லாம் பவழம் அணியலாம்
பூமிகாரகன் எனப்படும் செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிகளுக்கு அதிபதி, எனவே மேஷம் மற்றும் விருச்சிக ராசி காரர்களும் ,மிருகசீரிடம்,சித்திரை,அவிட்டம் ஆகிய நட்சத்திர காரர்களும் எண் கணிதபடி 9,18,27 தேதிகளில் பிறந்தவரும்,பெயர் எண் 9 வருபவர்களும் பவழம் அணியலாம்.
இந்தகல் பகுத்தறிவையும், செயல் அறிவையும், துணிச்சலையும் கொடுக்கும். அதிககோபம், பொறாமை, வெறுப்பு, கொலை சிந்தனை ஆகிய தீய குணங்களை அகற்றி சிறந்த ஞானத்தை கொடுக்கும். பயத்தையும் முட்டாள் தனத்தையும் போக்கும்.
சிவப்பு பவழம் பெண்களின் மாங்கல்யத்தை காப்பாற்றும். முறிந்துபோன கணவன் மனைவி உறவினை புதுப்பிக்கும். குழந்தைகளை கண்திருஷ்டி யில் இருந்து காக்கும். பெண்களுக்கு விரைவில் திருமணமாக இந்த கல் உதவும்.
அடிமை தொழில் செய்துவந்தால் அதிலிருந்து மீண்டு சுய தொழில் செய்யும் வாய்ப்பினை உருவாக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். செல்வந்தர்களின் தொடர்பு கிடைக்கும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் பதவி கிடைக்கும். நிலம் சம்பந்தமான சிக்கல்களை போக்கும்.
நீலம் (sappihire)
ஞானம், சாந்தம், பெருந்தன்மை நற்பழக்கம், ஆழ்ந்தகவனம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது நீலம். திருஷ்டியை தடுக்கும். தீமைகளில் இருந்து காத்துக்கொள்ள அரசர்கள் இதனை அணிந்தனர். புகழையும் உடல்பலத்தையும் அளிக்கும். போதை பொருளுக்கு அடிமையானவர் நீலத்துடன் மரகத கல்லை சேர்த்து வலக்கையில் அணிந்தால் அப்பழக்கத்தில் இருந்து மீண்டு விடுவர்.
தியானத்திற்க்கு உகந்தது நீலம். நமது மூன்றாவது கண்ணை விழிப்படைய செய்து ஆழ்மனதெளிவை கொடுக்கும். திருமண உறவை மேம்படுததும். பகையை நீக்கி பகைவருடன் ஒத்துபோகசெய்யும். சிறை மீட்டு காப்பாற்றும் சக்தி நீலக்கல்லுக்கு உண்டு. வம்பு வழக்கு, சட்ட சிக்கலில் உள்ளவர்கள் இக்கல்லை அணிந்தால் நல்ல பலன் கிட்டும் நீலகல்லை வலக்கையில் அணியவேண்டும்.
நீலகல்லின் மருத்துவ குணம்
கீல் வாதம், இடுப்புவாதம், நரம்புவலி, வலிப்பு ஆகியவற்றிக்கு நீலம் உகந்தது. பித்த சம்பந்த நோய்களையும், குஷ்ட நோயையும் குணப்படுத்தும். வயிற்று நோயை சரிபடுத்தும். அதிக உடல் பருமனை குறைக்கும். இக்கல்லை நெற்றியில் வைத்து அழுத்தினால் காய்ச்சல் குணமாகும். மூக்கில் இருந்து கசியும் ரத்தம் நிற்கும்.
யாரெல்லாம் நீலம் அணியலாம்
சனி பகவானை அதிபதியாக கொண்ட மகரம், கும்பம் ராசிக்காரர்கள்; மற்றும் பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திர காரர்கள்; எண் கணித படி 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், விதிஎண், பெயர் எண் 8 கொண்டவர்களும் நீலம் அணியலாம்.
மேலும் ராகுவின் எண் 4, 13, 22 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் விதி எண் பெயர் எண் 4 கொண்டவர்களும் நீலம் அணியலாம்
கோமேதகம் (hessonits)
புத்திசாலிதனத்தையும், கல்வி மேம்பாட்டினையும் கொடுக்கும். அச்சத்தைபோக்கி தைரியத்தை கொடுக்கும். தம்பதியினரிடையே இணக்கத்தை உண்டாக்கி அமைதியான மகிழ்ச்சியான வாழ்வை தரும். வாக்கு வசியம், வாக்கு சாதுர்யம் உண்டாகும். அரசியல் வாதிகள், கலைஞர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு வெற்றியை தரும்.
உத்தியோக உயர்வை கொடுக்கும், தொழில்வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது. பண வரவை அதிகரிக்கும். லாட்டரி, ரேஸ் ஆகியவற்றில் வெற்றியை கொடுக்கும். பங்கு வணிகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான பலனை கொடுக்கும்.
கோமேதகத்தின் மருத்துவ குணங்கள்
கோமேதக பஸ்பம் ஈரல்வலி, குடல்வாதம்,ரத்த புற்று, வெண்குஷ்ட்டம் போன்ற நோய்களை குணப்படுததும். பசியின்மையை போக்கும்.
யாரெல்லாம் கோமேதகம் அணியலாம்..?
திருவாதிரை, சுவாதி,சதய நட்சத்திர காரர்கள். மற்றும் எண்கணித படி 4, 13, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், விதி எண் பெயர் எண் 4 வருபவர்களும் கோமேதகம் அணியலாம்.
எந்த கல்லை எந்த கிழமையில் அணிய ஆரம்பிக்க வேண்டும்..?
ஒவ்வொரு கல்லையும் ஒரு குறிப்பிட்ட தினத்தில்தான் அணிய ஆரம்பிக்க வேண்டும் என சாஸ்திரம் சொல்லுகிறது..!
அதன் படி எந்த கல்லை எந்த தினத்தில் அணிய ஆரம்பிக்க வேண்டும் என்பதை காண்போம்...!
ஞாயிறு : மாணிக்கம், கோமேதகம்
திங்கள் : முத்து, வைடூரியம்
செவ்வாய் : பவழம்
புதன் : மரகதம்
வியாழன் : புஷ்பராகம்
வெள்ளி : வைரம்
சனி : நீலம்
நவரத்தின கற்களை விட அதிஷ்டமும் நன்மையும் தரக்கூடிய மலிவான கற்களும் தற்பொழுது பாவனையில் உள்ளது.
சந்திர காந்தகற்கள் (moon stone), சூரிய காந்தகற்கள்( sun stone)
சந்திர காந்த கற்கள்
இதை அணிவோர்க்கு மன பலம் அதிகமாகும். பொருள்வரவு தடையின்றி கிடைக்கும்.கல்வியில் கவனம் இல்லாத மாணவர்களுக்கு கல்வி ஆர்வத்தை தூண்டும். ஜலகண்டதில் இருந்து காக்கும். நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும்.
மருத்துவ குணங்கள்
தாம்பத்ய வாழ்வில் பிரச்சனைகள் மற்றும் இருதய கோளாறுகளை போக்கும்.வயிற்று பிரச்சனைகளை நீக்கும். குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். மனநிலை பாதிப்பு மூளை கோளறு ஆகியவற்றை சரி செய்யும்.
யாரெல்லாம் அணியலாம் ..?
2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்த சந்திர ஆதிக்கம் பெற்றவர்கள் அணியலாம். 7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்த கேது ஆதிக்கம் பெற்றவர்களும் அணியலாம்.முத்து மற்றும் வைடூரியத்திற்க்கு மாற்றாகவும் அணியலாம்.
சூரிய காந்த கற்கள்
இந்த கல்லை அணிவதால் திடீர் முன்னேற்றம் உண்டாகும். துரதிஷ்ட்டங்கள் விலகி அதிஷ்ட்டம் உண்டாகும். பொருளாதார வளர்ச்சி ஏற்படும். அரசு சம்பந்தமான தடைகள் நீங்கும்.
யாரெல்லாம் அணியலாம் ..?
1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மற்றும் சிம்ம ராசி, சிம்ம லக்கினம் கொண்டவர்கள் இக்கல்லை அணியலாம் . மாணிக்க கல்லுக்கு மாற்றாகவும் இக்கல்லை அணிந்து பலன் பெறலாம்.
நவரத்தினங்கள் பதித்த மோதிரங்கள்--- யார், எப்படி அணியவேண்டும்...? ஒரு கண்ணோட்டம்
செவ்வாய் ஆதிக்கம் உள்ளவர்கள்தான் நவரத்தினம் அணிய வேண்டும் என்பது பெரும்பான்மையினர் கருத்து. மேலும் நவரத்தினங்களை வாங்கி சில நாட்கள் தன்னுடன் வைத்திருந்து பரீட்சித்து பார்த்து அணிந்து கொள்வது நலம். நவரத்தின மோதிரம் அணிந்து சிலருக்கு காய்ச்சல், தலைவலி ஏற்படலாம். பொதுவாக ஓபன் செட்டிங்கில் அணிவது பலன்தரும். தங்கத்தில் மட்டுமே பதித்து அணிய வேண்டும். இரத்தின நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் வாங்குவது நல்லது.
பதிக்கும் முறை
மோதிரத்தின் நடுவில் சூரியனுக்குரிய மாணிக்கத்தை வைத்து அதன் கிழக்குபக்கம் வைரம் பதிக்க வேண்டும். பிறகு கடிகார சுற்றுபடி முத்து, பவளம், கோமேதகம், நீலம், வைடூரியம், புஷ்பராகம் மரகதம் ஆகியவற்றை வரிசையாய் பதிக்க வேண்டும்.
நவரத்தினங்கள் தரும் நற்பலன்கள்
நவரத்தின 9-கற்கள் பதித்த மோதிரம் ஒருவருக்கு பொருந்திவிட்டால் அவர் மிக சிறந்த அதிஷ்ட சாலிதான். பெரும் சாதனைகள் படைக்கலாம். எதிலும் வெற்றிகிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி, புகழ், செல்வாக்கு அனைத்தும் கிடைக்கும். போடும் திட்டங்கள் எல்லாம் சரியானதாக இருக்கும். உழைப்பிற்க்கு முழுமையான வெற்றி கிடைக்கும்.
யாரெல்லாம் நவரத்தின மோதிரம் அணியலாம் ...?
மேஷ ராசி, மேஷ லக்னம் மற்றும் விருச்சிக ராசி, விருச்சிக லக்னகாரர்கள்
மிருகசீரிஷம், அவிட்டம், சித்திரை ஆகிய செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அணியலாம். ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தாலும் அணியலாம் .
எண் கணித படி 9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், பிறந்த தேதியின் கூட்டு எண் 9 வருபவர்களும் அணியலாம்.
பிறவி எண் 2, 7 கொண்டவர்கள் நவரத்தின மோதிரம் அணிய கூடாது. வேறு எந்த வகையிலாவது நவரத்தின மோதியம் அணியலாம் என்ற நிலை இருப்பின் ரத்தினங்களை வாங்கி தன்னுடன் வைத்திருந்து சோதித்து பார்த்துதான் அணிய வேண்டும்.
அதிர்ஷ்ட கற்களுக்கான உலோகங்களும், அணிய வேண்டிய விரல்களும்...!
மாணிக்கம் : இணைக்கும் உலோகம் - தங்கம்
அணிய வேண்டிய விரல் - மோதிர விரல்
முத்து : இணைக்கும் உலோகம் - தங்கம் அல்லது வெள்ளி
அணிய வேண்டிய விரல் - ஆள்காட்டி விரல், மோதிர விரல்
புஷ்பராகம், கனக புஷ்பராகம் : இணைக்கும் உலோகம் - தங்கம்
அணிய வேண்டிய விரல் - ஆள்காட்டி விரல்
கோமேதகம் : இணைக்கும் உலோகம் - வெள்ளி அல்லது தங்கம்
அணிய வேண்டிய விரல் - மோதிர விரல், நடு விரல்
மரகதம் : இணைக்கும் உலோகம் - தங்கம் அல்லது வெள்ளி
அணிய வேண்டிய விரல் - சுண்டு விரல், மோதிர விரல்
உங்களின் தொழிலுக்கேற்ற அதிஷ்ட இரத்தினம் எது..?
ஒருவர் தான் செய்யும் தொழிலுக்கேற்ற அதிர்ஷ்ட ரத்தினத்தை அணிந்தால் பெரிய அளவில் வெற்றி பெறலாம். ரத்தினங்களானது தொழில்,அல்லது வியாபார மந்த நிலையை போக்கி சிறப்பான முன்னேற்றத்தை கொடுக்கும்.
எந்த கல் எந்த தொழிலுக்கு ஏற்றது என்பதை காண்போம்.
புஷ்பராகம் : கல்வித்துறை. கலைத்துறை, எழுத்து துறை, பொருளாதார துறை, சமய துறை, அற நிலைய துறை
வைரம் : விவசாயம், நிர்வாகம், கோழிப்பண்ணை, பால் பண்ணை, பழ மரங்கள் பயிரிடுவோர்
கோமேதகம் : ஜோதிடர், கைரேகை நிபுணர், அரசியல் விமர்சகர்
நன்றி :- பணிப்புலம்
நன்றி :- பணிப்புலம்
http://www.panippulam.com
====================================
@*கணபதி ஹோமம்: ஏன், எதற்கு, எப்படி?*
பல முகவரிகளுக்கு எழுதிய கடிதங்களை ஒரே தபால் பெட்டியில் போடுகிற மாதிரி, பல தேவதைகளுக்கு பலவிதமான திரவியங்களை மந்திரப் பூர்வமாக அக்னியில் விடுவதைத்தான் ஹோமம் என்கிறோம். அக்னி இவற்றை தானே எடுத்துக் கொள்ளாமல் இவற்றின் சாரத்தை அந்தந்த தேவதைக்கு அனுப்பி வைக்கின்கிறன என்பது காஞ்சி மகாப் பெரியவரின் மகாவாக்கு. நாம் செய்கிற ஹோமங்களில் திருப்தி அடைந்து நமக்கு அனுக்கிரகத்தை அள்ளித் தருகின்றனர், தேவர்கள். கடலிலுள்ள நீர் ஆவியாகி மீண்டும் மழையாகப்பொழிந்து வரும் சுழற்சியைப் போன்றதுதான் இந்த ஹோமங்கள்.
நமக்கு அருகேயுள்ள சக்திகளை தொடர்பு கொள்ள வைக்கும் விதம்தான் மந்திரப்பூர்வமான ஹோமங்கள். மந்திரங்களால் நிறைந்த பிரதேசங்களின் அலைவரிசை நம் மனதிற்கு பலத்தைக் கொடுக்கிறது. எங்கேயோ தடைபட்டிருந்த சக்திகளை மந்திர ரூபமாக உள்ள தேவர்கள் அகற்றுகின்றனர். பூமியில் உட்கார்ந்து கொண்டு அண்டத்திலுள்ள செயற்கைகோளை சரி செய்வதுபோன்ற ஒரு செயலை ரிஷிகள் அநாயாசமாக அன்றாட வாழ்க்கைக்கு உபயோகமாகும் விதமாக ஹோமங்களாக வடிவமைத்துக் கொடுத்துள்ளனர். இந்திராய ஸ்வாஹா… என்றால் அங்கு இந்திரன் வரவேண்டும், இது வேதத்தின் சத்தியக் கட்டளை. அழைக்கும்போதே அனுக்கிரகத்தோடு வரும் கருணை. இது, மனிதர்கள் தாங்கள் தனித்தவர்கள் அல்ல. தங்களைச் சுற்றிலும் பல்வேறு சக்திகள் இயக்கியும், இயங்கியபடியும் உள்ளன என்பதன் சூட்சுமமும் உள்ளது. எனவே, இன்ன ஹோமம் செய்தால் இன்ன பலனை கொடுத்தே தீருவார்கள். அவற்றில் முதன்மையானதுதான் கணபதி ஹோமம்.
தனக்கு மேல் எந்த நாயகரும் இல்லாததாலேயே அவருக்கு வி – நாயகர் அதாவது விநாயகர் என்று பெயர். எனவே அவரே ஆதிநாயகரும் ஆவார். தேவர்களிலிருந்து மகாதேவனான ஈசன் வரை அவர் மகனே ஆனாலும் வழிபட்டுவிட்டுத்தான் காரியத்தை தொடங்குகின்றனர். அப்படி தொழாது திரிபுர சம்ஹாரம் செய்ய புறப்பட்ட ஈசனின் தேர் அச்சாணியை விநாயகர் உடைத்தார். தேரே ஸ்தம்பித்து நிற்கும்போது ஈசன் விநாயகரை வணங்காது புறப்பட்டுவிட்டதை உணர்ந்தார். எப்பேற்பட்ட தவறு இது என்று விநாயகரின் எதிரே தலைகுனிந்து மண்டியிட்டார். இது ஈசன் தன்னைத்தானே தாழ்த்திக்கொண்டு உலகிற்குச் சொன்ன பாடமாகும். ஈசனே வணங்கும் கணபதியை வணங்குவது என்பது ராஜபாட்டையில் நடந்துபோவது போல.
கணபதி ஹோமம் என்பது எல்லா சுப நிகழ்ச்சிகளுக்கும் செய்யப்படுவது. முதல் கோணல் முற்றிலும் கோணலாக மாறாமல் நேர்ப்பாதையில் செல்லவும், பாதையில் இருக்கும் தடைகள் நீங்கவும் செய்யப்படுவதே கணபதி ஹோமமாகும். அஸ்திவாரத்தை பலமாக்குவதுபோல ஆதி சக்தியின் அருளைப் பெறுவதற்கான முறையே இந்த ஹோமம். கணபதி ஹோமத்தை செய்வதாலேயே மற்றெல்லா ஹோமத்தையும் செய்யும் தகுதியை ஒருவன் பெறுகிறான். இதற்கு எல்லாவற்றிற்கும் அடிப்படையாக சிரத்தை என்கிற சக்தி வெண்டும். ஆம், சிரத்தையோடு இருத்தல் என்பதே சக்தியின் குவிப்புதான். எனவே, அதிகூர்மையாக பணிவோடு மாபெரும் சக்தியை வேண்டுகிறோம் என்கிற விநயத்தோடு கூடிய மனப்பாங்கு வேண்டும். ஏதோ சொல்கிறார்கள் நாமும் செய்து வைப்போமே என்கிற அசிரத்தையும் அலட்சியமும் இருப்பின் எதையுமே கிரகிக்க முடியாது. இந்தக் காயமெனும் பாத்திரத்தை காலியாக அகங்காரமில்லாது வைத்துக் கொண்டால் விநாயகன் பீடம் போட்டு உள்ளுக்குள் அமர்வான். பிறகு உங்கள் அகத்தில் அவனொரு ஞான வேள்வி நிகழ்த்துவான்.
மகாகணபதி ஹோம மந்திரங்களை உருவாக்கியவர் கனகரிஷி. ஹோமமாகச் செய்தவர் காஷ்யப மகரிஷி. அருகம்புல்லின் மகத்துவத்தை எல்லோரையும் அறியச் செய்தவர்.
கணபதி ஹோமத்தில் முதலில் அனுக்ஞை. அதாவது பெரியோர்களின் அனுமதி ஆசிகளைப் பெறுவது. அதாவது குடும்பத்துடன் சேர்த்து எனக்கு எல்லாத் தடையூறுகளும் நீங்குவதின் மூலம் நினைத்துள்ள எண்ணம் சித்தித்துப் பயனடையும் பொருட்டு மகாகணபதி ஹோமம் செய்வதற்கு எனக்கு தகுதி சித்திக்கும்படியாக அனுக்கிரகம் செய்ய பிரார்த்திக்கிறேன் என்று தொடங்குகிறது. இதற்குப் பிறகு வைதிகர்களின் வழிகாட்டுதலின்படி மந்திரங்களைச் சொல்லி ஒவ்வொன்றாக செய்ய வேண்டும். அதில் முதலில் ஹோமத்தைச் செய்பவர்கள் தங்கள் பெயர், மனைவி, பிள்ளைகள், பேரக் குழந்தைகள் எல்லோரின் பெயரையும் பிறந்த நட்சத்திரங்களோடு சொல்லி ஹோமத்தைச் செய்யும் தகுதியை வழங்க அனுமதி பெற வேண்டும். தர்ப்பைகளை காலுக்குக் கீழ் போட்டுக் கொண்டு, விரலிடுக்குகளில் பவித்ரமாக அணிந்து மனைவியோடு அமர்ந்து மந்திரங்களை சொல்லி மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்துக் கொண்டு விக்னேஸ்வரரை பூஜிக்க வேண்டும்.
அடுத்ததாக சங்கல்பம் அதாவது உறுதிமொழி. இந்த இடத்தில் எங்களுக்காக நடத்தப்படும் இந்த ஹோமத்தின் சகல காரியங்களையும் செய்ய இவர்களை ஆசார்யர்களாக வரித்துக் கொள்கிறேன் என்று ஹோமத்தை நடத்தி வைக்க வந்திருக்கும் அந்தணர்களை வணங்க வேண்டும். சங்கல்பத்தின்போது பகவானின் நாமத்தை அதாவது ராம… ராம… என்று ஆத்மப்பூர்வமாக சொல்ல வேண்டும். இதற்குப் பிறகு புண்யாகவாஜனம். சுத்தமான தரையில் பசுஞ் சாணத்தால் மெழுகி நெல்லைப் பரப்பி அதன் மீது வாழை இலை வைத்து அதில் சமமாக அரிசியைப் பரப்ப வேண்டும். அரிசியின் மையத்தில் தாமரைப்பூவை வரைய வேண்டும். பூவின் நுனியில் தர்ப்பைகளை வைத்து பூரண கும்பத்தை நீர் நிரப்பி அதில் ஏலக்காய், பச்சைக் கற்பூரம், குங்குமப்பூவை சேர்க்க வேண்டும். அதன் மீது மாவிலைக் கொத்து, மஞ்சள் தடவிய தேங்காயை வைக்க வேண்டும். இதை வைக்கும்போதே அதற்கென்று உள்ள மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.
இதையெல்லாம் முடித்த பிறகு ஹோம குண்டம் அமைத்து எல்லா தேவதைகளையும் ஆவாஹனம் செய்ய வேண்டும். அதாவது எல்லா தேவதைகளையும் வரவழைத்து உயிரூட்டுவதாகும். இதற்குப் பிறகு மகா கணபதி ஹோமம் ஆரம்பிக்கிறது. அவருக்கான மந்திரங்களைச் சொல்லி பதினாறு வகையான உபசாரங்களை செய்ய வேண்டும். நெய்யை ஹோம அக்னியில் வார்க்க வேண்டும். முதலில் நெய்யினாலும், அஷ்ட திரவியங்களாலும் பிறகு தேங்காய் மூடியில் மூன்று கண்கள் இருக்கும் முடியை முதலில் போட்டு ஹோமம், அருகம்புல்லை இரண்டிரண்டாக நெய்யில் தோய்த்துப் போட்டு ஹோமம் அதைத் தொடர்ந்து நெல்லை விட்டு ஹோமம் என்று செய்யலாம். இதைத்தவிர நூறு, ஆயிரம் என்று பல எண்ணிக்கைகளில் மோதகங்களை செய்ய வேண்டும். பழங்கள், ஆலங்குச்சி, சீந்தில் கொடி என்று பல்வேறு விஷயங்களை ஹோமத்தில் சேர்க்கலாம்.
மேலே சற்றே சுருக்கமாக் கூறிப்பிட்டிருக்கிறேன். ஆனால், அந்தணர்களை வைத்துச் செய்யும்போது மிக மிக விஸ்தாரமாக கூடச் செய்யலாம். செய்ய வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டவே இக்கட்டுரை.
மகாகணபதி ஹோமம் மிகவும் சூட்சுமங்கள் நிறைந்தது. அந்த ஹோம குண்டத்தை யானையின் நான்கு வலிமையான கால்களாக நினைத்துக் கொள்ளுங்கள். கால்களை அசைக்காமல் ஸ்திரமாக நின்று கொண்டு யானை உடலையும், தும்பிக்கையையும், தலையையும், காதுகளையும் அசைப்பதாக பாவனை செய்து கொண்டு அக்னியை பாருங்கள். மந்திரங்களோடு சேர்த்து செய்யப்படும் அக்னியின் அசைவுகள் யானை அசைவது போன்றிருக்கும். மகாகணபதி ஹோமத்தின் மையமே உங்களுக்குள் இருக்கும் மூலாதார சக்தியைத் தூண்டுவதுதான். அசைவற்ற மூலாதாரம் என்கிற கணபதி அசைவிக்கவே இந்த ஹோமம். இல்லையெனில் மனம் தாறுமாறாக அலையும். காற்றில் பறக்கும் தூசு போல இலக்கின்றி என்ன செய்வதென்று தெரியாமல் தத்தளிக்கும். ஆனால், மூலாதாரம் விழித்துக் கொண்டால் மனம் ஒருமை பெறும். எண்ணங்களில் நேர்த்தியிருக்கும். தைல தாரை போன்று மனம் தெளிவாக அடுத்தடுத்து யோசிக்கும். வெறும் சிந்தனையோடு நில்லாமல் செயல் திறனிலும் உடல் வழியாக உழைக்க வைக்கும். காரணம் மூலாதாரத்தின் பூரணமான சக்தி அதை பிராண சக்தி என்று விதம் விதமாக கூறலாம். அது நம் புத்தி, மனம், உடல் என்று சகல இடங்களுக்கும் பாயும். செயலில் திறன் கூடினால் வெற்றி எளிதாகும்.
ஆகவே, கணபதி ஹோமம் என்பதே வாழ்வின் இக பரலோகத்தின் வெற்றியைக் கொண்டுவரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. ஹோமங்களைச் செய்யச் செய்ய சித்தத்தில் தெளிவையும் நம்மையும் அறியாமல் இறைவனை அடையும் ஒரு தாபத்தையும் அதிகரிக்கச் செய்யும். இல்வாழ்க்கையில் உள்ளபோதே பிரம்ம வஸ்துவை அடையும் விவேகத்தையும் அதிகரிக்கும். ஆத்மா யக்ஞேன கல்பதா என்பது ருத்ர வாக்கியம். யக்ஞேனத்தினால் ஆத்மா அடையப்படுகிறது என்பதே இதன் பொருள். இப்போது புரிகிறதா கணபதி சகல விஷயங்களிலும் எப்படி கரமருளி காக்கிறார் என்பது.
மகாகணபதி ஹோமத்தை வெள்ளிக் கிழமைகளில் சுக்ல பட்ச சதுர்த்தி, ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் செய்தால் விசேஷம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பிடித்து வைத்தால் பிள்ளையார் என்பார்கள். அத்தனை எளிமையான தெய்வத்தை சிக்கெனப் பிடித்தால் சீரும் சிறப்போடும் வாழலாம் என்பது எளிமையான பேருண்மை. எப்போதுமே பேருண்மை சூரியனைப் போன்று பிரகாசமாக தெரியும். அதுபோலத்தான் ஆனைமுகனின் வழிபாடும்...
=========================
@ ★ புண்ணியம் வேண்டுமா?
ஒரு நல்ல காரியத்துக்கு உதவி செய்வது புண்ணியம். கோவில் கும்பாபிஷேகம், திருப்பணி போன்ற காரியங்களுக்கு நம்மால் என்ன கொடுக்க முடியுமோ அதைக் கொடுத்து, புண்ணியத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டும்.
உன்னுடைய தர்மமாக, ஒரு செங்கல் கொடுத்தாலும், அந்த செங்கல், அந்த ஆலயத்தில், எத்தனை வருஷங்கள் உள்ளதோ, அத்தனை ஆயிரம் வருஷங்கள் கைலாசத்திலோ, வைகுண்டத்திலோ வாசம் செய்யலாமாம்.
ஒரு ஏழையின் கல்யாணத்துக்கு உதவுவதும், சிவபூஜை செய்யும் ஒருவருக்கு பூஜைக்கு வேண்டிய பூவோ, பழமோ, கற்பூரமோ ஏதாவது ஒன்றை கொடுத்தாலும் புண்ணியம் உண்டாகும்.
ஒரு அந்தணர், தெருவில் எதையோ தேடிக் கொண்டிருந்தார். அவர் நெடுநேரம் தேடுவதைப் பார்த்த ஒருவர்,
ஐயா... என்ன தேடுகிறீர்கள்? என்று கேட்டார்.
சிவ பூஜைக்கு, வாழைப்பழம் வாங்குவதற்காக, ஓரணா வைத்திருந்தேன். அது கீழே விழுந்து விட்டது. அதைத்தேடிக் கொண்டிருக்கிறேன்... என்றார்.
பரவாயில்லை பூஜைக்கும் நாழியாகிவிட்டது; நான் ஓரணா தருகிறேன். வாழைப்பழம் வாங்கி, பூஜையை முடித்துக் கொள்ளுங்கள்...என்று சொல்லி, ஓரணாவைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். (அந்தக் காலத்தில் ஓரணாவுக்கு நாலு வாழைப்பழம்.) அவரும், ஓரணாவுக்கு வாழைப்பழம் வாங்கி வைத்து, பூஜையை முடித்தார்.
தேவேந்திரன், ஒரு நாள், தர்மராஜன் சபைக்கு வந்தான். எமதர்மன், தேவேந்திரனை உபசரித்து வரவேற்றான். சபையில், ஒரு ரத்ன சிம்மாசனமும், ஒரு தங்கத்தாலான சிம்மாசனமும், போடப்பட்டிருந்தது. அந்த சமயம், இரண்டு தேவ விமானங்கள் வந்தன. எமதர்மன், ஓடிப்போய் விமானத்திலிருந்தவரை வரவேற்று உபசரித்தான்.
ஒவ்வொரு விமானத்திலிருந்தும், ஒவ்வொரு புண்ணிய புருஷர் இறங்கினர். எமதர்மன், ஒருவரை, ரத்ன சிம்மாசனத்திலும், மற்றொருவரை, தங்க சிம்மாசனத்திலும், உட்கார வைத்தான்.
புண்ணிய புருஷர்களான நீங்கள் இங்கு வந்தது என் பாக்யம்... என்று சொல்லி, அவர்களை, எமதர்மன் உபசரித்ததை பார்த்த தேவேந்திரன், எமதர்மனைப் பார்த்து, இவர்கள் அப்படி என்ன புண்ணியம் செய்தனர்! அதிலும், ஒருவரை ரத்ன சிம்மாசனத்திலும், ஒருவரை தங்க சிம்மாசனத்திலும் உட்கார வைத்திருக்கிறாயே... என்று கேட்டான்.
அதற்கு எமதர்மன், இதோ தங்க சிம்மாசனத்தில் இருப்பவர், தினமும், சிரத்தையுடன் சிவ பூஜை செய்தவர். அந்த புண்ணியத்தினால், இவரை தங்க சிம்மாசனத்தில் உட்கார வைத்திருக்கிறேன்.
மற்றொருவரோ சிவ பூஜைக்கு உதவி செய்தவர். ஒரு நாள், சிவ பூஜைக்கு வாழைப்பழம் வாங்க வைத்திருந்த காசை தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருக்கும் போது, இந்த ரத்ன சிம்மாசனத்தில் இருப்பவர், அவருக்கு காசு கொடுத்து வாழைப்பழம் வாங்க, உதவி செய்தவர். அதனால், இவருக்கு ரத்ன சிம்மாசனம்... என்றான் எமதர்மன்.
தேவேந்திரன் ஆச்சரியப்பட்டு, சிவபூஜை செய்தவரை விட, சிவ பூஜைக்கு உதவி செய்தவருக்குத்தான் அதிக புண்ணியம் என்பதை தெரிந்து கொண்டேன்... என்று சொல்லி, எமதர்மனிடம் விடைபெற்று, தேவலோகம் சென்றான்.
இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஒரு சிவபூஜை அல்லது கும்பாபிஷேகம் ஆகியவற்றை முன் நின்று நடத்துபவரை விட, அதற்கு உதவி செய்பவர்களுக்கு புண்ணியம் அதிகமாம்.
அதனால் தான், எங்கேயாவது கும்பாபிஷேகம், திருப்பணி என்றால், என் பணமும் அதில் சேரட்டும்... என்று, பணம் கொடுத்து. புண்ணியத்தை சேர்த்துக் கொள்கின்றனர்.
தெய்வத் திருப்பணிகளுக்குக் கொடுத்தால், புண்ணியம். கொடுத்து பாருங்கள், அந்த புண்ணியம் எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்து கொள்வீர்கள்!
நன்றிகளுடன் வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ் "குல்கந்து"
==================================
எந்த ஒரு விரதமும் நல்லபடியாக முடிய அனைத்துத் தேவர்களின் அருளாசியும் வேண்டும். 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், நவகிரகங்களின் அருளும் வேண்டுமென்றால் (27+12+9) 48 நாட்கள், அதாவது ஒரு மண்டலம் விரதம் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால், சபரிமலை விரதத்தைப் பொறுத்தவரை ஒரு மண்டலம் என்பது 41 நாட்களையே குறிக்கிறது.
மலைக்கு மாலை அணிந்த நாள் முதல், தினமும் இரண்டு வேளை குளிர்ந்த நீரில் குளிப்பது, நெற்றியில் சந்தனமிட்டு, சாமியின் 108 சரணங்களைச் சொல்வது, உணவிலும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது, தலையணையின்றி உறங்குவது, ஆசாபாசங்களைக் கட்டுப்படுத்திக்கொள்வது என எல்லாமே நமது சுயகட்டுப்பாடு, ஒழுங்குமுறைக்கான விரதங்கள்தான்.
அதனால் 41 நாட்கள் முழுமையாக விரதம் இருந்து மலைக்குச் செல்வது சிறப்பு. கடுமையான மலைப் பாதையில் சிரமம் இல்லாமல் ஏறுவதற்கு இது உதவியாக இருக்கும். சபரிமலைக்கு முதல் முறையாகச் செல்லும் கன்னிசாமிகள், கட்டாயம் 41 நாட்கள் விரதம் இருந்து செல்வதே நன்று.
=========================================
எளிமையான முறையில் தமிழில் ஜோதிடக்கலையை கற்றுக்கொள்வதற்கு:-
புத்தக/நூலின் பெயர்: "வகுப்பறை ஜோதிடம்". தொகுதி ஒன்று பக்கங்கள்320.
இந்தப் புத்தகத்தின் விலை ரூ 320:00 + கூரியர் செலவு ரூ 50:00 ஆக மொத்தம் ரூ 370:00 ஐ
அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.
உங்கள் வங்கியின் மூலம் NEFT ல் வழியாகவும் பணம் அனுப்பலாம்.
அல்லது காசோலை, பண ஓலை மூலம் அனுப்பலாம்
அல்லது தபாலில் vpp மூலம் பெற்றுக் கொள்ளலாம். தபால்காரர் உங்கள் இடத்திற்கு வரும்போது பணத்தைக் கொடுத்துப் புத்தகத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
வெளி நாடுகளில் இருப்பவர்களுக்கும் அஞ்சல் மூலம் கிடைக்கும். பிரதிக்கு எழுதுங்கள்...
உமையாள் பதிப்பகம்
37, எஸ்.என்.தாஸ் லே அவுட், 4வது வீதி,
வடகோவை ரயில் நிலைய வீதி
டாடாபாத்
கோயமுத்தூர் - 641 012
அலைபேசி எண்: 94447 50665
மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com
================================================
your given articles are very good and best.
ReplyDelete